Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நினைக்காத நேரமில்லை - New Tamil Novel

Priya Shakti

Saha Writer
Team
Messages
5
Reaction score
0
Points
1
ஹாய்,
என்னை நியாபகம் இருக்கா? நான் உங்க பிரியா.. மீண்டும் உங்களை சந்திக்க வந்துட்டேன். அடுத்த கதையின் தலைப்பு நினைக்காத நேரமில்லை.

நாயகன்: சூர்ய பிரகாஷ்
நாயகி : மகிழ்வதனி

சூர்ய பிரகாஷ் நாயகியை கண்டதும் காதல்..... காதலி மேல் உயிரையே வைத்திருப்பவன் எடுக்கும் ஒரு தவறான முடிவு இருவரின் வாழ்க்கை பயணத்தையே மாற்றுகிது....
விரைவில் டீஸருடன் உங்களை சந்திக்க வருகிறேன்.....

 

Priya Shakti

Saha Writer
Team
Messages
5
Reaction score
0
Points
1
டீசர் - 1

ஏர்போட்டை விட்டு வெளியே வந்த சூர்ய பிரகாஷ் தனக்காக காத்துக் கொண்டிருந்த நண்பன் நவீனை கட்டியணைத்து எப்படி டா இருக்க என்றான்? நல்லாயிருக்கேன் என்ற நவீனின் குரலில் இருந்த மாற்றம் அவனை ஏதோ செய்தது.

காரில் செல்லும் வழியில் டேய் மகிழ் வீட்டுக்கு போ அவள பார்க்கணும்.

டேய் அவளுக்கு கல்யாணம் முடிஞ்சுட்டு என்ற நவீனை அதிர்ச்சியோடு விழிகள் தெரிக்க பார்த்தான்.

ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாதீங்க என்னையும் உங்க கூடவே கூட்டிட்டு போங்க என்ற கலங்கிய குரல் அவன் மனதில் வந்து சென்றது.

ஓ அப்படியா அவ நல்ல மனசுக்கு அவ நல்லாருப்பா என்றான் பிரகாஷ் நெகிழ்ச்சியுடன்.

சந்தோஷமாவா ? அவ நல்லா இல்லை சுத்தமா நல்லாயில்ல கோபத்துடன் கர்ஜித்தான் நவீன்
 

Priya Shakti

Saha Writer
Team
Messages
5
Reaction score
0
Points
1
அத்தியாயம் – 1

காலை கதிரவன் உதயத்துடன் பறவைகள் ஓசையுடன் அன்றைய தினம் விடிந்தது. சென்னையின் வழக்கமான பரபரப்பு மிகுந்த காலை. ஆறு மணிக்கே பரபரப்பு. அங்கங்கே வாகனங்களின் சத்தம். அதிகாலை நேரத்திலும் நெருக்கடியை கடந்து காரை பார்க்கிங் லாட்டில் விட்டு விட்டு மீனம்பாக்கம் ஏர்போட்டிற்குள் நுழைந்தான் நவீன். (உடனே கற்பனை குதிரையை பறக்க விடாதீங்க. ஹீரோ இல்லைனா ஹீரோயின் தான் முதல எண்ட்ரி குடுக்கணும்மா?)



பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த விமான நிலையத்தில்(எக்ஸிட்) அருகே நண்பனின் வரவிற்காக காத்துக்கொண்டிருந்தான். ஆறு மாதம் கழித்து தனது ஆருயிர் நண்பனை காணப் போகும் மகிழ்ச்சி துளி கூட இல்லாமல் முகம் முழுவதும் பதட்டத்துடன் காத்திருந்தான்.



எப்படியும் இந்த விஷயத்தை அவன் கிட்ட சொல்லி தான் ஆகணும். இதுக்கு மேல மறைக்க முடியாது. ஆனால் நண்பன் இதை எப்படி எடுத்து கொள்வான் என தெரியாமல் முகத்தில் கலவரத்துடன் இருந்தான்.



என்ன பண்ண முடியும்? யானை தன் தலையில் தானே மண் அள்ளி போடற மாதிரி இவனே இவன் வாழ்க்கைய சிக்கல் ஆக்கிட்டான்.



பண்ண தப்புக்கு அவன் கஷ்டத்தை சந்திச்சி தான் ஆகணும். ஆனா அவநோட அவசர புத்தியால ஒரு அப்பாவி பொண்னு வாழ்க்கை போச்சே என யோசித்து கொண்டிருந்தான் நவீன்.



