Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேல்விழியின் குளிர் நிலவோ - கதைப்பகுதி

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
52:

ஒரு வழியாய் சமாதானம் செய்துமுடித்த பின், தன் கரங்களுக்குள் தூங்கும் நிலாவை பார்த்து புன்னகைத்து கொண்டிருந்தான் வேலன்.



தன் போன் அடித்தவுடன் எடுத்து காதில் வைத்து, "ஹலோ!" என்றான்.



"என்னடா? உங்க டாம் அண்ட் ஜெர்ரி பைட் முடிஞ்சுதா இல்லையா?" என்று சிரித்தான் அர்ஜுன்.



"ஹ்ம்ம்... சமாதானம் பண்ணிட்டேன். நீங்க எப்போ வரிங்க?" என்றான் சோம்பலை முறித்து.



"நாங்க ஆல்ரெடி கிளம்பி டூ ஹெவர்ஸ் ஆகுது" என்றான் அர்ஜுன்.



கடிகாரத்தை பார்க்க மணி நள்ளிரவு மூன்றை தான்டி இருந்தது.



"டேய். நான் என்ன சொல்லிட்டு வந்தேன். இன்னைக்கு வேண்டாம் நாளைக்கு வந்தா போதும்னு சொன்னேன்ல அப்புறம் எதுக்குடா இந்த நடுராத்திரில கூட்டிட்டு வர எரும?" என்றான் செல்லமான கோபத்தில்.



"ஆமா! பேய் மாதிரி இந்நேரத்துக்கு வண்டி ஓட்டிட்டு வரணும்னு எனக்கு ஆசை பாரு." என்ற அர்ஜுன்.



"எல்லாம் அம்மா தான்டா. எனக்கு என்னவோ தப்பா படுது. நிலா என்னைக்குமே என்கிட்ட சொல்லாம போகமாட்டா, அவளே போயிருகான்னா ஏதோ சரி இல்ல. நான் இப்பயே கிளம்ப போறேன். நீங்க வேணா நாளைக்கு வாங்கன்னு சொல்லி கிளம்பிட்டாங்க. அப்புறம் அவங்களை சமாதானம் பண்ணி எல்லோரும் இப்போ ஒரே கார்ல கிளம்பி வந்துட்டு இருக்கோம். இங்க டி குடிக்க இறங்கினோம். இவ்ளோ நேரம் நான் வண்டி ஓட்டிட்டு வந்தேன் இனி வர்மா ஓட்டிட்டு வருவான். சரி எதுக்கும் உனக்கு சொல்லி அலெர்ட் பண்ணிடலாம்னு போன் பண்ணேன்." என்றான் அர்ஜுன்.



"சரி டா பார்த்து பத்திரமா வாங்க." என்று போனை வைத்தவன், நிலா எழுந்து அமர்ந்திருப்பதை பார்த்து, "ஏன்டா! நீ தூங்கு" என்றான்.



"யாரு போன்ல?" என்றாள் தூக்ககலகத்தில்.



"வேற யாரு? நமக்குன்னு இருக்கறது ஒரு கரடி தான? எல்லாம் அந்த அர்ஜுன்பய தான். கிளம்பி வந்துட்டு இருக்காங்களாம். அம்மா உன்ன உடனே பார்க்கணும்னு ஒரே அடமாம்" என்றான் வேலன்.



"அச்சச்சோ! நான் இருந்த கோபத்துல அத்தைகிட்ட கூட சொல்லாம வந்துட்டேன். பாவம் அத்தை ரொம்ப பயந்துருப்பாங்க" என்றாள் சோகமாய்.



"போச்சுடா. ஆரம்பிச்சிட்டா. அய்யய்யோ! என்னால தாங்க முடிலடா சாமி இவங்க அத்தை மருமக செண்டிமெண்ட்டு. ஏன்டி நான் தான உன்னை காணோம்னு உடனே ஓடி வந்தேன். அப்போகூட உங்கத்தை தான தெரியுறாங்களா உனக்கு?' என்றான் பாவமாய்.



"என்னது என்னை பார்க்க ஓடி வந்தியா? நீ உன் லூசியை தானே பார்க்க வந்த? எப்படி எப்படி டார்லிங்...கா.. மூஞ்சிய பாரு. பேசாம இந்த மூஞ்சியை கொஞ்சம் அஷ்டகோனலாக்கிட்டா எனக்கு எந்த கவலையும் இருக்காது" என்றாள் நிலா.



"என்னது அஷ்டகோனலா? அப்படின்னா? என்னடி சொல்ற?" என்றான் வேலன் லேசாய் அதிர்ந்தபடி.



"ஹ்ம்ம்... இந்த முகரை இப்படி இருக்கறதால தான கண்ட நாயெல்லாம் என் புருஷனை சைட் அடிக்குது. பேசாம இந்த மூஞ்சியை கொஞ்சம் டேமேஜ் பண்ணிட்டா? நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்கலாம்ல?" என்றாள் லேசாய் உதட்டை சுழித்து.



'ஆமா! பேசறது வில்லிறேஞ்சுக்கு. ஆனா உதட்டை சுழிச்சு சொல்றதை பார்த்தா யாராச்சும் லவ்வதான் சொல்றான்னு நினைப்பாங்க. சரியான எமகாதகி' என்று உள்ளுக்குள் சிரித்தான்.



