Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed தீயாய் சுடும் என் நிலவு!

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
அனைவருக்கும் வணக்கம்!

நீண்ட நாட்களுக்கு பின் என் கதையை இங்கே பதிவிட வந்திருக்கிறேன்...😍😍

உண்மையான அன்பின் அருமை விலகி இருக்கும் பொழுது புரிந்து நரகமாய் கொல்லும்... இங்கே யாரின் அருமை யாருக்கு புரிய வேண்டும்...

என்பதை கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள்...


அன்புடன்
தர்ஷினிசிம்பா (மழைநிலா)
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
அத்தியாயம் 1:

"அப்பா! இப்போ என்னப்பா அவசரம்? இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள கல்யாணம்னு சொல்றிங்க?" என்றாள் மிருதி தன் கனவு நிராசையாய் போவது போல் எண்ணி..

"டேய்! பொண்ண பெத்த அப்பனோட கனவே பொண்ணுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரனும்னு தான்டா. நீ படிக்கணும்னு ஆசைப்பட்ட, படிக்கவச்சேன். உன் சொந்தக்காலில் உன்னால நிக்கமுடியும்னு உனக்கு நம்பிக்கை கொடுக்க தான்." என்றார் மகளின் தலையை கோதியபடி சீனிவாசன்.

"ஹ்ம்ம்... ஏன்பா எனக்கு இன்னும் கல்யாணம் பண்ணலைன்னு யாராவது ஏதாவது சொல்றாங்களா?" என்றாள் சந்தேகமாக.

"அதெல்லாம் ஒன்னுமில்லைம்மா உனக்கும் வயசாகிட்டே போகுது. அதான்" என்றார்.

சிறிதுநேரம் அவரையே பார்த்து கொண்டிருந்தவள்.

"சரிப்பா நான் கல்யாணம் செஞ்சுகிட்டா உங்களுக்கு சந்தோஷம்னா நான் பண்ணிக்கிறேன்." என்றாள் மிருதி.

"மிருதிக்குட்டி நிஜமாவாடா. எனக்கு ரொம்ப சந்தோஷம்டா" என்றார் விழிகளில் மகிழ்ச்சி நீரோடு.

"உங்க அத்தைக்கு உன்னை மருமகளாக்கிகனும்னு ரொம்ப ஆசை. உனக்கு படிப்பு முடிஞ்சதுலர்ந்து கேட்டுட்டே இருக்கா. நான் தான் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லிருந்தேன். நீயும் சம்மதிச்சிட்ட. இனி எல்லாம் நல்லபடியா நடக்கணும்." என்றார் சந்தோஷமாய்.

" யாரு அந்த நெட்டகொக்கா மாப்பிள்ளை. இதுக்கு நீங்க என்னை பாழுங்கினத்துல புடிச்சி தள்ளிவிடலாம்பா. அவனுக்கும் எனக்கும் சின்ன வயசுல இருந்தே ஆகாது. வேற யாரை வேணா கல்யாணம் பண்ணுவேன். ஆனா, அவனை மட்டும் என்னால கல்யாணம் பண்ணமுடியாது." என்று பொறிந்தாள் மிருதி.

"மிருதி மாப்பிள்ளையை அப்டிலாம் பேசக்கூடாது. சின்ன வயசுல போட்ட சண்டையை வச்சு இப்போ யாராவது முடிவு பண்ணுவங்களாம்மா? இப்போ பையன் ரொம்ப பொறுப்பாகிட்டான். ஆஸ்திரேலியா ல இருக்கான்." என்றார் பெருமையாய்.

"என்னது ஆஸ்திரேலியாவா? என்னப்பா என்னை அவ்ளோ தூரம் கல்யாணம் பண்ணி அனுப்பி வைக்கணும்னு எப்டிபா முடிவுபண்ணிங்க?" என்றாள் அழ தயாராக.

மகளின் தோளில் கரம்போட்டு அணைத்துக்கொண்டவர்.

"டேய் அதை நான் யோசிக்காம இருப்பேனா? அவரோட டைம் இன்னும் ஒரு வருஷம் தான். அதுக்கப்புறம் இங்க தான் சொந்த பிசினஸ் செய்யப்போறார்." என்று சிரித்தார்.

"சரிப்பா" என்றாள்.

"அத்தை மத்த சடங்கு சம்பரதயம்லா வேணாம்னு சொல்லிட்டா. அடுத்த இருபதாவது நாள் நல்ல முகுர்த்தம் வருது. மாப்பிள்ளையும் இன்னும் ஒருவாரத்துல வரார். அவருக்கு பத்து நாள் தான் லீவு இருக்காம். அதனால எல்லாம் சிம்பிள்லா பண்ணிடலாம்னு சொல்லிட்டாங்க. " என்றார்.

