Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நயன தாரகை நீயடி -கதை

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சரண்யா வெங்கட் எழுதும் நயன தாரகை நீயடி

நயனம் 1

மும்பை மாநகரம்...

மஹாராஷ்டிரா மாநிலத்தில் தலைநகரம், 12.4 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம், UNESCO வால் அங்கரிக்க பட்ட புராதன சின்னங்களை கொண்ட நகரம்.....

மும்பை - ஆகு பெயர் காக்கும் கடவுளான அம்பா தேவியின் அல்லது மும்பா எனும் பெயரால் அழைக்கபடும் நகரம், ஏழு தீவுகளின் கூட்டு அமைப்பு......

நவி மும்பை....

மணி நள்ளிரவு 12 மணி...

அடர்ந்த காரிருள் தன் கோர பற்களை காட்டி பயத்தை உலகிற்கு பறைசாற்றி கொண்டு இருக்க, வான் நிலவு தன் ஒளியினை உலகிற்கு அளித்து வெளிச்சம் பரப்பி கொண்டு இருந்தது, மழை தான் கண் முன்பு ஓர் அரக்கனின் உயிர் மடிய போவதை எண்ணி ஓயாமல் ஆனந்த கண்ணீர் விட்டு கொண்டு இருந்தது...

ஆள் அரவம் அற்ற சாலையில் மின் விளக்குகள் அதன் ஒளியினை உமிழ்ந்து கொண்டு இருக்க, வண்டுகள், தவளைகள் மழையின் ஒளிக்கு இணையாக தங்களின் குரலை கொண்டு நிசப்த சத்தத்தை இன்னும் கோரமாக காட்ட முற்பட்டு கொண்டு இருந்தது, இருளினை கிழித்து கொண்டு அங்கு கார் ஒன்று வேகமாக வந்து கிரிச்சிசிசிசிசி...... என்ற சத்தத்துடன் கிரிச்சிட்டு நின்றது....

அதில் இருந்து இறங்கிய நெடியவன் உருவம் கொண்ட ஒருவன், தன் இரு கால்களையும் அகற்றி தன் 6 ஆடி உயரத்திற்கு நிமிர்ந்து நின்றான், இருளில் தெரியும் அவன் வரி வடிவமும், அடுக்கு அடுக்காக வயிற்றில் தெரியும் தசை கோளமும் அவன் ஜிம்மில் எந்நேரமும் தவம் கிடப்பவன் என்று கட்டியம் கட்டி கூறியது.

என் மீது விழும் மழை துளிகள் என் கால் தூசுக்கு சமம் என்பதை போன்று தன் முகத்தின் மீது விழும் மழை துளிகளை தலையை சிலுப்பி உதறியவன், தன் நீண்ட கால்களை தடக்...தடக்... என்ற சத்தத்துடன் தன் ஷூகளின் மழையின் ஜோ... என்ற ஒலிக்கு இணையாக ஒலிக்க தன் வந்த காரின் டிக்கியில் இருந்து கை கால்கள் கட்டப்பட்டு, வாய் ஒட்டப்பட்ட நிலையில் இருந்த ஒருவனை தன் பலம் முழுவதையும் திரட்டி கீழே தள்ளினான்.

கீழே விழுந்து கிடந்தவன் என் கண்களில் மரண பயம் அப்பட்டமாக தெரிந்தது, இதயம் லப்டப்... லப்டப்... என்று வேகமாக துடிக்க, துடிக்கும் இதயம் வாய் வழியே வெளியே வந்து விடுமோ என்று கணிக்க தாக்க வகையில் நெஞ்சு கூடு ஏறி இறங்க வேகமாக பெரும் மூச்சிகளை விட்டு கொண்டு இருந்தான் அந்த புதியவன்.

எதற்காக கடத்தினார்கள் என்று தெரியாது, எதிரில் அரக்கன் போல நெடு நெடு என வளர்ந்து நிற்கும் ஒருவன், அவன் கண்களின் தன்னை கொல்லும் அளவிற்கு பழி வெறியும், குரோதமும் மின்னி கொண்டு இருக்க,

எச்சில் கூட்டி விழுங்கிய படி தன் எதிரில் இருக்கும் நெடியவன் இடம் தன் மனதில் எழுந்த கேள்விகளை கண்களில் தாங்கி நோக்கினான்.

கேள்வி தொங்கிய பாவனையுடன் தன்னை நோக்கியவன் அருகில் வந்த அந்த நெடியவன் தன் நீண்ட கைகளை கொண்டு புதியவன் வாயில் ஒட்டப்பட்டு இருந்த டேப்பை தன்னால் இயன்ற விசையை செலுத்தி இழுத்தான்.

வாயில் ஒட்டப்பட்ட டேப் அதிக விசையுடன் இழுக்கப்பட புதியவன் முகத்தில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... என்ற சத்தத்துடன் முனகல் வெளிப்பட்டது.

இப்பொழுது அந்த புதியவன் வாயில் இருந்து வார்த்தை என்னும் முத்துகள் வெளிப்பட்டது.

"யார் நீ"...

"எதுக்காக என்னை கடத்தின"... என மனதில் பயம் இருந்தாலும் தைரியமாக தன்னை காட்டி கொள்ளும் பொருட்டு நெடியவன் நோக்கி கேள்வி கணைகளை தொடுத்தான்.

"ஹா ஹா... நான் யாரா... நான் உன்னை உயிரை பறிக்க போற யமன்"... என்று கூறி இடியென சிரிப்பை உதிர்த்தான் அந்த நெடியவன்.

"எதுக்காக என்னை கொல்ல போற"...., மரண பயத்துடன் கேட்க

"என்னோட உயிரை நீ பறிக்க நினைக்கிற அப்போ, நான் உன்னோட உயிரை பறிக்கறதுல என்ன தப்பு இருக்கு...

"என்ன உலருற, எனக்கு நீ யாருன்னு தெரியாது நா... நான் .... எப்படி உன்னோட உயிரை பறிக்க முடியும்.

"நான் தெளிவா தான் இருக்கேன், காலைல இருந்து ஒரு பொண்ணு பின்னாடி அவ உயிரை பறிக்க நீ அலையுல"

" நெடியவன் கேட்ட கேள்வி அந்த புதியவன் நெஞ்சில் ஆயிரம் வாட்ஸ் மின்சாரத்தை பாய்ச்சியது.

"யாருக்கும் தெரியாது என நான் நினைத்த ஓன்று இவனுக்கு எப்படி தெரியும் என மனதில் நினைத்தவன், தன் எதிரில் நிற்பவன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது, இவனுக்கு எல்லாம் விஷயமும் தெரிந்து தான் என்னை கடத்தி இருக்கணும் என நினைத்து எச்சில் கூட்டி விழுங்கிய படி


"வேல்விழிக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்.... என்று நேரடியாகவே கேள்வி கேட்டான்.

வே...ல்....வி...ழி... என்று மெதுவாக மிக மெதுவாக உச்சரித்தவன், அந்த பெயருக்கு உடையவளை எண்ணி முகம் முழுக்க புன்னகை பூக்களை படர விட்டான்.

எப்படி புன்னகை பூக்காமல் இருக்கும், அவள் தானே ஓற்றை விழி பார்வையில் அவன் மீது காதல் போர் தொடுத்து, சத்தமே இல்லாமல் அவனை வென்று அவன் இதயத்தில் காதல் கொடியை பறக்க விட்டவள், அவள் தானே உள்ளுக்குள் காதல் என்னும் குறிச்சி மலரை மலர செய்தவள், அவள் தானே உள்ளுக்குள் நெருப்பு என கனன்று கொண்டு இருந்தவனை காதல் என்னும் மாய வலையில் சிக்க வைத்தவள், அவள் தானே ஒர விழி பார்வை கொண்டு காதல் என்னும் கூர் ஈட்டியை அவன் உள்ளத்தில் பாய்ச்சியவள்.

"அவ என்னோட உயிர் டா, என சிம்ம குரலில் கர்ஜித்தவன், என்னோட உயிர் மேல கை வைக்கணும் நினைச்சாலே கொன்னுடுவேன், நீ அவளை கொல்லனும் நினைச்சி இருக்க, உன்னை எப்படி நான் உன்னை உயிரோட விட முடியும் சொல்லு பார்க்கலாம் என பதில் கூறி...
தன் பின்னால் இருக்கும் நபர்களுக்கு சைகை செய்ய..

புதியவன் அருகில் வந்த நான்கு பேரும் அவனை கட்டைகளை கொண்டு வெளுத்து எடுத்தனர்,

அந்த நெடியவன் காரின் மீது தனது கால்களை மடித்து வைத்து அவர்கள் அடிப்பதையும் எதிரில் இருப்பவன் வதைக்கபடுவதை கண்களில் குரூரம் மின்ன வேடிக்கை பார்த்து சிரித்து கொண்டு இருந்தான்.

எதிரில் இருப்பவனின் உயிர் அடக்கிய பின்பும் அவன் வெறி அடக்கியதாக தெரியவில்லை...

அவனின் கை அசைப்பில் அனைவரும் விலகி போயினர்... நின்று கொண்டு இருந்தவன் இறந்தவனின் அருகில் சென்று " என் உயிரை எங்கிட்ட இருந்து பிரிக்கணும் நினைப்பவன் நிலைமை எல்லாம் இப்படி தான் முடியும் என்று கூக்குரல் இட்டு" அவ்விடம் விட்டு சென்றான்..

அவன் அகில் வேந்தன்....

தன் பார்வை கொண்டு எதிரில் உள்ளவர்களை எடைபோடும் கழுகு கண்களை உடையவன்,, கத்தி போன்ற முக்கினை உடையவன், பரந்த நெற்றியினையும் அதன் கீழ் கருத்த இரு புருவங்களை கொண்டவன், ஆறு ஆடி ஆணழகன், பெண்கள் மையல் கொள்ளும் அகன்ற தோள்களை உடையவன், எக்கு போன்ற கால்களை உடையான் தேக்கு போன்ற தேகத்தை உடையான்..... அகவை 26, நமது கதையின் நாயகன்.

சென்னை....

தமிழ்நாட்டின் தலை நகரம், சென்னை, வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரங்களுள் ஒன்று. உலகின் உள்ள நீளமான கடல் கரையை கொண்ட நகரம், 7.45 பில்லியன் மக்களை தன் அகத்தே கொண்டு விளங்கும் நகரம்...


நியூயார்க் டைம்ஸ் இதழின் 2014இல் செல்ல வேண்டிய உலகின் 52 இடங்களின் பட்டியலில் சென்னை 26வது இடத்தைப் பெற்றுள்ளது.

அடையார்...

காலை 6 மணி...

மான் போன்ற மருண்ட விழிகளை கொண்ட விழியால் அவள், அதன் கீழ் இரு கரு நிற வானவில் போன்ற வளைந்த புருவங்களையும், கரும் போர்வை போன்ற கூந்தலை உடைய காரிகை அவள், தலைகீழான ஏழாம் எண்ணினை போன்ற கூர்ந்த முக்கினை கொண்டவள் அவள் பால் போன்ற வண்ணம் கொண்டு, 5.5 அடியில் ரவி வர்மன் தூரிகை கொண்டு வரைந்த ஓவியம் அவள்.... நமது கதையின் நாயகி, அகவை 21

அவள் வேல் விழி....

தன்னை சூழ்ந்து இருக்கும் ஆபத்து யாது என்பதை அறியாது பேதை அவள் தனது இரு விழிகளை மூடி துயில் கொண்டு இருந்தாள்...

அகில் ஒருவனின் உயிர் பறிக்க காரணம் என்ன???...

வேல் விழியின் வாழ்வில் இவனால் ஏற்படும் நிலை என்ன ???...

காலம் இவர்களுக்கு என்ன பதில் வைத்து உள்ளது.....

நயனங்கள் பேசும்.....




நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 2
சூரியன் தனது ஒளி கதிர்களை அவளின் நேசம் கொண்ட பெண் துணையான நிலவிடம் அளித்து விட்டு கடல் அன்னையின் மடியில் துயில் கொள்ள கோபம் விடுத்து சென்றான்....

நிலவு மகள் தனது குளிர் கதிர்களை பரப்பி அவள் கணவன் விட்ட செயலை செவ்வனே செய்தாள்.....

மாலை 7 மணி நவி மும்பையின் பிரதான சாலை மக்கள் கூட்டத்துடன் அதிக சத்தத்துடன், பரபரப்பாக இருந்தது, கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாயில் ஈக்கள் மொய்த்த நிலையில் மத்திய மந்திரி செந்தூர பாண்டியனின் கடைசி மகன் அஸ்வின் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்தான்,

மக்கள், பத்திரிகையாளகார்கள் என அனைவருக்கும் இந்த கொலை பேசு பொருளாகவும், TRPயை உயர்த்தி கொள்ள ஒரு வழியாகவும் மாறி போக,

போலீஸ் வாகனம் ஒன்று சைரன் அடித்து கொண்டு வந்து நின்றது.... அதில் இருந்து இறங்கிய காவலர்கள் இறந்து கிடந்த நபரின் உடலை கண்ட நொடி அலறி அடித்து கொண்டு மத்திய அமைச்சர் செந்தூர பாண்டியனுக்கு போன் அடித்தனர்.

என்ன பயன், அவர் மதுவின் பிடியில் போதை தெளியாமல் கட்டிலில் உருண்டு புரண்டு கொண்டு இருந்தார், ஒருபுறம் அவர் போன் அடித்து அடித்து பார்த்த டிசி ராகவன் எதிர் புறம் பதில் இல்லாமல் போக அவரை அழைத்து செல்ல அடித்து பிடித்து ஓடிவந்தான்.

செந்தூரபாண்டியனின் போதையை தெளிவித்து நடந்த அசம்பாவிதம் குறித்து கூறி அவரை அழைத்து செல்வதற்குள் ராகவனுக்கு வேர்த்து விருவிருத்து போய் விட்டது, மதுவின் பாதி போதையுடன் இருந்த பாண்டியனிடம் ராகவன் மெதுவாக அவர் காதில் அஸ்வின் இறந்த செய்தியை கூறினான்.

ராகவன் கூறிய செய்தியை கேட்ட பாண்டியனும் அடித்த போதை எங்கோ காணாமல் போய்விட்டது, விழி விரித்து

"என்னயா சொல்ற, என் .... என்னோட மகன் இறந்து போயிட்டானா, என இதயம் பதைப்பதைக்க அதிர்ச்சியுடன் கேட்டார்.

"ஆமாம் சார், என எதிரில் இருத்த போலீஸ் பம்பியப்படி பதில் அளிக்க, செந்தூரபண்டியன், ராகவன் ஆகியோர் அஸ்வின் உடல் கிடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர்.

அங்கு அஸ்வின் உடல் இருந்த நிலை கண்ட செந்தூரபண்டியன் அருகில் இருந்த ராகவனிடம்

"எப்படி ஆச்சு, யா... யார்...இதுக்கெல்லாம் காரணம், என் பிள்ளையை இந்த நிலைமைக்கு காரணமானவன் எவன், அவன் மட்டும் என் கையில் கிடைச்சா, அவனை வெட்டி பொலி போட்டுடுவேன் என இரைந்தார், கத்தி என்ன பயன் போன உயிர் போனது தானே, அந்தோ பரிதாபம், அங்கு இருந்த யாருக்கும் அவர் கேள்விகான விடை தெரியவில்லை, கொலைக்கான காரணம் இது வரை யாருக்கும் தெரியவில்லை..

ஒருவனை தவிர.... அவன் செந்தூரபாண்டியனின் அரசியல் அஸ்திவாரத்தை அடியோடு ஆட்டம் காண செய்ய போகிறவன், அவரின் மதிப்பு, உயிர், பெயர், புகழ், என அனைத்தையும் புயலில் சிக்கிய படகு போன்று மொத்தமாக புரட்டி போட போகிறவன்,

அவன், தன் எதிரில் நடப்பதை ருத்திரம் பொங்க திருப்தியுடன் கண்டு அவ்விடம் விட்டு அகன்றான்.

மருத்துவர்கள் கூர் ஆய்வு செய்து பிணத்தை அவ்விடம் விட்டு மருத்துவமனை எடுத்து சென்றனர்.....

3 மாதத்திற்கு பிறகு...
சென்னை.....

நகரத்தின் மையத்தில் இருந்த அந்த திருமண மண்டபம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அங்கு இருந்த மேடை பூக்களால் அழகாக வேயப்பட்டு இருந்தது, அரசியல்வாதி பாண்டியனின் இரண்டாவது மகன் திருமணம் என்றால் சும்மாவா, முக்கிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என திருமணம் களைகட்டியது, திருமணத்தின் மிக முக்கிய பேச்சு பொருள் செந்தூர பாண்டியனின் மகன் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணை மணப்பது என்றால் அதிசயம் தானே, ஆனால் அதன் பின் இருக்கும் சூழ்ச்சி, தகிடு தத்தம் எல்லாம் செந்தூர பாண்டியன் மட்டுமே அறிந்தது.

சபை நாகரிகம் கருதி அமைதியான, மலரனினும் மெல்லிய சிரிப்புடன் , பார்ப்பவர்கள் கண்களை கொள்ளை கொள்ளும் அழகுடன், மருண்ட மான் விழி கொண்ட அஞ்சனையாக, வானத்து தேவதைகள் பொறாமைபடும்படி அழகுடன் நின்று இருந்தாள் நமது நாயகி வேல்விழி,

வேதநாயகம்- பூரணி தம்பதியின் ஒரே தவ புதல்வி....

