Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed இதயத்தை திருடியவன்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 21



சிங் ஹாஸ்பிடலில் செக்யூரிட்டி வேலையில் இருந்த காவலருக்கு போன் செய்தார்.



"சொல்லுங்கள் சார்"



"நான் சிங் பேசுகிறேன். அடிபட்ட ஆசாமி இப்போது எப்படி இருக்கிறார்.?"



"ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருக்கிேறாம் சார்"



"பலமான காயமா?"



"ஆமாம். அந்த பெண்ணை கத்தியால் குத்த முயன்றிருக்கிறான். நல்ல வேளையாக நம் ஆள் குறுக்கிட்டு தடுத்து அவனை பிடிக்க முயற்சி செய்தார். அதில் லேசான கத்திகுத்து காயம் "



"அந்த பெண் ?"



"அதிர்ச்சியிலும் பயத்திலும் இருக்கிறாள். "



"அந்த ஆளை அடையாளம் காண முடிந்ததா?"



"இல்லை சார். அவன் மாஸ்க் அணிந்திருந்தான். நான் பாத்ரூமிற்கு போயிருந்தேன். அந்த இடைவெளியில் தான் அவன் திடிரென உள்ளே நுழைந்து விட்டான்"



"இட்ஸ் ஓகே. டாக்டரை அவர்கள் இருவரையும் டிஸ்சார்ஜ் பண்ண சொல். இன்னும் சிறிது நேரத்தில் கோபி தன் காரோடு அங்கே வருவான். அதில் அனிதாவையும் நிர்மல்குமாரையும் ஏற்றி அனுப்புங்கள் நான் வேறு இடத்தில் அவர்களை பதுக்கி வைக்க நினைக்கிறேன். நீங்கள் காயம்பட்ட வரை கவனியுங்கள். பெண் காவலர்களை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள். நான் மறுபடியும் உங்களை கூப்பிடுகிறேன்." என்றார் சிங் .



போன் இணைப்பை துண்டித்த சிங் சரவணனுக்கு மிஸ்டு கால் கொடுத்தார். சற்று நேரத்தில் அவரது செல்போன் இரண்டு முறை ரிங்காகி கட்டானது .சிங் தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்.



சற்று நேரத்திற்கு பின்னால்.சிங் தனது வண்டியை பிராமண பெரிய ஆக்ரஹாரத்தின் வழியே விரட்டி கொண்டிருந்தார். ஈரோட்டில் தோல் தொழிற்சாலை களுக்கு பெய பெற்ற இடம் இது.அய்யர்கள் மட்டுமே இருக்கும் இடங்கள் தான் அக்ரஹாரம் என்று அழைக்கப்படும். ஆனால் இங்கே பிராமணர்கள் யாரும் இல்லை. இந்த ஏரியா முழுவதும் முஸ்லீம்களால் நிறைந்து காணப்பட்டது. கோயிலுக்கு நேர் எதிராக மசூதி இருப்பதும் இரு பிரிவினருமே அடுத்தவர்விசயத்தில் தலையிடாமல் அமைதியாக அவரவர் வழிபாட்டை எசய்து கொண்டிருந்தனர். மகுதிகளில் இந்துக்கள் தாயத்து வாங்கி கட்டி கொள்வதும் பாடம் ஓதி கொள்வதும் எந்த வித்தியாசமும் இன்றி நடந்து கொண்டிருப்பதை சிங் பார்த்தி ருக்கிறார். கடவுள் இருக்கிறானோ இல்லையோ தெரியாது. ஆனால் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஏதாவது தவறாக நடந்து விட்டால் எந்த மதக் கடவுள் என்று கூட மக்கள் பேதம் பார்ப்பதில்லை. எப்படியாவது நல்லது நடந்தால் சரி என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு எத்தனை கடவுள்கள் இருந்தாலும் போதாது.



