Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


என் விழியின் மொழி அவள் - கதை

Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 20

செந்தூர பாண்டியன் தனது மகன் அரணவ் இறப்பு செய்தி கேட்டு அங்கே மயங்கி சரிந்தார்,அவரை மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு சென்றான் அபிணவ், மருத்துவர்கள் ICU வில் பாண்டியனுக்கு சிகிச்சை அளித்து கொண்டு இருக்க அபிணவ், தான் கண்முன்பு நடப்பது எதுவும் புரியாது, குழம்பி தான் நின்றான்.

இது எப்படி சாத்தியம், எவ்வாறு வேந்தனுக்கு தனது தம்பி அர்ணவ் இருந்த இடம் தெரிய வந்தது என அவன் மனதில் நினைத்து கொண்டு இருக்க, ICU வில் இருத்து வெளியில் வந்த மருத்துவர்கள் பாண்டியனுக்கு ஏற்பட்ட மயக்கம் அதிர்ச்சியில் ஏற்பட்டது என கூறி அவரை நன்கு பார்த்து கொள்ள சொல்லிவிட்டு அங்கு இருந்து சென்றார்.

ICU உள்ளே சென்ற அபி அவனது தந்தையின் அருகில் அமைதியாக அமர்ந்து, அவரை பார்த்து கொண்டு இருந்தான்.

வேந்தன் செய்த செயல் இவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை, என்று தனக்கு கொடுக்க பட்ட இரசிய பணியினை அரம்பித்தானோ அன்றில் இருந்து தனது எதிரிகளை ஒரு ஒருவரையும் தனி தனியாக கண்காணிக்க அவர்களின் செயல் பாடுகளை தனக்கு தெரியப்படுத்த 5 இரசிய உளவாளிககளை(secret spy) நியமித்து இருந்தான், மேலும் இவர்களின் ஒரு ஒரு நடவடிக்கையும் வேந்தனின் உளவாளிகள் மூலம் அவனுக்கு அறிவிக்கபட்டு கொண்டு தான் இருக்கிறது. அவனின் எல்லா செயலுக்கு மகுடம் வைத்தது போன்று தனது எதிரிகளின் தொலை பேசி அழைப்புகளை ஒட்டு கேட்டகவும்(phone taping), அவர்களின் போன் இருக்கும் இடத்தை ட்ராக்(tracking) செய்யவும், ஏற்பாடு செய்து இருந்தான். அவர்களுக்கு வரும் போன் அழைப்புகள் மற்றும் இவர்கள் யாருக்கும் போன் செய்கிறார்கள், எங்கு செல்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதையும், அவர்களின் திட்டம் என்ன, அதனை செயல்படுத்த அவர்கள் மேற்கொள்ள போகும் நடவடிக்கைகள் அனைத்தையும் அறிந்து கொண்டு தான் வேந்தன் தனது திட்டத்தை செயல் படுத்தினான்.

அவ்வாறு போன் அழைப்பை ட்ராக் செய்யும் பொழுது தான் அரணவ் இருந்த இடம் தெரிந்து அவனை வேந்தன் கொன்றான்.

சிறிது நேரம் கழித்து வீடு வந்து சேர்ந்த பாண்டியன் மற்றும் அபி ஹாலில் இருத்த சோபாவில் அமர்த்தனர். இருவரும் வேறு வேறு மனநிலையில் இருந்தனர், அபிணவ் பொறுத்த வரை வேந்தன் மூலம் தனது மரணம் நேர்ந்து விட்டால் என்ன செய்வது, தனது இரு சகோதர்களை கொலை செய்தவனுக்கு தான் எம்மாத்திரம், என அவனுக்கு உள்ளக்குள் உயிர்
நடுக்கமும், உயிர் பயமும் பிறந்தது உண்மை தான். தன் உயிர் எவ்வாறு, எப்பொழுது பிரிய போகுது என தெரியாமலே மண்டையை பியித்து கொண்டு அமர்ந்து இருந்தான்.

