Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL இ(த)டம் மாறிய காதல் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
665
Reaction score
825
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Anu_shna

New member
Messages
3
Reaction score
8
Points
3
இ(த)டம் மாறிய காதல்


காலை ஏழு மணி..இழுத்து போர்த்தி கொண்டு படுத்திருந்தான் அவன்,

"என்னங்க,எவ்ளோ நேரம் தூங்குவீங்க"என்று கேட்டுக் கொண்டே அவனது போர்வையை இழுக்க,

"ஏய் விடுடி,நைட் என்ன தூங்கவிடாம பண்ணிட்டு,காலையிலே வந்து என் தூக்கத்த கெடுக்குற,என்றவன் சட்டென அவளை இழுத்து தன்மேல் போட்டுக் கொண்டான்..

"டேய் பொறுக்கி விடுடா" என்று அவனிடமிருந்து விலக,அவளால் அவனது பிடியிலிருந்து விலக முடியவில்லை..அவளது இடுப்பை இரண்டு கைகளாலும் இருக்கி அணைத்திருந்தான்..


"டேய் பொறுக்கி" காலையிலே என்னடா பண்ற‌, என்று பொய்யாய் அவனை முறைக்க, அவளது முறைப்பை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவளது மேனியில் விரல்களால் ஊர்வலம் நடத்தினான்..

"டேய் எருமை மாடு காலையிலே ஆரம்பிச்சிட்டியா" என்று கேட்டுக் கொண்டே அவனது நெஞ்சின் மீது குத்த,"அய்யோ அம்மா என்று கத்தினான்..அவனது கத்தலில் ஒரு நிமிடம் அவளே பயந்து போனாள்..

"டேய் உண்மைய சொல்லு நிஜமா உனக்கு வலிக்குதா"

"எனக்கு வலிக்கல டி" ஆனா நெஞ்சுக்குள்ள இருக்குற‌ என் செல்லத்துக்கு வலிக்குமே என்று கூறி அவளை பார்த்து கண்ணடித்தான்..

"அடேய் உன்ன என்ன‌ பண்றேன் பாரு" என்றவள் சரமரியாய் அவனை அடிக்க தொடங்கினாள்..

"அய்யோ அடிக்காத டி வலிக்குது".."கடவுளே என்ன‌ காப்பாத்த யாரும் இல்லையா" என்று கத்திக் கொண்டே,அவளது இரண்டு கையையும் பிடித்து கொண்டு,
"ஏய் என்னடி கட்டுன புருஷன காலையிலே அடிக்கிற"என்றான்..

அவனிடமிருந்து விலகியவள்"இதோ பாருடா,இப்போ கிளம்ப போறியா, இல்ல சுடு தண்ணிய எடுத்து வந்து மூஞ்சில ஊத்தவா"என்று மிரட்ட
அவன் அதை காதில் வாங்காமல் விட்ட தூக்கத்தை தொடர முயன்றான்..

"உனக்கு வாயால் சொன்னா புரியாது."இருடா வரேன் என்றவள்,அங்கிருந்து சென்று ஒரு பக்கெட் தண்ணியை எடுத்து வந்தாள்..

"கடைசியா சொல்றேன் டா ஒழுங்கு மரியாதையா எழுந்திரி".

ப்ளீஸ்டி, புரிஞ்சிக்கோ" என்றவன் திரும்பி படுத்துக் கொண்டான்.

"சொன்னா கேட்க‌மாட்டல என்றவள்‌,ஒரு பக்கெட் தண்ணியையும் அவனது முகத்தில் ஊற்ற,"அய்யோ அம்மா" என்று அலறி துடித்து எழுந்தான்.அவனது‌ கத்தலில் பக்கத்து அறையில் இருந்த அவனது நண்பன் ராக்ஸ் கதவை திறந்து கொண்டு உள்ளே வர,பேய் அடித்தது போல் திருதிருவென விழித்து கொண்டிருந்தான் கனியமுதன்.இக்கதையின் நாயகன்..குடும்பத்தின் மூத்த மகன்.இவனுக்கு பிறகு இரண்டு தங்கைகள் உண்டு..சிறு வயதில் தந்தையை இழந்தவனை அந்த குடும்பத்தின் முதல்நிலை பட்டதாரியாக உருவாக்கியது அவனது அம்மா.படிப்பு மட்டுமே இந்த சமுதாயத்தில் தன்னை உயர்த்த முடியும் என்று நம்பிக்கொண்டிருக்கும் ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்தவன்.. குடும்பம் முழுவதும் கிராமத்தில் வசிக்க, தகவல் தொழில்நுட்ப வல்லுனராக சென்னையில் பணிபுரிந்தவன்,இப்போது மாற்றலாகி பெங்களூர் வந்திருந்தான்.

