Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


புதுமை பூ கதை

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
சரண்யா வெங்கட் எழுதும் புதுமை பூ

புதுமை 1
பஞ்சாப் (Punjab) இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் மேற்கில் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபும், வடக்கில் ஜம்மு காஷ்மீரும், வட கிழக்கில் இமாசல பிரதேசமும், தென் கிழக்கில் அரியானாவும், தென் மேற்கில் ராஜஸ்தானும் உள்ளன. லூதியானா, ஜலந்தர், பாட்டியாலா, அம்ரித்சர் ஆகியவை இம்மாநிலத்தின் முக்கிய நகரங்கள். பஞ்சாபின் எல்லைக்கு வெளியே உள்ள சண்டிகர் பஞ்சாபின் தலைநகராகும். பஞ்சாபி மொழி அதிகாரப்பூர்வ மொழி. சீக்கிய மக்களே இங்கு பெருமளவில் வசிக்கின்றனர். கோதுமை பஞ்சாபில் அதிகமாக விளையும் பயிராகும். பஞ்சாபில் ராவி, பியாஸ், சத்லஜ் ஆகிய மூன்று ஆறுகள் பாய்வதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. ஜீலம், செனாப் ஆகியவை பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் பாய்கின்றன.

பஞ்சாப்" என்ற பாரசீக மொழி சொல், 'பஞ்' (پنج) = 'ஐந்து', 'ஆப்' (آب) = நீர், என்று பிரிக்கப்பட்டு ஐந்து ஆறுகள் பாயும் பகுதி என்று பொருள் தரும். இவ் ஐந்து ஆறுகளாவன : ஜீலம், செனாப், ராவி, பியாஸ் மற்றும் சத்லஜ்.


குர்தாஸ்பூர்....

குர்தாஸ்பூர் என்னும் மாவட்டம் பஞ்சாபில் ராவி ஆறு மற்றும் பியாஸ் ஆறு இரண்டுக்கும் இடையில் அமைந்துள்ளது. இத்நகரம் மகந்த் குரிய தாசுஜி எனும் ஞானியின் பெயரால் அமைக்கப்பட்டது.

காலை கதிரவன் தனது கதிர்களை பூமியில் இறக்க, குர்தாஸ்பூர் மைய பகுதியில் இருந்த அந்த மளிகை போன்ற வீடு மக்கள் கூட்டத்தால் அமர்களப்பட்டது, அந்த ஊரில் இருப்பவர்களுக்கு இந்த நிகழ்வு ஒன்றும் புதியது இல்லை, ஆனால் வழக்கத்தை விட இன்று கூட்டம் சற்று அதிகம் தான். மக்களுக்கு அன்னதானம் என்று பெயரில் புகழ் தேடி கொள்வது அந்த ஊரின் பஞ்சாயத்து தலைவர் சாரதா விற்கு கை வந்த கலை, இந்த புகழின் மூலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தின் MLA ஆவது அவரின் நீண்ட கால ஆசை, இந்த அன்னதானம் எல்லாம் அவரின் இலக்கை அடைய அவர் ஏற்படுத்தி கொண்ட ஒரு வழி தான்,

மொத்தத்தில் சாரதா, எதற்கும் அஞ்சாத பெண்மணி, ஊரை பொறுத்த வரை வறிய நிலையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்யும் அந்த ஊரின் வள்ளல், பசியால் வாடும் மக்களுக்கு அன்னதானம் அளிக்கும் அன்னபூரணி, ஆனால் உண்மையில் அழகான உருவில் ஒளிந்து இருக்கும் விஷத்தை கக்ககும் கருநாகம் தான் இந்த சாரதா, தனது அரசியல் வாழ்க்கைகாக எதையும் செய்யும் மனித உருவில் இருக்கும் மிருகம் என்றால் மிகையாகாது, அது எந்த எல்லை வரை என்றால் யாரும் உயிரையும் பறிக்கவும் தயங்குவது இல்லை, தான் சொந்த மகளின் உயிர் என்றாலும் விதி விலக்கு இல்லை.


முரளி, வீரம் விளைந்த மண் ஆன மதுரை மண்ணில் பிறந்தவர், தான் பிறந்த நாட்டுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற அவா அவருக்கு சிறு வயதில் இருந்தே உண்டு, அதன் விளைவாக இராணுவத்தில் சேர்த்தவர், நாட்டுக்காக சேவை செய்து கொண்டு இருந்தார், பதவி உயர்வு காரணமாக அவருக்கு அடுத்த பணி பஞ்சாப் மாநிலத்தில் என இருந்த நிலையில், அவரின் தாய் தந்தையின் வறுப்புறுத்தல் காரணமாக சாரதவை, பசும் தோல் போற்றிய புலி என்பதை அறியாது, மணந்தார்.

பஞ்சாபிக்கு குடிபுகுந்த முரளி மற்றும் சாரதா, அந்த வாழ்க்கை முறைக்கு பழகி கொண்டனர், அவர்களின் வாழக்கை அமைதியாக சென்று கொண்டு இருக்க, 7 வருடத்திற்கு பிறகு புயல் வீச துவங்கியது. கார்கில் போர் நடந்து கொண்டு இருந்த சமயம் முரளி தனது எதிரிகளை கொன்று, தானும் போரில் வீர மரணம் அடைந்தார், அவர் செய்த வீர செயலை பாராட்டி பஞ்சாப் அரசு, அவருக்கு தற்பொழுது சாரதா இருக்கும் நிலத்தை பரிசாக அளித்தது.

