Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed இதயத்தை திருடியவன்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 11



இன்ஸ்பெக்டர் சிங் சுவற்றின் ஓரமாக கிடந்த செருப்பு குவியல்களிலிருந்து அந்த இரண்டு வித்தியாசமான ஹை ஹீல்ஸ் செருப்புகளை எடுத்தார். அந்த இரண்டு செருப்புகளையும் சிங் பேசன் ஷோ நிகழ்வுகளில் பெண் மாடல்கள் அணிந்து நடப்பதை டிவிக்களில் பார்த்திருக்கிறார். இந்த மாதிரியான செருப்புகளை குடும்ப பெண்களோ இல்லை உடனுக்குடன் பேசன் என்ற பெயரில் நவநாகரீக உடைகளை அணியும் காலேஜ் பெண்களோ இம்மாதிரியான செருப்புகளை அணிந்து சிங் பார்த்ததில்லை. அதனால் காரின் டிக்கியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பார்ட்டை மாகவோ இல்லை முழு நேரமாகவோ மாடலிங் துறையில் இருக்க வேண்டும் என்று சிங் அனுமானித்தார். அவரது கணிப்புகள் பெரும்பாலும் பொய்த்ததில்லை.



சிங் அந்த செருப்புகளை எடுத்து கொண்டு திரும்பிய போது கதவு திறந்தது. எதிரே நின்ற டாக்டர் அருளானந்தம்" என்ன சிங்? புதிதாக செருப்பு வியாபாரம் ஏதாவது துவங்க போகிறீர்களா? போலீஸ் வேலையில் கிடைக்கும் வருமானம் போதவில்லையா?" என்றார்.



" வாங்க டாக்டர் .உங்களுக்காகத் தான் காத்து கொண்டிருக்கிறேன்" என்ற சிங் அந்த ஹை ஹீல் ஸை கீழே வைத்தார்.



"தேவையில்லாமல் அதை தேடி எடுத்திருக்க மாட்டீர்கள். அதை எடுத்து கொண்டு என் அலுவலகத்திற்கு வாருங்கள். இதைப் பற்றி உங்களிடம் பேச வேண்டியதிருக்கிறது" என்ற டாக்டர் அருளானந்தம் தன் அலுவலகத்தை நோக்கி நடந்தார்.சிங் செருப்புகளுடன் அவரை பின்தொடர்ந்தார்.



இதற்கு முன்பு நடந்த எட்டு கொலைகளுக்கும் போஸ்ட் மார்டம் செய்து ரிப்போர்ட் தந்தவர் டாக்டர் அருளானந்தம். இன்ஸ்பெக்டர் சிங் அந்த கொலைகாரனை எப்படியாவது கண்டுபிடித்து விட வேண்டும் என்பதற்காக தன்னுடைய பணிக்கு வெளியேயும் பல உதவிகளை டாக்டர் செய்து கொன்டிருந்தார். அருளானந்தம் கொடுக்கும் பல தகவல்கள் சிங்கிடம் சேர்ந்து கொண்டே போனதே தவிர கொலைகாரனை பிடிக்கவோ அல்லது இனம் காணவோ அவை உதவவில்லை.



லொட லொடவென சப்தம் எழுப்பிய பேனை போட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்த அருளானந்தம்" உட்காருங்கள் சிங்" என்று எதிர் நாற்காலியை காட்டினார்.



நாற்காலியில் சரிந்த சிங் "சொல்லுங்கள் டாக்டர் " என்றார்.



"நீங்கள் தான் நடந்தவற்றை சொல்ல வேண்டும்" என்றார் அருளானந்தம்.



சிங் சுருக்கமாக நடந்த கார் விபத்தையும் அதில் கிடைத்த பெண் பிணத்தை பற்றியும் கூறினார்.



"சிங் .அந்த கொலைகாரன் முதலில் பெண்களை கடத்துகிறான். எந்த நோக்கம் அல்லது என்ன காரணத்திற்காக குறிப்பிட்ட பெண்களை தேர்ந்தெடுத்து கடத்துகிறான் என்பது தான் புரியாத புதிர். அதற்கு பிறகு அவர்களை சித்ரவதை செய்து கொன்று விடுகிறான். அவர்களை அவன் கற்பழிப்பதில்லை. நடந்த ஓன்பது கொலைகளிலும் கற்பழிப்புக்கான தடயங்களோ செமனோ கிடைக்கவில்லை. ஓன்று அவன் பெண்களால் அதிகம் பாதிக்கப்பட்டவனாக இருக்க வேண்டும். அதனால் பெண்களை அதீதமாக வெறுப்பவனாக இருக்க வேண்டும். இரண்டாவது அவனால் ஒரு பெண்ணை உடல் ரீதியாக திருப்திபடுத்த முடியாத ஆண்மை குறைவு ெகாண்டவனாக இருக்க வேண்டும்"



" இதெல்லாம் நாம் முதலிலேயே பேசியது தானே டாக்டர்?"



"ஆமாம்! ஆனால் அப்படி சந்தேகப்படும் படி ஒரு நபர் கூட நம சந்தேக வளைத்திற்குள் வரவில்லையே?"



"ஆசாமி எங்கே இருக்கின்றான் என்பது கூட நமக்கு தெரியவில்லை. இந்த கேசைப் பொறுத்தவரை நான் நிழலோடுதான் போராடி கொண்டிருக்கிறேன்."



" ஆனால் சிங் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது."



"என்ன அது?"



" அவன் கடத்தப்பட்ட பெண்களை ஏதோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைத்து தான் கொல்கின்றான். அப்படியானால் கொலைகாரனுக்கு வீட்டை தவிர வேறு ஒரு மறைவிடம் இந்த நகரத்தில் இருக்கிறது"



சிங் அருளானந்தம் சொல்வதை யோசித்தார். கொலைகாரனின் வீடு தனிமையான இடத்தில் இருக்கலாம். இல்லைடாக்டர் சொல்வதை போல் அவனுக்கென்று தனியாக ஒரு மறைவிடம் இருக்க வேண்டும்.



"நீங்கள் சொல்வதும் சரிதான் டாக்டர் " என்றார் சிங் .



" பாருங்கள் சிங் .இதற்கு முன்னால் நடந்த எட்டு கொலைகளுக்கும் இப்போது நடந்திருக்கும் ஒன்பதாவது கொலைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது" என்றார் அருளானந்தம்.



சிங் தடக்கென்று நிமிர்ந்தார்.



" என்ன டாக்டர் சொல்கிறீர்கள்?" என்றார் சிங் .



"கவனியுங்கள் சிங் .இதற்கு முன்பு நடந்த எட்டு கொலைகளிலும் கொலைகாரன் தன்னிடம் பிடிபட்டவர்களின் சித்ரவதையை ரசித்து பொறுமையாக செய்திருக்கிறான். அவர்களின் உடைகள் செருப்புகள் அணிகலன்கள் கூட கிடைக்காமல் முழு நிர்வாணமாகத்தான் பாடிகள் கிடைத்திருக்கின்றன. ஆனால் இந்த ஓன்பதாவது கொலையில் அப்படியே தலைகீழாக நடந்திருக்கிறது. ஏதோ ஒரு இடையூறினால் கொலைகாரன் தன்னுடைய சித்ரவதை ஸ்டைலை செய்ய வே இல்லை. நேரடியாக கொலையில் இறங்கி விட்டான்."



" எதை வைத்து இதை சொல்கிறீர்கள்?" என்றார் சிங் படபடப்புடன்.



"பாடியில் கத்திகுத்து காயத்தை தவிர வேறு சித்ரவதை செய்த தடயங்கள் இல்லை. அதே நேரம் இதற்கு முன்பு கிடைத்த பாடிகள் முழு நிர்வாணமாக கிடைத்தன. இந்த முறை வித்தியாசமாக நிர்வாண உடம்பில் ஹை ஹீல்ஸ் செருப்புகள் இருக்கின்றன. விசயம் தெரியுமா சிங்? போர்ன் இண்டஸ்ட்ரியின் சட்ட திட்டங்களில் பெண்கள்முழு நிர்வாணமாக நடிக்க கூடாது என்பதும் ஒன்று. அதனாலேயே அதில் நடிக்கும் பெண்கள் ஷி அணிந்து நடிப்பது வழக்கம். ஷுவும் பூட்சும் ஆடைக்கு சமமானது என்று சொல்லி சட்டத்தை ஏமாற்றுகின்றனர். இந்த கேசில்ஷு அணிந்த நிலையில் பெண் பிணம் கிடைத்திருப்பதால் இதை கூறுகிறேன்."



"அப்படியானால் கொலைகாரன் ஷி லே சை அவிழ்க்க முடியாமல் அதை உடலில் விட்டு வைக்க வில்லையா?"



"இல்லை.லே சைகத்தியை வைத்து கூட கட் பண்ணி விடலாமே? ஆனால் அவன் அதை செய்யவில்லை"



" ஏன்?"



" அவனுக்கு நேரம் கிடைக்காமல் கூட இருந்திருக்கலாம். காரில் வந்தவன் கில்லர் என்றால் அவன் கடத்தியது இரண்டு பெண்களை .ஒருத்தியை அவசர அவசரமாக கொன்று டிக்கியில் ஓளித்து வைத்திருக்கிறான். இன்னொரு பெண்ணை கொல்லவில்லை"



"ஏன்?" என்றார் சிங் ஆவலுடன் .



