Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஊஞ்சல்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 20



தன் பேண்ட் பாக்கெட்டில் வைப்ரேசன் மோடி ல் போட்டிருந்த செல்போன் "ர்ர்ர்" என்றதும் கதை சொல்வதை நிறுத்தினான்தாஸ்.



சத்தத்தை கிரகித்த வேலன்" போனா?" என்றார்.



"ஆமா சார்” என்றான் தாஸ் செல்போன் குறுக்கிட்டால் எழுந்த எரிச்சலை அடக்கியபடி



"பேசுங்க" என்றார் வேலன் ஒரு சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டபடி.



பேண்ட் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து அதை அணைத்தான் தாஸ்.



"பேசலை?" என்றார் வேலன் கேள்விகுறியோடு.



"இல்லை சார். எனக்கு கான்ஸன் ரேசன் போயிரும் சார். அப்புறமா பேசறேன்" என்றான் தாஸ்.



"இதுக்கு மேல நீங்க கதை சொல்ல வேணாம். இந்த கதை நல்லாருக்கு, இதை நாம பண்றோம்." என்றார் வேலன்.உறுதியான குரலில்.



"சார்!" என்றான் இன்ப அதிர்ச்சியில் பேச்சு வராமல் வாயடைத்து போன தாஸ் -



"இது உண்மையா வே நல்லாயிருக்கு தாஸ். இதை நல்லா டெவலப் பண்ணு. இதை நிச்சயமா ஹிட் பண்ணி விடலாம். இதுல யாரு வில்லன்னே தெரியலை. கண்டு பிடிக்கவும் முடியலை. அந்த சக்ரவர்த்தி, டாக்டர், தேவின்னு எல்லாமே சஸ்பென்சா இருக்கு. உனக்கு ரெண்டு மாசம் டைம் தர்றேன். முழு கதையோட வந்து உக்காரு. இதை வேற யாருகிட்டயும் சொல்ல வேணாம்.”



அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு கொண்டிருந்த தாஸ்" சார்! உண்மையா வே என்கிட்ட பாதி கதை தான் சார் இருக்கு. மீதியை இனிமேல் தான் பண்ணனும் " என்றான்.



தன் டிராவை திறந்து செக் புக்கை எடுத்த வேலன் அதில் ஒரு கனத்த தொகையை எழுதி சுவாமி படத்திற்கு முன்னால் வைத்து வணங்கினார். பிறகு அதை தாசிடம் நீட்டினார். "உனக்கான அட்வான்ஸ்”



சட்டென்று அவரின் காலில் விழுந்து எழுந்தான் தாஸ் .எழுப்பி விட்டவரிடமிருந்து பயபக்தியுடன் செக்கை வாங்கி கொண்டான் தாஸ். தன் கண்களில் அதை ஓற்றிக் கொண்டு பாக்கெட்டில் வைத்ததாசை பார்த்த வேலன் "ஓன்னு நல்லா புரிஞ்சுக்கதாஸ். வருசத்துக்கு ஒரு படத்தை ஹிட் பண்ண முடியும். ஏப்ரல், மேன்னு பள்ளிக்கூட லீவு மாதங்களில் குழந்தைகளுக்கு பிடிச்ச விசயங்களை வைச்சு படம் பண்ணினால் கண்டிப்பாக ஹிட் பண்ணிடனாம். நான் மார்கெட் ல ரொம்ப நாள் நீடிக்க இந்த பார்முலா தான் காரணம். நீ மொத்த கதையோட வா எங்கே எனத எப்படி சேர்க்கனும்னு நான் சொல்றேன். கதையில தலையிடுறேன்னு தப்பா நினைக்காதே. நம்ம படம் ஹிட்டாகணும். அதுக்கு சில பல கமர்சியல் விசயமெல்லாம் சேர்க்கனும். அதுக்குத்தான் இதையெல்லாம் சொல்றேன். புரியுதா?'' என்றார் வேலன் ஆதுரமாகதாசின் தோளில் கையை வைத்து .



"புரியுது சார்" என்றான் தாஸ் மகிழ்ச்சி புன்னகையுடன் .



"சரி. இனி ஆக வேண்டிய வேலையை பார்" என்றார் வேலன்.



வேலனிடம் விடை பெற்று பைக்கோடு வெளியே கிளம்பியதாஸ் கண்ணில் பட்ட ஓரு பேக்கரி வாசலில் வண்டியை நிறுத்தினான். ஓரு டீயை சொல்லிவிட்டு கோல்டு பில்டரை பற்ற வைத்து புகையை விட்டவன் போனை ஆன் செய்தான்.அனிதாவிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வேண்டும் என்று அவன் மனம் துடித்தது. செல்போன் திரை ஆன் ஆனதும் மணியடித்தது - யாராயிருக்கும் என்ற யோசனையோடு போனை காதில் வைத்தான் தாஸ்.



"ஹலோ”



"ஏண்டா எரும மாடு. போனை ஆப் பண்ணிட்ட?" என்றது பெண் குரல்.



அவனால் அந்த குரலை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.



"அக்கா!சொல்லுக்கா?" என்றான் தாஸ்.



"தேவியை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கோம்" என்றபடி அழ ஆரம்பித்தாள் மறுமுனையிலிருந்த லீலா.



"என்னக்கா ஆச்சு? விளக்கமா சொல்லு?" என்றான் தாஸ்.



லீலா நடந்ததை சொல்ல சொல்ல தாசின் முதுகெலும்பு சில்லிட தொடங்கியது. தாஸ் வேலனிடம் சொன்ன அந்த அறைகுறை சினிமா கதை அப்படியே லீலாவின் வீட்டில் நடந்து முடிந்திருந்தது.



தாசின் கையிலிருந்த செல்போன் நழுவி விழுந்தது.

 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 21



“அனிதா! நான் ஒரு விசயம் சொன்னா நம்பு வியா?" என்றான் தாஸ். அவனது கைகள் தன்னிச்சையாக நடுங்க தொடங்கியிருந்தது.



“நம்புற மாதிரி சொல் நம்புகிறேன்" என்ற அனிதாவை இழுத்து அருகே உட்கார வைத்தான் தாஸ்.அனிதா இதுவரை இவ்வளவு பதட்டமாக அவனை பார்த்ததில்லை.



"ஏய் ? என்னப்பா ஆச்சு உனக்கு.? இன்னைக்கு நீ நார்மலாவே இல்லையே! கதை சொல்ல போன இடத்துல ப்ளாப் ஆயிட்டியா?" என்றாள் அனிதா குழப்பத்துடன் ‘



தாஸ் தன் சட்டை பையில் இருந்த செக்கை எடுத்து நீட்டினான். அதை விரித்துப் பார்த்த அனிதாவின் கண்கள் வியப்பாலும் மகிழ்ச்சியாலும் விரிந்தது.



"வாவ்! பெண் டாஸ்டிக் .இது ரொம்ப சந்தோஷமான விசயமாச்சே? இதுக்கு நீ சந்தோசப்படனுமே ப்பா? எதுக்கு இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முகத்தை வைத்திருக்கிறாய்?”



" சொல்றேன்" என்ற தாஸ் தன்னுடைய மூன்று கதைகள் நிராகரிக்கப்Uட்டு நாலாவதாக திடீரென தான் சொன்ன கதை செலக்ட் செய்யப்பட்டதை எடுத்து கூறினான்.



"நல்ல விசயம்தானே? அந்த பாதி கதையை டெவலப் பண்ணு.வேலனோட எக்ஸ்பீரியன்சும் உனக்கு ஹேல்ப் பண்ணும்" என்றவளை இழுத்து அவள் கண்களை அருகிலிருந்து பார்த்தவன்.



"நான் சொன்ன அந்த திகில் பேய் கதை அச்சு அசலா என் அக்கா வீட்டுல நடந்துட்டு இருக்கு. என்னோட அக்கா இதைபோன்ல சொன்னபோது என்னால நம்பமுடியலை”



" என்ன சொல்றீங்க?”



"ஆமா அனிதா! நான் சினிமாவுக்காக சொன்ன அந்த கற்பனை கதை என்னோட அக்கா வீட்டுல உண்மையாகவே நடந்துட்டு இருக்கு. அதுதான் எப்படின்னு எனக்கு புரியலை.”



