Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் உயிரானவளே! - கதை

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் - 9

திவ்யா சரணை பற்றி கூறியவுடன் அவளுக்கு மீண்டும் கோபம் வர திவ்யாவோ..அச்சோ தேவையில்லாம இவளை கோபபடுத்திட்டேனே…இனி டூருக்கு சம்மதிப்பளோ இல்லையோ என்று கலங்கிக் கொண்டிருந்தாள்…திவ்யா.

சந்தியா அமைதியாக இருப்பதை கண்டு ஹே…என்னடி டிசைட் பண்ணிருக்க…?-திவ்யா. அவளின் கேள்விக்கு மவுனத்தையே பதிலாக தர கடுப்பானவள்…என்ன மேடம் நான் கேட்டதுக்கு பதிலே சொல்லாம இருந்தா என்ன அர்த்தம்..?- திவ்யா.

என்னடி டூருக்கு போக ரொம்ப ஆர்வமாக இருக்க போலயே…- சந்தியா. அதெல்லாம் இல்லை…ஆண்டிக்கு நீ என்ன பதில் சொல்ல போறனு தெரிந்து கொள்ளலாம்னு தான்…மீண்டும் அவளின் பதிலை எதிர்பார்த்தவளாய் கேட்க நான் போகலடி உனக்கு விருப்பம்னா நீ போய்ட்டு வா என்றாள் சந்தியா…அவளை ஆழம் பார்க்கும் விதமாக

திவ்யாவிற்க்கு தான் ஏமாற்றமாகியது…என்னடி இப்படி சொல்ற…ஆண்டி சார் எல்லாரும் வராங்க…ஜாலியாக என்ஜாய் பண்ணலாம்னு நினைச்சேன் என்றாள் திவ்யா இரங்கிய குரலில்…

அதான்டி..நீ போய் என்ஜாய் பண்ணு நான் வரல..-சந்தியா.என்ன விளையாடுகிறாயா…நீ வந்தா தான் நானும் போக முடியும் அவுங்க கூப்பிட்டது உன்ன தான்…நான் மட்டும் எப்படி போக முடியும்…?-திவ்யா.

ஹோ..அப்போ மேடம் போகற ஐடியாலதான் இருக்கிங்க…இப்பவும்…ஒரு வேளை ஆண்டி உனக்கு போன் பண்ணி கூப்பிட்டு இருந்திருந்தா நான் வந்தா என்ன வரலைனா என்னனு உடனே மூட்ட மூடிச்ச கட்டிருப்ப என கோபத்துடன் கேட்க…

சே..என்னடி இப்படி நினைச்சுட்ட என்ன பத்தி…நீ இல்லாம நான் என்னைக்கு போயிருக்கேன் எங்கையும்….திவ்யா..முன்னாடி அப்படிதான் இருந்த ஆனா இப்பவும் அப்படி இருக்கியானு யாருக்கு தெரியும்…-சந்தியா..அவளின் பேச்சிலே நன்றாக தெரிந்தது அவளின் கோபம்.

நான் இப்ப மட்டும் இல்ல எப்பவும் பழைய திவ்யாதான்…நான் 2 நாளு ஆபிஸ் வேளை எதுவும் இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸா போகலாம்னு தான் கேட்டேன்..நீ இவ்வளவு வொரி பண்ணுவனு தெரியல..சாரிடி.. நாம்ம போக வேண்டாம் ஆன்டிக்கு போன் பண்ணி நீயே சொல்லிரு என்றால் வருத்தமாக….திவ்யா அவளின் வருத்தமான முகத்தினை கண்டவள் ஆண்டியும் அவ்வளவு தூரம் கூப்பிட்டாங்க இவளும் ரொம்ப இகரா இருக்கா..என்ன பண்ணாலாம் என்று யோசித்தவாறே இருந்தவளை திவ்யா ஹே..! என்னடி யோசனை..அதான் போக வேண்டாம்னு சொல்லிட்டேன்ல அப்புறம் என்ன என கேட்க சந்தியாவோ…இல்லடி நம்ம போகலாம்

என்ன சொன்ன… என்று தன் காதுகளையே நம்ப முடியாமல் திவ்யா கேட்க…ம்ம் நம்மலும் அவுங்க கூட டூர் போகலாம்னு சொன்னேன் நீ மறுபடியும் கேட்டுடே இருந்தா முடிவை மாத்திக்குவேன் என்றவளை ஒரு கும்பிடு போட்டு தாயே அப்படி எதுவும் செய்து விடாதே என்று கூறியவாறு அணைத்து கொண்டாள் திவ்யா.

ஹே…பப்ளிக் பப்ளிக் என்று சந்தியா விலகி கொள்ள அடி போடி என்னைக்கும் நீ என் செல்லம் என அவளின் கன்னத்தில் திவ்யா முத்தமிட அங்கிருந்தவர்கள் அவர்களை ஒரு மாதிரியாக பார்த்தனர்.

பின் தலையில் அடித்துக்கொண்டு அவளை இழுத்து கொண்டு அங்கிருந்து கிளம்பினாள் சந்தியா. வீட்டிற்க்கு வந்தவுடன் சந்தியா லதாவை தொடர்பு கொண்டு தங்கள் வருகையினை தெரிவித்தாள். டூர் போகிறதுனு முடிவு செய்து விட்டோம் ஆனா எக்காரணத்திற்காகவும் அந்த காட்சில்லாகிட்ட(அதாங்க நம்ம சரண்)பேசிட கூடாதுனு முடிவெடுத்தவளாய் உறங்க சென்றாள்.

சரணிற்கு சந்தியா வரும் விசயம் தெரிந்தவுடன் வானில் பறக்காத குறையாக துள்ளி குதித்துக் கொண்டிருந்தான்.சந்தியாவுடன் தான் கழிக்க போகும் நாட்களை எதிர் நோக்கியே கனவு கண்டு கொண்டிருந்தவன் எப்போது தூங்கினான் என்றறியாமல் தூங்கி போனான்.

