Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-30

முகங்கள் – 30

 

அறைக்குள் நுழைந்த சந்திரசேகரை பார்த்து தீயை மிதித்தது போல் எழுந்து நின்றவளின் முகம் பார்த்த ருத்ரபிரதாப் குழப்பமுற்றான்.

 

அவளது முகம் அச்சத்தில் உறைந்திருந்தது. ஏன் என்று புரியாத பொழுதும் அவனும் எழுந்து அவளது கைப்பற்றி “நந்தினி ” என்றான் மென்மையாக. அவனது பார்வை சந்திரசேகரை தொட்டு மீண்டது ,அவர் அவனை தேடி வந்திருக்கிறார் மிகப்பெரிய தயாரிப்பாளர் ,அவரை வரவேற்க வேண்டும் என்று கூட அவனுக்கு தோன்றவில்லை. அவனது முழு கவனமும் அவளிடம்தான் இருந்தது.

 

அவளது கரத்தை மென்மையாக பற்றியிருந்த ருத்ரனின் கரத்தை தன் இருகரக்களாலும் இறுகப்பற்றியவள் அவனது முதுகுக்குப்பின் ஒண்டினாள். அவளது சிவந்த விழிகள் சந்திரசேகரை அச்சத்துடன் பார்த்தன. அவளது முகமெங்கும் வியர்வைத் துளிகள், உள்ளங்கை சில்லிட்டிருப்பதை அவனால் உணரமுடிந்தது. அதைத்தொடர்ந்து அவளது உடல் நடுங்கவும் அவன் துணுக்குற்றான், இது எல்லாம் சந்திரசேகரின் வருகையால் ஏற்பட்டவைதான், ஏனென்றால் அதற்கு முன்னால் அவளது மனநிலையை அவன் நன்கு அறிந்திருந்தானே.தனக்குள் வேகமாக சிந்தித்தவன்

 

“மிஸ்டர் சந்திரசேகர், இஃப் யூ டோன்ட் மைன்ட், கேன் யூ  வெய்ட் இன் மை கேரவன் ” என்று சந்திரசேகரை பார்த்தவனுள் மேலும் குழப்பம்.

 

காரணம் அவரும் அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார் அவரது முகத்தில் ஓர் இறுக்கமிருந்தது. அது ஏன் என்று அவன் யோசிக்கும் பொழுதே

 

இதைபற்றி பிறகு ஆராய்ச்சி செய்யலாம் என்றது ருத்ரபிரதாப்பின் மூளை. முதலில் பார்க்கப்படவேண்டியவள் இவள் தான் என்று முடிவெடுத்தவன்

 

மீண்டும் “ப்ளீஸ் ” என்று அழுத்தி கூற, எதுவுமே பேசாமல் அங்கிருந்து அகன்றார் சந்திரசேகரன்

 

அவர் அங்கிருந்து அகன்றதுதான் தாமதம் உடனே தளர்ந்து சரிந்தவளை விழுந்துவிடாமல் பிடித்து அமர வைத்தான்.

 

பார்வை எங்கோ நிலைத்திருக்க உடல் வெடவெடத்து நடுங்கத்தொடங்கியது

 

அவளது உள்ளங்கையில் சூடு பறக்க வேகமாக தேய்த்து விட்டான். இரு கைகளாலும் அவளது கன்னத்தை ஏந்தியவன்

 

“ப்ளீஸ், ரிலாக்ஸ், ஒன்னுமில்ல, நத்திங் டு வொர்ர்ரீ” அவளது கண்களை ஊடுருவினான். ஆனால் அவனால் எதையும் கிரகிக்க முடியவில்லை. அவளது பார்வை எங்கோ இலக்கில்லாமல் வெறித்தன.

 

“கமான் நந்தினி, ப்ளீஸ், என்னை  பார், ”

 

“……”

 

“ஐ செட் லுக் அட் மீ ” அவளது கன்னத்தை தட்டினான்.