" மில்லியன் டாலர் கேள்வி சிங்" என்றார் அருளானந்தம்



சிங் குழப்பத்தில் ஆழ்ந்தார்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 12



சிங் டாக்டர் அருளானந்தத்தின் கேள்வியை பற்றி யோசித்து கொண்டிருந்தார். அவரது யோசனையை அருளானந்தத்தின் குரல் அறுத்தது."என்ன சிங் ஆழ்ந்த ேயாசனையில் மூழ்கி விட்டீர்கள் போலிருக்கிறதே? முதலில் இறந்து போன பெண் யார் என்று கண்டுபிடியுங்கள். முக்கியமாக அவளது பெயர் .பிரேத பரிசோதனை அறிக்கை அவளது பெயர் இல்லாமல் நிலுவையில் இருக்கிறது."



"கவலைப்படாதீர்கள் டாக்டர் .என் அசிஸ்டெண்ட் எல்லா ஸ்டேசன்களிலும் மிஸ்ஸிங்கேஸ்களை சேகரிக்க போயிருக்கிறான். அந்த தகவல்களில் இந்த பெண்ணை பற்றிய விசயமும் இருக்கும் என்று நம்புகிறேன். இந்த பெண்ணின் செருப்புகளை நான் எடுத்துப்போவதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை உண்டா?" என்றார் சிங் .



"கண்டிப்பாக இல்லை சிங்! நீங்கள் அவற்றை தாராளமாக எடுத்து போகலாம்" என்றார் டாக்டர் அருளானந்தம்.



சிங் அவரிடமிருந்து விடைபெற்று செருப்புகளுடன் கிளம்பினார். பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த தன் வண்டியை செருப்புடன் எடுத்த சிங்கை வியப்போடு பார்த்த சிலரின் பார்வையை புறம் தள்ளி விட்டு கிளம்பினார்.



போலீஸ் டிப்பார்ட்மெண்டின் பாரன்சிக் பிரிவில் செருப்புகளை ஓப்படைத்தவர் அவற்றின் அடிப்புறத்தில் ஒட்டியிருந்த மண்ணை ஆய்வு செய்ய சொல்லிவிட்டு தன் அலுவலகத்திற்கு கிளம்பினார்.



அலுவலகத்தில் நுழைந்து தன் சீட்டில் உட்கார்ந்து கொண்ட சிங் தன் ேயாசிப்பை தொடர்ந்தார்.



எல்லா கொலைகாரர்களுக்கும் ஓரு மோட்டிவ் இருக்கும். அதிலிருந்து பிசகாமால் தான் தங்களின் கொலைகளை செய்து கொண்டே போவார்கள். அது ஓரு தடயம் போல் இருப்பதை அவர்கள் விரும்புவார்கள். அது சிலரின் அடையாளமாகவே மாறிப் போய்விடும். உலகப் புகழ் பெற்ற ஜிக் ஜாக்கில்லர் தான் கொல்லும் நபர்களின் அருகே தன்னைப் பற்றிய குறிப்பை அல்லது க்ளுவை சங்கேத மொழியில் எழுதப்பட்ட பேப்பர் துண்டுகளை விட்டு செல்வதை வழக்கமாக வைத்திருந்தான். அந்த சங்கேத மொழிகளின் அர்த்தத்தை போலீஸ் கண்டு பிடித்ததும் அவன் மாடடி கொண்டு விட்டான். இங்கோ கொலைகாரன் ஒரே மாதிரியான பேட்டர்னில் கொலை செய்யவுமில்லை. தன்னைப் பற்றிய எந்த க்ளுவையும் விட்டு செல்லவில்லை.



சிங் இந்த கேசில் தான் எங்கேயோ எதையோ தவறவிடுவதாக நினைத்தார். கொலை செய்யப்பட்டவர்களிடம் ஏதோ ஒரு ஓற்றுமை இருப்பதாக சிங்கின் உள்ளுணர்வு கூறியது. அது என்ன என்று தான் சிங்கிற்கு தெரியவில்லை.



யோசித்து யோசித்து தலைவலிப்பது போல் உணர்ந்த சிங் ஒரு டீயை குடிக்க முடிவு செய்தார். ஜன்னல் வழியாக எதிரே தெரிந்த டீக்கடையை பார்த்து கொண்டிகுந்தவர் மாஸ்டர் தன்னை பார்த்தவுடன் "ஓரு டீ வடை " என்றார்.



சற்று நேரத்தில் பையன் கொண்டு வந்த டீயையும் வடையையும் வாங்கி கொண்டு காசைக் கொடுத்து அனுப்பினார்.



வடையை தின்று முடித்தவர் அந்த பேப்பரைகசக்கும் போது தான் அதிலிருந்த. போட்டோவை பார்த்தார். அவருக்கு அந்த முகத்தை எங்கயோ பார்த்தது போல் இருந்தது. எங்கே என்று மூளையை பிராண்டி பார்த்தவர் கண்டுபிடிக்க முடியாமல் திணறினார்.



பக்கத்தில் இருந்த துண்டு செய்தியை படிக்க ஆரம்பித்தார் அவரால் கிழிந்த பேப்பரிலிருந்து செய்தியை முழுதாக அறிந்து கொள்ள முடியவில்லை. எண்ணெயில் பேப்பர் முழுவதுமாக நனைந்திருந்ததால் அவரால் செய்தியை முழுதாக படிக்க முடியவில்லை.அவருக்கு அந்த செய்தியில் அந்த முகத்தில் தனக்கான ஏதோ ஓரு சேதி ஓளிந்திருப்பதாக தோன்றியது. அந்த செய்தியிலிருந்து அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்ணின் பெயர் ப்ரியா என்று மட்டும் அவருக்கு தெரிந்தது.



நியூஸ் பேப்பர் எழுத்துகளை வைத்து பேப்பரின் பெயரை இனம் கண்டு கொண்டவர் அந்த நாளிதழ் ஆப்பை டவுன்லோடு செய்தார்.



சிங்கின் அதிர்ஷ்டம் துண்டு பேப்பரில் மாதம் தெளிவாக இருந்ததால் அந்த மாதத்தின் பேப்பர்களை சர்ச் பண்ணி படிக்க தொடங்கினார்.



டீ ஆறிக் கொண்டிருப்பதை பார்த்தவர் அதை குடித்தபடி தன் தேடலை தொடங்கினார்.



நீண்ட நேர தேடலுக்கு பின் அந்த செய்தியை சிங் கண்டுபிடித்தே விட்டார். செய்தி கிழ்கண்டவாறு இருந்தது.



"சின்னத்திரை நடிகை ப்ரியாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் .பிரபல சின்னத்திரை நடிகை ப்ரியா சில சீரியல்களில் நடித்து புகழ் பெற்று வருகிறார். இவரை மோகன் என்ற வாலிபர் காதலித்து வந்தார். நடிகை ப்ரியா தற்போது சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருப்பதால் தன் காதலை முறித்து கொண்டார். அதனால் கோபமடைந்த வாலிபர் சூட்டிங் ஸ்பாட்டில் நடிகையை கத்தியால் குத்த முயற்சி செய்த போது சுற்றியிருந்தவர்கள் வளைத்து பிடித்தனர் "



சிங்கிற்கு பளிச்சென்று எல்லாமும் நினைவுக்கு வந்து விட்டது.இந்த ப்ரியா இப்போது உயிரோடு இல்லை. சிங் தேடும் கொலைகாரன் செய்த ஐந்தாவது கொலை இவள் தான். இந்த செய்தியும் தகவலும் சிங்கின் கண்களுக்கும் காதுகளுக்கும் இதுவரை வராமலேயே போய்விட்டன.



வடை வாங்கிய பேப்பரால் இதுவரை கவனிக்காத ஒரு விசயம் சிங்கின் கண்களில் பட்டு விட்டது. சிங்கின் முகத்தில் திடிரென ஒரு வெளிச்சம் பரவியது.



ஒரு வேளை காதலித்து ஏமாற்றிய பெண்கள் தான் கொலைகாரனின் இலக்காக இருக்குமோ என்ற எண்ணம் சிங்கின் மனதில் எழுந்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 13



நடந்த கொலைகள் அனைத்திற்கும் காதல் தான் காரணமாக இருக்குமோ என்று தோன்றியதும் சிங் சுறுசுறுப்படைந்தார். இத்தனை நாட்களாக இப்படி ஒரு செய்தி எப்படி தன் பார்வையில் படாமல் இருந்தது என்று சிங்கிற்கு சற்று வெட்கமாக கூட இருந்தது. தன்னை காதலித்து ஏமாற்றியதற்காக அந்த மோகன் ப்ரியாவை கொல்வதில் ஒரு லாஜிக் இருக்கிறது. மற்ற கொலைகளையும் அந்த மோகன் செய்திருக்கலாம். ஒரு வேளை சொல்லப்பட்ட அத்தனை பெண்களின் பிண்ணனியையும் தோண்டி துருவினால் இதே மாதிரியான காதல் விவகாரங்கள் வெளிப்படலாம். இப்படி ஒரு எண்ணம் தோன்றியதும் சிங்கிற்குள் ஓரு திடீர் உற்சாகம் தோன்றியது.



அதே நேரம் உள்ளே நுழைந்த கோபி சிங் உற்சாக மனநிலையை பார்த்து திகைத்தான்



"என்ன சார் ? வழக்கில் திடிர் கண்டுபிடிப்பு ஏதாவது உண்டா.? திடிரென வெகு உற்சாகமாக இருக்கிறீர்களே?" என்றான் கோபி.



