Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
அத்தியாயம் 21
கிருஷ்ணமூர்த்தி ஆழ்ந்த குழப்பத்தில் இருந்தார். பத்ரியை இதுவரை அவர் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற நியூட்ரல் நிலமையில் தான் வைத்திருந்தார்.வினோத்தின் யார் அந்த B என்ற கேள்வி அவரின் சந்தேக பார்வையை பத்ரியின் மீது திருப்பியது.அமுதனுக்கு பத்ரியை மிகவும் பிடிக்கும். இருவரும் போனில் மணிக்கணக்கில் பேசுவதை அவருக்கு கிடைத்தசொற்ப நேரங்களில் கவனித்திருக்கிறார். புதிதாக வந்து சேர்ந்திருக்கும் செக்ரட்டரி வினோதா கூட அவனது சிபாரிசுதான் என்பது அவரது சந்தேகத்திற்கு வலு சேர்த்தது.
அமுதன் காணாமல் போனதற்கும், பத்ரி திடிரென அமெரிக்கா பயணமானதும், வினோதா தன்னிடம் வந்து சேர்ந்ததற்கும் ஏதோ ஒரு கண்ணுக்கு தெரியாத முக்கோண இழை ஒடுவதாக அவருக்கு தோன்றியது. அது என்னவென்று தான் அவருக்கு புரியவில்லை. இந்த சிக்கலை அவிழ்க்க நியமித்த வினோத்தோ ராகேஷ், அமுதனின் உடையணிந்த பிரேதம் என்று அவன் பங்குக்கு ஒரு பக்கம் குழப்பிக் கொண்டிருக்கிறான். விதவிதமாக யோசித்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் யோசனையை அறுத்தது வினோதாவின் கதவு தட்டல் .
கதவை திறந்து உள்ளே வந்தவளை நிமிர்ந்து பார்த்த கிருஷ்ணமூர்த்தியின் கண்கள் வியப்பால் விரிந்தன. எதிரே ஷிபான்சேலையில் வானத்திலிருந்து கீழே இறங்கி வந்த தேவதையை போல் நின்றிருந்தாள் வினோதா. அவளின் களங்கமற்ற பவுடர் முகத்தை ஒரு நிமிடம் முழுதாக பார்த்தார் கிருஷ்ணமூர்த்தி . இந்த பால் வடியும் முகத்திற்கு பிறகு ஏதோ ஒரு சதி திட்டம் மறைந்திருக்கிறது என்பதை கிருஷ்ணமூர்த்தியால் நம்ப முடியவில்லை. பத்ரி, அமுதன், வினோதா இந்த மூன்று பேருக்கும் இடையில் இருக்கும் மர்மதிரையை தானே கண்டுபிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்தவராக வினோதாவைப் பார்த்து புன்னகைத்தார் கிருஷ்ணமூர்த்தி .
"என்ன பாஸ்? என்னைப் பார்த்து அப்படியே திகைத்து நின்று விட்டீர்கள் ?"
"பாரதிராஜா படத்து தேவதைகளில் ஒன்று வழி தெரியாமல் என் அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டதோ என்று திகைத்து நின்று விட்டேன்."
"போதும் பாஸ் உங்களின் புகழ்ச்சி . இன்று மாலை பார்ட்டி இருப்பதையே மறந்து விட்டீர்கள் போலிருக்கிறதே?" என்றாள் வினோதாலே சான வெட்கத்துடன் .
"இல்லை. மறக்கவில்லை. நான் அதற்கு இன்னும் தயாராகவில்லை. இப்படியே கிளம்பலாமா?நீ பார்த்து சொன்னால் சரி." என்றார் கிருஷ்ணமூர்த்தி .அவருடைய உள்மனம் அவருடைய அண்மைக்கு தொடுதலுக்கு ஏங்கி கொண்டிருந்தது.
"இதுவே போதும். கொஞ்சம் முகம் கழுவி பவுடர் அடித்தால் சற்று வயது குறைவாகத் தெரிவீர்கள்"
" என் கேபினில் எல்லாமேக்கப் சமாசாரங்களும் இருக்கின்றன. சற்று பொறு. தயாராகி விட்டு வருகிறேன்."
தன் அறையில் முகம் கழுவி விட்டு பவுடர் அடித்து கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி தன்னையறியாமல் சீட்டி அடித்து கொண்டார்.
வினோதாவை என்ன செய்தால் அமுதன், பத்ரி இருவரை பற்றிய உண்மை வெளிவரும் என்பதை கண நேரத்தில் அவரது மனம் கணக்கு போட்டு சொன்னது.
கேபினை விட்டு வெளியேறி நடந்தவர் சோபாவில் உட்கார்ர் திருந்த வினோதாவை பார்த்து " போகலாமா?" என்றார்.
"ஓ.எஸ். போகலாம் பாஸ்" என்று எழுந்து கொண்டாள் வினோதா.
ஓரு தேர்ந்த அரடிக் குதிரை போல் அவள் பின்புறம் குலுங்க குலுங்க நடப்பதை ஓரக்கண்ணால் பார்த்தபடியே நடந்தார் கிருஷ்ணமூர்த்தி .
இருவரையும் ஏற்றிக் கொண்டு கார் கிளம்பியது. கார் ஏசியின் நடுவே வினோதாவின் மீது அடித்த வாசனையில் கிறங்கி கொண்டிருந்தார் கிருஷ்ணமூர்த்தி . ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாக இருந்தார் அவர். இன்றைய பார்ட்டியில் பல தில்லாலங்கிடி வேலைகள் நடப்பதை அவர் அறிவார்.குடி, கூத்து, பெண் சகவாசம் என்று என்னென்னவோ அமளி துமளிபடும். அதில் ஈடுபடுபவர்கள் அனைவருமே சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ளவர்கள் என்பதால் போலீஸ், ரெய்டு எதுவும் அவர்களை நெருங்காது.
கிருஷ்ணமூர்த்தி இன்று இரவு வினோதாவை நாசம் செய்வதென்று முடிவு செய்திருந்தார்.வினோதாவின் மீது கை வைப்பதன் மூலம் பத்ரியை பழி வாங்க நினைத்தார் அவர்.வினோதாவின் கன்னி கழிப்பை உறுதி செய்த பின் பத்ரியை தொடர்பு கொள்ள நினைத்திருந்தார் அவர். அப்படி எதையாவது செய்தால் தான் வினோதா தன்னை விட்டு போய் விட மாட்டாள் என்று அவர் நினைத்தார்.
"சார்.'பொக்கே வாங்க மறந்து விட்டேன். காரை நிறுத்தி வாங்கி கொள்ளலாமா?" என்றாள் வினோதா,
"ஷ்யுர் " என்றார் கிருஷ்ணமூர்த்தி .
வழியில் தென்பட்ட பொக்கே கடையில் கார் நின்றது.வினோதா கீழே இறங்கினாள். அவள் பொக்கே வாங்கி கொண்டிருப்பதை சாலையின் எதிர் சாரியில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டிருந்த சாமிநாதன் பார்த்தான்.
அவன் கையிலிருந்த கோன் ஐஸ் நழுவி விழுந்தது.
"தேவதையை கண்டேன்" என்றான் சாமிநாதன்