 

மெல்ல அவளது கருவிழி அவனை அடைந்தது, அவனது கண்களை நேருக்கு நேர் பார்த்தவள் “லீவ் மீ அலோன் ” என்றாள் மெதுவாக ஆனால் அழுத்தமாக

 

ருத்ரபிரதாப் ஏதோ கேட்க வாய் திறந்தபொழுது கை உயர்த்தி அவனை நிறுத்தியவள்

 

“கெட் அவே ஃபரம் மீ ” என்று கடுங்கோபத்துடன் கத்தினாள்.

 

அவளை தனியே விடுவது சரியா? அவளுக்கு வேறு ஏதேனும் பாதிப்பு வந்து விடுமா? மிகவும் கஷ்டப்பட்டு அவளை சரியான பாதையில் மாற்றி அழைத்து செல்ல அவன் எத்தனிக்கையில் இது என்ன புது தடங்கல், அடியும் முடியும் புரியாமல் தயங்கி நின்றான்

 

ஆவேசமாக எழுந்தவள் அவனது சட்டையை கொத்தாக பற்றி “ஒரு முறை சொன்னா புரியாதா? ஐ செட் கெட் அவுட் ” என்று கத்திக்கொண்டே மூர்ச்சையாகி அவன் மார்பிலேயே மயங்கிச் சரிந்தாள்.

 

“நர்ஸ் ” என்ற ருத்ரனின் குரலுக்கு ஓடி வந்தாள் அந்த நர்ஸ்,

 

மார்பில் சரிந்தவளை கையிலேந்தி அங்கிருந்த மெத்தையில் கிடத்தினான். நர்ஸ் அவளுக்கான முதலுதவியை தொடங்க, செல்போனில் சியாமளாவை தொடர்பு கொண்டு விபரம் சொன்னான்.

 

மீண்டும் நர்ஸ்சிடம் திரும்பியவன்

 

“பார்த்துக்கோங்க நர்ஸ், நான் இப்போ வந்துடுரேன், பீ கேர்புல், டாக்டர், பிரகாஷ், இவங்களை தவிர யாரையும் உள்ள விடாதீங்க, தேவ் நாயரை அனுப்புறேன் ஏதாவது தேவைன்னா அவனை மட்டும் கேளுங்க ”  என்று எச்சரித்து விட்டு அழுத்தமான காலடிசத்தத்துடன் வெளியேறினான்.

 

*******-*****************************

 

நந்தினி அவளது கேரவனில் ஒரு மேகசினை புரட்டிக்கொண்டிருந்தாள். அவளருகில் சந்தனா

 

“மேடம் நான் ஒன்னு கேட்டா கோபிச்சுக்க மாட்டீங்களே? ”

 

எப்போதுமே சந்தனா இப்படித்தான், எதையாவது கேட்டுக்கொண்டேயிருப்பாள், அவள் கேட்கும் கேள்விகள் சில சமயம் வேடிக்கையாய் இருக்கும் சில சமயம் சிந்திக்க வைப்பதாய் இருக்கும்.

 

அதனால் மேகசினை மூடிவிட்டு “முதல்ல கேள்வியை கேளு, கோபம் வராம நான் கட்டுப்படுத்திக்கிறேன்  ” என்றாள் வேடிக்கையாக

 

“மே…ட….ம்!! ” சலுகையாய் குழைந்தவள் உடனே

 

“நீங்க ஏன் மேடம் நடிக்க வந்தீங்க? இங்க நடக்கிற எதுவுமே  எனக்கு பிடிக்கல. எல்லாமே போலி, நடிப்பு, குள்ளநரித்தனம் ” என்று சொல்லச் சொல்ல அவளது முகம் கோபத்தில் சிவந்தது.

 

“இரு இரு, என்னை கோபப்படக்கூடாதுன்னு சொல்லிட்டு இப்போ உனக்கு கோவம் வருதே? “சிரித்துக்கொண்டே சந்தனாவை சமாதானப்படுத்த முயன்றவள்

 

“அதுசரி யாரை நெனைச்சு இவ்வளவு கோவம்” நேரிடையாகவே கேட்டாள் நந்தினி

 

அதற்கு சந்தனா துளியும் அசரவில்லை, “இதுல என்ன மேடம் சந்தேகம், குள்ள நரித்தனமா சிந்திப்பதில் ‘உங்கள் ருத்ரபிரதாப்பை’ தோற்கடிக்க இனி இந்த உலகில் ஒருவர் பிறந்து தான் வரவேண்டும்.” என்றாள் துடுக்காகவே.