"அப்பா என்னப்பா ஷாக் மேல ஷாக் கா தரிங்க. இன்னும் இருபது நாள் தான் இருக்கா" என்றாள் கண்ணீரோடு.

"நீ எதுக்கும் கவலை படாதடா. அப்பா எல்லாத்தையும் பார்த்துக்குறேன்" என்று வெளியே சென்றார்.

அவசர மேனியில் திருமணமும் நடந்தேற, இந்த இருபது நாளில் ஒரு முறைகூட நெட்டை கொக்கு மிருதியை காண நேரில் வரவில்லை, போனிலும் பேசவில்லை என்பது மிருதிக்கு எதுவோ போல் இருந்தது.

மணமேடையில் தான் முதல் முதலாக அவனை கண்டாள்.

ராஜகுமாரன் என்று கூறமுடியாது ஆனாலும் அழகிய ஆண்மகன்.

அவன் அருகினில் நிற்கும்பொழுது உயிருக்குள் சென்று எதுவோ குடைவது போல் ஒரு உணர்வு.

திருமணவாழ்க்கை அழகாக ஆரம்பித்தது அவள் பயத்திற்கு அர்த்தங்கள் இல்லாமல் செய்தான் அவளின் கணவன் தீரன்.

அழகாய் பேசி அன்பாய் நடந்து அவளின் மனதில் நிரந்தரமாய் புகுந்து கொண்டான்.

சந்தோஷமாய் மூன்று மாதங்கள் முடித்துவிட, தீரன் திடிரென்று ஒரு நாள் மது அருந்திவிட்டு வந்தான்.

"என்ன தீரா, இது புது பழக்கம்?" என்றாள் அதிர்ச்சியாக எரிச்சலுடன்.

"சாரி டி. ஆபீஸ்ல இன்னைக்கு பார்ட்டி. நான் எவ்ளோ சொல்லியும் கேக்காம குடிக்க வச்சிட்டாங்க. இனி இதுமாதிரி நடக்காம பார்த்துக்குறேன்." என்றான் தீரன்.

தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தீரனின் குழந்தை கெஞ்சலில் கரைந்து போனாள்.

"சரி. இதுதான் கடைசி." என்றாள்.

"ஓகே" என்று சிரித்தபடி உறங்கி போனான்.

ஆனால், அதற்குப்பிறகு மூன்று மாதங்கள் எந்த சிக்கலும் இல்லாமல் நகர, மீண்டும் தினம் ஒரு காரணம் என்று மது அருந்திவிட்டு வர ஆரம்பித்தான்.

என்ன கூறியும் என்ன செய்தும் தீரனின் பழக்கம் மாறவில்லை.

மது அருந்திவிட்டால் மிருதி இருக்கும் அறைக்குக்கூட வரமாட்டான்.

தீரனுக்காக ஆசை ஆசையாக சமைத்துவைத்து காத்திருக்க அதைப்பற்றி எண்ணம் துளியும் இல்லாமல் சுயநினைவு இல்லாமல் இருப்பான்.

காத்திருப்புகள் அதிகமாகி ஏக்கங்களாய் மாறின.

மிருதியிடம் ஓரிரண்டு வார்த்தைகள் மட்டும் பேசுவதோடு நிறுத்திக்கொள்வான்.

பேருக்கு என்று திருமண வாழ்க்கையை இருவரும் கழிக்க ஆரம்பித்தனர்.

என்ன காரணம் என்று எவ்வளவு முயன்றும் மிருதியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

சோகங்களை சொல்லி அழ சொந்தங்களும் அருகில் இல்லாமல் காதலாய் பார்க்கவேண்டிய கணவனின் அன்பும் இல்லாமல் பித்து பிடிப்பது போல் தோன்றியது மிருதிக்கு.

தூரத்தில் இருக்கும் பெற்றோரிடம் கூறி அவர்களை கலங்கடிக்க விரும்பாமல் சந்தோஷமாக இருப்பதாக அனைவரிடமும் கூறுவாள்.

ஒரு வருட காலம் முடிந்து சென்னைக்கும் வந்தாயிற்று.

மற்றவர் முன் இவனல்லவா கணவன் என்பது நடந்து கொள்பவன் தனிமையில் அவள் யாரென்றே தெரியாதது போல் நடந்துகொள்வான்.

மற்றவர்முன் அவனை விட்டுக்கொடுகாத மிருதி நிச்சயம் ஒரு நாள் மாறுவான் என்று அவனுக்கான காதலோடு காத்துக்கொண்டிருந்தாள்.

ஒரு நாள் காலையில் வேலைக்கு செல்லும் முன்,

அவனே வலிய வந்து பேச்சு கொடுத்தான்.

"உனக்கு என்ன ஆசை மிரு?" என்றான்.

