தோழிகளே,
நான் குறிஞ்சி நீண்ட நாள் வாசகி. எனக்கு வாசிக்க மட்டுமே தெரியும். இது ஒரு சிறு முயற்சி .
சென்னை பிரதான வீதியில் அமைந்துள்ள இல்லத்தில் "என்னங்க அருந்ததிக்கு நம் மக ரொம்ப பிடிசிருக்காம் .அவ மகன் ஜெயனுக்கு கேட்கிறாள். நீங்க மூர்த்தி அண்ணனிடம் பேசுங்களேன் என்றார் "நளினி . கேசவன் கட்டுமான தொழிலதிபர். இந்த தம்பதியதற்கு பிறந்தவர்கள் இரட்டை தேவதைகள் .அச்சில் வார்த்தார் போல் ஒரே உருவ அமைப்பு. நிறம் மட்டுமே வித்தியாசம் .சிநேக லதா எலுமிசசை நிற அழகி. ஆடை வடிவமைப்பாளராக கடந்த ஆறு மாத காலமாக பிருந்தாவனத்தில் வேலை செய்கிறாள். சிநேக பிரியா பால் வண்ண அழகி ..பொறியாளர் படிப்பை முடித்து தற்போது தந்தையின் கீழே பயிற்சி பெறுகிறாள்.
இதில் லதா அமைதியும் அழுத்தமும் கொண்டவள். பிரியா கலகலப்பானவள் .உணவு மேசையை நோக்கி வரும் போது பெற்றோரின் இப்பேச்சு இருவரின் காதையும் வந்தடைந்தது ."வாவ் "என கத்திக்கொண்டே படியிறங்கிய பிரியா அம்மா யாரை சொல்றீங்க? பறந்து கொண்டே படித்து தற்போது தரை இறங்கி இருக்கும் ஜெயனையா! "சரி யாருக்கு பொதுவா பொண்ணுன்னு சொன்னால் எனக்கா ?அவளுக்கா "?என கலாய்க்க ;ஏய் வாலு என்ற நளினி அக்கா இருக்க தங்கைக்கு பேசுவோமா; "எவரெஸ்ட்ல ஏறாம கீழே இரங்குடி "என்க ,ஓ !தாய்குலமே ஐந்து நிமிடம் முன்னே பிறந்தவளை அக்கான்னு இது நியாயமா ?தர்மமா? என புலம்ப அனைத்தயும் சிரிப்புடன் கவனித்த படி இருந்தாள் லதா. "பாப்பா சும்மா இரு" என அதட்டல் போட்ட கேசவ் லதா உன் விருப்பம் என்னம்மா எனறு கேட்க; அப்பா கொஞ்சம் பொறுங்க மூர்த்தி மாமா பற்றி தெரியும் ஜெயனை பற்றி ஒன்றும் தெரியாது அவர் இப்போ தான் பொறுப்பேற்று இருக்கார். நந்தவனம்ன்னு குழந்தைகள் ஆடை பிரிவு வேலைவேறு என்னை நெட்டி முறிக்குது. "ஒரு மாதம் யோசிக்க வேண்டும்பா" என்றாள் நளினி ஏதோ சொல்ல வர கல்யாண விஷயத்தில் நிதானம் தேவை எனறு அப்பேச்சுக்கு முற்று புள்ளி வைத்தார் .
இங்கே அருந்ததி ஏங்க ஜெயனிடம் கேட்க சொன்னேனே என ;பெற்ற தாயே மகனிடம் பயப்படலாமா ,,என வார
"உங்க மகன் தானே அப்படியே நான் சொன்ன வுடன் கேட்டுட்டு தான் மறு வேலை "அவனுக்கு என்ன குறைச்சல் அவன் என் சிங்க குட்டி டீ என பெருமைப்பட, இப்படியே அவனை ஏத்தி விட்டு ஏத்தி விட்டு தலையில் கிரீடம் இல்லா ராஜாவா சுத்துறான்.
