Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பொறுமையின் பெருமை

Messages
40
Reaction score
14
Points
8
பேசும் போது பொறுமை அவசியம்.
அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்பதும், அதற்காக காத்திருப்பதும் சிறந்த பண்பாகும்.

பொறுமையாக இருப்பது நன்மையைத் தரும் என்பதற்கு, அறிவியலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு

தாமஸ் ஆல்வா எடிசனின் ஒரு கண்டுபிடிப்பை வெஸ்டர்ன் யூனியன் நிறுவனம் வாங்க முன் வந்தது.

அதற்கான விலை குறித்துமுடிவெடுக்க ஓரிரு நாட்கள் அவகாசம் கேட்டார்.

அது தொடர்பாக, தனது மனைவியிடம் எடிசன் ஆலோசனை கேட்க, அவரது மனைவி 20,000 டாலர் கேட்குமாறு கூறியுள்ளார்.

அது அதிகமான தொகை என்று எடிசன் நினைத்தார்.
என்றாலும் வெஸ்டர்ன் யூனியன் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு சென்றுள்ளார்.

இரு தரப்பிலும் பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு வெஸ்டர்ன் யூனியன் நிறுவன அதிகாரி, “சரி, விசயத்திற்கு வருவோம். எடிசன், எவ்வளவு வேண்டும்” என்று நேராக கேட்டுள்ளார்.

எடிசனுக்கோ
20,000 டாலர் என்று எப்படிக் கேட்பது.
அதிகம் எதிர்பார்ப்பதாக நினைத்து விடுவார்களோ? என்ற யோசனையோடு தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக் கொண்டு வர மறுத்தன.

அமைதியோடு தயங்கி சிறிது நேரம் பொறுமையாக எடிசன் இருக்க;
பொறுமை இழந்த வெஸ்டர்ன் யூனியன் நிறுவன அதிகாரி,
“என்ன யோசனை, ஒரு லட்சம் டாலர்கள் ஓகேவா?” என்றாராம்.

அன்றைய பொறுமை எடிசனுக்கு கேட்க யோசித்ததை விட ஐந்து மடங்கு அதிக லாபத்தை தந்திருக்கிறது.

எப்போதும் பொறுமையும், அடுத்தவர் என்ன பேசுகிறார் என்பதைக் கேட்பதும். அவர்களது வார்த்தைகளுக்காக காத்திருப்பதும் நன்மை தரும்.

வியாபாரத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட்டு விட்டால் திரும்பப் பெற முடியாது. சொல்லிய சொல்லுக்கு நாம் அடிமை. சொல்லாத சொல்லுக்கு நாம் எஜமான்.

பொறுத்தார் பூமி ஆள்வார் என்பது பழமொழி மட்டுமல்ல, வாழ்க்கையின் வழி.

அடுத்தவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைக் கேட்க காத்திருப்பது உறவு மேம்பட உதவும் இழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

😺😸😹😻😼😽🙀🤡🌞😿😾😺😸😹😻
 

New Threads

Top Bottom