Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed என் இதயம் நடிப்பதில்லை

Messages
77
Reaction score
57
Points
18
அன்பு தோழமைகளே.....

என் இதயம் நடிப்பதில்லை —-கதையோடு வந்திருக்கிறேன். இதுவும் மல்லிச்சரம் போல மறுபதிப்புதான்.

2013ஆம் வருடம் மதுமிதா மகளிர் நாவல் என்கின்ற மாதஇதழில் பிரிசுரமானது....

அதனை படிக்காதவர்களுக்கு இதோ நமது சகாப்தம் தளத்தில் .
நாயகன்: கிருஷ்ணகாந்த்
நாயகி:ரக்‌ஷிதா
இதோ முதல் பதிவு படித்துவிட்டு உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
சகாப்தம் லைக்ஸ் 👍👍👍மறந்துடாதீங்க.
நன்றி.

அன்புடன்
இந்திரா செல்வம்

என் இதயம் நடிப்பதில்லை - 1
அந்த வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் சத்தமில்லாமல் பக்கத்து வீட்டு வாசலில் வந்து நிற்பதை மாடியில் துணி காயவைத்துக்கொண்டிருந்த ரக்‌ஷிதா எட்டிப்பார்த்தாள்.
"இந்த அதிகாலை நேரத்தில் இந்த வீட்டைப் பார்க்க யார் வந்திருப்பார்கள்? இதோடு இருபது பேருக்கு மேல் இந்த வீட்டை ... இல்லை, இல்லை இந்த பங்களாவை பார்க்க வந்துவிட்டனர். ஆனால் ஒருவரும் குடிபுகுந்த வழியைத் தான் காணோம் பார்ப்போம். இந்த பார்ட்டியாவது வாங்குகிறதா என்று "யோசனை ஓடிய போதும் கைகள் தாமாக துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தன.
கார் கதவுகள் திறந்தன, எப்போதும் பி.எம்.டபிள்யூ கார் என்றால் ரக்‌ஷிதா ஒரு தனி ஈர்ப்பு இதில் அப்படி என்னதான் இருக்கிறதோ? இதன் விலை கோடியை தொடும் அளவிற்கு! என்று பலமுறை வியந்திருக்கிறாள். அதனால் இந்த கோடிக்கு சொந்தக்காரனை பார்க்கும் ஆவல் தானாக அவளுள் எழுந்தது. கைவேலையை நிறுத்திவிட்டு கண்களை கூர்மைப்படுத்தினாள். வானின் நீல வண்ண டீ சர்ட்டும் அடர் நீல வண்ண ஜீன்சும் அணிந்த ஒருவன் கீழே இறங்கினான். அவன் முகத்தை கூர்ந்து பார்த்த ரக்‌ஷிதா கலவரமானாள்.
"இ... இவனா?... இவனை எங்கோ ... பார்த்தது போல் ...ம்... அங்... அவனே தான். இவன் பெயர் கிருஷ்ணகாந்த்! பெரிய நடிகன். அட அவனேதான் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. இது மட்டும் சதீஷிற்கு தெரிந்தால் சந்தோஷத்தில் கூச்சலிடுவான். அவனது ஃபேவரட் ஹீரோ வாயிற்றே" என்று சிந்தித்தவள் உடனே அதை செயலாக்கினாள்.
"என்ன !!! கிருஷ்ணகாந்தா? நம் பக்கத்து வீட்டிற்கா? அய்யோ அக்கா சத்தியமாக நம்பமுடியவில்லை. நீ பார்த்தாயா? நிஜமாகவா?" தூக்கக் கலக்கத்திலும் அவன் கேள்விகளை அடுக்கினான்.
“அட! ஆமாண்டா, நீ சீக்கிரம் ஃபிரெஷ் ஆகு, அப்புறம் நீயே போய்ப் பார், வீட்டைபச் சுற்றிப் பார்க்க எப்படியும் அரை மணி நேரமாவது ஆகும்" முடித்தவன் தன் வேலைய தொடர மாடிக்கு விரைந்தாள்.
ஐந்து நிமிடத்தில் ரெடியாகி மாடிக்கே வந்துவிட்டான் சதீஷ்
ஒரு முறை பக்கத்து வீட்டு பால்கனியை எட்டிப் பார்த்தவன் வாசலில் நின்ற காரை பார்த்து சந்தோஷ கூச்சலிட்டான்." அக்கா பி.எம்.டபிள்யூ கார் சூப்பரா இருக்குல்ல நமக்கெல்லாம் இது கனவாகவே தான் இருக்கிறது.”

“ஏன் சதீஷ் நெகடிவ்வா பேசனும் இப்போ தான் உனக்கு வேலை கிடைத்திருக்கிறது, முயற்சி செய்தால் நாமும் கண்டிப்பாக வாங்கிடலாம்.”
"என்னமோ போ... சரி அதை விடு கிருஷ்ணகாந்த் எப்படியும் பால்கனியை சுற்றிப் பார்க்க வருவார் இல்லையா அப்போ எப்படியாவது அவரை பார்த்து விடலாம்" என்று கூறியவன் மாடியின் கைப்பிடி சுவரில் தாவி அமர்ந்தான்.
ஏனோ ரக்‌ஷிதாற்கும் கிருஷ்ணகாந்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது. சதீஷைப் போல் தம்பட்டம் அடிக்காவிட்டாலும் கிருஷ்ணகாந்தின் தீவிர ரசிகை அவள். அதனால் துணி உலர்த்துவதை மெதுவாகவே செய்தாள்.
மூன்று நிமிட காத்திருப்பிற்குப் பிறகு பால்கனியில் பிரவேசித்தான் கிருஷ்ணகாந்த். கூடவே ஒரு ஐம்பது வயதை தொட்டவர்
கிருஷ்ணகாந்தை பார்த்த சதீஷ் சந்தோஷ உந்துதலில் "ஹாய்! சார் எப்படி இருக்கீங்க?" என்று சத்தமாய் கேட்டே விட்டான்.
அந்த குரலுக்கு இவன் புறம் திரும்பிய கிருஷ்ணகாந்த் தன் பிராண்டட் கண்ணாடியை கழட்டினான். அவன் பேச வாய் திறக்கும் முன் அந்த வயதானவர் பேச ஆரம்பித்தார்.
"அடடா இதற்கு தான் கிரிஷ் பால்கனிக்கு வரவேண்டாம் என்று படித்து படித்து சொன்னேன். இப்போ பார் நாட்டுபுறத்தான் மிட்டாய் கடையை பார்ப்பது போல் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். நடிகன் என்றாலே வாயை பிளந்து கொண்டு வந்து விட வேண்டியது தான். என்ன பிறவிகளோ ?" அவர் அடுக்கிக்கொண்டே போக ரக்‌ஷிதாவிற்கு கோவம் தலைக்கு மேல் ஏறியது.
"ஹலோ! இங்க யாரும் மிட்டாய் கடையை பார்க்க வரலை சினிமாகாரங்கன்னா தனியா இரண்டு கொம்பு முளைச்சிருக்கும்னு பேப்பர்ல போடுறாங்களே. அதான் படிச்சது உண்மைதானான்னு பார்த்தோம். நாம எதிர்பார்த்தது போல் பெரிசா கொம்பு ஒன்றும் இல்லடா சதீஷ். இவங்களும் ரெண்டு கை ரெண்டு கால் வைச்ச நம்மளை மாதிரி சாதாரண மனுஷங்கதான். இவர்களுடன் நமக்கென்ன பேச்சு, மேக்கப் போடாவிட்டால் இவர்கள் முகத்தை பார்க்க பயமாக இருக்கிறது. வா சீக்கிரம்" சத்தமாக பேசிக் கொண்டே சதீஷை தரதரவென்று இழுத்துச் சென்று விட்டாள்.
வாயடைத்துப் போனார் அந்த வயதானவர் கழற்றிய கூலரை வாயில் வைத்து கடித்த கிருஷ்ணகாந்தத்தின் இதழோரம் புன்னகை படர்ந்தது.
"பார்த்தாயா கிரிஷ், இப்படிப்பட்டவர்கள் இருக்கும் இடத்திலா நீ ஓய்வெடுக்கப் போகிறாய்? வேண்டாம் கிரிஷ். ஓ. எம். ஆர். ரோட்டில் ஒரு பங்களா விலைக்கு வருகிறது. ஓய்வெடுக்க அதுதான் சிறந்த இடம். இந்த வீட்டை பிடிக்கவில்லை என்று புரோக்கரிடம் சொல்லி விடு, சரிதானா?"
ஏதோ யோசனையில் இருந்த கிருஷ்ணகாந்த்தை பெரியவரின் சரிதானா? என்ற கேள்வியும், தொடுகையும் எழுப்பியது.
"நீங்கள் ஏன் மாமா வாய் கொடுத்து வாங்கிக் கட்டிக் கொள்கிறீர்கள். ஆசையாக தானே ஹாய் என்றார்கள். சிரித்து கொண்டே ஒரு ஹாய் சொல்லி இருந்தால் எல்லாம் நல்லபடியாக முடிந்திருக்கும். இப்போது பாருங்கள் தேவையில்லாத விரோதம். சரி பரவாயில்லை வாருங்கள் கீழே போகலாம்" படிகளில் . இறங்கினான் கிருஷ்ணகாந்த்.
வேறு வழியின்றி அவனை பின் தொடர்ந்தார் பெரியவர் பெருமாள்சாமி.
ரூமில் குறுக்கும் நெருக்கும் கோபமாக நடத்து கொண்டிருத்தான் சதீஷ்.
“உனக்கு என்ன பைத்தியமா? எவ்வளவு பெரிய ஆள் அவர், அவர்கிட்டயே உன் வாய்க்கொழுப்பை காட்டுகிறாயா?"
"பின்ன என்னடா என்னவோ அவர்கள் பெரிய இவர்கள் மாதிரி..." முடிக்கும் முன் இடைபுகுந்தான் சதீஷ்.
"நீ சொன்னாலும் சொல்லைன்னாலும் அவர் பெரிய இவர் தான். அதில் உனக்கு சந்தேகம் வேறா?" அவன் பேச்சில் கோபம் தெரிந்ததில் இவள் சற்று பின் வாங்கினாள்.
"ம்..ச்... அதுக்காக நாட்டுப்புறத்தான் என்றெல்லாமா பேசுவது ?"
"அவர் பேசினாரா? இல்லையே? அந்த நாட்டுப்புறத்தான் தானே பேசினான். அதற்காக அவரை திட்டுவாயா? சரி திட்டி விட்டால் நாளை அவர் இந்த பங்களாவில் குடிபுகுந்தால் அவர் முகத்தில் நாம் எப்படி விழிப்பது ? அக்கம் பக்கத்தில் சிநேகமாய் இருப்பது தானே நம் பண்பு .”

“தவறை உள்ளூர உணர்ந்தாலும் காட்டிக் கொள்ளாமல் "அட போடா சினிமாக்காரங்க சிநேகிதம் எல்லாம் எனக்கு வேண்டாம். நீ வேண்டுமானால் போய் இழை" பேசியவள் கோபமாக வெளியேறி விட்டாள்.
 
Messages
77
Reaction score
57
Points
18
2

ஞாயிற்றுக்கிழமை என்பதால் பொறுமையாக எழுந்த ரக்‌ஷிதா , வார இதழ் ஒன்றை புரட்டிக் கொண்டிருந்தாள். சினிமா கிசுகிசு எப்போதும் அவள் ஆர்வமாக படிப்பது, அன்றும் படித்தாள்.



"பெயரின் பாதி விஷ்ணுவையும் மறுபாதி காந்தத்தையும் கொண்டே பிரபல நடிகர் ஓய்வெடுக்க என்று புதிதாக ஒரு பங்களாவை வாங்கி இருக்கிறாராம், அதிக வீடுகள் இல்லாத அமைதியான ஏரியாவில் வீடு இருப்பதால் அடிக்கடி பல நடிகைகள் வந்து போக சௌகர்யமாக இருக்கிறதாம் ஹி .. ஹி... உண்மையில் பெயருக்கேற்ற குணம்தான்



" படித்த உடனே புரிந்து விட்டது ரக்‌ஷிதாவிற்கு இது கிருஷ்ணகாந்த் பற்றிய கிசுகிசுதான் என்று. எப்படி தான் உடனே மோப்பம் பிடித்து விடுகிறார்களோ இந்த பத்திரிக்கைகாரர்கள். அவன் குடி வந்து ஆறு மாதம் ஆகிறது. இதில் அவன் இருப்பது சொற்ப நாட்களே மாதத்தில் ஒரு இரண்டு நாள் என்று தான் இருப்பான். அதையும் அவனுடைய காரை வைத்து தான் ரக்‌ஷிதா தெரிந்து கொள்வாள். மற்றபடி அவள் அவனை பார்க்கும் சந்தர்ப்பம் அமையவேயில்லை. பார்த்தால் அன்று நடந்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொள்வாள்.



அன்று சதீஷின் பிறந்த நாள் வீட்டில் சொந்தம், நட்பு என்று ஒரே கூட்டமாக இருந்தது.



"அண்ணி தனுவை பாத்தீங்களா?" சதீஷின் குரலுக்கு அவனை பாரமலே



"ரக்‌ஷிதாகிட்ட கேளேன்டா" என்ற பதில் வந்தது.



“ஏய் ரக்‌ஷி... தனு எங்க? ரொம்ப நேரமா ஆளையே காணும் அத்தை கேட்டு கிட்டே இருக்காங்க பார் " ரக்‌ஷிதாவை நெருங்கினான்.



“இங்க தானே விளையாடினா? ஒருவேளை மாடிக்கு போய்ட்டாளோ! கொஞ்சம் பார்க்க முடியுமா சதீஷ் ?" என்ற அவளின் கேள்விக்கு பதில் சொல்ல சதீஷ் அங்கு இல்லை. அவன் நண்பர்களுடன் அரட்டையில் இறங்கி விட்டான். வேறு வழி இன்றி அவளே மாடிப்படி ஏறினாள்.


மாலை வேளையில் பால்கனியில் அமர கிருஷ்ணகாந்திற்கு மிகவும் பிடிக்கும். அப்படியே தனிமையில் நேரம் போவதே .தெரியாமல் அமர்ந்திருப்பான்.



அப்படி அவன் தனிமையில் புகைபிடித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் பக்கத்துவீட்டு மாடியில் நிழலாடியதை கவனித்தான் அந்திசாயும் நேரத்தில் பார்வை சரியாக இல்லாததால் சற்றே உற்று பார்த்தான்.



அந்த அழகிய பெண் குழந்தை, நான்கு வயதே இருக்கும். மதியம் அவன் காரை விட்டு இறங்கும் பொழுதே பார்த்தான் ரோட்டில் பந்து விளையாடிக் கொண்டிருந்தது. அப்போதே கியூட் சிண்டர்லா என்று மனதில் நினைத்துக் கொண்டான். இப்போது அதே குழந்தையை பார்க்கும் பொழுது அதனுடன் பேசும் ஆவல் தானாகவே வந்தது. அதுவும் பேபி பிங்க் கலர் ஃபிராக்கில் கொழு கொழு என மெழுகு சிலை போல் இருக்கும் குழந்தையை பார்க்க யாருக்கு தான் ஆசை வராது. நடிகனாக இருந்தால் என்ன கிருஷ்ணகாந்த் மட்டும் இதற்கு விதிவிலக்கா?



கையிலிருந்த சிகரெட்டை ஆஷ்ட்ரேயில் அழுத்தி விட்டு எழுந்தவன் குழந்தையை நோக்கி குரல் கொடுத்தான்.