" மாமா. எனக்குன்னு எதுவும் பெருசா ஆசைலாம் இல்ல. நீ குடிக்கிறதை மட்டும் விட்று. அதுபோதும். அப்போதான் எனக்கு பிடிச்சவனா இருக்க நீ." என்றாள் மிருதி.

"சரி டா குட்டிமா. எனக்கு உன்னை ரொம்ப புடிக்கும்.உன் மேல சத்தியமா இன்னைலர்ந்து குடிக்க மாட்டேன் போதுமா?" என்று சென்றான் தீரன்.

தொடரும்...
 
Last edited:

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 2:

"நல்ல வேலை எந்த கடவுள் புண்ணியமோ நான் வந்தேன். இல்லன்னா என்ன ஆகிருக்கும்?" என்றார் பக்கத்து வீட்டு அகிலாக்கா.

"காலைலர்ந்தே என்னவோ டயர்டா இருந்துதுகா. அதான் சாப்பிடலாம்னு தோசை ஊத்த மாவை கரைச்சிட்டு ஸ்டவ் ஆன் பண்ணலாம்னு லைட்டர் எடுத்தேன். என்ன நடந்துதுன்னு தெரியலைக்கா." என்றாள் சோர்வாய் மிருதி.

"உனக்கு புளியோதரன்னா பிடிக்குமே. இன்னைக்கு அதான் செஞ்சேன். உனக்கு கொடுக்கலாம்னு வந்தா ஒரே காஸ் வாசனை. அவசர அவசரமா உள்ள ஓடிவந்து பார்த்தா. எனக்கு உயிரே நின்னு போச்சு. காஸ் பாட்டுக்கு வெளிய போயிட்ருக்கு. நீ மயங்கி கிழ விழுந்துருக்க. அப்புறம் ஸ்டவ் ஆப் பண்ணிட்டு ஜன்னலை திறந்துவிட்டு பேன போட்டுவிட்டேன்." என்று புளியோதரையை உண்ணவைத்தார்.

"ரொம்ப நன்றிக்கா" என்றார்.

"அதெல்லாம் விடும்மா" என்றார் அகிலா. பின் மிருதியை பார்த்து,

"உடம்பு முடியலைனு உன் புருஷன்கிட்ட சொல்லவேண்டியது தான?" என்றார் கடுப்பாய்.

"அவரே ஆபிஸில் ஆயிரத்தெட்டு டென்சன்ல இருப்பார். அவரை எதுக்கு தொந்தரவு பண்ணனும்னு தான்கா சொல்லல." மெல்ல சிரித்து.

"சரி. உங்க அப்பா போன் நம்பர் கொடு வரசொல்றேன்" என்ற அகிலாக்காவை அவசரமாக தடுத்தாள்.

"வேண்டாம்கா. அப்புறம் அப்பா ரொம்ப டென்சன் ஆகிடுவார்" என்றாள் பதற்றமாய்.

"சரி. உன் புருஷன் நம்பறாவது கொடுடி." என்றார்.

'அப்படியே வந்துட்டாலும்' என்று நினைத்தவள்.

"இதுக்கு எதுக்குகா எல்லோரையும் டென்சன் பண்ணனும்? கொஞ்சநேரம் படுத்து தூங்கினா சரியாகிடும்." என்றாள் மிருதி உள்ளுக்குள் தவித்தபடி.

"அப்போ நான் வரேன் ஹாஸ்ப்பிடலுக்கு கிளம்பு. ஏண்டி ஒரு சுவரு தான் ரெண்டு வீட்டுக்கும் குறுக்கால இருக்கு. உடம்பு முடியலைன்னா கூப்பிடமாட்டியா? அப்புறம் எதுக்கு அக்கம்பக்கம் லா இருக்கோம். கிளம்பு. வீட்டை பூட்டிட்டு வரேன்." என்று வெளியே சென்றார் அகிலா.

"சரிக்கா" என்று உடையை மாற்றி தயாரானாள் மிருதி.

இருவரும் ஆட்டோவில் மருத்துவமனை செல்ல,

அகிலா "ஏண்டி நல்லா படிச்சிருக்க. உனக்கு கட்டிக்க வேற மாபிள்ளையே கிடைக்கிலையா? சொந்தம்னு சொல்லி ஏன்டி கட்டிக்கிட்டு இப்படி கஷ்டப்படற" என்று கேட்க.

ஒருநாளும் தன் வாழ்க்கையை பற்றி எதுவும் சொல்லாமல் தன்னை தெரிந்து கொண்டு கேட்கும் அகிலாவை சோகமாய் பார்த்தாள்.

