Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed தேடாதே! கிடைக்காது!

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 21



கிருஷ்ணமூர்த்தி ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தார். பத்ரியை இதுவரை அவர் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற நியூட்ரல் நிலமையில் தான் வைத்திருந்தார்.வினோத்தின் யார் அந்த B என்ற கேள்வி அவரின் சந்தேக பார்வையை பத்ரியின் மீது திருப்பியது.அமுதனுக்கு பத்ரியை மிகவும் பிடிக்கும். இருவரும் போனில் மணிக்கணக்கில் பேசுவதை அவருக்கு கிடைத்தசொற்ப நேரங்களில் கவனித்திருக்கிறார். புதிதாக வந்து சேர்ந்திருக்கும் செக்ரட்டரி வினோதா கூட அவனது சிபாரிசுதான் என்பது அவரது சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.



அமுதன் காணாமல் போனதற்கும், பத்ரி திடிரென அமெரிக்கா பயணமானதும், வினோதா தன்னிடம் வந்து சேர்ந்ததற்கும் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத முக்கோண இழை ஒடுவதாக அவருக்கு தோன்றியது. அது என்னவென்று தான் அவருக்கு புரியவில்லை. இந்த சிக்கலை அவிழ்க்க நியமித்த வினோத்தோ ராகேஷ், அமுதனின் உடையணிந்த பிரேதம் என்று அவன் பங்குக்கு ஒரு பக்கம் குழப்பிக் கொண்டிருக்கிறான். விதவிதமாக யோசித்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் யோசனையை அறுத்தது வினோதாவின் கதவு தட்டல் .



கதவை திறந்து உள்ளே வந்தவளை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் வியப்பால் விரிந்தன. எதிரே ஷிபான்சேலையில் வானத்திலிருந்து கீழே இறங்கி வந்த தேவதையை போல் நின்றிருந்தாள் வினோதா. அவளின் களங்கமற்ற பவுடர் முகத்தை ஒரு நிமிடம் முழுதாக பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி . இந்த பால் வடியும் முகத்திற்கு பிறகு ஏதோ ஒரு சதி திட்டம் மறைந்திருக்கிறது என்பதை கிருஷ்ணமூர்த்தியால் நம்ப முடியவில்லை. பத்ரி, அமுதன், வினோதா இந்த மூன்று பேருக்கும் இடையில் இருக்கும் மர்மதிரையை தானே கண்டுபிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தவராக வினோதாவைப் பார்த்து புன்னகைத்தார் கிருஷ்ணமூர்த்தி .



"என்ன பாஸ்? என்னைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டீர்கள் ?"



"பாரதிராஜா படத்து தேவதைகளில் ஒன்று வழி தெரியாமல் என் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டதோ என்று திகைத்து நின்று விட்டேன்."



"போதும் பாஸ் உங்களின் புகழ்ச்சி . இன்று மாலை பார்ட்டி இருப்பதையே மறந்து விட்டீர்கள் போலிருக்கிறதே?" என்றாள் வினோதாலே சான வெட்கத்துடன் .



"இல்லை. மறக்கவில்லை. நான் அதற்கு இன்னும் தயாராகவில்லை. இப்படியே கிளம்பலாமா?நீ பார்த்து சொன்னால் சரி." என்றார் கிருஷ்ணமூர்த்தி .அவருடைய உள்மனம் அவருடைய அண்மைக்கு தொடுதலுக்கு ஏங்கி கொண்டிருந்தது.



"இதுவே போதும். கொஞ்சம் முகம் கழுவி பவுடர் அடித்தால் சற்று வயது குறைவாகத் தெரிவீர்கள்"



" என் கேபினில் எல்லாமேக்கப் சமாசாரங்களும் இருக்கின்றன. சற்று பொறு. தயாராகி விட்டு வருகிறேன்."



தன் அறையில் முகம் கழுவி விட்டு பவுடர் அடித்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி தன்னையறியாமல் சீட்டி அடித்து கொண்டார்.



வினோதாவை என்ன செய்தால் அமுதன், பத்ரி இருவரை பற்றிய உண்மை வெளிவரும் என்பதை கண நேரத்தில் அவரது மனம் கணக்கு போட்டு சொன்னது.



கேபினை விட்டு வெளியேறி நடந்தவர் சோபாவில் உட்கார்ர் திருந்த வினோதாவை பார்த்து " போகலாமா?" என்றார்.