"என்ன அபப்டி பார்க்கிற? எங்கத்தை ஏன் இவ்ளோ நேரம் கழிச்சு வராங்கன்னு தானே? அவங்களுக்கு நிச்சியமா நீ தான் ஏதோ தப்புருப்பன்னு தெரியும். அதான் நீயே அதை சரி பண்ண டைம் கொடுத்தாங்க. அந்த டைம் முடிஞ்சிடுச்சு அவ்ளோதான் நேர்ல வராங்க. இப்பவும் நீ சமாதானம் பண்ணலைன்னா உனக்கு தான் டோஸ் கொடுப்பாங்க." என்று கள்ளத்தனமாய் சிரித்தாள்.



'இவ சிரிக்கிறான்னு மட்டும் மயங்கிடவே கூடாது. குட்டி பிசாசு' என்று மீண்டும் உறக்கதிற்கு சென்றான்.



அமரந்திருந்த அவளையும் இழுத்து தனதருகில் உறங்கவைத்தான்.



"ஆமா! அந்த பிரதியோட அப்பாவை எங்க வச்சிருக்காங்கன்னு வர்மாவை கேக்கவே இல்லையே?" என்று குளித்து தலையை துவட்டியபடி வந்தான் வேலன்.



"அதெல்லாம் ரெண்டு பேரையும் அவங்க ஊருக்கே நேத்து பேக் பண்ணிட்டேன்" என்றாள் சமயலறையில் எதையோ எக்கி எடுத்தபடி.



"இது எப்போ நடந்தது?' என்று வாயை பிளந்தபடி வந்தான் வேலன்.



"ஹ்ம்ம் நேத்து ஊர்ல இருந்து வந்தவுடனே பண்ண முதல் வேலையே இது தான்." என்று சிரித்தாள்.



"எதுவுமே சொல்லிட்டு செய்யமாட்டியா?" என்றான் பாவமாய்.



"நிச்சயமா மாமா! எனக்கு ஒரே ஒரு ..." என்று நிறுத்தி அவனை பார்த்தாள்.



"உனக்கு என்ன..?" என்று ஆர்வமாய் அவளை பார்க்க.



"எனக்கு ஒரு ஐஸ்க்ரீம் வேணும்" என்று குழந்தை முகத்தை வைத்துகொண்டு சிரித்தாள்.



'எவ்ளோ பெரிய வேலையெல்லாம் அசால்ட்டா செஞ்சுட்டு சின்ன ஐஸ்க்ரீம்க்கு குழந்தை மாதிரி கேக்றதை பார்த்தியா?' என்று உள்ளுக்குள் சிரித்தவன். அங்கிருந்த மேடையின் மேல் அமர்ந்து அவளையும் தனதருகே இழுத்தவன். "ஐஸ்க்ரீம் அப்புறம் வாங்கித்தரேன் அதுக்கு முன்னாடி..." என்று அவளின் இதழை பார்க்க.



எதவும் பேசாமல் முகம் கவிழ்ந்தவளின் முகத்தை நிமிர்த்தி இதழருகே சென்று ஒற்றும் நேரத்தில், "டிங் டாங்.." வாசல் மணி அடிக்க, சப்பென்றாகியது.



"யாரோ வந்துருக்காங்க. விடுங்க.." என்று அவனின் பிடியில் இருந்து விடுபட முயல அவளை இன்னும் இறுக்கிபிடித்தான்.



"ஹ்ம்ம் .. எனக்கு யாரு அந்த கரடின்னு தெரியும். இதுக்கு அப்புறம் நான் உன் தரிசனத்துக்கே எவ்ளோ நேரம் வெய்ட் பண்ணனும்னு தெரியாது. சோ, எனக்கு ஒரே ஒரு கிஸ் மட்டும் கொடுத்துட்டு போ. விட்டுடறேன்" என்றான் குறும்பாய் சிரித்தபடி.



"நேரங்காலமே தெரியாதா உங்களுக்கு..? வாசல்ல எல்லோரும் நிக்கறாங்க. விடுங்க. என்ன நினைப்பாங்க எல்லோரும்?" என்று பொய் கோபம் காட்ட.



"எல்லாம் அவங்களுக்கும் தெரியும் யாரும்... ஒன்னும் நினைக்கமாட்டாங்க. கேட்டதை கொடுத்தா விடறேன். இல்லைன்னா விட முடியாது. உங்கத்தை வெளியவே நிக்கட்டும்" என்றதும்.



"சரி. கொடுத்து தொலைக்கிறேன். கண்ணை மூடுங்க" என்றாள் நிலா.



"முடியாது. கண்ணை மூட சொல்லிட்டு ஓடிடுவ நீ" என்றான் வேலன்.



"இல்ல. ஓட மாட்டேன். உங்களுக்கு என்ன கிஸ் தானே வேணும். தரேன். கண்ணை மூடுங்க முதல்ல" என்றாள்.



அவன் கண்ணை மூடியதும் அவனிடம் இருந்து லேசாய் விலகியவள். அவன் நெற்றியில் ஒரு முத்தத்தை அழுந்த பதித்து விட்டு பிடித்தாள் ஓட்டம்.



இதை புரிந்து கண் திறப்பதற்குள் கதவின் முன் நின்றிருந்தாள் நிலா.



அவளை பார்த்து முறைத்தவன். 'உன் வேலையை காட்டிட்ட இல்ல. பார்த்துக்கிறேன். வழக்கம் போல இந்த அர்ஜுன் குரங்கு இருக்கான்ல என் உயிரை வாங்கிறதுக்குன்னே? உனக்கு கல்யாணம் ஆகட்டும்டா ...' என்று லேசான கோபத்தோடு நாலே எட்டில் தன் அறைக்குள் நுழைந்து கதவை படாரென்று சாத்தினான்.



