Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முகங்கள்-45

முகங்கள் :45

 

ருத்ரபிரதாப்பை எழுப்பமுடியாமல் பிரகாஷ் நின்றிருக்க உள்ளே ஆவேசமாக நுழைந்தார் சந்திரிகா,

 

“என் பொண்ணை காணும், ! !!!  நீங்க என்னடான்னா அதை பத்தி கவலையே இல்லாம இருக்கீங்க, எழுந்திரிக்க சொல்லு ருத்ரபிரதாப்பை, என் பொண்ணு எனக்கு வேணும் இப்பவே ” காட்டு கத்தலாக கத்தினார்

 

யாரோ கனவில் கத்துவது போல் தான் இருந்தது ருத்ரபிரதாப்பிற்கு,

 

திடுமென அறையில் நுழைந்த சந்திரிகாவை நெருங்கி

 

“மேடம் பிளீஸ், இப்படி கத்தி நந்தினி மேடம் காணும்னு நீங்களே அட்வர்டைஸ் பண்ணாதீங்க ” கிசுகிசுப்பாக பேசியபடி திறந்திருந்த கதவை வேகமாக அடித்து சாத்தினான் பிரகாஷ்

 

நந்தினி என்ற வார்த்தையில் ருத்ரபிரதாப்பின் தூக்கம் /மயக்கம், சகலமும் கலைந்தது

 

சட்டென படுக்கையில் எழுந்து அமர்ந்தவன் தன் கைகளால் தலையை தாங்கிப்பிடித்துக்கொண்டான், தலை பாரமாக இருந்தது, விழிகள் திறக்க மறுத்தன,  கண்களை நன்றாக இறுக மூடித்திறந்தான்

 

காட்சி மங்கலாக தெரிந்தது, தலையை ஒருமுறை உலுக்கியவன் மீண்டும் கண்களை இறுக மூடித்திறந்தான்,

 

ருத்ரபிரதாப் எழுந்து அமர்ந்ததும் பிரகாஷின் முகம் பிரகாசமானது ஏதோ மலைப்பாம்பின் பிடியிலிருந்து தப்பித்தது போல் தோன்றியது, சந்திரிகாவை பின் தள்ளி வேகமாக கட்டிலை அடைந்தவன்

 

“தேங்க் காட் நீ எழுந்துட்ட ” தன் நிம்மதியை வெளிப்படுத்தியவன்  ருத்ரபிரதாப் தலையை உலுக்குவதையும், கண்களை மூடித்திறப்பதையும் பார்த்து நிதானித்தான், அவனருகே குனிந்து “ருத்ரா கேன் யூ ஹியர் மீ ” என்று கேட்டான்

 

‘ஆம் ‘ என்பது போல் தலையசைத்தவன் மிகுந்த சிரமத்துடன் விழிவிரித்து சந்திரிகாவை பார்த்தான்,  பின் பிரகாஷை பார்த்து  அவன் கேட்ட முதல் கேள்வி “நந்தினிக்கு என்ன ஆச்சு?”

 

சிவந்த அவனது விழிகளை சந்திக்க தயங்கினான் பிரகாஷ்,

 

ஆனால் ருத்ரனின் கேள்விக்கான பதில் சந்திரிகாவிடமிருந்து வந்தது “நந்தினியை காணும்!!!! மேரா பேட்டி காயப் ஹே ” நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்

 

ருத்ரபிரதாப்பின் விழிகள் பிரகாஷை கூர்ந்தன

 

“அ…..அது……” வார்த்தை வரவில்லை அவனுக்கு

 

“வாட் த ஹெல் இஸ் ஹாப்பனிங்…ஸ்பீக் அவுட்!!!!! ” பிரகாஷின் சட்டையை கொத்தாக பற்றினான்

 

