Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாயா யட்சிணி

Messages
93
Reaction score
14
Points
8
சரண்யா வெங்கட் எழுத்து மாயா யட்சிணி

மாயம் 1

19 நூற்றாண்டு.....

மஹேந்திரபுரி.....

மஹிந்திரபுரி ஒரு புறம் கடலும் மறுபுறம் மலைகளாலும் சூழ்ந்து இருக்கும் ஒரு வணிக நகரம், அந்த நாட்டின் மன்னன் அனல் விழியன் சிறப்பான முறையில் அதனை ஆட்சி செய்து வந்தான்,

ஆனால் அவன் முன்னோர்கள் செய்த ஒரு பிழையால் அவனின் மொத்த சாம்ராச்சியமும்
கடந்த இரு நூறு ஆண்டுகளாக ஒரு பெண்ணினால் புற முதுகு இட்டு ஓட வேண்டிய நிலையில் இருந்தது அவனை பொறுத்த வரை வெட்கப்பட வேண்டிய ஒரு விஷயம்.

இப்பொழுது அந்த ஆபத்து இல்லை என்றாலும், என்றாவது ஒரு நாள் தனது அரண்மனையின் அடி ஆழத்தில் பெண் உருவில் உறங்கும் பேராபத்து வெளியில் வந்தாள் அவனும் அவன் சாம்ராச்சியமும் ஒரே நொடியில் இடிந்து தரைமட்டம் ஆகிவிடும்.

அவனின் முன்னோர்கள் செய்த தவறு ஒன்று தான் தங்களின் இந்த நிலைக்கு காரணம் என்பதை அவன் மறக்கவும் வில்லை, அதற்காக தானே ஒரு ஒரு நூற்றாண்டின் பொழுதும் தங்களது குடும்பத்தில் ஒரு ஆண் மகனை பலி கொடுத்து வருவது, அவ்வாறு பலி கொடுக்க தேர்வு செய்ய பட்ட ஆண் மகன் குடும்ப வாழ்வில் ஈடுபடாமல், நாடு நகரம் முற்றும் துறந்து அரண்மனையில் இருந்தாலும் துறவு வாழ்க்கை மேற்கொள்ள வேண்டும், எந்த நேரத்திலும் தனது வம்சத்திற்கும் நாட்டு மக்களுக்கு ஆபத்து ஏற்படும் எனில் தனது உயிரனை துச்சமாக மதித்து உயிர் துறக்க ஆயுதமாக இருக்க வேண்டும்.

அனல் விழியனுக்கு இருக்கும் ஒரே கவலை தனது ஆட்சி காலத்திற்கு பிறகு யார் இந்த சாம்ராச்சியதையும் நாட்டையும் கட்டி ஆள்வது என்பது தான், அவரின் ஒரே மகன் கனல் விழியன் இருந்தாலும் அவனுக்கு பிறகு பலி கொண்டு வேண்டிய ஆண் மகவு யாரும் இல்லை என்பதே அவர் கவலை, தனது ஆட்சி காலத்தில் ஆபத்து ஏற்படும் என்ற நிலையில் உயிர் அளிக்க தனது தம்பி ஒளிர்மேனி இருக்கிறான், ஆனால் தன் மறைவிற்கு பிறகு யார் இந்த நாட்டை காப்பார்கள், தனது மகன் பலி ஆக நேர்ந்தால் அரசை ஏற்று நடத்த யார் உள்ளார்கள், தனது வம்சம், அரசும் தன்னுடன் முடிந்து விடுமா என்று உள்ளத்தில் கலக்கம் உற்றார் அனல் விழியன். ஆண்டவன் அவருக்கு ஒரே ஒரு மகனை பெற்று எடுக்கும் வரத்தை மட்டும் அளித்தார் போல கனல் விழியனுக்கு பிறகு எவ்வளவு முயன்றும், யாகங்கள், ஓமங்கள் செய்தும் அவர்களுக்கு மற்றொரு புத்திர பாக்கியம் கிட்டவில்லை.

நாளை தனது மகன் குருகுல கல்வி முடிந்து நாட்டிற்கு மீண்டும் வருவதால் அவனை வரவேற்க தேவையான ஏற்பாட்டை செய்ய தனது மனகலகத்தை, மூடி ராணியிடம் மறைத்து உள்ளத்தில் கலகத்தை முடிவைத்து புறப்பட்டார்.

அதிகாலை வேலை கான குயில்கள் நாதம் இசைக்க, புல் இனங்கள் இரையை தேடி வானுயர பறக்க, சூரியனின் கதிர்கள் புவியினை ஒரு புறகமாக தழுவியும் தழுவாத அந்த ஏகாந்த வேலைதனில் கனல் விழியனுக்கு புரவி மஹேந்திர புரியின் எல்லையினை வந்து அடைந்தது, அவன் வருகையை அனைவரும் தெரிவுக்கும் விதமாக மங்கள வாத்தியங்கள் முழங்க, நாட்டு மக்கள் அவர்களின் இல்லங்களில் இருத்து பூ மழை சொரிய வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு என, சீறி வரும் காளை என தனது புரவியில் வந்தான்.

6 ஆடியில், ஆண்மையின் மறு பதிப்பாய், ராஜகளையுடன், முகத்தில் மென் நகையுடன், உடலில் பொன் நகையினை தரித்து, தினவெடுத்த தோள்களுடன், எதிரிகளை வேட்டை அடியும் வெறியுடன், காணும் கன்னிகை எல்லாம் மயக்கும் காதலில் தள்ளும் பொன்னிற விழிகளுடன், கற்றை கூந்தல் தினவெடுத்த தோள்களில் புரள, ஒரு கையில் வாளுடன், மற்றொரு கையில் தனது அங்காவஸ்திரத்தை ஏந்தி அசரவையில் நுழையும் மகனை கண்ட அனல் விழியன் உவகை கொண்டார், அசரவையில் உள்ளே நுழைத்த கனல் விழியன் உலகை ஆளும் ஈசனை அடிபணிந்து வணங்கி, பின்பு தான் இந்த உலகிற்கு வர காரணமான, தன் உலகம் ஆன தாய் தந்தையின் பாதம் பணித்து தொழுத்தான்.

கனல் விழியன் நாட்டின் எல்லையில் உள்ளே நுழைந்த அதே வினாடி அந்த நாட்டின் அரசவை கட்டிடம் அட ஆரம்பித்தது, அரண்மனையின் அடி ஆழத்தில் இவர்களால் சிறைபிடிக்க பட்ட ஒரு உயிர் பழி வாங்க வழி தேடி, அவளை அடைத்த சிறையில் இருந்து வெளி வர துடித்து கொண்டு இருந்தது.

அவனை உச்சிமுகர்ந்த அனல் விழியான் மின்னொளி தேவியும் அவனின் நெற்றியில் முத்தம் அளித்த, பயண களைப்பு நீங்க ஒய்வு எடுக்கும் படி அனுப்பி வைத்தனர்.

இவர்களின் இந்த மகிழ்ச்சியின் ஆயிட்கலாம் எது வரை என்பது இந்த உலகை ஆளும் பரம்பொருள் மட்டுமே அறிவான்.....

யட்சினி வருவாள்.....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
மாயம் 2
காலை சூரியன் அவனின் ஒளி கதிர்களை பூவுலகில் விரிக்க, கொன்றை, ஆம்பல், புன்னை, முல்லை, சாமந்தி, மகிழ மலர்கள் அந்த அரண்மனையின் நந்தவனத்தில் இதழ் விரித்து தங்களின் மணத்தை அரசை ஆள பிறந்த மன்னனின் மனம் கவர பரப்ப, இதழ் விரித்து இருக்கும் மலர்களின் சுகந்த மணம், அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் ஆடி கொண்டு இருக்கும் கொடியில் இறகு விரித்து இருக்கும் பறவைகளும் பச்சிகளும், அவனின் கண்ணையும் கருத்தையும் கவர வில்லை,

காலங்கள் யாருக்கும் நிற்காமல் இரவு பகல் பாராமல் 8 வருடங்கள் உருண்டு ஓடி இருந்தது, 16 வயதில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனகமாக விளங்கியவன், 25 வயதில் கட்டிளம் காளையாக உருமாறி இருந்தான், எதிரிகளை திச்சியதுடன் எடை போடும் பொன்னிற விழிகள், முறுக்கு எரிய வைரம் பாய்ந்த உடல், தினவெடுத்த மலை போன்ற இரு புஜங்கள், அகன்ற மார்பு அதில் எப்பொழுதும் அவன் உடலுடன் உறவாடும் ஈசனின் பாதத்தில் வைத்த பூஜிக்கப்பட்ட சிவப்பு நிற மரகதம் பதிந்த சங்கிலி அவனின் முன்னும் பின்னும் கழுத்துடன் உறவாட, ஒரு கையில் வாளுடன் சுழற்றிய படி மறு கையில் எதிரில் இருக்கும் வீரனை தடுக்கும் கேடயம் ஏந்தி, உடலில் வியர்வை துளிகள் பட்டு தெறிக்க வெற்று உடலுடன் போரிட்டு கொண்டு இருந்தான் கனல் விழியன்.



பயற்சியா இல்லை இல்லை, நடப்பது உண்மையான போரா என்பதை பகுத்து அறியா முடியாது குழம்பி நின்றனர் அங்கு இருந்த பொது மக்கள்.

அவனின் செயல்களை எல்லாம் தனது மாளிகையின் உபரிகையில் இருந்து பார்த்து கொண்டும் ரசித்து கொண்டும் இருந்தார், அனல் விழியன், அவனின் வீரத்தை கண்டு மெச்சியவர் ஆனால் மகனின் உயிரை காப்பதற்கான உயிர் பயம் அவரை ஆட்டிவித்தது, எவ்வளவு முயன்றும் அதற்கான வழி இன்னும் புலப்படவில்லை, இதற்கு இடையில் கனல்விழியன் வில் போர், வாட்போர், மற்போர், சாஸ்த்திரம் ஏட்டு அறிவு என் அனைத்திலும் தேர்ச்சி பெற்று இருந்தான்.

கனல் விழியனுக்கு குருகுல கல்வியில் முழுமை பெற்று வந்த நொடி முதல் அவனை காக்க வழி யாது என்று அறிய அனல் விழியன் தங்களின் ராஜகுரு நந்தி வர்மனை நாடி சென்றார், கனல் விழியனின் தசபுத்திகளையும், கிரக சஞ்சரத்தையும் கணக்கிட்ட ராஜகுரு அவனின் தசாபுத்தியின் படி 8 கிரங்களும் ஒரே நேர் கோட்டில் சந்திக்கும் சித்ரா பௌர்ணமி தினத்தில் பிறந்த ஒரு நங்கையால் தான் அரச குல வாரிசான கனல்விழியனையும் காக்க முடியும் என்றும், அந்த ஒரு கன்னியால் மட்டுமே அவனை மரணத்தின் பிடியில் இருந்து மீட்க முடியும் என்றும் மேலும் அரண்மனையின் ஆடிஅழத்தில் உறங்கும் பேரபத்தில் இருந்து அவளால் மட்டுமே நாட்டையும் நாட்டு மக்களையும் காக்க முடியும் என பிரசங்கம் கூறினார், அன்றைய திங்களில் இருந்து இதோ இன்று வரை 8 வருடங்கள் கனல் விழியனை காப்பதற்காக நங்கை தேடி பயணம் 4 திசைகளிலும் 8 திக்கிலும் நடந்து கொண்டு இருக்க, அந்த நங்கை அவர்களின் கண்களில் அகப்படாமல் போக்கு காட்டி கொண்டு இருந்தாள்.