வேகமாக ஓடி வந்தவளின் மூச்சி இறக்க கதவை திறந்தாள்.



"என்னம்மா ஏன் இப்படி மூச்சி இறைக்குது. எங்க அந்த தடிமாடு? அவன் வந்து கதவை திறக்க வேண்டியது தானே?" என்று சத்தமாய் கேட்டபடி வந்தார் கஸ்தூரி.



"இல்ல அத்தை. அவர் இப்போ தான் குளிச்சிட்டு வந்தார். ரெடி ஆகிட்டு இருக்கார்." என்று எங்கோ பார்த்து சொல்ல.



அவளின் நாணம் அவள் சொல்லாததையும் சொல்லிற்று கஸ்தூரிக்கு.



"சரி... சரி... நீ போய் அவனை கவனி. நாங்க எல்லோரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறோம்" என்று எல்லோருக்கும் அவரவர்களுக்கு அறையை காட்டினார்.



'ஐயையோ இப்போ போனேன். அவ்ளோ தான். என்னை மென்னு முழுங்கிருவாறு. நான் போகமாட்டேன்' என்று எண்ணியவள்.



"அவர் வந்திடுவார் அத்தை. நீங்க எல்லோரும் பிரெஷ் ஆகிட்டு வாங்க. எல்லோருக்கும் டிபன் எடுத்து வைக்கிறேன்" என்று சிரித்தாள் நிலா.



அவளின் எண்ணத்தை புரிந்தவர்.



"இவங்க எல்லோரும் இந்த குடும்பத்தை சேர்ந்தவங்க. அதனால எங்களுக்கு என்ன தேவையோ அதை நாங்க பார்த்துக்குறோம். அவனை பாரு. அப்புறம் இன்னைக்கு பூரா ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிப்பான்" என்றவர் அவளை மட்டும் பார்த்து புன்னகைக்க.



அத்தை எல்லாம் புரிந்து கொண்டு தான் துரத்துகிறார் என்பதை புரிந்துகொண்டாள்.



"அ..த்...தை " என்றாள் கெஞ்சலாய்.



"என்ன அத்தை? உன் புருஷனுக்கு வேண்டியதை நீ தான் பார்த்து பார்த்து செஞ்சி குடுக்கனும். இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன். முதல்ல உன் ரூமுக்கு போ. வந்தா ரெண்டு பேரும் ஒன்னா தான் வரணும் புரிஞ்சிதா?" என்றார் அவளுக்கு கேட்கும் குரலில் பொய் கோபத்தோடு.



"சரி" என்றவள் அவரை நெருங்கி, "ஆனாலும் உன் புள்ளைக்கு ரொம்ப தான் சப்போர்ட் பண்ற நீ. கஸ்தூரி இது சரி இல்ல" என்றாள் மெதுவாய்.



"பின்ன... எவ்ளோ நாள் தான் உங்க ரெண்டு பேர் முகத்தையும் பார்த்து சண்டை போடறது? சீக்கிரமா எனக்கு ஒரு பேரனோ பேத்தியோ பார்க்கணும்னு ஆசை இருக்காதா? " என்று சிரித்தார்.



அவரை அதிர்ச்சியோடு பார்த்தவளை வெட்கம் ஆட்கொள்ள வேகமாய் தங்களின் அறை நோக்கி ஓடினாள்.



வேகமாக ஓடி வந்தாலும், கதவின் முன் தயங்கி நின்றாள்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
53:

சிறுநொடி தயங்கி நின்றாலும் மெதுவாய் கதவை திறந்து உள்ளே சென்றாள் நிலா.



அங்கே நிலாவை பார்த்தாலும் கண்டுகொள்ளாமல் முகத்தில் எந்தவித எக்ஸ்ப்றஷனும் இல்லாமல், கண்ணாடி முன் நின்றபடி தன் முழுக்கை சட்டையின் மேல் பட்டனை போட்டு கொண்டிருந்தான் வேலன்.



அவனுக்கும் கண்ணாடிக்கும் நடுவே போய் நின்றவள். அவன் கையில் இருந்து டையை பிடுங்கி அவனுக்கு போட்டு கொண்டிருந்தாள்.



"கோபமா" என்றாள் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு.



அவளை ஓரகண்ணால் பார்த்தவன் எதுவும் சொல்லாமல் இருக்க.



"சாரி" என்றாள் இரு காதுகளையும் கைகளால் பிடித்து கொண்டு .



உள்ளுக்குள் சிரித்துகொண்டாலும் 'ஹ்ம்ம் இவ்ளோ ஈசியா சமாதானம் ஆகிடாதடா. அப்புறம் இவளை பிடிக்கிறது கஷ்டமாகிடும்.' என்று நினைத்தவன்,



"இங்க பாரு உனக்கும் எனக்கும் செட் ஆகாது. உனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும் என்னை கவனிக்க்றதை தவிர, வெளிய உங்க அத்தை அப்புறம் வந்துருக்கிற விருந்தாளிங்களை கவனிக்கவே நேரம் பத்தாது. அதனால நீ போய் உன் வேலையை பாரு. நான் போய் என் வேலையை பார்க்கிறேன்." என்று நகர்ந்தான்.



'மனசு முழுக்க ஆசைய வச்சிக்கிட்டு என்ன பொல்லாப்பு பாரு. நான் மட்டும் சளைச்சவாளா என்ன? இரு உன் வழிக்கே வரேன்' என்று மனதுக்குள் சிரித்தவள்.



