Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நான் என்பதே நீயல்லவா - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
1


மாவட்ட குடும்ப நீதிமன்றம்…வளாகம்
கோவை‌மாவட்டம்.


நீதிமன்ற வளாகத்தில் உள்ளே இருந்த ஒரு கட்டண கழிப்பறையின் உள்ளே இருந்து தண்ணீர் சத்தத்தையும் மீறி



ஒரு பெண்ணின் அழுகை சத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது



அந்த அழுகையில் வலி மட்டுமே நிறைந்திருந்தது அந்த வலிக்கு யாராலும் மருந்து இட முடியாது


என்பது மறைமுகமாக அந்த அழுகையில் தெரிந்தது


கழிப்பறை யை உபயோகப்படுத்த உள்ளே வந்த ஒரு பெண்மணியோ அழுகை சத்தத்தை கேட்டு ஒரு நிமிடம் பயந்தவர்



பிறகு எந்தக் அறையிலிருந்து அந்த சத்தம் வருகிறது என கண்டு பிடித்தவர் அந்த அறையின் கதவை மெதுவாகத் தட்டினார்


திடீரெனத் தண்ணீர் சத்தம் நின்றது அழுகை சத்தமும் நின்றது அடுத்த சில வினாடிகளிலேயே உள்ளிருந்து பவித்ரா வெளியே வந்தாள் இருபத்தி ஆறு வயது அழகிய வட்ட முகம்,மாநிறம்,துறுதுறு கண்கள்,குட்டையும் அல்லாது வளர்த்தியும் அல்லாத ஐந்தேகால் அடி உயரம், சற்று பூசிய தேகம் அடர்த்தியான குட்டையான கூந்தல் அதை நன்கு இறக்கி போனிடெய்ல் போட்டிருந்தாள்,நெற்றியில் கோபி ஸ்டிக்கர் பொட்டு ,திருமணம் ஆனதற்கு அடையாளமாக கழுத்தில் பொன் தாலியும் கால்களில் மெட்டியும் ,வகிட்டில் சிறிய அளவு குங்குமம் இருந்தது.

அழுததின் காரணமாக கண்களும் மூக்கும் சிவந்து காணப்பட்டது.


வெளியே வரவும் அந்த பெண்மணி இவளை ஆச்சர்யத்துடன் பார்க்க பவித்ரா அவரை கண்டுகொள்ளாமல் அங்கிருந்த வாஷ்பேஷனில் முகம் கழுவ வந்தாள்.


தண்ணீரின் அளவை வேகமாக திருகிவிட்டாள்.


பிறகு இரு கைகளாலும் தண்ணீரை பிடித்தபடி முகத்தில் இடைவிடாது அடிக்கத் தொடங்கினாள் இப்பொழுது மௌனமாக தண்ணீருடன் அவளின் கண்ணீரும் வெளியேறத் தொடங்கியது.


பலமுறை முகம் கழுவியும் கூட அவள் அழுத தடயத்தை மறைக்க முடியவில்லை...முகத்தை அழுத்தி துடைத்தவள் ,நெற்றியில் இருந்த பொட்டை சரி செய்தாள்,வகிட்டில் இருந்த குங்குமத்தில் சற்று தண்ணீர் வைத்து முற்றிலும் அழித்தாள். ஆனாலும் பல நாட்களாக அந்த இடத்தில் வைப்பதால் குங்குமம் வைக்கும் அடையாளம் இருக்க அதை கண்டதும் தானாக கோபம் வந்தது.கோபமாக தலையில் மாட்டியிருந்த ரப்பர் பாண்டை கழட்டினாள்.

பிறகு தலைமுடியை பிரித்து வகிட்டை மறைப்பதுபோல் விரலாலே சைடாக வகிரெடுத்தவள் அந்த தடயத்தை மறைத்து
மீண்டும் தலை மூடியை ரப்பர் பாண்டால் இறுக்கி கட்டினாள்.
புடவையை சரிசெய்தவள் பாத்ரூமை விட்டு வெளியே வந்தாள்.


பாத்ரூம் வாசலில் கட்டணம் வசூலிக்கும் பெண்மணியிடம் இருந்த தன்னுடைய தோள் பையை வாங்கிய பவித்ரா அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து அப்பெண்ணிடம் நீட்ட அவரோ சிரித்தபடியே பெற்றுக் கொண்டு

போன் ரொம்ப நேரமா கத்திக்கிட்டே இருந்துச்சும்மா என்று கூற

அவசரமாக பேக்கில் இருந்து தன்னுடைய மொபைல் போனை எடுத்து பார்த்தாள்.


அவளின் தம்பி வெங்கட் மூன்று முறை அழைத்து இருந்தான்.


உடனே இவள் வேகமாக தம்பிக்கு ஃகால் செய்து அழைக்க இவள் ஹலோ சொல்லி முடிக்கும் முன்னே எதிர்முனையில் இருந்த அவனது தம்பி வெங்கட் நாராயணன் வேகமாக பேச ஆரம்பித்தான்.


பவி நீ எங்க இருக்க... பாத்ரூம் போய்ட்டு வர இவ்ளோ நேரமா….இங்க லன்ஞ் டைம் முடிஞ்சது ஜட்ஜ் சார் வந்தாச்சி உன்ன இன்னும் காணோம் அடுத்து நம்ம கேஸ் தான் சீக்கிரம் வா வக்கீல் உன்னத் தேடறாங்க என்று கூற



இவளோ இதோ இப்போ வர்றேன்
இங்க கூட்டமா இருந்தது அதான் லேட் இதோ வர்றேன் என்று ஃபோனை ஆஃப் செய்து வைத்தவளுக்கு நீதி மன்றத்துக்குள் செல்லும் மன வலிமை இல்லை அவளுக்கு கண்டிப்பாக தெரியும் என்ன தீர்ப்பு வரும் என்று அதை தாங்கி கொள்ளும் வலிமை அவளுக்கு இப்பொழுது அவளுக்கு இல்லை... இருந்தாலும் செல்ல வேண்டுமே என்று அங்கிருந்து கிளம்பினாள்.சில மீட்டர் தூரம் நடக்க வேண்டும் வளாகத்திற்குள் செல்ல ஆனால் அவளால் எளிதாக செல்ல முடியவில்லை.


பல குழப்பங்கள்,காலையிலிருந்து சாப்பிடாததால் ஏற்பட்ட சோர்வு,நிதானம் இல்லாத நடை,கண்ணை விட்டு பாதை மறைய சற்று தலைசுற்றுவது போல் தோண்ற தலையில் கை வைத்த படி அங்கேயே சற்று நிற்க பூமி காலை விட்டு நகர்வது போல் தோண்றியது ‌ தள்ளாடியபடியே நடந்து சென்றாள்

அப்பொழுது ஒரு சொகுசு கார் ஒன்று அவள் கால் அருகே வேகமாக வந்து சடன் பிரேக் போட வினாடியில் பவித்ரா பயப்பட்டு வேகமாக நகர்ந்தவள் கோபத்துடன் வளாகத்திற்குள் யார் இவ்வளவு வேகமாக வண்டி ஓட்டி வருவது என தெரிந்துகொள்ள திரும்பிப் பார்த்தாள்.



இவளின் கோபத்தை தூசியாக மதித்தபடி ரிஷிகேஷ் நக்கலான பார்வையுடன் காரை விட்டு வெளியே வந்தான்.ரிஷிகேஷ் வயது இருபத்தி ஒன்பது...பவித்ராவின் முன்னால் கணவன்... மிகப்பெரும் பணக்காரன்
அவன் போடும் காலணியில் இருந்து தலையில் தேய்க்கும் ஹேர் ஆயில் வரை தரம் பார்ப்பவன்…

அவனைக் கண்டதும் மேலும் பயந்தவள் நீதிமன்றங்களுக்கு உள்ளே வேகமாக ஓடினாள்

இயலாமையுடன் ஒடும் அவளையே வேதனையுடன் பார்த்த ரிஷிகேஷூம் அவளின் பின்னே சென்றான்.

நேராக ஓடிய பவித்ரா அவளின் தம்பி வெங்கட்டின் மீது பலமாக மோத


அவளைப் பிடித்து நிறுத்தியவன்

என்னாச்சு பவி எதுக்கு இப்படி ஓடி வர்ற…



அங்க... அங்க... என்று திணறியபடி அவள் கையை காட்ட

அங்க யாரு என்று என்று நின்ற இடத்தில் இருந்தே வெங்கட் எட்டிப் பார்க்க உள்ளே கம்பீரமாக பளீரென்ற வெள்ளை சட்டையும் கருப்பு கலர் டெனிம் ஜீன்ஸூம் அணிந்த படி
அந்த இடத்திற்க்கும் அவனின் ஆரம்பரத்திற்க்கும் சற்றும் சம்மந்தமில்லாமல் ரிஷிகேஷ் அவனுடைய வழக்கறிஞர்கள் படையுடன் வந்து கொண்டிருந்தான்.


அவர் வந்தா என்ன ?
நீ ஏன் இப்படி பயப்படற என்று கோபபட்டவனிடன்

இல்ல வெங்கி அவர் வர்ற வேகத்திலேயே தெரியுது இங்க நமக்கு நியாயம் கிடைங்காதுன்னு இது வரை ஒருமுறை கூட இங்க வந்ததில்ல இன்னைக்கு வர்றாங்க அதும் கடைசி
நாளான தீர்ப்பு அன்னைக்கு
ஒரு முறை ஏன் வரலனு ஜட்ஜ் கூட கேக்கல எனக்கு பயமாயிருக்கு வெங்கி என்று அழத்தொடங்கினாள்.


அழாத பவி அவர் முன்னாடி அழுது நம்மள நாமே இறக்கிக்க கூடாது என்ன வந்தாலும் சரி இங்க நியாயம் கிடைக்கலனா நா மேல்முறையீடு பண்ணலாம் பயப்படாத என்று ஆறுதல் கூறினான்.

அதற்குள்ளாகவே ரிஷிகேஷ் அவன் படையுடன் இவர்களை கடக்க இவர்களின் வக்கீல் கூட அவனையும் அவனுடன் வந்த வக்கீல்களை பார்த்து மரியாதை செலுத்து வெங்கட்டுக்குமே தன்னம்பிக்கை போகத் தொடங்கிவிட்டது.

செல்லும் அவனை கலக்கத்துடன் பார்த்துகொண்டிருந்த பவித்ரா அவளின் தம்பியின் கைகளை பிடிமானத்தை கெட்டியாக பிடித்துக்கொள்ள இவர்களின் வக்கீல் இவர்களிடத்தில் வந்தபடி வாங்க நாமளும் உள்ள போகலாம் என்று அழைத்துச் சென்றார்.

உள்ளே இவர்களின் வழக்கு வந்தது…
பவித்ரா எதிர்பார்த்த தீர்ப்பு தான் வந்தது ஆனாலும் அதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை
அங்கேயே கத்தி அழ ஆரம்பித்தாள்

அவளின் அழுகையை கண்டுகொள்ளாமல் கடந்து சென்ற ரிஷிகேஷிடம் வந்தவள்

நீங்க சொன்னது போல சாதிச்சிட்டிங்கல்ல போங்க போய் உங்க சந்தோஷத்தை கொண்டாடுங்க ஆனா கண்டிப்பா என் கண்ணீருக்கு நீங்க பதில் சொல்லனும் என்று கூற


அழுது கொண்டே பேசும் அவளை மௌனமாக பார்த்துக்கொண்டு. இருந்த ரிஷிகேஷோ


மெதுவான குரலில் சாபம் விடறியா பவி பலன் கிடையாது இந்த காலத்துல ரொம்ப நல்ல பொண்ணுங்க சாபம் கொடுத்தாலே பழிக்கறது இல்லை அதுவும் உன்னை மாதிரி பெண் சாபம் கொடுத்தால் அது அந்த சாபத்துக்கு தான் இழுக்கு ப்ளீஸ் வழிவிடு என்றவனிடம்


மறுபடியும் மறுபடியும் என்னோட கேரக்டர் மென்ஷன் பண்ணாதீங்க நீங்க ரொம்ப ஒழுக்கம் மாதிரி என்னோட கேரக்டரை குறை சொல்றீங்க


ஆமா பவித்ரா நான் ஒழுக்கம் இல்லாதவன் தான் அதனால்தான் சுலபமா உன்னையும் சொல்ல முடியுது நான் ஒழுங்கா இருந்திருந்தா இப்படி என் முன்னாடி எல்லாம் நீ நின்னு கத்திக்கிட்டு இருந்திருக்க மாட்ட என்று மிகவும் பொறுமையாக கூற


மறுபடியும் சொல்லறேன் என்னை ஒழுக்கம் இல்லாதவ மாதிரி பேசாதீங்க


நான் எப்போ அப்படி சொன்னேன் பவி நீயே கற்பனை பண்ணிக்கிட்டு
பேசறதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்


பொய் சொல்லாதீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன்ன மாதிரி பொண்ணுங்க எல்லாம் சாபம் கொடுத்தா பலிக்காதுனு சொன்னிங்கல்ல


ம்ம்... சொன்னேன் உன்ன மாதிரி பொண்ணுனு சொன்னேன் அதுக்கு நீ எந்த அர்த்தம் வேணாலும் போட்டுக்கலாம் உன்ன மாதிரி பொண்ணுனா உன்ன மாதிரி பொண்ணு தான் அர்த்தம் நீ என்ன அர்த்தம் எடுத்துக்கறனு எனக்கு தெரியாது என்று அவளுக்குப் புரியாதவாரு பேச


ச்சே எப்பவுமே இதான உங்க பிரச்சினை
வாய்க்கு வந்தபடி பேசி விட வேண்டியது அதுக்கப்புறமா அதை அப்படியே எதிர்ல இருக்கறவங்க மேல திருப்பி விட வேண்டியது உங்களைப் பற்றி தெரிந்தும் வந்து பேசுறேன் பாருங்க என்ன சொல்லணும் என்று குறைபட


பார் பவித்ரா இப்போ நீதான் வந்து என் கிட்ட பேசினது இப்ப கூட கோர்ட்டு தீர்ப்பை மதிக்காம நீ என்கிட்ட வந்து சண்டை போடுறனு என்னால மறுபடியும் உன்மேல கேஸ் போட முடியும்...என்ன கேஸ்னு யோசிக்கறீயா
நீதிமன்ற அவமதிப்பு கேஸ் அந்த அளவுக்கு என்னை கொண்டு போக மாட்டேனு நினைக்கிறேன் வழியை விடு என்று அவளை தாண்டி ரிஷிகேஸ் செல்ல அவன் பின்னே அவனின் வழக்கறிஞர் படைகளும் அவனின் அடிபுடிகளும் பின்னே ஓடத் தொடங்கினர்.


அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லையே என்ற கோபத்திலும் தனது கையாலாகாத தனத்தையும் நினைத்து பவித்ரா அங்கேயே முகத்தை மூடியபடி அழத்தொடங்கினாள்



வளாகத்தின் மற்றொரு இடத்தில் வெங்கட் அவர்களின் சார்பாக வாதாடிய வழக்கறிஞரிடம் கடுமையாக சண்டையிட்டு கொண்டிருந்தான்


சார் நீங்க வேணும்னு தானே விட்டு கொடுத்துட்டீங்க இத்தனை நாள் வாய்தாவா வாங்கீனிங்க இன்னைக்கு ரிஷிகேஸ் வந்துட்டாருனு நீங்க வாயே திறக்கல

நம்ம கிட்ட அவ்ளோ பாயிண்ட்ஸ் இருந்தும் கூட நீங்க ஒரு பாயின்ட்ஸ் கூட எடுத்து வைக்கல ஒரு பாயிண்ட்ஸ் எடுத்து வைத்திருந்தா கூட கேஸ் நமக்கு சாதகமாக இருந்திருக்கும் உங்க மௌனத்தால இன்னிக்கி என் அக்காவோட நிம்மதி கேள்விக்குறி ஆயிருச்சு

கோபப்படாதீங்க மிஸ்டர் வெங்கட் இப்போ ஒன்னும் இல்ல இந்த கோட்டுல இல்லைன்னா நம்ம மேல் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வோம் அங்கு கண்டிப்பா நமக்கு பேவரா தான் இருக்கும்

அவரின் பேச்சை கேட்டு கோபமடைந்த வெங்கட் இருகைகளாலும் கூம்பிட்ட படி வேணாம் சார் போதும் உங்களால நாங்க பட்டது


ஆறு மாசத்துல முடிக்கவேண்டிய கேஸை ரெண்டு வருஷம் இழுத்து அடிச்சிருக்கீங்க பெரிய தப்பு பண்ணிட்டேன் உங்கள நம்பி வந்து
இனியும் உங்களை நம்பி ஏமாற நான் தயாரா இல்ல

இதை எப்படி சரி பண்ணனும்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிலாம்ல ரிஷிகேஷ் எதிர்த்து ஆஜர் ஆக மாட்டேன்னு
சைலன்ட்டா இருந்து எங்க கழுத்த அறுத்துட்டிங்களே இனியாவது செய்கிற வேலைக்கு கொஞ்சமாவது நியாயமா நடந்துக்க பாருங்க உங்களை நம்பி ஒருத்தன் வர்றான்னா அவன் முழுசா உங்கள மட்டும் தான் நம்பி வரான் இப்படி பாதியில கைவிடாதீங்க சார்


இதுக்கு நியாயம் அவங்க பக்கம் இருந்து நீங்க அவங்களுக்கு பேவரா செயல்பட்டு இருந்தா கூட உங்களை நான் மன்னித்து இருப்பேன் ஆனால் அநியாயம்னு தெரிஞ்சும் அவருக்கு துணை போய்ட்டீங்க இல்ல நல்லா இருங்க சார் உங்களோட பேலன்ஸ் பீஸ் உங்களைத் தேடி வரும்


அவர்கிட்ட நீங்க எவ்வளவு பணம் வாங்கினீங்களோ அதுகூட சேர்த்து எங்களோட பணத்தையும் வெச்சுக்கோங்க ஏன்னா அந்தப் பாவப்பட்ட பணத்துல உங்களால ஆடம்பர வாழ்க்கையை வேணா வாழ முடியும் ஆனா எங்கள மாதிரி நியாயவாதிகளோட பணத்தால் தான் உங்களால நிம்மதியா ஓருவேளையாவது சாப்பிட முடியும் என்று கூறியவன் தனது தமக்கையை தேடி செல்ல ஆரம்பித்தான்

தொடரும்...
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
2


தனது அக்காவை தேடிக்கொண்டு வந்த வெங்கட் தனிமையில் அமர்ந்து முகத்தை மூடி குலுங்கி குலுங்கி அழும் பவித்ராவுக்கு ஆறுதல் சொல்ல வழி தெரியாமல் வேகமாக அவளின் அருகில் வந்து அமர்ந்தான் ஆறுதலாக அவளின் தோளில் கையை வைத்து அழாத பவி …


நீ இப்படி அழவா நாங்க எல்லாரும் இவ்ளோ போராடிக் கொண்டிருக்கோம் இந்த கோர்ட்டு இல்லனா என்ன பவி நாம மேல் கோர்ட்டில அப்பீல் பண்ணுவோம் வேற ஒரு நல்ல லாயர பிடிக்கலாம் இன்னும் நீதி நேர்மை எல்லாமே உயிரோடு தான் இருக்கு பவித்ரா

அவரோட பணத்துக்கு இங்க இருந்த சிலர் வேணும்னா அடிபணிந்து இருக்கலாம் இன்னும் நிறைய நல்லவங்க இருக்காங்க பாத்துக்கலாம் நீ கவலைப்படாதே உன் தம்பி நான் இருக்கேன் என்னை நம்பு என்று கூறினான்.


அவனின் நெஞ்சு மேல் சாய்ந்த அவள் அழுதபடியே இல்ல வெங்கி எனக்கு நம்பிக்கையே போச்சு அவர் நினைச்சிருந்தா இவ்வளவு தூரம் அலைய வச்சிருக்க வேண்டியதே இல்ல எப்பவோ நான் கேட்டத கொடுத்து இருக்கலாம் ஆனா கொடுக்க மாட்டேன்னு என்னை இவ்வளவு தூரம் அலைய வெச்சு இன்னைக்கு என் மூஞ்சில கரியை பூசின மாதிரி நீ எங்க போனாலும் உனக்கு தோல்விதான் கிடைக்குனு சொல்லாமல் சொல்லிவிட்டார் இந்த மனுஷனை நான் என்னடா பண்ணினேன் ஏன் டா இப்படி துரத்தித் துரத்தி அடிக்கிறாரு நான் என்னடா தப்பு பண்ணிட்டேன் ஏன்டா இந்த பாடு படுத்துகிறார் என்று
அவனைப் பார்த்துக் கேட்டாள் .


பவி புரியுது நீ எவ்ளோ நல்ல பொண்ணுனு எனக்கு தெரியாதா ஆனால் இங்கு உட்கார்ந்து புலம்பிக் எந்த பிரயோஜனமும் இல்ல


பாரு போறவங்க வர்றவங்க நம்மள தான் பார்த்துக்கிட்டு இருக்காங்க இங்க இது முடிஞ்சுது இனி இதை பத்தி இங்க பேசுறது தப்பு

மேற்கொண்டு பேசினா அது நம்மளை நாமளே காயப்படுத்திக்கறதுக்கு சமம் இதுக்கு அப்புறம் என்னனு தான் நாம பாக்கணும் வா இப்போ வீட்டுக்கு போலாம் என்று கூறியவன் பவித்ராவை ஆறுதலா அணைத்துப் பிடித்தபடி வெளியே அழைத்து வந்தான்

பவி இங்கேயே வெயிட் பண்ணு நா என் டூ வீலர் எடுத்துட்டு வரேன்
என்று கூறிய வெங்கட் அவனின் இருசக்கர வாகனத்தை நோக்கி சென்றான்


செல்லும் அவனையே பார்த்துக் கொண்டிருந்த பவித்ராவிற்கு கண்களில் தானாக கண்ணீர் பெருகத் தொடங்கியது தனக்கு தம்பியாக பிறந்ததை தவிர வேறு எந்த தவறுமே செய்யவில்லை அவளைவிட சரியாக பதினைந்து மாதங்கள் மட்டுமே இளையவன் இருபத்தி ஐந்தின் தொடக்கத்தில் இருக்கிறாள் ஆனால் அவனுக்கு தான் எவ்வளவு பிரச்சனைகள் யோசிக்காமல் இவள் எடுத்த ஒரே ஒரு முடிவு இன்று வரை அவளின் குடும்பத்தை பாடாய்படுத்துகிறது

தம்பி வரும் வரை அங்கிருந்த ஒரு மரநிழலில் அமரலாம் என்று நினைத்த பவித்ரா ஓரு இடத்தை தேர்ந்தெடுத்து அப்படியே சாய்ந்து அமர்ந்தாள்

சிறிது நேரத்திற்கெல்லாம் வெங்கட் அவனின் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வந்தவன் பவியை பார்த்து ஹாரன் அடித்துக்கொண்டே இருக்க பவித்ரா அதை கவனிக்காமல ஏதோ ஒரு ஞாபகத்தில் உழன்று கொண்டு இருந்தாள்


ஹாரன் அடித்து சலித்தவன் வண்டியை விட்டு இறங்கி பவித்ராவின் தோளில் கைவைத்து பவி என்று அழைக்க திடுக்கென பயந்தவள்


ஹான்... என்று முழித்தாள்.

என்ன ஆச்சு எவ்வளவு நேரமா ஹாரன் அடிக்கிறது எல்லாரும் நம்மள தான் வித்தியாசமா பார்க்கிறாங்க வண்டியிலே வந்து உக்க்காரு என்றபடி மீண்டும் வண்டியில் ஏறி அமர்ந்தபடி வண்டியை இயக்கினார்.



பிறகு
ஹேய் வண்டியை ஒழுங்கா புடிச்சு உக்காருவெல்ல முடியாதுனா சொல்லிடு ஆட்டோ புடிச்சிக்கலாம் போகும் போது இதே மாதிரி ஏதாவது யோசிச்சுகிட்டு கீழ விழுந்துட மாட்டியே என்று கவலையாக அவளிடம் கேட்க


ல்ல….நான் மேனேஜ் பண்ணிபேன் ஆட்டோலாம் வேணாம் என்றபடி வாகனத்தின் பின்னால் ஏறி அமர்ந்தவளிடம்

நல்லா வண்டியை புடிச்சிக்கோ என்றவன் நம்பிக்கை இல்லாமல்
பவி நீ என்ன புடிச்சிக்கோ என்று அவளின் ஒரு கையை பிடித்து தன் வயிற்றோடு சேர்த்து வைத்துக் கொண்டான் அவனின் பாசத்தில் கண்கலங்க


உனக்கு நான் ரொம்ப கஷ்டம் கொடுக்கறேன்ல்ல வெங்கி…


ம்ம்...கஷ்டமா என்ன பேச்சி பேசற பவி...நீ யாரோ ஒருத்தி இல்ல என் அக்கா...உனக்கு ஒரு பிரச்சினைனா‌ அது எனக்கும் சேர்த்துதான்
ப்ளீஸ் பவி இனி இப்படி பிரித்து பேசாத... இதெல்லாம் நீ வேணும்னு பண்ணினதா சொல்லு இல்லல... எல்லாமே தானா நடக்குது நீ தெரியாம மாட்டிக்கிட்ட இந்த பிரச்சினையிலிருந்து உன்னை வெளியே கொண்டு வர்றது என்னோட கடமை எதப் பத்தியும் யோசிக்காம ஒழுங்கா என்னை புடிச்சிட்டு உக்காரு என்று கூறியவன் வண்டியை வேகமாக ஓட்டத் தொடங்கினான்.


வழக்கில் வெற்றி பெற்றாலும் பெரியதாக எதையும் அலட்டிக் கொள்ளாமல் வீடு வந்து சேர்ந்தான் ரிஷிகேஷ்…

அவனின் பங்களா மாவட்டத்தின் நடுபகுதியில் பணக்கார வர்க்கத்தினர் குடியிருக்கும் பகுதி…
ஒரு தெருவின் பாதி அளவிற்கு இருந்தது அந்த பங்களாவின் காம்பவுண்ட்


காம்பவுண்ட் உள்ளே மொத்தம் மூன்று பங்களாக்களும் ஒரு அவுட் கவுஸ் ஒன்றும் உண்டு


ஒன்றில் ரிஷிகேஷ்,அவனது தாயார் மேனகா,தந்தை பழனி இருக்க மற்றொன்று அவனின் சகோதரியான விஜி அவளது கணவன் ராமன் மற்றும் அவளது ஆறு வயது பெண் வர்ஷினி முவரும் இருக்க மூன்றாவது பங்களாவில் தாயாரின் தங்கையின் குடும்பம் இருக்கிறது அதாவது அவனது சித்தி ராதா சித்தப்பா ராஜன் மற்றும் தம்பி ராகவ்,தங்கை ராகவி …


அவுட் ஹவுஸ் பொதுவாக வரும் விருந்தினர்கள் அணைவரும் தங்குவதற்காக தாய் மேனகா பரம்பரை பணக்கார குடும்பம் அவருடன் பிறந்தவர் ராதா குடும்ப சொத்தில் இருவருக்கும் சரிசமாக பிரித்து கொடுக்க மேனகாவின் இடத்தில் இவர்கள் இரு பங்களா கட்டிக்கொள்ள தங்கையோ அவரும் இவங்களை போலவே ஓரு பங்களாவும் கட்டிக்கொண்டு கொசுறாக அவுட் கவுஸ்- ம் கட்டியுள்ளார்

பொதுவாக அந்த வீட்டிற்கு எந்த ஆண்கள் திருமணமாகி வந்தாலும் அந்த வீட்டை பொருத்தவரை செல்லாக்காசு தான் பெண்கள் ராஜ்ஜியம் அதிகம்.


பெண்ணை வெளியில் கட்டிக் கொடுத்தால் மகளை பிரிந்து கஷ்டப்படுவார் என்று யோசித்த மேனகா வீட்டோடு மாப்பிள்ளையாக மணமகனை தேடினார் ஆனால் ரிஷி தான் வீட்டோடு மாப்பிள்ளை என்றால் சகோதரிக்கு மரியாதை இருக்காது என்று கூற


மகளை வசதியான இடத்திற்கு கட்டி கொடுப்பதுபோல் கட்டிக்கொடுத்து விட்டு சில நாள் கழித்து

தனித்குடித்தனம் என்ற பெயரில் மகளுக்கு தனியாக பங்களா கட்டிக்கொடுத்து தங்கள் வீட்டிற்கு உள்ளேயே வைத்துக் கொண்டனர்.


