Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

முட்டகண்ணி முழியழகி-11

முட்டக்கண்ணி – 11

 பனி தூவும் விடியலில் குயில் கூவும் அழகான காலை.. பலதரப்பட்ட பட்சிகள் இரைத் தேடிப் பறக்கும் இனிமையான காலைப் பொழுது….

 

அத்தனை நேரம் அமைதியாக  உறங்கிக் கிடந்த வானத்தை அசுரக் க்கூட்டம் வந்து அசைத்துவிட்டது போல் மேகங்கள் சிதறியோட, செங்குருதி சிந்தியது போன்று பரபரவென பகலவன் வெளிவரும்  இந்தக் காலைப் பொழுதிற்கு மட்டும் எத்தனை எத்தனை முன் அறிவிப்புகள்..

 

கணவன் மனைவி இருவருக்கும் அன்றைய விடியல் இனிமையாகவே விடிந்தது. இருவருக்குள்ளும் பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சினைகள் அப்படியேதான் இருந்தது. ஆனால் அதையும் தாண்டிய ஒரு நிரந்தர மகிழ்வை உணரத்தான் செய்தனர் அவர்கள்.

 

கணவன் சொன்னது போல இங்கே வைத்து எந்த ரசபாசங்களும் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாள் கனலி. அதோடு இவர்கள் சண்டைகள் பெரியவர்களுக்குத் தெரிந்தால், இருவரின் உள்நாட்டுக் கலவரங்கள் தெரிந்து, அதனால் வருந்துவார்கள் என்று தோன்ற, அவர்களின் நிம்மதி முக்கியம் என்பதை உணர்ந்து அப்போதைக்கு அந்த பிரச்சினைகளை விட்டு விட்டனர் இருவரும்.

 

ஊரில் இருந்த மீதி ஐந்து நாட்களும் விருந்தினர் வருகை, கோவில் நேர்ச்சை, உறவினர் வீட்டு விருந்து என எப்போதும் பிசியாகவே இருந்தது. வழக்கம்போல் அவளது துடுக்குத்தனமும், குறும்புத்தனமும் அவ்வப்போது தலையெடுத்து, நிலவனை டென்சன் பன்னத்தான் செய்தது.

 

அவள் ஆட்டத்தை ரசிக்கும் ரசிகனாய், கொட்டத்தை அடக்கும் காளையாய் அவனும் அவதாரம் எடுக்கத்தான் செய்தான். அதற்கெல்லாம் சேர்த்து மொத்தமாய் இரவில் ரவுன்ட் கட்டி உதை வாங்குவான் என்பது வேறு விசயம்.

 

இப்படியே இரண்டு நாட்கள் கழிய, மூன்றாம் நாள் இரவில், “பொம்மிம்மா வாலினி ஸ்ப்ரே இல்லை ஆயின்மென்ட் இருந்தா எடுத்து என் பக்கத்துல வச்சிட்டு படு, இல்லைன்னா அம்மாக்கிட்ட வாங்கிட்டு வந்து வச்சுடு முதல்ல.. அப்புறம் தேட முடியாது.. (எதுவோ ப்ளான் பன்னிட்டான், கனலியை சீன்ட..)” சீரியசான டோன் பையனுக்கு..

 

ஏன் மாமா, என்னாச்சு.? உடம்பு சரியில்லையா..? கார்ல தானே போனோம், அப்புறமும் என்ன..? முன்னாடி எப்பவும் அடிபட்டுடுச்சா..? அது இப்போ வலி எடுக்குதா..? தாங்கிக்குற வலிதானா..? இல்ல டாக்டர்கிட்ட போவோமா..? (வசமா மட்டப்போற.. போஎத்தனைக் கொஸ்டீன் யம்மாடி..)” அதே சீரியஸ் டோன் புள்ளைக்கும்..

 

மனைவியின் பதட்டத்தை ரசித்தவன், குறும்பு புன்னகையை உதட்டில் படறவிட்டு, முகத்தை மட்டும் மிகவும் பாவமாக வைத்துக்கொண்டு, “நீ வளச்சு, வளச்சு உதச்சு வச்ச இடமெல்லாம் கன்னிப்போய் காயமாகிடுச்சு பேபி, அதுக்கெல்லாம் ஆல்ரெடி ஆயின்மென்ட் போட்டுட்டேன், இனி வாங்கபோற உதைக்குத்தான் கேட்டேன்..” எனவும்..

