Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஆழ்கடலடி என் இதயம் !!!

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
இதயம் - 10
"அறிவு கொண்ட மனிதவுயிர்களை
அடிமையாக்க முயல்பவர் பித்தராம்;
நெறிகள் யாவினும் மேம்பட்டு மானிடர்
நேர்மை கொண்டுயர் தேவர்களாதற்கே,
சிறிய தொண்டுகள் தீர்த்தடி மைச்சுருள்
தீயிலிட்டுப் பொசுக்கிட வேண்டுமாம்;
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டிரோ!"
- மகாகவி பாரதியார்

சிரித்த முகத்துடன் மருமகனுடன் சேர்ந்து சேலை எடுத்துக்கொண்டு இருந்த தேவகி ரசனைப் பார்வையுடன் அருகில் வந்த மகளை முறைத்தாள்.
"மாப்பிள்ளை எவ்ளோ பெரிய பிசினஸ் மேன்? ஆனா எந்த பந்தாவும் இல்லாம 'நா சேலை செலக்ட் பண்றேன் ஆண்ட்டி' னு வந்து இருக்காரு பாரு. நீ என்னவோ அந்த காலேஜே உன் பேர்ல தான் இருக்குற மாதிரி பாதில ஓடுற! ஒழுங்கா எல்லாம் செலக்ட் பண்ணு" என்றார் ரகசியக் குரலில்.
'உங்க மாப்பிள்ளை லட்சணம் தெரியாம சப்போர்ட் பண்றிங்களே மம்மி' என மனதுக்குள் எண்ணியபடி திருமணத்திற்கான உடைகளைத் தேர்வுசெய்தாள் அனு.
கல்யாண ஷாப்பிங் முடிந்ததும், ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பினர். அனுபமாவிற்கு ஒரு மலையையேப் புரட்டியது போல அலுப்பாக இருந்தது.
'ஹப்பா... மனசு முழுக்க ஆசைய வச்சிக்கிட்டு ஆசையே இல்லாத மாதிரி நடிக்கிறது எவ்ளோ கஷ்டமா இருக்கு? இப்பவே இப்டினா, மேரேஜ் முடிஞ்சதும் எப்டி சமாளிக்கப் போறேனோ?' என தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருந்தாள்.
அவள் அம்மாவோ ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார். "எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடிவரனும்னு சொல்வாங்க, அது சரியா தான் இருக்கு. போன மாசம் கல்யாணமே வேணாம்னு ஒளரிக்கிட்டு இருந்த, இப்போ அடுத்த மாசத்திலேயே கல்யாண தேதி முடிவாகி இருக்கு பாரு. கடவுள் என் பக்கத்துல தான் இருக்காரு" என்றார்.
'உண்மை தான்மா. எட்டு வருஷமாக் காத்துட்டு இருந்தேன். இப்போ என் காதலனோட கல்யாணம் முடிவாகி இருக்கு, அதுவும் காதலர் தினத்துக்கு அடுத்த நாள்' என மௌன மொழியில் தாய்க்கு பதில் சொல்லிவிட்டு மகிழ்ச்சியோடு தன் திருமண அழைப்பிதழை வருடினாள் அனுபமா.
திருமணத்திற்கு தன்னை தயார் செய்துக்கொள்வது, நண்பர்களுக்கு அழைப்பிதழ்கள் அளிப்பது என அருந்ததியுடன் சுற்றிக்கொண்டு இருந்தாள் அனு. வேகமாக ஓடிய நாட்களும் திருமணத்திற்கு முந்தைய நாளில் வந்து நின்றது.
எ.அர்ஜுன் எம்.பி.ஏ வெட்ஸ் ஆர்.அனுபமா எம்.எஸ்.சி, எம்.பில் என பூக்களால் எழுதப்பட்டிருந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்தபடி காரில் இருந்து திருமண மண்டப வாசலில் இறங்கினாள் அனு.
'அஜ்ஜு செல்லம், நா உன்னைத் தேடி வந்துட்டேன்டா, இனி எப்பவும் நீ என்னைப் பிரிய நா உன்னை அலவ் பண்ணவே மாட்டேன்' என மனதுக்குள் உறுதியேற்றபடி கேமராவுக்கு தன் திருமண நிச்சயதார்த்த அலங்காரத்தை பதிவுசெய்ய அனுமதி தந்துக்கொண்டு இருந்தாள்.
அவர்களின் திருமணம் நடக்க இருக்கும் கோவிலுக்கு மிக அருகில் இருந்த அந்த சிறிய மண்டபத்தில் திருமணத்திற்கு முந்தைய நாள் மாலை நிச்சயதார்த்தம் முடிவு செய்யப்பட்டு இருந்தது. மறுநாள் விடியற்காலையில் எழுந்துக் கிளம்பி கோவிலுக்கு செல்ல சரியாக இருக்கும் என்பதால் இந்த ஏற்பாடு.
இளம்பச்சை நிறத்தில் பார்டர் வைத்த சந்தன நிற சேலையில் அனுபமாவும் சந்தன நிற குர்தாவில் அர்ஜுனும் அழகாக நின்றிருக்க, அவர்களிடம் போட்டியிடுவது போல் இளஞ்சிவப்பு நிற சேலையில் அருவும், அதே நிற குர்தாவில் வருணும் அவன் மகனும் இருந்தனர்.
பெரியவர்களை வணங்கிய மணமக்களிடம் உறவில் மூத்தவர் ஒருவர்,"உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணத்துல சம்மதமா?" என கேட்டார்.
"ம்க்கும்... நாளைக்கு கல்யாணத்த வச்சிக்கிட்டுக் கேக்குற கேள்வியப் பாரு. இப்போ நாங்க வேணாம்னு சொன்னா கல்யாணத்தை நிறுத்திடுவாரா என்ன?" என மெல்லியக் குரலில் அருவிடம் கேட்டாள் அனு.
"சும்மா இருடி. இது ஒரு சம்பிரதாயம். கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி தான் கேப்பாங்க" என்று அரு சொல்லிக்கொண்டு இருக்க, "நீ வேற, உன் அண்ணங்காரர் ஒரு மாதிரியான ஆளு. டக்குனு சம்மதம் இல்லனு சொல்லிட்டா, நா என்ன பண்ணுவேன்?" என அனு புலம்ப , அதே நேரம் அர்ஜுனிடம், "மாப்பிள்ளை தம்பி உனக்கு சம்மதமா ? " என உரக்கக் கேட்டார் அந்த பெரியவர்.
அனுவை நேர்பார்வைப் பார்த்தபடி,"சம்மதம்" என்றான் அர்ஜுன்.
அவன் பார்வையும் வார்த்தையும் தந்த இராசயன மாற்றத்தை அனுபவித்தபடி இருந்தவள், "உனக்கு சம்மதமா மா?" என்ற கேள்விக்கு கண்ணில் காதலுடன் அர்ஜுனைப் பார்த்துக்கொண்டே ,"முழு சம்மதம்" என்றாள்.
அருந்ததி மோதிரங்கள் கொண்ட பெட்டியை நீட்ட, அர்ஜுன் அனுபமாவின் கைபிடித்து மோதிரம் அணிவித்தான். தனக்கு உரியவனாக அவனின் முதல் தொடுகை சிலிர்ப்பை ஏற்படுத்த, தன் பூவிரலால் அவன் கரம்பற்றி மோதிரம் அணிவித்தாள் அனு.
"அண்ணா இன்னிக்கு நீங்க ரெண்டுப் பேரும் ஒண்ணா செலிபிரேட் பண்ற பர்ஸ்ட் வேலன்டைன்ஸ் டே, அதுவும் ஒருத்தருக்கு ஒருத்தர் ரிங் போட்டுக்கிட்டு செலிபிரேட் பண்றீங்க. லக்கி கப்புள், வாழ்த்துக்கள்" என்றாள் அரு.
செல்லமாக அவள் தலையில் தட்டினான் அர்ஜுன்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
இதயம் - 11
"ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்
பூணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுகள் கேட்டீரோ!"