நீ புலம்பும் படி அப்படி என்ன செய்தான் .அன்னைக்கு நண்பர்களுடன் பார்ட்டிக்கு போறேன்னு முதல்ல ஒரு கோட் போட்டான் கழட்டினான், இப்படியே ஐந்து தடவை மாத்திட்டு கடைசியா முதலில் போட்டதையே நல்லா இருக்குன்னு போட்டுட்டு போனான். ஏண்டான்னு கேட்டா எங்கேயும் ஜெயன் தான் சிறந்தவனா தெரியணும்னு சொல்றான். இதிலென்ன தப்பு கண்டுபிடிச்ச நீ !இது ஒன்னை மட்டும் சொல்லலை நான். அவனுக்கு எதிலுமே திருப்தி என்பது இல்லை ஒன்னை விட இன்னொன்றை அவன் மனம் விரும்புது அது பொருளாய் இருக்க போய் ஒன்றும் பிரச்சனை இல்லை. அதற்கு தான் அவனுக்கு பெண் பார்க்க சொன்னேன்.
லதா பொறுப்பான பொண்ணு அதான் உங்க மகனிடம் முதலில் கேளுங்கள்; பின் அண்ணனிடம் பேசலாம்;என்றார். "என்ன மம்மி காலையிலேயே டாடி காதை கடிசிட்டு இருக்கே" என்றபடியே வந்தான் ஜெயன். ஆறடி உயரம் .உடற்பயிச்சி செய்யும் உடற்கட்டு, மாநிறம் ,என்னப்பா என அது வந்து கேசவ் வீட்டில் லதாவை உனக்கு பார்க்கலாமான்னு கேட்குறாங்க. லதா நம்ம ஆடை வடிவமைப்பாளரா வேலை செய்ற தேவதை மாறி இருப்பாளே அவளா என்றான். ம் என்று மூர்த்தி தலையசைக்க எனக்கு சம்மதம் என்றுவிட்டான்.
.. அருந்ததி உடனே நாள் காட்டியை எடுக்க "மாம் என்ன செய்றீங்க" நல்ல நேரம் பார்த்து பேசணும் என்று சொல்ல, இந்த ஜெயன் வாயிவ் இருந்து எஸ்ன்னு எப்போ வந்ததோ அப்பவே நல்ல நேரம் தான் என்றான் கர்வமாக. ஹையோ மணி ஆச்சி இன்று நந்தவனம் தொடக்க விழா டாட் கிளம்பலாமா? மாம் மாலை பார்ட்டி இருக்கு ஆறு மணி போல் கிளம்பி இருங்க பாய் சொல்லி இருவரும் கிளம்பி சென்றனர்.
நந்தவனம் அடைகம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை கொண்டாட மாலையில் அனைவரும் குடும்பத்துடன் விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தான் ஜெயன்.
மாலையில் விழாவில் லதாவுடன் வந்த பிரியாவை பார்த்து விழித்தான். என்ன ஜெயன் நான் அவளோட இரட்டை. இந்த பார்வை எல்லாம் எனக்கு சகஜம் அப்பு வாயை மூடுங்க .கொசு போக போகுது என்று பட்டையை கிளப்ப,, .
ஏய் உன் ஜோடி கூட்டம் அங்கே இருக்கு என கிளப்ப; நடத்து; நடத்து; என கூவி கொண்டே நண்பர் பட்டாளத்தை நோக்கி சென்றாள்.
Laதாவை தன் நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த, அதில் டேவிட் என்பவன் அணைக்க வர, சிரிப்புடன் மறுத்து கை கூப்பி இது எங்கள் கலாச்சாரம் நண்பனே என்றாள். அவனும் வணங்கி விடை பெற்றான்.
ஜெயோனோ ஏக கொதிப்பில் அவளை தனியே அழைத்து சென்று உனக்கு அடிப்படை நாகரீகம் கூட தெரியாதா ?நாகரீகம் என்றாள் அடுத்தவரை அணைப்பதும் முத்தமிடுவதுமா? அப்படிப்பட்ட நாகரீகம் எனக்கு தெரிய தேவையே இல்லை. எல்லாத்திலும் சிறந்தவனான எனக்கு சரிபாதியாக இருக்கணும்னா எல்லாத்திலேயும் சிறந்தவனா நீ இருக்கனும்.
நீங்க சிறந்தவர்ன்னு யார் பட்டம் கொடுத்தது?
சிறந்தவன் நான் என்பதால் தான் உன் வீட்டில் என்னை மாப்பிள்ளையாக்க கேட்கிறார்கள் .