அன்றைய நாளில் மஹிந்திரத்திரபுரி முழுவதும் விழா கோலம் பூண்டு இருந்தது, தங்களின் அடுத்த முடி இளவரசன் கனல் விழியனின் முடி சூட்டி கொள்ளும் நாள் தான் அது, ஒரு புறம் வேத விற்பணர்கள், பண்டிதர்கள் வேத முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, நாட்டு மக்களின் தங்களின் இல்லங்களில் உபரிகையில் இருந்து பூ மழை சொரிய, பாத குரடுகள் ஒளிக்க, ஒரு கையில் வால் ஏந்தி மறு கையில் தனது அங்காவஸ்த்திரதை தாங்கி, எதிரிகள் வேட்டை ஆடும் பொன்விழியால் புன்னகை ஏந்தி, அதற்கு நேர்மாறாக அவன் உதடுகளில் அழுந்த முடி, பட்டாடை சரசரக்க அவன் ஆட்சி செய்ய போகும் நாட்டு மக்களின் முன்னிலையில் தனது சிம்மாசனத்தில் அமர்ந்தான் கனல் விழியன், அனல்விழியான்னும் மின்னொளி தேவியும் மகனை கண்களின் மகிழ்ச்சியுடம் நான்கு கரங்கள் கொண்டு வாழ்த்தினர்.

ராஜகுரு சிவனின் திரு பாதத்தில் இருத்த மகுடத்தை உலகை ஆளும் பரம் பொருளின் வணங்கி கனல்விழியனின் சிரசில் அணிவித்தார், அதே நேரத்தில் மக்கள் யாவரும் கனல்விழியனையும் வாழ்க வாழ்க என்று, வாழ்த்த, அந்த வாழ்த்து ஒலி விண்ணைமூட்டும் அளவிற்கு இருந்தது.

மஹிந்திரஹிர புரி, கி. பி. 7 நூற்றண்டு காலத்தில் மகேந்திர வர்மன் காஞ்சிமாநகரத்தில் நிர்மாணிக்க பட்ட ஒரு கடற்கரை மற்றும் வாணிப நகரம், காஞ்சி மாநகரம் கல்வி ,கேள்வியில் சிறந்து விளங்கிய பெரிய சாம்ராச்சியம், அந்த சாம்ராச்சியத்தில் ஒரு அங்கம் தான் மஹேந்திரபுரி, ஏலம், கிராம்பு, மிளகு, போன்ற பொருள்களை இறக்குமதி செய்யவும், பட்டு, கைவினை பொருள்களை, வாசனை திரவியங்கள் ஏற்றுமதி செய்யவும் உருவாக்க பட்டது தான் இந்த நகரம்.

தனது முடிசூட்டி விழா நிறைவடைந்த உடன் சிறுது நேரம் இளைப்பாவும், சித்ராபவுர்ணமி இரவில் கடலாடவும் மஹேந்திர புரியின் கடற்கரையை சென்று அடைந்தான் கனல் விழியன், தனது புரவியில் கீழே இறங்கி பாறையின் மறைவில் சென்று ஆடைகளை களைந்து, பத்திரப்படுத்திவிட்டு இடையில் வெள்ளை நிற ஸ்நாதிற்கு உரிய ஆடைகளை அணிந்து, வானத்தில் ஒளிவிடும் பால்நிலவின் குளுமையை கண்களில் பருகி கொண்டே நீரில் அமிழ்ந்தன்.

அதே நேரத்தில் கடற்கரையின் மறுபுறத்தில், கட்டிளம் காளைகளும், பேரிளம் பெண்களும் தங்களின் இணையுடன், கடலாடி கடற்கரையை கூடி களித்தனர், நீரில் அமிழ்ந்து எழுந்தவனின் உள்ளத்தில் இருத்த சொல்லவேன்னா துயரம் எல்லாம் நீங்கியத்தை உணர்ந்து, கடற்கரையில் நடக்கும் களி ஆட்டங்களை எல்லாம் வேற்று உடலின் நீர் சொட்ட சொட்ட அங்கே இருந்த மண்டபத்தின் தூணில் சாய்ந்து கொண்டே கண்டு கொண்டு இருந்தான்.

வாழ்க்கை எத்தனை விசித்திரமானது நாம் ஒரு பொருளை தேடி ஓடும் பொழுது அது கைக்கு கிடைப்பது இல்லை, அதே பொருளை நாம் வேண்டாம் என விலகி ஓடும் பொழுது அது நம்மை தேடி வரும், என நாட்டை ஆளும் அவனின் மனதில் சித்தந்தமும் தோன்றியது, அதை நினைவு அழுந்த முடி இருத்த அவன் உதடுகளில் மென் நகையை கொண்டு வந்தது.

அதே வேலையில் கடற்கரையின் அவனுக்கு மிக அருகில் நான்கு பெண்கள் தங்களுக்குள் ஓடி பிடித்து விளையாடி கொண்டு இருக்க,அதில் ஒருத்தி மட்டும் கடல் அலையின் சீற்றத்தால் இழுத்து செல்ல பட அருகில் இருந்த பெண்கள் எல்லாம் அவளை காக்க முடியாமல் கூச்சல் இட, அதனை கண்ட கனல் விழியன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு என கடலில் குதித்து பஞ்சு போதி போன்ற அவளின் உடலை தனது வலிய கைகளில் ஏந்தி, கடற்கரைக்கு கொண்டு வந்தவன், அவளை கடற்கரையின் மணலில் கிடத்தி, மதி முகத்தினை கையில் எந்தினான், அவளின் பிறை நெற்றியிலும், வளைந்த இரு புருவங்களிலும், தன் வாளின் கூர்மையை விட மிக கூர்மையான மூக்கிலும், குழி விழும் கன்னத்திலும், குடை போன்ற கண்களை மூடி இருக்கும் முத்து சிற்பி போன்ற இமைகளிலும், மாதுளம் நிறத்தை ஓத்து இருந்த அவளின் சிவந்த அதரத்திலும் அருகில் காணும் கணம் அவன் அவள் மேல் உன்மத்தம் கொள்ள வைக்க, சற்று புறத்தை கருதி தனது உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன்,



அவளின் இரு கன்னங்களை கையில் ஏந்தி தன் இரு வலிய கரங்களால் அவளின் கன்னங்களை தட்டி நீள்விழி என்று பெயர் இட்டு அவளை அழைத்தான், அவனின் குரலின் இருந்த ஏதோ ஒன்று அவளின் செவியை அடைய, அதன் எதிரொலியாக அவளின் மீன் போன்ற நீண்ட விழிகள் திறந்தன, அவளிடம் ஓரு வார்த்தையின் உரைக்காது தனது உடமைகளை எடுத்து கொண்டு விடுவிடு என அவ்விடத்தை விட்டு தனது புரவியில் அகன்றான் கனல் விழியன்.

அவன் செல்லும் திசையே இரு கண்களில் கண்ணீருடன் பார்த்து கொண்டு இருந்தாள் நீள்விழி, இரு கண்களில் தண்ணீர் திரை இட அவன் உருவம் மெமெதுவாக அவளின் விழிகளில் மங்க துவங்கியது......

யட்சினி வருவாள்.......

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
மாயம் 3
க்ரிஷ்ணபச்சம்(விடியற்காலை) பொழுதிலினே வான்வெளியில் தரகைகள் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் மின்னி கொண்டு இருக்க, மை தீட்டிய நீண்ட இரு விழிகளை கொண்ட மங்கையினை தீண்டிய மருதம் கூட அந்த பதுமையின் உள்ளத்திற்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை, உள்ளத்தின் மனகுமுறல்லோடு அவளின் மன்னவனின் மனதில் ஏந்தி தனது ரதத்தில் மூன்றாம் ஜாமத்தின் முடிவில் ருத்திர புரி நோக்கி பயணித்து கொண்டு இருந்தாள் நீள்விழி.

ருத்திர புரி காஞ்சி நகருக்கு உட்பட்ட ஒரு சிறு சாம்ராஜ்ஜியம், அதனை கொன்றைவேந்தன் சீரிய முறையில் ஆட்சி செய்து வந்தான், நீள்விழி ஒவ்வொரு பௌர்ணமி இரவிற்கும் கடலாட மஹேந்திர புரி வந்து விடுவாள், அவ்வாறு வரும் பொழுது தான் அவள் முதல் முதலில் கனல் விழியனை கண்டது, தமக்கையின் விவாகத்தின் ஒட்டி மஹேந்திரபுரி வந்தவள், தமக்கையின் விவாகம் முடிந்த பௌர்ணமி இரவுதலின் தனது தோழிகளுடன் கடலாட வந்த பொழுதில், இரவின் நிசப்பதை ஒலியும், உளி சத்தம்மும் காற்றை கிழிக்க, அந்த சத்தம் கேட்டு நீள்விழியும் நெஞ்சில் இந்த நேரத்தில் உளி பிடித்து சிலை வடிக்கும் மானுடன் யாராக இருக்கும் என் கேள்வி எழ அவள் கேள்விக்கும் விடை ஆறியும் பொருட்டு தன் கேள்வியின் நாயகனை நாடி சென்றாள்.

அங்கே வேற்று உடலுடன் வியர்வை நீர் சொட்ட சொட்ட, சொட்டிய நீர் உடல் எங்கும் வழிந்து ஓட ஒரு கையில் உளியுடன் மறு கையில் சுத்தியும் கொண்டு கனல் விழியன் கைலாசநாதர் சிலையினை கர்ம சிரத்தையாக வடித்து கொண்டு இருந்தான், அவனின் உடலின் வளைவுகளும், திண்மையும் கண்டவளின் மனம் அவனின் பால் சரிய அன்றைய திங்களில் இருந்து ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் தன் மனம் கவர்ந்த மணவாளளின் மதி முகம் காண தன் தந்தையிடம் ஏதேனும் ஒரு பொய் உரைத்து, கனல்விழியனை காண வந்துவிடுவாள், ஆனால் அவளின் கேள்வியின் நாயகன் அவளை கண்கொண்டுகண்டிலன், இவளின் நிலை இப்படி இருக்க, அவனின் நிலையோ இதற்கு நேர்மாறாக ஈட்டி போன்ற விழிகள் பொன்முறுவள் பூக்க, அழுந்த முடி இருந்த அதரத்தில் ஒரு புறமாக சுளித்து கொண்டு புரவியில் தனது அரண்மனையை நோக்கி செலுத்தி கொண்டு இருந்தான்,

எத்தனையோ முறை அவனை தொலைவில் இருந்து கண்டவள், இன்று அவனை நெருங்கி வெகு சமீபத்தில் கண்டு காதலுடன் அவன் விழி நோக்க, அவன் இவளை விழி எடுத்தும் பாராமல் ஒரு வார்த்தையும் உரைக்காது புரவியில் பறந்து விட்டான்.

இரண்டு திங்கள், ஆழிப்பேரலை விட பேராபத்தை விளைவிக்கும் இரு நீண்ட விழிகள் கொண்ட நங்கை ஒருத்தி, தன்னை உற்று நோக்குவதை கண்டுகொண்டவன் அவளின் அறிவிற்கு எட்டாமல், அவளை கண்காணிக்க துவங்கினான், எதிரி நாட்டினை சேர்ந்த ஒற்றனாக இருக்குமென்ற சந்தேகம் எழ அவளை கண்காணிக்க துவங்கியவன், அவளின் நீண்ட இரு மீன் விழிகள், கட்டுப்பாடு அற்று தொலைந்து மீளவே முடியாத கனவு பிரபஞ்சத்தில் அமிழ்த்தான், அன்றில் இருந்து ஒவ்வொரு திங்களும் அவள் கடலாட வரும் பொழுத்தில், அவள் ஆடைகளை களைந்து கடல் நீரில் அமழ்வது முதல், தன்னை அவள் கண்கள் தேடுவது என் அனைத்தையும் பாறையின் மறைவில் அவளுக்கு தெரியாமலே கண்டு களிப்பான்,

அன்று தொலைவில் இருந்த பார்த்த தன்னை உன்மத்தம் கொள்ள செய்த அதே மதி முகம், இன்று வெகு அருகில் பொன்னில் செதுக்கிய அளவெடுத்து உடல், நீண்ட வாழை தண்டு கால்கள் உடுக்கை இடை, சிவந்த ஆதாரம், என அனைத்தையும் அவள் மேல் அவனை மீண்டும் உன்மத்தமும், கள்வெறியும் கொள்ள செய்ய அதற்கு மேல் தான் அங்கு இருந்தால் ஏதேனும் ரசபாசம் ஆகிவிடும் என்ற நோக்கத்தில் அவ்விடம் ஒரு வார்த்தையும் மொழியாது அகன்றான்.