அனுபமாவின் அருகில் வந்த அருந்ததி, "அனு, அண்ணா பழையபடி சீக்கிரமே மாறிடுவான்னு தோணுதுடி"என்றாள்.
அவளை அனுதாபமாகப் பார்த்தாள் அனு. 'அடியேய் உன் அண்ணா செமையா ஆக்ட் பண்றான். இது புரியாத மக்கா இருக்கியேடி' என மனதுக்குள் எண்ணிக் கொண்டாள்.
அன்று திருமணத்திற்கு சம்மதம் சொல்ல இரண்டு நாள் யோசிக்க நேரம் தந்தவன், மறுநாளே மீண்டும் அழைத்தான், "அனுபமா, யோசிச்சியா?" என்ற கேள்வியோடு.
"நேத்து தான அர்ஜுன் கேட்டிங்க! இன்னும் டூ டேஸ் ஆகலயே"
"என்னால வெய்ட் பண்ண முடியலமா, உன் முடிவு என்னனு தெரிஞ்சா தான், நா நெக்ஸ்ட் யோசிக்க முடியும். அதான்"
என்றான்.
"நீங்க சொன்னதை யோசிச்சேன் அர்ஜுன். நீங்க சொல்றதும் சரி தான் . எங்க வீட்டுல அரு கிளப்பிவிட்டதால கல்யாணம் பண்ணியே ஆகணும்னு முடிவா இருக்காங்க. உங்கள வேணாம்னு சொன்னா, இமிடியேட்டா வேற மாப்பிள்ளையைப் பாப்பாங்க. அதோட எனக்கும் உங்க அம்மா மேல அக்கறை இருக்கு. உங்களுக்கும் இப்போ என் உதவி தேவப்படுது. அதனால இப்போதைக்கு நம்ம கல்யாணம் தான் நமக்கு கடவுள் தந்து இருக்குற ஒரே சாய்ஸ்னு தோணுது."
"எஸ் . இப்போதைக்கு நாம மேரேஜ் பண்ணிப்போம், அப்புறம் நா சொன்ன மாதிரி, உன் பிரைவசியை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். கொஞ்ச நாளைக்கு நாம ரெண்டு பேரும் இந்த மேரேஜ்க்கு முழு மனசா ஓகே சொல்ற மாதிரியே வீட்டுல கிரியேட் பண்ணிடுவோம். இப்போ போய் ரெண்டு பேர் வீட்டுலயும் மேரேஜ் வொர்க்க ஸ்டார்ட் பண்ண சொல்லிடுறேன்" என்றான்.
அதன்படி அவனே அவன் தாயிடம் இருவர் சம்மதத்தையும் சொல்லிவிட்டான். அனுவை அவர்கள் வீட்டில் அனைவருக்கும் தெரியும் என்பதால், தொழில் தொடர்பாக வெளிநாடு சென்றிருந்த அர்ஜுனின் தந்தை வந்தவுடன் பேசி, அனு வீட்டிற்கு சென்று சம்மந்த பேச்சு முடித்து அடுத்த முகூர்த்தத்திலேயே திருமணம், அதற்கு முதல் நாள் நிச்சயதார்த்தம் என முடிவு செய்து இப்போது 'விடிந்தால் திருமணம்' எனும் நிலையில் இருக்கிறது.
"தன்னோட அம்மாவை நம்ப வைக்க இவன் சந்தோசமான மாப்பிள்ளையா நடிக்கிறான், ஆனா நா சந்தோஷத்தை வெளிக்காட்டிக்க கூடாதுனு சாதாரணமா இருக்குற மாதிரி இவன் முன்னாடி நடிக்கிறேன். கடவுளே எப்படியாவது இந்த மேரேஜ நடத்திடுப்பா" என வேண்டிக் கொண்டாள் அனு.
பிப்ரவரி 15, 2019
வெள்ளிக்கிழமையும் அழகாக விடிந்தது.
அனுபமா தன் முகத்தை மீண்டும் மீண்டும் கண்ணாடியில் பார்த்துக்கொண்டு இருந்தாள். மணமகள் தோற்றத்தில் அவளைப் பார்க்கும்போது ஏனோ சிரிப்பாக இருந்தது. 'மேரேஜ் பண்ணிக்கறதுல எனக்கு ஈடுபாடு இல்ல' என்று போன மாதம் வரை சொல்லிக் கொண்டிருந்தது நீ தானா? என்று அவள் மனசாட்சி நக்கலடித்தது.
'போன மாசம் வரைக்கும் என் அர்ஜுன் தான் மாப்பிள்ளையா வருவார்னு தெரியாது. அதான் அப்படி சொன்னேன், இப்போ மேடம் லெவலே வேற தெரியும்ல? சோ நீ ஓடிபோய்டு' என அதனை விரட்டிவிட்டாள் அனு.
அதற்குள் அவளை அழைத்து செல்ல அருந்ததி வந்துவிட்டாள். "ஹே அண்ணி ! அழகா இருக்கடி, என் அண்ணா மயங்கப்போறான்" என்றாள்.
"அடியே! வெறுப்பேத்தாம வாடி, உன் அண்ணன் காதுல இது கேட்டுத் தொலச்சிடிச்சிடப் போகுது" என்றபடி அருவை இழுத்துக்கொண்டு தனது அறையிலிருந்து வெளியே கிளம்பினாள்.
"ஹேய், நா தான்டி உன்ன கூட்டிட்டுப் போகணும், இருடி!" என்று அனுவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள் அரு.
வெளியில் வந்த அனு, அங்கு தன் நண்பர்களுடன் நடந்து வந்த அர்ஜுனைக் கண்டு கண்சிமிட்ட மறந்தாள்.
மணமகன் கோலத்தில் அவனின் கம்பீரம் இன்னும் கூடியிருந்தது. திருமண அலங்காரத்தின் ஒரு பகுதியாக அவன் கன்னத்தில் வைக்கப்பட்டிருந்த சிறு கருப்புப்பொட்டு கூட அவன் அழகை எக்கச்சக்கமாகக் கூட்டிக்காட்டியது. அவனது பார்வை இவள் பக்கம் திரும்பியதும், முகத்தை இயல்பாக வைத்தபடி நின்றாள்.
அர்ஜுனின் பார்வை ஓரிரு நொடிகள் அவள் மீது படிந்து நகர்ந்தது. அதுவே அவளை உற்சாகமாக்க போதுமானதாக இருந்தது.
அனைவரும் சேர்ந்து கோவிலுக்கு சென்றனர். அவர்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த மணவறையில் அமர்ந்தபோது அனு ஏதோ சொர்க்கத்தில் இருப்பதாக உணர்ந்தாள். அனைவரிடமும் ஆசீர்வாதம் பெறப்பட்ட மங்கல்யத்தை ஐயர் அர்ஜுனிடம் நீட்ட, அவன் அதனை வாங்கி அனுபமாவின் கழுத்தில் அணிவித்தான். தன்னை மீறி கண்களில் துளிர்த்த கண்ணீரை கண்களுக்குள்ளேயே அடக்கினாள் அனு.
குங்குமமிட அனுவை அணைத்தபடி வந்த அவனின் கரம் தனக்குள் ஏற்படுத்திய சிலிர்ப்பை அவனுக்கு தெரியாமல் எப்படி மறைப்பது என அவளுக்கு தெரியவில்லை. தன்னை மறந்து அர்ஜுனை ஏறிட்டுப்பார்த்தாள். உலகின் அத்தனை உணர்வுகளையும் ஏந்தி இருந்த அவளின் முகத்தைக் கண்டவன், தன்பக்கம் இருந்த அவளின் இடதுக்கரம் பற்றி அழுத்தினான்.
அனுவிற்கு இது ஆனந்த அதிர்ச்சி. அவளின் பதற்றம் விலகி தெளிவு வந்தது போல இருந்தது. சிரித்த முகத்துடன் அவன் கரம்பற்றி மணவறையை சுற்றிவந்தாள்.
அருந்ததி ஓடிவந்து தன் தோழியை அணைத்துக் கொண்டாள். அகல்யாவும் தேவகியும் ஆனந்தக் கண்ணீரில் குளித்துக்கொண்டு இருந்தனர். பெரியவர்களின் ஆசிபெற்று, கடவுள் தரிசனம் முடித்துவிட்டு அர்ஜுன் வீடு நோக்கிப் பயணப்பட்டாள் அனுபமா.
ஏதோ சாதித்த உணர்வு ஏற்பட்டது அவளுக்கு. 'சீக்கிரம் அர்ஜுனிடம் உண்மையை சொல்லிவிட வேண்டும், இனியும் கல்யாணத்தில் விருப்பம் இல்லாத மாதிரி நடிக்க வேண்டியதில்லை' என முடிவெடுத்தாள்.