ஓருகாலத்தில் அய்யர்கள் வாழ்ந்த இந்த பகுதிகளில் இப்போது முஸ்லீம்கள் வாழ ஓரு வினோதமான காரணத்தை சிங் கேள்விப்பட்டிருந்தார். இந்த அக்ரஹாரத்தில் பெரியாருக்கு ஒரு கடை வாடகைக்கு இருந்ததாகவும் அதில் ஒரு மாட்டு கறி விற்கும் முஸ்லீம் க்கு வாடகைக்கு விட்டு விட்டதாகவும் மாட்டு கறி விற்கும் இடத்தில் இருக்க விரும்பாத அய்யர்கள் தங்கள் இடத்தை முஸ்லீம்களுக்கு விற்று விட்டு பவானி பக்கமாக ஓரு அக்ரஹாரத்தை ஏற்படுத்தி கொண்டு புலம் பெயர்ந்து விட்டதாகவும் அவர் கேள்விப்பட்டிருந்தார். அது உண்மையா அல்லது இட்டுகட்டப்பட்ட கதையா என்பது சிங்கிற்கு தெரியாது. ஆனால் அன்யூனிபார்மில் அந்த ஏரியாவிற்குள் அவர் சில நேரம் விசாரணைக்கு சென்ற போது அக்ரஹாரத்திற்கான இலக்கணத்ேதாடு வீடுகள் அமைந்திருப்பதை அவர் கவனித்திருக்கிறார். ஓரு சமூகத்தையே ஓரு ஓற்றை கிழவனால் இருந்த இடத்தை விட்டு விரட்டியடிக்க முடிந்திருக்கிறதே என்ற ஆச்சரியம் சிங்கிற்கு பெரியார் படத்தையோ சிலையையோ பார்க்கும் போது ஏற்படும்.கோட்டி கார கிழவன் என்று புன்னகைத்துக் கொண்டார் சிங் .



கைவிடப்பட்ட பாழடைந்த தோல் தொழிற்சாலைகளை வேடிக்கை பார்த்தபடி தனது வண்டியின் வேகத்தை குறைத்தார் சிங் .ஒரு திருப்பத்தில் புத்தம் புதிய தார்சாலை ஒன்று அவர் கண்களில் தென்பட்டது. இது தான் அவன் சொன்ன இடமாக இருக்க வேண்டும் என்று சிங்கிற்கு தோன்றியது.



சிங் வந்து கொண்டிருப்பதை சிம்னியின் பதினைந் தடி இரும்பு ஆங்கிளில் உட்கார்ந்தபடி அவன் பைனாக்குலரில் பார்த்து கொண்டிருந்தான்.." சொன்னபடி வந்து விட்டீர்களா சிங்" என்றவன் மாஸ்கிற்குள் புன்னகைத்தான். மடமடவென்று கீழே இறங்கி வந்தவன் பூட்டியிருந்த அறையை திறந்தான். உள்ளே அனிதாவும் நிர்மல்குமாரும் கை கால்கள் கட்டப்பட்டு கிடந்தனர். அவர்களின் வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டிருந்தது.



"பொறுங்கள். இன்னும் கொஞ்ச நேரம் தான்" என்றான் அவன்.



சிங் அந்த நிறம் மங்கிய போர்டை பார்த்தார். அவன் சொன்னது இந்த இடம் தான். அந்த கம்பெனியின் கதவுகள் விரியத் திறந்து கிடந்தன. உள்ளே கார், பைக் ஏதாவது நிற்கும் என்று எதிர்பார்த்திருந்த சிங் அப்படி எதையும் காணாததால் நிம்மதி பெருமூச்சு விட்டார். வண்டியை ஓரமாக ஸ்டேண்ட் போட்டு நிறுத்தியவர் செம்மண் தரையில் காலடி வைத்து நடக்க தொடங்கினார்.