லதாவிற்கோ வெகு நாட்கள் கழித்து கிருஷ்ணனுடன் சேர்ந்து வெளியே செல்வதனால் அவரும் அந்த வார கடைசியை ஆவலுடன் எதிர்பார்திருக்க திவ்யாவோ சந்தியாவை டூரை பற்றி பேசியே சாகடித்து கொண்டிருந்தாள் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் சந்தியாவோ ஹே நம்ம போறது 2 நாள் டூர் அதுவும் இங்க இருக்கற ஊட்டி நீ பன்ற பில்டப் புலம்பலை பாத்தா எதோ வேல்ட் டூர் போற மாதிரில இருக்கு என்றவளின் வார்தைகளை அவள் கண்டு கொண்டது போல் தெரியவில்லை.

எதுவாக இருந்தாலும் சந்தியாவிற்க்கும் இந்த டூர் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்க அவளும் ஆர்வமுடன் அந்த வார கடைசியை எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தாள்.

நாமும் காத்திருப்போம்…
 

Dowlath Haseena

Saha Writer
Team
Messages
12
Reaction score
23
Points
1
அத்தியாயம் 10

எல்லோரும் ஏதோ ஒரு எதிர்ப்பார்ப்புடன் காத்திருந்த நாளும் வந்தது..சனிக்கிழமை அதிகாலை கிளம்புவதாக இருக்கவும் முன் தினமான வெள்ளி அன்றே அனைவரும் லதா கிருஷ்ணன் வீட்டிற்க்கு வந்து விட்டனர்.

சந்தியா தான் எடுத்த முடிவின் படி சரணின் புறம் மறந்தும் திரும்பவில்லை.திவ்யாவும், ஆதியும் ஒருவரின் பார்வையில் இருந்து மற்றொருவர் மறந்தும் விலகவில்லை...சரணிற்க்கு தான் இங்க யாருக்காக இந்த பிளான் போட்டதுனே தெரியலையே என்று புலம்பும்படியாகி விட்டது.

எல்லோரும் இரவு உணவிற்க்கு பின் தங்களுக்கென்று ஒதுக்கபட்ட அறைக்கு செல்ல சரண் காலைல 4 மணிக்கு கிளம்பனும் எல்லாரும் ரெடியா இருங்க என்று பொதுவாக சொல்லி விட்டு சந்தியாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு செல்ல அவளோ இதுக்கும் தனக்கும் சமந்தமில்லை என்பது போல் போனில் மூழ்கிருந்தாள்..சரண் ஒரு பெருமூச்சொன்றை விட்டபடி தன் அறைக்கு சென்றுவிட்டான்.

எவ்வளவு தான் வயதானாலும் எல்லோருக்குள்ளும் ஒரு குழந்தைதனம் உள்ளது..அது எதாவது ஒரு வடிவில் வெளியே தோன்றிக் கொண்டே இருக்கும்..அது இவர்களுக்கும் அன்று வெளிப்பட்டது..சிறு குழந்தைகளை போல எல்லோரும் தங்கள் பயணத்தை எண்ணி தூங்காமல் விழித்திருந்தனர்...

அதிகாலை மணிக்கு எல்லோரும் தாயாராகி ஹாலிற்க்கு வர அப்போது சரண் கிருஷ்ணனிடம் அங்கிள் வேன் அரேன்ஜ் பண்ணிட்டிங்களா இன்னும் வரவே இல்லை என கேட்க இல்லைப்பா நம்ம கார்லையே போகலாம்னு உங்க ஆண்டிதான் சொன்னா அதான் ஒன்னுக்கு ரெண்டு இருக்கு இல்லை அதிகமா யூஸ் பண்றதே இல்லை சோ..இந்த டிரிப்பாவது போக யூஸ் ஆகட்டுமே...கிருஷ்ணன்

என்ன ஆண்டி இப்படி பண்ணிட்டிங்களே என மனதில் நினைத்த படி சரி எப்படியும் ஆண்டி சந்தியாவை அவுங்க கூட வர சொல்லி கூப்பிடுவாங்க அதுனால நம்மளும் இவுங்க கூடயே போகலாம் என்றவாறு அங்கிள் நான் டிரைவ் பண்றேன் என்றபடி இவர்களுடன் சேர்ந்துக் கொள்ள சந்தியாவோ சே இவன் என்ன நம்ம இவுங்க கூட போகலாம் இவன் ஆதி சார்கூட வருவானு நினைச்சா இப்படி பண்றான்...சரி நம்ம ஆதிசார் கூடயே போகலாம்..ஆனா என்ன இதுக அடிக்கிற லூட்டியைதான் பார்க்க முடியாது...என்று நினைத்து கொண்டிருக்க லதா சந்தியாவிடம் வா சந்தியா நீயும் இதேகாரில் ஏறிக்கொள் என்று லதா கூற இல்லை ஆண்டி நான் திவ்யாகூட வரேன் என்று ஆதிகாரில் ஏறிக்கொண்டாள்..சரணிற்க்குதான் ஏமாற்றமாகியது...

பின் ஒரு வழியாக சரண், கிருஷ்ணன் மற்றும் லதா ஒரு வண்டியிலும் ஆதி, திவ்யா மற்றும் சந்தியா ஒரு வண்டியிலும் பயணம் செய்தனர். இரண்டரை மணிநேர பயணத்திற்க்கு பின் ஊட்டியை அடைந்தனர்..பின் ஒரு ஹோட்டலில் செக்கின் செய்து பிரஸ்ஸாகி விட்டு காலை உணவையும் முடித்து விட்டு சுற்றி பார்க்க கிளம்பலாம் என்ற முடிவெடுத்திருந்தனர்.