இவர்களின் குடும்பம் கால்பதிக்காத
தொழிலே கிடையாது...தந்தை பழனி திறமையானவர் வீட்டோடு மாப்பிள்ளையாக வந்தாலும் இவர்களின் தொழிலை எல்லாம் நன்றாகவே வளர்த்தி விட்டார்…


பிறப்பிலே ரிஷி பணத்தோடு பிறந்தவன் வளர வளரவே குடும்ப தொழில்கள் அனைத்தையும் தந்தையுடன் சேர்ந்து கத்துக் கொண்டவன் இப்பொழுது தனியாக புதிய பல தொழில்களில் கால் பதிக்க தொடங்கி விட்டான்…


அவனை பொருத்தவரை வேண்டும் என்று நினைத்து விட்டால் எந்த எல்லை வரை வேண்டுமானாலும் அதை அடைவதற்காக பொறுத்துக் கொண்டு போவான் அதுவே வேண்டாம் என்று நினைத்து விட்டால் அது எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தாலும் சரி எத்தனை கோடி லாபம் கொடுக்கும் தொழிலாக இருந்தாலும் சரி சட்டென தூக்கி வீசி விடுவான்…



இப்பொழுது நீதிமன்ற வழக்கின் தீர்ப்பு அவனுக்கு சாதகமாக வேண்டும் என்று பல தகிடுதத்தங்கள் செய்து இருக்கிறான்.. வெற்றியும் பெற்று விட்டான் ஆனால் சந்தோஷமாக இருக்கிறானா என்று கேட்டால் அவனுக்கு சொல்லத் தெரியவில்லை…யோசனையுடனே வீடு வர




குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்
வாசலிலேயே காத்திருக்க அவனுடைய தாயும் சகோதரி விஜியும் ஒன்றாக ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்தார்கள் இவன் காரை விட்டு இறங்கியதுமே சந்தோஷமாக ஓடி வந்த தாய் மேனகா வயது நாற்பத்தி ஒன்பது தான் பார்க்க அவ்வளவு இளமை ரிஷியின் முத்த சகோதரி போல் இருப்பார்...சரியான உடற்பயிற்சி
சத்தான ஆகாரங்கள் ப்யூட்டி பார்லர் மற்றும் சரும நிருணர்களின் கைவண்ணத்தில் என்றுமே இளமைதான் அவரின் பணக்கார சமுகத்திற்கு இது மிகவும் அவசியம் தானே...
அவரின் தங்கை ராதா மட்டுமல்ல ரிஷியின் சகோதரி விஜி மற்றும் சித்தி மகள் ராகவி வரை அணைவருமே புற அழகிற்கு முக்கியத்துவம் தருபவர்கள் தான்.
விஜி ரிஷியை விட இருவயதே பெரியவள்.



ரிஷியை கண்டதும் டேய் அப்படியே நில்லு...ஆரத்தி எடுக்கனும் என்றவர் ஏய் விஜி இங்க வாடி வந்து தம்பிக்கு ஆரத்தி எடு என்று கூப்பிட அவன் சகோதரியான விஜியோ இதோம்மா வர்றேன் என்றவள் தயாராக எடுத்து வைத்திருந்த ஒரு தட்டில் சிறிதளவு நீருற்றி அதில் மஞ்சளடன் சுண்ணாம்பை கலக்க அது ரத்த சிகப்பிற்கு மாறியது

அந்த செந்நீரின் மீது ஒரு வெற்றிலை வைத்து அதன் மீது கற்பூரத்தை பற்ற வைத்து ஆரத்தி எடுக்க அதை பாதியிலேயே தடுத்தவன் என்ன விஜி பண்ற என்று சகோதரியை முறைத்தபடி கேட்டான்.

பிறகு தாயை பார்த்து என்னம்மா இதெல்லாம் ஆர்ப்பாட்டம் முதல்ல கேஸ்ல ஜெயிச்சானா இல்லையான்னு எதுவுமே கேட்கலையே என்று கேட்க


டேய் நீ ஒரு விஷயத்துக்கு போனாலே அது வெற்றி தான்னு எங்களுக்கு தெரியாதா…என்ற மேனகாவிடம்


லாயர் சொல்லிருப்பாரு என்ற ரிஷியிடம்…

அடப்போடா இவனே ….
எப்படியும் அதுக முஞ்சில கரிய பூசிட்டு தான் வருவேன்னு தெரியும் அப்படி இருக்கும் போது நாங்க ஏன்டா லாயர கேக்கனும்...என் புள்ளை வாயால கேக்கறேன்

நீ சொல்லு பழம் தானே என்று கேட்ட மேனகாவிடம்

ம்ம்... என்று மட்டும் பதிலுரைத்தவன்
ஆதி கேஷ் எங்க என்று வீட்டில் உள்ளே தேட

ஆதியா அவன் உள்ள ராகவோட விளையாடிட்டு இருப்பான் என்றவர் டேய் சின்னவே நம்ம வீட்டு குட்டி இளவரசனை கூட்டிட்டு வாடா என்று கூற


தங்கை மகனான ராகவ் கைகளில் மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை தூக்கிவர சிறுவனின் நிறம் மட்டுமே ரிஷியை ஒத்திருக்க முகமோ அப்படியே பவியை உரித்து வைத்திருந்தது.




ராகவனின் கையை விட்டு இறங்கிய குழந்தை ரிஷியை பார்த்து அப்பா என ஓடி வந்து காலைக் கட்டிக் கொள்ள அதுவரை இருந்த கடினத் தன்மை மறைந்து நொடியில் இலகுவானவன் குழந்தையை தூக்கி
ஒரு தட்டாமாலை சுற்றியபடியே
அப்பா ஜெயிச்சிட்டேன்டா …
அப்பா ஜெயிச்சிட்டேன்... இதுவரைக்கும் அப்பா ஜெயிச்சதுக்கு எதுவுமே வெற்றி இல்லடா இன்னைக்கு நான் ஜெயிச்சேன் பாரு அதுதான் நிஜமான வெற்றி என் வாழ்க்கை ஃபுல்லாக இந்த ஒரு வெற்றி போதும்டா என்று மகனிடம் சந்தோஷமாக கூற



கட்டிடக்கலையில் முதுகலையில் கடைசி வருடம் பயின்று கொண்டிருக்கும் ராகவ் இல்லனா மோசமா தோத்துட்டிங்க…
இது வெற்றி இல்ல….ஒரு அம்மாவையும் பிள்ளையையும் நிரந்தரமாக இருக்கீங்க இந்த வயசுல கூட விஜி அக்காவை பிரிய பெரியம்மாவால முடில ஆனா இவ்வளவு சின்ன வயசுல நம்ம ஆதி அவன் அம்மாவை பிரிந்து இருக்கான் இது நமக்கு வேணும்னா வெற்றிக்கான கொண்டாட்டமா இருக்கலாம்

நம்ம ஆதிக்கு இது முதல் தோல்வி…
நீங்க பவி அண்ணி பத்தி கொஞ்சம் யோசிங்க நியாயமா இந்த வெற்றி அவங்களோடது பணம் இல்லை என்கிற ஒரே காரணத்துக்காக அவங்களோட வெற்றியை நீங்க தட்டி பறிச்சிகீட்டிங்க பெஸ்ட் ஆஃப் லக் அண்ணா என்று ரிஷியிடம் கூறிவிட்டு சென்றுவிட இவர்களின் வெற்றி கொண்டாட்டமோ தாயின் தோல்வியோ அறியாத ஆதிதான் அன்றைய நாளின் அவர்களின் வெற்றி


ஆதியின் எதிர்கால காப்பாளர்கள் யார் என்ற போட்டியில்தான் ரிஷிகேஷ் வெற்றி பெற்றிருக்கிறான் ஆதியை என்றுமே அவனின் வசம் வைக்க வேண்டும் என்றுதான் நீதிமன்ற வாசல் வரை வாசல் வரை சென்று போராடி மகனை தன் வசப்படுத்தி இருக்கிறான் இந்த பணக்கார தந்தை…

ஆனால் மகனே விட்டுக்கொடுக்க மனம் இல்லாத அந்த ஏழைத்தாய் கண்டிப்பாக மீண்டும் போராடுவாள் அது இவர்களுக்குத் தெரியவில்லை இந்த வெற்றி தற்காலிகமானது என்று அங்கிருக்கும் யாருக்குமே தெரியதில்லை…


குழந்தையை கைப்பற்ற பவித்ரா எந்த எல்லைக்கும் செல்வாள் என்று அவளது முன்னாள் கணவன்
ரிஷிகேஷ்க்கு நன்றாகவே தெரியும்
அதை எப்படி முறியடிப்பது என்று ரிஷி யோசிக்க ஆரம்பித்து இருந்தான் அங்கு பவித்ராவும் குழந்தையை எப்படி அவனிடமிருந்து தன் வசப்படுத்துவது என யோசிக்கத் தொடங்கி இருந்தாள்‌.



தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
3


வீட்டிற்கு வரும் வெங்கட்டையும் பவியையும் எதிர்பார்த்து காத்திருந்தனர் மேகலா நாராயனண் தம்பதியனர்... பவித்ரா,வெங்கட்டின் பெற்றோர்கள்.



மேகலா வயது நாற்பத்தி எட்டு,அந்த வயதுக்கு உண்டானதொரு தோற்றம் அழகானவர்,பண்பானவர்... அருகில் இருக்கும் ஆரம்ப பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமணத்திற்கு பின்பு தான் பட்டம் படித்து வேலைக்கு செல்கிறார்.


அவரின் மேற்படிப்பில் கணவரின் பங்கு அதிகம் அவரின் படிப்பிற்கு உயர்நிலை பள்ளியிலேயே வாய்ப்பு உண்டு அதிக தூரம் செல்ல வேண்டும், இல்லையென்றால் பணிமாறுதல் வரும் என பயந்து அதை மறுத்து விட்டார்.


அவருக்கு வாய்ப்பு வரும்போது பிள்ளைகள் இருவருமே சிறுவர்கள் என்று எதையுமே முயற்ச்சிக்கவில்லை இப்பொழுதோ இருக்கும் இந்த ஆரம்ப பள்ளி தலைமை ஆசிரியர் பணியே போதும் என சமாதானப் படுத்திக் கொண்டார்.


கணவர் நாராயணன் ஐம்பத்தி இரண்டு வயதானவர் கார்பரேஷன் ஆஃபிஸில் பணிசெய்கிறார் நேர்மையானவர்
இருவருமே அரசு வேலை என்று தான் பெயர்.ஆனால் பட்ஜெட் போட்டு செலவு செய்ய வேண்டிய நிலமை

உருப்படியாக வீடு மட்டும் சொந்தமாக உண்டு சற்று பெரியது மூன்று படுக்கையறை கொண்டது இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு வீட்டின் மீது கடன் உண்டு,


நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பவித்ராவின் திருமணத்திற்கு வாங்கிய கடனே இன்னும் முடியவில்லை அதற்குள்ளாகவே ஒரு வருடத்தில் அவள் சீமந்தம் பிரசவ செலவு என வந்துவிட கடன் வாங்கி கடமைகளை முடித்தனர்.


இடையிடையே வெங்கட்டின் படிப்பு செலவு வேறு அதையும் சமாளித்துள்ளனர்

அரசு கொடுக்கும் அத்தனை சலுகைகளையும் பெற்றிருக்கின்றனர் அவர்களுக்கு எந்த மாதிரி எல்லாம் லோன் தருவார்களோ அத்தனையிலும் வாங்கி இருக்கிறார்கள் இருவரின் முக்கால்வாசி சம்பளம் அவர்கள் வாங்கிய கடனுக்கு சென்றுவிட தற்சமயம் இரண்டு வருடங்களாக வெங்கட் வேலை பார்த்து வரும் சம்பளத்தில்தான் குடும்பம் ஓடுகிறது


இதில் பவித்ராவின் விவாகரத்து ‌செலவு முதல் கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைக்காக நீதிமன்றத்தில் வாதாடிய வக்கீல் பீஸ் என அனைத்து கடனும் இப்போது வெங்கட்டின் தலை மீது தான்


.

இப்பொழுது தம்பியின் பின்னே வரும் பொழுதுதான் நினைத்திருக்கிறாள் இனி தனக்கு எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அது தன்னுடைய வருமானத்தைக் கொண்டே சமாளிக்க வேண்டும் என்று மன அழுத்தத்திற்கு ஒரு நல்ல மருத்துவரை சந்தித்து அதற்கான ஆலோசனைகளையும் பெற்று அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்றும் எண்ணிக் கொண்டு இருக்கிறாள்.

ஒரு முடிவுடன் தம்பியின் பின்னே அமர்ந்து இருந்த பவித்ரா வீடு வருமே தயக்கமாக தம்பி பார்த்தபடியே இறங்கினாள்


வெங்கட்டும் எதுவுமே பேசாமல் வாகனத்தை வீட்டின் உள்ளே கொண்டுவந்து நிறுத்த பவித்ராவிற்கு தான் இப்பொழுது தாயையும் தந்தையையும் சந்திக்க தர்மசங்கடமாகி விட்டது அவள் இழுத்து வைத்து செலவுகள் தான் எத்தனை திருமணம் பிரசவம் விவாகரத்து இப்பொழுது குழந்தைக்காக வாதாடுவது எத்தனைதான் அவர்களும் தாங்கிக் கொள்வார்கள்


இவளைப் பெற்ற கடனுக்காக திருமணம் செய்து வைக்கலாம் பிரசவம் பார்க்கலாம் வாழ்கை சரி இல்லை என்று விவாகரத்தும் வாங்கலாம் இப்பொழுது அவள் பிள்ளையை மீட்டெடுக்கவும் அவர்கள் செலவு செய்தால் எந்த வகையில் நியாயம் என்று குற்றவுணர்ச்சி நிறையவே இருக்கிறது தாயையும் தந்தையும் முகத்தையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் என்று தயக்கத்துடன்
உள்ளே வரவுமே
பெற்றோர்கள் அவர்களை கவலையாக எதிர் கொண்டார்.


தாயின் தந்தையின் முகத்தை எதிர் கொள்ள முடியாத பவித்ரா அவளின் அறைக்குச் செல்ல வெங்கட்டின் பின்னால் வந்த மேகலா

என்ன ஆச்சி வெங்கி...என்று கேட்டார்

ஏற்கனவே எதிர்பார்த்ததுதான் பக்காவா ப்ளான் பண்ணி பவியால குழந்தையை வளர்க்கவே முடியாதுனு அவங்க பக்கம் குழந்தையை கேட்டு வாங்கிட்டாங்க அட்லீஸ்ட் பவித்ரா ஒரு வேலைல இருந்திருந்தா கூட நாம சண்டை போட்டிருக்கலாம்


முதல்ல பவிக்கு ஒரு நல்ல வேலை வாங்கி கொடுக்கணும் அதுக்கப்புறமா அவ சம்பளம் அவளோட வசதிகளை வைத்து தான் இனி நாம மறுபடியும் பைட் பண்ண முடியும்


வக்கீல் பயங்கரமான சொதப்பல் அவர் சரியான சைலன்ட் கில்லர் அவங்க ஆளு மாறிட்டாரு எப்போ அவங்க சைடு போனார்னு தெரியல


தெரியாமலேயே நாம தான் இத்தனை நாள் நம்பி ஏமாந்துட்டோம் எதுவுமே நமக்கு சாதகமாக இல்லை என்றவன் நெற்றியை அழுத்தி தேய்த்துக் கொண்டே


சரி அம்மா எனக்கு ஒரு காபி போட்டு கொடுக்கறீங்களா தலை பயங்கரமா வலிக்குது என்று கேட்க தாய் சரி என்று உள்ளே செல்லவும்


தந்தை வந்து அருகில் அமர்ந்து வெங்கட்டின் தோள் மீது கை வைத்தவர் எங்களுக்கு பையனா பொறந்து ரொம்ப கஷ்டப்படுற இல்லடா என்று கூற


என்னப்பா கஷ்டம் தயவு செஞ்சு இதுபோல பேசாதீங்க அப்படிப் பார்த்தால் இன்னைக்கு நான் இவ்வளவு நல்ல நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு நீங்களும் அம்மாவும் தான காரணம்... அதும் அக்கா அம்மா வேலைக்கு போனதும் இன்னொரு அம்மா மாதிரி பாத்துகிட்டா ஏதோ பெரிய மனுஷி மாதிரி
இதுக்கு அவ
என்னைவிட ஒரு வயசு தான் பெரியவ ஆனாலும் என்னை அவ எப்பவுமே விடலல்ல அப்படி இருக்கும் போது நான் எப்படி அவள விடமுடியும் என்றவன் யோசனையாக


ஆமா நீங்க இன்னைக்கு ஆபீஸ் போகலையா அம்மா கூட லீவு போல நான் இவ்ளோ நேரம் கவனிக்கவே இல்லையே…


ஆமா வெங்கட் எப்படியும் இந்த கேஸ்ல நாம எதிர் பார்த்த தீர்ப்பு வராதுனு தோணிச்சி ரெண்டு பேரும் கவலையா வரும் போது நாங்க இல்லனா எப்படி ஒரு ஆறுதலுக்காவது நாங்க இருக்கனும்னு தோணிச்சி அதான் லீவு போட்டுட்டோம்…பவத்ராவுக்கு எப்படி ஆறுதல் சொல்லறதுன்னு தெரியலடா
அவ தீர்ப்பை எப்படி எடுத்துகிட்டா என்று கேட்ட தந்தையிடம் பதில் கூற வாய் திறக்கவும் தாய் காஃபி கோப்பையை எடுத்து வரவும் சரியாக இருந்தது.

தாயிடம் இருந்து வாங்கியவன்
அம்மா பவிக்கு என்றான்

எடுத்து வச்சிருக்கேன் வெங்கி ரூம் பூட்டிருக்கா...வெளிய வரட்டும் என்றவரிடம்


அம்மா மொதல்ல அவளை வெளிய கூப்பிட்டு சாப்பிட ஏதாவது தாங்க காலைல இங்க சாப்பிடல மதியம் அங்க கேன்டீன் ல ஒன்னுமே சாப்பிடல
அப்புறம் பாத்ரூம் ல போய் நல்லா அழுத்துட்டு வந்தா தீர்ப்பு வந்ததும் நேரா அந்தாளு கிட்ட சண்டைக்கு போயிட்டா…

என்ன நம்ம பவி பொது இடத்துல சண்டை போட்டாளா?என்ற தந்தையிடம்

ம்ம் அப்படித்தான் நினைக்கறேன் ஏன்னா நா அவளை தேடிபோகும் போது அவரோட கோபமா பேசிட்டு இருந்தா நா பக்கத்துல போறதுக்குள்ள அவர் போயிட்டாரு இவ உக்காந்து அழுதுட்டு இருந்தா…என்றவன் தாயை பார்த்து
ம்மா அவள வெளிய கூப்பிடுங்க ப்ளீஸ் கொஞ்ச நாள் தனியா விடதீங்க என்றவனிடம்

அவன் தாய் சரிடா இரு அவளையும் கூட்டிட்டு வரேன் எல்லாரும்‌ சேர்த்து காஃபி குடிக்கலாம் என்று பவியை அழைக்க சென்றார்.

வெங்கட் தந்தையை பார்த்து ப்பா என்ன கேட்டிங்க…


தீர்ப்பை பவித்ரா எப்படி எடுத்துக்கிட்டானு தானே அவளே ஆல்ரெடி இதை எதிர்பார்த்து தான் இருந்திருப்பா போல தீர்ப்பை கேட்டதும் கொஞ்சம் அழுதா பிறகு அவரோட சண்டை போட்டாள்


வரும்போது ஒரளவுக்கு தெளிவாயிட்டா வேலைக்கு போறத பத்தி என்கிட்ட பேசினா


அவங்க சைடு வாதமே பவித்ராவுக்கு எந்த வகையில் இருந்தும் வருமானம் இல்லாதது தான் அந்த குழந்தையை எப்படி வருமானம் இல்லாம வளர்த்துவானு தான் தீர்ப்பு அவங்க பக்கம் சாதகமா போயிடுச்சி


அம்மா அப்பா அரசு வேலையில் இருக்காங்க தம்பி ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் கை நிறைய சம்பளம் வாங்குகிறாரு குழந்தை பாத்துபாங்கனு நம்ம வக்கீல் எல்லாத்தையும் போட்டு உடைச்சாரு ஆனால் அதை எப்படி ஏத்துப்பாங்க குழந்தைக்கு தாயான பவித்ராவுக்கு தனிப்பட்ட முறையில வருமானம் வர்றது போல ஏதாவது இருக்கான்னு கேட்டாங்க அது இல்லைனு நம்ம வக்கீல் சொன்னதால தான் குழந்தைய அவங்க கிட்ட தந்தது
என்று சலித்த வெங்கட்டிடம்


ஏன் வெங்கட் பவித்ரா நல்லா படிச்சி இருக்கா எங்க வேலைக்கு போனாலும் கை நிறைய சம்பளம் வாங்குவா அதுவுமில்லாம அவ பேர்ல கொஞ்சம் பேங்க்ல சேவிங்ஸ்ல பணம் போட்டு இருக்கோம் இதெல்லாம் எடுத்துக்கலையா என்று நாராயணன் கேள்வி எழுப்பினார்.


அப்பா குழந்தை மேஜர் ஆகுற வரைக்கும் தாய்கிட்ட தான் வளரனும்னு ஒரு மிகப்பெரிய பாயிண்ட் இருக்கு அதையே நம்ம வைக்கீல் எடுத்து வைக்கல மீதி எங்க பேசுவாரு ரெண்டு வருஷம் வீணாக்கிட்டாரு அதை விடுங்கப்பா இது கீழமை கோர்ட்டு தானே நம்ம மேல் கோர்ட்டில் மறுபடியும் கேஸ் அப்ளை பண்ணலாம்
அதுக்குள்ள பவிக்கு ஒரு நல்ல வேலையை தேடி தரனும் என்று பொறுப்பாய் வெங்கட் பேசி முடிக்கவும் ‌



மேகலா பவித்ராவை வெளியே அழைத்து கொண்டு வரவும் சரியாக இருந்தது பிறகு நால்வருமே ஒன்றாக அமர்ந்து காபி குடித்து முடித்தவுடன் பவித்ரா தான் தயங்கியபடி வெங்கட்டிடம் இதை பற்றி நான் ஏற்கனவே வரும் போது உன்கிட்ட பேசினேன் சும்மா சும்மா இதை பத்தி பேசறேன்னு தப்பா எடுத்துக்காத எனக்கு சீக்கிரம் ஒரு வேலை வாங்கி கொடு டா ப்ளீஸ் என்று கேட்டாள் .

பவி எனக்கு ரொம்ப நல்லாவே ஞாபகம் இருக்கு நீ இன்னைக்கு வரும் போது தான் உன் வேலையை பற்றி பேசின ஆனா நான் ரெண்டு வருஷமாவே உனக்கு ஒரு நல்ல வேலையை தான் தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா நீ தான் வேலைக்கு போற மனநிலையில் இல்லை இப்போ நீயே வேலைக்கு போறானு கேட்கும்போது உனக்காக நான் தேடாம இருப்பேனா சொல்லு

ஒரு பத்து நாள் டைம் குடு உனக்கேத்த வேலையா நான் பாத்து தரேன்
நீ கவலை படாத முதல்ல கோர்ட்ல குழந்தைக்காக ரிட்டன் கேஸ் ஃபைல் பண்றோம் அதுக்கப்புறமா வேலையைத் தேடலாம் என்று அவளுக்கு தைரியம் சொன்னான். பிறகு அம்மா நான் என் பிரண்டு கிட்ட அக்கா கேஸ் பத்தி சொல்லிருந்தேன் அவன் ஒரு லாயரை ரெஃபர் பண்ணினான் நா போய் அவரை மீட் பண்ணிட்டு வர்றேன் என்று வெங்கட் கிளம்பி விட பவித்ராவும் தாய் தந்தையரிடம் கூறிக் கொண்டு அவளின் அறைக்குள் வந்தாள் உள்ளே வர வரவே அவளுக்குப் பழைய ஞாபகங்கள் கண்முன் விரியத் தொடங்கியது ஏன் நான் அவனை சந்திக்க வேண்டும் முதல் பார்வையிலேயே காதலில் விழ வேண்டும்…
கடவுள் மட்டும் அவளின் கண்களில் அவனை காட்டாமல் இருந்திருந்தால் இன்று அவள் இவ்வளவு கஷ்டங்களை தாங்கி இருக்க வேண்டாமே என்று தனக்குத் தானே கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு முதல் முதலாக அவனை சந்தித்தத அந்த நாளை அடியோடு வெறுத்தாள்.

தொடரும்….
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
4

பவித்ராவின் வீட்டில் அனைவருமே ஏதோ ஒரு அழுத்தத்தில் இரவு உணவை எடுத்துக் கொள்ளாமல் இருக்க ரிஷிகேசன் வீடு நேர்மாறு இரவு நேரத்தில் கூட பல வகையான உணவுகளை தயாரித்து விருந்து போல் அணைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து அமைதியாக உணவருந்திக் கொண்டிருந்தனர்.


ரிஷியின் தாய் மேனகா தான் முதலாக பேசத் தொடங்கினார்


ரிஷி ஒரு வழியா அவளை விவாகரத்து பண்ணிட்டு குழந்தையும் நம்ம பக்கத்துலயே வாங்கியாச்சு அடுத்து குழந்தைக்கு ஒரு அம்மா வேணும் அதுக்கான ஏற்பாட்டை நான் செய்யலாமா?
ஏற்கனவே நாம பேசியதுதான் நீ கேஸ் முடிஞ்சதும் பேசலாம்னு சொன்னே இப்ப கேஸ் முடிஞ்சாச்சு எப்போ என்னோட பொண்ணு பாக்க வர்ற என்று கேட்டார்.


தாயின் பேச்சை ரசிக்காத ரிஷி பற்களைக் கடித்தபடி தனது மகனுக்கு உணவை ஊட்டியபடியே அம்மா இப்பதான் ஒரு கசப்பில் இருந்து வெளியே வந்து இருக்கேன் அதுக்குள்ள அடுத்த கசப்பை வாயில வைக்க வரீங்க ப்ளீஸ்மா என்னை கொஞ்சநாள் விடுங்க

ஒருவேளை அதிக்கு அம்மா வேணும்னு அவன் கேட்டா அப்போ பாத்துக்கலாம் அப்படி இல்லையா எனக்கு ஒரு பொண்ணோட துணை வேணுமுன்னு தோணுச்சுன்னா உங்களை கூட நான் கேட்க மாட்டேன் அடுத்த நிமிஷமே ஒரு பொண்னை திருமணம் செஞ்சி கூட்டிட்டு வந்திடுவேன் சோ ப்ளிஸ் லிவ் ட் இந்த விஷயத்தை இதோட விடுங்க என்று முகத்தில் அடித்த படி கூறியவன் தனது மகனை தூக்கிக் கொண்டு அவனின் அழைத்துச் சென்றான்.

அறைக்கு உள்ளே வந்த ரிஷி கோ நான்காண்டுகளுக்கு முன்பு நடந்த விஷயம் கண்முன் விரியத் தொடங்கியது இங்கு பவித்ரா விற்கும் அப்படிதான் இரவு உணவையும் சரியாக எடுத்துக் கொள்ளாமல் வெறும் பாலை மட்டும் அருந்தி விட்டு அறைக்குள் வந்தவளுக்கு ஏனோ இன்று அழ வேண்டும்போல தோன்றியது மௌனமாக அழுது கொண்டிருந்தவளுக்கு நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்கள் கண்முன் விரியத் தொடங்கியது.


பவித்ரா அப்பொழுதுதான் முதுகலைப் பட்டத்தில் கடைசி தேர்வினை எழுதி முடித்திருந்தாள் இன்னும் அவளுக்கு ரிசல்ட் கூட வரவில்லை ஆனால் அவளின் தந்தை நாராயணனோ உடன் பணிபுரியும் ஒருவரின் மகனை தனது மகளுக்காக வரன் பார்த்துவிட்டார்.

இதை வீட்டில் வந்து மனைவியிடம் சொல்லும் பொழுது மேகலா இதைக் கடுமையாக எதிர்த்தார்


என்னங்க நீங்க விளையாடுறீங்களா இப்போ தான் பரீட்சை எழுதி முடிச்சிருக்கா அதுக்குள்ள கல்யாணமா அவ பாவம்ங்க கொஞ்ச நாள் வீட்ல இருக்கட்டும் அதுக்கப்புறமா அவ விருப்ப பட்டா ஏதாவது வேலைக்கு போகட்டும் அதுக்கு அப்புறம் அவளுக்கு கல்யாணம் செய்யலாம்ங்க.