"டேய் அமுதா" எதுக்குடா கத்துன‌ என்று கேட்டவனிடம்,எதுவும் கூறாமல் பாத்ரூமில் புகுந்து கொண்டு ஷவரை திறந்து விட்டான்..அதிலிருந்து ஊற்றிய குளிர்ச்சியான நீர் உடல் முழுவதும் நனைத்து அவனது உடம்பை குளிர்ச்சியாக்கியது.. ஆனால் சற்றுமுன் கண்ட கனவை நினைத்து மனமோ பற்றிக் கொண்டு எறிந்தது..
யாரை நினைக்கவே கூடாது என்றிருந்தானோ அவளே தினமும் கனவில் வந்து காதல் இம்சை செய்வதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை..ஏமாற்றத்தில் மனது வலித்தது.

"டேய் அமுதா" உள்ள‌ என்னடா பண்ணிட்டு இருக்க,மனுசனோட அவசரம் தெரியாம, சீக்கிரம் வாடா என்று கதவை தட்டினான்..

கதவை திறந்தேன் "உனக்கு என்னடா பிரச்சனை" காலையிலே ஏன் பாத்ரூம் முன்னாடி நின்னு கத்துற, என்றான் அவனை முறைத்துக் கொண்டே..

என்னது நான் கத்துறேனா..மனுசனாடா நீயெல்லாம்.நீ போட்ட சத்தத்துல தான்டா நானே பதறி துடிச்சி வந்தேன் என்றான் பதிலுக்கு முறைத்து கொண்டே..

அமுதன் எதுவும் கூறாமல் அங்கிருந்து நகர, "டேய் தடிமாடு"உன்கிட்ட தான் கேக்குறேன்.பதில் சொல்லு..

" பதில்"

"என்ன என்றான் புருவத்தை உயர்த்தி"ராக்ஸ்.

பதில் சொல்ல சொன்னியே,அதான் சொன்னேன் என்றான் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்டாது..

ராக்ஸ்,என்னை பாத்தா பைத்தியம் மாதிரி தெரியுதா உனக்கு என்றான் பல்லை கடித்துக் கொண்டே…

"ஆமா" என்றான் கூலாக…

உன்கிட்ட போய் கேட்டேன் பாரு என்று தலையில் அடித்துக் கொள்ளும் போதே,வெளியே அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம்…

ராக்ஸ் அமுதனின் முகத்தை பார்க்க,பெல் அடிக்கிறது வெளில.என் முஞ்சில இல்ல..போய் கதவை திற என்றான் எரிச்சலாய்…

இவனுக்கு என்னாச்சு காலையிலிருந்து சிடுசிடுனு பேசுறான் என்று நினைத்துக் கொண்டே கதவை திறக்க,அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள்..அவளை பார்த்ததும் சற்றுமுன் நடந்த சம்பவம் மறந்து அவனது வாயெல்லாம் பல்லாக மாறியது.அவனது தலைக்கு மேல் பல்பு எரிந்தது.

ஹாய் என்று அவன் கூறுவதற்கு முன்பாக,
"ஹாய் ராக்ஸ்"எப்படி இருக்க என்று கேட்டு அவனை அதிர்ச்சியாக்கினாள்..

என் பேரு உங்களுக்கு எப்படி தெரியும் என்றான் அதிர்ச்சி குறையாமல்..

அட இதுக்கே ஷாக் ஆயிட்ட..கொஞ்சம் தள்ளு..இந்த வீட்ல இன்னொரு உருப்படி இருக்குமே அத எங்க காணும் என்று கூறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள்..