கணவனின் மரணத்திற்கு பிறகு, சாரதா கணவன் மரணம் மூலம் ஏற்பட்ட புகழை தனது அரசியல் வாழ்க்கைக்கு அடித்தளமாக கொண்டு முன்னேறினர், தனது அரசியல் வாழ்க்கைக்கு எதிராக இயங்கும் அனைத்து சக்திகளையும் புறம் தள்ளி அடுத்த 15 வருடத்தில் குருதாஸ் புரில் அசைக்க முடியாத நிலைக்கு வந்தார், அந்த ஊர் மக்களை பொறுத்த வரை அவர் கூறுவது தான் வேத வாக்கு என்று நிலை உருவானது.

இவரின் மற்றொரு முகம் அவரின் மகன்கள் மற்றும் மகளுக்கு தெரியாது, அவரின் உண்மை முகம் தெரியாது என்பதை விட தெரியாமல் பார்த்து கொண்டார் என்பது சால பொருத்தும்.

சாரதா மற்றும் முரளி தம்பதிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள், முதல் மகன் வரமன், அவனது மனைவி வினோதினி, அவர்களின் ஒரே புதல்வன் யுவராஜ் எனும் யுவி, அவன் அத்தையின் செல்லம், இரண்டாவது மகன் தீபன் மற்றும் மூன்றாவது மகன் திலீபன், கடைசியாக நமது கதையின் நாயகி நட்சத்திரா,
வானத்து தேவதைகள் பொறாமை படியான அழகினை கொண்ட நங்கை, குணத்தில் சிறந்தவள், இல்லை என்று வருபவர்களுக்கு தனக்கு உணவு இல்லை என்றாலும் உணவு அளிக்கும் குணம் படைத்தவள், மொத்தத்தில் அந்த வீட்டின் குட்டி இளவரசி, அனைவருக்கும் செல்லம், இவளும் யுவியும் சேர்ந்து விட்டால் வீடு இரண்டு ஆகி விடும், அவளின் அண்ணி வினோதினி மட்டும் இவள் செய்யும் அனைத்து சிறு சிறு தவறுகளும் தெரியும், நட்சத்திரா மற்றும் அவளின் அண்ணி வினோதினி இருவரும் நெருங்கிய தோழிகள் போல அனைத்து விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள், யுவியை அடக்கும் வழி நட்சத்திரா மட்டுமே அறிவாள், அவனும் இவளுக்கு மட்டுமே அடக்குவன். அவள் செய்யும் அனைத்து செயல்களையும் தனது அண்ணியிடம் ஒப்பித்து விடுவாள் நட்சத்திரா, இதை எல்லாம் செய்தவள், அவளின் காதலை மட்டும் வினோதியிடம் உரைக்க வில்லை, அவ்வாறு உரைத்து இருந்தால் அவளின் காதல் அவளின் விட்டு பிரியாமல் தடுத்து இருக்கலாம், விதி வலியது, அது நினைத்ததை நடத்தாமல் விடாது என்பதற்கு நமது நாயகியும் வாழ்க்கை ஒரு சான்று எனலாம்.

வர்மன் மற்றும் நட்சத்திரா அவர்களின் தந்தையின் குணத்தை ஒத்து இருந்தனர், தீபன் மற்றும் திலீபன் அவர்களின் தாயின் குணத்தை ஒத்து இருந்தனர்.

மாளிகை போன்ற அந்த வீட்டில் பந்தல் மற்றும் தோரணம் போன்ற அலங்கரங்கள் ஒரு புறம் நடக்க, ஒடுவதில் ரயிலை தவிர்த்து, பறப்பதில் விமானத்தை தவிர்த்து, மிதப்பதில் கப்பலை தவிர்த்து அனைத்தும் அடுப்பில் கொதித்து கொண்டு இருந்தது.

அந்த வீட்டு இளவரசன் யுவராஜுக்கு காது குத்தும் விழா இன்னும் சிறிது நேரத்தில் பக்கத்தில் உள்ள காளி கோவிலில் நடைபெற உள்ளது.

ஆனால் விழாவின் நாயகன் யுவி இன்னும் தயாராகமல் அவனின் அன்னையை ஒரு பாடு படுத்திக்கொண்டு இருந்தான். அவன் அன்னை எவ்வளவு சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. தினமும் இவனை குளிக்க வை வினோதினி ஒரு வழி ஆகிவிடுவாள். இவனை தயார் செய்வது தினமும் நட்சத்திரா வேலை தான், ஆனால் இன்று அவள் கோவிலுக்கு சென்று இருப்பதால் இவனை தயார் செய்யும் பெரிய வேலை வினோதினி தலையில் விழுந்தது.

" யுவி நில்லு, வந்து குளி, அம்மா எவ்வளவு நேரம் உன்னோட பின்னாடி ஒடுறது, வாடா செல்லம், பட்டு குட்டி அம்மா கிட்ட வாங்க என்று யுவியை கொஞ்சி கொண்டு இருந்தால் வினோதினி, அவன் எதற்கும் அசைவென என்று அவனின் தாய்க்கு நாக்கை துருத்தி போக்கு காட்டி விட்டி சிட்டாய் பறந்து விட்டான்.

யுவி ஓடி கொண்டே இருக்க அவன் தாய் அவனை துரத்தி கொண்டு ஓடினாள், அவன் கையில் சிக்கினால் தானே, ஹால், முற்றம், பெட்ரூம், கிச்சன் என்று ஓரு இடம் விடாமல் ஓடினான் ,இறுதியில் நட்சத்திராவின் கையில் சிக்கி கொண்டான்

யுவி யின் காதை புடித்து திருகி அவனை குளியலறை க்கு தூக்கி சென்றால் நட்சத்திரா...

