Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஊஞ்சல்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 0கடிகாரத்தின் விண்டர்ஸ்பிரிங் ஓசையை கேட்டு கண் திறந்தான் தாஸ். அவனது கைகள் அனிச்சை செயலாக பக்கத்திலிருந்த அனிதாவை தேடியது. அவளது மென்மையான இடுப்பு கைக்கு அகப்படாமல் ஏமாற்றத்துடன் கண் விழித்தான் தாஸ். கடிகாரம் தன் ஓசையை நிறுத்தி கொண்ட போது அனிதா கையில் ஆவின் பால் பாக்கெட்டுடன் நுழைந்தாள். "பால் வாங்க போயிட்டியா? இங்க வாவேன். ஒரு முக்கியமான விசயம் பேசனும் " என்றான் தாஸ் அவளை கிறக்கமாக பார்த்தபடி." நீ நைட் பே சுனதே போதும். போய்பேஸ் வாஷ் பண்ணிட்டு பிரஷ் பண்ணிட்டு வா” என்றாள் அனிதா லைட்டாக வீங்கியிருந்த உதடுகளை தேய்த்தபடி."லிப்ஸ்டிக் போட்டு மறைச்சி ரு " என்றபடி அவன் பாத்ரூமிற்குள் நுழைந்தான். அவன் அரை மணி நேரம் கழித்து வெளியே வந்த போது ஆவி பறக்க டீ டம்ளருடன் நின்றிருந்தவள் "இன்னைக்கு நீ வேலன் கம்பெனில கதை சொல்ல போகனும்! ஞாபகம் இருக்கா?" என்றாள்."இருக்கு! ஆனா இருக்கிற நாலு கதையில எதை சொல்றதுன்னு குழப்பமா இருக்கு.டி ரெண்டிங் வேற அடிக்கடி மாறிட்டே இருக்கு.” என்றபடி டீயை உறிஞ்சினான்."உங்கிட்ட இருக்கிற நாலு கதையில ஓன்னு கூடவா அவருக்கு பிடிக்காம போயிரப்போகுது?”"நானும் அதைத்தான் நினைக்கிறேன். என்னோட டைரக்டர் வேற இரண்டாவது ஷெட் யூ லோட படத்தை நிறுத்திட்டு ஊருக்கு போயிட்டாரு”" ஏன்? என்னாச்சு ?" பைனான்ஸ் பிராபளம் தான். தயாரிப்பாளர் கிட்ட இருந்த காசு காலியாயிருச்சு. லேண்ட் ஓன்னை விலை பேசிட்டு இருக்காரு. அதைவித்து பணம் கைக்கு வந்ததும் தான் மூணாவது ஷெட்யூல் ஷூட்டிங் ஆரம்பமாகும்”"அப்ப இனி உனக்கு வேலையில்லை.?”" ஏன் இல்லை ? பகல்ல நிறைய கம்பெனில கதை சொல்வேன். நைட் அனிதாங்குற புத்தகத்தை பிரிச்சு படிப்பேன்.”"இந்த லிவ்விங் டுகெதர் ரிலேசன் ஷூப்பை விட்டுட்டு எப்பத்தான் என்னை கல்யாணம் பண்ணிக்க போற?”"என்னை நம்பலயா? நீ ?”"அதுக்கு இது பதில் இல்லை.”" என்னோட முதல் படத்துக்கு பூஜை போடற அன்னைக்கு நமக்கு கல்யாணம். உன்னை ஏமாத்த மாட்டேன். என்னை நம்பு. மெடிக்கல் ஷாப் புல செலவு அதிகமாகுது” என்றவன் கீழே கிடந்த காண்டம் பாக்கெட்டை மெத்தைக்கு அடியில் சொருகினான்."உங்க அக்காவும் மாமாவும் இதுக்கு ஒத்துக்கணுமே?” என்றாள் அனிதா கவலையாக.“அதை நான் பாத்துக்கிறேன்." என்றான் தாஸ் அவளின் தலையை தட்டி."இந்த ரிலேசன்ஷிப்பை பத்தி அக்காவுக்கு தெரியுமா?" என்றாள் அனிதா." தெரியாது. தெரிஞ்சா விளக்கு மாத்தை கையில் எடுத்துருவா! இதை ஏத்துக்கிற அளவுக்கு அவளுக்கு பக்குவம் பத்தாது. மாமாவுக்கு லேசு பாசா விசயம் தெரியும் “"சரி! நான் சமைக்கிறேன். குளிச்சுட்டு சீக்கிரமா கிளம்பு”தாஸ் கிச்சனில் டம்ளரை கழவி வைத்துவிட்டு துண்டோடு பாத்ரூமில் நுழைந்தான்.ஒ ன்பது மணிக்கு அனிதாவை அவளுடைய ஆபிசில் விட்டு விட்டு வேலன் ஆபிசை நோக்கி வண்டியை கிளப்பினான்.அப்போதுதான் சாமி கும்பிட்டு விட்டு பூவை காதில் வைத்திருந்த பட்டை போட்டிருந்த வேலன்" வாங்க தம்பி! உக்காருங்க! எப்படி இருக்கீங்க?” என்றார். "நல்லா இருக்கேன் சார்" என்று நாற்காலியில் சாய்ந்தவனை "டீ, காபி ?" என்ன சாப்பிடறீங்க?" என்றார்."அதெல்லாம் வேணாம். இப்பத்தான் சாப்பிட்டேன்" என்றான் தாஸ்."உங்கள பத்தி நிறைய கேள்விப்பட்டுக்கேன். ஏவிஎம் ல அசிஸ்டெண்டா நீங்க வேல செய்யறதை நான் பார்த்திருக்கேன்.நல்ல கதையா ஒரு கதைய சொல்லுங்க. வர்ர தையில பூஜைய போட்டு ஆரம்பிச்சிருவோம்”"நாலு கதை இருக்கு சார். ஒவ்வொன்னும் ஓவ்வொரு ஜேன்ர் “"வரிசையா சொல்லுங்க! கேப்போம்" என்றார் வேலன்."கண்ணை மூடிட்டு தான் கதை கேட்பேன். தூங்கிட்டேன்னு நினைச்சுராதிங்க. உள்ளே விசுவலா ஓடும் “இரண்டு மணி நேரத்திற்கு பிறகு கைகளை உயர்த்தி நெட்டி முறித்து கொட்டாவி விட்ட வேலன்"தம்பி! நீங்க சொன்ன நாலு கதையும் நாலு ஜே னர்ல நல்லாத்தான் இருக்கு. ஆனா அதையெல்லாம் இப்ப எடுக்க முடியாது. இப்ப பேய் கதை தான் டிரெண்டிங் ல இருக்கு. நல்லதா ஓரு பேய் கதைய சொல்லுங்க. ஆடியன்ஸ் பயந்து நடுங்கனும். அதுக்கு முன்னால நான் பயப்படனும். அந்த மாதிரி ஒரு கதைய சொல்லுங்க.”தாஸ் மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வாயில் கவிழ்த்து கொண்டான்.எப்போதோ உருவாக்கி பாதியில் நிற்கும் ஓரு கதையை யோசித்தவன் இது வாழ்வா சாவா என்ற போராட்டம். கிடைத்த வாய்ப்பை விட்டு விடக் கூடாது என்று நினைத்தவனாக இந்த கதையாவது இந்தாளுக்கு பிடிக்கனுமே என்ற தவிப்போடு "அப்படி ஓரு கதை இருக்கு சார்.! கதையோட பேரு ஊஞ்சல்" என்றான்."டைட்டிலே வித்தியாசமா இருக்கேப்பா! கதைய சொல்லு கேட்போம்" என்றார் வேலன்.தாஸ் கதை சொல்ல துவங்கினான்.