"ஆமாம். ஒரு புதிய விசயத்தை நான் கண்டுபிடித்திருக்கிறேன். அதை நான் பிறகு சொல்கிறேன். முதலில் நீ போய் வந்த காரியத்தை பற்றி கூறு"



" சொல்கிறேன் சார். எல்லா போலீஸ் ஸ்டேசன்களிலும் அலசி ஆராய்ந்ததில் மூன்று மிஸ்ஸிங்கேஸ்கள் வெவ்வேறு ஸ்டேசன்களில் பதிவாகி இருக்கின்றன. எல்லா எப்.ஐ.ஆர் காப்பிகளையும் எடுத்து வந்திருக்கிறேன்."



"வெரி குட். ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்தி கூறு" என்றார் சிங் ஆவலுடன் .



" சொல்கிறேன் சார். முதல் மிஸ்ஸிங்கேஸ் நிர்மல்குமார்.தின பூமி பத்திரிக்கையின் நிருபர்.ஓரு வீட்டில் பேயிங் கெஸ்டாக தங்கியிருந்திருக்கிறான். இரண்டு நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியவன் வீட்டுக்கு திரும்ப வரவில்லை. அந்த குடும்பம் தான் அவனை காணவில்லை என்று கம்ளைண்ட் செய்திருக்கிறது.அப்படி காணாமல் போனது. வேறு யாருமல்ல. ஹாஸ்பிட்டலில் அட்மிட்டாகி இருக்கும் நம் ஹீரோ தான் "



" அவன் ஹீரோவா இல்லை வில்லனா என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும்"



"கரெக்ட். நான் அவனது அலுவலகத்தில் அவனைப் பற்றி விசாரித்தேன். கிடைத்த செய்திகள் அவ்வளவு நல்லதாக இல்லை." என்றான் கோபி.



"நீ கேட்டதை மறைக்காமல் சொல் "



"இந்த நிர்மல்குமார் சின்ன வயதிலேயே ஒரு கார் விபத்தில் தன் தாய் தந்தையை இழந்தவன். தன் பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்தாலும் முரடனாகவும் தான் தோன்றி தனமாக செயல்படுபவனாகவும் இருந்திருக்கிறான். அதற்காக மனநல சிகிச்சையும் கூட பெற்றிருக்கிறான். அடுத்த செய்தியை கேட்டால் இன்னும் அதிர்ச்சியாக இருக்கும்."



"தாங்கி கொள்கிறேன். அதையும் சொல் " என்றார் சிங் சிகரெட்டை பற்ற வைத்தபடி.



"நிர்மல்குமார் ஜர்னலிஸ்டான பிறகு அட்டென்சன் சீக்கிங்கிற்காக பல விஐபிகளை கேள்வி கேட்டு கடுப்பேற்றியிருக்கிறான். இவனுக்கு போதை பொருள் பழக்கமும் இருந்திருக்கிறது. நடக்க போகும் குற்றங்களை முன்னதாகவே செய்தியாக கொடுத்து எல்லோரையும் அசர வைத்திருக்கிறான். அந்த குற்றங்களையெல்லாம் இவனே தான் செட்டப் செய்திருக்கிறான் என்ற சந்தேகம் சீக்கிரமாகவே எல்லோருக்கும் வந்து விட்டது. அது உண்மை தான் என்பது அவன் கையும் காலுமாக மாட்டிய போது வெளிஉலகத்திற்கு தெரிந்து விட்டது. அதற்காக ஓரு வழக்கு அவன் மீது இருக்கிறது'



" அவன் சாவதற்குள் தீர்ப்பு வந்து விடும்" என்றார் சிங் .



"சமீபமாக நீங்கள் ஹேண்டில் பண்ணும் அதே கேசை இவனும் பாலோ செய்திருக்கிறான். இதுவரை நடந்த எட்டு கொலைகளை பற்றிய பல விவரங்களை சேகரித்து வைத்திருக்கிறான். அப்படி ஒரு பைலை தான் நாம் விபத்தான காரில் பார்த்தோம்.அதைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதி இழந்த புகழை பெற வேண்டும் என்று தன் அலுவலக நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான். அநேகமாக கொலையாளியை நமக்கு முன்பாக இவன் கண்டுபிடித்திருக்கலாம்"



"அப்படி கண்டுபிடித்தாலும் அதை சொல்லும் நிலையில் அவன் இல்லையே?"



"ஆமாம் - அவன் தான் சுயநினைவை இழந்து விட்டானே ?" என்றான் கோபி.



"எனக்கென்னவோ பப்ளிசிட்டிக்காக இத்தனை கொலைகளையும் இவனே செய்திருப்பானோ என்று எனக்கு தோன்றுகிறது "



"என்ன சார் சொல்கிறீர்கள்?"



"அப்படியும் யோசித்து பார்ப்போமே? ஏற்கனவே இதே போல் தானே செய்திருகிறான்.? இவன் ஏன் கொலைகாரனாக இருக்க கூடாது.?"



"அதற்கும் முகாந்திரம் இருக்கத்தான் செய்கிறது " என்றான் கோபி குழப்பத்துடன் .



"அடுத்தது?"



"அடுத்த மிஸ்ஸிங்கேஸ் அனிதா "



"இந்த பேரை நான் எங்கேயோ கேட்டிருக்கிறேன்."



"உங்களுக்கு வயதாகிறது சிங். ஹாஸ்பிடலில் இருக்கும் பெண் அவளுக்கே வைத்து கொண்ட பெயர் இது .அதற்குள் மறந்து விட்டீர்களா?



"ஓ எஸ். இப்போது நினைவுக் கு வந்து விட்டதுஅவளுடைய சப்கான்சியஸ் மைண்ட் அவளுடைய உண்மையான பெயரையே தேர்ந்தெடுக்க வைத்துவிட்டது போல."



"அவள் தான் இந்த பெயர் எனக்கு பரிட்சையமானது போல் தோன்றுகிறது என்று சொன்னாளே?"



"எஸ்! அது அவளது உண்மையான பெயர் என்று தெரியாமலேயே அவளது சொந்த பெயரை தேர்ந்தெடுத்து விட்டாள், "



" இவளுக்கு கூடப் பிறந்த ஒரு அக்கா இருந்திருக்கிறாள். இப்போது அவள் உயிரோடு இல்லை . "



"அவளுக்கு என்னாயிற்று?"



"அவளை நம் கொலைகாரன் கொன்றிருக்கிறான். கில்லர் கொன்ற ஐந்தாவது பெண் தான் அணிதாவின் அக்கா ப்ரியா.!" என்றான் கோபி.



சிங்கின் இரவல் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. வடை பேப்பரை ஆயாசத்துடன் பார்த்தார் சிங் .
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 14



சிங்கிற்கு கோபி சொன்ன தகவல்களை கேட்டு ஆயாசமாக இருந்தது. தன் கண்ணுக்கு எதிராகவே ஆதாரமும் தடயங்களும் இருந்தும் தான் எப்படி அதை கவனிக்காமல் அலட்சியமாக கடந்து வந்து விட்டோம் என்று அவருக்கு அவர் மீதே கோபம் கோபமாக வந்தது.



ஐந்தாவதாக சைக்கோ கில்லரால் கொல்லப்பட்ட பெண்ணிற்கும் அனிதாவிற்கும் இப்படி ஓருரத்த சம்மந்தமான உறவு இருக்கும் அவர்கள் இருவரும் அக்கா தங்கையாக இருப்பார்கள் என்பதை அவர் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் திடிரென அமைதியாகி சிந்தனையில் ஆழ்ந்து விட்டதை கவனித்த கோபி " என்ன சார் ? திடிரென அமைதியாகி விட்டீர்கள் ? " என்றான்.



"ஓன்றுமில்லை கோபி. நீ அனிதாவை பற்றி சேகரித்த விசயங்களை தொடர்ந்து கூறு. நான் அவற்றை கவனித்து கொண்டு தான் இருக்கிறேன்." என்றார் சிங் தனது சிந்தனையை கலைத்தபடி.



"அனிதாவும் அவளது அக்கா ப்ரியாவும் லேடீஸ் ஹாஸ்டலில் தான் ஓன்றாக தங்கியிருந்திருக்கின்றனர். இவர்களின் பெற்றோர் பெங்களுரில் இருக்கின்றனர். ப்ரியா டிவி சீரியலில் நடித்து வருகிறாள். அவளை ஒருவன் காதலிப்பதாக கூறி பின் தொடர்ந்து டார்ச்சர் செய்திருக்கிறான். முதலில் ப்ரியாவும் அவனை காதலித்திருக்கிறாள். அவளுக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்ததும் காதலர்களிடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது" என்ற கோபியை கையை நீட்டி மேலே சொல்லாதே நிறுத்து என்பது போல் சைகை செய்த சிங்" அந்த காதலனின் பெயர் மோகனா ?" என்றார்.



கோபியின் புருவங்கள் வியப்பால் உயர்ந்தன.



"அப்படியானால் இந்த காதல் விவகாரத்தை பற்றி நீங்கள் முன்பே அறிவீர்களா?" என்றான் கோபி,



"இல்லை. எனக்கு இன்று தான் இந்த காதல் விவகாரத்தை பற்றி தெரியும். அதுவும் வடை வாங்கிய பேப்பரிலிருந்து தான் தற்செயலாக தெரிந்து கொண்டேன் - " என்ற சிங் அந்த துண்டு சீட்டை அவனிடம் நீட்டினார்.



