Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தீராத காதல்

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
தீராத காதல்…!



சிறிய முன்னுரை,



"காதல்".சிலருக்குவார்த்தை.

பலருக்கு உணர்வு.அதை உணர முடியும்.யார் மீது எல்லாம் ஓர் உண்மையான அன்பு இருக்கிறதோ அவர்கள் மீது எல்லாம்.




உண்மைக்கும் காதலும் ஒர் பிரிக்க முடியாத உறவு.உண்மை இல்லாத காதல் வாழ முடியாது. ஆனால் உண்மை காதலை யாராலும் பிரிக்க இயலாது.காதலர்கள் பிரிந்தாலும் அவர்கள் காதல் வாழுந்து கொண்டு இருக்கும்,பல கதைகளை பார்த்து இருப்போம்;கேட்டும் இருப்போம்;

இதுவும் அப்படிப்பட்ட கதையே..




நிறம்,மொழி, சாதி, மதம்,வசதி அனைத்தையும் கடந்ததே காதல்.

உண்மையான அன்பு கொண்ட இரு மனது இணையும் ஓர் உன்னதமான தருணம்.




அனைத்து காதலும் வெற்றி காணாது. சில காதலில் வலி,தோல்வி,பிரிவு,இழப்பு அனைத்தும் இருக்கும்.

அப்படிப்பட்ட ஒரு காதல் கதை இது.

ஒரு பெண்ணின் வலி,தோல்வி,வெற்றி,மகிழ்ச்சி.., நாமும் அவள் உடன் பயணிப்போம்..




தீராத காதல்…!





அத்தியாயம்-1






கதிர்
!.கதிரவன். வயது இருபத்தி ஒன்பது. இன்னும் நான்கு மாதத்தில் முப்பது. அதற்குள் திருமணம் ஆக வேண்டும் என்பது குடும்ப ஜோசியரின் கணிப்பு மற்றும் கட்டளை.



அளவான உயரம்,அதற்கு ஏற்ற உடல்வாகு.மாநிறம்.நெற்றியில் தவழும் முடி,அர்ஜுனன் வில் போல வளைத்து இணைந்த இருபுருவங்கள்,அழகான தெளிவான கண்கள்,காண்போர்

அனைவரையும் கண்டிப்பாக ஈர்க்கும்.செதுக்கிய மூக்கு மென்மையானஉதடு.உண்மையான நேர்மையான குணம்.



பெரிய நிறுவனதில் உயர்பதவி. வீட்டில் ஒரே செல்லபையன்.தேவைக்கு சற்று அதிகமான சொத்து.கல்லூரியில் காதல், அதில் தோல்வி.அதனால் திருமணத்தில் வெறுப்பு.



அம்மாவின்அழுகை,அப்பாவின் அறிவுரை,ஜோசியரின் நிபந்தனையில்,காலத்தின் கட்டாயத்தில்;இன்று "நித்யா!" வை பெண் பார்க்க வந்து இருக்கும் மாப்பிளையாக கதிர்…!



நித்யா!.தேவையானஉயரம்.செதுக்கிய உடல்.அளவாக வெட்டிய கூந்தல், மாநிறத்துக்கும் சற்று அதிக நிறம்,கலையான முகம்.மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் அழகு. புடவையில் மகாலக்ஷ்மி.



ஆனால் கதிரை ஈர்த்தது அந்த பேசும் கண்களே..அந்த கண்கள் உடன் பேச வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.திரைப்படங்களில் வருவது போல பெண்ணும் மாப்பிளையும் பேச சில நிமிடங்கள் கிடைத்தது.



நித்யா-விற்கு வயது இருபது. ஒரே பெண் வீட்டிற்க்கு.கல்லூரி முடித்து ஓரிரு மாதங்களே இருக்கும். நடுத்தரகுடும்பம்.



அந்திசாயும்நேரம்!அழகியவானம்!

பச்சை வண்ணதோட்டம்!..

என்னருகே..அவள்...இளஞ்சிவப்பு ரோஜாவாக…




மாலை நேரத்தில் சூரியன் நீல நிற வானத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஓவியம் தீட்டி கொண்டு இருந்தான்.மழை காலம் என்பதால் தோட்டம் பசுமையாக இருந்தது.

ரோஜா,முல்லை,மல்லிகை பூக்கள் தோட்டத்தை அழகாழும் மணத்தாலும் நிரப்பிகொண்டுஇருந்தன.