" இதை தேஜாவூன்னு சொல்லுவாங்க.”



"அது கனவுல வருகிற விசயம் உண்மையாகவே நடப்பதாக உணர்வது. ஆனா இது எப்படி சாத்தியம்? நான் கற்பனை செய்து சொல்கிற கதை எப்படி உண்மையாகவே நடக்க முடியும்?”



"எனக்கும் இது ஆச்சரியமாத்தான் இருக்கு. ஆனா நீங்க சொல்ற மாதிரி ஓரு விசயம் சரித்திரத்தில் உண்மையாகவே நடந்திருக்கு”



" என்ன சொல்கிறாய் அனிதா ?” என்று வியப்புடன் கேட்டான் தாஸ்.



"நான் சொல்லும் விசயத்தை நீங்க நம்புவீங்களான்னு தெரியலை. 1912ல் டைட்டானிக் கப்பல் விபத்தில் மூழ்குவதற்கு 12 வருடம் முன்பாகவே அதாவது 1898ல் மார்கன் ராபர்ட்சன் எழுதிய நாவல்தான் The Wreck of the titan.அந்த நாவலில் அவர் எழுதிய பல விசயங்கள் டைட்டானிக் மூழ்கிய போது நடந்த பல விசயங்களோடு ஏறக்குறைய ஒத்துப் போனது. நம்ம சுஜாதா கூட கற்பனைகள் உண்மையாகும் சாத்தியங்கள் உண்டுன்னு சொல்லியிருக்கார். “



"கற்பனையா எழுதுன ஒரு கதை உண்மையாவே நடந்திருக்கா? இதை என்னால நம்ப முடியலை.”



"நம்பினால் நம்புங்கள் . இல்லைன்னா விட்ருங்கன்னு பல சம்பவங்கள் சரித்திரம் முழுக்க இறைந்து கிடைக்கிறது. சரி, நீங்க கற்பனையா சொன்ன ஓரு கதை எப்படி உண்மையாகவே நடந்திருக்க முடியும்? இதுக்கு சினிமா டைரக்டரா ஒரு சரியான காரணத்தை சொல்லுங்க பார்ப்போம்”



"எனக்கென்னமோ அப்படி தோணலை. அக்கா வீடு கட்டும் போது நான் கொஞ்ச நாள் மேற்பார்வை செய்தேன். அப்போது வீட்டுக்கு பக்கத்தில் தொங்கி கொண்டிருந்த ஒரு ஊஞ்சலை பார்த்து என்னோட உள் மனசு இந்தகதையை யோசிச்சிருக்கும்னு தோணுது”



"அப்படியும் கூட இருக்கலாம். ஆனா கேரக்டரோட பேரெல்லாம் எப்படி சரியா ஒத்து போகும்.?”



"மாயாவை தவிர மற்ற எல்லோரையும் நான் பார்த்திருக்கிறேன். ஓகே இதை நாம் அப்புறமா யோசிப்போம். நான் நாளைக்கு அக்காவை பார்க்க ஊருக்கு போறேன்”



"நானும் கூட வருகிறேன்.”



"உனக்கு வேலை இல்லையா?”



" பத்து நாள் மோடி புண்ணியத்தில் கம்பெனி லீவு தான். நானும் உன் கூட வருகிறேன்.”



"உன்னை என்னன்னு சொல்லி.அறிமுகப்படுத்த? சரி பாத்துக்கலாம். ஆனா அங்க வந்தா ஒரு விசயம் செய்ய முடியாது”



"என்ன அது?”



" நைட்சத்தம் வருதுன்னு கொலுசை கழட்ட முடியாது” என்றான் தாஸ் கண்ணடித்தபடி.



"ஓவர் பையா! நான் கொலுசே போடலை. சரியான ஆள்டா நீ. எப்பவும் அதே நினைப்புல இருக்காதே!சரி நைட் டிபன் என்ன வேணும்?”



"நீ " என்றான் தாஸ்.



"வாய்ப்பில்லை ராஜா!" என்றவள் செல்பிலிருந்த பிரிக்கப்பட்ட விஸ்பர் பாக்கெட்டை காட்டினாள்.



"ஐயாம் கிளீன் போல்ட் " என்றபடி படுக்கையில் விழுந்தான் தாஸ்​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 22



சென்னையிலிருந்து 8 மணி நேரம் இண்டர் சிட்டி எ எக்ஸ் பிரசில் பயணித்து ஈரோட்டில் இறங்கி 12 ம் நம்பர் டவுன் பஸ்ஸில் ஏறி புரவிபாளையத்தில் இருவரும் இறங்கிய போது மாலை மணி ஐந்தாகி இருந்தது. வெயில் குறைந்து இதமான வானிலை அவர்களை வரவேற்றது.புகையை கக்கியபடி பஸ் கிளம்பிய பிறகு அவரவர் பேக்குடன் இருவரும் நடக்க தொடங்கினர்.



பஸ் ஸ்டாப்பில் ஒரே ஒரு டீக்கடை + மளிகை கடை ஈயோட்டி கொண்டிருந்தது. ஒரஒரே ஒரு இந்தி காரன் பெஞ்சில் உட்கார்ந்து தினத்தந்தி பேப்பரை படிக்க முடியாமல் நயன்தாராவின் பரந்த மார்பை வெறியோடு ரசித்துக் கொண்டிருந்தான்.பாஸ் ரோட்டில் வாகனங்கள் புயல் வேகத்தில் பறந்து கொண்டிருந்தன. "ரொம்ப ரிமோட் வில்லேஜ் போல தெரியுது" என்றாள் அனிதா.



"அப்படியும் சொல்ல முடியாது. பெருந்துறைக்கு இன்னும் சரியா 2 கிலோ மீட்டர் தான். இங்கே சிப்காட் தான் முக்கியமான இடம். அதோ அந்த இரும்பு கேட் வழி யாத்தான் வீட்டிற்கு போகனும்”



பை பாஸ் ரோட்டிலிருந்து அந்த இரும்பு கேட் தனித்து தெரிந்தது. அதன் உள்ளே இருபுறமும் மரங்கள் அடர்ந்த ஆங்காங்கே குண்டும் குழியுமான ஓரு தார் ரோடு நீளமாக சென்றது. அவர்கள் தார்ரோட்டில் நடக்கத் தொடங்கினர். சாலையோர பள்ளத்திலிருந்து ஒரு வெள்ளை முயல் யாரு இது என்பது போல் குறுகுறுவென பார்த்து விட்டு செடிகளுக்கிடையே ஓடி மறைந்தது.



"ஏய் ! அந்த முயல் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா?" என்ற அனிதாவை பார்த்தவன் “அதை விட அழகான இரண்டு முயலையே நான் பார்த்திருக்கிறேன். ஆனா அப்ப இருட்டா இருந்துச்சு" என்று கண்ணடித்தான்.



"கிரகம் புடிச்சவன்டா நீ?”



"இன்னும் கொஞ்ச தூரம் போனால் மயில், கிளி எல்லாத்தையும் பார்க்கலாம்”



" விட்டா சிங்கம், புலி எல்லாத்தையும் காட்டுவாய் போலிருக்குதே?”



"அதோ! அந்த மாமரத்துல நிறைய கிளிகள் இருக்கு. இந்த பக்கம் செடிக்கு நடுவுல நிறைய மயில்கள் திரியும் “



"பொய் சொல்லாதே!”



"இன்னும் இருபதடி தூரம் போனதும் நான் சொன்னது உண்மைன்னு நீயே தெரிந்து கொள்வாய் “



கொஞ்ச நேரநடையில் தாஸ் சொன்னது போலவே காட்சிகள் வந்தன.



"சூப்பர். இயற்கை எழில் சூழ்ந்த இடம் “



" காட்டுக்குள்ள இருக்கிற இந்த இடத்தை புரோக்கரும் இப்படி சொல்லித்தான் வித்தான். இருந்த காட்டையும் தோட்டத்தையும் அழித்து வீடு கட்டிட்டு கிரீன் கார்டன்னு பேர் வைச்சிருக்காங்க.”



"நிறைய மயில்கள் இருப்பதால் இங்கே பாம்புகள் அதிகமா இருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்.”



