Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 25

அத்தியாயம் – 25

நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்த இம்போர்டட் காரில் அவர்கள் இருந்தனர்.

 

“ஜலால், அந்தோ தெரியுது பார், பெரிய வினைல் போர்ட்… அதை ஒட்டி கட் ஆகுற சந்துல திரும்பு” என்றான் கல்கு

 

“அப்பா பிரண்ட் கெஸ்ட் ஹவுஸ், உங்களுக்கு எப்படி தெரியும்”

 

“ஹஹ உங்கப்பாவும் நானும் அடிக்காத கூத்துல்ல. அவ்ளோதான் உன்கிட்ட சொல்ல முடியும். நீ வண்டிய ஓட்டு”

 

“அப்பாவ ஏன் வரவேண்டாம்னுட்டீங்க”

 

“நாம என்ன பொது சேவைக்கா போறோம். நம்மாளு ஒருத்தர் சென்னைல இருக்கறது நல்லது”

 

“அப்போ, எங்காளு ஒருத்தனோட நான் போய், அவன் தம்பிய இங்க கூட்டிட்டு வரணும்”

 

“ஆமா சொன்னதெல்லாம் ஞாபகமிருக்குல்ல”

 

“ம்… நல்லா ஞாபகம் இருக்கு. அருணோட ஸ்காலர்ஷிப் பார்ம் காட்டனும். சும்மா லேப்டாப்லருந்து காலேஜ் போட்டோவை, அவங்க கண்ல படற மாதிரி காட்டனும். நம்பிக்கை வர்ரதுக்காக ரெண்டு மூணு பார்ம்ல கையெழுத்து வாங்கிட்டு, பேங்க் வரை கூடவே வந்து செக் வாங்கிட்டு போகச் சொல்லி, சொல்லனும். கரெக்டா! எதையும் மிஸ் பண்ணலையே!”

 

” கரெக்ட். எங்கையும் தவறாது. எதுக்கும் கையில  இந்த கர்சீப் வச்சுக்க. நீ மோந்து பாத்துறாத. அதுல மயக்கமருந்து தடவியிருக்கு”

 

அவர்களை விட்டுவிட்டு அருண் வீட்டிற்கு வந்து கதவை தட்டியவன், கதவு திறந்ததும், அசந்தே விட்டான். அப்சரஸ் மாதிரி ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். நல்ல கிராமத்து அழகு.

 

“யார் வேணும்”

 

“அருண் சார் வீடு…

 

” ஓ… அண்ணனைத் தேடி வந்துருக்கீங்களா! அண்ணன் காலேஜ்ல இருக்கே”

 

” தெரியும்! நாங்க அங்க இருந்துதான் வரோம். வீட்ல, அவர் பிரதர் இருப்பார்னு சொன்னாரே”

 

“இல்ல…. அவரு விழுப்புரத்துக்கு ஒரு கல்யாணத்துக்கு போய்ருக்காரு… என சொல்லிக் கொண்டிருக்கும்போதே

 

” யாரு சரசு” என்று கேட்டபடி அருணின் அம்மா வந்தார்.

 

“நான் காலேஜ்ல இருந்து வரேங்க. இவரு பேங் ஸ்டாப். அருண் ஸ்காலர்ஷிப்க்கு அப்ளை பண்ணியிருந்தாரே….

 

” என்னம்மா சொல்றாங்க… இவங்க”

 

“அவங்களுக்கு இங்கிலீஷ் தெரியாது. நான் எய்ட்த், கொஞ்சம் புரியும். நீங்க உள்ளார  வாங்க!”

 

ஷூவை கழட்டப் போனவர்களை, ” பரவால்ல வாங்க” என்ன ஒரு மனசு.

 

“சொல்லுங்க”

 

“நீங்க யாருங்க”

 

“நான் அருண் அண்ணாவோட சித்தப்பா பொண்ணு. பெரியம்மாக்கு மேலுக்கு முடியலன்னாங்க! ரெண்டு நாள் ஒத்தாசைக்காக வந்துருக்கேன்”

 

டேய் ஜலால் நீ அதிர்ஷ்ட்டக்காரண்டா!