"அதெல்லாம் ஒன்னுமில்லைக்கா. அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். என்னை நல்லா பார்த்துக்குறார். சில நேரத்துல ஏதோ ஆபிஸ் டென்ஷன்ல இருப்பார். அவ்ளோ தான்." என்றாள் மிருதி பொய் சொல்கிறோம் என்று தெரிந்தும்.

"ஹ்ம்ம். பாக்கிறேனே. அவர் உன்னை பார்த்துகிற லட்சணத்தை. எல்லா புருஷனுங்களுமே நல்லா பார்த்துக்கிறாங்க. உன் புருஷன் மட்டும் தான் பார்த்துகலைன்னு சொல்லலை. ஆயிரம் சண்டை சச்சரவு வந்தாலும் கடைசில அவங்களுக்குள்ள ஒரு அன்யோன்யம் இருக்கும். ஆனா ஒரு நாளும் உங்களை பார்த்தா அப்படி தெரியலை." என்றார் அகிலா.

பேச்சை மாற்ற, "அக்கா. வாங்க உள்ள போகலாம்" என்று மருத்துவனையினுள் சென்றனர்.

சோகத்திலும் மகிழ்ச்சி என்பது போல் இருந்தது மிருதிக்கு அவளின் கற்பசெய்தி.

'இனியாவது இந்த பிள்ளைக்காகவாது என்மேல பாசமா இருப்பார்ல?' என்று தனக்குள் கேட்டுக்கொண்டாள்.

வீட்டிற்கு வந்த பின், "நீ எதுவும் செஞ்சிட்டு இருக்காத
நான் உனக்கு சாப்பாடு. எடுத்துட்டு வரேன்" என்று அகிலா உணவை எடுத்துவந்து மிருதியை சாப்பிடவைத்து மாத்திரைகளை கொடுத்தார்.

"உன் புருஷனுக்கு சொன்னியா?" என்றார் அகிலா.

"இல்லக்கா. அவர் வீட்டுக்கு வந்ததும் ஸசர்ப்ரைசா சொல்லனும்" என்றாள் மிருதி.

"சரிம்மா. நான் வரேன். உனக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடு" என்று சென்றுவிட்டார் அகிலா.

'இவருக்கு எதுவும் சாப்பிட செய்யலையே. போன் செஞ்சு ஏதாவது வாங்கிட்டு வர சொல்லலாம்.' என்று தீரனுக்கு போன் செய்தால் அவன் அழைப்பை ஏற்காமல் இருக்க ஏமாற்றத்துடன் அமர்ந்தாள் மிருதி.

'சரி வந்தப்புறமே வாங்கிட்டு வரசொல்லலாம்' என்று விட்டுவிட்டாள்.

'நீ அப்பா ஆகபோறன்ற விஷயத்தை சொல்லி உன் முக மாறுதல்களை மனதினுள் சேமித்துவைத்திட ஆசையடா.' என்று உள்ளுக்குள் மகிழ்ந்து தீரனுக்காக காத்திருந்தாள்.

' எனக்கு உன் தோள்ல சாய்ஞ்சி தூங்கனும் போல இருக்கு மாமா. இந்த விஷயம் தெரிஞ்சதும் நீ என்னை தாங்கனும். என்மேல நீ வச்சிருக்க அன்பை முழுசா தெரிஞ்சிக்க ரொம்ப ஆசையா இருக்கு. அதுக்காகத்தான் காத்துக்கிட்டு இருக்கேன்.' என்று நினைத்தபடியே மாத்திரையின் வேலையால் உறங்கிவிட்டாள் மிருதி.

-தொடரும்
 

தர்ஷினி

Well-known member
Messages
836
Reaction score
723
Points
113
நெட்டைகொக்கு தீரனுக்கு என்ன பிரச்சனை..இப்படி drink பண்ணிட்டு வந்து மிருதியை கஷ்டப்படுத்தறான்...மிருதி சொல்லப்போற செய்தியைக் கேட்டு எப்படி ரியாக்ட் பண்ணுவான் :unsure: :unsure: :unsure: ..மிருதி ரொம்ப சந்தோசமா எதிர்பார்த்துட்டு இருக்கா தீரனை...
 

vaishnaviselva@

Well-known member
Messages
275
Reaction score
215
Points
63
semma akka story 👌 :love::love::love::love::love:........i think so theeran yethaiyo maraikkuraan nu eva yethacham solli mruthi kasta paduvala nu therila .............ippa sidu moonja yaru kalyanam panna sonna ...............ugga yella story sum spr sis ............waiting for next epi sis:love::love::love::love:🤩🤩🤩🤩🤩🤩
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
semma akka story 👌 :love::love::love::love::love:........i think so theeran yethaiyo maraikkuraan nu eva yethacham solli mruthi kasta paduvala nu therila .............ippa sidu moonja yaru kalyanam panna sonna ...............ugga yella story sum spr sis ............waiting for next epi sis:love::love::love::love:🤩🤩🤩🤩🤩🤩
நன்றிம்மா
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 3:

கூறிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிட்டிருந்தாள் மிருதி.