உள்ளே நுழைந்தவளை பார்த்தவுடன் எரிந்த பல்பு இப்போது ப்யூஸ் போனது..ஏய் நில்லு.யாரு நீ..நீ பாட்டுக்கும் திறந்த வீட்ல நா...என்று கூறி முடிப்பதற்குள் திரும்பி அவனை ஒரு முறைப்பு முறைத்தாள்..அந்த முறைப்பில் கூற வந்த வார்த்தை தொண்டைக்குழியில் சிக்கி கொண்டது..

'ராக்ஸ் யார் கிட்ட பேசிகிட்டு இருக்க' என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்தான் அமுதன்.. அவனைக் கண்டதும் "ஹாய் கனியா "என்றால்..

அவளது "கனியா" என்ற‌ அழைப்பில் அவனுக்கு கோவம் தலைக்கேறியது…

'யாரு நீ' என்றான் அடக்கபட்ட கோபத்துடன்..

என்ன பேரு அஜித்ரா.எங்க அம்மாவுக்கு அஜித்னா ரொம்ப பிடிக்கும்.பையனா பிறந்தா அஜித்னு பேரு வைக்கலானு நினைச்சாங்களாம்..ஆனா நான் பொண்ணா பிறந்துட்டதால அஜித்ரானு வச்சிட்டாங்க..சோ நீங்க என்ன அஜினே கூப்பிடலாம்..


உன் புராண கதையெல்லாம் கேட்கல.நீ யாருனு கேட்டேன்…?என்றான் எரிச்சலாய்..

அதான் சொன்னேனே.என் பேரு அஜித்…..

ப்ச்ச்ச...என்று எரிச்சலானவன் போதும் நிறுத்து..!நீ யாரு.எங்க ரூம்ல என்ன பண்ற என்றான் கடுப்புடன்..

நாங்க பக்கத்து ரூமுக்கு புதுசா குடி வந்திருக்கோம்.. அதான் பக்கத்துல யாரு இருக்கா, பாத்துட்டு போகலாமேனு கதவை தட்டினேன்.. உங்க ப்ரெண்ட் கதவை திறந்து பரவால்ல உள்ள வாங்க, வீட்டை சுத்தி பாருங்கன்னு சொன்னார் அதான் சுத்தி பார்த்துட்டு இருக்கேன் என்று கூறினாள்…

அவள் கூறியதைக் கேட்டு "அடிப்பாவி" காலையிலே என்னம்மா பொய் சொல்றா…?
என்று நினைத்தவன், அமுதா நம்பாத டா, இவ சொல்றதெல்லாம் பச்ச பொய்… நான் சொல்ல சொல்ல கேட்காம உள்ள வந்துட்டா..! என்று சிறு பிள்ளை போல் கம்ப்ளைன்ட் செய்தான்..

ஏன் "ரா" பொய் சொல்றீங்க,நீங்கதான என் பேரு ராக்ஸ்.ரா னு கூப்பிட்டா எனக்கு பிடிக்கும்.நீங்களும் அப்படியே கூப்பிடுங்க,இது உங்க வீடு மாதிரி எப்போ வேணாலும் வரலானு சொன்னீங்க, என்றால் அப்பாவியாய்…

அடி சண்டாளி காலையிலே வந்து எப்படி கோத்து விடுறா பாரேன்,என்று நினைத்தவன் "டேய் நம்பாத டா" சத்தியமா நான் சொல்லல, என்று கெஞ்ச..

பொய் சொல்லாதீங்க ரா.. இவரு பேரு கனியமுதன்..இவருக்கு கனியானு கூப்பிட்டா பிடிக்கும்னு நீங்க சொல்லாம எனக்கு எப்படி தெரியும், என்றால் பாவமாய்…

"டேய் அமு…..என்று முடிப்பதற்குள்..

போதும் நிப்பாட்டு. உன்ன பத்தி எனக்கு தெரியாதா.. ஒரு பொம்மைக்கு புடவை கட்டுனா கூட உத்து பாக்குற ஆளுடா நீ,ஒரு பொண்ண பார்த்த உடனே வழிஞ்சிட்டு அவகிட்ட எல்லாத்தையும் சொல்லிடுவியா, என்று பல்லைக் கடித்துக் கொண்டு கேட்க..