"வெல்கம் மிஸ்டர் சிங் " அவன் சுவற்றின் மறைவிலிருந்து வெளியே வந்தான். அவன் மாஸ்க் அணிந்து முகத்தை மறைத்திருந்தான். கையில் துப்பாக்கி வைத்திருந்தான்.



"உங்கள் ரிவால்வரையும், செல்போனையும் கீழே போடுங்கள்" என்றான் அவன்.



"போதும் விளையாட்டு. உன் மாஸ்க்கை கழட்டு. நீ யார் என்பது எனக்கு தெரியும் " என்ற சிங் தனது செல்போனின் பேஸ்புக் பக்கத்தினை திறந்தார்.



"நீ டேக்கை எடுத்து விட்டாலும் உன் சுவற்றில் அந்த போட்டோ இருக்கும் என்பதை மறந்து விட்டாய்" என்றார் சிங் .



"நீங்கள் அதை பார்த்து விட்டீர்களா?" என்றான் அவன் அதிர்ச்சியுடன் .



"எஸ்" என்ற சிங்கால் லிஸ்டில் கடைசியாக இருந்த சரவணனின் நம்பருக்கு கால் செய்து செல்லை அருகிலிருந்த மணல் பரப்பில் டிஸ்ப்ளே கீழே போகும் படி போட்டார்.



"துப்பாக்கி ?"



சிங் துப்பாக்கியைக் கீழே போட்ட போது சரவணன் காலை அட்டெண்ட் செய்தபடி காரில் அக்ரஹாரத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.



"போதும். மாஸ்க்கை கழற்று" என்றார் சிங் .



கோபி தன் மாஸ்க்கை கழட்டினான்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 22



மாஸ்க்கை கழற்றிய கோபியின் முகத்தை பார்த்த சிங்கின் முகத்தில் எந்தவிதமான அதிர்ச்சியோ வியப்போதென்படவில்லை. தன் யூகம் பலித்து விட்டதான ஒரு மெல்லிய சந்தோசம் மட்டும் அவரின் உள்ளத்தின் உ ள்ளத்தில் ஏற்பட்டது.



சிங்கின் மவுனமான அமைதி கோபிக்கு திகைப்பை தந்தது.



"நான் தான் கொலைகாரன் என்பதை எப்படி கண்டு பிடித்தீர்கள்?" என்றான் கோபி மெல்லிய வியப்போடு.



" சொல்கிறேன்" என்ற சிங் தனது ரிவால்வாரை கீழே போட்டார்.



"குட். சொல்லுங்கள்" என்றான் கோபி எதிர்பார்ப்போடு.



அதே நேரம் சரவணன் சிங்கின் பைக் தோல்பேக்டரியின் உள்ளே நிற்பதை கேசவலாக பார்ப்பது போல் பார்த்து கடந்தார். அவரது காதில் பொருத்தப்பட்டிருந்த ப்ளூடூத் ஹேட்செட்டின் வழியாக கோபியும் சிங்கும் பேசிக் கொள்வது கேட்க துவங்கியிருந்தது. மணல்மேட்டில் குப்புற கிடந்த செல்போனில் சரவணனின் கால் துண்டிக்கப்படாமல் தொடர்ந்து கொண்டிருந்தது. ஐம்பதடி தூரத்தில் தனது வண்டியை நிறுத்திய சரவணன் பக்கத்து கம்பெனிக்குள் நுழைந்து அதன் காம்பவுண்ட் சுவரை தாண்டி சிங் பணயக் கைதியாக இருந்த லெதர் பேக்டரியின் இடிபாடுகளுக்குள் பதுங்கி பதுங்கி முன்னேற ஆரம்பித்தார்.



சிங் தனது தொண்டையைகனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.