மனது ஏனோ படபடவென அடித்து கொண்டது. ஓராயிரம் முறை தனக்குள் இது சரி வருமா என்று கேட்டுக்கொண்டாள்.

'வேறவழி இல்ல.' என்று மனது உறுதி செய்ய சிலையாக அமர்ந்திருந்தாள்.

கைகடிகாரத்தை நோக்க மணி 3.00 என்றது.

வருடங்கள் இரண்டாய் கடந்து சென்றிருக்க, அவனின் வருகையை எண்ணி பரபரத்து உயிர் சிலிர்த்தெழுந்தது.

'எதுக்கு இப்போ ஓவரா எக்ஸைட் ஆகார? என்ன பேசனுமோ அதை மட்டும் பேசிட்டு கிளம்பிட்டே இரு. ' என்றது மூளை.

அவளின் எண்ணங்களை கலைக்கும் விதமாக போன் அடிக்க எடுத்தாள்.

"ஹெலோ" என்றாள்.

"ஹலோ" என்ற மென்மையான குரலை கேட்டவுடன் உள்ளுக்குள் ஒரு உணர்வு தோன்ற, ஒரு நிமிடம் தடுமாறி அமைதியானாள்.

"ஹலோ. மிரு லைன்ல தான இருக்க?" என்றான் மீண்டும் மென்மையாய் தீரன்.

"ஹ்ம்ம்.. இருக்கேன் சொல்லுங்க" என்றாள் குரலில் எந்த உணர்வுகளையும் வெளி காட்டாமல்.

"சாரி மிரு" என்றான் மிருதுவான குரலில்.

இந்த அக்கறை நிறைந்த பாசமான விசாரிப்புகளுக்காக ஏங்கி ஒரு காலத்தில் தவம் கிடந்தது பொய் இன்று பாறையாய் இருக்கும் மனதுக்குள் வேரிட நினைக்கும் செடியை முளையிலேயே கிள்ள நினைத்தாள்.

"எக்ஸ்கியூஸ் மீ. மிஸ்டர். தீரன் என்னோட பேரு மிருதி. சோ கால் மீ மிருதி. தட்ஸ் இட். எனக்கு நெருக்கமானவங்க தான் என்னை பெட் நேம்ல கூப்பிட முடியும்" என்றாள் காட்டமாய்.

"சாரி மிருதி. என்னை மன்னிக்கவே மாட்டியா? இந்த ரெண்டு வருஷமா உன்னோட மன்னிப்புக்காக காதோடு இருக்கேன்." என்றான் உடைந்த குரலில்.

'என் உயிர் இருக்கிற வரைக்கும் உங்களை காதலிச்சிட்டே தான் இருப்பேன். ஆனா நீங்க எனக்கு ஏற்படுத்தின காயத்துக்கு மருந்தே கிடையாது . மன்னிப்பும் கிடையாது' என்று நினைத்தவள்.

"நான் இறந்தப்புறமும் என் ஆத்மாகூட உங்களை மன்னிக்காது." என்றாள் மிருதி.


“மிருதி” என்றான் அவனுக்கே கேட்காத குரலில்.


“போதும் நிறுத்துங்க தீரன். இப்போ எதுக்கு போன் பண்ணிங்க? அதை சொல்லுங்க. எனக்கு வேலை இருக்கு.” என்றாள் சுற்றி முற்றி காலியாக இருந்த அந்த காப்பி ஷாப்பை பார்த்துக்கொண்டு.


“அது வந்து மிருதி. நம்ம ஷாப் இங்க பெங்களூர்ல புதுசா ஒண்ணு ஓபன் பண்ண போறோம்.” என்றான் தீரன்.


“ஹலோ! உங்க ஷாப். உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்ல. “ என்றாள் மிருதி வெடுக்கென்று.

உள்ளுக்குள் தீராமல் இருந்த ரணம் அவளின் வார்த்தைகளில் மேலும் கிழிந்து குருதி கொப்பளித்து கொட்டுவது போல் இருந்தது தீரனுக்கு.


“மிருதி. எதுக்கு இப்படி பேசுற? என் மேல அவ்ளோ வெறுப்பா?” என்றான் வலிகளை மறக்காமல்.


“அதுக்கும் மேல சொல்ல வார்தைகள் இல்லான்னு நினைக்கிறேன்.” என்றாள் மிருதி வழிந்த கண்ணீரை துடைக்க கூட மனமில்லாமல்.


“ஷாப் ஓபன் பன்றத்துக்காக ஒரு முக்கியமான மீட்டிங்” என்றான் தீரன்.


