Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


தொடரும் மர்மங்கள்

Status
Not open for further replies.

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 01



Disclaimer

கதையும், கதாப்பாத்திரங்களும் இரண்டும் கற்பனைகள் மட்டும். ஆனால் கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களும், இதில் நடக்கும் ஒவ்வோர் விடயமும் நிஜத்தில் சிலரின் செயல்பாடுகளை சித்தரிக்கும் வண்ணம் காட்சிபடுத்தப்படுகிறது.

இந்த கதையை ரொம்ப வித்தியாசமாகவும், பரபரப்பாகவும், நிறைய திருப்பங்கள் மூலமாகவும் வாசகர்களிடையே எதிர்பார்பை உருவாக்கி அடுத்து என்ன scene வரும் என்று guess செய்ய முடியாம சொல்ல முயற்சி செய்கிறேன்.

இது ஓர் கற்பனைக்கதை மட்டுமே, அனைத்தும் கற்பனை கதாப்பாத்திரங்கள் என்று இந்த கதையை வாசிக்கும் அனைத்து வாசகர்களுக்கும் மீண்டும் ஒருமுறை தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். சரி வாங்க கதைக்கு செல்வோம்.

குறிப்பு:
புதிய வாசகர்களுக்கு வனிதா, வினிதாவை பற்றிய முன் கதையை ஏய்! நீ ரொம்ப அழகா இருக்கே! கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கதை தொடக்கம்:

6 மாதங்களுக்குப் பிறகு

வனிதா மற்றும் வினிதாவிற்கு ஆண்டுத் தேர்வுகள் முடிந்து விடுமுறைக்காக பொள்ளாச்சி வந்துச்சு செட்டில் ஆனார்கள்.

கோபாலும் தனது செல்லக் குழந்தைகளுக்கு பாசம் காட்டுவதிலும் சரி, வியாபாரத்திலும் சரி, குடும்பத்தைக் கவனிப்பதிலும் சரி அச்சு சக்கரம் போன்று பிசிறில்லாமல் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

வனிதா தனது விடுமுறைகளை வீட்டில் இருந்தபடி சித்தி வனஜாவுக்கு உதவுவது, தம்பிகளுடன் விளையாடுவது என்று நேரத்தை கழித்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் வினிதா தோழியுடன் ஊரை சுற்றுவது, அவர்களுடன் அரட்டை அடித்துக்கொண்டு சுற்றிக் கொண்டே இருந்தாள். காலையில் வீட்டை விட்டு வெளியே சென்றால் இரவுதான் வீடு திரும்புவாள்.

ஆழியார் டேம் பார்க் தான் இவர்களின் மீட்டிங் பாயிண்ட்.

மாலை 5 மணி:

வினிதா ஒரு முக்கியமான பிளானுடன் வந்து பார்க்கில் தோழிகளுக்காக காத்துக் கொண்டிருந்தாள்.

நேரம் ஓடியது. ஆனால் யாரும் வரவில்லை. உடனே தனது போனை எடுத்து தோழிகளுக்கு "conference காலை" அழுத்தினாள்.

அனிதா, திவ்யா, ஜென்னி "கான்பரன்ஸ் கால் கனெக்டீட்"

வனிதா "மூன்று குரங்குகளும் எங்கடி இருக்கீங்க? நானும் ரொம்ப நேரமாக பார்க்கில் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்??"

அனிதா "யெஸ் டி. இதோ வந்துட்டேன் டி."

திவ்யா "ஐ அம் ஆன் தி வே டி"

வினிதா "சீக்கிரம் வந்து தொலை". வந்தால் ஒரு முக்கியமான செய்தி இருக்கு. இல்லடா பிளானில் நீ கிடையாது.

திவ்யா "5 மிண்ட்ஸ் டி."

சரி ஜென்னி எங்கடி இருக்கா?

நான் பார்க் உள்ளே வந்துட்டேன் டி.

மூவரும் வரவே அவர்களின் மீட்டிங் தொடங்கியது.

அனிதா "மச்சி என்ன விஷயம் டி?"

வினிதா "மச்சிஸ் நாளைக்கு காலையில எட்டு மணிக்கு நாம எல்லாரும் வயநாடு போறோம். 2 வீக் கேம்ப். வீட்ல சொல்லிடாங்க எல்லாரும்."

மூவரும் "ஓஹ்ஹ்ஹ் ஜாலி" செம திரில்லிங் experience அஹ இருக்குதே.

வினிதா "ஓகே டி. See you tomorrow!!

பொள்ளாச்சி வீடு:
மாலை 6 மணி:

வீட்டில் உள்ள அனைவரும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். வினிதாவின் வருகையைக் கண்ட வனஜா "வினி குட்டி டீ வேணுமா டி"?

வாவ். சூப்பர். கொண்டு வாங்க சித்தி!

அப்பாப்பா....!

என்னடா தங்கம் இழுக்குற?

ஒன்னும் இல்லப்பா?

"நாளைக்கு நான் வயநாடு டூர் போறேன் அப்பா." உங்க பர்மிஷன் வேணு அதுதான்.

வனிதா "அப்பா நானும் போறேன் பா?"

போடி! உன்னை எல்லாம் கூட்டிட்டு போக முடியாது? நீ கிழவி மாதிரி ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பா?

பாருங்கப்பா அவளை!

கோபால் "வினி குட்டி அக்கா பாவம். காலேஜ் லீவ்-விட்டதிலிருந்து வீட்டில் தான் இருக்கா. அவளையும் சேர்த்து கூட்டிட்டு போ. இல்லடா டூர் போக allowed கிடையாது.

சரி அப்பா நான் கூட்டிட்டு போறேன்.

வனஜா டீ கொண்டு வந்து வினிதாவிடம் கொடுத்தார்.

வினி டீயை குடித்துவிட்டு, வனிதாவும், வினிதாவும் தங்கள் அறைகளுக்குச் சென்று டூர் செல்வதற்கான தங்களுக்கு துணிமணிகளை எடுத்து வைக்க ஆயத்தமானார்கள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு சித்தி வனஜா இருவரையும் இரவு உணவு உண்ண அழைத்தார். உணவு உண்ணும் வேலையில் கோபால் தனது இரு கண்மணிகளுக்கும் தனியாகத் டூர் சொல்வதானால் அறிவுரைகளை வழங்கி கொண்டிருந்தார்.

வினிதா "அப்பா உங்கள் டஸ்டர் (Duster) காரை எடுத்துச் செல்லுகிறேன். அதுவரை நீங்கள் எனது காரை பயன்படுத்திக்கொள்ளுங்கள்".

சரிடா தங்கம். கூட யாரெல்லாம் வராங்க டா?

அனிதா, திவ்யா, ஜென்னி மூணு பேரும் வர்றாங்க பா.

நல்லதுமா....!!

இரவு உணவு முடிந்தவுடன் அனைவரும் உறங்கச் சென்றனர்.

பொழுது விடிந்தது:
காலை 7:30

வனஜாவும், கௌரியும் இருவரும் கிளம்புவதற்காக அனைத்து வேலைகளையும் பம்பரமாக சுழன்று செய்து கொண்டிருந்தார்கள்.

கௌரி இருவரின் லக்கேஜ்களையும் காரில் ஏற்றி வைத்தாள்.

வனஜா இருவருக்கும் காலை உணவை ஊட்டி விட்டுக் கொண்டிருந்தார்.

போதும் சித்தி.

கோபால் தனது இரு மகள்களையும் ஆரத்தழுவி வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

காருக்கு வந்த வினிதா "காரின் டயர்களையும், காரின் பின்பக்கம் உள்ள ஸ்டெப்னியும் சரி செய்து கொண்டாள்.

அனைவருக்கும் டாட்டா பாய் பாய் சொல்லிவிட்டு கார் வீட்டிலிருந்து கிளம்பி அனிதா வீட்டை நோக்கி விரைந்தது.

வனிதா "அனிதாவுக்கு கால் செய்."

சரி டி வினி.

வினிதாவின் மொபைலில் இருந்து சென்ற அழைப்பை ஏற்றால் அனிதா.

சொல்லுடி வினி.

ஹலோ! அனிதா நான் வனிதா பேசுறேன் டி.

சொல்லுங்க அக்கா. நீங்களுமா டூருக்கு வரீங்க?

ஆமா அனி. சரி நாங்க உங்க வீட்டுக்கு வந்தாச்சு வெளியே வா.

சரி அக்கா.

அனிதாவை ஏற்றிக்கொண்டு கார், திவ்யா மற்றும் ஜென்னி இருவரையும் ஏற்றிக்கொண்டு ஊட்டியை நோக்கி விரைந்தது.

காரில் பெட்ரோல் அளவு கம்மியாக காட்டியதால் பெட்ரோல் பங்கிற்கு வண்டியை செலுத்தினாள்.

அண்ணா டேங்க் ஃபுல் பண்ணுங்க!

சரி மா! கார்டா கேஷா மா?

கார்டு!

பங்கில் உள்ளவர் பெட்ரோலை ஃபுல் பண்ணிவிட்டு வினிதாவின் கார்டை வாங்கி ஸ்வைப் செய்தார்.

அண்ணே ஏர் ஃபில் பண்ணும்.

சரி மா.

பெட்ரோல் பங்கிலிருந்து கார் நகர்ந்து ஊட்டியை நோக்கியது.

இளையராஜாவின் மெட்டுக்கள் இசைக்க கார் காற்றில் மிதந்து கொண்டு, அவர்களின் கூச்சல்கள் உடன் சென்று கொண்டிருந்தது.

அனிதா "மச்சி வயநாட்டில் என்னன்னா லொகேஷன் டி இருக்கு?"

வினி "செம்பரா சிகரம்
கடல் மட்டத்தில் இருந்து 2,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இதன் உச்சியில் ஏராளமான டிரெக்கிங் முகாம்கள் உள்ளன. இங்கு செல்ல மெப்பாடி வனத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும்." அப்புறம்.

ஹார்டின் ஏரி, எடக்கல் குகைகள், மீன்முட்டி அருவி, பாணாசுர சாகர் அணை, ஃபாண்டம் ராக், குருவா டிவீப், முத்தங்கா வனவிலங்கு சரணாலயம், ப்ளூ ஜிஞ்சர் ரிசார்ட் அருவி, சுல்தான் பத்தேரி, வயநாடு வனவிலங்கு சரணாலயம் இன்னும் இம்மாதிரி நிறைய இடங்களில் இருக்குடி.

"வாவ் சூப்பர்டி. கேட்கவே செமையா இருக்கு. கண்டிப்பா பார்க்கிறதுக்கும் செமையா தான் இருக்கும்"

சரி மச்சி எந்த ரூட்டில் போகிறோம்?

நம்ம ஊட்டி போறோம். ஊட்டியிலிருந்து முதுமலை வழியாக மைசூர் நெடுஞ்சாலைகளிலிருந்து வயநாடு பகுதிக்கு செல்ல கிளைச்சாலைகள் பிரிகின்றன. அந்த ரூட்டில் தான் போறோம்.

இன்னும் ஒன்று சொல்லிக்கிறேன். வயல் நாட்டிற்கு போற வழியில் சுற்றிலும் 100 கி.மீ தூரத்துக்கு எந்தவித உணவகங்களும் கிடையாது என்பதால் வேண்டிய அளவு உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீர் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் வாகனத்திலும் அதிக அளவு எரிபொருள் நிரப்பிக்கொள்வது அவசியம். வயநாடு செல்லும் வழியில் வெகுதூரத்துக்கு பெட்ரோல் பங்குகள் ஏதும் இருக்காது.

வனிதா "என்னடி பயம் காட்டுற."

வினி "இதுக்குதான் உன்னை நான் கூட்டிட்டு வரமாட்டேன் என்று சொன்னேன்." பாரு சின்ன புள்ளை மாதிரி பயப்படுறதா?

ஜென்னி "அடியே வினி நீ சொல்றதை பார்த்தா எனக்கே பயம் வருது. அவளுக்கு வராத டி.

