உனக்காகவே வந்தேனடா – 1
3229
4
குரு பவனம்…
இளங்காலை வேளையிலேயே தேவநந்தன் மருத்துவமனைக்கு கிளம்பி
கொண்டிருந்தான். நந்தன் ஒரு நரம்பியல் நிபுணன். இன்று அவனுக்கு முக்கியமான
அறுவை சிகிச்சை இருந்தது. சிகிச்சை நாட்களில், உணவு எடுக்க அவன் விரும்ப
மாட்டான். நோயாளியின் நலம் தான் முக்கியம் என்று அதிலேயே கர்ம சிரத்தையாக
இருப்பான்.
‘இவனுக்கு இதே வேலையா போச்சு… அர்த்த ஜாமத்துல வெளில கிளம்பி என்னை
உசுர வாங்குறான்? ஏன் தான் இப்படி என்னோட தூக்கத்தை கெடுக்குறானோ?’ என்ற
ரீதியில் சோம்பலாய் அவனை பார்த்து மீண்டும் தனது சொகுசு மெத்தையில் படுத்து
கொண்டது அவனது ‘பாலா’. அவனது கபில நிற டாபர்மேன்…
பரபரவென்று கிளம்பி கொண்டிருந்தவனின் வீட்டு கதவை தட்டினார்கள் யாரோ?
“ச்சே… கண்ணுலபடாம எஸ்கேப் ஆகிறனும்னு பார்த்தா விடமாட்டாங்க போலயே?”
தனக்குள் புலம்பியவனாய் சென்று கதவை திறந்தான் நந்தன்.
அங்கே…
ஒரு கையில் கண்ணாடி டம்ப்ளரை மூடி வைத்தபடியும், மறுபக்க தோளில் ஒரு ஹாட்
பேக் கேரியரையும் மாட்டியபடியும் நின்று கொண்டிருந்தாள் சந்தோஷி. முகத்தில்
எரிச்சலும் கோபமும் போட்டி போட்டது
சந்தோஷி நந்தனின் பக்கத்து வீட்டு பெண்… அவனின் தந்தையின் நண்பரின் மகள்.
நந்தனோ அதுவரை புலம்பி கொண்டிருந்தவன், “குட் மார்னிங் குட்டிமா… எதுக்குடா
சீக்கிரம் முழிச்ச?” மிகவும் பாசமாய் கேட்டு வைக்க,
“வெறி ஏத்தாத… கடிச்சிடுவேன்!” குதறாத குறையாக எகிறினாள் சந்தோஷி.
“சரி… சரி… கத்தாத… என்ன கொண்டு வந்துருக்க?” பார்வை டம்பளரில் படிந்தது
நந்தனுக்கு!
“ஹ்ம்ம்… பாதாம் பால் பேதி மாத்திரை கலந்து!”
“அதை அவனுக்கு கொட்டு…” என்று ‘பாலாவை’ காட்ட, அதுவோ, ‘எனக்கு இது
தேவை தாண்டா…’ என்று குர்ரென்று நிமிர்ந்து முறைக்க, இவனோ விடாமல்,
“காலைல எழுந்துருச்சு பாத்ரூம் போக கூட நகரமாட்டிக்கிறான் சோம்பேறி! இதை
குடிச்சாட்டாவது பாத்ரூம் போட்டும்” குற்றப்பத்திரிக்கை வாசித்தான்.
“நீ மட்டும் பெரிய ஒழுக்க சிகாமணி… குளிக்கிரதுக்கே ஒரு காலத்துல அழுதவன்
தான… உன்னை போல தான் அவனும் இருப்பான்… இந்தா பிடி… அம்மா கொடுத்து
விட்டாங்க!” என்று பாலை தந்தவள்,
“இதுல அம்மா சாப்பாடும் தந்து விட்டுருக்காங்க… ஹாஸ்பிட்டல்ல போய்
கொட்டிக்கோ…” என்று அவனுடைய உடமைகளின் பக்கத்தில் கேரியரை வைத்து
விட்டு, ‘பாலாவிடம்’ நகர்ந்தாள் சந்தோஷி.