திவ்யா சரணிடம் சார் முதலில் எங்க போகிறோம்..டூடே பிளான் என்ன என கேட்க திவ்யா சார்லாம் கூப்பிடாதிங்க ஜெஸ்ட் கால் மீ சரண் என்றான்..அதற்க்கு திவ்யா கொஞ்சம் தயங்கியவாறு உங்களை சரண்லாம் கூப்பிட முடியாது என்றாள்...

ஏன்...?- சரண்..உங்களை பார்த்தால் அண்ணன் பிலிங்க் வருது சோ...அண்ணன் கூப்பிடட்டுமா..-திவ்யா..ஹோ..இவ்வளவு தானா..? தாராளமா கூப்பிட்டுக்கோமா என்ன மட்டுமில்லை ஆதியை கூட அண்ணனு கூப்பிட்டுக்கோ என்று சரண் கூற ஆதியோ பாவமாக சரணை பார்க்க திவ்யாவிற்கோ அதிர்சியாக இருந்தது...(ஏன் சரண் உனக்கு இவ்வளவு நல்ல எண்ணம்) திவ்யாவோ ச்சீ அண்ணனா..என்று நினைத்துக்கொண்டு அவசர அவசரமாக இல்ல நான் உங்கள மட்டும் அண்ணனு கூப்பிடுறேன் உங்க கிட்ட தான் அப்படி ஒரு பீல் வருது என்று கூறியவுடன் தான் ஆதிக்கு உயிரே வந்தது...

சரணோ சிரித்துக்கொண்டே சரி நம்ம இன்னைக்கு போக போறது அவலான்சி, காலஹட்டி வாட்டர் பால்ஸ், முதுமலை நேசனல் பார்க் அப்புறம் பைகாரா வாட்டர் பால்ஸ். இது எல்லாமே ஊட்டியில இருந்து கொஞ்சம் தூரமா இருக்க இடங்கள் அதுனால எல்லோரும் சீக்கிரமா பிரஸ்ஸாயிட்டு வாங்க..நம்மளுக்கு ஹெல்ப் பண்ண லோக்கல் கைடு ஒருத்தர அரென்ஜ் பண்ணிருக்கேன் அவர் இன்னும் 10 நிமிசத்தில வந்துருவாரு சோ சீக்கரமா எல்லாரும் கீழே வந்திருங்க..-சரண்

ஆதியும் சரணும் ஒரு அறையும்,சந்தியா மற்றும் திவ்யா ஒரு அறையிலும் கிருஷ்ணன் லதா தம்பதியினர் ஒரு அறையும் ஒதுக்க பட்டிருந்தது..பின் அனைவரும் சிறிது நேரத்தில் தாயாரகி வர அவர்களுக்கு முன் ஒரு இளைஞன் அவர்களுக்காக காத்திருந்தான்..சரனை நோக்கி வந்தவன் சார் ஐ ம் பாலா உங்களுக்கு சுற்றி பார்க்கரதுல உதவ வந்திருக்கேன்...

ஐ யம் சரண் என அறிமுகபடுத்திக்கொள்ள பின் அனைவரையும் அறிமுக படுத்திய பிறகு பாலா சரணிடம் சார் இன்னைக்கு போக போற இடம் அனைத்தும் கொஞ்சம் இண்டிரியர் ஏரியா அதுவும் இல்லாம பெண்ட் எல்லாம் அதிகமாக இருக்கும் சொ ஒரு லொக்கல் டிரைவர் அரேன்ஜ் பண்றது நல்லது என கூற லதா இப்போ அர்ன்ஜ் பண்ணுரதுக்கு லேட் ஆகும்ல அவுங்க வர என கூற இல்லைமா சீக்கரம் வந்திருவாங்க உங்க முடிவுதான் நீங்க சொன்ன அவ்ங்க பத்து நிமிசத்தில் இங்க வந்திருவாங்க என கூற சரணும் ஆமா ஆண்டி வரும் போதுதான் தனியா வந்தோம் இங்க சுற்றி பார்கிறதாவது ஒன்னாவே போகலாம் என கூறினான்..

ஒரு மினி வேனை அரேன்ஜ் செய்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பாலாவிடம் சந்தியா இப்போ போகற இடத்தை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன் என்றாள்.

அதற்க்குள் கிருஷ்ணன் சரண், உனக்கு தான் நேச்சர்னா ரொம்ப பிடிக்கும்ல இந்த மாதிரி பிளேஸ் பத்தி கரச்சு குடித்திருப்பைல எங்க கொஞ்சம் சொல்லு என்றார்.

கிருஷ்ணண் சரணிடம் இடத்தை பற்றி கூற சொன்னதும் சந்தியாவோ கண்டுக்காதவள் போல வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் காதுகளை மட்டும் கூர்மையாக்கிக்கொண்டு...

சரண் அவளை ஒரக்கண்ணால் பார்த்தவாறே கூற ஆரம்பித்தான்...இந்த லேக் சுமார் இரனூறு வருடத்திற்க்கு முன் அதாவது 1800களில் நடந்த மிகப்பெரிய மண் சரிவில் உருவாகி இருக்கு இந்த லேக் அதுனால தான் இந்த பெயரும் கூட...