கொஞ்சம் மாற்றுங்க ஜெயன் உங்க அம்மா தான் பெண் கேட்டது .ஓஹ் அம்மா தேர்வா நீ ? ஒரு விழாவில் எப்படி மறந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படை கூட தெரியலை; இதே உன் தங்கையை பார் பட்டுப்பூச்சி போல் சுற்றி அனைவரிடமும் கலகலப்பாக பேசுகிறாள்.
இப்போ என் தங்கை பேச்சு ஏன் வருதுன்னு தெரிஞ்சிக்கலாமா ?உனக்கு முன்னே அவளை பார்த்திருந்தால் அவளை எ ன் மனைவியாக தேர்நதெடுக்க முடிவெடுத்திருப்பேன். ஆனால் இப்போ ?
இப்பவும் ஒண்ணும் கெட்டு போகலை ஜெயன் நீங்க உங்க வழியிலேயே போய் கொண்டே இருக்கலாம். ஹே நீ வருடப்படாதே நான்!
..கொஞ்சம் பொறுங்கள் ஜெயன் .இன்னும் உங்களை மணக்க நான் வீட்டில் சம்மதம் சொல்லலை. சோ உங்க பாதை தெளிவா இருக்கு நீங்கள் உங்கள் பாதையை பார்த்து போய்கிட்டே இருக்கலாம் என்றாள் சிரிப்புடன்.
ஏன் சிரிக்கிறா என்ற யோசனையுடன் பிரியாவிடம் சென்ற ஜெயன் "லதாவுடன் பேசியதால் உன்னை கவனிக்கலை" என ;அவ இருக்கும் போது என்னை கவனித்தால் தான் தப்பு என்றாள் குறும்பாக.
பிரியா நான் நேரடியா சொல்லி விடுகிறேன் உன் கலகல பேச்சு ,உன் நடத்தை எல்லாம் பிடிசிருக்கு; ஏன் சரி பாதி நீன்னு தேர்வு செய்திருக்கேன்; நீ என்ன சொல்றே ?அவனை அளந்து பார்த்து "லதா என்ன சொன்னா ?
அவளுக்கே தெரிஞ்சிடுச்சி அவ எனக்கு ஈடாக மாட்டான்னு,
"ஏய் லக்ஸ் இங்கே வா" என்ன பிரீ?
சார் சிறந்தவராம் ! எதிலேன்னு சொன்னாரா?
ஆறடி உயரமா?
நம்ம அரவிந்த் ஆறு .ரெண்டு. அப்போ kaலரா?
நம்ம கிரிஷ் சும்மா பால் கலரில் இருப்பானே!
அப்போ பணமா'?
நம்ம அப்பா கிட்டே இல்லாததா?
"ஹே ரெண்டு பேரும் என்னை வைச்சு பட்டிமன்றமா நடத்துறீங்க "என்றான் கோபமாக! அதெப்படி அக்காவை பார்த்துட்டு தங்கையை பிடிசிருக்குன்னு சொல்வே; பண்டமாற்று வியாபாரமா பண்றோம் இங்கே; அது இல்லைனா" இதுன்னு" இதில் சார் சிறந்தவராம்.
எவன் கொடுத்த பட்டம் அது? என்றாள் கண் சிவக்க !
ஜெயன் "கோபத்தில் பத்ரகாளி மாதிரி இருக்க இதற்கு உங்கக்காவே பரவா இல்லை என வாயை விட"
ஹா! ஹா! என சத்தமாக சிரித்த லதா "இக்கரைக்கு அக்கரை பச்சையா தெரியுது" "மனதை நிலை நிறுத்துங்க. அப்புறம் நாங்க என்னமோ மாலையில் கையுமா நிற்கிற மாதிரி பேச வேண்டாம். எங்களுக்கு ஏற்ற துணை நீங்க இல்லை ;என்ன அவளுக்கும் சேர்த்து சொல்றேன்னு பார்க்குறீங்களா ;நாங்க ரெட்டை அன்பிலும் பாசத்திலும். அப்புறம் உங்களை இத்தோட விட காரணம் நம் இரு குடும்பம் நட்பில் சிறந்தது! ஓகே ஜெயன் இனியாவது நீங்க சிறந்தவர்ன்னு நீங்க சொல்லாதீங்க; அடுத்தவங்க சொல்லட்டும்..
குட் பை ஜெயன்.