"ஹாய் பிங்கி ... உன்... உன்னைத்தான் இந்தப் பக்கம் வாயேன் ... உன் டிரஸ் ரொம்ப நல்லா இருக்கு. ஆனா இருட்டுல சரியாவே தெரியல இப்படி வாரியா?" கொஞ்சும் குரலில் சிறுமியை அழைத்தான் கிருஷ்ண காந்த.



குரல் வந்த திக்கை குறி வைத்து மெல்ல நடந்து வந்தது அந்தக் குழந்தையின் அசைவிற்கேற்ப கிச் ... கீச்... என்ற ஒலி அதன் காலில் இருந்து வந்து மேலும் அழகு சேர்த்தது. பால்கனியை ஒட்டிய கைப்பிடிச்சுவர் அருகே வந்து விட்டது குழந்தை. அதன் தலை மட்டும் கைபிடிக்கு மேல் தெரிந்தது.



"நி... நில்லுமா ... ரொம்பவும் ஒட்டி வந்துடாதே கொஞ்சம் உள்ளேயே நில்லு" என்று எச்சரித்தான் கிருஷ்ணகாந்த்



அவனை உற்று பார்த்த சிறுமி "ஐய் ... நீங்க டிவில வர்ற அங்கிள் தானே! நான் பாத்திருக்கேன். நீங்க டிவிக்குள்ளேந்து எப்போ வந்தீங்க?" என்று வெகுளியாய் கேட்க கலகலவென சிரித்து விட்டான் கிருஷ்ணகாந்த உடனே கேலியாய்.



"மதியம் வந்தேன் கண்ணம்மா?"



"ச்...சே... என் பெயர் பிங்கியும் இல்லை கண்ணம்மாவும் இல்லை" அழகாய் தலையில் அடித்துக் கொண்டது குழந்தை.



"ஓ.. அப்படியா அப்போ உன் பெயர் தான் என்ன பாப்பா?"



"என் பெயர் தன்வன்யா"



"சூப்பர்"



" பெட் நேம் கூட இருக்கே!"



" ஓ... அப்படியா?



“தனு தான் என்னுடைய பெட் நேம். "



"அழகான பெயர் தான் உனக்கு, நீ ரொம்ப அழகாவும் இருக்க”



"தேங்க்யூ அங்கிள்"


"சரி உனக்கு இந்த டிரஸ் யார் வாங்கிக் கொடுத்தா?"


"அம்மா?"



"அம்மா எங்க?"



"கீழே இருப்பாங்க"



"ஒரு அழகான குட்டி பாப்பா இப்படி தனியா மாடிக்கு வரலாமா?"



"ஏன் ? எனக்கு என்ன பயம்? என் பாட்டி சொல்லுவாங்க தனு குட்டிக்கு ரொம்ப தைரியம், இந்த ரக்‌ஷிதா தான் பேய்க்கு பயப்படுவான்னு"



" ரக்‌ஷிதாவா?..."



சிறுமி பதில் கூறு முன் மாடியின் ஒரு கோடியில் "தனு" என்ற குரல் கேட்டது.



"இதோ வந்தாச்சு" என்று சிரித்தது குழந்தை, தனுவை நோக்கி ரக்‌ஷிதா வரும் பொழுதே கிருஷ்ணகாந்தை பார்த்து விட்டாள் இருப்பினும் தனுவை பார்த்து.



"ஏய் தனு இங்க என்னடி வாயடிச்சிகிட்டு இருக்க கீழ அத்தை பாட்டி தேடறாங்க பார் வா போகலாம்"



"நான் வரலை நீ போ ரக்‌ஷிதா ?"



"ஏய் எத்தனை முறை சொல்வது பெயர் சொல்லி கூப்பிடாதேன்னு"



"அப்படி தான் கூப்பிடுவேன் நீ என்ன செய்வ?"



"ம்... உதைப்பேன்...வாயை பார் உன் பாட்டிகள் செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்கிறார்கள்."



"வாய் உன்னை பார்த்து தான் வந்தது என்று பாட்டி சொல்வார்களே நீ என்னடாவென்றால் பாட்டி மேல் பழி போடுகிறாய்"


"ஏய் வாலு கீழே போ" லேசான அதட்டலுடன் கூறவே குழந்தை உடனே செயலில் இறங்கியது.



"ஓ.கே. டி.வி. அங்கிள் நாம நாளைக்கு பாக்கலாம். இல்லன்னா என்னை அடிப்பா" கொலுசு சத்தமிட கீச்கீச் என்று ஓடி மறைந்தாள் தன்வன்யா.


அவள் சென்றதும் கிருஷ்ணகாந்தின் பக்கம் திரும்பினாள் ரக்‌ஷிதா. ஒரு இளநகையுடன் அவன் தனுவையே பார்த்துக் கொண்டிருந்தது தெரிந்தது.



“ரொம்பவும் அறுத்துட்டாளா சார், கொஞ்சம் வாய் அதிகம்"



"அவளுக்கு மட்டும்தானா?" விஷமமாய் அவளை பார்த்தான்.



உடனே முகம் சிவந்து விட்டது. ரக்‌ஷிதாவிற்கு அன்றைக்கு நடந்ததை நினைத்துத் தான் பேசுகிறான் என்று புரிந்தது.


“வந்து... வந்து.. ரொம்பவும் சாரி சார் அன்றைக்கு ஏதோ கோவத்தில் ..சாரி சார்!" தட்டு தடுமாறி பேசினாள்.



“கூல்.. டவுன்.. சொல்லப்போனால் நான் தான் உங்களிடம் சாரி கேட்க வேண்டும். என் மாமா அப்படி பேசி இருக்கக் கூடாது தான் " அவன் முடிப்பதற்கும் செல்போன் சிணுங்குவதற்கும் சரியாக இருந்தது.



"எக்ஸ்கியூஸ் மி" என்றவன் போனை காதுக்கு கொடுத்தான்.



“யாரு கமாலிகா தானே, நான் தான் வரச் சொன்னேன் உள்ளே அனுப்புங்க" என்று தொடர்பை துண்டித்தான்.



பேச்சின் சாராம்சத்தை புரிந்து கொண்டாள் ரக்‌ஷிதா. அதற்கு கிசுகிசுவும் கை கொடுத்தது. உடனே அருவருப்பில் முகம் சுருங்கிவிட்டது. அவன் பேசுமுன்



“ஓகே சார் யூ கேரி ஆன் நான் கிளம்பறேன்" பதில் எதிர்பார்க்காமல் வேகமாக சென்று மறைந்து விட்டாள். ஆனால் அந்த "ஹாய் கிரிஷ்" என்ற கொஞ்சும் பெண் குரல் காதில் கேட்டுவிட்டது.



“ச்சீ... என்ன மனிதர்கள்? பின்... சினிமா என்றாலே இதெல்லாம் சகஜம் தானே. இருப்பினும் பக்கத்து வீட்டிலேயே தப்பு நடக்கும் பொழுது மனம் ஒப்பவில்லை. அருவருப்பாய் இருந்தது. ஆனால் அந்த அருவருப்பு நிலைக்கவில்லை. காரணம் சதீஷின் பிறந்த நாள் விழாவின் ஆர்ப்பாட்டத்தில் அவள் கிருஷ்ண காந்தை மறந்தே போனாள்".
அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
3

பாக்கி பாட்டி...சீக்கிரம் கொடு டிவி அங்கிள் மறுபடி வெளியே போயிட போறாரு"



"இருடி வரேன்... வர வர உன் அடம் அதிகமாயிடிச்சு, "



"சரி சரி கொடுங்க" என்று அவள் பிடுங்கிய தட்டில் லட்டு, குலோப்ஜாமுன், அதிரசம், முறுக்கு, ஓட்டடை, மிக்சர் என்று பலகாரங்கள் அடுக்கப்பட்டிருந்தன அதன் மேல் ஒரு இலையை கவிழ்த்து மூடினார் பாக்கியா.



"கெட்டியா பிடி தனும்மா கீழே போட்டுடாதே ஜாக்கிரதை. ரொம்ப நேராமல்லாம் இருக்கக்கூடாது, கொடுத்துட்டு ஒடி வந்துடனும் அவங்கல்லாம் சினிமாகாரங்க நிறைய வேலை இருக்கும். நாம தொந்தரவு பண்ணக்கூடாது சரியா?"



அப்போது அங்கு வந்தாள் மைதிலி அந்த வீட்டின் மருமகள், "ஏன்.. அத்தை அந்த சினிமா நடிகருக்கு பலகாரம் கொடுக்கலைன்னு யார் அழுதா ? இவதான் கேட்கிறான்னா நீங்களும் அனுப்பறீங்க"



"என்னம்மா செய்ய அடம் பிடிக்கறாளே, "



"நீங்கள் செல்லம் கொடுத்தே அவளை கெடுக்கிறீங்க" சிடுசிடுத்துவிட்டு உள்ளே சென்று விட்டாள் மைதிலி.



கிருஷ்ணகாந்த் வீட்டில் இருக்கும் பொழுது சிலசமயம் தன்வன்யா அவனுடன் விளையாடுவது சகஜமாகி இருந்தது. எனவே அவள் தட்டுடன் அசைந்து வருவதை பார்த்த வாட்ச்மேன் ஒடிச் சென்று தட்டை வாங்க முயற்சித்தார். ஆனால் தன்வன்யா மறுத்துவிட்டாள்.



"நான் டி.வி அங்கிள்கிட்ட தான் தருவேன் " மழலையில் பிடிவாதம் பிடித்தாள்.



"சரி கண்ணுவா... கை தாங்கலாய் அவளையும், தட்டையும் பிடித்தபடி உள்ளே சென்றார் வாட்ச்மேன் சதாசிவம், வாயிலை அடைந்ததும் " ஒரு நிமிஷம் பாப்பா" என்றவர் கிருஷ்ணகாந்திற்கு தகவல் கொடுத்து விட்டு பின் சிறுமியை உள்ளே அழைத்துச் சென்றார். "



"அடடே... தனுபாப்பாவா... வா... வா... நானே உன்னை பார்க்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன் நீயே வந்துட்ட... என்னம்மா... இது தட்டுல?" என்றவனின் நீட்டிய கையில் தட்டை வைத்தாள் தன்வன்யா.



இலையை அகற்றிவிட்டு பார்த்தவன் விழி விரிய சிறுமியை பார்த்தான்.



"எல்லாம் தீபாவளி பலகாரம் அங்கிள், நீங்க தான் தீபாவளிக்கு இங்க வரவே இல்லையே அதான் இப்போ கொண்டு வந்தேன், சாப்பிடுங்க."



ஏனோ மனம் நெகிழ்ந்தது. இதுவரை இப்படி யாரும் அவனுக்கு பலகாரம் கொடுத்தது இல்லை. சிலர் காஸ்ட்லியான ஸ்வீட் பாக்ஸில் கொடுப்பார்கள் அவ்வளவே. இப்படி வீட்டில் தயாரித்த பொருட்களை தட்டில் கொடுப்பது வித்தியாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்பதை உணர்ந்தான்.



இப்படி பலகாரங்களை தட்டில் பார்க்கும் பொழுதே நாக்கு ஊறியது கிருஷ்ணகாந்திற்கு உடனே ஒரு அதிரசத்தை எடுத்து வாயில் வைத்தான் அப்படியே அது வாய்க்குள் கரைவதை உணர்ந்து பிரமித்தான்.



“வாவ்.. பெண்டாஸ்டிக் சூப்பரா இருக்கு, இது யார் செய்தது தனு?"



"எங்க மம்மியும், பாட்டியும் தான் "



ஏனோ அவனுக்கு ரக்‌ஷிதாவின் நினைவு வந்ததது. "



"உன் அத்தை ஒன்றும் செய்யவில்லையா?"



"ம்...ஹும் அத்தைக்கு சமைக்கவே தெரியாது. அப்படியே சமைத்தாலும் வாயில் வைக்க முடியாது "



"ஓ...." இந்த காலத்து பெண்கள் யார் தான் சமைக்கிறார்கள். மனதில் நினைத்துக் கொண்டான்.



அவன் ஆசையாக சாப்பிடுவதை பார்த்த தன்வன்யா" அங்கிள், ஆன்ட்டி எங்கே காணவே காணும்."



"எந்த ஆன்ட்டி தனு" குழப்பமாய் கேட்டான்.



"அதான் அங்கிள் நேத்து டிவில் உங்களுக்கும் ஒரு ஆன்ட்டிக்கும் கல்யாணம் ஆச்சே, அந்த ஆன்ட்டி?"



அவன் கேட்பது புரிய, தாங்க மாட்டாமல் சிரித்து விட்டான் கிருஷ்ணகாந்த் முடித்ததும்.



"ஓ ... அவங்களா? அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்காங்க. "



“ஒ.கே. அங்கிள் நான் கிளம்பறேன் பாட்டி திட்டு வா"



"ஓ.கே. க்யூட்டி, அங்கிளுக்கு ஒரு கிஸ் குடு" ஆசையாய் அவள் புறம் கன்னத்தை நீட்ட உடனே இதழ் பதித்தது குழந்தை.



எத்தனை கோடி பணம் இருந்தும் புகழ் இருந்தும் என்ன? இதில் கிடைக்கும் இன்பத்திற்கு நிகர் எதுவும் இல்லை. மாமாவிற்கு என் திருமணத்தில் அத்தனை உடன்பாடில்லை. என் தொழிலுக்கு அது சரி வராது என்று ஒரே போடாய் போட்டு விடுவார். ஏன் எனக்குமே தான் திருமணத்தில் உடன்பாடில்லை. எத்தனையோ பெண்களுடன் பழகுகிறேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எல்லை மீறுவதும் சகஜமாகி விட்டது. ஆனால் ஏனோ யாரையும் வாழ்க்கை துணையாக நினைக்க மனம் ஒப்பவில்லை. சட்டென ரக்‌ஷிதா மனதில் தோன்றி மின்னல் நேரத்தில் மறைந்தும் விட்டாள்.



சிலர் அவ்வப்போது கேட்பதுண்டு, "என்ன கிரிஷ் வயசு ஏறுதே மேரேஜ் பிளான்சே இல்லையா? அதுதான் பதினைந்து வருடமாக சினிமா உலகையே கலக்குகிறாய், திருமணம் செய்ய பெண்ணா கிடைக்கவில்லை?" இன்னும் சிலர் " நடிகைகள் தான் திருமணம் என்றால் பயப்படனும் கிரிஷ். எந்த ஹீரோவுக்கும் கல்யாணம் செய்துகிட்டா மௌசு குறைவதில்லை. " ஆனால் எல்லோர் பேச்சுகளுக்கும் ஒரு புன்னகை மட்டுமே பதிலாக வரும் கிருஷ்ணகாந்திடமிருந்து.



ஆனால் கொஞ்ச நாட்களாக மனதில் ஒரு மாற்றம். அவன் மனம் வெளி உலகத்திற்கு தெரியாவிட்டாலும் அவன் ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான், அது ரக்‌ஷிதாவின் பால் அவன் மனம் சாய்கிறது என்பது.



முதல் நாளே அவளது துடுக்கான பேச்சு அவனை ஈர்த்தது எப்போதும் அவனைத் தேடி பெண்கள் கூட்டம் ஓடி வந்து ஆட்டோகிராப் கேட்டு தான் அவன் அறிந்திருக்கிறான். முதல் முறையாக ஒரு பெண், முகத்திற்கு நேரே திட்டுவதை விசித்திரமாக தான் அவன் பார்த்தான்.



