Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உன் உயிரென நான் இருப்பேன்-14

அபிநவ்வின் கார் ஒரு வீட்டின் முன்னே போய் நின்றது. இறங்கு என்று சைகை செய்தவன் தானும் இறங்கிக் கொண்டான். அவ்வீட்டின் முகப்புத் தோற்றமே அவளை பிரமிக்க வைத்தது. அவளுடைய கையை பற்றி முன்னேற அவனுடன் இணைந்து நடந்தாள் இனியா. அவன் பக்கம் திரும்பி இது யாருடைய வீடு என கேட்க வாயை திறக்க முற்பட ,

 

“ஹாய் இனியா வெல்கம்” என ஒரு பெண்ணின் குரல் அவளை வரவேற்றது. அக்குரல் வந்த திசையில் திரும்பிப் பார்க்க அந்த வீட்டு வாசலில் ஓர் பெண் நின்று அவளை நோக்கி அழகான புன்னகையை சிந்திக் கொண்டிருந்தாள்.

அவர்கள் அருகில் சென்றதும், இனியாவின் குழப்பத்தை போக்கும் முகமாக,

இனியா இவங்க ஆர்த்தி விக்ரமோட சிஸ்டர்” என்று அபிநவ் அறிமுகம் செய்து வைத்தான்.

“ஓ அப்போ இது விக்ரம் அண்ணாவோட வீடா?” என்றவள் தொடர்ந்து சிரித்தமுகமாகவே ஆர்த்தியை நோக்கி,

“இங்கே வர்றதா அபி சொல்லவே இல்லையே. அப்புறம் எப்போ சிங்கப்பூரில் இருந்து வந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டிருக்க விக்ரமின் அன்னை ஜெயவாணி அவ்விடம் வந்து சேர்ந்தார்.

 

“என்ன ஆர்த்தி முதல் தடவையாக வீட்டுக்கு வந்திருக்க பொண்ணை வாசல்லேயே நிற்க வைச்சி பேசிட்டு இருக்கியே..” என்று தன் மகளை கடிந்தவர் இனியாவையும் அபிநவ்வையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

 

“ஹேய் இனியா நீ ரொம்ப அழகாக இருக்க? அபி சீக்கிரமா கல்யாணம் கட்டிக்கனு நான் தான் டார்ச்சர் பண்ணிட்டு இருப்பேன். கல்யாணமே வேணாம் லைஃப் லோங் இப்படியே தான் இருக்க போறேனு சொல்லிட்டு இருந்தவன் உன்னை பார்த்ததும் விழுந்துட்டான். பட் இனியா யூ ஆர் ரியலி லக்கி அபி மாதிரி ஒரு பையன் கிடைச்சிருக்கான்” என்று அபிநவ்வை பற்றி தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் அவளிடம் கூற அவளுடைய பார்வை தன் கண்ணாளனை நோக்கிப் பாய்ந்தது .

 

அவனோ அங்கே ஆர்த்தியின் கணவரிடமும் குருமூர்த்தியிடமும் சந்தோசமாக பேசிச் சிரித்த வண்ணம் இருந்தான். ஆர்த்தியின் சகஜமான உரையாடல் அவளுக்கும் பிடித்து விட அவளும் அதில் கலந்து கொண்டாள்.

 

அங்கிருந்த அனைவருக்கும் அவளது வருகையால் அந்த இடமே கலகலவென்று இருப்பதை போன்ற உணர்வு. ஆர்த்திக்கும் சரி ஜெயவாணிக்கும் சரி இனியாவை ரொம்பவே பிடித்துப் போய் விட்டது. அத்தனை பேர் மத்தியிலும் அபிநவ்வின் கண்கள் தன்னவளையே சுற்றிக் கொண்டிருந்தது.

 

அந்நேரம் ஒரு குழந்தை “ ம்மீஈஈ…” என கண்களை தன் புறங்கையால் கசக்கிய வண்ணம் அழுது கொண்டு வர  குழந்தையருகே ஓடிய ஆர்த்தி தூக்கி அணைத்துக் கொண்டவள், இனியாவை நோக்கி,

 

“ இது என்னோட பையன் மிரான்.” என்று தன் குழந்தையை அறிமுகப் படுத்தி வைக்க, அக்குழந்தை தன் முத்து மூரல்கள் தெரியும் வண்ணம் அழகாக புன்னகைத்தது. இனியாவுக்கோ அக்குழந்தையை விட்டும் கண்களை  அகற்றவே முடியவில்லை. குழந்தையை தூக்கும் ஆசையில் சட்டென கையை நீட்ட அக்குழந்தையும் மறுக்காமல் அவளிடம்  தாவியது. அவளிடம் வந்த குழந்தைகள் தன் மழலை குரலில் “வெய்ய போ.” என வெளியே கையை நீட்டிக் காட்டியது.