அவள் ஒன்று முதல் 10 வரை தலை கீழாக எண்ண, 1 என்று எண்ணி முடிப்பதற்குள் யுவி குளித்து முடித்து, அழகாக உடை உடுத்தி அவள் முன்பு நின்றான், இது தினமும் நடக்கும் ஒரு நிகழ்வு தான், ஒன்று முதல் பத்து வரை நட்சத்திரா தலை கீழாக எண்ண யுவி அவள் சொல்லும் அனைத்து செயலையும், செய்ய மாட்டேன் என்று சொல்லமல் செய்து முடிப்பான், அவன் அவள் சொன்னதை சரியாக செய்தால் அவனுக்கு கன்னத்தில் ஒரு முத்தமும், கையில் ஒரு லட்டும் கிடைக்கும், யுவியை வழிக்கு கொண்டு வர இது ஒன்று தான் வழி, இதே வழியை வீட்டில் இருக்கும் யார் பயன்படுத்தினாலும் பலன் என்னவோ பூஜியம் தான்.

நட்சத்திரா யுவியை தூக்கி கொண்டு விழா நடக்கும் இடத்திற்கு சந்தோசமாக தனது குடும்பத்துடன் காரில் சென்றாள்....

இந்த மகிழ்ச்சி நட்சத்திராவின் வாழ்வில் நிலைபெருமா.....

நட்சத்திராவின் காதல் சாரதாவிற்கு தெரிந்தால், அவள் காதலின் நிலை என்ன......

பூக்கள் மலரும்.....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
புதுமை 2

நட்சத்திரா, சாரதா, வர்மன், வினோதினி, தீபன், திலீபன், யுவி ஆகியோர் பயணித்த கார் காளி கோவிலை வந்து அடைந்தது, இந்த உலகத்தை ஆளும் ஜெகன்மாதா கையில் திரிசூலம், வில், அம்பு ஏந்தி கோப முகத்துடன் கண்களில் அன்பு வழிய தன்னை தேடி வரும் மக்களுக்கு அருள்பாளித்து கொண்டு இருந்தாள்.



காரில் இருந்து இறங்கிய அனைவரும் காளி தேவியை தரிசித்து விட்டு யுவியை வினோதினி தம்பி விமல் மடியில் அமர வைத்து காது குத்தினார், அனைவரும் சிரித்து கொண்டு இருக்க யுவி மட்டும் தான் தலையில் உள்ள முடி போய்விட்டால், தனது நண்பர்கள் தன்னை "மொட்டை, மொட்டை என்று சொல்லி கிண்டல் செய்வார்கள் என தனது அத்தை நட்சத்திராவிடம் முறையிட்டு கொண்டு இருந்தான்.



கறி விருந்து ஒரு புறம் தடல்புடலாக நடந்து கொண்டு இருக்க, நமது திலீபன், தீபன் மற்ற அனைத்து ஆண் மகன்கள் அனைவரும் தாக சாந்திக்காக மறுபுறம் ஒதுங்கி சென்று குடித்து கும்மாளம் இட்டனர்.



விழா நிறைவுற, வந்த அனைவரும் அவர் அவர் இல்லம் நோக்கி செல்ல நமது நாயகி குடும்பமும் தமது இல்லத்தை அடைந்தது.



நட்சத்திரா மகிழ்ச்சியுடன் வர்மன் பிள்ளையுடன் விளையாடி கொண்டு இருக்க, அவளின் சந்தோசத்தை கொடுக்கும் பொருட்டு சாரதவின் தோழி சுதா நட்சத்திராவிற்கு வரனை கொண்டு வந்தார், சாரதா வந்தவரை வரவேற்று இப்பொழுது நட்சத்திரா படித்து கொண்டு இருப்பதால் அவளுக்கு திருமணம் செய்ய எண்ணம் இல்லை என்பதை நாசுக்காக சொல்லி அவரை வழி அனுப்பி வைத்தார்.



அன்று இரவு குடும்பத்தில் உள்ள அனைவரும் உணவு மேசையில் அமர்ந்து உணவு உண்டபடி பேசிக்கொண்டு இருந்தனர், இறுதியில் பேச்சு நட்சத்திராவின் திருமணத்தில் வந்து நின்றது, சாரதா நட்சத்திராவிற்கு வரும் மாப்பிள்ளையின் தகுதி, அவன் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என விவரித்து கொண்டு இருக்க, சிரித்து கொண்டு இருந்த நட்சத்திராவின் முகம் இருண்டு போனது.



"அம்மா, நீங்க சொல்ற தகுதி ஏதுவும் இல்லாம நான் சாதாரணமா ஒருத்தர் விரும்பினால் என்ன செய்விங்க, என்று கேட்ட வினாடி சாரதாவின் உணவு தட்டு பறந்து சென்று தரையில் விழுந்தது,



சாரதா கண்ணில் கோபத்துடன்,



"இந்த காலத்து பொண்ணுங்க உங்களுக்கு வர வேண்டிய மாப்பிள்ளையை நீங்களே முடிவு செய்யுறீங்க, ஆன எங்க காலத்துல எல்லாம் அம்மா, அப்பா சொல்றவங்க தான் மாப்பிள்ளை, உன்னோட மனசுல நீ சொல்ற மாதிரி யாராவது இருந்த இப்பவே மனசுல இருக்குற அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைச்சிடு, இல்ல உன்னோட மனசுல இருக்குறவனுக்கு நான் மண்ணுல குழி தோண்ட வேண்டியது வரும், மறந்துடாத என கத்தினார்.



தனது தாயின் இந்த புதிய முகத்தை நினைத்து

நட்சத்திரா கலங்கி நின்றாள், சாரதா அவள் அழுவதை நிறுத்த சொல்லி மிரட்டி அவளை அறைக்கு அழைத்து செல்லுமாறு வினோதினி யிடம் ஆணையிட்டார்.