அவளுக்கு இணையான அழகுடன் சிரித்த முகமாக நின்று இருந்தான் அரணவ்( நடக்காத ஒரு விஷயத்துக்கு உனக்கு எதுக்காக இவ்வளவு சிரிப்பு), வேல்விழிக்கு இந்த திருமணத்தில் துளி கூட விருப்பம் இல்லை, படிப்பதில் மட்டுமே விருப்பம், எங்கே பெற்றோர்கள் படிக்க விட்டால் தானே, இளநிலை நூலியல் முடித்து அருகில் உள்ள சென்ட்ரல் லைப்ரரியில் லைப்ரரியானாக வேலை செய்கிறாள்.

திருமணத்திற்கு வந்த உறவினர்களும் விருந்தினர்களும் தங்களின் பரிசினை அளித்து மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றனர்....

மறு பகுதியில் பார்ப்பவர்களின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில், ஆண்களின் கம்பிரத்திற்கு உதாரணமாக அழகுடன் மிடுக்குடன், மீசையை முறுக்கிய படி தன் உயரத்திற்கு நிமிர்ந்து வேக நடையுடன் உள்ளே வந்தான் நமது நாயகன் வேந்தன்....

கண்களில் கழுகு பார்வையையுடன், எதிரிகளின் சூழ்ச்சி, நயவஞ்சகம் என் அனைத்தும் அறிந்தும், தன்னை சூழ்த்து இருக்கும் ஆபத்தின் விளைவு தெரிந்தும், அரனவ்வை கொல்லும் வெறியுடன் அங்கு காலடி வைத்தான்,

செயற்கை விளக்குகளின் உதவியுடன், ஒளிர்ந்து கொண்டு இருக்கும் மேடையில் இயற்கை அழகில் எந்தவித பூச்சும் இன்றி தீபம் போன்று ஒளிர்ந்து கொண்டு இருக்கும் வேல்விழியை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அவனுக்கு,

பிரம்மன் படைத்த சித்தனவாசல் ஓவியம் போன்று நின்று கொண்டு இருந்த வேல்விழியை தலை முதல் கால் வரை, அடி முதல் நுனி வரை ஒரு தாயின் வாஞ்சையுடன் அளவிட்டான், அவன் பார்வையில் இருந்தது காதல் மட்டுமே, சிறு துளி கூட காமம் இல்லை

அவள் நெற்றி மீது விழும் கற்றை கூந்தல் ஒதுக்கி, அவளை தோளோடு அணைத்து உனக்கு நான் இருக்கிறேன் என கூற துடித்தது அவன் மனம்,


அவள் நெற்றியில் புரளும் அந்த கற்றை கூந்தலாக மாறி விடமாட்டோமா என எண்ணம் முகழ்ந்தது அவன் நெஞ்சில்.

சபை நாகரிகம் கருதி அவள் வெளியில் சிரித்து கொண்டு இருந்தாலும் அவள் கண்களில் இருந்த அலைப்புறுதல், அவளின் உண்மை நிலையை அவனுக்கு பட்டவர்த்தனமாக காட்டி கொடுக்க, அவளின் கண்களை ஒரு சன்னமாக மென் நகையுடன் பார்த்து கொண்டு இருந்தான் வேந்தன், அதே வேளையில் வேல்விழி அருகில் புன்னகையுடன் நின்று இருக்கும் அர்னாவ்வை காணும் பொழுது கொன்று விடும் வெறி வருவதை அவனால் தடுக்கமுடியவில்லை.

அவனுக்கு வேல்விழி வேண்டும், அவளை காக்க தானே இந்த திருமணம், அவள் அவனுக்கு சொந்தமானவள், அவன் உடமை, அவன் உரிமை, உயிர்,அவளை அவனிடமிருந்து எந்த சூழ்நிலையிலும் யாராலும் பிரிக்க முடியாது. பிரிக்க அவன் விடமாட்டான்.

காதலுக்கு கடமைக்கும் இடையில் அவனுக்கு அவள் வேண்டும், இன்று மட்டும் அல்ல, காலம் முழுவதும், காதல் செய்ய, அவன் காதலில் அவள் கட்டுண்டு இருக்க, நிறை பருவம் எய்திய பின்பும் காதல் செய்ய,சேர்த்தே மரணிக்க என வாழ்க்கை பயணம் முழுவதும் அவள் வேண்டும்

அவனால் தானே, அவள் இங்கு இந்த கோலத்தில் நின்று கொண்டு இருக்கிறாள், அவனுக்கு அவனை நினைத்தே, அவனின் கையறு நிலை குறித்து கோபம் எழுந்தது, என்ன பயன், கைகளை காற்றில் வீசி, உடல் விறைத்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தான், மம்ம்ம்ம்ம்.... முடியவில்லை.

காதல் கொண்ட இதயம் அவளுக்காக துடிக்க, ஏற்றுக்கொண்ட கடமை, அவளிடம் காதலையும், உரிமையையும் எடுத்து கொள்ள முடியாமல் தடுக்க, கடமை அவன் கைகளை கட்டி போட்டது, அவன் உள்ளம் காதலுக்கு கடமைக்கு இடையே ஆடும் பேண்டுலம் போல ஆகிப்போனது, பெரும் மூச்சி எடுத்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் வேல்விழி தன் அருகில் ,இறங்கு வரும் நொடிக்காக காத்து இருந்தான்.

அவன் செய்வது தவறு தான், தெரிந்தே அவள் வேண்டும் என்று தான் செய்கிறான், பின்னாளில் அவளில் பழி சொல்லுக்கும், குற்றச்சாட்டுக்கும் ஆளாக போகிறோம் என அறிந்து இருந்தும்,அவளின் நலனை முன்னிட்டு விருப்பத்துடன் இந்த செயலை செய்தான்.
முத்து சிற்பி
மூடியது போன்ற
உனது கரு விழிகளை
காணும் கணம்
காதலில் ...
திளைபேனா....

இல்லை கடமை பெருது
என்று நினைப்பேனா
யான் அறியேன்
என் கண்மணி...

வரவேற்பு நிகழ்வு முடிந்து உடை மாற்ற தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் நுழைந்த வேல்விழி கதவை தாழிட்டு திரும்ப, தன் எதிரில் இருக்கும் அந்நிய ஆடவனை கண்டு இரு அடிகள் பின்னடைந்தாள்.

அவளின் ஒற்றை விழி பார்வையிலும், நயனங்களின் நர்த்தனத்திலும், ஓராயிரம் மின்னல் வெட்டி, முழங்காமல் இடி இடித்தது அந்த காதல் தீவிரவாதி நெஞ்சில்.

அவளை பருகியபடி, விழிகளில் தொலைந்த படி அவன் மெல்ல மெல்ல அடிகளை எடுத்து வைக்க, அவள் அவனை பார்த்து பயந்தபடி இரு அடிகள் பின்னால் நகர்ந்தாள்.

தன் இதழ் விரித்து முத்து மூரல்கள் தெரிய யா... யா...யார் நீங்க, உங்களுக்கு என்ன வேணும் என்று குரலில் பயத்தை தேக்கி கேட்டாள் வேல்விழி.

" நீ.... நீ... தான் வேணும், தெளிவான உறுதியான குரலில் கண்களில் காதலை தேக்கி பதில் அளித்தான் வேந்தன்.

"நா.... நா....நான் வேணுமா? என்ன சொல்றிங்க.. என....எனக்கு நாளைக்கு கல்யாணம் இருக்கு என அவள் கூற.

"அது நடக்கும் பொழுது பார்த்துக்கலாம்..., இப்போ நீ என் கூட வரணும்.....வந்து தான் ஆகணும் என அவன் குரலில் கட்டளை மிகுந்து இருந்தது.

அவள் பதில் கூற இதழ்களை விரிக்க, அவன் ஒரு நொடியும் தாமதிக்காமல் தன் கையில் இருந்த குளோரோபார்ம் கொண்ட கை குட்டையில் அவள் மூக்கை முடி அவள் மயக்கம் முற செய்தான். வேரோடு சரிந்தவளை பூ போல கைகளில் ஏந்தி தனது கார் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

மறுநாள் காலை....

மண்டபத்தில் அனைவரும் மணமகளை காணாது தவித்து கொண்டு இருந்தனர், ஆனால் இதை அறியாத பேதை அவள் அவனுடன் தனது எதிர் காலம் யாது என்பதை அறியாது காரில் பயணித்து கொண்டு இருந்தாள்....

அவன் நடத்தி கொண்டு இருக்கும் இந்த குருஷேத்திர போரில் அவளுக்கு எந்த வித சேதாரமும் இன்றி அவளை காக்க, அவன் மேற்குரிய கடத்தல் செயலை செய்தே ஆக வேண்டும், அதற்காக அவன் உயிர் காதலை கண்டிப்பாக விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எந்த வித அவசியமும் இல்லையே...

அவன் காதல் வெல்லுமோ? இல்லை கொல்லுமோ?

நயனங்கள் பேசும்....



நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 3

ஊட்டி......

மலைகளின் ராணி அவள், கடல் அன்னையின் மடியில் இருந்து 7347 அடி உயர்ந்து நிற்கும் காரிகை அவள்,

கதிரவனின் கதிர்கள் மலைகளின் முகடுகளில்
எதிர் ஒளித்து அழகான விடியலை பூமிக்கு கொண்டு வந்தது....

சல சலவென ஓடும் நீரில் பட்டு எதிர் ஒளிக்கும் சூரிய கதிர்களை கண்ட பறவைகள் மின்னலின் கீற்றோ என்ன அஞ்சி தனது கூட்டினை விட்டு உணவு தேடி மேலே உயர பறந்தது....

பச்சை கம்பளம் விரித்தது போன்று இருந்த நகரின் எல்லையில் வண்ண வண்ண மலர்கள் பூத்து குலுங்கின.... கானகுயில்கள் நமது நாயகியின் வரவை உரைக்கும் விதம் தேவ கானம் இசைக்க....

இயற்கை அழகு அவனது கண்ணையும் கருத்தையும் கவரவில்லை, இலக்கினை நோக்கி சீறி பாயும் தோட்ட போன்று அவன் இலக்கு ஒன்றே அவனுக்கு பிரதானம், இப்பொழுது அவன் இலக்கு வேல்விழி, ஆம் அவள் மட்டும் தான், அவளை காப்பது மட்டுமே அவனது ஐந்து வருட இலக்கு,

காரை அதிவேகமாக தன் காட்டேஜ் நோக்கி செலுத்தி கொண்டு இருந்தான் வேந்தன்.

சுற்றிலும் மரங்களின் நடுவில் அமைந்து இருந்தது அந்த கட்டிடம்....

காரில் இருந்து இறங்கிய வேந்தன் வேல்விழியை எழுப்ப அவள் மயக்க மருந்தின் விளைவால் துயில் கலையாமல் கண் இமைகளை திறக்க முடியாமல் மிகவும் தள்ளாட, எப்பொழுது வேண்டும் என்றாலும் எதிரிகள் தங்களை தாக்க, தேடி வரலாம் முடிந்த வரை வேல்விழியை அங்கு இருந்து அப்புறப்படுத்த எண்ணினான்.

அவனோ அவளை வேல்விழி.... என அழைத்து உலுக்க, தூக்கத்திற்கு ஏங்கும் சிறு குழந்தை என மிழற்றினாள், எவ்வளவு முயன்றும் முடியாமல் போக சிறு குழந்தை போல அவளை தன் நீண்ட கைகளில் ஏந்தி கொண்டான்.

நெடுநாள் கனவு கை சேர்ந்த உணர்வு அவனுள், ஒரு நாளா இரு நாளா, ஐந்து வருட நெடுந்ததவம் அல்லவா அவள், அவன் தினமும் கனவில் தரிசிக்கும் மதி முகம் வெகு அருகில், காடு மலை என திரிந்த ஒரு ஜீவன் தன் இருப்பிடத்தை சேர்ந்த உணர்வு, வேந்தனின் உள்ளம் சிறு பிள்ளையென துள்ளியது.

இளையராஜா தேவதைகளுடன் பாக்ரவுண்டில் வயலின் வாசிக்க, கையில் மிதக்கும் கனவா நீ..... என அவன் உள்ளம் தான் தற்பொழுது இருக்கும் நிலைக்கு சிம்பொனி வேறு இசைத்தது.

"ரொம்ப சந்தோஷப்படாத, அவ கண்ணை திறந்த பின்னாடி தான் உனக்கு இருக்கு கச்சேரி என அவன் மனசாட்சி அவனை கேலி செய்ய,

" நீ எனக்கு மனசாட்சியா இல்லை அவளுக்கு மனசாட்சியா, எதுக்கு அவளுக்கு ஆதரவா பேசுற, என எதிர் கேள்வி கேட்டு அவளுக்காக வாதாடும் மனசாட்சியை தலையில் தட்டி அடக்கினான், ஆனாலும் உள்ளுக்குள் மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடியது.

கண் மூடி துயில் கொள்ளும் தன்னவளை கைகளில் ஏந்தி உல்லாசமாய் விசில் அடித்தபடி வீட்டின் உள்ளே நுழையும் பொழுது வேல்விழி செய்த செயலில் விதர்விதர்த்து நின்றான் வேந்தன்.

அவளோ ஏதோ மெத்தையில் சொகுசாக தூங்குபவள் போல வேந்தனின் நெஞ்சை தலையணை என நினைத்து தன் முகத்தை அவன் நெஞ்சில் புரட்டி,

அகி..... அகி..... என இரு தடவை பிதற்றியபடி, தலையணை அணைக்கும் நினைவில் அவன் தோள்களை அணைத்த படி நெஞ்சில் சுகமாய் தூங்கி போனாள்.

வேந்தன் தான் அவள் செய்கையில் இன்பமாய் அதிர்ந்தான், தூக்கத்திலும் தன் பெயர் பிதற்றுபவளை காணும் பொழுது, அவனுள் காதல் ஊற்று பீறிட்டது.

வீட்டிற்குள் நுழைந்து தன் அறையில் அவளை மெத்தையில் கிடத்தினான்....

அவளது முகத்தில் விழும் கற்றை கூந்தலை ஒதுக்கி தனது மதியினை இழக்க செய்யும் அவளது மதி முகத்தினை பார்வையால் பருக்கினான்...

அடையாத பொருள்,
போல..
கிடைத்த உன்
நேசத்தை
காப்பேனா....

இல்லை
விதியின்
வழியில்,

உன் விழியில்
பயணித்து...

உன்னை
இழப்பேனா...

பதில் சொல்லடி
என் வேல்விழி...

சிறிது நேரத்தில் தனது சித்தம் தெளிந்து தனது நிலை அறிந்து அவளின் உடைகளை சரி செய்து விட்டு அவள் கண் விழிக்கும் வரை காத்து இருத்தான்.....

வேல் விழிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய சிறிது நேரம் பிடித்தது...

நேற்று இரவு தன்னை யாரோ கடத்தியது கனவு போல நினைவு வர கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது...

தன்னை நிதானித்து சுற்றிலும் பார்வையை ஓட விட்டாள்...

தன்னை யாரோ கூர்ந்து நோக்குவது போல தோன்ற தனது தலையினை உயர்த்தி எதிரில் இருப்பவனை பார்வையால் எடையிட்டாள்...

இம்முறை அதிர்வது வேல்விழியின் முறையானது,

6 அடி ஆண்மகன், ஈட்டி போன்ற கண்கள், எதிரில் இருப்பவரின் மனதை எளிதில் படித்துவிடும் கண்கள், தேக்கு போன்ற தேகம் என் அவனை அங்குலம் அங்குலமாக எடை போட்டு கொண்டு இருந்தாள் அவனின் விழியாள்....

தனது கண் முன்பு நிற்பவன் நேற்று தன்னை கடத்தியவன் என்று நினைவு வர அவளது முகம் அதிர்ச்சியையும், கையரு நிலையும் ஒருங்கே பிரதிபலித்தது

யா.....யார் நீ..நீங்க, என்...என்னை... எதுக்காக கடத்தினீங்க...

எதிரில் இருந்த வேந்தன் அவள் கேட்ட கேள்விக்கு எந்த வித பதிலும் கூறாது, தலை முதல் கால் வரை அவளை பார்வையால் வருடியபடி விழுங்கும் பார்வை பார்க்க,

வேல்விழிக்கு நெஞ்சில் பய பந்து உருள ஆரம்பித்தது, கை கால்கள் எல்லாம் வெடவெட என நடுங்க, உடலின் மயிர் கால்கள் குத்திட்டு நிற்க எச்சில் கூட்டியபடி மீண்டும் அதே கேள்வியை முன்வைத்தாள்.

பார்வையை சிறிதும் மாற்றாமல் அழுத்தமான காலடி சத்தத்துடன் அவள் அருகில் வந்தவன்,

"தேவையில்லாத விஷயம் எல்லாம் உனக்கு எதுக்கு இப்போ, இன்னும் கொஞ்ச நேரத்துல உனக்கும் எனக்கும் கல்யாணம் ரெடியா இரு விழிமா... என அவள் கன்னம் தட்டி சென்றான் வேந்தன்.