"இரண்டு வருடங்களாக இந்த நம்பர் கில்லர் கேசை நான் துப்பறிந்து கொண்டிருக்கிறேன். என்னால் கொலைகாரன் யார் எதற்காக கொலை செய்கிறான் என்பதை இம்மியளவு கூட கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்கு அவனை பிடிக்க கிடைத்த ஒரே சந்தர்ப்பமும் என் இதய பிரச்சனையால் தோல்வியடைந்து விட்டது. அதன் பிறகு தான் நீ என் உதவிக்கு வந்தாய் உன்மீது எனக்கு முதலில் எந்த சந்தேகமும் வரவில்லை. ஆனால் கொலைகளுக்கான பிண்ணனி காரணமாக ஒரு தலை காதல் தோல்வி காரணமாக இருக்கலாம் என்ற ஒரு சின்ன க்ளு எனக்கு கிடைத்தது. க்ரைமில் ஒரு தியறி இருக்கிறது. முதல் கொலைக்கும் கொலைகாரனுக்கும் எப்போதும் நேரடியான சம்மந்தம் உண்டு என் பதுதான் அந்த தியறி. அதன்படி நான் இறந்து போன முதல் பெண்ணை பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் அந்த பெண்ணை உன் தம்பி நவநீதன் காதலித்தது தெரிய வந்தது. "



"யெஸ் சிங் .எல்லாவற்றிற்கும் தொடக்கப் புள்ளி என் தம்பி நவநீதன் தான். அப்பா அம்மா இல்லாத அவனை நான் தான் வளர்த்து படிக்க வைத்தேன். வாலிப வயதில் எல்ேலாருக்கும் வரும் அந்த காதல் வியாதி என் தம்பிக்கும் வந்தது. என் தம்பியை அந்த பெண் காதலித்து ஏமாற்றி விட்டாள். படிப்பிலும் விளையாட்டிலும் பெஸ்டாக இருந்த என் தம்பி அந்த முட்டாள் இந்த ஏமாற்றத்தை தோல்வியை ஏற்க ஜிரணிக்க முடியாமல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தான். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து தலையில் பலத்த அடிபட்டு பைத்தியமாகி விட்டான். என்னால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. என் தம்பி நடைபிணமானான். அவனை நான் ஒரு ஹோமில் வைத்து பராமரித்து வந்தேன். ஒரு நாள் சிக்னலில் என் தம்பியை ஏமாற்றியவள் இன்னொருவதுடன் பைக்கில் சிரித்தபடி செல்வதை பார்த்தேன். என் தம்பியின் வாழ்க்கையை சீரழித்து விட்டு இன்னொருவனுடன் அவள் மகிழ்ச்சியாக இருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. எனக்குள் இருந்த சாத்தான் அவளை கொல்ல சொல்லி கட்டளையிட்டது. அவளை கொன்ற போது என் மனம் அடைந்த மகிழ்ச்சியை என்னால் விவரிக்க முடியாது. அந்த சந்தோசம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் நான் அந்த மாதிரியான பெண்களை தேடிப் பிடித்து கொல்ல தொடங்கினேன். ஒவ்வொரு கொலையையும் செய்து முடித்துவிட்டு அதை விலாவரியாக என் தம்பியிடம் சொல்வேன். சொன்னார் நம்ப மாட்டீர்கள். ஓவ்வொரு கொலைக்குப் பின்னும் என் தம்பியிடம் சில நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. அது அவன் செய்ய நினைத்ததை நான் செய்ததால் கூட இருக்கலாம். இந்த கொலைகள் தொடர தொடர என் தம்பி முற்றிலும் குணமாகி விடுவான் என்ற நம்பிக்கை கூட எனக்கு வந்துவிட்டது. அதனால் கொலைகளை தொடர்ந்து செய்தேன். பத்திரிக்கை செய்திகள், காதில் விழும் கிசுகிசுக்கள் இவற்றிலிருந்து என் இரையை நான் ேதர்ந்தெடுத்தேன்"



