உன் உயிரென நான் இருப்பேன்-2
2422
4
அத்தியாயம் – 2
உறக்கம் கலைவது
சில நினைவுகளால்…
அந்த நினைவுகள்
சுகமாவதும் சுமையாவதும்
நினைவுகளை தந்த உறவுகளை பொறுத்தே…
“ஸ்வீட்டி..! நீ என் உரிமை, யூ ஆர் மைன்.. நீ எனக்கானவள் உன்னை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். இந்த உலகின் மொத்த காதலும் சேர்த்து உன் ஒருத்திக்காக மட்டும் நான் தருவேன். ஸ்வீட்டி பேபி.. ஐ லவ் யூ..” என காதலுடன் அவன் அருகில் வர அவள் மனதினுள் பனி மழை பொழிந்தது போல் ஜிவ்வென்று இருந்தது. மையலுடன் தன் கண்களை மெதுவாக திறந்தவள் “மம்மி மா! மம்மீஈஈஈஈ மாஆஆஆஆ… என்ன வேலை பண்ணி வச்சிருக்கான்னு பாருங்க மா.. இடியட்” என கூச்சலிட்டபடி தலையனையால் தன் தம்பியை அடித்துக் கொண்டிருந்தாள்.
அத்தனை காதலுடன் அவள் ஒரு கனவு கண்டு கொண்டிருக்க. தன் புத்தகம் ஒன்றை எடுக்க இனியாவின் அறைக்கு வந்தவன் அவள் தூங்கியபடி சிரித்துக் கொண்டிருக்க அருகில் சென்றவன் பக்கத்து மேஜையில் இருந்த தண்ணீர் குவளையை எடுத்து அவள் முகத்தில் கொட்டி விட்டான். கனவு மயக்கத்தில் இருந்தவளது முகம் முழுவதும் நனைந்ததில் உணர்வு பெற்றவள் கனவு கலைந்த கோபத்தில் எழுந்து அம்மாவை அழைத்தபடி அவனை திட்டித் தீர்த்தாள்.
தன் மகளின் கூச்சலை கேட்டு சமைத்துக் கொண்டிருந்த லலிதா என்னவோ ஏதோ என்று மகளின் அறையை நோக்கி ஓடினார். அருகில் போகும் போதே அவருக்கு புரிந்து விட்டது. இது வருண் செய்யும் சேட்டை என்று.
“இனியா உனக்கு எத்தனை தடவை சொல்லி இருக்கேன் மம்மி மா னு கூப்பிடாதனு ஒன்னு அம்மானு சொல்லு இல்ல மம்மினு சொல்லு அதென்ன மம்மி மா” என்று அறைக்குள் நுழைந்தவர் “என்ன வருன் காலையிலேயே அக்கா கூட வம்பு பன்னிட்டு இருக்க? அவளை கொஞ்சம் நிம்மதியா இருக்க விட மாட்டியா” என அடிக்க கை ஓங்க ஓடிச் சென்று அக்காவின் பின்னால் மறைந்து நின்றான். அதற்கு மேல் அவளால் தன் தம்பியிடம் கோபம் கொள்ள முடியவில்லை.
“மம்மி அக்கா லூசு மாதிரி கண்ணை மூடி சிரிச்சிட்டே இருந்தா அதான் அப்படி பன்னிட்டேன். ஹா..ஹா” என்று வருண் சிரிக்க லலிதா அவன் தலையில் கொட்டினார்.
“விடு மம்மி மா….” என தாயின் பக்கம் திரும்பிப் பார்த்து நாக்கை கடித்தபடி “அம்மாஆஆ.. விடு என் கூட தானே விளையாடுவான் என் செல்ல தம்பில இவன்” என அவள் தம்பி தோளைப் பற்றி அணைத்துக் கொள்ள தாய் முறைத்துக் கொண்டிருந்தாள்.