"ஓ.எஸ். போகலாம் பாஸ்" என்று எழுந்து கொண்டாள் வினோதா.



ஓரு தேர்ந்த அரடிக் குதிரை போல் அவள் பின்புறம் குலுங்க குலுங்க நடப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே நடந்தார் கிருஷ்ணமூர்த்தி .



இருவரையும் ஏற்றிக் கொண்டு கார் கிளம்பியது. கார் ஏசியின் நடுவே வினோதாவின் மீது அடித்த வாசனையில் கிறங்கி கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி . ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தார் அவர். இன்றைய பார்ட்டியில் பல தில்லாலங்கிடி வேலைகள் நடப்பதை அவர் அறிவார்.குடி, கூத்து, பெண் சகவாசம் என்று என்னென்னவோ அமளி துமளிபடும். அதில் ஈடுபடுபவர்கள் அனைவருமே சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பதால் போலீஸ், ரெய்டு எதுவும் அவர்களை நெருங்காது.



கிருஷ்ணமூர்த்தி இன்று இரவு வினோதாவை நாசம் செய்வதென்று முடிவு செய்திருந்தார்.வினோதாவின் மீது கை வைப்பதன் மூலம் பத்ரியை பழி வாங்க நினைத்தார் அவர்.வினோதாவின் கன்னி கழிப்பை உறுதி செய்த பின் பத்ரியை தொடர்பு கொள்ள நினைத்திருந்தார் அவர். அப்படி எதையாவது செய்தால் தான் வினோதா தன்னை விட்டு போய் விட மாட்டாள் என்று அவர் நினைத்தார்.



"சார்.'பொக்கே வாங்க மறந்து விட்டேன். காரை நிறுத்தி வாங்கி கொள்ளலாமா?" என்றாள் வினோதா,



"ஷ்யுர் " என்றார் கிருஷ்ணமூர்த்தி .



வழியில் தென்பட்ட பொக்கே கடையில் கார் நின்றது.வினோதா கீழே இறங்கினாள். அவள் பொக்கே வாங்கி கொண்டிருப்பதை சாலையின் எதிர் சாரியில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்த சாமிநாதன் பார்த்தான்.



அவன் கையிலிருந்த கோன் ஐஸ் நழுவி விழுந்தது.



"தேவதையை கண்டேன்" என்றான் சாமிநாதன்
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 22



சிணுங்கிய செல்போனை எடுத்த வினோத் "ஹலோ" என்றான். மறுமுனையில் இருந்த சாமிநாதன் படபடப்புடன் பேசினான். "அந்த பொண்ணை நான் பார்த்து விட்டேன்"



வினோத்தின் முகம் இந்த வார்த்தைகளை கேட்டதும் சட்டென்று வெளிச்சமுலாமை பூசிக் கொண்டது. "இஸிட் .சாமிநாதன் நீ சொல்வது உண்மை தானா? நன்றாக பார்த்து கவனித்து சொல். காமாலை கண்ணனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியுமாம்.அதைப் போல் நீ பார்க்கும் பெண்களையெல்லாம் அமுதனின் காதலியாக நினைத்துக் கொண்டு என்னை குழப்பி விடாதே"



"செத்துப் போன எங்காயா மேல் சத்தியமாக சொல்கிறேன். மறக்ககூடிய ஸ்டெரக்சரா அது. அதேவிப்ஸ்டிக் உதடுகள். இழுத்துக்கட்டிய தோல். நடக்கும் போது நர்த்தனமாடும் பின்புறம். அது சர்வ நிச்சயமாக அவள் தான். நான் சொல்வதை நம்புங்கள்" என்றான் சாமிநாதன் பாபரப்புடன்



"சரி. நீ சொல்வதை நான் நம்புகிறேன். அவளை நீ எங்கே எப்போது பார்த்தாய்?"



"இப்போது இந்த நொடியில் அவளை நான் பார்த்து கொண்டி ருக்கிறேன். ஒரு பொக்கே கடையினுள் அந்த தேவதை நின்று கொண்டிருக்கிறாள். அவளை ரசித்தபடி கடைக்கு வெளியே நான் காத்து கொண்டிருக்கிறேன்."