அந்த வீடும் அவனுக்கு, பிடித்து விடவே அதை வாங்கியும் விட்டான். அவனின் கோடம்பாக்கத்து வீட்டில் எப்போதும் கூட்டம், இரைச்சல், ரசிகர்மன்றம், நற்பணிகள், கால்ஷீட் பிரச்சனை என்று ஒரே அமிளி துமிளியாய் இருக்கும். அவன் நிம்மதியாய் இருக்க முடிவதில்லை. அதனாலேயே, அப்போதே அவன் சில விஷயங்கள் முடிவு செய்து விட்டான் .அந்த ஓய்வு பங்களாவில் ஒரு வாட்ச்மேன், ஒரு வேலையாள், இருவர் இருந்தால் போதும். அதுவே கணவன் மனைவியாக இருவர் கிடைக்கவும் அவன் குதூகலமாகிவிட்டான். வேறு யாரையும் அவன் அனுமதிப்பதில்லை. எல்ல விஷயங்களும் கோடம்பாக்க வீட்டிலேயே முடிக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறி விட்டான் .



அவன் அமைதிக்காகவும் ஓய்வுக்காகவும் தேர்ந்தெடுத்த வீட்டில் அவன் தேடியது கிடைக்கவும் செய்தது. ரக்‌ஷிதா மன்னிப்பு கேட்டு மறுபடி பேசும் வரை. பிறகு ஏனோ அவன் அமைதி எங்கோ தொலைந்துவிட்டது என்றே அவனுக்கு தோன்றியது. அன்று வந்த கமாலிகாவை கூட உடனே அவன் அனுப்பி விட்டான். அவன் அங்கு தங்கும் நாட்களில் எப்போதாவது மாடியில் ரக்‌ஷிதாவை பார்த்து சினேகமாய் பேச முயல்வான். ஆனால் அவள் அதிகம் பேசாமல் கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்து விட்டுச் சென்று விடுவாள். இப்படி நாட்கள் மெல்ல நகர்கையில் தான் ரக்‌ஷிதாவை பற்றி அவன் எதிர்பாராத செய்தி ஒன்று கிடைத்தது.
அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
4
மூன்று மாதம் கடந்து விட்டது ரக்‌ஷிதாவை பார்க்காமல், வெளிநாட்டில் சூட்டிங் நடந்ததால் அவளை சுத்தமாக பார்க்க முடியாமல் போனது. இன்று எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற நினைப்பில் ஏர்போட்டிலிருந்து நேரே ஓய்வு பங்களாவிற்கு வந்து விட்டான் கிருஷ்ணகாந்த்.

நேரம் இரவு 7.00 என்று காட்டியது சுவர் கடிகாரம். இந்த நேரத்தில் ரக்‌ஷிதாவை பார்க்க முடியாது என்று தோன்றவும் லேசான ஏமாற்றம் மனதில் படர்ந்தது. இருப்பினும் பால்கனியில் உள்ள சோபாவில் அமர்ந்து கொண்டான். அவன் சிந்தனை எங்கெங்கோ சென்றது. " இப்போது மனதில் தோன்றிய இந்த நேசம் உண்மையா அல்லது கானல் நீரா? ஒரு நடிகனான என் நேசத்தை அவள் புரிந்து கொள்வாளா? முதலில் என் காதலை வெளிப்படுத்தும் தைரியம் எனக்கு இருக்கிறதா? எத்தனையோ படங்களில் கொஞ்சம் கூட தயங்காமல் காதல் வசனம் பேசிய எனக்கு என் மனதில் தோன்றிய காதலை வெளிப்படுத்தும் சக்தி இல்லையே! சினிமாக்காரன் என்று மறுத்து விடுவாளோ? ஒரு வேளை நான் அவனிடம் நடிக்கிறேன் என்று சிரிப்பாளோ? என் இதயம் நடிக்கவில்லை என்று எப்படி புரியவைப்பேன் ... அவன் சிந்தனை கலைந்தது. அதன் காரணம் ஒரு சன்னமான விசும்பல் ஒலி என்பது அவனுக்கு தாமதமாக தான் புரிந்தது. சத்தம் வந்த திக்கை யூகிக்கையில் அது பக்கத்து வீட்டு மாடியாக இருந்தது. இன்னமும் காதுகளையும் கண்களையும் கூர்மைபடுத்திப் பார்த்தபோது. ஒரு மூலையில் மடிந்த கால்களுக்குள் முகம் புதைத்து அழுது கொண்டிருப்பது... ஆங்... ரக்‌ஷிதா தான்... நிச்சயமாய் ரக்‌ஷிதாதான் என்பது புரிந்தது. இவள் ஏன் இங்கு தனியே அழுது கொண்டிருக்கிறாள் என்னவென்று கேட்கலாமா? யோசித்தவன் உடனே அதை மாற்றிக் கொண்டான். தான் அழுவதை யாரும் பார்க்க கூடாது என்று தான் மாடி இருட்டில் அழுகிறாள். அதை ஏன் நான் தெரிந்து கொண்டது போல் காட்டி அவளை அவமானப்பட வைக்க வேண்டும்; நினைத்தவன் வீட்டினுள் சென்று விட்டான். ஆனால் மனம் தான் நிம்மதி இன்றி தவித்தது. அவளின் அழுகை அவனை ரொம்பவே பாதித்தது. ஏனோ அவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்து ஆசுவாசப்படுத்த மனம் ஏங்கியது. தூக்கம் வராமல் தவித்தான்.
காலை எழுந்த உடனே போர்டிகோவிற்கு வந்து விட்டான். அவன் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தன்வன்யா மாடியில் விளையாடி கொண்டிருந்தாள். மைதிலி துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள். மைதிலி முடிக்கும் வரை காத்திருந்தான் கிருஷ்ணகாந்த். அவள் படிகளில் இறங்கிய அடுத்த நொடி.

"ஏய் தனு" ... இங்க வா என்று செய்கை செய்தான்

"ஐ... டி வி. அங்கிள் எங்க ரொம்ப நாளா காணோம் டிவில தான் அப்பப்போ பார்க்க முடியுது."

"ஊருக்கு போயிருந்தேன் குட்டிம்மா"

"ஓ....ஓகே..."

"நீ அங்கிள் வீட்டுக்கு வருகிறாயா? நாள் ஊரிலிருந்து நிறைய சாக்லேட் வாங்கி வந்திருக்கிறேன்"

"அம்மா இருக்காங்களே திட்டுவாங்க"

"திட்டினா நான் பேசிக்கிறேன். நீ வா?"

"சரி இருங்க வரேன்" என்ற தன்வன்யா அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு பெரிய சாக்லேட்டுடன் கிருஷ்ணகாந்தின் மடியில் இருந்தாள்.

"அங்கிள் சாக்லேட் சூப்பர் "

"தேங்யூ" அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை அமைதி காத்தவன்

"நேற்றைக்கு உன் அத்தை ஏன் ரொமப் நேரம் அழுதாங்க?"

"அத்தையா !!! அத்தை அழுது நான் பார்த்ததே இல்லையே!"

"இல்லை ... மாடியில் ... "

" மாடியிலா ...?" குழப்பமாய் விழித்தாள் தனு.

"சரி விடு தனு" என்றவன் பேச்சை மாற்ற" உன் அப்பா இன்றைக்கு லீவா? வீட்டில் பார்த்தேன்."

"அ.. அப்பாவா ?" இன்னமும் அதிகமாய் விழித்தது குழந்தை.

"அதான் தனு, வாசலில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தாரே" எடுத்துக் கொடுத்தான்.

"ஓ... அவரா .. அவர் என் மாமா, அனுமந்தன் மாமா !!!"

"எ... என்ன மாமாவா?!!!"

"ஆமாம் அங்கிள் "

"அப்போ காலையில் துணி உலர்த்தியது?"

"மைதிலி அத்தை"

"நா உலர்ந்துவிட்டது. கிருஷ்ணகாந்திற்கு"

"அ... அப்... அப்போ ... ரக்‌ஷிதா ?!"

"என் மம்மி"

சகலமும் நடுங்கிவிட்டது அவனுக்கு. இதயம் ஒரு முறை நின்று பின் துடித்தது. சில வினாடிகள் வார்த்தை வரவே இல்லை. சக்தியை ஒன்று திரட்டி பேச முயற்சித்தான்

"உன்... உ... உன் டாடி எங்கே ?"

"அ... அப்பா சாமிக்கிட்ட இருக்காரு, அப்படி தான் ரக்‌ஷிதா சொல்லுவா. ஒன்னு தெரியுமா அங்கிள் எங்க அப்பா ஃபோட்டோக்கு இன்றைக்கு புது மாலை எல்லாம் போட்டு அம்மா நாலு வருஷம் ஆகுதுங்கிறா. அப்போ ... அப்போ என்னை வேறு கட்டிப் பிடித்து ஒரே அழுகை பார்க்கவே பாவமா இருந்திச்சு"

அவன் கேட்கிறானா என்று கூட பார்க்காமல் குழந்தை தன் பாட்டிற்கு பேசிக்கொண்டே இருந்தது.

கிருஷ்ணகாந்தினுள் பல்லாயிரக்கணக்கான எரிமலைகள் வெடித்து சிதறின. முதன் முதலில் துளிர்த்த காதல் அவனுக்குள்ளே பட்டு போய்விட்டது.

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
5

“மம்மி" ரக்‌ஷிதா தோள்களை பிடித்து உலுக்கினாள் தன்வன்யா.


"..."


"மம்மி... "


பதில் இல்லை

“ரக்‌ஷிதா"

சட்டென நினைவிற்கு வந்தவளாக.

"எத்தனை முறை சொல்வது பெயரை சொல்லாதே என்று "

"பின்னே மம்மின்னு கூப்பிட்டா நீங்க பார்க்கவே இல்லை...அதான்" என்ற தனுவின் பாவமான முகம் அவளின் கோபத்தை குறைத்தது.

"சரி --- என்ன ... சொல்லு"

"ரொம்ப நாளா டிவி அங்கிளை காணவே காணும்மா எப்போ வருவார்?"

"என்ன செல்லம் - திடீர் என்று அவரை பற்றி கேட்கிறாய்"

"சும்மா தான் மம்மி..."

"சரி சரி ... ஹோம் வர்க் எல்லாம் எழுதிட்டியா?"

"ஓ... அப்பவே எழுதிட்டேனே"
"வெரி குட் .... எக்சாம் வரப்போகுது இந்த எக்சாம் முடிஞ்சதும் தனு பாப்பா ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் போகப் போறா. அப்புறம் படிக்க நிறைய இருக்கும். "

"நான் நல்லாவே படிப்பேன் மம்மி ... இப்பவே நான் தானே கிளாஸ்ல ஃபர்ஸ்ட்" பெருமையாய் ரக்‌ஷிதாவின் கன்னம் தொட்டு சொன்னது தனு.

இதை கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்த சதீஷ் தனுவை பின்புறமிருந்து தூக்கி சுற்றினான்.
"அதான் தனு பாப்பா கெட்டிகாரின்னு இந்த ஊருக்கே தெரியுமே" என்றவனின் கன்னத்தில் அவன் கேட்காமலே இதழ் பதித்தாள் தனு

ஏனோ ரக்‌ஷிதாவின் கண்கள் கலங்கியது. இதை பார்க்க பாலா இல்லையே. பழைய நினைவில் ஆழ்ந்து விட்டாள் ரக்‌ஷிதா.ஆனால் அந்த நினைவு உடனே கலைக்கப்பட்டது.
மைதிலி தான் கத்திக் கொண்டிருந்தாள். " இப்படி அப்போ அப்போ மூலையில் உட்கார்ந்து அழுதுகிட்டிருந்தா இந்த குடும்பம் விளங்குமா? தரித்திரம் தரித்தரம் எத்தனை முறை சொன்னாலும் உறைப்பதில்லை. இவ தரித்திரம், ஒருத்தனை மூனே மாசத்துல முழுங்கிட்டா இப்போ அதே தரித்திரம் தான் இந்த குடும்பத்தையும் வாட்டுது. எல்லாம் என் நேரம். மூத்த மருமகளா வந்து பொறுப்பா நாத்தனாரை கல்யாணமும் செஞ்சு வச்சேன், ஆனா எரிஞ்ச பந்து சுவத்துலபட்டு வேகமா திரும்பற மாதிரி மூணே மாசத்துல புருஷனை வாயில் போட்டு முழுங்கிட்டு முண்டச்சியா வந்து நின்ன. சரி காதும் காது வச்சா மாதிரி வேற கல்யாணம் பண்ணிடலாம்னு பார்த்தா அப்பதான் வாந்தி எடுத்து கிட்டு மயங்கி விழுந்த. அதை கலைக்க சொன்னாலும் கேட்டுத் தொலையல. இப்ப புள்ளையோட இருக்கிற உன்னை எவனும் கட்டிக்க வரமாட்டேங்கிறான்.கடைசி வரைக்கும் இங்கையே இருந்து என் கழுத்தை அறு போதாததுக்கு அடிக்கடி அழுது என்னை மேலே மேல டென்ஷனாக்கிற... ஒரு நிம்மதி உண்டா இந்த வீட்டுல. எனக்கும் ஒரு பையன் இருக்கான். நான் அவனையும் பார்க்கனும். சொத்து சேர்க்கனும். இப்படி வடிச்சுகொட்டவே எல்லாம் தீர்ந்து போனா, நான் எப்படி என் குடும்பத்தை பார்க்க ! மூக்கை சிந்தி புடவையில் துடைத்துவிட்டு அங்கலாய்த்துக் கொண்டே சென்றாள்.