அங்கு நின்றிருந்த அவள் வாயை மூடி சிரித்தாள்…

இதோ பாருங்க, நீங்க யார வேணா இருங்க ஆனா இனிமே எங்க ரூம் பக்கம் வரக்கூடாது.மீறி வந்தால் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.தயவுசெய்து இங்கிருந்து கிளம்புங்க என்று கூறிவிட்டு விடுவிடுவென சென்றான்..


அவன் தலை மறைந்ததும் அவள் ராக்ஸ்சை பார்க்க,அவன் பெருமூச்சு விட்டபடி அவளை முறைத்து கொண்டிருந்தான்..

வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு,ஆமா உன் ப்ரண்ட் என்ன லூசா…

என்னது லூசாவா.. முறைத்தான் ராக்ஸ்..

இல்லையா பின்ன..என்ன வெளியில போக சொல்லிட்டு அவர் கிளம்பி போகிறார் என்றவள்,

சரி நான் கிளம்புறேன் ராக்ஸ்,நீ வெட்டியா இருந்தா எங்க வீட்டு பக்கம் வா.அப்பா அம்மா ரொம்ப சந்தோச படுவாங்க என்றவள் அங்கிருந்து கிளம்ப,

சட்டென அவளது கையை பிடித்தவன்,அடியே குந்தானி அவன்கிட்ட மாட்டிவிட்டு எங்கடி கிளம்புற,என்றான் கோபமாய்..

டேய் விடுடா என்றவள் அவனிடமிருந்து கையை உருவ முயல..அவன் கெட்டியாக பிடித்திருந்தான்..

"அய்யோ வலிக்குது,கையை விடுடா என்று கத்த,அதே நேரம் வெளியே சென்ற அமுதன் உள்ளே நுழைந்தவன் அவர்கள் நின்ற கோலத்தை பார்த்து,நேரே அங்கு சென்றவன் ஓங்கி ஒர் அறை விட்டான் அவளது கன்னத்தில்..அவன் விட்ட அறையில் இருவரும் பயந்து போய் அவனை பார்த்தனர்..
 

Anu_shna

New member
Messages
3
Reaction score
8
Points
3
அத்தியாயம்:2


டேய் அமுதா, இப்போ எதுக்குடா அவள அடிச்ச" என்றான் ராக்ஸ் சற்று கோபமாய்.அஜித்ரோவோ அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்..

அமுதன் எதுவும் கூறாமல் அமைதியாய் நிற்க,

"உங்கிட்ட தான் கேக்குறேன் பதில் சொல்லு'...

என்னடா சொல்லனும்.முன்னபின்ன பழக்கமே இல்லாத ஒரு பையன் கையை பிடிச்சிட்டு நிற்கிறா..அத பாத்துட்டு நான் சும்மா இருக்கனுமா என்றான் கோபமாய்…

அவ என் கையை பிடிச்சிட்டு நிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சனை என்றான் சட்டென..

ஹே...எனக்கு என்ன பிரச்சினை.. நீங்க கையை பிடிச்சிட்டு நில்லுங்கள்.கட்டிபிடிச்சிட்டு நில்லுங்க..என்ன எழவோ பண்ணுங்க..ஆனா ஏன் வீட்ல நின்று பண்ணாதீங்க..இது அந்த மாதிரி இடம் இல்ல என்று வார்த்தையை எக்குதப்பாய் விட,

டேய் இதுக்கு மேல ஒருவார்த்தை பேசுன நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது என்று கூற, சட்டென போதும் நிறுத்துங்க..என்னால் உங்களுக்குள்ள சண்டை வேண்டாம்.நான் கிளம்புறேன் என்று கூறியவள் அந்த இடத்தை விட்டு கிளம்பினாள்..அமுதனும் ஒன்றும் நடக்காதது போல் அங்கிருந்து கிளம்ப,ராக்ஸ் மட்டும் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கேயே நின்றிருந்தான்…

ப்பாஆஆஆ... என்று அழைத்தபடியே உள்ளே நுழைந்தவளை,எதுக்குடி இப்படி கத்துற....நாங்க இங்க தான் இருக்கோம் என்று கடிந்து கொண்டார் சுந்தரி..