"இந்த விசயம் எனக்கு முன்பே தெரிந்திருந்தால் கேசை நான் வேறு வகையில் நகர்த்தி சென்றிருப்பேன். ரொம்பவும் தாமதமாக இந்த விசயம் தெரிய வந்ததால் மேலும் நான்கு உயிர்கள் பலியாகியிருக்கின்றன. என்னுடைய அலட்சியம் தான் அதற்கு காரணம். என் வழக்கை நான் சரியாக விசாரிக்கவில்லையோ என்ற குற்றவுணர்வு என்னை கொல்கிறது " என்றார் சிங் வருத்தத்துடன் .



"கவலைப் படாதீர்கள் சிங் . கொலைகாரன் அடுத்தடுத்து கொலை செய்து உங்களை பிசியாகவே இருக்க வைத்து விட்டான். அதனால் சில தகவல்கள் உங்கள் கண்களுக்கு தெரியாமல் போயிருக்கலாம். சிலவற்றில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்று மெத்தனமாக கூட இருந்திருக்கலாம். ஆனால் இனிமேல் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்போம். முன்பு நீங்கள் தனி ஆளாக இருந்ததால் சில தவறுகள் நடந்திருக்கலாம். இப்போது நாம் இருவர் இருக்கிறோம். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை." என்றான் கோபி.



"நீ சொல்வதும் சரிதான். அவன் பத்தாவது கொலையை செய்யும் முன்பாக நாம் அவனைப் பிடித்தாக வேண்டும். எனக்கென்னவோ காதலித்து ஏமாற்றிய பெண்களை மட்டுமே அந்த சைக்கோ தேர்ந்தெடுத்து கொல்வதாக எனக்கு தோன்றுகிறது. நான் இதுவரை அந்த திசையில் யோசிக்கவும் இல்லை. விசாரிக்கவும் இல்லை. இனி தான் அந்த கோணத்தில் விசாரிக்க வேண்டும்."



"கவலைப்படாதீர்கள். அவனால் கொல்லப்பட்ட அத்தனை பெண்களின் பிண்ணனியையும் சல்லடை போட்டு சலித்து கொண்டு வந்து உங்கள் முன்னால் கொட்டுகிறேன்." என்றான் கோபி.

.

"சரி. உன்னுடைய உதவி எனக்கு தேவைதான். அந்த மூன்றாவது மிஸ்ஸிங்கேஸ் யார்?"



"கார் டிக்கியில் இருந்த பெண் தான் அந்த மூன்றாவது மிஸ்ஸிங் கேஸ்.அவள் பெயர் மாலினி. வளர்ந்துவரும் ஒரு மாடல். ஒரு பேசன் ஷோவில் கலந்து கொண்டு தன் இருப்பிடத்திற்கு திரும்பி வரும்போது இரவில் கடத்தப்பட்டிருக்கிறாள். "

.

சிங்கிற்கு அவள் அணிந்திருந்த ஹை ஹீல்ஸ் நினைவிற்கு வந்தது.



சிங் தன் போனை எடுத்து டாக்டர் அருளானந்தத்தை அழைத்தார்.



"சொல்லுங்கள் சிங்?" என்றார் மறுமுனையில் அருளானந்தம்.



"அவள் பெயர் மாலினி. போஸ்ட் மார்டம் ரிப்போர்டை தயார் செய்யுங்கள் "என்றார் சிங் .



" நல்லது. ரிப்போர்டை தயார் செய்கிறேன்" என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தார் அருளானந்தம் -



"அந்த ப்ரியாவை லவ் டார்ச்சர் செய்த மோகன் மீது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. அவனை நாம் ஓரு முறை விசாரித்தால் என்ன?" என்றார் சிங் .



"நீங்கள் ரொம்பவும் தாமதித்து விட்டீர்கள் சிங் .காதல் தோல்வியை தாங்க முடியாமல் அவன் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டு விட்டான். அதுவும் ப்ரியா நம் சைக்கோ கில்லரால் கடத்தி கொல்லப்படுவதற்கு முன்பே அவன் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான். இறந்தவனை நாம் எப்படி விசாரிப்பது?" என்றான் கோபி.



சிங் தனது நெற்றியை பிடித்தபடி நாற்காலியில் சரிந்து உட்கார்ந்தார்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 15



எப்படி போனாலும் கேட் விழும் இந்த கேஸை நினைத்து ஆயாசத்துடன் பெருமூச்சு விட்ட இன்ஸ்பெக்டர் சிங் தனக்கு எதிராக அமர்ந்திருந்த கோபியை ஆயாசத்துடன் பார்த்தார்.



"பார் கோபி.இந்த வழக்கில் ரொம்ப நாட்களுக்கு பிறகு ஒரு புதிய வெளிச்சம் பிறந்திருக்கிறது. இது வரை கில்லர் எதற்காக கொலை செய்கிறான் என்ற மோட்டிவ் நமக்கு தெரியவில்லை. இன்று ஏதேச்சையாக கிடைத்த தடயம் ஒன்றை வைத்து அது தான் அவனது மோட்டிவ் என்று நாம் நம்பி கொண்டிருக்கிறோம். இதுவரை எந்த திசையில் போவதென்று நமக்கு தெரியவில்லை. இப்போது கலங்கரை விளக்கம் போல் ஓரு வெளிச்சம் தென்படுகிறது. அந்த திசையில் கேசை நகர்த்தித்தான் பார்ப்போமே?" என்றார் சிங் .



'உங்களின் யூகம் சரியா ? தவறா என்று ஆதாரப்பூர்வமாக தெரிந்து கொள்வது நல்லது தான்" என்றான் கோபி.



" ரைட். இப்போது கொலைகாரன் காதல் விவகாரத்திற்காக கொலை செய்கிறான் என்றே வைத்து கொள்வோம்.. என் இதய பிரச்சனைக்காக அவன் இரண்டு கொலைகளை செய்திருக்கிறான். அந்த இரண்டு கொலைகளை நம் விசாரணையில் இருந்து கழித்து கொள்வோம் ஏன் கழிக்க சொல்கிறேன் தெரியுமா? எனக்காக அவன் கொலை செய்த இருவரும் ஆண்கள். காதலித்து ஏமாற்றிய பெண்களை கொல்வது தான் அவனது நோக்கம்.அந்த நோக்கத்திலிருந்து விலகி இரண்டு கொலைகளை அவன் செய்திருப்பது எனக்காக மட்டும் தான். இதுவரை ஒன்பது பெண்களை அவன் கொன்றிருக்கிறான். அதில் ஐந்தாவதாக கொல்லப்பட்ட பெண்ணிற்கு மோகன் என்பவன் காதல் தொல்லை கொடுத்திருக்கிறான். பிறகு அவனும் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டான். மீதி உள்ள எட்டு பெண்களுக்கும் இதே போன்ற காதல் விவகாரங்கள் இருக்கிறதா என்பதை நாம் விசாரித்து அறிய வேண்டும். முடிந்த வரை இந்த விசாரணையில் பெண்ணின் பெற்றோர்களை தவிர்த்து விடலாம்"



"ஏன் சார் ?"



"அவர்கள் பெண்ணை இழந்த துக்கத்தில் இருப்பார்கள். அந்த துக்கத்திலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப நினைப்பவர்களை நாம் தொந்தரவு செய்ய கூடாது. மேலும் பெண்களுக்கு காதல் விவகாரம் இருந்தால் பெற்றோர் குடும்ப கௌரவம் கருதி அதை மூடிமறைக்கவே நினைப்பார்கள். அதனால் உண்மையை சொல்ல மாட்டார்கள். இறந்த பெண்களின் நண்பர்களை முக்கியமாக விசாரிப்போம்.இந்த காலத்து பெண்களின் காதலை அவர்களின் தோழிகள் தான் நன்றாக அறிந்திருப்பார்கள். காதலுக்கு உதவுவதே அவர்கள் தானே?" என்றார் சிங் .



"ஓகே சார். நீங்கள் சொன்னதை நான் கவனத்தில் வைக்கிறேன்" என்றான் கோபி.



மேஜை டிராயரை திறந்து ஒரு பைலை எடுத்து போட்ட சிங்" இது கொலையானவர்களின் டீடெய்ல் அடங்கிய பைல். இதில் முதல் நான்கு பெண்களை பற்றி நான் விசாரிக்கிறேன். ஐந்தாவது பெண்ணை பற்றி நான் விசாரிக்க வேண்டியதில்லை. நீ கடைசி நான்கு பெண்களை பற்றி விசாரி. நம் கணிப்பு உண்மையா என்று பார்க்க வேண்டும். அதோடு எனக்கு ஒரு டவுட் இருக்கிறது." என்றார் சிங் .



"என்ன சார் ? " என்றான் கோபி.



"ஐந்தாவது பெண்ணான ப்ரியாவை பற்றி அவளது காதல் விவகாரத்தை பற்றி நியூஸ் பேப்பரில் செய்தி வந்திருக்கிறது. இந்த செய்தியை நான் படிக்க வில்லை. ஆனால் கொலைகாரன் படித்திருக்கிறான். நம் தியரி சரியாக இருந்தால் காதலித்து ஏமாற்றுபவர்களை கொல்வது அவனது நோக்கமாக இருந்ததால் அவன் ப்ரியாவை தேர்வு செய்து கடத்தி கொலை செய்திருக்கிறான். மீதி எட்டு பெண்களும் யாரையாவது காதலித்து ஏமாற்றியிருந்தால் அந்த விசயம் எப்படி கொலைகாரனுக்கு தெரிந்திருக்கும்?" என்றார் சிங் .



