முகங்கள்-24
2386
9
முகங்கள் – 24
சஞ்சய் சொல்லித்தான் நந்தினியை கொன்றதாகக் கூறும் ருத்ரனை அதிர்ச்சியோடு பார்த்தனர் பிரகாஷூம், சஞ்சய்யும்.
“வா….வாட்… ஆர் யூ பிலாபரிங்?” ( ‘என்ன உளரல்?’) என்று குளரலாக பேசிய சஞ்சயை வென்றுவிட்ட திருப்தியுடன் பார்த்தான் ருத்ரன்.
“நம்ப முடியலையா! ஒன் மினிட்” என்றவன் தன் கைபேசியை எடுத்து ஆன் செய்தான் அதில் சஞ்சய்யின் குரல், “ஹே…. ருத்ரா! ஹீரோயின் நந்தினியா, செம மஜா பா, ஷி இஸ் சோ பியூட்டிஃபுல்! ” அரைபோதையில் உளரினான் சஞ்சய்.
“சஞ்ஜெய் பி கேர்ப்புல் என்னோட ஷுட் ஸ்பாயில் ஆகக்கூடாது, அதுமட்டுமில்லாம நந்தினியோட விருப்பத்துக்கு மாறா அவங்களை தொந்தரவு செய்யகூடாது” எச்சரிப்பது போல் பேசினான் ருத்ரன்.
“என்ன வேண்டான்னு சொல்ல இந்த பூமில ஒரு பொண்ணு இனி பொறந்துதான் வரனும்” தன் பணத்தின் மீதிருந்த மமதையில் பேசினான் சஞ்சய்.
“அப்படி நந்தினி முடியாதுன்னு சொல்லிட்டா?” – ருத்ரன்.
“இந்த சஞ்சய் யாருன்னு அவளுக்கு காட்டுவேன்” போதையின் வேகத்தில் உளரினான் சஞ்சய்.
தன் கைபேசியை அணைத்தவன் “இப்போ தெரியுதா யார் உளரினதுன்னு?” வெற்றிப் புன்னகையுடன் பார்த்தான் ருத்ரன்.
“இப்போ கேஸ் என்ன தெரியுமா? உன்னோட கேவலமான ஆசைக்கு நந்தினி ஒத்துக்க மறுத்ததால, நீ யாருன்னு அவளுக்கு காட்ட என்கிட்ட பணம் கொடுத்து நந்தினிய கொல்ல சொன்னதே நீதான்”
“இது… இது….” – முகம் வெளிறி வார்த்தை வர மறுத்தது சஞ்சய்க்கு.
“ம்…ம்… நீ சாதாரணமா பேசினது தான், இப்போ உனக்கு எதிரா திரும்பிடுச்சி, இன்டஸ்ட்ரீல உன் பேரும் இந்த விஷயத்துல சுத்தமா சரியில்லைன்னு உனக்கே தெரியும், என்னைக்கு சந்தனான்னு நல்லா தெரிஞ்சே நீ அவ ரூமுக்கு போனியோ அன்னைக்கே தெரியும் நீ எந்த எல்லைக்கும் போவன்னு, அதான் உனக்கு எதிரா நீ பேசினதையே கலெக்ட் பண்ணிட்டேன்”
பதில் பேசமுடியாமல் உறைந்து விட்டான் சஞ்சய்.
‘டேய் இதெல்லாம் எப்படா நடக்குது, கூடவே இருக்கா மாதிரிதான் இருக்கு ஆனா இல்லாத மாதிரியும் இருக்கு, ஆண்டவா’ – அண்ணாந்து விட்டத்தை பார்த்தான் பிரகாஷ். கோப்பையில் மீதமிருந்த திரவத்தை உள்ளே இறக்கினான் ருத்ரன்.
**********************
அன்று காலையில் ஷுட்டிங் இல்லாததால் சாவதானமாக கிளம்பி கீழே அந்த ரெசார்ட்டின் பார்க்கிற்கு வந்தாள் சந்தனா. அங்கிருந்த ஒரு குடைக்கு கீழ் சேரில் சாய்ந்து அமர்ந்து கண்களை மூடிக்கொண்டாள்.