வண்ணத்துப்பூச்சிகள் வட்டமடித்து கொண்டு இருந்தன.



மௌனத்தில்...சில நிமிடங்கள்… கரைந்தது.



மெல்ல கதிர் தன் பார்வையை அவள் பக்கம் ஆர்வத்துடன் திருப்பினான்.

ஆனால் அவள் பார்வையோ ஒரு வெள்ளை ரோஜாவை வெறித்து கொண்டு இருந்தது. கதிர்க்கு இதனால் சிறிய ஏமாற்றம் ஆத்திரம் அடைந்தான்.தனக்கு அவள் மீது ஏற்பட்ட போல அவளுக்கு தன் மீது ஏதும் இல்லை என்று ஏமாற்றம்..



ஆனால்,அவள் தேவதையாக தெரிந்தால்,அவன் கோபம் தெரியாமல் போனது.இவளே, பின்னாளில் தன் வாழ்க்கையில் புயலாக மாறுவள்,வாழ்க்கையை வெறுப்பாக மாற்றுவள் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை.



கதிர் "ஏதாவது பேசலமே!…"

அவள் திரும்பி ஒரு வெற்று பார்வை உதிர்தாள்.



அதற்குள் மழை பேச ஆரம்பித்து விட்டது.முதன்முதலாக மழையை வெறுதான் அவன்.



"சரி,மழை வருது.எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம்." நித்யா.



"என்ன? முடிவு எடுத்து இருக்கீங்க அதை சொல்லிட்டு போங்க…" கதிர்



"நாளைக்கு பேசலனு சொன்னேன்ல!அப்புறம் என்ன?"



"நீ எப்பவும் இப்படி தானா?"



"எப்படி?"



"மொரசுட்டு,கோபமா,மூச்சிய உம்-னு வச்சுகிட்டு இருப்பியா"



"ஆமா, நா அப்படி தா புடிச்சா நாளைக்கு பேசு.இல்லனா புடிகலனு சொலிட்டு போயிரு".



கதிர் நிறைய படங்கள், அவன் நண்பர்கள் அனுபவங்களை கொண்டு நிறைய கற்பனைகள் உடன் வந்தான். ஆனால் அனைத்து கற்பனையாகவே போயிற்று.

அவள் தோற்றதை வைத்து அவளை யூகித்தது தன் முட்டாள் தனம் என்று எண்ணினான்.



மழை நின்று விட்டாலும் குளிர் காற்று

வீசியது. தவளைகள் இசை கச்சேரி நடத்தி கொண்டு இருந்தன.நிலா மெதுவாக உச்சிக்கு நகர்ந்து கொண்டு இருந்தது.ஊரே உறகத்தில் ஆழ்ந்து கொண்டு இருந்தது.



கதிர்க்கு வீட்டில் மிகவும் பிடித்த இடம் இந்த மொட்டைமாடி.



சிலருக்கும் மொட்டைமாடிக்கும் ஒரு உறவு இருக்கும்.சில சமயங்களில் நண்பனை போல, சில நேரங்களில் தாய் மடி போல.



கதிர்க்கு ,இந்த மொட்டைமாடி மீது ஒரு தீராத காதல். அவன் வெற்றி, தோல்வி,துன்பம்,மகிழ்ச்சி,சிரிப்பு,அழுகை அனைத்தும் அதற்கு தெரியும்.அவன் முதல் காதல் தோல்வி அனைத்தும் அத்துபடி. இப்போது அவனின் குழப்பமான முகத்தை பார்த்து கொண்டு இருக்கிறது.



மாடியை ஒரு இருபது முறையாவது சுற்றி வந்து இருப்பான். கால் தான் வழித்ததே தவிர, மனம் தெளிவடையவில்லை.



அவளோட,அந்த வெறுப்பான பார்வையே அவளுக்கு என்னைய சுத்தமா புடிகலனு சொலிருச்சு.ஆனா கீழே வந்து ஏன் எல்லார் கிட்டயும் என்னை புடிச்சுருக்கு சொன்னா?.

உண்மையா,அவளுக்கு என்னைய புடிசிருக்கா?இல்லையா?. ஒருவேளை, என்னோட இந்தவேலை,வயசு, ஏதும்

புடிகலயோ.கண்டிப்பா இருக்கலாம்.இந்த அம்மா கிட்ட சொன்னா கேக்குறாங்களா!..