இதை சுற்றி மலைகளா இருக்கிறதுனால் டிரக்கிங்க் போறதுக்கும் ஏத்த பிளேஸ்..அது மட்டும் இல்லாம அறிய வகை தாவர மற்றும் விலங்குகள் இதை சுற்றி உள்ள பகுதிகளில் காணபடுகின்றன...மீன் பிடிக்கறதுக்கும் ஏத்த இடமாக இருக்குது...சரண்

அப்போ செம நல்லா என்ஜாய் பண்ணலாம்...ஆதி.. ம்ம் என்ஜாய் நல்லா பண்ணு ஆனா ரொம்ப கேர்புல்லா பண்ணு...பிகாஸ் அங்க அட்டைங்க அதிகம் - சரண்

ஆமா சார் ரொம்ப சரியா சொன்னாரு...அங்க கேர்புல்லா இருக்கறது ரொம்ப முக்கியம்..- பாலா. அவலாஞ்சி வந்ததும் எல்லோரும் இறங்கினர்..இயற்கையின் அழகில் மெய் மறந்து நின்றுவிட்டவர்களிடம் என்ன எல்லாரும் இப்படியே நின்னுட்டே இருக்க போறிங்களா...கிட்ட போய் பார்க்கலையா....பாலா

அங்கு சிறிது சுற்றி பார்த்துவிட்டு ஆதி, சந்தியா,திவ்யா,பாலாவும் மீன் பிடித்து விளையாட ஆரம்பித்தனர்..இடையில் திவ்யாவை ஆதி சைட் அடித்துக்கொண்டிருக்க கிருஷ்ணணும் லதாவும் சிறிது தூரம் ஏரி கரையை ஒட்டி நடக்க ஆரம்பித்தனர்.

சரண் நிலைமைதான் கவலைகிடமாக இருந்தது...சந்தியாவிடம் பழக வாய்ப்பு கிடைக்கும் என்று பார்த்தால் அவள் இவனை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை... இவன் பிளானை ஆதி எக்ஸிகியூட் செய்வது போல தோன்றியது சரணிற்க்கு..

சரி இப்படியே நின்னுக்கிட்டு இருந்தா வேலைக்கு ஆகாது அவளிடம் பேச டிரை பண்ணுவோம் என எண்ணிக்கொண்டு அவளின் அருகில் சென்று ஹீ..ஹூம் என்று தொண்டையை சொருமிக்கொண்டு தன் வருகையை தெரிவித்த்தான். அவள் என்ன என்பது போல் அவனை பார்க்க மீன் புடிக்க உங்களுக்கு எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா...சரண்

நோ..தேங்க்ஸ் சார்.. என அழுத்தாமாக சந்தியா கூற அவன் அடுத்து பேச ஆரம்பிக்கும் முன் எங்கிட்ட அனாவசியமாக பேசற வேலையெல்லாம் வேண்டாம்..நான் ஆண்டி அங்கிள்க்காக தான் வந்தேன்..நீங்க உங்க வேலைய மட்டும் பாருங்க...அது தான் எல்லாருக்கும் நல்லது..என்று கூறி பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட்டாள்.

சரணிற்க்கு தான் சங்கடமாகியது.. சோகமாக அவள் போன திசையை பார்த்து நின்றிருந்தவனின் அருகில் வந்து ஹே..மச்சி விடுடா..நீ அன்னைக்கு பேசுனது ரொம்ப ஹ்ர்ட் ஆயிருக்கு போல விடுடா..கொஞ்ச நாள் போனா சரியாயிடும்..

பின் சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்ப லதா அடுத்து எங்க போகிறோம் என பாலாவிடம் கேட்க அடுத்து தொட்டபெட்டா அப்புறம் காலஹட்டி வாட்டர் பால்ஸ் என்றான் பாலா.

அனைவரும் வேன் நின்றிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.. சந்தியாவும்,திவ்யாவும் பாலாவின் பின் செல்ல ஆதியும் சரணும் அவர்களை தொடர கடைசியாக லதாவும்,கிருஷ்ணனும் வந்தனர்..இவர்களின் அரட்டை மற்றும் விளையாட்டிற்க்கு இடையில் செல்பி எடுக்கவும் தவறவில்லை...சந்தியாவிற்க்கு ஏதோ காலில் முள் குத்துவதை போல் இருந்தது..எனினும் அவள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அவர்களுடன் அரட்டையடித்துக்கொண்டு நடந்து கொண்டிருந்தாள்.

அவளையே கவனித்து கொண்டிருந்த சரண் இதை கவனிக்க தவறவில்லை..அவள் காலை கண்ட சரண் சந்தியா என கத்த ஹே..உன்ன என் கூட அனாவசியமாக பேச கூடாதுனு சொன்னேன்ல அப்புறம் ஏன் தேவையில்லாம என் பெயரை ஏலம் விடுற..என பொரிந்து தள்ளினாள் சந்தியா.

ஹே உன் காலில் அட்டை..என கத்த அவளும் பதற்றமடைந்து கத்த ஆரம்பித்தாள்..அவள் கத்தலில் எல்லோரும் வந்திட லதா வாங்க ஆஸ்பிட்டல் போகலாம் என்றார்..பாலாவே இல்லை மேடம் இங்க இருந்து ஆஸ்பிட்டல் ரொம்ப தூரம் என் கூற லதா கலவரமடைந்தார்.

ஆதி எதாவது தீப்பெட்டி,இல்லை லைட்டரிருந்தா தாங்க என கூற இல்ல அப்படி செய்ய கூடாது அப்படி பண்ணா அது ரிலிஸ் பண்ற லிக்விட் ல இருந்து பாக்டிரியா ஸிப்ரெட் ஆகி கடிவாய்க்குள்ள போக சான்ஸ் இருக்கு என்றவாறு அதனுடைய தலைபகுதியை தன் விரல் நகம் கொண்டு அழுத்த அது கடிவாயை விட்டு வில ஆரம்பிக்கும் போது அதை தூக்கி எறிந்தான். பின் அந்த பகுதியில் இரத்த கசிவு ஏற்பட லதா பிலிடிங்க் வேற ஆகுது என பதறினார். சரணோ உங்க யார்கிட்டயாவது சோப்பு இருக்கா என கேட்க திவ்யா தர அதை கொண்டு கடிவாயை கழுவி விட்டான்.. இடையில் சந்தியாவின் எதிர்ப்பை அவன் பொருட்படுத்தவே இல்லை

