Erode Karthik
Active member
- Messages
- 315
- Reaction score
- 71
- Points
- 28
ஊஞ்சல்
அத்தியாயம் 20
தன் பேண்ட் பாக்கெட்டில் வைப்ரேசன் மோடி ல் போட்டிருந்த செல்போன் "ர்ர்ர்" என்றதும் கதை சொல்வதை நிறுத்தினான்தாஸ்.
சத்தத்தை கிரகித்த வேலன்" போனா?" என்றார்.
"ஆமா சார்” என்றான் தாஸ் செல்போன் குறுக்கிட்டால் எழுந்த எரிச்சலை அடக்கியபடி
"பேசுங்க" என்றார் வேலன் ஒரு சாக்லேட்டை பிரித்து வாயில் போட்டபடி.
பேண்ட் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து அதை அணைத்தான் தாஸ்.
"பேசலை?" என்றார் வேலன் கேள்விகுறியோடு.
"இல்லை சார். எனக்கு கான்ஸன் ரேசன் போயிரும் சார். அப்புறமா பேசறேன்" என்றான் தாஸ்.
"இதுக்கு மேல நீங்க கதை சொல்ல வேணாம். இந்த கதை நல்லாருக்கு, இதை நாம பண்றோம்." என்றார் வேலன்.உறுதியான குரலில்.
"சார்!" என்றான் இன்ப அதிர்ச்சியில் பேச்சு வராமல் வாயடைத்து போன தாஸ் -
"இது உண்மையா வே நல்லாயிருக்கு தாஸ். இதை நல்லா டெவலப் பண்ணு. இதை நிச்சயமா ஹிட் பண்ணி விடலாம். இதுல யாரு வில்லன்னே தெரியலை. கண்டு பிடிக்கவும் முடியலை. அந்த சக்ரவர்த்தி, டாக்டர், தேவின்னு எல்லாமே சஸ்பென்சா இருக்கு. உனக்கு ரெண்டு மாசம் டைம் தர்றேன். முழு கதையோட வந்து உக்காரு. இதை வேற யாருகிட்டயும் சொல்ல வேணாம்.”
அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபட்டு கொண்டிருந்த தாஸ்" சார்! உண்மையா வே என்கிட்ட பாதி கதை தான் சார் இருக்கு. மீதியை இனிமேல் தான் பண்ணனும் " என்றான்.
தன் டிராவை திறந்து செக் புக்கை எடுத்த வேலன் அதில் ஒரு கனத்த தொகையை எழுதி சுவாமி படத்திற்கு முன்னால் வைத்து வணங்கினார். பிறகு அதை தாசிடம் நீட்டினார். "உனக்கான அட்வான்ஸ்”
சட்டென்று அவரின் காலில் விழுந்து எழுந்தான் தாஸ் .எழுப்பி விட்டவரிடமிருந்து பயபக்தியுடன் செக்கை வாங்கி கொண்டான் தாஸ். தன் கண்களில் அதை ஓற்றிக் கொண்டு பாக்கெட்டில் வைத்ததாசை பார்த்த வேலன் "ஓன்னு நல்லா புரிஞ்சுக்கதாஸ். வருசத்துக்கு ஒரு படத்தை ஹிட் பண்ண முடியும். ஏப்ரல், மேன்னு பள்ளிக்கூட லீவு மாதங்களில் குழந்தைகளுக்கு பிடிச்ச விசயங்களை வைச்சு படம் பண்ணினால் கண்டிப்பாக ஹிட் பண்ணிடனாம். நான் மார்கெட் ல ரொம்ப நாள் நீடிக்க இந்த பார்முலா தான் காரணம். நீ மொத்த கதையோட வா எங்கே எனத எப்படி சேர்க்கனும்னு நான் சொல்றேன். கதையில தலையிடுறேன்னு தப்பா நினைக்காதே. நம்ம படம் ஹிட்டாகணும். அதுக்கு சில பல கமர்சியல் விசயமெல்லாம் சேர்க்கனும். அதுக்குத்தான் இதையெல்லாம் சொல்றேன். புரியுதா?'' என்றார் வேலன் ஆதுரமாகதாசின் தோளில் கையை வைத்து .
"புரியுது சார்" என்றான் தாஸ் மகிழ்ச்சி புன்னகையுடன் .
"சரி. இனி ஆக வேண்டிய வேலையை பார்" என்றார் வேலன்.
வேலனிடம் விடை பெற்று பைக்கோடு வெளியே கிளம்பியதாஸ் கண்ணில் பட்ட ஓரு பேக்கரி வாசலில் வண்டியை நிறுத்தினான். ஓரு டீயை சொல்லிவிட்டு கோல்டு பில்டரை பற்ற வைத்து புகையை விட்டவன் போனை ஆன் செய்தான்.அனிதாவிடம் இந்த மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வேண்டும் என்று அவன் மனம் துடித்தது. செல்போன் திரை ஆன் ஆனதும் மணியடித்தது - யாராயிருக்கும் என்ற யோசனையோடு போனை காதில் வைத்தான் தாஸ்.
"ஹலோ”
"ஏண்டா எரும மாடு. போனை ஆப் பண்ணிட்ட?" என்றது பெண் குரல்.
அவனால் அந்த குரலை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.
"அக்கா!சொல்லுக்கா?" என்றான் தாஸ்.
"தேவியை ஹாஸ்பிடல்ல சேர்த்து இருக்கோம்" என்றபடி அழ ஆரம்பித்தாள் மறுமுனையிலிருந்த லீலா.
"என்னக்கா ஆச்சு? விளக்கமா சொல்லு?" என்றான் தாஸ்.
லீலா நடந்ததை சொல்ல சொல்ல தாசின் முதுகெலும்பு சில்லிட தொடங்கியது. தாஸ் வேலனிடம் சொன்ன அந்த அறைகுறை சினிமா கதை அப்படியே லீலாவின் வீட்டில் நடந்து முடிந்திருந்தது.
தாசின் கையிலிருந்த செல்போன் நழுவி விழுந்தது.