இடையே பேச முற்பட்ட பாக்கியமும் மகளின் கண்ணசைவில் நிறுத்திவிட்டு ஒரு ஓரமாய் கண்ணீரை உகுத்துக் கொண்டிருந்தாள்.
இது ரக்‌ஷிதாவிற்கு பழகிவிட்டது. மாத கடைசியில் எல்லா மாசமும் வரும் பேச்சு தான். அப்போது தான் ரக்‌ஷிதாவின் சம்பளக்கவர் எந்த சேதாரமும் இல்லாமல் மைதிலியின் கைக்கு வரும் என்பது அவளின் கணக்கு. இந்த வசவு இல்லை என்றாலும் ஒவர்டைம் தவிர தன் சம்பளம் மொத்தத்தையும் அண்ணி கையில் தான் கொடுப்பாள் ரக்ஷிதா. ஆனால் எப்போதும் அவளிடம் ஒரு பயத்தையும், அவளின் உரிமையையும் நிலைநாட்ட இந்தகூச்சல்கள் அவ்வப்போது நடைபெறும்.
மைதிலி கண்ணலிருந்து மறைந்ததும்
"ச்சே... என்ன பெண் இவள், எப்போதும் நாவில் தேள் கொடுக்கை சுமந்து கொண்டு, வெளியிலிருந்து வந்த அவள் உரிமைக்காரியாம்! இந்த வீட்டிலேயே பிறந்து வளர்ந்த நீ ஒரு பெரும் சுமையாம்" என்ற தாயை பார்த்து சிரித்த ரக்‌ஷிதா...
“அப்படித்தானே அம்மா நம் மரபு சொல்கிறது. வீட்டில் பிறந்த பெண்கள் அந்த வீட்டிற்கு சொந்தமில்லை. எங்கேனும் போய் வாழ்ந்தால் வாழலாம், அழிந்தாலும் அழியலாம், கொடுமைகளையும் அனுபவிக்கலாம், அடிஉதைகளையும் வாங்கலாம். ஆனால் மறுபடி பிறந்தகம் வரக்கூடவே கூடாதாம். வந்தால் இப்படித்தானாம். இதில் அண்ணியின் தவறு ஒன்றுமே இல்லை. ஆண் பெண் நியதிகளை வகுத்த முன்னோர்களின் பிழை. இதை இந்தநூற்றாண்டில் மாற்றுவது கடினம். அடுத்த நூற்றாண்டிலாவது நடக்கட்டும்" முடித்தவள் " ஆமாம் ... தனு எங்கே?" சுற்றும் முற்றும் பார்த்தாள்.
"அவளை சதீஷ் வெளியே தூக்கிக் சென்று விட்டான். இங்கே இருந்தால் இந்த குண்டோதரி அவளையும் சேர்த்து அல்லவா கரித்துக் கொட்டுவாள், இதை எல்லாம் பார்க்க என் தலையில் எழுதி இருக்கிறது பார். தேவைதான் " தலையில் அடித்துக் கொண்டு உள்ளே போனார் பாக்கியம்.
கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது ரக்‌ஷிதாவிற்கு" இது யார் செய்த பிழை" ஒரு நாள் வேலை முடிந்து மாலை வீடு திரும்பும் பொழுது வீட்டில் கூட்டம் இருந்து. புரியாமல் உள்ளே நுழைந்தால் அம்மா வேகமாக வந்து பின்பக்க வாயிலாக அவளை கூட்டிப் போய் முகம் கழுவ வைத்து அலங்காரம் செய்யச் சொல்லி காப்பித்தட்டை கையில் திணித்து, கொடுக்கச் சொல்லும் பொழுது தான் இது பெண் பார்க்கும் படலம் என்பதே ரக்‌ஷிதாவிற்கு விளங்கியது. நல்ல வேளை அவள் காதல் கத்தரிக்காய் என்று எந்த வலையிலும் விழவில்லை. அதனால் அந்த சம்பவத்தை தடையில்லாமல் ஏற்க முடிந்தது. மாப்பிள்ளை பெயர் பாலகிருஷ்ணன். தனியார் கம்பெனியில் நல்லவேலை ஒரே பையன். ஒரு தங்கை மட்டும் மாமனார் இல்லை மாமியார் மட்டும்தான். அதுவும் ஊரில் சொந்த வீட்டில். எந்த தடையும் இல்லாத வாழ்க்கை வாழலாம் என்று மற்றவர் கூறியதை ஏற்று பாலாவிற்கு ஒரு நல்லநாளில் கழுத்தை நீட்டினாள் ரக்‌ஷிதா

இருவர் பக்கமும் உறவினர் கூட்டம் அதிகமாக இருந்ததால், எடுத்த பதினைந்து நாள் விடுப்பும் விருந்துக்கே சரியாய் இருந்தது.அதனால் தேன்நிலவு கனவாகி விட்டது. இருவரும் வேலைக்கும் செல்ல ஆரம்பித்து விட்டார்கள். தனிமையில் அவர்கள் பேசிக் கொண்டது அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய பிறகு தான். ஆனால் அப்போதும் வயதின் மயக்கமே அதிகமாய் இருந்தது. காலையில் இருவரும் பிசியாக கிளம்பிக் கொண்டு இருப்பார்கள் பேசு நேரமேகிடைக்காமல் போனது.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்குள் அந்த விபத்துச் செய்தி ரக்ஷிதாவின் தலையில் இடியாய் விழுந்தது. அதில் இருந்து அவள் எழுவதற்குள் அடுத்த இடி,அவள் வயிற்றில் தனு பாலாவின் உயிர். ஏனோ அவள் மனதில், அவளின் தனிமை துயர் போக்கவே கடவுள் இந்த குழந்தையை கொடுத்தார் என்ற எண்ணமே இருந்தது. அதனால் தான் அண்ணியும் அண்ணனும் எத்தனை வற்புறுத்தியும் தன் முடிவில் உறுதியாய் நின்றாள். எவ்வளவு முயன்றும் கர்ப்பிணியான அவளை எந்த ஹாஸ்டலிலும் அனுமதிக்க மறுத்தார்கள். வேறு வழி இல்லாமல் அண்ணியின் வசவுகளை பொறுத்துக்கொண்டாள். இதோ இன்னமும் நான்கேமாதம் தான் பிறகு வேறு ஏதாவது ஒரு பள்ளியில் சேர்த்து விடலாம். குழந்தையை கிரச்சில் விட்டு விடலாம் என்ற முடிவுடன் தான் அவள் இருக்கிறாள். அதுவரை இந்த சொல் அம்புகளை தாங்கத்தான் வேண்டும் இப்படி நினைத்தவள் ஒரு பெருமூச்சுடன் தன் வேலையில் ஈடுபட்டாள்.
நாம் ஒன்று நினைக்க கடவுள் நிச்சயம் வேறு தானே நினைப்பார். இல்லையேல் கடவுளுக்கே இங்கு மதிப்பு குறைந்து விடுமே!

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
6

பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் தனு. வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தவள் ஏதேச்சையாக கிருஷ்ணகாந்தின் காரை பார்த்துவிட்டாள்.

"ஹய்யா ... பாட்டி டிவி அங்கிள் வந்திருக்காரா ?" பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த பாக்கியத்தை பிடித்துத் தொங்கினாள்.

"ஏன்டி இந்த குதிகுதிக்கற நீ ஸ்கூலுக்கு போனதும் அவர் இந்தப் பக்கம் வந்தார்."

"ஓ..."வேறு எதுவும் கேட்காமல் அமைதியாகி விட்டாள் தன்வன்யா.

வீட்டினுள் நுழைந்ததுமே யூனிபார்மை கூட மாற்றாமல் வேகமாக ஓடி ஒரு பஞ்சு, ஒரு பேண்டேஜ், டின்சர் என ஒரு முதலுதவி மாக்சையே எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினாள் தன்வன்யா.

"ஏய் தனு ட்ரஸ் கூட மாத்தாம எங்கடி போரே கத்தியபடி பின்னே வந்தார் பாக்கியம்.

"இரு பாட்டி வரேன் ..." என்றவன் வேறு எதுவும் பேசாமல் கிருஷ்ணகாந்தின் வீட்டிற்குள் நுழைந்தாள்.

"தனும்மா சார் தூங்கிறாரேமா நீ அப்பறமா வரியா?" மென்மையாக பேச்சு தந்தார். வாட்சிமேன் சதாசிவம்.

"இல்ல தாத்தா அங்கிளுக்கு கால்ல அடிபட்டிருக்கு அதான் மருந்து எடுத்துட்டு வந்தேன். அவர் தூங்கட்டும் நான் மருந்து மட்டும் போட்டுட்டு போயிடறேன் பிளீஸ்".

இப்படி கொஞ்சும் மழலையை எப்படி தடுப்பது. இருப்பினும்

"அடிபட்டிருக்கா?... அதெல்லாம் ஒன்னும் இல்லையே கண்ணா தாத்தா பார்த்தேனே. "

"நீங்க சரியா பார்த்திருக்க மாட்டீங்க,ப்ளில் தாத்தா வாங்க - சத்தம் போடாம மருந்து போட்டுட்டு வந்திடலாம்" தன் பிஞ்சு கைகளால் சதாசிவத்தின் கைபற்றி இழுத்தது குழந்தை.

வேறு வழி இல்லாமல் அவளுடன் நடந்தவர்.

"சரி பாப்பா, அங்கிள் ரூம்குள்ள போய் சத்தம் போடாம பாரு அவருக்கு அடிபடாம இருந்தா உடனே திரும்பிடனும் சரியா ?"

zசரி தாத்தா" என்று உடனே ஒப்புக் கொண்டாள்.

அவளை உள்ளே அனுப்பி விட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். சதாசிவம், உள்ளே சென்றவள் உடனே திரும்பி தன் பாக்சை திறந்து கொண்டு உட்கார்ந்து விட்டாள்.

"போச்சுடா தூக்கத்தில் எழுப்பினால் சார் கத்துவாரே" என்று பயந்து உள்ளே நுழைந்தார் சதாசிவம்.

நுழைந்தவர் ஆணி அடித்தார் போல் நின்னு விட்டார். காரணம் கிருஷ்ணகாந்தின் முட்டிக்கு கீழே ஒரு பெரிய கீறல் அதில் ரத்தம் உறைந்து இருந்தது சிறு வீக்கமும் தென்பட்டது. அவர் யோசிப்பதற்குள்.

தான் கொண்டு வந்திருந்த பாக்சிலிருந்த பஞ்சை எடுத்து டின்சரில் நனைத்து அந்த காயத்தின் மீது அழுத்தினால் தன்வன்யா.

வலி தாங்காமல் அலறிக் கொண்டு எழுத்தான் கிருஷ்ணகாந்த் , கோபத்தோடு எழுந்தவனின் முன் தன்வன்யா இருக்கவும் அவனின் கோபம் குறைந்துவிட்டது.

கலங்கிய கண்களுடன் "வலிக்குதா அங்கிள் ? நான் மருந்து போட்டுவிடுறேன் எல்லாம் சரி ஆகிடும் சரியா ? நீங்க படுங்க" என்ற தன்வன்யாவை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான். கண்கள் தானாக கலங்கி கட்டுக்கடங்காமல் வழிந்தோடியது. இதை பார்த்த சதாசிவமும் கலங்கி விட்டார்.

சில நேர உணர்ச்சிப் போராட்டத்திற்கும் பிறகு சுய உணர்விற்கு வந்தவன் போல தனுவிடம் விசாரித்தான்.

" எனக்கு அடிபட்டது உனக்கு எப்படி தெரியும் தனும்மா?"

“நான் தான் டிவியில் பார்த்தேனே, நேற்று அந்த வில்லன் பவானி உங்களை போட்டு ரொம்பவும் அடிச்சிட்டான் இல்ல, பாவம் அங்கிள் நீங்க கால் ஃபுல்லா ரத்தம். அதை பார்த்து நான் ரொம்ப அழுதுட்டேன். அப்புறம் அம்மா எழுந்து டிவிய அணைச்சுட்டாங்க. ஆமாம் அங்கிள் நீங்க தான் நல்லா ஃபைட் பண்ணுவீங்களே அந்த ஒல்லிகுச்சி பவானி கிட்ட போய் ஏன் அடி வாங்கினீங்க பாருங்க எப்படி வீங்கி இருக்குன்னு " அப்பாவியாய் பேசியபடி அவன் காயத்தில் டின்சர் தடவிய தனுவை பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.

ரக்‌ஷிதாவின் கடந்தகாலம் தெரிந்தபின் ரொம்பவே உடைந்து விட்டான் கிருஷ்ணகாந்த். வேலையில் கவனம் சிதறத்தொடங்கியது. எங்கே அந்த வீட்டிற்கு வந்தால் ரக்‌ஷிதாவை பார்க்க நேருமோ என்ற பயம். அப்படி அவன் பார்த்தால் நிச்சயம் அவன் மனதை அவளிடம் கூறிவிடுவான். பிறகு கன்னத்தில் அடி நிச்சயம் பெண்களின் எண்ணங்களே வேறு கல்லானாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன். வாழ்வு முழுமைக்கும் ஒரே திருமணம், மறுமணம் பற்றி பேச நினைப்பது கூட பாவம் என்பார்கள். இந்த நிலையில் இவன் ஏதேனும் உளறி வைக்க அவள் அவனை வெறுத்து ஒதுக்கி விட கடைசியில் ரக்‌ஷிதாவின் நட்பு கூட கிடைக்காமல் போய் விடுமோ என்றே பயந்து விலகி நின்றான்.

அன்று காலையில் ஒரு படப்பிடிப்பில் நீண்டிருந்த கம்பி ஒன்றில் மோதி விட்டான்.அது அவன் வலதுகாலை பதம் பார்த்துவிட்டது. உடனே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது அங்கே முதலுதவி செய்ய முன் வந்தவர்களை அகற்றிவிட்டு காரை எடுத்துக்கொண்டு நேரே வீட்டிற்கு வந்துவிட்டான். இடையில் ஒரு கிளினிக்கில் டிடி இன்ஜக்ஷன் மட்டும் போட்டுக்கொண்டான்.அந்த டாக்டர் தண்ணீரில் மட்டுமாவது சுத்தம் செய்து கொள்ளுங்கள் என்று வற்புறுத்தி சுத்தம் செய்யவைத்து அனுப்பினார். தையல் போடும் அளவிற்கு ஆழம் இல்லை என்றாலும் வீக்கம் அதிகமாக இருந்தது. களைப்பில் அப்படியே கண்ணயர்ந்துவிட்டான்.டின்சரின் எரிச்சலில் தான் எழுந்தான்.

தன்வன்யா படத்தில் பார்த்ததற்கும் காலையில் இவனுக்கு நடந்ததையும் வைத்து பார்த்தால் 'வாட் எ கோஇன்சிடன்ஸ்' என்றே வியக்க தோன்றியது.

இவன் யோசித்து முடிக்கையில் அவன் கால்களில். கட்டுபோடப்பட்டிருந்தது. சதாசிவத்தின் உதவியுடன்.

"ஓ.கே......டிரஸ்சிங் முடிஞ்சது. நீங்க தூங்கி ரெஸ்ட் எடுங்க அங்கிள்" என்ற தன்வன்யாவை ஆசையாக பார்த்தான்.

"தனும்மா....அங்கிள் கொஞ்ச நேரம் உன் மடியில் படுத்துக்கவா? நெஞ்சில் ரொம்ப பாரமா இருக்கு"

"ஓ படுத்துக்கோங்களேன்" என்றபடி தன் பிஞ்சு கால்களை நீட்டியது குழந்தை.

அதில் அழுத்தம் கொடுக்காமல் தலைசாய்ந்தான் கிருஷ்ணகாந்த். அனிச்சையாய் அவன் தோள்களை தட்டிக்கொடுத்தாள் தன்வன்யா.

‘சொர்க்கம் என்றால் இது தான் போலும்' என்று நினைத்தவனின் கண்கள் பனித்தன. இந்த குழந்தைக்கும் எனக்கும் என்ன பந்தம் இருக்கிறது? எனக்கு ஒன்று என்றால் துடிக்கும் ஒரு இதயம் இருப்பதே எத்தனை சுகமாய் இருக்கிறது? இத்தனை நாள் இருந்த வெறுமையும் தனிமையும் இந்த குழந்தையின் மடியில் தொலைந்துபோகிறதே. இந்த குழந்தைக்காக வேணும் ரக்‌ஷிதாவிடம் பேச வேண்டும்.

இப்படி யோசிக்கையில் அவனுக்கே சிரிப்பு வந்தது. முதலில் ரக்‌ஷிதாவை காதலித்து மணக்க விரும்பிய மனம்.அவள் வேறு ஒருவரின் இறந்தகால மனைவி என்று தெரிந்ததும் விலகியவன் இப்போது இந்த குழந்தையின் அன்புக்காக ரக்‌ஷிதாவை மணக்க விரும்புகிறான்.

அடுத்த நாள் விடியலின் பொழுது மாடியில் ரக்‌ஷிதாவை சந்தித்தான்.

இவனை பார்த்து சினேகமாய் புன்னகைத்தவள் " என்ன சார் அடிப்பட்டிருக்காமே தனு சொன்னாள் இப்போ எப்படி இருக்கு?"

"ம்....பரவாயில்லை . உங்கள் பெண்ணை அருமையாக வளர்த்திருக்கிறீர்கள். அன்பான மனம். அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம். இப்படி எல்லாம்"

"ஓ ......தேங்க்ஸ்......அம்மா சொன்னாங்க மருந்து பாக்ஸை எடுத்துட்டு வந்தாளாமே!"

"ஆமாம் .....இதோ டிரஸ்சிங் செய்திருக்கிறாள் பாருங்க" அவன் காலில் உள்ள கட்டை காண்பித்தான்.