பண்டியனுக்கோ இதற்கு மேல் எண்ணம் இருந்தது, ஏற்கனவே இரண்டு மகன்களின் மரணத்தை பார்த்து ஆகிவிட்டது, இருக்கும் ஓரு மகனின் உயிரையவது எந்த எல்லைக்கு சென்றவது காக்க வேண்டும், இல்லைஎனில் தனக்கு கொல்லி போட யாரும் இருக்க மாட்டார்கள். கொல்லி போட வேண்டிய கடைசி மகனை ஏற்கன்வே இழந்து ஆகிவிட்டது, தான் இறந்தால் கொல்லி போட இருக்கும் முதல் மகனையவது காக்க உறுதி கொண்டது அந்த தந்தை உள்ளம். தனது மகன்களின் நிலையை எண்ணி ஒரு தந்தையாக அவர் மனம் கனத்து தான் போனது,

இதற்கு நேர் மாறாக வேந்தன் அவன் உயிரை உலகின் எந்த எல்லைக்கு சென்று கொன்றே தீர்வது என்று நினைத்து, அவனுக்காக மரண சாசனத்தை தனது கைகளால் எழுத ஆரம்பித்து இருந்தான். உலகில் மிக மோசமான, கொடூரமான இது வரை யாரும் பெற முடியாத வகையில் இருக்கும் உயிர் துறக்கும் முறையை தேர்ந்து எடுத்தான். இவ்வாறு கொல்ல படுவதற்கு அபிணவ், தற்கொலை செய்து கொண்டு செத்து இருத்தால் அவன் சாவு நிம்மதியாகவும், அமைதியாகவும், இருந்து இருக்கும், அவன் ஆன்மா சாந்தி அடைந்து இருக்கும் போல, வேந்தன் அளிக்கும் தண்டனையை அவன் அனுபவத்தால் கண்டிப்பாக அவன் ஒரு ஒரு நொடியும் செத்து தான் பிழைப்பான், தற்கொலை செய்து கொள்வதே மேல் என் நினைத்து இருப்பான்.

இதற்கு எதிர்மாறாக வேந்தன் தான் செய்ய நினைத்தை செய்து முடித்து, அபிணவ் என்னும் இறைக்காக வேட்டை ஆடும் சிங்கத்தின் வெறியுடன், கோபத்துடன், தனது இறைக்காக காத்து கொண்டு இருந்தான்.

இரண்டு நாட்கள் பாண்டியன் அபியை தனது வீட்டின் கீழ் உள்ள ரசகிய நிலவரையில் பாதுகாத்து வைத்து இருந்தார், இந்த அறை அவர்களின் சதி திட்டங்களை, குற்ற செயல்களை நிகழ்த்த ஏற்படுத்த பட்டது.

அபிக்கு அளிக்கும் உணவு உடை என, அவனுக்கு அளிக்கும் அனைத்தையும் பாண்டியன் சரி பார்த்து அனுப்பினர், தன் மகனுக்கு எந்த விதத்திலும் மரணம் நிகழ்ந்து விட கூடாது என, ஆனால் இவ்வளவு எளிதில் அவனுக்கு மரணத்தை அளிக்க வேந்தன் ஒன்றும் கடவுள் இல்லையே, அவன் இதை விட கொடுமையான மரணத்தையை அளிக்க ஏற்படும் செய்து விட்டான் என தெரிந்தால் பாண்டியன் நிலை அந்தோ பரிதாபம்.
இரண்டு நாட்கள் யாருக்கு நிற்காமல் சென்றது, வேந்தன் இதுவரை ஒன்றும் செய்யவில்லையே என மகிழ்ச்சி ஒருபுறம், அதேநேரத்தில் எப்பொழுது உயிரை எடுக்க வருவான் என்ற கவலை, பயம் என இரு வேறு மனநிலையில் இருந்தனர் தந்தையும், மகனும்.