"குட்! அவள் தனியாக வந்திருக்கிறாளா? இல்லை வேறு யாராவது அவளது துணைக்கு வந்திருக்கிறார்களா?"



"அய்யய்யோ! அதை நான் கவனிக்கவில்லையே?"



"பரவாயில்லை. எங்களுக்காக நீ ஒன்று செய்ய வேண்டும் சாமிநாதன்?"



"சொல்லுங்கள். என் தேவதைக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்."



" நல்லதுசாமி நான். இப்போது நான் சொல்வதை கவனமாக கேள். அந்த தேவதையை அவளுக்கே தெரியாமல் பின்தொடர்ந்து போ. அவள் உன்னை பார்த்து விடப் போகிறாள். கவனமாக அவளை பின்தொடர்ந்து படி எங்களுக்கு ரன்னிங் கமெண்டரி கொடு. இதோ நாங்கள் கிளம்பி விட்டோம். இன்னும் சற்று நேரத்தில் உன்னுடன் வந்து சேர்ந்து கொள்வோம். எந்த காரணம் கொண்டும் அவளிடம் பேசவோ முகம் காட்டவோ முயற்சி செய்யாதே! அவள் உன் கண் பார்வையிலிருந்து மறைந்து விட அதிக வாய்ப்புள்ளது."



"ஓகே.சார். நான் வெகு கவனமாக இருப்பேன்." என்றான் சாமிநாதன் .



போனை அணைத்த வினோத்" சாமிநாதன் அந்த மொட்டை மாடி தேவதையை பார்த்து விட்டானாம். அவளை பின்தொடர சொல்லியிருக்கிறேன். வா சீக்கிரம் அவன் சொன்ன இடத்திற்கு போவோம். காரை எடு" என்றான்.



அருண் வெகு வேகமாக ஓடிப்போய் காரைக் கிளப்பினான். கார் ஸ்டார்ட் ஆகும் ஓசையை கேட்டதும் தெருமுனை கும்பல் சுறுசுறுப்பானது.



" இவர்கள் இடைஞ்சல் வேறு " என்றான் வெறுப்புடன் அருண்



"பின் தொடர்ந்து வரட்டும். அதனால் நமக்கு பாதகமில்லை." என்றான் வினோத்.



அருண் காரை கிளப்பி மெயின் ரோட்டில் இணைந்த போது பின்னால்ரா கே சின் ஆட்கள் பின் தொடர ஆரம்பித்திருந்தனர்.



வினோத்தின் போன் அடித்தது.



" சொல்லு.! சாமிநாதன் " என்றான் வினோத்.



"சார். என்னோட டார்லிங் ஒரு காரில் ஏறுகிறாள். கண்ணாடி கதவுகளில் கறுப்பு நிறம் பூசப்பட்டிருப்பதால் உள்ளே இருப்பது யார் என்று தெரியவில்லை" என்றான் சாமிநாதன் .



"பரவாயில்லை.அந்த காரை பாலோ பண்ணி கொண்டே செல் .நாங்கள் உன் பின்னால் வருகிறோம்" என்றான் வினோத்.



கடைசியாக சாமிநாதன் சொன்ன இடத்தில் காரை நிறுத்தினான் வினோத். எங்கிருந்தே ஓடி வந்த சாமிநாதன்" சார். அந்த பைவ் ஸ்டார் ஓட்டலில் தான் அவளது கார் நுழைந்தது.வாங்கள் அங்கே போய் பார்க்கலாம்" என்றான்.



" காரில் ஏறு சாமிநாதன் " என்றான் வினோத்.



காரின் பின் சீட்டில் தாவி ஏறினான் சாமிநாதன் .காரை பார்க்கிங்கில் போட்டுவிட்டு மூவரும் உள்ளே நுழைந்தனர்.



"பாஸ்" இங்கே நாம் எப்படி உள்ளே நுழையப் போகிறோம்? அந்த பெண்ணை எப்படி கண்டு பிடிக்க போகிறோம்?" என்றான் அருண்.



"அவளுடைய பெயர் என்னவென்று உனக்கு தெரியுமா?" என்றான் வினோத் சாமிநாதனை பார்த்து.



"அவள் பெயர் எனக்கு தெரியாது" என்றான் சாமிநாதன் பரிதாபமாக .



வினோத் ரிசப்சனில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். " உட்காருங்கள். யோசிப்போம்" என்றான்.



