Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


மாற்றம் - வதனி

வதனி பிரபு

Saha Writer
Team
Messages
6
Reaction score
2
Points
1
மாற்றம்

ஹாஸ்பிடலிற்கு சென்ற அண்ணன் வீடு திரும்புவதை எதிர்பார்த்த வண்ணம் காத்திருந்தார் வேணி... இதோ அவள் எதிர்ப்பார்த்தது போன்றே தேவனின் வாகனம் வந்துவிட்டது.



தேவன் மிகவும் களைப்புற்றிருந்தார் என்பது அவரின் முகமே தங்கைக்கு உணர்த்தியது, ஆகவே அவரின் களைப்பைப் போக்க தண்ணீர் வழங்கியவர், ஏற்கனவே தயார் நிலையில் இருந்த காபியை எடுத்து வர உள்ளே சென்றாள்..



காபியுடன் ஹாலிற்க்கு வந்த வேணி சோர்வுற்று சாய் நாற்காலியில் சாய்ந்திருந்த தேவனின் அருகில் வந்து, அவரின் முதுகில் தட்டி “அண்ணா, காபி எடுத்துக்கோங்க.. அண்ணிய கூப்பிட்டு வரலயா…” என்றாள்.



பதிலேதும் கூறாமல், அவரும் அதை வாங்கி பருக தொடங்கினார்... “என்னண்ணா.. அது தான் தம்பிக்கு ஒன்னும் இல்லையே.. அப்புறம் ஏன் இவ்வளவு யோசிக்கிறிங்க.. நம்ம மாறன்
ஹாஸ்பிட்டல
இருந்து வீட்டுக்கு வந்ததும்.. நேர்ந்துக்கிட்ட மாதிரி பழனிக்கு போயிட்டு வந்துடுவோம்…” என்றாள்.


களங்கிய
கண்களோடு தங்கையை பார்த்த தேவன்... “அந்த முருகன் சங்கர் உருவத்துல வந்து என் மகனை காப்பாத்துனாரா இல்ல… சங்கர் கடவுளா மாறினானா எனக்கு தெரியல வேணி..”. என அவர் முடிக்கும் முன் வேணி.. “என்னண்ணா சொல்றீங்க... எந்த சங்கர்...” என ஆரம்பிக்க,



அது தான் வேணீ… நாம எந்த சாதிய காரணம் காட்டி நம்ம மாறன் விரும்பின மலர் பொண்ணை வேனாம்னு சொன்னோமோ... அந்த மலரோட அண்ணன் தான் இந்த சங்கர். அவனோட இரத்தம் தான் இப்ப நம்ம மாறனோட உயிர காப்பாத்திருக்கு..” என்றவர்...
மேலும்
தொடர்ந்தார்...



“என்கிட்ட இருக்கும் பணமோ, என் சாதியோ, என் அந்தஸ்த்தாே என் மகன காப்பத்தல வேணி... நான் மனசயும் பார்க்கல, மனிதத்தையும் பார்க்கல.... மனுசத்தன்மையாவும் நடந்துக்கல, ஆனா இப்போ எனக்கு கடவுள் நல்ல சந்தர்ப்பத்த கொடுத்திருக்கான் இத நான் தவறவிடக்கூடாது... அண்ணியும் நானும் முடிவு பன்னிட்டோம்… நாங்க மலர் வீட்டுக்கு போய் பொண்ணு கேக்கப்போறோம்..” என்றவர் தடுமாறி தங்கையின் கைகளை பிடித்துக் கொண்டு "என்னோட முட்டாள்தனத்தால இன்னொரு வேணியை உருவாக்கிடக் கூடாது.." என்ற தேவனின் கண்ணில் தெரிந்த குற்ற உணர்ச்சியை, மாற்றும் பொருட்டு “உண்மைதான் அண்ணா… மாறனும், மாற்றம் வேனும் மத்தவங்க மாறனும்னு எதிர்பார்க்கிறதை விட, நாம மாறிடனும்… நீங்க எடுத்த முடிவு ரொம்ப நல்ல முடிவுண்ணா… போயிட்டு வாங்க..” மகிழ்ச்சியுடன் வழியனுப்பினாள் வேணி, தன் இருபது வருட தனிமை வாழ்க்கையை மறந்து...
 
Top Bottom