அவன் கூறிய செய்தி கேட்டு அதிர்ந்து நின்றவள், அவன் வெளியேறுவதை பார்த்து உணர்ச்சி வரப்பெற்று ஓடி சென்று அவன் முன்பு மூச்சி வாங்கியபடி

"எனக்கும்....உங்களுக்கும் கல்யாணமா? வேதனையை தேக்கி அவள் கேட்க,

"என்னை கல்யாணம் பண்ண உனக்கு அவ்வளவு கஷ்டமா இருக்க விழிமா, என்னை அந்த அளவுக்கு பிடிக்காமல் ஆகிடுச்சா, என ஒரு நொடி உள்ளத்தில் வேதனையுடன் நினைத்தவன், அவளிடம் இன்னும் உண்மையை உரைக்க வில்லை என்பதை அவனுக்கு வசதியாக மறந்து போனான்.

" ஆமாம்" என அவளை உறுத்து விழித்தபடி வேந்தன் உரைக்க

"எதுக்காக இந்....இந்த கல்யாணம், நீங்க யாருன்னு கூட என்...எனக்கு தெரியாது, அப்பறம் எப்படி இது எல்லாம்....

"அதைப்பற்றி நீ என் கவலைப்படுற, கல்யாணம் பண்ணத்துக்கு பிறகு நமக்கு நெறய நேரம் இருக்கு, ஆற அமற என்னை பத்தியெல்லாம் சொல்றேன், இப்போ.... இந்த ட்ரெஸ்யை போட்டுட்டு நல்ல பெண்ணாக கல்யாணத்துக்கு ரெடி ஆகு, எனக்கு டைம் இல்லை, சீக்கிரம்..

" இல்லை கல்யாணம் பண்ணமாட்டேனு வீம்பு பண்ணா உன்னோட அப்பா, அம்மா , நீ யாரும் உயிரோட இருக்க மாட்டீங்க யோசிச்சி முடிவு பண்ணு"

"முடியாது சொல்றதுக்கு முன்னாடி இந்த வீடியோ பாரு" என்று வேள்விழியின் தாய் , தந்தையை கடத்தி கை, கால்களை கட்டி வைத்து இருக்கும் வீடியோவை ஓட விட்டான். அவன் ஓட விட்ட வீடியோவை பார்த்து அதிர்ந்து அவள் சிலையென நிற்க,

இதன் பின்பு பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்பதை போல அங்கு இருந்து விடு விடுவென்று சென்று விட்டான் வேந்தன்.

தன்னை சுற்றி நடக்கும் சூழ்ச்சி யாதும் அறியாது ஆற்றுவர் தேற்றுபவர் யாரும் இன்று கண்ணீர் கரைந்தாள் பேதை அவள்...

மண மேடையில் ஆண்களின் கம்பிரத்துக்கு இலக்கணமாய் அமர்ந்து இருந்தான் வேந்தன்...

இரண்டு பெண்கள் அழைத்து வர மருண்ட விழிகளுடன் மணவரை நோக்கி சென்றாள் வேல்விழி

முகம் நிமிர்த்தி அவன் கண்களில் என்ன கண்டளோ தலை குனிந்து அவன் இட்ட மலையினை மணமகளாய் ஏற்றாள்.

"ஒரே நாளில் தனது வாழ்க்கை தடம் மாறி விட்டது அப்பா, அம்மாவை காப்பாத்த நான் இந்த செயலை செய்து தான் ஆகணும்"என்று மனதை திடப்படுத்திக்கொண்டு தன்னை கவர்ந்தவனின் (கடத்தியவனின்) கழுத்தில் மாலை இட்டாள் மங்கை அவள்,

கெட்டி மேளம் ஒலிக்க...

முப்பது முக்கோடி தேவர்கள் சாட்சியாக, கதிரவன், நிலவு, வானம், பூமி மற்றும் காற்று என இயற்கையின் முன்னிலையில் அவளை மங்கள நாண் பூட்டி தன்னில் சரி பாதியாக மாற்றி கொண்டான் அகில் வேந்தன்....

அங்கு நடப்பதை இரு ஜோடி விழிகள் கோபத்துடன் பார்த்து கொண்டு இருந்தது....

வேந்தனின் இந்த முடிவுக்கு காரணம் என்ன...

வேல் விழியின் வாழ்வில் வேந்தன் ஏற்படுத்த போகும் சூறாவளி என்ன....

அந்த இரு ஜோடி விழிகள் யாருக்கு சொந்தமானது...
நயனங்கள் பேசும்.....






நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 4

நவி மும்பை நகரத்தின் மையப்பகுதியில் விண்ணை முட்டும் அளவிற்கு அமைந்திருந்தது அர்ணவ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியின் கட்டிடம்...

கண்ணாடியால் ஆன கட்டிடத்தின் பத்தாவது மாடியில் ஒரு அறையில், கூண்டில் அடைப்பட்ட புலியின் சீற்றத்தோடு அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தான் அர்ணவ், கண்களில் வேந்தனை நினைத்து அழையா விருந்தாளியாக கோபம் வந்து அமர்ந்து கொண்டது.

வேல்விழி உடனான திருமணம் கனவில் திளைத்திருந்த அவனுக்கு, வேந்தன் அவளை கடத்தியதும், திருமணம் செய்து கொண்டதும் பேரிடியாக அல்லவா அமைந்தது.

இந்த திருமணத்தை ஒட்டி அவனும் அவன் தந்தையும் வகுத்த திட்டங்கள் எத்தனை, சூழ்ச்சிகள் எத்தனை, அத்தனை திட்டத்தையும், அத்தனை சூழ்ச்சிகளையும், அத்தனை முன் ஏற்பாட்டையும், ஒரே அடியில், ஒரே நொடியில், சிதைத்து கலைத்துவிட்டால் தரைமட்டம் அக்கிவிட்டான் அகில் வேந்தன்.

வேந்தன் அத்தனை திட்டத்தையும் கலைத்ததை கூட மறந்து விடுவான், மன்னித்து விடுவான் அர்ணவ், ஆனால் வேல்விழியை திருமண மண்டபத்தில் யார் கவர்ந்து சென்றது என சிசிடிவி கேமராவை அலசி ஆராயும் பொழுது,

மலரை விட மிக மெல்லிய முல்லைக்கொடி போல மயங்கி கிடந்தவளை தன் நீண்ட கைகளில் ஏந்திக் கொண்டு கண்களில் கரை காணாத முடியாத காதலை தேக்கிய படி சுமந்து செல்லும் வேந்தனை காணும் கணமெல்லாம் காதலில் அடிபட்ட வலி அவன் கண்களில் தெரிந்தது.

ராவணனும் காதலுடன் தான் சீதையை கவர்ந்து சென்றான், ஆனால் அதில் காதலை விட காமமே பிரதானமான இடம் பெற்றது,

அதுபோலத்தான் அர்ணவ் வேல்விழி அடைய துடிப்பதில் அவனின் காதலை விட இந்த திருமணத்திற்கு பின் இருக்கும் அவனது சுயநலமும் லாபமும் மட்டுமே பிரதானநோக்கமாக இருந்தது.

புறவுலகின் சிந்தனையின்றி நடை பழகிக் கொண்டிருந்த அவனின் சிந்தனையை அவன் தந்தை செந்தூரப் பாண்டியன் குரல் கலைத்தது.

" வாங்க டாடி", அவனின் அழைப்பினை ஏற்று உள்ளே வந்த செந்தூரப் பாண்டியன் மகனின் முகத்தை கேள்வியுடன் நோக்கினார்.

"இது எப்படி நடந்தது, ஹொவ் இட் இஸ் பாசிப்பில், அவ்வளவு பர்பெக்ட் ஆப் பிளான் பண்ணி வேல்விழியை கல்யாணம் பண்ண முயற்சி செஞ்சோம், எல்லாம் வீணா போயிடுச்சு",

"அந்த வேந்தன் அவளை காப்பாத்தி, என்னோட கண்ணு முன்னாடியே தாலியும் கட்டிவிட்டான்", என கோபத்தில் பொரிந்து தள்ளினான்.

அவன் கூறிய அனைத்தையும் வில்லத்தனமான சிரிப்புடன் கேட்ட செந்தூர்பாண்டியன் அவனிடம்

"லுக் மை சன், நம்மால அவனை இப்பொழுது ஒன்றும் செய்ய முடியாது, கொஞ்சம் வெயிட் பண்ணி தான் நேரம் பார்த்து அவனை எழவே முடியாதபடி அடிக்கணும், அதுக்கான நேரம் வரும்வரை கொஞ்சம் அமைதியாக இரு",

"நான் கட்சி கூட்டத்துக்காக டெல்லி வரை போறேன், அதுவரைக்கும் என்னைக் கேட்காமல் எதுவும் செய்யாதே, கேர்ஃபுல்லா இரு", என எச்சரித்து விட்டு சென்றார்.

அவர் கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அவன் மனதில் வன்மமாக,

"அகில் உன்னை சும்மா விடமாட்டேன், என்னோட தம்பி மரணத்துக்குக் காரணமான இருந்த உன்னை அணு அணுவாய் சித்திரவதை செய்து ஏன்டா, இந்த உலகத்தில் வாழ்கிறோம் அப்படின்னு ஒவ்வொரு நாளும் நினைக்கிற மாதிரி பண்ணல, என் பெயர்அரணவ் இல்லை" என்று சுளுரைத்தான்.

உன்னை ஆட்டிப்படைக்கும் ஆயுதத்தை நீயே என் கண்ணு முன்னாடி கொண்டு வந்து நிறுத்திட்ட , அவளை காப்பாத்த தானே இதெல்லாம் பண்ண, ஆனா அவ்வளவும் வேஸ்ட், உன்னோட கண்ணு முன்னாடியே அவளைக் கொல்வேன், அவ செத்துப் போவதை பார்த்து பார்த்து நீ கண்ணீர் வடிக்கணும், என்னோட தம்பி இறந்த அப்போ நான் எப்படி அழுதேன், அதே மாதிரி நீயும் அழனும், அதுக்கப்புறம் உன்னை கொல்வேன் என எண்ணினான்.

நினைப்பது எல்லாம் நடந்துவிட்டால் கடவுள் ஒன்று ஒருவர் இருப்பது எதற்காக????

அவனுக்கு தெரியவில்லை அவள் அவனை அழிக்கும் ஆயுதம் இல்லை, அவனை காக்கும் ஆயுதம் என்று, அன்றே அறிந்து இருந்தால் அவன் உயிர் தப்பி இருக்கும், ஆனால் விதி வலியது, அவனது மரணம் அவளால் என்றோ எழுதபட்டுவிட்டது என்று.

வேந்தன் நடத்தும் குருசேத்திரப் போரில் அவள் வேல்விழியை பகடைக்காயாக உபயோகிக்கவில்லை அவளை முன்னிறுத்தி ஆட்டத்தின் காய்களையும் போக்கையும் மாற்றுகிறான் என்பதை அரணவ் அறியவில்லை. அறியும் பொழுது அனைத்தும் அவன் கை மீறி சென்றுவிட்டது.

அரணவ் அடிப்பட்ட வேங்கை என இரையை வேட்டையாட தயாரானான், வேல்விழியை முன்னிட்டு இருபுறமும் நடைபெறும் இந்த யுத்தத்தில் வெல்வது யார் என்பது காலத்தின் கைகளில் மட்டுமே உள்ளது.

அகில் வேந்தன், யாழ்வேந்தன் - சக்தி தம்பதியின் தவப்புதல்வன், பெற்றோரை ஒரு விபத்தில் 21 வயதில் பறிகொடுத்தவன், அதற்கான காரணம் யார் என்பதை அவன் நன்கு அறிவான், அவர்களை வெற்றி அடைவதற்கான பரமபத விளையாட்டை அவன் ஆட தொடங்கி விட்டான், ஆனால் பாவம் ஆட்டத்தின் காய்கள்தான் அதனை இன்னும் அறியவில்லை.
அகில் வேந்தன், வேந்தன் குரூப் ஆப் கம்பெனி எம்டி, இவன் கால் பதிக்காத துறையே இல்லை எனலாம்.

எக்போட் அண்ட் இம்போட், புட் புரோடக்சன் , கன்ஸ்டிரக்ஷன் கம்பனி, என எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறத்தான்,

அகில் வேந்தன், எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் கண்ணசைவில் எதிரில் எதிரிகளை கட்டிவைத்த தெரிந்தவன், தன்னை வெற்றிக்கொள்ள நினைப்பவர்களை அவர்களுக்கு முன்பு வெற்றி கொள்பவன், மொத்தத்தில் பிசினஸ் உலகின் ஜாம்பவான், பிசினஸ் டைக்குன், 26 வயதில் தனக்கென பிஸினஸ் உலகில் தனி இடத்தை பிடித்தவன்.

ஆனால் அவனின் மற்றொரு, உண்மையான முகம் யாரும் அறியாதது, அவனுக்கு மட்டுமே தெரிந்தது, மற்றவர்கள் அறிந்தால் உயிர்உறையை செய்ய கூடியது.

ஊட்டி...

திருமணம் முடித்த கையோடு அகில் வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருத்தான். கருப்பு நிற சேர்வனியில் தனது மனதினை கொள்ளை கொண்ட அவனின் மனையாளுக்காக காத்து கொண்டு இருந்தான்.

மதி மயக்கும் அழகுடன், விண்ணில் உலாவரும் தாரகை என மேடையேறினால் வேல் விழி.

வேந்தனின் மனம் பின்னோக்கி சென்றது, அவனின் மனம் கவர்த்தவளை கண்ட நாள் கண் முன்பு நிழல் ஆடியது....

ஜூலை 7,

கரும்மேகம் திரண்டு மழையை பூமிக்கு கொண்டு வரும் ஏகாந்த வேளையில், மழை மண்ணுடன் இணையும் நேரம் , வேந்தனின் நாசி அவனின் மனம் கொள்ளை கொண்ட தன்னவளின் பிரத்தியோக நறுமணத்தை நுகர்த்தது, நாசி நுகர்ந்த நறுமணம் மூளைய தாக்க, மூளை வேகமாக நறுமணத்திற்கு உகர்ந்த நங்கை, அவளை காண கண்களுக்கு கட்டளையிட, அவனின் கண்கள் அன்னிச்சை செயலாக தன்னவளை தேடி அலைப்புற்றது, அவன் மனதிற்கு இனியவள் அவனின் பார்வை வட்டத்திற்குள் விழவே இல்லை....

நான் உன்னுள்
என்னை தொலைத்து
உனது காதலை
வரமாக பெற்றேன்....

உன்னை கண்டு
என்னை மறந்தேன்...

உன் கண்களில்
எனது பிம்பம்
கண்டு
காதல் கொண்டேன்
கண்மணி....

நம் உலகம்....
அதில்
நீயும் நானும்
நமக்காக உதிக்கும்
சூரியன் .....

நமக்காக
மட்டுமே
காயும்
நிலவு....

நிகழ் உலகம்
மறந்து காதல்
செய்வோம் வா
பெண்ணே...

வேள்விழியின் வருகை வேந்தனை நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது, அவளின் கை கோர்க்க துடித்த கரங்களை அடக்கி, அவளை மயக்கும் மோகன புன்னகையுடன் தலையசைத்து அவளை வரவேற்றான்.

வரவேற்பு நிகழ்ச்சி பரபரப்பாக நடந்துக்கொண்டு இருக்கும் பொழுது எங்கோ இருத்து அதி வேகமாக வந்த துப்பாக்கி குண்டு வேல் விழியின் நெஞ்சை துளைத்தது.....

நயனங்கள் பேசும் ......



நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 5

மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில், அன்றலர்ந்த மலர் போன்று மெல்லிய கரையிட்ட காஞ்சி பட்டுடுத்தி, கொலுசொலி ஜதி சேர்க்க வரவேற்பு மேடை ஏறினால் வேல்விழி.

கண்களில் பயம் இருந்தாலும் வேந்தன் சிறிது நேரத்திற்கு முன்பு மிரட்டி சென்ற வார்த்தைகள் காதுகளில் ரீங்காரம் ஆக எதிரொலித்தது.

"இங்க பாரு வேல்விழி, நான் உன்னை மிரட்டி தான் கல்யாணம் செய்தேன் இல்லைன்னு சொல்லல, நடந்ததை இனிமேல் யாராலும் மாற்ற முடியாது, இந்த பங்க்ஷன் முடியிற வரைக்கும் நீ வெளியில உன்னோட பயத்தை காட்டக்கூடாது, என்னோட பிசினஸ் பிரண்ட்ஸ், என்னோட பிசினஸ் ப்ரண்ட்ஸ், பார்ட்னர்ஸ் எல்லாரும் வருவாங்க, அவங்க முன்னாடி நம்ம ரெண்டு பேரும் காதலித்து கல்யாணம் பண்ண மாதிரி தான் நான் சொல்லிருக்கேன்",

"யார் என்ன கேட்டாலும் நீயும் அதே மாதிரி தான் சொல்லனும்", புரிஞ்சுதா......

"என்னை மீறி ஏதாவது செய்யணும்னு நினைத்தாய் என்றால்....

