Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed ஊஞ்சல்

Erode Karthik

Active member
Vannangal Writer
Team
Messages
315
Reaction score
71
Points
28
ஊஞ்சல்

அத்தியாயம் 39

"நான் பார்த்த அமைதியான டாக்டர் நீங்கதானான்னு எனக்கே சந்தேகமாக இருக்கிறது டாக்டர்?" என்றான் தாஸ். அவன் கைகளை இறுகப் பற்றியிருந்த அனிதாவின் கைகள் நடுங்க தொடங்கின.



" இந்த டாக்டர் ஹரிபிரசாத் ஹேக்டே யாருன்னு உனக்கு தெரியனும்னா இந்தா இதை படித்து பார். நான் யாருன்னு உனக்கு தெரியும்" என்ற டாக்டர் தன் மெடிக்கல் கிட்டிலிருந்த ஒரு புத்தகத்தை தாசை நோக்கி விட்டெறிந்தார். அதை கையில் வாங்கி பிரித்தான் தாஸ். அது உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை அதன் முகப்பில் சற்று இளமையாக சிரித்து கொண்டிரு ந்தார் டாக்டர் ஹரிபிரசாத், கீழே தலைப்பு " மரணத்தை வென்றவன்" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. உள்ளே நான்கு பக்கங்களில் ஒரு கட்டுரை டாக்டரைப் பற்றி நீளமாக எழுதப்பட்டிருந்தது.



" டாக்டர்!உண்மையாகவே நீங்க யாரு? இங்கே நடப்பதை பார்த்தால் எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது" என்றான் தாஸ்.



" என் பெயர் ஹரிபிரசாத் ஹேக்டே .m.B. B.S.M. Dபடித்த ஒரு டாக்டர் நான். என்னோட சொந்த விருப்பத்தில் மெஸ்மரிசம், ஹிப்னாடிசம் , இவற்றையெல்லாம் கற்று கொண்டு அதில பல மாஸ்டர் டிகிரி கள் முடித்தவன்.ஆபரேசன் பண்ணும் போது நோயாளிகளுக்கு அனஸ் தீசியா என்னும் மயக்க மருந்து தருவது வழக்கம். நான் அதை மாற்றினேன். நோயாளியை மெஸ்மரிசம் செய்து மயக்க நிலைக்கு கொண்டு போய் ஆபரேசன் செய்வதில் நான் நிபுணன் .என் சக மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் அது ஒரு புதிய வைத்திய முறை என்று நான் நம்பினேன் . மனிதர்களின் மனதை குணப்படுத்துவதன் மூலம் உடலில் ஏற்படும் நோய்களை குணப்படுத்த முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை - தியரி . இப்படி புது விசயத்தில் இறங்கிய நான் அதில் உச்ச நிலையை அடைய விரும்பினேன். சாகும் நிலையில் இருக்கும் ஒரு நோயாளியை மெஸ்மரிசம் செய்து வாழ்விற்கும், சாவிற்கும் நடுவில் திரிசங்கு சொர்க்கம் போன்ற ஒரு நிலையில் அவனை மூன்று மாதம் வாழ வைத்தேன். நவீன மருத்துவம் நாளைக்கு இறந்து விடுவான் என்று சொல்லிய ஒரு மனிதனை என்னுடைய திய ரியால் மூன்று மாதம் வாழ வைத்தேன். அது எப்படியோ மருத்துவ கவுன்சில் வரை போய் என் மீது மனித தன்மையற்ற சிகிச்சை முறையை பிரயோகித்தவன் என்று குற்றம் சாட்டி என்னுடைய சான்றிதழ் பறிக்கப்பட்டது. நான் யாருக்கும் சிகிச்சை தரக்கூடாது என்று எனக்கு மருத்துவ கவுன்சில் தடை விதித்தது. என்னுடைய ஆய்வை வெளிநாட்டு பத்திரிக்கைகள் கொண்டாடின. உள்ளூரில் நான் கேவலப்பட்டேன்”



"உலகமே தேடும் ஒரு ஆள் இந்த ஊருக்கு ஏன் வந்தீங்க?”