“அப்போ எதுக்குடி இப்படி கத்தின. சண்டையும் போட்டுக்குவீங்க என்னனு கேட்க வந்தா அவன் முட்டாள். என்ன பசங்களோ” என தலையில் அடித்துக் கொண்டவர் சம
சமையலறைக்குள் தஞ்சமடையவும் கடை வீதிக்குச் சென்றிந்த தந்தை ஈஸ்வரன் உள்ளே வரவும் சரியாக இருந்தது.
தம்பியை துரத்திக்கொண்டு ஓடிவந்த இனியா உள்ளே வந்து கொண்டிருந்த தந்தை ஈஸ்வரன் இடித்துக் கொள்ள முறைத்துப் பார்க்க வெலவெலத்துப் போனாள்.
“எப்போ பாரு யாரையாவது தொந்தரவு பன்னிட்டே தான் இருப்ப. இப்போதான் உருப்படியா ஒரு வேலைக்கு போற? ஹும்.. உன் அம்மா பொண்ணு தானே நீ வேறு எப்படி இருக்க போற..காலையிலேயே..” என்று அலுத்துக் கொண்டவர் உள்ளே சென்று விட்டார்.
அவள் மனதில் ஒரே ஒரு கேள்வி தான் ஓடிக் கொண்டிக் கொண்டிருந்தது. ஏன் இவருக்கு என்னை கண்டாலே பிடிக்கிறதில்லை.? ஆயிரம் தான் இருந்தாலும் நான் இவரோட மகள் இல்லையே.. என தனக்குள்ளேயே கூறி மனதை தேற்றிக் கொண்டாள்.
இனியாவின் தாய் லலிதா ஒருவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். உலகின் பெண்களிலே நான் தான் அதிஷ்டசாலி என கூறும் அளவுக்கு அன்பான ஒருவரை கணவனை அடைந்திருந்தார் லலிதா. அவர்களுக்குள் அத்தனை காதல் அத்தனை புரிந்துணர்வு. ஆறு மாதங்கள் வரை தன் கணவன் கிருஷ்ணகுமாருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்தவர்களால் அதற்கு மேலும் சேர்ந்து வாழும் கொடுப்பினை இல்லை.லலிதா மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து போனார். இந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத லலிதா மனம் துவண்டு போனார்.
அவர் உயிர் வாழ்ந்தே தன் கணவனின் காதலுக்கு சான்றாக அவருள் வளர்ந்து வரும் குழந்தைக்காக மாத்திரமே. கிருஷ்ணகுமாரும் முன்னேற்பாடாக ஓரளவு சொத்துக்களை தன் மனைவியின் பெயரில் வாங்கி வைத்திருந்தார். தங்கள் மகள் படும் துன்பம் தாளாமல் லலிதாவின் பெற்றோர்கள் அவரை சேர்த்துக் கொண்டனர்.
இனியா பிறந்த பின் தன் மகள் மற்றும் பேத்தியின் எதிர்காலம் கருதி தன் தூரத்து உறவினரான ஈஸ்வரனை திருமணம் செய்து வைத்தனர். லலிதாவால் இந்த வாழ்வை எளிதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே இனியாவை அவருக்கு பிடிக்கவில்லை. வருண் பிறப்பின் பின்னர் நிலைமை இன்னும் மோசமாகவே லலிதாவால் பொறுத்துக் கொள்ள முடியாமல் கணவருடன் சண்டை போட துவங்கினார். வருணுக்கோ அக்கா என்றால் உயிர் இனியாவும் தம்பியை விட்டுக் கொடுக்க மாட்டாள்.. பிள்ளைகள் வளர ஆரம்பிக்க அதன் பின் தன் பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு கருத்தில் கொண்டு அமைதியானார். இனியாவும் அதற்கேற்ற வகையில் தன்னை மாற்றிக் கொண்டாள். இதுவே பழகியும் போனது.
வருணுக்கோ தன் தந்தை அக்காவை திட்டியது பிடிக்கவே இல்லை. இந்த அப்பாவுக்கு அக்காவை திட்டலைனா தூக்கம் வராதே. இந்த அப்பாவை..என மனதால் எண்ணிக்கொண்டு இனியாவை பார்க்க அவள் கண்கள் இரண்டும் குளம் கட்டி இருந்தன. அவள் மனநிலையை மாற்ற எண்ணி லலிதாவிடம் கூறிவிட்டு வெளியே அழைத்துச் சென்றான்.
