HoneyGeethan
Active member
- Messages
- 175
- Reaction score
- 169
- Points
- 43
பாகம் 4
தன் கேபினிற்குள் அத்வேதா நுழைய அவளை வரவேற்றான் ஆதி.
"ஹாய் மேம்! குட் மார்னிங்" - ஆதி.
"எஸ் ஆதி! குட் மார்னிங்! அந்த வீடியோவை பார்க்க சொன்னேனே பார்த்தியா?" – அத்வேதா.
"வந்ததும் வராததுமா கேஸ் தானா? கொஞ்சம் ஜாலியா பேசலாமே மேம்" – ஆதிசேசன்.
"அவ கூட ஜாலியா பேசுனா உன் சோலி முடிஞ்சிடும் பரவாயில்லையா?" என்று சிருஷ்டன் கேட்க இருவரும் திகைப்போடு திரும்பினர்.
அங்கு சிருஷ்டன் நிற்க ஆதி எச்சில் விழுங்கினான். சிருவைப் பார்த்த ஆதி வேகமாக
"மேம்! இதுதான் ராகவன் வீட்டில் இருந்த கேமிராவில் பதிவாகி இருந்தது! நீங்க சொன்ன மாதிரி கொலை நடந்த நேரத்தில் கேமிரா ஆஃப் ஆகி இருக்கு! மறுபடியும் காலையில் ஆன் ஆகி இருந்திருக்கு!" என்று அவன் வேகமாக சொல்ல
"அது! அந்த பயம் இருக்கட்டும்"! என்று சொல்லிக் கொண்டே சிருஷ்டன் இவர்கள் அருகில் வந்தான்.
"ம்ப்ச்!" என்று சிருவை பார்த்து வேதா தன் அதிருப்தியை வெளிகாட்டினாள்.
அதை கண்டு கொள்ளாத சிருஷ்டன் "ம்ம் என்ன நடக்குது இங்க? குழந்தை பையா?"
"மேம்! ராகவன் சார் வீட்டில் ரெக்காட் செய்யப்பட்ட வீடியோவை பார்க்கச் சொன்னாங்க.. சார்" - ஆதி.
"ஓஹோ! என்ன கண்டுபிடிச்சீங்க வேதா ஜீ" – சிருஷ்டன்.
"சார்! ராகவன் சார் இறந்த அன்று கேமிரா ஆன் ஆகலை! யாரோ ஆஃப் பண்ணி வச்சிருந்திருக்காங்க" – அத்வேதா.
"ம்ம்ம் ஓ! ஆனா யார் அதை ஆஃப் பண்ணாங்க" – சிருஷ்டன்.
"அதை தான் ஆதிகிட்ட கேட்டிட்டு இருந்தேன்" என்று அத்வேதா சிருஷ்டனிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே
"மேம்! ராகவன் சார் வீட்டிற்கு வந்தவுடன் அவர் மேனேஜர் வந்து இருக்கார்! ஆனா அவர் வந்து போனதுக்கப்புறம் தான் மேம் கேமிரா வேலை செய்யலை! அவர் தான் அந்த ரூமை நோக்கி போறார்" என்று ஆதி சில காட்சிகளை காண்பிக்க
அதில் ராகவனின் மேனேஜர் வீட்டினில் உள்ளே வருவதும் போவதும் போன்ற காட்சிகள் அந்த கேமிராவில் பதிந்து போயிருக்க! அதை பார்த்த சிருஷ்டன் வேகமாக போனை எடுத்து கான்ஸ்டபிளிடம் மேனேஜரை பிடித்து வருமாறு தன் போனில் உத்தரவு பிறப்பித்தான்.