ஏம்மா,என்னாச்சு எதுக்கு இப்படி கத்துற என்று கேட்ட கிருஷ்ணனிடம்,ப்பா அந்த சிடுமூஞ்சி அடிச்சிட்... என்று கூற வந்தவள்,சுந்தரி அவளை முறைத்து முறைபில்,
"அவரு என்ன அடிச்சிட்டாரு ப்பாஆ"என்றாள் முகத்தை சுளித்து கொண்டே..,

என்னது மாப்பிள்ளை உன்ன அடிச்சிட்டாரா,ஏன்மா நீ என்ன பண்ண,நீ யாருனு தெரிஞ்சி போச்சா என்று அடுக்கடுக்காக கேள்விகளை தொடுக்க,

ய்யோஓ,ப்பாஆஆ கொஞ்சம் அமைதியா இருங்க,அந்த சிடுமூஞ்சிக்கு நான் யாருனு தெரியாது..நம்ப ராக்ஸ் கிட்ட கொஞ்சம் குளோஸா பேசிட்டேன்..அது அந்த பக்கி பாத்துட்டு வந்து ஒரே அறை..என்றவள் சுந்தரியை பார்க்க,

"உன்ன திருத்தவே முடியாது"என்பது போல் ஒரு பார்வை பார்த்து விட்டு,
ஏன்டி அவருக்கு சந்தேகம் வர மாதிரியா நடந்துப்ப.கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாமே..!!

இருந்திருக்கலாம் தான்..இப்படி அறை விழும்னு நான் கனவா கண்டேன் என்று புலம்ப,

ஹாஹாஹா சரி வா..உன்ன அடிச்சதுக்கு ஒரு நாள் அவன பழி வாங்கிடலாம்..இப்போ வந்து சாப்பிடு என்றவர்,சுந்தரி வா வந்து சாப்பாடு எடுத்து வை என்றார்..

நீங்க போய் உக்காருங்க.நான் இதோ வரேன் என்றவர் கிச்சனுக்குள் நுழைய போக,

வீட்ல யாருங்க என்று கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தான் ராக்ஸ்.."வா தம்பி நல்ல நேரத்துக்கு தான் வந்திருக்க"நீயும் வந்து சாப்பி‌டு என்ற‌ சுந்தரியை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தான் ராக்ஸ்..

ஹே 'ரா அதான் அம்மா சொல்றாங்கள,வா வந்து சாப்பிடு என்று அழைத்தவளிடம்.,ஆமா நீங்க எல்லாம் யாரு.. உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..என்ன கடத்திட்டு போக குடும்பத்தோட ஃப்ளான் பண்ணி வந்திருக்கீங்களா..!

அவன் கூறியதை கேட்டு மூவரும் சிரிக்க,

அஜித்ராவோ,எப்படி கரக்டா கண்டுபிடிச்ச,ஆமா நாங்க உன்ன கடந்த தான் வந்தோம்..உன்ன மட்டுமில்ல உன் கூட இருக்கவனையும் சேர்த்து கடத்துவோம்,உங்கள கடத்திட்டு போய் உங்க கண்ணு,காது,கிட்னி எல்லாத்தையும் எடுத்துட்டு உங்கள காட்டுல தூக்கி போட்டுடுவோம்..அப்பறம் உங்கள் உடல காக்க ,கழுகு எல்லாம் திண்னுடும் என்று அங்கிருந்த கத்தியை எடுத்து அவனது முகத்திற்கு நேரே ஆட்டி ஆட்டி கூற,

ராக்ஸ்க்கு வியர்த்து கொட்டியது.கால்கள் தடதடவென ஆட ஆரம்பித்தன..
அதனை பார்த்த மூவரும் வாய்விட்டு சிரித்தனர்..

அடியேய் சும்மா இருக்க மாட்டியா..அவனே குழப்பத்துல இருக்கான்.நீ வேற அவன‌ பயமுறுத்துற என்ற சுந்தரி, அவ சும்மா சொல்றா தம்பி நீ வா உட்கார்ந்து சாப்பிடு என்று அவனை அழைத்து ஒரு தட்டு வைத்து உணவு பறிமாறினார்..

கிருஷ்ணனோ,பயப்படமா சாப்பிடுப்பா..உனக்கு எல்லாம் தெளிவா சொல்றோம் என்றவர் சாப்பிட ஆரம்பித்தார்..