"நினைப்புதான். நான் பில்டிங் மேற்பார்வை செய்யும்போது செப்டிக் டேங் தண்ணியில் தினமும் நாலு பாம்புகள் செத்து மிதப்பதை பார்த்திருக்கிறேன். அதோ அதுதான் நம்ம வீடு" என்று நூறடி தொலைவிலிருந்த வீட்டை காட்டினான் தாஸ்.



இரண்டு அடுக்குகளோடு தலையில் டிஸ்குடையோடு அமானுஷ்ய அனமதியில் மூழ்கியிருந்தது அந்த வீடு. வீட்டை சுற்றி முள்கம்பி வேலி பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்தது. குத்து செடிகளும் கோரை புற்களும் வீட்டை சுற்றி காடாக மண்டியிருந்தன.



தார் ரோடு நேராக வீட்டு வாசலை கடந்து முடிந்தி௹ந்தது. அந்த சாலையில் கடைசி முடிவாக டெட் எண்டாக வீடு இருந்தது.



"முப்பது லட்சம் . வெறும் சுவராக. நிற்கிறது." என்று பெருமூச்சு விட்டான் தாஸ்



மாமரத்தில் கொஞ்சி கொண்டிருந்த கிளிகளையும், கரட்டில் மேய்ந்து கொண்டிருந்த மயில்களையும் பார்த்தபடி நடந்து கொண்டிருந்த அனிதாவின் கண்களில் பட்டது அந்த ஊஞ்சல்.



பெயர் தெரியாத மரத்தின் இரு கிளைகளுக்கிடையே சலனமின்றி தொங்கி கொண்டிருந்தது அந்த ஊஞ்சல்.



"இதுல நான் கொஞ்ச நேரம் ஆடட்டா?" என்றாள் அனிதா.



"உன்னோட வெயிட்டை அதுதாங்குமா?" என்று தாஸ் கேட்டு முடிக்கும் முன்பாக அனிதா ஊஞ்சலை நோக்கி வேக நடை போடத் துவங்கியிருந்தாள்.



தாஸ் மகிழ்ச்சி பொங்க ஊஞ்சலை நோக்கி நடப்பவளை தடுத்து நிறுத்தும் வழி தெரியாது திகைத்து நின்று கொண்டிருந்தான்.



அனிதா ஊஞ்சலை நெருங்க தொடங்கியிருந்தாள்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 23



வீட்டை விட்டு வெளியே வந்து" வாங்க!" என்று வரவேற்ற மோகனின் முகம் தாசின் அருகே இருந்த அனிதாவினை பார்த்ததும் கேள்விகுறியோடு மாறியது.



" இது?" என்று இழுத்த மோகனின் முதுகில் தட்டிய தாஸ் " மாமா! இது தான் அனிதா. நான் ஏற்கனவே போன்ல சொல்லியிருக்கேன். ஆமா. அக்கா எங்கே?" என்றான்.



"கிச்சன்ல இருக்கா. இங்க நடக்கிற கலவரத்துல நீ சொன்னது எதுவும் ஞாபகத்துல இல்லை. நீ உள்ளே வாம்மா " என்றான் மோகன் அனிதாவை பார்த்து.



உள்ளே வந்த அனிதாவை பார்த்த லீலா கையிலிருந்த தோசை கரண்டியை வைத்து விட்டு "உள்ளே வாம்மா " என்றாள்.



அனிதா கிச்சனுக்குள் நுழைந்தாள். "காபி ? டீ என்ன சாப்பிடுற?”



"அதெல்லாம் ஓன்னும் வேணாம்" என்று மறுத்தாள் அனிதா.



"எங்கே என் செல்ல குட்டி?" என்றபடி பெட்ரூமில் நுழைந்தான் தாஸ்.



படுக்கையில் சோர்ந்து களைத்து போய் படுத்திருந்தவளை அதிர்ச்சியுடன் பார்த்தான் தாஸ்.



"மாமா! பாப் பாக்கு என்னாச்சு ? ஏன் இப்படி இருக்கிறாள்?" என்றான் படபடப்புடன்.



"அக்கா போன்ல சொல்லி இருப்பாளே?”



"சொல்லுச்சு. ஆனா எதுவும் நம்புற மாதிரி இல்லை.”



" நம்பலைன்னாலும் அவ சொன்னது தான் உண்மை. இங்கே என்ன நடக்குதுன்னு எனக்கு எதுவும் புரியலை. ஒரே குழப்பமாக இருக்கிறது.”



லீலா காபியுடன் வந்தாள். நால்வரும் காபியை அருந்தத் தொடங்கினர்.அதுவரை நடந்த அத்தனை விசயங்களையும் ஓன்று விடாமல் சொல்லி முடித்தான் மோகன்.



"மாமா நான் ஒரு விசயம் சொல்றேன். நீங்க அதை நம்பனும் “



"சொல்லு தாஸ்”



" நேத்து ஓரு புரொட்டி யூசர்கிட்ட கதை சொல்ல போனேன். நான் ரெடி பண்ணி வைச்சிருந்த நாலு கதையை அவர் ரிஜக்ட் பண்ணிட்டாரு. அவசர அவசரமாக வாய்ப்பை வீணடிக்க விரும்பாமல் ஓரு பேய் கதையை சொன்னேன். நான் சொன்ன அந்த பேய் கதை அச்சு பிசகாம இந்த வீட்டுல நடந்து முடிந்திருக்கிறது. அதைத்தான் என்னால் நம்ப முடியவில்லை.”



"சத்தியமா நீ சொல்ற விசயத்தை என்னால் நம்ப முடியவில்லை” என்றான் மோகன் குழப்பத்துடன் .



" மீதி கதையை ரெடி பண்ணினால் தேவியை காப்பாற்றி விடலாம்னு தோணுது" என்றாள் அனிதா.



"என்னம்மா சொல்ற?" என்றாள் லீலா.



"ஆமாம். இவர் கற்பனையா சொன்ன விசயம் உண்மையா நடக்குதுன்னா அந்த கதையை முழுசா ரெடி பண்ணி முடிச்சா கதைப்படிதானே உண்மை சம்பவமும் நடக்கும்?”



"நீ சொல்றது சரிதான். ஆனா அதை சரியான்னு சோதித்து பார்க்க வேற ஒரு சுளுவான வழி இருக்கு”



" என்ன அது?”



"டாக்டரிடம் நம் கதையில் வருவது போலவே சக்ரவர்த்தி ன்னு யாராவது சிகிச்சைக்கு வர்ராங்களான்னு கன்பார்ம் பண்ணினால் போதும் “



"இதுவும் நல்ல ஐடியா தான் “



"அக்கா. டாக்டர் எங்கே?”



"அவர் ரூம்ல தான் இருக்கார். அவரை காபி சாப்பிட கூப்பிடறேன்." என்றாள் லீலா.



லீலாவின் அழைப்பை ஏற்று கீழே வந்த டாக்டர் தாஸை பார்த்ததும் "வாட் எ சர்ப்ரைஸ்? நீ எப்போது வந்தாய்?" என்று கைகுலுக்கினார்.



"அது அனிதா. என்னோட கேர்ள் பெஸ்டி " என்று அனிதாவை அறிமுகம் செய்தான் தாசு.



காபியை குடித்த டாக்டரிடம் "தேவி விவகாரத்துல உங்களுக்கு ஏதாவது புரியுதா?" என்றான்தாசு.



"ஓன்னும் புரியலை. கண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு" என்றார் டாக்டர் .



“அதை நான் பார்த்து கொள்கிறேன். டாக்டர் உங்களிடம் பர்சனலா ஒரு கேள்வி கேக்கலாமா?”



" கேளுப்பா”



"உங்க கிட்ட சக்ரவர்த்தி ன்னு யாராவது டீ ரீட்மெண்டுக்கு வாராங்களா?”



டாக்டர் முகம் இருண்டது.



"ஆமா"உனக்கெப்படி இது தெரியும்?" என்றார் டாக்டர் .



மூவரும் ஓருவரையொருவர் பார்த்து கொண்டனர்.



"நீ சொன்ன கதை உண்மையாகவே நடக்குது" என்றான் மோகன்.



“மோகன்.! நீ என்ன சொல்கிறாய்?" என்றார் டாக்டர் .



"பொறுங்க மாமா! அந்த சக்ரவர்த்தி என்ன பிரச்சனைக்காக ஆஸ்பிட்டலுக்கு வருகிறார்?”