" என்ன சொல்கிறீர்கள் சார்?" என்றான் கோபி.



" இதை ஒரு பேச்சுக்குத் தான் சொல்கிறேன். நம் தியரிப் படி அந்த கொலையுண்ட எட்டு பெண்களின் காதல் விவகாரம் கொலைகாரனுக்கு எப்படி தெரிந்திருக்கும்? அவன் அந்த எட்டு பெண்களுக்கும் பொதுவானவனாக இருக்க வேண்டும். இல்லை. இந்த எட்டு பெண்கள் காதலித்து ஏமாற்றினார்களே அந்த எட்டு ஆண்களுக்கும் பொதுவான தெரிந்த நபராக கொலைகாரன் இருந்திருக்க வேண்டும்." என்றார் சிங் . பைலின் கடைசி நான்கு பேப்பர்களை தனியே எடுத்து கோபியிடம் நீட்டியபடி. .



"நீங்கள் சொல்வதும் சரிதான். நான் இதுவரை இந்த சோணத்தில் யோசிக்கவே இல்லை.இது தான் நான் விசாரிக்க வேண்டிய பெண்களா?" என்றான் கோபி.



"ஆமாம். நான் சொன்னதை மறந்து விடாதே" என்ற சிங்கின் மனம்" என் இனிய எதிரியே' இந்த நகரத்தில் நீ எங்கே ஒளிந்திருக்கிறாய்?" என்றது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 16



அடுத்த ஒரு வாரமும் இன்ஸ்பெக்டர் சிங் நாயாக அலைந்து கொண்டிருந்தார். கொலை செய்யப்பட்ட பெண்கள் படித்த காலேஜ்ஜிலும் அலுவலகங்களிலும் தன் விசாரணையை தொடங்கினார் சிங் . ஆரம்பத்தில் அவருடன் பேச மறுத்தவர்களை தட்டி கொடுத்து எந்த ஆபத்தும் பிரச்சனையும் அவர்களுக்கு வராது என்று உறுதி கொடுத்து கேசுவலாக விசாரிக்க ஆரம்பித்தார். அவருடைய விசாரணையின் மையமாக காதல் விவகாரம் இருந்தது. அதை நேரடியாக கேட்காமல் எங்கெங்கோ சுற்றி வளைத்து கடைசியாக அதில் கொண்டு வந்து முடித்தார் சிங் .



ஆரம்பத்தில் தயங்கியவர்கள் பிறகு மெதுவாக வாயை திறக்க ஆரம்பித்தனர். கொல்லப்பட்ட நான்கு பெண்களுமே யாராவது ஒரு வரை காதலித்து ஏமாற்றி இருந்தனர். அதிலும் ஓரு பெண் ஓரே நேரத்தில் இரண்டு பேரை காதலித்து கொண்டிருந்தாள். யாருமே ஆண்களின் மனதை யோ குணத்தையோ பார்த்து காதலித்ததாக தெரியவில்லை. விலையுயர்ந்த பைக், ஆடம்பர கார், லேட்டஸ்ட் போன் என்ற செல்வமும் அந்தஸ்தும் தான் காதலிக்க காரணமாக இருந்தன. அவர்களை விட செல்வம் அந்தஸ்து அதிகமுள்ள ஆட்கள் கிடைத்த ேபாது இந்த பெண்கள் தங்கள் காதலனை கழற்றி விடவும் தயங்கவில்லை. நான்கு பெண்களும் காதலித்து ஏமாற்றிய ஆண்களில் ஓருவன் காதல் தோல்வியை தாங்க முடியாமல் சித்த சுவாதீனமாகி விட்டான். மற்றோருவன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். மற்ற இரண்டு பேர் மட்டும் மனதை தேற்றி கொண்டு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தற்போது வேறு இரண்டு பெண்களை காதலித்து கொண்டிருந்தனர்.



இவர்களிடம் காதல் மாட்டி கொண்டு படும்பாட்டை பார்த்து சிங்கிற்கும் ஒரு புறம் சிரிப்பு வந்தாலும் மறுபுறம் வேதனையாகவும் இருந்தது.



தம்பி இப்படி ஓய்வு ஓழிச்சல் இல்லாமல் வீடு தங்காமல் ஊர் சுற்றி கொண்டிருப்பதை வேதனையோடு பார்த்து கொண்டிருந்தார் வேதநாயகம். ஊரை விட்டு ரொம்ப நாட்களாக வேதநாயகம் பிரிந்து இருப்பதை உணர்ந்து கொண்ட சிங் தன்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறி அண்ணனையும், அண்ணியையும் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

அப்பாடா ! இனி நினைத்த நேரத்திற்கு வீட்டிற்கு போகலாம் என்று ஆசுவாசமடைந்தார் சிங் .



கோபி கொண்டு வந்த தகவல்களை படித்து கொண்டிருந்தார் சிங் .அவனிடம் கொடுத்த லிஸ்டில் இருந்த பெண்களும் காதல் விவகாரத்தில் சிக்கியிருந்தனர். பாதிக்கப்பட்ட ஆண்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பணிகளில் இருக்கும் இந்த பெண்களின் காதல் விவகாரம் எங்கோ இருக்கும் கொலைகாரனுக்கு எப்படி தெரிந்திருக்கும்? இந்த ஓன்பது பெண்களுக்கும் பொதுவான ஒரு ஓற்றுமை எங்கோ இருக்கிறது? எங்கே? சிங் யோசித்து கொண்டிருந்தார்.



அதே நேரம் மாலினியின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்டோடு உள்ளே நுழைந்தான் கோபி.



"இது மாலினியின் போஸ்ட் மார்டம் ரிப்போர்ட் . டாக்டர் அருளானந்தத்தை சந்தித்ததன் மூலம் எனக்கு பேஸ்புக்கில் ஒரு லைக் கூடுதலாக கிடைக்க போகிறது " என்றான் கோபி.



" என்ன சொல்கிறாய் நீ?"



"அவரை என்னுடைய பேஸ்புக்கில் ப்ரண்டாக ஆட் செய்திருக்கிறேன். உங்களுக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் இருக்கிறதா?"



"இல்லை. இதோ என்னுடைய ேபான். எனக்கும் ஓரு அக்கவுண்டை ஓப்பன் செய்து கொடு.அப்படி அதில் என்ன தான் இருக்கிறது என்று பார்த்து விடுவோம்" என்றார் சிங் .



கோபி அவரது போனில் பேஸ்புக் அக்கவுண்டை ஓப்பன் செய்து ப்ரண்ட்ரிக் வெஸ்டை கொடுத்து ஏட் செய்தான்.



"இப்போதைக்கு என்னுடைய பதிவுகள் மட்டும் தான் வரும் - பிறகு நிறைய பேரை ஏட் செய்து கொள்ளுங்கள்"



"அதற்கெங்கே நேரம்?" என்ற சிங் போஸ்ட் மார்டம் ரிப்போர்டை படிக்க ஆரம்பித்தார்.



எட்டு பெண்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பார்த்து சலித்த அதே வாசகங்கள்.



கொலை செய்வது மட்டும் ஓரே பேட்டர்னா ? என்று சிங் யோசித்த போது போன் அடித்தது.



"ஹலோ சிங் .நான் சரவணன் பேசுகிறேன். வழக்கில் ஏதாவது முன்னேற்றம் தெரிகிறதா?" என்ற து சரவணனின் குரல்.



"எங்களுக்கு சின்னதாக ஒரு க்ளு கிடைத்திருக்கிறது. " என்ற சிங் தான் கண்டுபிடித்த காதல் விவகாரத்தை சொன்னார்.



"நல்ல முன்னேற்றம் .அப்புறம் சிங் நான் ஒரு விசயத்தை உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன். அந்த கார் ஆக்சிடெண்ட் வீடியோ ஓன்றை நான் தேடி கண்டு பிடித்தி ருக்கிறேன்"



"எந்த கார் ஆக்சிடெண்ட்?"



"மறந்து விட்டீர்களா? உங்கள் அசிஸ்டெண்ட் கோபி ஒரு கார் விபத்திலிருந்து இரண்டு பேரை காப்பாற்றினாரே அந்த விபத்து "



"ஒiஆமாம். நினைவுக் கு வந்துவிட்டது சொல்லுங்கள்."



"அந்த விபத்து அங்கிருந்த கடையொன்றின் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது. அதை இப்போது வாட்ஸ் அப்பில் அனுப்புகிறேன். பாருங்கள்" என்றார் சரவணன்



வாட்ஸ் அப் பின் பச்சை வட்டம் பூர்த்தியாக காத்திகுந்தார் சிங் .
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 17



செல்போனின் தொடு திரையில் தெரிந்த பச்சை வட்டம் பூர்த்தியானது.சிங் அந்த வீடியோவை ஓட விட்டு பார்த்தார். அருகே இருந்த கோபியும் ஆர்வமிகுதியில் செல்போனை எட்டி பார்த்தான். அந்த கார் விபத்து காட்சி கருப்பு வெள்ளையில் ஓட ஆரம்பித்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு கோபி விபத்தான காரை நோக்கி ஓடுவதும் விபத்தான பகுதியில் ஓவ்வொருவராக கூட்டமாக கூடுவதும் வீடியோவில் பதிவாகி இருந்தது.