அப்போதுதான் வினோத்தின் கண்களில் அது தென்பட்டது. அவன் முகம் வெளிச்சமானது
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 23



"அப்படி எதை பார்த்து பாஸ் உங்கள் முகத்தில் பல்பு எரிகிறது?" என்றான் அருண்.



"நோட்டீஸ் போர்டை கவனித்தாயா அருண் ? நம் கிளைண்ட் கிருஷ்ணமூர்த்தியின் கம்பெனி ஒன்றின் பெயர் அங்கே எழுதப்பட்டிருக்கிறது. அதனுடைய சில்வர் ஜூப்ளி தினம் இன்று .நாம் தேடி வந்த பெண் இந்த மீட்டிங்கிற்குத் தான் வந்திருக்க வேண்டும்" என்றான் வினோத்.



"அதை எப்படி இவ்வளவு உறுதியாக சொல்கிறீர்கள்?" என்றான் அருண்.



"அந்த பெண் பொக்கே வாங்கியதாக சாமிநாதன் சொன்னதை மறந்து விட்டாயா? இந்த மாதிரி பிஸினஸ் மீட்டிங்குகளில் பொக்கே வாங்குவது வதும் கொடுப்பதும் சம்பிரதாயம் தானே?"



"அட ஆமாம் பாஸ்.! அப்படியானால் வாருங்கள் நாம் உள்ளே போகலாம்" என்றான் அருண்..



"பொறு! வேறு யாராவது பொக்கேவுடன் அந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள வருவார்கள். நாம் அவர்களுடன் இணைந்து கொள்ளலாம்" என்றான் வினோத்.



வினோத் எதிர்பார்த்தது போலவே அரை மணி நேரத்தில் ஒரு குழு கையில் விதவிதமான பொக்கே க்களுடன் உள்ளே நுழைந்தது. காத்திருந்த மூவரும் அவர்களுடன் இணைந்து கொண்டனர். இரண்டாம் தாம் முழுவதும் அந்த பார்ட்டிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. வித விதமான அழகான பெண்களை உள்ளே பார்த்த அருணின் வாய் தானாகவே திறந்தது.



சாமிநாதன் இந்த பெண்களை விட அந்த மொட்டை மாடி பெண் வெகு அழகோ?" என்றான் வினோத்.



"வானத்தில் ஒரு சூரியன் தான் இருக்க முடியும். அது மாதிரி தான் என் தேவதையும்." என்றான் சாமிநாதன் .



"டிவைன் லவ். உன்னுடைய தெய்வீக காதலை இந்த கூட்டத்தில் தேடி கண்டுபிடிபார்ப்போம்"



" தோட்டத்திலேயே அழகான பூவை தேடச் சொல்கிறீர்கள் பாஸ்?" என்றான் அருண்.



"அது உனக்கில்லை." என்றான் வினோத்.



அதே நேரம் மேடையில் தன்னுடைய சம்பிரதாயமான பேச்சை முடித்து கொண்டு கீழிறங்கினார் கிருஷ்ணமூர்த்தி .



அதற்காகவே காத்திருந்தது போல் சாம்பைன்கள் உடைபட்டு நுரை பொங்கி பிரவகிக்க ஆரம்பித்தது.



"இனிதான் நாகரீகம் விடை பெறப் போகிறது. டீசண்டான நடத்தைகள் காணாமல் போகப் போகின்றன" என்றான் வினோத்.



கீழே இறங்கி மது டம்ளரை கையில் எடுத்த கிருஷ்ணமூர்த்தியிடம் "கலக்கிட்டீங்க பாஸ்" என்றாள் வினோ தா.



"தேங்க்ஸ், நீ மது அருந்துவாயா?" என்றார் அவர்.



"நோ !" என்றாள் அவள்.



"கூல்டிரிங்ஸ்?"



" ஆப்பிள் ஜீஸ் மட்டும் "



"இரு .உனக்காக நானே கொண்டு வருகிறேன்" என்ற கிருஷ்ணமூர்த்தி பேரரை நோக்கி நடந்தார்.



தனக்கு வெகு பழக்கமான பேரர் நாகராஜை நெருங்கினார்.



"வாங்க சார். ஏங்கே இந்த பக்கம் ரொம்ப நாளாக காணவில்லை." என்றான் அந்த நாகராஜ்.