தனது குடிலை அடைந்த நீள்விழி, அவளின் வாடிய வதனத்தை கண்ட அவளது தந்தை,

"என்ன ஆகிற்று மகளே, உன் தோழிகளுடன் காணப்பதற்கு மகிழ்ச்சியுடன் சென்ற நீ, இன்று வாடிய கொடி போல, வாடி வதங்கி இல்லம் சேர காரணம் யாது மகளே, ஒரு தந்தையாக யான் அறிந்து கொள்ளலாமா என வினவினார், அவளோ அவரிடம் உண்மையை உரைக்க இயலாது தோழியை பிரிந்த துயர் என பொய் உரைத்து, தன் தந்தையின் மடி சேர்ந்தாள்.

கண்டிபன் ஒரு காலத்தில் மஹிந்திரபுரியில் தளபதியாவும், மன்னரின் தலைமை மெய் காப்பாளராகவும் விளங்கியவர், சிற்சில காரணிகளால் நாட்டையும் நாட்டு மக்களையும் துறந்து தன் மகளின் நல் வாழ்வுக்காக நாடோடி போன்று மஹேந்திர புரி இருந்து 10 காத தொலைவில் இருந்த ருத்திரபுரிக்கு 20 வருடத்திற்கு முன்பு புலம் பெயர்ந்தார், அது மட்டும் இல்லாமல் ருத்திரபுரியின் படைக்கு போர் தளவாடங்கள் உருவாக்கி அனுப்பும் போர் பயற்சி பட்டறை ஒன்றை வைத்து தான் வாழ்நாளின் மீதி நாட்களை தன் மகளின் நல் வாழ்வுக்காக கடத்தி கொண்டு இருந்தார்.

அவளின் தலையினை ஆதாரத்துடன் கோதிய கண்டிபன் அவளை துயில் கொள்ள செய்தார், தனது மகளின் உண்மை சொரூபம் வெளி உலகிற்கு தெரிந்தால் தன் நிலையும் மகளின் நிலையும் எண்ணி சொல்லவேன்னா துயர் கொண்டவர், சிந்தனையில் ஆழ்ந்தார்.
அனல் விழியன், தனது தேடுதலின் விடை கிடைக்காமல் போக விடை தேடி விண்ணரகத்தில் கூடி கொண்டு இருக்கும் கைலாசநாதரின் திருவடிகளை பணித்து நிஷ்டையில் ஆழ்ந்தார், அவரின் தேடுதலுக்கான விடை கிடைத்ததை போன்று ராஜகுரு நந்தி வர்மன் வெகு வேகமாக கோவிலின் உட் பிரகத்திற்கு வந்து அங்கு மன்னனுக்கு காவலாக இருந்த காவலாளிகளை வெளியேறும் படி ஆணை இட்டு மன்னனின் நிஷ்டைணையினை களைத்தார்.

ராஜகுருவை கண்ட மன்னனின் வதனத்தில் கவலை உணர்வு தோன்ற, ராஜகுரு அவரை வணங்க, மன்னர் அதனை சிறு தலை அசைப்புடன் ஏற்றார். ராஜ குரு முகத்தில் புன் முறுவளை ஏந்தி

"மன்னா, ஒற்றனிடம் இருந்து செய்தி வந்து உள்ளது என அந்த மகிழ்ச்சியாக செய்தியினை மன்னனுக்கு அறிவித்தார்.

"என்ன கூறுகிறீர்கள் ராஜகுரு, தாங்கள் உரைப்பது திண்ணமான உண்மையா?

"ஆம் உண்மை தான் அரசே, அந்த மங்கை குறித்து செய்தி கிடைத்து விட்டது, அந்த மங்கை நமது நாட்டில் இருந்து 10 காத தொலைவில் உள்ள ருத்திர புரி என்னும் சிற்று ஊரில் போர் தளவாடங்கள் செய்யும் ஒரு மானுடனுக்கு மகளாக அவதரித்து இருப்பதாக கேள்வி,

"தாங்கள் கூறுவது அறுதியான உண்மை எனில் பிறகு தாமதம் எதற்காக, இன்றே நமது படையுடன் புறப்படலாம் ராஜகுரு, அரசை கனல் விழியன் கவனித்து கொள்ளட்டும் என்று இருவரும் ஈசனை வணங்கி தாங்கள் செல்லும் காரியம் வெற்றி பெற வேண்டும் என வேண்டுதலுடன் அங்கு இருந்து புறப்பட்டனர்.

அனல் விழியன், ராஜகுரு மற்றும் படைகளுடன் ருத்திர புரியை நோக்கி புறப்பட்டனர், இது எதுவும் அறியாத நீள் விழி இரவின் பிடியில் ஆழ்த்த உறக்கத்தில் இருந்தாள்.

அங்கே அரண்மனையின் அடி ஆழத்தில், தனது மகளின் வரவினை எண்ணி, தக்ஷன் துவாரத்தில்( தெற்கு கதவுகள்), நிலவரையில் மண்ணால் சூழப்பட்ட ஓரு பேழையில் கண்முடி இருந்த கற்சிலை ஒன்று தவம் இயற்ற ஆரம்பித்தது.

ஒரு இரவு, ஒரு பகல், நீண்ட அவர்களின் பயணம் முடிவுக்கு வந்தது, ஆதவன் கடல் அன்னையின் மடியில் இருந்து துயில் களைந்து மேற்கே கதிர்களை பரப்ப, அனல் விழியன் ராஜகுருவும் நீள்விழியின் குடிலை அடைந்தனர், அங்கு அவர்களுக்கு வேறு ரூபத்தில் அதிர்ச்சி காத்து இருந்தது.......

யட்சினி வருவாள்...

வணக்கம் மக்களே...

கதை எப்படி போகுது, என்னோட எழுத்து உங்களுக்கு புரியுதா இல்லையா, கதை தொடர்பான உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டால் நான் மகிழ்ச்சி அடைவேன்...

அனைவரும் என் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
மாயம் 4

ஒரு மனிதன் நல்லவனா இல்லை கெட்டவனா என்பதை அவன் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் தான் தீர்மானம் செய்கிறது, அவன் மனம் உரம் உள்ளதா இல்லை உளுத்து போனதா என்பதை அவன் சந்திக்கும் துன்பங்கள், துயரங்கள் தான் முடிவு செய்கிறது, அந்த நிலையில் தான் இருந்தார் கண்டீபன்

10 காத தொலைவு பயணம் செய்து நீள்விழியின் குடிலை அடைத்த அனல் விழியனுக்கும், ராஜருகுவுக்கும் அதிர்ச்சி கண்டீபன் வடிவில் காண கிடைத்தது,

20 வருடங்களுக்கு முன்பு சேரன் உடனான போரில் மரணம் அடைந்ததாக தாங்கள் நினைத்து கொண்டு இருக்கும் தலைமை சேனாதிபதி கண்டீபன், இங்கு உயிரும் உடலுமாக தங்களின் கண்முன்பாக நிற்பதை பார்த்த இருவருக்கும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் மேல் ஓங்கியது, இருவருக்கும் பேச நா எழ வில்லை.

அனல் விழியன் ராஜகுருவையும் கண்ட கண்டீபன் நிலை வார்த்தைகளால் வடிக்க இயலாதது,

யாருக்காக தான் நாட்டையும் மக்களையும் இழந்து அஞ்ஞான வாழ்வு மேற்கொண்டரோ....
அவர்களை இன்று தன் கண்முன்பு கண்ட கண்டிபனின் இடத்தில் கவலையும், பயமும் போட்டி போட்டிக்கொண்டு அவர் இதயத்தில் கலக்கத்தை விளைவித்தது, அனைத்தையும் திறம்பட முகத்தில் எதிரொலிக்காமல் மறைத்தவர் தன் வதனத்தில் புன்முறுவள் ஏந்தி அவர்களை வரவேற்றார்.

"வணங்குகிறேன் அரசே......,

வணங்குகிறேன் ராஜகுரு........ என ராஜகுருவின் பாதம் பணித்தார் கண்டீபன்.

"எதற்காக இந்த அஞ்ஞான வாசம் தளபதியரே....., யாரிடமும் இருந்து தப்ப இந்த வேற்றிட வாழ்வு மேற்கொள்கிறீர்கள்.... என யான் அறியலமா..... என சந்தேகத்துடன் வினவினார் ராஜகுரு.

பெரும்மூச்சி எறிந்த கண்டிபன், "யாருக்காகவும் யான் இந்த அஞ்ஞான வாழ்வை மேற்கொள்ள வில்லை ராஜகுரு அவர்களே....., ஆற்றின் ஓட்டத்தில் பயணிக்கும் ஓடம் போல நானும் விதி என்னும் ஆற்றின் ஓட்டத்தில் சிறு படகு என பயணித்து இங்கு கரை சேர்ந்தேன்....", என கூறினார்.

"சேரன் உடனான போருக்கு பின்பு நீர் எங்கும் காண கிடைக்கவில்லை எங்கு சென்றிர்கள், உங்களை காண இயலாது, தாங்கள் போரில் வீர மரணம் அடைந்ததாக எண்ணி, நாங்களும், நாடும், மக்களும், பெரும் துயரத்திமும் துன்பமும் அடைத்தோம், நீங்கள் உயிருடன் இருப்பதை எங்களுக்கு அறிவிக்காது, ருத்திரபுரியை எவ்வாறு அடைந்தீர்கள் என நாங்கள் அறிந்து கொள்ளலாமா என வினவினார் ராஜகுரு.

"போரில் வெற்றி பெற்ற நமது படையின் கூடரத்திற்கு அடைய நான் முயன்ற பொழுது எங்கோ இருந்து எதிரி எய்த அம்பு ஒன்று என் நெஞ்சில் துளைக்க, நான் பெரும் குருதி போக்கினால் அங்கே மயக்கம் தோன்ற எனது புரவியிலே மயங்கி சரிந்தேன், நான் கண் விழித்து பார்க்கும் கணம் நான் ருத்திரபுரியின் நாட்டின் அரண்மனையில், அரண்மனை வைத்தியரின் கவனிப்பில் இருந்தேன், அங்கு இருந்து மனிதர்கள் உரையடியதை வைத்து நான் இங்கு வந்து 6 மாத காலம் ஆகிவிட்டது என ஊகித்தேன், மேலும் ருத்திர புரியின் அரசரின் வேண்டுகோளுக்கு இணங்க, மன்னரின் படைகளுக்கு போர்த்தளவடகள் செய்யும் பணியில் என்னை புகுத்தி கொண்டேன், என அந்த நாளின் நினைவில் இதுவரை நடந்தது யாது என்பதை விவரித்தார் கண்டீபன்.

அதே வேலை குடிலில் வெளியே கேட்ட குரல்களில் அரவாரத்தில் நீள்விழி குடிலில் இருந்து வெளியில் வந்தாள்.

தூரத்தில் நீள்விழியினை கண்ட ராஜகுரு தன் ஞான திஷ்டியின் மூலம் யார் என்பதை அறிந்தவர் கண்டிபனை நோக்கி

"யார் இந்த நங்கை, நான் அறிந்த வரை தங்களுக்கு உற்றார் உறவினர் யாரும் இருப்பதாக நினைவு இல்லை, பின்பு இவள் யார் என்பதை நான் அறிந்து கொள்ளலாமா கண்டீபா என வினவினார்.

தனக்கும் ஆரண்யா தேவிக்கு(கோட்டைகளின் தலைவி என பொருள்) கந்தர்வ மணத்தின் மூலம் தோன்றிய மகள் தான் நீள்விழி என்பதை மறைத்து தன் மகளின் நல் வாழ்வுக்காக ராஜகுருவிடம் தன் மனம் அறிந்து பொய் உரைத்தார் கண்டிபன்.

"என் வளர்ப்பு மகள் தான் நீள்விழி ராஜகுரு, 20 வருடங்களுக்கு முன்பு ஓரு காலை வேளையில் சந்தியா ஸ்நானம் செய்ய தாமரை தடகத்திற்கு சென்ற பொழுதில் தான் நான் இவளை கண்டு எடுத்தேன், சுற்றி யாரும் இல்லாமல் இவள் சிறிய குரலில் அழுது கொண்டு இருந்தாள்,அவள் வதனத்தை கண்ட உடன் ஏதோ ஒரு உள் உணர்வு தோன்ற அவளை என் குடிலுக்கு அழைத்து வந்தேன், நான் அவளை அழைத்து வந்த நாளில் இருந்து இதோ இன்று வரை அவளை தேடி யாரும் வந்திலர், எனவே அவளை என்மகளாக பாவித்து சீரும் சிறப்புமாக வளர்த்து வருகிறேன் ராஜகுரு" என்றார்.