 

“ஐயோ மிரான் செல்லம்.. அம்மா கிட்ட வாங்க. ஆன்ட்டி பாவம்.” என்று குழந்தையை அழைக்க வேண்டாம் என மறுத்த இனியா குழந்தையை கொஞ்சிய வண்ணம் தோட்டத்திற்குச் சென்றாள்.

 

குழந்தையின் விளையாட்டுக்களை ரசித்தவள் அதனுடன் ஒன்றி போனாள். குழந்தையை அள்ளி அணைத்து அதன் குண்டு கண்ணத்தில் இதழ் பதித்த வண்ணம் இருக்க அவள் இடையை பற்றி இழுத்து வயிற்றோடு அணைத்துக் கொண்டது ஓர் வலிய கரம்.  எதிர்பாராத இச் செய்கையில் தூக்கிவாரிப் போட்டாலும் அவளுக்குத் தெரியும்  இது  அவளுடைய செல்ல கிறுக்கன் தான் என்று.

 

“அபி என்ன பண்றடா? யாராவது பார்த்தாங்கனா..” என்று அவள் அவனிலிருந்து விடுபட முயன்ற வண்ணம் கூறிக் கொண்டிருக்க,

 

“பார்த்தா என்ன? நான் கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணை தானே இப்படி அணைச்சிட்டு இருக்கேன்.” என அவள் காதருகே குணிந்து ஹஸ்கி வாய்ஸில் கூற அந்த குரல் தந்த மயக்கத்தில் ஒரு கணம் தடுமாறியவள்,

 

“அபி நோ பேபி வேற கையில இருக்கான். ப்ளீஸ் என் செல்லம்ல விடுடா..” என்று கெஞ்ச,

 

“ஓகே விட்றேன் ஆனால் அந்த பேபிக்கு கிஸ் கொடுத்த மாதிரி இந்த பேபிக்கு ஒரு கிஸ் கொடு விட்றேன்.” என அதே குரலில் மீண்டும் கூறினான்.

 

முத்தம் கொடுக்காமல் விட மாட்டான் போலிருக்கே என்றெண்ணியவள், “ ஓகே கையை எடுங்க பர்ஸ்ட்” எனக் கூற அவன் கையை எடுத்ததும் குழந்தையை கீழே இறக்கி விட்டு அவன் புறம் திரும்பி ஒரு பக்க கண்ணத்தை கையில் ஏந்திய வண்ணம் மறு கண்ணத்தில் பசக் என இதழ் பதித்தாள்.

 

தன் காதலி கொடுத்த அந்த ஒற்றை முத்தத்தில் கிறங்கியவன் அப்புற் தரையில்  தொப்பென அமர்ந்து கொண்டான். அவளையும் இழுத்து அவனருகில் அமர வைத்துக் கொள்ள, அவள் குழந்தையை தன் மடியில் வைத்து கண்ணம் கிள்ளி விளையாக் கொண்டே,

 

“ அபி மிரான் பேபி செம்ம கியூட்ல… பாருங்களேன் எவ்வளவு சபியா இருக்கானு..” என்றபடி குழந்தையின் ஒவ்வொரு செயலையும் ரசணையுடன் விளக்கிக் கூறிக் கொண்டிருந்தாள்.

 

அவள் பேசும் போது அவளது விரியும் நயனங்களையும் அதரங்களையும் ஓரக் கண்ணால் நோட்டமிட்ட வண்ணம்,

“ஸ்வீட்டி.. அப்போ நம்ம குழந்தையும் உன்னை மாதிரியே அழகா இருக்கும்ல? நீ நான் பேபி எவ்வளவு சந்தோசமா இருக்கும்..” என புன்னகையுடன் கேட்க, அதில் முகம் சிவந்தவள் அவன் தோளோடு தன் தோளை வெட்கத்தில் சாய்த்துக் கொண்டாள்.

 

அவனது கன்னத்தை வருவடியவள்,

“அபி.. சிரிக்கிறப்போ இந்த மாதிரி கன்னத்தில குழி விழுற குட்டி அபி தான்  எனக்கு வேணும்.. ரெண்டு குட்டி அபிஸ் ” என்று கண்கள் மூடி அவன் கன்னத்தோரம் தன் கன்னத்தை இழைந்த வண்ணம் கூறினாள்.

