Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 27

அத்தியாயம் – 27

ப்ரியாவின் நினைவுகளில் மூழ்கியபடியே

லைப்ரரி மரத்தடியிலிருந்து கல்லூரி வாசலை நோக்கி அருண் வரவும், கல்லூரியின் வாசலுக்குள்  ஜலால் நுழையவும் சரியாக இருந்தது. இவன் எப்படி வெளியே வந்தான்…

யோசனையுடன் நடந்த அருணின் அருகில் வந்த ஜலால்.,

 

“என்ன ப்ரோ அப்படிப் பாக்கற… அப்பாதான் ஜாமீன்ல எடுத்தார்”

 

அருண் சுற்றி பார்வையை விட்டான்! அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் என மாணவர்கள் கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் பார்வை இவர்களை மொய்ப்பதை கவனித்தான். ஜலாலும் இதை கவனித்தான்.

நீண்ட நாள் பழகிய நண்பன் போல, அருணின் கைகளை எடுத்து கண்களில் ஒன்றிய படியே சொன்னான்…

 

“ஏன்டா, தெருப் பொறுக்கி நாயே! என் ஷூவ தொடைக்ககூட யோக்யதை இல்லாத நீ, என்னையா உள்ள வைக்கப் பாக்ற! கிராமத்துல சாணி அள்ற பையனுக்கு சப்போர்ட் பண்ணல்ல!

ஆசிட்லையே குளுப்பாட்டிட்டேன்! அழு! நல்லா அழு! வாழ்க்கை முழுதும் நினைச்சு நினைச்சு அழு! நியூஸ் வரும் பாரு”

 

‘ஆஸிட்லையே குளுப்பாட்டிட்டேன்’ இந்த வார்த்தைகள் காதில் விழுந்த பிறகு அருணுக்கு எதுவும் ஓடவில்லை! நேரே ஆஸ்பத்திரிக்கு ஓடினான்! ஆட்டோவில் போகும் போதே ப்ரியாவிற்கு கால் பண்ணி ஆஸ்பத்ரி வருமாறு சொன்னான். சுடலையின் ரூமுக்கு சென்றவன், அங்கே வசந்தி, சுடலைக்கு மருந்து புகட்டிக் கொண்டு இருப்பதைப் பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டான். சரியாக ப்ரியாவும் அப்போது உள்ளே நுழைந்தாள். இருவரையும் பார்த்ததும்,

 

“என்ன அண்ணா, சுடலையை பார்க்க ரெண்டு பேரும் எப்பவும்  ஒன்னாத்தான்  வருவீங்களோ… சுடலையப் பாக்கத்தான் வர்றீங்களா… இல்ல… இத சாக்குவச்சு கடலையப் போட வர்றீங்களா!” என கலாட்டா செய்தவள் அருணின் முகம் இருந்த நிலையைப் பார்த்து,

 

“என்னண்ணா என்ன ஆச்சு. ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க!”

 

“ஒண்ணுமில்லம்மா… கொஞ்சம் டயர்டு அவ்ளோதான். சுடலை எப்படி இருக்கான். என்னிக்கு டிஸ்சார்ஜ்” வாய் இங்க பேசினாலும், அருணுக்கு மனசு இங்க இல்லை… ஏன் அப்படி சொன்னான்.. ஒரு வேளை வசந்தினு நெனச்சு வேற எந்த பெண்ணையாவது….  நினைக்க நினைக்கவே அருணின் செல் அடித்து, அம்மா என்றது டிஸ்ப்ளே….

 

“ஹலோ… நான் அருண் பேசறேன்., சொல்லுங்கம்மா”

 

“அயம் சாரி அருண்., நான் நம்ம ஊரு எஸ்ஐ பேசறேன்”

 

“எஸ்ஐயா… என்ன சார் என்ன விஷயம்”

 

“நேர்ல பேசிக்கலாம் நீங்க கிளம்பி வாங்க”

 

” சார்… அம்மாவுக்கு”

 

“அம்மா கொஞ்சம் மயக்கத்ல இருக்காங்க., நீங்க கிளம்பி நேர்ல வாங்க! உடனே வாங்க!”

 

“சார் என்ன ஆச்சுனு சொல்லுங்க சார். நான் வர்றதுக்கு நேரமாகும். ப்ளீஸ் பொறுமைய சோதிக்காதீங்க சார்”

 

” கொஞ்சம் மனச திடப் படுத்திக்கங்க அருண். உங்க தங்கை சரசு கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுருக்காங்க! அதுவும் ரொம்ப கொடூரமான முறைல!  ஆசிட் மேல தெளிக்கப்பட்டிருக்கு.  பலவந்தமா வாய தொறந்து உள்ளையும் ஊத்திருக்காங்க. ப்ளீஸ் கம் இமீடியட்லி! நீங்க சீக்கிரம் வந்தீங்கன்னா, நல்லது”

 

‘அழு அழு வாழ்க்கை முழுவதும் நினைச்சு நினைச்சு அழு’ – ஜலால் சொன்னது காதில் அறைந்தது! அடப்பாவி அவ உனக்கு என்னடா செஞ்சா! ஜலால்

ஆஸ்பத்ரியே அதிருமளவு கத்தினான் அருண்.

 

பதறிவிட்டார்கள் வசந்தியும் ப்ரியாவும். சுடலையே அங்கிருந்து, என்ன என்ன என்று கத்த ஆரம்பித்தான். வெறி பிடிச்சது மாதிரி அருண் அரற்றியதைப் பார்த்ததும் ப்ரியா பயந்தேவிட்டாள். விஷயத்தைக் கேள்விப் பட்டதும், நொந்தே போய்விட்டாள் ப்ரியா! இவன் ஆத்திரத்தில் எதுவும் பண்ணிவிட்டால்! அதுகூட அப்புறம் முதலில், இவனை ஊருக்கு அனுப்ப வேண்டும். நிதானமாக,  போனை எடுத்து மீண்டும் பேசினாள்…. அருணை அனுப்பி வைப்பதாகச் சொன்னாள்…. சொன்னதோடு மட்டுமல்லாமல், தன் ட்ரைவரை வரச் சொல்லி அருண் எவ்வளவு மறுத்தும், தன் காரிலேயே அனுப்பி வைத்தாள். அவளுக்கு அவனை தனியே அனுப்பவே இஷ்டமில்லை! அதற்குள் அருண் ஒரு நிதானத்திற்கு வந்திருந்தான்.

 

“ப்ரியா, இந்த விஷயம் நம்மைத் தவிர யாருக்கும் தெரிய வேண்டாம். முக்கியமாக, ஜலாலிடம் இதுபற்றி தெரிஞ்சதாகவே காட்டிக் கொள்ள வேண்டாம்”

 

வசந்தி அழுது ஓயவில்லை. என்னால்தானே அண்ணா இவ்வளவும். நான் ஜலால் செய்ததை சுடலையிடம் சொல்லாமல் இருந்திருந்தால்… அய்யோ ஒரு அண்ணனுக்கு கை போய், இன்னொரு அண்ணாவோட அருமைத் தங்கையை இழந்து…

 

ப்ரியாவிடம் வசந்தியை கண்ணைக் காட்டிவிட்டு,

“எதற்கும் இவர்களை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்” என்றான். இந்த நிலையிலும் இவனால் எப்படி அடுத்தவர்களுக்காக கவலை கொள்ள முடிகிறது!!! ப்ரியா விக்கித்து நின்றாள்!!!
Comments are closed here.