எவ்வளவு தடவ சொன்னே.. "மா சின்ன பொண்ணு வேணா சரியா வராது".



"சரி,எதுவா இருந்தாலும் நாளைக்கு அவகிட்டயே கேட்டுக்கலாம்."அவனுக்கு அவனே ஆறுதல் சொல்லி உறங்க

சென்றான்.​
 

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
அத்தியாயம்-2



உச்சிவெயில்நேரம்.சூரியன் சுட்டெறித்தது.

சாலை அனைத்தும் கானல்நீராக தெரிந்தது.இது அனைத்தையும் அவள் அந்த குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தாள். இது அவளுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.அவள் எப்போதும் இப்படித்தான் உணர்ச்சிவசமானவள்.



அவளின் இந்த அற்புதமான தருணத்தை, மேலும் மேலும் அழகாகியது,அவனின் வரவு.



" நித்தி!"



கார்த்தி. ஒரு ஐ. டி நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இரு மாதங்களே இருக்கும்.நித்யா -வின் தூரத்துஉறவு.ஐந்து வருடங்கள் ஒன்றாக படித்தார்கள். ஆனால் காதல் மலர்ந்தது மூணு வருசமாதான்.



நித்யா படிப்பில் சுமார்ரகம் தான். அவளுக்கு கூச்ச சுபாவம் அதிகம்.அனைத்திலும் பயம்.ஆனால் இந்த ஒரு வருடமாக அவளுக்குள் பெரிய மாற்றம். அதை அவளே உணர்ந்தாள். கண்டிப்பாக அவளாள் சொல்ல முடியும் இதற்கு காரணம் அவனே.



அவளாள்,அவளே வெறுக்கப்பட்ட தருணங்களில்,அவளுக்கு ஒரு தந்தையாக,தாய்யாக,தோழனாக,

அவளை, அவளே தாழ்வாக எண்ணிய போது ஒருஊக்கபடுத்துபவனாக,

இருந்தான் அவன்.எந்த ஒரு நிலையும் அவளை வெறுத்ததும் இல்லை.கை விட்டதும் இல்லை. அவன் இல்லாமல் இவள் இல்லை. இவள் இல்லாமல் அவள் இல்லை.




கார்த்திக்கு அவள் மீது காரணம் இல்லாத ஈர்ப்பு. அவளிடம் என்ன புடிக்கும்? என்றால் சொல்ல தெரியாது.அவளையே மொத்தமாக புடிக்கும்.



ஆனால்,அவளுக்கு அவனின் அதிகமான நேர்மறையான எண்ணங்கள் சிந்தனைகள்

மிகவும் பிடிக்கும். அவன், அவள் வாழ்கையை அழகா மாற்றி இருத்தான்.

அவன் இல்லா வாழ்வை அவள் நினைத்து கூட பார்க்கவில்லை.அவனும் தான்.



"நா வரக்குள்ள ஏன் காப்பி குடிச்ச..?"கார்த்தி.



"ஏன்?குடிக்க கூடாதா!"



"எதுவா இருந்தாலும் நா வராம சாப்பிட மாட்ட..ஆனா காப்பி மட்டும்..ஏன்? காப்பினா அவ்வளவு புடிகும்மா?"



"ம்ம்ம்..ஆமா.."



"என்னைய விடவா?"



"ஏன்டா.. நேத்து ஏதாவது படம் பார்த்தயா?"



"ஏன்டி..?"



"இல்ல..ஒரே..காதல் வசனமா பேசுற.."



"என்ன பண்ண உன்னை பாத்த கவிதை அருவியா கொட்டுது..!"



"ம்ம்..போதும்டா எனக்கு நனைத்து காய்ச்சல் வந்தர போகுது.."



"போடி..லூசு"



"நீ..போடா.. ஏரும"



"அப்புறம்,சாருக்கு ஆபிஸ் எல்லா எப்படி போகுது?"



"அது எல்லா நல்லாவே போகுது..மேடம்க்கு எப்படி போகுது..?"



"ஏதோ போகுது.."



"நா உன் கூட இல்ல அதுனால அப்படி தா இருக்கும்.."



"அப்படி யாரு சொன்ன.. ஏதோ நீ இல்லாதனால தா கொஞ்சமாவது நல்லா போகுது.."



"அடிப்பாவி! யாரு நம்ம கூட இருக்கப்ப அவங்க அருமை தெரியாது..நா இல்லனா தா உனக்கு என் அருமை புரியும்"



"யப்பா….முடியலடா சாமி..ஏன்? நீ என்னை விட்டு போக போறியா?"



"ஆமா"



"ஹே!என்னடா..சொல்லுற வீட்டுல பொண்ணு பாத்துடாங்களா.."



"ஆமா,ஆமா மூணு பொண்ணுங்க..."



"ஹா ஹா ஹா.."



"ஏன்டி? சிரிக்குற..?"



"இல்ல..ஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே… அப்படி..ஒரு பழமொழி இருக்குல்ல..உனக்கு தெரியுமா கார்த்தி"



"அடி வாங்கு போற நீ.."



"பின்ன.. என்ன..லூசு மாறி பேசுற"



"சரி, சீரியஸ்.."



"சொல்லு டா"



"நா, வேலை விஷயமா ஒரு ஆறு நாள் பெங்களூர் போறேன்"



"உண்மையவா…"



"ஆமா.. மா"



"ஐயா பெரிய ஆளு ஆகிடீங்க போல"



"நீ வேற"



"சரி எப்போ போற"



"இன்னும் ரெண்டு நாள் கழிச்சு.."



" போயிட்டு.. சீக்கிரமா வந்துரு…"



"ம்ம்..சரி"



"நா முதல் தடவ அவ்வளவு தூரம் போறேன் கொஞ்சம் பயமாவும், ஆர்வமாவும் இருக்கு.."



" சரி பார்த்து போய்ட்டு வா...வந்ததுகபுறம் எப்படி இருந்துச்சுனு சொல்லு பா…"



"சரி,உனக்கு நேரமாச்சு நீ கிளம்பு நா நாளைக்கு போன் பண்ணுற…"
 

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
அத்தியாயம்-3



மாலை ஐந்து மணிக்கு மேல் இருக்கும்.

புத்தகத்தில் மூழ்கி போய் இருந்தாள்

நித்யா.



"நித்தி!"



"என்னமா?சொல்லு"



"முக்கியமா ஏதாவது படிச்சுட்டு இருக்கியா?"



"இல்ல மா நீ சொல்லு "



"உனக்கு மாப்பிள்ளைய புடிச்சு இருக்கா..?"



"இது என்னமா கேள்வி.. நீ இத இப்ப ஏன் கேக்குற? நிச்சயதேதி எல்லா முடிவு பண்ணுனதுக்கு அப்புறம்?"



"இல்ல உன்னோட முகத்துல ஒரு களையே காணோம் அதனால தா கேட்டேன்.."



"அப்படி எல்லா ஒண்ணு இல்லமா..நா.. நல்லா தா இருக்கேன்.எனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தா.."



"இதபாரு நித்தி! ஒரே பொண்ணு சொல்லி உன்ன பொத்தி பொத்தி வளர்திடேனா,உன்னைய விட்டு பிரியரத நினைச்சா ரொம்ப கஷ்டமா இருக்கு"



"மா! நீ இப்ப எதுக்கு கவலபடுற..இங்க இருந்து வெறு நாலு கிலோமீட்டர். நா உன்ன தினமும் வந்து பாக்குறேன் மா."



"தங்கம், அங்க போய் இப்படி அடிக்கடி புக் படிக்காத...வீட்டு வேலை செய்யு..ஏதாவது சந்தேகம்னா உன்னோட மாமியார் கிட்ட கேளு.எல்லாரு கிட்டயும் நல்லா பேசு. மாப்பிளைய நல்லா பாத்துக்க.சரியா.."



"சரிம்மா,நீ கவலப்படாத"



"சரி நித்தி நா போய் உனக்கு காபி கொண்டு வரேன்"



"சரிமா"



அவளுக்கும் அம்மா,அப்பாவின் பிரிவு சற்று வேதனையும் பயத்தையும் அளித்தது.அவள் பெரிதாய் அனைவரிடமும் பழகியது இல்லை.

அம்மா,அப்பா,கார்த்தி என்றே வாழ பழகியவள்.