 

அவள் கண்கள் மூடிய காதல் குழைவினை இரசித்துக் கொண்டே அவனும், “அது என்ன குட்டி அபி.. உன் சாயல்ல குட்டி இனியா வேணாமா?” என்று கேட்டவன் அவள் தோளில் கையிட்டான்.

 

அவன் முகத்தை நிமிர்ந்து மையல் மாறாமலே நோக்கியவள் அவன் நாடியை பிடித்தாட்டியபடி,

“எனக்கு உங்க முக ஜாடையில உங்களை மாதிரி  தான் வேணும்பா. அப்போ தான் உங்களை கேர் பண்ற மாதிரியே அவங்கள இன்னும் ரொம்ப கேர் பண்ண தோணும். உங்களையும் உங்களோட இந்த சிரிப்பையும் எனக்கு ரொம்ம்ப்ப்பப பிடிக்கும்ல சோ பேபியும் அப்படியே உங்களை மாதிரியே இருக்கனும்” என்று கூற அவன் அவளையே இமைகொட்டாது பார்த்துக் கொண்டிருந்தான்.

 

தன் சாயலில் தான் குழந்தை வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கும் அளவுக்கு தன் மேல் சொல்லில் அடங்காத அன்பா? என வியந்து போனான் அவன்.

 

“ ஆனா எனக்கு ஒரு குட்டி இனியாவும் வேணுமே..?” என அவள் சாயலிலும் ஓர் குழந்தைக்கும் ஆசைப்படுவதை கூற அவனுடைய வருங்காலம் பற்றிய பேச்சில் மகிழ்ந்தாலும் அவனது கிச்சு கிச்சு மூட்டச் செய்யும் அந்தக் குரலில் சற்றே நெளிந்தாள்.

 

அவன் முகத்துக்கு நேராக தன் மூன்று விரல்களை ஆச்சர்யத்துடன் காட்டி,

“அப்டீன்னா மூனா அபி?” என்று கேட்க அவனும் குழந்தை போல “ம்..ம்ம்” என்று தலையாட்டினான்.

அவளும் “ம் ஓகே” என்று குழந்தை போலவே தலையாட்டிக் கூற அவளுடைய சின்னக் குழந்தை போல செய்கையில் மகிழ்ந்தவன் அவளுடைய ரோஜா பட்டிதழ்களை போல மென்மையான கன்னத்தில் முத்தம் வைத்தான்.

 

திடீரென குழந்தையின் சிணுங்கலில் சுய உணர்வு பெற்றவர்கள்  ஒருவரை வருவர் பாரத்து புன்னகைத்தபடி  வீட்டை நோக்கி நடந்தார்கள்.

அவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்ட ஆர்த்தி இனியாவையும் அபிநவ்வையும் சாப்பாட்டறைக்கு வழி நடத்திச் சென்றாள். சாப்பாட்டு மேசையில் இருந்த உணவுப் பொருட்களை கண்டதும் அவள் மயங்கி விழாத குறை தான். சைவம் அசைவம் என எல்லா வகையான உணவுகளும் இருக்க காலையில் வருண் கூறியது தான் ஞாபகத்தில் வந்தது

அனைவரும் உண்பதற்காக மேசையை சுற்றி அமர்ந்து கொள்ள இனியா அபிநவ்வின் பக்கத்திலேயே அமர்ந்து கொள்ளும்படியாயிற்று.

 

“அப்பா விக்கி எங்கே? டூ டேய்ஸா வீட்டுப் பக்கம் கூட வரலை.. இப்போ கூட வீட்ல இல்லையே. ஆஃபீஸ்ல ரொம்ப வர்க்கா?” என தன் நண்பன் அங்கு இல்லாததால் குருமூர்த்தியிடம் விசாரித்தான்.

 

“ அப்படினு இல்லைப்பா.. ஆஃபீஸ் வர்க்லாம் எப்பவும் போல தான். ஆனா அவன் ஏதோ டென்ஷன்ல இருக்கான்னு தோனுது.” என்றவர் சாப்பிடுவதை தொடர்நதார்.

 

“ஆமா அபி.. நாங்க வந்து த்ரீ டேய்ஸ் ஆச்சு பட் அவனை கண்ணால பார்க்குறதே ரொம்ப ரேர். லேட் நைட் தான் வீட்டுக்கு வரான்.  அபி நீ கொஞ்சம் அவன் கிட்ட என்ன தான் பிரச்சினைனு கேட்டு பாரு..”என ஆர்த்தியும் தன் பங்குக்கு விக்ரமை பற்றி கூற அபிநவ்வுக்கோ ஒன்றும் புரியவில்லை.