"நீ உன்னையே அறியாமல் ஒரு ஓற்றுமை வரிசையில் ஆட்களை தேர்ந்தெடுத்ததை என்னால் தொடக்கத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை நான் கண்டுபிடித்ததும் நவநீதனின் அண்ணனான உன் மீது சந்தேகம் வந்தது. பேஸ்புக்கில் கோவாவுக்கு டூர் சென்ற உன் நண்பன் உன்னை டேக் செய்த போட்டோக்களை நான் பார்த்தேன். அதில் பீச்சில் நின்ற உன் முதுகில் துப்பாக்கி தோட்டா தழும்பு இருப்பதை பார்த்தேன். மேலும் சரவணன் அனுப்பிய வீடியோவில் நீ ஆக்சிடெண்ட் ஆன காரை நோக்கி ஓடும் போது கையில் துப்பாக்கி வைத்திருந்தாய். ஆட்கள் யாரும் அங்கே வராமல் இருந்திருந்தால் நீ அவர்களை சுட்டு கொன்றிருப்பாய். ஆட்கள் வந்து விட்டதால் நீ அவர்களை காப்பாற்றுவது போல் நடிக்க துவங்கி விட்டாய். நீ ஓட்டி வந்த கார் தான் திருடப்பட்ட கார் .கார் ஓனர் கம்பளைண்ட் தருவதற்கு முன்பாகவே நீ காரை அவர் வீட்டு முன்பு நிறுத்தி விட்டாய். அதனால் கார் காணவில்லை என்ற கம்ளைண்ட் எந்த ஸ்டேசனிலும் பதிவாகவில்லை. அதையும் நான் கண்டுபிடித்து விட்டேன்"



"ஓ! அதனால் தான் கார் எங்கே என்று கேட்டீர்களா?"



"ஆமாம்"



"நீங்கள் இப்போது கண்டு பிடித்த லவ் பெயிலியர் விசயத்தை அனிதா முதலிலேயே கண்டு பிடித்து விட்டாள். ஆனால் அவளால் எப்படி என் மறைவிடத்தை கண்டுபிடிக்க முடிந்ததென்று தெரியவில்லை. ஒரு வேளை மாலினியை பற்றிய விசயத்தை பேப்பரில் படித்து விட்டு அடுத்தது நான் அவளைத் தான் கடத்துவேன் என்று நினைத்து கடத்திய பின்பு என்னை பின் தொடர்ந்து வந்திருக்கலாம்.அவளுக்கே தெரியாமல் அவளை பின்தொடர்ந்து வந்திருக்கிறான் அந்த பப்ளிசிட்டி பைத்தியம் நிர்மல் குமார். அவனுக்கு தன் அக்காவை கொன்றவனை அனிதா தேடிக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியும். அவளை கண்காணிப்பதன் மூலம் கொலைகாரனை கண்டுபிடித்து விட முடியும் என்று அவன் நம்பினான். நான் மாலினியை கொலை செய்ய முயலும் முன்பாக அவள் முதுகில் கத்தியால் பத்து என்ற எண்ணை எழுதினேன். நான் அவளை அவசரமாக கொல்ல காரணம் நிர்மல்குமார்வெளியே இருந்து கூரையின் மீதுகல்வீசி என் கவனத்தை கலைத்தவன் அவன் - நான் வெளியே போய் விட்டு வருவதற்குள் மாலினியின் உடலை காணவில்லை. அவன் தன் கார் டிக்கியில் மாலினியின் உடலோடும் அனிதாவோடும் தப்பித்து விட்டான். நான் அவர்களை காரில் விரட்டி வந்தேன். அவர்களை ஓவர்டேக் செய்ய முயன்ற போது தான் அந்த விபத்து நடந்தது. என்னுடைய அதிர்ஷ்டம் இருவருமே அந்த விபத்தில் சுயநினைவை இழந்தது தான்."



"அவர்களுக்கு எப்போது நினைவு திரும்பினாலும் நீ மாட்டி கொள்வாய். அதனால் அவர்களை ஹாஸ்பிடலில் இருந்து வெளியே கொண்டு வர முடிவு செய்தாய். அதற்காக ஓரு கொலை முயற்சியையும் செய்தாய்? யார் அந்த இரண்டாவது ஆசாமி?"