வெங்கட் இப்பதான் என்ஜினியரிங் பைனல் இயர் எக்ஸாம் எழுதிருக்கான் அவன் வேற மேல படிக்கணும்னு சொல்லிட்டு இருக்கான் இத்தனை பிரச்சனை இருக்கும் போது நீங்க அவளுக்கு கல்யாணம் பண்ணனும்னா அதுக்கு நம்ம கிட்ட பணம் வேண்டாமா என்று குடும்பத்தலைவியாக அவள் பக்கத்து நியாயங்களைப் பற்றி பேசினார் மேகலா.


இங்க பாரு மேகலா பையன் தங்கமான பையன் அந்த பையனை நம்ம பவித்ரா கல்யாணம் பண்ணிக்கிட்டா அவளோட வாழ்க்கையே ரொம்ப நல்லா இருக்கும் எப்படிப் பார்த்தாலும் இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சி கல்யாணம் பண்ணி கொடுக்க தானே போறோம் அதுக்கு இப்பவே நல்ல பையனா அமைஞ்சா பண்ணி குடுக்கலாம் இல்ல ரெண்டாவது வெங்கட் பற்றி நீ கவலைப்படாதே அவனுக்கு எஜிக்கேஷன் லோன் போட்டுடலாம் புரியுதா அவன் படிச்சு முடிச்சு வேலைக்கு போய் அந்த கடனை கட்டட்டும்.. என்ற நாராயணனிடம் மேகலா மதன்மையாக நான் அதுக்காக சொல்லலங்க

எனக்கும் புரியுது நாம சர்வீஸ்ல இருக்கும்போதே நம்ம புள்ளைகளுக்கு ஏதாவது நல்லது செஞ்சா தான் உண்டு ஆனால் ஏற்கனவே நம்ம வாங்கற சம்பளம் ஹவுசிங் லோனுக்கும் வெங்கடோட காலேஜ் அட்மிஷனுக்கு வாங்கின கடனுகாகே போயிடுது.


அப்படி இருக்கும் போது இப்போவே பவிக்கு கல்யாணம்னா அந்த கடனையும் சேர்த்து கட்டனுமேங்க அதான் யோசிக்கிறேன்

வெங்கட் மேற்படிப்பு படித்தால் கூட இன்னும் ரெண்டு வருஷம்தான் படிப்பான் அதுக்கப்புறம் அவன் ஒரு வேலைக்கு போயிட்டா அவன் சம்பளமும் நமக்கு வர ஆரம்பிச்சிடும் அதுவரைக்கும் நம் பவியை ஏதாவது வேலைக்கு அனுப்பலாமே அவ படிச்ச படிப்புக்கு உபயோகமா இருக்கும் வேலைபாத்துகிட்டே கூட
படிக்கறதுனாலும் படிக்கட்டும்



பொண்ணுகனாளே படிப்பு முடிஞ்சதும் கல்யாணம் பண்ணி தான் கொடுக்கனுமா என்ன


எல்லாரும் உங்களை மாதிரி நல்லவனா இருக்க மாட்டாங்களே


நீங்க என்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து மேல்படிப்பு படிக்க வைத்து வேலையும் வாங்கிக்கொடுத்தீங்க அதேமாதிரி வந்துட்டா பிரச்சனை இல்ல ஒருவேளை வர்றவங்க அவளை வீட்டோட வெச்சுக்கிட்டா இவ்ளோ நாள் படித்த படிப்பு வீணாகமே அவ ரொம்ப நல்லா அக்கவுண்ட்ஸ் போடுவாங்க அவளை அந்த லைன்ல இனி கொஞ்சம் ட்யூன் பண்ணினா ரொம்ப நல்லா வருவாங்க யோசித்து முடிவெடுங்க என்று மேகலா கூறினார்.


மனைவி சொன்னவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன் நீ சொல்றது புரியுது மேனகா ஆனால் என் பிரண்டு வந்து நம்ம பதவியை பெண் கேட்டு இருக்கான் அவன்கிட்ட இல்லன்னு என்னால மறக்க முடியாது அது மட்டும் இல்லாம அவன் பையனுக்கு ஃபாரின் போற ஆஃபர் எல்லாம் இருக்கு


இவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா நம்ம பொண்ணு ரொம்ப நல்லா இருப்பா ஒருவேளை ஃபாரின் போனாகூட அங்க கண்டிப்பா பவித்ரா வேலைக்குப் போய்த்தான் ஆகணும்


நமக்கும் பவித்ரா பத்தின டென்ஷன் குறையும்

பவி விருப்பபட்டா கல்யாணத்துக்கு அப்புறம் அங்க போயி வேலை பாக்கட்டும் பொண்ணுக்கு நல்ல வரன் வரும்போது அதை நாம ஏன் தடுக்கனும்

நான் எல்லா விஷயத்தையும் நல்லா பேசிட்டேன் மேனகா,முதல்ல நம்மளோட கொள்கை பொண்ணுக்கு வரதட்சணை தரமாட்டோம் என்பது..
அதுக்கு அவங்க பதில் நாம கொடுத்தாலும் வரதட்சணையை அவங்க வாங்க மாட்டார்களாம்...இத விட வேற என்ன வேணும் சொல்லு...அப்புறமா
எனக்கு பிடிச்ச விஷயமே அவங்க பொண்ணு மட்டும் வந்தா போதும்னு சொன்னதுதான்


இரண்டாவது ஆடம்பரமா கல்யாணம் வேணாம் சிம்பிளா இருந்தாலே போதும் ன்னு சொல்லி இருக்காங்க இதைவிட இன்னொரு மாப்பிள்ளை வீட்டுகாரங்க தேடி வருவாங்களா சொல்லு


அதனால நல்ல அம்மாவா உன் பொண்ண சமாதானப்படுத்தி கல்யாணத்துக்கு தயார்படுத்த வேண்டிய பொறுப்பு உன்னோடது செய்வியா மேனகா என்று மனைவியிடம் கேட்க கணவன் சொன்ன தகவல்கள் அனைத்தும் தனக்கு திருப்தியை கொடுக்க சிறிது யோசித்தவள்


நீங்க சொல்றதும் சரிதான் ரெண்டு வருஷம் வேலைக்கு அனுப்பி அந்த பணத்தை சேர்த்து வச்சு கல்யாணம்ங்கற பேர்ல தாம் தூம்னு செலவு பண்ணறதுக்கு பதில் பொண்ணை வேலைக்கு அனுப்பாம வரதட்சணை, கல்யாண செலவுனு எந்த டென்ஷனும் இல்லாம பொண்ணு படிப்பு முடிஞ்சதும் நல்ல இடத்துல கட்டிக்கொடுக்கறதும் நல்ல விஷயம்தான்


நம்ம பவிக்கு நல்ல வாழ்க்கை அமையும் போது அதை கெடுக்கற உரிமை நமக்கு என்ன இருக்கு


படிக்க வைக்க வேண்டியது நம்முடைய கடமை அதை பண்ணிட்டோம் அடுத்து கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது நம்முடைய கடமை அதையும் பண்ணி வைக்கப் போறோம் இடையில் வேலைக்குப் போக சொல்லற உரிமை நமக்கு எங்க இருக்கு கல்யாணத்துக்கு அப்புறம் அவ விருப்பப்பட்டா போகட்டும் இல்லை மேல படிக்கணும்னு தோன்றினாலும் படிக்கட்டும் ஆனால் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கலைனா இந்த கல்யாணத்துக்கு நான் ஒத்துக்க மாட்டேன் நாராயணன் அதையும் சொல்லிட்டேன் என்று கண்டிப்புடன் கணவனிடம் கூற




நாராயணனும் சிரித்தபடியே நீ என்ன சொல்றது நானே சொல்றேன் என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பிடிக்கலைன்னா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது இன்னொரு முக்கியமான விஷயம் பையனுக்கும் நம்ம பவியை பிடிக்கனும் பொண்ணுக்கும் பையனை பிடிக்கணும் அதனால ரெண்டு பேருக்கும் பரிபூரண சம்மதம் இருந்தால் மட்டும் தான் இந்தக் கல்யாணம் அதனால வர்ற ஞாயிற்றுக்கிழமை உன் பொண்ண பக்கத்துல இருக்குற கோவிலுக்கு பாக்க வர்றாங்கனு மட்டும் சொல்லு போதும் மத்தத நான் பாத்துக்கறேன் என்று கூற


சரி என்ற மேகலா பவித்ராவிடம் அவளின் திருமண ஏற்பாடுகள் பற்றி கூறுவதற்காக சென்றார் அங்கு பவித்ராவோ அதிர்ச்சியடைந்த படி தனது தாயிடம் கேட்டாள்


என்னமா இன்னும் செமஸ்டர் லீவு கூட வரல அதுக்குள்ள நீங்க கல்யாணத்தை பத்தி பேசுறீங்க ரிசல்ட் வந்ததும் நான் எதாவது நல்ல வேலைக்கு போய் நிறையா சம்பாதிக்கணும்னு கனவு கண்டு கிட்டிருக்கிறேன் நீங்க என்னனா இப்படி சொல்றீங்க என்று தனது ஆதங்கத்தை கூற


தாய் மேகலா அவளை சமாதானப் படுத்தும் பொருட்டு அப்படி இல்ல பவித்ரா நல்ல வரன் தகிச்சி வருது உனக்கு வயசு ஒன்னும் கம்மி இல்லையே இருபத்தி இரண்டு வயது முடியும்போது இப்பவே கல்யாணம் பண்ணினா தான் சரியா இருக்கும்

அப்புறம் பையனை உனக்கு பிடிச்சா மட்டும்தான் கல்யாணம் அதனால நீ பயபடாதே அவங்க வந்து பார்க்கட்டும் ஒருவேளை அவங்களுக்கு உன்னை பிடிக்காமல் கூட போகலாம் இல்ல இல்லனா உனக்கு அவங்களை பிடிக்காமல் போகலாம் எது எப்படி இருந்தாலும் வந்து பார்த்ததுக்கு அப்புறம்தான் முடிவு பண்ண போறோம் அதனால நல்லா கேட்டுக்கோ ஒருவேளை அவர்களுக்கு இந்த சம்பந்தம் பிடிக்கலன்னாலோ இல்ல உனக்கு திருப்தி இல்லனாலோ அதுக்கப்புறம் ரெண்டு வருஷத்துக்கு அம்மா கண்டிப்பா உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி தொல்லை பண்ண மாட்டேன்... பவி அப்பா பாவம் அவர் ஃபிரண்ட் கிட்ட வாக்கு கொடுத்துட்டாராம் நாம இப்போ முடியாதுன்னு சொன்னா


அவங்க முன்னாடி அப்பாவை கீழே இறக்கி வைத்த மாதிரி ஆயிடும் அதனால ஜஸ்ட் வந்து பாரு உனக்கு பையனை பிடிச்சா மட்டும்தான் கல்யாணம் புரியுதா என்று சமாதானப்படுத்த


பவித்ராவின் தோழிகள் ஒவ்வொருவராக சமீபமாக திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி கொண்டுதான் இருக்கிறார்கள் யூஜி படிக்கும் பொழுதே பாதி தோழிகள் திருமணம் செய்து கொண்டு போய் விட்டார்கள்



பிஜி படித்து முடிக்கும் போது உடன் படித்த பாதி பேர் கூட டிகிரி முடிக்கவில்லை எல்லாருமே திருமணம் செய்து கொள்ள பவித்ராவிற்கு மே அவ்வப்போது கல்யாண கனவு வருவது உண்டு தனக்காவன் எப்படி இருப்பான் என்று அதனால் தாய் சொல்லவுமே முதலில் மறுத்தாலும் பிறகு நிதர்சனத்தை புரிந்து கொண்டு திருமணத்திற்கு தயாராக ஆரம்பித்தாள்.


அவர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஞாயிற்றுக்கிழமை வர காலையிலேயே பவித்ராவுக்கு அழகிய பச்சை நிற பட்டுப் புடவையை உடுத்தி விட்டார் அவளது தாயார்


அவளுடைய தம்பியோ வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக் கொண்டிருந்தான் தனது அக்காவிற்கு திருமணமா என்று

சாதாரண நடுத்தர வர்க்கத்து பெற்றோருக்கு பெரிதாக எந்த கனவும் கிடையாது

ஆண்பிள்ளை என்றால் படித்து முடித்தவுடன் நல்ல சம்பளத்தில் ஒருவேலை அமையவேண்டும்


பெண் பிள்ளை என்றால் படித்து முடிக்கும் பொழுது நல்ல வரன் அமைய வேண்டும் இதுதான் அவர்களின் கனவு


என்னதான் படித்து அரசு வேலையில் இருந்தாலும் பட்ஜெட் போட்டு வாழும் குடும்பத்தில் நூற்றில் எழுபத்தைந்து சதவீதமான பேர் இதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றனர் அவர்களின் கடமை முடிந்தால் போதும் என்று


நாராயணன் காலை பத்து மணி வாக்கில் மாப்பிள்ளை வீட்டாரை அழைப்பதற்காக கோவிலுக்கு சென்று விட


ஒருவேளை பெண்ணுக்கும் பையனுக்கும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பிடித்து விட்டது என்றால் மாப்பிள்ளை வீட்டினர் கண்டிப்பாக வீட்டுக்கு வருவார்கள் அப்பொழுது அவர்களுக்கு
உண்ண ஏதுவாக சில பலகாரங்களை மேகலா செய்துகொண்டிருக்கிறார்


இங்கு அழகிய புடவை கட்டிய பவித்ரா காத்துக் கொண்டிருக்கிறாள் தந்தை ஃபோன் செய்தவுடன் தனது தம்பியை அழைத்துக்கொண்டு அவள் அருகில் இருக்கும் கோவிலுக்கு செல்ல வேண்டும்


பவித்ரா இன்னும் மாப்பிள்ளையின் புகைப்படத்தை பார்க்கவே இல்லை நேரிலேயே பார்த்து கொள்கிறேன் என்று சொல்லி விட்டாள்

பெயரைக் கூட தெரிந்து கொள்ள விருப்பமில்லை தனது தந்தையின் மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை கண்டிப்பாக தந்தை தனக்கு பொருத்தமில்லாதவரை தேர்ந்தெடுக்க மாட்டார் என்று முழுமனதாய் நம்பியவள் மாப்பிள்ளை வீட்டை பற்றி எந்த ஒரு தகவலையும் கேட்டு தெரிந்து கொள்ளவும் இல்லை தந்தை அழைத்தவுடன் கோவிலுக்குச் செல்ல வேண்டும் அவர் காட்டிய பையனை தான் பார்க்கவேண்டும் பிடித்திருந்தால் பிடித்திருக்கிறது என்று தந்தைக்கு புரியும்படி ஜாடை செய்ய வேண்டும் அப்படி இல்லை என்றால் வீட்டுக்கு செல்கிறேன் என்று கூறிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடவேண்டும் இவ்வளவுதான் தாய் அவளுக்கு சொல்லியிருக்கிறார் அதுவே சரி என்று பட அவளும் சரி என்று தலை ஆட்டியிருக்கிறாள்

அருகில் இருக்கும் கோவில் என்பதால் பவித்ரா வாரம் இரண்டு முறையாவது கோவிலுக்குச் செல்வது வழக்கம் அதனால் மேகலாவிற்கு அவளை தனியாக அனுப்புவதற்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை தந்தைதான் கோவில் வாசலிலேயே காத்துக் கொண்டிருக்க போகிறார் மகளும் மகனும் வாசல் அருகே செல்லும்போது அவர்களை தன்னுடன் அழைத்துக் கொள்ளப் போகிறார் என்று நாராயணனின் போன் காலுக்காக காத்திருந்தார்கள் சிறிது நேரத்திலேயே மகனுக்கு அழைத்தவர் சகோதரியை அழைத்து வா என்று பணித்தார் உடனே அவனும் சகோதரியுடன் பேச்சு கொடுத்தவாறு அவளை கோவிலுக்கு அழைத்துச் சென்றான்


அதேசமயம் ரிஷிகேஷ் வீட்டிலோ அவன் தனியாக பிஸினஸில் கால்பதித்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்ததால் வீட்டில் ஏகபோகமாக கொண்டாடிக் கொண்டிருந்தனர் காலையில் குடும்பத்தினருடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டவன் பத்து மணிவாக்கில்

பிசினஸ் விஷயமாக ஒருவரை சந்திப்பதற்காக அவரை அழைக்க அவரோ இன்று தனக்கு திருமண நாள் மனைவி ஒரு குறிப்பிட்ட கோவிலில் மதிய பூஜைக்காக ஏற்பாடுகள் செய்து வைத்திருப்பதால் தன்னால் இன்று வர முடியாது என்று அவர் கூறினார்

தொழில் விஷயத்தில் நாட்களைக் கடத்துவது பிடிக்காத ரிஷியோ எந்த கோவில் என்று கூறுங்கள் நான் அங்கு வருகிறேன் மதியம் தானே நீங்கள் ஏற்பாடு செய்த பூஜை அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது அதற்குள்ளாகவே கோவிலில் வைத்து பிசினஸை முடித்துக் கொள்ளலாம் என்று கூற


சற்று தயங்கியவர் ரிஷியின் ஆர்வத்தை கண்டு மறுத்துப் பேச முடியாமல் பவித்ராவிற்கு பெண் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருந்த அதே கோவிலின் அட்ரஸை அவனுக்கு வாட்ஸ்அப் செய்தார்


குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ரிஷிகேஷ் உள்ளே வந்து அவர்களுடன் பேசிக் கொண்டிருக்க இங்கு மாப்பிள்ளை வீட்டிலோ அவர்களுக்கு நேர் எதிர்ப்புறம் நின்றபடி நாராயணனுடன் பேசிக்கொண்டிருந்தனர்


மாப்பிள்ளையை பார்த்ததுமே நாராயணனுக்கு மிகவும் பிடித்துவிட்டது அவர் மொபைலில் அனுப்பிய படத்தைதான் பார்த்து இருந்தார் ஆனால் பேசிய பிறகுதான் புரிந்தது இந்தப் பையனை திருமணம் செய்ய வேண்டுமென்றால் தனது மகள் பூர்வ ஜென்மத்தில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று அந்த அளவுக்கு பழக மிகவும் இனிமையாக இருந்தான் அந்த பையன்


அவர்கள் பவித்ராவை போட்டோவில் கூட பார்க்க வில்லை நேரிலே பார்த்துக் கொள்கிறோம் என்று கூறிவிட இப்பொழுது பவித்ராவை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக காத்திருந்தனர்.


வாயிற்புறம் பவித்ரா தனது தம்பியை அழைத்தபடி முன் பிரகாரத்தில் சாமி கும்பிட்டவள் உள்ளே தனது தந்தை எங்கே என எட்டிப் பார்க்க நேரெதிராக ரிஷியும் அவருடன் பிசினஸ் பேச வந்த தம்பதியரும் கண்ணில் பட


பார்த்ததும் அவர்கள் தான் மாப்பிள்ளையின் குடும்பத்தார் என நினைத்தவள் தனது தந்தையை தேடியபடியே உள்ளே வந்தாள் கண்கள் முழுவதும் ரிஷியின் மீதே இருக்க
ரிஷியை பார்த்ததுமே அவளுக்கு பிடித்து விட்டது

ஒவ்வொரு தெய்வத்தின் முன்பும் நின்று இப்பொழுது ரிஷிக்கு தன்னைப் பிடிக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்

தந்தையின் நண்பர் நீரழிவு நோயால் அவதிப்படுபவர் அவருக்கு இயற்கை உபாதை அழைக்க பாத்ரூம் எங்கே என்று தேடி கோவிலில் வெளிப்புறமாக நாராயணனுடன் சென்று விட மாப்பிள்ளை பையனும் அவனுடைய தாயாரும் அவர்கள் வரும்வரை ஏன் நிற்க வேண்டும் என்று மண்டபத்தில் ஓரமாக இருந்த ஒரு தூணில் சாய்வாக அமர்ந்துகொள்ள


இதைஅறியாத பவித்ரா அனைத்து கடவுள்களையும் மெதுவாக கும்பிட்டபடி சுற்றி வந்தாள். பவித்ரா உள்ளே வரும்பொழுது மாப்பிள்ளை வீட்டினரும் சரியாக கவனிக்கவில்லை, பவித்ராவும் உள்ளே வரும்போதே ஒரு கண் தந்தையை தேடியது என்றால் மற்றொரு கண்ணோ ரிஷியை படம்பிடிக்க ஆரம்பித்தது


ரிஷியை தவிர இப்பொழுது கோவிலில் அவளுக்கு யாரையுமே தெரியவில்லை அவனைக் கண்டதுமே காதல் வயப்பட்டாள்

தனது தம்பியிடம் அவர்கள்தான் மாப்பிள்ளை வீட்டினரா என்று கேட்க தம்பியோ நான்கு நாட்கள் முன்பு தந்தை வாட்ஸப்பில் காட்டிய புகைப்படம் தோடு ரிஷியின் முகம் ஒத்திருப்பதாக எண்ணியவன் அவர்கள் தான் மாப்பிள்ளை வீட்டினர் என்று விடாப்பிடியாக பவித்ராவை அவர்கள் அருகினில் அழைத்துச் சென்றான்.

பவித்ராவை வெட்கப்பட்டுக்கொண்டே அப்பா அங்க இல்லடா நீ அப்பாவை கூப்பிடு அப்பா வந்ததும் போய் பேசலாம் என்று ஒரு பத்தடி தூரத்தில் நின்றபடி தம்பியின் காதை கடிக்க



சரி இரு அப்பாவுக்கு கூப்பிடுறேன் என்று வெங்கட் தனது தந்தைக்கு கால் செய்தான் தந்தையோ வெளிப்புறம் இருக்கும் பாத்ரூமில் தான் இருப்பதால் அங்கே மாப்பிள்ளையிடம் சென்று பேசுமாறு அறிவுறுத்தினார்.


ரிஷியும் இவர்கள் இருவரையும் தான் பார்த்துக் கொண்டிருந்தான் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவன் பல பெண்களை தொழில் ரீதியாக சந்தித்திருக்கிறானா ஆனால் இன்று பவித்ராவின் அலங்காரமும் அவள் அவனை பார்த்த பார்வையும் அவனால் சில வித்தியாசங்களை உணர முடிந்தது


பவித்ராவை அவனுக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்திருந்தது பவித்ரா அவனை வைத்த கண் வாங்காமல் கோவிலைச் சுற்றி வரும்பொழுது கூட இருந்த அந்த தம்பதியினரின் அவனை கேலி செய்யத் தொடங்கி இருந்தனர்


அந்த பொண்ணை பாருங்க வச்ச கண்ணு வாங்காம உங்களைதான் பார்த்துகிட்டு இருக்குது என்று இவனும் கவனித்து கொண்டு தான் இருந்தான்


சார் கோயிலுக்கு வந்து இருக்கு சார் தப்பா பேசாதீங்க கூட வேற ஒரு பயில்வான் வரான் சண்டைக்கு வந்திடபோறான் என்று பதில் கொடுத்துக் கொண்டிருந்தான்.


அக்கா நம்மளை அவங்களோட போய் பேசிட்டு இருக்க சொல்லறாங்க அப்பா என்று வெங்கட் கூற


ரிஷியின் பார்வையோ பவித்ராவை துளைக்க வெட்கத்தில் அவளின் முகம் சிவக்க ஆரம்பித்தது

டேய் வேணாம் வெங்கட் அப்பா வந்ததுக்கப்புறம் அப்புறமா பக்கத்துல போகலாம் எனக்கு ஒரு மாதிரி இருக்குது என்று சிணுங்க ஆரம்பித்தாள்


அப்போ நீ இங்க நில்லு நான் போய் அவங்ககிட்ட பேசிட்டு இருக்கேன் என்ற வெங்கட்டிடம் பவித்ரா



டேய் ப்ளீஸ் டா என்ன தனியா விட்டுட்டு போகாதடா என்னோடவே இருடா



ம்ம்... இப்போ இப்படி சொல்லுவ
கல்யாணத்துக்கு அப்புறம் வேற மாதிரி சொல்லுவ, அப்புறம் நாளைக்கு நீ கல்யாணம் பண்ணி போனதுக்கு அப்புறம் மச்சான் மதிக்கலனு அதுக்கு தனியா பஞ்சாயத்து கூட்டு வாங்க என்று கூறியவன் சிறிதும் தயக்கமின்றி


ரிஷியின் முன்பு போய் நின்றவன் ஹாய் ஐயாம் வெங்கட் நாராயணன் சாரோட பையன் என்று கூறியனான்.


டிஷ்யூ யோசனையாக புருவத்தை சுருக்கியவன் எந்த நாராயணன்... என்று இழுத்தான்...



பவித்ரா வோட பிரதர் என்று மீண்டும் தன்னை அறிமுகம் செய்தவன்


பவித்ராவை பார்த்து வா என்பது போல் அழைத்தான் வெங்கட் பவித்ராவும் வெட்கப்பட்டுக்கொண்டே வரமாட்டேன் என்று கூற


வரலனா அவ்ளோ தான் என்று இவன் இங்கிருந்து ஜாடை செய்ய அக்கா தம்பியின் அந்த விளையாட்டுக்கு மிகவும் பிடித்தது ரிஷிக்கு


உடனிருந்த தம்பதியினரும் சரி ஏதோ உங்களுக்கு தெரிஞ்சவங்க போல பேசிட்டு இருங்க என்று அவர்கள் நாசுக்காக விலகி விட

இப்போழுது ரிஷியும் பவியை சுவாரசியமாகப் பார்த்து ஆரம்பித்தான்.


அவளின் அழகு அந்த வெட்கம் அவளின் விளையாட்டு கன்னச்சிவப்பு இப்படி ஒவ்வொன்றையும் தனித்தனியாக ரசிக்க ஆரம்பித்தான் ரிஷி


வெங்கட்டோ ரிஷியிடம் அனுமதி கேட்டு பவித்ராவின் கையை பிடித்துக்கொண்டு இழுத்து வந்து அவனின் முன்பு நிறுத்தினான்

பவித்ராவும் ரிஷியின் பக்கத்தில் வந்ததும் கைகள் தாளமிட தலையை பதட்டத்தில் குனிந்தபடி தரையை பார்க்க ஆரம்பித்தாள்


ரிஷி இது போல் பெண்களை எல்லாம் பார்த்ததே கிடையாது அவன் பார்க்கும் பெண்கள் வட்டமே வேறு வார இறுதியில் பஃப், கிளப் என செல்லும் பெண்கள் தான் அவனுக்கு பழக்கம் இதுபோல் அழகிய பட்டு புடவை அணிந்து தலை நிறைய பூ வைத்து நெற்றியில் குங்குமம் இட்டு புதிதாகப் பார்க்கும் ஆடவனை பார்த்ததும் வெட்கத்தில் தலை குனிந்து தரையைப் பார்க்கும் பெண்கள் எல்லாம் அவன் அகராதியில் பார்த்ததே கிடையாது அதனாலோ என்னவோ பவித்ராவை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது


தனக்கு வாழ்க்கைத் துணைவி என்று ஒன்று வந்தால் அது பவித்ரா வாகத்தான் இருக்க வேண்டும் என்றும் நினைக்க ஆரம்பித்தான் அதனால்தான் இன்று இந்த கோவிலுக்கு தெய்வம் தன்னை வரவழைத்திருக்கிறது என்றும் நம்ப ஆரம்பித்தான்


அவள் வெட்கத்தில் தரையை பார்த்துக்கொண்டே இருக்க ரிஷியோ ஆர்வமாக பவித்ராவை பார்த்துவிட்டு பிறகு வெங்கடை பார்த்தவன்


சரி நீங்க நாராயணன் சாரோட பையன் பவித்ரா உங்களோட அக்கா அதுக்கு நான் என்ன பண்ணனும் என்று விளையாட்டாக கேட்டான்


உடனே வெங்கட் யோசிக்காமல் என்ன மாமா இப்படி சொல்றீங்க அக்காவ பொண்ணு பாக்க வந்துட்டு என்ன பண்றதுன்னு கேக்குறீங்க எங்க அக்காவை உங்களுக்கு பிடிக்கலையா ஆனா எங்க அக்காவுக்கு உங்கள ரொம்ப புடிச்சிருக்கு எப்படி வெக்கப்படறானு பாருங்களேன் என்று கூற


ரிஷிக்கோ அதிர்ச்சி மேல் அதிர்ச்சி என்ன பொண்ணு பாக்க வந்தேனா ஹலோ நான் யாருன்னு நினைச்சு பேசிட்டு இருக்கீங்க


ஐயாம் ரிஷிகேஷ் ரிஷி மார்க்கெட்டிங்&டெவலப்பர்ஸோட ப்ராப்ரேட்டர் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ள பவித்ராவும் வெங்கட்டும் ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்


அதற்குள்ளாகவே பவித்ராவின் தந்தை மாப்பிள்ளையின் தந்தையை அழைத்துக்கொண்டு உள்ளே வந்தவர் இவர்களை பார்க்கவும் இவர்களை நோக்கி வந்தார்.