" நான் பெத்த பொண்ணு அவளோட கல்யாணம் பத்தி என்கிட்டயே தைரியமா சொல்கிறாள் என்றால், வெள்ளம் தலைக்கு மேல போக போகுதுன்னு அர்த்தம், அப்படி போகறதுகுள்ள, ஆற்றை சுத்தி அணை கட்டலைன னா எல்லாம் என்னோட கையை மீறி போய்டும், என மனதில் நினைத்தவர், தீபன், திலீபனை அழைத்து நட்சத்திராவை கண்காணிக்கும் படி கேட்டு கொண்டார்.



கண்களில் கண்ணீர் உடன் தனது அறைக்கு வந்து நட்சத்திரா உடனடியாக தனது காதலன் சதீஷ்குமாருக்கு தொலைபேசியில் அழைத்தாள்.



எதிரில் அழைப்பு ஏற்க படாமல் இருக்க நட்சத்திரா இதயம் மறுபுறம் வேகமாக துடித்து கொண்டு இருத்தது, எதிரில் இருக்கும் சதீஷ் போனை எடுத்த நொடி ...



"டேய், எருமாடு உனக்கு ஒரு போனை எடுக்க எவ்வளவு நேரம், நீ போன் எடுக்கறதுக்குள எனக்கு உயிர் போய் உயிர் வருது என அவனை வார்த்தைகளால் வறுத்து எடுத்தால் நட்சத்திரா.



சதீஷ் தாய், தந்தை யார், என்று தெரியாதவன், அவன் தற்பொழுது இருக்கும் சூப்பர் மார்க்கெட் ஓனர் சர்மா அவனை ஓர் குப்பை தொட்டியில் இருந்து கண்டு எடுத்து சிறு வயது முதல் வளர்ந்து வருகிறார்,



சதீஷ் உண்மையும் உழைத்து முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் கொண்ட 25 வயது இளைஞன், விவசாயத்தில் முதுநிலை அறிவியலை(M.Sc agriculture) முடித்து விட்டு, நெல் விளைச்சலை அதிகபடுத்த வீரியம் மிக்க நெல் வகைகளை கொண்டு ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கும் ஆராய்ச்சி மாணவனும் கூட, அது மட்டும் இன்றி அரசு வேலைக்காக முதல் நிலை தேர்வு எழுதி அதில் தேர்ச்சியும் பெற்று, இறுதி நிலை தேர்வு எழுதி அதன் முடிவுக்காக காத்துகொண்டு இருக்கிறான், பகுதி நேரமாக சர்மா நடத்தும் சூப்பர் மார்க்கெட் யும் பார்த்து கொள்கிறான்.



இந்த நிலையில் நட்சத்திரா தனது காலேஜ் அருகில் உள்ள சர்மா சூப்பர் மார்க்கெட் அடிக்கடி வந்து செல்ல, இருவருக்கும் காதல் மலர்ந்தது.

நட்சத்திராவை அழைப்பை ஏற்ற சதீஷ் அவளின் கோபமான பேச்சை கண்டு விழுந்து விழுந்து சிரித்தான், அவன் சிரிப்பை கண்ட நட்சத்திரா மேலும் கோபம் கொண்டு அர்ச்சிக்க சிரிப்பினை நிறுத்தியவன்,



" ஏய், கோதுமை உருண்டை எதுக்கு டி இப்படி காது கிழிய கத்துற, நீ கத்துறதா கேட்டு எனக்கு ஒரு பக்க காது ஓட்டையா போயிடுச்சு,



அவன் பேச்சில் கோபம் குறைந்த நட்சத்திரா தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் விஷயத்தை அவனுக்கு உரைத்தது மட்டும் இன்றி, தனது பயத்தை பற்றியும் அவளின் தாய் சற்று நேரம் முன்பு பேசிய அனைத்தையும் அவனுக்கு கூறினாள்.



அவளின் கவலை போக்க எண்ணியவன் அவளுக்கு ஆறுதல் கூறி, அவனின் இறுதி நிலை தேர்வு முடிவு வரும் வரை அமைதி காக்கும் படி சொன்னவன், மற்ற விஷயங்களை சிறிது நேரம் அவளிடம் கதைத்து விட்டு போனை வைத்தான்.



யார் என்ன நினைத்தாலும் விதி தான் செய்ய நினைத்த செயலை நிகழ்தாமல் விடாது, நட்சத்திராவின் மனதில் முளைத்த காதல் ஒருபுறம் இருக்க, அவளின் வாழ்க்கை ஓடம் அமைதியாக எந்த வித தடையும் இன்றி நகர, அமைதியான கடலில் தீடிரென ஏற்பட்ட புயலை போல விதி அவளின் வாழ்வில் வேறு ஒருவனை நுழைக்க முயல்கிறது.....



அமிர்தசரஸ்.....



அமிர்தசரஸ் வரலாற்று ரீதியாக ராம்தாஸ்பூர் என்றும், அம்பார்சர் என்றும் அழைக்கப்படுகிறது, இது வடமேற்கு இந்தியாவில் உள்ள ஒரு நகரமாகும், இது அமிர்தசரஸ் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகமாகும், இது இந்திய பஞ்சாபின் மஜா பகுதியில் அமைந்துள்ளது, மேலும்

கோல்டன் சிட்டி

புனித நகரம்

அமிர்தக் குளம்

சிப்தி டா கர்

குரு கி நகரி என்ற செல்லப்பெயர்களில் அழைக்க படுகிறது.