******
இனியாவுக்கு சைக்கிள் ஓட்டுவது என்றால் அவ்வளவு பிடிக்கும். அதிக மகிழ்ச்சி என்றாலும் சரி கவலை என்றாலும் சரி தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள பூங்காவுக்கு சென்று ஓட்டிக் கொண்டு இருப்பது அவள் வழக்கம். இது அவளுக்கு பிடித்தமான ஒன்று.
அன்றும் அதே போல அவள் பூங்கா நடைபாதையில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு இருந்தவளது யோசனை முழுவதும் அன்று அவள் கண்ட கனவிலேயே இருந்தது. அந்த ஸ்வீட்டி என்ற அழைப்பு அவளுக்கு பிடித்திருந்தது. தன்னை காதலிப்பதை அத்தனை அழகாக சொன்னதே அந்தக் குரல். நான் அவனது உரிமை என்றதே. எதற்காகவும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டேன் என்றதே. உலகின் மொத்தக் காதலும் தன் ஒருத்திக்கு மட்டுமே என்றும் சொன்னதே.
இனியா அவள் பெயருக்கேற்றவாறு இனிமையானவள். மென்மையானவள். எப்போதும் புன்னகை சிந்தும் அவள் உதடுகள். அவளோடு ஒரு தடவை பேசினாலே போதும் அவளை பிடித்து விடும். அவளுக்கு காதல் மேல் நம்பிக்கை அதிகம்.
“அட அது யாரா இருந்தா நமக்கு என்ன. என்னை எல்லாம் யாரு உருகி உருகி காதலிப்பான். ஜஸ்ட் கனவு அதுக்கு போய் லூசுத் தனமா ஹய்யோ” தன் பின்னந்தலையில் அடித்துக் கொண்டாள் ஆனால் அந்தக் குரல் … அந்தக் குரல்.. அந்த அழுத்தம் நிறைந்த குரல்.. அது..என்று அதே யோசனையில் உழன்று கொண்டு இருக்க அவள் முன்னால் நடந்து போய்க் கொண்டிருந்தவர்களை கவனிக்கவில்லை. அவள் சைக்கிள் கட்டுப்பாடின்றி செல்ல தன் உணர்வு பெற்றவள் பிரேக் பிடித்து நிறுத்த முயன்று முடியாது போனது. முன்னால் தன் முன்னால் கைப்பேசியில் உறையாடியடி நடந்து சென்று கொண்டிருந்தவனின் மேல் மோதியது. அவள் மோதிய வேகத்தில் சற்று தடுமாறியவன் சுதாரித்துக்கொண்டு திரும்ப இனியாவால் சைக்கிளை நிறுத்த முடியாது போகவே சைக்கிள் ஒரு புறம் விழ அவள் அவன் மேலே சாய்ந்தாள். அவள் கீழே விழாமல் இவன் தாங்கிக் கொள்ள விழுந்த வேகத்தில் யாரென்று கூட பார்க்காது அவனது தோளை இருகப் பற்றியிருக்க அவனோ அவளது இடையை பற்றியிருந்தான். அவனது கைப்பேசியும் கீழே விழுந்து நொறுங்கி போனது.
விழுந்த அதிர்ச்சியில் அவள் கண்களை மூடியிருக்க அவன் அவள் இடையை அழுத்தி “பப்ளிக் ப்ளேஸ் மா எவ்வளவு நேரம் இப்படி இருக்க போற.. மேடம் கொஞ்சம் எழுந்திருக்க முடியுமா” என சிரித்துக் கொண்டே கூற உணர்வு வந்தவளாய் “ஓ சாரி” என எழுந்து அவனைப் பார்த்ததும் ஷாக் அடித்தவளாய் அப்படியே நின்று விட்டாள். அவள் மோதியது அபிநவ் ஆதித்யனையே.
