Vedanthangal epi 8
2394
2
“ம். ஆனால் ரிட்டர்ன் டிக்கெட் நீ தான் போட்டுத்தரணும். ரயிலில் டிக்கெட் போடு.”
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே ஸ்ரீ பவித்ராவின் கைபேசியைப் பிடுங்கிப் பேச ஆரம்பித்தாள்.
“ஹேம்நாத் ஸ்ரீ பேசுறேன். உனக்கு அந்த ஆளுங்களை நல்லா தெரியுமா? பவித்ராவுக்கு பணப்பேய் பிடிச்சி ஆட்டுது. அவள் உன் பொருப்பு. போலிஸ் கீலீஸ்னு பிரச்சனை வந்தால்.. ”
‘போலீஸ்? கவர்மென்ட்டே அடுத்த எலக்ஷனில் அவனுங்க கையில் போகப்போகுது’ என்று மனதில் நினைத்ததை வெளியே சொல்லாமல் “அப்படி எதவும் ஆகாமல் இருந்தால்? என்கூட நீ மகாபலிபுரம் வருவியா ஸ்ரீ?”
ஸ்ரீ பதில் கூறாமல் கைபேசியை பவித்ராவிடம் கொடுத்து விட்டு அடுக்களைக்குள் நுழைந்தாள்.
பவித்ரா ஹேம்நாத்துடன் பேசிவிட்டு ஸ்ரீயைத் தேடி அடுக்களைக்குள் வந்தாள். பவித்ராவை பார்த்தும் பார்க்காததுபோல் ஸ்ரீ சாமான்களை கழுவியபோது ஸ்ரீயின் ஜடைப்பின்னலை பிடித்து இழுத்தபடி பவித்ரா அவளிடம் சொன்னாள் “ஸ்ரீ எனக்கு ரொம்ப நாளாக டச் ஃபோன் வாங்கணும் என்று ஆசைப்பா. அதான் மகாபலிபுரம் பார்ட்டிக்கு யஸ் சொன்னேன். ”
“அந்த கண்றாவி ஃபோன் ரொம்ப முக்கியமா? ”
“என்னப்பா ஸ்ரீ இப்படி கேட்டுட்ட? நீயும் மசூதும் கல்யாணம் செய்துக்கும்போது நான் உன்னை எதை வச்சு ஃபோட்டோ எடுக்க? உன் கல்யாணத்தை சிம்பிளாக திருப்பரங்குன்றம் கோயிலில் வச்சிடணும். ஆனா ஃபோட்டோ மட்டும் எடுத்து தள்ளிடணும் என்று வச்சிருக்கேன். ”
மசூத் என்றதும் கோபம் பறந்தோட… “போப்பா.. மசூத் ஞாயிறு வந்தா போதையிலேயே மிதப்பானாமே? அவனை கல்யாணம் செய்திட்டு என்ன செய்ய?” என்று குறை பாடியவளிடம் “சூப்பர் டீ. ரம் வாசனையுடன் முத்தம் கொடுத்தால் சூப்பரா இருக்கும். அனுபவி. அப்புறம் போதையில் அவன்.. ”
“உவ்வே.. போதும் போதும் கிக்காக பேசாதே. எனக்கு ரம் வாடையே பிடிக்காது. கல்யாணம் ஆனதும் முதலில் அதன் குடியை நிறுத்தணும். நீ இப்ப பேச்சை மாத்தறியா? மகாபலிபுரம் விஷயத்துக்கு வா. ஏன் இவ்வளவு ரிஸ்க் எடுக்கிற?”
“ஸ்ரீ நாம்ம காசு சம்பாதிக்கணும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம். அழகும் அழகின் திமிரும் எவ்வளவு நாள் நிலைக்கும்? அதுக்கு முன்பாக காசு சம்பாதிக்கணும் ஸ்ரீ. திருப்பதி ஏழுமலையான் மட்டும் பணம் வச்சிக்கிட்டு என்ன செய்யிறார்? லட்டு கூட காசுக்குதான் வாங்குறோம். ஓசியில் கொடுக்கச் சொல்லு பார்ப்போம். அங்குதான் பணம் கொட்டிக் கிடக்குதே? கோயில் டிரஸ்ட்காரன் தரமாட்டான். பத்து காரணம் சொல்வான். உண்டியல் கணக்கைவிட செலவு கணக்கு மனப்பாடமாக சொல்வான். எனக்கு பணம் சேர்க்கணும். உனக்கு எனக்கு மோகனாவுக்கு தனுவுக்கு பிரித்விக்கு எல்லோருக்கும் பணம் சேர்க்கணும். உன்னைப்போல் இருப்பதை அள்ளிக் கொடுக்கமாட்டேன். ஆனால் எனக்குபோக மிஞ்சும் தொகை அவங்களுக்கு கொடுப்பேன். ஒரு நாலு ஐஞ்சு லட்சம் சேர்த்திடணும். ஒரு வீடை ஒத்திக்கு பிடித்திடணும். நான் என் கல்யாணத்தைப் பற்றி இப்ப யோசிக்கலை. பின்னாடி ஆசை வந்தா பார்க்கலாம். நீ நம்புன்னா நம்பு ஹேம்நாத்தை என் வீட்டு வாட்ச்மேன் ஆக்கணும் என்பதுதான் என் லட்சியமே.. ”
ஹேம்நாத்தை வாட்ச்மேன் உடையில் கற்பனை செய்தவளுக்கு சிரிக்காமல் இருக்க முடியவில்லை. நன்றாக சிரித்து கலகலத்தவள் சொன்னாள்..
“பவி உன் டார்கெட் சீக்கிரம் காலிங் பெல் அழுத்தப்போகுது. கிளம்பு. இரண்டு நாள் ஆகுமா? நீ போய் வர இரண்டு நாள் ஆகுமா? டிரஸ் எடுத்து வை. நான் வீட்டைப் பூட்டிட்டு போறேன்.” “சரி” என்ற பவித்ரா ஸ்ரீ கிளம்பும்முன் அவளிடம் ஐநூறு ரூபாய் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டுத்தான் அவளை அனுப்பினாள்.
2 Comments
Nice
Thanks