சரண்யா வெங்கட் எழுதும் உயிர் உறையும் உறவே
வணக்கம் நட்புகளே.. எனது நாலாவது கதையான உயிர் உறையும் உறவே டீஸர் போட்டு இருக்கேன் படித்துவிட்டு உங்க கருத்துகளை சொல்லுங்க, கதையோட அத்தியங்கள் மே மாதம் முதல் பதிவு செய்யப்படும், அதுக்குள்ள நமது தளத்தில் எழுதி கொண்டு இருக்கும் இரண்டு கதைகளை முடிக்க வேண்டும், உங்கள் ஆதரவை என்றும் வேண்டும்
சரண்யா வெங்கட்.....
உயிர் உறையும் உறவே டீஸர்....
உயிர் உள்ள
உறவாய்
உருவாய்
நான் தவிக்க
என் நேசம்
எங்கோ உறைவது
ஏன்.....
காதல் கையில் சிக்காத காற்று போன்றது, அதன் சுகந்ததை அனுபவிக்கும் சிலர் மட்டுமே, அதனை முழுமையாக உணர்வர், அதே வேளையில் சிலருக்கு தென்றலாய் தீண்டிய காதல், சிலர் வாழ்வில் மட்டும் புயலாய் மையம் கொண்டு அதனை யாசித்தவரின் வாழ்வை வெளியேற முடியாத சூழலில் தள்ளிவிடும் வல்லமை வாய்ந்தது.
காலை 5 மணி,
மார்கழி பனி புல் வெளியின் மேல் சொட்டு சொட்டாக தனது இருப்பை உணர்த்தி கொண்டு இருக்க, சூரியனின் செந்நிற கதிர்கள் பூமியை காதலுடன் தழுவும் காதலன் போல மென்மையாக பரிசிக்க, அதே வேளையில் பனியா? அது என்னை என்ன செய்ய முடியும்? என்னிடம் இருக்கும் மனநிலை மற்றும் மனத்திடத்தின் முன்பு இயற்கையின் உணர்வுகள் மனம் மறுத்து போன என்னை தீண்டாது என இறுமாப்புடன் 5.5 அடியில் ட்ரக்கிங் சூட் உடன் ரீபாக் ஷூக்களின் தடக்.... தடக்... என்ற சீரான சத்தத்துடன் ஓடி கொண்டு இருந்தது ஒரு உருவம்
வியர்த்து விருவிருத்து ஓட்ட பயிற்சி முடித்து தனது அடுக்கு மாடி கட்டிடம் நோக்கி சென்று கொண்டு இருந்த உருவத்தின் முகத்தை தீண்டிய மருதம் அவளுக்கு அவனின் தீண்டலையும், காதலையும், துரோகத்தையும் ஒருங்கே நினைவுறுத்த அவளுள் ஒரே நேரத்தில் எரிமலையும் பனி மலையையும் வெடிக்க துவங்கியது, யாரை மறக்க கடந்து வந்த நான்கு வருடங்களில் ஊரையும், உறவையும், சுற்றத்தை துறந்து, அடையாளம் மறந்து இந்த சந்நியாச வாழ்வு வாழ்கிறாளோ, அவனின் நினைவுகளை நினைவுறுத்திய தென்றலின் மீது இந்த மலருக்கு வெறுப்பு தான் தோன்றியது, எப்படி வெறுப்பு தோன்றாமல் இருக்கும் அமைதியாக சென்று கொண்டு இருந்த வாழ்வில் புயல் போல் நுழைந்து அவளை வேரோடு காதலில் சாய்த்து, மென்காற்று வருடும் தென்றலாய் இருந்தவளை, இருப்பு போன்று இறுக வைத்தது அவன் தானே, அவன் செய்த துரோகம் தானே அவளை இப்படி மாற்றியது, அவன் நினைவுகள் எழுந்தவுடன் அவள் கைகள் தன்னிச்சையாக தனது கழுத்தை நெருடி கொண்டு இருக்கும் அவன் அணிவித்த சங்கிலியை வருடியது, அதனை வெளியில் எடுத்து அவன் முகம் பதித்த பென்டன்ட் விரல்களால் வருடி தன்னவனை கண்களில் நிரப்பி கொண்டாள்,
அவன் நினைவுகள் எழும் நேரம் அவளின் எண்ணம் அவள் மகளை நோக்கி திரும்புவதை அவளால் தடுக்க முடியவில்லை, அவள் மகள் அவனின் உதிரம், அவர்களின் காதல் பரிசு, அவன் துரோகத்தின் அடையாள சின்னம், அவனை பொறுத்த வரை, ஆனால் அவளுக்கு அவன் மேல் வைத்த கரை காணமுடியாத காதலுக்கு கிடைத்த, அவள் மணி வயிற்றில் அவன் விதைத்த முத்து.
மகளை பற்றி நினைவுகள் எழும் பொழுது அவள் முகம் மென்மையை பூசி கொண்டது, விரைவாக தனது ஓட்ட பயற்சியை முடித்தவள் தனது மகளை காண மும்பையில் பெட்டி பெட்டியாக வானுயர்ந்த நிற்கும் அடுக்குமாடி குடியிருப்புக்கு நோக்கி விரைந்தாள்,
அவள் நிரஜா பிரசாத்....
மும்பையில் தலைசிறந்த கிரிமினல் வழக்கறிஞரில் ஒருவள், அவளின் வழக்காடும் திறன் கண்டு எதிரில் இருக்கும் எதிர் தரப்பு வழக்கறிஞர் வாய் தானாக மூடிக்கொள்ளும், எதிராளிகளின் வாயை அடைப்பத்தில் அவளுக்கு நிகர் அவள் மட்டுமே, சரியாக எதிரிகளின் பலவீனத்தை குறிவைத்து அடிப்பதில் கில்லி, அவளின் இலக்கு தவறியதாக சரித்திரமே இல்லை, நீதிமன்றத்தில் அவள் வழக்காட ஆரம்பித்தாள் நீதிமன்ற அறை தானாக அமைதி பூசிகொள்ளும், நான்கு வருடத்தில் அவள் வளர்ச்சி அபாரமானது, அசுரத்தனமானது, அளவிடமுடியாதது, வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு, துரோகம், துன்பம், அவள் கடந்து வந்த பாதை என அனைத்தும் அவளை ஒரு இரும்பு மனுஷியாக தன்னை தகவமைத்து கொள்ள உதவியது.
மகள் இருக்கும் அறையில் நுழைந்த நிரஜாவின் கண்கள் மகளை ஆசையுடன் வருடியது, தன்னவனின் மறுபதிப்பாய் நிற்கும் மகள் மட்டுமே தற்பொழுது அவளின் ஒரே பிடிப்பு, நம்பிக்கை, எதிர்காலம் எல்லாம்.....
அவளின் மகள், அவள் உதிரத்தில் உதித்த முத்து, அழகாக கைகளை தலைக்கு மூட்டு கொடுத்து லேசாக வாயை பிளந்து படி மஞ்சத்தில் துயில் கொண்டு இருந்தது.
சக்தி.... சக்தி.... என்ற அவள் குரலில் தான் கொண்ட மொத்த பாசத்தை தேக்கி மகளை அழைத்தாள் நிரஜா....
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்