"இன்று ஒரு வேட்டைக்கு வந்திருக்கிறேன். ரூம் எதாவது காலியாக இருக்கிறதா?" என்று கண் அடித்தார்.



"உங்களுக்கு இல்லாததா?" என்றவன் தன் கோட் பாக்கெட்டிலிருந்த சாவி கொத்தை டேபிளில் வைத்து அவர் பக்கம் தள்ளினான். "ரும் நம்பர் பைவ் "



" ஆப்பிள் ஜூஸ் சம்திங் ஸ்பெசல்" என்று மீண்டும் ஒருமுறை விசமமாக கண்ணடித்தார் கிருஷ்ணமூர்த்தி .



"புரிகிறது சார். இந்த டிராப் எந்த கிளிக்கு.? ஆள் மாறி விடப் போகிறது சார்?" என்றான்.



தூரத்தில் நின்று கொண்டிருந்த வினோதாவை காட்டிய கிருஷ்ணமூர்த்தி " நன்றாகப் பார்த்து கொள்.ஆப்பிள் ஜூஸ் கொடுக்க வேண்டியது அந்த பெண்ணிற்குத்தான். சொதப்பி விடாதே! நாளை என்னை- போனில் கூப்பிடு. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள் தருகிறேன்" என்றார் கிருஷ்ணமூர்த்தி .



"உங்களுடைய அன்பே போதும் சார்" என்று பல்லை காட்டினான் அந்த நாகராஜ். உள்ளே திரும்பியவன் சடுதியில் ஆப்பிள் ஜீஸை தயாரித்து அதில் கலக்க வேண்டியதை கலந்து கிருஷ்ணமூர்த்தியிடம் நீட்டினான் நாகராஜ்.



"மணி இஸ் ஆல் வேஸ் அல்டிமேட் " என்று முனகியபடி ஆப்பிள் ஜூஸ் டம்ளருடன்நகர்ந்தார் கிருஷ்ணமூர்த்தி . காத்திருந்த வினோதாவிடம் ஆப்பிள் ஜூஸ நீட்டினார் அவர்.



"எனக்காக நீங்களே போக வேண்டுமா?" என்ற அவளின் கேள்விக்கு பதில் சொல்லாத



கிருஷ்ணமூர்த்தி தன் கோப்பையை எடுத்து கொண்டார்.



சற்று நேரத்தில் நிலை தடுமாறத் துவங்கிய வினோதாவை கைதாங்கலாக பிடித்து கொண்டு பார்ட்டி ஹாலை விட்டு வெளியேறினார் கிருஷ்ணமூர்த்தி .அவர் அவளுடன் வெளியேறுவதை பார்த்தான் சாமிநாதன் .



"அதுதான் நான் சொன்ன பெண் " என்றான் வினேத்திடமும் அருணிடமும்.



மூவரும் வெளியே ஓடி வந்தபோது கிருஷ்ணமூர்த்தி வினோதாவுடன் காணாமல் போயிருந்தார்.



"எங்கே போனார்கள் என்றே தெரியவில்லையே பாஸ்?" என்றான் அருண் குழப்பத்துடன் .



" சீக்கிரமாக கண்டுபிடியுங்கள். என் தேவதையை நான் பார்த்தாக வேண்டும்" என்றான் சாமிநாதன்
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 24



நீண்ட வராந்தாவில் இருபுறமும் சாத்தப் பட்டிருந்த அறை கதவுகளை தேமே என்று பார்த்தபடி மூவரும் நின்று கொண்டிருந்தனர்.



"இப்போது என்ன பாஸ் செய்வது? எந்த ரூமில் அந்த பெண் இருக்கிறாள் என்று நாம் கண்டுபிடிப்பது?" என்றான் அருண்.



"ஈஸி. அவளை கூட்டிச் சென்றதுராமன் இல்லை. கிருஷ்ணன்.சத்தியமாக நல்ல எண்ணத்தோடு கிருஷ்ணமூர்த்தி அவளை கூட்டிச் சென்றிருக்க வாய்ப்பில்லை. டோண்ட் டிஸ்டர்ப் என்ற கார்டு எந்த ரூமின்கதவில் தொங்குகிறதோ அந்த ரூமில்தான் கிருஷ்ணமுர்த்தி இருப்பார். அதை விட சுலபமான வழி அவரை போனில் அழைப்பது.அவரது ரிங்டோன் நமக்கு மிகவும் பரிச்சயமானது. எந்த அறையில் அவரது ரிங்டோன் கேட்கிறது என்று கவனி. " என்ற வினோத்தன் போனில் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தான்.