“நோயாளிகளின் மருத்துவ ரகசியங்களை வெளியே சொல்லக் கூடாது யங் மேன்" என்றார் டாக்டர் .



"தேவி அதில் சம்மந்தப்பட்டிருந்தாலும் கூடவா?”



" இங்க நடக்கிற சம்பவங்களுக்கும் அந்த சக்ரவர்த்திக்கும் எள் முனையளவு கூட சம்மந்தம் இல்லை. அது ஒரு உளவியல் நீதியான கேஸ்.சுருக்கமாக அவ்வளவுதான் சொல்ல முடியும் " என்றார் டாக்டர் .



"உன்னோட கதையில சக்ரவர்த்திக்கு என்ன ரோல்?" என்றான் மோகன்.



"இன்னும் முடிவு பண்ணலை" என்றான் தாஸ் -​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 24


நோயாளியின் நோயைப் பற்றி வெளியே பகிரங்கப்படுத்தக் கூடாது என்று டாக்டர் நழுவிக் கொண்டார்.மோகன் இடையில் "நீ சொன்ன கதை உண்மையாகவே நடக்கிறது" என்று சொன்னதன் விளக்கத்தை தாசு விளக்கிய போது டாக்டரின் முகம் மாறியது.



"என்னால் இதை கொஞ்சம் கூட நம்பமுடியவில்லை. நீ கற்பனையாக சொன்ன கதை உண்மையாகவே நடக்குது என்பது ஹாலிவுட் திகில் படம் மாதிரி இருக்கு." என்றார் டாக்டர் .



" மீதி கதையை கற்பனை செய்தால் அதுவும் உண்மையாக நடக்க கூடிய சாத்தியம் உண்டு தானே டாக்டர்?" என்றாள் அனிதா.



" நடக்கலாம். அல்லது நடக்காமலும் போகலாம். அந்த கற்பனை கதையில் என்னை வில்லனாக்கி விடாதீர்கள்" என்று சிரித்தார் டாக்டர் .



"சேச்சே! ஏன் டாக்டர் ஹாஸ்பிடல்ல இருந்த நாலு நாளில் தேவி நார்மலாத்தான் இருந்திருக்கிறாள்? இல்லையா?”



"ஆமாம்”



"இந்த வீட்டுக்கு வந்தாத்தான் அவளுக்கு அமானுஷ்யமான விசயமெல்லாம் நடக்குது’



"ஆமாம்”



"ஒருவேளை இந்த வீடு இங்கே இருப்பது யாருக்காவது தொந்தரவர் இருக்கா? இல்லை யாராவது இதை விலைக்கு வாங்க முயற்சி பண்றாங்களா?" என்றான்தாசு.



"ஓணான் முட்டை யிடாத காடுப்பா இது ! இங்க நாம வீடு கட்டிய தே பெரிய விசயம். இதை யாரு வாங்க போறா? ப க்கத்துல யாரும் விவசாய மோபேக்டரியோ கட்ட போவதில்லை. இந்த இடம் யாருக்கும் தொந்தரவா இருக்கிற மாதிரி தெரியலை." என்றான் மோகன்.



" நம்ம வீடு இங்கிருப்பது யாருக்கோ இடைஞ்சலா இருந்து இந்த மாதிரி எதையாவது பண்றாங்களோன்னு டவுட்டா இருக்கு" என்றான் தாஸ்.



" இதுவும் ஒரு பாயிண்ட் தான். ஆனால் உறுதியான ஆதாரம் இல்லாததால் இதை நாம் நிராகரித்து விடலாம்.”



"ஓகே டாக்டர் ! ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் காகி வீட்டுக்கு வந்த அன்னைக்கு நைட்டு பழைய மாதிரியே தேவி இந்தியில் பேசி பெட்டிலிருந்து மிதந்திருக்கிறாள். “



"ஆமாம்”



"அப்ப இந்த வீட்டுல ஏதோ அமானுஷ்யமா இருக்கு “



" நேற்று இரவு கூட வீட்டை சுற்றி டார்ச் லைட் வெளிச்சமெல்லாம் வந்தது. அது என்னன்னு பாக்கலாம்னு நினைச்சேன்.மோகன் என்னை தடுத்து விட்டான்”



"ஏன் மாமா டாக்டரை தடுத்தீர்கள்?”



"இருட்டு வேளை. வெளிச்சம் எங்கிருந்து வருதுன்னே சரியா தெரியலை. இவரு வேற வயசானவர். பாம்பு, பல்லின்னு ஏதாவது கடிச்சு வைச்சுட்டா என்ன பண்றதுன்னுதான் அவரை தடுத்து நிறுத்திட்டேன்.”



"அப்படியானால் இன்னைக்கு அந்த வெளிச்சம் வரும்?”



"வரலாம். வராமலும் போகலாம்.”



" அப்படி இன்னைக்கு நைட் அந்த வெளிச்சம் திரும்ப வந்தால் அது என்னன்னு பார்க்க நான் போகிறேன். நீங்கதேவியை கவனிங்க " என்றான் தாசு.



"நீ தனியா போக வேணாம். நானும் உனக்கு துணையா வருகிறேன்." என்றார் டாக்டர் .



"நைட் என்ன வேணா நடக்கலாம் டாக்டர் .நாம ரொம்ப எச்சரிக்கையா இருக்கனும்” என்றான் தாசு.



" வயசான காலத்துல டாக்டரை ஜேம்ஸ் பாண்டா மாற்ற டிரை பண்றீங்களா?" என்றாள் அனிதா.



"இது என்னன்னு தெரிஞ்சுக்க ஒரு ஆர்வம் உந்தி தள்ளுதும்மா “என்றார் டாக்டர் .



"ஆமா டாக்டர் .நைட் தேவி படுக்கையிலிருந்து மிதப்பதை நீங்க உங்க கண்ணால பார்த்தீங்களா?”



"நான் மட்டுமில்லை. உன்னோட அக்கா, மாமா எல்லோருமே பார்த்தோம். இன்னைக்கு இரவு நீங்க ரெண்டு பேரும் பாக்க போறீங்க?”



"தேவி படுக்கையிலிருந்து அந்தரத்தில் மிதந்ததை மூணு பேரில் யாராவது ஒருத்தராவது போட்டோவோ, வீடியோ வோ எடுத்தீங்களா?”



எதிர்பாராத தாசின் கேள்வியில் மூவரும் திடுக்கிட்டு போய் ஓருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.



" இல்லை. நாங்க அப்படி எதுவும் எடுக்க லை"



" ஓய்? ஏன் எடுக்கலை?" என்று குரலை உயர்த்தினான் தாஸ்



"அப்ப இருந்த மனநிலையில் எங்களுக்கு அது தோணலை, “



"மிசின் பொய் சொல்லாது " என்று புன்னகைத்தான் தாஸ்​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 25




தாஸ் கேட்ட எதிர்பாராத கேள்வியால்மூவரும் திகைத்துப் போயினர். முதலில் சுதாரித்து கொண்ட மோகன் "நீ சொல்ற விசயத்தை நான் யோசிச்சு கூட பார்க்கலை. அப்ப இருந்த பதட்டமான மனநிலையில் என்ன செய்வதென்றே எங்களுக்கு புரியவில்லை. அதனால் தான் கேமரா, வீடியோ இதையெல்லாம் மறந்து விட்டோம்" என்றான்.



"மோகன் சொல்வது தான் சரி. நாங்கதேவி படுக்கையிலிருந்து மிதப்பதை கண்ணால் பார்த்தோம். அதனால் அதை போட்டோ எடுக்கணும்னோ வீடியோ எடுக்கனும்ன்னோ எங்களுக்கு தோணலை. உனக்குத்தான் இந்த ஐடியா முதன் முதலில் தோணியிருக்கு " என்றார் டாக்டர் .



"பதட்டத்துல நீங்க இதை மறந்திருக்கலாம். ஆனா அந்த பாதர் இங்கே வந்து பிராத்தனை சிறப்பு வழிபாடு நடத்தும் போது தேவி படுக்கையிலிருந்து மிதந்தாளா?" என்றான் தாசு.