அர்ஜுனின் வீட்டுக்குள் இரண்டாவது முறையாக வருகிறாள் அனு. முதல்முறை வந்த போது இருந்த தயக்கம் இப்போது இல்லை. முழுக்க முழுக்க ஆனந்தமும் உரிமை உணர்வுமே இருந்தது. ஆரத்தியெடுத்து அன்புடன் வீட்டுக்குள் அழைத்து சென்றார் அகல்யா. பூஜையறையில் விளக்கு ஏற்றி கடவுளுக்கு நன்றி சொன்னாள் அனு.
பால்,பழம் சாப்பிட்டுவிட்டு அனுவின் வீட்டுக்கு சென்றனர். மாலையில் அர்ஜுன் வீட்டுக்குத் திரும்பி வந்தனர். ஒரே மகளை திருமணம் செய்து தரும் பெற்றோரின் வலியை தம் கண்ணீரால் வெளிப்படுத்தினர் அனுவின் பெற்றோர். ஆனால் அனு ஒரு துளி கண்ணீர் கூட சிந்தவில்லை. மாறாக பெற்றோருக்கு தான் ஆறுதல் சொன்னாள்.
அன்று இரவு எளிமையான அலங்காரத்துடன் இருந்த அனுவை ஒருமுறை அணைத்துவிட்டு ,"அனுமா, என் பையன பத்தி நா உனக்கு சொல்ல வேண்டியது இல்ல, எனக்கு உன்மேல ரொம்ப நம்பிக்கை இருக்கு.அதனால அவனை நா உன்கிட்ட ஒப்படைக்கிறேன். இந்த வீட்டுக்கு நீ தான் இனி ராணி, இந்த குடும்பம் உன் பொறுப்பு. எதை பத்தியும் கவலைப்படாம உன் வாழ்க்கய நீ தொடங்கு"என்றார் அகல்யா. அருகில் இருந்த அரு,"மா..... நா உங்க பொண்ணு, இதுவரைக்கும் என்கிட்ட இப்படி எப்பவாவது 'நீ தான் இந்த வீட்டு ராணி' னு சொல்லி இருப்பீங்களா? உங்க மருமகளைக் கண்டதும் பட்டுனு உங்க பட்டத்தைக் குடுத்துட்டீங்களே!" என்றாள்.
"நீ உன் வீட்டுல ராணியா இருந்துக்கோ, என் மருமக கூட போட்டிபோடாத" என்றார் அகல்யா. இருவரையும் பார்த்து சிரித்துவிட்டு,"நீங்க தான் அம்மா எப்பவும் இந்த வீட்டு ராணி, அரு இளவரசி. எனக்கு எந்த பட்டமும் அதிகாரமும் வேணாம். இந்த வீட்டு மருமகன்ற பட்டமே போதும்"என்றாள் அனு.
பெருமிதமாக அவளைப் பார்த்து சிரித்துவிட்டு அவளின் நெற்றியில் முத்தமிட்டார் அகல்யா.
பின் அவர் ஆசீர்வதித்து அனுப்ப, அருவின் பின்னால் ஆனந்தமும் ஆர்வமுமாக மெல்ல மெல்ல அடி வைத்து அர்ஜுன் அறைக்கு செல்லும் மாடிப்படியில் ஏறினாள் அனு.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
இதயம் - 12
"நிலத்தின் தன்மை பயிர்க்குள தாகுமாம்;
நீசத் தொண்டு மடமையும் கொண்டதாய்
தலத்தில் மாண்புயர் மக்களைப் பெற்றிடல்
சாலவே யரி தாவதொர் செய்தியாம்;
குலத்து மாதர்குக் கற்பியல் பாகுமாம்;
கொடுமை செய்தும் அறிவை யழித்துமந்
நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்;
நங்கை கூறும் வியப்புகள் கேட்டீரோ!" - மகாகவி
அனுவின் இதயம் வேகமாகத் துடித்தது. தனது மனம் கவர்ந்தனின் அறைக்குள் நுழையும் ஒவ்வொருப் பெண்ணுக்குள்ளும் எழும் நடுக்கம். சிங்கத்தை அதன் குகையில் சந்திக்கப்போகும் மானின் உணர்வு. ஆனால் இந்த மான் அந்த சிங்கத்தை உயிரை விட அதிகமாக நேசிக்கும் காதல் கொண்ட மான். அதனால் உள்ளுக்குள் ஆசையுடன் அறை கதவைத் திறந்தாள்.
'இந்த செகண்ட்ல இருந்து நடிக்க ஸ்டார்ட் பண்ணனும்' என்ற எண்ணத்துடன் நுழைந்தவளின் கண்ணுக்கு மடிகணினியில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருந்த அர்ஜுன் தென்பட்டான். அவளுக்கு கோபம் வந்தது. அவர்களின் இல்லற வாழ்வு எப்படி இருக்கும் என அவளுக்கு தெரியும் தான். அவன் அவளுக்காக ஆவலுடன் காத்திருக்க வேண்டும் என அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் குறைந்த பட்சம் தன் வருகையை அவன் எதிர்பார்ப்பான் என எண்ணியிருந்தாள். தனது அறைக்கு மனைவி என்ற முறையில் ஒரு பெண் வருவதால் அவனுக்கு ஒரு அசவுகரியம் தோன்றும், அதனால் அவன் ஜன்னலோரத்திலோ பால்கனியிலோ இருப்பான் என எண்ணி வந்தால், இவன் வேலை செய்துக் கொண்டிருக்கிறான்.
அறைக்குள் நுழைந்து அறைக்கதவை வேகமாக மூடினாள். அந்த ஓசையில் திரும்பிய அர்ஜுன் அவளைப் பார்த்து தலையை லேசாக அசைத்து விட்டு மீண்டும் வேலையில் மூழ்கினான்.
'ஓ சார் நா உள்ளே வர பெர்மிஷன் குடுத்துட்டாராமா!! இருடா மாமா உனக்கு கச்சேரி வைக்கிறேன்' என எண்ணியபடி அலங்காரம் செய்யப்பட்டு இருந்த கட்டிலில் அமர்ந்தாள். அர்ஜுன் அவள் எதிரில் இருந்த சோபாவில் அமர்ந்து வேலை செய்துக்கொண்டிருந்தான்.
"அர்ஜுன், ஏதும் இம்பார்டண்ட் வொர்க்கா?"என்றாள் நிதானமாக.
அவளை நிமிர்ந்துப்பார்த்த அர்ஜுன் "நோ அனுபமா, ஜஸ்ட் ஆபீஸ் மெயில் செக் பன்றேன், அவ்ளோ தான்" என்றான் இயல்பாக.
" 'ஜஸ்ட்' மெயில் செக் பண்ற வேலைக்காக ஸ்பெண்ட் பண்ற டைம் கூட எனக்காக நீங்க ஸ்பெண்ட் விரும்பல இல்ல?" என்றாள்.
புருவத்தை சுருக்கியபடி அவளைப் பார்த்தான் அர்ஜுன்.
"என்ன அர்ஜுன்? என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி இருக்கு? கல்யாணம் ஆகிடுச்சி, சோ எப்படி வேணும்னா இன்சல்ட் பண்ணலாம்னு நெனைக்கிறீங்களா? எனக்கு மரியாதை ரொம்ப முக்கியம் அர்ஜுன். நா பர்ஸ்ட் டைம் உங்க ரூம்க்கு வரேன். 'ஜஸ்ட்' பார்மாலிட்டிக்கு கூட என்கிட்ட பேசல, சிரிக்கல . 'ஜஸ்ட்' லைக் தட் தலையை ஆட்டுறீங்க. ஒரு வேல பால் டம்ளரோட வந்ததால உங்க வீட்டுக்கு புதுசா வேலைக்கு வந்து இருக்கேன்னு நெனச்சிட்டீங்களோ?" என்றாள் கடுகடுப்பாக.
ஆராய்ச்சி பார்வையுடன் அவளை நோக்கியவன், "சாரி அனுபமா, நாம எல்லாம் பேசிட்டோம், இங்க உனக்கு எந்த தயக்கமும் இருக்காதுனு நெனச்சி தான் நா ஏதும் பேசாம விட்டுட்டேன். அதோட நா உன்ன வெல்கம் பண்ணா, உன்னால இயல்பா இருக்க முடியாதுனு நெனச்சேன். உன்ன இன்சல்ட் பண்ண நினைக்கல" என்றான்.
அனுவின் முகம் மலர்ந்தது.
" ஹ்ம்ம் ... அதுக்காக கண்டுக்காம இருந்தா எப்படி? நாம ரெண்டு பேரும் 'பார்ட்னர் இன் க்ரைம்'. இன்னும் நாம சேர்ந்து செய்யவேண்டியது நெறைய இருக்கு. சோ எனக்கு ப்ராப்பர் வெல்கம் வேணும் பார்ட்னர்" என்றாள்.