"நீங்கள் புத்திசாலி சிங். ஆனால் நான் உங்களை விட புத்திசாலி . இப்போது உங்கள் மூவரையும் நான் இங்கேயே சுட்டு கொல்ல போகிறேன். என்னை படுகாயப்படுத்தி கொண்டு அந்த சைக்கோ கில்லர் தான் உங்கள் மூவரையும் கொன்றதாக நாடகமாட போகிறேன். படுகாயத்துடன் என்னிடமிருந்து அவன் தப்பித்து விட்டதாக கூறுவதை அனைவரும் நம்புவார்கள்."



"யாரும் நம்ப மாட்டார்கள்"



"முதல் அத்தியாயத்தில் நீங்கள் சொன்னதை எல்லோரும் நம்பவில்லையா? சாகத் தயாராகுங்கள்"



சிங் கண்களை இறுக மூடினார்.



கோபி ரிவால் வரை நீட்டினான்.



துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது.



"சிங் கண்களை திறங்கள்" என்றார் சரவணன்.



சிங் கண்களை திறந்த போது சரவணன் துப்பாக்கியோடு நின்று கொண்டிருந்தார்.



கோபி கையில் குண்டு காயத்துடன் தரையில் கிடந்தான். அவனது துப்பாக்கி தூரத்தில் கிடந்தது.



சிங் கோபியின் சட்டை காலரை பிடித்தார்.



"யார் அந்த இன்னொரு ஆசாமி ?" என்றார் சிங் .



" கண்டுபிடியுங்கள் சிங் . என்னை பிடித்து விட்டாலும் இதே பாணியில் கொலைகள் தொடரும். உண்மையான கொலையாளி வெளியே இருப்பதாக கோர்ட் என்னை விடுதலை செய்யும். என் பழைய நவநீதன் எனக்கு திரும்பவும் வேண்டும் சிங். அதற்கு நான் நிறைய கொலைகள் செய்தாக வேண்டும்" என்றான் கோபி வலியோடு



"அவனை எப்படி கண்டுபிடிப்பது என்று எனக்கு தெரியும்" என்றார் சிங் .



"டூ லேட். இன்று இரவு ஒரு கொலை நடக்க போகிறது " என்று வலியோடு சிரித்தான் கோபி.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 23



துரை வெகு நேரமாக அந்த வீட்டை நோட்டம் விட்டு கொண்டிருந்தான். அவனது இடுப்பில் ஜெர்மன் தயாரிப்பான ஸ்டில்ல டோ கத் தி புத்தம் புதிய சூடான ரத்தத்தை ருசி பார்க்க காத்திருந்தது. அவளை துரை டிவியில் பார்த்திருக்கிறான். அவளிடம் அவனுக்கு பிடித்தது இடுப்பு வரை தொங்கும் முடி தான்.துரை கடிகாரத்தை பார்த்தான். இரவு மணி ஓன்பது என்றது ரேடியம் வாட்ச். அவள் சூட்டிங் முடித்துவிட்டு வருகிற நேரம் தான்.



சற்று நேரத்தில் வந்து நின்ற காரிலிருந்து அவள் இறங்கி விட்டிற்குள் செல்வது இருட்டில் மங்கலாக தெரிந்தது. அவள் சாவியை பூட்டிற்குள் நுழைத்து திறந்ததை வைத்து வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்ட துரைசிகரெட்டை கீழே போட்டு அணைத்து விட்டு கிளம்பினான். கதவுக்கு அருகே நின்றவன் தன்னை யாரும் பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் கவனித்தான். இடுப்பில் இருந்த கத்தியை வலது கைக்கு மாற்றி கொண்டவன் கதவை தட்டினான். அவனது மெதுவான தட்டலுக்கே கதவு திறந்து கொண்டது..