“ஓஹ் ஓகே! அப்போ நாம இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றாள் மிருதி.


‘எதையும் முழுசா கூட கேட்க மாட்றா. முந்திரிக்கொட்டை.’ என்று மனதுக்குள் திட்டியவன்.


“இல்ல... முடிஞ்சுது. வந்துட்டு இருக்கேன். இன்னும் பார்ட்டி 40 மினிட்ஸ் ஆகும். அதை சொல்ல தான் கூப்பிட்டேன்.” என்றான் தீரன்.


“ஹிம்.. பரவால்ல வாங்க. எனக்கும் இங்க பக்கத்துல ஒரு வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்” என்றாள் மிருதி.


“சரி” என்றான் தீரன்.


போனை கட் செய்தவள்.


‘ஆயிரம் தான் அவன் மேல கோபமிருந்தாலும் வருசத்துக்கு அப்புறம் பார்க்க போறதால நீ அரை மணி நேரம் முன்னாடியே வந்துட்ட. ஆனா அவன் வார இன்னும் நிறைய நேரம் இருக்கு என்ன பண்ணலாம்.?’ என்று மனது கேட்க.


போனில் அடித்த பெயரை பார்த்தவுடன் முகம் மலர்ந்தது மிருதிக்கு.


சிரித்துகொண்டே போனை எடுத்தவள்.


“என்ன அம்மு உன் டார்லிய சாமாளிக்க முடியலையா?” என்றாள் குறும்பு மின்ன.


“யார் சொன்னது? நானும் என் டார்லியும் செம பெட். நாங்க பயங்கரமா எஞ்சாய் பண்றோம். நீ தான் இல்லை.” என்று சிரித்தான் அவளின் உயிர் தோழன் அம்மு என்கிற அமுதன்.


“சொன்னாங்க. அங்க வீட்டு வாசல் முன்னாடி பக்கத்து வீடு காரங்க எல்லாரும் வந்து நிக்கறாங்களா பாருங்க. உதைக்க” என்று சிரித்தாள் மிருதி.


“அப்படியெல்லாம் யாரும் இல்ல. எங்களை வீடு. நீ உங்க அவரை பார்த்துட்டியா?” என்றான் கிண்டலாக.


“போதும் நிறுத்துறியா?” என்றாள் விழிகளை சிரிப்புடன் உருட்டியபடி.


“போதும் உன் கண்ணை உருட்டாத. என் டார்லி பயபட்றா பாரு. நீ சொன்னாலும் சொல்லலைன்னாலும் அதானே உண்மை. அவரை பார்க்க தானா அரமணி நேரம் முன்னாடியே போயி யாரும் இல்லாத காபி ஷாப்ல உக்கார்ந்துருக்க?” என்றான் நக்கலா கலந்த கிண்டலுடன்.


“யாரு சொன்னா? இந்த மாச அக்கௌண்ட்ஸ் பார்க்கவே இல்ல. சரி அக்டையும் ஒரெடியா பார்த்துடலாம்னு தான் வந்தேன்.” என்றாள் மிருதி.


“உனக்கு பொய் சொல்ல வராது தி” என்றான் அமுதன் கலகல்வென சிரித்து.


“போதும் டா. என்னை ஒட்றதுக்கு தான் போன் பண்ணியா? மரியாதையா வை.” என்றாள் மிருதி.


“ஏய் இல்லம்மா. இப்போ பேச போற விஷயதோட உன்னை பத்தியும் அவர்கிட்ட சொல்ல முடிவு பண்ணிருக்கியா இல்லையா? “ என்றான் அமுதன் விளையாட்டுதன்மான பேச்சை நிறுத்தி அக்கறையுடன்.


“இல்ல அமு. இப்போதைக்கு இல்ல எப்பவுமே சொல்ல போறதில்லை.” என்றாள் மிருதி முடிவாய்.


“தி நல்லா முடிவு யோசிடி. அவர் செஞ்ச தப்புக்கு மூணு வருஷ தண்டனை போதும் டி. பாவம். “ என்றான் அமுதன்.


“அதான் நானும் சொல்ட்றேன் அமு. அவருக்கு இந்த மூணு வருஷம் போதும். இனியும் என்னை பத்தி சொல்ல என்ன இருக்கு?” என்றாள் குரல் கம்ம.


“சரி. நான் அப்புறம் பேசுறேன் அம்மு. பை” என்று வைத்தவள் மனது லேசாகும் வரை அழுது தீர்த்தாள்.


என்றோ ஒரு நாள் அவனிடம் இருந்து எதிர்பார்த்து ஏங்கிய அதே புன்னகையுடன் அழகுடனும் எதிரில் நடந்து வந்து கொண்டிருந்தான் தீரன்.