பின் ஒரு துணியால் கடிவாயை கட்டிவிட்டான்...பின் கிருஷ்ணன் சரிப்பா ஹோட்டலுக்கே போயிடலாம் என் கூற சந்தியாவோ எனக்கு ஒண்ணும் இல்லை அங்கிள்..வேணும் என்றால் ஹாஸ்பிட்டல் போய் ஒரு டி.டி போட்டு போகலாம் என்று கூற பின் சம்மதித்தனர் லதாவும்,கிருஷ்ணணும்

அங்கு ஒரு மருத்துவமனைக்கு சென்றனர்..டாக்டர் சந்தியாவிடம் உங்களுக்கு யாரு பர்ஸ்ட் எய்ட் பண்ணது என கேட்க அவர் வெளிய இருக்காரு..என்றாள்..சரியான முதலுதவி பண்ணிருக்காரு எல்லோரும் அட்டை ரிமுவ் பண்ண நெருப்பு தான் யூஸ் பண்ணுவாங்க..ஆனா அது ரொம்ப தவறு..இப்போ ஒரு பிராப்ளமும் இல்லை எதுக்கும் ஒரு டிடி போட்டுக்கோங்க..அப்புறம் இந்த மருந்தை காயத்துல போடுங்க என்று கூறி காயத்திற்கு கட்டு போட்டுவிட்டார்.. பின் ஒரு ஹோட்டலில் மதிய உணவை முடித்துவிட்டு தொட்டபெட்டாவும்,முதுமலை என சுற்றி பார்த்து விட்டு இரவு 8 மணிக்கு மேல் ஹோட்டலை அடைந்தனர்.பாலா தான் நாளை வருவதாக கூறி கிளம்பினார்.

எல்லோரும் தங்கள் அறைக்கு செல்வதற்க்கு முன் சரண் எல்லோரும் பிரஸ்ஸாகிட்டு கீழே வந்திருங்க ஷாப்பிங்க் போய்டு டின்னர் முடித்துவிட்டு வரலாம் என்று கூறினான்.

சந்தியா நீ ரெஸ்ட் எடு..திவ்யா நீ அவளுடைய துணைக்கு உடன் இரு. உங்க ரெண்டு பேருக்கும் டின்னர் ரூம்க்கு அனுப்பறேன் நீங்க நாளைக்கு ஷாப்பிங்க் பண்ணிக்கோங்க என்று கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் சென்றுவிட்டான் சரண். ஏனோ சந்தியாவிற்க்கும் எதிர்த்து பேச தோன்றவில்லை அதனால் அமைதியாக அறைக்கு சென்று விட்டாள்..

பிரஸ்ஸாகி விட்டு இன்று எடுத்த போட்டோக்களை பார்த்து கொண்டிருக்கும் போது காலிங்க் பெல் அடித்தது.. திவ்யா சென்று பார்க்க சரண் அனுப்ப சொன்னதாக சாப்பட்டை அறைக்கு வந்து கொடுத்துவிட்டு சென்றார் ஹோட்டல் ஊழியர் ஒருவர்.

சந்தியாவிற்க்கு இன்றும் சரண் புதிதாக தெரிந்தான்...முதல் நாள் சந்திப்பில் அவ்வளவு ரூடாக நடந்து கொண்ட சரணா இன்று கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் என் காலை பிடித்து முதலுதவி செய்தது...அப்போ இவ்வளவு கேரிங்கான ஆளுனா அன்னைக்கு ஏன் அப்படி நடந்துக்கணும்ஒரு வேளை தன் வேலை காரணமாக யாரையும் நம்ம கூடாது என்பதினாலும் கொஞ்சம் கடுமையாக இருந்தால் தான் குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும் என்பதினாலோ...அப்படியேய்ருந்தாலும் என்னை எப்படி சந்தேகபடலாம்.. என் மேல நம்பிக்கை இல்லையா..என கோபம் கொண்டாள்...பாவம் அது அவர்களின் முதல் சந்திப்பு என்பதை இந்த முறை மறந்தால் போலும்.....எப்படி எண்ணினாலும் அவளுக்கு குழப்பமே மிஞ்சியது... பின் சரண் அனுப்பிய உணவை உண்டுவிட்டு ப்டுக்கைகு சென்றவளுக்கு மீண்டும் அவன் நினைவே ஆட்கொள்ள பயண களைப்பினால் அவளையும் அறியாமல் தூங்கி போனாள்..

ஷாப்பிங்க் சென்றவர்கள் அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொள்ள சரண் சந்தியாவிற்க்காக ஒரு சேலையும் அதற்க்கு மேச்சிங்கான நகைகளையும் எடுத்தான்..அவற்றை யாருக்கும் தெரியாமல் பத்திரபடுத்திக்கொண்டான்..அவள் என்னைக்கு இருந்தாலும் தனக்குதான்..தங்களுக்கு திருமணம் நடக்கும் போது அவள் உடுத்த வேண்டி அவ்ளுடன் முழு பொழுதையும் முதல் முறையாக கழித்த இன்றே அதை வாங்க வேண்டும் என்று எண்ணிதான் ஷாப்பிங்க் செல்ல முடிவெடுத்தான் தான் மட்டும் சென்றாள் நன்றாக இருக்காது அதுவும் இல்லாமல் என்ன காரணம் சொல்லி செல்வது என் யோசித்து தான் இவ்வளவு அழைந்த பிறகும் அனைவரையும் ஷாப்பிங்க் இழுத்து வந்திருக்கான்...

(நீ இவ்வளவு நம்பிக்கையா அதுக்குள்ளே கல்யாண பட்டு எல்லாம் வாங்கிறது இருக்கட்டும் அதுக்கு சந்தியா ஒத்துகணுமில்லை..காலம் தான் பதில் சொல்லும் உன் நம்பிக்கை நிறைவேறுமா..இல்லை கனவாக போகுமா என்று)

 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
அத்தியாயம் - 1

சூரியன் தன் கதிர்களை வீசி இருளை அகற்றிட பறவைகள் இரைத்தேடி பயணப்படும் அந்த காலை வேளையில் தனது உடற்பயிற்சியை முடித்து விட்டு தன் முதல் நாள் வேளைக்கு தயாராகி கொண்டிருந்தான் சரண் IPS. டிரைனிங் முடித்து விட்டு கோவையில் DSP யாக பதவியேற்று கொண்டுள்ளான்.