ஊஞ்சல்​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 1மோகன் தூக்கத்திலிருந்து உலுக்கி எழப்பப்பட்டான். அவன் கண் விழித்தபோது எதிரே நின்ற லீலா கையில் டீ டம்ளர் இருந்தது."டாக்டர் ஹரிபிரசாத் அதுக்குள்ள பால் வாங்கிட்டு வந்துட்டாரா?" என்றான் மோகன் ஆச்சரியமாக ." உங்களை எழப்பத்தான் வந்தார். தூங்குறதை பார்த்துட்டு டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு வாக்கிங் போயிட்டு பால் வாங்கிட்டு வந்து கொடுத்துட்டு இப்ப ஜாகிங் போயிருக்காரு." என்றாள் லீலா."அவரை பேயிங் கெஸ்ட்டா என்னால நினைக்க முடியலை. அவர் வயசுக்கு மீறிய சில வேலைகளை செய்து நம்மை சங்கடப்படுத்தி விடுகிறார். “"சில நேரம் அவரை நினைச்சா எனக்கு அப்பா மாதிரி பீல் வருது!”"எனக்கும் தான் " என்றான் மோகன். டீயை குடித்துவிட்டு வெறும் டம்ளரை அவன் கீழே வைத்த போது அவனது தோளில் இரண்டு பிஞ்சு கரங்கள் விழந்தன."தேவி”"நான் தான். குட் மார்னிங் டாடி" என்றாள் நான்கு வயது தேவி தன்முன் பற்களை இழந்த பொக்கை வாயோடு."போய் பிரஷ் பண்ணிட்டு வா! அம்மா ஹார்லிங்ஸ் போட்டு வைச்சிருக்கா”"ஓகே! ஹார்லிங்ஸ் குடிச்சதும் நான் ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆடுவேன். நீ திட்டக் கூடாது”"இல்லை. திட்ட மாட்டேன். அடுத்த வருசம் ஸ்கூல்ல சேர்க்கும் வரை என்ஜாய் பண்ணிக்க . அப்புறம் ஸ்கூல் போயிட்டா உன்னால ஊஞ்சல்ல ஆட முடியாது.”"ஸ்கூல்ல டீச்சரெல்லாம் அடிப்பாங்கன்னு சொல்றாங்க”"பொய். நல்லா படிச்சா கன்னத்துல முத்தம் கொடுத்து மிஸ் சாக்லேட் தருவாங்க. நீ நல்லா படிக்கனும் சரியா ?”"நான் நல்லா படிப்பேன். டாக்டர் தாத்தா எங்க போனாரு?”"வாக்கிங் போயிருக்காரு.வந்துருவாரு.”தேவி தன் பல்லை பிரஷ் செய்து விட்டு ஹார்லிக்ஸை உதட்டின் மீது வெண்மீசை படிய குடித்தாள்."மம்மி! நான் ஊஞ்சல்ல விளையாடப் போறேன். அப்பா கிட்ட பர்மிசன் வாங்கிட்டேன்.”"பாத்து விளையாடு, கீழே விழந்து அடிகிடிபட்றப் போகுது " என்றாள் லீலா அடுப்பின் மீது கவனமாக .தேவி வீட்டை விட்டு வெளியே வந்தாள். வீட்டிற்கு வெளியே இருந்ததோட்டத்தில் பூத்திருந்த ரோஜா மலர்களை பார்த்து வியந்தாள். "நான் நட்டியது எவ்வளவு பெருசா வளர்ந்திருச்சு" என்று நினைத்தவள் செருப்பை அணிந்து கொண்டு நீண்ட தார் சாலையில் நடந்தாள்.அவள் வீட்டை சுற்றி வேறு வீடுகளே இல்லை. சுற்றிலும் புதர்கள் நிறைந்த ரோட்டில் மெதுவாக நடந்தாள் தேவி. அவளது வீட்டிலிருந்து ஐம்பதடி தொலைவில் மரத்தில் கட்டப்பட்டு காற்றில் மெதுவாக அசைந்து கொண்டிருந்தது அந்த பலகை உள்ள ஊஞ்சல். தரைக்கு சற்று மேலாக இருந்த பலகையில் உட்கார்ந்த தேவி தன் செருப்பு கால்களை உதைத்து மெல்ல காற்றில் ஆட ஆரம்பித்தாள்.அவள் முகத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மெல்லிய சிரிப்பும் படர ஆரம்பித்தது.மோகன் "இன்னைக்கு என்ன சாப்பாடு ?" என்றபடி ஹாலுக்கு வந்தான்."சாப்பிடும் போது தெரியும் " என்றாள் லீலா"யூ டியூப் பை பாத்து ஏதாவது செஞ்சிருக்கியா?" என்றபடி சன்னலை திறந்து சின்னமுகம் பார்க்கும் கண்ணாடியை அதில் மாட்டி ஷேவிங் செய்ய தேவையான பொருள்களை கடை விரித்தான் மோகன். "தொப்பைய குறைச்சிட்டு அப்புறமா பேசனும் " என்றாள் லீலா கண்களால் முறைத்தபடி.திறந்திருந்த சன்னல் வழியே வெளியே தேவி ஊஞ்சல் ஆடும் காட்சி மெல்லிய பனிக்கு நடுவே தெரிந்தது. தன் மகளின் சிரிப்பையும், மகிழ்ச்சியையும் ரசித்து கொண்டிருந்த மோகன் அப்போதுதான் அதை கவனித்தான்.நேராக ஆட வேண்டிய ஊஞ்சல் குறுக்காக தன்னைத்தானே சுற்றி கொண்டிருந்தது. மரத்தின் கிளையில் கட்டப்பட்டிருந்த இரண்டு கயிறுகளும் பாம்பாக பிணைந்து ஒன்றோடு ஒன்றாக இணைந்து இறுகி கீழ் நோக்கி இறங்கி கொண்டிருந்தது. இரண்டு கயிறுகள் ஓன்றாக இணையும் இடத்தில் தேவியின் கழுத்தும் முகமும் இருந்தது.

கையிலிருந்த ரேசரை கீழே போட்ட மோகன் "தேவி" என்றபடி வெளியே பாய்ந்து ஊஞ்சலை நோக்கி ஓட ஆரம்பித்தான். அவனின் உடலில் அட்ரீனல் நதி ஓன்று உற்பத்தியாக ஆரம்பித்தது.லீலா பதட்டத்தோடு நிமிர்ந்தாள்.கயிறுகளின் இணைப்பு சராலேன தேவியின் கழுத்தை நோக்கி இறங்கியது.தேவி பொக்கை வாயோடு நிகழும் விபரீதம் அறியாமல் சிரித்து கொண்டிருந்தாள்.