அர்ஜுன் இதமாக சிரித்தான். "ஓகே பார்ட்னர், வெல்கம் டூ அவர் மிஷன்" என்று தன் வலக்கரத்தை அனுவை நோக்கி நீட்டினான்.
"ஹாப்பி டூ பி வித் யூ பார்ட்னர்" என்று அந்த கரத்தைப் பற்றினாள் அனு.
அர்ஜுனின் உள்ளங்கை இளஞ்சூட்டில் நெகிழ்ந்திருந்தவளிடம் இருந்து தன் கையை எடுத்து விட்டு,"நா முன்னாடி சொன்னது தான் அனுபமா. உன் பிரைவசிய நா டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன். நீ இங்க பிரீயா இருக்கலாம்" என்றான் அர்ஜுன்.
'ஏன் அத கையைப் பிடிச்சிக்கிட்டே சொன்னா கொறஞ்சி போயிடுவியா? பெரிய வள்ளல்னு நெனப்பு. பிரைவசி குடுக்குறாராம்! ஒரு பொண்ணோட மனசு கூட புரியல, இவன்லாம் என்னத்த பிசினஸ் பண்ணி கிழிக்கிறானோ?' என உள்ளுக்குள் திட்டிக்கொண்டே வெளியே சிரித்து வைத்தாள் அனு.
"ஓகே அனுபமா, நீ போய் தூங்கு. நா என் ஒர்க் முடிக்கணும்" என்றுவிட்டு மடிக்கணினி பக்கம் திரும்பிவிட்டான்.
அனு சிறு தலையசைப்புடன் அலங்கரிக்கப்பட்ட படுக்கையில் கண் மூடிப் படுத்துக்கொண்டாள். ஒரு மணி நேரத்தில் மெத்தையின் லேசான அசைவில் விழித்திறந்தாள். நேராகப்படுத்து உறங்கத் தொடங்கியிருந்தான் அர்ஜுன்.
அனுபமா கனவிலும் நடக்காது என நினைத்த நிகழ்வு, அர்ஜுனின் அருகாமை. அந்த நொடிகளைத் தூங்கி வீணாக்க அவள் விரும்பவில்லை.'என் அர்ஜுன்', என ஜெபித்தபடி தன் உள்ளம் கவர்ந்தவனைக் கண்களால் விழுங்கியபடி இரவெல்லாம் விழித்திறந்தாள் அவள்.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
இதயம் - 13
"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்ம்மை கொண்ட கலிக்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்தர் இருந்தநாள்
தன்னி லேபொது வான் வழக்கமாம்;
மதுரத் தேமொழி மங்கையர் உண்மைதேர்
மாத வப்பெரி யோருட னொப்புற்றே
முதுமைக் காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்"
அனுவின் உள்ளம் நிறைவாக இருந்தது. முதன்முதலில் அர்ஜுனை பார்த்த நாளை நினைத்துப் பார்த்தாள்.
முதல் வாரம் கல்லூரிக்கு தனியாக சென்றுவந்தாள். அடுத்த வாரத்திலிருந்து பேருந்தில் சில தோழிகள் கிடைத்துவிட்டனர். அவள் கல்லூரிக்கு அருகில் இன்னும் இரண்டு கல்லூரிகள் இருந்தன. அதில் பயிலும் மாணவிகளும் அவள் தோழிகளாக இருந்தனர்.
அதில் ஒருத்தி தான் அஞ்சனா. பக்கத்து கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தாள். "அக்கா" என்று அழைத்தாள் கோபம் வரும் அவளுக்கு. "அஞ்சுனு கூப்பிடுங்க"என்பாள்.
அனு,அஞ்சு, அனுவின் கல்லூரியில் வேறு துறையில் படிக்கும் சரண்யா மூவரும் ஒரே ஊரில் இருந்து வந்தனர்.
"ஹே சி.என்.எப் காலேஜா நீங்க? உங்க காலேஜ் பிரசிடெண்ட் எப்டி இருக்காரு?" என்று கேட்டுக் கண்ணடித்தாள் அஞ்சு.
"நாங்க அவரை பார்த்தது இல்லங்க, அவர் எதோ பேப்பர் பிரசண்ட்டேசண் குடுக்க கோயம்பத்தூர் போய் இருக்காராம். ஃபிரஷ்ஷர்ஸ் டே நடந்தப்போ கூட வி.பி தான் வெல்கம் ஸ்பீச் குடுத்தாரு" என்றாள் சரண்யா.
"ஓஹ்... ஓகே ஓகே அவர் வந்ததும் என்கிட்ட சொல்லு" என்றாள் வெட்கசிரிப்புடன்.
சரண்யாவும் அனுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ' இவ எண்ணத்துக்கு இப்பிடி நெளியிரா?' என எண்ணியபடி "எங்க காலேஜ் பிரசி டென்ட் க்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்? அவர் வந்தா உங்க கிட்ட ஏன் சொல்லணும்?" என்றாள் அனு.
"அவருக்கும் எனக்கும் எதாவது சம்பந்தம் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்? அவர் செம்ம ஆளு தெரியுமா? அர்ஜுன் இஸ் ஹேண்சம் அண்ட் ஸ்மார்ட்" என்றாள் கண்ணில் கனவுடன்.
அனுவுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவள் பெண்கள் பள்ளியில் படித்தவள். அங்கும் தோழிகள் நடிகர்கள் பற்றியும், தங்கள் முறைப் பையன்கள் குறித்தும் பேசுவார்கள். ஆனால் இப்படி பட்ட மயக்க நிலையை அவள் அங்குப் பார்த்ததில்லை. ஏனோ அவளுக்கு அஞ்சுவின் இந்த பேச்சு பிடிக்கவில்லை. அந்த அர்ஜுனையும் பிடிக்கவில்லை.
'சரியான ஆள் மயக்கியா இருப்பான் போல' என நினைத்துக் கொண்டாள்.
ஆனால் அஞ்சு அதோடு விடவில்லை. அந்த வாரம் முழுக்க தினமும் ஓயாமல் அர்ஜுன் புகழ் பாடிக் கொண்டிருந்தாள்.
சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள் அன்று கல்லூரி சென்ற போது தான் அர்ஜுனை முதல் முறை பார்த்தாள் அனு. அவர்கள் கல்லூரியில் வாரத்தின் முதல் நாள் காலை பிரார்த்தனை கூட்டம் நடைபெறும். அனுவுக்கு பிரார்த்தனை கூட்டம் மிகவும் பிடிக்கும். சிறிய நாடகங்கள், பாடல், நடனம் என குட்டி நிகழ்ச்சியாக நடக்கும்.
கையில் கோப்பையும் கழுத்தில் மெடலுமாக இருந்த அர்ஜுன் தான் அன்றைய நாளின் நாயகனாக இருந்தான்.
"ஸ்டேட் லெவல் பேப்பர் ப்ரெசென்டேஷன் காம்ப்படிஷன்ல ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வின் பண்ணி நம்ம காலேஜ்க்கு பெருமை கொண்டு வந்து இருக்கார் நம்ம காலேஜ் ஸ்டூடன்ட் அர்ஜுன். அர்ஜுன் மாதிரி ஸ்டூடன்ட்ஸ் தான் நம்ம காலேஜோட சொத்து. பிரெசிடன்ட்னு சொல்லிக்கிட்டு கிளாஸ் கட் பண்ண சான்ஸ் தேடாம படிப்பிலும், காலேஜ் வேலையிலும் பெஸ்ட் குடுக்குறது தான் அர்ஜுன் ஸ்டய்ல்" என்று புன்னகையுடன் அவனை தோளோடு அணைத்துக் கொண்டார் கல்லூரி முதல்வர்.
மாணவர்கள் அனைவரும் தங்கள் கரவொலியால் ஆடிட்டோரியத்தை அதிர வைத்துக்கொண்டு இருந்தனர்.
எந்த அசைவும் இன்றி அர்ஜுனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அனு.
உங்கள் அன்பு சகோதரி,
லாவண்யா தயூ
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
ஆழ்கடலடி என் இதயம் - 14