அப்போது அந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருந்த அத்வேதா ஆதியை ஒரு இடத்தில் வீடியோவை நிப்பாட்ட சொன்னாள். அதன்பின் அதை அவள் ஜூம் செய்யச் சொல்ல அந்த ஓவியம் அவள் பார்வைக்கு அருகில் வந்தது. அதில் சிருஷ்டனும் வேதாவும் அன்று ராகவன் வீட்டிற்கு விசாரிக்க சென்ற நாளின் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் வேதா சென்றதும் அந்த ஒவியத்தில் இருந்த கண்கள் நகர்ந்தது அத்வேதாவிற்கு தெரிந்தது.
"உனக்கு ஏதாவது தெரிந்ததா ஆதி" – அத்வேதா.
"இல்லையே? என்ன தெரிஞ்சது?" – ஆதி.
"அந்த வீடியோவை ரீவைண்ட் செஞ்சு பார், அதில் * செகென்ட் ல அந்த ஓவியத்தின் கண்கள் நகரும் அதைப் பாரு" என்று வேதா சொல்ல அந்த கண்களை பார்த்த ஆதிக்கு ஒன்றும் தெரியவில்லை. ஆனால் திரும்ப அந்த கண்களை பார்த்த வேதா திகைத்தாள். அந்த கண்களில் இருந்து ரத்தம் வழிந்தது.
போன் பேசிவிட்டு வந்த சிருஷ்டன் "வேதா சீக்கிரம் வா! மேனேஜரை பிடிச்சாச்சு! கொலையாளி யார்னு அவனை கேட்டா தெரிஞ்சிடும்" என்று அவன் சொல்ல அத்வேதா அவன் பின்னால் சென்றாள்.
அங்கு லாக்கப்பில் மேனேஜர் பயத்தில் அமர்ந்து இருந்தான். அவனை பார்த்த சிருஷ்டன் அடிக்க செல்ல
"சிரு வேண்டாம் விட்டுங்க! அவனை" என்று கூறிய வேதா அவர் முன் சென்றாள்
"ராகவன் சார் இறந்த அன்னைக்கு நைட் என்ன பார்த்தீங்கனு கொஞ்சம் மறைக்காம சொல்ல முடியுமா?" – அத்வேதா.
"நான் அவரை எதுவும் செய்யலை மேம்!" – மேனேஜர்.
"தெரியும் நீங்க எதுவும் பண்ணலைனு! கொஞ்சம் நீங்க உண்மையை சொன்னா நல்லா இருக்கும்" – அத்வேதா.
"சொல்றேன் மேடம்!" – மேனேஜர்.
"என்ன நீ பாட்டுக்க அவன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க! இரண்டு போட்டா அவன் உண்மையை சொல்ல போறான்" என்று கூறியபடியே சிருஷ்டன்
அவரை அடிக்கச் செல்ல அத்வேதா அவனை தடுத்தாள்.
"விடு சிரு! அவர் சொல்லிடுவார்" – அத்வேதா.
"அய்யோ சொல்லிடுறேன் மேடம்! என்னை அடிக்காதீங்க" என்று கூறிய மேனேஜர் அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தார்.
"ராகவன் சார்! எப்பவும் நைட் தண்ணி அடிக்குறது வழக்கம்! அவர் குடிக்குறது அவர் மனைவிக்குக் கூட தெரியாது! அதனால் அவர் யாருக்கும் தெரியாமல் குடிக்கிறதால அவர் குடிக்கிற நேரத்தில் ஹாலில் இருக்கும் கேமிரா எல்லாத்தையும் ஆப் பண்ணிச் சொல்லிடுவார்! அவர் குடிக்குறதுக்கு டெயிலி நான் தான் சரக்கு வாங்கிட்டு வருவேன் அன்னைக்கும் நான் சரக்கு வாங்கிட்டு போனப்ப...." என்று அவன் இழுக்க
"ம்ம்ம் சொல்லுங்க" – சிருஷ்டன்.