ஊஞ்சல்

 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 2


மோகன் தொட்டிலில் ஆடிக்கொண்டிருந்த குழந்தை துணி தன்னைத்தானே சுற்றிக் கொண்டதில் கழுத்து இறுகி இறந்ததை செய்திகளில் படித்திருந்தான். அவன் தேவிக்கும் அதே விபரீதம் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காக விழ்ந்து எழுந்து ஓடி வந்தான்.ஊஞ்சலின் கயிறு பிணைந்து கொண்டே வந்து தேவியின் கழுத்தருகே வந்த போது தேவி ஊஞ்சலிலிருந்து வெளியே உருவப்பட்டாள். அவளை இரு முதிய கரங்கள் தூக்கி தோளில் சாய்த்து கொண்டன. ஓடி வந்த மோகனைப் பார்த்து “கூல் " என்றார் டாக்டர் ஹரிபிரசாத் புன்னகையுடன் ."நல்ல வேளை டாக்டர் ! சரியான நேரத்துல வந்து தேவிய காப்பாத்தீட்டிங்க " என்றான் மோகன் கை கூப்பியபடி .அவன் குரல் தழுதழுத்து கொண்டிருந்தது. அவனுக்கு பின்னால் பதட்டமாக ஓடி வந்த லீலா தேவியை டாக்டரிடம் இருந்து வாங்கி கொண்டாள்."இட்ஸ் ஓகே!மோகன் கீழே விழுந்தது ல கால்ல லைட்டா அடிபட்ருக்கு. வாங்க பர்ஸ்ட் எய்ட் பண்றேன்.” என்றார் டாக்டர் ."இனிமே இந்த ஊஞ்சல்ல விளையாட வந்து பாரு! காலை உடைச்சிர்றேன்" என்றாள் லீலா கோபத்துடன் ."விடும்மா'! அவ கூட விளையாட இங்க யாரு இருக்கா? டிவியும் செல்போன் கேமும் தவிர வேறு என்ன பொழுதுபோக்கு இருக்கு. ஸ்கூல் போனா எல்லாம் சரியாயிரும் " என்றார் டாக்டர் ."அம்மா எதுக்கு என்னை திட்றாங்க?" என்று தேவி புரியாமல் அழ ஆரம்பித்தாள்.வீட்டிற்குள் நுழைந்த டாக்டர் "தேவிய சமாதானம் பண்ணும் மா! நான் என்னோட ரூம்ல மெடிசன் எடுத்துட்டு வர்றேன்" என்றபடி மாடியிலிருந்த அவரது அறைக்கு படியேறினார்."இன்னைக்கு லீவு போட்டுக்கறீங்களா?" என்றாள் லீலா."இன்னைக்கு ஆடிட்டிங் .நான் போயே ஆகணும்" என்றான் மோகன்.மருந்தோடு வந்த டாக்டர் அதை மோகனுக்கு தடவி விட்டார்."போதும் டாக்டர் ! நான் குளிச்சிட்டு கிளம்புறேன்." என்றான் மோகன்.ஏதோ யோசனையில் இருந்த டாக்டர் "ம்ம்" என்றார்." என்ன டாக்டர் யோசனை? " என்றான் மோகன்."நான் இந்த வழியா இரண்டு வருசமா வாக்கிங் ஜாக்கிங் வர்ரேன். இன்னைக்கு உன்னோட பொண்ணு ஊஞ்சல்ல ஆடுறதை பார்க்கும் போது எனக்கு வேற ஒரு விசயம் நினைவுக் கு வருது.”" என்ன டாக்டர் அது?”"இல்லை. வேணாம். அதை கேட்டா நீ சங்கடப்படக் கூடும்”"பரவாயில்லை. சொல்லுங்க டாக்டர் .நான் உங்களை அப்பா மாதிரி தான் நினைக்கிறேன்.”“நானும் உன்னை மூணாவது மனுசனா பாக்கலை மோகன். இங்கிருந்து ஒரு மைல் தொலைவுல தான் என்னோட டிஸ் பென்சரி இருக்கு. நான் தினமும் இந்த பக்கமா வாக்கிங் வருவதை பார்த்து நண்பனாக பழக்கமாகித்தான் நான் பேயிங் கெஸ்ட்டா உன் வீட்டுக்கு வந்தேன். யாருமே இல்லாத எனக்கு உன்னோட குடும்பம் தான் ஒரே ஆதரவு. அதனால தான் சின்ன சின்ன உதவியெல்லாம் நீ கேட்காமலேயே செய்கிறேன்”“அது தான் தெரியுமே டாக்டர் .நீங்க எதையோ சுத்தி வளைக்கிறீங்க. மறைக்காம உண்மையை சொல்லுங்க" என்றான் மோகன்.." சொல்றேன். நான் முதன் முதலா இந்த பகுதியில வாக்கிங் வந்தப்போ இதே மாதிரி ஒரு பொண்ணை இதே ஊஞ்சல்ல பார்த்தேன். அவ பேர் மாயா. அவளும் நானும் நல்ல பிரண்ட்ஸ்" என்றார் டாக்டர் .“அவ யாரோட பொண்ணு?" என்றான் மோகன்."ராம்சிங் யாதவ்ங்கிற ஒரு இந்திக்காரனோட ஒரே பொண்ணு.”"அந்த மாயாவும், ராம்சிங் யாதவும் இப்ப எங்க ?”"இதே ஊஞ்சல்ல உன் பொண்ணு ஆடியது போலவே ஆடி கழுத்து எலும்பு முறிஞ்சு இறந்துட்டா. அவளோட இழப்பை தாங்க முடியாம ராம்சிங் வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டான். பூட்டிக்கிடக்குதே ஓரு வீடு .அது அவனுடையது தான்.”"நீங்க என்ன சொல்ல வர்ரீங்க டாக்டர் “"அந்த மாயா இந்த ஊஞ்சல்ல திரும்ப வந்துட்டாளோன்னு தோணுது. ஊஞ்சல்ல. ஆடுறதுன்னா மாயாவுக்கு ரொம்ப பிடிக்கும் “" நீங்க இதையெல்லாம் நம்புறீங்களா?" என்றான் மோகன்.அவனுக்கு பதில் சொல்லாமல் திறந்திருந்த சன்னலை வைத்த கண் எடுக்காமல் பார்த்த டாக்டர் "அங்கே பார் " என்றார்.வெளியே ஊஞ்சல் மேலும் கீழமாக ஒரு ஆள் உட்கார்ந்து ஆடுவது போல் சீராக ஆடத் துவங்கியிருந்தது.மோகனின் உடலில் ஒரு அட்ரினலின் நதி உற்பத்தியானது.