மீண்டும் புத்தகத்தை புரட்ட ஆரம்பித்தாள்.இரண்டு பக்கங்கள் கடந்து இருப்பாள். போன் ஒலித்தது. எடுத்து பார்த்தவளுக்கு சற்று எரிச்சலும்,வெறுப்பும் வந்தது.போனை

எடுத்து காதில் வைத்தாள்.



"ஹலோ! நா கதிர் பேசுறேன்."



"தெரியுது.சொல்லுங்க."



"ஏதாவது வேலையா இருக்கியா நித்யா?"



"இல்ல.எதுவா இருந்தாலும் சீக்கிரம் சொல்லுங்க."



"உண்மையா உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா..உனக்கு என்னை புடிச்சு இருக்கா?"



"எனக்கு கல்யாணத்துல சம்மதம் தா மத்தது எல்லா நிச்சயம் முடிஞ்சு பேசலாமா.இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு…"



"சரி நேரிலேயே பார்த்து பேசலாம்."



போனை வைத்ததும் தான் நித்யாவிக்கு நிம்மதியாக இருந்தது.மனம் புத்தகத்தில் செல்ல மறுத்து பழைய நினைவுகளுக்கு சென்றது.



இப்போது தான் கதிரின் மனம் சற்று நிம்மதியானது. இரண்டு நாளில் நிச்சயம் ஒரு மாதத்தில் கல்யாணம்.பரபரப்பு அவனை சுற்றி கொண்டது.



இரண்டு வீட்டிலும் முதல் திருமணம் என்பதால் சற்று விமர்சையாவே நிச்சயம் நடத்து.
 

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
அத்தியாயம்-4



கடல்.ஓர் தனிஅழகு.அதிகாலை ஓர் புத்துணர்ச்சியான.பகலில் ஆற்றலானா அழகு.அந்திசாயும் மாலை வேளையில் அழகான அழகு.இரவில் அலாதியான அழகு.




நித்யாவிற்கு, இரவில் கடலை பார்ப்பதில் ஒர் அலாதி.அவளை பொறுத்தவரை, வானமும்,கடலும் ஒன்று சேரும் நேரத்தில், நிலா மெதுவாக ஒளியை நீர்பரப்பில் பாய்ச்சி கடலை ஒளிரவிடும் போதும்,ஓய்வில்லாமல் அலைகள் பாதத்தை தொட்டு விளையாடும் போது தன்னையே மறந்துவிடுவாள்.



அவள் இந்த கடற்கரைக்கு வரும்போது எல்லாம் கர்தியிடம் சொல்லும் வார்த்தை,

"இந்த கடல் அலைகளின் இனிமையான ஓசைகளை கேட்கும் போதும்,அலைகள் பாதத்தை தொடும் போதும்,உப்பு காற்று உரசும் போதும்,குருடன் கூட கடலை அழகு என்று சொல்லுவான்."



அவர்களின் காதலுக்கு மிகவும் நெருக்கமான இடம் இந்தகடல். அவர்களின் பல சந்திப்பு இங்குதான்.

இன்றும் அப்படியே..



ஆனால் நித்யாவின் முகத்தில் இன்று மகிழ்ச்சி இல்லை. பிரிவின் துயரம் தெரிந்தது.



கார்த்தி பலவாறு முயன்று, அவளை தேற்றினான்.ஆனால், அவனுக்கும் உள்ளே சற்று பயமாகவும், கவலையாகவும் இருந்தது.



"கார்த்தி போயிட்டு மறக்காம போன் பண்ணு.."



"சரி நீ கவலபடாதே..நா போயிட்டு கண்டிப்பா உனக்கு போன் பண்ணுற.."



"நாளைக்கு எப்போ கிளம்புற?.."



"காலை ஆறு மணிக்கு"



"சரி பத்திரமா போய்ட்டு வா.."



இவர்கள் காதல் சற்று வித்தியாசமானது.இருவரும் வெவ்வேறு துருவங்கள்.கார்த்தி படிப்பு அனைத்திலும் முதலானவன்.அவள் அப்படி அல்ல. கொஞ்சம் சுமார் தான்.



மனிதர்களை, பொறுத்த வரையில், ஒவ்வொருவரும் ஒரு விதம். எண்ணங்கள்,செயல்கள்,திறமைகள், பார்வைகள்,கோபங்கள் வெவ்வேறு விதமாக மனிதனுள் புதைந்து கிடக்கும்.

மனிதர்களை பொறுத்து அது ஒவ்வொரு விதமாக வெளிப்படும்.