“டேய்… ஒழுங்கா இடத்தை விட்டு எழுந்துக்கலை… நீச்சதண்ணியை எடுத்து மூஞ்சில
ஊத்திருவேன்…” என்று அதற்கும் ரெண்டு திட்டை தூக்கி வீச, பெக்க பெக்க என்று
முழித்த பாலா, காம்ப்ளான் பாய் ரேஞ்சிற்கு நிமிர்ந்து நின்றது தன் உடலை சிலுப்பி
கொண்டு!
‘கொய்யாலே… நான் உன்னை கிரேன் வைச்சு நகர்த்தாத குறையா நகர்த்துறேன்…
அப்போ எல்லாம் நகராதவன்… இப்போ இவ பேசுன ரெண்டு வரிக்கு மாவீரன்
கணக்கா நிக்கிறானே! எப்படி?’ என்று குழம்பி போய் நின்றான் நந்தன்.
“குட் பாய்…” தனது பேச்சில் எழுந்து நின்ற பாலாவின் தலையில் தடவிய சந்தோஷி
நந்தனின் குழம்பிய பார்வையில், ‘என்னடா’ என்பது போல் பார்க்க,
“இல்லை… நீ எப்போ இருந்து நாய் பாஷை பேச பழகின? நீ சொல்றது மட்டும்
அவனுக்கு புரியுதே எப்படி?” என்று அவளை கடியாக்க,
“அடேய்… பாலை குடிச்சிட்டு கிளம்பலை… நாய் பாஷை என்ன பேய் பாஷையே
பேசுவேன்… போடா!” என்று ஒரு கத்தல் போட, இரண்டு நிமிடத்தில் அரக்க பரக்க
வெளியில் ஓடியது நந்தன் மட்டுமில்லை… பாலாவும் தான்…
அவனை அனுப்பி வைத்து விட்டு, நந்தனின் வீட்டு கதவை பூட்டிவிட்டு பாலாவுடன்
எதிர் வீடு நோக்கி சென்றாள் சந்தோஷி அங்கே இருக்கும் ஒருவனை எழுப்புவதற்கு!
அந்த கதவருகில் சென்று நின்றவள், அங்கே ஓரத்தில் சாற்றி வைத்திருக்கும் ஒரு
கம்பை எடுத்து கொண்டு, ‘டொக் டொக்’ என்று கதவில் தட்ட, பல நிமிட தட்டலுக்கு
பின் திறக்கப்பட்டது கதவு!
அங்கே களைந்த தலையும், அதன் மேல் ஒரு ஐஸ் பேகும், வாயில் ஒரு
தெர்மாமீட்டரையும் வைத்துக்கொண்டு நின்றான் ஒருவன்! அவன் நித்திலன்.
“டேய் பாலா… எதிர் வீட்டுக்காரன் ஹாஸ்பிட்டல் போயிட்டான்னு சொல்லுடா?”
என்று டாபர்மேனை தூது விட, அதுவோ நித்திலனை ஒரு பார்வை பார்த்தது.
“அது எங்களுக்கும் தெரியும்ன்னு சொல்லுடா!” இவன் ஒரு எகிறல். பாலாவின்
பார்வையோ, இப்பொழுது சந்தோஷியின் மேல் படிந்தது.
“அவ்ளோ தெரிஞ்ச பிறகும்… இங்கே வெட்டியா நிக்காம… வீட்டுக்கு வந்து
கொட்டிக்க சொல்லுடா?” – சந்தோஷி.
“அங்கே மட்டும் சாப்பாடு எடுத்து போக தெரிஞ்சுது… அதே போல இங்கே கொண்டு
வர தெரியாதான்னு கேட்டு சொல்லுடா?” – நித்திலன்.