"சரியான குறும்புக்காரி அவளுக்கு சின்ன அடிபட்டாலும்கூட ஊரை கூட்டிவிடுவாள். சும்மா வேணும் ஒரு மருந்து தடவி கட்டுபோட்டுடனும் இல்லையென்றால் வலிக்கிறது என்று குதிப்பாள். இப்போது அதை அப்படியே உங்களுக்கும் செய்துட்டா,

"இருக்கலாம் -- இந்த காலத்து பிள்ளைகள்தான் ரொம்பவும் ஷார்ப் ஆயிற்றே செய்வதை பார்த்தே கற்றுக்கொள்கிறார்கள்"

" உண்மைதான்" சிரித்தவள் நான் உங்களிடம் ஒன்று கேட்கலாமா?" என்று அனுமதி கேட்கவும் அவன் மனம் சில நொடிகளில் ஒரு ஈபில் டவரையே கட்டி விட்டது, வாய்தானாக" கேளுங்களேன்" என்றது.

" பெரிதாக ஒன்றும் இல்லை.இந்த ஹீரோக்கள் எல்லாம் எப்போதும் எஸ்கார்டுடன் தான் சுற்றுகிறார்கள், நீங்கள் மட்டும் ஏன் இப்படி தனியாய்?"

பூ..... ப் இவ்வளவுதானா? மனம் நினைத்தாலும் உதடுகள்" எனக்கும் எல்லாம் உண்டு தான். ஆனால் அவை எல்லாம் கோடம்பாக்கம் வீட்டோடு சரி. என் டிரைவரை கூட நான் இங்கு வர அனுமதிப்பதில்லை, மீடியாக்களையும் தான். அப்படியே யார் வந்தாலும் வாட்ச்மேன் அனுமதிப்பதில்லை. இப்போது நடிகைகளையும் அனுமதிப்பது இல்லை இன்னமும் தெளிவாக கூறவேண்டும் என்றால் நான் அழைப்பதில்லை" தன் மனதில் இருக்கும் அழகான கோலத்திற்கு ஒரு புள்ளிவைத்து விட்டு சந்தோஷம் அவனுள்

ஏனோ ரக்‌ஷிதாவிற்கு சமீபத்தில் படித்த பத்திரிக்கை கிசுகிசு நினைவு வந்தது.

'விஷ்ணுவின் அவதாரம் ஒன்றின் பெயர் முதல்பாதியும் மறுபாதி காந்தத்தையும் கொண்ட பிரபல நடிகர் இப்போது துணை நடிகைகளிடம் இருந்து விலகியே இருக்கிறாராம். புதிதாய், ஓய்வு நேரங்களில் அதிகம் காதல் பாடல்களை ரசித்து கேட்கிறாராம். அவருக்கும் காதல் நோய் வந்து விட்டது என்று அவர் நண்பர்கள் வட்டாரம் பேசிக்கொள்கிறதாம்......ஹி....ஹி..,

பக்கத்து வீட்டில் இருக்கும் இவளுக்கே அவன் இப்போது சொல்லித்தான் தெரிகிறது. ஆனால் பத்திரிகைகாரர்கள் எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறார்கள் இப்படி மனம் நினைக்க

'ஓ" என்ற ஒற்றை சொல்லை தவிர வேறு பதில் சொல்லத் தோன்றவில்லை.

தான் சொன்னதை அவள் புரிந்து கொண்டாளா என்ற ஆர்வத்தில் அவள் கண்களில் ஊடுறுவினான்.

ஆனால் அவளோ!

"ஓ.கே. சார் அம்மா தேடுவார்கள் பிறகு பார்க்கலாம்" ஒரு மென்புன்னகையுடன் விடை பெற்றாள்.



விடை கொடுக்க முடியாவிட்டாலும் தலைசாய்த்து ஆமோதித்தான்.


அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
7

நாட்கள் வேகமாக ஓடியது. கிருஷ்ணகாந்திற்கும் ரக்‌ஷிதாவிற்கும் இடையே ஓர் அழகான நட்பு மலர்ந்தது. அதைவிடவும் அதிகமான நெருக்கம் தனுவிடம் வந்துவிட்டது. அவன் எங்கு படப்பிடிப்பிற்கு சென்று வந்தாலும் தனுவிற்கு விளையாட்டு பொருளும் சாக்லேட்டும் வாங்காமல் வருவதில்லை.

முதலில் சிடுசிடுத்த குடும்பம் தனுவின் அடத்தினால் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது.சதீஷும் கிரிஷ்ஷுடன் நன்றாக பழகிவிட்டான். அதில் அவனுக்கு அதிக பெருமை வேறு.நண்பர்கள் வட்டத்தில் அவனுக்கு மதிப்பு கூடிவிட்டதாம் சில சமயம் அவன் நண்பர்களை கிருஷ்ணகாந்திற்கு அறிமுகம் செய்து வைத்தான்.

அது மழைக்காலம் என்பதால் சதா தூறல் போட்டுக் கொண்டே இருந்தது. வேலைக்கு கிளம்பிய ரக்‌ஷிதா மழை நிற்குமா என்ற பேராசையில் நின்று பார்த்ததில் நேரம் விரயமானது தான் மிச்சம் அலுவலகத்திற்கு செல்ல தாமதமாகிவிடுமோ என்ற பயத்தில் குடையை விரித்து வேகமாக சாலையில் இறங்கி நடந்தாள்.எத்தனை தான் கவனமாக குடையை பிடித்தாலும் அவள் நனையவே செய்தாள். பஸ் ஸ்டாப்பிற்கு விரைவதற்குள் இரண்டு முறை அவள் செல்போன் அழைத்துவிட்டது. வேறு வழி இல்லாமல் எடுத்து பேசியவளின் முகத்தில் பதட்டம் குடிபுகுந்தது காரணம் அவள் ஆஃபீசில் திடீர் ஆடிட்டிற்கு வந்து விட்டார்கள் என்ற விவரம் தான்.

சட்டென ஒரு ஆட்டோவிலாவது போய்விடலாம் என்றால் எல்லா ஆட்டோவிலும் சவாரி இருந்து தொலைத்தது. பதட்டத்தில் நகம் கடித்தவாறு பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தவளின் அருகில் ஒரு வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ உரசிக் கொண்டு வந்து நின்றது. வண்டியை பார்த்ததும் அவளுக்கு தெரிந்துவிட்டது அது கிருஷ்ணகாந்தின் கார் என்று.

சில நொடிகளில் அவன் காரின் கண்ணாடி இறக்கப்பட்டது உடனே பஸ் ஸ்டாப்பில் லேசான சலசலப்பு ஆரம்பித்து விட்டது. சிலர் காரை நோக்கி வரவும் ஆரம்பித்து விட்டார்கள்.

"சீக்கிரம் காரில் ஏறுங்கள் ரக்‌ஷிதா, நான் உங்களை டிராப் பண்றேன்"

" இல் ... - - - - இல்லை. ....வந்து....."

“முதலில் உள்ளே ஏறுங்கள் பிறகு பேசிக்கொள்ளலாம். அல்லது கூட்டம் கூடி விடும் ...ம்........சீக்கிரம் “ அவன் அவளை கொஞ்சமும் யோசிக்க விடவில்லை.

அவன் சொன்னது போல் சிறு கூட்டம் அங்கே சேர்ந்து விட்டதை உணர்ந்த ரக்‌ஷிதா வேறு வழி இன்றி காரினுள் ஏறி அமர்ந்துவிட்டாள்.

காரின் கண்ணாடியை ஏற்றியவன் ஆக்சிலேட்டரை அழுத்தினான்.

" காரில் ஏற இத்தனை தயக்கமா? நான் என்ன முன்பின் தெரியாதவனா?"

"தெரிவதற்கு என்ன? அதுதான் தமிழர்கள் எல்லோருக்கும் முன்பின் நன்றாக தெரியுமே" பேச்சில் எட்டிப் பார்த்தது.

" ஓகே...அதுதான் தெரிந்து விட்டதில்லையா பிறகு ஏறுவதற்கு ஏன் தாமதம் "

"உங்களுக்கு நிறைய வேலை இருக்கும். இதில் நான் வேறு ஏன் இடைஞ்சல்?"

"நீங்களாக லிப்ட் கேட்டால் அது இடைஞ்சல் நானாக ஏற்றிக்கொண்டால் அது தோழமை "

"நடிகர் இல்லையா? அதுதான் நாக்கில் வசனம் புகுந்து விளையாடுகிறது."

சட்டென அவன் முகம் வாடிவிட்டது அப்படியானால் நான் நடிக்கிறேன் என்றுதான் இவர் நினைக்கிறாள்.மற்றவர்களை போல் ரக்‌ஷிதாவிற்கும் நான் நடிகன் கிருஷ்ணகாந்த் தான் நான் எப்போதும் சாதாரண மனிதனாக இருக்கவே முடியாதா? இப்படி யோசித்துக் கொண்டிருந்தாலும் தன் பழக்க ஞானத்தால் காரையும் லாவகமாக ஓட்டிக் கொண்டு இருந்தான்.

"ஹலோ".......என்ன சார் பேச்சையே காணோம்" என்ற ரக்‌ஷிதாவின் குரலில் தான் நினைவிற்கு வந்தான்.

"ஆங் ......ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது ரக்‌ஷிதா, நீங்களும் என்னை இருபத்தி நாலு மணி நேர நடிகனாகவே பார்க்கிறீர்கள் .நானும் மனிதன் தான். எனக்கும் உணர்வுகள் உண்டு. தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்" விரக்தியான குரலில் அவன் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ரக்‌ஷிதாவின் மனமும் இளகியது.

"ஓ.கே.....ஓ..கே.......சரி சார், இனி இப்படி பேசவில்லை மன்னித்துவிடுங்கள். இதோ..... என் ஆஃபிஸ் வந்துவிட்டது உங்கள் உதவிக்கு நன்றி

இறங்கியவளின் தலைமறையும்வரை பார்த்துக்கொண்டிருந்துவிட்டுத் தான் காரை எடுத்தான் கிருஷ்ணகாந்த்

விரைவில் வர இருக்கும் சுனாமியை அறியாமல்,

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
8
தன்வன்யாவிற்கு வீட்டுப்பாடம் எழுத உதவி செய்துகொண்டிருந்தாள் ரக்‌ஷிதா. அப்போது ஆவேசமாக ரூமினுள் நுழைந்தாள் மைதிலி,

நுழைந்தவள் கையிலிருந்த புத்தகத்தை தரையில் வீசி அடித்தாள் அது ரக்‌ஷிதாவின் காலடியில் விழுந்தது. என்ன பிரச்சனை என்று புரியாத ரக்‌ஷிதா,

"அ...அண்ணி என்னவாயிற்று ?"

மூடுடி வாயை இனி ஒரு வார்த்தை நீ பேசக் கூடாது ஏதோ விதவை பெண்ணாச்சேன்னு பாவம் பார்த்து வீட்டுல சேர்த்தா இந்த வீட்டோட மானத்தையே சந்தி சிரிக்க வெச்சிட்ட சந்தோஷமா?"

ஆவேசமாக வியர்க்க விறுவிறுக்க பேசிய மைதிலியை பார்க்க ரக்‌ஷிதாவிற்கே பயமாக இருந்தது.

அவளுக்கு கை கொடுக்கும் வண்ணம் அங்கு வந்தார் பாக்கியம்.

“என்ன மைதிலி இங்கே சத்தம்?"
"வாங்க மாமியாரே...வாங்க... இந்த மகராசிக்கு நீங்கதானே அம்மா. அப்போ இந்தாங்க இந்த அழகான விமர்சனத்தை நீங்களே கண்குளிர படிங்க" என்றவள் விடுவிடுவென விரைந்து ரக்‌ஷிதாவின் காலடியில் இருந்த புத்தகத்தை எடுத்துச் சென்று பாக்கியத்தின் கையில் திணித்தாள்.
ஒன்றும் புரியாமல் விழித்தவர் அவர் கையில் திணிக்கப்பட்ட புத்தகப் பக்கத்தில் இருந்த எழுத்துக்களின் மீது பார்வையை ஓட விட்டார். சில நொடிகளில் அவரின் முகம் வெளிறியது. உதடுகள் துடித்தன. கண்கள் தாமாக கலங்கிக் கொண்டிருந்தது.. கையில் இருந்த புத்தகம் தவறி கீழே விழுவது கூட தெரியாமல் நின்றுகொண்டிருத்தார் பாக்கியம்.
அங்கே நடப்பது எதுவும் புரியவில்லை ரக்‌ஷிதாவிற்கு இருப்பினும் அந்த புத்தகத்தில் தான் ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று உணர்ந்தவள் தாவிச் சென்று கீழே இருந்த புத்தகத்தை கைப்பற்றினாள். குத்து மதிப்பாக அவள் பக்கங்களை யூகித்து படிக்க ஆரம்பித்தாள்.
அது ஒரு கிசு .... கிசு பக்கம்...."விஷ்ணுவின் அவதாரம் ஒன்றின் பெயர் முதல் பாதியும் காந்தத்தின் பெயரை மறுபாதியும் கொண்ட நடிகர் இப்போது அதிகம் தனது ஓய்வு பங்களாவில் தான் இருக்கிறாராம். அதற்கு காரணமும் உண்டு. அங்கே பக்கத்து வீட்டில் ஓர் அழகான பெண் இருப்பது தான். இதில் ஆச்சர்யப்பட வைப்பது என்னவென்றால் .அந்த பெண் ஒரு விதவை ......இளம்விதவை. நம் நடிகர் எங்கு சென்றாலும் அந்தப் பெண்ணின் குழந்தைக்கு பரிசுப்பொருள் வாங்க தவறுவதில்லையாம். பல நாட்கள் இருவரையும் காரில் ஒன்றாக பார்க்க முடிகிறதாம் ....கொஞ்ச நாளாக அவர் துணை நடிகைகள் பக்கம் பார்வை வீசாமல் இருந்ததற்கு இதுதான் காரணம் போலும்....ஹீ... ஹீ..”


படித்து முடித்தவளின் ரத்தம் சூடேறியது இதயத்துடிப்பு பல மடங்கு அதிகரித்தது. கோவத்தில் முகம் சிவந்துவிட்டது

"என்ன கண்ட்ராவி இது .....?"


அந்த புத்தகத்தை வாசலில் வீசி எறிந்தாள் ரக்‌ஷிதா

" என்ன சொன்னாய்.....சொல்.....செய்வதையும் செய்து விட்டு உண்மை தெரிந்ததும் கண்டராவியா ? ஆஹா ஹா என்ன ஒரு நடிப்பு. இதையும் அந்த சினிமாகாரனிடம் தான் படித்தாயா?" வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினாள் மைதிலி.


“அண்ணி பிளீஸ் "


"நிறுத்தடியம்மா பத்தினி வேஷம் போடா......இதுக்கு நாங்க பாத்த மாப்பிள்ளை யாரையாவது கல்யாணம் செய்துக்கிட்டு போயிருக்க வேண்டியது தானே அதை விட்டு இப்படி தெருவே நம்மை பாத்து சிரிக்க வெச்சிட்டியேடி"


இவளிடம் பேசி ஆகாது என்றுணர்ந்த ரக்‌ஷிதா பாக்கியத்திடம் விரைந்தாள்.