ஊஞ்சல்​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 3சக்ரவர்த்தி கால்டேக்சியிலிருந்து இறங்கி கொண்டு அவன் கேட்ட தொகையை கொடுத்து விட்டு நடந்தார்.சக்ரவர்த்தியின் மாளிகையில் ஜாக்குவார் உட்பட விலை உயர்ந்த பல கார்கள் உண்டு. அவர் கை விரல் காட்டியதிசையில் நறுவிசாக காரை ஓட்ட பல டிரைவர்களும் உண்டு. வாடகை டேக்சியில் தன் அடையாளத்தை மறைத்துக் கொள்ள கூலிங் கிளாசும், தொப்பியும் அணிந்து வெய்யிலில் நடக்க அவன் தான் காரணம். அவருக்குத் தெரியும் அவனிடமிருந்து சாகும் வரை தப்ப முடியாது என்று.அவனிடமிருந்து அவரை காப்பாற்றும் சக்தி படைத்தவர் ஓரே ஒருவர் தான். அவரை தேடித் தான் மாறுவேடத்தில் வந்திருக்கிறார் சக்ரவர்த்தி .போர்டில் இருந்த ஹரிபிரசாத் MBBS ஐ படித்து விட்டு தனக்குள் புன்னகைத்து கொண்டார் அவர். ஒரு முகமூடியை இன்னொரு முகமூடிக்குத் தானே தெரியும் என்று நினைத்தவராக வெறிச்சோடிக் கிடந்த டிஸ் பென்சரிக்குள் நுழைந்தார். அவர் டாக்டரிடம் ஏற்கனவே போனில் பேசி அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கியிருந்தார். அது இருவருக்குமான எழுதப்படாத நடை முறை .அவரைப் பார்த்ததும் டோக்கன் கொடுக்கும் நர்ஸ் சித்ரா சிநேகமாக புன்னகைத்து" உள்ளே போங்க! உங்களுக்குத்தான் வெயிட் பண்றாரு " என்றாள். அவர் டாக்டரின் அறைக்குள் நுழைந்தார். எழுதிக் கொண்டிருந்த டாக்டர் தன் பேனாவை மூடி வைத்துவிட்டு நிமிர்ந்தார்."உட்காருங்க” என்று காலியான எதிர் நாற்காலியை காட்டினார் டாக்டர் ஹரிபிரசாத்உட்கார்ந்த சக்ரவர்த்தி சுற்றும் முற்றும் பார்த்தார். "இங்கே யாரும் இல்லை. " என்ற டாக்டர் எழுந்து சென்று அறை கதவை உள்புறமாக தாழிட்டார். நர்ஸ் சித்ராவுக்கு இது வழக்கமாக வாடிக்கையாக நடக்கிற விசயம் என்று தெரியும் என்பதால் அவள் சலனமின்றி தன் வேலையில் ஆழ்ந்தாள். அவளுக்குத் தெரியும் இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு அந்த அறை பக்கம் யாரும் போகக் கூடாது என்று.கதவை தாழிட்டு விட்டு தன் நாற்காலியில் சாய்ந்தார் டாக்டர் ." சொல்லுங்க" என்றது அவர் பார்வை ."நேத்து நைட் அவன் வந்தான்" என்றார் சக்ரவர்த்தி ."எத்தனை மணிக்கு ?" என்றார் டாக்டர் ."நைட் பத்து மணி இருக்கும். நான் சாப்பிட்டுட்டு தூங்கலாம்னு என்னோட ரூமுக்கு போனேன். பெட்ரூம் லைட்டை ஆப் பண்ணிட்டு படுத்தேன். படுத்தவுடனே லைட் மறுபடியும் எரியுது. எந்திரிச்சு போய் பார்த்தேன். சுவிட்ச் ஆன் ஆயிருக்கு.”" ஆப் பண்ண மறந்திருப்பீங்க?”"இல்லை. மூணு தடவையுமா மறந்து போவேன்? மூணு முறைலைட் ஆன் ஆகி ஆப்பாகுது.”" சம்திங் ராங் “"எனக்கும் அப்படித்தான் தோணுச்சு. நாலாவது முறை லைட்டை ஆப் பண்ணும் போது இருட்டிலிருந்து அவன் வந்தான். சாகும் போது பார்த்த அதே வெறித்த கண்களோடு “" உங்களை மட்டும் தான் அவன் பாக்க வர்ரான். இல்லை உங்க கண்ணுக்கு மட்டும் தான் அவன் தெரிகிறான். இல்லையா?”"ஆமா! வேற யாரும் நான் அவனை பார்த்ததா சொன்னா நம்ப மாட்டேங்கிறாங்க. பைத்தியம் மாதிரி பாக்குறாங்க. அதனால நான் யாருகிட்டயும் எதையும் சொல்வதில்லை. செத்தவன் உயிரோடு வந்து பேசுறான்னு சொன்னா யாராவது நம்புவாங்களா ?”" அவன் எதாவது பேசினானா?”"இல்லை. பேசலை. மவுனமா என்னை பார்த்துட்டு போய் விடுகிறான். நீங்க தான் என்னை காப்பாத்தனும்.”"பேசணும். அவன் வாய் திறந்து பேசணும். பேசுனாத்தான் உண்மை தெரியும். அவன் என்ன பேசினான்னு நீங்க மறைக்காம சொல்லனும்”சக்ரவர்த்தி டாக்டரின் கண்களை பார்க்காமல் குனிந்து கொண்டார். அவரின் உள்ளத்தின் உள்ளத்தில் இரண்டு ரகசியங்கள் ஒளிந்திருந்தன. மறந்தும் அதை சொல்லி விடக் கூடாது என்று அவர் மனம் நினைத்தது."நான் கேட்கும் போதெல்லாம் நீங்க பணம் தரனும்" என்ற மகேந்திரனின் கர்ண கொடுர குரல் காதில் விழுந்தது. அவரின் அதிர்ஷ்டம் பார சிக் அட்டாக்கால் மகேந்திரன் கை கால் முடங்கி வாய் பேசும் சக்தியை இழந்து விட்டான். அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவன் கண்கள் கண்ணீரோடு பேசும். "பாவி! உன்னால் தானே இதெல்லாம்.?சக்ரவர்த்தி தலையை உலுக்கி கொண்டார்."மேலே ஏறி படுங்க" என்றார் டாக்டர் பெட்டை காட்டி.ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாக்டர் ஏகத்துக்கும் களைத்துப் போய் பிரிஸ் கிப்சன் எழுதிக் கொண்டிருந்தார்."உங்க மனசுல இருப்பதை நீங்க மறைக்கிறீங்க. ரொம்ப ஜாக்கிரதையா முன்னைச் சரிக்கையா இருக்கீங்க. உங்களை சரி பண்ண கொஞ்சம் டைமாகும்.”"நான் எதையும் மறைக்கலையே டாக்டர் .? அவனை பின் தொடரும் நிழலாவராம பண்ணுங்க. அது போதும்.”"முயற்சி பண்றேன். இந்த மருந்தை நான் சொன்ன கடையில வாங்குங்க. வேற எங்கேயும் கிடைக்காது.”"நான் இங்கு வருவதை வெளியே யாருகிட்டயும் சொல்லிடாதீங்க டாக்டர் “"அதையே நானும் திருப்பி சொல்றேன். நான் இப்படி ரகசியமா டிரீட்மெண்ட் தருவது யாருக்கும் தெரியக் கூடாது”"நாம ரெண்டு பேரும் ஓரே நிலைமை ல தான் இருக்கோம்.”"புரிஞ்சா சரி. நான் உண்மையா இருக்கேன். நீங்க ஃ பேக்கா இருக்கீங்க?”"அதுக்கு நான் காரணமில்லைன்னு உங்களுக்கும் தெரியும். எனக்கும் தெரியும் “சக்ரவர்த்திக்கு டாக்டர் பீஸ் வாங்க மாட்டார் என்று தெரியும். "போயிட்டு வர்ரேன் டாக்டர் " என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.தலையசைத்த டாக்டர் " நீ என்னைக்கு உண்மையபேசறி யோ அன்னைக்குத் தான் அவனும் உண்மையை பேசுவான்.அதுவரை நாமமூணு பேரும் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட வேண்டியது தான் “ என்று முணுமுணுத்தார்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 4இரவு ஓன்பது மணி.டிவி சைலண்டாக்கப்பட்டு ஜீ இந்தி சேனல் ஒடிக்கொண்டிருந்தது. டைனிங் டேபிளில் சாப்பிட உட்கார்ந்திருந்தார்கள் டாக்டரும் மோகனும். சமையலறையில் வேலையாக இருந்த லீலாவை "வேலையை முடிச்சுட்டு வாம்மா! ஓன்னா உட்கார்ந்து சாப்பிடலாம்" என்று கூப்பிட்டார் டாக்டர் ஹரிபிரசாத்." பத்து நிமிசம். வேலைய முடிச்சுட்டு வந்துடறேன்." என்று புன்னகைத்தாள் லீலா."