அதே நேரத்தில் வெளியில் பெரிய சத்தமும்,
கேட்டது, என்னவென்று வெளியில் சென்று பார்க்க வேந்தனின் ஆட்கள் பாண்டியன் தான் மகனை காக்க நிறுத்தி வைத்த ஆட்களை அடித்து தும்வசம் செய்து கொண்டு இருந்தனர், இதனை பார்த்த பாண்டியனின் கண்கள் வெளியில் தெறித்து விடும் அளவுக்கு விரிந்தது,

அதே நேரத்தில் வேந்தன், நிமிர்த்த மற்றும் விறைப்பாக நடையுடன் விமானத்தில் இருத்து இறங்கி, பாண்டியனை தாண்டி அபி இருக்கும் அறைக்குள் நுழைத்தான்

இதனை கண்ட பாண்டியனுக்கு தனது மகனின் உயிரை பறிக்கும் எமன் நேரில் வந்தது போன்று இருந்தது, அவர் கற்சிலை என நிற்க அவர் முன்பே வேந்தன் அபியை அந்த ரசகிய அறையில் இருந்த இழுத்து கொண்டு வந்தான்.

பாண்டியன், கதற கதற அபிணவ் உயிர் பயத்தில் அவனிடம் கெஞ்சி கொண்டு இருக்க, அவனை இழுத்து வந்த வேந்தன் அவனை விமானத்தில் தள்ளி, தனது ஆட்களை அழைத்து கொண்டு அங்கு இருத்து ஒரே நிமிடத்தில் அந்த விமானத்தில் பறந்து சென்றான். பாண்டியன் அதே இடத்தில் சிலை என சமைந்து நின்றார். வேந்தன் சென்ற பின்பு அந்த இடம் புயல் அடித்து ஓய்தது போன்று இருந்தது.

எவரெஸ்ட் சிகரம்.......



மத்திய இமயமலையில், திபெத் மற்றும் நேபாளத்தின் எல்லையில், அமைந்து உள்ளது எவரெஸ்ட் சிகரம் , 29,029 அடி (8,848 மீ) உயரம் (சீனா மற்றும் நேபாளத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது; பாறை உயரம் மட்டும், 29,016 அடி / 8,844 மீ). இது உலகின் மிக உயர்ந்த உயரமாகும். 1999 ஆம் ஆண்டில் ஜிபிஎஸ் பயன்படுத்தும் அமெரிக்க ஏறுபவர்கள் எவரெஸ்டின் மொத்த உயரத்தை 29,035 அடி (8,850 மீ) என்று அளவிட்டனர், ஆனால் அந்த அளவீட்டை நேபாளம் அல்லது சீனா ஏற்றுக்கொள்ளவில்லை. திபெத்தியர்களால் சோமோலுங்மா அல்லது கொமோலாங்மா நிலத்தின் தாய் தெய்வம் என்றும் நேபாளிகளால் சாகர்மதா [கடலின் தலைவர்] என்றும் அழைக்கப்படுகிறது, இது சர்வேயர் சர் ஜார்ஜ் என்பவர் எவரெஸ்டு எனஆங்கிலத்தில் பெயரிட்டார். 1953 மே 28 அன்று நேபாளத்தின் சர் எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே ஆகியோர் எவரெஸ்ட் மலையில் முதன்முதலில் ஏறியது .

எவரெஸ்ட் சிகரம் உலகின் மிக உயரமான மலை. இதன் உச்சி கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி - அல்லது 5.5 மைல்கள் என்ற உயரத்தில் உள்ளது.

மனிதர்களுக்கு சுவாசிக்க போதுமான ஆக்சிஜன் இல்லாத இடத்தில் உயரத்திற்கு மலை ஏறுபவர்கள் பயன்படுத்தும் பெயர் இறப்பு மண்டலம் .

இறப்பு மண்டலத்தில் , ஆக்ஸிஜன் மிகவும் குறைவாக இருப்பதால் உடலின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. ஏறுபவர்களின் நிலை பலவீனமடைகிறது, மேலும் அவர்கள் மாரடைப்பு, பக்கவாதம் அல்லது கடுமையான உயர நோய்களை அனுபவிக்க முடியும்.