மனதில் பல்வேறு எண்ணங்கள் ஓடிக்கொண்டேயிருந்தன. ‘ருத்ரனின் கணிப்பின் படி இன்னும் பதிமூன்றே நாட்கள், எல்லாம் திட்டமிட்டபடி நடந்துவிட்டால், பிறகு அவளுக்கு விடுதலைதான்.
இன்னும் பன்னிரன்டு இரவுகள், அதன் பிறகு எங்கு போவது? தன் வாழ்வாதாரத்தை எப்படி ஏற்படுத்திக்கொள்வது? அவள் நடிகை என்று பச்சைகுத்தபட்டு விட்டதால் சாதாரண வேலை கிடைப்பது கூட சிரமமாகிவிடும், ஒரு வேளை தன் ஊருக்கே சென்றுவிட்டால்? தன்னுடைய வீட்டையும் உறவினர்களையும் நியாபகப்படுத்த முயன்றவளால் முடியவில்லை, தங்கையின் முகம் மட்டும் ஒரு புகைப்படம்போல் வந்து சென்றது, எல்லாமே புகைமூட்டமாக இருந்தது, தீவிரமாக சிந்திக்க முயன்றவளின் தலைவலித்தது, அச்சிந்தனையிலிருந்து “ஹாய் நந்தினி “என்ற பரிட்சயமான குரல் கலைத்தது
திடுக்கிட்டு கண்விழித்தவள் நேராக அமர்ந்தாள், எதிரே நின்றவன் மித்ரன்
‘அடக்கடவுளே இவனுக்கும் இன்னைக்கு ஷூட் இல்லையோ? தெரிந்திருந்தால் ரூமைவிட்டு வெளியே வந்திருக்கவே மாட்டானே’
“என்ன நந்தினி தனியா இருக்கீங்க? ” பேசிக்கொண்டே அவளெதிரில் அமர்ந்தான்.
‘நீ வருவேன்னு தெரிஞ்சிருந்தா நிச்சயமா நான் தனியா வந்திருக்க மாட்டேன்டா ‘ மனதிற்குள் நினைத்தவள்,
“சு…சு…சும்மா தான், ஃபிரஷ் ஏர் வாங்கலாமேன்னு” ஏதோ வாயில் வந்ததை உளரினாள்.
“இன்னிக்கு நைட் ஷூட்தானே நந்தினி, நம்ம ஏன் இந்த ரெசார்ட்லயே இருக்கனும், ஷாப்பிங் போகலாமா? அப்படியே லஞ்ச்! ” என்று கேட்டவன் பதிலுக்காக இவள் முகம் பார்க்க, அவளோ என்ன பேசுவது என்று புரியாமல் அவனை பார்த்தாள்.
அப்போது எங்கிருந்தோ “சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்” என்று வேகமாக அவர்களை நெருங்கிய ருத்ரனை பார்த்ததும் அவள் முகம் சுவிட்ச் போட்டது போல் பிரகாசமானது. ஆனால் மித்ரனின் முகம் கடுத்தது.
அவளது மலர்ந்த முகத்தையே பார்த்தபடி நடந்தவனுள்ளும் சந்தோஷம் படர்ந்தது, அவள் கண்களில் விரோதத்தை மட்டுமே பார்த்து பழகியவனுக்கு இது புதிதாய் இருந்தது. எந்த ஒரு ஆணிற்கும் தன்னை பார்த்து ஒரு பெண்ணின் முகம் மலர்வது கிளிர்ச்சியை தரக்கூடியது இயற்க்கையே! அதனை ருத்ரன் நன்றாகவே உணர்ந்தான்.