"ஐயையோ என்ன மாமா இப்படி சொல்லிட்டிங்க? அத்தை சொன்னதை சொல்ல எவ்ளோ ஆசையா வந்தேன்" என்று முகத்தை வேறுபுறம் திருப்பி கொண்டாள்.



"அம்மாவா? என்ன சொன்னாங்க அம்மா?" என்றான் விழிகளில் ஆர்வம் மின்னிட.



"ஹ்ம்ம் நீங்க தான் செட் ஆகாதுன்னு சொல்லிட்டிங்களே அப்புறம் எதுக்கு நான் வேற சொல்லிக்கிட்டு." என்றாள் நிலா.



"அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன். அம்மா என்ன சொன்னாங்க அதை முதல்ல சொல்லு என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற?" என்றான் அவளை எச்சரிக்கும் விதமாக.



"சொல்றேன். அதுக்கு போய் இப்போ எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுறிங்க?" என்றாள், மேலும், "அத்தைக்கு நம்ம ரெண்டு பேர்கூடயும் சண்டை போட்டு ரொம்ப போர் அடிக்குதாம்" என்று நிறுத்தினாள்.



"அதுக்கு புதுசா வெளிலர்ந்து யாரையாவது கூட்டிட்டு வரலாமா?" என்றான் அலுப்பாய்.



"வெளிலர்ந்து இல்ல நாமளே புதுசா ஒருத்தங்களை கொடுக்கணுமாம்" என்றாள் வெட்கத்துடன்.



"உங்கத்தைக்கும் வேற வேலை இல்ல... உனக்கும்.. " என்று நிறுத்தியவன் மூளையில் ஏதோ பொறி தட்ட விழிகள் விரித்து தலையசைத்து கேட்க, 'ஆம்' என்று அவளும் கண்ணசைவில் சைகை காட்டி முகம் மூடினாள்.



அலேக்காக அவளை தூக்கி சுற்றியவன், "எங்கம்மாக்கு கூட என்னை புரியுது. ஆனா, நீ இருக்கியே?" என்று அவளின் நெற்றியில் தன் நெற்றி மோத.



"உங்க அம்மாவாச்சே. என்ன தான் என் பக்கம் பேசினாலும் சப்போர்ட் என்னைக்கும் அவங்க புள்ளைக்கு தான்" என்று சிரித்தாள்.



வெகுநேரம் கழித்து இருவரும் ஒன்றாக வேறு உடையில் வெளியே வர, ஹாலில் எல்லோரும் அமர்ந்து உணவருந்தி கொண்டிருந்தனர்.



எல்லோரும் ஸ்நேகமாய் பார்த்து சிரிக்க வேலனும் அவர்களுடன் அமர்ந்து சிரித்தபடி சாப்பிட ஆரம்பித்தான்.



இருவிழிகள் மட்டும் நிலாவை குறும்பாய் பார்க்க, பொய்யாய் முறைத்தாள் நிலா.



"என்ன நிலா? உன் புருசன் சமாதானம் ஆகிட்டான் போல சீக்கிரமே எனக்கு வேணும்ங்கறதை கொடுத்திடுங்க" என்று நிலாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் சீண்டினார் கஸ்தூரி.



"கஸ்தூரி வாய மூட்றியா? உன்னால தான் இவ்ளோவும் முதல்ல மீட்டிங்க்னு சொல்லி ஒரு வாரம் உன் பையன் இருக்க இடத்துக்கு ப்ளான் போட்டு அனுப்புன தானே உன்னை பத்தி எனக்கு தெரியாதா?" என்று நிலாவும் அடிக்குரலில் மென்று விழுங்கினாள்.



"அம்மா! வர்மா, அர்ஜுனோட கல்யாணத்துக்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் பண்ண வேண்டியிருக்கு" என்றான் வேலன் ஓரக்கண்ணால் நிலாவை பார்த்தபடி.



"பாதி முடிஞ்சிடுச்சுடா. கார்ட் இன்னைக்கு சாயந்தரம் வந்துடும். நம்ம மண்டபம் ஓகே பண்ணியாச்சு. மத்த எல்லாம் ஓரளவு நிலா முடிச்சிட்டா" என்றார்.



"அதுக்குள்ளவா?" என்றான் வேலன்.



"அவ எல்லாத்தையும் போன்லையே முடிச்சிட்டா, பின்ன இன்னும் பத்து நாள் தான இருக்கு?" என்றார் கஸ்தூரி.



வர்மாவுக்கு தான் முள்மேல் இருப்பது போல் இருந்தது. இன்னும் அவன் காதலித்த பெண்ணிடம் இதை பற்றி எதுவும் கூறவில்லை எப்படி அவளை எதிர்கொள்வது என்று தெரியாமல் தவித்தான்.



அவனின் நிலை புரிந்து வேலனும் நிலாவும் புன்னகைத்து, "வர்மா!! நீயும் பொண்ணை ஒரு தடவை பார்க்கணும் இல்லையா? அதனால இன்னைக்கு சாயந்தரம் நாலு மணிக்கு செம்மொழி பார்க் வர சொல்லிருக்கேன். சோ, நீயும் போயிட்டு பார்த்து பேசிட்டு வா" என்றாள் நிலா.



"சரிக்கா" என்றவன் அர்ஜுனை வெளியே வருமாறு சைகை செய்துபின் வெளியேறினான்.



அர்ஜுனும் அவன் பின்னே சென்றான்.



"டேய் நான் என்ன உன் கேர்ள் பிரெண்டா? சைகை காட்டி கூபிட்ற?" என்றான் நக்கலாய்.



"யோவ் மாமா! நானே என்ன செய்றதுன்னே புரியாம நிக்குறேன். நீ வேற? அக்காக்கு நான் லவ் பண்ற விஷயம் தெரியாம ஏதோ ஒரு பொண்ணை பார்த்து பேசிமுடிச்சிட்டாங்க. நான் என்ன பண்றதுன்னு தெரியலை. அக்கா எனக்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் கிடைச்சிருக்காங்க. அவங்களே எனக்காக ஆசை ஆசையா எல்லாம் செய்றாங்க." என்று குழப்பத்துடன் வருத்தமாய் கூறினான்.



"அப்போ அந்த பொண்ணை பத்தி உங்கக்காகிட்ட நான் சொல்லிடவா?" என்றான்.



"அப்டியே உன் கழுத்தை நெருச்சி" என்று அவன் இரு கைகளையும் அர்ஜுனின் கழுத்துக்கு அருகே கொண்டு செல்ல, அவன் பின் வாங்கினான்.



"டேய் நான் உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு பார்த்தேன் அதுக்கு போய் என்னை கொல்ல வர்ற?"என்றான் அர்ஜுன்.



"யோவ் அதுக்கு தான் அக்கா கோபப்படாத மாதிரி சொல்லணும். ஆனா, அதுக்குள்ள இங்க எல்லாமே தலையமீறி வெள்ளம் போய்டிச்சி. இனி ஒன்னும் செய்யமுடியாது" என்றவன் சோகமாய் அமர்ந்து கொண்டான்.



"அப்போ என்ன பண்ண போற?" என்று அவன் அருகில் வந்து அமர்ந்தான் அர்ஜுன்.



"என்ன பண்ணனும்றதை நான் முடிவு பண்ணிக்கிறேன். நீ கிளம்புறியா காத்து வரட்டும்" என்றான் அவனை முறைத்து.



"டேய்.. நான் பாட்டுக்கு சும்மா தானே உள்ள இருந்தேன். நீ தானே வரச்சொன்ன? இப்போ போகச்சொல்ற?" என்றான் பாவமாய்.



"யோவ் மாமா! நீயும் தான் மாப்பிள்ளை போ... போய் உன் வருங்கால பொண்டாட்டிகிட்ட அரட்டை அடி.. அதை விட்டு இங்க வந்து என் வாயை புடுங்காதே" என்று துரத்தினான்.



"வரவர உன் போக்கே சரி இல்லடா. பார்த்துகிறேன் உன்னை" என்ற அர்ஜுன் வர்மாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.



அன்று முழுவதும் வீட்டு பெண்கள் புடவை எடுப்பதில் ஆரம்பித்து கல்யாணத்துக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கினார்கள்.



"இங்க சும்மா தானே நின்னு என்னை சைட் அடிச்சிட்டு இருக்கீங்க? அங்க போய் மாப்பிள்ளைங்களுக்கு தேவையான ட்ரஸ்சை எடுக்கலாம்ல?" என்றாள் மெதுவாய் நிலா வேலனிடம்.



"ஏய்.. என்ன வேலை இல்லாதவன்னு நினைச்சிட்டியா? எல்லா வேலையும் விட்டுட்டு வந்துருக்கேன்னா உன்னை சைட் அடிக்க மட்டும் தான். கண்ட தடிமாடுங்களுக்கெல்லாம் என்னால ஹெல்ப் பண்ணமுடியாது. உனக்கு எதாவது ஹெல்ப் பண்ணனுமா சொல்லு?" என்று கண்ணடித்தான்.



தன் புடவை முந்தானையை எடுத்து கொடுத்தவள், "துடைச்சிக்கோங்க. வழியுது" என்றாள் விழிகளால் சிரித்து.



"சொல்லுவடி சொல்லுவ. நான் ஆபிஸ்கே போறேன். அங்கயாவது நிஷா இருப்பா." என்று அவளை முறைத்தான். பின் அவள் அவனை முறைப்பதை கண்டு தன் கன்னத்தில் கைவைத்து நேற்று நடந்ததை ஞாபகப்படுத்த. "ஹீ... ஹீ.. சும்மா சொன்னேன். நீ என் பொண்டாட்டி... மெழுகு சிலையாட்டம் இருக்கும் போது எனக்கு எதுக்கு கண்ட கழுதை எல்லாம்?" என்றான் மெதுவாய்.



மணி நாலை கடந்திருக்க அங்கே இதயம் வேகமாய் துடிக்க ரெஸ்ட்லசாய் அமர்ந்திருந்தான் வர்மதேவன்.



கூட்டத்தில் விழிகள் அக்கா சொன்ன பச்சை நிற புடவை அணிந்த பெண்ணை தேட, "இன்னைக்கு எவ்ளோ காலம் மாறிருக்கு எதுக்கு இந்த அக்கா அந்த பொண்ணோட போன் நம்பர் கூட கொடுக்காம புடவை நிறத்தை சொன்னாங்க?' என்று தனக்குள் கேட்டுக்கொண்டு விழிகளை அலைபாய விட்டிருந்தான்.



அங்கே அவன் கண்டது, அவனால் நம்ப முடியவில்லை.



அவன் மனதை கவர்ந்தவளே அந்த நிறப்புடவையில் வர, இருகைகளால் விழிகளை துடைத்து மீண்டும் பார்த்தான். தான் காண்பது கனவல்ல நிஜம் என்பதை அறிந்து அவனின் விழிகளில் தன் தமக்கையை எண்ணி ஒரு நொடி நீர் தெரித்தது.



"அக்கா யு ஆர் கிரேட். நான் சொல்லாமயே எனக்கு பிடிச்ச பெண்ணை எனக்கு தேர்ந்தெடுத்திருக்கிங்க." என்று ஆனந்த கண்ணீரோடு சிரித்தான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
54:

தான் காதலித்த பெண்ணையே தனக்கு மனம் முடிக்க நிலா முடிவு செய்திருப்பதை உணர்ந்த வர்மாவின் ஆனந்தத்திற்க்கு எல்லையே இல்லை.



இருவரும் வீட்டிற்கு வந்தவுடன் நிலாவை ஓடி சென்று கண்ணீரோடு கட்டிக்கொண்டான்.



"அக்கா! ரொம்ப தேங்க்ஸ். எனக்காக இப்படி ஒரு முடிவெடுப்பிங்கன்னு நான் நினைக்கவே இல்லை." என்றான் வர்மதேவன்.



"என்ன சொல்ற வர்மா நீ? நான் உங்க மாமாவை எனக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து காதலிச்சு எவ்ளோ போராட்டதுக்கு அப்புறம் கல்யாணம் பண்ணியிருக்கேன்னு உனக்கு தெரியும்ல? அப்படி இருக்கும் போது என் தம்பியை நான் எப்படி கஷ்டப்பட வைப்பேன்." என்று அவனின் தலையை கோதிவிட்டாள்.



அன்றில் இருந்து கல்யாண வேலைகளெல்லாம் எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது.



வர்மா காதலித்த பெண்ணிற்கு உறவினர் யாரும இல்லாமல் ஆசரமத்தில் வளர்ந்ததால் அர்ஜுனின் தங்கையாக அவனின் வீட்டில் தங்க வைக்க பட்டாள்.



தீக்க்ஷிலாவை தன்னுடன் தங்க வைத்துகொண்டாள் நிலா.



அவர்கள் கனவு கண்ட நாளும் வந்தது.

இதோ இன்று மணமக்கள் நால்வரும் மனம் முழுவதும் காதலுடன் தங்களின் துணையை கைபிடிக்க போகும் தருணத்திற்காக மணமேடையில் அமர்ந்திருந்தனர்.



வேலனும் நிலாவும் ஆளுக்கொரு பக்கம் மிகவும் பரபரப்பாக எல்லா ஏற்பாடுகளையும் மேற் பார்வையிட்டு, வரும் விருந்தினர்களையும் கவனித்து கொண்டிருந்தனர். ஆனாலும் இருவரின் விழிகளும் ஒன்றை ஒன்று உரசி கொண்டுதானிருந்தன.



மணமகளின் அறைக்குள் ஏதோ எடுக்க நுழைந்த நிலாவை தொடர்ந்து வேலனும் நுழைந்து தாழிட்டான்.



"இப்போ எதுக்கு கதவை சாத்திறிங்க? கதவை திறங்க மாமா." என்றாள் நிலா.



"முடியாது பொண்டாட்டி" என்று மேலிருந்து கீழ்வரை அவளை ஒரு முறை பார்த்தவன், "உனக்கென்ன நீ பாட்டுக்கு கல்யாண பெண்களை விட அசத்தலா ரெடியாகி வந்துட்ட? உன்ன இந்த டிரஸ்ல பார்த்த நொடிலர்ந்து நான் தான தவிக்கிறேன்" என்று அவளை நெருங்கினான்.



"ஒழுங்கா தள்ளி போங்க. வெளிய ஐயர் இதை கொண்டு வர சொன்னார் என்று கையில் வைத்திருந்த தாம்புல தட்டை காட்டினாள்.



"கேட்டா கேட்டுட்டு போகட்டும் அவருகெங்க என்னோட நிலைமை புரியப்போகுது. காலைல எழுந்ததுலர்ந்து பையனோட அக்கா தான் எல்லாம் செய்யனும்னு சொல்லி என்னை உன் பக்கத்துலயே வரவிடலை. இப்போ தான் அதுக்கான சரியான் நேரம். சீக்கிரமா வெளிய போகணும்னா? ஒழுங்கா நல்ல பொண்டாட்டியா எனக்கு ஒரு முத்தம் கொடுத்துட்டு போ." என்று அவளின் வழியை மறைத்தான்.



"இல்ல வீட்ல வந்து தரேன். ப்ளீஸ் இப்போ வழியை விடுங்க" என்று கெஞ்சினாள்.



"ஹுஹும்ம் முடியாது" என்றான் சற்றும் மனமிரங்காமல்.



""ஹும்" என்று சிறுகுழந்தை போல் காலை எட்டி உதைத்தாள்.



"சரி. கண்ணை மூடுங்க." என்றாள் நிலா.



"அதுவும் முடியாது. கண்டிப்பா நீ அப்புறம் ஓடி போய்டுவ" என்றான் சிறுகுழந்தை போல்.



"சரி" என்று மெதுவாய் நெருங்கி அவனின் இதழுக்கு நேராக சென்றவள் ஒரு நொடி தாமதித்து பின் இதழில் அவனுக்கான பரிசை தந்தாள்.



ஒரு வழியாய் வெளியே வந்த இருவரையும் எல்லோரும் பார்க்க, வேகமாக அங்கிருந்து நழுவினான் வேலன்.



"கெட்டிமேளம்... கெட்டிமேளம்..." என்று குரல் கேட்க இரு மணமகன்களும் தங்களின் மனைவிக்கு தாலி கட்டினர்.



இதோ இவர்களின் பயணம் இனிதே தொடங்கட்டும். நமது இந்த பயணத்தை முடித்து கொள்வோம்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
55:

புதுமண தம்பதிகளாக வீட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு ஆரத்தி எடுத்து நால்வரையும் வரவேற்றாள் நிலா.



எல்லா சடங்குகளையும் முடிந்து மணமக்களை அவர்களுக்கென அலங்கரித்த வைத்திருந்த அறையில் அனுப்ப அவர்களும் தங்களின் புது வாழ்வை தொடங்க பல்லாயிரம் கனவுகளுடன் சென்றனர்.



நிலா மிகவும் சோர்ந்து போய் தனதறையில் படுத்திட, அவளை கண்ட வேலனுக்கு மனம் லேசாகியது. அமைதியாக சென்று அவளின் அருகில் அமர்ந்தவன் அவளை தொந்தரவு செய்யாமல் கையில் வைத்திருந்த பெய்ன் பாமை அவளின் காலினில் தடவி மசாஜ் செய்ய ஆரம்பித்தான்.



நல்ல உறக்கத்தில் இருந்த நிலாவிற்கு தன் காலினில் ஏதோ இதமாக இருப்பது போல் உணர்ந்து கண் திறந்தாள்.



அங்கே வேலன் அவளின் காலினை பிடித்து விடுவதை பார்த்தவள் பதறி எழுந்து அமர்ந்தாள்.



"ஐய்யய்யோ மாமா! என்ன பண்றிங்க? ப்ளீஸ் நீங்க போய் என் காலை பிடிச்சிகிட்டு விடுங்க" என்று அவன் கையினை எடுத்துவிட முயற்சி செய்தாள்.



ஆனால் அவனின் பிடியோ மிகவும் வலிமையாக இருக்க, விழிகளோ மிகவும் இதமாக அவளை காதலுடன் நோக்கின.



"நிலா! நீ என்னோட பாதி எனக்குள்ள இருக்கிறவ. நான் சொல்றது உனக்கு புரியுதா? உன்னுடைட ஒவ்வொரு பொருட்கள் மட்டுமில்லை உன்னுடைய உடலில் இருந்து உயிர் வரை எனக்கு மட்டும் தான் சொந்தம். இன்னைக்கு முழுக்க கல்யாண பிசில நீ அலைஞ்சிட்டு இருந்ததை நான் தான் பார்த்தனே. ஒரு நிமிஷம் கூட நிக்காம பம்பரம் மாதிரி சுத்திட்டு இருந்த. நிச்சயமா உனக்கு ரொம்ப அசதியா இருக்கும் உன்கூட சந்தோஷத்தை மட்டும் பகிர்ந்துக்க இல்ல நான். உனக்கு தேவையான நேரத்துல எல்லா பணிவிடைகளையும் செயறதுன்னால எனக்கு ஒன்னும் கெட்டு போக போறதில்ல. உன்னோட சுகதுக்கத்துல எனக்கும் உரிமை இருக்கு. அதை நிறைவேத்துற கடமையும் இருக்கு. அதைவிட உன்மேல அளவுகடந்த காதலும் இருக்கு. நான் உன்னை ரொம்ப விரும்பறேன். என் வாழ்நாளின் கடைசிநொடி வரை இப்படியே உன்னை காதல் செய்யனும். என் உயிரும் உன் மடிலயே போகணும்னு விரும்புறேன்" என்று முடிக்கும் உன் அவனின் இதழை சிறைபிடித்தவள் நிலா.



"என் உதிரம் முழுவதும் உனக்கே சொந்தம்னு நினைக்கும் போது எல்லா பொண்ணுங்க மாதிரி நான் பூவோடயும் பொட்டோடடையும் சாகனும்னு ஆசை இல்ல மாமா. ஒன்னு நான் இறக்கும் போது உன்னையும் என்கூட கூட்டிட்டு போய்டுவேன். இல்லையா நீ இறந்தப்புறம் தான் நானும் சாவேன். என்னடா இவ இப்படி சொல்றா? உயிர் வாழ இவ்ளோ ஆசையான்னு நினைக்காதிங்க. நிச்சயமா இல்லை." என்றாள் ஒரு துளி கண்ணீரோடு.



"அட முட்டாள் பொண்டாட்டி. நான் உன்னை பத்தி நல்லா புரிஞ்சிகிட்டவன். நீ இல்லாம என்னால இருக்க முடியாது. என்னோட தேவைகள் ஒன்னுநொத்துதையும் பார்த்து செய்யற. என்னை உனக்கு பிறகு யாரு பார்த்துப்பாங்கன்னு உனக்கு கவலை. அதனால நீ அப்டி சொல்றன்னு எனக்கு தெரியாதா?" என்று அவளின் நெற்றியில் ஒரு முத்தமிட்டு தலை கோத அதில் கிறங்கி அவனின் நெஞ்சினில் சாய்ந்த அவளை உறக்கத்திற்கு மெதுவாய் அழைத்து சென்றான் அவளின் காதல் கணவன்.



இங்கே,



அர்ஜுன், வர்மாமுவும் அவரவர்களின் துணையோடு தங்களின் வாழ்க்கையை தொடங்க அவர்களின் இல்லற வாழ்வு இனிமையாய் இருந்தது.



ஒரு மாத காலம் சென்றிட, நிலா இரு தம்பதிகளுக்கும் தேனிலவு சென்றிட ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தாள்.



வேலன் வெளிநாட்டில் உள்ள தன் கம்பனிகளை மேற்பார்வையிட்டு வர ஒரு வாரகாலம் சென்றிருந்தான்.



அவன் இல்லாமல் அவளுக்கு ஒரு வேலையும் ஓடாமல் சோம்பேறித்தனமாக உறங்காமல் படுத்திருந்தாள்.