"அ ------அம்மா ....நான் சொல்வதை நீங்களாவது நம்புங்கள் அம்மா ....நான் அப்படி பட்டவளா? என்னை நீங்கள் அப்படியா வளர்த்தீர்கள். பாலாவை தவிர என் மனதில் யாரும் இல்லை அம்மா ....சத்தியமாக ....." கதறிய ரக்‌ஷிதாவின் கண்ணீருக்கு பாக்கியத்திடம் எந்த பலனும் இல்லை
பாக்கியத்தின் அமைதி ரக்‌ஷிதாவை அதிர்ச்சியடைய செய்தது.
"அ...... அம்மா .....நீங்கள் கூடவா...இந்த கிசுகிசுவை நம்புகிறீர்கள்.?"
"வேற என்னதாண்டி செய்யச் சொல்ற....நான் நம்பலைன்னாலும். -- இதை படிக்கிற அத்தனை பேரிடமுமா நீ போய் இப்படி அழுது நிரூபிக்க முடியும்? --போச்சு. நம் குடும்பமானமே போச்சு கடவுளே உனக்கு கண்ணில்லையா? இதை எல்லாம் பார்க்கவா நான் உயிரோடு இருக்கிறேன்" தலையில் அடித்துக்கொண்டு கதறினார் பாக்கியம்.


அவ்வளவு தான் உடல் தளர்ந்து சுவற்றில் சாய்ந்து சரிந்தாள் ரக்‌ஷிதா, காதுகளில் பாக்கியத்தின் பேச்சை தவிர வேறு எதுவும் கேட்கவேயில்லை. மறுபடி மறுபடி அவரின் வார்த்தைகள் மட்டும் ஒலித்துக் கொண்டிருந்தது.அதன் பிறகு நடந்த எதுவும் அவள் நினைவில் ஏற மறுத்தது. கடைசியில் அம்மாவும் கூட எனக்கு ஆதரவு இல்லையா? நான் அனாதையா? என்னை சுற்றி நடப்பது எதற்கும் நான் காரணம் இல்லையே. ஆனால் பழிமட்டும் என் மேலா? அந்த பத்திரிக்கைகாரனின் சட்டையை அல்லவா பிடித்து உலுக்கி இருக்க வேண்டும். அப்போது தானே அவர்கள் அவளை சார்ந்தவர்கள். இப்போதோ விரோதிகள் போல் என்னை குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விட்டார்களே பாலா என்னையும் உங்களுடன் அழைத்து போகாமல் விட்டுவிட்டீர்களே. இப்படி அனைவர் வாயிலும் விழுந்து சீரழியவா? ஐய்யோ நம் மகள் தனு அவளுக்கு என்ன அடையாளம் கிடைக்கும். இந்த நயவஞ்சகர்கள் சூழ்ந்த உலகில்.ம்.... எல்லாம் முடிந்தது. இன்றோடு எல்லாம் முடிந்தது.இனி என்ன நடந்தால் தான் என்ன? நான் அன்பு வைத்தவர்கள் என்னுடன் நில்லாமல் எதிரில் நிற்கும் பொழுது! மனம் இறுகி விட்டது. ரக்‌ஷிதாவிற்கு பார்வை எங்கோ வெறித்தன. உயிருள்ள ஜடமானாள் .
அதன் பிறகு விஷயம் அறிந்து அனுமந்தனும், சதீஷும் வந்து விட்டார்கள்

அனுமந்தன், தன் பங்கிற்கு நன்றாகவே பேசி விட்டான்.சதீஷ் மட்டும் அள் சார்பில் பேசமுன் வந்தான். ஆனால் யாரும் ஏற்கவில்லை.
" இந்த கேடு கெட்ட நாய் இனி ஒரு நிமிஷம் கூட நம் வீட்டினுள் இருக்க கூடாது அடிச்சி வெளியே தொறத்துங்க" என்ற மைதிலியின் சொல்லை வேதவாக்காக ஏற்று நடந்தான் அனுமந்தன்.
சரமாரியான அடிகள் அவள் மீது விழுந்தும் சலனமே இல்லாமல் நின்றாள் ரக்‌ஷிதா அவளின் கூந்தலை பற்றி இழுத்து வெளியே தள்ளினான் அனுமந்தன்

அவள் பின்னே "அம்மா.....அம்மா ......" என்று அழுதுகொண்டே வந்தாள் தனு. அங்கே நடப்பது எதுவும் அந்த பிஞ்சு மனதிற்கு புரியவில்லை. ஆனால் தன் அம்மாவை அடிப்பதை அவளால் தாங்க முடியவில்லை.

"மாமா ........ப்ளீஸ் அம்மாவை அடிக்காதீங்க பாவம் அம்மா...."

"ஐய்யோ அம்மா வாயில ரத்தம் வருது மாமா .....!" செய்வதறியாது புலம்பியது குழந்தை,

தனுவின் அழுகை கூட ரக்‌ஷிதாவை அசைக்கவில்லை கல் என உறைந்து நின்றாள்.

அவளை வெளியே தள்ளிய அனுமந்தன் அவளின் உடைமைகளையும் ஒரு சூட்கேசில் அடைத்து வெளியே எறிந்தான். தனுவுடையதும் அதில் அடக்கம் ,வீசிய வேகத்தில் சிதறிய தன் புத்தகங்களை அழுது கொண்டே சேகரித்தாள் தனு. கைகளில் புத்தகங்களுடன் உள்ளே செல்ல முயன்ற தனுவை பிடித்து வெளியே தள்ளி விட்டு கேட்டையும் சாற்றிவிட்டான் அனுமந்தன்.

தள்ளிய வேகத்தில் கீழே விழுந்தாள் தன்வன்யா.

அப்போதும் ரக்‌ஷிதா அசைவில்லை. ரோட்டில் கலைந்த தலையும், கசங்கிய புடவையுமாக நின்றிருந்தாள்.அக்கம் பக்கத்தினர் அவர்களுக்குள் விதவிதமாக பேசி அடுத்தவர் கஷ்டத்தில் குளிர்காய்ந்தார்கள்.

சதாசிவன் தான் மனம் பொறுக்காமல் ஓடி வந்து தனுவை தூக்கிக் கொண்டார். தனுவின் தலையில் கருங்கல்பட்டு சிராய்ப்பு ஏற்பட்டிருந்தது. செந்நிறக்கீற்றாய் ரத்தம் வேறு.

சதாசிவத்தின் தோள்களில் சாய்ந்து கொண்டால் தன்வன்யா. "தலைவலிக்குது தாத்தா"



" ஒன்னுமில்லடா கண்ணு... லேசான சிராய்ப்பு தான் வா தாத்தா எண்ணெய் தேச்சு விடறேன் அப்புறம் வலி பறந்து போயிடும்"


"அம்.....அம்மாக்கும் அடிபட்டிருக்கு தாத்தா ... பாருங்க உதட்டில் ரத்தம் வழியுது. அவங்களுக்கும் மருந்து போடனும்"

"சரி . . .இரு" என்றவர்.


ரக்‌ஷிதாவை நெருங்கினார். " அம்மா இப்படி நடுரோட்டில் நின்னா அக்கம் பக்கம் ஒரு மாதிரி பார்க்கிறாங்கம்மா. கொஞ்சம் உள்ள வந்து உட்காருங்க. குழந்தை மனசு ரொம்ப ரணமாகி இருக்கும் மா.அவளுக்காகவாவது கொஞ்சம் உள்ளே வாங்கம்மா? "

இப்போதும் ரக்‌ஷிதா அசையவேயில்லை..

"தாத்தா அம்மா ஏன் பேச மாட்டேங்கிறாங்க நான் எதுவும் தப்பு கூட செய்யலையே ! அப்பாவியாய் கேட்கும் குழந்தையை பார்க்கையில் அழுகைதான் வந்தது சதாசிவத்திற்கு.

இவளுக்கு எப்படி புரிய வைப்பது அவளுடைய தாயின் மானம் காற்றில் பறக்கிறது என்று. மாலையிலிருந்தே பக்கத்து வீட்டில் கூச்சலும் சண்டையும் அதிகமாகவே இருந்தது. என்னவாக இருக்கும் என்று புரியாமல் தவித்தார் சதாசிவம். குழந்தை தனுவின் அழுகை வேறு அவரை இன்னமும் பாதித்தது. அதனால் காதுகளை கூர்மை படுத்தி அவர்களின் சம்பாஷனையை கேட்க முயன்றார். ஒரு பதினைந்து நிமிட தீவிர முயற்சிக்கு பிறகுதான் அவருக்கு புரிந்தது. இது ஏதோ பத்திரிகை கிசுகிசுவின் தாக்கம் என்பதும். அதற்கு காரணம் தன் முதலாளி தான் என்றும் உடனே கிருஷ்ணகாந்திற்கு தகவல் கொடுத்து விட்டார். இனி இறைவன் விட்ட வழி என்பது போல பக்கத்துவீட்டில் ஒரு காதும் கண்ணும் வைத்தபடி கேட்டின் வெளியே ஸ்டுல் போட்டு அமர்ந்து கொண்டார். பிறகு அனுமந்தனும் சதீஷும் அவசரமாக வருவதை பார்த்துக் கொண்டு அங்கேயே தான் நின்றார். அதனால் தான் அவரால் தனுவை ஓடிச் சென்று தூக்க முடிந்தது. ஆனால் அவர் அவ்வளவு கெஞ்சியும் ரக்‌ஷிதா தான் அசைய மறுத்து விட்டாள். மழை வேறு இப்போவா, அப்பவோ என்பது போல் காத்திருந்தது. சதாசிவம் செய்வதறியாது ரக்‌ஷிதாவின் அருகில் நின்றிருந்தார்

அப்போது தான் கிருஷ்ணகாந்தின் பி.எம்.டபிள்யூ வேகமாகவும், பெரும் சத்தத்துடனும் அவர்களை உரசிக்கொண்டு பிரேக் அடித்து நின்னது. மழையும் லேசாக தன் வேலையை தொடங்கியது. காரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து தலைகளும் வெளியே தெரிந்தன. மழையையும் பொருட்படுத்தாமல்,

அவசரமாக இறங்கிய கிருஷ்ணகாந்த் அவர்களை நோக்கி விரைந்தான். முதலில் அவன் கண்களில் பட்டது ரக்‌ஷிதாவின் உதட்டில் வழிந்த ரத்தம் தான்.


"என்ன சதாசிவம் "என்ன தான் பிரச்சனை? ஏன் இப்படி நடுரோட்டில் நிற்கிறார்கள்" பதட்டமாக விசாரித்தான்." என்ன நடந்ததுன்னு தெரியலை தம்பி சாயந்திரத்திலிருந்தே அங்கே ஒரே கூச்சல் தான். இப்போ என்னடான்னா அண்ணங்காரன் ரக்‌ஷிதாவையும், தன்வன்யாவையும் வெளியே தள்ளி கதவை சாத்திவிட்டான். இந்த பொண்ணோ ஒரு வார்த்தை பேசலை பித்து புடிச்ச மாதிரி சிலையாயிருக்குது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு தம்பி "புலம்பினார் சதாசிவம்.


மறுபடியும் அவன் பார்வை ரக்‌ஷிதாவின் மேல் விழுந்தது அவளின் கண்கள் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தன.

"ரக்‌ஷிதா ..... ரக்‌ஷிதா ....," அவனின் குரலுக்கு எந்த பதிலும் இல்லை.

"ரக்‌ஷிதா ..ப்ளீஸ் மழை வேறு ஆரம்பமாகி விட்டது. தயவு செய்து உள்ளே வாருங்கள்"

மெளனம் தவிர அவனுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இது சரிப்படாது என்றுணர்ந்தவன் நேரே அவள் வீட்டின் கேட்டை தட்டினான்.

சில... பல தட்டுகளுக்குப்பின் அனுமந்தன் வெளியே வந்தான்.

"என்ன வேணும் உங்களுக்கு?ஏன் எங்கள் வீட்டு கோட்டை தட்டநீங்க?"

அவன் பேச்சில் அதிக கோபம் இருந்தது.


"ப்ளீஸ் மிஸ்டர் அனுமந்தன் உள்ளே போய் பேசலாம் எல்லோரும் வேடிக்கை பார்க்கிறாங்க"
"என்னடா சும்மா நல்லவன் மாதிரி வேஷம் போடற,எங்களை தான் சந்தி சிரிக்க வெச்சிட்டியே அப்புறம் என்ன இங்க உனக்கு வேலை? போ...போய் தொலை என் கண்முன் வந்து என்னை கொலைகாரன் ஆக்காதே, சினிமாக்காரனா இருந்த பெரிய இவனா நீ" ஆவேசமாய் பாயத்துடித்தவனை இழுத்து பிடித்துக் கொண்டிருந்தார்கள் மைதிலியும் சதிஷும்.

தன்னை அவன் இவன் என்று மரியாதையில்லாமல் அனுமந்தன் பேசுவதை கிருஷ்ணகாந்த் துளியும் பொருட்படுத்தவில்லை. அவனது நினைவு முழுவதும் ரக்‌ஷிதாவை பற்றியதாகவே இருந்தது. "எனக்கு உங்கள் கோபம் புரிகிறது அனுமந்தன் தயவு செய்து இந்த கிசுகிசுக்களை நம்ப வேண்டாம். அது எல்லாம் வெறும் கட்டுக்கதை. என்னை விடுங்க ரக்‌ஷிதாவின் மேல் நம்பிக்கையில்லையா?"

அவள் தானே......இந்த பூனையும் பால் குடிக்குமா, என்ற கதியில் நிற்கிறாளே அமுக்குனி காரி என்ன வேண்டுமானாலும் செய்வாள்" என்று மைதிலி இடைபுகுந்தாள்.

"போதும் மேடம் பிளீஸ், புரிஞ்சிக்கோங்க சினிமாக்காரன் கூட பேசினாலே கண் காது மூக்கு வைத்து பேசும் உலகம் இதை படித்த நீங்களே புரிந்து கொள்ளவில்லை என்றால் எப்படி ".

"எங்களுக்கு நீ புத்தி சொல்கிறாயா? எதை நம்பனும், நம்பக் கூடாதுன்னு எங்களுக்கு தெரியும், நீயும் இவளும் மாடியில் கொஞ்சி பேசறதை நானே பல முறை பாத்திருக்கேன். இப்போ இல்லேன்னு யார்கிட்ட சொல்ற" பொரிந்தான் அனுமந்தன்.
\
"அண்ணா பிளீஸ் ......தயவு செய்து உள்ள வந்து பேசுங்க ஊரே பாக்குது" மென் குரலில் கெஞ்சினான் சதீஷ்.

"டேய் உன்னை வெளியே வரக்கூடாதுன்னு சொன்னேன்ல போடா உள்ள "ஆங்காரமாக கத்தினான்.

இப்படி குதர்க்கமாகவே பேசும் இவனிடம் எப்படி புரிய வைப்பது என்று புரியாமல் விழித்தான் கிருஷ்ணகாந்த தூரலின் வீரியம் அதிகரித்தது.சதாசிவம் ஒரு குடையுடன் தனுவை தூக்கிக் கொண்டு நின்றிருந்தார். தன் மேல் விழும் தூரலை கூட உணராமல் நின்றிருந்தாள் ரக்‌ஷிதா.

"ஏய் மைதிலி வாடி உள்ள "ஆணையிட்டான் அனுமந்தன்.
"மேடம் பிளீஸ் ....மேடம் நீங்களும் ஒரு பெண் தானே தயவு செய்து ரக்‌ஷிதாவின் நிலையை புரிஞ்சுக்க முயற்சி செங்க அவங்க எந்த தப்பும் செய்யலை"மைதிலியிடம் மன்றாடினான்.

"அட... வேலிக்கு ஓணான் சாட்சியா?நல்லா இருக்கு கதை "தாடையை தோளில் இடித்தாள் மைதிலி.