அதைப் பார்த்ததும் உதட்டை பிதுக்கினார் சிங் ." இதிலிருந்து நமக்கு உபயோகமாக எதுவும் கிடைக்கவில்லை விபத்து எப்படி நடந்தது என்று மட்டும் தான் நமக்கு தெரிய வந்திருக்கிறது" என்றார் சிங் .



அதே நேரம் சிங்கின் செல்போன் ஒலித்தது. அதை எடுத்து பேசிய சிங்கின் முகம் மாறியது. "இதோ உடனே அங்கு வருகிறேன்" என்ற சிங் போனை அணைத்தார்.



"டாக்டர் தான் நமக்கு போன் செய்திருக்கிறார் அந்த பெண் அனிதாவிற்கு அவல் பழைய வாழ்க்கையின் சிறு துண்டு பகுதி நினைவுக் கு வந்திருக்கிறதாம். அந்த துண்டு பகுதியில் நமக்கான தகவல் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கலாம். வா போகலாம்" என்ற சிங் சடுதியில் அலுவலகத்திலிருந்து வெளியே கிளம்பினார்.



"நான் என்னுடைய வண்டியில் வரட்டுமா? இல்லை இருவரும் ஓரே வண்டியில் போய்விடலாமா?" என்றான் கோபி சற்று தயக்கத்துடன் .



"தனித்தனியாகவே இருவரும் போகலாம். திடிரென்று ஏதாவது துப்பு கிடைத்தால் சட்டென்று கிளம்ப ஏதுவாக இருக்கும் " என்றார் சிங் செல்ப்ஸ்டார்ட்டரை அழுத்தியபடி -



இருவரும் அனிதா இருந்த அறையின் காரி டரில் நடக்கும் போது கூடவே வந்த டாக்டரிடம் "அந்த பெண்ணின் உண்மையான பெயரே அனிதாதானாம். அந்த பெயரை அவளே தான் தேர்ந்தெடுத்தாள். அது எப்படி டாக்டர் " என்றார் சிங் .



"சப்கான்சியஸ் மைண்ட். அந்த பெயர் அவளுக்கு ரொம்பவும் பரிச்சயமான பெயராக இருக்க வேண்டும். அதனால் தான் அதை தேர்ந்தெடுத்திருக்கிறாள். இப்போது அவளுக்கு வந்திருக்கும் பழைய நினைவுகூட பூர்ணமானதல்ல. அவளது 25 வருட வாழ்க்கையில் எந்த நினைவு அவளுக்கு திரும்பவும் நினைவுக் கு வந்திருக்கும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. " என்றார் டாக்டர் .



"கடைசியாக நடந்த கார் விபத்து, அதற்கு முந்தைய மணிகளில் நடந்தவைகள் அவளுக்கு நினைவு வந்து விட்டால் அன்றைய இரவு என்ன நடந்தது என்பது தெளிவாகிவிடும்" என்றார் சிங்



"அதற்கு நூற்றில் ஒரு பங்கு வாய்ப்பு தான் இருக்கிறது. உங்கள் ஜாதக கட்டங்கள் நன்றாக இருந்து கூடவே நிறைய அதிர்ஷ்டமும் இருந்தால் அவளுடைய பழைய நினைவுகளில் அன்றைய இரவு நடந்ததும் நினைவுக் கு வரும்." என்றார் டாக்டர் .



அனிதாவின் அறைக்குள் நுழைந்த டாக்டர் "ஹாய் அனிதா. எப்படி இருக்கிறாய்?"



"பைன் டாக்டர் "



"ஒரு மணி நேரத்திற்கு முன்னால் என்னிடம் சொன்னதை திரும்பவும் இவர்களிடம் சொல்ல முடியுமா?" என்றார் டாக்டர் வினயமாக.



"அதற்கு முன் ஒரு கேள்வி. நான் யார் என்பதை நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா?" என்றாள் அனிதா.



"விசாரித்து கொண்டிருக்கிறோம் பெண்ணே.! இப்போதைக்கு உன்னுடைய உண்மையான பெயர் அனிதா என்பதை மட்டும் கண்டு பிடித்திருக்கிறோம். அந்த பெயரை நீ தற்செயலாக தேர்ந்தெடுக்க் வில்லை என்பது மட்டும் உண்மை" என்றார் சிங் .



"ஓ! என்னுடைய பெயர் அனிதாவா?" என்று ஆச்சரியமானாள் அனிதா.



"ஆமாம். அது இருக்கட்டும். நீ கண்ட காட்சியை பற்றி இப்போது போவோமா?" என்றார் சிங்



"அது என்னுடைய பழைய வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்த நினைவா?இல்லை சொப்பனத்தில் நான் கண்ட கனவா என்று குழப்பமாக இருக்கிறது." என்றாள் அனிதா.



டாக்டர் இன்ஸ்பெக்டர் சிங்கிற்கு கண்ணை காட்டினார்.



" ரிலாக்ஸ் அனிதா.நீ பார்த்த காட்சிகளை இப்போதும் உன்னால் நினைவு கூற முடியுமா?"



"எஸ் டாக்டர் ." என்றாள் அனிதா.



"குட். இரவு தூக்கத்தில் கனவு கண்டால் விடிந்ததும் கனவின் ஒரு துளி கூட நினைவுக் குவராது. ஆனால் உன்னால் நீ கண்ட காட்சிகளை திரும்பவும் நினைவு கூற முடிகிறதென்றால் அது கண்டிப்பாக உன் வாழ்க்கையில் நடந்த சம்பவமாகத்தான் இருக்க முடியும். அதனால் வீணாக குழப்பி கொள்ளாமல் நீ பார்த்த காட்சியை விவரி " என்றார் டாக்டர் .



" சொல்கிறேன் டாக்டர் " என்றாள் அனிதா.



சிங் படபடக்கும் இதயத்துடன் உட்கார்ந்திருந்தார். விபத்துக்கு முந்திய மணித்துளிகள் அவள் நினைவுக் கு வந்திருக்க வேண்டும் என்று கடவுளிடம் மன்றாடிக் கொண்டிருந்தார் சிங் .
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 18



சிங்கின் வேண்டுதல் விரைவிலேயே பலித்தது. தன் தலையை பிடித்து கொண்டிருந்த அனிதா பேசத் தொடங்கினாள்.



"நான் காண்பது கனவா இல்லை பழைய நினைவுகளா என்று எனக்கு தெரியாது. ஆனால் நான் கண்ட காட்சிகளை வைத்து நான் யார் என்று கண்டுபிடிக்க முடியும் என்று நினைப்பதால் நான் கனவு கண்டதை சொல்ல போகிறேன்," என்றாள் அனிதா.



அனிதா யார் என்பது கோபிக்கும் சிங்கிற்கும் நன்றாக தெரிந்திருந்த போதிலும் அதை தாங்கள் சொல்லி அவள் தெரிந்து கொள்வதை விட அவருக்காய் நினைவுக் கு வந்து தெரிந்து கொள்வது நல்லது என்றே சிங் நினைத்திருந்தால் ஏதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவரது பார்வை அணிதாவின் முகத்தில் நிலைத்திருந்தது.



அனிதா சொல்ல தொடங்கினாள்.



"நான் எங்கேயோ ஓளிந்திருக்கிறேன் அந்த இடம் இருட்டாக இருக்கிறது. குட்டி குட்டியாக நிறைய சுவர்கள் இருக்கின்றன. ப்ளூ நிற பீப்பாய்கள் நிறைய ஆங்காங்கே இறைந்து கிடக்கின்றன. எனது காலுக்கு கீழே இருந்ததரை மண்ணாலானது. சிமெண்ட் தரை அல்ல. நான் குனிந்து உட்கார்ந்திருப்பதால் அது ஒரு மேஜையின் அடிப்புறமாக இருக்க வேண்டும். அப்போது ஒரு கதவு திறந்தது. உள்ளே ஓருவன் நுழைவதை அவன் கால்கள் மூலமாக நான் அறிந்து கொண்டேன். அங்கேயிருந்த ஒரு பெரிய மேஜையில் ஒரு பெண்ணை படுக்க வைக்கிறான். அவளை அவன் தோளில் தூக்கி வந்திருப்பது அப்போதுதான் தெரிந்தது. அவளது வாயை பிளாஸ்த்ரியால் ஓட்டி கைகளை பின்பக்கமாக கட்டி வைத்திருந்தான். அவன் அந்த பெண்ணை பார்த்து சிரித்தபடி எதையோ சொல்லிவிட்டு தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து கத்தியை எடுத்து பட்டனை தட்டி விரித்தான். அதே நேரம் வெளியே ஏதோ சத்தம் கேட்டது. அவன் கத்தியை மடக்கி கொண்டு யார் என்றபடி வெளியே போனான். சற்று நேரத்தில் அதே கதவு வழியாக மீண்டும் அவன் உள்ளே வந்தான். இந்த முறை நான் தைரியத்தை வரவழைத்து கொண்டு மேஜைக்கு அடியிலிருந்து எட்டி பார்த்தேன். நான் உண்மையாகவே அவன் முகத்தை பார்த்து விட்டேன். அவனை நான் எங்கேயோ பார்த்திருக்கிறேன். இவ்வளவுதான் எனது நினைவில் வந்த காட்சிகள்." என்றாள் அனிதா.