“ருத்ரா பிளீஸ் காம் டவுன், ஐ வில் ஏக்ஸ் பிளைன்  -ஷீ இஸ் மிஸ்சிங்,  ஐ ஆம் சாரி, வெரி சாரி ” பிரகாஷ் பேசும்பொழுதே, சட்டையை பற்றியிருந்த அவனது கை தளர்ந்தது, அவனது மூளையை ஆக்கிரமித்திருந்ததெல்லாம் ‘ஷீ இஸ் மிஸ்சிங் ‘என்பது தான் சப்த நாடிகளும் செயலிழந்தது போல் உணர்ந்தான்,  தலையில் கைவைத்து அமைதியாக அமர்ந்திருந்தான்

 

அவனது அமைதி பிரகாஷை பயப்படுத்தியது, வேகமாக சந்திரிகாவை அடைந்தவன் “மேடம் பிளீஸ் நந்தினி மேடம் ரூம்ல வெயிட் பண்ணுங்க,  அவங்களுக்கு எதுவும் ஆகாது ஆகவும் விடமாட்டோம், எங்களை கொஞ்சம் யோசிக்க விடுங்க பிளீஸ் ” என்று கதவை காண்பித்தான்

 

அவர் ருத்ரபிரதாப்பையும் பிரகாஷையும் மாறி மாறி பார்த்தபடி தயக்கத்துடன் வேறு வழியின்றி வெளியேரினார்

 

செல்பேசியை எடுத்து காதுக்கு கொடுத்த பிரகாஷ் “சியாமளா உடனே ருத்ரனோட ரூமுக்கு வாங்க ” என்று தொடர்பை துண்டித்தான், மீண்டும் ருத்ரபிரதாப்பின் அருகில் வந்து அமர்ந்து கொண்டு

 

“ஐ ஆம் சாரி ருத்ரா, எனக்கு என்ன செய்யுறதுன்னே தெரியல,  பிளீஸ் ஏதாவது செய் ” என்று மன்றாடினான்

 

அப்போது மூச்சிறைக்க கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த சியாமளா ருத்ரபிரதாப்பை பார்த்து  “சார் பிளீஸ் டூ சம்திங், ஷீ டின்ட் டேக் த டேப்ளட்ஸ் ஃபார் த பாஸ்ட் டூ டேஸ், அன்ட் நௌ ஷீ இஸ் மிஸ்சிங்,  இட்ஸ் வெரி வெரி டேன்ஜரஸ் ”

 

சட்டென தலையை உயர்த்திய ருத்ரபிரதாப் “வாட்!!!?????  அவங்க டேப்ளட்ஸ் எடுக்கலையா, ??? வாட் த ஹெல் இஸ் யுவர் நர்ஸ் டூயிங்? ” காட்டு கத்தலாக கத்தினான்,

 

கைகளை பிசைந்தபடி சியாமளா அமைதியாக நிற்க

 

“அ….வ…..ங் களும் மிஸ்ஸிங் ருத்ரா ” கூறிய பிரகாஷின் நா உலர்ந்தது

 

“என்ன?!!!!! ” சிவிட்ச் போட்டார் போல் படுக்கையிலிருந்து எழுந்தவன்

 

“அப்போ ….. ரொண்டு பேரும் சேர்ந்து….. ” அவன் முடிப்பதற்குள்

 

“நோ…..” என்று இடைபுகுந்து மறுத்தன இரு குரல்கள்

 

அவனது கண்கள் சியாமளாவிடம் பதிலுக்காக நிலைத்தன,அதனை புரிந்து கொண்டு ஒருவித பதட்டத்துடன் பேசலானார் சியாமளா

 

“நர்ஸ்கிட்டே இருந்து இப்போதான் எஸ் எம் எஸ் வந்தது, ரெண்டு நாளா அவங்க எவ்வளவு டிரை பண்ணியும் டேப்ளட்ஸ் கொடுக்க முடியலையாம், நேத்து ஒரு கிளாஸ் தண்ணி கூட மேடம் குடிக்கலையாம், சாப்பாடும் சாப்பிடலையாம், சோ எப்படியுமே அவங்களால டேப்ளட்சை கொடுக்க முடியலையாம், பட் டேப்ளட்ஸ் சாப்பிடாததால மேடம் வயலன்டா ரியாக்ட் பபண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம், ருத்ரபிரதாப் சாருக்கு பயந்து……..” முடிக்கமுடியாமல் நிறுத்தினார்