 

எப்போதுமே இப்படித்தான் ஒளித்து பேசும் பழக்கம் இல்லாத சந்தனாவை நந்தினிக்கு மிகவும் பிடிக்கும். ஒரு தோழியை போல் பாவித்து அவளிடம் அன்பு காட்டினாள்.

 

அவள் ருத்ரனை திட்டுகிறாள் என்பது நந்தினியின் மூளைக்கு எட்டவேயில்லை,அவள் உங்கள் ருத்ரபிரதாப் என்றது நந்தினியின் முகத்தை சிவக்க வைத்தது , அதனை மறைக்க பெரும்பாடு பட்டவள்,உடனே பேச்சை மாற்றினாள்

 

“அகரம் ஃபவுன்டேஷன்க்கு செக் சைன் பண்ணிக் கொடுத்தேனே பாலு கிட்ட கொடுத்தியா? ”

 

“அப்பவே கொடுத்துட்டேன் மேடம் ”

 

“குட் ” என்று மேகசினில் கவனத்தை பதிக்க முயன்றபோது மீண்டும் சந்தனா குறுக்கிட்டாள்

 

“நீங்க மாசமாசம் அகரமுக்கு இவ்வளவு பெரிய தொகையை செக்கா கொடுப்பீங்களா மேடம்?”

 

புத்தகத்தின் பக்கங்களை புரட்டியபடி “ஆமாம், ஏன் கேட்கிற? ”

 

“இல்ல, அடுத்த வாட்டி செக்கொடுக்க நான் போகவா? அங்க சூர்யா சாரை பார்க்கலாமே,அவரோட சமுக சேவைக்கு நான் ஒரு விசிறி ”

 

உடனே சிரித்துவிட்டாள் நந்தினி

 

“உனக்கு சூர்யாவை பார்க்கனும் அவ்ளோதானே, அதுக்கு எதுக்கு இப்படி சுத்தி வளைக்கிற ருத்ரனும் சூர்யாவும் நல்ல ஃபிரண்ட்ஸ், நான் வேணும்னா ருத்ரன்கிட்ட பேசுறேன், இந்த வீக் என்ட் சூர்யா சென்னைல இருந்தா ஒரு டின்னர்க்கு அரேன்ஜ் பண்ணிடலாம் ”

 

ருத்ரன் என்ற பேரைகேட்டதும் கலவரமானாள் சந்தனா

 

“சூர்யாவை பார்க்கிற ஆசையே போயிடுச்சு மேடம் ”

 

வாடியமுகத்துடன் சந்தனாவை பார்க்கபிடிக்காமல் “சரி சரி நானே உன்னையும் சூர்யா சாரையும் மீட் பண்ண வைக்கிறேன் சரியா? ” என்றதும் தான் சந்தனாவின் முகம் மலர்ந்தது.

 

ஆனாலும்  முதலில் கேட்ட கேள்விக்கே வந்து நின்றாள் சந்தனா .’நீங்க ஏன் நடிக்க வந்தீங்க? ‘

 

நந்தினி எதுவும் பேசாமல் அமைதி காக்கவும், அவளாகவே யூகித்து

 

“வீட்ல பண கஷ்டமா மேடம், என்னை இங்கே கட்டாயப்படுத்தி ருத்ரபிரதாப் கூட்டிட்டு வந்தமாதிரி யாராவது உங்களை கட்டாயப்படுத்தினாங்களா? ”

 

“ச் சே..சே…அதெல்லாமில்லை “அவசரமாக மறுத்தவள்

 

“நான் நடிக்கனும்னு ஆசைபட்டுதான் வந்தேன். நடிப்பு என்னோட ஃபேஷனா இருந்தது. சந்தோஷமாத்தான் வந்தேன். ஆனால் …” என்று நிறுத்தியவளின் பார்வை தூரத்திலிருந்த கண்ணாடியில் தெரிந்த அவளது பிம்பத்தையே வெறித்தது.