வினி "ஹாஹா அனி, திவ்யா பாத்தியா இந்த ரெண்டு வயசான கிழவிக்கு பயத்தே..??

இதுக்குத்தான் அக்கா கூட படிச்சி ஃபைல் ஆனா உன்னை எல்லாம் பிரண்டா வச்சுக்க கூடாது டி.

ஹாஹா..lolz

வனி "அடியே ஜென்னி ஸ்கூல்ல ஒரு லிட்டில் ஜான் உன்னை லவ் பண்ணுனேன் அவன் என்ன ஆச்சுடி?"

ஜென்னி "அவன் பக்கத்து வீட்டு ஆன்ட்டி இழுத்துக்கிட்டு ஓடிட்டான் டி"

ஹாஹா

வினி "சரி வாங்க ஊட்டி வந்துடுச்சு ஏதாவது போய் சாப்பிட்டு வரும். அப்புறம் நான் சொன்ன மாதிரி சாப்பாடு தண்ணி எல்லாம் வாங்கி வச்சுக்குங்க டி.

தொடரும்.​
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 02



மே 22 2019
காலை 10 மணி
ஐவரும் காரிலிருந்து இறங்கி உணவு விடுதியை நோக்கி சென்றனர்.
இருக்கையில் போய் அமர்ந்தார்கள்:
வினிதா: சாப்பிட என்ன இருக்கு?
சர்வர் மெனு கார்டை வினிதா விடும் நிட்டினர்.
வினிதா: என்னடி சாப்பிடுறீங்க?
அனிதா: எனக்கு இரண்டு சப்பாத்தி!
திவ்யா: எனக்கும் சப்பாத்தி தான்!
வினிதா: உங்க ரெண்டு பேர் டி?
ஜென்னி: எனக்கு இட்லி போதும்!
வனிதா: எனக்கு நெய் ரோஸ்ட்!
வினிதா: சர்வர் 2 நெய் ரோஸ்ட், 2 செட் சப்பாத்தி, 2 செட் இட்லி.
சர்வர்: வேறு எதுவும் வேண்டுமா?
வினிதா: முதலில் இதை கொண்டு வாருங்கள். மற்றதை பிறகு ஆர்டர் செய்கிறேன்.
சர்வர்: சரி மா!
வினிதாவும், அனிதாவும் அதே ஹோட்டலில் இருந்த கடை இருக்கு சென்று தண்ணீர் பாட்டில் மற்றும் நொறுக்கு தீனிகளை வாங்க சென்றார்கள்.
தேவையான பொருட்களை வாங்கிவிட்டு உணவை உன்ன சென்றார்கள்.
சர்வர்: வேற இதுவும் வேண்டுமா?
வினி: ரெண்டு காபி, 3 டீ எடுத்து வாருங்கள்!
சர்வர்: சரி மா!
ஐவரும் டூர்-க்கான ஆலோசனையில் இறங்கினார்கள்.
சர்வர்: காப்பியையும் டீ யும் வந்து கொடுத்தார்!
ஐவரும் அருந்திவிட்டு, உணவுக்கான பணத்தை செலுத்தி விட்டு காரை நோக்கி விரைந்தார்கள்!
வனிதா: வினி நான் காரை ஓட்டவா டி?
வினி: நீ காரை ஓட்டுன! நமக்கெல்லாம் சாவு நிச்சயம் தான்?
அனிதா, திவ்யா, ஜென்னி:
வனி: ஏன் இப்படி சொல்ற?
வினி: போற வழியில் 36 ஹேர்பின் பேண்ட் வருகிறது. அதனால் உனக்கு ட்ரை பண்ண எக்ஸ்பிரியன்ஸ் பத்தாது.
வனி: சரிடி நீயே ஒட்டிக்கோ!
வினி: காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தாள்.
ஜிபிஎஸ் கருவிகள் ஊட்டி டு வயநாடு என்று ரூட் மேப்பை பிக்ஸ் செய்தாள்.
காரும் உணவு விடுதியில் இருந்து அதன் பாதையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
வினிதாவின் காரை மற்றொரு கார் பாலோ செய்து கொண்டே வந்தது.
அதை அவர்கள் கவனிக்கவே இல்லை.
பாட்டு சப்தங்கள் உடன் அவர்களின் சப்தத்துடன் கார் விரைந்து கொண்டிருந்தது.
வரைந்த கார் 20 கிலோமீட்டர் தொலைவை தொடர்ந்து இருக்கும் நேரத்தில் திவ்யா தனது போனை தேடிக் கொண்டிருந்தாள்.
திவ்யா: அடியே அனிதா என் போன தேடி கொஞ்சம். எங்கு வைத்ததேன் என்று ஞாபகம் இல்லை.
வினி: அனிதா அவள் நம்பருக்கு கால் பண்ணு.
ரிங்கிங்... ரிங்கிங்...!! ரிங் போகுது டி! ஆனால் காரில் இல்லடி!
வினி ஓரமாக காரை நிறுத்தினாள்.
வினி: வனிதா உன் நம்பரில் இருந்து கால் பண்ணு!!
ரிங்கிங்... ரிங்கிங் ரிங் போகுது. யாரும் அட்டென்ட் பண்ணல டி!
வினி: அனிதா உன்னோட ஐபோன எடு! அதில் பைண்ட் மை போன் என்று ஒரு அப் இருக்கும்.
வினி: திவ்யா "உன் ஐபோன் ஐடி பாஸ்வேர்டு ஞாபகம் இருக்குல்ல!"
இருக்குடி!
அவ ஐடியை லாக் ஆப் செய்துவிட்டு உனது ஐடியை லாகின் செய்!
சரிடி!
திவ்யாவும் find my phone அப்பில் அவளது ஐடியை லாகின் செய்தாள்.
தொலைந்த போன் காலையில் சாப்பிட்ட உணவு விடுதியை காட்டியது!
திவ்யா: வினி ஃபோன் இருக்கற லொக்கேஷன் நம்ம காலையில் சாப்பிட்ட ஹோட்டலை காட்டுகிறது.
வினிதா: அனிதா அந்த ஹோட்டல் பெயரை கூகுள் சர்ச் செய்து ஹோட்டல் நம்பரை எடுத்து கால் செய்!
சரிடி!
அனிதாவின் போனிலிருந்து ஹோட்டலுக்கு அழைப்பு சென்றது.!
காலை எடுத்த கிரீன் வேலி ரெஸ்டாரன்ட் மேனேஜர் அழைப்பை எடுத்தார்.!
அனிதா நடந்த விஷயத்தை கூறி போன் அங்கு இருக்கிறதா என்று கூறினாள்!
மேனேஜர்: ஆம்! நீங்கள் சாப்பிட்டு இருக்கையில் போனை மறந்து விட்டீர்கள்!
டேபிளை கிளீன் செய்த சர்வர் என்னிடம் எடுத்துக் கொடுத்தார். உங்கள் போன் ஹோட்டலில் தான் இருக்கிறது.
வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
அனிதா: நன்றி சார்! இதோ வருகிறோம்.!
வினிதா மீண்டும் காரை ஹோட்டலுக்கு விடு!
வினி: அடியே திவ்யா! உன் லூசு தனதால இந்த பிரச்சனை!
திவ்யா: சாரி கேர்ள்ஸ்!
வினிதா: மீண்டும் வந்த பக்கத்தை நோக்கி காரை செலுத்தினாள்.!
வினிதாவின் காரை ஃபாலோ செய்து வந்த கார், வினிதாவின் கார் uturn செய்ததனால் அந்த காரும் யூ டர்ன் செய்து.
வினிதா: காரின் வேகத்தை அதிகப்படுத்தி ஹோட்டலுக்கு செலுத்தினாள்!
இரு தினங்களுக்கு முன்பு:
NSK பிலிம் புரோடக்சன் அலுவலகத்தில் தயாரிப்பாளரை சந்திப்பதற்காக இயக்குனர் புதியவன் வெகுநேரமாக காத்துக் கொண்டிருக்கிறான்.
நீண்ட நேரத்திற்குப் பிறகு ஆபீஸ் பாய் வெளியே வந்து புதியவனை உள்ளே வர அழைக்கிறான்.
புதியவனும் பதட்டத்துடன் அறையை நோக்கி விரைகிறான்.
மர்மங்கள் தொடரும்....!!​
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 03




புதியவன் அலுவலக கதவைத்திறந்து உள்ளே நுழைந்தான்.
தயாரிப்பாளருக்கு வணக்கத்தை கூறிவிட்டு அவருக்கு எதிரே இருக்கும் நாற்காலியில் அமர்ந்தான். தயாரிப்பாளரும், புதியவனும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள்.
செல்வன்: உங்களது முதல் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள்!
"ரொம்ப நன்றி சார்"
"உங்களது இரண்டாவது திரைப்படம் நமது தயாரிப்பில் தான் வெளியாக வேண்டும். அதற்காகத்தான் உங்களை உடனடியாக வரச்சொன்னேன்"
"என்ன ரொம்ப யோசிக்கிறீங்க புதியவன்."
ஒன்னும் இல்லை சார்!
ஏன்? வேறு எதுவும் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் ஆகி விட்டீர்களா?
இன்னும் இல்லை சார்!
அப்புறம் ஏன் இந்த யோசனை?
நான் இன்னும் இரண்டாவது கதைக்கு தயாராகவில்லை?
பரவாயில்லை புதியவன். நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒன்று உங்கள் முதல் திரைப்படத்தை போன்று இந்த திரைப்படமும் பெண்கள் சார்ந்த இருக்க வேண்டும். உங்களின் கருத்துக்கள் மக்களிடம் வெகுவாக சென்றடைந்துள்ளது. அதுவே உங்கள் முதல் திரைப்படத்தின் வெற்றியாக நான் பார்க்கிறேன். ஃபீமேல் ஓரியண்டட் ஸ்டோரிதான் இப்போது ட்ரெண்டாகும் இருக்கிறது. நான் என்ன சொல்லுகிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும்.
புரிகிறது சார்! விரைவில் ஒரு நல்ல கதையுடன் உங்களை வந்து சந்திக்கிறேன்.
நல்லது புதியவன். உங்களுக்கு எந்த உதவியாக இருந்தாலும் என்னிடம் தயங்காமல் கேட்கலாம். உங்களுக்கு கதை எழுதுவதற்கான வசதிகளை நான் செய்து தருகிறேன்.
நீங்களே சொல்லுங்கள் உங்களுக்கு விருப்பமான பகுதி எது?
எனக்கு அமைதியான சூழல் இருக்கக்கூடிய பகுதியாக விரும்புகிறேன். அதனால் வயநாடுக்கு சென்று கதை எழுதி வருகிறேன்.
சரி புதியவன்! நீங்கள் வயநாட்டில் தங்குவதற்கான அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்கிறேன். எனது நண்பனின் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று அங்கு உள்ளது. அதில் தங்குவதற்கான வசதிகளை செய்து தருகிறேன். மேலும் நீங்கள் செல்வதற்கான பயண தயாரிப்புகளை செய்து கொள்ளுங்கள். எனது மேனேஜர் உங்களுக்கான உதவிகளை செய்து தருவார்.
ரொம்ப நன்றி சார்! நான் வருகிறேன். மீண்டும் சந்திப்போம்.
அங்கிருந்து கிளம்பிய புதியவன் தனது அறைக்கு சென்று உடைகளை எடுத்துக்கொண்டு வயநாடு கிளம்புவதற்கான ஆயத்த பணிகள் இறங்கினான்.
சிறிது நேரத்திற்கு பிறகு:
மேனேஜர் அருணின் இடமிருந்து புதியவனுக்கு அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றான் புதியவன்.
ஹலோ சார்! நான் மேனேஜர் அருண் பேசுகிறேன்?
சொல்லுங்க சார்!
உங்களுக்கு இன்று மாலை சென்னை விமான நிலையத்திலிருந்து கண்ணுருக்கு விமான டிக்கெட்டும், அங்கிருந்து வயநாடு செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்துள்ளோம்.
ஓகே சார்!
நீங்கள் மாலை 5 மணிக்கு தயாராக இருங்கள். உங்களை நான் வந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறேன்.
சரி ஓகே சார் என்று புதியவன் அழைப்பை துண்டித்தான்.
நேரம் ஓடியது. புதியவன் பயணத்துக்கான தயார் நிலையில் இருந்தான்.
மாலை 5 மணி:
ரூமுக்கு வெளியே வாகனம் வந்து நின்றது! அருண் தனது தொலைபேசியை எடுத்து புதியவனுக்கு அழைப்பை விடுத்தான்.
சார் ரூமுக்கு வெளியே நிற்கிறேன்! என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
புதியவன் தனது உடைமைகளுடன் காரில் வந்து ஏறினான். அருண் காரை விமான நிலையத்தை நோக்கி செலுத்தினான்.
அருண் "புதியவனை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு தனது வீட்டை நோக்கி புறப்பட்டான்.
புதியவன் விமான நிலையத்திற்கு உள்ளே சென்றான். பரிசோதனைகளுக்குப் பிறகு தனது விமானத்தில் ஏறி கண்ணுரை நோக்கி பயணம் புறப்பட்டான்.
கண்ணுரை வந்து அடைந்த புதியவன் அங்கிருந்து நான்கு மணி நேர பயண தூரத்தை அடைய வேண்டியது இருந்தது.
காரில் ஏறி அமர்ந்த புதியவன் தனது கதைக்கான கருவை யோசிக்கத் தொடங்கினான்.
முதல் கதையில் இருந்த சுவாரசியங்களை இந்த கதையிலும் கொண்டுவரவேண்டும் என்றும், எதிர்பாராத திருப்பங்களுடன் மர்மங்களை உள்ளடக்க வேண்டுமென்றும், திரைக்கதையில் வேகத்தையும் அமைக்க வேண்டுமென்ற முடிவை தன் மனதில் ஏற்றுக் கொண்டான்.
இருந்தாலும் கதைக்கான கலங்கள் எதுவும் மனதில் தோன்றவில்லை. நீண்ட யோசனையில் அவன் அடைய வேண்டிய வயநாடு வந்து சேர்ந்தது.
இரு தினங்களுக்கு பின்பு:
புதியவன் தனது இரு தினங்களில் கதைக்கான எந்த கருவும் புலப்படாமல் மிகுந்த வருத்தத்தில் இருந்தான். தனது ஆழ்ந்த சிந்தனைகளை கதையின் கருவை நோக்கி நகர்த்திக் கொண்டிருந்தான்.
ஊட்டி: Present Day
திரும்பிய வாகனம் ஹோட்டலை அடைந்து மொபைலை பெற்றுகொண்டு மேரேஜருக்கும், சர்வருக்கும் நன்றியினை கூறிவிட்டு வினிதா மொபைல் உடன் காரில் வந்து ஏறினாள்.
மீண்டும் கார் வயநாடு நோக்கி சென்றது....!!
பின்தொடர்ந்த காரும் வினிதாவின் காரை நோக்கியது....!!
வேகமாக சென்ற வினிதாவின் கார் சிறிது நேரத்தில் கூடலூரை வந்து அடைந்தது. டீ குடிப்பதற்காக காரை ஓரமாக நிறுத்தினாள்.
காரில் இருந்த அனைவரும் டீ கடையை நோக்கி விரைந்தனர்.
பின்னால் துரத்தி வந்த காரும் சிறிது இடைவெளிக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
காரிலிருந்து இறங்கிய ஒரு உருவம். கருப்பு நிற ஜாக்கெட் அணிந்து கொண்டு, அந்த ஜாக்கெட்டின் கேப்பை தலையில் அணிந்திருந்த அந்த உருவம் வினிதாவின் காரை நோக்கி விரைந்து வந்தது.
தொடரும் மர்மங்கள்!!!!!
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 04