டேய் வெங்கட் இங்கு என்னடா பண்ணிக்கிட்டு இருக்க மாப்பிள்ளையும் அவங்க அம்மாவும் அங்கு உட்கார்ந்து இருக்காங்க என்று பேசியவர் மரியாதை நிமித்தமாக
சாரி சார் தப்பா எடுத்துக்காதீங்க

முக்கியமான ஒருத்தர் அங்க வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அது தெரியாம இவங்க உங்களோட பேசிட்டு இருந்ததாக அதான் உங்க முன்னாடி நான் கொஞ்சம் கடுமையான நடந்துகிட்டேன்

நீங்க வெங்கட்டோட ஃப்ரெண்டா என்று கேட்க அப்போதைய மன நிலைமையில் ரிஷியால் அவருக்கு எந்த பதிலையும் கொடுக்க முடியவில்லை பவித்ராவோ
ரிஷியை வைத்த கண் வாங்காமல் கண்களில் நீருடன் பார்த்துக் கொண்டே இருக்கிறாள்


அந்த முகம் அவனை என்னென்னவோ செய்கிறது அப்படியே இங்கிருந்து அழைத்துச் சென்று விடலாமா என்று கூட தோன்றுகிறது


பவித்ராவின் நிலையும் அப்படித்தான் என்னுடன் வருகிறாயா என்று கூப்பிட்டு இருந்தால் அப்போதே கிளம்பி இருப்பாள்
அப்படி ஒரு மன நிலைமையில் அவனை பார்த்துக் கொண்டிருக்கிறாள்


இங்கு நடந்த கூத்து எதையும் அறியாத நாராயணன் பவித்ராவின் கைகளைப் பிடித்து அழைத்துச் செல்ல


வெட்கட்டிற்கோ அதிர்ச்சி சாதாரணமாக இருந்த தனது அக்காவின் மனதில் சலனத்தை ஏற்படுத்தி விட்டோமோ என்று அக்காவிற்கு பார்த்தவுடன் ரிஷியை பிடித்துவிட்டது தான் வேறு மாமா என்றும் அழைத்து விட்டோமே என்று என்னென்னவோ
குழப்பம்


ரிஷியிடம் வந்த வெங்கட் சாரி சார் நாங்க யாரோனு நினைச்சு உங்க கிட்ட கொஞ்சம் அதிகப்படியா நடந்து கிட்டோம் எதையும் மனசுல வெச்சுக்காதீங்க என்று கூற தந்தையின் பின்னே அழுகையுடன் தன்னை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு செல்லும் பவித்ராவை பார்த்துக்கொண்டிருந்த ரிஷி


ஆமா உங்க வீடு எங்க இருக்கு என்று கேட்டான்


அதற்கு வெங்கட் இங்க தான் சார் ஒரு நாலு வீடு தள்ளி இங்க டீச்சர் வீடு எங்கனு கேட்டாலே ஈஸியா சொல்லிடு வாங்க என்று கூறியவன்


எதுக்காக சார் கேக்கறீங்க என்று கேட்டான்


அதற்கு சிரித்த ரிஷி இன்னைக்கு உன் அக்காவை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளைனு தான நினைச்சே


நானும் அப்படியே நினைச்சிக்கறேன் பொண்ண பாத்துட்டேன் பிடிச்சிருச்சு அதான் மேற்கொண்ட பேசுனும்னா அட்ரஸ் வேணும் இல்ல அதான் கேட்டேன் என்று கூறியவன் வெங்கட்டின் பதிலை எதிர்பார்க்காமல் சன்னதிக்குள் சென்றான்


அவனுடைய வாழ்க்கை துணையை தனக்கு அறிமுகப்படுத்திய அந்த கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக அதிர்ச்சியில் வெங்கட் வாயைத் திறந்தபடி நின்றுகொண்டிருந்தான்.


தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
5


பவித்ராவை நாராயணன் அழைத்துச்சென்று மாப்பிள்ளையின் குடும்பத்தாரிடம் அறிமுகப்படுத்த பவித்ராவை கண்ணை விட்டு வெளியே வரத் துடிக்கும் கண்ணீரை நாசுக்காக துடைத்த அவளுக்கு ஏனோ மனம் கனக்க ஆரம்பித்தது


ரிஷியை பார்த்த உடன் இவன் தான் தனக்கானவன் என மனதில் பதிய வைத்து விட்டாள் சில வினாடிகளிலேயே அவனுடன் நின்ற படி மணக்கோலத்தில் அழகும் பார்த்து விட்டாள்


இனி மற்றொருவருடன் தன்னால் எப்படி மணக்கோலத்தில் இருக்க முடியும் என்று தன்னைத்தானே கேள்வி எழுப்பிக் கொண்டாள்


அங்கிருந்து அனைவருக்குமே பவித்ராவை மிகவும் பிடித்துவிட்டது மேற்கொண்டு திருமண விஷயங்களைப் பற்றி பேசலாமா என்று கேட்க பவித்ராவின் தந்தை நாராயணன் பவித்ராவின் சம்மதத்திற்காக அவளை கேட்க அவளோ கற்சிலை போல எந்த ஒரு உணர்வும் இன்றி அசையாமல் நின்று கொண்டிருக்கிறாள்


ரிஷியோ வெற்றிகரமாக அவனுடைய தொழில் விஷயத்தையும் பேசியவன் சுவாமி சன்னிதானத்தில் தனக்கானவளை கண்ணில் காட்டிய கடவுளுக்கு நன்றி தெரிவித்தபடி அவனின் வீட்டிற்குச் சென்றுவிட்டான்.


வெங்கட்டிற்க்கோ ரிஷி சொன்ன விஷயம் புரிந்தது போலும் இருக்கிறது புரியாதது போலும் இருக்கிறது மிகப்பெரிய குழப்பம் அவன் செய்த கூத்து தானே இத்தனையும் தனது சகோதரியின் மனதில் வேறு அப்புதியவன் கல் எறிந்து விட்டான்
எப்படி பவி இதை கடந்து வருவாள் என்ற கவலை வேறு….


பதில் கூறாத மகளின் மௌனத்தைச் சம்மதமாக எடுத்த நாராயணன் தனது பெண் வெட்கப்படுகிறார் தனது பெண்ணுக்கு பரிபூரண சம்மதம் எனக்கூறியவர் வெங்கட் உடன் பவித்ராவை வீட்டிற்கு அனுப்பி வைத்தவர் பின்னால் நாங்கள் வருகிறோம் முன்னால் சென்று மதிய உணவுக்கான ஏற்பாடுகளைச் செய்யுங்கள் என்று கூறி அனுப்புகிறார்

வெளியே வரவரவே பவித்ரா அழ தொடங்கிவிட்டாள் தற்சமயம் பார்த்திருக்கும் பையனின் முகத்தைக்கூட பார்க்கவில்லை அவள் மனம் முழுவதும் ரிஷி மட்டுமே வியாபித்து இருந்தான்.

கண்டிப்பாக அவனைத் தவிர வேறு ஒருவனை தன்னால் கணவனாக கற்பனை செய்து பார்க்க முடியாது என தம்பியிடம் கூறியவள் எல்லாம் உன்னால தான் வந்தது நான் தான் அப்பவவே சொன்னேன்ல்ல அப்பா வந்ததும் போலாம்னு நீ தான் முந்திரிகொட்டை மாதிரி என்னை அவங்க முன்னாடி இழுத்து விட்ட என்று அவனிடம் சண்டையிட்ட


ஆயிரம் முறையாவது பவித்ராவிடம் மன்னிப்புக் கேட்டிருப்பான் வெங்கட் அதுமட்டுமின்றி இங்கு நடந்த விஷயத்தை எதையும் தாய் தந்தையிடம் கூறி விடாதே என்று மன்றாடியபடி கேட்டுக் கொண்டு வந்தான் இருவரும் ஒருவழியாக ரோடு முழுவதும் சண்டையிட்ட படியே வீடு வந்து சேர்ந்தனர்.


இருவரும் உள்ளே வருவுமே முதல் வேலையாக மேகலா பவித்ராவிடம் மாப்பிள்ளை பிடித்திருக்கிறதா என்று கேட்க அவளோ எதுவும் பதில் கூறாமல் அவள் அறைக்குள் சென்று விட்டாள்



தாய் மேகலாவோ பெண் வெட்கப்பட்டுக் கொண்டு உள்ளறையில் சென்று ஒளிந்து கொள்கிறாள் என்று நினைத்தவர் மாப்பிள்ளையை பற்றி வெங்கட்டிடம் விசாரிக்கத் தொடங்கினார் பையன் நேரில் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறான் என்று


அவனுக்கும் பவித்ராவின் மனநிலமை சுத்தமாக தெரியவில்லை மணமகன் என்று ரிஷியை முதலில் பார்த்ததை பெரிது படுத்த விரும்பாமல் மாப்பிள்ளை பற்றி தெள்ளத் தெளிவாக விளக்க தொடங்கினான்.

மனதில் சிறு நெருடல் இருந்தாலும் வெங்கட்டின் வாயிலாக மாப்பிள்ளையை பற்றி தெள்ளத் தெளிவாக கேட்டபின் மேகலாவிற்கு சுத்தமாக பயம் போய்விட்டது மகள் நல்ல இடத்திற்கு தான் திருமணம் செய்து போகிறாள் என்று நிம்மதி அடைந்தவர் கணவனின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தார்

சற்று நேரத்தில் நாராயணனிடம் இருந்து அவளின் மொபைல் போனில் அழைப்பு வந்தது பவித்ராவின் அலங்காரங்கள் எதையுமே கலைத்து விடாதே நாங்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறோம் என்று கூற தாய்க்கும் வெங்கட்டுக்கும் மிகப் பெரிய சந்தோஷம் மணமகனின் வீட்டாருக்கு பவித்ராவை பிடித்து விட்டதிற்க்காக

ஆனால் சம்பந்தப்பட்ட பவித்ராவின் மனநிலையை யாருமே அறிந்து கொள்ள முன்வரவில்லை.


சிறிது நேரத்தில் நாராயணன் மாப்பிள்ளை வீட்டாரை வீட்டிற்கு அழைத்து வர மாப்பிள்ளையின் குடும்பத்தாரையும் மாப்பிள்ளையையும் பார்த்ததுமே மேகலாவிற்கு மனம் குளிர்ந்தது


நன்கு படித்த நாகரீகமான குடும்பம் மாப்பிள்ளையின் வீட்டார்

அவர்கள் பேச்சு நடத்தை என ஒவ்வொன்றிலும் மரியாதை இருந்தது தனது மகளுக்கு இதுதான் சரியான வரன் என்று நினைத்தவர் மகளை அழைப்பதற்காக உள்ளே சென்றார்


பவித்ரா எதுவுமே தோன்றாத பிரமையில் அமர்ந்திருந்தாள் மாப்பிள்ளை வீட்டினர் வந்துவிட்டனர் முன்னாள் வா என்று அழைத்து வர திருமண தேதியும் நிச்சயம் தேதியையும் பொதுவாக பேச ஆரம்பித்தனர்
பவித்ராவோ மாப்பிள்ளையின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்க வில்லை அவன் மனம் முழுவதும் ரிஷி மட்டுமே இருக்கின்றான் ஏதோ ஒரு உள்ளுணர்வு சொல்கிறது இது எல்லாம் காலத்தின் கட்டாயத்திற்காக நடந்து கொண்டிருக்கிறது ஆனால் தனக்கு கணவனாக வரப்போகிறவன் கண்டிப்பாக ரிஷியாக மட்டும் தான் இருப்பான் என்று நினைக்கிறாள் அவனின் பெயர் கூட அவளுக்கு தெரியாது அவன் எப்பொழுது மாப்பிள்ளை அவன் இல்லை என்று கூறினானோ அதன் பிறகு அவன் பேசியது எதுவுமே தம்பிக்கும் அக்காவிற்கும் காதில் விழவே இல்லை அந்த அளவுக்கு அதிர்ச்சி ஆகி இருந்தனர்.

மாப்பிள்ளையின் தாயாரோ அவர் வாங்கி வந்த பூக்களை எடுத்து பவித்ராவிற்கு வைத்து விட்டவர் நெற்றியில் சிறிதளவு குங்குமத்தையும் வைத்து இனிமேல் நீ எங்கள் வீட்டுப் பெண் எங்கள் வீட்டுப் பெண்ணை பத்திரமாக பார்த்துக் கொண்டிருங்கள் என்று கூற அங்கு ஒரு இன்ஸ்டன்ட் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது.


அவர்கள் சம்பிரதாயப்படி பூ வைப்பது உறவினர்களை அழைக்காமல் இரு குடும்பத்தார் மட்டுமே நிச்சயம் செய்யும் ஒரு நிகழ்வாகும் அதை அங்கு கூற


மேகலாவும் அப்படி என்றால் நிச்சயம் முடிந்ததும் கண்டிப்பாக மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டில் சாப்பிடுவது தான் வழக்கம் அதனால் அனைவரும் மதிய உணவு அருந்த வேண்டும் என்று அன்பு கோரிக்கையை வைத்தார் மாப்பிள்ளை வீட்டினர் தாராளமா சாப்பிடலாமே அதான் பூ வச்சாச்சே பிறகென்ன என்று கேள்வி கேடாடபடி
அணைவரும் மதிய உணவை உண்டு முடிக்க பவித்ராவை தவிர அனைவருமே சந்தோஷத்துடன் இருந்தனர்.


வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக தனது தாயை அழைத்து கோவிலில் பார்த்த பவித்ராவை பற்றிக் கூற தாயோ ஆச்சரியமாக


என்ன ஒரு பொண்ண பாத்தியா...அவள் தான் கல்யாணம் பண்ணிக்க போறியா அது எப்படிடா இன்னைக்கு இருக்கற வாழ்க்கைக்கு சாத்தியப்படும்


ஒரு பொண்ண பார்த்து பழகி நம்ம குடும்பத்துக்கு ஓத்து வருமானு பார்த்ததுக்கப்புறம் தானே கல்யாணத்தைப் பத்தி யோசிக்க முடியும்


நீ பாதி நாள் வீட்டிலயே இருக்க மாட்ட அப்படியே இருந்தாலும் அப்போவும் லேப் டாப் ஒபன் பண்ணி வச்சிகிட்டு வேலையை தான் பார்ப்ப... போன வாரம் கூட எங்க கிளப்புல மெம்பராக இருக்கிற ஷீலாவோட பொண்ணை உனக்கு பாக்கட்டுமா ன்னு கேட்டதுக்கு இப்ப எல்லாம் கல்யாணம் வேணாம் நிறைய சாதிக்கணும் அப்பா தாத்தாவை விட அதிகமா சம்பாதித்த பிறகு கல்யாணம் அதுக்கு இன்னும் நாலஞ்சு வருஷம் போகட்டும்ன்னு என்னென்னமோ கதை பேசின
இன்னைக்கு என்ன திடீர்னு வந்து கல்யாணம் பண்ணனும்னு சொல்ல


இந்தப் பொண்ணுக்கு அந்த அளவு வேல்யூ ம்மா...நான் தாமதிக்கற ஒவ்வொரு நிமிஷமும் அவ எனக்கு கிடைக்காம போய்டுவா என்ற கவலை பட்டவன்

இன்னைக்கு அவளை பொண்ணு பாக்க வந்திருந்தாங்க மாப்பிள்ளை நான்னு நெனச்சி அந்த பொண்ணு என்னை பார்த்து வெட்கப்பட்டா பாருங்க ஒரு வெட்கம் அதிலேயே நான் டோட்டல் பிளாட் என்று ரசனையாய் கூறியவன்

நீங்க சொன்னீங்களே ஷீலா ஆண்ட்டியோட பெண்ணை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா வீக் என்ட் ல அவ கூட பப்க்கு போய் அவளுக்காக நான் ஊத்திக் கொடுக்கனும் இல்லனா அவ கிளப்க்கு போய்ட்டு வர்ற வரை நான் வீட்ல காத்திருக்கணும்


ஆனா நான் சொல்ற பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்காக அவ காத்திருப்பா வீகெண்ட்ல பப்க்கு கூட்டிட்டு போக வேண்டியதில்ல, அவ கிளப்புக்கு போயிட்டு வர்ற வரைக்கும் காத்திருக்கவும்
வேண்டியதில்லை அதுக்கு பதிலா


வாரம் ஒருமுறை கோவிலுக்கு கூட்டிட்டு போக சொல்லுவா யோசிச்சு பாருங்க நம்ம ஃபேமிலில யாராவது சேர்ந்து கோவில் போய் இருக்கீங்களா ஆனா நான் போவேன் அந்த பொண்ணை கூட்டிட்டு வாரம் ஒரு முறையாவது கோவில் போவேன்


ம்ம்...அவ பேரு கூட நல்ல பேரு சட்டுனு ஞாபகம் வரல ஆனா அந்த கோவிலில் இருந்து நாலு வீடு தள்ளி தான் அவ வீடு அவங்க அம்மா டீச்சர் போல


டீச்சர் விடுன்னு எங்கனு கேட்டா அடையாளம் கட்டிடுவாங்கனு அவ தம்பி சொன்னான் நீங்களும் அப்பாவும் போய் என்னன்னு விசாரிச்சு எனக்காக அவங்க அம்மா அப்பாவ கன்வின்ஸ் பண்ணி எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைக்கறீங்க என்று கூறி விட்டு சந்தோஷத்துடன் அவன் அறைக்குச் சென்று விட இதை அருகில் இருந்து கேட்டு கொண்டு இருந்த ராதா மேனகாவிடம் வந்து என்ன இவன் என்னனமோ சொல்லிட்டு போறான் டீச்சர் வீட்டு பொண்ணு எப்படி நம்ம குடும்பத்துக்கு ஒத்து வருவா நம்ம ஸ்டேட்டஸ் க்கு இதெல்லாம் ஒத்து வருமா என்று கவலையாக கேட்டாள்.


நானும் அதான் யோசிக்கிறேன் ராதா பக்கா மிடில் கிளாஸ் குடும்பம் நம்ம குடும்பத்துக்கு எப்படி ஒத்து வரும் இவன் வேற பிடிவாதக்காரன் சொன்னா சொன்னதுதான் இப்போ நாம போய் பேசி முடிக்கலனா இவனே டைரக்டா போய் பேசி கல்யாணத்தை பண்ணிக்குவான்

யாரும் ஒத்துக்கலனா பொண்ணை தூக்கிட்டு கூட வந்துடுவான் இப்ப என்ன பண்றது அவன் சொன்ன மாதிரி நாம ஒரு எட்டு போய் பார்த்துட்டு வரலாம்

எப்படியும் லோ க்ளாஸ் பொண்ணு அவனுக்கு செட்டாக மாட்டா என்ன ஆசைக்கு கொஞ்ச நாள் இருந்துட்டு ஒரு பெரிய அமௌன்ட் கொடுத்து செட்டில் பண்ணிட்டு டிவோர்ஸ் வாங்க வேண்டியதுதான் கசப்புனு தெரிஞ்சே குடிக்கனும்னு ஆசைபடறவனை என்ன பண்றது
குடிச்சிட்டு அவனே வேணாம்னு துப்பபோறான் அப்போ பாத்துக்கலாம்

எப்ப போறது ன்னு கேட்டுட்டு உன்கிட்ட சொல்றேன் ராதா நீயும் கூடவா என்று கூறியவள் அருகிலிருந்த ராகவியை பார்த்து நீயும் கூட வா ராகவி உன் அண்ணன் பாத்த பொண்ணு கிட்ட அப்படி என்ன ஸ்பெஷல்னு பாக்கனும்ல என்றவரிடம் ராகவி


நோ வே பெரியம்மா நம்ம வீட்டுக்கு ஒரு லோ கிளாஸ் பொண்ணு வர்றா நினைச்சால குமட்டுது அவளை நா வேற வந்து பாக்கனுமா...நீங்களே போய் பாருங்க என்று கூறிவிட்டு சென்றாள்.


தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
6

சரி அவ வரலனா போகட்டும் நீயும் நானும் போயிட்டு வரலாம்
வேணும்னா ராஜன் வர மாதிரி இருந்தா ராஜனின் கூப்பிட்டுகலாம் நானும் பழனி கிட்ட சொல்லி பார்க்கிறேன் என்று மேனகா கூறினார்


உடனே ராதா எனக்கு என்னவோ தேவையில்லாத விஷயம் இதுனு தோனுது பையனுக்கு புத்தி சொல்லறதை விட்டுட்டு அவன் சொல்றான் நாமலும் தட்டை தூக்கீட்டு போகணுமா எதுக்கும் கொஞ்சம் யோசி அக்கா ஒரு ரெண்டு நாளா ஆறப்போடுவோம் அவன் மறந்தாலும் மறந்திடுவான் அவன் பார்க்காத பொண்ணுங்களா


இந்த வார கடைசில ஒரு வெக்கேஷன் அரென்ஞ் பண்ணு வெளிய போய்ட்டு வந்தா மறந்து விடுவான் என்று ராதா கூறினார்


ம்ம்... பாக்கலாம் ராதா ஒரு ரெண்டு நாள் இதை பத்தி அவன்கிட்ட பேசவேணாம்

அதுக்க அப்புறமும் இந்த விஷயத்தில் அவன் பிடிவாதமாக இருந்தா அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிப்போம் சரி இப்போதைக்கு ரிலாக்ஸா இருப்போம் என்றவர் தங்கையை பார்த்து ராதா நான் பியூட்டி பார்லர் போகனும் கூட வரியா... இல்லன்னா நான் தனியா போய்க்கவா என்று ராதாவிடம் கேட்க நானும் வரேன் கா கொஞ்சம் வெயிட் பண்ணு நான் ரெடி ஆகிட்டு வரேன் என்று கூறியபடி ராதா உள்ளே சென்றார்.

நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில் தாய் இடத்தில் இருந்து எந்த ஒரு எதிர் வினையும் இல்லாததால் ரிஷி நேரடியாக அவன் தாயாரிடம் வந்து கேட்டான்


அம்மா அந்த பொண்ணு போய் பார்த்துட்டு வர சொன்னேன்னே போய் பார்க்கலையா என்று

இன்னும் போகல ரிஷி நீயும் வரியா எல்லாருமே சேர்ந்து போய் பாத்துட்டு வரலாம்…


ம்ம்... இல்லம்மா எனக்கு நிறையா வேலை இருக்கு நான் வரல நீங்களே போய்ட்டு வாங்களேன் கூட அப்பா சித்தியெல்லாம் கூப்பிட்டுக்கோங்க என்று கூறியவன்

இந்தாங்க இதுதான் அவங்க வீட்டோட எக்ஸாட் அட்ரஸ் அண்ட் லொகேஷன் என்று ஒரு பேப்பரை எடுத்து அதில் தெள்ளத்தெளிவாக அவர்கள் வீடு இருக்கும் வரைபடமும் அட்ரஸூம் இருந்தது


அதைப்பார்த்த மேனகா அப்போ இந்த நாலு நாள் நீ சும்மா இல்ல அவ வீட்டையும் அட்ரஸையும் தான் கரெக்ட்டா தேடி கண்டு பிடிச்சு இருக்க?ம்ம்... என்றவரை பார்த்து


அம்மா நாம யாரு பரம்பரை பரம்பரையா பிசினஸ் பண்றவங்க நமக்கு ஒரு பிஸினஸ் வேணும்னா அதை விட்டுக் கொடுப்போமா சொல்லுங்க எப்பவும் அது மேல ஒரு கண்ணு வைச்சிருப்போம் இல்ல அப்படிதான் அந்த பொண்ணு மேலயும் எனக்கு ஒரு கண்ணு இருக்கு என்று கூறினான்


உடனே மேனகாவும் பிஸினஸும் பொண்ணும் ஒன்னு இல்ல ரிஷி

இது உன்னோட வாழ்க்கை பிசினஸ்ல ஓரு கம்பிளிகேஷன்-னா அதை சரி செய்யலாம் லைஃப் ல ஒரு பிரச்சனைனா சரி பண்ண முடியாது என்ற பொறுப்பான ஒரு தாயாய் அவனுக்கு அறிவுரை வழங்கினார்


அம்மா முதல்ல நீங்க போயி பேசி இந்த கல்யாணத்தை செஞ்சி வைங்க அதுக்கப்புறம் அது கம்பிளிகேஷன்-னா இல்லை நார்மலானு நான் பாத்துக்குறேன் பிசினஸ்ல எவ்வளவோ பிரச்சனைகளை பாத்து சரிசெய்யற நான் என் லைஃப்ல வர்ற பிரச்சினையை பாத்து பயந்திடுவேனா என்ன? எதுவா இருந்தாலும் நான் பாத்துக்குறேன் நல்ல அம்மாவா போய் எனக்காக அந்த பொண்ணு வீட்ல பேசுங்க என்று கூறியவன் ஆள்காட்டி விரலால் நெற்றியை தேய்த்துக் கொண்டே அம்மா இன்னைக்கு வேணாம் ஞாயிற்றுக்கிழமை மாதிரி போங்க அப்போ தான் அவங்க வீட்ல எல்லாருமே இருப்பாங்க


அப்புறமா ஒரு சின்ன ரெக்வெஸ்ட் என்று தாயிடம் தயங்க

என்னடா அது பெரிய ரெக்வஸ்ட் என்று மேனகா கேட்க


அது ஒன்னும் இல்ல அந்த பொண்ணு வீட்டுக்கு போகும்போது நீங்களும் சித்தியும் புடவை கட்டிகிட்டு போனா நல்லா இருக்கணும் எனக்கு தோணுது வழக்கமா போடுறீங்களே ஸ்லீவ்லெஸ் டாப்ஸ் ஜீன்ஸ் அது மாதிரியெல்லாம் வேணாம்…
ஒருவேளை புடவை கட்ட விருப்பம் இல்லனா சுடிதார் மாதிரி ஏதாவது போட்டுட்டு போங்கம்மா என்று தயங்கியபடியே தாயின் முகத்தைப் பார்த்து கூற


அவரோ டிரஸ் கோடு சொல்லற..
ம்ம்... உன் அப்பா கூட இதுவரை இந்த மாதிரி எனக்கு டிரஸ் கோடு சொன்னதில்லை தெரியுமா என்று கோபமாக முறைத்தபடி கூற


சாரிமா ஜஸ்ட் தோணுச்சு மொத தடவை அவளை பார்க்கும்போது புடவை கட்டிட்டு வந்தாளா சோ நீங்க கட்டினா எப்படி இருப்பீங்கன்னு ஒரு ஆர்வம் தயங்கியபடி கூற

கோபத்தை துறந்து நொடியில் சிரித்த மேனகா அம்மா புடவை கட்டுங்க நா பாக்கணும்ன்னு சொன்னா நான் கட்டப்போறேன் அத விட்டுட்டு ஏண்டா சுத்தி வளைச்சு பேசிட்டு இருக்க போடா எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன் நீ போய் ஒழுங்கா பிசினஸை கவனி என்று வழியனுப்பி வைத்தவர் உடனே பவித்ராவை பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார்.

ரிஷிகேஷ் சொன்னதுபோல் அந்த வார ஞாயிற்றுக் கிழமை மேனகா கணவர் பழனி இருவரும் பவித்ராவின் வீட்டிற்கு நேரமாக கிளம்பி விட்டனர் . ரிஷி ஆபீஸ் கிளம்புவதற்காக லேப்டாப்புடன் அவன் அறையை விட்டு வெளியே வர இவர்கள் இருவரையும் பார்க்க அவ்வளவு அழகாக இருந்தது


தாயை நீண்ட நாட்களுக்குப் பிறகு புடவையில் பார்க்கிறான் மிகவும் இளமையாக தெரிந்தார் அழகிய மஞ்சள் நிற பட்டுப் புடவையில் ஆங்காங்கே கற்கள் பதிக்க பட்டிருக்க அதற்கு மேட்சாக வைர நெக்லஸூம் வைர வளையல்களும் அணிந்திருந்தார் கூந்தலை அழகாக கொண்டை போட்டு அதை சுற்றி விரியாத மல்லி பூக்களை கோர்த்து வைத்திருந்தார்.