அதற்க்குள் நீள்விழி இவர்களின் அருகில் வர, கண்டீபன் நீள்விழியினை கண்டதும் அரசரையும், ராஜகுருவையும் பற்றி விவரித்தார், அவர்களை பற்றி தன் தந்தையிடம் கேட்டு அறிந்து கொண்ட நீள்விழி அவர்களின் பாதம் பணித்தாள்.

தங்களின் வரவிற்காக காரணத்தை கண்டீபனிடம் விவரித்த ராஜகுருவும் அனல் விழியனும், தங்கள் நாட்டையும் அரசையும், மூடி இளவசரனையும் காக்கும் கவசம் நீள்விழி ஒருத்தி மட்டுமே என்பதையும் உரைத்தவர்கள், நீள்விழியை தங்களுடன் அழைத்து செல்ல உறுதி புண்டனர்.

கண்டீபன் பல்வேறு காரணங்கள் சொல்லி மறுத்த பின்பும் ராஜகுரு வேண்டுகோளுக்கு மனம் இறங்கியவர், அவர்களுடன் நீள்விழியை அனுப்ப ஒப்பு கொண்டவர், அவளுடன் மூடி இளவரசனை காவலாக தானும் வருவதாக வாக்கு அளித்தார்.

கண்டிபன், நீள்விழி இவர்களின் பயணம் மஹேந்திர புரி நோக்கி இனிதே துவங்கியது, இவர்களின் வாழ்வில் விதியின் சத்திரடமும் இணைந்து தான்.

ஒரு இரவு நீண்ட இவர்களின் பயணம் மறுநாள் விடியல் பொழுதில் அனலன்(சூரியன்) தன் கதிர்களை நிலமகள் மீது மோகம் கொண்டு தழுவ துயில் எழுந்த நீள்விழி கண்ட காட்சி அவளுக்கு பூலோக சொர்கத்தை நினைவு படுத்தியது, இரு கரைகளில் தொட்டு ஓடும் மாய நதி, காஞ்சி மாநகரை வளமாக்கும் பாலாறு தன் இருக்கரைகளின் கொள் திறனை விஞ்சும் அளவுக்கு பாய, நில மகளின் மீது தழுவிய அனாலனின் கதிர்கள் இரு கரைகளில் உள்ள நெடுந்து உயர்ந்த மலை மகளின் மீது பரப்ப, மரங்களில் துயில் கொண்டு இருந்த பறவைகளும் பச்சிகளும் துயில் களைந்து உணவு தேடி விண்ணில் பறக்க, நீர் மகளின் ஓட்டத்தின் வேகத்தில் தெளித்த நீர் துளிகள் அந்த பாதையின் பயணிக்கும் மானுடர்கள் மீது பட்டு குளிர்ச்சியை அளிக்க, தெளிக்கும் நீர் துளிகள் அங்கு பச்சை போர்வை விரித்து இருந்த புல் வெளியின் மீது வைரம், வைடூரியம் என மின்ன, அதனை கண்டவளின் வதனமும் உள்ளமும் தன் மன்னவனின் தேடி ஆற்றின் வேகத்திற்கு இணையாக ஓட,

அவள் நினைவில் தன் மன்னவனை முதல் முதலில் வெற்று உடலுடன் வியர்வை சொட்ட சொட்ட கண்ட காட்சி நிழல் ஆடியது, அவள் மனம் உவகை கொண்ட அதே சமயம் அவன் அவளை கண்ட பொழுது ஒரு வார்த்தையையும் உரைக்காது நீங்கிய கணம் நினைவுக்கு வர அவள் இதயத்தின் துடிப்பு அவள் இதயத்தின் முழு கொள் திறனை விஞ்சும் அளவுக்கு படபடக்க, பெரும் மூச்சி எறிந்த துடித்த மனதை கட்டுக்குள் கொண்டு வந்தாள் நீள்விழி, தன் கவனத்தை தன் முன்பு மலைகளின் முகடுகளிலும் விரிந்து இருக்கும் இயற்கையின் திசையில் திருப்பி அதில் வெற்றியும் கண்டாள்.

நீள்விழி மஹேந்திர புரி வரும் செய்தி ஒற்றனின் மூலம் அரசை அடைந்த நொடி அந்த செய்தி காட்டு தீ என நாடு முழுவதும் பரவியது, நாட்டு மக்கள் அவளை தங்களின் குலத்தையும், அரசையும் காக்க வந்த தேவதை என எண்ணினார், ஆனால் அவள் தன் நாட்டின் நிலையினையும் தலை எழுத்தையும் இன்னும் சிறிது நாட்களில் தலை கீழாக மாற்ற போகிறவள் என்பதை அறிந்தால் அவர்களின் நிலை......

மக்கள் நீள்விழியை வரவேற்பதற்கான ஆயித்த பணியினை துவக்கினார்....

நீள்விழி, கண்டிபன், அனல்விழியன், ராஜகுரு பயணம் செய்த ரதம் மஹேந்திர புரியினை எல்லையினை அடைய, மக்கள் அவளை கோலாகலமாக வரவேற்றனர், மேளாதளங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, சேடி பெண்கள் அவள் மீது பூ மழை பொழிய புரவியில் அரண்மனை நோக்கி பயணத்தை துவங்கினாள் நீள்விழி.

எதற்காக தனக்கு இத்தனை ராஜா மரியாதை என்று சந்தேகத்துடன் அவள் கண்கள் அதனை தேக்கி தன் தந்தையினை நோக்க, அதனை உணர்ந்து கொண்ட கண்டீபன், மன்னனும் ராஜகுருவும் தங்களை சந்தித்தற்கான காரணத்தை எடுத்து கூற, அதனை கேட்டவள் தான் தந்தையின் அவர்களுக்கு அளித்த வாக்கினை நிறைவேற்ற உறுதி புண்டவள், இந்த நொடி முதல் முடி இளவரசரின் காப்பது தான் தன் தலையாய கடமை என சபதம் ஏற்றாள், விதி அவளை பார்த்து கை கொட்டி நகைத்தது, நீயா அவனை காப்பது, வரும் காலங்களில் நீ தான் அவனை மரணத்தின் விளிம்பில் நிற்க வைக்க போகிறாய் என்பதை போன்று இருந்தது அந்த நகைப்பின் ஒலி.

நீள்விழி அரண்மனையின் நுழைவாயிலை பாதம் வைத்த ஷணம் அவள் உடலில் இருந்து புறப்பட்ட ஒளி ஒன்று அரண்மனையின் அடி ஆழத்தில் தக்சன் துவாரத்தில் நிலவரையில் உறங்கி கொண்டு இருந்த சிலையினை ஆசைத்தது, மண்ணால் சூழப்பட்ட பேழையும் அதன் உள் இருந்த கற்சிலையும் பெரும் சத்தத்துடன் 100 துகள்களாக சிதற,

அதில், பாதி சர்ப்ப உருவும் , மீதி மனித உருவும் கொண்ட நங்கை ஒருத்தி வெளிப்பட்டாள், அவள் எழுப்பிய நகைப்பின் ஒளி அரண்மனையையும் அதனை சுற்றி இருந்த கோட்டை கொத்துலங்களில் எதிர் ஒலித்தது......

யட்சினி வருவாள்..........

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
மாயம் 5

மதி மகள் தன்னவனை தேடி வான்வெளியில் தாரகைகளுடன் உலா வர, அவளின் மனம் கொண்ட அவளவன் தன்னவளின் தேடுதலை நீட்டிக்கும் பொருட்டு மேகம் கூட்டத்தின் நடுவில் மறைந்து கொள்ள, மதி மகளின் தேடுதலையும் தவிப்பையும் கண்ட அனலன் தன்னவளை கண்ட புரிப்பில் தன் கோபத்தை குறைக்கும் ஏகாந்த வேலைதலில்......

நீள்விழி தான் காக்க போகும் முடி இளவரசனின் கனல் விழியன் என்பதை அறியாது ஏழு அடுக்கு கொண்ட அந்த அரண்மனையின், நான்கு அடுக்குகளை கடந்து நிலை வாசலின் வழியாக அரசவையில் நுழைந்தாள்.

கனல் விழியன் அரசவையில் நாட்டின் பாதுகாப்பையும், கோட்டையையும் எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவும் கோட்டையினை பலப்படுத்தவும் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் குறித்து தலைமை அமைச்சர், மற்றும் பிற அரசவை பிரநிதிகளுடன் உரையாடி கொண்டு இருந்தார்.

அனல்விழியன், ராஜகுரு, நீள்விழி ஆகிய அனைவரும் அரசவையின் பிரவேசித்த செய்தி சேடி பெண்கள் வழியாக கனல்விழியனை செவிகளை அடைய அவன் அவர்களை வரவேற்பதற்காக அரசவையின் பணிகளை புறம் தள்ளி விட்டு நான்காம் அடுக்கின் நில வாயிலை அடைந்தான்.

அதே நேரத்தில் நீள்விழியும் உள்ளே செல்ல முற்பட இருவரின் விழிகளும் ஒரு நொடி இணைந்து உறவாடும் சாரை பாம்புகள் போல பின்னி கொண்டன, இந்த நிலை ஒரே நொடி தான், கனல் விழியன் தன் கூரிய விழிகள் கொண்டு எதிரில் இருந்த நீள்விழியை அளவெடுத்தான்.

வெண்பஞ்சு போன்ற வெண்மையான மென் தேகம், உடுக்கை போன்ற சிறிய இடை, இடைவரை நீண்ட கார்மேகம் போன்ற கார் கூந்தல், அதனை பின்னி தாழை மலர்களை சூட்டி இருந்தாள், அவள் கூந்தலில் சூட்டிய மலரின் மணம் அரசு ஆள பிறந்த அவனின் நாசியை தீண்ட, ஒரு நொடி கண்களை மூடி அதனை அனுபவித்தான், அவள் நெற்றியில் சுட்டி இருந்த நெற்றிசுட்டியும், அதனுடன் இணைந்த முத்து சரம் அவள் தலையின் பின்புறமாக மறைந்து இருக்க, காதில் அணிந்து இருந்த தோடும், அவள் சங்கு கழுத்தில் அணிந்து இருந்த
மாணிக்க அடிக்கையும், அதன் கீழ் அதற்கு இணையாக அணிந்து இருந்த முத்து மாலையும் அவள் அழகிற்கு மேலும் அழகு சேர்க்க, சிகப்பு நிற பட்டாடை உடுத்தி அவள் சிறிய இடை அசைந்து தேர் என பவனி வர , அவள் நடைக்கு ஏற்ப அவளின் மென் பாதங்களின் அணிந்து இருந்த முத்துபரல்கள் பதித்த தண்டை அவளின் நடைக்கு ஜதி கூட்டி இசை இசைக்க அவனை வெல்லும் பேழகுடன் அவள் நடந்து வந்தாள்.
ஒரு வினாடியில் இது அனைத்தையும் கண்டவன், அடுத்த நொடியில் அவன் பார்வையின் போக்கை மாற்றி கொண்டு, அனல் விழியன் மற்றும் ராஜகுருவின் பாதம் பணித்து இருவரையும் வரவேற்றான்.

நீள்விழியின் உணர்ச்சிகள் நிலை, புயல் ஏற்பட்ட கடல் போன்று கொந்தளித்த நிலையில் இருந்தது, தான் காக்க போகும் முடி இளவரசன் கனல் விழியன் என்பதை அறிந்தவள் உவகை கொண்டாள், ஒரே நாளில் தன் மனதில் அவன் காதல் விதையை ஊன்ற, அவன் விதைத்த விதை வளர்ந்து, மலர்ந்து, காய்த்து, கனிந்து நின்றது.

