Lavanya Dhayu
Saha Writer
- Messages
- 56
- Reaction score
- 43
- Points
- 18
இதயம் - 10
"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!"
- மகாகவி பாரதியார்
சிரித்த முகத்துடன் மருமகனுடன் சேர்ந்து சேலை எடுத்துக்கொண்டு இருந்த தேவகி ரசனைப் பார்வையுடன் அருகில் வந்த மகளை முறைத்தாள்.
"மாப்பிள்ளை எவ்ளோ பெரிய பிசினஸ் மேன்? ஆனா எந்த பந்தாவும் இல்லாம 'நா சேலை செலக்ட் பண்றேன் ஆண்ட்டி' னு வந்து இருக்காரு பாரு. நீ என்னவோ அந்த காலேஜே உன் பேர்ல தான் இருக்குற மாதிரி பாதில ஓடுற! ஒழுங்கா எல்லாம் செலக்ட் பண்ணு" என்றார் ரகசியக் குரலில்.
'உங்க மாப்பிள்ளை லட்சணம் தெரியாம சப்போர்ட் பண்றிங்களே மம்மி' என மனதுக்குள் எண்ணியபடி திருமணத்திற்கான உடைகளைத் தேர்வுசெய்தாள் அனு.
கல்யாண ஷாப்பிங் முடிந்ததும், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினர். அனுபமாவிற்கு ஒரு மலையையேப் புரட்டியது போல அலுப்பாக இருந்தது.
'ஹப்பா... மனசு முழுக்க ஆசைய வச்சிக்கிட்டு ஆசையே இல்லாத மாதிரி நடிக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு? இப்பவே இப்டினா, மேரேஜ் முடிஞ்சதும் எப்டி சமாளிக்கப் போறேனோ?' என தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவள் அம்மாவோ ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். "எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடிவரனும்னு சொல்வாங்க, அது சரியா தான் இருக்கு. போன மாசம் கல்யாணமே வேணாம்னு ஒளரிக்கிட்டு இருந்த, இப்போ அடுத்த மாசத்திலேயே கல்யாண தேதி முடிவாகி இருக்கு பாரு. கடவுள் என் பக்கத்துல தான் இருக்காரு" என்றார்.
'உண்மை தான்மா. எட்டு வருஷமாக் காத்துட்டு இருந்தேன். இப்போ என் காதலனோட கல்யாணம் முடிவாகி இருக்கு, அதுவும் காதலர் தினத்துக்கு அடுத்த நாள்' என மௌன மொழியில் தாய்க்கு பதில் சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு தன் திருமண அழைப்பிதழை வருடினாள் அனுபமா.
திருமணத்திற்கு தன்னை தயார் செய்துக்கொள்வது, நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அளிப்பது என அருந்ததியுடன் சுற்றிக்கொண்டு இருந்தாள் அனு. வேகமாக ஓடிய நாட்களும் திருமணத்திற்கு முந்தைய நாளில் வந்து நின்றது.
எ.அர்ஜுன் எம்.பி.ஏ வெட்ஸ் ஆர்.அனுபமா எம்.எஸ்.சி, எம்.பில் என பூக்களால் எழுதப்பட்டிருந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்தபடி காரில் இருந்து திருமண மண்டப வாசலில் இறங்கினாள் அனு.
'அஜ்ஜு செல்லம், நா உன்னைத் தேடி வந்துட்டேன்டா, இனி எப்பவும் நீ என்னைப் பிரிய நா உன்னை அலவ் பண்ணவே மாட்டேன்' என மனதுக்குள் உறுதியேற்றபடி கேமராவுக்கு தன் திருமண நிச்சயதார்த்த அலங்காரத்தை பதிவுசெய்ய அனுமதி தந்துக்கொண்டு இருந்தாள்.
அவர்களின் திருமணம் நடக்க இருக்கும் கோவிலுக்கு மிக அருகில் இருந்த அந்த சிறிய மண்டபத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் விடியற்காலையில் எழுந்துக் கிளம்பி கோவிலுக்கு செல்ல சரியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.
இளம்பச்சை நிறத்தில் பார்டர் வைத்த சந்தன நிற சேலையில் அனுபமாவும் சந்தன நிற குர்தாவில் அர்ஜுனும் அழகாக நின்றிருக்க, அவர்களிடம் போட்டியிடுவது போல் இளஞ்சிவப்பு நிற சேலையில் அருவும், அதே நிற குர்தாவில் வருணும் அவன் மகனும் இருந்தனர்.
பெரியவர்களை வணங்கிய மணமக்களிடம் உறவில் மூத்தவர் ஒருவர்,"உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துல சம்மதமா?" என கேட்டார்.
"ம்க்கும்... நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டுக் கேக்குற கேள்வியப் பாரு. இப்போ நாங்க வேணாம்னு சொன்னா கல்யாணத்தை நிறுத்திடுவாரா என்ன?" என மெல்லியக் குரலில் அருவிடம் கேட்டாள் அனு.
"சும்மா இருடி. இது ஒரு சம்பிரதாயம். கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தான் கேப்பாங்க" என்று அரு சொல்லிக்கொண்டு இருக்க, "நீ வேற, உன் அண்ணங்காரர் ஒரு மாதிரியான ஆளு. டக்குனு சம்மதம் இல்லனு சொல்லிட்டா, நா என்ன பண்ணுவேன்?" என அனு புலம்ப , அதே நேரம் அர்ஜுனிடம், "மாப்பிள்ளை தம்பி உனக்கு சம்மதமா ? " என உரக்கக் கேட்டார் அந்த பெரியவர்.
அனுவை நேர்பார்வைப் பார்த்தபடி,"சம்மதம்" என்றான் அர்ஜுன்.
அவன் பார்வையும் வார்த்தையும் தந்த இராசயன மாற்றத்தை அனுபவித்தபடி இருந்தவள், "உனக்கு சம்மதமா மா?" என்ற கேள்விக்கு கண்ணில் காதலுடன் அர்ஜுனைப் பார்த்துக்கொண்டே ,"முழு சம்மதம்" என்றாள்.
அருந்ததி மோதிரங்கள் கொண்ட பெட்டியை நீட்ட, அர்ஜுன் அனுபமாவின் கைபிடித்து மோதிரம் அணிவித்தான். தனக்கு உரியவனாக அவனின் முதல் தொடுகை சிலிர்ப்பை ஏற்படுத்த, தன் பூவிரலால் அவன் கரம்பற்றி மோதிரம் அணிவித்தாள் அனு.
"அண்ணா இன்னிக்கு நீங்க ரெண்டுப் பேரும் ஒண்ணா செலிபிரேட் பண்ற பர்ஸ்ட் வேலன்டைன்ஸ் டே, அதுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரிங் போட்டுக்கிட்டு செலிபிரேட் பண்றீங்க. லக்கி கப்புள், வாழ்த்துக்கள்" என்றாள் அரு.
செல்லமாக அவள் தலையில் தட்டினான் அர்ஜுன்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