"இன்னும் உங்க அப்பா அம்மாவோட உயிர் என் கைல தான் இருக்காங்க, அதை மறந்திடாதே", என்று உயர்ந்த குரலில் வேந்தன் மிரட்டல் தொனியில் கேட்க, அவன் குரல் அளித்த அதிர்வில் நின்ற படியே இரு அடிகள் பின்னடைந்த வேல்விழி அவன் கூறிய அனைத்திற்கும் சரி என்றபடி தலையசைத்தாள்.

"தட்ஸ் குட்" , என்றபடி அவள் கண்ணம் தட்டி சென்றான் வேந்தன்.

விருந்தினர்களின் வருகை அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வர, வரவேற்பிற்கு வந்தவர்களின் முன்பு புன்னகை எனும் போலி முகமூடி இட்டுக்கொண்டு, உதட்டில் உறைந்த புன்னகையுடன் சிரித்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.

அதே வேளையில் எங்கோ இருத்து அதி வேகமாக துப்பாக்கி குண்டு ஒன்று சத்தமின்றி வேந்தனை நோக்கி சிறீ பாய்ந்து வந்தது, வேந்தன் அதனை உணர்வதற்கு முன்பு வேல் உணர்ந்து அதனை தன் மார்பில் தாங்கி கொண்டாள்.

இதனை கண்ட இரு விழிகள் திருப்தியுடன் , இகழ்ச்சி புன்னகை மின்ன அங்கு இருந்து மறைந்தது.

வேரறுந்த மரம் போல, பிடுங்கி எறியப்பட்ட கொடிபோல வேல்விழி மண்ணில் விழுவதற்கு முன்பு வேந்தன் அவளை தனது நெஞ்சோடு தாங்கி கைகளில் ஏந்தினான்.

வே.....ல்.....வி....ழி.....என்று அவன் கதறிய கதறல் ஒலி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது, அவன் கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது, அவளின் இந்த நிலைக்காகவா அவன் இத்தனை வருடம் போராடியது, எதிரிகளிடமிருந்து அவளைக் காக்க அவன் செய்த அத்தனை முயற்சிகளும், ஒரே நொடியில் விழலுக்கு இறைத்த நீரானது,

தாய் கோழி எவ்வாறு தன் குஞ்சுகளை அடைகாக்குமோ, அவ்வாறு அல்லவா... வேந்தன் அவளை தன் கண்களுக்குள் பொத்தி பாதுகாத்தான்.

அவளை முதன்முதலில் கண்ட நொடி முதல் இதோ இன்று வரை அவளை கடத்தி திருமணம் செய்தது உட்பட அனைத்தும் அவளின் நன்மையை முன்னிட்டே அவன் செய்தது, ஆனால் அவனின் திட்டங்கள், முன்னேற்பாடுகள், பாதுகாப்பு, என அனைத்தையும் எதிரிகள் ஒரே நொடியில் தகர்த்து எறிந்து விட்டனர்.

தன்னை சுற்றி நடக்கும் எதுவும் அவன் நினைவிற்கு எட்டவில்லை, நினைவிலும் கனவிலும் உயிரிலும் நிறைந்திருந்தது அவள் ஒருத்தி மட்டுமே, வேல்விழி மட்டுமே.

வெளிவுலகின் சிந்தனை என்று தனக்குள்ளே உழன்ற படியே வேல்விழி......வேல்விழி..... என மனதுக்குள் பிதற்றினான் வேந்தன்.

தன் கண்முன்பு, தன் மனம் கவர்ந்தவள்
மூச்சு பேச்சு இல்லாமல், உயிரற்ற ஜடம் போல
இருப்பதை கண்டு அடுத்து செய்வது யாது என்பதை அறியாது விழி பிதுக்கி நின்றான் வேந்தன்.

அருகில் உள்ளவர்கள் வேந்தனுடன், வேல் விழியை மருத்துவமனை நோக்கி அழைத்து சென்றனர்.



வேந்தன் நடைப்பிணம் போன்று அவளுடன் அழுது கொண்டே சென்றான், எங்கே அவளை பிரிந்தால் தன் உயிர் நீங்கி விடும் என நினைத்தானோ என்னவோ அவன் அவளை விட்டு நீங்கவே இல்லை.

மருத்துவர்கள் தான் அவனை வலுக்கட்டாயமாக பிடித்து ஐசியூவிற்கு வெளியில் நிறுத்தி சென்றனர்,

ஐசியூவின் உள்ளே அவளை பிழைக்க வைக்க பெரும் போராட்டமே நடந்து கொண்டு இருக்க, இங்கு வேந்தன் ஒவ்வொரு நொடியும் வெளியில் அவளின் நிலை தெரியாது செத்து செத்து பிழைத்தான். தன் ஐந்து வருட காதல் இப்படி கை சேர்ந்த வேளையில், ஐந்து நிமிடத்திலே பிரியும் என அவன் கனவிலும் நினைக்கவில்லையே.

உன்னை கண்ட

நொடியில்

காலம் கடந்து

கவலை மறந்து

ஏழு ஜென்மம்

உன்னுடன் வாழ

ஆவல் கொண்டேனடி .....

மாலையிட்டு

ஐந்து நொடியில்

என்னை பிரிந்தது

ஏனடி

என் காதல்

கண்மணி.....

கடவுள் ...

என்னுயிர்

எடுத்து

உன் உயிர்

அளித்தால்

மகிழ்வேனடி.....

வேல் "அந்த அர்னவ் கிட்ட இருந்து உன்ன காப்பாத்தணும் தானே உன்னை மிரட்டி கல்யாணம் செய்தேன், இப்படி உனக்கு நானே எமனாக மாறுவேன் எனக்கு தெரியாதுடி, இதுக்காகவா அஞ்சு வருஷமா உன்னோட பின்னாடி அலைந்தேன், நான் யாருன்னு உனக்கு தெரிவதற்கு முன்பே இப்படி ஆயிடுச்சு, என்னோட உயிருக்கு ஆபத்து உன்னை காப்பாத்தி என் கூடவே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தானே உன்னை மிரட்டி நான் கல்யாணம் செய்தேன்.....

"உன்னோட அப்பா அம்மா கிட்ட கூட உண்மைய சொல்லி, உன்னை பாதுகாக்க அவங்களையும் நான் கடத்துவது மாதிரி நடிக்க சொன்னேன், அவங்களும் உனக்காக எல்லாம் பண்ணாங்க, இப்படியெல்லாம் பண்ணியும் என்னோட உயிரை காப்பாற்ற உன்னோட உயிரை பணையம் வைத்து விட்டாயே ஏன்டி", என உள்ளுக்குள் மறுக்கினான் வேந்தன்.

வேதநாயகம் மற்றும் பூரணிக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் மருத்துவமனை விரைந்தனர்.

இது எதுவும் அறியாத வேல்விழி உள்ளே உயிருக்கு போராடி கொண்டு இருக்க, வெளியில் வேந்தன் கண்களில் கண்ணீர் நிற்காமல் கரகரவென கன்னங்களில் வழித்தோடியது.

"விழிமா, உன்னை இந்த நல்ல நிலைமைக்கு ஆளாக்கியவர்களை சும்மா விடமாட்டேன், ஏற்கனவே உன்னை கொலை பண்ண பார்த்த அந்த அஸ்வினை கொன்றேன், அர்னவ் உன்னை கல்யாணம் செய்யப் பார்த்தான் அவன் கிட்ட இருந்தா உன்ன சேவ் பண்ணி திருமணம் செய்து கொண்டேன்" என்று மனதுக்குள் நினைத்தவனின் கண்கள் பழிவெறியில் மின்னியது, கண்கள் இரண்டும் கோவை பழம் போல கோபத்தில் சிவந்தது, இந்த நேரத்தில் அவனின் எதிரிகள் அவன் கைகளில் சிக்கி இருந்தால் அவர்கள் மரணிப்பது திண்ணம்.

கண்களில் வேல்விழியின் முகம் காண அலைப் புரிதலுடன் ஐசியூவில் வாசலை ரத்தக்கரை படிந்த உடையை கூட மாற்ற எண்ணமின்றி, தன்னவளின் மதிமுகம் காண தவமியற்ற ஆரம்பித்தான் வேந்தன்.

அவனின் தவமும், வேண்டுதலும் மருத்துவர்களின் செவியை எட்டிய ஏதோ என்னவோ, சிறிது நேரத்தில் வெளியில் வந்த மருத்துவர்கள் அவள் பிழைத்து விட்டதாக வேந்தன் மற்றும் வேல்விழியின் குடும்பத்திடன் கூறிச்சென்றனர்.

மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டு அவள் நெஞ்சில் இருந்த குண்டு வெளியில் எடுக்கப்பட்டது.

வேந்தன் கரை கடக்க முடியாத புயல் என வேகத்துடன் உள்ளே நுழைத்தான், கட்டிலில் அவனுக்கு காணக்கிடைத்தது பிடிங்கி எறியப்பட்ட குருக்கத்திக் கொடியின் நிலையிலிருந்த வேல்விழி மட்டுமே .

வேந்தனின் கண்களில் மாலையில் அவளை கண்ட காட்சி நிழலாடியது, வரவேற்பில் அன்றலர்ந்த மலர் போல இருந்தவள், இன்று வாடிய மலர் போல காட்சி அளிக்கிறாள் என்றால் அதற்கு அவன்தானே காரணம், அவனின் அஜாக்கிரதை தானே மேற்கூறிய அனைத்திற்கும் காரணமாக இருக்க முடியும் என தன்னை தானே நொந்து கொண்டான்.

தனது காவலர்களை அழைத்து இதனை செய்தது யார் என விசாரிக்கச் சொன்னான், விசாரித்ததில் அவர்களின் கூற்றுப்படி இதனை அரனவ் மற்றும் செந்தூரப் பாண்டியன் செய்யவில்லை, பிறகு யாருக்கு தன் மனைவி மீது கை வைக்க தைரியம் இருக்கும்,

வேந்தனின் மனைவிமீது கை வைக்க தைரியம் இருக்கும், இந்த ஈனச் செயலை செய்தது தன் எதிரிகளில் யாராக இருக்கும், என அவனுக்கு யோசனை ஓடியது.

ஆனால் அவனின் யோசனைக்கு யோசனைகளுக்கு அப்பால், அவனின் பலத்திற்கு சமமான பலத்துடன் அவனை எதிர்க்க ஒருவன் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்பதை வேந்தன் அறியவில்லை, அவன் அறியும் கணம் அனைத்தும் அவன் கைமீறிப் போயிருக்குமோ என்னவோ...

ஐசியூவில் உள்ளே சென்றவுடன் வேல்விழியின் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு, "வேல் உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த அவனை நான் சும்மா விட மாட்டேன்...

" நான் இப்போ எப்படி துடிக்கிறேனோ, அதே போல, இல்லை.... இல்லை.... அதை விட அதிகமாக அவனை துடிக்க வைப்பேன்" என்று சூளுரைத்தான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று...

அதே நேரத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்திற்காக ஆறடி உயரத்தில் ஆண்களின் கம்பீரத்துடன் எதிரில் உள்ள மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எளிதில் இனம் கண்டு விடும் கண்களுடன், தன் வேகநடை உடன் உள்ளே நுழைந்தான் ஒருவன்....

அவன் அபினவ்.

அபினவ், வேந்தன்- வேல்விழி வாழ்வில் ஏற்படுத்த போகும் பூகம்பம் என்ன....

வேல்விழி வேந்தனின் காதலை புரிந்து கொள்வாளா இல்லை, பிரிந்து செல்வாளா....

வேல்விழியின் உயிருக்கு யாரால் எதனால் ஆபத்து?

நயனங்கள் பேசும்.....





நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 5

மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மேடையில், அன்றலர்ந்த மலர் போன்று மெல்லிய கரையிட்ட காஞ்சி பட்டுடுத்தி, கொலுசொலி ஜதி சேர்க்க வரவேற்பு மேடை ஏறினால் வேல்விழி.

கண்களில் பயம் இருந்தாலும் வேந்தன் சிறிது நேரத்திற்கு முன்பு மிரட்டி சென்ற வார்த்தைகள் காதுகளில் ரீங்காரம் ஆக எதிரொலித்தது.

"இங்க பாரு வேல்விழி, நான் உன்னை மிரட்டி தான் கல்யாணம் செய்தேன் இல்லைன்னு சொல்லல, நடந்ததை இனிமேல் யாராலும் மாற்ற முடியாது, இந்த பங்க்ஷன் முடியிற வரைக்கும் நீ வெளியில உன்னோட பயத்தை காட்டக்கூடாது, என்னோட பிசினஸ் பிரண்ட்ஸ், என்னோட பிசினஸ் ப்ரண்ட்ஸ், பார்ட்னர்ஸ் எல்லாரும் வருவாங்க, அவங்க முன்னாடி நம்ம ரெண்டு பேரும் காதலித்து கல்யாணம் பண்ண மாதிரி தான் நான் சொல்லிருக்கேன்",

"யார் என்ன கேட்டாலும் நீயும் அதே மாதிரி தான் சொல்லனும்", புரிஞ்சுதா......

"என்னை மீறி ஏதாவது செய்யணும்னு நினைத்தாய் என்றால்....

"இன்னும் உங்க அப்பா அம்மாவோட உயிர் என் கைல தான் இருக்காங்க, அதை மறந்திடாதே", என்று உயர்ந்த குரலில் வேந்தன் மிரட்டல் தொனியில் கேட்க, அவன் குரல் அளித்த அதிர்வில் நின்ற படியே இரு அடிகள் பின்னடைந்த வேல்விழி அவன் கூறிய அனைத்திற்கும் சரி என்றபடி தலையசைத்தாள்.

"தட்ஸ் குட்" , என்றபடி அவள் கண்ணம் தட்டி சென்றான் வேந்தன்.

விருந்தினர்களின் வருகை அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வர, வரவேற்பிற்கு வந்தவர்களின் முன்பு புன்னகை எனும் போலி முகமூடி இட்டுக்கொண்டு, உதட்டில் உறைந்த புன்னகையுடன் சிரித்து அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாள்.

அதே வேளையில் எங்கோ இருத்து அதி வேகமாக துப்பாக்கி குண்டு ஒன்று சத்தமின்றி வேந்தனை நோக்கி சிறீ பாய்ந்து வந்தது, வேந்தன் அதனை உணர்வதற்கு முன்பு வேல் உணர்ந்து அதனை தன் மார்பில் தாங்கி கொண்டாள்.

இதனை கண்ட இரு விழிகள் திருப்தியுடன் , இகழ்ச்சி புன்னகை மின்ன அங்கு இருந்து மறைந்தது.

வேரறுந்த மரம் போல, பிடுங்கி எறியப்பட்ட கொடிபோல வேல்விழி மண்ணில் விழுவதற்கு முன்பு வேந்தன் அவளை தனது நெஞ்சோடு தாங்கி கைகளில் ஏந்தினான்.

வே.....ல்.....வி....ழி.....என்று அவன் கதறிய கதறல் ஒலி நான்கு திசைகளிலும் எதிரொலித்தது, அவன் கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் அத்தனையும் நடந்து முடிந்துவிட்டது, அவளின் இந்த நிலைக்காகவா அவன் இத்தனை வருடம் போராடியது, எதிரிகளிடமிருந்து அவளைக் காக்க அவன் செய்த அத்தனை முயற்சிகளும், ஒரே நொடியில் விழலுக்கு இறைத்த நீரானது,

தாய் கோழி எவ்வாறு தன் குஞ்சுகளை அடைகாக்குமோ, அவ்வாறு அல்லவா... வேந்தன் அவளை தன் கண்களுக்குள் பொத்தி பாதுகாத்தான்.

அவளை முதன்முதலில் கண்ட நொடி முதல் இதோ இன்று வரை அவளை கடத்தி திருமணம் செய்தது உட்பட அனைத்தும் அவளின் நன்மையை முன்னிட்டே அவன் செய்தது, ஆனால் அவனின் திட்டங்கள், முன்னேற்பாடுகள், பாதுகாப்பு, என அனைத்தையும் எதிரிகள் ஒரே நொடியில் தகர்த்து எறிந்து விட்டனர்.

தன்னை சுற்றி நடக்கும் எதுவும் அவன் நினைவிற்கு எட்டவில்லை, நினைவிலும் கனவிலும் உயிரிலும் நிறைந்திருந்தது அவள் ஒருத்தி மட்டுமே, வேல்விழி மட்டுமே.

வெளிவுலகின் சிந்தனை என்று தனக்குள்ளே உழன்ற படியே வேல்விழி......வேல்விழி..... என மனதுக்குள் பிதற்றினான் வேந்தன்.

தன் கண்முன்பு, தன் மனம் கவர்ந்தவள்
மூச்சு பேச்சு இல்லாமல், உயிரற்ற ஜடம் போல
இருப்பதை கண்டு அடுத்து செய்வது யாது என்பதை அறியாது விழி பிதுக்கி நின்றான் வேந்தன்.

அருகில் உள்ளவர்கள் வேந்தனுடன், வேல் விழியை மருத்துவமனை நோக்கி அழைத்து சென்றனர்.



வேந்தன் நடைப்பிணம் போன்று அவளுடன் அழுது கொண்டே சென்றான், எங்கே அவளை பிரிந்தால் தன் உயிர் நீங்கி விடும் என நினைத்தானோ என்னவோ அவன் அவளை விட்டு நீங்கவே இல்லை.