கனிந்த அவள் கொண்ட நேசத்திற்கு உரிமை உடையோன், அவளின் காதல்தேவன், அவன் அருகில் காலம் முழுவதும், அவன் அருகாமை தனக்கு போதும் என நினைத்தாள், தந்தையின் கடமைக்காக அவர் மன்னனுக்கு அளித்த வாக்கிற்காக, தன் காதலை, தன்னை கொள்ளை கொண்ட மன்னவனிடன் உரைக்கும் முன்பே கடமை பெரிது என கொண்டு, மனதின் அடி ஆழத்தில் அவனின் காதலையும் நினைவுகளையும் புதைத்து, அரசவை புகுந்தவளின் மனதில் மீண்டும் அவள் காதல் தேவனின் மீதான புதையுண்ட நேசம் துளிர் விட ஆரம்பித்தது.


தான் கொண்ட மொத்த நேசம் அனைத்தையும் தன் கண்களில் தேக்கி அவனை நோக்க அவனும் இவளை நோக்க, ஒரே நொடியில் நீள் விழியின் முகம் அவன் விழியின் வீச்சை தாங்காது அந்தி வானம் என சிவப்பு புசிக்கொண்டது, அவள் தன்னை கண்டு கொண்டதை உணர்ந்தவனின் உள்ளே இருந்த காதல் கள்வன் தலை தூக்க ஒரே ஷணத்தில் தனது பார்வையின் போக்கை மாற்றிக்கொண்டன் கனல்விழியன், இவர்களின் இந்த பார்வை பரிமாற்றதை கண்கொண்டு எவரும்காண்டிலர்.

நாட்டு மக்களை பொறுத்த வரை அவள் தங்களையும் அரச குலத்தையும் காக்க வந்த குல தேவதை, அவள் உள்ளே மறைந்து இருக்கும் அரக்க குணம் படைத்த காரிகை வெளியில் வந்தால் அவர்களின் நிலை அந்த பரம் பொருள் மட்டுமே அறிவான்.

நீள் விழியின் அகத்தே வரவேற்று, உபசரித்து, அனல்விழியன், ராஜகுரு, அமைச்சர்களும், மற்ற அரசவை பிரநீதிகளும்
என அனைவரும் அரசவையின் உட்புதுந்ததனர், அங்கு அனல் விழியன் நிமிர்ந்து நின்று கட்டளைகளை பிறப்பித்தார்.

"இங்கு சபை தனில் கூடி இருக்கும் அனைவருக்கும் என் முதன்மை வணக்கத்தை மொழிக்கிறேன்.

"இன்று நாம் நாட்டு மக்களும், அரசவையில் வீற்று இருக்கும் அனைவருக்கும் இரு இனிய செய்திகள் காத்து கொண்டு இருக்கிறது, முதல் செய்தி நாம் நீண்ட தேடலின் பலன் இதோ நமது கண் முன்பு, நமது தலைமை சேனதிபதியின் வளர்ப்பு புதல்வி நீள் விழி வடிவில், இவளே நமது குலத்தையும் நாட்டையும் காக்க வந்த குல விளக்கு, அது மட்டும் இன்றி இன்று முதல், இந்த நொடியில் இருந்து முடி இளவரசன் கனல் விழியனின் தலைமை மெய் காவலளியாகவும், தேவரட்சிக்காகவும் (காப்பவள் என பொருள்) நியமிக்குறேன் என்று அறிவித்தார், அதனை கேட்ட மக்கள் வாழ்த்து கோஷம் விண்ணை பிளந்தது.

மக்களின் ஆரவாரம் அடங்கிய பின்பு " நான் உங்களுக்கு அறிவிக்கும் மற்றுமொரு இனிய செய்தி என்னவென்றால் இன்றில் இருந்து இரண்டு திங்கள் அடுத்து நமது முடி இளவரசன் கனல்விழியனுக்கும் ஸ்வர்ண புரி அரசரின் மாறனின் மகள் இளவரசி உத்திரதேவிக்கும் விவாகம் நடைபெற முடிவு செய்யப்பட்டு உள்ளது என அறிவித்தார், இந்த இனிய செய்தியை கேட்ட மக்களின் வாழ்த்து ஒளி அரண்மனையின் நாலாபுறமும் எதிரொலித்தது. மன்னர் அறிவித்த செய்தி மக்களை பொறுத்தவரை உவகை கொள்ள கூடிய செய்தி, ஆனால் நீள் விழியை பொறுத்த வரை அவள் தலையில் நாட்டை ஆளும் மன்னனால் இறக்கப்பட்ட இடி.

தன் செவி கேட்ட செய்தி நீள்விழியிக்கு தன் மீது எரிந்து கொண்டு எரிமலையின் நெருப்பு குழம்பை வாரி இறைத்ததை போன்று உணர்ந்தவள், அவ்விடம் நிற்காது யாரும் அறியும் முன்னர், தான் அரைபுகுந்தாள். நீராடும் இடத்திற்கு சென்றவள் அங்கு இருந்த நீர் தொட்டியில் இருந்த நீர் முழுவதையும் தன் மீது வாரி இறைத்தால், ஆனால் அவள் வெண்மை தளாது அந்த நீர் கூட ஆவி ஆகி விட்டது, தன் மஞ்சத்தில் விழுந்தவள் உலகமே இருண்டு விட்டதை போன்று தேற்றுவர் யாரும் இன்றி கண்ணீரில் கரைந்தாள்.

அரசரின் மொழிகளை கேட்டு அதற்கு மறுமொழி உரைக்காது தன் உதடுகளையும், உள்ளத்தையும் ஒருங்கே தாள் இட்டு கொண்ட கனல் விழியன் மீது நீள் விழி கட்டுக்கடங்கா கோபத்தில் இருப்பது என்னவோ அறுதியான உண்மை தான், ஆனால் தன் நிலையினையும் தன்னவனின் உயர்ந்த நிலையினையும் இருவருக்கும் இடையில் இருக்கும் தொலைவு மலைக்கு மடுவுக்கும் இருக்கும் தொலைவு என்று எண்ணியவள் நெஞ்சில் வெறுமை உணர்வு கூடி கொண்டது, அவளால் அவனுக்காக கண்ணீர் மட்டுமே உகுக்க முடித்தது.

தன் காதலை தானே வாய் மொழியாக உரைக்காது, விழி மொழி மூலம் உரைத்து, அவன் அதையும் அறிந்து கொள்ளாது அலட்சியம் செய்து சென்றுவிட்டான்,என நினைத்தவள், காதலில் விழிமொழிகள் பயன் அற்று போகும், வாய் மொழி மட்டுமே ஏழு கடலையும் மலைகளையும் தாண்டி உயிர் வரை தீண்டி செல்லும் வல்லமை வாய்ந்ததது என்ற உண்மையை அவள் காதல் கொண்ட வஞ்சி மனது அறியவில்லை போலும்.

உடம்பிலும் உள்ளத்திலும் மொத்த சக்தியையும் வடிந்து, ஒரு பருக்கை உணவும் உண்ணாது காதல் தீயில் வெந்தால், இப் பார் உலகிற்கு எல்லாம் குளிர்ச்சி அளிக்கும் வெண்மதி கூட அவள் உள்ளத்திற்கு குளிர்ச்சி அளிக்க முடிய வில்லை போலும், வெண்மதியை தன் அறையின் சரளத்தின் வழியே கண்டு பெரும் மூச்சி எறிந்தாள் நீள்விழி.

"பிறை பெண்ணே உலகில் உள்ள புல், பூண்டு, மரம் கொடி, செடி, நிலவு, என அஃறிணை உயர்திணை என்று அனைத்திற்கும் என் காதலின் ஆழத்தை உணர்த்தினேன், ஆனால் என் மனம் கொண்ட மன்னவனிடம் மட்டும் உரைக்காது பெரும் தவறு இழைத்து விட்டேன், என் தவறுக்கு தண்டனை நான் என் மன்னவனை பிரிந்து மட்டும் தானோ......, என் தாங்கள் யாரும் எனக்காக என் மன்னவனிடன் என் காதலை உரைக்கவில்லை, ஏன் இந்த நங்கைகாக தூது செல்லவில்லை, என் மவுன மொழியில் வான் நிலவுடன் மருக்கினாள்.

அதே வேளையில் தக்சன் துவாரத்தில் மூன்று நுழை வாயிலைகளை கடந்து அரண்மனையின் அடி ஆழத்தில் மண்ணால் சூழப்பட்ட பேழையில் பாதி சர்ப்ப உருவாக மீதி மனித உருவமும் கொண்டு வெளியில் வந்த ஆரண்ய தேவி, இடி என சிரிப்பை உதிர்த்தாள், பின்பு தனது மிருக உருவத்தில் இருந்து முழுவதுமாக அழகான பெண் போன்ற தோற்றத்திற்கு உருமாறினாள்.

ராஜ நாகம், கட்டு விரியன், சாறை பாம்பு, நல்ல பாம்பு தேள், சிலந்தி, பூரான், தேனி, அரவன்(மற்ற பாம்பு வகைகள்), என உலகில் உள்ள அனைத்து விஷ ஜந்துகளும் ஆரண்ய தேவிக்கு தலை வணங்கி நிற்க, அவர்களின் வணக்கத்தை ஏற்று கொண்டவள், தலை வணங்கிய அனைவரையும் கற் சிலைகளாக மாற்றி, அவற்றின் மீது தன் பாதம் வைத்து தான் ஆட்சி புரியும் விஷ உலகிற்குள் பிரவேசித்தாள்.

அங்கு அரியணையின் ஓரு புறம் ஆதிசேஷனும் மறு புறம் கர்கோடகன்(பாம்பு இனத்தின் தலைவன்) என்று இருவரும் இரு தூண்கள் என்று அவளுக்கு அருகில் காவலுக்கு நிற்க ஆரண்ய தேவி விஷ லோகத்தின் அரியணையில் அமர்ந்தாள் .

அரியணையில் அமர்த்தவள் தனது இரு கனல் விழிகளை திறந்தாள், அவளின் விழ வெப்பம் பட்ட விஷ ஜந்துக்கள் அனைத்து தீயில் கருகி துடிக்க,

"மதி கெட்ட மன்னவனே, நன்றாக கேட்டுக்கொள், என்னை இருபது வருடங்கள் சிறையில் அடைத்து நீ மிக பெரிய தவறு இழைத்து விட்டாய், என்னை அடைத்த சிறையில் இருந்து நான் வெளியேறிவிட்டேன், உலகை ஆளும் பரம்பொருள், பஞ்ச பூதங்கள் என யார் வந்தாலும் என்னிடம் இருந்து உன்னை காக்க வியலது, உன் அரச வம்சத்ததின் அழிவு காலம் நெருக்கி விட்டது, இருபது வருடங்கள் என்னை சிறையில் அடைத்து தாங்கள் எனக்கு அளித்த வலிக்கான பலனை இனி தாங்கள் அனுபவித்து ஆக வேண்டும், யான் இந்த உலகில் உள்ள விஷத்தின் மூலம் என் உடலின் உமது முன்னோர்கள் செலுத்திய விஷத்தின் மூலமும் உங்கள் அரண்மனையின் அகம் முதல் புறம் வரை, ஆதி முதல் அந்தம் வரை முழுவதும் ஏன் இந்த நாடு முழுவதும் நிரப்புவேன், நீங்களும் உங்கள் நாட்டு மக்களும் முடி இளவராணும் என்னால் அழிவது திண்ணம் என சுளுரைத்தாள். ஆனால் ஆரண்ய தேவி அறியாத ஒரு உண்மை அவளின் சக்திகளை விட அதீத சக்தி வாய்ந்த, அவள் விஷத்தை விட ஆயிரம் மடங்கு விஷத்தை கொண்ட அவளால் உருவான, அவள் ரத்தத்தில் உருவான ஒருவள், தன் கொண்ட காதலுக்காக அவளை எதிர்க்க துணிவாள் என்பது அவள் அறியாதது.


தன்னை அடைத்து வைத்து இருக்கும் சிறையில் இருந்து வெளியில் வந்த ஆரண்ய தேவியால் தக்சன் துவாரத்தின் மூன்று கதவுகளை கடந்து வெளியில் வர இயலவில்லை, ராஜகுரு தன் அதீத மந்திர சக்தியால் அவளை வெளியில் வராமல் கட்டிவைத்து உள்ளார், அவளை வெளியில் கொண்டு சக்தி கொண்ட ஒருவள் அவள் உதிரத்தில் ஜனித்த நீள்விழி மட்டுமே.