"அதுக்கு காரணம் என் மகள் நிவேதா தான். அன்பானவள். ஜ ஜுவல்லரி டிசைனிங் படித்தவள். அவள் மேல் நான் உயிரையே வைத்திருந்தேன். வெளிநாட்டு அழைப்பை நிராகரித்து விட்டு நான் வீட்டுக்கு வந்த போது என் ஒரே மகள் நிவேதா எவனோ ஒருவனை காதலித்து சொல்லாமல் கொள்ளாமல் வீட்டை விட்டு ஓடி விட்டாள். அந்த வேதனையில் என் மனைவியும் இறந்து விட்டாள் - ஒரே நேரத்தில் தொழிலும், குடும்பமும் சிதைந்து போய் நான் தனிமரமாக நின்றேன். எனக்கு இந்த பூமியில் இருக்கும் ஒரே சொந்தம் என் மகள் தான். நான் அவள் காதலை ஏற்றுக் கொண்டு அவளோடு வாழ விரும்பினேன்.. அவளை தேட ஆரம்பித்தேன். அவளை காதலித்து திருமணம் செய்ததாக நடித்தவன் அவள் கர்ப்பமானதும் அவளை தனியாக விட்டு விட்டு ஓடி விட்டான். ஓரு பெண் குழந்தையை பெற்றுவிட்டு நிவேதா இறந்து விட்டாள். அந்த குழந்தை தான் மாயர். என்னுடைய பேத்தி .அவளை நாம் பால் யாதவ் தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தான் - அந்த அயோக்கியனுடன் நடந்த கல்யாணத் தின் போது நிவேதா இரண்டு மோதிரங்களை சொந்தமாக டிசைன் செய்திருந்தாள். அதை மருத்துவமனையில் கர்ப்பமாக இருந்த போது பண உதவி செய்த தோழிக்கு பரிசாக கொடுத்து விட்டாள். அது நிவேதாவைப் பற்றி விசாரித்த போது அவள் தோழியிடமிருந்து என்னிடம் வந்து சேர்ந்தது. அதே போல் இன்னொரு மோதிரம் யாரிடமிருக்கிறதோ அவன்தான் என் மகளை ஏமாற்றிய அயோக்கியன். அதனால் பல நகை கடைகளில், நகை அடகு கடைகளில் அந்த மோதிரத்தை தேடிக் கொண்டிருந்தேன். என் பேத்தி மாயாவோடு என் மிச்ச நாட்களை கழிக்க ஆசைப்பட்டு யாதவோடு நட்பானேன். உன் மாமாவோடு எனக்கிருக்கும் நட்பு போலவே தான் யாதவோடும் என் நட்பு இருந்தது. அதனால் பேருக்கு ஒரு டிஸ்பென்சரியை ஆரம்பித்து இங்கேயே செட்டிலாகி விட்டேன். அங்கே என் பாணியில் சின்ன சின்ன கேஸ்களை கையாண்டேன்.”



"அப்புறம் என்ன ஆச்சு டாக்டர்?”



"ஒரு நாள் காலையில் மாயா ஊஞ்சலில் விளையாடி கொண்டிருநதாள். நான் அவளை கொஞ்சி விட்டு வாக்கிங் கிளம்பினேன். வாக்கிங்கை முடித்துவிட்டு திரும்பி வந்து பார்த்த போது மாயா ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுதி இறந்து போயிருந்தாள். அது ஒரு விபத்து என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் அது ஒரு கொலைன்னு நான் நினைத்தேன்.”



"நீங்க அப்படி நினைக்க என்ன காரணம்?”



ஊஞ்சலுக்கு கீழே கிடந்த அணைக்கப் படாத ஒரு பீடி தான் அந்த எண்ணத்திற்கு காரணம் " என்றார் டாக்டர் .



" ஓரு குழந்தையை யார் எதற்காக சொல்லணும்?”



"மாயாவை கொன்னது மகேந்திரன். அவனை ஏவி விட்டது சக்ரவர்த்தி . “



" இதை நான் யூகிச்சேன். அப்பசிவநேசனுக்கு போன் பண்ணி தேவி மேட்டரை பேப்பரில் வர வைத்தது மகேந்திரன் தானே?”



"இல்லை.அதை செய்தது நான் செத்துப் போன மாயா திரும்ப ஆவியாக வந்து விட்டாள் என்று தெரிந்தால் கொலையாளி மறுபடியும் அவளை கொல்ல வருவான் என்று நினைத்தேன். அதற்காக தேவியை மாயாவாக மாற்ற தீர்மானித்தேன். கடிகாரத்தின் வின்டர்ஸ்பிரிங் ஓசையை வைத்து அவளை மெஸ்மரிசம் செய்தேன். அந்த சத்தம் கேட்டதும் தேவி இந்தியில் பேசுவாள். உன் பெயர் என்ன?உன்னோட அப்பா, அம்மா பெயர் என்ன போன்ற பொதுவான கேள்விகளுக்கு அவள் பதில் சொல்லும்படி பழக்கினேன். வேறு புது கேள்விகள் கேட்டால் அவள் மயங்கி விழுந்து விடுவாள். அவள் படுக்கையிலிருந்து மிதப்பது போல் தெரிய ஹலுசினேசன் டிரக்கை தினமும் வாங்கி வரும் பாலில் நான் கலந்தேன் .நான் நினைத்தது போலவே எல்லாம் நடந்தது. நான் எதிர்பாராத விசயம் அந்த நள்ளிரவு டார்ச் லைட் வெளிச்சம்தான்.”