ஓகேம்மா! நாங்க வெயிட் பண்றோம்" என்றார் டாக்டர் .அவரது பார்வை விளையாடி கொண்டிருந்த தேவியின் மீது விழுந்தது." காலைல அந்த ஊஞ்சல் பேய் வேகத்துல ஆடுனதை நினைச்சா ப ய மா இருக்கு" என்றான் மோகன்." காத்து வேகமா அடிச்சாக் கூட ஊஞ்சல் ஆடும் “"பேய், பிசாசு இதெல்லாம் உண்மையா டாக்டர்?”" தெரியாது. ஆனா சில விசயங்களுக்கு கேள்விகளுக்கு விடை தெரியாத போது எதையாவது நம்பனுமே? அப்படி சிலர் இதை நம்புறாங்க. கடவுள் இருந்தா அதற்கு எதிரான ஓரு சக்தியும் இருக்கணுமே?”"நான் பேய் இருக்கான்னு கேட்டதுக்கு நீங்க கட வுள் இருக்காரான்னு பதில் கேள்வி கேக்கறீங்க?”"சில நேரத்துல ஒரு கேள்விக்கு பதிலா இன்னொரு கேள்வி இருக்கலாம். இல்லையா?”"தெளிவா குழப்பறீங்க.”"முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா பேசலாம்." என்றாள் லீலா."தேவி?" என்றார் டாக்டர் ."அவ அப்பவே சாப்பிட்டுட்டாள். இவ்வளவு நேரம் பசி தாங்க மாட்டாள் .இருங்க தூங்க வைச்சுட்டு வந்துடறேன்." என்ற லீலா தேவியை பெட்ரூமிற்குள் அழைத்து சென்றாள்.திரும்ப வந்த லீலாவோடு பேசியபடி இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.கைகழவி விட்டு சோபாவில் உட்கார்ந்த டாக்டர் "எனக்கு ஓரு டம்ளர் பால் கொடுத்தா குடிச்சுட்டு மாடிக்கு போய் படுப்பேன்" என்றார்."பால் எதுக்கு டாக்டர் வாங்கிட்டு தொடங்கியது

எனக்கே சங்கடமா இருக்கு”"வர் ர வழியில தானே பூத் இருக்கு ? சும்மா தானே வர்ரோம்னு கையோடு வாங்கிட்டு வந்துடறேன். இதுல என்ன இருக்கு”" வாங்கிட்டு வந்து பிரிட்ஜிலேயே வைத்து விடுகிறார். இவரால பால் எப்பவுமே ஸ்டாக் இருக்கு" என்றாள் லீலா.மூவரும் பாலை குடித்தனர். டாக்டர் "குட் நைட்" சொல்லிவிட்டு மாடியில் இருந்த ரூமிற்கு சென்றார்.இரவில் வெள்ளை நிலவு உச்சிக்கு வந்திருந்தது. ஊஞ்சல் காற்றில் வேகமாக ஆட ஆரம்பித்தது. காற்றில் காய்ந்த இழைகளும் தழைகளும் மெலிதாக பறக்க ஆரம்பித்தன. எங்கோ ஓரு ஓற்றை நாய் அபஸ்வரமாக குலைக்க ஆரம்பித்தது.வீட்டின் ஹாலின் உள்ளே மாட்டப்பட்டிருந்த வால் க்ளாக் விண்டர்ஸ்பிரிங் ஓசையை நிதானமாக 12 முறை சத்தமிட ஆரம்பித்தது.பெட்ரூமில் படுத்திருந்த தேவி திடிரென கண் விழித்தாள். அவளது கண்கள் நிலைகுத்தி போயிருந்தன.அவள் எழுந்த வேகத்தில் அருகில் படுத்திருந்த லீலா எழுந்து கொண்டாள். " ஏதாவது கனா கண்டியா மா ?" என்றாள்.தலை விரிக்கோலமாக இருந்ததேவி" மேரா நாம் மாயா" என்றாள்."என்னங்க." என்ற லீலாவின் அலறல் கேட்டு எழுந்த மோகன் திடுக்கிட்டான். "என்னாச்சு ? என்றபடி அறைக்குள் நுழைந்தவன் அதிர்ந்தான்.தேவி படுக்கையிலிருந்து மெல்ல அந்தரத்தில் மிதக்க ஆரம்பித்தாள்."டாக்டர் " என்று அலறினான் மோகன்.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்அத்தியாயம் 5விடிய விடிய தூங்காமல் தூங்கி கொண்டிருந்த தேவியை பார்த்து கொண்டிருந்தனர் மூவரும். தன் கைகட்டை விரலை வாயில் வைத்தபடி உறங்கி கொண்டிருந்த தேவியை கண்களில் சிவப்போடு பார்த்து கொண்டிருந்தார் டாக்டர் ஹரிபிரசாத்."நான் பார்த்ததை என்னால கொஞ்சம் கூட நம்பமுடியலை" என்றார் டாக்டர் வியப்பு விலகாத குரலில்."நானும்தான் டாக்டர் .அவ எப்படி இந்தியில பேசுனான்னு எனக்கு புரியவேயில்லை" என்றான் மோகன்."நேத்து நைட் கூட டிவியிலஜீ இந்தி சேனல்தான் ஓடிட்டு இருந்துச்சு. அதிலிருந்து கூட சில இந்தி வார்த்தைகளை தேவி கத்துகிட்டு பேசியிருக்கலாம்!" என்றார் டாக்டர் ."நீங்க சொல்றதே லாஜிக் படி சரின்னு வைச்சுகிட்டாலும் அவதேவின்னு தன்னோட பேரை இல்ல சொல்லியிருக்கனும்?ஏன் மா யான்னு வேறோரு பேரை சொன்னா?”"இதுக்கு நான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலை.”"ஓரு வேளை செத்துப் போன அந்த மாயா திரும்ப வந்துட்டாளோ?”"சேச்சே! அப்படியெல்லாம் இருக்காது. வீணா கற்பனை பண்ண மன உளைச்சல் ஆகாதே?”"டாக்டர்! என் பொண்ணுக்கு என்ன தான் ஆச்சு? கொஞ்சம் தெளிவா சொல்லுங்க" என்றாள் லீலா பதட்டத்துடன் ." ஸ்லீப்பிங் இன்ஜெக்சன் போட்ருக்கேன். அவ எந்திரிக்கட்டும். பிறகு பேசலாம்”" என் பொண்ணு பெட்லருந்து மிதந்ததை என்னால நம்பவே முடியலைடாக்டர் .ஒருவேளை காத்து கருப்பு எதாவது?”"அவசரப்படாதே! பொறு !" என்றார் டாக்டர் .வெளியே கதிரவன் கிழக்கே எட்டிப் பார்க்க துவங்கியிருந்தான்."டீ சாப்பிடலாமா?" என்றான் மோகன்.டாக்டர் தலையசைத்தார்.லீலா சமையலறைக்குள் நுழைந்தாள். சற்று நேரத்தில் தேவி எழுந்து உட்கார்ந்தாள்.இரவு நடந்தவற்றின் அறிகுறி எதுவும் இல்லாமல் "குட் மார்னிங் டாட், டாக்டர் " என்றாள்.அவளது மலர்ந்த முகத்தை பார்த்த மோகன் ஆண்டவா இந்த சின்னஞ் சிறு பிஞ்சுக்கா சோதனை? என்று மனதிற்குள் மருகினான்."ஆர் யூ பைன் பேபி ?" என்றார் டாக்டர் ."பைன்" என்றாள் தேவி."நைட் நல்லா தூங்கினாயா?”" அடிச்சு போட்ட மாதிரி தூங்கினேன். ஆமாம்’ அம்மா எங்கே?""டீ வைக்க போயிருக்கா! லீலா! பாப்பா எந்திரிச்சுட்டாள் .அவளுக்கும் சேர்த்து பால் கொண்டு வா”“எந்திரிச்சுட்டாளா?” என்றபடி உள்ளே வந்த லீலா தேவியை கட்டி பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினாள்."ஏம்மா அழற?" என்றாள் தேவி குழப்பமாக,"உஷ் “ என்று வாயில் விரல் வைத்து லீலாவை தடுத்த டாக்டர் "ஓன்னும் சொல்ல வேணாம். பால் கொண்டு வாம்மா!" என்றார்.லீலா கொண்டு வந்த பாலை உதட்டின் மீது வெள்ளை மீசை படர குடித்த தேவி “அப்பா! நான் நேத்து மாதிரி அந்த ஊஞ்சல்ல கொஞ்ச நேரம் ஆடவா?" என்றாள்.மோகனும் டாக்டரும் ஓருவரையொருவர் பார்த்து கொண்டனர்.மோகன் “அங்கெல்லாம் இனிமேல் நீ போகக் கூடாது" என்றான்."ஏன் போகக் கூடாது?" தேவியின் குரல் முற்றிலும் வேறாக கடுமையான தொனியில் ஒலித்தது.
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்


அத்தியாயம் 6
தேவியின் குரல் மாறிய திடீர் கேள்விக்கு மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.“நீ இனிமேல் அந்த ஊஞ்சலில் ஆடக் கூடாது" என்றாள் லீலா கண்டிப்பான குரலில்."அந்த ஊஞ்சலில் இருந்துதான் எல்லா பிரச்சனையும் ஆரம்பமாகி இருக்கிறது" என்றான் மோகன் எரிச்சலான குரலில்." விடுப்பா! சின்ன குழந்தை தானே? அவள் மேல் ஏன் கோபத்தை காட்டுகிறாய்? பாரு தேவி. அந்த ஊஞ்சலுக்கு பக்கத்துல ஓரு பெரிய பாம்பை பார்த்தேன். நீ தனியா அங்கே போனால் அந்த பாம்பு உன்னை கடித்து விடும்" என்றார் டாக்டர் பயமுறுத்தும் தோரணையில் ."சரி! நான் இனிமேல் அங்கே போகலை. ஆனா எனக்கு போரடிக்கு மே?" என்றாள் தேவி சிணுங்கலாக ."போரடிச்சா டிவியில கார்டுன் சேனல் பாரு. அம்மாவோட செல்லுலகேம்ஸ் விளையாடு. விளையாட்டு சாமான் நிறைய அப்பாவாங்கி கொடுத்திருக்கேனே? அதையெல்லாம் வைச்சு விளையாடு." என்றான் மோகன்."சரிப்பா !" என்ற தேவியின் பார்வை ஊஞ்சலின் மீதே குவிந்திருந்தது."மோகன் நீ போய் ரெடியாகி ஆபிசுக்கு கிளம்பு. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறேன்" என்றார் டாக்டர்நெட்டி முறித்தபடி.விளையாடுவதற்காக ஹாலை நோக்கி செல்லும் மகளை பார்த்து கொண்டிருந்த மோகன்" டாக்டர்! உண்மையை சொல்லுங்க! என் மகளுக்கு என்ன தான் நடக்குது? அவ எப்படி பெட்லருந்து அந்தரத்தில் தானாவே மிதந்தாள்? உங்களோட விஞ்ஞானம் இதைப்பத்தி ஏதாவது சொல்லுதா?" என்று ஏக காலத்தில் ஏராளமான கேள்விகளை கேட்டான் மோகன்."எனக்கு ஒன்னுமே புரியலை மோகன். ஓரு வேளை தேவி மிதந்ததை நான் பார்க்கலைன்னா நீ சொன்னதை சத்திய மா நான் நம்பியிருக்க வே மாட்டேன்" என்றார் டாக்டர் பரிதாபமாக ."நீங்களும் உங்க கண்ணால தேவி மிதந்ததை பார்த்தீங்க. அப்ப நான் கனவு எதுவும் காண லைன்னு உறுதியா தெரியுது.”இருவரின் பேச்சையும் கேட்டு கொண்டிருந்த லீலா " எனக்கு ரொம்ப பயமா இருக்கு. நான் பாஸ்டர் லாரன்சுக்கு போன் பண்றேன்" என்றாள்." போதும் நிறுத்து.அந்தாளு எப்படா மதம் மாத்தலாம்னு காத்துகிட்டு இருக்கான். எனக்கு பயந்து இந்த வீட்டுக்குள்ள அவன் வருவதில்லை. இப்ப கூப்பிட்டா இ தான்சாக்குன்னு உள்ள வந்து எல்லாரையும் மதம் மாத்தி விடுவான்.” என்றான் மோகன் கோபத்துடன் ."உங்களுக்கு பொண்ணு முக்கியமா? சாமி முக்கியமா? என் பொண்ணுக்காக நான் சாத்தானை க் கூட கும்பிடுவேன்." என்றாள் கோபத்துடன் லீலா"மி சினரி ஸ்கூல்ல சின்ன வயசிலிருந்து இவளும் இவ தம்பியும் படிச்சதோட விளைவு இதெல்லாம் " என்றான் மோகன் சலிப்பாக."இரண்டு பேரும் சண்டை போடுறதை நிறுத்துங்க.!அவங்கவங்க வேலையை பாருங்க.நைட் மீதியை பேசலாம்" என்றார் டாக்டர் சலிப்புடன்.டாக்டர் வெளியேறி மாடிப்படி வழியாக மேலே ஏறிச் சென்றார்.மோகன் குளித்து முடித்துவிட்டு சாப்பிட்டு விட்டு கிளம்பினான்.அவன் ஆபிசில் தன் வேலையில் மூழ்கியிருந்த போது போன் அடித்தது.எடுத்து "ஹாலோ " என்றான்.மறுமுனையில் லீலா அழம் சத்தம் கேட்டது."என்னாச்சு லீலா?" என்றான் மோகன் பதட்டமாக."தேவியோடகையிலும், காலிலும் சிலுவை குறி சிகப்பு கலர்ல தானாவந்திருக்குங்க" என்றாள் லீலா."என்னம்மா சொல்ற?" என்றான் மோகன் அதிர்ச்சியுடன் .!