அதே வேளையில் ராஜகுருவின் அறையில் ருத்திர கடிகையும்( ருத்திர கடிகாரம்), கிருஷ்ண ஏடும்(கிருஷ்ணா புத்தகம்) ஆரண்ய தேவியின் வரவையும், அரச குலத்திற்கு ஏற்பட போகும் பேராபத்தையும்,அழிவு காலத்தையும் ராஜகுருவிற்கு தங்களின் ஒளி மற்றும் ஒலியின் மூலம் உரைத்தது.....

இவர்களின்நிலை இப்படி இருக்க நீள் விழி இரவின் பிடியில் ஆழ்த்த உறக்கத்தில் இருக்கும் நேரத்தில் மூன்றாம் ஜமாத்தின் முடிவில் உடலில் ஏதோ மாற்றம் தோன்ற விழித்து தான் இருக்கும் நிலையினையும், தன் உடலினையும் கண்டவள் அதிர்ந்து நின்றாள், அதிர்ச்சியில் அவளுக்கு பேச நா எழ வில்லை.

யட்சினி வருவாள்......

நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
மாயம் 6
மானுட வாழ்வு விசித்திரமானது, சில சமயம் சுவாரசியமானது கூட, வெண்மதி மறைந்து புலரும் காலை வேலை சிலருக்க ஆச்சரியதை அளிக்கலாம், சிலருக்கு அதிர்ச்சியை அளிக்கலாம், சிலரின் வாழ்க்கையை அடியோடு புரட்டி போடலாம்,சிலரின் வாழ்க்கையை மண்ணோடு மண் ஆகலாம், யாரும் விதி விலக்கு இல்லாத இந்த நிலையில் நீள் விழியின் வாழ்வு என்ன ஆகும் என்பது காலத்தின் கைகளில் மட்டுமே உள்ளது.

காதலில் ஒரு வழி பாதை என்பதே அழகானது, அதில் வலி இல்லை, வேதனை இல்லை, கண்ணீர் இல்லை, கல்மிஷம் இல்லை, எதிர் அன்பினை எதிர்பார்த்து நிற்க வேண்டியது இல்லை, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாத தூய அன்பின் ஒரு வடிவம் தான் இந்த ஒரு வழி பாதை.

உலகையே உறக்கம் கொள்ள செய்யும் இரவு வேளையில் வெண்மதி மேக கூட்டத்தில் விண்ணவனுடம் உறவாட,
புல், பூண்டு, என அனைத்து அற்றினைகளும், உயர்திணை யான உலகை தன் கைக்குள் அடக்க துடிக்கும் மானுட ஜாதியும் தான் இணைகளுடன் உறக்கத்தில் இரவின் பிடியில் இருக்க நீள்விழி மட்டும் தன்னைவனை மனதில் கொண்டு சரளத்தின் மூலம் விண்ணவுடன் உறவாடும் வெண்மதி தனை ஏக்கத்துடன் தன் அக கண் கொண்டு கண்டாள்.

முழு மதி கூட வஞ்சி அவள் நெஞ்சிக்கு அமைதி அளிக்க வில்லை, நெடுநேரம் கண்ணீர் இரு கன்னங்களை நனைக்க கண்ணீர் உகுத்தவள், எப்பொழுது கண் அயர்ந்தால் என்பது அவளுக்கே தெரியாது.

மூன்றாம் ஜமாத்தினின் முடிவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நீள்விழி உடலை யாரோ இருக்குவது போன்று தோன்ற அதே நேரத்திலும் சுற்று புறத்திலும் ஏதோ ஒரு மாற்றம் தோன்ற தன் கயல் விழிகளை திறந்து தன் அறையை சுற்றி பார்வையை சுழல விட்டாள், அவள் பார்வையில் எதுவும் சிக்காமல் போக, தனக்கு இது வரை நடந்தது அனைத்தும், தனது பிரமை என்று நினைத்து மீண்டும் விழிகளை அழுந்த மூடி உறங்க முற்பட்டாள்.

மீண்டும் அவளது உடலில் யாரோ நீண்ட, வலிமையான கயிற்றை கொண்டு பிணைத்து, இருக்குவதை போன்றும் தோன்றியது நீள்விழிக்கு, கை, கால்களை அவளால் அசைக்க கூட முடியவில்லை, எங்கோ கடலின் ஆழத்தில் மூச்சுக்கு திணறுவதை போன்று அவள் உடல் தூக்கி தூக்கி போட்டது, மூச்சுக்குழல் ஸ்வாசத்திற்காக ஏங்கியது, தன் உடலில் யாரோ மலையினை இறங்கி வைத்ததை போன்று உணர்ந்தாள், கடினப்பட்டு தன் விழிகளை திறந்தவளின் பார்வை விழிகள் தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது, அங்கு

அவளின் மஞ்சத்தின் சுற்றி ஒருபுறம் ஆதி சேஷனும், மறுபுறம் கர்கோடகனும், மஞ்சத்தின் தலை பாகத்தில் வாசுகி என்று சர்ப லோகத்தின் கொடிய விஷமிகு நாகங்களும், தங்களின் 5 தலைகளை விரித்து தங்களது நாக்கினை உள்ளேயும் வெளியேயும் நீட்டி கொண்டு இருந்தன, அது மட்டும் அன்றி அனைத்து வகையான விஷ ஜந்துகளும் அவள் உடலின் மீது நெளிந்து கொண்டும் ஊர்ந்து கொண்டு இருந்தன.

நீள்விழி தன் உடலின் மொத்த பலத்தையும் ஒன்று திரட்டி பிரயோகித்து கை கால்களை அசைக்க முற்பட்டாள், ம்ம்ம்ம் முடியவில்லை, அவள் உடலின் ஒரு பகுதியை, என்ன அவளால் சிறு துரும்பை கூட அசைக்க முடியவில்லை.

ஒருபுறம் ஆதிஷேசன், அதற்கு எதிர் புறம் கர்கோடகனும், மற்றொரு புறம் வாசுகி என அனைத்து விஷ நாகங்களும், அவள் உடலின் ஊர்ந்து கொண்டு இருந்த ராஜ நாகம், கட்டு விரியன், சாறை பாம்பு, நல்ல பாம்பு தேள், சிலந்தி, பூரான், தேனி, அரவன்(மற்ற பாம்பு வகைகள்), என உலகில் உள்ள அனைத்து விஷ ஜந்துகளும்
தங்களது வாய் வழியாக மொத்த விஷத்தையும் அவள் உடலில் செலுத்த, அவள் குருதியில் முன்பே அவள் தாயின் மூலம் தொப்புள் கொடி வழியே கிடைத்த விஷம் ஒருபுறமும், விஷ ஜந்துக்கள் செலுத்திய விஷம் ஒருபுறம் என அனைத்தும் சேர்ந்து, நீள்விழியின் உடல் சிறிது சிறிதாக நில நிறத்திற்கு மாற துவங்கியது, விஷ ஜந்துக்கள் அனைத்து தங்களுக்கு இடப்பட்ட கடமையை சிரம் மேற்கொண்டு முடித்து அவள் உடலில் இருந்து விலகி நிற்க....

அவள் உடல் பொன்முலாம் பூசியத்தை போன்று, தங்கத்தில் குளித்ததை போன்று மின்ன துவங்கியது, அந்த ஒளியின் விச்சு காண்போரை கண் கூச செய்யும் வகையில் இருந்தது, அவள் உடலின் இருந்து வெளிப்பட்ட ஒளியின் விச்சு அரண்மனை முழுவதும் எதிரொலித்தது, அனைவரும் அழிந்த உறக்கத்தில் இருந்தால் அதனை எவரும் கண்டிலர்.

சிறிது நேரத்தில் நீள்விழி முழுவதுமாய் உரு மாறி இருந்தாள், உடலில் ஒரு பாதி பொன்னிரத்தில் தேஜசுடன் மனித உருவத்தில் இருக்க,மறு பகுதி நீண்ட வால் பகுதி கொண்ட சர்ப உருவகமாக மாறி இருந்தது, அதே நேரத்தில் 5 தலை கொண்ட பாம்பு இனத்தின் தலைவனான கர்கோடகன் குடை பிடிக்க பதுமை என அசைந்து விஷ உலகத்தில் காலடி எடுத்து வைத்தாள் நீள்விழி, மூன்று உலகத்தின் அனைத்து விஷ பிராணிகளும் தலை வணங்கி நிற்க அதனை மென்னகையுடன் ஏற்று கொண்ட விஷ லோகத்தில் அரியாசனத்தில் அமர்ந்தது இரு கைகளை கூப்பி அனைவரையும் வணங்கினால், விஷ லோகத்தில் காவல் தெய்வமான விஷ யட்சிணி முடி சுட்ட, அவள் சிரசு தனில் கிரீடத்தை வைத்து அவளை விஷ லோகத்தில் மஹாரணியாக அறிவித்தார். அவள் சிரத்தில் கிரீடத்தை ஏற்று கொண்ட நேரத்தில் அவளின் உடல் தளர்ந்து, பார்வை சிறிது சிறிதாக மங்க துவங்கியது, உடலின் பாரம், வலியும் தங்காது நீள் விழி அந்த கணமே ஆழ்ந்த மயக்கத்திற்கு சென்றாள்.

தன் கருவில் சூல்கொண்டு தன் உதிரத்தில் உருவான தன் மகள் முழு உருவம் பெற்று தன்னை போன்று விஷ கன்னியாக மாற்றம் பெற்று, விஷ லோகத்தின் மஹாரணியாக மூடி சூட்டப்பட்டது அறியாத ஆரண்ய தேவி த்கஷன் துவாரத்தின் கதவுகளை திறப்பதற்காண வழியினை தேடி வேள்வியில் ஈடுபட ஆரம்பித்தார்,

அவர் தேடுதலின் விடை எந்த எல்லைக்கு சென்று ஆறியும் பொருட்டு, பழிவாங்கும் உணர்ச்சி எல்லைமீற தன்னை வேள்வி தீ க்கு பலி இடவும் துணிந்து விட்டாள், அவள் வேள்வி தீ வளர்க்க வளர்க்க அவளின் கண்முன்பு நீள்விழியின் தோன்றினால், அவள் தான் தன்னை அடைத்து இருக்கும் தெற்கு வாசல் கதவுகளை திறப்பதற்காக சாவி என்பதை அறிந்து கொண்ட அரண்யதேவி, அவள் தன் உதிரம் என்பதை அறியாது, அவளின் சக்திகள் தன்னை விட பலம் பொருந்தியது என்பதை அறியாது, தான் அதீத சக்திகளை கொண்டு நீள்விழியின் அவள் உறங்கும் நேரத்தில் தன் மந்திர கட்டுக்குள் கொண்டுவந்தாள்.

மறுபுறத்தில் நீள்விழி மற்றும் ஆரண்ய தேவியால் ஏற்பட போகும் ஆபத்தும், அரச குலத்திற்கு சூழப்போகும் சதி வளையும் ராஜகுருவின் முன்பு நிழலாட ராஜகுரு தன் அறையின் இருந்த ருத்திர கடிகையின் முன்பு நின்று ராஜ வம்சத்தின் தசா புத்திகளை கணக்கிட ஆரம்பித்தார், அதுவும் ராஜவம்சத்தின் சூழ போகும் ஆபத்து அரண்மனையின் நுழை வாயில் வரை வந்துவிட்டது, என்று வினாடி கூட வீணாக்காமல் சரியாக தனது ஒளியின் மூலம் அவருக்கு தெரிய படுத்தியது, அரச குலத்தை காக்க வழி தேடி ராஜகுரு கிருஷ்ண எட்டினை புரட்ட அது நீள்விழியை மட்டுமே அதற்கான விடையாக காட்சி மூலம் அவருக்கு உணர்த்தியது.

அதே நேரத்தில் அரண்யதேவியின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்ட நீள்விழி, ஆரண்ய தேவியை த்கஷன் துவாரத்தின் கதவுகளை திறந்து அவளை விடுவிப்பதற்கான பயணத்தை தெற்கு நுழை வாயிலை நோக்கி துவக்கி இருந்தாள்.....