“நீ உள்ள போ--- உத்தரவிட்ட அனுமந்தன் கிருஷ்ணகாந்தை நெருங்கினான்"

"என்ன சார் எல்லாம் முடிஞ்சதும் கை கழுவ நினைச்சீங்களா., அது நடக்கலைன்னு கோபமா?" என்று ஏளனமாக பேசிய அனுமந்தனின் சட்டையை பிடித்து விட்டான் கிருஷ்ணகாந்த்,

"என்னடா நாயே சொன்னே! எத்தனை நெஞ்சழுத்தம் இருந்தா...என்கிட்டேயே ரக்‌ஷிதாவை பற்றி இப்படி பேசுவ அவ ஒரு வைரம்டா.....அவள் உன் வீட்டில் இருக்க நீ கொடுத்து வைக்கலை. நான் பார்த்துப்பேன்டா ... ராணி மாதிரி ...ச்சீ..நீயும் ஒரு அண்ணனா?" கோபத்தில் அனுமந்தனை வேகமாக பின்னே தள்ளினான்.

பின்னோக்கி விழுந்தவனை சட்டை செய்யாமல் ரக்‌ஷிதாவிடம் வந்தவன்.

"கேட்டாயா ரக்‌ஷிதா ....கேட்டாயா.......உன் அண்ணன் பேசியதை இனிமேலும் ஏன் மெளனம்? உன் அன்புக்கு அவர்கள் தகுதியானவர்கள் இல்லை உன் உறவுக்கும் கூடத்தான். ... வா..போகலாம்.. நம் வீட்டிற்கு "

அப்போதும் மெளனம்தான் பதிலாய் வந்தது ரக்‌ஷிதாவிடமிருந்து.

ஏனோ இன்னமும் கோபம் வந்தது கிருஷ்ணகாந்திற்கு.அவளின் தோள்களை ஆவேசமாக பற்றி உலுக்கினான்.

“ரக்‌ஷிதா .... ரக்‌ஷிதா என்னை பார்....வா...போகலாம்..."

மறுப்பாய் தலையசைத்தாள்.

" பின்னே என்ன தான் செய்யப்போகிறாய் இந்த கல்நெஞ்சக்காரர்கள் உன்னை உள்ளே விட மாட்டார்கள், மழை வேறு பெய்கிறது ப்ளீஸ் வா....!"
அப்போதும் அசையவில்லை. அம்மா ........மழையில் நனையாதீங்கம்மா..... ஜூரம் வரும் ......வாங்கம்மா அங்கிள் வீட்டுக்கு போகலாம் அது ரொம்ப பெரிய வீடும்மா" மழலையாய் பேசியது குழந்தை.

"எனக்காக வேண்டாம் - - - - - ஏன் உனக்காகவும் வேண்டாம் ... இந்த குழந்தைக்காக வா ரக்‌ஷிதா. இன்று ஒருநாள் பொருத்துக் கொள்....நாளை உன் அலுவகம் பக்கமாகவே ஒரு வீடு பார்த்து தருகிறேன். நீ உன் காலில் நிற்கலாம் .... தனுவுடன். யாரையும் எதிர்பார்க்காமல்."


" ----"


"ச்....சே....உனக்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா? நான் ஒன்றும் உன்னை கடித்து தின்று விட மாட்டேன்.என்னால் தான் உனக்கிந்த நிலை என்ற குற்ற உணர்வினால் தான் உன்னிடம் இந்தளவு இறங்கி வருகிறேன். இப்படி தெருவில் நிற்பதால் நீ எதை சாதிக்க போகிறாய்? வேண்டுமானால் எல்லா வீட்டு கதவையும் தட்டி வரவழைத்து நமக்குள் ஒன்றும் இல்லை என்று சத்தியம் செய்யவா?"

"தேவையில்லை" ஆணித்தரமான பதில் வந்து ரக்‌ஷிதாவிடமிருந்து.

அவளின் கலங்காத குரலே கிருஷ்ணகாந்தை அச்சுறுத்தியது

"ர... ர... ரக்‌ஷிதா...?"

“தேவையில்லை மிஸ்டர் கிருஷ்ணகாந்த். இந்த நன்றி கெட்ட மனித கூட்டத்திடம் எதையும் நிருபிக்கும் அவசியம் இல்லை, நான் என்னை நம்புகிறேன். உங்கள் அக்கறைக்கு நன்றி அண்ணா தனுவை கொடுங்கள்" சதாசிவத்திடமிருந்து தனுவை பெற்றுக்கொண்டாள்


"இ... இ.....இப்போ எங்க போறீங்க ரக்‌ஷிதா?" அவளை பின்தொடர்ந்தான் கிருஷ்ணகாந்த்.

"நான் என் வழியில் போகிறேன்"

“இந்த மழையில் எங்க போவீங்க....ப்ளீஸ் ஒரே ஒரு நாள் என் வீட்டில் தங்கி விட்டு நாளை போகலாமே...... பாருங்க தனுவிற்கு லேசான ஜூரம் அடிக்கிறது. மழையில் நனைந்தால் இன்னமும் அதிகமாகிவிடும். --தனுவிற்காக ப்ளீஸ்."
"ஆமாம் ரக்‌ஷிதாம்மா ....என் வீட்டுக்காரி கூட தங்கிக்கங்கம்மா"

அப்போது தான் தன்வன்யாவிடமிருந்து அந்த முனங்கல் சத்தம் கேட்டது. அவள் உடலின் சூட்டையும் ரக்‌ஷிதாவால் உணர முடிந்தது.

"தனு..தனு.......அம்மாவைப் பார் - - - - தனும்மா ...." கண்கள் கலங்கி விட்டது ரக்‌ஷிதாவிற்கு.

தனுவிடம் எந்த சலனமும் இல்லை.

"மழையில் நிற்காதீங்க ரக்‌ஷிதா. உள்ள வாங்க நான் டாக்டருக்கு ஃபோன் பண்றேன்.".

துரிதமாய் செயலில் இறங்கினான் கிருஷ்ணகாந்த். குழந்தை மருத்துவரை வரவழைத்தான், ரக்‌ஷிதாவிற்கும், தனுவிற்குமான தங்குமிட ஏற்பாட்டையும் கவனித்தான். சதாசிவமும் அவர் துணைவி கனகமும் ...அவனுக்கு துணையாய் உதவினார்கள்.

டாக்டர் ஊசி போட்டுவிட்டு மருந்துகளை கொடுத்து சென்றார். மருந்தின் வேகத்தில் உறங்கி விட்டாள் தன்வன்யா. எத்தனை சொல்லியும் தனக்கு தனிமை தேவை என்று கூறி கனகத்தை அனுப்பி விட்டாள் ரக்‌ஷிதா.

ஏனோ கிருஷ்ணகாந்துக்குதான் உறக்கம் வர மறுத்தது. இறுகிய அவளது மனதும் வெறித்த அவளது பார்வையும், பேசாத அவளது உதடுகளுமே அவன் கண்களுக்குள் தோன்றி மறைந்தன. லேசாக பயம் வந்தது. துக்கத்தில் ஏதேனும் தவறான முடிவுக்கு போய் விட்டால் நினைத்த வேகத்தில் எழுந்து விட்டான். வேகமாக அவள் அறைக்கு விரைந்தவன். மூடிய கதவின் வாசலில் தயங்கி நின்றான். இந்த நேரத்தில் கதவை தட்டுவது நாகரிகமில்லை தான். ஆனால் அவனுக்கு ரக்‌ஷிதாவை பார்க்காமல் பயம் விலக மறுத்தது. மனதை நிலைப்படுத்தி கதவை இரண்டு முறை மென்மையாக தட்டினான்..

ஒரு நிமிட காத்திருப்பிற்கு பிறகு கதவு திறக்கப்பட்டது.

சிவந்த விழிகளுடன் ரக்‌ஷிதா நின்றிருந்தாள்.அவள் அதிகம் அழுதிருக்கிறாள் என்பது, அவளின் வீங்கிய முகத்தில் தெரிந்தது. ஏனோ கிருஷ்ணகாந்தின் பார்வையை சந்திக்க சங்கடப்பட்டு தரையை பார்த்தாள்.
" ----த---- தனுவிற்கு எப்படி இருக்கிறது ரக்‌ஷிதா?".....கதவை தட்டியதற்கு ஏதேனும் கேட்க வேண்டும் தானே.

"ம் - - - - பரவாயில்லை----- இப்போது சுத்தமாக சூடு இல்லை"

"ஆ .....ஆங்..... ஓ.கே....சாரி தூக்கத்தில் டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.

விரக்தியான சிரிப்பு மட்டுமே பதிலாய் வந்தது.

“பாருங்க ரக்‌ஷிதா. இந்த உலகம் ரொம்பவும் தப்பானது. நமக்கு ஒரு சிறு துயரம் என்றாலும் அதை ஊதி பெரிது பெரிது படுத்துமே தவிர குறைக்க முயலாது. அதனால் நாம் மனம் தளர்ந்துவிடக்கூடாது உங்களை நம்பித்தான் தனு இருக்கிறாள். பெண் குழந்தை வேறு அதனால் நீங்கள் உங்களை திடப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அவன் முடிப்பதற்குள் இடைபுகுந்தாள் ரக்‌ஷிதா

"ஒரு நிமிடம் மிஸ்டர் கிருஷ்ணகாந்த், நான் ஏதேனும் தவறாக முடிவெடுத்துவிடுவேன் என்ற பயமா உங்களுக்கு ? அப்படி இருந்தால் அதை நீக்கிவிடுங்கள். இனி புதிதாக தற்கொலை செய்து கொள்ள தேவையில்லை. இன்று மாலையே எல்லாம் முடிந்துவிட்டது. இப்போது நான் வெறும் கூடுதான். அதனால் தேவையில்லாமல் பயப்பட வேண்டாம். போய் தூங்குங்கள் இனி தன்வன்யா மட்டும்தான் எனக்கு எல்லாம்."

பேசியவளை ஆச்சர்யமாக பார்த்தான் கிருஷ்ணகாந்த் இத்தனை திடமாக இருக்கும் பெண்ணின் மேல் இன்னமும் அன்புகூடியது.


அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
9



விடியல் யாருடைய பிரச்சனைக்காகவும் நிற்காமல் தன் வேலையை சரி வர செய்தது.

இரவு உதட்டில் அடிப்பட்டதற்காக டாக்டர் கொடுத்த பெயின் கில்லர் மாத்திரையின் உதவியால் லேசாக தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்த ரக்‌ஷிதாவிற்கு விழிப்பு வந்துவிட்டது.

நேரம் காலை 5.00 என்று காட்டியது சுவர் கடிகாரம். தன்வன்யா இன்னமும் எழவில்லை. பாவம் ஜூரத்தின் தாக்கம் குழந்தை சுருண்டு போய் விட்டது. ஆனால் இனிதான் என்ன செய்வது நான்கு சுவருக்குள் இருக்கும் பொழுது எந்த பயமும் இல்லை. ஆனால் வாசலில் கால் வைத்தால் உலகம் எப்படி பார்க்கும் என்னென்ன வார்த்தைகள் சொல்லித் தூற்றும். இனி இதை எல்லாம் சகித்துக் கொண்டு தான் காலம் தள்ள வேண்டும். அப்படித்தான் அவள் தலையில் எழுதியிருக்கிறது போலும் இப்படி யோசிக்கையிலேயே கண்கள் தாமாக கலங்கின.


இரவு சுத்தமாக சாப்பிடாததால் பசி வேறு வயிற்றை கிள்ளியது. இருப்பினும் வந்த புது இடத்தில் எப்படி கேட்பது கொஞ்சம் தண்ணீர் கிடைத்தாலும் தேவலை. நா உலர்ந்து விட்டது. தொண்டை அடைக்கிறது என்று யோசித்தவள் மெல்ல கதவை திறந்து வெளியே வந்தாள்.


வந்தவள் முதலில் பார்த்தது கிருஷ்ணகாந்தைதான்.அவள் ரூமின் வாசலில் இருந்த ஷோபாவில் கோணலாய் தூங்கிக்கொண்டிருந்தான். இல்லை இல்லை உட்கார்ந்து கொண்டிருந்தவன் களைப்பு மிகுதியால் தன்னையும் அறியாமல் கண்ணயர்ந்துவிட்டான் என்று தான் சொல்ல வேண்டும்.



அவனின் இந்த கோலத்தை பார்த்த ரக்‌ஷிதாவின் இதயம் மேலும் சஞ்சலமுற்றது. இவரும் தான் என்ன தவறு செய்தார் ஏன் நானும் தான் என்ன தவறு செய்தேன். ஆனால் பழியை மட்டும் ஏற்கும் நிலை. ஒருவேளை அன்று இவரது காரில் ஏறாமல் விட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காதோ?



'ச்சே......இது என்ன அசட்டு மனம் இனி நடந்தவற்றை மாற்றும் வாய்ப்பு நிச்சயம் இல்லை. நடக்கப்போவதை திட்டமிடுவதுதான் புத்திசாலித்தனம்.



தன்வன்யாதான் இப்போதைய, வாழ்வின் ஆதாரம் அதனால் விரைவில் ஒரு வீட்டைப் பார்த்து சென்று விட வேண்டும். மனதை தெளிவுபடுத்திக்கொண்டு தண்ணீரைத் தேடி முன்னேறினாள்.



ஆள் அரவம் உணர்ந்து கண்விழித்து விட்டான் கிருஷ்ணகாந்த்.



"எ..என்னவாயிற்று ரக்‌ஷிதா தனுவிற்கு ...?",



தூக்க கலக்கத்தில் ஏதோ உளறினான்.அவனை சமாதானம் செய்ய முயன்றால் ரக்‌ஷிதா "



“இல்லை சார்...நான் தான் தண்ணீர் குடிக்கலாம் என்று..."


“ ஓ...சரி வாங்க நான் எடுத்துத்தரேன்"


அவன் முன்னே நடக்க பின்தொடர்ந்தாள் ரக்‌ஷிதா.


சமையலறையில் கனகம் காலை உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார். இவர்களை பார்த்ததும்


"வாங்க தம்பி உட்காருங்க காப்பி கலக்கி எடுத்து வரேன் என்றவள் பதிலுக்கு எதிர்பாராமல் செயலில் இறங்கினார். அவரை தொந்தரவு செய்யாமல் ஒரு டம்ளரில் நீர் பிடித்து ரக்‌ஷிதாவிடம் நீட்டினான் கிருஷ்ணகாந்த்.

நன்றியுடன் அதை பெற்றுக்கொண்டாள். தண்ணீர் அருமை தாகத்தின் போதுதான் தெரியும். புரை ஏறும்வரை தாகம் தீர குடித்து முடித்தாள். அதற்குள் அவனும் தண்ணீர் அருந்தி விட்டு காத்திருந்தான்.



இருவரும் கனகம் கொடுத்த காபியை மெளனமாகவே அருந்த ஆரம்பித்தனர்.

கணவனுக்கும் தனக்கும் இரண்டு டம்ளர்களில் காபியை எடுத்துக் கொண்டு வெளியேறினார் கனகம்.

ஏனோ தனிமை இருவரையும் அச்சுறுத்தியது போலும். இருவருமே இருக்கையில் நெளியத் தொடங்கி விட்டார்கள் அதை போக்க கிருஷ்ணகாந்த் பேச்சை ஆரம்பித்தான்.


"வ.....வந்து...இப்போது என்ன செய்வதாய் முடிவெடுத்திருக்கிறாய் ரக்‌ஷிதா?"