"இல்லை. அவர்கள் இருக்கும் போது தேவி படுக்கையிலிருந்தும் மிதக்க வில்லை. அவளை பற்றி ஐ மீன் அவளை பிடித்திருக்கும் மாயாவை பற்றி நிறைய கேள்வி கேட்கும் போது தான் அவளுடைய உடல் நிலை மோசமடைய ஆரம்பித்தது. அவர்கள் அறைக்கு உள்ளே இருந்தார்கள். நாங்கள் வெளியே இருந்தோம். அதனால் உள்ளே என்ன நடந்தது என்று எங்களுக்கு தெளிவாகத் தெரியாது. இப்போது உன்னிடம் நான் சொல்வது கூட பாதர் லாரன்ஸ் என்னிடம் சொன்னது தான். உள்ளே என்ன நடந்தது என்று அவர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அதற்கு பிறகு தான் தேவியின் உடல்நிலை மோசமானது " என்றார் டாக்டர் .



"ஓகே டாக்டர்! நீங்க சொல்றதை நான் முழுசா நம்புறேன். தேவி பறப்பதை ஐ மீன் மிதப்பதை நீங்க மூணு பேரும் தான் நேரில் பார்த்திருக்கிறீர்கள். அது எப்படி அந்த பத்திரிக்கை ரிப்போர்டர் சிவநேசன் வரை போய் செய்தியாக மாறியது ?”



"ஹாஸ்பிட்டலில் யாராவது அவனுக்கு தகவல் சொல்லியிருக்கலாம்" என்றான் மோகன் குழப்பத்துடன் .



"ஆதாரம் இல்லாத காதில் கேட்ட ஓரு செய்தியை அவன் ஏன் வெளியிட வேண்டும்? அதனால் அவனுக்கு என்ன நன்மை?”



"சுவாராஸ்யமான செய்தி ன்னா சர்க்குலேசன் அதிகமாகும்னு நினைச்சு இதை எழுதியிருக்கலாம்”



" அப்படியே வைத்து கொள்ளலாம். ஆனாதேவியை அட்மிட் பண்ணும் போது அவளோட எதிர்காலம் பாதிக்கப்பட கூடாதுன்னு வீட்டு அட்ரஸை மாற்றி கொடுத்ததாக மாமா சொல்கிறார். சோ ஹாஸ்பிடல் ரிஜிஸ்டரில் இருந்து அந்த சிவநேசனுக்கு அட்ரஸ் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனா வெகு துல்லியமாக இந்த வீட்டை கண்டு பிடிச்சு இங்கே வந்திருக்கிறான். அது எப்படின்னு யோசிச்சீங்களா?”



"எனக்கு தலை சுத்துதுப்பர். உன் அளவுக்கு நாங்க யாரும் யோசிக்கலை." என்றான் மோகன்.



"எனக்குமே குழப்பமாகத்தான் இருக்கு. இந்த கேள்விக்கெல்லாம் பிறகு பதிலை கண்டுபிடிப்போம்." என்றான்தாசு.



கார்ட் போல்டரிலிருந்து சிவநேசனின் விசிட்டிங் கார்டை உருவி நீட்டினான் மோகன்.



"இது அந்த சிவநேசனின் போன் நம்பர். உன் டவுட்டை அவனிடமே கேட்டு தெளிவு பெறலாமே?" என்றான் மோகன்.



கார்டை வாங்கி திருப்பி திருப்பி பார்த்த தாஸ்" சோர்ஸை அவன் சொல்வான்னு நினைக்கிறீங்களா? சத்தியமா என் கேள்விக்கு பதில் சொல்ல மாட்டான் " என்று புன்னகைத்தான் தாஸ்



"அந்த முடிச்சு தானாகவே அவிழட்டும்! இன்று இரவு நாம் என்ன செய்ய போகிறோம்.?" என்றார் டாக்டர் .



" இன்னைக்கு இரவு நானும், நீங்களும் அந்த வெளிச்ச பொட்டை தேடி போக போகிறோம். இவங்க மூணு பேரும் தேவியை பார்த்து கொள்ளட்டும்" என்றான் தாஸ்.



"தாஸ் என்னோட குலோப் ஜாமூனன மறந்து விட்டாய்" என்றாள் அனிதா.



"குலோப் ஜாமூனா ? அது எதற்கு?" என்றார் டாக்டர் .



"நைட் சாப்பாட்டுக்கு பின்னால் ஒரு குலோப் ஜாமூன் சாப்பிடுவது அவளுடைய பழக்கம். அவசரமாக கிளம்பி வந்ததில் அதை வாங்கி வர மறந்து விட்டேன்" என்றான் தாஸ்.



" டோண்ட் ஓர்ரி.! நான் டி ஸ்பென்சரியிலிருந்து வரும் போது ஹல் திராம்ல ஓரு டின் வாங்கிட்டு வருகிறேன்." என்று புன்னகைத்தார் டாக்டர் .



"நைட் அந்த புதருக்குள்ள யும் கோரை புற்களுக்கு நடுவிலும் எப்படி போக முடியும்? பாம்பு ஏதாவது கொத்திவிட போகிறது " என்றான் மோகன்.



"அந்த டார்ச் லைட் வெளிச்சத்தோடு ஒருவன் நள்ளிரவில் வருகிறானே? அவனுக்கு பாம்பை பற்றி எந்த பயமும் இல்லைன்னு நினைக்கிறிங்களா?" என்றான் தாஸ்."​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 26




அன்று இரவு ஏழு மணி. மொட்டை மாடியில் இருந்த அறையில் டாக்டர் ஏழு மணி செய்திகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். திறந்த வெளியில் இருந்த துணி துவைக்கும் கல்லில் உட்கார்ந்திருந்தான் தாசு. அவனை ஓட்டியபடி நெருங்கி உட்கார்ந்திருந்தாள் அனிதா.



" எப்பவும் இடிச்சுட்டே தான் இருப்பியா? டாக்டர் வெளிய வந்து ஏதாவது நினைச்சுக்க போகிறார்" என்றான் தாஸ்.



"இது வேற இருக்கா?" என்று எழுந்து நின்று கொண்ட அனிதா " நீ நினைச்ச மாதிரி என்னைப் பத்தி உன்னோட அக்காவும் மாமாவும் தப்பா எதுவுமே சொல்லலையே?” என்றாள்.



"இரு கோடுகள் தத்துவம் தான். ஒரு கோட்டை சிறியதாக்க அதை விட பெரியதாக ஒரு கோடை பக்கத்துல போடணும். தேவியோட மேட்டர் இங்கே பெருசா ஓடுவதால் உன்னை கவனிக்க யாருக்கும் டைமில்லை. இது தான் உண்மை. “



"நீ சொல்ல வருவது புரிகிறது. இப்ப தேவிக்கு எந்த பிரச்சனையும் வரலைன்னா நான் தான் பெரிய இஷ்யூவா மாறி இருப்பேன்”



"நீ இல்லை. நம்மோட காதல்." என்றான் தா ஸ்.



" உனக்கு தேவியோட பிரச்சனை பெருசா இருக்கு. எனக்கு வேறோரு பிரச்சனை பெருசா இருக்கு.”



"உனக்கென்னம்மா பிரச்சனை? என்னை தவிர ?”



"நீ பண்ணியது தான் அந்த பிரச்சனை.”



"நான் என்னம்மா செய்தேன்?”



"நான் நேத்தே டைம் ஆயிருக்கனும். இன்னும் ஆகலை. அதான் பயமா இருக்கு”



" ஓன்னு ரெண்டு நாள் தள்ளி போவது சகஜம்தானே? இதைக் கூட நீ தான் சொன்னாய் “



" இது சம்திங் டிப்ரண்ட் . வழக்கமாக என்னோட உடம்பு இல்லைன்னு தோணுது. பீரியட்டுக்கான எந்த அறிகுறியும் காணோம்.”



"நான் சேப்டியாத்தானே இருந்தேன்.”



" என்ன சொல்ல வருகிறாய்?”



" எப்பவோ அலட்சியமா இருந்துட்டேன் போலிருக்கு. பொறு என்னை நம்பு. எல்லாத்தையும் பார்த்துக்கலாம்”



"வீட்டுக்குள்ள வந்ததுமே புதுசா ஒரு பிரச்சனை உருவாகுதே?”