 

பொதுவாக விக்ரம் அப்படி இருப்பவனல்ல. எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும் பெரிதாக அலட்டிக் கொள்ளவே மாட்டான். அப்படிப்பட்டவன் இந்த மாதிரி நடந்து கொள்கிறான் என்றால் நிச்சியம் இது ஏதோ பெரிய பிரச்சினையாக இருக்க வேண்டும் என்றே அவனுக்குத் தோன்றியது. அவனிடம் அது குறித்து கட்டாயம் பேச வேண்டும் என எண்ணிக் கொண்டவன் சாப்பிடுவதை தொடர்ந்தான்.

 

இப்படி அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரம் ஆர்த்தியின் மடியில் இருந்த குழந்தை ஆர்த்தியை அண்ணாந்து நோக்கி,

 

“மம்மீ.. ஆன்டி மிரு குட்டிக்கு கிச் இங்க” என தன் கன்னத்தை தொட்டுக் காட்டி மறுபடியும் அதன் முன் முத்து மூறல்கள் தெரியச் சிரித்தது. மூன்றே வயதான குழந்தையின் பேச்சும்  சிரிப்பும் அனைவரையும் ஈர்க்க குழந்தையையே பார்த்த வண்ணம் இருந்தனர்.

 

மீண்டும் ஆர்த்தியை அண்ணாந்து நோக்கிய குழந்தை, “ம்மீ.. ஆன்ட்டியும் அங்கிள்கு இங்க கிச்.. அங்கிளும் ஆன்டிக்கு இங்கே கிச்..” என்று தான் கண்டதை அதன் சின்னக் குரலில் அழகாக கூற இனியாவுக்கும் அபிநவ்வுக்கும் சாப்பாடு இறங்காமல் தொண்டையில் சிக்கிக் கொண்டது போல் உணர்வு.

 

அவர்கள் அனைவரும் இவர்கள் இருவரையும் திரும்பிப் பார்க்க இனியாவோ கண்களை மூடிய தலை குனிந்த வண்ணமே இருக்க அபிநவ்வோ என்ன சொல்வதென தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.

 

நல்ல வேளை அந்நேரம் குருமூர்த்தி மாத்திரம் இருக்கவில்லை. ஏஆர்த்திக்கும் அவள் கணவருக்கும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் போக ஒரே நேரத்தில்  கோரஸாக குபீர் சிரிப்பு வெளியானது.

 

“என்ன அபி.. இதுக்காக தான் தோட்டத்தை சுத்தி காட்றேன்னு அவ பின்னாடியே ஓடினியா?” என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் ஆர்த்தியின் கணவர் அவனிடம் கேட்க, அவனுக்கோ அவர்கள் முன்னிலையில் அசடு வழியும்படியாயிற்று. அவருடன் சேர்ந்து ஆர்த்தியும் இருவரையும் கலாய்க்க இனியாவோ உணவு உண்டு முடிக்கும் வரை தலை நிமிரவே இல்லை.

 

இரவுணவை முடித்துக் கொண்டு அவர்கள் அனைவரிடமும் விடை பெற்றுக் கிளம்பினார்கள். இனியாவை வீட்டில் இறக்கி விட்டவன் விக்ரமிற்கு அழைப்பை மேற்கொண்டான். ஆனால் மறுமுனையில் கணினி பெண்ணின் குரலே கேட்டது.

 

ஒரு வேளை நிராஷாவுக்கும் விக்ரமிற்கும் இடையில் ஏதாவது பிரச்சினையாக இருக்கக்  கூடுமோ என்றும் தோன்றியது.  ஏதோ ஞாபகம் வந்தவனாய்  வண்டியை கிளப்பியவன் நேரே வண்டியை விக்ரமின் பிளாட்டிற்கு சென்றான்.

 

மூன்று முறை அழைப்பு மணியை அழுத்திய பின்னர் கதவை திறந்தான் விக்ரம். அவனை பார்த்ததுமே புரிந்தது அவன் குடி போதையில் இருக்கிறான் என்று. அவனையும் தள்ளிக் கொண்டே உள்ளே வந்தவன் விக்ரமை ஏகத்துக்கும் முறைத்து வைத்தான். அவனோ தன் நண்பனின் பார்வை வீச்சை தாங்க மாட்டாதவனாய் தலையை குனித்துக் கொண்டான்.

 

அவன் தற்போது இருக்கும் நிலையில் எதையும் பேச முடியாது என விக்ரம் வீட்டிற்கும் இனியாவுக்கும் அழைப்பெடுத்துக் கூறியவன் அன்றிரவு விக்ரமுடனேயே தங்கினான்.

 

தொடரும்..

அன்புடன் அபிநேத்ரா..❤

 

Share you comments here
Comments are closed here.

error: Content is protected !!