“அவனுக்கு முக்கியமான கேஸ் இருக்குன்னு தெரிஞ்சும் இப்படி பேசுறது நியாயம்
இல்லைன்னு சொல்லுடா?”
“முந்தாநாளு எங்களுக்கும் தான் முக்கியமா வேற வேலை இருந்துச்சு… நாங்களும்
அப்போ சாப்பிடாம தான் போனோம்ன்னு சொல்லுடா?” பதிலுக்கு எகிறிய நித்திலன்,
‘காய்ச்சல்ல விழுந்து இருக்கேன்… எனக்கு ஒரு கிளாஸ் கஞ்சி கொண்டு வர
முடியலை… பெருசா நியாயம் அநியாயம் பத்தி பேச வந்துட்டா’ என்று குமைந்து
கொண்டு முனுமுனுக்க,
சந்தோஷியோ, ‘இவன்கூட நின்னு மல்லு கட்டுறதுக்கே நான் ஏழு வேளைக்கு
சாப்பாடு சாப்பிடனும்… அண்டா அண்டாவா!’ என்று மானசிகமாக தலையில் அடித்து
புலம்பி கொண்டாள்.
இவர்களின் சண்டையில், ‘அட போங்கடா…’ என்று அங்கேயும் நொந்து போய்
கிடந்தது பாலா.
பொறுத்து பார்த்த சந்தோஷி, ஒரு கட்டத்தில்,
“டேய் பாலா… இங்க பாருடா!” வலது கையில் வைத்திருந்த கம்பை அதனை நோக்கி
நீட்ட, ‘அய்யயோவ்… அடிக்க போறாளா?’ மிரண்டு போய் நின்றது பாலா.
சந்தோஷி வலது கையின் ஆள்காட்டி விரலை நீட்டியபடி, “இன்னும் அரைமணி
நேரத்தில் நான் கிளம்பிருவேன்… அதுக்குள்ளயும் இவன் கிளம்பி வரலைன்னா…
ரயில்வே ஸ்டேஷன்க்கு அவனா தான் போய் அவங்க பாட்டியை கூப்பிட வேண்டி
இருக்கும்… அதுவும் நிராயுதபாணியா… அவங்க பாட்டி ஆடப்போற கண்கொள்ளா
சிவ தாண்டவ காட்சியை இவன்மட்டுமா தான் பார்க்க வேண்டியிருக்கும்ன்னு
சொல்லுடா?” மிரட்டல் ஒன்றை விடுக்க ஆரம்பித்தாள்.
அவள் கட்டையை நீட்டியதில் இருந்து இதோ இப்பொழுது பேசி முடிக்கும் வரை
கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த நித்திலனோ,
‘அச்சசோ… எங்க அப்பத்தாவை மறந்துட்டேனே! அது இதுக்கும் மேல ஆடுமே?’
என்று அரண்டவனாய் திரும்பி வீட்டிற்குள் ஓடினான்.
தலைதெறிக்க ஓடும் போதே, திசைக்கு ஒன்றாய் வாட்டர் பேக்கும், தெர்மாமீட்டரும்
பறந்தது.
பாலாவோ, எல்லாவற்றையும் உற்று கவனித்து அவனைவிட அதிவேகமாய் எதிர்
திசையில் ஓடியது.
அங்குதானே சந்தோஷியின் வீடு இருக்கிறது! அங்கே தானே அதை காப்பாற்றும்
ஆபத்பாந்தவன் இருக்கிறார்.
“ஹா… ஹா… மூணு பேருக்கும் அந்த பயம் இருக்கட்டும்!” என்றபடி கட்டைக்கம்பை
தூக்கி போட்டுவிட்டு நடையை கட்டினாள் சந்தோஷி.
4 Comments
Super… Wording style semma
SUPER
Nice
Nice n superb