முகங்கள்-42
3878
12
முகங்கள் : 42
ஷூட்டிங் ஸ்பாட்டிற்குள் நுழைந்த ருத்ரபிரதாபிற்கு மூச்சுவிடவும் நேரமில்லாமல் போனது , நல்லவேளை அவன் பயணத்தின் போதே நன்றாக தூங்கிவிட்டதால் களைப்பு தெரியாமல் அவனால் வேலை பார்க்க முடிந்தது, இரண்டு நாட்களாக அவன் இல்லாத பொழுது நடந்த விஷயங்களை ஒன்று விடாமல் கேட்டறிந்து கொண்டான், எடுக்கப்பட்ட காட்சிகளின் பூட்டேஜ்ஜை சரி பார்த்தான் அன்றைய காட்சியை ஷூட் செய்தான், விடிந்து பேக்கப் சொல்லும் வரை அவனுள் வேறு எந்த சிந்தனையும் எழவேயில்லை, சந்தனாவிற்கு வந்த ஃபோன் காலை கூட மறந்தே போனான்.
காரிடாரில் பிரகாஷிடம் பேசியபடி சந்தனாவின் ரூமை கடக்கையில் தான் அவனுக்கு அந்த ஃபோன் விஷயம் நினைவிற்கு வந்தது உடன் நடந்த பிரகாஷிடம் “மித்ரன் எங்க பிரகாஷ்? ”
அவனை கேள்வியாய் பார்த்த பொழுதும் “அவனுக்கு ரெண்டு நாள் ஷூட் இல்லாததால வீட்டுக்கு போயிருக்கான், உன்கிட்ட சொல்லிட்டு தானே ருத்ரா போனான் மறந்துட்டியா ?” என்று விளக்கி கூறினான்
“நோ நோ …… நியாபகம் இருக்கு ஜஸ்ட் கேட்டேன் ” மழுப்பலாக பதிலளித்தான்
“ருத்ரா சந்திரிகா மேடம் எனி டைம் வரலாம், அவங்க கிட்ட…..” முடிக்கமுடியாமல் ஒருவித பயத்துடன் நிறுத்தினான்
“நெகட்டிவ்வா எதுவும் ஆகாது , எல்லாம் சரியா நடக்கும் டோன்ட் வொர்ரி “மிகுந்த நம்பிக்கையுடன் கூறினான் ருத்ரபிரதாப்
***********
பிரகாஷ் கூறியது போல் காலை பத்துமணிக்கெல்லாம் மார்பிள் ரெசார்ட்டில் இருந்தார் சந்திரிகா
போனிலேயே சில பல கண்டிஷன்களை போட்டு விட்டு தான் அவர் அங்கே வந்தார்,
அவரது முதல் கண்டிஷன் தானும் தன் மகளும் தனியே பேசவேண்டும் என்பது தான், அடுத்தது யாருடைய இடையூறும் இருக்கக்கூடாது முக்கியமாக ருத்ரபிரதாப்பின் இடையூறு
இந்த நிபந்தனையை முடியாது என்று அவர்களால் எப்படி சொல்லமுடியும், தாயையும் மகளையும் சந்திக்க விடாமல் தடுப்பதற்கு இவர்கள் யார்?
*******
தனது அறையில் கோப்பையில் விஸ்க்கியுடன் கூலாக அமர்ந்திருந்தான் ருத்ரபிரதாப்,, அதே அறையில் குறுக்கும் நெடுக்கும் ஓர் பதட்டத்துடன் நடந்து கொண்டிருந்தான் பிரகாஷ்.
பிரகாஷை கிண்டலாக பார்த்த ருத்ரனை நெருங்கி “சந்திரிகா நந்தினிய மீட் பண்ண போறாங்க , நீ மட்டும் எப்படிடா இப்படி டென்ஷனே இல்லாம இருக்க? ” ஆச்சர்யத்துடன் கேட்டான்
“என்ன டென்ஷன்? ” என்னவோ அவன் வேற்று கிரகத்திலிருந்து வந்திருப்பது போல் கேட்டது பிரகாஷின் கோபத்தை தூண்டியது
“போதும், உன் நடிப்பை ஷூட்டிங் ஸ்பாட்டோட நிறுத்திக்கோ, இது எல்லாம் அந்த அஷ்வின் பய சொல்லி கொடுத்ததா இருக்கும் இல்லைன்னா இந்த சந்திரிகா இப்படியெல்லாம் யோசிக்கிறவங்களே இல்லை ” தன்னுள் இருந்த சந்தேகத்தை வெளிப்படுத்தினான்
“ம்…..ச்…..நீ இவ்வளவு ஃபீல் பண்ண வேண்டாம் புரோ, மாத்திரை அதோட வேலையை சரியா செய்யுது, பொள்ளாச்சு டிரிப் கட்டாயம் அவளுக்குள் பல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கனும், பட்………..”அவனது முகத்தில் சோகத்தின் சாயல் வந்து சென்றது
“பட்… என்னடா? ” பிரகாஷின் முகமும் வாடியது