ப்பாஆஆ..டிபன் செமையா இருக்கு..நான் இதுவரைக்கும் இப்படி சாப்பிடதே இல்ல..ம்மா கொஞ்சம் சாம்பார் ஊத்துங்க..அப்படியே இரண்டு இட்லி வைங்க என்றவன் சற்று முன் இருந்த பயம் நீங்கி இட்லி சாம்பாரை ஒரு கட்டு கட்டினான்.பிறகு கையை கழுவி விட்டு இப்போ சொல்லுங்க.யாரு நீங்க..எங்கள உங்களுக்கு எப்படி தெரியும்.நீங்க எங்கிருந்து வரீங்க..சொல்லுங்க..சொல்லுங்க என்று பாட்ஷா பட ஸ்டைலில் கேட்டுக் கொண்டிருந்தான்…

அவன் உட்கார்ந்து கேட்ட விதத்தில் மூவருமே சிரித்து விட்டனர்…

ஹலோ என்னா சிரிப்பு..நான் யாரு தெரியுமா..?என் பேக் ரவுண்ட் தெரியுமா..?என்று வில்லன் மாதிரி வசனம் பேச…

தெரியுமே என்றார் கிருஷ்ணன் பொறுமையாய்..!

எ..என்..என்ன தெரியும் என்றான் சற்று மெதுவாய்..

உன் பேரு ராக்ஸ்..நீ ஸ்கூல் படிக்கும் போது உன்னோட அப்பா அம்மா ஒரு ஆக்ஸிடன்ட்ல இறந்து போட்டாங்க..நீ ஆசிரமத்துல தான் வளர்ந்த..உன்ன படிக்க வச்சது எல்லாமே யாரோ முகம் தெரியாத ஒருத்தர்..அவர் பாக்கனும்னு ரொம்ப நாளாக ஆசை..ஆனா உன்னால பாக்க முடியல.‌அவர் சொல்லி தான் நீ இங்க அமுதன் கூட இருக்க..என்று முடித்தவர்,இது போதுமா இல்ல…அ என்று கூறி சிரிக்க..

போதும் சார்.இதுக்கு மேல் என்னால் சஸ்பென்ஸ் தாங்க முடியாது.தயவு செய்து நீங்க எல்லாம் யாருனு சொல்லிடுங்க என்று காலில் விழாத குறையாக கெஞ்ச ஆரம்பித்து விட்டான்..

கிருஷ்ணனோ,"ஒரு நிமிஷம் என்று கூறிவிட்டு அவரது போனை எடுத்து எதோ ஒரு நம்பருக்கு அழைக்க,ராக்ஸின் பாக்கெட்டில் இருந்த போன் "க்ளிங் க்ளிங்" என்று சப்தம் எழுப்பியது..ஒன்றும் புரியாமல் எடுத்தவன் அதில் "அப்பா" என்று சேவ் செய்திருந்த நம்பரை பார்த்து,

ச்சூஊஊ..கொஞ்சம் அமைதியா இருங்க என்றவன் போனை எடுத்து "ஹலோ சார்"என்றான்..

அடுத்த நிமிடம் என்னப்பா "ரா நல்லா இருக்கியா" என்று கேட்ட‌வரை பார்த்து,அவனுடைய கையில் இருந்த போன் நழுவி கீழே விழுந்தது..

ச..ச..சார்..நீ..நீங்களா..என்றான் நம்ப முடியாத ஆச்சரியத்துடன்..

என்னப்பா இப்போதாவது சந்தேகம் தீந்துச்சா..இல்ல...

இனிமே நீங்க எதுவும் சொல்ல வேணாம்..நீங்க யாருனு தெரிஞ்சி போச்சு என்றவன் சட்டென அவரை கட்டிபிடித்து கொண்டான்…

சார்... உங்களால தான் நான் இன்னைக்கு ஒரு நல்ல நிலைமையில் இருக்கேன்..எத்தனையோ முறை உங்கள பாக்க நெனச்சிருக்கேன்..ஆனா முடியல..என்றவன் விம்மி அவ ஆரம்பித்தான்..