அவன் அவர்களை நெருங்கிவிடவும் சட்டென எழுந்தவள் அவளது இருக்கையில் ருத்ரன் அமர்வதற்கு வசதியாக அவன்புறம் நகர்த்தினாள், அவர்களை உட்கார வைத்து விட்டு இவள் நழுவ எத்தனிக்கையில், அவளது சேரில் உட்காராமல்,
“என்ன நந்தினி இன்னும் ரெடியாகாம இருக்க, கமான், ஷாப்பிங் போகனும்னு நீ தானே சொன்ன, நான் ரெடி” என்றவனை விசித்திரமாக பார்த்தாள்.
அவளது பார்வையை அலட்சியப்படுத்தியவன், அப்போது தான் பார்ப்பது போல் மித்ரனை பார்த்தான்.
“ஹாய் மித்ரன், நீங்களும் எங்க கூட ஜாயின் பண்ணிக்கலாம், யூ ஆர் வெல்கம் ” என்று அழைத்தான்.
“நோ நோ …. யூ புரொசீட், ” என்று கை குலுக்கிய மித்ரன், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்ட எரிச்சலுடன் அங்கிருந்து நகர்ந்தான், வேறு என்ன செய்யமுடியும், ருத்ரன் முன்னனி இயக்குனர் பட்டியலில் இருப்பவனாயிற்றே!
அவன் செல்வதை திருப்தியுடன் பார்த்தவன் சந்தனாவின் புறம் திரும்பி “இன்னும் இங்க எதுக்கு நிக்கிற, சீக்கிரம் ரெடியாகி வா, ஒன்லி டென் மினிட்ஸ்”என்று சேரில் அமர்ந்து தன் வாட்ஸ்அப்பை ஆன் செய்து தேவ்நாயருக்கு மெசேஜ் அனுப்பினான்.
“ஐ வில் ஹன்டில் மித்ரன், தேங்க்யூ ஃபார் த இன்பர்மேஷன் அட் த ரைட் டைம்”
******************
முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க காரில் அவனருகில் அமர்ந்திருந்தாள் சந்தனா, பேபி பிங்க் கலரில் சுடிதார் அணிந்திருந்தாள், ஷூட்டிங்கில் கூட அவளது காஸ்ட்யூம், ஒன்று புடவை அல்லது சுடிதார் தான், நல்லவேளையாக பாடல் காட்சிகளை முன்பே முடித்துவிட்டிருந்தான் ருத்ரன், அதனால் ஒருமாதிரியான ஆடை அணியும் கட்டாயம் சந்தனாவிற்கு இருக்கவில்லை, அவளது சந்தன மேனிக்கு மேலும் அழகு சேர்த்தது அந்த பேபிபிங்க் கலர் சுடிதார்.
அவளை ஒரு முறை ஓரக் கண்ணால் பார்த்தவன், அவளது கோபத்தை குறைக்கும் முயற்சியாய்,
“எங்கே போகலாம் நந்தினி? ” என்று சாலையில் கவனம் பதித்தபடி கேட்டான் ருத்ரன்.
அவனது நந்தினி என்ற அழைப்பில் அவனை வெட்டிவிடுவது போல் பார்த்தவள், “ம்….மெடிக்கல் ஷாப்புக்கு ” என்று சீறினாள்.
“ஏ..ன் .. என்ன ஆச்சு?” – அவள் ஏதோ வில்லங்கமாக பேச போகிறாள் என்று எதிர்பார்த்தே கேட்டான்.
“தலைவலி” என்றாள் குத்தலாக.
அவளது குத்தலை ரசித்தவன் மேலும் அவளை வம்பிழுக்க எண்ணி “எப்போதிலிருந்து” என்று கேட்டான்.
“அது பிடிச்சு மூனுமாசமாகுது, போகவே மாட்டேங்குது ” அவனை நேருக்கு நேர் பார்த்து முறைத்தாள்.