‘மிரு உஷாரு. மாமா லேசு பட்ட ஆள் இல்ல. உன் வாழ்க்கைல மட்டும் இல்ல உன் மனசுலையும் முதல்ல இருந்து எப்பவுமே இருந்தவன் இருக்கபோறவன் இவன் தான். அதனால உன் மனசுல இருக்கறதை வெளிய காட்டாம பொறுமையா பேசு. வந்த காரியம் மட்டும் முடிஞ்சா போதும். வேற எதுவும் வேணாம்.’ என்று நினைத்தவள் அவனிடமிருந்து விழிகளை பிரித்து வேறெங்கோ செலுத்தினாள்.


அவளின் முன் வந்து நின்றவன், கன்னத்தில் குழிவிழ சிரித்து “ஹாய் மிருதி” என்று கை குலுக்க கரம் நீட்டினான்.


கரம் நீட்டாமல் தனக்குள்ளேயே மனபோராட்டம் நடக்க, 'கை குலுக்குடி. முடியாது. அவன் ஸ்பரிசம் என்னை இன்னும் வீக் ஆக்கிடும்' என்று நினைத்தவள்.


இறுதியில் கரம் குலுக்காமல் கரம் கூப்பினாள் மிருதி.


மனது வலித்தாலும் வெளியே காட்டி கொள்ளாமல் அமர்ந்தான் தீரன்.


"சொல்லு மிருதி." என்றான்.


எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் தவித்தவள் விழிகளை மூடி உள் ஸ்வாஸம் இழுத்து விட்ட பின், தான் வார கூரியத்தின் காரணம் கூறினாள்.


அதை கேட்டபின் அதிர்ச்சி என்பதை பேரதிர்ச்சியில் இருந்தான் தீரன்.
 

dharshini chimba

Saha Writer
Messages
308
Reaction score
228
Points
43
தீயாய் சுடும் என் நிலவு 4:

"என்ன சொல்ற மிருதி?" என்றான் தீரன் நம்பாமல்.

"உண்மையை தான் சொல்றேன். உங்க பொண்ணு என்கிட்ட தான் இருக்கா. அதனால, நீங்க அவளை கூட்டிட்டு போய்டுங்க? இனி என்னால பார்த்துக்க முடியாது." என்றாள் மிருதி உள்ளுக்குள் உடைந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல்.

"இல்ல... நான் நம்பமாட்டேன். குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க? அதனால தான நீ என்னைவிட்டு பிரிஞ்சிருக்க? அப்புறம் எப்படி என் குழந்தை உயிரோட இருக்க முடியும்?" என்றான் அதிர்ச்சியில் இருந்து மீளாமல்.

'நான் எதுக்காக பிரிஞ்சிருக்கேன்னு கூட உன்னால யோசிக்கமுடியல இல்ல? நீ என்ன பண்ணுவ? உனக்கே தெரியாது அன்னைக்கு என்ன நடந்துதுன்னு?' என்று தனக்குள் புகைந்தவள்.

"இப்போ என்ன சொல்ல வரிங்க? எனக்கு வேற வேலையில்லாம சும்மா உங்களை கூட்பிட்டு பொய் சொல்றேனா?" என்றாள் கோபமாக.

"இல்லல்ல... நான் அப்படி சொல்லலை. குழந்தை இறந்துடுச்சுன்னு தான சொன்னாங்க. அதான் எனக்கு ஒரு நிமிஷம் ஒண்ணும் புரியலை. இப்பவும் சரியா புரியலை. பிளீஸ் கோவிச்சிக்காம கொஞ்சம் என்ன நடந்ததுன்னு சொல்றியா?" என்றான் தீரன் தயக்கமாக.

அவனை பார்க்க மிருதிக்கும் பாவமாக தான் இருந்தது. குழந்தை பிறந்ததை கூட அவனுக்கு சொல்லாத பொழுது அவனுக்கு எப்படி தெரியும்? என்று யோசித்தவள்.

மெல்ல மூச்கை இழுத்துவிட்டவள், "உண்மை தான். அன்னைக்கு நடந்ததுல எனக்கு அபார்ஷன் ஆனது உண்மை தான். ஆனா, இது தான் என் வாழ்க்கைன்னு ஏதோ நடை பிணமா வாழ ஆரம்பிச்சப்ப தான் எனக்குள்ள குழந்தை இருக்க மாதிரி ஒரு உணர்ச்சி இருந்துகிட்டே இருந்தது. அதே ஸிம்ப்டம்ஸ் இருந்தது. என்னன்னு ஹாஸ்பிடல் போயி பார்த்தப்புறம் தான் தெரிஞ்சது. எனக்கு..." என்று நிறுத்தியவள் அவனை காணாமல் "நமக்கு இரட்டை குழந்தை உருவாகி அதுல ஒரு குழந்தை தான் இறந்ததுன்னு" என்று பேச முடியாமல் நா குழறி அழத்தொடங்கினாள்.