மருத்துவர்கள் தான் அவனை வலுக்கட்டாயமாக பிடித்து ஐசியூவிற்கு வெளியில் நிறுத்தி சென்றனர்,

ஐசியூவின் உள்ளே அவளை பிழைக்க வைக்க பெரும் போராட்டமே நடந்து கொண்டு இருக்க, இங்கு வேந்தன் ஒவ்வொரு நொடியும் வெளியில் அவளின் நிலை தெரியாது செத்து செத்து பிழைத்தான். தன் ஐந்து வருட காதல் இப்படி கை சேர்ந்த வேளையில், ஐந்து நிமிடத்திலே பிரியும் என அவன் கனவிலும் நினைக்கவில்லையே.

உன்னை கண்ட

நொடியில்

காலம் கடந்து

கவலை மறந்து

ஏழு ஜென்மம்

உன்னுடன் வாழ

ஆவல் கொண்டேனடி .....

மாலையிட்டு

ஐந்து நொடியில்

என்னை பிரிந்தது

ஏனடி

என் காதல்

கண்மணி.....

கடவுள் ...

என்னுயிர்

எடுத்து

உன் உயிர்

அளித்தால்

மகிழ்வேனடி.....

வேல் "அந்த அர்னவ் கிட்ட இருந்து உன்ன காப்பாத்தணும் தானே உன்னை மிரட்டி கல்யாணம் செய்தேன், இப்படி உனக்கு நானே எமனாக மாறுவேன் எனக்கு தெரியாதுடி, இதுக்காகவா அஞ்சு வருஷமா உன்னோட பின்னாடி அலைந்தேன், நான் யாருன்னு உனக்கு தெரிவதற்கு முன்பே இப்படி ஆயிடுச்சு, என்னோட உயிருக்கு ஆபத்து உன்னை காப்பாத்தி என் கூடவே வைத்துக்கொள்ளவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் தானே உன்னை மிரட்டி நான் கல்யாணம் செய்தேன்.....

"உன்னோட அப்பா அம்மா கிட்ட கூட உண்மைய சொல்லி, உன்னை பாதுகாக்க அவங்களையும் நான் கடத்துவது மாதிரி நடிக்க சொன்னேன், அவங்களும் உனக்காக எல்லாம் பண்ணாங்க, இப்படியெல்லாம் பண்ணியும் என்னோட உயிரை காப்பாற்ற உன்னோட உயிரை பணையம் வைத்து விட்டாயே ஏன்டி", என உள்ளுக்குள் மறுக்கினான் வேந்தன்.

வேதநாயகம் மற்றும் பூரணிக்கு தகவல் சொல்லப்பட்டு அவர்கள் மருத்துவமனை விரைந்தனர்.

இது எதுவும் அறியாத வேல்விழி உள்ளே உயிருக்கு போராடி கொண்டு இருக்க, வெளியில் வேந்தன் கண்களில் கண்ணீர் நிற்காமல் கரகரவென கன்னங்களில் வழித்தோடியது.

"விழிமா, உன்னை இந்த நல்ல நிலைமைக்கு ஆளாக்கியவர்களை சும்மா விடமாட்டேன், ஏற்கனவே உன்னை கொலை பண்ண பார்த்த அந்த அஸ்வினை கொன்றேன், அர்னவ் உன்னை கல்யாணம் செய்யப் பார்த்தான் அவன் கிட்ட இருந்தா உன்ன சேவ் பண்ணி திருமணம் செய்து கொண்டேன்" என்று மனதுக்குள் நினைத்தவனின் கண்கள் பழிவெறியில் மின்னியது, கண்கள் இரண்டும் கோவை பழம் போல கோபத்தில் சிவந்தது, இந்த நேரத்தில் அவனின் எதிரிகள் அவன் கைகளில் சிக்கி இருந்தால் அவர்கள் மரணிப்பது திண்ணம்.

கண்களில் வேல்விழியின் முகம் காண அலைப் புரிதலுடன் ஐசியூவில் வாசலை ரத்தக்கரை படிந்த உடையை கூட மாற்ற எண்ணமின்றி, தன்னவளின் மதிமுகம் காண தவமியற்ற ஆரம்பித்தான் வேந்தன்.

அவனின் தவமும், வேண்டுதலும் மருத்துவர்களின் செவியை எட்டிய ஏதோ என்னவோ, சிறிது நேரத்தில் வெளியில் வந்த மருத்துவர்கள் அவள் பிழைத்து விட்டதாக வேந்தன் மற்றும் வேல்விழியின் குடும்பத்திடன் கூறிச்சென்றனர்.

மருத்துவர்களின் கூட்டு முயற்சியால் ஆபரேஷன் வெற்றிகரமாக செய்யப்பட்டு அவள் நெஞ்சில் இருந்த குண்டு வெளியில் எடுக்கப்பட்டது.

வேந்தன் கரை கடக்க முடியாத புயல் என வேகத்துடன் உள்ளே நுழைத்தான், கட்டிலில் அவனுக்கு காணக்கிடைத்தது பிடிங்கி எறியப்பட்ட குருக்கத்திக் கொடியின் நிலையிலிருந்த வேல்விழி மட்டுமே .

வேந்தனின் கண்களில் மாலையில் அவளை கண்ட காட்சி நிழலாடியது, வரவேற்பில் அன்றலர்ந்த மலர் போல இருந்தவள், இன்று வாடிய மலர் போல காட்சி அளிக்கிறாள் என்றால் அதற்கு அவன்தானே காரணம், அவனின் அஜாக்கிரதை தானே மேற்கூறிய அனைத்திற்கும் காரணமாக இருக்க முடியும் என தன்னை தானே நொந்து கொண்டான்.

தனது காவலர்களை அழைத்து இதனை செய்தது யார் என விசாரிக்கச் சொன்னான், விசாரித்ததில் அவர்களின் கூற்றுப்படி இதனை அரனவ் மற்றும் செந்தூரப் பாண்டியன் செய்யவில்லை, பிறகு யாருக்கு தன் மனைவி மீது கை வைக்க தைரியம் இருக்கும்,

வேந்தனின் மனைவிமீது கை வைக்க தைரியம் இருக்கும், இந்த ஈனச் செயலை செய்தது தன் எதிரிகளில் யாராக இருக்கும், என அவனுக்கு யோசனை ஓடியது.

ஆனால் அவனின் யோசனைக்கு யோசனைகளுக்கு அப்பால், அவனின் பலத்திற்கு சமமான பலத்துடன் அவனை எதிர்க்க ஒருவன் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்பதை வேந்தன் அறியவில்லை, அவன் அறியும் கணம் அனைத்தும் அவன் கைமீறிப் போயிருக்குமோ என்னவோ...

ஐசியூவில் உள்ளே சென்றவுடன் வேல்விழியின் அருகில் அமர்ந்து அவள் கைகளை பிடித்துக் கொண்டு, "வேல் உன்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்த அவனை நான் சும்மா விட மாட்டேன்...

" நான் இப்போ எப்படி துடிக்கிறேனோ, அதே போல, இல்லை.... இல்லை.... அதை விட அதிகமாக அவனை துடிக்க வைப்பேன்" என்று சூளுரைத்தான். ஆனால் அவனுக்கு தெரியவில்லை அது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்று...

அதே நேரத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இருந்து மும்பை செல்லும் விமானத்திற்காக ஆறடி உயரத்தில் ஆண்களின் கம்பீரத்துடன் எதிரில் உள்ள மனிதர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை எளிதில் இனம் கண்டு விடும் கண்களுடன், தன் வேகநடை உடன் உள்ளே நுழைந்தான் ஒருவன்....

அவன் அபினவ்.

அபினவ், வேந்தன்- வேல்விழி வாழ்வில் ஏற்படுத்த போகும் பூகம்பம் என்ன....

வேல்விழி வேந்தனின் காதலை புரிந்து கொள்வாளா இல்லை, பிரிந்து செல்வாளா....

வேல்விழியின் உயிருக்கு யாரால் எதனால் ஆபத்து?

நயனங்கள் பேசும்.....





நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 6

மும்பை விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த அபிநவ் நேராக சென்ற இடம் அர்னவ் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி.

எப்பொழுதும் போல கம்பெனியின் உள்ளே தன் அக்மார்க் வேக நடையுடன் நுழையும்போதே அவனை எதிர்கொண்டு வரவேற்றது சாட்சாத் அரனவ் தான்.

தன் இரட்டைப் பிறவியான அர்னவை ஆரத்தழுவிய அபினவ், " ஹாய் ப்ரோ, ஹவ் ஆர் யூ, பிஸ்னஸ் எல்லாம் எப்படி போகுது" என்று தான் விசாரித்தான்.

அர்னவும் அபியை பதிலுக்கு கட்டியணைத்து "யா ஐம் ஃபைன், பிசினஸ் தானே..... போகுது....போகுது....நல்லா போகுது...."என ஒரு மார்க்கமாக கூற இருவரும் ஒரே நேரத்தில் மர்ம புன்னகையை உதிர்த்தனர், எப்படி உதிர்க்காமல் இருக்கமுடியும், வியாபாரம் என்ற போர்வையில் அவர்கள் இருவரும் செய்யும் குற்றங்கள் ஏராளம், அதன் கூடவே மந்திரி மகன்கள் என்ற சலுகையும் வேறு.


அபினவ் மற்றும் அர்னவ் இருவரும் இரட்டை பிறவிகள், அஸ்வின் பிறந்தவுடன் பாண்டியனின் மனைவி இறந்துவிட மூன்று ஆண் பிள்ளைகளை வளர்க்க சிரமப்பட்ட பாண்டியன் அபியை தன் தங்கையான கோமதி மற்றும் சங்கர் தம்பதிகளுக்கு தத்து கொடுத்து விட்டார்.

அபி, இருபத்தி ஐந்து வயது வரை அமெரிக்காவில் தன் கல்வியை முடித்து, இதோ என்று தன் தந்தையை தேடி வந்துவிட்டான்.

தாயகம் திரும்பிய உடன் அபினவ் செய்த முதல் செயல் வேந்தனை கொல்ல திட்டம் தீட்டி தான், ஆனால் அவன் திட்டத்தை செயல்படுத்த போகும் வேளையில் வேல்விழி அதனை தடுத்து நிறுத்திவிட்டாள்.

அமெரிக்காவில் இருந்து சென்னை வந்தடைந்த அபி நேராக வேந்தனின் வரவேற்பு நடக்கும் இடத்திற்கு சென்றான்,

அங்கு....

வேந்தனின் முகத்தில் சிரிப்பை பார்த்தவனின் கோபம் எவரெஸ்ட் சிகரம் போன்று தலைக்கு ஏற, அனைத்திற்கும் கிரீடம் வைத்ததை போன்று அவனருகில் அழகே உருவான வேல்விழியை காணும்பொழுது, காமமும், மோகமும் மேலும் போதையை ஏற்ற, அவளிடம் மெது மெதுவாக தன் சுயத்தை இழந்து, மயங்கி முழுவதுமாக அவளிடமே மண்டியிட்டான்.

இது எதுவும் அறியாத அந்தப் பேதை பெண்ணோ வேந்தனின் செயலில் அவனை ஏற்க முடியாமல் தன் முதல் காதலையும் மறக்க முடியாமல் இரண்டுக்குமிடையில் திண்டாடினான்.

வேல்விழி மணமானவள், வேறு ஒருவனுக்கு சொந்தமானவள் என்று தெரிந்தும், அவள் மீது மையல் கொண்டு, பிறர் மனை நோக்கல் என்ற மிகப்பெரிய, ராவணன் செய்த அதே தவறை புரிய சித்தமாய் இருந்தான் அபினவ்.

பிறன்மனை நோக்குதல் எனும் அறம் தவறிய செயலுக்கு சீதையால், ராவணன் ஏற்பட்ட அதே நிலை தனக்கும் ஒரு நாள் ஏற்படும் என்பதை அவன் அறிய மறந்தான் போலும், விதி வேல்விழி வடிவில் அவன் வாழ்வில் விளையாட ஆரம்பித்தது.

வேல் விழியின் மீது மையல் கொண்டது மட்டுமின்றி, வேந்தனைக் கொன்ற அவளை அடைய ஆவல் கொண்டான் அபினவ் என்னும் கொடிய அரக்கன்.

ஆம், அவன் அரக்கன் தான், அவனால் இதுவரை உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது, பெண்களின் உடலினை புசித்து வேட்டையாடும் மிருகம் அவன். மனித உருவில் இருக்கும் மிக கொடிய மிருகம் அவன்.

வேந்தனை கொலை செய்யும் முயற்சியில் அபினவ், வேந்தன் மீது எய்த குண்டினை வேல்விழி தன் நெஞ்சில் தாங்கிக் கொண்டாள், இதனைக் கண்ட அபினவ் கண்களில் பழிவெறியுடன் அந்த இடத்தை விட்டு கோபமாக அகன்று விட்டான்.

"ஆமாம் அர்னவ், அஸ்வின் எங்க, இரண்டு நாளாக ஆளையே காணலை, போனும் பண்ணல, நான் கால் பண்ணா எடுக்கல, ஸ்கைப் பக்கமும் வரல, டெய்லி என்கிட்ட பேசாமல் அவனால் இருக்க முடியாது, எங்க அவன் கூப்பிடு, நான் பார்க்கணும்" ....

"அது வந்து.... வந்து"....

"என்ன, சீக்கிரம் சொல்லு, அவன் எங்க...."

"நம்ம அஸ்வினை அந்த வேந்தன்...."

"வேந்தனுக்கு என்ன.... அவன் என்ன.....செஞ்சான்..... அர்னவ்"

"கொன்றுவிட்டான்....., ரொம்ப கொடூரமாக முறையில் அஸ்வினை கொன்றுவிட்டான்...", மெதுவாக மிக மெதுவாக தான் கலங்கிய கண்களுடன் அபியிடம் தெரிவித்தான் அர்னவ்.

"எ.....என்ன.... சொல்ற...., அஸ்வின் இறந்து விட்டானா...." , அதிர்ச்சியில் வாயடைத்த அபினவ் சில வினாடிகள் சிலையாய் சமைந்து நின்று விட்டான்,

ஒருவாறு தன்னை சுதாரித்து கொண்டவன்,

"எப்படி நடந்தது இது....., எப்பொழுது...." என்னை இறுக்கமாக கேட்க...

"வேல் விழியை, கடத்த நமது அஸ்வின் முயற்சி செய்யும்போது...., வேந்தன் அவனை கடத்தி கொன்று விட்டான், அதுமட்டுமில்லாமல் நான் கல்யாணம் செய்ய இருந்த வேல்விழியையும் கடத்தி அவன் திருமணம் முடிச்சிட்டான்...., நம்ப பிசினஸ்ல ஏதோ ஒரு விதத்தில் தடையை ஏற்படுத்தி இழப்பை கொண்டு வந்துட்டான்".

அபியின் இரு கண்களும் கலங்கின, தம்பி இறந்த துக்கம் ஒருபுறம் என்றால் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மறுபுறம், உடன் பிறந்தவனின் மரணத்துக்கு காரணமானவன் உயிருடன் இவ்வுலகில் நடமாடிக் கொண்டிருக்க, தன்னால் அவனை ஒன்றும் செய்ய இயலவில்லை என தன்மீதே கோபம் கொண்டான் அபினவ்.

அவன் இழந்த, எந்த இழப்பையும் யாராலும் ஈடு செய்ய முடியாது, ஏதோ ஒரு விதத்தில் வேந்தனுக்கு இழப்பை ஏற்படுத்தினால் மட்டுமே, தான் இழந்த அனைத்திற்கும் ஈடுசெய்யும், அது பொருள் இழப்பாக அல்லது உயிரிழப்பாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், யுத்த களத்தில் இறங்கி வேந்தனை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ போரிட்டு வெற்றி கொள்ள வேண்டும் என முடிவு செய்துவிட்டான் அபினவ்.

வேந்தனை பழிவாங்கவும், வேல்விழி அடையவும் தன் அடுத்த வியூகத்தை வகுக்க துவங்கி இருந்தான்.

அதற்குள் அர்ணவ் ஏதோ கூற வர, அவனை பேச விடாமல் தன் கைகளை உயர்த்தி தடுத்து கலங்கிய கண்களுடன் அவனை ஏறிட்டு...

" விடு அரனவ், அவனை கொல்ல தன் நான் கோவை போனேன், ஆனால் நான் சுட்ட குண்டு அவன் உடலை சல்லடை ஆக்குவதற்கு முன்னாள், அந்த வேல்விழி இடையில வந்துவிட்டாள், அவள் உயிரோடு இருப்பது ரொம்ப கஷ்டம்.... என கோபத்துடன் தன் கைகளை இறுக்கியவன்,

" ரொம்ப யோசிக்காத அர்னவ், நான் வந்துட்டேன் இல்ல, இனிமேல் அவனுக்கு எமன் நான்தான், கவலைப்படாதே , கூடிய சீக்கிரம் அவனுக்கு முடிவு கட்டுவோம், வா இப்போ வீட்டுக்கு கிளம்பலாம்" என இருவரும் வீட்டுக்கு கிளம்பினர்.