ஏர்போட் உள்ளே தனது கேபின் மற்றும் செக் இன் லக்கேஜ் சரி பார்த்து எடுத்தவன் தனது அமெரிக்கன் டுரிஸ்டர் பெட்டியை தள்ளி க்கொண்டு வந்தான் சூர்ய பிரகாஷ். ( ஆமாங்க இவன் தான் நம்ம ஹீரோ)



சூர்ய பிரகாஷ் ஆறடி உயரம் பார்ப்பதற்கு நல்ல நிறம், முகத்தில் ஒரு கம்பீரம் கூடவே குறும்புடன் சிரிக்கும் கண்கள். பார்த்தவுடன் பெண்களை திரும்பி பார்க்க வைக்கும் நாயகன்.
சுருங்க சொன்னால் அவன் ஒரு ஹண்ட்சம் ஹீரோ.



தனது ரேபன் கண்ணாடியை தனது சட்டையில் சொருகியவன் நண்பனை தேட தனக்காக காத்துகிக்கொண்டிருந்த நவீனை கண்டு கொண்டான்.



வேகமாக அவன் அருகில் சென்று நவீனை அணைத்து எப்படி டா இருக்க? ரொம்ப நேரமா வெயிட் பண்றியா? பிளைட் லேண்ட் ஆக டைம் ஆகிடுச்சு என்ற பிரகாஷின்( இனி சூர்ய பிரகாஷ் மத்த எல்லாருக்கும் பிரகாஷ்) குரலில் பயணம் செய்த சோர்வு கொஞ்சம் கூட இல்லை. மாறாக நண்பனை ஆறு மாதம் கழித்து சந்தித்த உற்சாகத்துடன் பேசிக்கொண்டிருந்தான்.



ம்ம்ம் நல்லா இருக்கேன். இப்ப தான் வந்து கொஞ்ச நேரம் ஆகுது என்ற நவீனின் வழக்கமான துள்ளல் இல்லை என உணர்ந்து யோசனையுடன்நடந்தான் பிரகாஷ்.



என்ன ஆச்சு நவீன்? ஏன் டல்லா இருக்க? ஏதாவது பிரச்சனையா? வீட்ல எல்லாரும் நல்லாருக்காங்களா? என பதட்டத்துடன் வினவிய பிரக்ஷிடம் அதெல்லாம் ஒன்னுமில்லைடா. கொஞ்சம் டையர்டா இருக்கு என்றபடி கார் பார்க்கிங் நோக்கி சென்ற நவீனை பின் தொடர்ந்தான் பிரகாஷ்.



காரை நவீன் ஓட்டிக்கொண்டிருக்க அருகில் பிரகாஷ் அமெரிக்க அனுபவம் மற்றும் தொழில் சம்பந்தமாக பேசி கொண்டிருந்தான்.



நவீனிடம் எந்த எதிரொலியும் இல்லை என யோசனையுடன் அவனை கூர்ந்தான். கேட்டா ஏதாவது சமாளிக்க பார்ப்பான். பொறுமையா பேசிக்கலாம் என்ற எண்ணத்துடன் அமைதியானான்.



மகிழ் வீட்டுக்கு போயேன். அவளை பார்க்கணும் போல இருக்கு? அவ என்னை பார்த்தது சந்தோஷடதுல அவ முகம் ஜொலிக்கும் பாரு அதை பார்க்கணும் என்ற ப்ரகாஷுன் கூற்றில் சடன் பிரேக் போட்டு நிறுத்தினான் நவீன்.



மகிழ்க்கு கல்யாணம் முடிஞ்சுட்டு என்ற நவீனின் குரலில் முற்றிலும் உணர்ச்சிகள் துடைக்கப்பட்டிருந்தது.



வேண்டாம் ப்லீஸ் சூர்யா என்னை விட்டுட்டு போகாதீங்க. எனக்கு பயமா இருக்கு. என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க. நீங்க இல்லாத வாழ்க்கைய என்னால நினைத்து கூட பார்க்க முடியாது என மகிழ் கடைசியாக தன்னிடம் பேசியது நெஞ்சில் வந்து மோதியது.