"உலக வாழ்க்கையின் நுட்பங்கள் தேரவும்,
ஓது பற்பல நூல்வகை கற்கவும்,
இலகு சீருடை நாற்றிசை நாடுகள்
யாவுஞ் சென்று புதுமை கொணர்ந்திங்கே
திலக வாணுத லார்நங்கள் பாரத
தேசமோங்க உழைத்திடல் வெண்டுமாம்;
விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை
வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்" - மகாகவி.

அனுவுக்கு திறமைசாலிகளைப் பிடிக்கும். அதிலும் திறமையும் வாய்ப்பும் இருந்தும் பணிவோடு இருப்பவர்களை மிகவும் பிடிக்கும். அர்ஜுன் தன் பணிவால் அனுவின் மரியாதைக்கு உரியவனானான். அதன் பின் வந்த நாட்களிலும் அவனின் நடத்தையை கவனித்தாள் அனு.

கல்லூரியில் அனைத்து வேலைகளையும் ஓடி ஓடி செய்தான், சக மாணவர்களின் பிரச்சினைகளை உடனே தீர்த்தான், தன்னால் இயலாத நிலையில் பேராசிரியர்கள் உதவியை நாடினான். அவனின் ஈடுபாடும் சுறுசுறுப்பும் அவளை ஈர்த்தன.