அந்த உருவம் வினிதாவின் கார் அருகில் சென்று தனது கையிலிருந்த ஜிபிஎஸ் டிராக்கிங் கருவியை வினிதாவின் காரில் பொருத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.

வினிதாவும் அவளது தோழிகளும் தேனீர் அருந்திவிட்டு காரை நோக்கி விரைந்தனர்.

அதற்கு முதலாக வினிதாவின் காரை பின் தொடர்ந்த கார் வேகமாக விரைந்து சென்று விட்டது.

வினிதாவும் தோழிகளும் காரில் ஏறி வயநாடு நோக்கி கிளம்பினார்கள்.

காரில் ஆட்டமும் பாட்டமும் சந்தோச அலைகளுடன் நகர்ந்துகொண்டிருந்தது.

கார் முதுமலை வந்தடைந்தது.

கோபாலிடம் இருந்து வனிதாவுக்கு அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்ற வனிதா, தாங்கள் கடந்து இருக்கும் பகுதியையும், அனைவரும் நலமாக இருப்பதையும் தன் தந்தையிடம் முறை விட்டு அழைப்பை துண்டித்தாள்.

நேரம் மதியம் 1 மணி:

வினிதா முதுமலையில் விலங்குகளைப் பார்வையிட முதுமலை தேசியப் பூங்கா செல்வதற்கான நுழைவுக் கட்டணத்தை கட்டிவிட்டு ரசீதை வாங்கி வந்தாள்.

விலங்குகளில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தை, கரடி, மான், பறக்கும் அணில், பெரிய இந்திய சிவப்பு அணில், காட்டு நாய், காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நரி, காட்டு முயல், முதலை, கீரி, கழுதைப்புலி, மலைப்பாம்பு போன்ற பல்வேறு வகையான விலங்குகள் பார்வையிட்டார்கள்.

பிறகு பறவைகளில் மயில், பல்வேறு வகையான காட்டுக்கோழிகள், புறா, கழுகு, பருந்து, வல்லூறு போன்ற பல்வேறு வகையான பறவைகள் பார்வையிட்டார்கள்.

நேரம் மதியம் 2 மணியை எட்டியது. மீண்டும் காருக்கு வந்த வினிதாவின் குழு காரில் வாங்கி வைத்த மதிய உணவுக்கான உணவுகளை உண்டுவிட்டு கார் அங்கிருந்து கிளம்பியது.

வினி: மச்சி இங்க இருந்து இனிமேல் போறே ரூட் சூப்பரா இருக்கும் டி! எல்லாம் என்ஜாய் பண்ணுங்க! ஆனா ஒண்ணு அணிமல் அட்டாக்கிலிருந்து நாம தப்பிச்சு போகணும்?

அனிதா: என்னடி சொல்லுற? அணிமல் அட்டாக்யா??

வினி: ஆமாடி! போற வழியில் ரோட்டில் யானைகளும், சிங்கம் புலி போன்ற விலங்குகளும் நடமாட வாய்ப்பு இருக்கிறது.

சில நேரங்களில் காரில் இருப்பவர்களை தாக்குவதற்கு வாய்ப்புகளும் இருக்கிறது.

வினி இதனைக் கூறி முடித்தவுடன், காரில் உள்ளவர்களுக்கு பயம் பீரிட்டு அடித்தது.

வனி: ஏண்டி கிளம்பும்போது எப்படி அபசகுனமா பேசுற?

வினி: நான் உண்மையத்தான் சொன்னேன் டி! அப்புறம் ஏதாவது பிரச்சனை வந்தால் நான் சொல்லல என்று நீங்கள் சொல்லக்கூடாது இல்ல.

வனி: சரி சரி நீ மொத ஒழுங்கா வண்டிய ஓட்டு. போற வழியில வராத பார்த்துக்கலாம்.

வனிதா கூறி முடித்து சில நிமிடங்களிலேயே ரோடை மறைத்துக்கொண்டு ஒரு யானைக் கூட்டம் வந்து நின்றது.

வினி காரை நிறுத்திவிட்டு கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினாள். காரில் இருந்த மற்றவர்கள் பயத்தில் உறைந்து போய் இருந்தார்கள்.

ரோட்டில் இருந்த யானை கூட்டம் கலைந்து காட்டினுள்ளே சென்றுகொண்டிருந்தது. ஆனால் ஒரே ஒரு யானை மாத்திரம் காரை நோக்கி விரைந்து வந்தது.

அதனைக் கண்ட வினி காரின் கண்ணாடிகளை உடனடியாக மூடினாள். வனிதாவும், ஜென்னியும் பயத்தில் அழத் தொடங்கினார்கள்.

அனிதாவும், திவ்யாவும் ஓரளவு தைரியத்தை வரவைத்து கொண்டு, பயத்தினை வெளியே காட்டாத பாரு நடித்துக் கொண்டிருந்தார்கள்.

வினி அனைவருக்கும் அமைதியாக இருக்க மாறு கட்டளை இட்டாள். உங்கள் சத்தம்தான் அதனை கோபப்படுத்தும்.

அமைதியாக இருந்தீர்கள் என்றால் அது திரும்பிப் போய்விடும்.

வனிதாவும், ஜென்னியும் அழுகையை விழுங்கிக்கொண்டு அமைதியானார்கள்.

காரை நோக்கி வந்த யானை தலையால் காரினை இருமுறை அசைத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தது.

காரிலிருந்து அனைவரும் யானை சென்றவுடன் தான் பெருமூச்சு விட்டார்கள்.

கார் அங்கிருந்து கிளம்பி அதன் பாதையை நோக்கி விரைந்தது.

சிறிது தூரத்தில் காட்டில் மான்கள் கூட்டம் இருப்பதை வினிதா உற்று நோக்கினாள்.

காரை ஓரமாக நிறுத்தி விண்டோவை திறந்து புகைப்படம் எடுத்தாள்.

ஆனால் மற்றவர்களுக்கு காரை நிறுத்தியதால் மீண்டும் பயம் பற்றிக் கொண்டது. வேறு விலங்குகள் வந்து தாக்கி விடுமோ என்ற மனது எண்ணியது.

ஆனால் வினி அதனை எதையும் கண்டுகொள்ளவில்லை. அவள்தான் பயம் அறியாதவள் ஆச்சே என்று காரில் இருப்பவர்கள் முணுமுணுத்தார்கள்.

மீண்டும் அங்கிருந்து கார் கிளம்பியது.

ஆனால் இவர்களை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதி வேலைகளை அறியாமல் சந்தோசமாக சிரிப்புடனும் இயற்கையை ரசித்துக் கொண்டு பயணத்தில் வாழ்ந்திருந்தார்கள்.

வயநாடு:
மாலை 6 மணி:

ஒரு அமைதியான ரோட்டின் ஓரமாக உள்ள மலை அடிவாரத்தில் அமர்ந்து புதியவன் தனது கதையை எழுத தொடங்கியிருந்தான்.

ஆனால் கதைக்கான எந்த கருவும் கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்தான்.

அவன் கிழித்தெறிந்த தாள்கள் அதுவும் ஒரு சிறிய மலைக்குன்று போல காட்சியளித்தது.

வானமும் இருட்டி நிலவு காட்சியளிக்க காத்துக் கொண்டிருந்தது.

இருட்டி அதை உணர்ந்த புதியவன் அங்கிருந்து கிளம்புவதற்கான ஆயத்த பணியில் ஈடுபட்டான்.

ஆனால் அவன் அமர்ந்திருக்கும் அதை மலையடிவாரத்தில் ஒரு 200 மீட்டர் இடைவெளியில் அந்த உருவம் ஒரு பாறையை தயார் நிலையில் எடுத்து வைத்திருந்தது.

வினிதாவின் கார் அந்த சாலையை கடக்கும்போது பாறையை உருட்டி விட்டு காரை அடித்து மறுபக்கம் உள்ள பள்ளத்தாக்கில் தள்ளுவதற்கு வசதியாக காத்துக் கொண்டிருந்தது.

காரை நிறுத்துவதற்காக வினிதா வரும் வழியில் காரை பஞ்சர் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தது.

வினிதாவின் கார் அந்த இடத்தை கடக்க இன்னும் பத்து நிமிடங்களே இருக்கிறது என்று ஜிபிஎஸ் கருவி அந்த உருவத்திடம் காட்டியது.

வினிதாவிற்கு என்ன நடக்கும் என்பது பொறுத்திருந்து பார்ப்போம்!