அலட்சியம், உயிர் குடிக்க போகும் அலட்சியம் துரை பூனை போல் உள்ளே நுழைந்தான். டைல்ஸ் பாவியதரையில் சத்தமின்றி கால்களை வைத்து நடந்தவன் அவள் எங்கேயிருப்பாள் என்று குழம்பத் தொடங்கினான். திடிரென டிவியின் சத்தம் கேட்டதும் தூக்கி வாரி போட்டு சப்த நாடியும் ஓடுங்கி போனான் துரை. கதவை ஒட்டி தொங்கிய ஸ்கிரீனில் பதுங்கினான் துரை. அவள் தன் நீண்ட முடியால் முகத்தை மூடிக் கொண்டு நைட்டியோடு கிச்சனை நோக்கி நடந்தாள் சின்னத்திரை நடிகை மாலா.



அப்பாடா! டிவி சத்தத்தில் அவள் போடுகிற சத்தம் கேட்காது என்று தனக்கு தானே தட்டி கொடுத்து கொண்ட துரை அவளை பின்புறமாக தொடர்ந்தான். அவள் சிங்கில் எதையோ உருட்டி கொண்டிருப்பதை பார்த்ததுரை கத்தியோடு அவளின் பின்புறத்தை நெருங்கினான்.



" கத்தியை கீழே போடு" என்றது கம்பீரமான ஆண் குரல்.துரை உறைந்து போய் நின்றான்.சிங்கிலிருந்து அவள் நைட்டியோடு திரும்பினாள். அவள் கையில் துப்பாக்கி இருந்தது. தன் தலையிலிருந்த விக்கை கழற்றி கீழே எறிந்தார் இன்ஸ்பெக்டர் சிங் . கத்தியை கீழே போட்டுவிட்டு ஓட முயன்ற துரை உள்ளே நுழைந்த சரவணனிடம் பிடிபட்டான்.

_

"யார் நீ?" என்றார் சிங் .



"எம் பேரு துரை."



" என்ன தொழில்?"



"கூலிக்கு கொலை செய்வது. ஆமா நீங்க யாரு?"



"போலீஸ் "



"நீங்களும் போலீசா?"



"உனக்கு பணம் கொடுத்த கோபி மாதிரியான போலீஸ் அல்ல நாங்கள் "



"பணம் கொடுக்கலிங்க. ஒரு கேஸ்ல முக்கியமான தடயம் அவருகிட்ட இருக்கு. அதற்காக போட்ட டீலிங் இது. அவர் எப்ப போலிஸ் ல மாட்டினாலும் ஒரு கொலையை அவர் சொல்ற மாதிரி பண்ணி வெளியே கொண்டு வரணும். என்னை எப்படி கண்டு பிடிச்சிங்க?"



"பேப்பர் ல வந்த நியூசை வைத்து அடுத்தது இந்த பொண்ணத்தான் சொல்வேன்னு ஓரு யூகம். அது உண்மையாயிருச்சு." என்ற சிங் மாலாவிற்கு போன் செய்தார்.



"மிஸ் மாலா.தேங்க்யூ பார் யூவர் கோ ஆப்ரேசன். இனி நீங்க தைரியமா இங்கே வரலாம். நாங்க அந்தாளை பிடிச்சிட்டோம்"



"எம் பொண்டாட்டி கூட அந்தம்மா ரசிகைன்னு சொல்லுங்க" என்றான் துரை.



"இது மட்டும் உம் பொண்டாட்டிக்கு தெரிந்தது சோற்றில் விசம் வைத்து விடுவாள். நட " என்றார் சிங் .



"எங்கிங்க?" என்றான் துரை.



"ஒரு புத்திசாலியை பார்க்க. அவனுக்கு கம்பெனி கொடுக்க " என்றார் சிங் .

.



முற்றும்.
 
Top Bottom