தன்னை சுதாரித்த பிரகாஷ் அவளுக்கு என்னடா? அவளோட நல்ல மனசுக்கு அவ கட்டாயம் நல்லாருப்பா என்ற படி கண்களை மூடினான்.



சந்தோஷமாவா? எப்படி டா சந்தோஷமா இருப்பா? அவ வாழ்க்கை போச்சு. அவ சுத்தமா நல்லா இல்லை என்ற நவீனின் கர்ஜனையில் அதிர்ச்சியுடன் ஏறிட்ட பிரகாஷின் மனம் அவனை நார் நாராக கிழித்தது.
 

Priya Shakti

Saha Writer
Team
Messages
5
Reaction score
0
Points
1
டீஸர்-2

மீ ட் டிங்கில் பிஸி யாக இருந்த பிரகாஷ் வீட்டு லேண்ட் லைனில் இருந்து வந்த கால் பார்த்து யோசனையோடு எடுத்தான்.

தம்பி நான் தான் கங்கா பேசறேன்?

சொல்லுங்க கங்காம்மா . என்னாச்சு? ஏன் இவ்ளோ பதட்டமா பேசறீங்க? ஏதாவது பிரச்சனையா?
தம்பி காலைல இருந்தே பாப்பா ஒன்னும் சாப்படல. பசிக்கலைனு சொல்லிச்சு.

திருப்பி கூப்பிடிலாம்னு பார்த்தா பாப்பா தூங்கிட்டு இருந்துச்சு சரினு நான் வந்துட் டேன். திடீர்னு பாப்பா பயங்கரமா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி அழுக ஆரம்பிச்சுட்டு. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தம்பி என்றார் பதட்டத்துடன்.

சரி கங்கமா நான் உடனே வர்றேன் கங்கமா என்றவன் அடுத்த பதினைந்து நிமிடத்தில் அவன் அறையில் இருந்தான்.

குட்டி மா என ஓடி சென்று அவளை அணைத்து கொண்டான்.

வேண்டாம். பயமா இருக்கு கிட்ட வராதீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு என கதறி அழுதாள் அவனின் அன்பு மனைவி மகிழ்வதனி.
 

Priya Shakti

Saha Writer
Team
Messages
5
Reaction score
0
Points
1
2

பிரகாஷின் இதயம் இரண்டாக பிளப்பது போல் இருந்தது. அவன் மனம் பரிதவித்தது. கடவுளே நவீன் கிட்ட என்னனு கேட்பது? அவன் தாங்க முடியாத அழகு ஏதாவது சொல்லிட்டானா என்ன பண்றது?

என்ன கஷ்டம் பெண்ணே உனக்கு நான் இல்லாத நேரத்துல என்ன நடந்தது. என்னதான் நடந்தது தொலைத்தது தெரியலையே?

இதுக்கு மேல முடியாது தலை வெடித்துவிடும் உணர்வுடன் நிமிர்ந்து பிரகாஷ் நவீன் என்ன நடந்துச்சு? ஏன் இப்படி சொன்ன மகிழ்க்கு என்ன ஆச்சு? அவளுக்கு என்ன பிரச்சனை சொல்லுடா? சொல்லு என்றான் பிரகாஷ்?

தெரிஞ்சு என்ன பண்ண போற? என்றான் நவீன் கோபத்துடன்.

நான் என்னமோ பண்றேன் அதை பத்தி உனக்கு என்ன முதல்ல என்ன நடந்துச்சுன்னு சொல்லி தொலை என்ற பிரகாஷின் குரல் நடுங்க தொடங்கியது.

நீ ஊருக்கு கிளம்புவதற்கு முன்னாடி மகிழ் உன்னை பார்த்துட்டு போனாளே அதற்கு அப்புறம் அவங்க சித்திக்கு எப்படியோ விஷயம் தெரிஞ்சுடுச்சு. அவளை வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டாங்க இது எதுவுமே எனக்கு தெரியாது.

இதுக்கு நடுவுல உன்னை பத்தி அவ சித்தி கேட்டதுக்கு உன்னை பத்தி ஒரு வார்த்தை சொல்லல போல அப்புறம் அவங்களே அங்க இங்க விசாரிச்சு தெரிஞ்சிட்டாங்க?

இவ்வளவு அழகான பையன் அதுவும் பணக்கார சம்மந்தம் இவளுக்கான மனசுல கருவி உங்களை சேர விடக்கூடாதுன்னு யோசிச்ற்காங்க.