தொடரும் மர்மங்கள்!
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 05



மாலை 6 மணி 8 நிமிடம்: (6:08 PM)

புதியவன் மலையடிவாரத்தில் இருந்து கீழே இறங்கினான். ரோட்டை தொட்டவுடன் மலையின் மேல் இருக்கும் அந்த உருவம் புதியவனின் கண்ணில் புலப்பட்டது.

வினிதாவின் காரும் சாலையில் வந்துகொண்டிருந்தது. புதியவன் அந்த உருவத்தை கீழ இருந்து யார் என்று பார்க்க முற்பட்டான். இருளில் அந்த உருவம் கண்ணுக்குத் தெரியவில்லை.

யாரது? யாரது? என்ற சப்தத்தை எழுப்பினான்.
அதனை சுதாரித்துக்கொண்ட அந்த உருவம் பாறையை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியது.

புதியவன் அந்த உருவத்தை துரத்த முற்படும்போது வினிதாவின் காரின் முன்பக்க டயர் பஞ்சராகி சத்தத்தை எழுப்பியது.

ஜூர்க்-யான காரை வினிதா நிறுத்த முற்பட்டுக் கொண்டிருந்தாள். அதே நேரத்தில் எதிர்திசையில் மலையிலிருந்து உருண்டு வந்த பாறையும் அவள் கண்ணுக்கு தென்பட்டது.

புதியவன் அந்த உருவத்தை துரத்துவதற்கு பதிலாக சத்தம் கேட்ட வினிதாவின் காரின் பக்கம் ஓட்டத்தை எடுத்தான்.

அவனின் மற்றொரு பார்வையும் மலையிலிருந்து உருண்டு வரும் பாறையை நோக்கியே இருந்தது. சிறிது தவறினால் பாறையில் அவனும் அடிப்பட்டு இழக்க வேண்டியதுதான் என்ற நிலைமை?

ஒருவழியாக காரை நிறுத்திய வினிதாயும், காரை நோக்கி ஓடிவந்த புதியவனும் பாறை இடமிருந்து மயிரிழையில் உயிர் பிழைத்தார்கள். அந்தப் பாறையின் வேகம் அதிகமானதால் மற்றொரு பாறையில் பட்டு ரோட்டை கடந்து நேராக பள்ளத்தாக்கில் விழுந்தது.

காரில் இருந்த வினிதாவும், அலறிக் கொண்டிருந்த அவளது தோழிகளும் காரில் இருந்து கீழே இறங்கினார்கள்.

புதியவன்: என்ன ஆச்சு? யாருக்கும் எதுவும் அடிப்பட்டு இருக்கிறதா?

வினிதா: இல்லை சார்! அனைவரும் நலமாக இருக்கிறோம். முன்பக்க டயர் மட்டும்தான் பஞ்சர் ஆகிவிட்டது.

புதியவன்: நல்லது மா! ஸ்டெப்னி இருக்கிறதா?

வினி: இருக்கிறது சார்.

புதியவன்: சரி பின்பக்க கதவை ஓப்பன் செய்யுங்கள். நான் மாற்றி தருகிறேன்.

வினி: ரொம்ப நன்றி சார்!

வினிதா புதியவனுக்கு ஸ்டெப்னி மாற்றுவதற்கு உதவினாள். புதியவனும் புதிய டயரை மாற்றிவிட்டு பஞ்சரான டயரை காரின் பின் பக்கம் எடுத்து வைத்தான்.

வனிதா அவன் கையிலிருந்த கரைகளை கழுவுவதற்கு தண்ணீரை எடுத்துக் கொடுத்து உதவினாள்.

பிறகு அங்கிருந்து வாகனம் புதியவனை ஏற்றுக்கொண்டு கிளம்பியது. வாகனத்தின் முன்பக்கம் இருந்த வனிதா புதியவனுக்கு வழியவிட்டு பின்பக்கம் ஏறிக்கொண்டாள்.

காரில் ஏறிய புதியவன் வினிதா மற்றும் அவளின் தோழியுடன் உரையாடலை தொடங்கினான்.

புதியவன்: உங்களுக்கு எல்லாம் எந்த ஊரு மா? என்ன காலேஜ் டூரா?

வினிதா: ஆமா சார்! எங்களுக்கு பொள்ளாச்சி.
என் பெயர் வினிதா. இவள் என் அக்கா வனிதா.
இது என் தோழிகள் அனிதா, திவ்யா, ஜென்னி.

அனைவரும் புதியவனுக்கு ஹாய் சொல்லி அறிமுகமாகிக் கொண்டார்கள்.

உங்கள் பெயர் என்ன சார்?

என் பெயர் புதியவன் மா. உங்க எல்லாரையும் சந்தித்ததில் சந்தோசம்.

வினி: ஆமா சார் எங்களுக்கும் தான். சரியான நேரத்தில் வந்து உதவி செய்தீர்கள்.

புது: சரி எல்லோரும் வயநாடுக்கு தானே போறீங்க?

ஆமா சார்!

புது: இங்கிருந்து 5KM தான் நான் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸ் இருக்கு. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் சிட்டி இருக்கு. அங்கு தங்குவதற்கு நிறைய ஹோட்டல்கள் கிடைக்கும்.

நீங்கள் எத்தனை நாள் டூர் ப்ளான் பண்ணி இருக்கிறீங்க?

வினி: நாங்கள் நான்கு நாட்கள் தங்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்.

புது: சரி மா! உங்களுக்கு எதுவும் பிரச்சனை இல்லை என்றால் நீங்கள் நான் தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுஸில் தங்கிக் கொள்ளுங்கள். அது நல்ல வசதியாக தான் இருக்கும். நான்கைந்து அறைகளை கொண்டது.

(புதியவன்: இதனைக் கூறும் போது புதிய வனுக்கு மனதில் தோன்றியது. இவர்களுக்கு நடக்க இருந்தது விபத்தல்ல? அது கண்டிப்பாக ஒரு கொலை முயற்சி. அந்தக் கருப்பு உருவத்தை கண்டிப்பாக இவர்கள் பார்த்து இருக்க வாய்ப்பும் இல்லை. அதை நாம் மட்டுமே பார்த்தோம். நமக்கு இதுவரை கதையும் புலப்படவில்லை. இவர்களைப் பின்தொடர்ந்தால் நமக்கு கதையும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் இவர்கள் வெளியில் தங்குவதற்கு பதிலாக நம்முடனே வைத்துக்கொண்டால் இவர்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ளலாம்.)

(வினிதா: புதியவன் அதனைக் கூறி முடித்தவுடன் வினிதாவின் பார்வை அனிதாவை உற்று நோக்கியது. கண் ஜாடையில் டேப்பை எடுத்து புதியவனை பற்றிய தகவலை அரிய கூறினாள். அனிதாவும் அவளின் சைகைகளை புரிந்துகொண்டு புதியவனை பற்றிய தகவல்களை ஆன்லைனில் இருந்து பெற்றுக்கொண்டாள்.)

வினி: ரொம்ப நன்றி சார்! உதவியும் செய்துவிட்டு தங்க இடமும் தருகிறேன் என்று கூறுகிறீர்கள். உங்களைப் போன்ற மக்களை சந்திப்பது மிகவும் அரிது. அங்கு வந்து தங்குவதற்கு எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் என் நண்பர்களிடம் ஒருவார்த்தை கேட்டுக்கொள்கிறேன்.

புது: சரி மா உங்கள் விருப்பம்!

வினி: என்னடி சொல்றீங்க நம்ம சார் கூடிய போய் தங்கிகலாமா?

கண்டிப்பாக போய் தங்கிக் கொள்ளலாம் டி!

அனிதா: நம்ம சார் இயக்குனர் ஆச்சே? அவரோட தங்கினால் நிறைய கதை கேட்டு நேரத்தை ஓட்டிக் கொள்ளலாம்?

புதியவனின் பார்வை அனிதா பக்கம் திரும்பியது. என்னடா இது! நம்ம இயக்குனர் என்று அறிமுகம் செய்யவில்லை? இந்தப் பெண்களுக்கு எப்படி தெரிந்தது என்றும் மனதில் நினைத்துக்கொண்டே திரும்பினான்.

சரி மா! நான் என் பெயரை மட்டும் தானே கூறினேன். நான் இயக்குனர் என்று எப்படி கண்டுபிடித்தீர்கள்.

அதற்கு அனிதா பதில் சொல்வதற்கு முன்பே வினிதா முந்திக்கொண்டாள்.

நீங்கள் சொல்லவில்லை என்றால் என்ன? உங்கள் கையில் உள்ள டைரியும், பேனாவும் அவளுக்கு காட்டிக் கொடுத்து இருக்கும். ஒன்று நீங்கள் எழுத்தாளர் அல்லது இயக்குனர் என்ற முடிவிற்கு வந்து இருப்பாள்.

காரில் உள்ள அனைவரும் சிரிப்பு சத்தம் ஒலிக்க கெஸ்ட் ஹவுஸ் வந்தடைந்தது.

புதியவனுக்கு வினிதாவின் பதில் ஏற்றுக்கொள்ள அளவுக்கு இல்லாததால் அவர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

----------------------------------------------------------------------------

வினிதாவின் குழுவிற்கு அவர்களை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவேலை அரிய படமா?

புதியவனுக்கு அவன் எதிர்பார்க்கும் கதை கிடைக்குமா?

இவர்களுடன் சேர்வதால் அவனுக்கும் பாதிப்பு ஏற்படுமா?

என்ற நிறையத் திருப்பங்களுடன் தொடரும் மர்மங்கள்!​
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1