"அதுதான் இவ்வளவு தூரம் எங்களை கொண்டு வந்திருக்கிறது.மகேந்திரன் ஏன் மாயாவை கொல்லனும்?”



"சக்ரவர்த்தி யோட அண்ணன் வினோத் சக்ரவர்த்தி தான் என் மகளை ஏமாற்றி கர்ப்பமாக்கியவன். தன் தம்பியோட சதியால் மரணப்படுக்கையில் இருந்தவன் தன் பாவத்திற்கு பரிகாரம் செய்ய விரும்பினான். பிரைவேட்டிடைக்டிவ் மூலம் என் மகளை தேட ஆரம்பித்தான். நிவேதா செத்துப் போய் விட்டதையும் தன் மகள் மாயா உயிரோடு இருப்பதையும் தெரிந்து கொண்டவன் தன் பங்கு சொத்தை மாயாவிற்கு எழுதி வைக்க முடிவு செய்தான்.இதை டிடெக்டிவை விலைக்கு வாங்கி உண்மையை தெரிந்து கொண்ட சக்ரவர்த்தி ் தன் அண்ணனை கொன்றதுடன் தன் அண்ணன் மகளான மாயாவை மகேந்திரன் மூலமாக கொண்றுவிட்டான். அதன் பிறகு அவனது குற்றவுணர்ச்சி அவனை துரத்த ஆரம்பித்தது. இரவில் தூக்கமில்லாமல் தவித்தவன் என்னை தேடி சிகிச்சைக்காக வந்தான். என் மெடிக்கல் கிட்டில் இருந்த டைம் புத்தகத்தை படித்து என்னைப் பற்றிய எல்லா விசயத்தையும் தெரிந்து கொண்டான். மகேந்திரன் மாயாவின் கொலையை வைத்து மிரட்டி பணம் பறித்ததால் நானும் அது போல் செய்து விடுவேன் என்ற பயத்தில் அவனது ஆழ் மனது திறக்கவில்லை. மகேந்திரனின் மரணம் அவனது மனதை திறந்து விட்டது. தன் அண்ணனை கொன்ற திலிருந்து எல்லாவற்றையும் மனம் திறந்து சொல்லி விட்டான்.அவன் பரிசாக கொடுத்த மோதிரம் தான் எனக்கு உண்மையை முழுதாக சொன்னது. கையில் வெண்ணெயை வைத்து கொண்டு இத்தனை நாள் நெய்யிற் காக அலைந்திருக்கிறேன். இப்போது ஹிப்னாடி சத்தால் சக்ரவர்த்தி தற்கொலை செய்து கொள்ளும் படி செய்து விட்டேன்.



" நீங்க பழி வாங்க குழந்தையோட விளையாடி விட்டீர்களே டாக்டர்?”



"என்னை மன்னித்து விடு தாசு. எனக்கு வேறு வழி தெரியவில்லை. அந்த கடிகாரத்தை உடைத்து விட்டால் தேவி பழைய நிலைக்கு திரும்பி விடுவாள். “



"நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர்பார்க்கலை டாக்டர் “



"அனிதா நீ என்னை மன்னித்து விடும்மா.நீயும், தாசும் பீரியட் ஆகலைன்னு பேசுவதை நான் ஓட்டு கேட்டேன். பீரியட் தள்ளிபோகும் மாத்திரையை நீ இரவில் சாப்பிடும் ரசகுல்லாவில் மிக்ஸ் பண்ணியிருக்கேன். அத தூக்கி போட்டுவிடு. என் பொண்ணை தெருவில் அனாதையாக அலையவிட்டவனை கொல்ல இதை வாங்கினேன். இப்ப எனக்கே யூஸாகுது."என்ற டாக்டர் தன் கோட் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்தார்.



"டாக்டர் முட்டாள் தனமாக எதையும் முயற்சி பண்ணாதீங்க" என்றான் தாஸ்.



"ஸாரி தா ஸ்! என் மகளும், மாயாவும் இல்லாத உலகத்தில் வாழ எனக்கு விருப்பமில்லை. நான் தப்பா எதாவது பண்ணியிருந்தா என்னை மன்னித்து விடு தாஸ். நீ ரொம்ப புத்திசாலி. சீக்கிரமாகவே எல்லாத்தையும் கண்டுபிடித்து விட்டாய். உன்னோட சினிமா கதையில் நான் வில்லனா ஹிரோவான்னு ஆடியன்ஸ் தான் சொல்லனும்" என்ற டாக்டர் தன் நெற்றி பொட்டில் துப்பாக்கியை வைத்து அழுத்தினார்.



போட்டோவிலிருந்த வினோத் சக்ரவர்த்தியின் முகத்தில் ரத்தம் சிதறி தெளித்தது.



தாஸ் போலீசிற்கு போன் செய்து "ஹலோ! போலீஸ் ஸ்டேசன்! "என்றான்.


முற்றும்
 
Top Bottom