“எனக்கு இந்த டிரிப் பழசை எல்லாம் நியாபகப் படுத்திடுச்சு, பாவம் டா சந்தனா, அவ பாட்டுக்கு அந்த கிராமத்துல சந்தோஷமா சுத்திகிட்டிருந்தா, அங்கேயே இருந்திருந்தா அவளோட சித்தி அவளை அந்த குடிகார கோபிக்கு கட்டாயப்படுத்தி கல்யாணம் செஞ்சு வெச்சிருப்பாங்கதான், அவ கஷ்டப்பட்டிருப்பா, பட் அவளை காப்பாத்தி நல்ல வாழ்க்கை தரனும்னு கூட்டி வந்து நா….ன்……. ” அதற்கு மேல் அவனால் எதுவும் பேச முடியவில்லை.ஒரே மூச்சில் போப்பையை காலிசெய்து கார்பெட்டில் விசிறியடித்தான்
“இட்ஸ்….ஓகே ….ருத்ரா …ப்ளீஸ் காம் டவுன், பெள்ளாச்சி போகவேண்டான்னு நான் சொன்னதுக்கு முக்கிய காரணம் இதுதான், அங்க போய்ட்டு வந்தா நீ இப்படியாகிடுவேணு எனக்கு தெரியும்”
“அங்க சந்தனாவோட ஃபோட்டோல மா…….லை…… எல்லாம் என்னால் தான்” மதுவின் வீரியம் அவனது துக்கத்தை இரட்டிப்பாக்கியது
“கமான் ருத்ரா, நீ இப்படி ஒடைஞ்சி போயிட்டா எங்க நிலைமை? முடிஞ்ச எதையும் நம்மால மாத்த முடியாது பட் நடக்கப்போறது நம்ம கையிலதான் இருக்கு, இட்ஸ் நெவர் லேட் ஃபார் எ நியூ ஸ்டார்ட்” நண்பனை தேற்ற முயன்றான்
பிரகாஷ் பேசுவதை கேட்டபடியே வேகமாக நடத்து சென்று ஒர் முழு பாட்டில் விஸ்கியை வாயிலிருந்து எடுக்காமல் பாட்டம் சிப் அடித்தான்,
பேச்சை நிறுத்திவிட்ட பிரகாஷ் அவனை கலவரத்துடன் பார்த்தான்
“ஐ நோ ….ஐ நோ…..” என்று குளரலாய் பேசிக்கொண்டே படுக்கையில் பொத்தென விழுந்தான் ருத்ரபிரதாப்
“ஷி…….ட்……., ருத்ரா!!!!! ருத்ரா!!!!, எழுந்திருடா! என்ன காரியம் பண்ணி தொலைச்சிருக்க” ருத்ரனின் கன்னத்தை தட்டி எழுப்ப பிரகாஷ் முயன்று கொண்டிருக்க பக்கத்து அறையிலிருந்து அழுகுரல் கேட்டு மீண்டும் கலவரமானான்
******************
சந்தனா ஒருவித படபடப்புடனே தான் இருந்தாள் இரண்டு நாட்களாக சாப்பிடவில்லை, தூக்கமும் இல்லை, மாத்திரையையும் நிறுத்திவிட்டாள், அவளுள் பயம் படர்ந்தது, தன் பிம்பத்தையே கண்ணாடியில் பார்க்க பயப்பட்டாள், அப்படி பார்த்தாலும் அது அவள் முகமில்லையே, உடம்பெல்லாம் வியர்த்தது, அப்போது தான் சந்திரிகா அந்த அரைக்குள் நுழைந்தாள்,
அந்த ரூமின் அலங்கோல காட்சியை கண்டு அதிர்ந்தார்
“நந்தினி!!!! மேரி பேட்டி!!!!!” மகளை தன் நெஞ்சோடு அணைத்துக்கொள்ள அந்த தாய் விழைகையில் வேகமாக பின்னடைந்தாள் சந்தனா,
“கோன் பேட்டி???, நான் சந்தனா! போ வெளிய போ, நந்தினி செத்துட்டா, நந்தினி எப்பயோ செத்துட்டா, போ …….!!!!!” வெறி பிடித்தவள் போல் கத்தும் தன் மகளை பார்த்து ஸ்தம்பித்து நின்று விட்டார் சந்திரிகா
துளியும் நகராமல்அங்கேயே நிற்கும் சந்திரிகாவை முறைத்த சந்தனா “உனக்கு ஒன்னுமே தெரியலையா, உன் பொண்ணு நான் இல்லை, நல்லா பாரு உனக்கு வித்தியாசமே தெரியலையா?” ஆவேசமாக அவளுக்கு மிக அருகில் வந்து நின்று கொண்டு கத்தினாள்
“என்ன விளையாட்டு இது நந்தினி? போதும், ஏதாவது புதுபடம் கமிட் ஆகியிருக்கியா? டெஸ்ட் ஷூட்க்கு பிரிப்பேர் பண்றியா? ” தன் மகளின் அருகே வந்து தோளை பற்ற முயன்றார்
அவரது நோக்கம் புரிந்து சட்டென பின்னடைந்தவள்
“ஒரு தடவை சொன்னா புரியாதா? உன் பொண்ணு செத்துட்டா, செத்துட்டா செத்துட்டா, வெளியே போ!!!! “என்று உறுத்த விழித்த சந்தனாவின் கண்கள் ரத்த சிவப்பாகின
“உனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருக்கா ? கண்ணு முன்னாடி நின்னுகிட்டு செத்துட்டேன்னு சொல்ற, நீ உளர்வதையெல்லாம் நான் நம்பமாட்டேன், உனக்கு என்னமோ ஆகிடுச்சு, ருத்ரபிரதாப் உன்னை என்னவோ பண்ணிட்டான், அந்த ராஸ்க்கலை என்ன செய்றேன் பார்” கோபமும் கண்ணீருமாக சந்தனாவின் வார்த்தையை நம்ப மறுத்தது அந்த தாயுள்ளம்,
அப்போது உள்ளே வந்த பிரகாஷ் நிலைமையை கிரகிப்பதற்குள் மீண்டும் சந்தனா கத்தத் தொடங்கினாள் “இதோ இவனுக்கு தெரியும் உன்னோட பொண்ணு நந்தினி செத்துட்டான்னு, கேளு இவன் கிட்ட கேளு” சந்திரிகாவின் கையை ஆவேசமாக பற்றி பிரகாஷிடம் இழுத்து சென்று நிறுத்தினாள்
அங்கே என்ன நடக்கிறதென்றே புரியாமல் விழித்தான் பிரகாஷ் இருப்பினும் “நந்……தினி…… நான் ” அவன் பேச முயன்றபொழுது இடைவெட்டினாள் சந்தனா
“நான் நந்தினி இல்லை இல்லை இல்லை “காதில் கையை வைத்து அழுந்த மூடிக்கொண்டு கத்தினாள் சந்தனா
இப்போது சந்தனாவிடம் பேசி எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்பது புரிந்து விட அங்கே அடியும் முடியும் புரியாமல் கண்ணீருடன் நின்றிருந்த சந்திரிகாவை சமாதானம் செய்ய முயன்றான் பிரகாஷ், ஆனால் அவன் பேசும் எதையும் காதில்வாங்காமல் ஆத்திரத்துடன் அவனது காலரை பிடித்து உலுக்கிய சந்திரிகா “என் பொண்ணுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி உளறுறா? அவளை என்ன செஞ்சீங்க? சொல்லு உண்மையை சொல்லிடு இல்லன்னா நான் போலீசை கூப்பிடுவேன் , போலோ போலோ, என் பொண்ணுக்கு எதுவும் ஆகல தானே? இவ என் பொண்ணு தானே!!! இவ பொய் சொல்றா, என்னடா செஞ்சீங்க என் பொண்ணை? ” கத்தியபடியே தரையில் விழுந்துகதறினார்
நிலைமையின் தீவிரத்தை தெளிவாக உணர்ந்த பிரகாஷ், எதிரில் ஆவேசமாய் நின்று தன்னை முறைத்துக்கொண்டிருந்த சந்தனாவை பார்த்தான்,
கீழே அழுது கொண்டிருந்த சந்திரிகாவை பார்த்தான்,
ருத்ரபிரதாப் இப்போது தானா இப்படி சுயநிணைவை இழக்கும் அளவு குடிக்கவேண்டும்? தனக்குள்ளேயே நொந்து கொண்டான்
சந்திரிகாவை கைகொடுத்து தூக்கி நிறுத்தியவன் “வாங்க மேடம் உங்களோட எல்லா கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன், இப்போ நந்தினி மேடம் ரெஸ்ட் எடுக்கட்டும் ” என்று ஏதேதோ பேசி சமாதானம் செய்து வெளியே அழைத்து வந்தான்
உள்ளே வரும்பொழுது நின்று கொண்டிருந்த நர்சை இப்போது காணவில்லை, ஏதோ மனதில் உறுத்த ஃபோனை எடுத்து சியாமளாவிற்கு உடனே வருமாறு மெசேஜ் அனுப்பினான்.
இனி சியாமளா பார்த்துக்கொள்வார் என்ற நிம்மதியுடன் சந்திரிகாவை அவனது அறைக்கு அழைத்துச் சென்றான்
சியாமளா வருவதற்குள் நடக்கப்போகும் விபரீதம் பாவம் அவனுக்கு தெரிய வாய்ப்பில்லை தான்
முகங்களின் தேடல் தொடரும்…..
12 Comments
Today ud Ilaya mam?
Sema interesting sis.👌 👌 👌
Hi friends…. next ud monday than… sorry…. nan konjam outof stationla irukene… so type panna mudiyala….. i am sooooo sorry friends…..
Ok Indira… Enjoy… 🙂
Nice
Interesting ud…. what next?????
Innum suspence,..
முடிவின் ஆரம்பம் இனிதே நடந்தேறியதோ!?
Interesting……
NICE UD
Hi mam
நன்றாக இருந்தது #ப்பகுதி.
நன்றி
Thrilling ud