மிக முக்கியமாக பெண்கள் பலர் அவனிடம் வலுக்கட்டாயமாகப் பேசினாலும் தேவையில்லாமல் அவன் பேசுவது இல்லை. அதுவும் திமிராக இல்லாமல் நாசூக்காக அவன் அவர்களைத் தவிர்த்தது அனுவுக்குப் பிடித்து விட்டது.

"அஞ்சுவோட மயக்கத்தைப் பார்த்து இவனை ஆள்மயக்கினு தப்பா நெனச்சிட்டோமே" என வருந்தினாள்.

அனு அர்ஜுன் மீது மரியாதைக்கொள்ள இன்னொரு காரணமும் இருந்தது. அது அர்ஜுனுக்கு கிடைத்த உதவித்தொகை. அவர்கள் கல்லூரியில் இளங்கலையில் கல்லூரியிலே முதல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவருக்கான முதுகலை படிப்பு செலவை கல்லூரி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். அதே கல்லூரியில் முதுகலை படித்தால் மொத்தசெலவும் செய்யும். ஒருவேளை வேறு கல்லூரிக்கு சென்றால், ஒரு குறிப்பிட்ட தொகை மட்டும் உதவித்தொகையாக தரப்படும். அர்ஜுன் அதே கல்லூரியில் கணினி அறிவியல் முடித்து இருந்தான், கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்றதால் உதவித்தொகையில் எம்.பி.ஏ படிக்கிறான். இந்த செய்தியெல்லாம் அவள் தோழி சரண்யா சொன்னவை. இதை கேட்ட பின் அனுவுக்கு அர்ஜுன் மீது நல்ல அபிப்பிராயம் தோன்றிவிட்டது.

மாலை நேரங்களில் ஏதோ அலுவலகத்தில் பகுதி நேர வேலை செய்கிறானாம். 'கஷ்டப்படுற குடும்பம் போல, இவனே மேல் படிப்புக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு , பார்ட் டைம் வேல பார்த்துக் குடும்பத்தையும் பாத்துக்கிறான்.கிரேட்' என்று எண்ணினாள்.

-----------------------------------------------------------------

தன் நினைவுகளில் மூழ்கி இருந்தவளை காலை ஐந்து மணி என்பதை அறிவித்தபடி அழைத்தது அர்ஜூனின் மொபைல் போன். சோம்பல் முறித்து மெல்ல எழுந்த தன்னவனை அரைக்கண்ணால் ரசித்தபடி தூங்குவது போல் பாவனை செய்யத்தொடங்கினாள் அனு.
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
ஆழ்கடலடி என் இதயம் - 15

"விட்டு விடுதலையாகி நிற்பாயிந்தச்
சிட்டுக் குருவியைப் போலே" - மகாகவி.

அர்ஜுன் - அனுபமா திருமணம் முடிந்து பத்து நாட்கள் கடந்து இருந்தன. அர்ஜுன் சமத்து பிள்ளையாக மறுவீடு வந்தான். அனுவின் பெற்றோரிடம் மரியாதையுடன் நடந்துக்கொண்டான். அருந்ததி வீட்டுக்கும் விருந்துக்கு சென்று வந்தார்கள். குலதெய்வம் கோவில், விருந்து எல்லாம் முடிந்து அன்று தான் அர்ஜுன் அலுவலகம் சென்றான்.

அனுபமா மாமியார் வீட்டில் மன நிறைவுடன் சுற்றி வந்தாள். காதல் அதிசயமானது. தன் நேசத்திற்கு உரியவருக்கு சொந்தமான அனைத்தையும் நேசிக்க வைப்பது. அனு அவளின் கனவிலும் நினைக்காத வகையில் நடந்த இந்த திருமணத்தை முழு மகிழ்ச்சியுடன் அனுபவித்தாள். தனது மாமியார் அகல்யாவுடன் ஒட்டிக்கொண்டு இருந்தாள்.

அன்று காலை பதினொரு மணிக்கு தன் அறையிலிருந்து கீழே வந்த அனு சிரித்த முகத்துடன் ஒரு நடுத்தர வயது பெண்மணி வீட்டின் ஹாலில் தனது மாமியாருடன் பேசிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். அனுவின் வருகையைக் கண்ட அகல்யா,"வா அனு, இது தான் நம்ம பேமிலி டாக்டர் அமிர்தா, என் பிரண்டு. உங்க மேரேஜ் டைம்ல அமெரிக்காவில இருக்க அவங்க பொண்ணு வீட்டுக்கு போய் இருந்தாங்க" என்று சொல்லிவிட்டு அவளை தனது அருகில் அமர்த்திக் கொண்டார்.

மேலும், " டாக்டர், இதான் என் டாட்டார் இன் லா, உங்களுக்கு மேரேஜ் போட்டோ ஷேர் பண்ணேனே" என்றார்.