 

டேய்டென்சன் பன்னாத, கொஞ்ச நேரத்துல என்னை எவ்வளவு பயப்பட வச்சுட்டஉன்னையெல்லாம் ச்சே..” என்று கடுகடுத்தப்படியே, அவளிடத்தில் படுக்க,

 

ஏய் லூசு.. நான் சீரியசா தன் சொல்றேன், நீ உதைச்ச உதை அப்படி, மார்னிங் டேப்லெட் எடுத்தேன் தெரியுமா..?

 

ம்ம்.. நெசமாவா சொல்றீங்க.. அப்படி பலமா எல்லாம் நான் காலை போட்டுருக்க மாட்டேன், நீங்க கலாட்டா பன்றீங்க..” குரலில் சோகம்.

 

அப்படி இல்லடி பொம்மிக்குட்டி, நீ சின்னப் பொண்ணா இருக்கும்போது ஓகே, இப்பவும் அப்படியேன்னா.. டர்ரு வாங்குதுல எனக்கு.. மாமா பாவாமா..? இல்லையா..? அதான் ஒரு ஐடியா திங் பன்னி வச்சுருக்கேன்.. ஆனா அதுக்கு முன்னாடி இந்த ஹேபிட் மாத்த எதுவும் முயற்சி செஞ்சியா அதை சொல்லு..”

 

முயற்சி செஞ்சியாவா.. எத்தனை தடவை தெரியுமா.. எல்லாமே ப்ளாப் ஆகிடுச்சு..: (பாவம் புள்ளதெரியாம சிக்கிட்டா அவன் ப்ளான்ல…)”

 

அதானே பார்த்தேன், என் செல்லக்குட்டி கண்டிப்பா ட்ரை பன்னிருக்கும்ன்னு நான் நினைச்சேன்..(அடப்பாவீஈஈஈ.. ஐஸ்..ஐஸ்..) மொத்தமா எல்லாத்தையும் சொல்ல வேண்டாம், ஒரு டூ, த்ரி மொமன்ட்ஸ் மட்டும் ப்ளீஸ்..”

 

சொல்றேன்ஆனா சிரிக்கக் கூடாது, யாருக்கிட்டயும் சொல்லக்கூடாது ரைட்…  ப்ராமிஸ்…”

 

நோ.. நோ.. மம்மி ப்ராமிஸ்யாருக்கிட்டயும் நோ பேச்சு.. நோ மூச்சு..”

 

ம்ம்உங்களை நம்பலாமாஉங்க ஆர்வத்தைப் பார்த்தா, வீடியோ செட் செய்து லைவ் டெலிகாஸ்ட் பன்ற மாதிரியே ஃபீல் ஆகுதே.. (அறிவுடி தங்கம்குட் கேர்ள்..” இழுவைக் குரல் அவளுக்கு.

 

நோடாபேபிமாநோ.. நோரியல்லி ட்ரஸ்ட் மீநீ என்னவெல்லாம் ட்ரை பன்னனு தெரிஞ்சாதான் என்னோட ஐடியா வொர்கவுட் ஆகுமா.. இல்ல ஊத்திக்குமான்னு எனக்குத் தெரியும்…”

 

ஓகே…  உங்களை நம்புறேன்அதனால நான் சொல்றேன்…  சரியா.. ஃபர்ஸ்ட் ரெண்டு காலையும் கட்டி வச்சிட்டுப் படுத்தேனா..? கையைக் கட்டாமா விட்டுட்டேன், தூக்கத்துல காலைக்கட்டினது மறந்துப் போயிடுச்சா..  எந்தக் கிறுக்கி இந்த வேலையெல்லாம் செஞ்சது.. ஒருவேளைக் கிழவிங்களா இருக்குமோன்னு டவுட், அதுங்கதான இப்படி லூசு ப்ளானிங்கெல்லாம் பன்னும், சோ அதுங்கதான்னு முடிவு பன்னி விடியவும் கச்சேரி வச்சிக்கலாம்னு நினச்சி, கட்டைக் கழட்டிட்டு வழக்கம்போல தூங்க ஆரம்பிச்சிட்டேன்..”

 

விடிஞ்சதும் தான் அது கிழவிங்க ப்ளான் இல்ல, என்னோட ப்ளானிங்ன்னு புரிஞ்சது அதுவும் லேட்டா.. நம்பர் ஒன்னு ஊத்திக்கிச்சா..”