அறையின் உள்ளே தான் தாங்கி வந்த வினோதாவை மயக்க நிலையில் சோபாவில் படுக்க வைத்திருந்தார் கிருஷ்ணமூர்த்தி .அவளது அப்பழக்கற்ற அழகை அடைய விரும்பியவர் சட்டென்று அவளது சேலையை உருவ ஆரம்பித்தார். ஜாக்கெட்டில் விம்மி புடைத்த அவளது மார்பகத்தை பார்த்து பெருமூச்சு விட்டவர் அவளை நெருங்கினார். அவரது போன் அடிக்க ஆரம்பித்தது. "யாரு அது சிவ பூஜையில் கரடி " என்றவாறு போனை எடுத்தார் கிருஷ்ணமூர்த்தி . டிஸ்ப்ளே வினோத் என்றது. இவன் எதற்கு இப்போது போன் செய்கிறான். என்று அவர் யோசித்து கொண்டிருக்கும் போதே அவரது அறை கதவு தட்டப்பட்டது.அருண் "பாஸ் இந்த ரூமில்தான் அவர் இருக்கிறார்" என்றபடி கதவை தட்டத் தொடங்கினான்.



போனை கட் செய்த கிருஷ்ணமூர்த்தி கடும் கோபத்துடன் கதவை திறந்தார். அதற்காகவே காத்திருந்த மாதிரி மூவரும் உள்ளே பாய்ந்தனர்.



"என்னய்யா ? திறந்த வீட்டில் நாய் மாதிரி திறந்ததும் நுழைந்து விட்டீர்கள் ?" என்றார் கிருஷ்ணமூர்த்தி .



"இது தான் என்னோட தேவதை " என்றபடி வினோதாவின் அருகில் சென்ற சாமிநாதன் அவளது சேலை உருவப்பட்டிருப்பதை பார்த்து ரௌத்திரமானான்.



"காமாந்தக கிழவா? என் தேவதையை என்ன செய்ய நினைத்தாய்?" என்றபடி கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை பிடித்தான்.



விழி பிதுங்கிய கிருஷ்ணமூர்த்தி" யாராவது என்னை காப்பாற்றுங்கள்" என்றார்.



அருண் அவரை உடனடியாக சாமிநாதனிடமிருந்து அவரை மீட்டான்.



"யாருப்பா இவன்?" என்றார் கிருஷ்ணமூர்த்தி பயத்துடன் .



"வினோதாவின் ஒருதலை காதலன்.சாமிநாதன் நீ கொஞ்ச நேரம் வெளியே இரு. நான் கூப்பிடுகிறேன்" என்றான் வினோத்.



"மறுபடியும் அவள் மேல் கை வைத்தால் தொலைத்து விடுவேன்" என்றபடி அவன் அறையை விட்டு வெளியேறினான்.



வினோதாவை எழுப்ப அருகே போன வினோத்தின் நாசியில் அந்த வாசம் வீசியது.சேனல் 5 செண்ட்டின் வாசம். சோபாவில் படுத்து கிடந்தவளின் காலில் இருந்த ஓற்றை செருப்பு ஓன்று நழுவி விழுந்தது. அதன் எண் 9. வினோத்தின் மனதில் பொறி தட்டியது. மயங்கி கிடந்தவளின் முகத்தை தன் செல்போன் கேமிராவால் போட்டோ எடுத்த வினோத் "எனக்கு ஒரு டவுட் அருண்.இவளுடைய போட்டோவை போட்டோஷாப்பில் ஆணாக மாற்றி பார்" என்றான்.



அருண் அந்த போட்டோவை ஆப்பிற்குள் இடம் மாற்றிய போது அமுதனின் படம் கிடைத்தது.



"பாஸ் இது அமுதன்" என்றான் அருண் வியப்புடன்.



"என்னது. இது என் பையனா?" என்று வாயை பிளந்தார் கிருஷ்ணமூர்த்தி . தன் மகனை இப்படி ஒரு கோலத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை. முகத்தில் தண்ணீர் தெளித்ததும் எழுந்த அமுதன் தலை குனிந்து கொண்டான்.