இந்திய அரசின் HRIDAY - Heritage City Development and Agmentation Yojana திட்டத்திற்கான பாரம்பரிய நகரங்களில் ஒன்றாக அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரஸ் ஹர்மந்திர் சாஹிப்பின் தாயகமாக உள்ளது, இது " பொற்கோயில் " என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது சீக்கிய மதத்தின் மிகவும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் அதிகம் பார்வையிடப்பட்ட குருத்வாராக்களில் ஒன்றாகும். இந்த நகரம் மர சதுரங்கப் பலகைகள் மற்றும் சதுரங்கத் துண்டுகள் உற்பத்தித் தொழிலுக்கும் பெயர் பெற்றது.



காலை வேளையில் அந்த அரண்மனை போன்ற வீடு பரபரப்பாக காணப்பட்டது, அமிர்தசரஸ் MLA, நவீன் வீர் சிங் குருதாஸ் புரில் உள்ள ஒரு பள்ளியின் திறப்பு விழாவுக்காக தயார் ஆகி கொண்டு இருந்தான்.



மறுபுறம் அவன் வீட்டில் ஏற்பட்ட கூச்சல் அவன் கவனத்தை கலைத்தது, அமர் தீப் சிங் அழகும் அண்மையும் நிறைந்த கூர்மையான கண்களையும், தயாள குணமும் கொண்ட 30 வயது ஆண் மகன். அரசியலின் ஈடுபட்டாலும் அடுத்தவரின் சொத்திற்கு அசைப்படாமல் மக்களுக்கு தன்னால் இயன்ற சேவை செய்பவன்.



அமரின் குடும்பம் மூன்று தலைமுறைக்கு முன்பு தங்களது தொழிலை விரிவு செய்ய பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் புலம் பெயர்த்தனர், அவர்களின் தொழில் ஒருபுறம் வளர்ச்சி அடைய அவர்களின் புகழும் வளர்ச்சி அடைந்தது, அமரின் தந்தை, தனது ஏற்பட்ட புகழினை அரசியலில் நுழைய ஒரு வழியாக பயன்படுத்தி கொண்டு வெற்றியும் பெற்றார், ஒரு எதிர்பாராத சூழ்நிலையில், அவர் இறந்து விட

அமிர்தசரஸ் தொகுதியில் அமர் நின்று வெற்றியும் பெற்றான்.



அமரின் காதல் மனைவி வர்ஷா அபி பிறந்ததும் இறந்து விட அவனுக்கு வாழ்வில் ஒரே பற்று கோலாக இருப்பது அவன் மனைவி, தங்களின் காதலுக்கு பரிசாக அவனுக்கு அளித்த அவர்களின் 3 வயது அன்பு மகன் அபிஷேக் என்னும் அபி. அவனுக்கும் அபிக்கும் நடுவில் யார் வந்தாலும் அவனுக்கு பிடிக்காது, அவன் தங்கை வசுந்தரா அவனை மறுமணம் செய்ய சொல்லி வற்புறுத்த பலன் புஜ்யம் தான்.



அபி பள்ளிக்கு தயாராக அமரின் தங்கை வசுந்தரா வை ஒருவழி ஆக்கி கொண்டு இருந்தான், அன்னை இல்லாத காரணத்தால் எதற்கு எடுத்தாலும் அவன் தந்தை வேண்டும், குளிக்க, உணவு உண்ண, உடை உடுத்த என எந்த செயலை செய்தலும் அமர் இல்லாமல் எதுவும் நடைபெறாது எனலாம். அமர் தனது மகனுக்கு அன்னை இல்லாத காரணத்தால் அவனுக்கு தாயுமானவானாக அவனின் ஆதியும் அந்தமுமாக மாறினான்.



வசுந்தரா அமரின் அன்பு தங்கை, அவளின் கணவன் வெற்றிவேல் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்க, இவள் அவனின் அண்ணன் குழந்தையை வளர்க்க இங்கே இருக்க வேண்டிய நிலையில் இருந்தாள்.



பள்ளிக்கு தயாராக அழுது கொண்டு இருந்த அபியின் அருகில் வந்தவன், அவனை உச்சி முகர்ந்து நெற்றியில் முத்தம் அளித்து விட்டு, அவனை பள்ளிக்கு தயார் செய்து அனுப்பி வைத்தான்.



குருதாஸ் புரில் நோக்கி அமரின் கார் வேகமாக பறந்து கொண்டு இருந்தது, இதற்கு இடையில் அந்த கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர் என்ற முறையில் சாரதா அந்த பள்ளிக்கு வந்து இருந்தார்.



விழா நடக்கும் பள்ளிக்கு வந்து இறங்கிய அமரினை பார்த்த சாரதா விற்கு அவன் மூலம் அரசியலில் முன்னேற எண்ணம் தோன்ற அதற்கான அடுத்த காயை நகர்த்தினர்.

பள்ளிக்கு வந்த அமரினை மாலை அணிவித்து, மேளா வாத்தியங்கள் முழங்க உள்ளே அழைத்து சென்றவர், அவனிடம் பேச்சை வளர்க்க அவன் இவரிடம் பேசாது மரம் என்று இறுகி நின்றான்....



பள்ளி திறப்பு விழா இனிதே நிறையுற அமர் அமிர்தசரஸ் நோக்கி தனது காரில் பயணத்தை துவக்கினான், விதி அவன் வாழ்வில் நட்சத்திரா நுழைய தேவையான காரியங்களை செய்ய துவங்கி இருந்தது....



சாரதா, அமர் குறித்து அருகில் இருப்பவர்களிடம் கேட்க, மனைவி இல்லை, மூன்று வயது மகன் மட்டுமே, இந்த உறவுகளை தவிர்த்து சுற்றம் உறவு யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொண்டார்.



அவனை பற்றி முழு விவரம் அறிந்து கொண்டவர், அமரினை பற்று கோலாக கொண்டு அரசியலில் ஆதாயம் தேட எண்ணி தனது மகளின் வாழ்வை பணயமாக வைக்க துணிந்தார்.