"அந்த இடம் எந்த மாதிரியான இடம் என்று உன்னால் கூற முடியுமா?" என்றார் சிங் .



"அது தினசரி வேலை நடக்கும் இடமாக தெரியவில்லை. கைவிடப்பட்ட ஒரு தொழிற்சாலையை போலிருந்தது. "



"முதலில் உள்ளே நுழைந்த ஆளை நீ பார்த்தாயா?"



"இல்லை, அவனை நான் பார்க்கவில்லை. எனக்கு பயமாக இருந்தது. "



"நீ எப்படி அங்கே அந்த அறைக்கு வந்தாய் என்று நினைவிருக்கிறதா?"



"இல்லை. ஆனால் அவன் அந்த பெண்ணோடு வருவதற்கு முன்பே நான் அங்கே வந்து ஓளிந்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன்."



"நீ பார்த்த பெண் இவள் தானா?" என்ற சிங் கேலரியில் இருந்த மாயாவின் புகைபடத்தை காட்டினார்.



"அவள் முகத்தை நான் பார்த்த ஞாபகம் இல்லை. ஆனால் ஒன்று நினைவுக்கு வருகிறது. அவள் கால்களில் ஹைஹ்ல்ஸ் அணிந்திருந்தாள். அவனால் அதை அவிழ்க்க முடியவில்லை. அதற்காகத்தான் கத்தியை எடுத்திருப்பானோ என்று இப்போது தோன்றுகிறது "



சிங் தனது செல்போன் காலரியில் இருந்த அந்த ஹை ஹீல்ஸின் படங்களை காட்டினார்.



" இதுதான். இதே போன்ற செருப்புகளைத் தான் அவள் அணிந்திருந்தாள். " என்றாள் அனிதா.



"அந்த அறையிலிருந்து வெளியே போய் விட்டு வந்ததும் அவனே தானா? இல்லை இருவரும் வெவ்வேறு ஆட்களா ? " என்றான் கோபி.



"அது எனக்கு நினைவில் இல்லை. " என்றாள் அனிதா.



" ஆனால் இரண்டாவதாக அறைக்குள் நுழைந்தவனின் முகத்தைத் தான் நீ பார்த்தி ருக்கிறாய் இல்லையா?"



"ஆமாம். அவனது முகம் எனக்கு பரிச்சயமானது போல் தோன்றுகிறது."



"நீ பார்த்தது இவனையா என்று கூறு" என்ற சிங் நிர்மல்குமாரின் போட்டோவை காட்டினார்.



அனிதாவின் முகத்தில் இருள் பரவியது. லேசான பரபரப்புடனும் அதிர்ச்சியுடனும் சொன்னாள்..



"இவன்தான். இவனே தான். நான் பார்த்தது இவனைத்தான்" என்று வீறிட்டாள் அனிதா. அதே வேகத்தில் அவள் மயங்கி சரிந்தாள்



சிங்கும் கோபியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். டாக்டர் " ரிலாக்ஸ் " என்றார்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 19



சிங் அன்றைய தினபேப்பரை கண்களால் மேய்ந்து கொண்டிருந்தார். ஒரு ஓரமாக வந்திருந்த பெட்டி செய்தி அவர் கவனத்தை ஈர்த்தது. அதில் ஒரு பெண்ணின் புகைப்படம் வெளியாகியிருந்தது. சிங் அதன் கீழ் வெளியாகியிருந்த செய்தியை படிக்கத் தொடங்கினார்.



" பிரபல சின்ன திரை நடிகை மாலா தன்னை காதலித்து ஏமாற்றியதாக காதலித்து ஏமாந்த இளைஞர் கண்ணீர் பேட்டி " என்ற அந்த செய்தியை பார்த்ததும் இனம் தெரியாத ஒரு கோபம் சிங்கிற்குள் எழுந்தது. என்னடா காதல் இது? துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள் பிறகு என்ன காரணமென்றே தெரியாமல் பிரேக் அப் செய்து கொண்டு செய்திகளுக்கு இரையாகி பரபரப்பை ஏற்படுத்துகிறார்களே என்று சிங்கிற்கு சலிப்பாக இருந்தது ஒருவேளை தங்களை லைம் லைட்டில் வைத்து கொள்ள தங்களின் கலையுலக வாழ்க்கையில் குறுகிய காலத்தில் வளர இந்த மாதிரியான வதந்திகளை வேண்டுமென்றே பரப்பி சீக்கிங் அட்டென்சன் செய்கிறார்களோ என்ற எண்ணமும் சிங்கிற்கு தோன்றியது. பேப்பரை மடித்து டேபிளில் வைத்தார்.



அதே நேரம் கோபி உள்ளே நுழைந்தான். "சரியான வெய்யில் " என்றபடி இருக்கையில் சரிந்து உட்கார்ந்தவனை நிமிர்ந்து பார்த்தார் சிங் .சற்று நேரத்திற்கு முன்புதான் ஹை ஹீல்ஸ் பரிசோதனை ரிப்போர்ட்டை வாங்கி வரும் படி சிங் அவனை வெளியே அனுப்பியிருந்தார். அவரது பார்வையை புரிந்து கொண்ட கோபி "இதோ நீங்கள் கேட்ட பரிசோதனை ரிப்போர்ட் " என்றபடி அந்த பேப்பர்களை நீட்டினான்.சிங் அதை வாங்கி கவனமாகப் படித்தார்.



செருப்பின் அடிப்பாகத்தில் முதலில் தார் மெல்லிய கோடாக படிந்திருக்கிறது. அதற்குப் பின் மணல் படிந்திருக்கிறது. அந்த மணலில் பொட்டாசியம் குளோரெட்டும் இன்னும் சில ஆசிட்டுகளின் சேர்மானங்களும் கலந்திருப்பதாக அறிக்கை தெரிவித்தது. அதை படித்ததும் தன் புருவத்தை உயர்த்தி ஆச்சரியப்பட்டார் சிங் .



"இந்த செருப்பிலிருந்து நமக்கு இரண்டு முக்கிய தடயங்கள் கிடைத்திருக்கின்றன. ஓன்று அந்த செருப்பில் ஒட்டியிருக்கும் பொட்டாசியம் குளோரைட்டும் ஆசிட்டுகளும் அவனது மறைவிடம் ஒரு கைவிடப்பட்ட தொழிற்சாலை என்பதை குறிக்கிறது. இந்த ஆசிட் நிரம்பிய பீப்பாய்கள் தான் அனிதாவின் பழைய நினைவுகளில் வந்த ப்ளு நிற பீப்பாய்களாக இருக்க கூடும். நம்முடைய ஆள் ஒரு கைவிடப்பட்ட கெமிக்கல் கம்பெனியையோ அல்லது தோல் தொழிற்சாலை எதையோ தனது மறைவிடமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறான்."



" தோல் பேக்டரியா?"



"ஆமாம். அங்கே தான் நிறைய பொட்டாசியம் குளோரைடு உப்பை தோலை பதப்படுத்த பயன்படுத்துவார்கள். சாயப்பட்டரைகளிலும் இதே மாதிரி உப்பைசாயமேற்ற பயன்படுத்துவார்கள். ஆனால் 2000 வருடத்திலிருந்து மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கெடுபிடியால் ஈரோட்டில் உள்ள அத்தனை சாயப்பட்டரைகளும் மூடப்பட்டு விட்டன. இருபது வருடங்களாக அந்த பட்டறைகள் அப்படியே இருக்க வாய்ப்பில்லை. சமீபத்தில் தான் ஜிஎஸ்டி வரியால் நிறைய குறுந்தொழில்கள் மூடப்பட்டு இருக்கின்றன. அப்படி மூடப்பட்ட கம்பெனி ஓன்று தான் கொலைகாரனின் மறைவிடமாக இருக்கக் கூடும் என்று நான் நம்புகிறேன்." என்றார் சிங் .



"இந்த மாவட்டத்தில் உள்ள எத்தனை தொழிற்சாலைகளை நாம் தேடுவது ? " என்றான் கோபி ஆயாசத் துடன் .

.

"கவலைப்படாதே கோபி.அதற்கும் ஒரு வழி இருக்கிறது. தெரிந்தோ தெரியாமலோ அந்த கொலைகாரனின் மறைவிடத்திற்கு பக்கத்தில் ஒரு ரோடு இருந்திருக்கிறம் அந்த ரோட்டை மா யாவை கொலை செய்த அன்று தார் போட்டு புதிதாக மாற்றியிருக்கிறார்கள். அந்த தார் தடயம் அவளது ஹை ஹீல் சில் இருக்கிறது"



" காரில் கடத்தி வரப்பட்ட வளின்செருப்பில் எப்படி தார் பட்டிருக்க முடியும்?"



"நல்ல கேள்வி.கொலைகாரன் அலட்சியமாக இருந்த நேரத்தில் அவள் காரிலிருந்து தப்பித்து ஓடியிருக்கலாம். சிறிது தூரத்திலேயே கொலைகாரன் அவளை மடக்கி பிடித்திருக்க கூடும். அதனால் தான் அவளது செருப்பில் தார் ஒரு மெல்லிய படலமாக படர்ந்திருக்கிறது. காரை கம்பெனிக்கும் நிறுத்திவிட்டு அவளை அவன் நடத்தியே கூட்டி வந்திருக்க வேண்டும், அப்போதுதான் அந்த கெமிக்கல் நிறைந்த மண் அவளது செருப்பில் ஒட்டியிருக்க வேண்டும்"



"நல்லகெஸ்ஸிங். ஆனால் அனிதா அந்த பெண்ணை கொலைகாரன் தோளில் தூக்கி வந்ததாக கூறினாளே?"