 

“ஓடிட்டாங்க …..ஆம் ஐ ரைட் ” என்று நக்கலாக முடித்துவைத்த ருத்ரபிரதாப் தொடர்ந்து “வாவ்!!!! சூப்பர், நீங்க மட்டும் ஏன் நிக்கறீங்க, நீங்களும் தாராளமா ஓடிப்போகலாம் என்றான் கிண்டலும் கோபமுமாக

 

முதலில் சந்தனாவை காணவில்லை என்றதும், பொள்ளாச்சி சென்று வந்தது தன்னையே பெருமளவு பாதித்திருக்கிறது என்றால் அவளை நிச்சயம் பாதித்திருக்கும் அதன் தாக்கத்தால் முதிர்ச்சியில்லாமல் அவள் வெளியே சென்று விட்டாள்,  ஏன் தன்னை விட்டு மொத்தமாக கூட சென்றிருக்கலாம் என்று அவன் நினைத்துக்கொண்டிருக்கையில்  சியாமளாவின் பேச்சு அவனை கோபத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றது

 

இரண்டு நாட்களாக அவள் மாத்திரை சாப்பிடாமல் இருந்திருக்கிறாள், யாரும் இவனிடம் மூச்சுவிடவில்லை,  இப்போது எங்கே எந்த நிலையில் இருக்கிறாளோ,  போலீசில் கம்ப்ளைன்ட் கொடுப்பதும் முடியாத காரியம், அவள் காணாமல் போய் குறைந்தது இரண்டு மணி நேரம் இருக்கும் எத்தனை தூரம் சென்றாளோ எந்த திசையில் சென்றாளோ?  அவனது உள்ளம் பதறியது, எல்லாம் இந்த மாத்திரையால் வந்தது , அதை கொடுக்காமலே இருந்திருக்கலாம் என்று எப்போதும் தோன்றும் அதே எண்ணம் இப்போது அவனை பூதாகரமாக ஆக்கிரமத்திருந்தது.

 

அடுத்து என்ன? அடுத்து என்ன என்று அவன் மூளை குழம்பியது, கோபம் பதட்டம் எல்லாம் படிப்படியாக குறைந்து, தலைக்கு மேல் வெள்ளம் வந்தபிறகு ஜான் போனால் என்ன முழம்போனால் என்ன?

 

என்ன செய்யவேண்டும் என்று எந்த சிந்தனையுமின்றி கார் சாவியை கையிலெடுத்தான்,

 

அவனை பின்தொடர்ந்த பிரகாஷ் “எங்கன்னு போய் தேடமுடியும் ருத்ரா “என்று கேட்கையில்

 

நின்று அவன் முகத்திற்கு நேரே குனிந்தவன் “அதுக்காக அப்படியே விடமுடியாதுல்ல? ஷீ இஸ் வெரி இம்பார்டன்ட் ஃபார் மீ,  ஐ கான்ட் லூஸ் ஹர் ” என்று அமைதியாக ஆனால் உறுதியாக பேசினான்,

 

“பட் இப்போ நீ டிரைவ் பண்றது சேப் இல்ல ” என்ற பிரகாஷின் கண்களுக்குள் பார்வையை செலுத்தியவன்

 

“ஐ டோன்ட் கேர் ”   பிரகாஷின் பதிலை எதிர்பார்க்காமல் கதவை திறந்து கொண்டு வெளியே வருகையில் அவனை வேகநடையுடன் எதிர்கொண்டாள் சந்திரிகா

 

‘இவரை வேறு சமாளிக்கனுமா ‘ என்று ருத்ரன் சிந்திக்கையில்

 

சிரித்துக்கொண்டே அவனை நெருங்கியவர் மூச்சு வாங்க  “மேரே பேட்டி ஆகை, நந்தினி ஆகை ” (என் பொண்ணு வந்துட்டா) என்றார் சந்தோஷமும் நிம்மதியுமாக

 

பிரகாஷும் ருத்ரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்

 

முகங்களின் தேடல் தொடரும்……




6 Comments

You cannot copy content of this page