பாவம் அவனுக்கு தெரியவில்லை, அவன் நினைக்கும் காரியம் அவ்வளவு எளிதில்லை என்று, வேந்தனின் மற்றொரு முகம் தெரிந்தால் அவனுக்கு உயிர் நடுக்கம் பிறக்கும் என்று , ஒரு நாள் இல்லை, ஒரு நாள், அவன் தன் உயிருக்காக வேந்தனிடம் உயிர்ப்பிச்சை கேட்கும் நிலை வரும் என்று அவன் அறிந்திருக்கவில்லை.

அதே நேரத்தில் .....

அங்கே பாண்டியன், தன் மக்கள் செல்வத்தின் சொத்து மதிப்பை உயர்த்த, ஒன்றும் அறியாத நாட்டு மக்களின் உயிருக்கு உலை வைக்கும் செயலை எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி செய்து கொண்டிருந்தார்.

டெல்லி செல்வதாக கூறி விட்டு சென்ற செந்தூரப் பாண்டியன்,

சென்னையிலுள்ள அந்த புகழ்பெற்ற கட்டிடத்தின் வாயில் முன்பு தன் காரை நிறுத்தி இறங்கினார், தன் காரியதரிசி இடம் வெளியே நிற்கச் சொல்லிவிட்டு கட்டிடத்தின் மேல் பகுதி நோக்கி சென்றார்.

தன் இடது புறம் உள்ள அறையில் நுழைந்து, எதிரில் நாற்காலியில் அமர்ந்திருந்த நபரிடம் பவ்யமாக நின்று,

" ஐய்யா, எங்களால் அந்த பெண்ணை கடத்த முடியல, இப்ப அவ சாகுற நிலைமையில் இருக்கா, அது மட்டுமில்லாமல் அந்த வேந்தன் அவள் நிழல் மாதிரி கூடவே தொடர்ந்து கொண்டு இருக்கிறான்" என்றார்,

எதிரில் இருந்த அந்த உருவமோ, " ஒருவேளை சொன்னா உங்களால உருப்படியா செய்ய முடியாதா, அவளைக் கடத்த தானே சொன்னேன், கொலை செய்ய சொல்லலியே, இதை செய்ய உங்களுக்கு இவ்வளவு நாள் ஆகுதா" எனக் கேட்க...

செந்தூரப் பாண்டியன் அமைதியாக தலைகுனிந்தார்.

மேலும் எதிரில் இருந்தவன், " அவ கண்டிப்பா நம்மளுக்கு வேணும், அவள் இல்லாமல் நம்மால் அந்த ப்ராஜக்ட்டை ஆண்டில் பண்ண முடியாது, அவள் தான் அந்த ப்ராஜக்ட்வொட பாஸ்வேர்டு மறந்துடாதீங்க, சோ அவ கண்டிப்பா எனக்கு வேணும்,அட் எனி காஸ்ட் ஐ நீட் ஹர், பாண்டியனை பார்த்து கூச்சலிட்டான்.

"நீங்கள் என்ன பண்ணுவீங்க என்று எனக்கு தெரியாது, இன்னும் ஒரு மாசத்துல நாம் அந்த புராஜெக்டை கம்ப்ளீட் செய்யணும், அப்போதான் நம்மால அடோமிக் பிஷன்(automic fusion) மெஷினை ரன் பண்ணமுடியும், அந்த வேந்தன் செத்தாலும் பரவாயில்லை, அவனைக் கொன்னுட்டு அவளை கூட்டிட்டு வாங்க" , என்று உரைத்து அவர் செல்லலாம் என்பதற்கு அறிகுறியாக கையசைத்தான் அந்த புதியவன்.

" சரிங்க சார், என்று கூறிவிட்டு, விட்டால் போதுமென பாண்டியன் வெளியில் சென்றார், இல்லை, இல்லை, ஓடினார் என்பது மிகப் பொருந்தும்.

வேல்விழியை எவ்வாறு காப்பது என வேந்தன் யோசித்துக் கொண்டிருக்க....

பாண்டியன், அபினவ், அரணவ், ஆகிய மூவரும் தங்களது ஆகும் அடுத்து திட்டத்தினை செயல்படுத்த காய்களை நகர்த்தத் துவங்கினர்....

விதி இவர்களுக்கிடையே தன் சதுரங்க விளையாட்டை தொடங்கியது....

இது அறியாத பெண்ணோ, தன் முதல் காதலை என் கண்ணீரில் கரைந்து கொண்டிருந்தாள்.
திக்குத் தெரியாத

காட்டில் கிடைத்த

சிறு விண்மீன்

வெளிச்சம்

போல

என்னவனின்

நினைவுகளுடன்

வாழ்கிறேன் நான்.....

நயனங்கள் பேசும்.....



நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 7


நிலவு மகள் விண்ணவனுடன் உறவாடி கொண்டிருக்கும் ஒரு குளிர் நிலவு வேலை அது...

அறுவை சிகிச்சை முடிந்து வேல்விழியை ஐசியூவில் இருந்து தனி அறைக்கு இடம் மாற்றி இருந்தனர்.

வேந்தன் வேல்விழி இருக்கும் அறைக்குள் நுழைய அவள் மயக்க மருந்தின் வீரியத்தால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

அறையின் உள்ளே நுழைந்த வேந்தன் அழகு சிலை என உறங்கிக் கொண்டு இருப்பவளை தன் இரு விழிகள் என்னும் கேமரா வழியே நிரப்பி இதயம் என்னும் கூண்டுக்குள் ஆயுள் கைதியாக சிறை எடுத்தான்.

அவள் அருகில் செல்ல செல்ல அவன் இதயம் மெல்ல மெல்ல தடதடக்க ஆரம்பித்தது.....

5 வருடமாக நன்கு தெரிந்தவள்தான்....., புரிந்தவள் தான்....., அறிந்தவள் தான்...., எனினும் அவளின் அண்மையும் பரிசமும், அவனுக்கு புதிதாக ஒன்று.

அன்று திருமணத்தின்போது அவளைத் தீண்டினான் தான், இல்லை என்று சொல்வதற்கில்லை...., அன்றைய நிலை முழுவதும் வேறு, எதிரிகளிடமிருந்து அவளைக் காக்கும் அவசரத்தில் அவளின் அண்மையையும் பரிசத்தையும் ரசிக்க வாய்ப்பில்லாமல் போனது, ஆனால் இன்று முழுவதும் அவளை பார்வையால் உள்ளதால் உணரும் உவகை, அவனை முழுவதுமாக செயலிழக்க வைத்திருந்தது,

அதுவும் அவளை முழுவதுமாக உயிருடன் பார்க்கும் வரை, அவன் அனலில் இட்ட புழுவாக துடித்தது அவனுக்கு மட்டும் தானே தெரியும்.

அவளை மட்டும் நம்பித்தானே அவனின் வாழ்க்கை சக்கரம் இன்றுவரை சுழன்று கொண்டிருக்கிறது, அன்னையும் தந்தையும் சூழ்ச்சியால் இறந்தபிறகு வேல்விழி மட்டுமே அவன் வாழ்வின் பற்றுக்கோடாக, உயிராக, அவனின் எதிர்காலம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறான்,

அவள் இல்லையெனில் அவனுக்கு வாழ்வு என்பது எது????

அவன் இதுவரை நடத்திக்கொண்டிருக்கும், எதிர்காலத்தில் நிகழ்த்தப் போகும் தர்மயுத்தம் அவளுக்காக தானே...

மெதுவாக அடியெடுத்து வேல்விழி அருகில் சென்றவன், சிறுகுழந்தையின் மென்மையான சருமத்தை ஒத்திருக்கும் அவளின் கரங்களைப் பிடித்துக் கொண்டு மெதுவாக வருடி கொடுத்தான்,

அவளின் கைகளுடன் தன் நீண்ட கரத்தினை பிணைத்துக் கொண்டு அமைதியாக உறங்கும் அவளை விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான் முகத்தில் காற்றில் அசைந்தாடும் சிறுசிறு முடிகளை ஒதுக்கி நெற்றியில் தன் முதல் ஆதாரத்தை அவனுக்கு வலிக்குமோ என்று அஞ்சத்தக்க வகையில் பதித்தான்.

பின்பு அவளை விட்டு விலக மனமில்லாமல் அவள் நெற்றியில் தன் நெற்றியை இணைத்து கண்மூடி அவள் அருகாமையையும் பிரத்தியோக மணத்தையும் ரசித்தான், அந்த நறுமணம் அவன் முதன் முதலில் அவளை அவளை உணரச் செய்த நறுமணம், அவன் தாயிடம் சிறுவயதில் உணர்ந்த அதே நறுமணம்.

கண்மூடி கனவில் திளைத்த கணங்கள் அவன் மனதில் இனிமையாக சொட்டு சொட்டாக அவனுள் இறங்கியது, இந்த நிலை எவ்வளவு நேரம் நீடித்தது என்று அவனுக்கும் தெரியாத அவளுக்கும் தெரியாது.

அவனின் கனவை கலைப்பது போன்று அவனின் தேவதையிடம் அசைவு தெரிய, அவளை விட்டு விலக விருப்பமே இல்லாமல் விலகி நின்றான்.

சிறிது நேரத்தில் மயக்க மருந்தின் வீரியம் குறைந்த வேல்விழி கைகளை மெதுவாக அசைத்து கண்களை திறக்க முயன்றாள்,

அவளின் மூடிய கருமணிகள் அசைவில் தன்னை விரும்பி தொலைத்தான் வேந்தன். இவன் காதலில் அவளுக்காக உருகி கொண்டிருக்க அவளின் மணவாட்டி அவன் காதலை குலைக்கும் பொருட்டு மின்னாமல் முழங்காமல் அவன் தலையில் பெரும் இடியை இறக்கினாள்.

கண்களைத் திறந்த வேல்விழிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய சிறிது அவகாசம் தேவைப்பட்டது.

தனக்கு அரனவ் உடனான திருமண ஏற்பாடு, பின்பு வேந்தன் தன்னை கடத்தியது, திருமணம் செய்யச் சொல்லி மிரட்டியது, வேந்தன் உடன் திருமணம் நடந்தது, திருமண வரவேற்பில் வேந்தனை நோக்கி வந்த குண்டியை தன் நெஞ்சில் தாங்கியது அவள் நினைவு அடுக்கில் இருந்த நிகழ்வுகள் வரிசையாக ஒன்றொன்றாக தோன்றின.

வேல் விழிக்கும் மயக்கம் தெளிந்து கண்களை சற்றே உயர்த்தி எதிரில் நின்ற நபர் யார் என்று நிமிர்ந்து பார்த்தவள், எதிரில் நிற்பவன் வேந்தன் என்று அறிந்து கோப கைகளைக் கொண்டு அவனை சுட்டெரித்தாள்.

ஆறடி ஆண்மகன் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குபவன் , தன் பார்வையால் எதிரிகளை கட்டிவைக்க தெரிந்தவன், அவளின் கனல் பார்வையில் இரண்டடிகள் பின் அடைந்தான்.

அவள் கண்களில் இருந்தது கோவமா இல்லை..... இல்லை..... தன்மீது இருக்கும் வெறுப்பா இல்லை..... ஏன் இவ்வாறு செய்தாய் என்ற கேள்வியா..... என அவளது பார்வையை பகுத்தறிய தெரியாது வேதனையுடன் அவளை நோக்கினான் வேந்தன்.

வேந்தன் அவள் பார்வைக்கு பதில் கூற விழையும் முன்னரே வேல்விழி

"எதுக்காக என்னை காப்பாற்றினீர்கள், உங்க கூட வாழ பிடிக்காமல் தானே சாகலாம் என்று உங்க மேல விழ இருந்த குண்டை நான் தாங்கினேன், அப்புறம் எதுக்காக என்ன காப்பாற்றினீர்கள், உங்க கூட வாழறதுக்கு பதில் நான் செத்துப்போவதே மேல் தானே.... நான் இதையெல்லாம் செய்தேன்...." என்று அவனை வார்த்தைகளால் காயப்படுத்தினால் வேல்விழி.

மனதில் "நீங்க நல்லா இருக்கணும் என்னால உங்க கூட வாழ முடியாது, என்னோட முதல் காதலையும் மறக்க முடியாது....., அப்படி நான் உங்க கூட வாழ்ந்து தான் ஆகணும் என்றால்...., ஒரு நடைபிணமாக தான் வாழ வேண்டும்...., அதனால நான் உங்கள விட்டு விலகுவது தான் உங்களுக்கு நல்லது...."என்ன மருகினாள் வேல்விழி.


துளிர்விட்ட காதல் கருகி விட்டதே என வருத்துவதா இல்லை, மலர்ந்து மனம் வீசும் அவன் காதல் கசங்கி விட்டதே என அழுவதா இதில் எதை அவள் செய்ய.....

ஆனால் அவள் அறிந்திருக்கவில்லை வேந்தன் தான் அவளின் முதலும் முடிவும் ஆனவன் என்று.

அவளின் நினைவுகள் பின்னோக்கி சென்றது , தன் காதலை அவள் உணர்ந்த தருணம், தன் காதலை கொண்டவன் இடம் கூட உறைக்காது தனது பெற்றோரிடம் உரைத்து திருமணம் செய்ய வேண்டும் என நினைத்த வேளையில் அவளின் பெற்றோர் அவளுக்கு அரனவ் உடன் திருமணம் என முடிவு செய்து இருந்தனர்.

தன் பெற்றோருக்காக தன் மனதில் முளைத்த காதலை குழிதோண்டிப் புதைத்து பெற்றோருக்காக மண மேடை ஏறினாள் வேல் விழி, அதுவும் நிகழாது வேந்தன் அவளை மிரட்டியதும் பெற்றோரை காக்க அவனுக்கு மாலையிட்டாள் மங்கையவள்.

பெற்றோரின் விருப்பமும் நிறைவேறாது தன் காதலும் நிறைவேறாது வேந்தன் உடனான திருமணம் அவளுக்கு கசந்தது.

அவள் காதலின் நினைவில் உழன்று கொண்டு இருக்க, வேந்தன் அவள் அருகில் சென்று....

"வேல்விழி..... வேல்விழி...."என அவளை அழைத்து அவளை நிகழ்காலத்துக்கு இழுத்து வந்தான்.

"உனக்கு என்ன தான் பிரச்சனை வேல்விழி, சொல்லு, ஏன் இப்படி எல்லாம் பிகேவ் பண்ற...." என கேட்க...


"இப்போ என்ன, என்னுடைய பிரச்சனை என்னன்னு உங்களுக்கு தெரியணும், அவ்வளவு தானே, நல்லா கேட்டுக்கோங்க,

"என்னுடைய பிரச்சனை நீங்க.....",

"நீங்க மட்டும் தான்...., தயவு செஞ்சு என்னை விட்டு விலகி போயிடுங்க...., என்னால உங்க கூட வாழ முடியாது..., மீறி நீ என் கூட தான் வாழணும்னு நீங்க சொன்னா..... அடுத்த நிமிஷம் என்னோட உயிர் உடம்புல தங்காது", ஞாபகம் வச்சுக்கோங்க " என அவனை வார்த்தைகளால் காயப்படுத்தி, இருகைகளால் முகத்தை மூடி அழுதாள்.

அவள் அழுவதைப் பொறுக்க முடியாமல் வேந்தன் அவளை இழுத்து தன் நெஞ்சு கூட்டில் பொத்தி பாதுகாத்துக் கொண்டான், அவள் முதலில் திமிரினாளும் மெது மெதுவாக அவன் அணைப்பில் அடங்கினாள்.

"இப்ப என்ன வேல்விழி...... நான் உன்ன விட்டு விலகணும்.... அப்படித்தானே.....

"விலகிக் கொள்கிறேன் மொத்தமாக", ஒரு வார்த்தை, ஒரே வார்த்தையில் அவளை விட்டு மொத்தமாக விலகினான், இறுதியாக அவளை எழும்புகள் நொருங்கும் அளவுக்கு இறுக்கியணைத்து வெளியேறினான்.

அவளை விட்டு நீங்கி காரில் பயணித்து கொண்டு இருந்தவனின் மனம் சொல்லவென துயர் அடைந்தது, மனதில்

"வேல் உன்கிட்ட என்னோட காதலை சொல்ல எவ்வளவு ஆசையா.... ஓடி வந்தேன்.... ,ஏனடி இப்படி செய்தாய்..... உன்னோட வார்த்தைகளால் என்னோட காதலை இப்படி சாகடிச்சிட்டியே... ஏன்டி...., உன்னை காப்பாத்த தானே அவசரப்பட்டு கல்யாணம் செய்தேனே..... தவிர, உன்னை அடைவதற்கு.... எத்தனை வருஷம் ஆனாலும், ஏன்? எத்தனை யுகம் ஆனாலும்.....கண்டிப்பாக நான் உனக்காக காத்துகிட்டு இருப்பேன்டி..." என நினைத்தான்.

தன் மனதை காதல் கொண்ட மங்கையிடம் உரைக்க வேண்டும் என அவள் அருகில் சென்றவன் அவளின் சுடு சொற்களால் மனதில் வெறுமை தோன்ற அவள் நினைவில் மௌனமாக மறுக்கினான், அவளின் இந்த வெறுப்புக்கு காரணம் அறிய மறந்தது அவனின் காதல் கொண்ட மனது.

நினைவு இல்லை

என்பாயா

இல்லை

நிஜம்

இல்லை

என்பாயா

என் அன்பே.....

வழி போக்கன்

என்பாயா

இல்லை

வழி துணை

என்பாயா

என் அன்பே....