யட்சிணி வருவாள்.....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
மாயம் 7

மூன்றாம் ஜாமம் முடிந்து நான்காம் ஜாமம் தொடங்கிய அந்த பௌர்ணமி இரவுதனில் அந்த அரண்மனையின் இரவு நேர காவலில் இருந்த காவலர்கள் தவிர அனைத்து மானுடர்களும் ஊன்னும் உடலும் உறக்கத்தை தழுவி இருக்க, கோட்டை மதில் சுவர்களில் இருந்த தூங்கா விளக்கு தன்னை சுற்றி இருள் சூழ்ந்து இருத்த போதிலும் கடமையினை செய்யும் கர்ம போர் வீரன் போல தன்னை எரித்து ஒளியினை வழங்க, முழுமதியின் கதிர்கள் அனந்ததுடன் காதலனை மென்மையாக தழுவும் காதலி போன்று பாரினை மீது தனது ஒளியினை பாய்ச்ச, அருகில் இருந்து காணும் கண்களுக்கு இது கண்கொள்ளா காட்சி, ஆனால் பயம் கொண்டு காணும் கண்களுக்கு மேலும் பயத்தை கூட்டும் காட்சி.....

தனது இலக்கினை எந்த எல்லைக்கேனும் சென்று அடைந்துவிடும் நோக்கில் இருந்த அரண்யதேவி தன் விடுதலைக்காக வழியினை தேடி வேள்வி தீ வளர்க்க அதில் நீள்விழியின் வதனம் மட்டுமே அவளுக்கு காண கிடைக்க, தன் ஆதித சக்திகளை பிரயோகித்து ஏற்கனவே விஷத்தின் காரணமாக மயக்கத்தில் இருந்த நீள்விழியை தனது உதிரம் என்பதை அறியாமல், தானும் ஒரு பெண் என்பதை மறந்து ஒரு பெண்ணுக்கு மகா பாதகமான செயலினை செய்கிறோம் என்ற குற்ற எண்ணம் கிஞ்சத்துக்கும் இன்றி அரண்யதேவி அந்த செயலினை செய்தாள்.

அரண்யதேவியின் மந்திர கட்டுக்கு கட்டுப்பட்ட நீள்விழியின் உடல் மின்னலை பாய்ச்சியது போன்று வெட்டி வெட்டி துடிக்க நீள்விழியின் உடல் விறைத்து, விரைப்பின் விளைவாய் அவள் எழுந்து நின்றாள், இதுவரை காதலையும், நேசத்தையும் அன்பையும் காட்டிய அவளது அழகிய நீண்ட மீன் விழிகள் நீல நிறம் பூக்க துவங்கியது.

மெது மெதுவாக தனது விழிகளை மலர்த்தி பார்த்தவளின் விழிகளில் இருந்தது பழி வாங்கும் உணர்ச்சியும் குரோதமும் மட்டுமே.

அரண்யதேவியின் ஆணைக்கு உட்பட்ட நீள்விழி அரண்மனையின் பிரதான நுழைவாயில் கடந்து, நெடுது உயர்ந்த மாளிகையின் கதவுகளையும் தூண்களையும் தாண்டி அரண்மனையின் 4அவது அடுக்கினை அடைந்தாள்,

அங்கு அன்றும், இன்றும் என்றும் மக்களுக்கு அமைதியின் மறு உருவமாய், அழித்தல் தொழிலை செய்யும் சடா முடியோன், ஆதியும் அந்தமும் இல்லாதவன், சக்தியின் நாயகன், எமது ரச்சகன் ஈசனின் சடா முடியில் அணிந்து இருந்த மாணிக்க பரல்கலையும், பரம்பொருளின் கழுத்தில் இருந்த ருத்திராட்ச மலையினையும் கையில் கொண்டு அரண்யதேவியின் விடுதலைக்குரிய தனது பயணத்தை தெற்கு வாயிலை நோக்கி ஆரம்பித்தாள் நீள் விழி, தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சூழ்நிலை, தன்னை சூழ்ந்து இருக்கும் காரிருள் எதுவும் அவளின் கண்ணையும் கருத்தையும் கவரவில்லை, ஆரண்ய தேவியின் விடுதலை மட்டுமே அவளின் பிரதான இலக்காக இருந்தது எனலாம்.

கையில் தீ பந்தம் ஏந்தி கண்கள் நீல நிறம் பூக்க, ஒரு வித மயக்க நிலையில் தனது நினைவுகள் தப்பி த்கஷன் துவரத்தினை நுழைவாயிலை கடந்தாள் நீள்விழி.


கையில் இருந்த மாணிக்க பரல்களை முதல் கதவம்(கதவு) அருகில் வைக்க அதன் தாழ்ப்பாள்கள் தன்னிச்சையாக பெரும் சத்தத்துடன் திறந்து கொண்டது.

முதல் நிலைவாசலினை கடந்து இரண்டாவது கதவம் அருகே சென்ற நீள்விழி தனது கையில் இருந்த ருத்திராட்ச மாலையினை சிதரடிக்க அதன் ஒரு ஒரு ருத்திரச்சமும் விலகி ஓடி கதவின் அதற்குரிய இடத்தில் பொருத்தி கொள்ள, அதன் தாழ்ப்பாள் விலகி நீள்விழிக்கு கடைசி கதவிற்கான வழியினை கோடிட்டது.


முதல் இரண்டு கதவம்களை கடந்த நீள்விழிக்கு கடைசி கதவம்களை திறப்பது அவ்வளவு எளிதான செயலாக இல்லை, அதற்காக வழி புலப்படவில்லை என்பது சால பொருத்தும்.

அதற்குள் அரண்யதேவி தனது விடுதலைக்காக வெற்றியை கொண்டாட துவங்கி இருந்தாள், மமதையில், தன் அகங்கரத்தில் தன்னை மறந்து எக்காலம் இட்டாள், அவள் மகிழ்ச்சி ஆயுட்காலம் வெகு குறைவு போல, விளக்கு தேடி ஓடும் சிறு விட்டில் பூச்சி போன்று அவளின் இந்த மகிழ்ச்சி அவளை அழிவின் விளிம்பில் நிற்க வைக்க போவதை அவள் அறியவில்லை, அறியும் பொழுது காலம் கடந்து போய் இருக்குமோ என்னவோ.

"எனது 20 வருட சிறைவாசம் இன்றோடு முடிவிற்கு வர போகிறது, ஏய் மதி கெட்ட மூடனே, நீயும் உனது நாட்டும், நாட்டு மக்களும், அரசகுலமும், அதன் வாரிசுகளும், என் உன் நாட்டில் உள்ள சிறு புல் பூண்டு கூட அழிவது திண்ணம், உனது நாட்டில் உள்ள அரண்மனைகளும் மாட மாளிகைகளும் இடிந்த மண்ணோடு மண் ஆக போகிறது, கண்டுகொண்டே இரு, எந்தன் ருத்திர தாண்டவத்தை என எக்காளம் இட்டாள்.


அதே வேலையில் மூன்றாம் வாயிலை அடைந்த நீள்விழிக்கு அதனை திறக்கும் வழி யாது ஒன்றும் புலப்படவில்லை, அவள் மேலும் முன்னேற முடியாமல் அங்கேயே தேங்கி நிற்க, கதவின் மறுபுறத்தில் இருந்த அரண்யதேவி நீள்விழியுடன் தனது உரையாடலை துவங்கினாள்.

" எம் அடிமையே, யான் அழைப்பது உனது செவிகளில் கேட்கிறதா..... பதில் கூறடி பெண்ணே....அரண்யதேவியின் குரலுக்கு நீள்விழியிடம் இருந்து யாதொரு எதிர் வினையும் இல்லாது போகவே அரண்யதேவி ஆதித சத்தத்துடன் நீள்விழியுடன் மேலும் தனது உரையாடலை நீட்டித்தாள்.


" யான் கூறுவதை நன்றாக நினைவில் கொள் பெண்ணே....உனது பரிபூரண சம்மதத்துடன் எமக்கு உனது உடலின் உள்ள குருதியினை நீர் அளிக்க வேண்டும், மூன்றாம் வாசலின் மூலையில் ஒரு கூர்மையான கத்தி உண்டு, அதன் கூர்முனை கொண்டு உம் உடலினை கீறி வெளிவரும் குருதியினை நிலைவாசலின் நிரப்பு, கதவம் தானாக திறந்து கொள்ளும் என நீள்விழிக்கு ஆணை இட்டாள் அரண்யதேவி.


அரண்யதேவி அளித்த கட்டளைகளை செவி வழி கேட்ட நீள்விழி அதன்படி செயல்பட ஆரம்பித்தாள்.

அதுவரை பொறுக்க முடியாத அரண்யதேவி நீள்விழியை பெரும்குரல் எடுத்து வசைப்பாட துவங்கினாள்.

"ஏய் அடிமை பெண்ணே.... விரைவாக யான் கூறியபடி செய், நம்மிடம் அதிக நேரம் இல்லை என நீள்விழியின் செயல்களை துரித படுத்த முயன்றாள் அரண்யதேவி.

நீள்விழியின் தன் ஆணைக்கு அடிபணிந்து தான் ஏவிய செயல்களை செய்யும் பாங்கையும், கட்டளைகளை செயலாற்றும் விதத்தையும் வாயிலின் மறுபுறத்தில் தன் அரியணையின் அமர்ந்து எதிர் புறத்தில் இருந்த மாய கண்ணாடியில் ரசித்து கொண்டும், தனது விடுதலைகான கணத்திற்காக மகிழ்ச்சியில் திளைத்து கொண்டும் இருந்தாள் அரண்யதேவி.

நீள்விழி கூர்முனை வாள் கொண்டு தன் உடலினை கீறி குருதியினை நிலைவாசலின் மீது நிரப்ப விழைந்த அந்த நொடி, எங்கோ இருந்து புறப்பட்ட வலிய கரம் ஒன்று நீள் விழியினை த்கஷன் துவாரத்தின் வாசலை நோக்கி வெளியில் இழுத்து சென்றது, அதே வேளையில் அரண்யதேவி மாய கண்ணாடியில் கண்டு கொண்டு இருந்த காட்சிகளின் பிம்பத்தின் தொடர்பு அருந்து போனது.....

அரண்யதேவியின் விடுதலைக்காக கனவும் கானல் நீராகி போனது.....

யாட்சி வருவாள்......


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
மாயம் 8
இயற்கையின் சிருஷ்டிகள் எப்பொழுதும் அழகானவை, அற்புதமானவை, இயற்கையின் படைப்பிற்கு எதிராக செயல்பட துவங்கும் பொழுது மானுட இனம் தன் அழிவின் விளிம்பை நோக்கி பயணத்தைத் துவங்கி இருக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மை, இயற்கையின் சிருஷ்டிகளின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, மானுட இனமானது தனக்கென்று எல்லைகளை வகுத்துக் கொண்டு தன் பயணத்தைத் தொடருமாயின் இயற்கை அதன் சமநிலையில் இருந்து என்றும் வழுவாது நிற்கும்.

அனல் விழியனின் முன்னோர்களால் சுயநலத்திற்காகவும், தங்களின் பாதுகாப்பிற்காகவும், வலுக்கட்டாயமாகக் தோற்றுவிக்கப்பட்ட விஷ கன்னிகள், இன்று தங்களை தோற்றுவித்தவர்களின் இனத்தை அழிக்க, குலத்தை ஒழிக்க, போர்தொடுக்க துவங்கி இருக்கிறார்கள், இயற்கையின் குணத்திற்கு எதிரான இந்த முரண்பாடு எதில் சென்று முடிவடையுமோ????

நான்காம் ஜாமம் முடிந்து அனலன் கிழக்கில் உதிக்க 12 நாழிகைகள் இருந்த பின்னிரவு பௌர்ணமி வேலைதனில், காண்டீபனும், ராஜகுருவும், மகேந்திரபுரியின் இளவல், கனல் விழியனும் இரவு நகர்வலம் முடிந்து அரண்மனையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.