சாலையில் இருக்கும் ஒரு மரம், ஒருவனுக்கு நிழாக தெரியும்;

ஒருவனுக்கு மரத்தில் இருக்கும் பழம் மட்டும் தெரியும்;ஒருவனுக்கு கிளைகள் எல்லாம் பலகையாக தெரியும்;ஒருவனுக்கு இலையில் உள்ள மூலிகை தெரியும்;ஒருவனுக்கு மரம் சாலைக்கு இடையூறாக தெரியும்;பார்வைகள் அனைத்தும் வேறு.



அதுபோல,மரம் வெட்டும் கத்தியால் முடி வெட்ட முடியாது;முடி வெட்டும் கத்தியால் மரம் வெட்ட முடியாது;திறமைகளும் வேறு.



இது புரிந்தால் வாழ்க்கை எளிது. வெற்றியும் எளிது.கார்த்திக்கு, இது தெளிவாக தெரியும்.அதனால் அவன் வாழ்க்கையிலும்,காதலிழும் எளிதாக வெற்றி பெற்றான்.



அவனை, பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும் அதை கண்டு அதனுடன் பயணிக்க வேண்டும், நமக்கு வராதை விட்டு தள்ள வேண்டும்.வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ வேண்டும்.



அவனுக்கு,ஓர் கனவு உண்டு.ஒரு பத்து பேர்காவது படிப்பை தர வேண்டும். அதன் சிறு முயற்சியாக மூன்று குழந்தைகள் படிப்பு செலவை ஏற்று உள்ளான்.



ஆனால்,அவள் அப்படி அல்ல. தான் அப்பா,அம்மாவே உலகம் என்று வாழ்பவள்.அவள் உலகத்தில் மூன்றா வதாக நுழைந்தான் கார்த்தி.அவன் இயன்ற அளவு அவளை மாற்றினான்.அவளுக்குள் இருக்கும் வரையும் திறமையை கண்டுபிடித்து கூறினான் அவன்.



அவளின் பயத்தால் அதில் அவள் பெரிய ஈடுபாடு காட்டவில்லை. அவனும் காலசூழ்நிலை இவளை மாற்றும் என்று விட்டுவிட்டேன்.



அந்தநாள் வேறு ஒருவன் மூலமாக வெகு சீக்கிரம் வரும் என்று..அப்போது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை.
 

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
அத்தியாயம்-5



அது ஒரு மிகவும் பிரபலமான அழகான பூங்கா.மாலை நேரம் என்பதால் பூங்கா கூட்டமாக இருந்தது.அவள் இங்கு வருவது இதுவே முதல்முறை. அதன் அழகு அவளை மிகவும் ஈர்த்தது.



செங்கற்களால் வளைவுகள் அமைத்து அதன் மேல் புற்களை வளர விட்டு இருந்தார்கள்.இரண்டின் நிற கலவையும் கண்ணக்கு இதமாக இருந்தது.நேர்த்தியாக வெட்டப்பட்ட புற்களின் நடுவே அங்கங்கே சிறிய மரங்களும் வைத்து இருந்தனர்.கற்கள் பதித்த நடைபாதையின் இருபுறமும் பச்சைபசேலேன புற்கள்.



குழந்தைகளை கவர மஞ்சள்,நிலம் நிறம் கலந்த வண்ணத்தில் சறுக்கு மரம்,ஊஞ்சல்கள்.சற்று தூரம் நடந்தால் அழகிய சிறிய நிச்சல்குளம்.மரத்தினை சுற்றி சிமெண்டால் வட்டமாக திண்னை அமைத்து இருந்தனர்.மரங்கள் செதுக்கிய நாற்காலிகளும் இருந்தன.



ஓங்கி உயர்ந்த மூங்கில் மரங்களும் இருந்தன.குட்டையான தென்னை மரங்களும் இருந்தன.



சுவரால் நுழைவாயில் அமைத்து அதன் மேல் புற்களை வைத்து,வாயிலின் இருபுறமும் புற்களை கொண்டே பச்சை மலை போன்ற அமைப்பை ஏற்படுத்தி இருந்தனர்.



இப்படியொரு அழகை கார்த்தி உடன் சேர்ந்து ரசிக்க முடியவில்லையே என அவள் மனம் ஏங்கியது.