உள்ளுக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு சாலையில் கவனம் பதித்து ஸ்டியரிங்கை லாவகமாக திருப்பியவன்,
“ஒருவேளை மித்ரனுடன் ஷாப்பிங் வந்திருந்தால் தலைவலி குறைந்திருக்குமோ?” என்று உரக்க யோசிப்பது போல் நடித்தான். அவனை மேலும் முறைத்துப் பார்த்தாள் சந்தனா.
“சரி சரி எரிச்சுடாத, அவன் கிட்டேந்து காப்பாத்தி கூட்டி வந்ததுக்கு நன்றி சொல்லலைன்னாலும் பரவாயில்லை இப்படி முறைக்காமலிருக்கலாமே…” என்று சிரித்துக்கொண்டே கேட்டவனை மேலும் உறுத்து விழித்தவள்,
“என்னது, காப்பாத்துனீங்களா, காப்பாத்தி என்ன செய்ய போறீங்க இராத்திரி அவனை கட்டிப்பிடிக்க சொல்லப் போறீங்க, அதானே” என்று சீற்றத்துடன் பேசிவிட்டு துடித்த உதடுகளை கடித்து அழுகையை உள்ளே அழுத்தினாள்.
அவளது வார்த்தையின் வீரியம் தந்த அதிர்ச்சியில் ருத்ரன் சடன் பிரேக் அடிக்க “கிரீரீச்ச்….” சத்தத்துடன் அவனது கார் நடுரோட்டில் கொஞ்ச தூரம் தேய்த்துக் கொண்டு சென்று பிறகு நின்றது, நல்லவேளையாக ஓஎம்ஆர் ரோட்டில் அப்போது அதிக வாகன போக்குவரத்து இல்லை. ஒன்று இரண்டு வாகனங்கள் ஹாரன் அடித்துக்கொண்டும், கண்ணாடியை இறக்கி விட்டு இவனது காரை கைநீட்டி ஏதோ திட்டிவிட்டும் சென்றன, அவளது வார்த்தைகள் அதன் இலக்கை சரியாக பதம் பார்த்தன, ருத்ரனின் கைகள் ஸ்டியரிங்கை அழுந்தப் பற்றியிருந்தது, நரம்புகள் புடைத்திருந்தன, கண்கள் சிவந்தன, அதற்குள் சில கார்கள் ஓயாமல் ஹாரன் அடிக்க சாலையோரம் இருந்த மரத்தடியில் வளைத்து காரை ஆப் செய்தவன் ஸ்டியரிங்கில் ஓங்கி இரண்டு குத்துவிட்டான், இலக்கில்லாமல் இங்கும் அங்கும் பார்த்தான், ஆனால் சந்தனாவை நிமிர்ந்து பார்க்கவும் அவனால் முடியவில்லை.
அவனது இந்த கோபம் அவளை மேலும் எரிச்சல் படுத்தியது, செய்வதெல்லாம் செய்துவிட்டு இவனுக்கு கோபம் ஒரு கேடா என்று அவன் மேல் இருந்த கோபம் இன்னும் பலமடங்காக பெருகியது, இதுவரை அவள் அதிகம் பேசியதில்லை ஆனால் இப்பொழுது இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த வலி வெடித்து வெளியே வருவதை அவளாலும் தடுக்க முடியவில்லை, தொடர்ந்தாள்
“அவனாவது தனியா கட்டிப்பிடிக்க கூப்பிடறான், ஆனா நீ அதைவிட கேவலமா எல்லார் முன்னாடியும் கத்துத்கொடுக்றேன்னு கட்டிப்பிடிப்ப, அதுக்கும் மேல அவன் கட்டிப்பிடிக்கறதை பக்கத்துலயே ஷீட்டை பிடிச்சுகிட்டு ரசிச்சு வேற பார்ப்ப ” அருவருப்புடன் ஒருமையில் பேசியவளது பார்வை அவனது இறுகிய முகத்தில் நிலைத்திருந்தது.