புலிய தேடி வந்தா! மான் மாட்டுது!

 

“அதான் சொன்னேனே! அருண் ஸ்காலர்ஷிப், பணம் வந்துருச்சு. சில பேப்பர்ஸ்ல சைன் பண்ணனும். பண்ணிட்டு எங்க கூட வந்தீங்கன்னா, இவர்கூடையே பேங்குக்கு போய் செக்கை வாங்கி கொடுத்துருவேன்”

 

“கூட வரனுமா! இந்த நேரம் பாத்து இளையவனும் ஊருக்கு போய் தொலைஞ்சுட்டான்”

 

” நீங்க ஒன்னும் கவலைப்பட வேணாம். எங்க கூட கார்லையே வந்துட்டு, வாங்குனதும், உங்களை ட்ராப் பண்ணிடறேன். இல்லைனா இதுக்காக நான் இன்னொருதரம் வரணும்.”

 

” எவ்வளவு நேரம் ஆகும்”

 

“என்ன ஒரு ஒருமணி நேரம் ஆகும் அவ்வளவுதான். இந்தமாதிரி எதுவும் ஆகக்கூடாதுனுதான், வீட்ல ஆள் இருப்பாங்கள்லனு நூறு தரம் அருண்கிட்ட கேட்டேன்” என்ற படியே அருண் போட்டோ இருக்கும் அப்ளிகேஷன் ஜெராக்ஸை வெளியே எடுத்தான் ஜலால்.

 

“ஹை அண்ணன்” என்றபடி அதை படக்கென பிடுங்கி நெஞ்சோடு அனைத்துக் கொண்டாள் சரசு

 

“அப்போ சரசு, நீ இரு நான் மட்டும் இவுக ப்ளசர் காருல போயாந்துர்றேன்”

 

பக்கென்றது ஜலாலுக்கு ஆஹா! கைக்கெட்டியது வாய்க்கெட்டாமல் போய்விடுமோ என நினைத்தவன், டக்கென சமாளித்தான், “அதுவும் சரிதான், ஆனா அங்க ஒரு பார்ம நிரப்பனுமே! இங்கிலீஷ் தெரிஞ்சா நல்லாருக்கும்”

 

“அட வா ஆத்தா, நீதான் கூட இருக்கல்ல! போய்ட்டு வெரசா வந்துரலாம்”

 

அவ்வளவுதான் எல்லாம் ப்ளான் பிரகாரம் கனக் கச்சிதமாக நடந்தேறியது. கிராமத்து வெள்ளந்தி மனது வெகு சுலபமாக ஏமாந்தது.

 

அருணுக்கு  போன் பண்ண அந்த அம்மாள் முயன்றபோதுகூட, அவனுக்கு இன்று ப்ராக்டிகல், அப்படி இப்படி என தட்டிக் கழித்தனர்.

 

வெளிநாட்டு காரும், கோட்டும் சூட்டும், லேப்டாப்பிலிருந்த கல்லூரி போட்டோவும், அருணின் அப்ளிகேஷன் ஜெராக்ஸில் இருந்த போட்டோவுமாக விதி  விளையாடியது!

 

பாதிவழியிலேயே கல்கு கொடுத்த கர்சீப்பினால் அருண் அம்மா மயக்கமானார். வல்லூறுகளின் பலத்திற்கு முன் குருவி என்ன செய்ய முடியும். ஜலால், கல்கு, ரௌடிகள் என அந்த இளம் பூவை கசக்கினர்.

 

அப்போதும் ஜலாலின் ஆத்திரம் தீராமல், மறக்காமல் கொண்டுவந்த ஆசிட்டை அவளின் வாயைத் திறந்து வலுக்கட்டாயமாய் ஊற்றினான்.

 

தாங்கள் கொண்டுபோன இடமே தெரியாமல், தாயும் மகளும் புதரில் வீசப்பட்டனர். ஒன்று உயிரோடு மயக்கமாக! ஒன்று உயிர் வெந்த சடலமாக!

 
Comments are closed here.