தந்தையுடன் தாயை ஜோடியாக பார்ப்பதற்கு மிகவும் மங்களகரமாக இருந்தார் ஏற்கனவே தாய் அழகி இன்று பேரழகியாய் தெரிந்த தாயின் அழகை ரசித்துக் கொண்டே வந்தவன் அம்மா இன்னைக்கு நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று பாராட்டவும் செய்தான் அவரோ சற்று வெட்கப்பட்டுக்கொண்டே


போதும் ரிஷி நீயும் இவங்கள மாதிரி ஓட்டாத காலையிலிருந்து எல்லாரும் என்னை கேலி செஞ்சு ஒரு வழி ஆக்கிட்டாங்க என்று மேனகா கூற சிரித்த ரிஷி தாயை கீழிருந்து மேல்வரை பார்த்துவிட்டு அம்மா அவங்க மிடில் கிளாஸ் ஃபேமிலி இவ்வளவு ஆடம்பரமா போகனுமா என்ன ?கொஞ்சம் குறைத்திருக்கலாம் என்று கூற


இன்னைக்கு நான் ரொம்ப சிம்பிளா டிரஸ் பண்ணி இருக்கேன் ரிஷி இதே ஆடம்பரம்னா அம்மா கிட்ட இருக்கிற மீதி நகைகளை போட்டா என்ன சொல்லுவ என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ராதாவும் மிகவும் அழகிய அரக்கு நிற பட்டுப்புடவையில் அக்காவை போலவே வைரத்தால் தன்னை அலங்கரித்துக்கொண்டு முன்வந்தார் இருவரையும் ஜோடியாக பார்த்த ரிஷிக்கு ஏனோ அவ்வளவு நிறைவாக இருந்தது

இருவரும் உடுத்தும் ஆடை அணிகலன்கள் மட்டும் ஒன்றுபோல் கிடையாது பாசம் காட்டுவதிலும் இருவரும் அவனுக்கு ஒரே போல் தான் அம்மா சித்தி என்று பேதம் பார்ப்பதில்லை இருவருமே ஒரே மாதிரியான பாசத்தை தான் அவனுக்கு காண்பிக்கின்றனர்

மூவருமே கிளம்பி பவித்ராவின் வீட்டிற்குச் செல்லும் வரை எதுவும் தோன்றவில்லை ரிஷிக்கு பிறகுதான் சிறு படபடப்பு தோன்றியது.

பவித்ரா தங்கள் குடும்பத்தை பார்த்து பின் எப்படி நடந்து கொள்வாள் என்று கற்பனையில் நினைத்துப் பார்த்தான்

அவள் அன்று தன்னிடம் வெட்கப்பட்டது போல் இவர்களைப் பார்த்ததும் வெட்கப்பட்டுக் கொண்டு ஓடி பணிந்து கொள்வாள் என நினைத்தான்

பவித்ராவின் குடும்பமோ இவர்களின் ஆடம்பரத்தை பார்த்த உடன் ஏற்கனவே பேசி முடித்த மாப்பிள்ளையை வேண்டாம் என கூறிவிட்டு உடனே ரிஷியை மாப்பிள்ளை ஆக்கிக் கொள்வார்கள் என்று கற்பனை செய்து கொண்டிருந்தான்


ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தைப் பற்றி எதுவும் அறியாத ரிஷியின் புரிதல் அவ்வளவே அவர்கள் பணத்தைப் பார்த்ததும் மனம் மாறி விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டான்
ரிஷி மட்டுமல்ல அவனின் ஒட்டுமொத்த குடும்பமும் அப்படித்தான் தப்புக் கணக்குப் போட்டுக்கொண்டு பவித்ராவை பெண் கேட்பதற்காக சென்றார்கள்


பவித்ராவின் வீட்டிலோ மகளின் விருப்பத்தை வெளிப்படையாக கேட்டு தெரிந்து கொள்ளாத அவளின் பெற்றோர்கள் இன்னும் பதினைந்து நாளில் அவளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிச்சயத்திற்கு யார் யாரை அழைப்பது என உறவினர்கள் பெயரையெல்லாம் லிஸ்ட் அவுட் எடுத்துக் கொண்டிருந்தனர்

அந்த சமயத்தில் ரிஷியின் குடும்பத்தினர் அவர்கள் வீட்டு வாசலில் வந்து காரை நிறுத்தவும் வீட்டிலிருந்து நால்வருமே ஆச்சரியமாக பார்த்தனர் அவர்கள் வீட்டிற்கு இப்படி ஒரு சொகுசு காரில் யார் வந்திருப்பார்கள் என்று


ராதா மேனகா பழனி மூவரும் கம்பீரமாக கீழே இறங்கியவர்கள் உடன் வந்த டிரைவருக்கு கண்ணைக் காட்ட அவர் வண்டியின் பின் இருக்கையில் இருந்த தாம்பாளத் தட்டை தூக்கியபடி வந்தார் தாம்பாளத்தில் பவித்ராவிற்கு விலை அதிகமுள்ள ஒரு பட்டுப் புடவையும் அதற்கு மேட்சாக தங்கம் மற்றும் வைர நகைகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

மூவரும் வாசலுக்கு வரவுமே நாராயணன் பழனியை அடையாளம் கண்டு கொண்டார் கோவையிலேயே மிகப் பெரிய பணக்காரர் அல்லவா அவரை பார்த்ததும் கைக்கூப்பி வரவேற்றவர் மேகலாவிடம் அவரைப் பற்றிக் கூறினார்.


குழப்பத்துடனே நாராயணன் தம்பதியினர் அவர்களை வரவேற்க பவித்ராவா சத்தமில்லாமல் உள்ளறைக்குள் சென்று விட்டாள் வெங்கட் வந்தவர்களுக்கு கூல்ட்ரிங்ஸ் வாங்கி வர வெளியே சென்று விட

அவர்களை வரவேற்று உள்ளே அமர வைத்த நாராயணன் பழனியை பார்த்து சார் நீங்க என்ன இவ்வளவு தூரம் ஏதாவது முக்கியமான விஷயமா இல்லன்னா அட்ரஸ் மாறி வந்துட்டீங்களா என்று கேட்க

உடனே பழனியும் இது பவித்ரா வீடு தானே என்று கேட்க

குழப்பத்துடனே நாராயணன் ஆமாம் என்று கூற

அப்போ நாங்க சரியான அட்ரசுக்கு தான் வந்திருக்கோம் என்று மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடி கூறினர்.

குழப்பத்துடனே மேனகாவும் நாராயணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே மேற்கொண்டு என்ன பேசுவது என்று தவித்தனர் ராதாவும் மேனகாவும் வீட்டை தான் பார்க்கின்றனர் அவர்களின் கார்செட் கூட இதை விட பெரிது என்று தோன்றியது அங்கு கூட அவர்கள் காஸ்ட்லியான மார்பில் போட்டுள்ளனர் ஆனால் இவர்கள் வீட்டிலோ மகா மட்டமான டைல்ஸ் போட்டு இருக்கின்றனர் செருப்பை வேறு வாசலிலேயே கழட்டிவிட சொல்லிவிட்டார்கள் தரையில் கால் வைக்கவே அவர்களுக்கு அருவருப்பாக தோன்ற காலை தரையில் படாத வண்ணம் ஸ்டைலாக அமர்ந்திருக்கின்றனர் இது அனைத்தும் கவனிக்காத மாதிரி நாராயணனும் மேனகாவும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


சிறிது நேரம் அனைவருமே மௌனமாக இருக்க கூல்ட்ரிங்ஸ் வாங்க சென்ற வெங்கட் வாங்கி வந்ததை தாயிடம் தர அதை அவர் அனைவருக்கும் கண்ணாடி டம்ளரில் ஊற்றிக் கொண்டு வந்து கொடுக்க மரியாதைக்காக கூட இரு பெண்களும் அதைத் தொடவில்லை
பழனி மரியாதை நிமித்தமாக கையில் எடுத்துக் கொண்டார் ஆனால் குடிக்கவில்லை.


ராதாவோ மேனகாவை பார்த்து பேச்சை ஆரம்பி என்பது போல் ஜாடை செய்ய மேனகாவோ எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க

வந்ததிலிருந்து ஏதோ சொல்லணும்னு நினைக்கிறீங்க எதா இருந்தாலும் சொல்லுங்க எவ்ளோ பெரிய ஆளு நீங்க எங்க வீட்டை தேடி வந்து இருக்கீங்க கண்டிப்பா ஏதாவது முக்கியமான விஷயமாக தான் இருக்கும் என்னன்னு சொன்னீங்கன்னா எங்களுக்கும் கொஞ்சம் டென்ஷன் குறையும் என்று மேகலா அவர்களை பேச தூண்டினார்.



எதற்கும் அலட்டிக் கொள்ளாத சகோதரிகள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவர்கள் கண்டிப்பாக இந்த வீட்டில் சம்மதம் பேச வேண்டுமா என்று யோசித்தனர் ஏனோ அவர்களுக்கு எப்பொழுதுமே
நடுத்தர வர்க்கத்து மக்கள் கொஞ்சம் அலர்ஜி இன்று அது போல் ஒரு குடும்பத்தில் வந்து அமர்ந்து கொண்டு தனது மகனுக்காக பெண் கேட்கவேண்டும் என்று நினைக்கவே எரிச்சல் வந்தது

சற்று குரலை கமரிய படி மேனகா பேச ஆரம்பித்தார்
இங்க பாருங்க உங்க பொண்ண என் பையன் கோவில் பார்த்திருக்கான் பார்த்ததுமே புடிச்சி போச்சி கல்யாணம் பண்ணினா உங்க பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேனு சொல்லிட்டான் எப்ப கல்யாணம் வச்சுகலாம்னு சொன்னா அந்த டேட்ல கல்யாணத்தை வைச்சுக்கலாம் என்று சம்மதம் கேட்கவில்லை தனது மகனுக்கு உனது பெண்ணை திருமணம் செய்து கொடு என்று மறைமுகமாக கட்டளையிட்டார்.

தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
7

மேனகா சொன்னதைக் கேட்டு நாராயணன் மேகலா இருவருமே ஒரு போல அதிர்ச்சி அடைந்தனர்


உள்ளறையில் இருந்த பவித்ரா கூட அறையில் இருந்த படியே மேனகாவின் பேச்சைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள்


ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட நாராயணன் மேகலா தம்பதியினர் நீங்க என்ன சொன்னீங்க சரியா புரியல என்று கூற ராதா குறுக்கிட்டு உங்க பொண்ண எங்க பையன் கோவில்ல பார்த்தானாம் அவனுக்கு உங்க பொண்ண பார்த்ததும் பிடிச்சிருச்சு அதனால எப்ப கல்யாணம் வெச்சுக்கலாம்னு கேட்டுட்டு போறதுக்காக வந்திருக்கோம் என்று கூறினார்.


இல்ல நீங்க தப்பான அட்ரஸூக்கு வந்துட்டீங்கனு நினைக்கிறேன் என் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சு இன்னும் பதினைந்து நாள்ல அவளுக்கு நிச்சயதார்த்தம் ரெண்டு மாசத்துல கல்யாணம் எங்கள மன்னிச்சிடுங்க உங்க வீட்டுக்கு மருமகளாக வர்ற பாக்கியம் எங்க பொண்ணுக்கு இல்லை என்று மறைமுகமாக இடத்தை காலி செய்கிறீர்களா என்பதுபோல் நாராயணன் பேசி முடித்தார்.


மேனகாவும் அதிகாரமாக எல்லாம் தெரிஞ்சு தான் வந்திருக்கும் உங்க பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு தான் என் பையன் உங்க பொண்ண பார்த்து இருக்கான் சொல்லப்போனா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பாக்குறது முன்னாடியே என் பையன் உங்க பொண்ணை பார்த்துட்டான் நாங்க உங்ககிட்ட சம்மதம் கேட்டு வரல எப்ப கல்யாணத்தை வைத்திருக்கலாம்னு கேட்டுட்டு போறதுக்காக தான் வந்தோம் என்று அவர்கள் எடுத்து வந்த தாம்பாளதட்டை மேனகாவின் கையில் விடாபிடியாக திணித்தார் பிறகு


இந்த கிஃப்ட் பொண்ண சும்மா பார்க்க வரக்கூடாது என்பதற்காக இதை கொண்டு வந்தது இன்னும் எங்க வீட்டுக்கு உங்க பொண்ணை கல்யாணம் பண்ணி கொடுத்தீங்கன்னா இதுமாதிரி நிறைய வரும் இவ்வளவு அழகா ஒரு ராஜ வாழ்க்கை கிடைக்கும் போது ஏன் ஒரு மிடில்கிளாஸ் பையனுக்கு கட்டி கொடுத்து உங்களை மாதிரியே உங்க பொண்ணையும் கஷ்டப்பட வைக்கிறீங்க என்று அவர்களின் பொருளாதாரத்தை குறித்தும் பேசினார்.


உள்ளறையில் அமர்ந்தபடியே பவித்ராவும் வெங்கட்டும் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர் பவித்ராவிடம் வெங்கட்


இது ஒருவேளை அவரோட பேமிலியோ என்று ரிஷியை மனதில் வைத்துக் கொண்டு கேட்டான்

அதற்கு பவி சேச்சே...இருக்காதுடா அவரோட அம்மா அப்பா வேற நா நல்லா பாத்தேன் அவர் கூட நின்னுட்டு இருந்தாங்க நாம சுத்தி வரும் போதுதான் கோவிலுக்குள்ள போனாங்க…


ஒருவேளை அவரோட அம்மா அப்பாவா இருந்திருந்தா இப்போ ஓடிப்போய் ஓகே சொல்லி இருப்ப இல்ல என்ற பவி என்றவனிடம்


சும்மா இருடா அதான் இல்லனு ஆயிடுச்சில்ல அப்புறம் ஏன் சும்மா சும்மா அதையே ஞாபகப் படுத்துற என்று கோபப்பட்ட பவியிடம்



அப்போ வேற யாரைப் பார்த்து நீ சிரிச்சு வச்ச என்று கேள்வி எழுப்பினான் அவளின் தம்பி



டேய் வாரத்துக்கு இரண்டு முறை அந்த கோவிலுக்கு போறேன் யாராவது தெரிஞ்சவங்களை பாத்து நான் சிரிச்சிருப்பேன் அதை இவங்க பையன் பார்த்துட்டு அவரை பாத்து சிரிச்சதா நினைச்சு தப்பா புரிஞ்சுகிட்டு போய் வீட்ல சொல்லி இருப்பாங்க
அதுமில்லாம என் முகம் எப்பவுமே சிரிச்ச முகம் சும்மா பார்த்தாலே சிரிக்கிற மாதிரி இருக்குன்னு எல்லாரும் சொல்லுவாங்க அதை பாத்துட்டு போயி அந்த அரை லூசு இந்த முழு லூசுக கிட்ட சொல்லி இருக்கிறதோ என்னவோ என்று கேலி பேசி கொண்டிருந்தாள்.

வெளியே மேகலாவோ கோபமாக மேனகாவிடம் இங்க பாருங்க இவ்ளோ தான் உங்க மரியாதை
ஏதோ வீட்டுக்கு வந்திருக்கீங்க மரியாதையா உட்காரவைத்து பேசினா நீங்க என்னனமோ பேசிட்டு இருக்கீங்க


யாருங்க கேட்டா இதையெல்லாம் இதை எடுத்துட்டு போய் உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி ஒரு பொண்ணை பாத்து அந்த பொண்ணு கைல குடுங்க எங்க பொண்ணுக்கு இந்த கிஃப்ட் எல்லாம் வேணாம்

எங்க பொண்ணுக்கு எங்கள மாதிரி ஒரு மிடில் கிளாஸ் லைஃப் போதும்
இதையெல்லாம் பார்த்ததும் உடனே நீங்க சொல்ற கட்டுக்கதையை நம்பிட்டு தலையாட்டிடுவோம்னு நினைச்சிங்களா உங்க பையன் இந்த நாட்டுக்கே ராஜாவாக இருந்தாலும் பரவால்ல எங்க பொண்ணுக்கு வேண்டாம் முதல்ல இதை எடுத்துட்டு இடத்தை காலி பண்ணுங்க


உடனே மேனகா பாருங்க என் பையன் சொன்னதுக்காக தான் இந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் வரேன் இல்லன்னா எங்களுக்கு என்ன தலையெழுத்தா இந்த மாதிரி ஒரு குடும்பத்தில் வந்து பொண்ணு கேக்குறதுக்கு


அதைதான மேடம் நாங்களும் சொல்றோம் எதுக்காக இங்க வந்து உக்காந்துட்டு எங்களை டென்ஷன் படுத்திட்டு இருக்கீங்க நாங்கதான் வந்ததுமே தெளிவா சொல்லிட்டோமே எங்க பொண்ணுக்கு ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து முடிவு பண்ணிட்டோம் இன்னும் பதினஞ்சு நாள்ல நிச்சயம் ரெண்டு மாசத்துல கல்யாணம்னு
ஆனா உங்க காதுல தான் விழல போல தயவு செஞ்சு எங்களை டென்ஷன் படுத்தாமல் வெளிய போறீங்களா இல்லன்னா ...என்று மிரட்டும் தொனியில் மேகலா கூறினார்.

பழனி மேனகாவிடம் இங்க பாரு நாம் இங்கிருந்து போயிடலாம் ரிஷி கிட்ட போயி தன்மையா சொன்னா புரிஞ்சுக்குவான் ஏற்கனவே மாப்பிள்ளை பார்த்து பேசி கல்யாண தேதியே குறிச்சிட்டாங்க எதுக்கு தேவையில்லாத குழப்பம் கிளம்பு மேனகா என்று எழுந்தவர் மேகலா நாராயணன் இருவரையும் பார்த்து கைகூப்பி அவர் எங்களை மன்னிச்சிடுங்க இதோ பையன் சொல்லிவிட்டால் சரியாக விசாரிக்காமல் வந்துட்டேன் உங்க பொண்ணுக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆன விஷயம் தெரியாது நீங்க சந்தோஷமா உங்க பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுங்க நாங்க கிளம்புறோம் என்று நகர மேனகாவோ சிறிதும் அசைந்து கொடுக்காமல் அங்கே அமர்ந்தபடி மேகலாவை தான் முறைத்துக்கொண்டு இருந்தாள்


அக்காவின் கோபத்தை அறிந்த ராதாவோ உங்க பொண்ண கூப்பிட்டு அவ வாயால சொல்ல சொல்லுங்க எங்க பையனை அவ பாக்கலனு ...எங்க பையனை அவளுக்கு பிடிக்கலன்னு நாங்க கிளம்புறோம் என்று அதிகாரமாக கூறியபடி அங்கேயே அவளும் அமர்ந்து கொண்டார்.


நாராயணனும் அதுவரை பொறுமையாக வேடிக்கை பார்த்தவர் சகோதரிகள் இருவரையும் பார்த்து எங்க பொண்ணு வந்து உங்க முகத்தை பார்த்து சொன்னா கிளம்பி போயிடுவீங்கல்ல இல்ல என்று கேட்க ராதா மேனகா இருவருமே ஆம் என்பது போல் தலையசைத்தனர்


உடனே அங்கிருந்தபடியே அம்மாடி பவித்ரா என்று கூப்பிட அவளும் வெங்கட்டும் சேர்ந்தே அறையை விட்டு வெளியே வந்தனர்…


மேகலா மகளைப் பார்த்ததும் நீயேன் பவி வெளியே வந்த நீ உள்ள போ யாரோ வந்து நம்ம வீட்டுக்குள்ள அதிகாரம் பண்ணுவாங்க நாம இவங்களுக்கு பயந்து நம்ம பொண்ண வெளிய கூப்பிடனுமா நீ உள்ள போமா என்று கூற குறுக்கிட்ட பவித்ரா இவங்க ஏதோ என் வாயால கேட்கணும்னு நினைக்கிறாங்க ம்மா...அதை கேட்டுட்டா கிளம்பப் போறாங்கள் நீங்க ஏன் டென்ஷன் ஆகறீங்க என்று கூறியவள் இருவரையும் பார்த்து


இங்க பாருங்க ஆண்ட்டி உங்க பையன் யாரு என்னன்னு கூட தெரியாது அப்படி இருக்கும்போது திடீர்னு வந்து கல்யாணம் பண்ணிக்கோனா நா எப்படி பண்ணிக்க முடியும் முதல்ல எல்லாத்தையும் எடுத்துட்டு கிளம்புங்க ஆன்ட்டி என்று பவித்ரா முகத்தில் அடித்தது போல் கூறினாள்


அவமானத்தில் முகம் கருத்த மேனகா இல்லம்மா நீ தான் என் பையன் முன்னாடி போயி சிரிச்சு என்று இழுக்க


அந்த கோவில் வாசல் இருக்கிற பிச்சைக்காரங்க முன்னாடி கூட தான் போய் சிரிச்சுகிட்டே காசு போடுறேன் அதுக்காக அவங்களை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா நல்லா படிச்சு அந்தஸ்தில் இருந்தால் மட்டும் பத்தாது ஆன்ட்டி இந்த மாதிரி விஷயங்களையும் கொஞ்சம் யோசிச்சு பார்க்கணும் இப்படி அறிமுகமில்லாதவங்க வீட்டுல வந்து அதிகாரம் பண்ணிக்கிட்டு இருக்க கூடாது முதல்ல கிளம்புங்க ஆன்ட்டி என்று கூறியவள் உள்ளறைக்குள் சென்றவளின் அடிமனதில் சிறு நெருடல் இருந்தது கொஞ்சம் அதிகப்படியாக பேசி விட்டோமோ என்று ஒருவேளை இது அவனின் குடும்பமாக இருக்குமோ என்றுகூட யோசித்தாள். ஆனால் அதற்க்கு தான் வாய்ப்பே இல்லையே அவள்தான் கோவிலில் நன்றாக பார்த்தாளே அவளின் மனம் கவர்ந்தவன் அவனின் குடும்பத்தோடு தானே அங்கே நின்று கொண்டிருந்தான் என்று மனதை தேற்றிக் கொண்டாள்.

பவித்ராவின் பேச்சை கேட்ட பின் ராதா பழனி மேனகா மூவருக்குமே மிகவும் அவமானமாக போய்விட சத்தமில்லாமல் எழுந்து வெளியே வரத் தொடங்கினர்.


நாராயணன் அவர் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை அவரிடம் கொடுக்க மேனகாவும் எங்க பரம்பரையில கொடுத்த பொருளை திருப்பி வாங்கின சரித்திரம் இல்லை இதை நீங்களே வெச்சுக்கோங்க உங்க பொண்ணோட கல்யாண பரிசா என்று கூற


எங்க குடும்பத்திலேயும் அறிமுகமில்லாதவர்கள் கொடுக்கற எதையும் நாங்களும் வாங்கிக்க மாட்டோம் இதை தயவு செஞ்சு எடுத்துட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும் நாங்க மிடில் கிளாஸ் தான் பிச்சைக்காரர்கள் இல்லை
என்று கூறினார்


அவமானத்தில் முகம் கருத்த மேனகா டிரைவரை அழைத்து ராகவா அதை வாங்கிக் கோ என்று கூறினார் உடனே ராகவனும் அதை வாங்கி கொண்டு காரில் வைத்தவர் காரை இயக்க தொடங்கினார்.
கோபமாகப் பின்னால் வந்து அமர்ந்து இரு பெண்களும் முன்னால் அமர்ந்த பழனியின் முகத்தைப் பார்க்காமல் வேகமாக வாகனத்தை ஓட்டத் தொடங்கினார்
அவருக்கு உள்ளே இவர்கள் பேசியதும் அவமானப்படுத்தப்பட்டது எதுவும் தெரியாது,மீறி தெரிந்தாலும் வெளிகாட்டிக் கொள்ள மாட்டார்.


வீடு வரவுமே காரைவிட்டு இறங்கி வேகமாக மேனகாவும் ராதாவும் செல்ல ராகவன் பின்புறமிருந்து தாம்பாளத் தட்டை எடுத்து கொண்டு பின்னே வர அதை பார்த்த பழனி


ராகவா இதை எடுத்துட்டு போயி உன் பொண்ணு கிட்ட கொடுப்பா என்று கூறினார்


உடனே அவர் ஐயா இதெல்லாம் ரொம்ப விலை அதிகமான பொருள் இதை நான் எப்படி என்று இழுக்க


பாதி தூரம் நடந்து சென்ற மேனகா அங்கிருந்தபடியே உனக்கு வேணாம்னா தெருவுல இருக்குற ஏதாவது ஒரு பிச்சைக்காரிக்கு குடு ஆனால் அந்த பொருள் எதுமே இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது என்று அங்கிருந்த கத்த…


மேனகாவின் கோபத்தை அறிந்திருந்த ராகவன் எதுவும் பேசாமல் சந்தோஷமாக அந்தத் தட்டை தனது வீட்டுக்கு எடுத்துச் செல்ல பத்திரப்படுத்தினார்.


மாலை ரிஷி அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வர வீட்டில் தந்தை இல்லை என்று அவருக்கு ஏற்பட்ட அவமானத்தைத் துடைக்க அவர் பாரில் குடி புகுந்து விட்டார்

இங்கு மேனகா விற்கும் ராதா விற்கும் அவமானத்தை ஜீரணித்துக் கொள்ள முடியாமல் இருட்டு அறையில் இருவருமே அமர்ந்திருந்தனர் காலை பவித்ராவின் வீட்டிற்குச் சென்று வந்தது முதல் இப்பொழுது வரை இருவருமே தண்ணீர்கூட அருந்தவில்லை கோபம் ஒருபுறம் அவமானம் ஒரு புறம் இதுவரை அவர்கள் வாழ்க்கையில் இதுபோல் ஒரு அவமானத்தை சந்தித்ததே கிடையாது


ரிஷியின் சத்தம் கேட்கவுமே ராதாவை பார்த்த மேனகா ராதா நீ உன் வீட்டுக்கு போ என்று கட்டளையிட்டார்


பதில் ஏதும் கூறாத ராதா வெளியே செல்ல எத்தனிக்கும் பொழுது ரிஷி கண்ணுல நீ படாத அப்படியே அவன் கண்ணுல பட்டு அவன் ஏதாவது கேட்டாலும் கேட்டாலும் நீ வாய் திறக்கக்கூடாது என்று மீண்டும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

மகன் வரும் பொழுது தான் இப்படி கோபத்தோடு அமர்ந்திருந்தால் மகன் சுலபமாக வித்தியாசத்தை உணர்ந்து கொள்வான் என்று புரிந்ததவர் உடனே அறையை வெளிச்சமாக்கிய படி அங்கிருந்த கௌச்சில் சாய்வாக அமர்ந்துகொண்டார்.

தாயைத் தேடி வந்த ரிஷி சந்தோஷமாக தாயின் அருகில் வந்து அமர்ந்தவன் உடனடியாகவே வித்தியாசத்தை உணர்ந்து கொண்டான்

தாயை காலை எந்த ஆடை அலங்காரத்தோடு பார்த்தானோ அதே அலங்காரத்தோடு தாய் இப்பொழுது வரை அமர்ந்திருக்கிறார்

மேக்கப் கலைந்து முகமே பார்ப்பதற்கு வித்தியாசமாக தோன்றியது இத்தனை ஆண்டுகளில் தாயை ஒரு நாள் கூட இவ்வளவு சோர்வாக அவன் கண்டதே கிடையாது எப்போதுமே அழகாக ஆடைகள் உடுத்தி எப்போதுமே முகத்தில் கலையாத ஒப்பனையுடன் தான் இருப்பார் இன்று அந்த ஒப்பனை கலைந்தது கூட தெரியாமல் அமர்ந்திருக்கிறார்


தாயை ஆச்சரியமாக பார்த்தவன் என்ன ஆச்சு மா இன்னும் டிரஸ் சேஞ்ச் கூட பண்ணாம இருக்கீங்க போன கொஞ்ச நேரத்திலேயே வந்துட்டதா டிரைவர் அங்கிள் சொன்னாரே...என்று கூற


சற்று பதட்டமடைந்த மேனகா ரிஷியை பார்த்து வரும்போது டிரைவர் கிட்ட கேட்டுட்டா வர்ற என்று கேட்டார்


ஆமாம் என்று மகன் பதில் உரைக்க


வேற என்ன ராகவன் சொன்னான் என்று அதிர்ச்சியாக கேட்டாள்


ம்ம்... பத்து நிமிஷத்துல கிளம்பிட்டோம் சொன்னாரு வேற ஒன்னும் சொல்லலையே ஏம்மா ஏதாவது பிரச்சனையா என்று இப்பொழுது சற்று கவலையாக கேட்டான்.

உடனே இயல்புக்கு வந்த மேனகா சிரித்தபடியே பிரச்சினையா பிரச்சினை எல்லாம் ஒன்னுமில்ல நீ சொன்னபடி அந்த பொண்ணு பார்த்து பேசறதுக்கு போனோம் ஆனா அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்களாம் இன்னும் பதினஞ்சு நாள்ல நிச்சயம் ரெண்டு மாசத்துல கல்யாணம் ன்னு சொன்னாங்க

அதனால இனி மாப்பிள்ளை எல்லாம் மாத்த முடியாது உங்க பையனுக்கு உங்க அந்தஸ்துக்கு தகுந்த மாதிரி ஒரு பொண்ணை பார்த்துக்கோங்கனு சொல்லிட்டாங்க என்று தலை குனிந்தவாறு சொன்னாள்.