சரண் ஆறடி உயரத்தில் போலிஸிற்க்கு உரிய கம்பீரத்தோடு இருப்பவன். பார்வையில் ஓர் தீவிரம் அளவாய் வெட்டப்பட்ட மீசை …மொத்தத்தில் ஒர் ஆணழகன்.




சரணிற்கு உடன்பிறந்தவர்கள் யாரும் இல்லை. பெற்றோர்கள் விவாகரத்தானவர்கள். நண்பர்கள் பட்டாளம் என்று பெரிதாக எதுவும் இல்லை என்றபோதும் உயிர் தோழன் ஒருவன் உள்ளான் பெயர் ஆதி. சரணின் பள்ளி தோழன். அவன் புலம்பாத நாள்களே இல்லை ஊர்ல பத்து பதினைந்து பிரண்ட்ஸ் வச்சு இருக்கவன் எல்லாம் சந்தோசமா இருக்கான் ஆனா ஒரே ஒரு பிரண்ட் வச்சுக்கிட்டு நான் படுற பாடு அய்யுய்யோ...... 🙄 🤣 ஆனாலும் அவனும் இவனை பிரிந்து இருக்க மாட்டான் இவர்கள் பிரிந்தது சரணின் பயிற்சிக்காக ஹைதராபாத் சென்ற போது தான் அதுவும் அப்போது ஆதி முதுகலை படித்து கொண்டிருந்ததினால்தான்.



சரண் கிளம்பும் நேரத்தில் சரியாக ஆதி வந்தான். "வா.. மச்சான்..! எப்படி டா மனசுல நினைச்ச உடனே வந்து நிக்குற ம்ம்..நம்மக்குள்ள அப்படி ஒரு wavelength ஏன்டா?"..சரண்.



"கருமம் எல்லாம் என் நேரம் இந்நேரத்துக்கு ஒரு பொண்ணோட wavelength செட்டாகி ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க வேண்டிய ஆளு யார் கூட செட்டாகுது பாரு"..ஆதி.



அதான் ஓன்னும் வெர்க்கவுட் ஆகலல அப்புறம் என்ன புலம்பல் என்றான் சரண்.
ங்ங.. என்று ஆதி புரியாமல் விழிக்க "மச்சி! நீ மைண்ட் வாய்ஸ் ன்னு நினைச்சு சத்தமா பேசிக்கிட்டு இருக்கடா"..சரண்.
சாரி மச்சான் அசடு வழிந்தான் ஆதி.



இருவரும் ஒரு வழியாக கிளம்ப சரணை DSP ஆபிஸில் விட்டு விட்டு அலுவலகத்திற்கு சென்றான் ஆதி.



இங்கு இவர்கள் இப்படி இருக்க நம் நாயகனின் தூக்கத்தை விரைவில் துரத்த இருக்கும் நம் நாயகியோ தூக்கத்தில் தன்னை தொலைத்து கொண்டிருந்தாள்.
சந்தியா எழுந்திருடி மணி எட்டு ஆச்சு அச்சோ ஆண்டவா இவளை எழுப்புறது உள்ள என்னோட பாதி ஆயுள் முடிஞ்சுருமே புலம்பி கொண்டிருந்தார் பார்வதி.சந்தியாவின் அம்மா. சந்தியாவிற்கு அப்பா இல்லை அம்மா மட்டும் தான்.உடன் பிறப்புகள் யாரும் இல்லை மிகவும் கஷ்டப்பட்டு தான் வளர்த்தார் பார்வதி இருப்பினும் தந்தை இல்லை என்ற குறை தெரியாமல் வளர்த்திருக்கிறார்.



சந்தியாவும் மிகவும் பொறுப்பு உள்ளவள் தூங்கும் விசயத்தில் மட்டும் கொஞ்சம் வீக் (நம்மல போல). ஆமாங்க இடியே விழுந்தாலும் அவளை 8 மணிக்கு முன்னால் எழுப்புறது கஷ்டம். கஷ்டம் மட்டும் அல்ல முடியாத காரியமும் தான்.
சந்தியா ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனியில் M.D க்கு P.A வாக வேளை செய்யும் ஒரு 23 வயது பெண்



எத்தனை மணிக்கு எழுந்தாலும் ஆபிஸிற்க்கு சரியாக 9.00 மணிக்கெல்லாம் வந்து விடுவாள்.



எந்த வேளை செய்தாலும் ஒரு நேர்த்தியுடன் செய்து முடிப்பாள். அவளின் செயல்களே கூறும் இவற்றை முடித்தது அவள் என்று..



சந்தியா ஐந்தரை அடி உயரம், மை தீட்டிடாமல் மையல் கொள்ள செய்யும் விழிகள்,புவிதழ் உதடுகள் அதனுள் முத்து போன்ற பற்கள். ஒப்பனைகள் இல்லாமலும் காண்போரை கவர செய்யும் இயற்கையான அழகு. புத்திசாலியான அதே சமயத்தில் கொஞ்சம் அடக்கமான பெண், ஏன் இந்த கொஞ்சம்ன்னா அவளா எந்த வம்புக்கும் போக மட்டாள் ஆனா அதே சமயம் வர வம்ப விட மாட்டாள்.



இனி சரண் சந்தியா வாழ்வில் நடக்கும் விசயங்கள் அவர்களின் வாழ்வை எப்படி மாற்றி அமைக்க போகின்றன என்பதை அடுத்தடுத்த அத்யாயங்களில் தெரிந்து கொள்ளலாம்.
hero and heroin intro semma akka... :love: :love: 👌 👌......
 