"சொல்லு அமுதன் எதற்காக இந்த டிராமா ?" என்றான் வினோத்.



"டிரா மா இல்லை. இது தான் நிஜம். எனக்கு சின்ன வயதிலிருந்தே பெண்ணாக வேண்டும் என்ற உணர்வு இருந்தது. ஆண் பிள்ளையாக இருந்தும் என் அம்மாவினால் பெண் பிள்ளை போல் வளர்க்கப்பட்டதால் எனக்கு இந்த உணர்வு வந்திருக்கலாம். என்னை யாரும் கிண்டல் செய்ய கூடாது என்பதால் நான் அதை மூடிமறைத்தேன். ஆனால் என்னுடைய சுபாவத்தை கண்டுபிடித்தவர் பத்ரி மட்டும் தான். அவர்தான் என்னை மும்பைக்கு அனுப்பி முழு பெண்ணாக மாற்றியவர். அந்த ஆபரேசனுக்கு பிறகு தான் நான் என் வீட்டு மொட்டை மாடியில் பெண் உடை அணிந்து பெண்களை போல நடை உடை பாவனைகளை பழகி கொண்டிந்தேன். அப்போதுதான் ஜாலியாக சாமிநாதனை கலாய்த்தேன்." என்ற அமுதன் என்கிற வினோதன் தன் சேலையை அவசர அவசரமாக கட்டி கொண்டான்.



"உன்னோட உடைகளோடு ஓரு பிணம் கிடைத்ததே?"



"அதுராகே சின் ஆட்கள் என்னை கடத்தி கொண்டு போன போது அவர்களிடமிருந்து நான் தப்பித்தேன். அப்போது பத்ரி தான் என்னை வழியில் பார்த்து காப்பாற்றினார் .அவர் வாங்கி கொடுத்த பெண் உடைகளை அணிந்து கொண்டு என் உடைகளை ஓரு பிச்சைகாரனுக்கு தானம் செய்து விட்டேன்"



அடக்கடவுளே! இது தெரியாமல் நாங்கள் மிகவும் குழம்பி விட்டோம். பெண்ணாக மாறிய நீ எதற்காக உன் அப்பாவிடம் வேலைக்கு வந்தாய்?"



"பெண்களுக்கு அப்பா மீது பாசம் இருப்பது இயல்புதானே? அவரை விட்டால் எனக்கு வேறு யார் இருக்கிறார்கள்.? கடைசி வரை அவரை பார்த்து கொள்ளத்தான் பத்ரி மூலமாக செக்ரட்டரியாக வேலைக்கு வந்தேன். நான் அமுதனாக இருந்தால் ரா கே சின் ஆட்கள் என்னை கொலை செய்து விடுவார்கள். நான் பாதுகாப்பாக இருக்க இதை விட்டால் வேறு வழியில்லை. பைலில் கையெழுத்து போட்டதும் நான் தான் "



அதே நேரம் கதவு தட்டப்பட்டது. வினோத் மேஜிக் ஐ வழியாகப் பார்த்தான் கதவுக்கு வெளியே ராகேஷ் அந்த சாமிநாதனின் தலையில் துப்பாக்கியை வைத்தபடி நின்றிருந்தான்.



"இவன் எங்கே இங்கே வந்தான்?" என்று திகைத்தான் வினோத்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 25



வினோத் "அவனிடம் நான் பேசிக் கொள்கிறேன். நீங்கள் மறந்தும் கூட வினோதா தான் அமுதன் என்பதை வெளிக்காட்டி விடாதீர்கள். அவனை கொல்வது தான் ராகேஷின் லட்சியம். அதனால் ஜாக்கிரதையாக இருங்கள்" என்றான்.



ராகேஷின் பெயரை கேட்டதும் வினோதாவின் உடல் நடுங்க தொடங்கியது.



வினோத் கதவை திறந்தான். சாமிநாதனுடன் உள்ளே நுழைந்த ராகேஷ் "இங்கே என்ன நடக்கிறது வினோத் ?" என்றான். அவனது கையில் துப்பாக்கி இருந்தது.



" இந்த கிழவன் அந்த பெண்ணை நாசம் செய்ய பார்த்தான். முதலில் அவனை சுடுங்கள்" என்றான் சாமிநாதன் .



"இந்த வயதிலும் டொக்கு போட அலைகிறாயா கிருஷ்ணமூர்த்தி?" என்றான் ராகேஷ்.



"நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?" என்றான் அருண்.



"இந்த மீட்டிங்கில் நானும் இருக்கிறேன். கிழே நடந்த களேபரத்தை பார்த்து விட்டுத்தான் மேலே வந்தேன்.என் ஆட்களை வரச் சொல்லியிருக்கிறேன்"



"அதற்கு தேவையில்லை! நீங்கள் பழி வாங்க துடிக்கும் அமுதன் இறந்து விட்டான்" என்றான் வினோத்



" என்ன சொல்கிறாய்?" என்றான் ராகேஷ் குழப்பத்துடன் .



"அமுதன் ரயில் விபத்தில் இறந்து விட்டான். நாங்கள் மார்ச்சுவரியில் இருந்ததை உன் ஆட்கள் சொல்லியிருப்பார்களே?"



" சொன்னார்கள். அது அமுதனின் பாடியா ? பார் வினோத் எனக்கு கொலை செய்வதில் விருப்பமில்லை என் தந்தைக்காகத் தான் அவனை கொல்ல தேடினேன். நல்ல வேளை. என் கைகளில் பாவத்தை சேர்க்காமல் போய் சேர்ந்து விட்டான்.கிருஷ்ணமூர்த்தி நீ யாருக்காக ஊரை அடித்து உலையில் போட்டு சம்பாதித்தாயோ அவனே உயிரோடு இல்லை என்பதே எனக்கு போதும் .உன் சொத்தை கட்டிக் கொண்டு தனியாக அழு" என்றான் ராகேஷ்.



கிருஷ்ணமூர்த்தி தலை குனிந்து விசும்ப ஆரம்பித்தார்.



"ஓரு பெண்ணின் கற்பை காப்பாற்றிய திருப்தியில் திரும்பி போகிறேன்" ராகேஷ் துப்பாக்கியை இடுப்பில் சொருகிக் கொண்டு வெளியேறினான்.



அதற்காகவே காத்திருந்தவன் போல சாமிநாதன் " டார்லிங். உன்னோட பேர் என்ன?" என்றான்.



"வினோதா"



" வினோதமான பெயர். உன்னை பார்க்காமல் இத்தனை நாளாக நான் தூங்கவில்லை தெரியுமா? ஐ லவ் யூ டியர்" என்றான் சாமிநாதன் .



"யப்பா! தெய்வீக காதலா! கொஞ்சம் வெளியேவா! நாம் பேசிக் கொண்டே போவோம்" என்றான் அருண்.



, " இன்று இரவு மொட்டை மாடிக்கு வருவாங்க தானே?" என்றான் சாமிநாதன்



"நான் கிளம்புகிறேன்" என்றான் வினோத்.



மூன்று மாதங்களுக்கு பிறகு வினோத் பேப்பரை புரட்டினான். " தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி தன் செக்ரட்டரி வினோதாவை மணந்தார் " என்றது செய்தி.



"சொத்தை தன் மகன் பெயருக்கு மாற்ற வேறு வழி தெரியாமல் இந்த ரூட்டில் இறங்கி விட்டார் போலிருக்கிறது" என்றான் வினோத்.



"தாய் மகளுக்கு கட்டியதாலி என்று ஒரு படம் இருக்கிறது பாஸ். இந்த கதைக்கு தந்தை மகனுக்கு கட்டியதாலி என்று பெயர் வைத்திருக்கலாம்." என்றான் அருண்.



வினோத் சிரித்த போது போன் அடித்தது.



"ஹலோ"



"நான் சாமிநாதன் பேசுகிறேன்."



"சொல்லு.சாமிநாதன் "



"நான் அந்த கிழவனை போட்டு தள்ளலாம்னு முடிவு பண்ணியிருக்கேன்"



"தப்பு பண்றிங்க சாமிநாதன் "



"பணத்தை காட்டி என் ஆளை அந்த கிழவன் மயக்கிவிட்டான். அவனை கொன்றால் தான் என் ஆத்திரம் தீரும் "



" பொறு. நான் சொல்வதை கேள்."



வினோத் கதையை முதலிலிருந்து சொல்ல துவங்கினான்
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
bro ithu finished ah
ஆம்.அவன் கதையை முதலிலிருந்து சொல்ல தொடங்குகிறான்.
 
Top Bottom