இவையெல்லாம் தன்னால் தான் நடந்தது என்று இன்னும் மனம் நொறுங்க தொடங்கினான் தீரன்.

ஒரு பிள்ளை மீண்டாலும் தாய்க்கு இரு பிள்ளையும் ஒன்று தானே. இன்னொரு பிள்ளையை பறிகொடுத்த வேதனையில் அழும் மிருதியை எப்படி சமாதானம் செய்வது என்று தெரிய்மால் திண்டாடினான் தீரன்.

"மிருதி! ஐ ஆம் சாரி. இதுக்கு நான் தான் காரணம்" என்று அவளின் தோளை ஆறுதலாக தொட, அவனின் ஸ்பரிசதில் உடல் தீயாய் எரிய விழிகளில் அக்னியின் கோபம் கொண்டு முறைத்தாள்.

அவளின் பார்வையே அவனின் கரத்தை சுட்டுவிட, பட்டென உருவிகொண்டான் தீரன். தனக்கான இடம் அவள் இதயத்தில் எந்தளவு என்பதை தவறாக உணர்ந்துகொண்டான்.

"இட்ஸ் ஓகே. இத்தனை வருஷம் இந்த வலியோடு இருந்த எனக்கு இப்பவும் இருக்க தெரியும். உங்க கருணை எனக்கு தேவை இல்லை." என்று பொரிந்தாள்.

"மிருதி. எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது. நான் பண்ணது தப்பு தான். அதுக்கு தான் என்னைவிட்டு மூணு வருஷ பிரிஞ்சிருக்க தண்டனை போதாதா? பிளீஸ் என்கிட்ட வந்துடு என் ராணியா உன்னை வச்சு பார்த்துக்குறேன்." என்றான் தீரன்.

அவனின் வார்த்தைகள் உள்ளுக்குள் குளிர்ந்தாலும் மதி மயங்காதே என்று மூளை உரைத்துகொண்டே இருந்தது.

"இல்ல எனக்கான புது வாழ்க்கைய நான் தேர்ந்தெடுத்துட்டேன். குழந்தை அப்பாவ கேக்குறா? ஒரு கணவனா நீங்க எனக்கு சரியா இல்ல. ஆனா என் பொண்ணுக்கு அவ அப்பாகூட இருக்கிற உரிமை இருக்கு. அதனால தான் உங்களை வர சொன்னேன்." என்றாள் மிருதி.

"நீ என்ன சொல்ற?" என்றான் தீரன்.

"ஹிம்... முதல் தடவை என் அப்பாக்காக சம்மதிச்சதால என் வாழ்க்கைல நிறைய ஏமாற்றங்கள். சோ, இந்த முறை என் மனசுக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தரை நான் பார்த்துட்டேன். கூடிய சீக்கிரம் எங்களுக்கு கல்யாணம் நடக்க போகுது. அவருக்கும் பாப்பாவை ரொம்ப பிடிக்கும்." என்றாள் அவனின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து.

இதயம் சில்லு சில்லாக நொறுங்குவதை போல் உணர்ந்தான் தீரன்.

"ஒஹ். காங்கிராட்ஸ்." என்று சோக புன்னகையை இதழில் படரவிட்டவன்.

"நான் பாப்பாவை பார்க்கணும்" என்றான்.

மிருதியின் திடீர் முக மாற்றங்களை தீரன் கவனித்தான்.

"என்ன ஆச்சு? " என்றான்.

அவன் முகத்தை காணாமல் வேறுபுறம் திரும்பி கொண்டு இதழை அழுந்த கடித்து "ஒன்னுமில்லை" என்றாள்.

'விழபோகிறேன்' என்று நிற்கும் கண்ணீரை வராமல் விழிகளை இறுக மூடினாள்.

"நாளைக்கு இதே டைம் வரமுடியுமா? கூட்டிட்டு வரேன்" என்றாள் மெதுவாக.

"சரி" என்றான் அவளை உற்று பார்த்து.

"சரி. நான் கிளம்பறேன். நாளைக்கு பார்க்கலாம்" என்றாள் மிருதி.

"நான் டிராப் பண்ணவா?" என்றான் நப்பாசையில்.

"நோ தாங்கஸ். வண்டி இருக்கு" என்றவள் வேகமாக வெளியேறினாள்.

வீட்டிற்குள் வேகமாக வந்து சோபாவில் விழுந்தவளிடம் ஓடி வந்தான் தோழன்.

"என்ன ஆச்சு?" என்றான் பதற்றமாக.

"என்னால வலி தாங்க முடியல" என்று அழ ஆரம்பித்தாள் மிருதி.
 

New Threads

Top Bottom