அவளுக்கு இரண்டடி முன்னே கதிர் நடத்து கொண்டு இருந்தான்.அவன் ஒரு நாற்காலியில் அமர சற்று இடைவெளி விட்டு இவளும் அமர்ந்தாள்.நிச்சயம் முடிந்து அவன் முகத்தில் ஒரு கல்யாண களை வந்து இருந்தது.அவன் முகம் தெளிவாக இருந்தது.மனமும் அப்படியே.வழக்கம் போல இவனே பேச ஆரம்பித்தான்.



"என்னோட ஆபீஸ்ல ஒரு பையன் ஆறு மாசத்துக்கு முன்னாடி வேலைக்கு வந்து சேர்த்தான்.ரொம்ப நல்லவன். அழகா இருப்பான்.நானும் அவனும் சீக்கிரமே நல்ல நண்பர்கள் ஆகிடோம்."



அவள் தன் பேச்சை கேக்கிறாளா? என்று ஒரு முறை நிமிர்ந்து பார்த்தான். அவள் குழப்பத்துடன் இவன் பேசுவதை கேட்டு கொண்டு இருந்தாள்.அவன் மேலும் தொடர்ந்தான்.



"அவன் ஒரு பெண்ணை ரொம்ப வருசமா காதலிச்சுட்டு இருத்தான்.என்கிட்ட அத பத்தி பெருசா எதுவும் சொல்ல ஆனா காதலிக்குறேன் மட்டு சொன்னா. வேலைக்காக அவன் வெளியூர் போக வேண்டியிருத்துச்சு.போய்ட்டு வந்து அந்த பொண்ணு வீட்டுல பேச போறேனு சொன்னா.ஆனா…"



அவள் வீசும்பும் சத்தம் அவன் பேச்சை நிறுத்தினான்.கண்களில் நீர் பெருகி வழிந்தது. இது அவன் எதிர்பார்த்ததே. அவன் இதை பொருப்படுத்தவில்லை. அவன் இன்று ஒரு முடிவுடன் தான் வந்து இருத்தான்.



"அவன் ரொம்ப சந்தோஷமா பெங்களூரு புறப்பட்டு போன.ஆனா அவன் போன விமானத்துல விபத்து ஏற்பட்டு இறந்துடான்.அந்த பொண்ணு வீட்டுக்கு இந்த காதல் விவகாரம் எதுவும் தெரியாது.அவங்க ஒரு மாப்பிள்ளை பாக்குறாங்க.அந்த பெண்ணுக்கு.."



"அவ யாரு கார்த்தி வளர்ப்பு ஆச்சே….காதல்தோல்வினு வாழ்க்கைய கெடுத்துகாம...நல்ல பொண்ண பெத்தவங்க மனசு கஷ்டபட கூடாதுனு இப்ப இங்க வந்து உக்காந்து இருக்கா…"



பேச்சை நிறுத்தினான்.அவளும் ஒரு வழியாக அழுது ஓய்ந்தாள்.திக்கி திக்கி பேச ஆரம்பித்தாள்.



"அவனு..நீங்களும்..ஒரே கம்பெனிலையா வேலை பாத்தீங்க?"



"ஹ்ம்ம்..ஆமா.."



நம்ம கல்யாணம் பண்ணிக்க போறவங்க எங்க வேலைக்கு போறங்கனு கூட தெரியாம இருக்கியே நித்து.அவளை அவளே நொந்து கொண்டாள்.



"அப்ப என்னை பத்தி எல்லா தெரிஞ்சு தா என்னைய பொண்ணு பாக்க

வந்தீங்களா..?"



"இல்ல..எனக்கு அப்ப எதுவும் தெரியாது. உனக்கு இந்த கல்யாணத்துல முழு விருப்பம் இல்ல உனக்கு ஏதோ பிரச்சினை இருக்குனு தோணுச்சு. அதா உன்னை பத்தி உன் தோழிககிட்ட விசாரிச்சேன். அவங்க

கார்த்தி ய பத்தி எல்லா சொன்னங்க.அப்ப தா தெரிஞ்சுது.என் நண்பன் காதலிச்ச பொண்ணு நீ தா."



"சரி நீங்க இப்ப என்ன முடிவு எடுத்து இருக்கீங்க…?"