ஓஓஓ‌... பொண்ணு பாத்தீங்களா அம்மா அவ கிட்ட பேசினீங்களா அவ ஏதாவது என்னை பத்தி சொன்னாளா என்று ஏமாற்றத்தை மறைத்தபடி கேட்டான்.


ம்ம்...பேசினோம்... ரொம்ப அழகா இருக்கா ரொம்ப நல்லாவே பேசுறா இந்த மாதிரி பொண்ணு நம்ம குடும்பத்துக்கு மருமகளா வரலையேன்னு ரொம்ப ஏக்கமா போயிடுச்சுடா அவகிட்ட பேசி முடித்ததும் என்று பவித்ராவின் மீது மனதில் வன்மத்தை வைத்தபடி பற்களை கடித்துக்கொண்டு கூறினார்.


ம்ம்...ஆமா மா அவ ரொம்ப அழகு இல்லைமா... கோவில்ல கூட என்னை பார்த்து சிரிச்சுகிட்டே வெட்கப்பட்டுகிட்டு பக்கத்துல வந்தா கோயிலுக்குள்ள வந்ததிலிருந்து என்னை மட்டும்தான் பார்த்தா

அவ சொல்லல ஆனா அவ தம்பி சொன்னான் எங்க அக்காக்கு உங்களை ரொம்ப பிடிச்சு போச்சுனு அந்த வார்த்தை இன்னும் என் காதுல கேட்டுகிட்டே இருக்கு…என்று கூற

பிச்சைக்காரங்க முன்னாடி கூட தான் போய் சிரிச்சுகிட்டே காசு போடுறேன் அதுக்காக அவங்களை நான் கல்யாணம் பண்ணிக்க முடியுமா என்ற பவித்ராவின் குரல்தான் மேனகாவின் காதுகளில் ஒலித்தது.தன்னுடைய மகனைப் பிச்சைகாரர்களுடன் ஒப்பிட்டு விட்டாளே என்ற வன்மம் மேனகாவின் மனதில் தோன்றியது.


ஆனால் அதை வெளி காட்டினால் ரிஷியோ கண்டிப்பாக பவித்ராவை திருமணம் செய்து கொள்ளவே மாட்டான் அப்படி இல்லை என்றால் அவளை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு சட்டத்திற்குப் புறம்பான காரியம் எதிலும் இறங்குவான் இது இரண்டுமே மேகலா விற்கு பிடிக்கவில்லை


பவித்ராவை கதற விட வேண்டும் தன் கால்களில் விழுந்து கெஞ்ச வைக்க வேண்டும் அது மட்டுமல்ல அவளுடைய பெற்றோர்கள் மேனகா இடத்தில் வந்து எப்படியாவது எங்கள் மகளை உங்கள் மகன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கெஞ்ச வேண்டும்


அதற்கு என்ன செய்வது என்ன செய்தால் அவர்கள் மேனகாவின் காலில் வந்துவிழுவார்கள்

வீடுவரை சென்று பெண் கேட்டும் கூட அவமானப்படுத்தி அனுப்பி இருக்கிறார்கள் தன்னுடைய அவமானத்தை வீட்டில் சொன்னால் மகன் கண்டிப்பாக பொங்கி எழுவான் ஆனால் அவன் தற்சமயம் அப்படி பொங்க கூடாது


முதலில் பவித்ராவை வீட்டுக்குள் வர வைக்க வேண்டும் அதன் பிறகு மெதுவாக அவள் பேசியதும் அவர் குடும்பம் இவர்களை அவமானப்படுத்தி அனுப்பியதையும் தனது மகனிடம் கூற வேண்டும்

அப்பொழுது அவன் கொடுக்கும் அடிதான் பவித்ரா விற்கும் அவளது குடும்பத்தாருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டே மேகலா சற்றென்று புன்னகையை வரவழைத்துக்கொண்டு ரிஷியிடம்

ஆமாண்டா அவ பேசினது எனக்கும் கூட காதில ஒலித்துக்கொண்டே தான் இருக்கு என்னமா எங்கள கவனிச்சா தெரியுமா அவ கவனிச்ச கவனிப்புல என் உச்சி குளிர்ந்து போச்சு என் மனசும் வயிறும் அப்படியே நிறைந்து போச்சு என்று பற்களைக் கடித்தபடி கூறினார் பிறகு சந்தேகமாக நெற்றியை சுருக்கியபடி ஆமா ரிஷி


அவ வீட்டு அட்ரஸ் அவளை பத்தின டீடெயில்ஸ் எல்லாமே கலெக்ட் பண்ண தெரிஞ்ச உனக்கு அவளுக்கு வேற ஒருத்தனை பேசி முடித்து விஷயமும் தெரிஞ்சி இருக்கும்ல…

ம்ம்... தெரியுமா ஆனாலும் ஒரு நம்பிக்கை நீங்க நேர்ல போய் கேட்டா அவங்க ஒத்துபாங்கனு... அதும் இல்லாம அணைக்கு அவ கண்ணிலே ஒரு ஸ்பார்க் பாத்தேன்மா அது கண்டிப்பா டிஃபரண்டான ஒரு பார்வை


அந்த பார்வை சொல்லாம சொல்லிச்சி என்னை இப்பவே கூட்டிட்டு போயிடேனு அவங்க அப்பா அவளை கை புடிச்சி கூட்டிட்டு போகும்போது கண்ணில் தண்ணியோட என்னை திரும்பித் திரும்பிப் பார்த்துட்டுப் போனா அந்த செகண்ட்டே முடிவு பண்ணிட்டேன்

அவதான் என் வொய்ப்னு ஆனா இப்போ அவங்க அம்மா அப்பா பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொல்லும்போது ஒரு மாதிரி இருக்கு

இனி டைரக்டா பவித்ராவை பார்த்து பேசிவிட வேண்டியதுதான் இன்னிக்கி உங்களோட நானும் வந்து இருக்கனும்மா வந்து இருந்தா கண்டிப்பா அவங்க அம்மா அப்பா கிட்ட என்னை பத்தி பேசி இருப்பானு நினைக்கிறேன் …

அன்னைக்கு கோவிலிலேயே அவங்க அப்பா கிட்ட நா பேசி இருக்கனும் மிஸ் பண்ணிட்டேன்..ம்மா
பவித்ரா எதாவது சொன்னாளா நீங்க என்னைப் பத்தி சொன்னதும்...
என்று ஆர்வமாகக் கேட்டு மகனிடம்


இல்லடா அந்த பொண்ணு எங்க கிட்ட அதிகமா எல்லாம் பேசல ரொம்ப டல்லா தெரிஞ்சா அனேகமா அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு நினைக்கிறேன் அவங்க அம்மா அப்பா காகத்தான் இந்த கல்யாணத்தை பண்ணிக்கறானு தோணுது

நீ தான் அவளை பத்தி எல்லா விஷயமும் தெரிஞ்சி வைச்சிருக்கல
அவ எங்க எல்லாம் போவா எந்த நேரத்தில போவானு நீதான் அந்த நேரத்தில் அவளை போய் பார்க்கலாம்ல

ம்மா... பிசினஸ்ல ரொம்ப டைட்டா இருக்கேம்மா அதான் கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு மாசம் டைம் இருக்குல நிச்சயம் முடியட்டும் கல்யாணத்துக்குள்ள அவள மீட் பண்ணி பேசிக்கலாம் எனக்கு நம்பிக்கை இருக்கு மா நான் எப்போ அவளைப் பார்த்துப் பேசினாலும் அவ உடனே என்னை கல்யாணம் பண்ணிக்க ஒத்துப்பா...அவ கண்ணுல என் காதலை பாத்தேன்மா...
என்று அவன் கூற


ஒருவேளை நீ அவளைப் பார்த்து மீட் பண்ற நேரம் அவ உன்னையே மறந்து இருந்தா?

உன்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லிட்டா என்ன செய்வ ரிஷி


ம்ம்... அது பிரச்சனை இல்ல மா ஜஸ்ட் பாத்ததும் பிடிச்சது மறுபடியும் பார்க்கும் போது ஒரு வேளை அவ என்னை மறந்திருந்தா ஒரு சாரி ஒரு பாய் சொல்லிட்டு வந்திடுவேன் வாராவாரம் பப்க்கு போறோம் சில சமயம் சில பொண்ணுங்கள பார்க்கும்போது ஒரு ஈர்ப்பு வரும் அடுத்த வாரமே அது காணாம போகும் அதுபோல நினைச்சி மனசு தேத்திக்க வேண்டியது தான் என்ன இவளை கோவில்ல பார்த்ததால கொஞ்சம் சென்டிமென்ட் அவ்வளவுதான்



அதனால அவளை மெதுவா மீட் பண்ணிக்கறேன் ஒருவேளை இப்போ அவ என் மனசுல இருக்குற மாதிரி இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு என் மனசுல இருந்தா கண்டிப்பாக நான் மீட் பண்ணி பேசுவேன் என் காதலை அவ கிட்ட சொல்லுவேன் அவ ஒத்துக்கிட்டா ஆரம்பர கல்யாணம் இல்லனாலும் கூட அவளை நான் கல்யாணம் பண்ணிப்பேன் என்று உறுதியுடன் கூறினான்.



ம்கூம்...சரியில்ல ரிஷி இந்த விஷயத்தை இப்படி நீ ஆறப்போட கூடாது நீ மொத வேலையா பிசினஸ் எல்லாத்தையும் மூட்டை கட்டி வை எத்தனை கோடி நஷ்டம் ஆனாலும் சரி...


நாளைக்கு நீ அவளை மீட் பண்ற இந்த நிமிஷம் வரைக்கும் அவ மனசுல யாரு வேணாலும் இருக்கலாம் நீ அவளை சந்தித்த நிமிஷத்துக்கு அப்புறம் அவ மனசுல நீ மட்டும் தான் இருக்கணும்


உனக்கு பதினைந்து நாள் டைம் நீ என்ன பண்ணினாலும் சரி எப்படி பண்ணினாலும் சரி எவ்வளவு செலவு பண்ணினாலும் சரி பதினைந்தாவது நாள் முடிவில அவளோட நிச்சயதார்த்தம் அன்னைக்கு அவ விரல்ல மோதிரம் போடறது நீயா தான் இருக்கணும்


எத்தனையோ பிசினஸை சக்சஸா முடிச்சிருக்க ஆனா அது உன்னோட வெற்றி கிடையாது இவ மனசுல நீ இருக்கறது மட்டும் தான் உன்னோட உண்மையான வெற்றி


எந்தளவுக்கு நீ அவ மனசுல இடம் பிடிக்கணும்னா அவங்க வீட்ல இருக்கற எல்லாரையும் விட்டுட்டு உன் பின்னாடி வர தயாராக இருக்கனும் அதும் இந்த பதினைந்து நாள்ல உன்னால முடியுமா என்று சவாலாக ரிஷியை பார்த்தபடி கேட்டார்.


தாயின் இந்தப் பேச்சும் இந்த தோற்றமும் முதல்முறையாக ரிஷிக்கு சற்று கிலியை கொடுத்தது

என்னமா ஒரு சாதாரண விஷயத்துக்கு இவ்வளவு எமோஷனல் ஆகுறீங்க ஏதாவது வித்தியாசமா நடத்ததா பவி வீட்ல எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுங்க ம்மா..என்று வெளிப்படையாக கேட்டான்


அதற்கு தாய் மேனகா நீ பயபடற மாதிரி எதுமே நடக்கல ரிஷி என் பையன் முதன்முதலாக ஆசைப்பட்டு என்கிட்ட வந்து ஒரு பொண்ணை புடிச்சிருக்கு கல்யாணம் பண்ணி வைங்கனு கேட்டான் ஆனா அவன் ஆசையை என்னால நிறைவேத்த முடியல காரணம் அந்த பொண்ணோட பெத்தவங்க
பொண்ணு கிட்ட எங்களை மனசு விட்டு பேச விடல அதனால ஏமாற்றமா நாங்க திரும்பி வரவேண்டியதா போச்சி


அதனால என் பையனை நேரடியா போய் பாத்து பேச சொல்லறேன் இது தப்பாடா ஒரு அம்மாவா நான் உங்கிட்ட இப்படி பேசறது தப்புதான் ஆனா என் பையன் சந்தோஷத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பில்லனு தோனுது...


ஒஒ... அப்படி சொல்ல வரீங்களா சரிம்மா நாளைக்கே நான் மீட் பண்றேன் என்று கூற


நல்லா கேட்டுக்கோ ரிஷி இந்த பதினைந்து நாளாட முடிவில அவங்க அம்மா அப்பா தம்பி அந்த வீடு எல்லாத்தையும் விட்டுட்டு அவ உன் பின்னாடி வர தயாராக இருக்கனும் அது முடியும் னா மட்டும் இந்த விஷயத்தில இறங்கு இல்லனா விட்டுட்டு….


உனக்காக அவ உயிரையும் கொடுக்கத் துணிந்து இருக்கணும் அந்த அளவுக்கு அவ மனசுல இடம் பிடிக்கணும் நீ சொன்னியே அவ கண்ணில் காதல் தெரிந்தது அந்த காதல் என்னைக்கும் அவ கண்ணை விட்டு மறையாத மாதிரி தக்க வச்சுக்க வேண்டியது உன்னோட பொறுப்பு என்று கூற


சரி மா நான் பாத்துக்குறேன் என்று அவன் வெளியே செல்ல

ரிஷி என்று கத்தி அழைத்த தாய்

உன்ன நம்பி சொந்தக்காரங்க ஃபிரண்ட் ஸ் எல்லார்கிட்டயும் சொல்லலாமா என் பையனுக்கு கல்யாணம் வச்சிருக்கு இன்னும் பதினஞ்சு நாள்ல நிச்சயம் ரெண்டு மாசத்துல கல்யாணம் பொண்ணு பேரு பவித்ரானு என்று கண்களில் வன்மத்துடன் கேட்க


கட்டைவிரலை தூக்கி காண்பித்து தைரியமா சொல்லலாம்மா பிசினஸ் மட்டும் கிடையாது பவித்ரா மனசுல இடம்புடிக்கற விஷயத்திலேயும் நான் தோற்க மாட்டேன் என்று கூறி விட்டு வெளியேறினான்.


தொடரும்...
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
8

தாயிடம் பேசிவிட்டு வெளியே வந்த ரிஷி வாசலில் நின்றபடி தாயை ஒரு முறை எட்டிப் பார்த்தான்.

அவனுக்கு மேனகாவின் செயல்கள்,பேச்சு எல்லாமே புதியதாக தெரிந்தது அவர் மிகவும் கௌரவம் அந்தஸ்து என்று பார்ப்பவர் ஆனால் இன்று அவரே பவித்ராவை திருமணம் செய்து கொள்ள தன்னை தூண்டுகிறார்.


கண்டிப்பாக பவித்ராவின் வீட்டில் ஏதோ விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று நடந்திருக்கிறது அதை மறைக்கிறார் அவர் தன்னை எப்பொழுதுமே அழகாக வைத்துக் கொள்பவர்கள் இன்று இப்படி இருக்கிறார் என்றால் கண்டிப்பாக ஏதோ பெரிய சம்பவம் நடந்திருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது கண்டிப்பாக தாயும் சொல்லப்போவதில்லை சித்தியிடம் கேட்டால் வாய் திறக்கவே மாட்டார்

தாய் சித்தி இருவரின் உடல்கள் தான் வேறு, வேறு... ஆனால் உயிர் என்பது ஒன்று அவ்வளவு ஒற்றுமை ... தாய் சில விஷயங்களை கடுமையாக கூறுவார் அதே விஷயத்தை சித்தி பாலிஷ் ஆக கூறுவார்... தனது தாய் மேனகா கத்தி சாதிக்கும் விஷயங்களை சித்தி மௌனமாக இருந்த சாதிப்பார் இருவரின் ரத்தத்திலும் பிறப்பிலிருந்தே அதிகார தோரணை உண்டு.



தந்தையிடம் வேண்டுமானால் கேட்டுப் பார்க்கலாம் ஆனால் தந்தையை சந்தித்து பேசுவதும் கடினம் என்று யோசித்தவன் பொறுமையாக படியிறங்கி கீழே சென்றான்.

இன்னும் பதினைந்து நாட்களுக்குள் பவியின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் தாயிடம் வேறு கூறிவிட்டான்.
திருமணத்தை பற்றி அனைவருக்கும் அறிவித்து விடுங்கள் என்று…


ஒருவேளை பவியை நேரில் சந்தித்திக்கும் போது தன்னை திருமணம் செய்யும் எண்ணம் எல்லாம் இல்லை என்று சொன்னால் என்ன செய்வது

அன்று ஏதோ மாப்பிள்ளை என்று நினைத்து தன்னை பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டாள்

மாப்பிள்ளை நான் இல்லை என்று தெரிந்ததுமே மனசு மாறி இருக்குமா
இல்லை தாய் சொன்னது போல அவளுக்கு இப்பொழுது நடக்கவிருக்கும் திருமணத்தில் விருப்பம் இல்லாமல் தன்னை தான் நினைத்துக் கொண்டிருக்கிறாளா என்றும் கேள்வி எழுந்தது

தாயின் பேச்சு இன்று நம்பும்படியாக இல்லை அவள் பேச்சில் ஏதோ ஒரு சூது தெரிகிறது அவர் ஆடும் ஆட்டத்தில் பவித்ரா பலிகடா ஆகபோகிறாளோ?...

அவர் இது போலெல்லாம் தனது திருமணத்தில் இதுவரை அக்கறை காட்டியதில்லை மிகப்பெரிய பணக்காரர்கள் வீட்டுப் பெண்களைப் பற்றி தான் பேசியிருக்கிறார் முதல்முறையாக பவித்ராவை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துகிறார் இதை எந்த அளவுக்கு தான் நம்புவது...என்று பல்வேறு குழப்பங்கள் ரிஷியின் மனதில்.

எது எப்படி இருந்தாலும் முதலில் பவித்ராவை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும் அதன் பிறகு தான் அடுத்த கட்டத்தை பற்றி யோசிக்கவேண்டும்
என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அவனின் தந்தை தள்ளாடியபடி உள்ளே வந்துகொண்டிருந்தார் டிரைவரோ ஹால் வரை கொண்டு வந்து சோபாவில் அமர வைத்துவிட்டு சென்றுவிட்டார்.


தந்தையை பார்த்தவன் நேரடியாக தந்தையிடம் சென்று என்ன டாடி டிரிங்ஸ் அதிகமாகச் எடுத்து இருக்கீங்க பிசினஸில் ஏதாவது ப்ராப்ளமா?..

அப்படி இருந்தா என்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல நான் பாத்துப்பேன்ல என்று கேட்டவனிடம்

உளறியபடி பிசினஸ் எல்லாம் பிரச்சினை இல்லடா உன் வாழ்க்கைல தான் பிரச்சனை வந்திடுமோனு எனக்கு பயமா இருக்கு


உன் அம்மாவை நம்பாதே அந்த பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்காத என்று மொட்டையாக கூறியபடி அப்படியே சாய்ந்து விட்டார்


அம்மாவை ஏன் நம்ப கூடாது எந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறுகிறார் என்று மேலும் குழப்பமானது ரிஷிக்கு.

ஏதோ ஒன்று சரியில்லை தன்னுடைய வாழ்க்கையில் ஏதோ ஒரு புயல் வந்து ஓய போகிறது அது மட்டும் ரிஷிக்கு புரிகிறது ஆனால் என்ன என்று அவனால் உணர்ந்து கொள்ள முடியவில்லை தந்தை போதையின் உச்சத்தில் சோபாவிலே சாய்ந்து விட வீட்டு வேலை ஆட்களை அழைத்து தந்தையை அவரின் அறையில் படுக்க வைக்கும் படி பணிந்து விட்டு அவனுடைய அறைக்கு வந்தான்.

அதன் பிறகு அன்று நடந்த எதையும் ஞாபகத்திற்கு கொண்டு வராமல் உறங்கியும் விட்டான் மறுநாள் காலையிலேயே பவித்ராவை பற்றி முழு விபரங்களையும் தெரிய வேண்டி தன்னுடைய அந்தரங்க காரியதரிசியை அனுப்பி வைத்தான்.

அவரும் சரியாக இரண்டு மணி நேரத்திலேயே பவித்ராவை பற்றிய மொத்த ஜாதகத்தையும் கொண்டு வந்து அவன் கையில் கொடுத்தான்.

அவள் வாரத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் கண்டிப்பாக அந்த கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தாள்.

பவியின் வயது அவளின் கல்வித்தகுதி உயரம் உடல் எடை வரைக்கும் அவனது கையில் இருந்தது இன்று திங்கட்கிழமை நாளை கண்டிப்பாக மாலை வேளையில் துர்க்கைக்கு விளக்கு போட கோவிலுக்குச் செல்வாள்.

அந்த நேரம் அவளை சென்று சந்திக்க வேண்டும் என முடிவு எடுத்துக் கொண்டவன் வீட்டுக்குள் வர வரவே மேனகா எதிர்கொண்டான்.அவரின் முதல் கேள்வியே பவித்ராவை சென்று சந்தித்தாயா என்பது தான்


அவருக்கு மகன் பவித்ராவை திருமணம் செய்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் கிடையாது அவர்களின் வீடு தேடி சென்ற தங்களை அவமானப்படுத்தி அனுப்பிய அந்தக் குடும்பத்தை பழி தீர்க்க வேண்டும்


தன்னிடம் முகத்தில் அடித்தது போல் பேசிய பவித்ரா காலம் முழுவதும் கண்ணீர் சிந்த வேண்டும் அவள் தாயும் தந்தையும் அதை பார்த்து மன நிம்மதியின்றி தவிக்க வேண்டும் இதுதான் மேனகாவின் எண்ணம்

அவரைப் பொறுத்தவரைக்கும் தங்களை ஒருவர் எதிர்த்தால் அவர்கள் இருந்த தடமே இல்லாமல் செய்து விடுவதுதான் அவரின் வழக்கம்.

ஆனால் பவித்ராவின் விஷயத்தில் அப்படி இல்லை அவர்கள் இவர்களை அவமானப்படுத்தி விட்டார்கள் அந்த அவமானத்தை அவர்களின் கண்ணீரை கொண்டு தான் துடைக்க வேண்டும் என்று மனதிற்குள் சபதம் எடுத்திருக்கிறார்

இதை அறியாத ரிஷி தாய் கேட்ட கேள்விக்கு பொறுப்பான மகனாய் பதிலளிக்கிறான் இல்ல ம்மா நாளைக்கு தான் போய் அவளைப் பார்க்கலாம்னு இருக்கிறேன்


நீ தாமதிக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு மருமகளா வர்ற வாய்ப்பு குறைவு என்று கூறும் தாயை கேள்வியுடன் பார்த்த ரிஷி அம்மா நீங்க எப்ப இருந்து இப்படி எல்லாம் மாறினிங்க


உங்களுக்கு மிடில் கிளாஸ் லோ கிளாஸ் எல்லாம் பிடிக்காது ஆனால் நீங்களே ஒரு மிடில்கிளாஸ் பொண்ணை வீட்டுக்கு மருமகளாக வரனும்னு ஆசை படறதை பார்க்கும் போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கும்மா என்று கூற

சிரித்த மேனகாவோ பையன் ஆசைப்பட்டறதுக்கு அப்புறம் அது மிடில்கிளாஸ்,லோ கிளாஸ்,ஹை கிளாஸ் யாரா இருந்தாலும் அந்த பொண்ணை வீட்டுக்குப் மருமகளா கூட்டிட்டு வர வேண்டியது தானே ஒரு நல்ல அம்மாவோட கடமை அதைத்தான் நான் செய்றேன் என்று கூறியவர் மீண்டும் அவனை பார்த்து கூறுகிறார் பதினைந்து நாள்ல ஒரு நாள் வேஸ்ட் பண்ணிட்ட இன்னும் பதினாலு நாள் தான் இருக்கு ஞாபகம் வச்சுக்கோ ரிஷி இது பிசினஸ் இல்ல உன் வாழ்க்கை என்று கூறி விட்டு உள்ளே சென்றார்.

செல்லும் மேனகாவை யோசனையாக பார்த்துக் கொண்டிருந்த ரிஷிக்கு ஒரு விஷயம் மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்தது

தாய் தன்னை வைத்து ஏதோ ஒரு விளையாட்டை விளையாடிக் கொண்டிருக்கிறார் அது என்னவென்று தெரியவில்லை அவனுக்கும் இந்த விளையாட்டு பிடித்திருக்கிறது

இந்த கண்ணாமூச்சி விளையாட்டின் முடிவு இன்னும்‌ பதினாலு நாட்களில் தெரிந்துவிட போகிறது அதுவரை பொறுமை காக்கலாம் என்று எண்ணிக்கொண்டான்

ஆனால் அவனின் முடிவில் தெள்ளத் தெளிவாக இருக்கிறான் பவித்ராவின் மனதில் இடம் பிடித்து அவளின் முழு சம்மதத்துடன் அவளைத் திருமணம் செய்ய வேண்டுமென்று நினைத்தவன்
பவித்ராவின் மனதில்தான் எப்படி இடம் பிடிப்பது என்று யோசிக்க தொடங்கினான்.

மறுநாள் பவித்ரா வரும் நேரத்திற்கு சற்று முன்பாகவே கோவிலுக்கு சென்று விட்டான் அவள் தோழிகளுடன் கோவிலுக்கு உள்ளே வர இவன் அவள் கண்ணில் படும் தூரத்திலேயே நின்று கொண்டிருந்தான்


அவனின் முதல் திட்டம் அதுதான் அவள் உள்ளே வரும்பொழுது தன்னைப் பார்த்ததும் அவளின் நிலை என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்


அன்று போல் இன்றும் தன்னை ரசனையுடனும் காதலுடனும் பார்த்தால் தன்னுடைய காதலை அவளிடம் சொல்ல வேண்டும் அப்படி இல்லை என்றால் முடிந்தளவு அவளது வாழ்க்கையை விட்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும் முடிவெடுத்து இருக்கிறான்

பவித்ரா அவனை பார்த்ததும் முகத்தில் அதிர்ச்சி கலந்த ஒரு சந்தோஷத்தை காட்டியவள் உடனடியாக கண்கலங்க தலையை குனிந்து கொண்டு அவனை பார்க்காதவாறு கோவிலின் உள் பிரகாரத்திற்க்குள் செல்கிறாள்.


அவள் எல்லா சாமிகளையும் கும்பிட்டுவிட்டு வரும் வரை அவள் கண்ணில் படாதவாறு மறைந்துகொண்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவளின் கண்கள் அவனை தேடி அலைகிறது இறுதியாக விளக்கு போடுவதற்காக எலுமிச்சையை வெட்டி அதன் சாறுகளை எடுத்து விட்டு எலுமிச்சையின் தோலை பின்புறமாக திருப்பி வைத்து அதில் நல்லெண்ணெயை ஊற்றி திரியில் நனைத்து பற்ற வைத்தவள் கண் மூடி கடவுளை வேண்ட ஆரம்பித்தாள்.


கண்களில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டுகிறது சத்தமாக வாய்விட்டு வேண்டுகிறாள் ஏன் எனது வாழ்க்கையில் இத்தனை குழப்பத்தை கொடுக்கிறாய்

ஏதோ கானல் நீராக வந்து சென்றிருக்கிறார் என்று நினைத்தால் இன்று ஆற்று நீராக என் முன்னாலேயே மீண்டும் என்னை கண்முன் காட்டுகிறாய்


உனக்கு நான் என்ன செய்தேன் ஒவ்வொரு வாரமும் மறக்காமல் வந்து உனக்கு விளக்கு போடுவதால் எனக்கு இவ்வளவு கஷ்டத்தை கொடுக்கிறாயா யாரை மறக்க வேண்டும் என்று இன்று வந்தேனோ அவனையே என் முன்னால் காமித்து ஏன் இந்த கண்ணாமூச்சி விளையாட்டை ஆடுகிறாய் தாயே என்று வேண்டியபடி கண்களை திறக்க எதிரில் ரிஷி கைகளைக் கட்டியபடி அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் யாராவது தன்னை பார்க்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்க்க இறுகிய முகத்துடன் ரிஷி யாரும் நம்மள பாக்கல பவித்ரா

எல்லாருமே அவங்க பிரச்சனைக்கான தீர்வை கடவுள் கிட்ட கேட்டுக்கிட்டு இருக்காங்க


நீ என்னை மறந்திருப்பியோனு பயந்து தான் உன்னை பார்க்க வந்தேன் ஆனால் நீ என்னை இன்னும் மறக்கல எனக்கு அது போதும்


உன் கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசனும் அது இங்கனாளும் சரி இல்ல வெளியனாளும் சரி ஆனா கண்டிப்பா நான் உன்னோட பேசனும் என்று கூறியவன் அவனின் விசிட்டிங் கார்டை எடுத்து சாமியின் முன்பு வைத்துவிட்டு இதில் என்னோட போன் நம்பர் பர்சனல் மெயில் ஐடி எல்லாம இருக்கு நீ எது மூலமா வேணாலும் என்னை கான்டெக்ட் செய்யலாம்
என்று கூறிவிட்டு கோவிலை விட்டு வெளியே வந்தான்.