ஒரு விரல்

பிடித்து

உன்னை

சேரும்

நொடிக்காக

வழி மேல்

விழி வைத்து

நான்

ஏங்கி கொண்டு

இருக்கிறேன்......நயனங்கள் பேசும்......
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 8
வானம் மெதுமெதுவாக வெளிச்ச உடை தரித்துக்கொண்டு இருந்த அதிகாலை வேளை.....


மும்பையின் மையப் பகுதியில் அமைந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பின் பலகணி வழியே தகிக்கும் சூரியன் கடலில் இருந்து கிழக்கில் உதிக்கும் காட்சியை கலைந்த ஓவியம் போல இருந்த வேல்விழி கண்டு கொண்டு இருந்தாள்.

இன்றோடு அவள் மருத்துவமனையிலிருந்து வேந்தனுக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வந்து இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது.

"என் வாழ்க்கை எதை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது......, உளமார நேசித்தவனை கைபிடிக்க முடியவில்லை...., தாய் தந்தை நிச்சயித்த திருமணமும் கைகூடவில்லை...., மிரட்டி திருமணம் செய்தவனும் விலகிப் போய்விடும் என்ற ஒற்றை சொல்லுக்கு, நீ தனியாகவே இருந்து கொள்.....என்பதைப்போல விரல் நுனி கூட தீண்டாது விலகி சென்றுவிட்டான்....

வாழ்க்கை தனக்கு நாளை என்ன வைத்துள்ளது என தெரியாமலே தனக்குள் உழன்று அன்று மருத்துவமனையில் நடந்ததை மனதுக்குள் அசை போட்டுக் கொண்டிருந்தாள் வேல்விழி.


அன்று மருத்துவமனையில் கடைசியாக அவள் கணவனை பார்த்தது, டிஸ்சார்ஜ் செய்து அழைத்து போக வந்திருந்தான், வேந்தன் வீட்டில் வேலை செய்யும் குழலி அவளை மெதுவாக அழைத்து வர, தான் அணிந்திருந்த வெள்ளை சட்டையை கார் ஓட்ட ஏதுவாக முழங்கை வரை மடித்து விட்டு வேகமாக அவன் நடந்த தோரணையில் மயங்கி நின்றவள், அவனை விழி எடுக்காமல் பார்த்து தன் நினைவு அடுக்கில் நிரப்பிக் கொண்டாள்.

அவனை விட்டு விலக நினைத்தாலும்
அவன் நினைவுகள், அவளை ஏதோ ஒரு விதத்தில் பாதித்து கொண்டே தான் இருந்தது, இதோ இப்பொழுது கூட அவன் நடந்து வந்த தோரணையும், முகமும் அவள் நெஞ்சில் தித்திப்பாய், நிழல் உருவமாய் நின்றது.

அவளை மருத்துவமனையில் இருந்து அழைத்துக்கொண்டு கார் மூலம் சென்னை ஏர்போர்ட் வரை சென்று, அங்கிருந்து தனி விமானம் மூலம் இருவரும் மும்பையில் கடற்கரைக்கு அருகே உள்ள அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர்.

இருவரும் உள்ளே செல்ல முயல "அங்கே நில்லுங்க...... என்ற குழலியின் குரல் இருவரையும் தடுத்து நிறுத்தியது,


"புதுசா கல்யாணம் ஆனவங்க ஆர்த்தி எடுக்காமல் உள்ளே போகக்கூடாது.....", எனக்கூறி இருவரையும் ஒருசேர நிற்கவைத்து ஆர்த்தி சுற்றினார் குழலி.

வேந்தன் அதனை சிரித்த முகமாக ஏற்றுக்கொள்ள, வேல்விழியின் நிலைமைதான் பரிதாபமாக இருந்தது, எப்பொழுது அவனை விட்டு விலகுவோம் என நினைத்துக்கொண்டு இருப்பவளை அவனருகில் நிற்கவைத்து ஆர்த்தி சுற்றினாள், அவள் தான் நெருப்பின் மீது நிற்பது போன்று நிலைகொள்ளாமல் தவித்தாள்.

வேந்தன் சிறுவயதிலிருந்து குழலி அந்த வீட்டில்தான் வேலை செய்கிறார்,தாய் தந்தையை இழந்த பிறகு அவனுக்கு என்று அந்த வீட்டில் இருக்கும் ஒரே பிடிப்பு அவர் மட்டும் தான்.

ஆர்த்தி சுற்றி வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தவள், "என்று இருந்தாலும் நான் இந்த வீட்டில் நிரந்தரமாக இருக்கப் போவதில்லை....", என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள், ஒருநாள் தான் நினைக்கும் அத்தனையும் அடியோடு மாறி அவனை மட்டுமே தன் உயிர் மூச்சாகக் சுவாசிக்க போவதே அவள் அறியவில்லை.

குழலி வேல்விழியை விளக்கு ஏற்ற சொல்ல" அம்மா, இதெல்லாம் இப்ப எதுக்கு....., எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு...., இது எல்லாம் அப்புறமா செய்கிறேனே..., என்று நாசுக்காக தவிர்க்க பார்க்க

"பாப்பா....., சக்தி அம்மா இருந்து இருந்தால், கண்டிப்பாக இதையெல்லாம் செய்திருப்பார்கள்....., அவங்க இப்போ இல்லை. ,மறுக்காதீங்க பாப்பா....", என கெஞ்ச வயதில் மூத்தவர் தன்னிடம் கெஞ்சுவது பிடிக்காது அவர் சொன்ன அனைத்தையும் ஒரு சொல் தட்டாது செய்து முடித்தாள் வேல்விழி.

மருத்துவமனையில் இருந்து அவளை வீட்டுக்கு அழைத்து வந்தவன், வேல்விழியின் பெற்றோரிடம் தன்னைப் பற்றி எந்த உண்மையும் சொல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டான், நேரம் வரும் போது தானே உண்மையை உரைப்பதாக கூறிவிட்டான்.

அன்று அவளை விட்டு நீங்கியவன் தான்,இதோ இரண்டு வாரங்கள் ஓடிவிட்டது வரும் வழியை தான் காணவில்லை, அன்றிலிருந்து, அவள் கண்ணில் படவும் இல்லை அவளுடன் பேச முயற்சி செய்யவும் இல்லை.

அவனைக் காணாமல் அவள் கண்களில் நெஞ்சிலும் ஏதோ ஒரு அழைப்புறுதல், தேடல் இருந்து கொண்டே தான் இருந்தது, உயிரில் ஒரு பாதியில் இழந்தது போன்ற ஒரு வலி, முதல் காதல் பிரிந்தபோது கூட அனுபவிக்காத வலி இதுவரை அனுபவித்திராத வலி.



"நான் ஏன்???? இந்த அளவுக்கு கோழையாகி போனேன்....., வெறுப்பவனை..... ஏன்??? இப்படி அதிகமாக தேடுகிறேன்..... என மனது கேட்க, தன் எண்ணம் போகும் போக்கை எண்ணி வியந்தவள் தன் மனதை வேறு திசையில் மாற்ற முயன்றாள், ஆனால் அவள் அவனிடம் உரைத்த வார்த்தைகளின் வீரியம் அவள் அறியவில்லை.

ஏதேனும் புத்தகம் படித்தால் அவன் சிந்தனையிலிருந்து வெளிவரலாம் என்று நினைத்து குழலியிடம் செல்ல அவர் இவளின் வாடிய முகத்தை பார்த்து "ஏன் கண்ணு.... என்ன ஆச்சு???? முகம் இப்படி வாடிப்போய் இருக்கு...., உடம்பு சரியில்லையா..., என அன்பாக விசாரித்தார்.

"இல்லமா..... நான் நல்லா தான் இருக்கேன்..., இங்க படிக்குற புக் எல்லாம் எங்க இருக்கு எனக்கேட்க...",

" எல்லா புத்தகமும் தம்பி ரூம்ல தான் இருக்கு பாப்பா.... என அவர் பதில் கூற

" அவரு எப்ப வருவாரு மா??? உங்களுக்கு தெரியுமா....",

" தம்பி அடிக்கடி, இப்படித்தான் வேலை வேலைன்னு வீட்டுக்கு வராது கண்ணு, நீ பயப்படாதே நாளைக்கு வந்தோம் என கூற....",

" ஓஓஓஒ.... சரி மா...",


" அம்மா இங்க....அவரோட ரூம் எங்க இருக்கு??? என விசாரித்தால் வேல்விழி"


"வா கண்ணு நான் கூட்டிட்டு போறேன்....', என்று அவன் அறையைக் காண்பித்தார் குழலி.

அவன் அறையினுள் நுழைய ஒரு நொடி தயங்கி நின்றவள், பின்னர் தயங்கி தயங்கி உள்ளே நுழைந்தாள் .

அங்கே கண்ட காட்சியில் தன் கண்களை நம்ப முடியாமல், மீண்டும் மீண்டும் தன் எதிரில் உள்ள புகைப்படங்களை விழி எடுக்காமல் பார்த்து கிரகிக்க முயன்றாள்.

அவளின் எதிரில் காண்பவரை மயக்கும் மோகனப் புன்னகையுடன் ஆளுயர புகைப்படத்தில் நின்றுகொண்டிருந்தாள் வேல்விழி.

அதுமட்டுமில்லாமல் கடந்த ஐந்து வருடமாக வேந்தன் அவளைப் பார்த்த கணத்திலிருந்து திருமணம் ஆகும் வரை எடுத்த அனைத்து புகைப்படமும் வரிசைக்கிரமமாக அழகாக சுவற்றில் அடிக்கப்பட்டு இருந்தது.

அதனை விழி எடுக்காமல் பார்த்தவளுக்கு வேந்தன் தன்னிடம் பேசியது நினைவுக்கு வந்தது, ஆம்....அன்று தான் வேந்தன் வேல்விழி தூங்குவதாக நினைத்து அவளிடம் தனது காதலை உரைத்தான் , வேந்தன் கூறிய அனைத்தையும் கேட்ட பிறகு தான் அவள் அவனை விட்டு விலக உறுதி பூண்டாள், அவள் விலகினால் அவன் வேறு திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வான் என கனவு கண்டாள், ஆனால் அவள் மேல் அவன் கொண்ட 5 வருட காதலை மறந்து விட்டாள்.

மேலும் தான் காதல் கொண்ட காலத்தையும் அதன் பின்பு நடந்த நிகழ்வுகளும் அவள் கண்கள் முன்பு நிழலாட, நான் வேந்தனுக்கு ஏற்றவள் இல்லை என்ற முடிவுக்கு வந்தாள்.


நான் கொண்ட காதலும் தோற்றுவிட்டது, என்னை நினைத்த அவரின் காதல் நிறைவேறவில்லை, என தன்மீதே கோபம் கொண்டால் பெண்ணவள்.

நான் அறையை ஒருமுறை சுற்றிப் பார்த்தவளின் கண்களில் பட்டது புத்தகம் வைக்கும் அந்த அலமாரி, அதை திறந்து பார்க்க அதில் அவன் கைப்பட எழுதிய டைரி இருந்தது, டைரியில் என்ன இருக்குமென அதனை திறந்தவளின் கண்கள் முதல் பக்கத்தில் இருந்த பெண்ணின் மீது நிலைகுத்தி நின்றது......

வேந்தன் அலுவலகத்தில் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தான் , இன்றோடு அவன் வேல் விழியை பார்க்காமல் இரண்டு வாரம் ஓடிவிட்டது , அன்று அவன் விலகிப் போய்விடு என்று சொன்னவுடன் விலகிப் போனவன் தான் இன்றுவரை அவளைக் காணவில்லை, அவளைப் பொருத்தவரை வெறும் இரண்டு வாரம், ஆனால் வேந்தனை பொருத்தவரை நீண்ட நெடிய 14 நாட்கள் , அவளை காணாத இந்த இரண்டு வாரம் அவன் நினைவு அடுக்கில் இருந்து அகற்றப்பட வேண்டியவை, அவளை முதலில் சந்தித்த நாளிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை அவளை தினமும் காணாமல் அவனின் பொழுது விடியாது, இரவும் முடியாது, அப்படி இருக்கையில் இந்த இரண்டு வாரமும் அவளின் சுடுசொற்கள் தாளாது விலகி நின்றான்

"அவள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பாள்...., என்னைப்பற்றி என்ன யோசித்துக் கொண்டிருப்பாள்..... , அவளை சூழ்ந்திருக்கும் ஆபத்திலிருந்து எவ்வாறு அவளை நான் காப்பது....,என் எதிரிகளின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும்....", என மனதிற்குள் யோசித்துக் கொண்டிருந்தான்.

எங்கே தனது உண்மை முகம் வேல்விழிக்கு தெரிந்து விடுமோ என்ற பயம் ஒருபுறம், அவ்வாறு தெரிந்தால் தன்னையும் தன்னுயிர் காதலையும் அவள் மறுத்து விட்டால் என்ன செய்வது எனக் குழம்பி தான் என்றால் அந்த ஆறடி ஆண்மகன்.

விடை தெரியாத கேள்வியாக
உன் விலகல்....

விளக்கம் அளிக்க விரும்பாத
உன் மவுனம்....

நீ தொடர விரும்பாத
என் உறவு.....

காரணம் தேடி தோற்றது
என் மனம்.....

வலியுடம் உனது
நினைவுகளையும்
நிழல்களையும்
சுமந்து
கொண்டு நான்......

வேல்விழி பற்றிய சிந்தனையில் உழன்று கொண்டிருந்த வேளையில் மேசையில் இருந்த வேந்தனின் மொபைல் அலறியது, எதிரில் இருந்த நபர் கூறிய செய்தி கேட்டவன் முகம்
செந்தணல் என சிவக்க "சரி, நான் இப்பவே அங்க வரேன்..", என அவருக்கு பதில் அளித்துவிட்டு வேகவேகமாய் தன் காரினை அவ்விடம் நோக்கி செலுத்தினான்.

அடுத்ததாக அவன் கார் நின்ற இடம் மும்பை கமிஷனர் அலுவலகம், நேராக ஐ ஜி இருக்கும் அறைக்குள் நுழைந்தவன், எதிரில் இருந்த நபரிடம் " இதுக்காக தான் அப்பவே சொன்னேன் கேட்டீங்களா....., அவங்களை சும்மா விட்டா அமைதியா இருக்க மாட்டாங்க...., இப்ப பாருங்க, மறுபடியும் வேல்விழி கடத்த திட்டம் போட்டிருக்காங்க...", என கோபத்தில் பொரிந்து தள்ளினான்.

எதிரில் இருந்த கமிஷனர்" கூல் டவுன் மை பாய்...., அவங்க கூட இருக்க அந்த அஞ்சாவது நபர் யாரென்று நமக்குத் தெரியும் வரை நாம் அமைதியாகத்தான் இருந்து ஆகணும்....., அவன்தான் இது எல்லாத்துக்கும் பின்னாடி இருப்பது...., அதுமட்டுமில்லாமல் எல்லாத்துக்கும் மாஸ்டர் மைண்ட் அவன் தான்...., இவங்க நாலு பேரும் அவன் ஏவி விட்ட அம்புகள் தான்..., அம்புகளை விட அதனை எய்தவனை தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்...",

"அன்று நீ அந்த அஸ்வினை கொல்லாமல் இருந்திருந்தால் இந்த நேரம் அவங்க யாருன்னு நாம கண்டுபிடித்திருக்கலாம்...., நீ அமைதியா இல்ல...., இப்ப பாரு அவன் யாருனு நமக்கு தெரியல...., சோ, இதுக்கு அப்புறம் பேசி ஒன்றும் ஆகப்போவதில்லை...., பாஸ்ட் இஸ் பாஸ்ட்..., வேல்விழியை பத்திரமா பாத்துக்கோ...., நவ் யூ கேன் லீவ் பிரம் இயர்....", என்றார்.

அவர் கூறிய அனைத்தையும் கேட்ட வேந்தன், அவரைப்பார்த்து அலட்சிய சிரிப்பை சிந்திவிட்டு அங்கிருந்து சென்றான்.

"இப்படி வில்லங்கமா சிரிக்கிறான் என்ன செய்ய போறானோ.... தெரியலை...", என்று புலம்பினார் ஐ ஜி ஞானவேல்.

அதேநேரத்தில் பாண்டியன் அபினவ் அரணவ் ஆகியோர் ஒரு அறையில் கூடியிருந்தனர், வேல்விழியின் இந்த நிலைமைக்கு காரணமான ஒருவனின் வரவுக்காக காத்திருந்தனர், உள்ளே நுழைந்த அந்த புதியவன் "வேல்விழியை... கடத்த அடுத்து என்ன பிளான் பண்ணி இருக்கீங்க...., எனக்கேட்க

அவன் எதிரில் நின்ற பாண்டியன் அபி மற்றும் அர்னவ் அவனுக்கு பதில் அளிக்காமல் அமைதியாக இருந்தனர்.

" உங்களை நான் நம்பினால்.... நான் நடுத்தெருவில் தான் நிற்கணும்....", கோபத்தில் கத்தினான் அந்த புதியவன்.