அவனது கோபம், இயலாமை எதுவும் பேசமுடியாமல் அவன் தவிக்கும் தவிப்பை பார்க்க பார்க்க அவள் மனதில் ஒரு குரூரமான நிம்மதி எழுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
அவனை மேலும் வலிக்கவைக்க “அந்த ஷீட்டுக்கு பதிலா விளக்கை பிடிச்சீங்கன்னா இன்னும் பொருத்தமா இருக்கும் ” என்றாள் குத்தலாக அவள் முடிப்பதற்குள்
“ஷட்டப்ப் …ஷட்ட்டடப்….. எனஃப்” கிட்டத்தட்ட கத்தினான்.
அவனது கத்தல் அவளுக்கு ஒருவித திருப்தியை கொடுத்தது, வலிக்கட்டும் நன்றாக வலிக்கட்டும், இப்படி நினைத்தாளே தவிர அவளை நினைத்தே அவளது கண்கள் கலங்கின, இப்படி வந்து இந்த நயவஞ்சகர்களிடம் மாட்டிக்கொள்வாள் என்று அவள் நினைத்து கூட பார்க்கவில்லையே.
பஸ்சில் யாராவது இடித்தால் கூட ஒதுங்கி நிற்பவளை, சொல்லித்தருகிறேன் என்று ஒருவனும், மோசமான நோக்குடன் ஒருவனும் நெருங்குகையில், எதுவும் செய்யமுடியாத நிலையில் அவள் மனம் தவியாய் தவிக்கிறதே! கோர்த்திருந்த கைகளில் பார்வையை பதித்தபடி தலை கவிழ்ந்திருந்தாள், நெஞ்சை அடைத்துக்கொண்டு வெளிவர துடித்த துக்கத்தை உள்ளே விழுங்க முயற்சி செய்தாள்.
ருத்ரனோ கோபத்தின் உச்சியிலிருந்தான், சந்தனாவின் மீது அல்ல அவன் மீதே அவனுக்கு அளவில்லா கோபம் எழுந்தது தன்னை சமனப்படுத்திக்கொள்ள பல நிமிடம் பிடித்தது, கைமுஷ்டி இறுக ஸ்டியரிங்கில் மீண்டும் இரண்டுமுறை ஓங்கியடித்தான், மூச்சுக்காற்றை வேகமாக உள்ளிழுத்து நிதானமாக வெளியேற்ற முயற்சி செய்தான், கண்கள் மட்டுமல்லாமல் முகம் முழுவதும் சிவந்துவிட்டது.
‘விளக்கு பிடிச்சா இன்னும் பொருத்தமா இருக்கும்’ அமிலமாக அவன் காதுகளை குடைந்தது
மெல்ல மெல்ல தன்னை சமனப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்தான், ஓரளவு அதில் வெற்றி கண்டவன் நிமிர்ந்து சந்தனாவை பார்த்தான், அவள் தலை கவிழ்ந்திருந்தாள். மூக்கின் விடைப்பும், சிகப்பும் அவள் அழுகையை அடக்க முயல்வதை பரைசாற்ற அவனுள் என்னவோ செய்தது. அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்து சமாதானப்படுத்த பரபரத்த கையை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக்கொண்டான்.
முகங்களின் தேடல் தொடரும்…..
9 Comments
Wow, Indira. Each and every episode is interesting. Story is written like legend
Hi mam
இப்பகுதி நன்றாக இருந்தது.
நன்றி
Nalla kelvi santhana ruthra mukku otanchu pochu super
Nalla naakapudungura maadhiri kaelu? Konjamavathu uraikuma?
Enaku oru doubt rudhran sanjay paesinadhai yen record panninan? So nandhini ya murder panradhu rudhran oda romba naal plan ah?
SUPERRRR UD SIS
YENA PATHIL RUTHRAAAAAAAAA
What will be rudran’s next move.. will he try to console her..or ????.. waiting for next ud
ruthra thittam thodangum pothu intha pennin nilai puriyalaiyaa unakku.
Nice ud sis….
Nandhini ya edhukaga konnaga??…
Waiting for it.
நல்லாதான் இருக்கு இந்த ஆடுபுலி ஆட்டம்.