அவனுக்கு மனம் எங்கிலும் சந்தோஷம் மட்டுமே எங்கே பவித்ராவிற்கு தன்னை பிடிக்காமல் போய்விடுமோ என்ற கவலை இருந்தது.

தான் ஏதாவது அதிகப்படியான கற்பனையில் இருக்கிறேனோ என்றெல்லாம் நினைத்து பயந்து இருந்தான்.


என்ன தான் பிறக்கும் பொழுதே பணக்காரனாக பிறந்தாலும்... பிசினஸில் கொடிகட்டிப் பறந்தாலும் ஒரு பெண்ணின் மனதில் இடம் பிடிப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்லவே ஆனால் இப்பொழுது ஒரு பெண் தனக்காக அழுது வேண்டிக் கொண்டிருக்கிறாள் அந்த நிம்மதியுடன் வீடு சென்றான்.


பவித்ராவும் யாருக்கும் தெரியாதபடி விசிட்டிங் கார்டை எடுத்து தனது ஆடைக்குள் மறைத்து வைத்துகொண்டு தோழிகளுடன் வீடு வந்து சேர்ந்தாள்.


வந்ததும் முதல் வேலையாக அவள் ரிஷியின் அலைபேசி எண்ணை மனப்பாடம் செய்ய ஆரம்பித்தாள்.


அவளுடைய மொபைல் போனிலும் அவனுடைய நம்பரை பர்சனல் என சேவ் செய்து வைத்தாள் அதன் பிறகு ஏனோ அவ்வளவு நிம்மதி அவள் மனதில்.


அன்று இரவு நீண்ட நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினாள் ரிஷியை நேரில் சந்திக்க வேண்டும் பேச வேண்டும் என்றெல்லாம் பவித்ராவிற்கு தோன்றவில்லை அவனை கோவிலில் சந்தித்ததே மிகப்பெரிய சந்தோஷமாக தோன்றியது.

அவள் ஏற்கனவே மனதில் நினைத்தது தான் அவளின் திருமணத்திற்கு முன்பு மீண்டும் ரிஷியை சந்திக்க நேர்ந்தால் அவன்தான் கடவுள் அவளுக்காக படைக்கப்பட்டவன் என்று.


ரிஷிக்கு பவிக்கு தன்னை சந்திக்க விருப்பம் இருந்தால் கூப்பிடுவாள் அதனால் இனி அவளின் வாழ்க்கையில் தலையிட கூடாது என்று நினைத்திருந்தான்


கேட்ட தாயிடமும் கோவிவில் நடந்த அனைத்தையும் கூறினான் பிறகு அவளை சந்தித்து தனியாக பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் ஆனால் அவள் என்னை கூப்பிட்டால் மட்டுமே இனி அவளுடைய வாழ்க்கைக்குள் போவது இல்லை என்றால் ஒதுங்கி விடுவது ஏனோ தெரியவில்லை அவளுடைய வாழ்க்கையில் தேவையில்லாமல் நான் நுழைகிறேனோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது என்று வெளிப்படையாகவே தாயிடம் கூறிவிட்டான்


மேகனாவிற்கு அவ்வளவு நம்பிக்கை தனது மகனை நேரில் சந்தித்தபோது பவித்ராவிடம் மாற்றம் வந்திருக்கிறது அப்படி என்றால் கண்டிப்பாக அவள் அழைத்து பேசுவாள் அப்படி பேசிவிட்டால் மகன் பின் வாங்க மாட்டான்.

மகன் திருமணம் செய்த பிறகு அவளை கவனித்துக் கொள்ளலாம் என்று மனதில் நினைத்து கொண்டார்.








இங்கு மாப்பிள்ளை வீட்டிலோ பவியின் திருமண நிச்சயத்திற்கு தேவையான புடவை நகைகள் வாங்க வேண்டும் என்று அவளை அழைத்துக் கொண்டு செல்ல நடக்கும் எந்த விஷயமே பவித்ராவிற்கு விருப்பம் இல்லாமலே நடந்தது.


அவளுக்கு ஏனோ மாப்பிள்ளையே முகத்தைக்கூட பார்க்க பிடிக்கவில்லை அவன் ஏதாவது பேசினால் கூட வெட்டு தெறித்தது போல் பேசி விட்டு நகர்ந்து விடுகிறாள்.

அவன் அருகில் வந்தால் நாசுக்காக ஒதுங்கிக் கொள்வது இது எல்லாமுமே மாப்பிள்ளையின் மனதில் சிறு சங்கடத்தை கொடுக்க பவித்ராவை தனிமையில் அழைத்து இதற்கு கண்டிப்பாக ஒரு தீர்வை காண வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான்.


பவித்ராவிடம் தனியாகப் பேச வேண்டும் என்று தனிப்பட்ட அலைபேசி எண்ணை கொடுத்து விட்டு வந்தும் கூட அவள் பேச தயாராக இல்லை என்று புரிந்து கொண்ட ரிஷி நேரடியாக சந்திக்க நாள் பார்த்து காத்திருந்தான்.

இப்படியாக இரு ஆண்கள் காத்திருக்க பவித்ராவிற்கு பார்த்த மாப்பிள்ளை தனது நண்பர்களை எல்லாம் நிச்சயத்திற்கு அழைக்கவேண்டும் பவித்ராவையும் உடன் அழைத்துச் செல்கிறேன் என்று பவித்ராவின் பெற்றோர்களிடம் அனுமதி கேட்க முதலில் தயங்கிய அவர்கள் நண்பனின் மகன் அதுவும் பவித்ராவை திருமணம் செய்து கொள்ளப் போகிறவர் தானே என்று நினைத்து அவன் உடன் அனுப்பி வைத்தனர்.

ஆனால் மாப்பிள்ளையோ அவளை அழைத்துச் சென்றது ஊருக்கு ஒதுக்கு புறமாக இருந்த தனியார் நட்சத்திர விடுதிக்கு அங்கு நண்பர்களுக்கு பவித்ராவை அறிமுகம் செய்து வைப்பதற்காக சிறிய அளவிலான மது விருந்தினை ஏற்பாடு செய்திருந்தான்

இதை அறியாத பவித்ராவும் உடன் சென்றுவிட்டாள் சற்று நேரத்திலேயே அனைவரும் மது அருந்திவிட்டு ஒரு சினிமாப் பாடலை போட்டபடி ஆண்களும் பெண்களும் நடனம் ஆட தொடங்கினர்.

பவித்ராவின் மாப்பிள்ளைக்கு மது பழக்கம் கிடையாது ஆனாலும் அவர்களின் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளத் தவறவில்லை பவித்ராவை நடனமாட அழைக்க பவித்ராவிற்கு இது மிகவும் எரிச்சலைக் கிளப்பியது நாசூக்காக மறுத்தவள் தனியாகவே அமர்ந்து கொண்டாள்.


எப்போதடா வெளியே செல்லலாம் என்று பவி காத்துக் கொண்டிருக்க கடைசியாக அனைவரும் பவித்ராவை மாப்பிள்ளையும் சேர்த்து வைத்து போட்டோ எடுக்கலாம் என அவர்களை ஜோடியாக நிற்க வைத்தனர் வேண்டா வெறுப்பாக மாப்பிள்ளையின் அருகில் வந்து நின்ற பவித்ராவின் தோள்மீது கை போட்டபடியும் இடுப்பை அணைத்தபடியும் மாப்பிள்ளை போஸ் கொடுக்க


ஒரு கட்டத்தில் மேல் பொறுத்துக் கொள்ள முடியாத பவித்ரா அனைவர் முன்பும் அவன் கையை தட்டி விட்டாள்

கோபமடைந்த மாப்பிள்ளையும் என்ன பவித்ரா கொஞ்சம் கூட மேனர்ஸ் இல்லாமல் என்று அவளை கடிந்து கொள்ள

மேன்ஸ் பத்தி நீ எனக்கு சொல்லித் தர்றியா


நிச்சயத்துக்கு ஃப்ரண்ட்ஸை இன்வைட் பண்றேன்னு தானே கூட்டிட்டு வந்த ஆனா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இவ்வளவு நேரமா என்னை இங்க உக்கார வச்சதுமில்லாம போட்டோவுக்கு போஸ் குடுக்கறேனு ரொம்ப ஓவரா பண்ணற
எனக்கு தான் பிடிக்கலன்னு தெரியுது இல்ல அப்புறம் எதுக்கு மறுபடியும் மறுபடியும் மேல கை வைக்கிற என்று எல்லோர் முன்பும் கோபமாக பேச


என்ன பவித்ரா இது குழந்தை மாதிரி பிகேவ் பண்ணிகிட்டு கொஞ்சம் சிரிச்ச மாதிரி இரு என்று கூறியபடி மீண்டும் அவள் தோளின் மீது கைவைக்க வர கோபத்தில் யோசிக்காமல் அவனை கையை மீண்டும் தட்டி விட்டாள்.

மேல கை வைக்காதன்னா வைக்காத அவ்ளோ தான் என்று அவன் முகத்தை
பார்த்தபடி கூறினாள்.

நண்பர்கள் பெண் தோழிகள் அதிர்ச்சியில் இவர்களைத்தான் பார்த்துக்கொண்டிருந்தனர்

உடன் இருந்த பெண் தோழிகளில் ஒருவர் மாப்பிள்ளை பையனிடம் வந்து கௌஷிக் ப்ளீஸ் அவங்களுக்கு இதெல்லாம் பிடிக்கல போல நீ வீட்டுக்கு கூட்டிட்டு போ நாங்கல்லாம் கிளம்புறோம் சாரி சிஸ்டர் என்று கூறியபடி அங்கிருந்த நண்பர்கள் தோழிகள் அனைவருமே அவனிடம் மன்னிப்புக் கேட்டபடி ஒவ்வொருவராக நகரத் தொடங்கினர்


அவமானமடைந்த கௌஷிக் கல்யாணம் பண்றதுக்கு முன்னாடியே என் பிரண்ட்ஸ் முன்னாடி இன்செட் பண்ணிடல்ல இதுக்கு கண்டிப்பா நீ பதில் சொல்லனும் பவித்ரா என்று கூற

முதல்ல இந்த கல்யாணம் நடக்குதானு பாரு அதுக்கப்புறமா உனக்கு நான் பதில் சொல்லனுமா வேணாமானு யோசிக்கிறேன் என்று கூற


நண்பர்கள் முன்பு அவமானப்பட்டதற்காகவும் பவித்ராவின் இந்த பேச்சு எரிச்சலை ஏற்படுத்த

என்ன பவித்ரா ரொம்ப ஓவரா பேசிட்டு இருக்க ஒரு போட்டோ எடுக்கும் போது தோளில் கை போடறதும் இடுப்புல கை படுறது காமன் இஸ்யூ அதுக்காக கல்யாணமே வேணாம்னு சொல்லுவியா…என்று ஆழ மூச்சை இழுத்து விட்டவன்.

ம்ம்...ஒகே...சாரி...ஐம் ரியலி சாரி
உன்னோட பேரண்ட்ஸ் என்னோட பரேண்ட்ஸ்க்கு தெரியாம உன்னை இந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு வந்தது என்னோட தப்பு தான் அதுக்காக மனப்பூர்வமா உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன் இந்த விஷயத்தை இப்போ அப்படியே விட்டு விடலாம் வீட்ல தயவு செஞ்சி சொல்லிடாத ...ஆனால் ஒரு விஷயம் அத மட்டும் கிளியர் பண்ணிக்கறேன்
நாளைக்கு கல்யாணத்துக்கு அப்புறம் இதைவிட அதிகமாகவே நாம போட்டோ எடுப்போம் அப்போ ஸ்டேஜில இதே மாதிரி அன்டிசன்டா நடந்துப்பியா? என்று கேள்வி கேட்ட கௌஷிக்கிடம்


ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறமா போட்டோ ஷூட் பண்ணும்போது இதே மாதிரி எனக்கு அன்கம்ப்ஃர்டபுளா இருந்தா இப்படித்தான் நடந்துப்பேன் கௌஷிக் என்றாள்.


பைத்தியம் மாதிரி உளறாத பவித்ரா உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் இன்னும் என்னென்னவோலாம் இருக்கு ஒவ்வொரு முறையும் உன் மேல கை வைக்க நான் பர்மிசன் வாங்கிட்டு இருக்கனுமா கொஞ்சம் பிராக்டிக்கலா பேசு

ப்ளீஸ் கௌசிக் பதிலுக்கு பதில் உன்கிட்ட பேசற மனநிலையில நான் இல்லை என்னை கொண்டு போய் வீட்ல வீடு எதுவா இருந்தாலும் ஒரு ரெண்டு நாள் கழிச்சி பேசிக்கலாம் என்று கூற


சிறிது நேரம் தலையில் கைவைத்து யோசித்த கௌசிக் சாரி பவித்ரா இந்த மாதிரி ஒரு ஆக்டிடியூடோட இருக்குற பொண்ணு கூட என்னால லைஃப் லாங் டிராவல் பண்ண முடியாது சாரி பவித்ரா இந்த கல்யாணம் நடக்கப் போறதில்லை


விருப்பமில்லாத உன்னை இங்க கூட்டிட்டு வந்து உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் உனக்கும் எனக்கும் செட்டாகாதுனு எப்போ தோணிடிச்சோ அதுக்கப்புறம் என்னால உன்கிட்ட இயல்பா இருக்க முடியாது

நீ ஆட்டோவோ இல்லனா ஃகால் டாக்சியோ பிடிச்சி வீட்டுக்கு போய்க்கோ,

வீட்ல பொய்யெல்லாம் சொல்ல வேண்டாம் இங்க என்ன நடந்துச்சோ அதையே சொல்லு அவங்க புரிஞ்சுபாங்க இந்த கல்யாண ஏற்பாடு மேற்கொண்டு நடக்க விடாம நான் பாத்துக்கறேன்.
என்று கூறியபடி கௌசிக் வெளியேற அதிர்ச்சியில் பவித்திரா சிலைபோல் அங்கேயே நின்றாள்


சில வினாடிகள்தான் பிறகுதான் உணர்வு வந்தவள் அவன் பின்னே ஓடத் தொடங்கினாள் அதற்குள்ளாகவே வெளியே வந்தவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.

அவன் பின்னே பெற்றோர்கள் அனுப்பி வைத்ததால் பவித்ரா கையில் மொபைல் போனை எடுத்து வரவில்லை செலவிற்கு பணமும் வைத்துக்கொள்ளவில்லை இப்படி அம்போ என்று விட்டு விட்டு சென்றால் அவள் எப்படி வீட்டுக்கு செல்வது இது எந்த இடம் என்று கூட அவளுக்கு தெரியவில்லை எப்படி வீட்டினரை அழைப்பது எப்படி தான் வீட்டுக்குச் செல்வது என்று யோசித்தவள் அந்த விடுதியின் வாசல் பக்கம் வந்து ஒரு நாற்காலியில் பயத்துடன் அமர்ந்தாள்.

அப்பொழுது எதேர்ச்சியாக ஆபீஸ் மீட்டிங் காக அங்கு வந்த ரிஷியைக் கண்டவள் அவன் பின்னே ஓடத் தொடங்கினாள். ரிஷிக்கு எப்பொழுதுமே ஒரு பழக்கம் அவன் எங்கு சென்றாலும் லிப்டை உபயோகப்படுத்த மாட்டான். அதனால் அருகில் இருந்த படிக்கட்டுகளில் வேகமாக ஏறத் தொடங்கியிருந்தான் பவித்ராவும் அவனின் பின்னே
சார் சார் என்று அழைத்தபடி அவன் பின்னே வேக நடையில் செல்ல

ரிஷி உடன் வந்த பணியாளர்களில் ஓருவர் அவனிடம்
சார் ஒரு பொண்ணு உங்களை பாத்து ஒடி வருது சார் என்று கூறும் பொழுது மூன்றாவது மாடியில் அவனின் கம்பெனி ஏற்பாடு செய்திருந்த ஹாலின் முன்புறம் நின்றிருந்தான்.


என்னது என் பின்னாடி ஒரு பொண்ணு ஓடி வருதா யார் அது என்று ஆச்சரியத்துடன் திரும்பி பார்த்தால் பின்னால் பவித்ரா வேகமாக இவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.

யாருடைய அழைப்பிற்காக அவன் காத்துக்கொண்டிருந்தானோ அவளே இப்பொழுது நேரடியாக அவனின் கண்முன் வந்து கொண்டிருக்கிறாள்.


பவித்ரா அருகில் வந்ததும் சந்தோஷத்துடன் என்ன இது தனியா பேசணும்னு போன் நம்பர் கொடுத்துட்டு வந்தா போன் பண்ற வழியைக் காணோம் இப்படி நான் வர்ற இடத்துக்கு எனக்கு முன்னாடி வந்து வெயிட் பண்ணிட்டு இருக்க

ஒரு அரை மணி நேரம் வெயிட் பண்ணுங்க நான் உள்ள போய் முக்கியமான மீட்டிங்கை முடிச்சுட்டு வந்து உங்களோட பேசுறேன் என்று கூறிவிட்டு அவனும் மீட்டிங் ஏற்பாடு செய்திருந்த ஹாலுக்குள் சென்றான்.

பதட்டத்துடன் தனது புடவை முந்தியை எடுத்து கைகளில் சுருட்டிக் கொண்டிருந்த பவித்ராவுக்கு அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை


மீட்டிங்காக ஏற்பாடு செய்திருந்த ஹாலுக்கு வெளியேவே காத்திருக்க ஆரம்பித்தாள்

தற்சமயம் அவளுக்கு இந்த விடுதியில் அவனைத் தவிர வேறு யாரையும் தெரியாது

கௌசிக் அவளை அழைத்து வந்திருந்தது ஒரு நட்சத்திர விடுதிக்கு அது பார் வசதி கொண்டது இவளுக்கு முதலிலேயே தெரிந்து இருந்தால் கண்டிப்பாக அவன் பின்னே வந்து இருக்கமாட்டாள்.

இப்போது வசமாக வந்து சிக்கிக் கொண்டது போல் தோன்றியது,எந்த இடம் என்று தெரியவில்லை ,ஊருக்கு ஒதுக்குபுறம் அது மட்டும் உறுதி...வரும் பொழுது கௌசிக்வுடன் பேச பயந்து தூங்குவது போல் நடித்துக் கொண்டு வந்தது எவ்வளவு பெரிய தவறு என்று இப்பொழுதுதான் புரிகிறது



கௌஷிக்கின் மீது அளவு கடந்த கோபம் வந்தது என்ன தான் ஒரு பெண்ணைப் பிடிக்கவில்லை என்று கூறினாலும் இப்படியா பாதியில் விட்டுவிட்டு செல்வது…


ஆனால் கௌஷிக்கோ சிறிது தூரம் வெளியே சென்றவன் மனம் கேட்காமல் காரைத் திருப்பியவன் மீண்டும் விடுதிக்குள் வந்தான்.பவித்ரா அங்கு இல்லாததைக் கண்ட கௌஷிக் பயத்துடன் அவளை விடுதியின் தரைத்தளம் முழுவதும் தேட ஆரம்பித்தான்.


பவித்ராவோ மூன்றாவது மாடியில் ஒரு மூலையில் இருந்த மீட்டிங் ஹாலின் முன்பு நேரத்தை பார்த்துக்கொண்டே ரிஷிக்காக காத்து கொண்டு இருக்கிறாள்.

அரை மணி நேரத்திற்கு மேலாக தேடிய கௌஷிக் அங்கிருந்து ஒரு சிலரிடம் விசாரிக்க யாருமே பவித்ராவை கவனிக்கவில்லை மீண்டும் வெளியே வந்தவன் வாகனத்தை மெதுவாக இயக்கியபடி பவித்ராவை தேடிக் கொண்டே வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.


மேலே மீட்டிங் முடிந்து வெளியே வந்த ரிஷி வாசலிலேயே காத்திருந்த பவித்ராவை பார்த்ததும் தான் நினைவு வந்தது பவித்ராவை அப்படியே விட்டு விட்டு உள்ளே சென்றது.

தனக்குத் தானே தலையில் அடித்துக் கொண்டவன் சாரி பவித்ரா மீட்டிங் டென்ஷன்ல அப்படியே உன்னை மறந்து இங்கேயே விட்டுட்டு போயிட்டேன் வா கீழ காபி ஷாப்ல
காபி குடிச்சிட்டே பேசலாம் என்று கூறியவன் பவித்ராவின் பதிலை கேளாமலே விடுவிடுவென படிகளில் இறங்கி தொடங்கினான்.

தொடரும்....
 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
9


இப்பொழுது பவித்ரா என்ன செய்ய வேண்டும் அவன் பின்னே ஓட வேண்டுமா இல்லை என்றால் வேறு யாரிடமும் உதவி கேட்டு அவள் வீட்டுக்கு செல்ல வேண்டுமா எதுவும் புரியாமல் தலையில் கை வைத்தபடி அதிர்ச்சியில் அங்கேயே நின்றாள்.

பாதி படிக்கட்டுகள் வேகமாக இறங்கியவனுக்கு அப்போதுதான் தோன்றியது பவித்ரா பின்னே வரவில்லை என்று வேகமாக மேலே சென்றவன் பவித்ராவின் கைகளைப்பிடித்து என்ன அப்படியே அப்பப்போ சிலை மாதிரி நின்னுக்கற... என்கிட்ட பேசணும்னு தானே இவ்வளவு தூரம் என்ன தேடி வந்து இருக்க அப்புறம் என்ன தயக்கம் வா என் பின்னாடி என்று அவள் கைகளைப் பிடித்து அழைத்துச் சென்றான்.

என்ன இவனை சந்தித்து பேசுவதற்காக நான் இவ்வளவு தூரம் வந்தேனா இது என்ன புது விதமான குழப்பம் என்று அவனின் கைகளில் இருந்து தன் கைகளை நாசூக்காக உருவிக்கொண்ட பவித்ரா அவனை தர்மசங்கடத்துடன் பார்த்தபடியே நடக்க ஆரம்பித்தாள்.

கீழே அழைத்துச் சென்றவன்
அவளை ஒரு டேபிளில் அமர வைத்துவிட்டு அவர்களுக்கு வேண்டிய வற்றை ஆடர் செய்தான்
பிறகு எதிரில் இருப்பவளை பார்த்து சரி பவித்ரா என்ன பேசணும் என்று கேட்க


அவளோ சிறிது தயங்கியபடி இல்ல இது எந்த இடம் என்று கேட்டாள்


உடனே அவன் நெற்றியை சுருக்கியபடி என்ன…?

எந்த இடம்னா கேட்ட...எந்த இடம்னு தெரியாமலா இவ்வளவு தூரம் வந்த என்று ஆச்சரியத்துடன் கேட்க


மீண்டும் தயங்கியபடி எனக்கு ஒரு ஆட்டோவோ இல்லனா டாக்ஸியோ பிடிச்சி தர்றிங்களா எனக்கு மெயின் ரோடு எங்கனு தெரியல தனியா போக பயமா இருக்கு என்று கூறும் பொழுதே அவள் கண்களில் நீர் தேங்கியது

அதிர்ச்சியில் அவளைப் பார்த்தவன் பவித்ரா அப்போ நீ எப்படி இங்க வந்த எந்த இடம்னு கூட தெரியலனா என்று நெற்றியில் கை வைத்து யோசித்தவன் யாரோட வந்த யாரு உன்னை இங்க விட்டுட்டு போனது என்று நேரடியாக கேட்டான்.


பவி பதில் கூறாமல் டேபிள் மீதிருந்த தனது இரு கரங்களையும் பார்க்க அதற்குள் ஃகாபி வர அவளுக்கு எடுத்து கொடுத்தவன்
கவலையாக பவித்ராவின் முகத்தையே பார்த்தான்


நீ வந்தது உன் வீட்டுக்கு தெரியுமா என்று கேட்க


அடக்கி வைத்திருந்த கண்ணீர் விழி தாண்டி கீழே விழ தெரியும் என்பது போல் தலையசைத்தாள்.

டிஷ்யூ எடுத்து கண்ணீரைத் துடைத்துக் கொள் என்று கொடுக்கும் பொழுதே ரிஷியின் மனம் துயரத்தில் ஆழ்ந்து இருந்தது


அவளின் இந்தக் கண்ணீருக்கு யார் காரணமாக இருந்தாலும் அவர்களை சும்மா விடப் போவதில்லை என்று உறுதி கொண்டவன்


சரி உன் அம்மாக்கு ஃகால் பண்ணலாம்ல என்று கேட்க மொபைல் போன்,பர்ஸ் எதும் எடுத்துட்டு வரல என்று கூறினாள்

ஒருத்தர நம்பி இவ்வளவு தூரம் ஃபோன் பர்ஸ் எதுவுமே எடுத்துட்டு வராம இருந்தனா நீ அவங்களை எந்தளவு நம்பி வந்திருப்பனு தெரியுது அது யாரா இருந்தாலும் சரி உன் நம்பிக்கையை உடைச்சவங்கள நான் சும்மா விட போவதில்லை என்று கோபமாக கூறவும்

தப்பு என்னோடது தான் அவங்க மேல இல்ல என்று கூறினாள்.

சரி தப்பு அவங்க மேல இல்ல... அந்த அவங்க யாரு...

கௌஷிக் என்ன கல்யாணம் பண்ணிக்க இருந்தவரு என்றவள் நடந்தவற்றை சுருக்கமாக கூறி முடித்தாள்.


அவள் சொன்னவற்றை பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தனுக்கு எவ்வளவு அடக்கியும் சிரிப்பை நிறுத்த முடியவில்லை தன்னுடைய சிரிப்பு அவளை காயப்படுத்தி விடக்கூடாது என்று எவ்வளவோ கன்ட்ரோல் செய்து அவனால் முடியவில்லை


ஏன் சிரிக்கிறீங்க நான் அழுறது உங்களுக்கு சிரிப்பா இருக்கா?

சத்தியமா இல்ல ஒரு போட்டோ எடுக்க ஆசைப்பட்டவனை கல்யாணமே வேணாம்னு சொல்லி ஒட வச்சிட்டியே அதை நினைத்து சிரிச்சேன்

ஒரு சாதாரண விஷயம் போட்டோ எடுக்கும்போது மேல கை பண்றது... இப்போ நீ என்னோட செல்பி எடுக்க வந்தா என்னையும் அறியாம ஒரு கையை உன் இடுப்பில இல்லனா தோள்ல படுறது சாதாரணம்.


அப்படி ஒன்னுமேயில்லாத விஷயத்துக்காக அவனை பிரண்ட்ஸ் முன்னாடி அவமானப்படுத்தி ஓடவிட்டுடியே அத நெனச்சு சிரிக்கிறதா இல்ல உன்மேல கோபப்படறாதானு சத்தியமா தெரியல பவித்ரா என்று கூற


ஆம்பளைகளுக்கு வேணா மேல கைப்பற்றுவது சாதாரண விஷயமா இருக்கலாம் ஆனா ஏற்கனவே ஒருத்தனை மனசுல நினைச்சுட்டு இருக்கற பொண்ணுக்கு அடுத்தவன் யார் தொட்டாலும் அது அருவருப்பான விஷயம் தான்

ஒருவேளை உங்களை சந்திக்காம இருந்திருந்தா நீங்க என் மனசுக்குள்ள வராமல் இருந்திருந்தா நானும் இந்த ஈவென்டை ஜாலியா என்ஜாய் பண்ணி இருப்பேன்


ஆனா என் மனசு புல்லா நீங்க தான் இருக்கிங்க உங்க கூட மனசளவுல குடும்பம் நடத்திட்டு இருக்கும்போது எப்படி இனி ஒருத்தரோட கை என் மேல படறதை என்னால ஏத்துக்க முடியும் என்று அவளின் காதலை பட்டென்று போட்டு உடைத்தாள்.