“ஐயோ இவனா என்ன பண்ணப் போறானோ” என எண்ணிக்கொண்டே தன் ஆடைகளை சரி செய்தாள். ஸ்லீவ் லெஸ் டாப்பும் ஜீன்ஸும் அணிந்து லூஸ் ஹேரில் இருந்தவள் கலைந்திருந்த அவள் கூந்தலை ஒரு புறம் எடுத்து மார்புக்கு மேலாக போட்டுக் கொண்டாள். அவள் மெதுவாக அவளை பார்க்க அவன் மார்புக்கு குறுக்கே கட்டியபடி இவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
கீழே உடைந்து கிடந்த தன் ஐஃபோனை எடுத்தவன் முகத்தை சீரியசாக மாற்றி அவள் முகத்துக்கு நேரே தூக்கி காட்டி “உனக்கு வேற வேலையே இல்லையா? நீ எப்போ பாரு என்னோட பிராப்பர்டீஸ் டேமேஜ் பண்ணிட்டே இருக்க ஹும்.. அப்படி என் மேல என்ன கோபம்?” என ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டான்.
இவனுக்கு என்ன பதில் சொல்ல நான் என்ன சொன்னாலும் அவன் அதுக்கும் ஏதாவது சொல்லுவானே. கடவுளே! என்னை ஏன் இவன் கிட்ட அடிக்கடி கோர்த்து விடுற?.
“இங்கே பாருங்க சார்.. நான் வேணும்னு பண்ணல என்னோட சைக்கிள் ப்ரேக் வர்க் ஆகல. இல்லைனா நான் ஏன் உங்களை இடிக்கனும்? ஐ நோ என்னோட மிஸ்டேக் தான் பட் நீங்களாவது ஒதுங்கி இருக்க வேணாம். என்ன நடந்தாலும் என்னையே குறை சொல்றது ” என அவன் முகத்துக்கு நேரே கை நீட்டி படபடத்துக் கொண்டே போவளின் கையை எதிர்ப்பாராத நேரத்தில் அழுந்தப் பிடித்துக் கொள்ளஅவளது இதயம் ஒரு கணம் துடிக்க மறந்தது.
கையைப்பற்றி அவளை தன் கை வளைவுக்குள் கொண்டு வந்தவன் “யாருகிட்ட கைநீட்டி பேசுற? ப்ரேக் கூட இல்லாத ஓட்டை சைக்கிளை ஓட்டத் தெரியாம ஓட்டி வந்து என் மேல இடிச்சது மட்டும் இல்லாம என்னோட ஃபோனை வேற காலி பண்ணிட்ட. இதுக்கெல்லாம் யாரு காசு கொடுப்பா? “ என விடாமல் கூறினான்.
அவன் மூச்சுக் காற்று அவள் மீது பட அப்போது தான் உணர்ந்தாள் அவள் இருந்த நிலையை சட்டென உணர்வு பெற்றவள் “ஹேய்.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க? முதல்ல கையை விடுங்க. தெரிஞ்சவங்க யாராவது பார்த்தா… என்றவள் தன்னை அவனிடம் இருந்து விடுவித்துக் கொள்ள போராடினாள்.
“ அப்போ யாரும் பார்க்காத இடத்துக்கு போய் கையை பிடிச்சா ஓ.கேவா?” என அவன் கண்ணடித்து கேட்க அவளுக்கு பயம் தொற்றிக் கொண்டது.
என்ன இவன் தெரியாத ஒரு பொண்ணு கிட்ட இப்படி பேசுறான் சீ.. என எண்ணியவள் தன் கைகளால் அவன் மார்பில் ஊன்றி பலமாக தள்ளிவிட கிடைத்த சிறு இடைவெளியை பயன்படுத்தி அவன் பிடியில் இருந்து விடுபட்டாள்.