இரவின் மந்தகாச விளக்கொளியில் நிசப்தமாக இருந்த அரண்மனையின் கிழக்கு, மேற்கு,வடக்கு கதவம்களை(கதவு) தாண்டி, பூச்சிகளின் மிக மெல்லிய ரிங்காரத்தையும் மீறி, இளமங்கை ஒருவளின் முத்துப் பரல்கள் பதித்த தண்டையின் ஜல்.....ஜல்.... என்ற மெல்லிய ஒலி, காண்டீபன் மற்றும் ராஜகுருவின் கூர் செவிகளை சென்றடைந்தது.

இரவின் காரிருள் பிரித்து பொழுது புலரும் கிருஷ்ணபட்ச வேலையில்(விடியற்காலை), அனைத்து பெண்டிரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க வாய்ப்பு உண்டே....தவிர, எந்த பெண்டிரும் அர்த்த ஜாம வேளையில் நடைபயில அவசியம் ஏற்படாது, இரவு வேளையில் செவி கேட்கும் முத்து பரல்களின் ஒலி யாருடையதாக இருக்கும் என்று ஐயம் மற்றும் ஆராய்ச்சி காண்டீபனுக்கும், ராஜகுரு நந்திவர்மனுக்கும் ஒருங்கே உதித்தது.

முத்து பரல்களின் மெல்லிய ஒலியோ, இவர்களின் பார்வை பரிமாற்றமோ எதுவும் அவன் சிந்தையை எட்டவில்லை, மஹேந்திரபுரியின் இளவல் சுய நினைவில் இருந்தால் தானே எதுவும் அவன் சுயத்தை எட்டும், அவனின் நினைவு எல்லாம் அவன் மனம் கவர்ந்த மங்கையுடன் அல்லவா கனவு உலகில் சஞ்சரித்து கொண்டு இருந்தது.

இருவரும் ஒருவருக்கொருவர் ஒரே நேரத்தில் இளவலுக்கு தெரியாமல் சந்தேக பார்வைகளை பரிமாறிக்கொண்டனர், இளவல் கனல் விழியினின் பாதுகாப்பு மட்டுமே முதன்மை பொருளாக கருதிய இருவரும் மகேந்திர புரியின் இளவலை அரண்மனை நோக்கி செல்லுமாறு பணித்தனர்.

"இளவலே....., தாங்கள் அரண்மனைக்கு சென்று சற்று ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள், நாங்கள் அரண்மனையின் காவலர்களுக்கு கோட்டைகளின் பாதுகாப்பு குறித்த சில கட்டளைகளை பிறப்பித்து விட்டு, தங்களுடன் இணைந்து கொள்கிறோம்", என ராஜகுரு கூற, சிறு தலையசைப்புடன் அவர் கூறுவதை ஏற்ற கனல் விழியன் தன் புரவியில் அவ்விடம் விட்டு அகன்றான்.

காண்டீபன் மற்றும் ராஜகுரு இருவரும் புரவியை இளமங்கையின் முத்து பரல்களின் ஒலி கேட்ட திசையை நோக்கி தட்டிவிட, புரவி அதிவேகமாக தக்ஷன் துவார நுழைவாயிலை நோக்கி பறந்தது, அங்கு அவர்கள் இருவரும் ஒருசேர கண்டது, நேசத்தை மட்டுமே இதுவரை காட்டிய அழகிய நீண்ட மீன் நயனங்களில் நீலம் பூக்க, மூன்றாம் கதவம்களை தன் உதிரம் கொண்டு திறக்க முயன்று கொண்டிருந்த நீள்விழியை மட்டுமே.

தன் கரங்களில் இருந்து உதிரத்தின் துளிகள் கைகை முழுவதும் வழிந்தோட, மூன்றாம் கதவத்தின் மீது நீள்விழி தன் குருதியை நிரப்ப விழைந்த கணம், தன் வலிய கரங்களை கொண்டு நீள்விழியை தக்சன் துவாரத்தின்(தெற்கு கதவுகள்) நுழைவாயிலை நோக்கி தன்புறமாக இழுத்து சென்றார் ராஜகுரு நந்திவர்மன்.

"என்ன விபரீத காரியம் செய்யத் துணிந்தாய் மகளே", என ராஜகுரு இரைந்த குரலில் வினவ அவர் எழுப்பிய வினா எதுவும் நீள்விழியின் செவிகளை சென்றடையவில்லை, ஏதோ கனவு லோகத்தில் சஞ்சரிப்பவள் போல இலக்கே இல்லாமல் தக்ஷன் துவார கதவம்களை வெறித்துக் கொண்டிருந்தாள்.

அதற்குள் கதவின் மறுபுறத்தில் இருந்த ஆரண்யா தேவி "அவள் மீது ஏன் கேள்விக்கணைகளை தொடுக்கிறீர்கள் ராஜகுரு நந்திவர்மன் அவர்களே..., எம்மிடம் தங்களது கேள்விகளை கேளுங்கள்....", என கோபமாக மொழிந்தாள்.

எவ்வளவு முயன்றும் நீள்விழியை நிலைக்குக் கொண்டுவர முடியாமல் போக ராஜகுரு நந்திவர்மன் தன் கமண்டலத்தில் இருந்த கங்கை நீரினை " ஓம் ருத்ராய நமஹ.....", என மும்முறை சொல்லி அவளின் வதனத்தில் தெளிக்க ஏதோ கனவில் இருந்து விடுபடுபவள் போன்று மருண்ட விழிகள் கொண்டு கண் முன்பு இருக்கும் ராஜகுருவை நோக்கினாள்.

அதேவேளையில் மறுபுறத்தில் ஆரண்ய தேவி ராஜகுருவிடம் "எத்தனை நாட்களுக்கு உம்மால் எம் விடுதலையை தடுக்க முடியும், தவிர்க்க முடியும், தகர்க்க முடியும், என்றேனும் ஒரு நாள் நிச்சயமாக, அறுதியாக, எம் விடுதலை நிகழ்வு, அன்னாள் எம் பழிவாங்கும் நெருப்பு உம்மையும், உங்கள் நாட்டின், இளவலையும், உங்கள் சாம்ராஜியத்தையும், உங்கள் குலத்தையும் அழிக்காமல் விடாது, யான் ஏற்படுத்தப்போகும் சூறாவளியில், உங்கள் நாடு, ஒரு ஓரடி சுவடு கூட இன்றி மண்ணோடு மண்ணாக அழியப் போவது திண்ணம், நன்றாக நினைவில் கொள்ளும்!!!! அன்னாள் வெகுவிரைவில் வரத்தான் போகிறது, காத்துக் கொண்டே இறும்", என இறுமாந்த குரலில் மொழிய,

அதற்கு ராஜகுரு நந்திவர்மன்" எந்த நிலையிலும் அப்படி ஒருநாள் சரித்திரத்தில் நிகழாது, எம்பெருமான் ஈசன் மீது ஆணையிட்டு கூறுகிறேன், நீவிர் உரைப்பது போன்று ஒருநாள் வந்தாலும், நீர் விடுதலையே அடைந்தாலும், உமது சக்திகளைக் கொண்டே உம்மை மீண்டும் சிறையில் அடைப்பேன், நீங்கள் உங்களால் ஆன முயற்சிகளை செய்யுங்கள், யான் அரச குலத்தையும், இளவளையும், நாட்டு பிரஜைகளையும், காக்க எம்மால் இயன்ற, என் தலையாய கடமையை மேற்கொள்கிறேன், உண்மைக்கும், நியாயத்திற்கும், அநீதிக்கும், எதிராக நடக்கும் இப்போரில் யார் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என பார்த்துவிடலாம்", என சூளுரைத்தார்.

அவர் மொழிந்த ஒவ்வொரு சொல்லும் பிற்காலத்தில் நிகழத்தான் போகிறது, அதுவும் அவரின் மேற்பார்வையிலேயே என்பதை அவர் அறியவில்லை.

ஆரண்ய தேவியின் கேள்விகளுக்கு பதில் உரைத்து விட்டு நீள்விழியின் மீது பார்வையை நிலைக்க விட்ட ராஜகுரு நந்திவர்மன், அவளின் வதனத்தை ஆதாரத்துடன் நோக்கி,

" எவ்வாறு இவ்விடம் வந்தாய் மகளே...", என பரிவுடன் வினவ,

கலக்கம் நிறைந்த விழிகளுடன் "யான் அறியேன் ராஜகுரு அவர்களே..., யான் எமது அறையில் அரண்மனையில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தேன், இவையாவும் எவ்வாறு நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியாது தந்தையே...", எனக் கூறியவள், பொழுதுபுலர்ந்ததிலிருந்து ஏற்பட்ட வலியும், அதிர்ச்சியும் தாங்காது வெட்டி எறிந்த குருக்கத்திக் கொடி போல அவ்விடமே மயங்கி சரிந்தாள்.

அவளின் நிலை கண்டு அதிர்ந்த காண்டீபன் நீள்விழியை தன் கைகளில் ஏந்திக்கொண்டு, அவள் அறையில் பிரவேசித்து அவளை மஞ்சத்தில் கிடத்தினார்.

இருவரும் ஒரே நேரத்தில் அறையை விட்டு வெளியேற, காண்டீபன் தன் மகளின் உண்மை முகமும், சொரூபமும், உலகிற்கு தெரிந்தால் அவளின் நிலை என்ன என்பதை எண்ணி சொல்லவென்னா துயரில் இருக்க,

ஒரு புறத்தில், ராஜகுரு நந்திவர்மனோ "எம்மை அன்றி எவரும் இதுவரை தக்ஷன் துவார கதவம்களை திறந்தது கிடையாது, கடந்த 20 வருடங்களாக யான் அடைத்த சிறையிலிருந்து வெளியேற முடியாமல் அடைப்பட்ட நிலையிலிருந்த ஆரண்ய தேவி, எவ்வாறு? சிறையிலிருந்து விடுதலைப் பெற இயலும், எப்படி இது சாத்தியமாயிற்று, எம்மை விட அதித சக்திகளை படைத்த விஷக் கன்னியால் மட்டுமே தக்ஷன் துவார கதவம்களை திறக்க இயலும், எவ்வித பயமும், உடலுக்கும், உயிருக்கும் எவ்வித சேதாரமும் இல்லாமல், நீள்விழியால் கதவுகளை திறக்க முடியுமெனில், நீள்விழி ஒரு விஷ நங்கையா? எவ்வாறு? எங்கே?எப்படி ? இது சாத்தியமாயிற்று, எங்கு? தவறு நிகழ்ந்தது, விஷ கன்னியின் கருவில் அவளின் உதிரத்தில் ஜனித்தாள் மட்டுமே விஷக்கன்னிகையாக உருமாற்றம் பெறமுடியும், ஆனால் யான் தசாபுத்திகளையும், கிரகசஞ்சாரத்தையும் கணக்கிடும் பொழுது, இளவலளை....ஆரண்ய தேவியிடம் இருந்து காக்கும் சக்திகொண்ட நங்கை நீள்விழி மட்டுமே என நிஷ்டையும் தெரிந்தது தவறோ, எப்படி தவறு நிகழ்ந்தது, எனக் குழம்பி நிற்க,

மறுபுறத்தில் ஆரண்ய தேவிக்கு, ராஜ குருவிற்கு மனதில் உதித்த அதே கேள்விகளும், சந்தேங்களும் உதிக்க, அதனை நினைத்து தனக்குள் உழன்று கொண்டிருந்தாள்.

இவர்களின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், காரணமான நீள்விழியோ, தன்னைச் சுற்றி நடக்கும் யாதும் அறியாது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

இருவரும் ஒரே நேரத்தில் நீள்விழியின் பிறப்பு ரகசியத்தை ஆராய முற்பட்டனர், பரம்பொருளின் திருவிளையாட்டில் யாவரும் நூலில் ஆடும் பொம்மைகளே, அவன் நிகழ்த்தும் அற்புதங்கள் அலாதியானவை, நீள்விழியின் பிறப்பு ரகசியம் இருவரும் அறிய நேர்ந்தால் அவர்களின் நிலை என்ன ஆகுமோ.... அம்பலத்தில் ஆடும் அந்த ஈசன் மட்டுமே அறிவார்....

யட்சிணி வருவாள்....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

New Threads

Top Bottom