"அவசரப்படாதே’ எல்லாத்தையும் மனேஜ் பண்ணுவோம். நான் இருக்கேன். பயப்படாதே! எது வந்தாலும் பாத்துக்கலாம்”



" டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தாவது நீ தான் அதுக்கு காரணம்னு ப்ரூப் பண்ணி விடுவேன். ஆமா.நீ ஏன் அந்த ஊஞ்சலில் ஆட நான் போனபோது பயந்தாய்?”



"நானா ? பயந்தனா?”



" டேய்! பொய் சொல்லாதே! உன்னோட முகத்தை பார்த்தாலே நீ பயந்து போனது தெரியுது”



"இல்லைம்மா! அந்த ஊஞ்சலால தான் எல்லா பிரச்சனையும் ஸ்டார்ட் ஆச்சு.புதுசா இப்போ ஒரு பிரச்சனை ஸ்டார்ட் ஆயிருக்கு. அதான் கொஞ்சம் பயந்துட்டேன்.”



"அப்படி உண்மையை ஒத்துக் கொள். இன்னைக்கு நைட் நீ எதிர்பார்ப்பது போல் ஏதாவது நடக்குமா ?”



" நடக்கும்னு எதிர்பார்க்கிறேன். நீ உன்னோட செல்போனை சார்ஜ் போட்டு ரெடியா வைத் து கொள்! எது நடந்தாலும் வீடியோ எடுத்து விடு. எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வந்து விடாதே!" என்றான் தாஸ்.



வெளியே இரவு கவிழ்ந்து கொண்டிருந்தது. "டாக்டர்! நீங்க ரெடியா?" என்றான் தாஸ்.



"நான் ரெடி. டார்ச் லைட் எல்லாம் எடுத்து ரெடியாவைச்சிருக்கேன்" என்றார் டாக்டர் .



"ஓகே.நாம் இரவு டிபனை முடித்து விடுவோம். பிறகு என்ன செய்வதுன்னு யோசிப்போம்.”



மூவரும் கீழே இறங்கி வந்தனர்.லீலாவோடும் மோகனோடும் சாப்பிட்டு முடித்தனர்.



"தேவி சாப்பிட்டு விட்டாளா?" என்றான் தாஸ்.



"சாப்பிட்டாள். ஆனால் முன் போல் சாப்பிடுவதில்லை." என்றாள் லீலா.



"கவலைப்படாதே அக்கா. சீக்கிரமா எல்லாமே முடிவுக்கு வந்துவிடும்." என்றான் தாஸ்.



வால்யூமை குறைத்து விட்டு மூவரும் டிவி பார்க்க துவங்கினர்.ஹாலில் கிடந்த நாற்காலியில் உட்கார்ந்த டாக்டரை பார்த்த தாஸ்" அந்த வெளிச்சம் எங்கிருந்து வந்தது டாக்டர்?தார் ரோட்டிலா?" என்றான்.



"இல்லை. அவன் வீட்டுக்கு எதிரில் இருக்கும் கோரை புற்கள் அடர்ந்த பகுதியில் இருந்துதான் வருகிறான்.”



"தார் ரோட்டில் வராம பூச்சி பொட்டுக்கு பயப்படாமல் இந்த இரவு நேரத்தில் எதை தேடி இங்கே வருகிறான்னு தெரியலையே?”



"எனக்கென்னமோ இங்கே நடக்கும் விசயங்களுக்கும் அவனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமோன்னு தோணுது.”



" இன்னைக்கு உண்மை தெரிந்துவிடும்”



அனைவரும் அறைகுறை தூக்கத்தில் உழன்று கொண்டிருக்கும் போது கடிகாரத்தின் ஓசை கேட்க ஆரம்பித்தது.



மாடியின் இருள் சூழ்ந்த பகுதியில் மறைந்து நின்று கொண்டிருந்த தாசின் கண்களில் தென்பட்டது அந்த வெளிச்ச புள்ளி.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 27


தூரத்தில் தென்பட்ட வெளிச்சப்புள்ளியைப் பார்த்ததும் தாசின் உடலில் ஒரு அட்ரீனல் நதி உருவானது. உடல் முழுவதும் பரபரப்புதொற்றி கொள்ள மாடி படிகளை கடந்து ஹாலுக்கு ஓடி வந்தான். அவனது பரபரப்பை பார்த்த டாக்டர் " என்னாச்சுதாஸ்?" என்றார்.



"அந்த வெளிச்சப்புள்ளி கிளம்பி வருது டாக்டர் .எனக்கு அந்த டார்ச்சை கொடுங்க. நான் வெளியே போகிறேன்." என்றான் தாஸ்.



"அவசரப்படாதே தாஸ்! நானும் உன்னுடன் வருகிறேன்" என்று பரபரப்புடன் எழுந்தார் டாக்டர் .



"நோ டாக்டர் ! நான் வெளியே போனதும் கதவை தாழ் போட்டுக்குங்க. நான் விசில் அடித்த பின்னால் நீங்கள் வெளியே வந்தால் போதும் “



"சேப்டிக்குகையில் ஆயுதம் எதுவும் இல்லையேப்பா " என்றார் டாக்டர் .



"கவலைப் Uடாதீங்க. என்னோட பேண்ட் பாக்கெட்டில் ஒரு கத்தி வைச்சிருக்கேன். அதை வைத்து நான் சமாளித்து கொள்கிறேன். நீங்க வெளியே வரும் போது அந்த கிரிக்கெட் ஸ்டெம்பை பாதுகாப்புக்கு வைத்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் அதை பிரயோகப்படுத்துங்கள். இப்போது கதவை திறங்கள்." என்றான் தாஸ்.



கதவைசத்தமெழுப்பாமல் மெல்ல திறந்த டாக்டர்" ஜாக்கிரதை தாஸ்" என்றார்.



"நான் பார்த்து கொள்கிறேன். கதவை தாழ் போட்டு கொள்ளுங்கள்.”



தாஸ் தன் கையிலிருந்த டார்ச் லைட்டின் சுவிட்சை அழுத்தாமல் குனிந்த வாக்கில் நடந்தான். கையில் அகப்பட்ட ஒரு மரத்தின் மீது ஆசுவா சமாக சாய்ந்து கொண்டு பெருமூச்சு விட்டான்.



தன்னை சுற்றி சூழ்ந்திருந்த கார் இருளுக்கு அவன் கண்கள் பழக்கமாக ஆரம்பித்தன. தூரத்தில் தெரிந்த லைட் வெளிச்சம் புற்களின் நடுவே அறைகுறையாக தெரிந்தபடி முன்னேற ஆரம்பித்தது.தாஸின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது. திடீரென தார் சாலையில் ஜல்லிகற்கள் விழும் ஓசை கேட்க ஆரம்பித்தது.தாசு தலையை பிய்த்து கொண்டான். இதுவரை இல்லாமல் இப்போது யார் கற்களை எறிவது என்று அவனுக்கு குழப்பமாக இருந்தது. கோரைப் புற்களின் நடுவிலிருந்து அவன் வெளிப்பட்டான்.



அவன் கையிலிருந்த டார்ச் லைட் நேர்கோட்டில் ஓளியை உமிழ்ந்து கொண்டிருந்தது. தலையை முக்காடு போட்டு மறைத்து வைத்திருந்தான். அவன் அணிந்திருந்த ஜெர்கின்கோட்டிலிருந்த ஓருகை பொடி கற்களை அதிலிருந்து வீசி கொண்டிருந்தது.



இரவில் நடமாடும் பாம்பு போன்ற விச ஐந்துகள் தன்னை தீண்டி விடக் கூடாது என்பதற்காக அவன் முன்பே தன் பாக்கெட்டில் கற்களை சேகரித்து வைத்திருந்தான். நான்கு ஐந்து கற்களை அவன் ஒன்றாக தான் போகும் பாதையில் வீசும் போது அவை பாதையை விட்டு விலகிச் சென்று விடும் என்பதால் தான் அவன் கற்களை வீசுகிறான் என்பதை தாஸ் தெளிவாக புரிந்து கொண்டான்.



இவ்வளவு முன்னேற்பாடுகளுடன் இரவில் வந்து இவன் என்ன செய்ய போகிறான் என்று யோசித்தபடி தாஸ் அவனை கவனிக்க ஆரம்பித்தான்.



