Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL மனோஹரி - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

சக்தி பாஸ்கரன் 🖤

New member
Vannangal Writer
Messages
15
Reaction score
15
Points
3
ஏற்கனவே முகநூலில் பதிவிட்டது தான். இருப்பினும் அங்கு பார்க்க தவறியவர்களுக்காக மீண்டும் இங்கே பதிவிடுகிறேன்.

-----------

மனோஹரி - டீஸர்

"நானும் அப்பொலிருந்து பாக்குறேன், நீ செய்யுற சேட்டைக்கு ஒரு அளவே இல்லாம தான் திரியுற. என்ன நெனச்சுக்கிட்டு இருக்க நீ உன் மனசுல. உனக்கென்ன பேரழகன்னு நெனப்பா. பொண்ணுங்க அப்டியே உன் பின்னால வந்து கியூல நிப்பாங்களோ. நானும் எவ்ளோதான் பொறுத்து பொறுத்து போறதாம். அறிவில்லயா உனக்கு. கொய்யால. ஆளையும் மண்டையும் பாரு" என்று மனோ வார்த்தைகளுக்கு வஞ்சனையே இல்லாமல் வாரி வாரி வழங்கும் வள்ளலாக உருகொண்டிருந்தாள் அக்கணம்.

அதற்க்கு உரிதானவனோ ஒன்றும் அறியாத பாலகன் போல அமைதியாய் உதட்டில் தவழும் ஒரு குறிஞ்சிரிப்போடு அவளையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.

அவனுக்கு கூஜா போலவே உடன் இருக்கும் நரேஷ், எதோ தன்னை சாடியாது போலவே ஆத்திரம் பொங்க நின்றிருந்தாலும் சற்றே அடக்கமாய், "எங்க பாஸ் அஹ் யாருன்னு நெனச்சிங்க? யாருகிட்ட பேசுறோம்ன்னு தெரியாம இப்டி பப்ளிக் ப்ளேஸ்ல தேவை இல்லாம வார்த்தையை விடக்கூடாது மேடம்" என்று கத்தவும் முடியாமல், கதறவும் முடியாமல் முக்கி முனங்கி வார்த்தைகளை மென்று விழுங்கி பேசிக்கொண்டிருக்கிறான்.

மனோவோ அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு, "ஆமா நீ யாரு சுண்டக்கா. இவனே ஒரு லூசு. நீ கூட பாஸ்ஸு பாஸ்ஸுன்னு இவனைவிட பெரிய லூசு மாதிரி சுத்திகிட்டி இருக்க?"

"மேடம், எங்க வரலாறு தெரியாம பேசுறீங்க நீங்க. எங்க பாஸ் யாருனு தெரியுமா? எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா?"

"சும்மா சும்மா இதையே எத்தன நாள் தான் சொல்லி பிலீம் காட்டுவ? ஒன்னு யாருன்னு சொல்லணும். இல்லனா மூடிக்கிட்டி நிக்கணும். யாரு தெரியுமா யாரு தெரியுமானா? உன் பாஸ்ஸு லூசு என்ன கழுத்துல யாருன்னு போர்டு மாட்டிக்கிட்டா திரியுரான்"

"நீங்க மறுபடியும் மறுபடியும் ராங் அஹ் பேசுறீங்க மேடம். என்ன பேசுனா கூட ஓகே. நீங்க ஒருவகைல எனக்கு அம்மா மாதிரி. ஆனா எங்க பாஸ் அஹ் பாத்து இப்டி பேசுறது நல்ல இல்ல சொல்லிட்டேன்"

"எனக்கு ரொம்ப நல்லாருக்கு. யாருக்கு யாரு அம்மா மாதிரி. அடி செருப்பால. என்ன பாத்தா உனக்கு ஆண்ட்டி பீல் வருதோ. அம்மா மாதிரின்னு சொல்ற. ஒழுங்கா இவனையும் கூட்டிகிட்டு ஓடிப்போயிரு இல்லைனா.."