தொடரும் மர்மங்கள்! 06​

பல சிந்தனைகளுடன் புதியவன் கெஸ்ட் ஹவுஸ் உள்ளே நுழைந்தான்.
கூட வந்தவர்களுக்கு அவர்கள் தங்குவதற்கான அறைகளை ஒதுக்கி கொடுத்தான்.
வினிதா மற்றும் அனிதா ஒரு அறையும், வனிதா, திவ்யா மற்றும் ஜென்னி தங்குவதற்கு மற்றொரு அறையும் எடுத்துக்கொண்டார்கள்.
புதியவன் அவர்களை ஓய்வு எடுத்துக்கொள்ள கூறிவிட்டு தனது அறையை நோக்கி புறப்பட்டான்.
வினிதா அனிதா அறை:
அனி: அடியே! வினிதா ஏதோ ஒரு தைரியத்தில் இங்கு தங்கலாம் என்று கூறிவிட்டேன்? இந்த கெஸ்ட் ஹவுசே பார்த்தாலே பயமா இருக்குடி?
வினி: எனக்கு தெரியும்டி! பயந்தாங்கோலிகளா! இப்படி ஏதாவது சொல்லுவீங்க? சரி விடு லைஃப்ல ஏதாவது திரில்லிங்கா செய்யணும் இல்ல?
அனி: சரி அதெல்லாம் இருக்கட்டும். வீட்டுக்கு தெரிஞ்சா என்ன செய்வாங்க தெரியுமில்ல.?
வினி: அச்சோ! நல்ல வேல டி! ஞாபகப்படுத்தினா! ஓட்ட வாய் வனிதா அப்பாகிட்ட சொல்லி இருக்க போறா? சரி என் போன் எடு!
அவளுக்கு கால் பண்ணி சொல்கிறேன்.
ஹலோ வனி! அப்பாவிடமிருந்து கால் எதுவும் வந்திருச்சா?
வனி: இன்னும் இல்லடி. இப்பதான் கால் பண்ணலாம்னு போனை எடுத்தேன். ஆனா நீ கால் பண்ணிட்ட!
வினி: சரி வனி. நம்ம புதியவன் சார் கூட தான் தங்கி இருக்கும் என்று எல்லாம் சொல்லாதே. ஹோட்டலில் தங்கியிருக்கும் என்று சொல்லு.
வனி: சரிடி வினி. நானும் தான் யோசித்தேன். இது அப்பாட்ட சொன்னா கண்டிப்பா திட்டுவாங்க. அப்புறம் ஊருக்கு வர சொல்லிடுவாங்க. சரி விடு நான் பார்த்துக்கறேன். ஓகே பாய் டி.
வினி: வெரி குட். ஓகே பாய் டி.
வினி: அனி புதியவனை பற்றி வேறு ஏதும் தகவல்களை கலெக்ட் பண்ணியா?
அனி: இல்லடி! அந்தாளு பெருசா சோசியல் நெட்வொர்க் எல்லாம் யூஸ் பண்ற மாதிரி தெரியல. அவரப் பத்தி டீடெயில்ஸ் விக்கில மட்டும் தான் படித்தேன்.
ரெண்டு மாசத்துக்கு முன்னால நீ ரொம்ப அழகா இருக்க? என்று ஒரு படத்தை இயக்கி இருக்காரு. படமும் நல்ல சக்ஸஸ் போல. வேற ஏதும் தகவல் கிடைக்கலடி.
வினி: சரி விடு நான் பார்த்துக்கறேன்.
வினிதா டேப்பை வாங்கிக்கொண்டு புதியவன் பற்றிய தகவல்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள். பெரும்பாலும் தொலைக்காட்சிகளிலும், யூடியூப் சேனல்களிலும் அவனின் முதல் திரைப்படம் பற்றிய விமர்சனங்களைப் பற்றியும், சிறிது அவனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் தெரிந்து கொண்டாள்.
அதிலேயே நேரம் ஓடியது... !!!!
நேரம் இரவு 9 மணி:
புதியவன் தன் அறையிலிருந்து வெளியே வந்து வினிதாவின் அறைக் கதவைத் தட்டினான்.
டாக் டாக்...... டாக்... டாக்....!!!
வினிதா தனது அறை கதவை திறந்தாள்.
வினி: சொல்லுங்க சார்.
புது: ஒன்னும் இல்லமா..!! சாப்பிட என்ன வேணும்னு கேட்க வந்தேன்?
ஏன் சார் வெளியே போய் சாப்பிடலாமா?
வேண்டாமா! டிராவல் பண்ணி வந்து இருக்கீங்க. இன்னைக்கு நல்லா ரெஸ்ட் எடுங்க.
நம்ம கெஸ்ட் ஹவுசுக்கு எதிராக ஹோட்டல் இருக்கு. நான் போய் வாங்கிட்டு வரேன்.
சரி ஓகே சார். நான் பக்கத்து ரூம்லயும் கேட்டுட்டு உங்களுக்கு வந்து சொல்றேன் சார்.
சரி ஓகே மா நல்லது.
சிறிது நேரம் ஓடியது..! வினிதா தான் சாப்பிடுவதற்கும், தனது அக்கா மற்றும் தோழிகள் சாப்பிடுவதற்கான லிஸ்டை புதியவனியிடம் ஒப்படைத்தாள்.
புதியவனும் அவள் சொன்ன லிஸ்டை மனதில் ஏற்றுக்கொண்டு இன்று நீங்கள் எனது விருந்தாளி. அதனால் உங்கள் அனைவருக்கும் இன்று இரவு உணவு எனது ட்ரீட்டு தான் என்று கூறிவிட்டு ஹோட்டலை நோக்கி நடையைக்கட்டினான்.
நேரம் இரவு 10 மணி:
புதியவன் 30 நிமிட காத்திருப்புக்கு பிறகு தன் ஆர்டர் செய்த உணவுகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டான்.
அவன் வீட்டினுள்ளே நுழைந்தவுடன் அதுவரை அங்கிருந்து நோட்டமிட்டுக் கொண்டிருந்த அந்த உருவம் கெஸ்ட் ஹவுசுக்கு எதிராக வந்து நின்றது.
புதியவன் உணவை டைனிங் டேபிளில் எடுத்து வைத்துவிட்டு அனைவரையும் சாப்பிட அழைத்தான்.
அனைவரும் டைனிங் டேபிளுக்கு வர உரையாடலுடன் உணவு உண்ணத் தொடங்கினார்கள்.
புதியவன் தன்னைப் பற்றியும், தனது வாழ்க்கையில் கடந்துவந்த பாதையை பற்றியும் திறந்த புத்தகமாக அவர்களிடம் ஒப்பித்து கொண்டிருந்தான்.
அதைக்கண்ட அவர்களுக்கு புதியவனின் பேச்சும் அவரது வாழ்க்கையும் அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
புதியவனின் பேச்சு மற்றவர்களை கவர்ந்து அதைவிட வினிதாவை வெகுவாக கவர்ந்தது.
புதியவனின் பேச்சில் உள்ள உண்மையும், அவன் பெண்களிடம் பேசும் நளினமும், அவனது கண்பார்வையும் வினிதாவை ஏதோ வகையில் சுண்டி இழுத்தது.
தொடர்ந்து பேசிய புதியவன் தான் இங்கு வந்ததற்கான காரணத்தையும் வெளிப்படையாக கூறினான்.
புது: நான் இங்கு வந்து இரண்டு நாட்களுக்கு மேலாகிவிட்டது. எனது இரண்டாவது படத்திற்கான புரொடியூசர் கன்ஃபார்ம் ஆகிவிட்டார். ஆனால் கதைதான் இதுவரை எழுதவில்லை.
அவர் என் மீது மிகவும் நம்பிக்கை வைத்துள்ளார். அதனால் இரண்டாவது கதைக்கான தொடக்கம் இதுவரை ஆரம்பமாகவில்லை. இன்று உங்களைக் கண்டவுடன் தான் மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை எழுந்துள்ளது.
வனி: என்ன சார் இவ்வளவு பீல் பண்றீங்க! கவலைப்படாதீங்க. எங்களை சந்தித்து விட்டீர்களே? கண்டிப்பா உங்களுக்கு அடுத்த கதை ரெடி...!
வனிதா அதனைக் கூறி முடிக்கையில்
அனைவரின் சிரிப்பொலி ஒலித்தது....
சிரிப்பொலி முடிகையில் சாப்பாடு முடிந்து அங்கிருந்து கலந்தார்கள்.
ஆனால் வினிதாவிற்கு மட்டும் அங்கிருந்து நகர விருப்பமில்லாமல் நகர்ந்தாள். புதியவனின் பேச்சும், அவனது பார்வையும் அவளுக்கு ஒருவித க்ருஷை ஏற்படுத்தி இருந்தது. அங்கிருந்து மனமில்லாமல் அறையில் நுழைந்தாள்.
புதியவன் பேசிய நினைவுகளுடன் உறங்க தயாரானாள். அனிதாவும் வினிக்கு குட்நைட் சொல்லிவிட்டு உறங்கினாள்.
பக்கத்து அறையும் விளக்குகள் அணைக்கப்பட்டு மூவரும் உறங்க தொடங்கினார்கள்.
புதியவன் தனது பிற வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு ரைட்டிங் டேபிள் வந்து அமர்ந்தான்.
மாலை கண்ட காட்சிகளை அனைத்தையும் எழுத்துகளில் வடித்துக் கொண்டிருந்தான்.
வைத்த பேனா நிற்காமல் காட்சிகளை டைரியின் பக்கங்களை நிரப்பிக் கொண்டிருந்தது.
இரவு 12 மணி:
வினிதா அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள். ஹாலில் புதியவன் எழுதிக் கொண்டிருப்பதை கண்டு மகிழ்ச்சியில் திளைத்தாள்.
புது: என்னம்மா நீ இன்னும் உறங்க வில்லையா?
வினி: இல்ல சார். தூக்கம் வரவில்லை. நான் எப்போதும் லேட்டாகத்தான் தூங்குவேன்.
நீங்க என்ன செய்றீங்க சார்.
புது: நான் கதை எழுதிக் கொண்டிருந்தேன்.
வினி: தடங்கலுக்கு மன்னிக்கவும் சார். நீங்க உங்க வேலைய பாருங்க.
புது: இல்லம்மா பரவால்ல சொல்லு. ஒரு அளவு எழுதிவிட்டேன். அடுத்த கட்டத்தைப் பற்றி தான் யோசனையில் உள்ளேன்.
வினி: அப்படியா சார். அப்ப வாங்கலை ஒரு வாக் போவோம்.
புது: என்னம்மா சொல்ற? இந்த நேரத்தில் வாக்கா?
வினி: ஆமா சார். ஒரு டைரக்டர் என்று சொல்கிறீர்கள் இப்படி பயப்படுறீங்க?
புது: பயம் என்று ஒன்றுமில்லை. சரி வா போகலாம்.
புதியவனும், வினிதாவும் கால்நடையாக நடக்க ஆரம்பித்தார்கள்.
புதியவனுக்கு வினிதாவின் தைரியம் பிடித்திருந்தது. அதனால் மாலை அவன் கண்ட அந்த உருவத்தைப் பற்றி இவளிடம் பகிரலாம் என்று யோசித்துக்கொண்டே நடந்தான்.
அந்த நேரத்தில் வினிதா தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தைப் பற்றியும் கூறிக் கொண்டு வந்தாள்.
அவனும் அதனை ஆர்வம் குறையாமல் கேட்டுக்கொண்டிருந்தான். இந்த சிறுவயதில் அவளின் மெச்சூரிட்டி தனத்தை கண்டு வியந்து இருந்தான்.
புதியவன் பேசத் தொடங்கிய போது தனது கல்லூரி காலங்களைப் பற்றியும், சிறுவயதில் ஏற்பட்ட பால்வாடி காதலைப் பற்றியும் அவளிடம் கூறினான்.
அவளும் அதை ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள். புதியவனின் எளிதாகப் பழகிய குணத்தைக் கண்டு வினிதா உறைந்து போய் இருந்தாள்.
அவளது யோசனையில் தனக்கு கார்த்திக் மீது ஏற்பட்ட ஒருதலைக் காதலை பற்றி அவனிடமிருந்து மறைக்க தூண்டியது.
ஆனால் கார்த்திக் போன்ற கெட்டவர்கள் இருக்கும் இதே உலகத்தில் தான் புதியவன் போன்ற நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று ஆண் இனத்தை பற்றி மெச்சிக் கொண்டாள்.
தனது கல்லூரிப் படிப்பை பற்றியும், தங்கள் கல்லூரியில் செய்யும் அரட்டைகள் பற்றியும் புதியவனுக்கு விவரித்துக் கொண்டிருந்தாள்.
அவளின் பார்வை புதியவனை உற்று நோக்கிக் கொண்டிருந்தது. புதியவனும் நேரம் போவது தெரியாமல் பேசிக்கொண்டே நடந்தார்கள்.
அவனுக்கும் வினிதாவுடன் உரையாடுவது ஒரு புதுவித அனுபவத்தை ஏற்படுத்தியது.
அவளில் பேச்சுகளும் அவர் சொன்ன விஷயங்களும் கதைக்கு உதவுவதைப் போன்று அவனுக்கு எண்ணத்தை ஏற்படுத்தியது.
இவர்கள் நடந்து சென்று கொண்டு இருப்பதை பின்னாலிருந்து அந்த உருவம் நோட்டமிட்டுக் கொண்டு வந்திருந்தது.
ஆனால் புதியவன் தற்செயலாக தனது தலையை லேசாக பின்பக்கம் திருப்பும்போது தன்னை யாரோ பின்தொடர்வது போன்ற பிம்பம் காட்சி அளித்தது.
அவன் திரும்பவும் அதே நேரத்தில் அவனைப் பார்த்த அந்த உருவமும் அவனிடமிருந்து தப்பிப்பதற்கான வழியை தேடியது.
தொடரும் மர்மங்கள்.
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 07



இரவு 12 மணி 30 நிமிடம்:
புதியவன் திரும்புவதற்குள் அந்த உருவம் அருகிலிருந்த மரத்தில் மறைந்து பாதுகாப்பு தேடிக்கொண்டது.
வினிதா தனது பேச்சை நிறுத்தாமல் பேசிக் கொண்டே இருந்ததால் புதியவனும் அவளின் பேச்சை கேட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தார்கள்.
நேரமானது உணர்ந்த புதியவன் வினிதா நேரமாகிவிட்டது வா வீட்டிற்கு செல்லலாம் என்று அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டான்.
ஆனால் வினிதாவின் மனம் அவனுடன் இன்னும் நேரங்களை செலவிட தயாராக இருந்தாள்.
தன் மனதில் பூத்த காதலையும் வெளிப்படுத்த முற்பட்டாள்.
புதியவன் அங்கு சூழ்ந்து இருக்கும் இருளையும், நிலவும் அசாதாரணமான சூழ்நிலையும் உணர்ந்து நடையின் வேகத்தை அதிகப்படுத்தினான்.
அவளிடம் எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம் வா! என்று சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்தான்.
அவளை உறங்க அனுப்பிவிட்டு ரைட்டிங் டேபிளில் போய் அமர்ந்தான். அவளுடன் பேசியதையும், தான் அவளுடன் பேசியதையும் கதையாகவே எழுதினான்.
பிறகு தனது அறைக்கு உறங்கச் சென்று விட்டான்.
பொழுதும் விடிந்தது:
காலை 7 மணி:
புதியவன் எழுந்து தனது காலை கடமைகளை முடித்துவிட்டு எதிரே இருக்கும் ஹோட்டலுக்கு சென்று அனைவருக்கும் தேவையான காலை உணவையும் டீயும் வாங்கி வந்தான்.
ஒருவன் பின் ஒருவராக வனிதாவும் அவளது தோழிகளும் எழுந்துகொண்டு டைனிங் டேபிலில் அமர்ந்தார்கள்.
வினிதா எப்போதும்போல சிறிது தாமதமாக எழுந்து வந்தாள்.
உணவை உண்டு கொண்டே வெளியே செல்வதற்கான பிளானை தீட்டினார்கள்.
வினிதா பிளானை இறுதி செய்தாள். முதலில் எடக்கல் குகை செல்வோம். பின்பு அங்கிருந்து சோச்சிப்பாரா நீர்வீழ்ச்சிக்கு செல்வோம்.
முதல் நாள்:
அனைவரும் தயாராகி காரில் ஏறினார்கள். வினிதா வண்டி ஓட்ட புதியவன் முன் சீட்டில் அமர்ந்திருந்தேன். சுல்தான் பத்தேரி வழியாக 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள எடக்கல் குகையை நோக்கி பயணம் பட்டார்கள்.
தங்கள் வண்டியை விட்டு விட்டு மலை ஏறுவதற்காக ஒரு ஜிபியை வாடகைக்கு எடுத்தார்கள். ஒருவரை ஒருவர் கலாய்ப்பது, கிண்டலடிப்பது, பாடல் கச்சேரியும் என்று குதுகலித்தது.
எடக்கல் குகை பெரிய மலைமீது இருந்தது. கீழிருந்து மேலே நடந்து செல்ல வேண்டும். பாதி தூரம் வரையில் வேறு ஜீப்பில் சென்றார்கள். பின்பு அங்கிருந்து நடக்கதான் வேண்டும்.
அதனால் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்கள். ஏறும் பாதையில் எங்கும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே சென்றார்கள். ஏற ஏற வந்துகொண்டே இருந்தது மலையும், ஆனந்தமும், தென்றலும்.
மலை மீது ஏறிய பின்னர் அருமையான அற்புதமான காட்சிகள் அவர்களுக்கு இயற்கை பரிசளித்தது. அங்கிருந்த மலையின் பெயர் அம்புகுட்டி மலை. மேலும் அங்கு இரண்டு குகைகள் இருந்தது. சுமார் 1000 அடி உயரத்தில் மேலே நின்று கொண்டிருந்தார்கள்.
அனைத்தையும் ரசித்து விட்டு இங்கிருந்து சோச்சிப்பாரா நீர்வீழ்ச்சியை நோக்கி பயணம் பட்டார்கள்.
மதிய உணவிற்கு ஒரு ஹோட்டலில் வண்டியை நிறுத்தினார்கள். வண்டியிலிருந்து இறங்கிய புதியவன் ஹோட்டலில் முதலில் நுழைந்தான்.
அந்த நேரத்தில் வினிதா தனக்கு புதியவன் மீது ஏற்பட்டிருக்கும் காதலை மற்றவர்களிடம் கூறிவிட்டு இதில் யாரும் குறுக்க வந்தீர்கள் என்றால் அடித்து பீச்சி விடுவேன் என்று பாசமாக ஒரு மிரட்டலை விட்டாள்.
காரில் இருந்த அனைவருக்கும் ஷாக்கில் உரைத்தார்கள். வனிதாவிற்கு வாயிலிருந்து பேச்சே வரவில்லை.
அனைவரும் வினிதாவை பற்றி முணுமுணுத்துக் கொண்டே ஹோட்டல் உள்ளே சென்றார்கள்.
நேரம் ஓடியது...!!!
மதிய உணவிற்கு பிறகு அங்கிருந்து சோச்சிப்பாரா நீர்வீழ்ச்சிக்கு சென்றார்கள். மதியம் 3.30 ஆகிவிட்டது. சுமார் 2.5 கி.மீ நடந்து செல்லவேண்டும்.
மலை நடுவிலே செல்ல நல்ல பாதை அமைத்து இருந்தது. மழை வந்துகொண்டிருப்பதால் சீக்கிரம் சென்று குளித்துவிட்டு வரவேண்டும் என்று வனத்துறை சொன்னார்கள்.
கல்பேட்டா நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் இந்த நீர்விழ்ச்சிக்கு செல்லும் பாதையில் இரண்டு பக்கமும் காபி தோட்டம் கண்ணுக்கு குளிர்ச்சி அளித்தது.
புதியவன் வினிதாவிடமிருந்து கேமராவை வாங்கிக்கொண்டு புகைப்படங்களை தட்டி வீசிக் கொண்டிருந்தான்.
பாதையில் ஒரு வாகனம் மட்டுமே செல்ல வலி இருந்தது. நீர்வீழ்ச்சியில் நல்ல தண்ணீர். இரண்டு மூன்று நாட்கள் முன்னர் நல்ல மழை பெய்து இருந்ததால்.
இறங்கும் வழியில் தசைபிடிப்பு ஏற்பட்டதால் நொண்டியபடியே வனிதாவிற்கு இறங்கினாள்.
காலையில் எடக்கல் குகைக்கு செல்லும் பாதையில் நிறைய படிகள் ஏறியதால் தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
நீர்வீழ்ச்சி என்றாலே எப்போதும் சுகம் தான். வினிதாவின் குழு பெண்கள் உள்ள பகுதிக்கு குளிக்க சென்றார்கள்.
புதியவன் அங்கிருந்து விலகி ஆண்கள் பகுதியை நோக்கி சென்றுவிட்டான்.
அனைவரும் ஆடிப்பாடி குளித்துவிட்டு அங்கிருந்து அடுத்து எங்கு செல்வது என்று ஆலோசனை நடத்தியபடியே அன்றைய மாலை கழிந்தது.
அங்கிருந்து கிளம்பி தங்கியிருந்த வீட்டினை அடைந்தார்கள். நேற்றைய இரவின் சிறிய தூக்கத்தாலும், இன்றை பொழுதின் அசதியாலும் விரைவிலேயே உறங்க சென்றுவிட்டார்கள்.
புதியவன் தனது டைரியை எடுத்து கண்ட காட்சிகளை அனைத்தையும் காட்சிப் படுத்திக் கொண்டிருந்தான்.
நேரம் ஓடியது....!
நேற்று போன்ற வினிதா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
வரும்போது ஒரு முடிவுடன் வெளியே வந்தாள். தனக்கு ஏற்பட்டிருக்கும் காதலை புதியவனிடம் கூற வேண்டும் என்பதே!
இருவருக்குமான உரையாடல் தொடங்கியது. வினிதா தன் காதலை மெல்ல வெளிபடுத்த வாயைத் திறந்தாள்.
இன்று சந்தோசத்தில் முடிந்த முதல் நாள்! நாளை இவர்களை சுற்றி பின்னப்பட்டிருக்கும் சதிவேலை அறியாமல் நிம்மதியில் இருக்கிறார்கள்.
மர்மமும் காதலும் தொடரும்...!!
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 08



வினிதா தனது காதலை புதியவனிடம் வெளிப்படுத்த அதற்கு புதியவன் மறுக்க அழுதுகொண்டே தனது அறைக்கு விரைந்தாள்.

பொழுது விடிந்தது...!!!

இரண்டாவது நாள்:

நேற்றைய போன்ற அனைவரும் வெளியே செல்வதற்காக தயாராகிறார்கள்.

வினிதா தனது மனதில் ஒரு உறுதி பூண்டாள். மீண்டும் புதியவனிடம் இது விடயமாக பேசக் கூடாது என்றும், அவனுக்குகே நம் மீது ஆசை ஏற்பட்டால் தானாக வருவான். அதனால் நாம் வந்த நோக்கத்தை பார்ப்போம் என்று.

கார் வீட்டிலிருந்து கிளம்பி முத்துங்கா வனவிலங்கு சரணாலயத்தை அடைந்தது.

ஒரு சாரதி உதவியுடன் வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்த்தார்கள். வந்த சாரதி தமிழும் மலையாளமும் கலந்து பேசிக்கொண்டே வந்தார். இறுதியாக சரணாலயத்தை முழுவதுமாக சுற்றிப் பார்த்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள்.

குருவா தீவு:

அங்கிருந்து குருவா தீவுவை வந்து அடைந்தார்கள்.

குருவா தீவு நாலாப்பக்கமும் ஆறு கொண்ட தீவு. அழகிய வனப்பகுதியும் கொண்டது.

காரை நிறுத்திவிட்டு தீவை நோக்கி விரைந்தார்கள்.

இயற்கை ரம்மியமாக காட்சி அளித்தது.

இவர்கள் தீவை அடையும் அதே நேரத்தில் அந்த உருவமும் மற்றும் நான்கு ஆட்களுடன் வேறு வழியாக தீவை வந்தடைந்தது.

இன்றைய அவர்கள் திட்டம் இந்தப் பகுதியில் வைத்து தீர்த்துக் கட்டுவது என்று முடியுடனும் உள்ளே நுழைந்தது.

புது: வினிதாவிடம் இரவு கஷ்டப்படும் படியாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்.

வினி: ஒன்னும் பிரச்சனை இல்ல சார். டுடே ஐ அம் ஓகே சார்.

வனிதா மற்றும் தோழிகளும் ஒரு குழுவாக புகைப்படம் எடுக்க நகர்ந்தார்கள்.

புதியவனும், வினிதாவும் பேசிக்கொண்டே காட்டுப்பகுதியை கடந்து கொண்டிருந்தார்கள்.

வினிதா தன் மொபைலில் இருந்த தனது புகைப்படத்தை தனது குடும்ப புகைப்படங்களையும் புதியவனுக்கு காட்டிக்கொண்டிருந்தாள்.

அதைப்போன்றே ஒரு மாதிரி ஒருவர் தங்கள் புகைப்படத்தையும் அந்த புகைப்படம் பற்றிய நிகழ்வுகளை பேசிக்கொண்டே நடந்தார்கள்.

வினிதாவிற்கு நேற்றைய புதியவனை விட இன்றைய புதியவன் புதிதாக தெரிந்தது.

மீண்டும் மறைத்த காதல் அவள் மனதை தட்டியது. காதல் உணர்ச்சிகள் தழும்பு விடாமல் அடக்கிக்கொண்டே அவனுடன் கொடி நடையாக நடந்தாள்.

அவர்கள் காட்டுப்பகுதியை கடந்து அழகான மலைப்பகுதியில் ஓரத்தில் வந்து நின்றார்கள்.

இருவரும் அந்த அழகிய காட்சிகளின் நடுவில் செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள்.

அருகில் அமர்வதற்கு என்றே அமைத்ததை போன்ற ஒரு சிறிய பாறை இருந்தது. இருவரும் அதில் அமர்ந்து எடுத்த புகைப்படங்களை பரிமாறிக் கொண்டார்கள்.

