Breaking News

சைட்ல வேலை போயிட்டு இருக்கு மக்களே… 2 நாட்களுக்கு யாரும் போஸ்ட் போட முடியாது…

Kutram

Share Us On

[Sassy_Social_Share]

குற்றப்பரிகாரம் – 31 ( நிறைவு பகுதி)

அத்தியாயம் – 31

மதிப்பிற்குறிய ஏஎஸ்பி., அவர்களுக்கு, அருண் ஆகிய நான் எழுதிக் கொள்வது.

 

 இந்த நேரம் நான் செய்த கொலைகளுக்கான காரணங்களைத் தெரிந்து கொண்டிருப்பீர்கள். கையை ஆசிட்டில் குளிப்பாட்டி, பூவை ஐந்து பேர் கசக்கியதோடல்லாமல் அவளையும், ஆசிட்டில் குளிப்பாட்டி, ஈவிறக்கம் இல்லாத கயவர்களை பழிதீர்க்கவே அந்த கொலைகள்வக்ரம் பிடித்த மிருகங்கள் வாழக் கூடாது. உணர்ச்சி பூர்வமாய் பழி வாங்கினாலும், என் மனதை ஒரு கேள்வி அறுத்தது.

 

ஏன் இப்படி சர்வ சாதாரணமாக கொலைகளையும் கொள்ளைகளையும் கற்பழிப்புகளையும் இன்னும் பல குற்றங்களை செய்கிறார்கள்? ஏன் நாளுக்கு நாள் குற்றங்களின் எண்ணிக்கை பெருகுகிறது? ஏன் கூலிப் படைகள் பெருக்கம்? ஏன் மனிதர்கள் மனித தன்மையோடு யோசிப்பதில்லை?எத்தனை

ஏன்கள் போட்டாலும், அத்தனை ஏன்களுக்கும் ஒரே பதில், குற்றங்களுக்கான தண்டனைகள் சரியில்லை என்பதைவிட அதைப் பெறுவதற்கான கால அளவில், அவர்கள் சிறையிலிருப்பதில்லைகாலையில் குற்றம் செய்து மாலையில் ஜாமீனில் வெளி வந்து விடுகிறார்கள். ஆக., ஜாமீன் என்னும் வழக்கத்தை எடுத்தால்? உன் மீது உள்ள குற்றத்தை நீ செய்யவில்லை எனத் தெரியும் வரை சிறையில்தான் இருக்க வேண்டும் என்றால்? 90% குற்றங்கள் குறையும். அத்தனை நபர்களை வைக்க இடமுள்ளதா? ஏன் இல்லை! மனம் வைக்க வேண்டும். இந்தியாவில் இயற்கை செல்வங்கள் கொட்டிக்கிடக்கிறது. சொர்க்கபூமியாக்க மனித உடல் உழைப்பு தேவைப்படுகிறது. தமிழ்நாட்டு குற்றவாளியை பல மைல்கள் தள்ளி ராஜஸ்தானில் வேலை வாங்குங்கள். மிசோரம்மில் உள்ளவனை தமிழகத்தில் போடுங்கள். குளம் வெட்டுங்கள். இயற்கை செல்வத்தை சீர் படுத்துங்கள்இதோ, சுலைமான் ரஹீம் அறிவு வாசு வக்கீல் மாணிக்கம் ரெட்டி எல்லோரும் வனங்களை சுத்தமாக்குகிறார்கள்., கூடவே அவர்களது மனங்களையும். ஜாமீனில் விடக்கூடாது அல்லது ஜாமீனில் விடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை மிகவும் கடுமையாக்க வேண்டும். நீங்கள் போலீஸ் இலாகாவை சேர்ந்தவர். தங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை. தினசரி செய்தித்தாளை எடுத்துப் பாருங்கள். குற்ற நிகழ்வுகளில் ஈடுபட்டோர் 90% நபர்களின் மேல், ஏற்கனவே பல இடத்தில் வழக்குகள் உள்ளன. செயின் அறுத்தவன் ஜாமீனில் வந்து மீண்டும் செயின் அறுக்கிறான். திருடுபவனும் அவ்வாறே! ஏன் சமீபத்தில் ஒரு பச்சிளம் குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்தவன் வெளியே வந்து தாயைக் கொன்றான். ஏன்? அவனை ஜாமீனில் எடுத்ததால்?

ஜாமீன் இருக்கும் வரை குற்றங்கள் குறையாது!

 

பிகு: உங்கள் கடந்த காலம் நான் அறிவேன். தர்மம் வெல்ல வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோள். எங்களை உங்களால் சட்ட பூர்வமாக அணுக முடியாது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்த பின்புதான் குற்றம் செய்யவே தொடங்கினோம். நானாக, சரணடைய வாய்ப்பில்லை. காரணம் சரணடைந்தால் , எங்களை மக்கள் மறந்துவிடுவர். எங்கள் வழக்கு இருக்கும் வரை எங்கள் கோரிக்கையும் உயிருடன் இருக்கும். எங்கள் எண்ணம் எங்கும் பேசப்படும். அது அரசாங்கத்தின் காதுகளையும் நீதிதேவதை காதுகளையும் எட்டும். குற்றமற்ற அல்லது குற்றம் குறைந்த பாரதம் உருவாகும்.

ஜெய்ஹிந்!

 

மதிப்பிற்குரிய டிஐஜி., அவர்களுக்கு.,

என் சொந்த விருப்பத்தின் பேரில், எனது காவல்ப் பணியை நான் ராஜினாமா செய்கிறேன்.

தீபக் தீனதயாள்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Punitha. Muthuraman. says:

    விறுவிறுப்பான நாவல்.முடிவும் அருமை.ஆனால் தீபக்கின் கடந்தகாலம் என்ன?