அவரும் சிரித்த முகமாக,"அர்ஜுன் மனச மாத்தி மேரேஜ் பண்ண வச்ச மேனகா நீ தானாமா? கியூட்டா இருக்க, அதான் அர்ஜுன் விழுந்துட்டு இருக்கான்" என்றார்.

அனு மனதிற்குள் 'அவன் மனச மாத்த நிஜமான மேனகையாலயே முடியாது, நா எங்கிருந்து மாத்த? எல்லாம் என் நாத்தனார் அண்ட் மாமியார் புண்ணியம்' என எண்ணிக்கொண்டு வெளியில் புன்னகைத்து வைத்தாள்.

அவரும், "ரொம்ப சைலண்ட் டைப் போல"என்று அதற்கும் பாராட்டிவிட்டு அகல்யாவிற்கு ரெகுலர் செக்கப் செய்துவிட்டு போனார்.

மறுநாள் காலையிலேயே அருந்ததி வந்துவிட்டாள் "அண்ணியாரே... எப்படி இருக்க?" என்ற துள்ளலுடன்.

ஒரு நாள் முழுவதும் அவளும் அவள் குழந்தையும் அனுவுடன் இருந்து ஆட்டம் போட்டனர். மாலையில் குழந்தையை தன் தாயிடம் விளையாட விட்டுவிட்டு தனது அறையில் அமர்ந்து அனுவுடன் பேசிக்கொண்டு இருந்தாள் அருந்ததி.

"அனு , எனக்கு செம்ம ஹேப்பியா இருக்குடி. காலேஜ் டைம்ல நா எவ்ளோ கெஞ்சுவேன், 'எங்க வீட்டுக்கு வா'னு . நீ இந்த பக்கமே வர மாட்ட. நா தான் அங்க நம்ம வீட்லயே கதியா கெடந்தேன். இப்போ பாரு, நீ இந்த வீட்டுலயே இருக்க, நா உன்ன பார்க்க வந்து இருக்கேன். கடவுள் இருக்கான்டி"என்றாள் உண்மையான மகிழ்வுடன்.

அனு அருவின் வார்த்தைகளில் நெகிழ்ந்து போய் இருந்தாள். "கடவுள் நேர்ல வரமாட்டார்டி, மனுஷ ரூபத்துல தான் வருவார். என் வாழ்க்கையில உன் ரூபத்துல வந்து இருக்கார்" என்றாள் மெதுவான குரலில்.

அருந்ததி பட்டென அனுவை அணைத்துக் கொண்டாள். "என்னடி இது? இப்படியெல்லாம் கூட உனக்கு பேச வருமா? நா ஒன்னும் பெருசா பண்ணல, எந்த லாபமும் எதிர்ப்பாக்காம என் வாழ்க்கை மேல அக்கறை எடுத்து நீ எல்லாம் செஞ்சடி. இப்போ உன் மேரேஜ் மேட்டர்ல நா செஞ்சது நீ என்கூடவே இருக்கணும்னு சுயலாபத்துக்காக. சோ நீ என்னைய பாராட்ட ஒண்ணுமே இல்ல" என்றாள்.

அருந்ததி இப்படி தான். அவளுக்கு அனுவின் மீது அதிக அன்பு உண்டு. அனு தன்னிடம் மட்டும் அன்பு காட்ட வேண்டும், அதிக அக்கறை கொள்ளவேண்டும் என நினைப்பாள். அனுவுக்கு அது பிடிக்காது. அவள் அனைவரிடமும் ஒரே வகை நட்புடன் இருக்க வேண்டும் என கருதுவாள். அதிலும் அருந்ததியிடம் கொஞ்சம் விலகியே இருப்பாள். பணக்காரர்களிடம் பார்த்து நட்பு வைக்கவேண்டும் என்பது அவள் தாயின் அறிவுரை, அதை அனு அப்படியே கடைப்பிடித்தாள்.

அதையெல்லாம் மாற்றி அனுவின் உயிர்த்தோழி ஆகிப்போனாள் அருந்ததி. அவளின் உயிராகவே ஆகிவிட்டான் அர்ஜுன்.
 

Lavanya Dhayu

Saha Writer
Messages
56
Reaction score
43
Points
18
இதயம் - 16

"மூத்த பொய்ம்மைகள் யாவும் அழிப்பராம்;
மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்"
- மகாகவி பாரதியார்


"நீ என்ன நெனச்சி வேணும்னா இந்த மேரேஜ் பேச்சைத் தொடங்கி இருக்கலாம்டி. பட் இதுல ஹன்ட்ரெட் பெர்சன்ட் பெனிஃபிட் ஆனது நா தான். என் கனவு நினைவாகி இருக்குடி. அனு ஹேப்பி அண்ணாச்சி, சோ உனக்கு எப்பவும் என் நன்றி உண்டு " என்றாள் அனு.

"பேச்சைத் தொடங்குனது மட்டும் தான் நான். மத்தது எல்லாம் பண்ணது நீ தானேடி. கல்யாணம் வேணாம்னு சொன்ன என் அண்ணாவை 'இந்த மேரேஜ் கண்டிப்பா நடக்கும்'னு சொல்ல வச்சவளாச்சே நீ. தூரத்துல இருக்கும் போதே என் அண்ணனை ஆட்டி வச்ச, இப்போ கூடவே இருக்க. உன் கிட்ட மாட்டிக்கிட்டு என் அண்ணா என்ன பாடுபடறானோ?" என்று கிண்டலாகப் பேச்சை மாற்றினாள் அருந்ததி.

அவளை முறைத்தாள் அனு. "என்னடி நக்கலா? உன் அண்ணா அப்பாவி பாரு, நா பாடுப்படுத்துறதுக்கு? அவர் பாட்டுக்கு எப்பவும் சிடுசிடுனு மூஞ்சிய வச்சிக்கிட்டு லேப்டாப் கூட குடும்பம் நடத்திக்கிட்டு இருக்காரு. நா தான் டிசைன் டிசைனா அவர்கிட்ட ஆக்ட் குடுத்துக்கிட்டு அவருக்கு சந்தேகம் வராத மாதிரி நடந்துக்கப் பாடுப்படறேன்" என்றாள் கோபமாக.

கலகலவென சிரித்த அரு, "ஹாஹா ... அனுமா நீ இன்னும் மாறவே இல்லடி. காலேஜ் டேஸ் மாதிரியே நல்லா காமெடியா பேசுறே"என்றாள்.

"என் புலம்பல் உனக்கு காமெடியா இருக்கா?? இருக்கும் இருக்கும்... நா மட்டும் இப்படி இல்லனா, உன் கூடவும் உன் அண்ணா கூடவும் குப்பை கொட்ட முடியுமா?" என்றாள் அனு.