"நடக்கும் போது அவள் முரண்டு பிடித்திருக்க கூடும். அதனால் அவளை தோளில் தூக்கி வந்திருக்கலாம்"



"அப்படியானால் கொலை நடந்த நாளில் எந்த பகுதியில் பொதுப்பணித் துறை ரோடு போட்டார்கள் என்பதை விசாரித்தால் போதும்."



"ஆமாம். அந்த பகுதியில் இருக்கும் தோல், கெமிக்கல் தொழிற்சாலைகளை கண்டுபிடித்தால் போதும். அவனது மறைவிடம் தெரிந்துவிடும்"



சிங்கிற்குள் மகிழ்ச்சி குடி கொண்டது.சிங்கின் வட்டம் கொலைகாரனை நோக்கி சுருங்கி கொண்டிருந்தது.



அதே நேரம் அவரது மகிழ்ச்சியை குலைக்கும் படி அவரது போன் ஓலித்தது.



எடுத்து பேசிய சிங்கின் முகம் இருண்டது.



"ஹாஸ்பிடலில் அடையாளம் தெரியாத யாரோ அனிதாவை கொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். கான்ஸ்டபிள் ஒருவர் காயம் பட்டிருக்கிறார்" என்றார் சிங் .



"கொலைகாரனின் அடுத்த குறி அனிதாதான் " என்றான் கோபி.



"அவர்கள் இருவரும் அங்கிருப்பது ஆபத்து " என்றார் பரபரப்புடன் சிங்
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 20



தன் பைக்கின் செல்ப்ஸ்டார்ட்டரை அழுத்தி வண்டியை ஸ்டார்ட் செய்த இன்ஸ்பெக்டர் சிங் "கோபி! நீ உன்னுடைய பைக்கை வீட்டில் விட்டு விட்டு உன் காரை எடுத்து கொண்டு ஹாஸ்பிடலில் இருக்கும் இருவரையும் பத்திரமாக வெளியே கூட்டி வா.வெளியே வந்த பிறகு எனக்கு போன் செய்.நான் நீ எங்கே வர வேண்டும் என்பதை கூறுகிறேன்" என்றார் சிங் .



"சார். நான் சொல்வதை கேளுங்கள்" என்றான் கோபி.



"நான் சொல்வதை நீ முதலில் செய்" என்ற சிங் கோபியின் பதிலுக்கு காத்திராமல் வேகமாக கிளம்பினார்.



சிங்கிற்கு படபடப்பாக இருந்தது. வழியில் தென்பட்ட ஒரு பேக்கரியில் வண்டியை நிறுத்தியவர் ஓரு டீயை சொல்லிவிட்டு சிகரெட் ஓன்றை பற்ற வைத்தார்.கோபி பேஸ்புக் அக்கவுண்டை ஓப்பன் செய்து கொடுத்ததும் சிங் அடிக்கடி அதை பார்க்க ஆரம்பித்திருந்தார். ந்யூஸ் பீட்டில் வரும் வெவ்வேறு பதிவுகள், கமெண்டுகள் என்ற அந்த விர்ச்சுவல் உலகம் சிங்கை வெகுவாக ஈர்த்திருந்தது. ஸ்ட்ரஸ் பஸ்டர் என்ற வகையில் அவருக்கு பேஸ்புக்கை நன்றாகவே பிடித்திருந்தது.



பேஸ்புக்கை சற்று நேரம் பார்வையிட்டுக் கொண்டிருந்த சிங்கின் கண்களின் அந்த புகைப்படம் தென்பட்டது. அதை பார்த்ததும் சிங்கின் முகம் இருட்டுக்கு போனது. கொலைகாரன் தன்னை விட புத்திசாலி என்று சிங் தெரிந்து கொண்டார். ஹாஸ்பிடலில் நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு டிராப் என்பதையும் கொலைகாரன் எதை எதிர்பார்த்து அந்த தாக்குதலை நடத்தினானோ அதை இம்மி பிசகாமல் தான் செய்திருப்பதையும் சிங் உணர்ந்து கொண்டார். தான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூட அவன் முடிவு செய்து வைத்திருப்பதால் அவன் சாதாரணமான ஆளாக இருக்க முடியாது என்று சிங் நினைத்தார். அவனது அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என்று சிங்கிற்குள் எதிர்பார்ப்பு எகிறியது.



அதே நேரம் சிங்கின் போன் ஒலித்தது.சிங் "ஹாலோ " என்றார்.



மறுமுனையில் இருந்த சரவணன் "மிஸ்டர் சிங் நான் ஓரு முக்கியமான விசயத்தை பற்றி உங்களிடம் பேச வேண்டும்" என்றான்.



"சொல்லுங்கள்" என்றார் சிங் .



சரவணன் தான் கண்டுபிடித்ததை சொல்ல தொடங்கினார். சிங் ஏற்கனவே அறிந்த செய்திதான் அது.



"இது எனக்கு முன்பே தெரியும் " என்றார் சிங் சலனமற்ற முகத்துடன் .



"இப்போது என்ன செய்ய போகிறீர்கள்?"



"அவனை நான் நேருக்கு நேராக சந்திக்க முடிவெடுத்து விட்டேன்.சரவணன் நீங்கள் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்"



" ஏதுவாக இருந்தாலும் சொல்லுங்கள். செய்கிறேன்."



"எனக்கு அவன் உயிரோடு வேண்டும். நாம் இருவருமே சட்டத்தின்படி நடப்பவர்கள். அவனை நாம் தண்டிக்க வேண்டாம். சட்டமே அவனை தண்டிக்கட்டும் "



"உளறாதீர்கள் சிங் .அவன் என் தம்பியை கொன்றவன். அவனை நான் என் கையாலேயே கொல்ல வேண்டும்"



" சரவணன். நிலைமையை புரிந்து கொள்ளுங்கள். ஹாஸ்பிடலில் இருக்கும் இருவரை கொலைகாரன் கொல்ல முயற்சி செய்திருக்கிறான்"



" என்ன சொல்கிறீர்கள் நீங்கள்?"



"கொலைகாரன் ஓருவனல்ல. இரண்டு பேர் என்கிறேன் நான். இதில் உங்கள் தம்பியை கொன்றது யார் என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். இரண்டு பேரையும் நாம் பிடித்தாக வேண்டும். ஒருவனை பற்றி மட்டுமே நமக்கு விசயம் தெரிந்திருக்கிறது. ஒருவனை கைது செய்தால் இன்னொருவன் தலைமறைவாகி விடுவான். கொலைகாரன் நம்மை விட புத்திசாலித்தனமாக யோசிக்கிறான் என்பது என்னுடைய யூகம்.என் திட்டம் நிறைவேற நீங்கள் தான் உதவ வேண்டும்"



"நீங்கள் சொல்லும் விசயம் புதிதாக இருக்கிறது. நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன்" என்றான் சரவணன்.



"நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்" என்ற சிங் தன் திட்டத்தை சரவணனிடம் விவரித்தார்.



"ஓகே. நீங்கள் சொல்வதை செய்கிறேன்" என்றார் சரவணன்.



போணை அணைத்து விட்டு தன் பைக்கை நோக்கி நடந்தார் சிங் .அவரது செல்போன் மீண்டும் ஒலித்தது.



எடுத்தார்.அன் நவுன் நம்பர். அவனே தான்.



"ஹலோ சிங் . நலமா?" என்ற து அவருக்கு நன்றாக பரிச்சயமான குரல்.



"சொல். உனக்கு என்ன வேண்டும்?" என்றார் சிங் .



" பாருங்கள் சிங் .! ஹாஸ்பிடலில் இருக்கும் இரண்டு பேரை கூட்டி போக வந்த உங்கள் அசிஸ்டெண்ட் கோபியும் அந்த இருவரும் இப்போது என் கஸ்டடியில் இருக்கிறார்கள். உங்கள் அசிஸ்டெண் டிடம் பேசுகிறீர்களா?" என்ற து குரல் .



" கொடு" என்றார் சிங் .



அடுத்த நிமிடம் கோபி லைனில் வந்தான். "ஸாரி சார். நான் அவர்களை கூட்டி வரும் வழியில் இவன் எங்களை கடத்தி விட்டான்"



" இட்ஸ் ஓகே.கோபி.இப்போது உங்களை எங்கே வைத்திருக்கிறான்" என்றார் சிங் .



"ஒரு தோல் தொழிற் சாலையில் எங்களை அடைத்து வைத்திருக்கிறான்." என்றான் கோபி.



"போனை அவனிடம் கொடு" என்றார் சிங் .



"சொல்லுங்கள் சிங் " என்றான் அவன்.



"நான் எங்கே வர வேண்டும்"



" சொல்கிறேன்" அவன் இடத்தை சொன்னான்.



"கடைசியாக உன்னிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன்"



" கேளுங்கள்"



"நீ சிறைக்கு போய் விட்டால் மனநல விடுதியில் இருக்கும் உன் தம்பி நவநீதனை இனி யார் பார்த்து கொள்வார்கள்"



அவனது குரல் நடுங்கியது.



"மிஸ்டர் சிங் .நான் யார் என்பதை?"



" கண்டுபிடித்து விட்டேன் iநேரில் வருகிறேன்" என்றார் சிங் .
 
Top Bottom