கோரைப் புற்களிலிருந்து தார்சாலைக்கு வந்தவன் இருளில் இருந்த வீட்டை பார்த்து தலையை ஒரு முறை ஆட்டி கொண்டான். சாலையில் எச்சிலை துப்பியவன் சுற்றும் முற்றும் பார்த்தான். தாஸ் தான் அவன் கண்ணில் பட்டு விடக் கூடாது என்பதற்காக பின்னோக்கி நகர்ந்தான். தாசின் துரதிர்ஷ்டம் அவனது கால்கள் காலியான வாட்டர் கேனை மிதித்து சத்தம் எழுப்பியது.



பிளாஸ்டிக் பாட்டில் நசுங்கும் ஓசை கேட்டதும் அவன் சத்தம் வந்த திசையில் திரும்பினான். வாய்ப்பை வீணடிக்க விரும்பாததாஸ் தன் டார்ச்சை ஆன் செய்து அவன் முகத்திற்கு எதிரே நீட்டினான்.



எதிர்பாராத வெளிச்சவெள்ளத்தால் அவனது கண்கள் கூசின . தன் கண்களை கைகளால் மறைத்து கொண்டவன் திரும்ப வந்த வழியே ஓட முயன்றான்.



"டேய்! யார் நீ? இங்கே என்ன செய்கிறாய்?" என்றான் தாஸ்



அவனது கேள்விக்கு பதில் சொல்லாதவன்கோரை புற்களுக்கு நடுவே தான் வந்த வழியே ஓட ஆரம்பித்தான்.



"ஓடாதே! நில் " என்றபடி தாஸ் அவனை துரத்த ஆரம்பித்தான்.



ஓடுபவனுக்கு பல வழி. துரத்துபவனுக்கு ஓரே வழி என்ற பழமொழிக்கு ஏற்ப அவன் தாறுமாறாக ஓட ஆரம்பித்தான்.செடிகளின் அசைவை வைத்து அவன் ஒடும் திசையை அனுமானித்து துரத்தி கொண்டிருந்த தாஸ் களைப்படைந்து நின்றான்.



தாஸிற்கு முன்னால் ஓடிய வன் தன் பேண்ட் பாக்கெட்டிலிருந்து லைட்டரை எடுத்தான். காய்ந்து கிடந்த கோரை புற்களில் அதன் ஜீவாலையை பற்ற வைத்தவன் இருளில் நழுவினான்.



திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட தாஸ் இது முன்னால் ஓடியவனின் வேலை என்பதை உணர்ந்தான். நெருப்பு குபீரென காய்ந்த புற்களில் பற்றி பரவியது.



நெருப்பும், புகையும் தன்னை சுற்றி பரவுவதை உணர்ந்த. தாஸ் விசிலடித்து உதவிக்கு டாக்டரை அழைத்தான்.



அதே நேரம் அனிதாவின் செல்போன் படுக்கையறைக்குள் நடப்பதை படம் பிடிக்க துவங்கியது.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 28




தாசின் விசில் சத்தத்தை கேட்டதும் கதவை திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டரின் கையில் கிரிக்கெட்ஸ் டெம்பும், டார்ச் லைட்டும் இருந்தது. "என்னாச்சு தாஸ்? என்னுடைய உதவி உனக்கு தேவையா? அங்கே என்ன நடக்குது? தீப்பிடித்து எரிவது போல் தெரிகிறதே?" என்று பதறினார் டாக்டர் .



"டாக்டர் உள்ளே வராதீங்க. அங்கேயே நில்லுங்க. நானே இந்த நெருப்பை அணைத்து விடுகிறேன்." என்று கத்தினான் தாஸ்.தாசுக்கு சர்வ நிச்சயமாக அவன் தப்பி போய்விட்டான் என்று தெரிந்தது.



"தனி ஆளாக உன்னால் எப்படி நெருப்பை அணைக்க முடியும்? நான் வேண்டுமென்றால் பயன் சர்வீசிற்கு போன் செய்யவா?" என்று கத்தினார் டாக்டர் .



"இல்லை. வேண்டாம். " என்ற தா ஸ்தன் பேண்டிலிருந்து கத்தியை எடுத்துக் கொண்டான். சட்டென்று குனிந்து கைப்பிடியளவிற்கு கோரை புல்லை அறுத்து எடுத்தவன் அதை கையில் வைத்துக் கொண்டு தீ பிடித்த புற்களின் மேல் அதை அடித்து தீயை அணைக்க ஆரம்பித்தான்.



காட்டு பகுதிகளில் ஏற்படும் தீ விபத்துகளை எப்படி கையாள்வது என்பதை பற்றி தாஸ் ஒரு கட்டுரையில் படித்திருந்தான். அதில் படித்த ஒரு முறையைத் தான் இப்போது பயன்படுத்தினான். எப்போதோ படித்த ஒரு விசயம் இப்போது சரியான நேரத்தில் உதவுவது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. தன் கைக்கு கிடைத்த கோரைப் புற்களை வைத்தே அவன் மூட்டிய தீயை அணைத்து விட்டிருந்தான் தாஸ் .



உடல் முழுவதும் சாம்பலுடன் அடையாளம் தெரியாத வகையில் கையில் டார்ச் லைட்டுடன் வெளியே வந்தான் தாஸ்.



"என்னாச்சுப் பா! அவன் யாருன்னு பார்த்தியா?" என்றார் டாக்டர் பதட்டத்துடன் .



" அவன் தப்பித்து ஓடி விட்டான் டாக்டர் . ஆள் யாருன்னு அடையாளம் தெரியலை. தப்பிச்சு போகத்தான் தீயை வைத்து என்னை டைவர்ட் பண்ணியிருக்கான்.”



"உனக்கு அடி எதுவும் படலையே? அப்படி ஏதாவது காயமாகியிருந்தா வா பர்ஸ்ட் எய்ட் பண்ணி விடுகிறேன்" என்றார் டாக்டர் .



தன் கை கால்களை திருப்பி பார்த்த தாஸ் "நீங்க பயப்படுவது போல் எந்த காயமும் எனக்கு ஆகலை" என்றான்.



இருவரும் மெளனமாக. வீட்டை நோக்கி நடந்தனர்.



இருவரும் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர்.மயான அனமதியுடன் இருந்த ஹாலை கடந்து பெட்ரூமில் இருவரும் நுழைந்தனர்.



பேயறைந்தது போன்ற முகத்துடன் இருந்த மூவரையும் பார்த்து "என்னாச்சு?" என்றான் மோகன்.



"நேற்று இரவு நடந்த அதே விசயம்தான் அச்சு பிசகாம இன்னைக்கு இரவும் நடந்திருக்கு" என்றான் மோகன்.



"இல்லை.இன்னைக்கு நடந்த விசயமே வேறு. என்னோட மொபைல்ல நான் படம் எடுத்திருக்கேன். அதை பாருங்கள்" என்றாள் அனிதா. அவள் முகம் வெளுத்திருந்தது.



" எடுத்த வீடீயோவை போட்டு பார்த்தியா?" என்றான் தாசு.



"பார்த்தேன். பார்த்ததும் தான் குழப்பம் அதிகமாகி விட்டது”



"தேவி பெட்டிலிருந்து மிதப்பதை நீ உன் கண்ணா ல பார்த்தியா?”



"நாங்க மூணு பேருமே பார்த்தோம். ஆனா வீடீயோ வேறு மாதிரி காட்டுது." என்ற அனிதா குழப்பத்துடன் செல்போனை நீட்டினாள்.



அதை வாங்கியதாஸ் வீடீயோவைதேடி பிடித்து பிளே செய்தான். செல்போன் திரையில் காட்சி விரியத் துவங்கியது.



தேவி படுக்கையில் சலனமற்ற உறக்கத்தில் ஆழ்ந்திருக்க மூவரும் அவளை சுற்றி உட்கார்ந்திருந்தனர். அவர்களின் கண்கள் நம்ப முடியாத திகைப்பிலும் மிரட்சியிலும் ஆழ்ந்திருந்தன. ஓரத்தில் நேரம் ஓட ஆரம்பித்தது. வீடீயோ முழுவதும் ஓடி முடிந்தது.



" என்ன அனிதா ? நீ எடுத்த வீடீயோவில் தேவி மிதக்க வேயில்லையே? ஒரு வேளை அவள் மிதப்பதாக நீங்கள் கூறுவது பொய்யா? இல்லை வீடியோவில் நான் பார்ப்பது பொய்யா?" என்றான்.