 

அடுத்துக் கயைக் கட்டாம விட்டதுனால தான, கழட்டினோம், இன்னைக்கு கையையும் கட்டிட்டு படுத்துடுவோம், அதோட ரூமல படுத்தாதான, இவ்ளோ போர்க்களம், மொட்டமாடில போய் படுப்போம்ன்னு ப்ளான் பன்னி, தூங்கவும் செஞ்சிட்டேன்…”

 

தூங்கினேனாஅப்புறம்.. அப்புறம்மொட்டமாடில கொசு கடிக்கும்னு யோசிக்கல, கொசு கடியோ, கடின்னு கடிச்சிங், என் பாடிய பஞ்சர் ஆக்கிங்க்.. அப்பவும் நான் அசையலயே, கனலியை என்னனு நினைச்சிங்க் இந்தக் கொசுன்னு நான் வேர அலார்டிங், ஆனா காதுக்குள்ளயே ஒரு கொசு கோயிங் பாருஇதுக்கும் மேல கெத்து காட்டுனா.. மீ டெத்துன்னு நினைச்சு, பல்லால எல்லாக் கட்டையும் கழட்டி எரிஞ்சிட்டு ஓடிவந்து ரூம்ல படுத்திங்..” என் பாவனையாய், சீரியஸ் கதைபோல் சொல்லிக் கொண்டே வந்தவள், நிலவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிப்பதைப் பார்த்து, “பார்த்தியா இதுக்கு தான் நான் சொல்ல மாட்டேன் சொன்னேன்..” என சோகமாய் முடித்தாள்.

 

ஹா..ஹா.. ஏய் இல்லப்பா.. நீ சொல்லு, இதை எப்படி சிரிக்காம கேட்குறது, பட் சாரி, சாரி, இனி சிரிக்காம கேட்குறேன், நீ கன்டின்யு பன்னு..”  சிரிப்பை அடக்கியக் குரலில் அவன்.

 

ம்ம்என்னோட பொழப்பு, சிரிப்பா சிரிக்குதுன்னு சொல்ற, சரி சொல்லிக்கோ.. நீ தான சொல்ற.. அதனால மன்னிச்சு விடுறேன்..” (போனா போகுது உன்னை விடுறேன் மனோபாவம் அவள் குரலில்..)

 

ம்ம்ம்பேச்சியாத்தா (குலசாமி பேரு..) மன்னிச்சு விட்டுடு.. இப்போ உன்னோட ஸ்டோரிக்கு வா…”

 

க்கும்.. என்னத்த வர்ரதினமும் இப்படி புதுசு புதுசா ட்ரை பன்னேன், ஒன்னும் செட் ஆகல, பிறகு ஷாலினி கூட ஒரு நாள் படுக்குற மாதிரி ஆகிடுச்சு, எவ்வவோ எடுத்து சொல்றேன், கேட்டாதான, நானும் சொல்லி சொல்லி அலுத்துட்டு, பட்டாதான் திருந்துவேன்னு விட்டுட்டேன்..”

 

            “நடுராத்திரில பேய் மாதிரி ஒப்பாரி வைக்குறா.. நானும் அரண்டு போய் என்னனு கேட்டாநான் விட்ட உதைல, கீழ விழுந்து அடிபட்டிருக்கு, சொன்னாக் கேட்டாதான, இப்போ அவ கீழ, நான் மேல..”

 

எப்பவும் ஒருத்தர் ஏன் சொல்ராங்க, எதுக்கு சொல்றாங்கன்னு யோசிக்கனும், யோசிக்காம செஞ்சா அதோட பின்விளைவுகள் இப்படித்தான் இருக்கும்..” என்று அரும்பெரும் தத்துவத்தைப் பேசிவிட்டு,

 

            “சரி விடுங்க, நான் நிறைய ட்ரை பன்னேன், எல்லாம் ஃப்ளாப்போ ஃப்ளாப்.. அதை சொல்லவே நாளாகும்என் சொந்தக்கதை, சோகக்கதை விடு, இப்போ நீ சொல்லு, இந்த டிசிஸ்க்கு நீ என்ன ஐடியா யோசிச்சு வச்சிருக்க…” என்றபடியே அவள் இடத்தில் வந்துப் படுத்துக்கொள்ள,

 

அவனோ அவளதுப் பேச்சில், அடக்க மாட்டாமல் உருண்டு, புரண்டு சிரிச்சிங், அதில் கடுப்பாகிங் நம்ம கனலி பொண்ணு..  “ஹேய் எதுக்கு கெக்கபிக்க லாபிங்.. ஐம் ஹேட்டிங் யூ.. நீ கோ அவுட்டிங்.. நான் இன்சைடிங்…” எனக் கடுப்பாய் கத்தல் பொண்ணு.