"ம்ம்ம் சொல்லிடுறேன் சார்!" என்று ஆரம்பித்தவன் "ராகவன் சார் இறந்த அன்னைக்கு நான் சரக்கு வாங்கிட்டு போய் கேமிரா எல்லாத்தையும் ஆப் பண்ணிட்டேன்! ஹாலுக்கு சரக்கோட போனேன் ஆனால் அவர் அன்றைக்கு குடிக்கவே இல்லை சார்! அதனால் நான் வாங்கிட்டு வந்த பாட்டிலை எடுத்துட்டு போய் ஸ்டோர் ரூம்ல என்னை சார் வைக்க சொன்னார். நானும் அவர் சொன்னார்னு வச்சிட்டு வந்து பார்த்தா... "
"அங்க நீ யாரை பார்த்தா! மறைக்காம சொல்லு!" – அத்வேதா.
"அது வந்து மேம்!" என்று அவன் தயங்க
"ஒரு பெண் ராணி கோலத்தில் வாளை இடுப்பில் சொருகியபடி நின்றாங்களா" என்று அத்வேதா சொல்ல அந்த மேனேஜர் திகைத்தான்.
"ஆமா மேம்! அந்த உருவம் அய்யா அருகில் வந்து நின்றது! அதை பார்த்து அவர் கத்த முயன்றார்.. ஆனா சத்தமே வரலை மேம்! அடுத்து என்னாச்சுனு தெரியலை அவர் கழுத்தை பிடிச்சுட்டு கொஞ்ச நேரத்தில் அவர் கீழே விழுந்திட்டார். அதை பார்த்ததில் இருந்து நான் பயந்து போய் இப்படி ஒளிஞ்சு வாழ்ந்துட்டு இருக்கேன்" – மேனேஜர்.
"யோவ்! என்ன பொய்யா சொல்ற! உன்னை" என்று சிருஷ்டன் அடிக்க முயல அத்வேதா அவனை தடுத்தாள்
அவர் சொல்றது உண்மைதான் என்று அத்வேதா சொல்ல
"உனக்கு பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! இந்த யுகத்தில் ராணியாம்! வாளாம்!" – சிருஷ்டன்.
"உங்களுக்கு இது பொய்யா தெரியலாம்! ஆனா இது தான் உண்மை சார்!" – அத்வேதா.
"வில் யூ ப்ரூவ் இட்!" – சிருஷ்டன்.
"எஸ்! ஐ வில்! அதுக்கு முன்னாடி நாம வர்மா சாரை சந்திக்கணும்!" – அத்வேதா.
"வாட்! வர்மா வா! இந்த ஓவியம் வரைவாரே அவரா! யூ ஆர் டைவர்ட்டிங் கேஸ் அத்வேதா" – சிருஷ்டன்.
"நோ! சார்! அவரை சந்திச்சா! உங்க கேள்விக்கெல்லாம் விடை கிடைச்சிடும் சார்" – அத்வேதா.
"ஒகே தென் ஒய் வி ஆர் வெயிட்டிங்! வி மூவ்" – சிருஷ்டன்.
மறு நிமிடம் கிளம்பிய இருவரும் வர்மாவின் முன் அமர்ந்தனர்.
அவர்களை பார்த்த வர்மா "எஸ்! வாட் கேன் ஐ டூ பார் யூ"
அதற்கு சிரு வேதாவை பார்க்க வேதா அவரையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்போது வேதாவை சிருஷ்டன் இடிக்க தன் சுயத்திற்கு வந்த வேதா தன் செல்லில் வைத்திருந்த அந்த ஓவியப்பாவை புகைப்படத்தை காண்பித்தாள்.
அதை பார்த்த வர்மா, "நைஸ் பெயிண்டிங்! இதை எதுக்கு என்கிட்ட காண்பிக்குறீங்க?"
"இந்த புகைபடம் நீங்க தான வரைச்சீங்க வர்மா சார்! அதனால் இதை பத்தி சில டிடெயில்ஸ் எங்களுக்கு வேணும்! அதனால் தான் உங்களை தேடி வந்தோம் வர்மா ஜீ" – சிருஷ்டன்.