தனது மகளின் மீதி வாழ்வை அமர் தீப் சிங் உடன் இணைக்க சாரதா துடித்து கொண்டு இருக்க....



இது அறியாத நட்சத்திர தனது காதலன் உடனான அவளின் திருமணம் குறித்த கனவுகளில் லயித்து இருக்க....



இது எதுவும் அறியாத அமர் அவன் மகனின் எதிர்காலம் குறித்த கவலையில் உருகி கொண்டு இருந்தான்.....



பூக்கள் பூக்கும்
 

யாழ் மொழி

Member
Vannangal Writer
Team
Messages
93
Reaction score
14
Points
8
புதுமை 3
மாலை மங்கும் நேரம், சூரியன் தனது கோபத்தை குறைத்து தன் மனதை கொள்ளை கொண்ட, மங்கையான நிலவின் வருகையை எதிர் நோக்கி மேற்கில் மறைய, தன் மனம் கொள்ளை கொண்ட கள்வனை காண தனது காரில் பயணித்து கொண்டு இருந்தாள் நட்சத்திரா...

காலை அவள் அன்னை அளித்த அதிர்ச்சியில் இருந்து அவள் மனம் இன்னும் தெளிவு அடையவில்லை, அதனை அவள் முகமே கவலையாக எதிர் ஒளி செய்தது, தனது உயிரின் மடியில் அவளின் கவலைகளை, கண்ணீராக இறக்கி வைக்க, அவனின் தோள் சாய, அவன் கைகளோடு கை சேர்த்து உலகம் மறக்க காதல் கொண்ட அவள் மனது அவனின் அருகாமையை தேடியது.

நட்சத்திரா நேராக சர்மாவின் சூப்பர் மார்க்கெட், அருகில் காரின் ஹாரன் இடை விடாமல் அடித்து கொண்டு இருந்தாள், காரின் ஹாரன் சத்தத்தை கேட்ட சாலையில் சென்று கொண்டு இருந்த மனிதர்கள் எல்லாம் அவளை ஏதோ காணாத பொருளை காண்பது போல பார்த்து கொண்டு செல்ல, அவளின் கார் சத்தம் கேட்டு சதீஷ் கடையில் இருந்த சர்மாவிடம் எதையோ சொல்லிவிட்டு வேகமாக அவளின் கார் கதவை திறந்து காரின் உள்ளே அமர்ந்தான்.

அவன் அமர்ந்தது தான் தாமதம், நட்சத்திரா அவளின் கவலைகளை எல்லாம் அவனை கட்டி அணைத்து அவனின் தோள்களில் முகம் புதைத்து அழுது களைந்தாள், அவளின் முகம் காண அவளின் முகத்தை நிமிர்த்தியவன் அவளின் வதனத்தில் கண்ட கண்ணீரை துடைத்து அவளின் இதழோடு இதழ் சேர்த்தான், இந்த இதழ் யுத்தம் எவ்வளவு நேரம் நீடித்தது என இருவருக்கும் தெரியாது, வெளியில் எங்கோ கேட்ட இடியின் ஓசையில் இருவரும் சுயநிலைக்கு வந்தனர்.

அவனின் முகம் காண வெட்கம் கொண்டவள், அவனின் நெஞ்சில் மஞ்சம் கொண்டாள், அவளின் முகம் சூரியனின் நிறத்தை தத்து எடுத்தது, பின்பு அவனை விட்டு சற்று தள்ளி அமர்த்தவள், அன்று காலை நடத்த நிகழ்வுகளை அவனிடம் கூற தொடக்கினாள்,

காலை கடன்களை முடித்து கல்லூரிக்கு, கிளப்பியவள் கீழே வரவேற்றது சாரதா தோழி சுதாவின் குரல் தான், வழக்கம் போல் அன்றும் நட்சத்திராவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலத்தை நிகழ்த்த தேவையான மாப்பிள்ளை புகை படங்களுடன் சுதா சாரதவிற்கு தூபம் இட்டு கொண்டு இருந்தார், சாரதா பார்த்த அனைத்து மாப்பிள்ளைகளையும் ஏதெனும் ஒரு குறை சொல்லி தட்டி கழித்தார், அவரின் எண்ணம் ஒன்று தான்,

தனது மகளின் வாழ்வை அமர் தீப்வுடன் எந்த எல்லைக்கு சென்றவது இணைத்து விட வேண்டும் என பேராசை கொண்டு அவரின் மனதில் எண்ணினார்.

அவரின் மனதின் எண்ணம் கடவுளுக்கு கேட்டதோ இல்லையோ, நட்சத்திராவின் வாழ்வில் அமரை நுழைக்க வழிகளை விதி செவ்வனே செய்ய துவங்கியது...

சுதாவின் செல்போன் அழைக்க, அழைப்பது யார் என பார்த்தவரின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது, போணை அட்டெண்ட் செய்தவர், மரியாதையுடன் எதிரில் இருக்கும் நபர் கேட்டுக்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்து விட்டு போனை வைத்தார்.

எதிரில் இருந்த சாரதா வின் முகம் கேள்வியாய் சுதாவை நோக்க, சுதா பேச தொடங்கினார்,

"பேசறது வேற யாரும் இல்லை சாரதா, அமிர்தசர்ஸ் MLA தங்கச்சி வசுந்தரா தான், அவங்களோட அண்ணன் அமருக்கு பொண்ணு பார்க்க சொல்லி இருத்தங்க, அதான் அதை பத்தி கேக்குறங்க, என பதில் அளித்தார்,

இதனை கேட்ட சாரதவின் முகத்தில் புன்னகை பூத்தது, தனது எண்ணம் நிறைவேற வேண்டிய வழி கிடைத்து விட , மனதில் விரைவாக ஓரு திட்டத்தை வகுத்தார், தனது திட்டத்தின் முதல் படியாக ஒரு அறைக்குள் சென்றவர் நட்சத்திராவின் போட்டோவை எடுத்து வந்து சுதாவிடம் அளித்துவிட்டு,

"இங்க பாரு சுதா நீ என்ன செய்வனு, எனக்கு தெரியாது இந்த போட்டோவை அமரோட தங்கச்சி, வசுந்தரா கிட்ட குடுத்து நம்ம நட்சத்திரா ஓட கல்யாணத்தை அமர் கூட ஏற்பாடு செய்யுற, அது மட்டும் இல்லை இது மட்டும் நீ செஞ்சிமுடிச்சிட்டனா, உனக்கு நான் இருக்குற மாதிரி ஒரு வீடு, உன்னோட பேருக்கு ரிஜிஸ்டர் ஆகும், என ஆசை வார்த்தைகளை குறி தனது திட்டத்துக்கு சுதாவை சம்மதிக்க வைத்தார், சாரதா, மேலும் இது அனைத்தையும் கேட்ட மாடியில் இருந்து கேட்டு கொண்டு இருந்த நட்சத்திரா மனது பாறையை போன்று கனத்தது, தன்னை ஈன்றவளே, தனது அரசியல் ஆதாயத்திற்காக தான் பெற்ற மகளின் வாழ்வை பணயமாக நிலையினை எண்ணி வெக்கி தலை குனிந்தாள், தனது நிலையினை என்னை சுய இறக்கம் தோன்ற, தேற்றுவர் யாரும் இன்றி கண்ணீரில் கரைத்த படி வீட்டை விட்டு யார் கண்ணுக்கும் படாமல் வெளியேறினாள்.

கண்களில் கண்ணீர் கரைபுரண்டு ஓட கால்கள் எந்த திசையை நோக்கி செல்கிறது, என்பதை அறியாது, மனம் போன போக்கில் சென்று கொண்டு இருந்தாள் நட்சத்திரா.

அமிர்தசர்ஸ் ......

அமரின் வீடு பரபரப்பாக இருந்தது, இரண்டு மணி நேரமாக அபியை காணாமல் அனைவரும் ஹால், கிச்சன், பெட் ரூம், பாத் ரூம் என ஓரு அறை விடாமல் தேடி கொண்டு இருத்தனர், அவன் எங்கு சென்றான், யாராவது கடத்தி இருப்பார்களா என்று மனது தறி கேட்ட ஓட, தனது உயிரனை கையில் பிடித்து கொண்டு அமர் தனது மகனை தேடிக்கொண்டு இருந்தான், அபி கிடைக்கா விட்டால் தான் வாழும் வாழ்விற்கு அர்த்தம் இல்லை என்று நினைத்தவன், அவன் கிடைக்க விட்டால் தனது உயிரனை துறக்கவும் எண்ணினான்.

வீட்டில் வேலை செய்யும் அனைத்து வேலைகாரர்கள் ஒருபுறம், வசுந்தரா ஒருபுறம், அமர் ஒருபுறம் என தேடி கொண்டு இருக்க, அபியின் அறையில் டம் டம் என்ற சத்தத்துடன் ஏதோ உடைந்து நொறுங்கியது

சத்தத்தை கேட்ட அமர் உள்ளம் வேகமாக துடிக்க,நான்கே எட்டில் படிகளில் எறியவன், அபியின் அறையில் நுழைத்தான், அங்கு

அவன் கண்டது அபியும் கால் செப்பல் பீரோவின் அடியில் கிடக்க, நொறுங்கி கிடந்த பீரோவின் அருகில் சென்றவன் இதயம் ஒரு முறை நின்று தான் துடித்தது, அதன் அருகில் சென்றவன் அதை நிமிர்த்த முயற்சி செய்து முடியாமல் போக அருகில் இருக்கும் வேலை செய்பவர்களும் அவனுக்கு உதவ முன் வந்தனர், அனைவரும் பீரோவினை நிமிர்த்த பெரும்பாடு பாடு பட்டு கொண்டு இருக்க எங்கோ இருந்து கேட்ட அப்பா......என்ற குரல் அமரின் செவியினை எட்டிய வினாடி, போன அவனது உயிர் மீண்டும் அவன் கூட்டினை வந்து அடைந்தது, கையில் இருந்த பீரோவினை அப்டியே கீழே விட்டவன், குரல் வந்த திசையினை நோக்கி சென்றான்,

அபி கட்டிலுக்கு அடியில் அமர்ந்து கையில் ஒரு காகிதத்தை பார்த்த அழுது கொண்டு இருந்தான், கட்டிலுக்கு அடியில் நுழைந்து அவனை தூக்கி கொண்டு வெளியில் வந்த அமர், அவனின் கண்களை துடைத்து விட்டு,

"அபி, கண்ணா இப்போ என்னாச்சு, என் என்னோட அபி குட்டி அழுறிங்க என விசாரித்தான்.

அபி விசும்பி கொண்டே"அப்பா, என்னை ஸ்கூல் லா இருக்குற மிஸ் எல்லாம் அம்மா இல்லா பையனும், அது மட்டும் இல்லாம டையப்பர் போட்டு வர உனக்கு பாத்ரூம் கூட போக தெரியாதா னு, கேட்டு டையப்பர் பேபி னு கிண்டல் பன்றங்க, என கண்கள் கலங்க கூறினான்.