"நாங்க என்ன சார் செய்யறது...., எது பண்ணாலும் அந்த வேந்தன் எல்லாத்தையும் தவிடுபொடி ஆகிவிடுகிறான்... , அதுமட்டுமில்லாமல், வேல்விழியோட நிழல் மாதிரி கூடவே இருக்கான்....", என்றான் அபி

" இன்றில் இருந்து, சரியா ஒரு வாரம் கழிச்சு வேந்தன் அப்பா அம்மாவோட நினைவு நாள் வருது..., அவன் அன்னிக்கு கண்டிப்பா ஆசிரமத்தில் இருக்க குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்க போவான்...., அன்று அவளை தூக்கி விடுங்கள்...", எனக்கூறி அவர்கள் செல்லலாம் என்பதற்கு அறிகுறியாக தலையசைத்தான்.


வேல்விழி டைரியில் யாரை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள்....

வேள்விழியின் வாழ்வில் இன்னல்களை ஏற்படுத்தும் இந்த புதியவன் யார்......

வேல் விழியை கடத்த இவர்கள் போட்ட திட்டம் நிறைவேறுமா.....


பதில் வரும் பதிவுகளில்.....


நயனங்கள் பேசும்.....





நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
நயனம் 9
பகல்பொழுது கரைந்து இரவு கவிழும் அழகான ஏகாந்த வேளை....

தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு அசையாமல், அதே இடத்தில் சிலை போன்று அமர்ந்திருந்தால் வேல்விழி.

கால்கள் இரண்டும் தரையில் வேரோடி போயிருக்க, மெதுமெதுவாக டைரியின் பக்கங்களை புரட்ட ஆரம்பித்தாள்.

டைரியின் முதல் பக்கத்தில் இருந்த பெண்ணின் வரைபடத்தின் மீது அவள் கண்கள் நிலைகுத்தி நின்றது.

அப்படி என்னதான் இருந்தது அதில், வேந்தன் தன் மனம் கவர்ந்தவளை முப்பரிமாணத்தில் தன் கைப்பட வரைந்து இருந்தான்.

வேந்தனின் மனம் கவர்ந்த பெண்ணின் முகத்தைக் பார்த்து, தன் கண்களை நம்ப முடியாமல், மீண்டும், மீண்டும், அந்த வரைபடத்தை பார்த்து தன்னுள் நிரப்ப விழைந்தாள் வேல்விழி.

மெது மெதுவாக தன் கைகளால் வரைபடத்தை வருடி, "இது...., இந்த....., படம்....., அந்த முகம் தெரியாதவன், எனக்காக வரைந்த படம் தானே, என்னோட.... அகி....எனக்காக வரைந்த படம், இது???? எப்படி இங்க....., வேந்தன் தான் என்னோட அகிலா???? என்னால் இன்னும் கூட நம்ப முடியல..., இன்று வரை என் காதல் தோற்றுப் போய்விட்டது என்று தான் நினைத்திருந்தேன்....,


"இல்லை...., நான் விரும்பியவரை தான் நான் திருமணம் செய்து இருக்கேன், இது எப்படி சாத்தியம்...? என்னை விரும்பின ஒரே காரணத்துக்காக தான் வேந்தன் என்னைத் தேடிவந்து மிரட்டி திருமணம் செய்தாரா...????

"இத்தனை நாள்....இது எதுவும் தெரியாமல்..., நான் எவ்வளவு பெரிய முட்டாளாக இருந்திருக்கேன்....., நிஜம் என்னோட அருகிலேயே இருக்க...., நிழலை நினைத்து உருகி இருக்கேன்.... என வருந்தியவள்,

"உண்மை தெரியாமல், அன்று ஹாஸ்பிட்டலில் அவரை காயப்படுத்தி...., நானே அவர் என்னிடமிருந்து விலக காரணமாகி விட்டேன்...., எனக்கு குண்டடிபட்ட அப்போ நான் அவர் கண்களில் பார்த்த காதல் நிஜம்..., இந்த விஷயம் எதுவும் எனக்கு புரியாமல் போய் விட்டதே....", என தனக்குள்ளே மருகினாள் வேல்விழி.

கண்ணீர் கண்களில் கரை புரண்டோட, அதற்கு மாறாக இதழ்கள் புன்னகையில் விரிந்து இருக்க ஒருவித மோன நிலையில் இருந்தாள். வேல்விழி.


தன் முதல் காதல் அகில் என்னும் வேந்தன் என்பதை கண்டு சந்தோசப்படுவதா, இல்லை, அவனை விட்டு விலகி இருக்க நினைத்த தன் மடமையை எண்ணி நொந்து கொள்வதா, இல்லை, அவனை காயப்படுத்திய தன் புத்தியை கடிந்து கொள்வதா, என பிரித்து அறிய முடியாத நிலையில் இருந்தது வேல்விழியின் மனது.
உனது
கன்னக்குழி...
சிரிப்பில்
என்னை தொலைத்தேன்
தேனடா...

உனது கற்றை
கூந்தல் காற்றில்
அசைந்தடும் பொழுது....

அதில் பாதி
கரைத்தெனடா....

உன்னை காணும்
நொடி இவ்வுலகை
மறந்து....
வேறு உலகில்
வாழ்கிறேனடா....

உனது மீதான
எனது காதலில்
நான் உன்மத்தம்
ஆகி போனேனாடா.....

உன் மீது காதல்
கொண்ட
எனது இதயத்தை
கையாளுவது என்பது
எனக்கு மிக கடினம்.....

எனது நிலை
கேட்காதே...

இவ்வுலகை....

மறந்து உழன்று
கொண்டு இருக்கிறேன்.....
நீ இல்லாமல்
என்னால்
இவ் மண்ணுலகில்
வாழவும் முடியாது....

உயிர் துறக்கவும்
இயலாது....

யார் மீதாவது
காதல் பிறந்து
விட்டால்....
மனதினை
நிலை படுத்துவது...

கடினம் என்று
யான் அறிதேனடா....

உன்னை அன்றி
எனது நிலையை
அறிவார் யாரடா.....
💝
💝
💝

யாரை குற்றம் சொல்லி என்ன பயன் கடந்து போன காலத்தை மீண்டும் பெற முடியுமா என்ன???

டைரியின், அடுத்த அடுத்த பக்கங்களை புரட்ட ஆரம்பித்தவளின் கண்களின் முன் தன் இனிமையான கடந்தகாலம் நிழல் படமாக விரிந்தது, அதேவேளையில் தன் அலுவலகத்தில் இருந்த அகில் வேந்தனும் தன் நினைவு அடுக்கில் புதையுண்ட அவளின் நினைவுகளை இன்னிசை ஆக மீட்ட முயன்றான்.

காலை சூரியன் கடல் அன்னை மடியில் இருந்து துயில் கலைந்து சோம்பல் முறித்து தன் கடமையை சரியாக செய்து கொண்டிருந்தான்.

அரண்மனை போன்று இருந்த அந்த வீட்டில், வழக்கம் போல தன் காலை கடன்களை முடித்து, அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தான் அகில் வேந்தன், வேந்தன் குரூப் ஆப் கம்பெனிஸ் எம்டி, ஆடம்பரத்தையும் விளம்பரத்தையும் விரும்பாதவன், பிசினஸ் உலகில் தன் கால்தடம் பதித்த ஒரு வருடத்தில் அவன் கம்பெனியின் பங்குகள் அசுர வளர்ச்சி அடைந்திருந்தது.


இன்று, நகரின் புகழ்பெற்ற மகளிர் கல்லூரியின் தாளாளர் உடன், கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட ஒப்பந்தம் கையெழுத்திட வேண்டும், என்றுமே இல்லாத வண்ணமாய் ஏனோ, இன்று வேந்தனின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது, தன் இணையை சேரும் இன்பம் ஆக கூட இருக்கலாம்.

யாழ்வேந்தன் - சக்தி தம்பதியிடம் ஆசிகளைப் பெற்றுக் கொண்டு, வேந்தன் குரூப் ஆப் கம்பெனியின் மற்றொரு பார்ட்னராக ராகவன் உடன், புகழ்பெற்ற அந்த மகளிர் கல்லூரியை நோக்கி வண்டியைச் செலுத்தினான் வேந்தன்.

அதிகமான ட்ராபிக்கின் விளைவால் அவன் கார் சிக்னலில் தேங்கி நிற்க, என்ன நடந்தது.... என அறிய காரை விட்டு இறங்கியவன் மீது மோதுவது போன்று டூவீலர் ஒன்று அவனருகில் வேகமாக வந்து கிரீச்சிடும் நின்றது.

"ஏய்...", என கத்தியபடி கோபத்தில் திரும்பிவனின் கண்கள் ஒரு வினாடியில் கோபத்தை விடுத்து ரசனையான உணர்வு ஒன்று தோன்றி மறைந்தது, அவன் கத்தியதால் அதிர்ந்த நிலையில் டூவீலரில் இருந்த அந்தப் பெண்ணை அடிமுதல் நுனிவரை அளவிடும் பார்வை பார்த்தவன் அவள் முகத்தில் தன் பார்வையை நிலைக்க விட்டான்.

தூசி மற்றும் வெயிலுக்கு பயந்து அந்தப் பெண், இரு கண்கள் மட்டும் தெரியும்படி தன் முகம் முழுவதையும் ஸ்காப்பு கொண்டு மூடி மறைத்திருந்தாள்.
ஏதோ, ஒரு சுழலுக்குள் சிக்கியது போன்ற உணர்வு, ஆம் அவள் கண்கள் அவனை முடிவே இல்லாத பிரபஞ்சத்திற்குள் இழுத்துச்சென்றது, கருமைநிற வானமும் நிலவும் சந்திக்கும் ஒற்றைப் புள்ளி, அது எல்லையில்லாத கடலும் வான்வெளியில் சந்திக்கும் முடிவில்லாத ஒற்றைப் புள்ளி, அது அண்ட சராசரங்களை அடக்கியாளும் ஒற்றைப் புள்ளி, அது உதிக்கும் கதிரவனையும் மறையும் நிலவையும் குறிக்கும் எல்லையில்லாத முடிவிலி அது.


தனக்குள் உறைந்து நின்றவனின் சிந்தனையை, "சாரி சார், நீங்க காரை விட்டு இறங்கியதை நான் பார்க்கவில்லை....", என்ற அவளின் தேனினும் இனிய குரலில் கலைத்தது.

கண்டதும் காதல் என்றால் கிண்டல் செய்பவன், தன் எதிரில் இருத்த பெண்ணின் மீன் போன்ற மருண்ட மான் விழியிலும், தேனினும் இனிய குரலிலும், வில் போன்ற வளைந்த புருவத்திலும் தன் மதியை அவள் வசம் இழந்து கொண்டு இருந்தான் அந்த ஆறடி ஆண்மகன்.

ட்ராபிக் முழுவதுமாக அகன்று விட்டதால், ராகவன் வேந்தனை பார்த்து "அகில்..., இட்ஸ் கெட்டிங் லேட்...", எனக்கூற, அவன் கூறிய அனைத்திற்கும் தலையை ஆட்டியபடி, தன் எதிரில் இருந்த அந்தப் பெண்ணை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதற்குள், அந்த டூவீலர் சொந்தமான பெண், தன் வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்திருந்தாள், அவள் நகர ஆரம்பித்தவுடன், அவள் கழுத்தைச் சுற்றியிருந்த துப்பட்டா காற்றில் அசைந்தாடி வேந்தனின் முகத்தை பட்டும் படாமல் தீண்டிச் சென்றது.

அதிலிருந்து வந்த சுகந்த நறுமணம், அவன் மூளையை செயலிழக்கச் செய்ய, அனிச்சை செயலாக, அவன் மூளை நறுமணத்துக்கு உகந்த நங்கையை தேடச் சொல்லி கண்களுக்கு ஆணையிட்டது, கண்களை மூடி அந்த நறுமணத்தை ஆழ்ந்து சுகித்தவன், நறுமணத்திற்கு உரிய, தன் மனம் கவர்ந்தவளை தேட, அவள் அவனின் பார்வை வட்டத்திற்குள் விழவே இல்லை.

தன் நுரையீரல் நுகர்ந்த நறுமணம், எங்கோ??? எப்பொழுதோ??? யாரோ ஒருவரால் சிறுவயதில் அவன் முகர்ந்த அதே நறுமணம், ஆம், அந்த நறுமணம் அவன் அன்னையிடம் சிறுவயதில் அவன் முகர்ந்த நறுமணம் என்பதை அவன் மூளை சில வினாடிகளில் கண்டு கொண்டது. இவை அனைத்தும் சில கணங்களில் நடந்து முடிந்துவிட்டது.

மனம் முழுவதும் அலைப்புறுத்தலுடன், தன் மனம் கவர்ந்த அவளை எண்ணிக்கொண்டே, தன் காரை குறிப்பிட்ட அந்த கல்லூரியை நோக்கி செலுத்தினான் வேந்தன்.

தாளாளரை சந்தித்து, கட்டிடம் குறித்த தேவைகளை விலக்கி, ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும் பொழுது நேரம் மதியத்தை நெருங்கியிருந்தது.

மீட்டிங்கை முடித்துக்கொண்டு, கல்லூரியின் கிரவுண்டை கடந்து பார்க்கிங் ஏரியாவுக்குள் செல்வதற்குள், கருமேகம் திரண்டு மழை வலுக்க துவங்கியிருந்தது.

மழை விட்டவுடன் செல்லலாமென கார் பார்க்கிங் வாசலில் நின்று கொண்டு இருந்த வேந்தனின் கண்களில் விழுந்தது அந்த காட்சி.

மழைத் துளிகள் பன்னீர் பூக்களாக அவள் மீது பட்டு தெறிக்க, மழையில் மயில் போன்று தோகை விரிந்து நனைந்து நனைந்து கொண்டிருந்தாள் வேல்விழி, நெற்றியில் இருந்து புறப்பட்ட மழைநீர் அவள் கூந்தலில் வழிந்து தரையை தழுவி மோட்சம் அடைய, ஒரு வினாடி அவளின் கண்களை ஆழ்ந்து நோக்கி அவனின் உலகம் ஸ்தம்பித்து நின்றது.

காலைலிருந்து, அவனை சுழலின் இழுத்து விட்டதைப் போன்று ஈர்த்த அதே கண்கள், சிரபுஞ்சி காடுகளில் பொழியும் மழைத்துளி போன்று அவளின் அழகு சொட்டு சொட்டாக அவனை ஈர்த்து, அவனுள் இறங்கியது.

காதல் காணும் கணம் கண்களில் தொடங்கி, மனதில் நுழைந்து தடைகளை வென்று, இரு மனங்களின் சங்கமத்தில் முடி உருவதால் தான் காதல் என்று பெயரிட்டனரோ என்னவோ.....

ஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல், அவளை ரசிப்பது தவறு, என அவன் மூளை இடித்துரைக்க, இல்லை..... இல்லை....அவள் எனக்கு மட்டும் சொந்தமானவன்.... என அவன் மனம் எடுத்துரைக்க, அவள் மீதிருந்து கண்களை அகற்ற முடியாமல் தவித்தான் வேந்தன்.

மழை விட்ட பின்பு, வேல்விழி அந்த இடத்தை விட்டு அகன்று விட வேந்தனின் மனம் முழுவதும் அவள் எண்ண ஊர்வலங்களே.....

யுகம், யுகமாய், அவளுடன் வாழ்ந்த ஒரு உணர்வு அவனுள், கனவுலகில் சஞ்சரிப்பவன் போன்று சுற்றிக் கொண்டு இருந்தவன் எப்படி அலுவலகம் வந்து அடைந்தால் என்பதை அவனே அறியான்.

அவன், ஏங்கே வந்தான், ராகவன் அல்லவா மந்திரித்து விட்டவன் போன்று சுற்றிக்கொண்டிருந்தவனை அலுவலகத்திற்கு இழுத்து வந்தது.

அலுவலகத்தில் இருக்கும் தன் அறைக்கு வந்த பின்பும், புறவுலகில் சிந்தனையின்றி இருந்தவனை, ராகவன் தான் உலுக்கி இயல்புநிலைக்கு வர வைத்தான்.


"வாட் ஹாப்பேன் வேந்தன்...., வொய் யூ பிகேவ் லைக் திஸ்...., மார்னிங்ல இருந்து நானும் பாக்குறேன்....உன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு கூட தெரியாமல், நீ பாட்டுக்கு சுத்திவர என்னாச்சு உனக்கு.....",எனக்கேட்க தலையை உலுக்கி தன்னை சமன் செய்தவன்,

"நத்திங்....", எனக்கூறிவிட்டு எதில் இருந்து தப்பிப்பது போன்ற வீட்டுக்கு ஓடினான்.

வீட்டுக்கு வந்த பின்பும் வேல் விழியின் நினைவுகள் அவனை விட்டு நீங்கவில்லை, உள்ளுக்குள்ளே இருந்து அழிக்கும் ஆட்கொல்லி நோய் போன்று, அவளின் நினைவுகள் அவனின் இரவுகளைக் தின்று, அவனை கொஞ்சம் கொஞ்சமாக கொன்றது.


"அவள் மீது எனக்கு இருப்பது..... வெறும் ஈர்ப்பு மட்டும்தான்....", எனத் தனக்குத் தானே அறிவுறுத்தி கொண்டு, அவளின் நினைவுகளை புறந்தள்ளி புறக்கணிக்க முயன்றவளின் முயற்சி எல்லாம் விழலுக்கு இறைத்த நீரானது.

நயனங்கள் பேசும்.....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Top Bottom