ஹே அழாத ரா என்றவர், அவர்கள் எதற்காக இங்கு வந்தனர் என்பதையும் கூறினார்..,

சார் உங்களுக்கு எவ்ளோ பெரிய மனசு..என்றவன் நீங்க கவலை படாதீங்க..கூடிய சீக்கிரம் அவன் மனச மாத்தி அவனுக்கும் நம்ம அஜிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு என்றான்…

இவன் இங்கே சபதம் எடுக்க,அலுவலகத்தில் அமுதனோ ஒரு பெண்ணை வறுத்து எடுத்துக் கொண்டிருந்தான்..

நீங்க எல்லாம் எதுக்கு வேலைக்கு வரீங்க..பேசாம வீட்ல போய் இருங்க..ஒரு வேலை உருப்படியா செய்றது இல்ல..என்று திட்டிக் கொண்டிருந்தான்..

சாரி சார்….

ஆனா ஊனா சாரி சொல்லிடுங்க..முதல்ல கிளம்புங்க.என் கண்ணு முன்னாடி நிக்காதீங்க என்று கோபமாய் கூற அந்த பெண் அங்கிருந்து சென்றாள்..

அப்போது உள்ளே வந்த அவனது நண்பன் விக்னேஷ், "ஹாய் அமுதா உனக்கு ஒரு "குட் நீயூஸ்" இருக்கு என்றான்..

யாருக்கு "குட் நீயூஸ்"என்றான் முகத்தை விரைப்பாக வைத்துக் கொண்டு..

எங்களுக்கு குட் நீயூஸ்..உனக்கு பேட் நீயூஸ் என்றவனை புரியாது பார்க்க,

எஸ், நம்ப ஆபீஸ்ல புதுசா ஒரு பொண்ணு ஜாயின் பண்ணிருக்கா..பாக்க செம செக்ஸியா இருக்கா..நம்ம பசங்க எல்லாம் அவள பார்த்து ஜொள்ளு விடுறாங்க..அவள கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன்.. அவளோட வளைவு,நெளிவு சான்ஸ்சே இல்ல போ.. எவனுக்கு அதிஷ்டம் இருக்கோ..நானும் ஒரு அப்ளிகேஷன் போட்டு வச்சிருக்கேன்.என்று கூற..,

ஒ...அப்படியா...என்று முடித்துக் கொண்டான்.."டேய் நான் எவ்ளோ பெரிய விசயம் சொல்லிருக்கேன்.நீ அப்படியானு சாதாரணமா கேட்குற…

வேற என்ன பண்ணனும்…

நீ கிளம்பு..முதல்ல என்கூட வா..நீ வந்து அவள பார்த்த நீயும் ஒரு அப்ளிகேஷன் போடுவ... என்றவன் அவனை வழுகட்டாயமாக இழுத்துச் சென்றான்…

அங்கே முட்டிக்கு மேல் வரை குட்டியாய் ஒரு ஸ்கர்ட் அணிந்து மேலே ஒரு வெள்ளை நிற சட்டை அணிந்து கொண்டு ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள் ஒருத்தி..

அவளின் அருகே சென்றவன் "ஹாய் சஞ்சனா"என்று கூற..

சட்டென திரும்பியவள்..அங்கு நின்றிருந்த அமுதனை பார்த்து சற்று தடுமாறினாள்..

ஹாய் சஞ்சு..ஹீ ஈஸ் அமுதன்.கனியமுதன்..என்று அறிமுகப்படுத்த.., "ஹேய் கனியா நீயா"என்று ஆச்சரியத்துடன் கையை நீட்ட,அதுவரை அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவனை விக்கி உசுப்ப,சட்டென சுயநினைவுக்கு வந்தான்.

இவன் உங்களுக்கு முன்னாடியே தெரியுமா..?என்ற விக்கி, "டேய்"கையை குடுடா என்று அவனது கையை பிடித்து இழுக்க,அடுத்த நிமிடம் "பளார்" ‌
என்ற சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது…

விக்கி கண்களில் பூச்சி பறந்தது.. எதற்காக அடித்தான் என்று தெரியாமல் கன்னத்தை தடவிக் கொண்டே அவனை முறைக்க.. சுற்றியிருந்த அனைவரும் அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்தனர்..
சஞ்சனா நடப்பது ஒன்றும் புரியாமல் நின்றிருக்க,அமுதன்
"ஏன்டா பொய் சொன்ன‌"என்றான்..