காட்டின் மற்றொரு பகுதி:

அடியாட்களுடன் வந்த அந்த உருவம் வனிதா, திவ்யா, அனிதா மற்றும் ஜென்னியை சுற்றி வளைத்தது.

அடியாட்கள் அனைவரும் கையில் ஆயுதத்துடன் காட்சியளித்தது அவர்களுக்கு மரண பயத்தை காட்சியளித்தது. அவர்கள் இவர்களை நெருங்கவே அவர்களிடமிருந்து தப்பிக்க முற்பட்டார்கள்.

காப்பாற்றுங்கள்! காப்பாற்றுங்கள்! அலறிக்கொண்டே ஓட்டம் பிடித்தார்கள்.

அடியாளின் ஒருவன் கையில் வைத்திருந்த சிறிய கத்தியை வலது பக்கமாக ஓடிய ஜென்னியின் முதுகை குறிபார்த்து வீசி எறிந்தான்.

வீசிய கத்தி அவளின் முதுகை பதம் பார்க்க அலறி விழுந்தாள்.

மறுபக்கம் ஓடிய அனிதாவை பின்னால் துரத்திக் கொண்டு போன அடியாள் கட்டையால் தலையில் அடித்து தரையில் சாத்தினான்.

திவ்யாவும், வினிதாவும் கைகோர்த்துக் கொண்டு மற்றொரு திசையை நோக்கி ஓடினார்கள். அவர்களை தொடர்ந்து துரத்திய அடியாலும், அந்த உருவம் இருவரையும் மடக்கி பிடித்தார்கள்.

அந்த உருவம் அடியாளுக்கு திவ்யாவை உயிருடனும், வனிதாவை கொள்ள கட்டளையிட்டான்.

இந்த உருவம் திவ்யாவின் தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்தான்.

அவனிடமிருந்து திவ்யாவை வனிதா காப்பாற்ற முற்பட்டாள்.

அவனது கையை விழுந்து விடாமல் கடித்தாள்.
அவனும் வலியில் அலறினான்.

தனது மற்றொரு கையால் பின்பக்கமாய் வைத்திருந்த கூர்மையான கத்தியை வனிதாவின் கழுத்தின் நடுப்பகுதியில் சதக் என்று சொருகினான்.

வனிதாவின் கழுத்திலிருந்து பீச்சிட்ட ரத்தம் திவ்யா மற்றும் இந்த உருவத்தின் முகத்தை நனைத்தது.

அக்கா என்று அலறிய திவ்யாவை தரதரவென்று இழுத்துக்கொண்டே அந்த பகுதியில் இருந்து அவன் நகர்ந்தான்.

ரத்தவெள்ளத்தில் வனிதா அதே இடத்தில் மூர்ச்சையாகினாள். இறந்த அவளது உடலை காலை பிடித்துக்கொண்டு தரதரவென்று இழுத்துக் கொண்டுவந்து மற்றொரு அடியால் போட்டான்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜென்னியின் கழுத்தில் காலை வைத்து உயிர் போகும் வரை அழுத்தி மற்றொரு அடியால் அவளைக் கொன்று தீர்த்தான்.

அனிதா தலையில் அடிபட்ட காயங்களால் அதிக ரத்தம் விழுந்த இடத்திலே உயிர் பிரிந்து போனது.

அவர்கள் மூவரின் உடலை ஒரே பகுதியில் வந்து சேகரித்தார்கள்.

இதை எதுவும் அறியாமல் புதியவனும், வினிதாவும் பாறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.

அந்த நேரத்தில் வினிதாவிற்கு புதிய நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.

அழைப்பை ஏற்ற வினிதா, யாரென்று வினவ நான்தான் உன் எதிரி என்று ஒரு பெண் குரல் கர்ஜித்தது.

உனது அக்கா மற்றும் தோழிகளும் பிணமாக காட்டுப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். போய் அள்ளிக்கொள் என்று கட்டளையிட்டது.

அதைக்கேட்டு அலறினாள் வினிதா. காதில் வைத்து இருந்த போன் கையிலிருந்து நழுவி தரையில் விழுந்து நொறுங்கியது.

நெருங்கிய போனிலிருந்து இடைவேளை என்று ஸ்கிரீனை காட்சியளித்தது....!!!

இருளில் இருந்த திரையரங்க வளக்குகள் திரையரங்கை பளிச்சிட்டது.

ரசிகர்களின் கைதட்டலும், விசிலும் சாத்தாலும் திரையரங்கம் மின்னியது.

------ இன்டர்வல் பிரேக் --------

தொடரும் மர்மங்கள்!​
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 09



திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் ஹாஃப்க்கு கிடைத்த வரவேற்ப்பை கண்ட புதியவனுக்கு கண்களிலிருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.

ரசிகர்களுடன் ரசிகராக திரைப்படத்தை கண்டு கொண்டு இருந்தான். முதல் திரைப்படம் போன்ற இந்த திரைப்படமும் ரசிகர்களின் மனதை கவர்ந்து இருந்ததை உணர்ந்தான்.

ரசிகர்களை விட செகண்ட் ஹாஃப் மக்களை எப்படி கவரும் என்ற ஆர்வம் அவனுக்கு அதிகம் ஆனது.

அவனுடன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினரும் அமர்ந்து படத்தினை ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

இன்டர்வெல் பிரேக் முடிய பில் ஒலித்தது....!

திரையரங்க விளக்குகள் மீண்டும் அணைக்கப்பட்டது. படத்தை காண பார்வையாளர்கள் தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தார்கள்.

விளம்பர இடைவேளைக்குப் பிறகு திரைப்படம் மீண்டும் தொடங்கியது...!

அழுது கொண்டே இருந்த வினிதாவிடம் என்ன பிரச்சனை என்று வினவினான்.

அவளும் போனில் பேசிய செய்திகளை அவனிடம் கூற சோக மியூசிக் பேக்ரவுண்ட்யாக ஒலித்துக்கொண்டிருந்தது.

அந்த மியூசிக் பார்வையாளர்களின் பலரின் கண்ணீரை தட்டி சென்றது.

புதியவன் அவளை அழைத்துக் கொண்டு காட்டுப்பகுதிக்கு விரைந்து சென்றான்.

இருவரும் காட்டுப்பகுதியை நோக்கி ஓட சோகங்கள் விரிந்து ஆடும் அளவிற்கு திரையரங்கமே அமைதி பூத்து இருந்தது.

பல பகுதிகளையும் தேடி சென்றவர்கள் இறுதியாக கொலை நடந்த இடத்தை கண்டறிந்தார்கள்.

மரம், இலை, புதிர் என்று ரத்தம் பீச்சி அடித்து இருந்த பகுதிகளை கண்டு வினிதா ஊளை இட்டாள்.

மனம் உருகும் அந்த காட்சியை கண்ட பார்வையாளர்கள் பலரும் தங்கள் சொந்தங்களை இழந்து போன்று சோக வயப்பட்டார்கள்.

எங்கு தேடியும் அவளது அக்கா மற்றும் தோழிகளின் உடல் கண்ணுக்குத் தென்படவில்லை. வினிதா தனது மனதை தேத்திக்கொண்டிருந்தாள். அவர்களுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது என்று....!

அந்த நேரத்தில் புதியவன் மொபைலுக்கு ஒரு அழைப்பு வந்தது.

அழைப்பை எடுக்க புதியவன், எதிர்முனையில் பேசியவள் வினிதாவிடம் மொபைலை கொடுக்க கட்டளையிட்டாள்.

அவனிடமிருந்து மொபைலை வாங்கினாள் வினிதா.

வினி: ஏய்! லிண்டா உன்ன சும்மா விடமாட்டேன் டி! எங்க போய் ஓடி ஒளிஞ்சிகிட்டு இருக்க? தைரியமிருந்தால் நேரில் வாடி!

லிண்டா: ஆமாடி! என்னை அன்னைக்கு சும்மா விட்டுட்டு போனதால் தான் உனக்கு இந்த வினை! அன்றே என்னை கொன்றிருக்க வேண்டும். நீ தப்பு பண்ணிவிட்டா! அதோட விளைவை தான் இன்று நீ அனுபவிக்கிறா!

வினி: என் அக்கா, என் ஃப்ரெண்ட்ஸ ஒன்னு செஞ்சுடாதே? உனக்கும் எனக்கும் தானே பிரச்சனை!

லிண்டா: என்னம்மா இப்படி கெஞ்சுற? நீ தைரியமான பொண்ணு ஆச்சா? கார்த்திக்கும், அவன் ஃப்ரெண்ட்க்கும் சமாதி கட்டுனா அவள நீ?

எனக்குத் தெரியாதுன்னு நெனச்சியா?

உன் அக்காவும், உன் பிரண்ட்ஸ்யும் பரலோகம் போய் ரொம்ப நேரம் ஆச்சு டி!

இன்னுமா அவங்க உயிரோட இருக்காங்க என்று நம்புற? செல்ல குட்டி திவ்யா மட்டும் தான் உயிரோட இருக்கரா!

எந்த டெக்னாலஜி வச்சி எல்லாத்தையும் முடிச்சுயோ? அந்த டெக்னாலஜி வச்சு என்ன கண்டுபிடி பார்க்கலாம்?

கேலியாகச் சிரித்து விட்டு அழைப்பை துண்டித்தாள் லிண்டா.

ஓ! என்று அழுத வினிதாவை புதியவன் சமாதானப்படுத்தினான். புதியவனிடம் வினிதா முதலில் இருந்து நடந்த செய்திகளை கூறினாள்.

புதியவனும் வினிதாவை அழைத்துக்கொண்டு கார் இருக்கும் பகுதியை நோக்கி விரைந்தான்.

வினிதாவிடம் அவர்கள் இந்தத் தீவு பகுதியை விட்டு வெளியேறி இருக்க வாய்ப்புகள் இல்லை.

உன்னுடன் நான் இருக்கிறேன். எதுவாக இருந்தாலும் வா மோதி பார்க்கலாம் என்று ஆறுதல் வார்த்தைகளை கூறி முடித்தான்.

அவளின் சோகத்திற்கு அந்த ஆறுதல் வார்த்தைகள் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.

அவளது முழு யோசனையும் லிண்டாவை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தாள்.

திரைப்படத்தினை வேகப்படுத்த அதன் திரைக்கதையும், பேக்ரவுண்ட் மியூசிக் பார்வையாளர்களை நுனி சீட்டில் அமர வைத்திருந்தது.......!!!

தொடரும் மர்மங்கள்!​
 

Puthiyavan

Saha Writer
Team
Messages
14
Reaction score
0
Points
1
தொடரும் மர்மங்கள்! 10 (இறுதி பகுதி)



வினிதா லிண்டா இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க தனது டேபை எடுத்து மொபைல் ட்ராக்கிங் அப்ளிகேசன் உதவியுடன் கண்டுபிடிக்க முயற்சி செய்தாள்.

அது அவளுக்கு பலனளிக்கவில்லை. அவள் இருந்த இடத்தில் சிக்னல் மிகவும் மோசமாக இருந்தது.

புதியவன் வினிதா நமக்கு நேரம் அதிகமாக இல்லை. இருட்ட போகிறது.

அதற்குள் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க வேண்டும்.

புதியவன் காரில் இருந்த சில டூல்களை தாக்குவதற்கு வசதியாக எடுத்துக் கொண்டான்.

இருவரும் மீண்டும் காட்டுப்பகுதியை நோக்கி விரைந்தார்கள்.

காட்டில் ஒரு குடிலில்:-

அந்தக் காட்டில் ஒரு சிறிய குடில் இருந்தது. திவ்யாவை லிண்டா அங்கு அடைத்து வைத்திருந்தாள்.

தனது இரு அடியாட்களுக்கு அந்த மூவரின் உடலை புதைப்பதற்கு கட்டளை இட்டாள்.

தனது பாதுகாப்பிற்காக இருவரை அமர்த்தினாள். ஒருவனை குடியில் அருகிலும், மற்றொருவனை குடிலுக்கு வரும் பாதையில் நிற்க வைத்தாள்.