இதுக்கு மேல மகிழ் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து கையை விட்டு போயிடும்னு அவங்களுக்கு பயம் அதிகம் ஆகிடுச்சு என்ற நவீனிடம் என்னடா சொல்ற சொத்தா என்ன சொத்து என்றான் பிரகாஷ் குழப்பத்துடன்.

உனக்கு விஷயமே தெரியாதா அந்த சொத்தெல்லாம் அவங்க சித்தி சித்தப்பா உடையது இல்ல அதெல்லாம் மகிழ் உடையது மகிழ்வுடைய அப்பா இறப்பதற்கு முன்னாடியே அவளுக்கு சொத்து எழுதி வச்சிட்டார்.

அந்த சொத்துக்காக தானே அவளோட சித்தி அவளை வளர்த்தது உனக்கும் ஒன்னு தெரியுமா பிரகாஷ் மகிழ் அவங்க அம்மா அப்பா ரெண்டு வேறு முகத்தையும் முகத்தையும் பார்த்தது கூட இல்ல தெரியுமா அவங்க அம்மாவுக்கு ஆறு மாசம் இருக்கும் போதே அவங்க அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க அவங்க அப்பா இறந்ததுக்கு இவ ராசி அது இதனை இவ அம்மா வயித்துல இருந்த பா பேசியிருக்காங்க. இந்த அதிர்ச்சி வேதனை தாங்காம தாங்காம அவங்க அவங்க அம்மா அம்மா பிரசவத்தில் இறந்துட்டாங்க.

அவங்களுக்கு அவங்க முடிவு முன்னாடியே தெரியும் போல அதனால அவங்க அப்பா சொத்து அவங்களுக்கு பிறக்க போகும் குழந்தைக்கும் எழுதி வெச்சிருக்காங்க அதனால மகி அவங்க அப்பா அம்மா ரெண்டு வேறு முகத்தையும் பார்த்தது இல்லை அது தெரியுமா உனக்கு என்ற நவீனின் குரல் கலங்கி இருந்தது டேய் என்னடா சொல்றேன் மகிழ்க்கு அம்மா அப்பா ரெண்டு வெறும் இல்லை தெரியும் ஆனால் அவங்க அம்மா அப்பா முகத்தை கூட பார்த்தது இல்லைன்னு எனக்கு தெரியாது இதெல்லாம் எனக்கு இன்னிக்கி நீ சொல்லித்தான் தெரியும் நான் அவளை புரிஞ்சுகிட்டு அவளுக்கு பாதுகாப்பா இல்லையா என்றான் பிரகாஷ் கண்ணீருடன்.

உனக்கு இதுல சந்தேகம் வேறயா பிரண்ட் கூட பார்க்க மாட்டேன் ஏதாவது அசிங்கமா சொல்லிட போறேன் நீ பண்ணினது முழுக்க முழுக்க தப்பு தான் அதுல உனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம் நீ அவளுக்கு ஒரு நல்ல காதலனா இல்லை நீ எல்லாம் ஒரு மனுஷனா? காதலிச்ச பொண்ணை விட உனக்கு உன்னோட லட்சிய வெறி பணம் குறிக்கோள் இதெல்லாம் தான் உனக்கு முக்கியம் உனக்கு மகழ் மனசு முக்கியம் இல்ல லட்சியம் முக்கியம் போடா நீ பெரிய ஆளு லட்சம் கோடியில புரளு ஆனா நீ ஒரு லூசு வாழ்க்கையை தொலைச்ச முட்டாள்.

ஆனால் உன்னால மகிழ் வாழ்க்கை போச்சு அதை உன்னால திருப்பி தர முடியுமா? என்ன பண்ண போற.

அவளை நான் என்னோட தங்கச்சியா தான் பார்க்கிறேன் ஆனா எனக்கு தெரிஞ்ச அளவு கூட காதலிச்ச உனக்கு அவளை பற்றி தெரியலை?

சொல்லுடா மகிழ் வாழ்க்கைக்கு என்ன பதில். அவளை நீ நரகத்தில இருந்து காப்பாத்துவேனு அவ நம்பினா ஆனா நீ அவளை இன்னும் இன்னும் மோசமான நரகத்திலே தள்ளிட்ட என அவன் சட்டையை பிடித்தான் நவீன் கோபத்துடன்.

 
Top Bottom