“ஹலோ மிஸ்டர்.. ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசனும்னு தெரியாதா? என்னை என்னனு நினைச்சு இப்படி உங்க இஷ்டத்திற்கு பேசுறிங்க? லுக் மிஸ்டர்” என தன் தலையை ஆட்டி கோபத்துடன் பேச அதை பார்த்துக் கொண்டே இருந்தவன் சிரித்து விட்டான்.
“ஹேய் இங்கே பாரு எனக்கு அங்கிள் சார் மிஸ்டர்னு எல்லாம் பெயரில்லை எனக்கு அழகா அபிநவ்.. அபிநவ் ஆதித்யன்னு ஒருபெயர் இருக்கு.” என அவன் அருகில் வர அவள் பின்நோக்கி நகர்ந்தாள்.
“சரி எனக்கு எப்போ கொடுக்க போற” என அவன் கேட்க கேட்பது புரியாமல் விழி உயர்த்தி கேள்வியாக இவனை பார்த்தாள்.
“ஐ மீன் என்னோட பொருட்களுக்கான காசு மா”என அவன் கண்சிமிட்டி சிரித்தான்.
என்ன ஒரு சிரிப்பு இப்படி சிரிச்சா இவனை நாள் பூரா பார்த்துக் கொண்டே இருக்கலாமே. அக்கணம் தான் இனியா அவனை முழுமையாக ஆராய்ந்தாள். தான் அண்ணார்ந்து பார்க்கும் அளவு அவன் உயரம்,கரு கருவென அடர்த்தியாக வளர்ந்திருக்கும் அவன் கேசம், அளவாக ஷேவ் செய்யப்பட்டிருக்கும் அவன் தாடி, கபில நிறக் கண்கள், அவன் சிரிப்பில் குழி விழும் கண்ணம். பார்த்தாலே தெரிந்து விடும் உடற்பயிற்சி செய்து அவன் கச்சிதமாக பேணும் அவன் உடம்பு. அன்று கோட் சூட்டில் வேறு மாதிரி தெரிந்தவன் ஜீன்ஸ் டீ சர்ட்டில் இன்னும் ஸமார்ட்டாக தெரிந்தான். தன் மனம் செல்லும் போக்கை எண்ணி தன்னையே திட்டிக் கொண்டாள் இனியா.
அவள் மேலும் மௌனமாய் இருக்கவே அபிநவ் பேச்சை தொடர்ந்தான்.
“ஓகே இப்போ உன்னை மன்னிச்சு விடுறேன். ஆனால் நீ எனக்காக ஒரு ஃபேவர் செய்யனும்..” என அவளை பார்க்க அவள் வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்துக்கு நேரே சொடக்கு போட்டு அழைத்தவனிடம் “ என் ஃப்ரண்டோட அண்ணா இந்தப் பக்கமா வந்துட்டு இருக்காரு என்னை உங்களோட பார்த்த தப்பா நினைக்க வாய்ப்பிருக்கு உங்களை சீட் பண்ண மாட்டேன் ப்ளீஸ் அபிநவ் இப்போ நான் போகட்டுமா?”என்று அவள் அங்கிருந்து நகர முயன்றாள்.
அபிநவ் என்று பெயர் கூறி முதல் தடவை அவள் அழைத்தது அவனுக்கே அவன் பெயர் அழகாக தோன்றியது. சட்டென்று அவள் கையை பற்றி நிறுத்தியவன் “சரி உன் பெயர் என்ன? அதை சொல்லி விட்டு போ” என கேட்க இனியா என்று கூறியதும் அவன் பிடி தளரவே விட்டால் போதும் என ஓடி விட்டாள்.
வழியில் தன் தோழி நிராஷாவின் அண்ணனை காண நேர அவனிடம் பேசி விட்டு தன் சைக்கிளையும் எடுத்துக் கொண்டு போனாள்.
அபிநவ்வின் கழுகுக் கண்கள் தீப் பிழம்பாக எரிய வேட்டையாடும் வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தது.
தொடரும்
அன்புடன் அபிநேத்ரா ❤
4 Comments
Expecting the next episode very soon
Thanks dr
Abhinav nallavana ila villana
Haha pakalame