"நோ! நோ! இந்த புகைபடம் நான் வரையலையே! நானே இந்த புகைப்படத்தை இப்ப தான் முதன்முறையா பார்க்குறேன்" என்று வர்மா சொல்ல இருவரும் அதிர்ந்தனர்.
"வாட்! என்ன சொல்றீங்க ஜீ! இந்த புகைபடம் உங்களுடைய பெயிண்டிங்னு ராகவன் சார் வாங்கி இருக்கார்" – அத்வேதா.
"நோ! வே! இது மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை எங்கேயோ தப்பு நடந்திருக்கு! நீங்க எதுக்கும் ரமணாவை கேளுங்க" என்று வர்மா சொல்ல இருவரும் ஓவிய கண்காட்சி நடைபெற்ற இடம் நோக்கி விரைந்தனர்.
அங்கு ரமணாவிடம் விசாரித்ததற்கு அவர் "சாரி சார்! வர்மா சார் ஓவியம் தான் இது! இதை ஏன் அவர் இல்லைனு சொல்றார்னு தெரியல"
"அன்னைக்கு நடந்த நிகழ்ச்சியை கொஞ்சம் நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க ரமணண்! யாராவது மீட் பண்ணி இருப்பிங்க! நீங்க மறந்து கூட போயிருக்கலாம்" என்று அத்வேதா கூற
சற்று நேரம் யோசித்த ரமணா "ஆஃங் ஞாபகம் வந்திடுச்சு! அன்னைக்கு ஒருத்தர் வந்து இந்த ஓவியம் வர்மா சார் காரிலேயே விட்டுட்டு வந்ததா சொல்லி குடுத்திட்டு போனார்! அதன்பின் தான் ஏலம் விட ஆரம்பிச்சோம்" என்று கூற
"அவர் எப்படி இருப்பார்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?" – சிருஷ்டன்.
மீண்டும் சற்று நேரம் யோசித்தவர் "அவர் பேஸ் எனக்கு சரியா ஞாபகம் இல்லை!அவர் கேப் போட்டு முகத்தை பாதி மூடி இருந்தார் . அதனால் என்னால சரியா பார்க்க முடியல" என்று அவர் கூற அத்வேதா வேகமாக "அன்றைக்கு நடந்த விழா வீடியோவை நாங்க பார்க்கலாமா சார்?" என்று கேட்டாள்.
"ஓ! எஸ் மேம்!" என்று அவர் கூறிய ரமணா அந்த வீடியோவை போட்டு காண்பிக்க அதை பார்த்த சிருஷ்டன் ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்னான். அதில் கேப் போட்டு ஒருவன் கூட்டத்தில் ஐக்கியமாக அதை ஜூம் செய்து பார்த்த அத்வேதாவும், சிருவும் அதிர்ந்தனர்.
அதில் ராக்கி நின்று கொண்டிருந்தான்.
**
சிருவும், அத்வேதாவும் ராக்கி முன் நின்றனர்.
அவர்களை பார்த்ததும் அவன் பயப்பட அத்வேதா வேகமாக "ராக்கி நீங்க எதற்கு ஓவிய கண்காட்சிக்கு போனிங்க? நீங்க வரைந்த ஓவியமா இது!" என்று அவள் அந்த சித்திரப்பாவை ஓவியத்தை காட்ட அதை பார்த்த ராக்கி அலறினான்.
"நோ! அதை காண்பிக்காதீங்க!" என்று அவன் பயத்தில் கத்த
"என்னாச்சு ராக்கி! ஏன் இதை பார்த்து பயப்படுறீங்க? உங்களுக்கும் இந்த ஓவியத்திற்கும் சம்பந்தம் இருக்கா" என்று அத்வேதா கேட்டாள்
"இந்த ஓவியத்தால தான் என் பிரண்ட் நாலு பேரை நான் இழந்தேன்" என்று அவன் கூற அத்வேதாவும், சிருஷ்டனும் திகைத்துவிட்டனர்.