ஏதும் அறிய பிஞ்சின் மனதில் நஞ்சை விதைத்தவர்ககளை கண்டால் கொன்று விடும் வெறி தோன்றியது அமரின் மனதில், அதனை தனது மகனுக்கு தெரியாமல் மறைத்தவன் சிரித்த முகத்துடன் அவன் மகனின் கண்களில் இருந்த கண்ணீரை துடைத்து,

"அபி கண்ணா யாரு உனக்கு அம்மா இல்லன்னு சொன்ன, நீ கடவுள் எனக்கு குடுத்த பரிசு, உனக்கு அம்மா அந்த கடவுள் தான் செல்லம்,அடுத்த தடவை யாருன உனக்கு அம்மா இல்லைனு சொன்ன நான் கடவுளோட குழந்தைன்னு சொல்லணும் சரியா", என கேட்டான்.

அவனின் சமாதானத்தை ஏற்காத அபி "அப்பா இங்க பாருங்க இது நேத்து என்னோட ட்ரெய்ங் மீஸ் சொல்லி கொடுத்தாங்க, இந்த ட்ரெய்ங் ல அம்மா அப்பா எல்லாரும் இருக்காங்க, ஆன நம்ம வீட்டுல நானும் நீங்களும் தான் இருக்கோம், அம்மா எப்போ வருவாங்க என எதிர் கேள்வி கேட்டான், அவனின் கேள்வியை கேட்ட அமர் பதில் கூறாது கல் என சமைத்து நிற்க, அவனின் கைகளில் இருத்த அபியை வசுந்தரா பெற்று கொண்டு ஏதோ ஏதோ சமாதானம் சொல்லி அவனுக்கு உணவு அளித்து உறங்க வைத்தார்.

அமர் மனதில் ஒரே கேள்வி தான் தொக்கி நின்றது, தனது மகன் தாய் பாசத்திற்கு ஏங்கிறானோ, என்பது தான் அது, வசுந்தரா அமரின் அறைக்கு வந்தவர், அவன் இருக்கும் நிலையினை எண்ணி வருந்தி, அவனை அருகில் உள்ள இருக்கையில் அமர வைத்து பேச ஆரம்பித்தார்.

"இங்க பாருங்க அண்ணா, என்ன தான் வீட்டுல யாரு இருந்து, அபியை கவனிச்சிக்கிட்டாலும் அவனோட அம்மான்னு ஒருதங்க பார்த்துக்குற மாதிரி இருக்காது, அவன் ஸ்கூல்ல, வெளில இருக்குற எல்லாம் குழந்தைகளையும் பார்த்து அம்மா பாசத்துக்காக ஏங்குறன், உனக்காக இல்லைனாலும் அபிக்காக நீ இரண்டாவது கல்யாணம் செஞ்சிக்கணும், நல்ல யோசிச்சி ஒரு முடிவு சொல்லுங்க அண்ணா, எனஅவனுக்கு யோசிக்க தனிமை அளித்து வெளி ஏறினர் வசுந்தரா.

மனது நிலை இல்லாமல் தவிக்க தனது கரினை எடுத்து கொண்டு காளி கோவிலும் சென்றான் அமர், அதே நேரத்தில் தனது அன்னையின் கேவலமான செயலினால் மனம் உடைந்த நட்சத்திரா கால்கள் தன் போக்கில் போக அவள் சென்று நின்ற இடம் உலகையே ஆளும் தேவி குடிகொண்டு இருக்கும் காளி கோவில்,

காரை விட்டு இறங்கிய அமர் கோவிலின் உள்ளே நுழைய, அதே நேரத்தில் நட்சத்திரவும் உள்ளே நுழைத்தாள், இருவரின் வரவை ஒட்டி அவர்களின் இணைவை உறுதி செய்யும் வகையில் கோவிலில் உள்ள மணியும் அடித்தது, இது கடவுளின் செயல் என்பதா, இல்லை விதியின் விளையாட்டு என்பதா....

இருவரும் ஒரே நேரத்தில் கோவில் கருவறையின் வந்து காளி தேவியினை வேண்ட, அமைதியின் உருவாய் இருக்கும் காளி தேவி இருவரையும் இணைத்து வைக்க அனுமதி அளித்தது, போன்று இருவரின் மேலும் பூ மாரி பொழிந்தாள், மேலும் அவளின் முடிவிற்கு வலு சேர்க்கும் விதமாக மழை தனது சம்மதத்தை அவர்களின் மீது பொழிந்து குளிர்வித்தது. ஆனால் வாழ்க்கையில் இணைய போகும் இருவரும் தங்களின் முகத்தினை பார்த்து கொள்ள வில்லை, இருவரும் அவர்களின் சிந்தனையில் முழுகி இருத்தனர்.

கோவிலை விட்டு வெளியில் வந்த அமரின் மனம் நிம்மதி அடைந்தது, ஒரு முடிவுக்கு வந்தவனாக வசுந்தரவுக்கு அழைத்து மருமணத்திற்கு தனது ஒப்புதலை வழங்கினான்....

நட்சத்திரா வின் மனமும் அமைதி அடைய சதீஷ் இடம் தங்களுத்து திருமணம் குறித்து பேசி ஒரு முடிவு எடுக்க உறுதி பூண்டவள், அவனை பார்க்க சூப்பர் மார்க்கெட் நோக்கி விரைத்தாள்....

சதீஷ்யை பார்த்த நட்சத்திரா தனது வீட்டில் இதுவரை நடந்து முடிந்த அனைத்தையும் கூறி முடித்தாள், மேலும் முடிந்த வரை சீக்கிரமாக தங்களுது திருமணம் குறித்து வீட்டில் பேசும் படி கூறி விட்டு அங்கு இருந்து சென்றாள்...

நட்சத்திர வின் காதல் கை கூடுமா, திருமணம் நடைபெறுமா.....

அமரின் வாழ்வு நட்சத்திரவுடன் இணையுமா...

பதில் வரும் பதிவுகளில்.....

பூக்கள் பூக்கும்......


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Top Bottom