"மறுபடியும் மறுபடியும் சொல்ற.. நீங்க ரொம்ப தப்பா பேசுறீங்க மேடம். எங்க பாஸ் எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா, அவர பத்தி தெரியாம பேசுறீங்க. அப்றம் வருத்தப்படுவீங்க"

"டேய் பைத்தியமாடா நீ. சும்மா யாரு தெரியுமா யாரு தெரியுமான்னு யாருன்னே சொல்லாம உயிரை வாங்காதீங்க. அவன் கடவுளாவே இருந்தாலும் இப்போ நான் இப்டி தான் பேசுவேன். சும்மா டென்ஷன் பண்ணாதீங்க ரெண்டுபேரும்"

"கடவுளே வந்தாலும் இப்டி தான் பேசுவீங்களா. அதென்னமோ உண்மை தான். கடவுள் கிட்ட தான் இப்படி பேசுறீங்கன்னு தெரியாம ரொம்பவே தைரியமா பேசுறீங்க மேடம்"

"அட ச்சி நகரு. காலங்காத்தால தண்ணி போட்டுட்டு வந்து ஒளரதா" என்று சிடுசிடுத்த மனோ விறுவிறுவென்று மேடையை நோக்கி சென்றுவிட்டாள்.

இங்கு நரேஷோ அவன் பாஸ்ஸை திரும்பி பார்த்து பரிதாபமாக, "உண்மையை சொன்னா, மேடம் எனக்கு குடிகார பட்டம் குடுத்துட்டு போறாங்க. அதை கூட விடுங்க. நான் ஒன்னு கேக்குற பாஸ் கோவப்படாதிங்க"

"என்ன?"

மேடம் எதுவும் ஞாபகம் இல்லாம உங்களையே இப்படியெல்லாம் பேசுறாங்களே. உங்களுக்கு சொரணையே இல்லையா பாஸ். உங்களுக்கு கோவம் மானம் ஈனம்னு எதுமே வரலையா? ஹவ் இஸ் திஸ் பாசிபிள் பாஸ்?"

சிரித்த முகமாய் நின்றுகொண்டிருந்த ஹரி இன்னும் அட்டகாசமாய் சிரித்துக்கொண்டே, "பொண்டாட்டி கழுவி ஊத்துறதெல்லாம் புருஷனுங்களுக்கு டெய்லி காபி குடுக்குற மாதிரி. அது மனுஷனா இருந்தாலும் செரி, மகானா இருந்தாலும் செரி, இல்ல பாராலும் பரந்தாமனா இருந்தாலும் செரி, இது எழுதபடாத சட்டம் டா நரேஷு. விடு அவ தான பேசுற. சரி ஆகிடுவா. அப்றம் நாம கலிகாலம் வந்துட்டதால என்ன எப்டிவேணாலும் பேசலாம்னு வாயடிச்சுகிட்டு இருந்தேன்னு வைய்யேன்.. தோளை உரிச்சு தொங்கவிட்ருவேன். பாலோவ் மீ இடியட்", என்ற ஹரி மீண்டும் அவன் உதட்டிகளில் அந்த கவர்ந்தளுக்கும் காந்த சிரிப்பை தவழ விட்டுவிட்டு அவனது தேவலோக மனைவியை பூலோக காதலி ஆக்கிக்கொள்ளும் முயற்சியில் பின்னோடு ஓடுகிறான்.

----------

டீஸர் படிச்சுட்டு நீங்க பெருசா கதை இதுதான்னு ஜட்ஜ் பண்ணிரதீங்கயா 😂 அப்றம் அதுக்கு நான் பொறுப்பாக மாட்டேன்.

கதை பதிவிட ஆரம்பிக்க சில நாட்கள் ஆகலாம். சோ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க. லேட் அஹ் வந்தாலும் உங்கள் ஆதரவை தருவிங்கன்னு நம்பிக்கை இருக்கு 🙏

பிரிவோம் சந்திப்போம்
நான் சக்தி பாஸ்கரன் 🖤

உங்கள் பொன்னான கருத்தை பதிவிட இங்கே சொடுக்கவும் 👇

மனோஹரி - கருத்து திரி 🖤
 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom