குற்றப்பரிகாரம் – 13
1190
0
அத்தியாயம் – 13
நிமிடத்திற்கு பத்து பதினைந்து வண்டிகள் இருபக்கமும் கடந்து சென்றுகொண்டிருக்கும் அந்த தேசிய நெடுஞ்சாலையின் உள்ளடக்கமாய் உள்ள மருத்துவமனை மட்டும் நிசப்தமாய் இருந்தது.
அருணை நோக்கி வந்த டாக்டர் சொன்னார்.,
“ஐ ஆம் சாரி….. யுவர் நேம்!”
“அருண்.. டாக்டர்”
“சாரி அருண். நோ சான்ஸ். முழுசா வெந்துவிட்டது. முடிந்த வரையில் தோள்பட்டையின் கீழ் இடம் கொடுத்துவிட்டு கையை எடுத்துவிட்டோம்”
“இ…. இட்ஸ் ஓகே டாக்டர். நான் எதிர் பார்த்தது தான். கிராமத்துல இருக்கிற பேரண்ட்ஸ்க்கு தகவல் கொடுத்தாச்சு டாக்டர். தே ஆர் ஆன் தி வே… சுடலையோட சிஸ்டர் இங்க இருக்காங்க… நாங்க போய் அவரை பார்க்கலாமா டாக்டர்”
“ஷ்யூர்… யாராவது ரெண்டு மூணு பேர் மட்டும் போங்க… கும்பல் வேண்டாம்.. ரொம்ப நேரம் எடுத்துக்காதீங்க”
சுடலையின் தங்கை வசந்தி, அருண், கார் ஓட்டி வந்தவள் மூவரும் சென்று பார்த்தனர். வந்த இரு பெண்களும் உடைந்து அழுத அழுகை நெஞ்சை பிசைந்தது.
கிட்டத்தட்ட நாலு மணி நேரம். எல்லாம் முடிந்தது. அதுவும் சுடலையின் தாய் வராண்டா தொடக்கத்திலேய தலையில் அடித்தபடி ஓடி வந்ததை பார்த்த அருணுக்கு அவனின் அம்மா நினைவுக்கு வந்தாள். அவனை அறியாமல் கண்ணீர் துளிர்த்தது… இதுபோல கத்திகொண்டே வருவதுபோன்ற காட்சியை, சினிமாவில் பார்க்கும்போதெல்லாம் ‘இதெல்லாம் ரொம்ப ஓவர்’ என நினைப்பான். இப்போதுதான் அதன் வலி புரிந்தது.
“ரொம்ப தேங்கஸ்னா”
வசந்தியின் குரல் அருணை நிமிர்த்தியது
“சே சே என்னம்மா நீ… தேங்ஸ்லாம் சொல்லிக்கிட்டு… நான் இருந்திருந்தால் ஒரு வேளை தடுத்திருக்கலாம்.
மத்தவங்க மாதிரி நா பயந்து ஓடியிருக்க மாட்டேன்… என்ன செய்ய அந்த நேரம் பார்த்து பிரின்ஸி கூப்ட்டாரு”
“எல்லாம் விதிண்ணா”
“விதியா? எனக் கூறி விரக்தியாய் சிரித்தான்
அது விதி இல்லம்மா காலங்காலமா இருந்து வர்ற சதி… அத விடும்மா… சுடலை உடைஞ்சுறாம நீங்கதான் பாத்துக்கனும். அவன் உடைய மாட்டான். நெஞ்சுரம் ஜாஸ்தி. இன்னொன்னும்மா….
என அருண் சொல்லத் தயங்கினான்”
“சும்மா சொல்லுங்கண்ணா, தயங்காதீங்க… அந்த மிருகத்த பத்தியா?”
“ஆ…ஆமாம்மா… இவன் கோபபட்டு எதுனா செய்யப் போறான். அட செஞ்சுட்டாலும் பரவாயில்ல… மிஸ்ஸாயிருச்சுன்னா… இதை நான் அவனுக்காக சொல்லலை”
“தெரியும்ணா! கேள்விப்பட்டேன். அந்த மிருகம் எதையும் செய்யும்”
“தயங்கியபடியே சொன்னான். அதாம்மா இதை வளர்க்க வேண்டாம். உனக்கு நான் இருக்கேன். இனிமே உனக்கு என்ன தேவையோ என்கிட்ட கேளு… சுடலை மட்டும் உனக்கு அண்ணன் இல்ல”
“சரிண்ணா… நீங்க சொல்லவே வேண்டாம். சுடலையண்ணாக்கு தம்பி இருந்தா என்ன பண்ணுவாரோ அதைத் தான் நீங்க பண்ணிருக்கீங்க”
சொல்ல சொல்லவே அவள் தாய் கத்தியபடியே அருணை நோக்கி வந்தாள்…
“ராசா… சொடலயனுக்கு உயிர் கொடுத்த ராசா… நீ நல்லா இருக்கனும். நூறு வருசம் நீ வாளோனும் ராசா. ஆனா… பெத்த வவுறு பத்தி எரிய சொல்றேன்! எம்மவன இந்த கதிக்கு ஆளாக்கினவன் ரொம்ப நாள் உயிரா நடமாட மாட்டான். அவஞ்சாவு சீக்கிரம். இது எங்குலதெய்வம் சொடலையாண்டி மேல சத்தியம்”
“ஷ்… சும்மாரு ஆத்தா இது ஆஸ்பத்திரி… கத்தாத கத்தாதனு எத்தினிவாட்டி ஒனக்கு சொல்றது…. மனம் இருந்த வேதனை நிலையிலும், வசந்தி அம்மாவை அடக்கியபடி சொன்னாள்….
“பாவம்ணா அம்மா…. குலதெய்வம் பேரத்தான் அண்ணனுக்கு வச்சுச்சு”
அவள் அப்பாவும் விம்மியபடி அருணின் கைகளைப் பிடித்துக் கொண்டார்
“தம்பி! நன்றினு ஒரு வார்த்த சொல்லிப்புட்டா மட்டும் போதாதுய்யா. எம்மவன காப்பாத்திக் கொடுத்த தெய்வம்யா நீயி… நல்லாருக்கனும்.
உங்காலத் தொட்டு கும்புடனுஞ்சாமி”
“அப்படிலாம் சொல்லாதீங்கப்பா…. நானும் உங்களுக்கு ஒரு மகன்தான். சுடலை கையை காப்பாத்த முடியலையேனுதான் வேதனை”
“இல்லண்ணா டாக்டர் சொன்னாராம். இன்னும் நாலஞ்சு நிமிஷம் லேட்டா கொண்டு வந்துருந்தா உசுரே போய்ருக்குமாம்”
அப்போதுதான் அருணுக்கு கார் கொண்டு வந்தவள் நினைவே வந்தது!
“இல்லம்மா எனக்கு சொல்ற நன்றியை விட சரியான சமையத்துல கார கொண்டு வந்து, கரெக்ட், டயத்துக்கு ஆஸ்பத்ரிக்கு கூட்டிட்டு வர உதவியா இருந்தாங்களே அவங்களுக்கு சொல்லுங்க”
“அவ என் பிரண்டுதாண்ணா. என் கிளாஸ் மேட்” எனக் கூறியபடியே கொஞ்சம் தள்ளி இருந்த வராண்டாவைப் பார்த்து வசந்தி குரல் கொடுத்தாள் “ப்ரியா…
ப்ரியா., இங்க வாயேன்”
ப்ரியா… அருண் தனக்குள் சொல்லிக்கொண்டான்.
வந்து நின்றவளை நிதானமாக பார்த்தான்.
Comments are closed here.