ஒருவழியாக வினிதாவிற்கு சிக்னல் கிடைத்தது. அதனை வைத்து லிண்டா இருக்கும் பகுதியை கண்டறிந்தாள்.

அந்தப் பகுதியை நோக்கி இருவரும் விரைந்தார்கள்.

புது: வினி அங்கே பாரு! அங்க ஒருத்தன் நிற்கிறான். நீ அந்தப் பக்கம் போ! நான் அவனுக்கு பின் பக்கம் போய் அவனைத் தாக்குகிறேன்.

சரி புதியவா! சிக்னல் அந்தக் குடியில் கிட்டத்தான் காட்டுகிறது.

அந்த நேரத்தில் அந்த குடியில் இருந்து திவ்யா தப்பிக்க முற்பட்டாள். அதனைக் கண்டு கோவப்பட்ட லிண்டா அவளை பயங்கரமாக தாக்கினாள்.

கோவம் தலைக்கு ஏறிய லிண்டா ஏய்! நாயே தப்பித்த ஓட பார்க்கிற, உன் நண்பர்கள் சென்ற இடத்திற்கே நீயும் செல் என்று கையில் வைத்திருந்த கத்தியை கொண்டு திவ்யாவின் நடு கழுத்தில் கத்தியால் கிறிவிட்டாள்.

புதியவன் அந்த அடியாளை தாக்கி கீழே சத்தினான். அந்த நேரத்தில் அங்கு வந்த மற்ற அடியாட்களுக்கும் அவனுக்கும் பெரிய சண்டை ஏற்பட்டது.

ஒரு அடியாளை புதியவன் கையில் வைத்து இருந்த ஸ்பானரை அவன் கழுத்தில் ஒரே சொருகு சோருக்குகினான்.

மற்றுயொரு அடியாள் அந்த கண்டு அஞ்சி ஓடினான். இறந்தவனின் கழுத்தில் இருந்த ஸ்பானரை உருகி அவனின் தலைய குறிபார்த்து வீசினான்.

பின்னால் ஓரத்தி சென்ற ஸ்பானர் அவனின் பின் தலையில் சொருக்கியது....!!

வீட்டின் அருகில் நிண்டவனை வினிதா அவன் எதிர்பார்க்காத நேரத்தில் தாக்கினாள். அவன்மீது லிண்டா மேல உள்ள பாதி வெறியை இறக்கினாள்.

அவள் கொடுத்த அடியில் அவன் மூர்ச்சையாகினான்.

குடியில் இருந்த லிண்டா வெளியில் கேட்ட சாத்தை கொண்டு அலர்ட் ஆகினாள்.

புதியவன் குடியில் இருக்கும் பகுதியை நோக்கி விரைந்தான்.

வினிதா குடியில் உள்ளே நுழைய அவள் கண்ணுக்கு திவ்யா உடல் இரத்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பதை கண்டு அலறினாள்...!

அவள் உள்ளே நுழையும் போதே லிண்டா வினிதாவை அவளின் நெஞ்சில் எட்டி ஒரு உதைய கொடுத்தாள்.

அவளின் உதையில் வினிதா பரந்து வெளியே விழுந்தாள். வாங்கிய உதையில் நிலைதடுமாறி எழுந்திருக்க முற்பட்ட வினிதாவை தனது காலால் எட்டி உதைத்துக் கொண்டே இருந்தாள்.

வலியில் சுரண்ட வினிதா லிண்டாவின் காலை பம்பரமிட்டாள்.

வினிதாவின் ஒரு காலை தன் கையில் பிடித்துக்கொண்டு வினிதாவின் பிறப்புறுப்பில் ஐ அம் கோயிங் டு கில் யூ! என்று கூறிக்கொண்டே தனது காலால் மிதித்தாள்.

லிண்டாவிடமிருந்து வாங்கிய அடிகளால் அவளுக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது.

வலியில் கதறிய வினிதா தனது இரு கைகளாலும் லிண்டாயின் காலை பிடித்து அவளை கவுக்கா முற்பட்டாள்.

இறுதியில் லிண்டாயை தரையில் காவித்த வினிதா தனது ஒரு கையால் லிண்டவின் கழுதை இருக்கி தனது முழு பலத்தையும் கொண்டு அழுத்தினாள்.

தனது முழு வெறியை கொண்டு அவளின் கழுத்தை நக்கி கொண்டே இருந்தாள்.

அருகில் இறந்துகிடந்த அடியாளின் கத்தியை தனது மற்றொரு கையால் எடுத்து நெற்றியில் ஒரே சொருகு சொருகினாள்.

லிண்டாவின் கதை அங்கேயே முடிந்தது.

ஓடோடி வந்த புதியவன் வினிதாவின் ரத்த கோலத்தைக் கண்டு அலறினான்.

அவளை தனது இரு கைகளாலும் ஏந்திக் கொண்டு கார் இருக்கும் பகுதியை நோக்கி ஓடினான்.....!!!

படத்திற்கான எண்ட் கார்டு போடப்பட்டது...!!

(நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மர்மங்கள் தான்...!!

நாளை என்ன நடக்கும் என்று தெரியாத இந்த வாழ்க்கை ஒரு தொடரும் மர்மங்கள்....!!!

வினிதாவை தனது கையிலேந்தி உயிர்பிக்க நினைக்கும் புதியவனுக்கு அறியவில்லை...!!

அவளின் உயிர் பிரிந்து வெகு நேரமாகிறது என்று....!!

நேற்று அவர்களிடமிருந்த மகிழ்ச்சியான வாழ்க்கை இன்று இல்லை, அதைப்போன்றே அவர்களின் உயிரும்...!!

பிறப்பும் இறப்பும் ஒரு மர்மங்கள் தான்...!!!

தொடரும் மர்மங்கள்!!!!

--------------சுபம்--------------

திரையரங்கு விளக்குகள் மீண்டும் மின்னியது.

பார்வையாளர்கள் ஆர்ப்பரித்தார்கள்...!!!

திரைப்படத்திற்கு கிடைத்த ஆதரவை கண்டு புதியவனும், அவனது படக்குழுவும் சந்தோசமாக, ஆனந்தமாக திரையரங்கை விட்டு வெளியேறினார்கள்.

வெளியில் காத்திருந்த மீடியாக்கள் பார்வையாளர்கள் ஒவ்வொருவரிடமும் படத்தைப் பற்றிய விமர்சனங்களை செய்தியாக்கி கொண்டிருந்தது.

புதியவனை கண்ட மீடியாக்களும், பார்வையாளர்களும் எரும்பை போன்று அன்பில் மொய்த்தர்கள்.... !!!!

மூன்று நாட்களுக்குப் பிறகு:

படத்திற்கான சக்சஸ் மீட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற சக்சஸ் மீட்டிங் இருக்கு அனைவரும் திரளாக வந்து காத்திருந்தார்கள்.

மீடியா மற்றும் புதியவனின் ரசிகர் பட்டாளங்கள் மீட்டிங் ரூமில் திரண்டு இருந்தது.

மேடையில் புதியவன், திரைப்பட தயாரிப்பாளர், படத்தின் கதாநாயகி சாய், இசையமைப்பாளர் மற்றும் தமிழ்நாட்டின் சிறந்த கதையாசிரியர் பட்டம் வென்ற பெண் எழுத்தாளர் ஸ்டெல்லா புதியவனின் அழைப்பிற்காக வந்திருந்தார்.

முதலில் பேசத் தொடங்கிய தயாரிப்பாளர் இந்தப்படத்தை வெற்றி படமாக்கிய மக்களுக்கும் மீடியா நண்பர்களுக்கும் எனது நன்றியைக் உரித்தாக்குகிறேன். இயக்குனர் புதியவன் தனது இரண்டாவது படைப்பையும் அழகாக படைத்து மக்களை வென்று விட்டார்.

பின்னர் பேசத் தொடங்கிய இசையமைப்பாளர் KV அவர்கள் இந்தப்படத்தில் பணியாற்றிய தற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் முதல் படத்தில் வாய்ப்பளித்த அதேபோன்று இந்தப்படத்திலும் எனக்கு வாய்ப்பளித்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றியை கூறிக்கொள்கிறேன். இப்படத்திற்கு இசையமைத்த இசையும் மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனைக் கொண்டாடிய மக்களுக்கும் எனது நன்றிகள்!

அடுத்தபடியாக பேசிய எழுத்தாளர் ஸ்டெல்லா!

எனது நண்பர் புதியவன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்லாமல் ஒரு சிறந்த இயக்குனர் என்றும் இப்படத்தின் மூலம் நிரூபித்துவிட்டார். அவரை எனது நண்பர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவரின் முதல் கதையை கதையாக படிக்கும்போதே அதில் உள்ள கதாபாத்திரங்கள் என்னை வெகுவாக ஈர்த்திருந்தது. அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிரோட்டம் கொடுத்து திரையில் காண்பித்தபோது என் கண்களில் கண்ணீரை தளும்பியது. புதியவன் இந்த கதாபாத்திரங்களுடன் உண்மையில் வாழ்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டார். அதுவும் வினிதா என்ற கதாபாத்திரத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் அளப்பரியது. மேலும் அவர் இதுபோன்ற தரமான கதையையும், படத்தினையும் மக்களுக்கு தொடர்ந்து வழங்க வேண்டுமென்ற வேண்டுகோளுடன் எனக்கு வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பிறகு பேசிய படத்தின் கதாநாயகி சாய் அவர்கள் தனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பளித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு மனமார்ந்த நன்றிகள்! என்னுடன் கூட நடித்த கோ ஸ்டார்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை கூறிக்கொள்கிறேன்.

இயக்குனர் புதியவன் 3 அவதாரங்களை எடுத்திருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இந்தப்படத்தில் என்னுடன் சிறந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருடன் இணைந்து நடித்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

கடைசியாக மைக்கை பிடித்து பேசிய புதியவன்.

முதலில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது இரு படத்தினையும் ஏற்றுக்கொண்ட மக்களுக்கும் நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன். மீடியா நண்பர்கள் பெரும் உதவியினால் இந்தப் படம் மக்கள் பேசும் படமாக ஆக்கியதே முதல் காரணம்.

எனக்கு முன்பாக பேசிய அனைவரும் என்னை மிகவும் மதிக்கக் கூடியவர்கள். அதனால்தான் என்னமோ என்னை மிகவும் புகழ்ந்து தள்ளி விட்டார்கள். நான் அந்த அளவுக்கு ஒர்த் இல்லைங்க!?

நான் இந்தப்படத்தில் கூறியதைப் போன்றே நமது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பல மர்மங்களை கடந்துதான் வருகிறோம்.

நாளை என்ன நடக்கும் என்று தெரியாத இந்த வாழ்க்கை. ஒரு மர்மங்களின் குவியல்தான்.

ஸ்டெல்லா கூறியதைப் போன்றே இதில் பிம்பபடுத்தியிருக்கும் வினிதா என்ற கதாபாத்திரத்துடன் நான் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து பார்த்துவிட்டேன். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் என் மனதில் ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

உங்கள் அனைவரின் மத்தியில் ஒருவரை அறிமுகம் செய்ய விருப்பப்படுகிறேன்.

அது வேற யாரும் இல்லை! உங்களின் விருப்பமான வினிதா! அவள்தான்!!!

அவள் எனது கதையின் நாயகி மட்டுமல்ல!!
இனி என் வாழ்வின் நாயகியும் அவளே!!!

உங்கள் அனைவருக்கும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தும்!

திரைக்கதையில் கொல்லப்பட்ட வினிதா எப்படி நேரில் வந்தாள் என்று, அவளின் வேண்டுகோளுக்கிணங்க தான் கதையில் அவள் கொல்லப்பட்டது போன்று காட்சி அமைத்தேன். இந்த இரு படமும் அவள் வாழ்க்கையின் மர்மங்கள் தான்.

அவள் சொன்னதை செய்து அவள் மனதை நான் வென்றேன். நான் செய்ததை கண்டு அவள் என் மனதை வென்றாள்...!

இதுவும் ஒரு மர்மம்தான்....!


முற்றும்.​
 
Status
Not open for further replies.
Top Bottom