Lammu

New member
Messages
21
Reaction score
16
Points
3
அத்தியாயம் - 4

சந்தியா பேசமுடியமால் தவித்துக்கொண்டிருக்க திவ்யாவை கூப்பிடு என்றார் M.D கிருஷ்ணன். திவ்யாவிற்க்கு சற்று பதற்றமாக இருப்பினும் எப்படியேனும் சொல்லித்தானாக வேண்டும்…நான் செய்த தப்பிற்க்கு நானே பொறுப்பேற்க வேண்டும் என நினைத்தவளாய் கிருஷ்ணனின் அறைக்கு சென்றாள்.

“திவ்யா உள்ளே வர கிருஷ்ணன் உங்க ரெண்டு பேர் மீதும் எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன்”…..இருவரும் மனதில் அச்சோ இவரும் நம்மல அந்த காட்சில்லா(சரண்) மாதிரி நினைத்துக் கொண்டாரா என பதறிய படி சார் நாங்க பணத்தை…….என முடிப்பதற்க்குள் நீங்க பணத்தை “என்ன பண்ணீங்கனுதான் தெரியுமே”…. –கிருஷ்ணன்.

“அது இல்ல சார்”-.திவ்யா. “நீ பேசாத…கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம இவ்வளவு பெரிய அம்மௌண்ட்டை தொலைச்சுட்டு வந்து இருக்க”, கிருஷ்ணன். அவர் திட்டுவதை விட அவர் தங்களை திருடியதாக எண்ணி விடவில்லை என்பதே பெரிய ஆறுதலாக இருந்தது இருவருக்கும்…

“சரி இப்போ பணத்துக்கு யாரு பொறுப்பேற்க போறிங்க”, கிருஷ்ணன். இருவரும் ஒரே நேரத்தில் நானே ஏத்துக்கிறேன் என கூற கிருஷ்ணன் சற்று திகைப்புடன் “என்ன உங்க இரண்டு பேருக்கும் அம்மௌண்ட் எவ்வளவு என்பது நினைவில் இருக்கா இல்லையா….? கொஞ்சம் நஞ்சம் இல்ல முழுசா பத்து இலட்சம்” என்றார்.

சந்தியா உடனே “தெரியும் சார்..இருந்தாலும் நாங்க செஞ்ச தப்ப நாங்க தான சரி செஞ்சு ஆகணும்”

“ம்ம் அது சரி…அப்போ காசு கொடுக்க நீ ரெடி அப்படித்தானே!”, கிருஷ்ணன்

“ஆமா சார்…”.சந்தியா….

“ஆனா வாங்க நான் ரெடி இல்லையே!…எனக்கு உங்க காசு எதுவும் வேண்டாம்…இனிமேல் ஒழுங்கா வேலை பாருங்க அது போதும்..இனி காசு விசியத்துல ரொம்ப கேர்புல்லா இருங்க” கிருஷ்ணன்.





“சார் அப்போ அ….அம்மௌண்ட்?” என தயங்கியவாறே திவ்யா கேட்க “அதான் கிடைச்சிருச்சே!!” என இன்ப அதிர்ச்சி தந்தார் கிருஷ்ணன்

என்ன….??இருவரும் அதிர்ந்தவாறு கேட்க ஆமா…”ஒருத்தர் திவ்யா போன அதே பஸ்ல இருந்தவர் அந்த பணப்பையில இருந்த நம்ப ஆபிஸ் அட்ரஸ் பாத்துட்டு கொண்டு வந்து கொடுத்துட்டு போய்ருக்காரு” கிருஷ்ணன்

இருவருக்கும் உயிர் திரும்பியதாக தோன்ற சந்தியாவோ யார் சார் அவரு என கேட்டாள்… அது எதுக்குமா?..-கிருஷ்ணன். “இல்ல சார் ஒரு தேங்க்ஸ் சொல்ல தான்”, திவ்யா.

“அவரு யாருனுலாம் டிடயல்ஸ் சொல்லல அவருக்கு ஏதோ முக்கியமான வேலை இருக்குனு போய்டாரு அவரு பேருக்கூட ஏதோ சொன்னாரு… மறந்துட்டேன்…. தேங்க்ஸ் சொல்றது எல்லாம் இருக்கட்டும் இதுவே பர்ஸ்ட் அண்ட் லாஸ்டாக இருக்கட்டும்” என இருவரையும் மீண்டும் ஒரு முறை எச்சரித்து அனுப்பினார். கிருஷ்ணன்.

இரவு சரண் வீட்டில்.,

“என்னடா எதையோ யோசிட்டே இருக்க?”- ஆதி,அது வந்து மச்சி என நகத்தை கடித்தவாற சிறிது வெட்கத்துடன்…. ஒ என சரண் பேச ஆரம்பிக்கும் முன்….. “யே.கருமம் இது என்னடா புதுசா வெட்கம்லாம் படுற..பாக்க முடில…என்னடா யோசிக்கறனு கேட்டதுக்கு இதைலாம் பார்க்கனுமா” என்றான் ஆதி.

“ஆமா….காலை நல்லா தான ஸ்டேசன் போன இப்போ எங்கயாவது அடி பற்றுச்சா” என சரணின் தலையை தொட வந்தவனின் கைகளை இதயத்தின் அருகில் வைத்து “தலைலாம் எதுவும் ஆகல மச்சி ஆனா இங்க தான் ஏதோ பண்ணுது அவளை பார்த்துல இருந்து” என்றான் சரண்.