 

அவளது நினைவுகள் கசப்பானவை தான் என்று சொல்லாமல் சொன்னது அவளது பளிங்கு முகம்.

 

இப்போது தான் ஏதாவது பேசினால் சரியா? அல்லது அமைதி காப்பதே நலமா?  என்று சந்தனா யோசித்துக் கொண்டிருக்கையில் புயலென உள்ளே நுழைந்தான் ருத்ரபிரதாப்.

 

“வாட் த ஹெல் இஸ் ஹப்பனிங் நந்தினி ” என்று உறுமியபடியே நந்தினியை நெருங்கினான்.

 

“என்ன ருத்ரா? ” – என்று இயல்பாய் பேசியபடி எழுந்து நின்றாள்

 

“உன்னோட மேக்கப் ஆர்டிஸ்ட் எங்க? டெய்லி லேட், உன்னோட இன்∴ப்லுயன்ஸ்லதான் அவங்க இஷ்டத்துக்கு வராங்க போறாங்க, பட் டுடே ஐ ஆம் கோயிங் டு டேக் ஆக்ஷன் ”

 

அவனது கண்களில் தெரிந்த கோபம் அவளை பேசவிடாமல் செய்தது. அவனது கோபம் அத்தனை சக்தி வாய்ந்ததும் கூட, ஆனால் மென்குரலில்

 

“சின்ன சின்ன மூன்று குழந்தைகள் ருத்ரா, ப்ளீஸ் கன்சிடர் பண்ணுங்களேன். மோர் ஓவர் அவங்க தான் என்னோட கம்பர்ட்லெவல்,ஸ்கின்டோன் தெரிஞ்சு மேக்கப் போடுவாங்க. நான் ஸ்டிரிக்டா வார்ன் பண்றேன், இனி லேட்டா வரமாட்டாங்க” என்று ஒரு மேக்கப் ஆர்டிஸ்டிற்காக ருத்ரனிடம் கெஞ்சினாள்.

 

அவளை பார்த்து தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு, ஹீரோயின் கெத்து என்றால் என்ன என்று கேட்பாள் போலும்,

 

அவளிடம் மேற்கொண்டு எது பேசவும் பிடிக்காமல், அப்படியே விட்டுச்செல்லவும் முடியாமல் “திஸ் இஸ் த லாஸ்ட் வார்னிங் ” என்று எச்சரித்தவன் போகிற போக்கில் சந்தானாவை பார்வையால் உரசிவிட்டு  வெளியேறினான். அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்

 

அதனை பார்த்த நந்தினியினுள் ஏதோ ஒன்று உடைந்தது.

 

முகங்களின் தேடல் தொடரும்…..

Next ud – Monday




10 Comments

  • ugina begum says:

    Interesting ud sis

  • Nataraj Nataraj says:

    Nandhiniya patri ippathan sila visayangal varuthu .nandhini nallavalathan irukkiral.ruthravukku appave santhana mela interest irunthirukku.

  • Thadsayani Aravinthan says:

    Hi mam

    தன்னை அழகுபடுத்த வரும் பெண்ணின் நிலை அறிந்து ,அவருக்காக பரிந்து பேசி, அதற்காக தன் இயக்குனரிடம் திட்டமும் வாங்குகின்றார் நந்தினி ,அப்படிப்பட்ட நல்ல மனமுடைய பெண்ணை எதனால் மரணமடைய செய்தனர் ருத்திரனும் மற்றவர்களும்.

    நன்றி

    • Indra Selvam says:

      Ungalathu keavikana badhil koodiya viraivil – thodarnthu neengal koduthu varum aadharavirki nandri

  • saranya shan says:

    fb thodangiyaaha

  • Meena Vighneswar says:

    Eppovam suspense thana..

You cannot copy content of this page