அவள் கூறியதின் அர்த்தத்தை கூட அவள் உணரவில்லை ஆனால் அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையிம் அர்த்தத்தையும் புரிந்து கொண்டவன் சிலைபோல் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தான்

பிறகு பவித்ரா என்ன சொன்ன மறுபடியும் சொல்லு என்று தயங்கியபடியே அவளிடம் கேட்க


அவள் அவனைப் பார்த்து எப்போ உங்கள நான் மொத மொதல்ல பார்த்தேனோ அப்பவே நீங்க என் மனசுக்குள்ள வந்துட்டிங்க


இரண்டாவது முறை பார்த்தும் நீங்க தான் என் கணவர்னு முடிவு பண்ணிட்டேன்


இன்னைக்கு இந்த ஹோட்டல்ல இத்தனை பேர் இருக்கும்போது அவங்கள எல்லாம் விட்டுட்டு உங்க பின்னாடி ஏன் ஓடி வந்தேனு புரிஞ்சிப்பீங்கனு நினைக்கறேன்


எனக்கு தெரியாதா இங்க இருக்கிற யார்கிட்டயாவது ஃபோன் வாங்கி என் வீட்டுக்கு போன் பண்ணி சொல்லனும்ங்கற விவரம்

இல்ல இந்த ஹோட்டல்லேயே ஒரு கால் டாக்சியை அரெஞ்ச் பண்ணிக் கொடுங்கன்னு கேக்க தெரியாதா ஏன் அதையெல்லாம் விட்டுட்டு உங்க பின்னாடி நான் ஓடி வரணும்.

எனக்கு ஒரு பிரச்சனை ஆரம்பிக்கும்போதே
நீங்க வர்றீங்க அப்படின்னா என்ன அர்த்தம் எனக்காக அந்த கடவுள் படைச்சது உங்களை தான் உங்களுக்கு தோணலையா?

உங்க கூட ஆயுசுக்கும் வாழபோறதும் நான் தான் என் கூட இருக்கப் போறது நீங்க தான் இதை விட என் மனசுல இருக்கறதை ஒடச்சு சொல்ல முடியல


ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலனா கூட நா ஒதிங்கி இருப்பேன்.


ஆனால் உங்களுக்கும் என்னை புடிச்சிருக்கு அப்படி இருக்கும்போது
நான் ஏன் மனசை கல் ஆக்கிட்டு நான் ஏன் கடனேனு வாழனும்?
அதான் கௌசிக் கிட்ட நான் அவ்ளோ முரட்டு தனமா நடந்துகிட்டேன் தப்பா

அவனே என் ஒதுக்கத்தை புரிஞ்சுக்கிட்டு என்ன ஏதுன்னு விசாரிப்பான் அப்போ என் மனசுல நீ இல்ல ஏற்கனவே ஒருத்தர் இருக்கிறார்னு சொல்லலாம் நினைச்சேன்


ஆனா அவன் எதுவுமே கேட்காம பட்டுனு விட்டுட்டு போயிட்டான் என்று கூறி முடிக்கும் போது கடைசியாக கௌவ்சிக் பற்றி சொன்னதை கேட்டு கொண்டவனுக்கு பட்டென்று சிரிப்பு வந்தது


பின்னர் நீ விலகி போகவும் அவனும் உன்னை விட்டு போகாமல் உன் காலில விழுந்து கெஞ்சிகிட்டா இருப்பான் பவித்ரா …


இங்க பாரு பவித்ரா தப்பு உன்னோடது தான் உனக்கு அவனை பிடிக்கலங்கும் போதே உன்னோட அம்மா அப்பாகிட்ட பேசி இந்த கல்யாணத்தை நிறுத்தி இருக்கலாம் அப்படி இல்லையா மாப்பிள்ளை கிட்ட தனியா சொல்லி எனக்கு உன்னை பிடிக்கலை ஏற்கனவே என் மனசுல வேற ஒருத்தன் இருக்கான் அவனை தான் நான் கட்டிக்க போறேன்னு நீ தெளிவா சொல்லி இருக்கலாம்


அதெல்லாம் விடு அன்னைக்கு என் அம்மா அப்பா உன்னை தேடி வந்தாங்க இல்ல அன்னைக்கு அவங்க முன்னாடி உன் சம்மதத்தை சொல்லி இருக்கலாம்


அப்படியும் இல்லையா நான் உன்ன வந்து கோவிலில் சந்தித்து என் போன் நம்பர் உன்கிட்ட கொடுத்த அப்பவாவது நீ எனக்கு போன் பண்ணி சொல்லி இருக்கலாம்


அப்படி சொல்லி இருந்தா நான் நமக்காக மாப்பிள்ளை வீட்டில் பேசி பிரச்சனையை ஒன்னும் இல்லாம பண்ணியிருப்பேன்


எல்லாத்தையும் மனசுக்குள்ளேயே மறைச்சி வச்சு தேவையே இல்லாம ஒருத்தனா பைத்தியக்காரனா ஆகிவிட்டிருக்க…



சரி இன்னைக்கு அவன் இங்க கூட்டிட்டு வராமல் இருந்து உனக்கும் அவனுக்கும் சண்டை வராமல் இருந்திருந்தால் என்ன பண்ணி இருப்ப உன் மனசில உள்ளதை உன் அம்மா கிட்டயும் சொல்லலை என்னோட அம்மா அப்பா வந்தப்பவும் சொல்லல

அவ்வளவு ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வரை என்கிட்டயே நீ சொல்லல


சொல்லு பவித்ரா இன்னைக்கு இந்த மாதிரி ஒரு சம்மதமே நடக்காம இருந்திருந்தா என்ன பண்ணி இருப்ப…


என்ன பண்ணிருப்பேன் எப்படி இருந்தாலும் இந்தக் கல்யாணத்தை நிறுத்தி இருப்பேன் கௌசிக் கிட்ட கண்டிப்பா நிச்சயத்திற்கு முன்னாடி சொல்லி அவன் மூலமாகவே நிச்சயத்தை நிறுத்திருப்பேன்...கண்டிப்பா கௌசிக்கை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் அவன எனக்கு சுத்தமா பிடிக்கல….



என் அம்மா கிட்ட கண்டிப்பா உங்கள பத்தி பேசி இருப்பேன்... அவங்களுக்கு பிடிச்சிருந்தா அதுக்கப்புறமா என் சம்மதத்தை உங்க கிட்ட சொல்லி இருப்பேன் அதுக்கப்புறம் அவர்களே உங்களை தேடி வர மாதிரி செஞ்சு இருப்பேன்…


ஒருவேளை என் அம்மா அப்பாக்கு உங்களைப் பிடிக்காம இருந்தா உங்ககிட்ட கடைசி வரைக்கும் என் காதலை உங்க கிட்ட சொல்லி இருக்கவே மாட்டேன்…
அதுக்காக உடனே வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...


எங்க வீட்டிலேயும் என்ன அப்படியே எல்லாம் விட மாட்டாங்க என் மனசு மாறும் வரைக்கும் வெயிட் பண்ணிட்டு கொஞ்ச கழிச்சி வேற ஒருத்தரை கல்யாணம் பண்ணி வெச்சுடுவாங்க நானும் விதியேனு அவனை புருஷனா நினைச்சுக்கிட்டு லைஃப்ல செட்டில் ஆயிடுவேன் என்று முகத்தை சோகமாக வைத்துக் கூறினாள்.

அதன் பிறகு சற்று யோசித்த படி ஆமா உங்க அம்மா அப்பா என்னை பாத்திருக்காங்களா?
எப்போ…?

நீங்க கூட பேச்சுவாக்கில் ஏதோ சொன்னீங்க இல்ல என் அம்மா அப்பா கிட்டயாவது உன் சம்மதத்தை சொல்லி இருக்கலாம்லனு…

அப்படியே அடிச்சேனா மூஞ்சி திரும்பிடும் பார்த்துக்கோ லாஸ்ட் சண்டே உன் வீட்டுக்கு என் அம்மா அப்பா சித்தி எல்லாம் வந்தாங்களே நீ கூட அவங்கள ரொம்ப நல்லா கவனிச்சி கிட்டியாமே...


உங்க அம்மா அப்பா தான் மாப்பிள்ளை மாற்ற முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம் என்று இவன் சோகமாக கூற

லாஸ்ட் சண்டேனா... யாரு…. என்று யோசித்தவள் அந்த பென்ஸ் கார் யெல்லோ கலர் புடவை வைர நெக்லஸ் என்று கூற…

எக்ஸாட்லி அவங்கதான் எனக்காக உன் வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தாங்க


உங்க அம்மா அப்பா மாப்பிள்ளை மாத்த முடியாதுன்னு சொல்லிட்டாங்களாம்

நீயும் முகத்தை ரொம்ப சோகமா வச்சிட்டு பேசின போல என் அம்மாவுக்கு மனசு தாங்கல உடனே என் கிட்ட வந்து அந்த பொண்ணு இன்னும் உன்னை மறக்க முடியாம தான் கஷ்டப்படுற மாதிரி இருக்கு நீ போய் நேரில் பேசுனு சொன்னதால தான் நான் மறுபடியும் உன்னை அந்த கோவிலில வந்து பார்த்தேன்


நீ அன்னைக்கு எங்க அம்மாகிட்ட உன் சம்மதத்தை சொல்லி இருந்தா இந்நேரம் நம்ம ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா உக்காந்து பேசிட்டு இருப்போம் என்று கூறினான்.


அவன் கூறியதை கேட்டு கொண்டிருந்த பவித்ராவின் முகம் குப்பென்று வியர்த்தது பயத்தில் கண்கள் விரிந்து உதடுகள் தந்தி அடிக்க ஆரம்பித்தது


அவளின் உடல் மொழியை கண்டவன் ஹேய் என்ன ஆச்சு பவித்ரா ஏதாவது உடம்புக்கு பண்ணுதா என்று அவன் பதறியபடி கேட்க


இல்ல... இல்ல...
ஒன்னும் இல்ல ...தயவு செஞ்சு என்னை என் வீட்ல கொண்டு போய் விடுங்களேன் ப்ளீஸ் என்று கெஞ்சத் தொடங்கினாள்


சரி... சரி...பீ ரிலாக்ஸ்‌... கூட்டிட்டு போறேன் டென்ஷன் ஆகாத என்று கூறியவன் அவளை அழைத்துச் சென்று காரில் அமர வைத்தவன் ஒரு டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு என்று வேகமாக ஹோட்டலில் ரிசப்ஷனும் சென்று அங்கிருந்த ஊழியரிடம் எதையோ விசாரித்தான் பிறகு சிரித்தபடியே வந்து காரில் ஏறி அமர்ந்தவன் பவித்ராவை பார்த்து புன்னகைத்தபடியே காரை இயக்கத் தொடங்கினான்.


பவித்ராவிற்கு அன்று ரிஷியின் குடும்பத்தினரை தங்களின் ஒட்டுமொத்த குடும்பமே அவமானம் படுத்தியதை நினைத்து பயப்பட ஆரம்பித்தாள்.

அந்த விஷயம் ரிஷிக்கு தெரிந்தால் என்னவாகும் தங்களின் நிலமை
அன்று வந்தவர்கள் ரிஷியின் பெற்றோர்களாக இருந்தால் இவன் மிகப்பெரிய கோடீஸ்வரன்...


தனது தந்தைக்கு பணக்காரர்கள் என்றாலே சுத்தமாக பிடிக்காது எப்படி இவனை ஏற்றுக்கொள்வார் என்று பலவிதமாக யோசிக்க தொடங்கினாள்.


என்னாச்சு பவித்ரா இவ்வளவு நேரம் நல்லாத்தான இருந்த திடீர்னு ஒரு மாதிரி ஆயிட்ட ஏதாவது பிரச்சினையா என்று கேட்க

இல்ல...ஏதோ தப்பா... என்று வாய்க்கு வந்ததை உளறியவள் தலையை உலுக்கி கொண்டு


நீங்க ஏன் திடீர்னு ஹோட்டல் உள்ள போய் அங்கே ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தீங்க உங்களுக்கு ஏதாவது பிரச்சினையா என்று திருப்பி அவனிடம் கேட்டாள்


அவன் சிரித்தபடி ம்ம்...நல்லா பேச்சை வேற பக்கம் திருப்புற

அது ஒன்னுமில்ல உன்னை இங்க விட்டுட்டு போனான் இல்லையா அந்த கௌசிக் அவனை கொஞ்சம் ஸ்பெஷலா கவனிக்கலாம்னு நினைச்சி அவனோட போன் நம்பரையும் அட்ரஸ்யும் கலெக்ட் பண்றதுக்காக போனேன்... எப்படி நம்பி வந்த ஒரு பொண்ணை இப்படி பாதியிலேயே விட்டுட்டு போகலாம்னு கோபம் எனக்கு நிறையவே அவன் மேல இருந்தது


அங்க போனதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அவன் உன்னை தேடி பைத்தியக்காரன் மாதிரி இந்த ஹோட்டல் ஃபுல்லா அலைஞ்ச விஷயம்

பாவம் எதோ கோபத்தில் உன்னை விட்டுட்டு போயிட்டான் அப்புறம் மனசு கேட்காம திரும்பி வந்து உன்னை தேடி இருக்கான் அதான் ஹோட்டலில் இருந்து ஃபோன் பண்ணி பவித்ராவை நாங்களே கால் டாக்ஸில அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிட்டோம்னு சொல்லிடுங்கனு சொல்லிவிட்டு வந்தேன்.. இல்லனா கண்டிப்பா இன்னைக்கு நைட்டு ஃபுல்லா அவன் வீட்டுக்கு போக மாட்டான் ரோடு ரோடா உன்னத் தேடிட்டு சுத்துவான் எதுக்கு கௌசிக் மாதிரி பையனோட சாபம் உனக்கு வரனும் என்று சைடாக பவித்ராவை பார்த்து கூறியவன்


சரி இப்போ உண்மையை சொல்லு ஏன் திடீர்னு ஒரு மாதிரி ஆன
நீ நிறைய விஷயங்களை மனசுக்குள்ளேயே வச்சுக்கற
இது பெரிய பிரச்சினைல தான் கொண்டு போய் முடியும் பவித்ரா

எதுவா இருந்தாலும் பிராங்க் சொல்லு அதும் என்கிட்டே மறைக்கிறனா இது கொஞ்சம் கூட சரி கிடையாது


உன்னோடு எந்த பிரச்சனைனாலும் சரி பண்ண வேண்டிய கடமை எனக்கு இருக்கு அத புரிஞ்சுகிட்டு நடந்துக்கோ இதுக்கு அப்புறம் உன் விருப்பம் எதையோ ரொம்ப நேரமா மனசுக்குள்ள நினைச்சு பயந்துட்டு இருக்க


எதுவா இருந்தாலும் என் கிட்ட வெளிப்படையா சொல்லலாம் என்று கூற


எனக்கு ரொம்ப பயமா இருக்குங்க நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்காதுனு தோணுது நம்மள கண்டிப்பா பிரிச்சிடுவாங்க ... உங்க கிட்ட காதலை சொல்லி ஒரு மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள அந்த காதல் இவ்வளவு சீக்கிரமா கானல்நீர் ஆகும்னு எனக்கு தெரியாது...என்னோட காதல் எனக்கு தீராத வலியை கொடுத்துட்டு என்னை காலம் பூரா அழவைக்க போகுது என்று அவனின் கைகளைப் பிடித்தபடி அழ தொடங்கினாள்.


என்ன உளர்ற பவித்ரா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் என்னென்னமோ கதை சொன்ன இப்ப அப்படியே திரும்பி பேசிட்டு இருக்க யாரு நம்மளை பிரிக்க போறாங்க
என் சைடு இந்த கல்யாணத்துக்கு பரிபூரண சம்மதம்

நீயும் கௌசிக்கை துரத்திவிட்டுட்ட இப்ப வீட்டுக்கு போனதும் உன் வீட்ல ஏன்னு கேட்க தான் போறாங்க அப்போ என்ன பத்தி சொல்லிடு..
சொன்னதுக்கு அப்புறம் ஏதாவது ஒரு பிரச்சினைனா என்கிட்ட சொல்லு நான் வந்து உன்னோட அம்மா கிட்ட பேசுறேன்

இல்ல அவங்களுக்கு ஓகேனாலும் உடனே சொல்லு அடுத்த நிமிஷமே என் வீட்டிலிருந்து முறையா வந்து உன்னை எனக்கு நிச்சயம் பண்ணிக்க போறாங்க அதுக்கேன் இப்படி தேவையில்லாம பயப்படற...


கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு எங்க வீட்டிலேயும் சம்மதிக்க மாட்டாங்க உங்களோட அம்மாவும் சம்மதிக்க மாட்டாங்க எனக்கு நல்லாவே தெரியும் அப்படியே ரெண்டு பேருமே சம்மதித்தாலும் அன்னைக்கு உங்க அம்மா வந்து போ எங்க வீட்ல என்ன நடந்ததுன்னு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க அது உறுதி...என்றவளிடம்

காரை நிறுத்தியவன் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு அன்னைக்கு எங்க வீட்ல இருந்து வந்தபோ அப்படி என்ன நடந்துச்சு பவித்ரா சொல்லு…

என்ன மன்னிச்சிடுங்க ரிஷி அன்னைக்கு அவங்க வந்தப்போ உங்க அம்மா அப்பானு சத்தியமா எனக்கு தெரியாது தெரிஞ்சிருந்தா கண்டிப்பா அன்னைக்கே நான் என்னோட சம்மதத்தை எல்லார் முன்னாடியும் சொல்லி இருப்பேன்.


அதுமில்லாம அன்னைக்கு உங்க வீட்டில் இருந்து வந்தவங்க சம்மந்தமே இல்லாம கௌரவம் அந்தஸ்துனு ஒருமாதிரி வித்தியாசமா பேசினதால என் அம்மா அப்பா கொஞ்சம் டென்ஷனாகி அவங்க கிட்ட கொஞ்சம் வித்தியாசமாக நடந்து கிட்டாங்க நானும் கூட கொஞ்சம் வார்த்தையை விட்டுட்டேன் என்று தயங்கியவள்


ரிஷியின் குடும்பத்தார் வந்த பொழுது தங்கள் வீட்டில் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.


சாரி ரிஷி ப்ளீஸ் என்று அவனின் கைகளைப் பிடித்து மன்னிப்பு கேட்க
அவனோ ஒரு நிமிடம் கண்களை இறுக்க மூடி திறந்தவன் அவள் கைகளிலிருந்து தனது கைகளை நாசுக்காக உருவி கொண்டான்.

அவன் மனதில் இப்பொழுது பலவிதமான கேள்விகள் இவ்வளவு நடந்தும் கூட தனது தாயோ தந்தையோ சித்தியோ இதுவரை தன்னிடம் எதுவுமே கூறவில்லை அதுமட்டுமின்றி பவித்ராவை தான் திருமணம் செய்ய வேண்டும் என்று வேறு நிர்பந்திக்கின்றனர்.

தாயின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கிறது பவித்ராவின் வீட்டில் செய்தது மிகப் பெரிய தவறு தான் தனது குடும்பமும் ஒரு புது இடத்தில் அவ்வாறு நடந்து கொண்டிருக்க வேண்டாம் தவறு இருபக்கமும் இருக்கிறது தற்சமயம் என்ன செய்ய வேண்டும்


தனது குடும்பத்தினரை அவமானப் படுத்தியவர்களை இவன் மன்னித்து விட வேண்டுமா இல்லை தாய் சொல்கிறபடி எதுவுமே நடக்காதது போல் இவளை திருமணம் செய்ய வேண்டுமா?
மிகுந்த குழப்பம் பவித்ராவிடம் எதுவுமே பேசாமல் அவளை வீட்டில் அருகே சற்று தள்ளி கொண்டுவந்து விட்டான்.

தயங்கியபடியே வீட்டுக்கு வாங்க ரிஷி நான் என்னோட அம்மா அப்பாகிட்ட உங்களை அறிமுகப்படுத்தறைன் என்று கூற

இல்ல பவித்ரா நான் என் அம்மா கிட்ட சில விஷயங்களை பேசினும் அதுக்கப்புறம் தான் நான் உன் வீட்டுக்கு வரலாமா வேண்டாமானு முடிவு எடுக்கணும் இப்போதைக்கு என்ன மன்னிச்சிடு நான் ரொம்ப குழப்பத்தில் இருக்கேன் என்று கூறியபடி காரைத் திருப்பிக் அவனின் வீடு நோக்கிச் சென்றான்.

ரிஷியின் பதில் அவளுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தாலும் கண்டிப்பாக இரு குடும்பத்திற்கும் இருக்கும் பனிப்போர் விலகாமல் எந்த ஒரு நல்ல காரியமும் நடக்காது என்று பவித்ராவிற்கு நன்றாகவே புரிந்தது அதனால் எதுவும் பேசாமல் பொறுமையாக வீடு வந்து சேர

வீட்டின் வாசலிலேயே மேகலா நாராயணன் வெங்கட் மூன்றுபேரும் பதட்டத்துடன் பவித்ராவை எதிர்பார்த்து காத்திருந்தனர் அவளைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டியணைத்த மேகலா என்ன ஆச்சு பவித்ரா ஏன் தனியா வர்ற கௌசிக் எங்க ... கூட்டிட்டு போனவனுக்கு திருப்பிக் கூட்டிட்டு வந்து விடத்தெரியாதா இப்படித்தான் வயசு பிள்ளைய தனியா அனுப்பி வைப்பானா ...

எனக்கு ரொம்ப பயமா இருக்கு... உன் கல்யாண விஷயத்துல நாங்க அவசரப்பட்டுடோமோனு நீ வீட்டுக்கு வர லேட்டாகவும் வயித்துல நெருப்பைக் கட்டினது போல இருந்தது... எதும் பிரச்சினை இல்லையே என்று கவலையாக கேட்க…

******

நாராயணன் தான் சுதாரித்து மேகலா எல்லாத்தையும் வாசல்லேயே கேட்டுட்டு இருப்பியா அவள உள்ள கூட்டிட்டு போ என்று கூற…

ஆமா நான் வேற லூசு மாதிரி என்னனமோ என் பொண்ணு கிட்ட பேசிட்டு இருக்கேன் நீ உள்ள வாம்மா என்ற படி உள்ளே செல்ல…
பின் சென்றுகொண்டிருந்த வெங்கட்டின் கையைப்பிடித்து நிறுத்தினாள் பவித்ரா.


டேய் என்னடா ஆச்சு அம்மா ஏன் இப்படி பேசறாங்க என்று தனது தம்பியிடம் கேட்க

அக்கா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி மாப்பிள்ளை வீட்ல இருந்து ஃபோன் வந்தது. பையனுக்கு ஏதோ அவசரமான வேலை வந்ததுனு பவித்ராவை ஃகால் டாக்சியில் அனுப்பி வச்சிருக்கான்
பொண்ணு வீட்டுக்கு வந்ததும் எங்களுக்கு போன் பண்ணி சொல்லுங்க நாங்க வீட்டுக்கு வந்து பவித்ராவை பாக்கணும் சொன்னாங்க…


அப்போ இருந்து அம்மா இப்படித்தான் புலம்பிக்கிட்டே இருக்காங்க அப்பா கிட்ட வேற சண்டை நீங்க சொன்னீங்கனு தானே இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன் நிச்சயத்திற்கு முன்னாடியே பொண்ணை தனியா அனுப்பி வைக்கிறான் இவனை நம்பி எப்படி பொண்ண கட்டிக் கொடுக்கறதுனு ஒரே புலம்பல்

நீ வந்ததால நாங்க தப்பிச்சோம் இல்லனு வெச்சுக்கோ அம்மா புலம்பியே எங்களை ஒரு வழி பண்ணி இருப்பாங்க

ஆமா என்ன ஆச்சு நிஜமாவே அவருக்கு வேலையா இல்லனா நீ ஏதாவது பேசி அவனை விரட்டி விட்டுட்டியா?...

வாய மூடுடா அம்மாவும் அப்பாவும் நம்மளையே பாத்துட்டு இருக்காங்க அதான் இன்னும் கொஞ்ச நேரத்துல மாப்பிள்ளை வீட்டிலிருந்து வருவாங்கல்ல அவங்க விலாவரியா சொல்லுவாங்க அப்போ நீ கேட்டுக்கோ என்று கூறியவள்


தாயைப் பார்த்து அம்மா எனக்கு பசிக்குது சாப்பிட ஏதாவது தாங்கம்மா... நான் போய் ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன் என்று முகத்தை பாவமாக வைத்துக் கேட்க


உடனே அவர் இருடி ராஜாத்தி எடுத்துட்டு வரேன் என்று உள்ளே ஓடியவர் உணவை எடுத்து வந்து இரு பிள்ளைகளுக்கும் தன் கையாலேயே உணவை ஊட்டி முடித்திருந்தார்.

பவித்ராவும் வெங்கட்டும் ஏதோ கதை பேசியபடி டிவி பார்த்துக்கொண்டிருக்க


நாராயணனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது ஏதோ ஒன்று சரியில்லை மாப்பிள்ளை வீட்டினர் வந்து என்ன பூகம்பத்தை போடப் போகிறார்களோ அதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியை கொடு இறைவா என்றபடி மாப்பிள்ளை வீட்டினரின் வருக்கைக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.


அவரின் எதிர்பார்ப்பை பொய்யாக்காமல் சற்று நேரத்திலேயே கௌசிக் அவனுடைய மற்றும் அவனுடைய பெற்றோரும் பவித்ராவின் வீட்டிற்கு வந்தனர்.


வந்தவர்கள் நாராயணன் மேகலா இருவரையுமே பொருட்படுத்தாமல் நேராக பவித்ராவின் அருகில் வந்து அவளின் கைகளைப் பிடித்துக்கொண்டு எங்கள மன்னிச்சிடு மா என் பையன் பண்ணினது மிகப் பெரிய தப்பு அதுக்காக உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்டாலும் சரியாகாது என்று கண்கலங்க கூடியவர்கள் பிறகு திரும்பி நின்று மேகலா நாராயணன் இருவரையும் பார்த்து கை கூப்பியபடி


டேய் நாராயணா என்னை மன்னிச்சுடுடா நான் பெத்த புள்ளை சரியில்ல அவனை நம்பி இந்த கல்யாண ஏற்பாட்டை செய்து உங்களோட மனசை காயப்படுத்திட்டேன்.

என் மகளுக்கு சரியான பெண் பவித்ரா இல்ல அதனால உன் மகளுக்கு வேற ஒரு மாப்பிள்ளைய பாருடா என் கிட்ட வேற எதுவும் கேட்காத என்ன மன்னிச்சிடு என்று கூறியவர்

கௌசிக்கிடம் வந்து ஏண்டா மலை மாதிரி நின்னுக்கிட்டு இருக்க அவ கிட்ட மன்னிப்பு கேளு என்று கூற அவனும் தயங்கியபடி பவித்ராவிடம் வந்து

சாரி பவித்ரா நான் உன்ன விட்டுட்டு வந்த கொஞ்ச நேரத்திலேயே மறுபடியும் வந்து தேடினேன் நீ அங்க இல்லை…என்ன மன்னிச்சிடு எப்படி இருந்தாலும் நான் உன்ன விட்டுட்டு வந்தது தப்பு தப்புதான் எவ்வளவு சண்டை வந்து இருந்தாலும் உன்னை நான் வீட்டில் கொண்டு வந்து விட்டுட்டு பேசிருக்கனும் அதை நான் செய்யல…

ஹோட்டல்ல கூட ஏதோ ஒரு கோபத்தில் தான் நமக்குள்ள செட் ஆகாதுனு சொன்னேன் அப்புறம் வீட்டுக்கு வர வர யோசிச்சதுக்கப்புறம் தான் ஒருவிஷயம் தெளிவா தெரிந்தது நான் உனக்கு மட்டும் இல்ல தற்சமயம் எந்த பெண்ணுக்குமே கணவனாக தகுதி எனக்கு இல்லை என்னைக்கு என்னோட முன்கோபத்தை நான் விடறேனோ அன்னைக்கு தான் திருமணம் செஞ்சிப்பேன் அதுவரைக்கும் நான் திருமணம் செய்யப்போவதில்லை

ஆண்ட்டி அங்கிள் என்ன மன்னிச்சிடுங்க பவித்ராவுக்கு ஏத்த பையன் நான் இல்லை…என்னை வேற எதுவும் கேக்காதீங்க
என்று அணைவரையும் பார்த்து கைகூப்பி மன்னிப்பு கேட்ட கௌசிக் அங்கிருந்து வெளியேறினான்.

அவனின் பெற்றோரோ தர்மசங்கடத்துடன் தலை குனிந்த படி நிற்க மேகலாவிற்கும் நாராயணனுக்கும் ஒன்றுமே புரியவில்லை என்ன நடந்துச்சு ஏன் என்னென்னமோ சொல்றீங்க தீடிர்னு கல்யாணத்தை நிறுத்த என்ன அவசியம் வந்தது என்று கேட்க

கௌசிக்கின் தந்தை மகன் தன்னிடம் கூறிய அணைத்தையும் ரத்தின சுருக்கமாக ஒன்றுவிடாமல் கூறி முடித்தார்.

மேகலாவோ தலையில் கை வைத்து அமர்ந்தவள் பிரண்ட்ஸை இன்வைட் பண்றேன்னு சொன்னதால தான நம்பி அனுப்பி வச்சோம் இப்படி பார்-க்கு எல்லாமா கூட்டிட்டு போவாங்க...

தொடரும்...
 
Status
Not open for further replies.
Top Bottom