அவளுடைய மொபைல் அடிக்க எடுத்து சுரத்தே இல்லாமல், "ஹலோ!" என்றாள் நிலா.



"என்னடி பொண்டாட்டி எனனை ரொம்ப மிஸ் பண்ற போல இருக்கு?" என்றான் வேலன்.



"ஹ்ம்ம்... மிஸ் யு விழியா?" என்றாள் செல்லமாய் புன்னகைத்து.



"மிஸ் யு டூ டியர். அதனால தான் உன்னையும் என்கூட வரசொல்லி கூப்பிட்டேன். நீ தான் வேலை இருக்குனு வரமாட்டேன்னுட்ட?" என்றான் குற்றம் சாட்டும் வகையில்.



"ஹ்ம்ம் இட்ஸ் ஓகே. அதான் நாளைக்கு வர போறிங்கல்ல? நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு உங்களுக்கு" என்றாள் நிலா.



"ஹ்ம்ம் என்ன சர்ப்ரைஸ் அது?" என்றான் ஆர்வமாய்.



"சொல்லமாட்டேன்." என்றாள் நிலா.



"லெட் மீ கெஸ்" என்றவன் ஒரு சில நொடிகளுக்கு பின், "நாளைக்கு நாம சந்திச்ச முதல் நாள்" என்றான் சிரித்தபடி.



"ஐயோ கரெக்ட் மாமா" என்றவள்.



"அதுக்காகத்தான் ஒரு சர்ப்ரைஸ் ஏற்பாடு பண்ணிருக்கேன்" என்றாள் விடாமல்.



"ஓகே! அப்போ இப்பயே கிளம்பிடறேன்" என்றான் வேலன்.



"ஓகே. பட் நைட் பன்னெண்டு மணிக்கு தான் நான் சர்ப்ரைசை சொல்லுவேன்" என்றாள் நிலா.



"ஓகே! எனக்கு டைம் ஆச்சு கோயிங் டு எ மீட்" என்றான் வேலன்.



"ஓகே பை" என்றவள் மீண்டும் உறக்கத்திற்கு சென்றாள்.



மணி பன்னிரெண்டை கடந்தவுடன் காலிங் பெல் அடிக்க, 'இந்த நேரம் யாரு?' என்று யோசித்தபடி கதவை திறந்தவள் ஆச்சர்யத்தில் நின்றாள்.



அங்கே கை நிறைய மலர்களுடன் அவள் முன் மண்டியிட்டு நின்றிருந்தான் வேலன்.



"மாமா! நீங்க எப்படி இவ்ளோ சீக்கிரம்?" என்றாள் ஆச்சரியமாய்.



"என்ன டி மக்கு பொண்டாட்டி? பிளேன் என்னோடது." என்று சிரிக்க.



"சரி சரி உள்ள வா" என்றாள்.



ஆவலுடன் தங்களின் அறைக்குள் நுழைந்தவன்.



"சீக்கிரம் எனக்கு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னியே எங்க அது?" என்றான் விழிகளில் ஆர்வம் மின்னிட.



"ஹ்ம்ம் ஆர்வம் தாங்கலையோ?" என்றவள் அவனின் விழிகளை கரங்களால் மூடியபடி வேறு ஒரு இடத்திற்கு கூட்டி சென்றாள்.



"எங்க தான் கூட்டிட்டு போற?" என்றான் வேலன்.



"ஷ் மெதுவா எதுக்கு இப்படி கத்தற? தூங்குற எல்லோரும் எழுந்துக்க போறாங்க" என்றவள் ஒரு அறையினுள் கூட்டி சென்று, "மாமா! இந்த பரிசை பார்த்தப்புறம் நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு பார்க்க தான் இவ்ளோ ஆசையா கத்துகிட்டு இருந்தேன்." என்று விழிகளை திறந்திட்டாள்.



தன் விழிகளை அறை முழுவதும் சுழலவிட்டவன்.



"அட என்ன நிலா இங்க ஒரே குழந்தைங்க பொருளா இருக்கு?" என்று கேட்டபடி திரும்பியவனின் விழிகள் அவளை ஒரு நொடி பார்த்து, "நிலா..." என்று கேள்வியை துளைக்க.



"ஆமா" என்றாள் மெதுவாய் வாய் திறந்து.



சந்தோஷத்தில் அவளை தூக்கி சுற்றியவன். "நிலா என்னோட சந்தோஷத்தை என்னால இப்போ சொல்ல முடியலை... எனக்கு ஒரு புது அங்கிகாரத்தை கொடுத்திருக்க." என்று கண்ணீர் தளும்ப அவளை அணைத்து கொண்டான்.



"இன்னும் பத்து மாசம் ஆகுமா? எனக்கு இப்பயே கொடுத்திருடி ப்ளீஸ்" என்றான் வேலன் கெஞ்சலாய்.



"எனக்கு மட்டும் ஆசை இல்லையா?" என்று அவனின் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டாள்.



"ஹ்ம்ம் அதுவரைக்கும் என் உயிர் இருக்க உன் மேடிட்ட வயிற்றுடுடன் பேசி கொள்கிறேன்" என்று அவளின் மேடிடாத வயிறை தடவியபடி கூறினான்.



இதோ இவர்களின் புது உறவும் வர தயாராகிவிட்டது.



இந்த மூன்று ஜோடிகளின் வாழ்வும் இன்பமாய் முடிந்தது.



நாமும் விடை பெறுவோம்.



நன்றி.
 
Top Bottom