அருந்ததி அதற்கும் கலகலவென சிரித்தாள்.

அவளின் சிரிப்பை அன்புடன் பார்த்த அனு,"இப்படியே சிரிச்சிட்டே இரு. காட் ப்லெஸ்" என்றாள்.

"நீ லைஃப் லாங் என்கூடவே இருந்தா நா எப்பவும் இப்படியே ஹேப்பியா இருப்பேன்டி" என்றவளைப் பார்த்து சிரித்தபடி
"இத டயலாக உன் அண்ணா சொன்னால் நல்லா இருக்கும், என் கெரகம் நீ சொல்ற" என்று சலித்துக்கொண்டாள்.

"டோன்ட் வொரி அனு, நெக்ஸ்ட் ஒரு பிளான் போட்டு, அவனையும் சொல்ல வச்சிடுவோம்" என அருந்ததி சொன்னதைக் கேட்டு இருவரும் கலகலத்து சிரித்த நேரம் அருந்ததியின் அறை கதவு பட்டென திறந்தது. அவர்களின் பேச்சின் நாயகன் அர்ஜுன் அறைக்குள் நுழைந்தான்.

இருவரும் அவனைக் கண்டு தேள்கடி வாங்கிய திருடன் போல திருத்திருவென முழிக்க, அவன் நிதானமாக வந்து அங்கிருந்த சேரில் அமர்ந்தான்.

அனு அருந்ததியின் அருகில் இருந்து எழுந்தாள். அவளை கூர்ந்துப் பார்த்தான் அர்ஜுன். நா வறண்டது போல இருந்தது அனுவுக்கு.

அர்ஜுன் தன் பார்வையை விலக்கி,"என்ன உன் ஃபிரண்டு கூட சேர்ந்து எதோ சதித்திட்டம் போட்டுட்டு இருக்க போல" என்றான் தன் தங்கையிடம்.

அவன் இறுகி இருந்த முகத்தைக் கண்ட அருந்ததிக்கு வேர்த்துவிட்டது. "என்.. என்ன சதி?" என்றாள் படப்படப்பாக.

அவளின் படபடப்பை கண்ட அர்ஜுனின் முகம் இளகியது. லேசாக சிரித்தபடி,அருந்ததியின் தலையைப் பிடித்து ஆட்டினான்.

"ஹே குட்டி வாண்டு... பயந்துட்டியா? நா சும்மா உன்கிட்ட விளையாடினேன்."என்றான்.

அருந்ததி முகம் தெளிந்தாள். "சே... கிண்டல் பண்ணியா அண்ணா? நீ கோவமா இருக்கனு நா நம்பிட்டேன் தெரியுமா?"என்றாள் கொஞ்சல் குரலில்

"இது தான் உன் ப்ராப்ளம் அரு. டக்குன்னு எல்லாத்தயும் எல்லாரையும் நம்பிடுவ. இந்த ஆட்டிட்யூட நீ மாத்திக்கணும். இல்லனா எல்லாரும் உன்ன ஈஸியா ஏமாத்திடுவாங்க. எல்லாரும் உன்ன மாதிரி இன்னொசெண்டா இருக்க மாட்டாங்க, பொல்லாத உலகம் இது" என தெளிவாக அதே நேரம் மென்மையாக வருடும் குரலில் கூறினான்.

"நீ இருக்கும்போது எனக்கு எந்த ப்ராப்ளமும் வராது. இருந்தாலும் நீ சொல்லிட்டல? இனி ரொம்ப உஷாரா இருக்கேன்" என்றுவிட்டு தன் அண்ணன் கைகளை அழுத்திப்பிடித்துக் கொண்டாள் அருந்ததி.

"என்னணா இன்னிக்கு சீக்கிரமே வந்துட்ட? அண்ணிய பார்க்காம இருக்க முடியலையோ?"என்றாள் சிரிப்புடன்.

அவளிடமிருந்து தன் கையைப் எடுத்துக்கொண்டு எழுந்தான் அர்ஜுன். ஒர்க் சீக்கிரம் முடிஞ்சிடுச்சி. அதான். உன்ன கூட்டிட்டு போக வருண் வரானா?" இப்போது இறுக்கம் வந்திருந்தது அவன் குரலில்.

'க்கும்... இவ்ளோ நேரம் தங்கச்சிகிட்ட பேசும் போது குரலில் தேன் வடிஞ்சிது. இப்போ என்னை பத்தி பேசினதும் கருங்கல் உருளுது. நா வாங்குன வரம் போல' என அனு சலிப்புடன் எண்ணிக்கொண்டாள்.

"அவர் வரல அண்ணா. நானே ட்ரைவர் கூட கெளம்பிடுவேன்" என்றவளை பார்த்து சிரித்துவிட்டு "பார்த்து கிளம்பு" என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அர்ஜுன்.

அவன் வெளியில் சென்றதும் ஓடிப்போய் கதவை அடைத்த அரு,"ஜஸ்ட் மிஸ்ஸு டி. நல்ல வேளை அண்ணா ஒன்னும் கேட்கலை"என்றாள் நிம்மதியாக.

ஆனால் அனுவுக்கு நிம்மதி இல்லை. அவள் முகம் களை இழந்து இருந்தது.

அருந்ததி மாலை அவள் வீட்டிற்கு சென்ற பின்பும் கூட தங்களின் அறைக்குள் செல்லாமல் தோட்டத்தில் உலவிக்கொண்டு இருந்தாள் அனு.

'சும்மாவா சொன்னாங்க? ஒரு பொய் பல பொய்களை உருவாக்கும்னு. அர்ஜுன கல்யாணம் பண்ணிக்கணும்னு உண்மைய மறச்சது பெரிய தப்பு. அதனால தான் இப்போ தேவையில்லாம நிறைய பொய் சொல்ல வேண்டி இருக்கு, நடிக்க வேண்டி இருக்கு, நிறைய பயப்பட வேண்டி இருக்கு. உண்மை இருக்குற இடத்துல பயம் இருக்காது. இனி பயந்துட்டு இருக்க முடியாது. இன்னிக்கு அர்ஜுன் கிட்ட உண்மைய சொல்லிடனும்' என யோசித்து முடிவு எடுத்துவிட்டு தனதறைக்கு சென்றாள் அனுபமா.

_________________________________________

உங்கள் பொன்னான கருத்துக்களைத் தெரிவிக்கவும். அது என் எழுத்துப்பயணத்தை சீர்ப்படுத்த உதவும்.

- லாவண்யா தயூ
 

New Threads

Top Bottom