" -----"மெளனமாய் இருந்தவளின் தலை கவிழ்ந்திருந்தது



"உங்களைத் தான்"



"தெரியவில்லை சார் இன்னமும் நேற்று நடந்தவற்றை என்னால் நம்ப முடியவில்லை. என் குடும்பம் என்னை நிராகரித்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை" கண்களில் நீர் நிறைந்துவிட்டது. இருப்பினும் கண்கொட்டி கண்ணீர் கீழே விழாமல் தடுத்து நிறுத்தினான்.

" பு....புரிகிறது ரக்‌ஷிதா .....எல்லாம் என்னால் தான்..என் மனம் ஆறவே இல்லை" உடனே விழிகள் உயர்த்தி அவனை பார்த்தவள்.

" இ....இல்லை ...இல்லை நிச்சயம் இல்லை சார். இது உங்கள் தவறும் இல்லை என் தவறும் இல்லை கடவுளின் தவறு"

"அப்படியானால் இந்த தவறுக்குப் பின் கடவுள் ஏதேனும் - சொல்ல நினைக்கிறாரா?"

என்ன நினைத்து கேட்டான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் அவன் மனம் எதிர்பார்த்த பதில் என்னவென்று நன்றாக தெரிந்தது.

"புரியவில்லை......!!!, ஒற்றை புருவம் உயர்த்தி அவனை நேருக்கு நேர் நோக்கினாள்.

"ஓ.... ஒன்றும் இல்லை ...... இன்றே வீடு பார்க்கச் செல்வோமா?"

"நீங்களுமா...? வேண்டாம் சார் நீங்களும் உடன் வந்தால் மக்கள் வேறு அர்த்தம் கொள்ள நேரும் அது வேண்டாமே!!"

கெஞ்சலான ரக்‌ஷிதாவின் குரலுக்கு ஏனோ எதிர்ப்பு சொல்ல மனம் வரவில்லை அவனுக்கு.

அன்புடன்
இந்திரா செல்வம்
 
Messages
77
Reaction score
57
Points
18
10

தன்வன்யாவை கனகத்திடம் வேறுவழி இல்லாமல் விட்டுவிட்டு தன் அலுவலகம் நோக்கி நடந்தாள் ரக்‌ஷிதா.எப்படியும் ஒரு பத்து நாளேனும் விடுப்பு எடுக்க வேண்டும். ஒரு வீடு பார்க்க வேண்டும்.அதில் பொருள்களும் வாங்க வேண்டும் அண்ணிக்கு தெரியாமல் சிறுக சிறுக அவள் சேர்த்து வைத்த பணம். அதுவும் தனுவும் அவளும் தனித்து வாழ்வது என்று அவள் முடிவெடுத்த அன்றிலிருந்து சேர்க்க ஆரம்பித்தது இப்போது அதுதான் அஸ்திவாரம். முதலில் ஒரு நல்ல வீடு அமைந்துவிட்டாள் போதும்.மனம் பலவாறு நினைக்க கால்கள் அலுவலகத்தினுள் பதிந்தன. ஏனோ மனதில் லேசான குளிர் பரவியது. தான் எதுவும் தவறு செய்யவில்லை... எனினும் இந்த சமுகத்திற்கு பயந்து வாழ்வதே இயற்கையின் ஒரு அம்சமாய் ஆகிவிட்டது. யோசித்தவள் ஒரு பெருமூச்சுடன் எம்.டி.யின் அறை நோக்கி நடந்தாள்.

அவளை பார்த்ததும் எல்லோரும் ஒருவருக்கொருவர் ரகசியம் பேசிகொண்டது போல் தோன்றியது ரக்‌ஷிதாவிற்கு. “ச்சே எல்லாம் பிரமை எல்லோருமா அந்த கிசுகிசுவை படித்திருப்பார்கள். அப்படி படித்திருந்தாலும் அதில் வெளிப்படையாக எதுவும் இல்லையே. இதெல்லாம் வெறும் மன பிராந்திதான்” என்று தனக்குள் கூறிக்கொண்டு முன்னேறினாள்.

கதவில் லேசான இரண்டு தட்டுகள் தட்டிவிட்டு காத்திருந்தவள்,எம்.டியின்

“எஸ்.. கம் இன்..” என்ற வார்த்தை கேட்டதும் உள்ளே நுழைந்தாள்.

“குட்மார்னிங் சார்” என்று அவள் குரலுக்கு தலையசைத்து விட்டு இருக்கையில் அமருமாறு செய்கை செய்தார் எம்.டி

நாற்காலியின் நுனியில் அமர்ந்தவள் படபடத்த மனதை அடக்கியபடி

“சார் பத்து நாட்கள் லீவு வேண்டும்,அவசரமாக கொஞ்சம் வேலைகள் இருக்கிறது.”

“ஓ...” ஓரக்கண்ணில் அவளை அளவெடுத்தான் எம்.டி ஏனோ அந்த பார்வை அவளுக்கு பயத்தை கொடுத்தது.

“சா... சார்...” அவளின் முக உணர்வுகளை புரிந்து கொண்டு விழிகளை அவளிடமிருந்து அகற்றியவர்.

“லீவு தானே ரக்‌ஷிதா.... தாராளமாய் எடுத்துக் கொள்” அவர் முடித்து விட்டதாய் கருதி

“ரொ.... ரொம்பவும் தேங்க்ஸ் சார், இதோ இப்போதே லீவு லெட்டர் எழுதிக் கொடுக்கிறேன்.”

“ம்... கொடுத்துவிடுங்கள்” .... ஆ... ஆ,,,ங்... ஒரு முக்கியமான விஷயம் மறந்து போனேனே” இன்று காலையிலிருந்து இந்த ஆபிசே அல்லோலக் கல்லோலப்படுகிறது தெரியுமா?

“எ... ஏன்... சார்”

“உன்... பக்கத்து வீட்டில்தானே கிருஷ்ணகாந்த் இருக்கிறார். அன்று கூட உன்னை அலுவலத்தில் இறக்கிவிட்டுச் சென்றாரே”

“ஆ.... ஆ... ஆமாம் சார்” ஏனோ வார்த்தை வெளியில் வர மறுத்தது.

“ம்... ஹம்... அவன் கொடுத்து வைத்தவன்... சினிமாக்காரன் ஆயிற்றே. நன்றாக நடித்திருப்பான் நீயும் நம்பி இருப்பாய்...” என்றவர் அசட்டுத்தனமாய் சிரித்து வேறு வைத்தார். ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று புரிந்துவிட்டது ரக்‌ஷிதாவிற்கு. அப்படியானால் அலுவலகம் முழுவதும் எல்லாம் தெரிந்துவிட்டது. அதற்கு இவர் பேச்சே சான்று. இனி என்ன செய்யப் போகிறாள். இந்த அசிங்கத்தை எப்படி எதிர்கொள்ளப் போகிறாள். அவள் சிந்தனையில் மூழ்கி இருக்க வலிமையான கரம் ஒன்று அவள் தோளில் விழுந்தது.

சட்டென எழுந்தாள் ரக்‌ஷிதா எம்.டி தான் அவள் பின்னே நின்றிருந்தார். அவரின் கண்களே அவரின் எண்ணத்தை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது.

முகம் சூடேற அதிகப்படி கோபத்தால் விழிவிரித்து நின்றாள் ரக்‌ஷிதா.

“எனக்கும் ரொம்ப நாளாக ஆசை தான் ரக்‌ஷிதா. ஆனால் இதை நீ எப்படி எடுத்துக் கொள்வாயோ என்ற பயம் தான் என்னை கட்டிப் போட்டது. அந்த கிருஷ்ணகாந்த் முந்திக் கொண்டான். ம்... போகிறது விடு.இனியேனும் ஏன் தள்ளிப்போட வேண்டும். நானும் பணக்காரன் தான்” இன்னும் ஏதோ பேச வாய் திறந்தவர் ஒரு நொடியில் கன்னத்தை தடவிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். காரணம் ரக்‌ஷிதா அவரை ஓங்கி அறைந்திருந்தாள்.”

“ச்... சீ... நாயே என்ன நெஞ்சழுத்தம் இருந்தா இப்படி பேசவா!” வேகமாக பேசியவளின் மூச்சுகளும் வேகமாகவே இருந்தது.

அவளின் அடியில் நிலைகுலைந்து போயிருந்த எம்.டி மறுபடியும் வாய் திறந்தார்.

“என்னடி... பெரிய பத்தனி மாதிரி பேசற... அதான் பேப்பர்ல போட்டு கிழிச்சிடானே. இனி நீ எங்க போனாலும் எல்லாவனும் உன்னை தொட்டு பார்க்கத்தான் ஆசைப்படுவான். போ... போய் ஊர் முழுக்க தண்டோரா போட்டு சொல் உன் பத்தினித்தன்மையை!”

“போதும் நிறுத்துடா... நீ எல்லாம் சமூகத்தில் பெரிய மனிதன் சீ... நான் ஏன் என்னை நிருபிக்க வேண்டும்? என்னை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அதுவே எனக்கு போதும்.... என் ராஜினாமா கடிதம் நாளை விரைவுத் தபாலில் உன் கைகளில் வந்து சேரும் குட்... பை...” ஏளனமாக அவனை ஒருமுறை பார்த்துவிட்டு வெளியேறினாள்
ரக்‌ஷிதா.

இடிமேல் இடியாக அவள் தலையில் இறங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தாள். குடும்பம் நிராகரித்து விட்டது? வேலையும் போய்விட்டது. ஆனால் கேவலமும் அசிங்கமும் பின் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.அது அவளை எப்போதும் விடப்போவதில்லை.இந்த நாட்டில் எங்கு போனாலும் கிருஷ்ணகாந்தை பற்றி தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. வேறு நாட்டுக்குத்தான் ஓடி ஒழிய வேண்டும்,இந்த அவலம் எட்டாத தூரத்திற்கு போக வேண்டும்.தனி ஒரு பெண்ணாக அது முடியுமா? தனுவின் எதிர்காலம் என்னவாகும்.நினைக்க நினைக்க உள்ளம் கொதித்தது. எப்படித்தான் பஸ் பிடித்து சரியான நிறுத்தத்தில் இறங்கி நடந்தாள் என்பது அவளுக்கே தெரியவில்லை. நெடுநாள் பழக்கம்அவளுக்கு கைகொடுத்தது. ஆனால் அதே பழக்கம் அவள் வாழ்வை திசை திருப்பியது. காரணம் அவள் பழக்கத்தால் அவளின் அண்ணன் வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.

“யார் இவளை உள்ளே விட்டது” என்ற அனுமந்தனின் கர்ஜனையில் தான் இவ்வுலகம் வந்தாள் ரக்‌ஷிதா. சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு விளங்கிவிட்டது.அவளின் கால்களே அவளை வம்பில் மாட்டிவிட்டன என்று.ஏனோ அழுகை வந்தது உதட்டை கடித்து அழுகையை அடக்கினாள்.அதற்குள் அனுமந்தன் காட்டு கத்தலாக கத்திக் கொண்டு இருந்தான்.

“எங்கடி வந்த... வந்து நீலிக்கண்ணீர் வடிச்சா உன்னை ஏத்துக்குவோம்னு நினைச்சியா? நெவர்... போடி வெளியே”

“ஏன் அண்ணா இப்படி மனசாட்சியே இல்லாம பேசுற ஒரே ஒரு தடவை ரக்‌ஷிதா சொல்வதையும் கேட்கலாமே”

“வாய மூடு சதீஷ்.நான் உன் அட்வைசை கேட்கவே இல்லை.”

“அனுமந்தா...!”

“ச்சு... அம்மா.. உங்களுக்கு தனியா சொல்லனுமா? இனியாரும் ஒரு வார்த்தை சொல்லக்கூடாது. நேத்து ராத்திரி எல்லாம் எங்க இருந்தியோ அங்கேயே போய் ஒழிய வேண்டியது தானே இங்க வந்து ஏன் நாடகம் ஆடற... போ.. போய் தொல”

கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு வெளியே தள்ளினான் அனுமந்தன்.

கேட்டின் வெளியே தடுமாறி விழப்போனவளை விரைந்து வந்து தாங்கிப் பிடித்தான் கிருஷ்ணகாந்த்.

இதை பார்த்து ஏளனமாக சிரித்த அனுமந்தன். “ வந்துவிட்டான்யா ஹீரோ,படத்துல தான் கரெக்டா வர்றேன்னு பார்த்த,நிஜத்துலயும் கரெக்டா வந்துட்டியே வெரிகுட் தான் போ.. கூட்டிட்டு போ அவளை.. பார்க்கவே அருவருப்பா இருக்கு”


அக்கம் பக்கத்து கூட்டமும் கூடிவிட்டது. எல்லோரும் அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டனர்.

“இங்க பாருடி அநியாயத்த, வெட்கமே இல்லாம அவன் கூட போறாளே இத்தனை நாள் நம்ம கிட்ட எல்லாம் நல்லவ மாதிரி நடிச்சிருக்கா போல”

“அட... ஆமாம் அக்கா...சினிமாக்காரன் வேற நிறைய பணம் காசு இருக்கும் அப்புறம் வேற என்ன வேண்டி இருக்கு,எல்லாத்துக்கும் சரின்னு சொல்லி இருப்பா”

“அட போங்கடி... புருஷன் இருக்கிறவளுங்களே கள்ளத் தொடர்பு வச்சுக்கிறாங்க இந்த புள்ள பாவம் சின்ன வயசு விதவை பொண்ணு அது செஞ்சது ஒன்னும் பெரிய தப்பில்லை. வந்துட்டாளுங்க வம்பு பேச...”
..
“சரி... நீ சொல்ற படியே வைச்சுகிட்டா கூட,அவ பேரு என்ன பொண்டாட்டியா? இல்லைதானே?”

அதற்கு மேல் கிருஷ்ணகாந்தால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை.சினம் தலைக்கேறிவிட்டது. சிவந்த கண்கள் துடித்தன.

“போதும் நிறுத்துங்க! இப்போது சொல்கிறேன் நன்றாக கேட்டுக் கொள்ளுங்கள்.இன்று இந்த நிமிடத்திலிருந்து ரக்‌ஷிதா என் மனைவி.இதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் சாட்சி.. நாளை காலை பேப்பரை பார்த்து ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளுங்கள்”. ரக்‌ஷிதாவின் தோள் பற்றி தான் தோளோடு சேர்த்துக் கொண்டு எல்லோரையும் ஒருமுறை எரித்துவிடுவது போல் பார்த்துவிட்டு முன்னேறியவனை

“ஒரு நிமிஷம் தம்பி” என்ற பாக்கியத்தின் குரல் தடுத்தது.வீட்டினுள் சென்று திரும்பியவரின் கைகளில் ஒரு மஞ்சள் கயிறு தென்பட்டது.

“இந்தாங்க தம்பி இதை கட்டுங்க... என் பொண்ணை அபாண்டமா பேசினவங்க வாய் எல்லாம் நல்லா எரியட்டும்”

நடுங்கும் கைகளால் அதை பெற்றுக் கொண்டவன் ரக்‌ஷிதாவின் குழப்பம் நிறைந்த முகத்தை ஒருமுறை பார்த்தான். ஆனால் அதில் அவனால் எதையும் சரியாக கிரகிக்க முடியவில்லை

பல உணர்வுகள் அவள்.கண்களில். கண்ணீர் திரைகட்டி நின்றிருந்தது.அவளின் அந்த கண்ணீரை பார்த்தவன் மனதில் “இனி என் ரக்‌ஷிதா அழக்கூடாது” என்று மட்டும் நினைத்து அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான்.

பாக்கியத்தின் கண்களில் ஆனந்தக்கண்ணீர் வழிந்தது
அன்புடன்
இந்திரா செல்வம்
 

New Threads

Top Bottom