வாட்..?என்ற ஆதியிடம் “ஆமாடா! அவளை பார்த்ததிலிருந்து ஏதோ ஹார்ட்க்கு டேரக்டா கரண்ட் சாக் கொடுத்தா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு மச்சி இது என்ன உணர்வுனே சொல்ல தெரியலைடா….ஆனா இதுவும் புதுசா செம பீல்லா இருக்குடா”, சரண்



“என்ன உனக்கு ஒரு பொண்ண புடிச்சு இருக்கா? அவுங்கல எங்க பார்த்த? நீ இப்படி ஒரு பொண்ண பத்தி சொல்றது எனக்கு கனவாக இருக்குமோனு ஒரு சந்தேகம் இருக்கு ஒரு நிமிடம் கிள்ளி பார்த்துக்கிறேன்” என்றவனை ஒங்கி ஒரு அறை அறைந்து கனவு இல்ல மச்சி என்றான்…சரண்

ஆதி கையை கன்னத்தில் வைத்தவாறு ஏன்டா….என பாவாமாக பார்த்தான்…உன் டவுட்டை கிளியரை பண்ணத்தான்டா சிரித்துக்கொண்டே கூறிய சரணிடம் அது சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்க?-ஆதி

அவளை இன்னைக்கு தான்டா முதல் தடவையா பார்த்தேன்…எப்படி இருந்தா தெரியுமாடா என்றவனின் மனதில் சந்தியாவின் முகம் தோன்ற அவன் உதட்டில் புன்னகை அரும்பியது…..

சந்தியாவின் நினைவில் இருந்த சரணை ஆதியின் உலுக்கல் மூலம் நினைவு வந்தவனை என்னடா டிரிம்க்கு போய்டியா?...-ஆதி...ஈஈஈ…ஆமா மச்சி என்றான் சரண் அசடு வழிந்த முகத்துடன்.

அது சரி பார்த்த முதல் நாள்ளே இப்படி ஆகிட்ட…இனி போக போக மெண்டல் ஆகிருவ போல…ஆதி

அவனை முறைத்த சரணை கண்டுக்கொள்ளாமல் “சரி கதையை சொல்லு பர்ஸ்ட்” என்றான் ஆதி.

அவளை ஸ்டேசன்ல தான்டா பார்த்தேன், பேரு சந்தியா…அவளை பர்ஸ்ட் பார்த்ததுமே மனசுல மின்னல் வெட்டுன மாதிரி இருந்துச்சு…சும்மா தேவதை மாதிரி இருந்தாடா…அவகிட்ட ஏதோ ஒரு பதற்ற்ம் அவமுகத்துல அவ்வளவு டென்சன்”, சரண்.

ஆதி அடப்பாவி போலிஸ் ஸ்டேசன் வரவுங்க சிரிச்சுட்டா வருவாங்க!!…

“அது இல்லடா அவ்வுளோ டென்சன் நிறைந்த முகமும் அவளை அவ்வளவு அழகா காட்டுச்சு….ஆனா அது எல்லாத்தையும் விட ஏதோ ஒன்னு அவகிட்ட இருக்குடா….அவ கவனத்தை நான் ஈர்க்கனும் அப்படிங்கறது மட்டும் தான் அப்போ தோனுச்சு”-சரண்

அதுசரி…சார் அப்படி என்ன பண்ணிங்க அவங்க கவனத்தை கவர என ஆதி கேட்க நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தான் சரண்…

அதைக் கேட்ட ஆதியோ தலையில் அடித்துக்கொள்ளாத குறையாக என்னடா ரோபோக்குள்ளையும் ஒரு ரோமியோ இருக்குனு பார்த்தா இப்படி பண்ணிவச்சுட்டு வந்து இருக்க இந்த லட்சணத்தில் காதல் வேற…

அவுங்க உன் மேல கொலை வெறில இருப்பாங்க….உனக்குதான் பொண்ணுங்ககிட்ட ஒலுங்கா பேச கூட வராதே….கம்முனு எனக்கு போன் பண்ணிற்க வேண்டியதுதானா……?அத விட்டுட்டு இப்படி சொதப்பி வச்சுட்டு வந்து இருக்க….

தன் நண்பன் முதல் முதலாய் ஒரு பெண் மீது காதல் வயப்பட்ட பெண்ணிடம் தன் மதிப்பை குறைத்துக்கொண்டுள்ளான் என்ற ஆதங்கத்துடன் கேட்டான் ஆதி..

அதற்கு சற்றும் அலட்டிக்கொள்ளாமல் சரண், நான் நார்மல்லா எல்லார்கிட்டையும் நடந்து கொள்கிற மாதிரி கம்ப்ளெண்ட் வாங்கி பைல் பண்ணி வச்சுட்டு அனுப்பி இருந்தா அவ என்ன பத்தி யோசிச்சிருக்க மாட்டாளே ஆனா இப்போ திட்டிட்டாவது என்ன பத்தி யோசிப்பாளே என்று கூறிய சரணை வித்யாசமாக பார்த்தான் ஆதி…

டேய் நீ நினைக்கற மாதிரி இது பிலிம் இல்லை மோதலில் ஆரம்பிக்கறது எல்லாம் காதல்ல முடியும் அப்படினு நினைக்கறதுக்கு….ரியல் லைப் ஒரு வேளை அவங்க உன்ன பத்தி யோசிக்காம இருந்தா..இல்ல உன் மேல தப்பான ஒரு அபிப்ராயம் வச்சு இருந்தா என்ன பண்ணுவ…..?ஆதி

ஏன்டா நானே இப்போ தான் முதல் முதலா ஒரு பொண்ண பார்த்து லவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன்…இப்படி முதலையே அபசகுணமாவ பேசற….-சரண்

அது இல்லடா ரியாலிட்டிய புரிஞ்சுக்க….சரி நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு…-ஆதி

சரணிற்க்கும் ஆதி சொல்வதும் சரியாக பட்டது அவன் சொன்னவாறே நடந்தால் என்ன செய்வது என்று எண்ணும் போதே கலக்கமடைந்தான்….

சந்தியா சரணை பற்றி நினைப்பாளா….? இல்லை ஆதி கூறியது போல் சரணை பற்றி தவறாக எண்ணிகொள்வாளா…? அடுத்த அத்யாயத்தில் சந்திப்போம்…
Good going
 
Top Bottom