 

            “அடச்சீ.. என்ன லாங்குவேஜ் இது லூசு.. வாயை மூடு.. நான் எதுக்கு சிரிச்சிங்னு, வில் டெல்லிங் ஃபார் யூ..” (அடேய்.. அடேய்அதை லூசுன்னு சொல்லிட்டு நீ என்னடா லூசு மாதிரி பன்ற..) மை மைன்ட் வாய்ஸ்.

 

இதோ பாருக்கா, சும்ம சும்மா என்னோட டையாலாக்குக்கு மட்டுமே வந்து நீ மைன் வாய்ஸ் கொடுக்குற, அந்தக் கொடுக்காப்புளிக்கு ஏன் கொடுக்குறதுல்ல.. சிவனேன்னு கிடந்தவன ஹீரோவா போட்டுட்டு, அப்படி இரு, இப்படி இருன்னு சொன்னா..? இதென்ன சினிமாவா..? இல்ல சீரியலா..? ஓவர் ஆக்டிங்க் பன்னி அடி வாங்க நான் ஆள் இல்ல கிளம்பு.. ஹீரோயின் உனக்கு வேர ஆளு கிடைக்கலயா

 

அழகா இருந்தா போதுமா, நீயே சொல்லு இந்த காப்படிக் கூட நான் எப்படி குடும்பம் நடத்த, நீயெல்லாம் கதை எழுதிக் கிழிச்சகிளம்பு கிளம்புஅந்த லூசு வேர (கனலி பொண்ணு) ஏதோ புலம்பிட்டு இருக்கு, கேட்டமாதிரியாச்சும் பாவ்லா பன்றேன், இல்லைன்னா அதுக்கும் எதாச்சும் ப்ளான் பன்னுவா, எப்படி டார்ச்சர் பன்றதுன்னு.. நீ இடத்தைக் காலி பன்னு.. கடுப்பு கடுப்பு  – நிலவன் மைன்ட் வாய்ஸ்.

 

            அடப்பாவி டேய்எப்படியெல்லாம் பேசுற, உன்னைய எல்லாரும் நல்லவன்னு நம்பிட்டு இருக்காங்கடா.. ஆனா நீ…? உன்னை வச்சு எப்படிடா கதையை முடிக்க போறேன்.. இப்போவே கண்ணக் கட்டுதே.. சீரியஸா போற எபிக்கு இவன் செட்டாக மாட்டான் போலயேஅடேய் அப்ரசன்டி கடைசி வரைக்கும் உனக்கு ஃபர்ஸ்ட் நைட்டே நடக்காதுடா, திஸ் மை சாபம், டேக் திஸ்.. – மீ

 

            தன்னிடம் பேசிக்கொண்டிருந்தவனின் முகத்தில் திடிரென எள்ளும் கொள்ளும் வெடிப்பதைப் பார்த்து, “மாமாமாமான்னு..” கத்த, அதில் உணர்வுக்கு வந்தவன், “என்னடி.. நொய்யி நொய்யினுட்டு..” என்றதும், காண்டாகிட்டா கருத்தம்மா. (டண்டனக்கா.. ஹேய்டண்டனக்கா…)

 

            “என்னது நொய்யி நொய்யினு நான் சொன்னேனா.. தேவைதான் எனக்கு, சும்மா தூங்க போனவள, உக்காரவச்சு தொண்டை தண்ணீ வத்துற வரைக்கும் பேச வச்சிட்டு, இப்ப  நான் நொய்யி நொய்யிங்குறேனாகுரங்கு…. போயா…”

 

            “குரங்கா.. நானா…. குரங்கு என்ன செய்யும்னு சொல்றேன் வைட்…” என்றவன் அப்படியே அவள் மேல் பாய்ந்து, மொத்தமாய் தனக்குள் சுருட்டி அனைத்துக் கொள்ள, திமிருவாள், திட்டுவாள் என்று பார்க்க, அவளும் அந்த அனைப்பில் அடங்கி, “எந்த ஊர் குரங்கு இப்படியெல்லாம் பன்னும்..” கிசுகிசுப்பான குரல் அவளுக்கு

 

            “உனக்குப் பிடிக்காதுன்னு நினைச்சேன், என்மேலக் கோபமா வேற இருக்கஅதான் அடுத்து எப்படி லீட் பன்னனு கொஞ்சம் குழப்பம், அதோட நம்ம வீட்ல, நம்ம ரூம்ல நீயும் நானும் மட்டும் இருக்கும் போது இதெல்லாம் நடக்கனும்னு எனக்கு ஆசைஆனா இப்போ, இந்த செகண்ட் நீ வேனும்னு தோனுது, அதை எப்படி கேட்கன்னு பயம்.. உன்னை வேண்டாம்னு சொல்லிட்டு, நான் இந்த மாதிரி உன்னை அப்ரோச் பன்றேன், இதுக்காக மட்டுமே நம்ம மேரேஜ் நடந்துச்சுன்னு நீ நினைச்சிடக்கூடாதேன்னும் ஒரு பயம்.” உண்மையாய் வருத்தமான குரலில் அவன்.

 

            இப்போதைக்கு இந்தப் பிரச்சினையை இங்கே ஆரம்பிக்க வேண்டாம். அதுதான் அங்கே போய் பேசலாம் என்றானே, அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள்அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு, “நீங்க என்ன ப்ளான் பன்னிருக்கீங்கன்னு இன்னும் சொல்லவே இல்ல..” அதேக் கிசுகிசுப்புக் குரல். எப்படியும் வில்லங்கமாகத்தான் யோசிச்சிருப்பான் என்று தெரிகிறது பெண்ணவளுக்கு..

 

அவள் தனக்காக பார்க்கிறாள் என்று அவனுக்கும் புரிகிறது தானே, அதையே தொடரும் பொருட்டு அவனும்ஆஹான்…. என் கோவக்காரக் கிளி எங்க போச்சாம்….” சரசமேரியிருந்தது அவனில்மெல்ல மெல்ல அவளது முகவடிவைத் தன் விரல்களால் அலைந்தவன், தன் இருகால்களுக்கு இடையிலும் அவளது கால்களை கொண்டுவந்து, மனைவியின் கைகள் இரண்டையும் தன் முதுகில் படறவிட்டு, அவள் காதில்இதுதான் என்னோட ப்ளான்..” என ரகசியமாக்கினான் வார்த்தைகளால்அவனையும் கவிஞனாக்கியது அவளது பால் முகம். அவனது தீண்டலில் மெல்ல மெல்லக் கரையத் துவங்கனாள் அவனவள்..

 

பாலாடையால் செய்த சிற்பமவள்கருகருவென கார்மேகமாய் அலையும் கார்கூந்தல், பிறைநிலவை எடுத்து ஒட்டி வைத்தாற் போன்றதொரு நெற்றி.. ஓவியனின் கையில் சரசமாடும் தூரிகையாய் அவள் இமைச்சிறகுகள்.. கந்தர்வனையும் களவாடிக் கொள்ளும் காந்தக் கண்கள்ரோஜாக்கள் மொத்தத்தையும் ஒன்றாய் அரைத்து கூழாக்கியது போல் மிருதுவான கன்னம்..  கவியோடினைந்து கவிபாட தூண்டும் இதழ்கள்.. முத்தமிட முன்னேறினால், கூர் நாசியும் ஆயுதமாகுமோ என்றதொரு அச்சம்கபடமில்லா புன்னகை, பார்ப்பவர்களையும் தன்னோடு சிரிக்க அழைக்கும் முத்துப் பற்கள்..  வலம்புரி சங்கினை ஒத்த வெண்சங்கு கழுத்து.. இன்னும் அதற்கு கீழெ என்ன..? அதற்கும் கீழேம்ஹூம்.. பொறுமை பறந்திருந்தது… 

 

வீணையாய் மீட்ட ஆரம்பித்தான்.. சுரம் தப்பாமால் அவளிடம் தன்னை கொடுத்து, அவளை எடுத்து என அழகாய் ஆரம்பித்திருந்தது அவர்களது இனிய தாம்பத்தியம்.
1 Comment


  • Notice: Undefined offset: 180 in /home/sahaptham.com/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
    Vidya Priyadarsini says:

    Nice update…..

error: Content is protected !!