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்அத்தியாயம் 7மோகன்தன் பைக்கை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு பதட்டத்தோடு வீட்டிற்குள் நுழைந்தான். பைக் சத்தத்தை கேட்டு வெளியே வந்த டாக்டர் ஹரிபிரசாத் "மோகன்.! கோபப்படாம உள்ள வந்து நடப்பதை பார்" என்று ஆதரவாக அவன் தோளில் கையை வைத்தார்.அவரின் கையை தட்டிவிட்டு விட்டு வேகமாக ஹாலுக்குள் நுழைந்த மோகன் அழுதபடி நின்றிருந்த லீலாவை பார்த்து "என்னாச்சு லீலா? தேவி எங்கே?" என்றபடி படுக்கையறைக்குள் நுழைந்தான். அங்கே சுய நினைவு இன்றி படுத்திருந்த தேவியின் கையிலும் காலிலும் சிவப்பு நிற சிலுவைக்குறி இரத்தம் கன்றி காணப்பட்டது." லீலா என்ன? காலையில நல்லாத்தானே இருந்தாள்?" என்றான் மோகன் படபடப்பாக."நான் சமையல் வேலைல கவனமா இருந்துட்டேன். இவ வெளியே போகக்கூடாதுன்னு கதவை உள்புறமா பூட்டிட்டேன். இவ ஹால்ல தான் விளையாடி கொண்டிருந்தாள். நான் எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு வந்து பார்த்தப் போ மயக்கமா விழுந்து கிடந்தாள். இவளோட கையிலும் காலிலும் சிலுவை அடையாளம் இருந்துச்சு" என்றாள் அழுதபடி லீலா."இது சாத்தானின் சின்னம்" என்றபடி உள்ளே நுழைந்தார் பாஸ்டர் லாரன்ஸ் .அதுவரை அவர் ஹால் சோபாவில் உட்கார்ந்திருப்பதை மோகன் கவனிக்கவில்லை." இவரை யாரு உள்ளே விட்டது?" என்றான் மோகன் கோபத்துடன் ."லீலா தான் எனக்கு போன் பண்ணி வரச் சொன்னாள். சின்ன குழந்தையோட உயிரோட விளையாடி என் மதத்தை பரப்புமளவிற்கு நான் கேவலமானவன் இல்லை. முதல்ல உன் மகளை அந்த சாத்தானிடமிருந்து காப்பாற்றும் வழியைப் பார்ப்போம்" என்றார் பாஸ்டர் லாரன்ஸ் ."எவ்வளவு செலவானாலும் சரி.என்னோட குழந்தைய நான் காப்பாத்தி ருவேன். நீங்க முதல்ல வெளில போங்க" என்று கத்தினான் மோகன்."இது மருந்துகளாலோ மருத்துவத்தாலோ குணமாகிற விசயம் கிடையாது. அவளுடைய கையில் இருக்கும் சிலுவை குறியை நல்லா கவனிச்சு பாரு." என்றார் லாரன்ஸ் அமைதி இழக்காமல் .மோகன் தேவியின் கைகளை விரித்து பார்த்தான். அதில் வழக்கமான. சிலுவை சின்னம் தலைகீழாக இருந்தது. அதை புரியாமல் பார்த்த மோகனிடம் "இது அந்தி கிறிஸ்தவனின் சின்னம். சாத்தானின் முத்திரை " என்றார் லாரன்ஸ் ."எனக்கு புரியவில்லை." என்றான் மோகன்."நான் விளக்கமாக சொல்கிறேன். உலகின் இறுதி காலத்தில் ஒரு அவதாரம் தோன்றி உலக அழிவை துரிதப்படுத்தும் என்பது எல்லா மதத்திலும் இருக்கும் நம்பிக்கை. இந்துக்களுக்கு கல்கி அவதாரம். முஸ்லீம்களுக்கு தஜ்ஜால். எங்களுக்கு ஆண்டி கிறிஸ்து. சாத்தான். உன் பெண்ணை பிடித்திருப்பது அவ்வளவு பெரிய தீய சக்தியல்ல. சாதாரண ஒரு ஆவி தான். அதை சீக்கிரமாக வெளியே ஓட்டி விடலாம்.”" என் பொண்ணை பிடித்திருப்பது யாரு?" என்றான் மோகன்." மாயா" என்றார் டாக்டர் ."அவ கழுத்து இறுகி ஊஞ்சல்ல செத்த தா சொன்னீங்களே டாக்டர் "?"இல்லை. அவ அப்படி ஒரு விபத்து லசாகலை. அவளை யாரோ விபத்து மாதிரி செட் பண்ணி கொலை பண்ணியிருக்காங்க “" இதை யாரு சொன்னா?”"தேவியோட உடம்புல இருக்கிற மாயா தான் “"எனக்கு இந்தி தெரியும். நான் அவ கிட்ட பேசினேன். அப்பத்தான் இதை சொன்னாள். “" என் பொண்ணுக்கு தமிழைத் தவிர வேற எந்த மொழியும் தெரியாதே?”"அவ இந்தியில பேசுனது நிஜம் " என்றார் லாரன்ஸ் அழுத்தமாக."அவர் சொல்றது உண்மை தான் " என்றார் டாக்டர் ."அவளை கொன்னது யாரு?" என்றான் மோகன்.லாரன்சும் டாக்டரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 8
"அந்த மாயாவை கொன்னது யாரு?" என்றான் மோகன்.டாக்டரும் லாரன்சும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.தொண்டையை செருமிக் கொண்ட லாரன்ஸ்" பாருங்க மோகன். அவளை யார் சொன்னதுன்னு அவளுக்கு சொல்ல தெரியலை. ஒரு வேளை அடையாளம் தெரியாத நபராவோ பேர் தெரியாத அறிமுகம் இல்லாத ஆளாகவோ இருந்திருக்கலாம்." என்றார்."அப்படின்னா நாமமாயாவை கொலை செஞ்சிட்டாங்கன்னு போலீஸ்ல ரிப்போர்ட் கொடுப்போம். அவங்க கொலையாளியை கண்டுபிடிக்கட்டும் ""அதை நாம எப்படி கொடுக்க முடியும்? நாம யாரும் மாயாவுக்கு ரத்த சம்மந்தமான உறவுகள் இல்லையே? மேலும் இதுக்கு ஆதாரமா எதை சொல்வது? மாயாவோட ஆவி இப்படி தேவி உடம்புல வந்து சொல்லுச்சுன்னு சொன்னா யாராவது நம்புவாங்களா?" என்றார் டாக்டர் ."அப்படி நாம் ரிப்போர்ட் பண்ணினாலும் தேவிக்கு குணமாகுமா? நமக்கு அதுதானே முக்கியம்" என்றார் லாரன்ஸ் ."இப்ப என்ன தான் செய்யலாம்னு சொல்றீங்க?" என்றான் மோகன் குழப்பமாக ."நடக்கிற எந்த விசயத்துக்கும் என்னால் அறிவியல்பூர்வமான விளக்கம் எதையும் தர முடியலை. மாயாவுக்கு முன்னாடி என்னோட மருத்துவம் தோத்துப் போச்சு. தேவி என்னோட பேத்தி மாதிரி. அவ பழையபடி நல்லாகனும். அதுக்கு எதை வேணாமுயற்சி செய்து பார்க்கலாம்” என்றார் டாக்டர் ."நானும் கிட்டத்தட்ட எத்தை தின்றால் பித்தம் தெளியும் கிற நிலைமை லதான் இருக்கேன். எனக்கு எல்லா கடவுளும் ஓன்னு தான். எனக்கு என் மகள் வேணும்" என்றான் மோகன்."என்னை நம்புங்க மோகன். உங்களையோ உங்க குடும்பத்தையோ மதம் மாத்தற எந்த எண்ணமும் எனக்கில்லை. ஓரு சின்ன குழந்தையை காப்பாத்த என்னால முடிஞ்ச சின்ன உதவியசெய்யப் போறேன். அவ்வளவுதான். நீங்க வீணா வேற எதையும் நினைச்சு பயப்படாதீங்க" என்றார் லாரன்ஸ் ." நீங்க என்ன பண்ண போறீங்க?”"நான் இதைப் Uத்தி என்னோட சுப்பீரியர் கிட்ட கலந்து பேசணும். கலந்து பேசிட்டு அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வோம்" என்றார் லாரன்ஸ் ." நீங்க பேய் இருக்குன்னு நம்புறீங்களா?" என்றான் மோகன் லாரன்ஸை பார்த்து." கடவுளை நம்ப வைக்க அதற்கு எதிராக ஒரு பயமுறுத்தல் தேவைப்படுது. இல்லைன்னா கடவுளை நம்ப எந்த காரணமும் இல்லையே? கடவுள் யாரிடமிருந்து மனிதனை காப்பாற்றுவார்.? எல்லா கீழ்மையும் கெட்ட எண்ணங்களும் மனிதனிடமிருந்து வருபவை கானே?”"அப்ப இது எங்கிருந்து வந்தது?" என்றான் மோகன்."ஆசை நிறைவேறாத ஆத்மாக்கள் தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள சில சமயம் திரும்ப வருவதுண்டு" என்றார் லாரன்ஸ் ."அந்த மாயாவுக்கு இப்ப என்ன தான் வேணும்?”"சீக்கிரமாகவே அது தெரிய வரும் ! இப்போதைக்கு நான் கிளம்புகிறேன்" என்ற லாரன்ஸ் வாயிலை நோக்கி நடந்தார்.