"நான் என்ன பொய்டா சொன்னேன்"..என்றான் கன்னத்தை தடவியபடி..

பாக்க செம்ம அழகா இருப்பா.இவள கட்டிக்க போறவன் குடுத்து வச்சவன் ப்ளா ப்ளானு ஏதேதோ சொன்ன..நம்பி வந்து பார்த்தா அட்டு பிகரா இருக்கு..இதுக்கு தான் இவ்வளோ பில்டப்பா,"போடா டேய்..போய் வேலைய பாருடா"என்று கூறிவிட்டு,அந்த இடத்தை விட்டு நகர்ந்து எதுவும் நடக்காதது போல் தன் அறையில் சென்று விட்ட பணியை தொடர்ந்தார்..நடப்பது ஒன்றும் புரியாமல் நின்றிருந்த சஞ்சனாவிற்கு அங்கு இருந்த அனைவரும் அவளை பார்த்து சிரித்தது அவளை கொதிநிலைக்கே கொண்டு சென்றது..

சிறிது நேரத்தில் அவனது அறை கதவை 'படார் என்று திறந்த கொண்டு உள்ளே வந்தாள் சஞ்சனா..அவள் வந்தது தெரிந்தும் அவளை ஏறெடுத்தும் பார்க்காது கடமையே கண்ணாய் இருந்தான்..அது அவளை மேலும் எரிச்சல் படுத்தியது..

அவன் முகத்திற்கு அருகே சொடுக்கிட்டு அழைக்க,"என்ன" என்பது போல் அவளை பார்த்தான்..

உனக்கு என்ன பிரச்சனை.எதுக்காக அவனை அடிச்ச..உன்ன இங்க பார்த்ததும் எவ்ளோ சந்தோச பட்டேன்..நீ இன்னும் மாறல..அப்படியே தான் இருக்க.அதே‌ முரட்டு தனம்.."நீ திருத்தவே மாட்டியா" என்று அவள் கோபமாய் கத்த..,

அதுவரை பொறுமையாய் அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்,சட்டென எழுந்து அவளது கழுத்தை பிடித்தான்..இதனை சற்றும் எதிர்பார்க்காதவள் அவனிடம் இருந்து விடுபட முயன்றும் அவளால் முடியவில்லை..

"என்னடி"விட்டா ரொம்ப பேசுற..நான் பழைய அமுதன் கிடையாது..நீ என்ன பேசினாலும் வாங்கிட்டு போக.. ஒழுங்கு மரியாதையா இங்கிருந்து போய்டு.இல்ல எனக்கு இருக்குற‌ ஆத்திரத்துக்கு உன்ன இங்கையே புதச்சிடுவேன் என்று கண்கள் சிவக்க கூறினான்..

அவனை இப்படி ஒரு நிலையில் இதுவரை பார்த்திராத அவளுக்கு சற்று பயமாகவே இருந்தது..இருந்தும் தைரியத்தை வரவழைத்து கொண்டு,

இதோ பாரு இப்ப நானும் நீ நினைக்கிற சஞ்சனா இல்ல...நான் நினைச்சா இப்போ இந்த நிமிடமே உன்னை வேலையை விட்டு தூக்க முடியும்.. ஆனா‌ நான் அதை செய்ய மாட்டேன்..இங்க எல்லார் முன்னாடியும் என்ன அசிங்க படுத்துன உன்ன என் பின்னாடி சுத்த வைக்கல நான் சஞ்சனா இல்ல.. ஆவேசமாய் கூறினாள்..

அதுவரை அவள் கூறியதைக் பொறுமையாய் கேட்டவன் ஹாஹாஹா என்று சிரித்தான்..

அவன் சிரிப்பது புரியாமல் அவள் கோவமாய் பார்க்க,"உன் பின்னாடி,ஹாஹா..நான்,செம்ம காமெடி என்று சிரித்தான்,உன்னால் முடிஞ்சத செய் என்று கூறிவிட்டு தன் பணியை தொடர்ந்தான்..

அவனின் நக்கல் பேச்சு அவளை மேலும் வெறுப்பேத்த அந்த அறையை விட்டு வெளியேறினாள்..
 
Status
Not open for further replies.

New Threads

Top Bottom