"நித்யா முடிவு எடுக்க வேண்டியது நீங்க தா. நா தெளிவா இருக்கேன் உங்களை தா கல்யாணம் பண்ணனும்-னு. நீங்க ஒரு நல்ல தெளிவா ஒரு முடிவு எடுங்க. உங்களுக்கு முழு சம்மதம்னா சொல்லுங்க.இல்லனா..இந்த கல்யாணமே வேணா."
 

Dinesh J

New member
Messages
9
Reaction score
0
Points
1
அத்தியாயம்-6



வீட்டு தோட்டத்தில் இருந்தாள் நித்யா.

அவளுக்கு பிடித்த இடம் இது.பல பூக்களால் நிரப்பிய தோட்டம் அது.



மஞ்சள்செம்பருத்தி,சிவப்புசெம்பருத்தி,ரோஸ்செம்பருத்தி, என மூன்று வகை செம்பருத்திகள்; சந்தனஅரளி,செவ்வரளி;நான்கு வண்ணசாமந்திகள்;மணமான அடுக்குமல்லி;அவளுக்கு பிடித்த பல வண்ண பட்டனரோஸ் செடிகள்;வெள்ளை மற்றும் ரோஸ் நிற சாமந்தி.



தோட்டத்தில் அங்கும் இங்கும் உலாவி கொண்டு இருந்தாள்.மனம் முழுக்க கார்த்தியின் நினைவுகள் நிரம்பி இருந்தது.மனம் லேசாக வலித்தது.



கடந்த நான்கு மாதம் அவள் வாழ்க்கை நரகமாக இருந்தது.ஓவ்வொரு நொடியும் ரணமாக இருந்தது. கார்த்தியின் நினைவு என்பது அவளின் ரத்தத்தில் ஊறிப்போன விஷயமாக இருத்தது.அவனின் நினைவுகளோடு வாழந்து கொண்டு இருக்கிறாள்.



நேற்று கதிர் அவளிடம் சொல்லிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.



கார்த்தி பத்தி என்னை விட உனக்கு நல்ல தெரியும்.நீ இப்படி இருந்த அவனுக்கு புடிகும்மா.



அவன் சொன்னது உண்மையே. கார்த்திக்கு "தோல்வி,என்னால் முடியாது" போன்ற வார்த்தைகள் அறவே பிடிக்காது.சோகமாக இருந்தாலும் பிடிக்காது.



அவனின் துணிச்சல், தெளிவு, தன்னம்பிக்கையில், பாதி கூட நமக்கு இல்லையே என்று வெட்க்கபட்டாள்.



கண்களை மூடினாள். கார்த்தியின் உருவம் தெரிந்தது. மனதில் ஒரு தெளிவு வந்தது.



ஓரு நன்னாளில், குறித்த முகூர்த்தத்தில், கதிர் நித்யா திருமணம் முடிந்தது.



மெல்ல மெல்ல கதிர் நித்யாவின் மனதை நெருங்கினான்.கதிர் பெரிதாக அவளை கவர ஒன்றும் செய்யவில்லை.இயல்பாகவே அவனின் குணமும் கார்த்தியின் குணமும் ஒன்றாகவே இருந்தது.



நித்யா வாழ தொடங்கினாள்.கதிர் ஒரு நல்ல தோழனாக இருத்தான். அவளுக்கு பலமாக இருத்தான். அவளுக்கு தெரியாத பல விஷயங்களை சொல்லி கொடுத்தான்.வாழ்க்கையை புரிய வைத்தான்.அவளுக்கு நன்றாக வரைய கற்று கொடுத்தான்.



நித்யா வரைய ஆரம்பித்தாள்.நன்றாக சமைக்க செய்தாள். ஒரு வீட்டு தோட்டம் போட்டாள். கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க ஆரம்பித்தாள்.அதை கதிர்க்காக செலவு செய்தாள்.குடும்பம் மகிழ்ச்சியாக சென்றது.



ஒருவருடம் கழித்து கதிர் மற்றும் நித்யாவின் முயற்சியில் " கே. கே பவுண்டேஷன்" ஆரம்பிக்கப்பட்டது.



வாழ்க்கையில் மாற்றம் ஒன்றே நிலையானது.இன்பமும் நிலையானது அல்ல. துன்பமும் நிரந்தரம் அல்ல.ஆக, நாம் அனைத்திற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும்.



காதலுக்கு அழிவே இல்லை.

தீராத காதல்…



சுபம்.
 

New Threads

Top Bottom