"நாங்க மூணு பேரும் தேவி மிதந்ததை பார்த்தது உண்மை. ஆனா அது ஏன் வீடீயோவில் இப்படி வருதுன்னு தெரியலையே?" என்றான் மோகன்.



"இந்த வீடீயோவை பாருங்க மாமா.’ இதில் தேவி மிதக்க வேயில்லை. நல்ல தூக்கத்தில் இருக்கிறாள். ஆனால் உங்கள்மூவரின் கண்களும் படுக்கையிலிருந்து ஒரு அடி மேலே பார்க்கிறது. இது எப்படி சாத்தியம்னு தெரியலை” என்றான் தாஸ்.



"அப்ப உண்மையா வே தேவி படுக்கையிலிருந்து மிதக்கலை. அப்படித்தானே?” என்றார் டாக்டர் .



"அப்படித்தான் தோணுது. மிசின் பொய் சொல்லாதே?” என்றான் தாஸ்.



"அப்ப தேவி மிதந்ததை நாங்க பார்த்தது?" என்றார் டாக்டர் .



" தெரியலை" என்று உதட்டை பிதுக்கினான்தாஸ்.​
 

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 29



" உண்மையா வே தேவிக்கு அமானுஷ்யமா எதுவுமே நடக்கலை. அப்படி நடந்ததா நாம நம்பியிருக்கோம்" என்றான் தா ஸ்.



"நீ சொல்றது வாஸ்தவம்தான். செல்போன் வீடீயோவுக்கும் நாம் நேரில் பார்த்ததுக்கும் எந்த சம்மந்தமும் இல்லைன்னு தெரியுது. ஆனா ஓரு கேள்விக்கு நமக்கு பதில் தெரியலை. இந்தி தெரியாத தேவி எப்படி இந்தியில் பேசினாள்?" என்றான் மோகன்.



"அவளோட கையில் எப்படி சிலுவை குறி வந்தது? இதுக்கு ஏதாவது லாஜிக்கான பதில் உன்னிடம் இருக்கிறதா?" என்றார் டாக்டர் .



"ஓவ்வொரு கேள்விக்கா பதிலை தேடுவோம் டாக்டர் .இப்போது எல்லோரும் தூங்கலாம். இனிமேல் எந்த அசம்பாவிதமும் நடக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன்" என்றான் தாஸ்.



"சரிப்பா ! நான் மாடிக்கு போகிறேன். வெளிக் கதவை பூட்டிக் கொள்" என்ற டாக்டர் எழுந்து மாடியிலிருந்த அவருடைய அறைக்கு சென்றார்.



தாஸ் கதவை உள்ளே பூட்டும் போது கம்பி வழியாக பக்கவாட்டில் தெரிந்த ஊஞ்சலைப் பார்த்தான். அது காற்றில் சிறு சலனத்துடன் ஆடிக்கொண்டிருந்தது.



பெருமூச்சு விட்டபடி தாஸ் தன் படுக்கைக்கு திரும்பினான்.



மறுநாள் காலையில் வீட்டின் பக்கவாட்டில் முள்வேலி சூழ்ந்திருந்த தோட்டத்தில் பல் விளக்கியபடி நடந்து கொண்டிருந்தான் தாஸ்.



. வீட்டிற்கு தேவைப்பட்ட கத்தரிக்காய் , வெண்டைக்காய் இவற்றையெல்லாம் தோட்டத்தில் விளைய வைத்திருந்தாள் லீலா. அவளுடைய திறமையை மனதிற்குள் மெச்சிக் கொண்டிருந்த போது வாயில் பிரஸ்சுடன் உள்ளே நுழைந்தாள் அனிதா.

"நைட் நல்ல தூக்கமே ?" என்றான் தாஸ் .



"12 மணிக்கு மேல தானே தூங்கினேன். அதுதான் அடிச்சு போட்டது போல் தூங்கிட்டேன்.”



" நேத்து நீ எடுத்த வீடியோவால் ஓரு உண்மை வெளிவந்து விட்டது. தேவியிடம் எந்த பிரச்சனையும் இல்லை. நம்மிடம் தான் பிரச்சனைன்னு தெரிந்து இருக்கிறது”



"அதுதான் எப்படி ? யாராவது ஒருத்தரை ஏமாற்றலாம். நம் எல்லோரையும் எப்படி ஏமாற்ற முடிந்தது?”



"அதைத்தான் நானும் யோசிக்கிறேன். இந்த வீட்டில் தான் தேவி மிதப்பதை எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். ஹாஸ்பிடலில் தேவி இருந்த நான்கு நாட்களில் தேவி மிதக்கவு பில்லை. அதை யாரும் பார்க்கவுமில்லை.”



"அப்ப ரெண்டு இடத்துலயும் ஏதோ ஓன்னுமி மிஸ்ஸாகுது. அது என்னன்னு கண்டுபிடித்து விட்டால் இந்த விளையாட்டு முடிவுக்கு வந்துவிடும்”



"அதை கண்டுபிடிக்க நாம ஹாஸ்பிடல் போயாகனும்.”



"ஆமாம்.”



"அந்த பிரச்சனை இருக்கட்டும். என்னோட பிரச்சனை தள்ளி போகுதே?" என்ற அனிதா முள்வேலியில் தன் கைகளை வைத்தாள்.



"இன்னைக்கு நாளைக்குள்ள உன்னோட பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். டோண்ட் ஓர் ரி”



"லூசு மாதிரி பேசாதடா.’அதுக்கான சிம் டம்ஸ் எதையும் என்னோட உடம்புல பாக்க முடியலை.மார் வலி, அடிவயிற்று வலின்னு எதையும் காணோம்”



" இப்ப ஹாஸ்பிடல் தானே போறோம்? அங்க டாக்டர் கிட்ட காட்டுவோம்”



"லேடீஸ் டாக்டரா இருந்தா பரவாயில்லை”



"சரி பார்ப்போம்.தேவி என்ன செய்கிறாள். “



"அவள் நல்ல தூக்கத்தில் இருக்கிறாள். ரொம்ப நாளைக்கு பின்னால் நிம்மதியாக தூங்குவதாக உங்க அக்கா சொன்னாங்க”



"பாவம் அவள் . ரொம்ப பயந்து போய் விட்டாள். நான் வந்த பின் தான் அவளுக்கு கொஞ்சம் தைரியம் வந்துருக்கு “



"ஆமாம்'! நைட்டு வந்தவன் யாருன்னு ஏதாவது தெரிந்ததா?”



"ஓன்னும் தெரிய லைம்மா. ஆனா அவன் இங்கே வர வலுவான ஏதோ ஒரு காரணம் இருக்கு. அது என்னன்னு தான் தெரியலை. என் கைக்கு அகப்படாம தப்பித்து ஓடி விட்டான்”



அவன் பேசுவதை கேட்டபடி தூரத்தில் தெரிந்த ஊஞ்சலை வெறித்து கொண்டிருந்தாள் அனிதா.



" எல்லா பிரச்சனையும் அந்த ஊஞ்சலில் இருந்துதான் தொடங்கியிருக்கிறது" என்றான் தாஸ்.



அனிதாவின் கண்கள் ஊஞ்சலை பார்த்து கொண்டிருந்தாலும் கைகள் முள்வேலியை இறுக்கி பிடித்திருந்தன.



"ஏய் அனிதா! என்னாச்சு ? " என்ற தாஸ் அவளை உலுக்கினான்.



சுய உணர்வுக்கு வந்து திரும்பினாள் அனிதா.



"சும்மா அப்படியே ஹேங் ஆயிட்டேன். ஏதோ நினைப்புல நின்னுட்டேன். ஏய் பயந்துட்டியா?" என்ற அனிதா அவன் கன்னத்தை தட்டினாள். தட்டிய கைகளை உற்றுப் பார்த்தான் தாஸ்.



"ஏய் என்னாச்சுப் பா?" என்ற அனிதா தன் கைகளை பார்த்தாள்.



அவளுடைய உள்ளங்கையில் ரத்தச் சிகப்பான ஒரு சிலுவை குறி விழுந்திருந்தது.​
 
Top Bottom