அவரை வழியனுப்ப டாக்டர் பின்னாலேயே சென்றார்."எம் பொண்ணுக்கு என்ன தான் நடக்குது?" என்றாள் லீலா."எனக்கு ஒன்னும் புரிய லைம்மா" என்றான் மோகன்.அன்று இரவு தேவியின் படுக்கையை சுற்றி மூவரும் அரைத் தூக்கத்தில் உட்கார்ந்திருந்தனர்.

மூவரும் கண் சொக்கி தூங்கி விழுந்து கொண்டிருந்த போது ஹாலில் இருந்த கடிகாரம் விண்டர்ஸ்பிரிங் சத்தத்தை எழுப்பியபடி இரவு 12 மணியானதை அறிவித்தது.தேவி சட்டென்று கண் விழித்தாள். அவளது உடம்பு முறுக்கேறிமுகம் விகாரமானது.அதை கவனித்த டாக்டர் "மோகன்" என்று அவனை உசுப்பினார்.மோகன் கண்களை கசக்கி கொண்டு நிமிர்ந்த போது தேவி படுக்கையிலிருந்து மிதக்கத் தொடங்கினாள்.மூவரும் படுக்கையிலிருந்து அந்தரத்தில் மிதக்கும் தேவியை தி கிலோடு பார்த்தனர்.

 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 9
சக்ரவர்த்தி தூங்கி எழுந்து கண்களைத் திறந்த போது சூரியன் கிழக்கில் உதித்துக் கொண்டிருந்தான்.

டாக்டர் ஹரிபிரசாத் கடைசியாக கொடுத்த மருந்துகளும், மாத்திரைகளும் நன்றாகவே வேலை செய்கின்றன என்பதன் அறிகுறியாக இரண்டு நாட்களாக நன்றாக தூங்கி எழுந்து கொண்டிருந்தார். அதற்கு காரணம்ஸ்டிராய்டு அதிகமான மருந்துகள் என்று அவரின் மனதுக்கு தெரியும்.

தன்னிலை மறந்த அவரின் தூக்கம் தான் அவனிடமிருந்து அவரை காப்பாற்றுகிறது என்பதையும் அவர் அறிந்தே இருந்தார். இரண்டு நாட்களாக இருளின் நடுவே வந்து சலனமற்ற விழிகளால் அவரை பேசாமல் முறைக்கும் அவனை பாராமல் இருப்பதே அவருக்கு பெரும் நிம்மதியாக இருந்தது.அவரின் பிரம்மாண்டமாளிகையின் சத்தமில்லாத தனிமை அவரை பயமுறுத்தியது. கட்டிலிலிருந்து எழுந்து கொண்டவர் மெல்ல படிகளில் இறங்கினார். சமையலறையில் குஞ்சப்பன் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது.அவனை கூப்பிடாமல் மெலிதாக இருமினார். சத்தம் கேட்டு திரும்பி பார்த்தவன் "நான் வரும் போது நல்லா தூங்கிட்டு இருந்தீங்க. நீங்க அப்படி தூங்கி நான் பார்த்ததேயில்லை. அதான் எழுப்பாமல் வந்துட்டேன். காபியா? டீயா ? என்ன வேணும்னு சொன்னீங்கன்னா கொண்டு வருவேன்" என்றான் பணிவுடன் ."காபியே கொண்டு வா" என்றபடி ஹாலில் இருந்த சோபாவில் சாய்ந்தார் சக்ரவர்த்தி . இப்போதெல்லாம் அவருக்கு தனிமை தான் துணையாக இருக்கிறது.ஹால் மத்தியில் மரகதத்தின் போட்டோ மாலையுடன் அவரைப் பார்த்து சிரித்தது.அவர் ஒரு காலத்தில் விரட்டி விரட்டி காதலித்த அழகுப் பெட்டகம். என்னென்னவோ செய்து அவளை திருமணமும் செய்து கொண்டார். அவரின் வாழ்க்கையில் சந்தோஷமான நாட்கள் என்பது அவளுடன் இருந்த நாட்கள் மட்டுமே.எல்லாம் போச்சு என்று பெருமூச்சு விட்டு கொண்டார். அதற்கு காரணமும் அவன் தான். "எதற்காக இதை செய்கிறாயோ அதை அடையும் போது எல்லாத்தையும் இழந்திருப்பாய்." என்று அவன் சாகும் போது சொன்னது அவருக்கு நினைவு வந்தது.மச்சநாக்குக் காரன். அவன் சொன்னது மாதிரியே நடந்து விட்டது. வயிற்றில் குழந்தையோடு செக்கப்புக்கு மரகதத்தை சக்ரவர்த்தி தான் காரில் அழைத்து சென்றார். திரும்ப வரும் போது நடந்த விபத்தில் மரகதமும் வாரிசும் இறந்து போய் விட அதிர்ஷ்டவசமாக சக்ரவர்த்தி மட்டும் பிழைத்துக் கொண்டார். அதோடு வாழ்வின் மீதான எல்லா பிடிப்புகளும் அவரிடமிருந்து விடைபெற்று விட்டன. அவன் சொன்னது தான் உண்மையானது.அவரிடம் சொத்து, பணம் எல்லாம் இருந்தும் தனிமையாக அனாதை போல் உணர்ந்து கொண்டிருந்தார்.வயது 38 ஐ நெருங்கி கொண்டிருந்தாலும் பார்க்க 50 வயது போல் தெரிந்தார். முடி யெல்லாம் வெண்ணிறமாகி சீக்கிரமாகவே முதுமையின் வசம் போயிருந்தார். அவருக்கு சில சமயம் ஆச்சரியமாக இருக்கும். தன் கனவில் எப்போதும் ஏன் மரகதம் வருவதில்லை?நேசமும் பாசமும் கொண்டவளாயிற்றே? அவள் ஏன் ஓரு முறை கூட கனவில் வருவதில்லை? தன் மீது கோபமும் குரோதமும் வஞ்சமும் கொண்ட அவன் தினமும் கனவிலும் நேரிலும் வருகிறான். இது என்ன வினோதம் ? என்று அவர் நினைத்தபடி குஞ்சப்பன் எகாடுத்த காபியை குடித்து கொண்டிருந்தார்.வாசலில் கூர்க்கா யாரோடோ மல்லுகட்டும் ஓசையை கவனித்தவர்" குஞ்சப்பா ! என்ன சத்தம் அங்கே ?" என்றார்."பாக் கிறேனுங்க" என்ற குஞ்சப்பன் வாசலுக்கு போய் விசாரித்து விட்டு திரும்பி வந்தான்.“உங்களை பாக்க மகேந்திரனோட சம்சாரம் வந்திருக்கு. வரச் சொல்ல வாங்க" என்றான்.சக்ரவர்த்தியின் முதுகெலும்பில் ஒரு பூரான் ஊறத் தொடங்கியது​
 
Top Bottom