மனித உடல்கள் கடல் மட்டத்திற்கு கீழே அதாவது நிலத்தில் இருக்கும் பொழுது சிறப்பாக செயல்படுகின்றன. இங்கே கீழே இருக்கும், ஆக்ஸிஜன் அளவு நம் மூளைக்கும் நுரையீரலுக்கும் போதுமானது. அதிக உயரத்தில், நம் உடல்கள் சரியாக செயல்பட முடியாது.

ஆனால் ஏறுபவர்கள் கடல் மட்டத்திலிருந்து 29,029 அடி (8,848 மீட்டர் அல்லது 5.5 மைல்) உயரத்தில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை உச்சம் பெற விரும்பினால், அவர்கள் "மரண மண்டலம்" அழைக்கப்படுவதை இடத்தை அடைய மிகவும் தைரியயமாக இருக்க வேண்டும். இது 8,000 மீட்டருக்கு மேல் உயரத்தில் இருக்கும் பகுதி, ஆக்சிஜன் மிகக் குறைவாக இருப்பதால், உடல் இறக்கத் தொடங்குகிறது, நிமிடத்திற்கு ஒரு நிமிடம் உடலில் உள்ள ஒரு ஒரு செல்லும் இறக்க தொடங்கும்.

இறப்பு மண்டலத்தில், ஏறுபவர்களின் மூளை மற்றும் நுரையீரல் ஆக்ஸிஜனுக்காக பட்டினி கிடக்கிறது, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, மேலும் அவர்களின் உடல் விரைவில் பலவீனமடைகிறது.

ஒரு மலையேறுபவர் எவரெஸ்ட் ஏறுவது 'ஒரு டிரெட்மில்லில் ஓடி ஒரு வைக்கோல் வழியாக சுவாசிப்பது போல உணர வைக்கிறது என என்று மலையேறுபவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான டேவிட் ப்ரீஷியர்ஸ் கூறுகிறார் .

ஆக்ஸிஜனின் பற்றாக்குறை எண்ணற்ற ஆரோக்கிய அபாயங்களை விளைவிக்கிறது. உங்கள் இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் கீழே விழ நுரையீரல் காற்றுக்காக தவிக்கும் நிலைக்கு தள்ள பட்டு மரணம் நிகழும்.
எவரெஸ்டில் யாராவது இறந்தால், குறிப்பாக மரண மண்டலத்தில், உடலை மீட்டெடுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. வானிலை, நிலப்பரப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவை உடல்களைப் பெறுவது கடினம். அவற்றைக் கண்டுபிடிக்க முடிந்தாலும், அவை வழக்கமாக தரையில் சிக்கி, எந்த வித மாற்றமும் இல்லாமல், அழுகி போகாமல், கெட்டு போகமலும், அதே இடத்தில் உறைந்திருக்கும்.

கடல் மட்டத்தில் காற்றை சுவாசிக்கப் பழகும் ஒரு சாதாரண மனிதர் அவர்கள் மயக்கமடைவதற்கு சில நிமிடங்கள் மட்டுமே இருக்க முடியும். பெரும்பாலான ஏறுபவர்கள் ஆக்ஸிஜன் பாட்டில்களை எடுத்துச் செல்ல வேண்டும். பார்வையாளர்கள் பலவீனமாகி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை எடுக்கவும் இயலாது, குறிப்பாக மன அழுத்தத்தில், உடல் மோசமாக செயல்படுவதால், இறந்தவர்களின் பல உடல்கள் மலையில் விடப்படுகின்றன.

பொதுவாக மலை ஏற்றம் செய்பவர்கள் தலைவலி , குமட்டல் , வாந்தி மற்றும் பிரமைகள் இருக்கும், பின்னர் இது பெருமூளை வீக்கம் - அல்லது மூளையின் வீக்கம் ஆகியவற்றால் இந்த நிலை ஏற்படும், மேலும் மூளையில் ரத்தம் கசியும் பொழுதும், மூளை மிகவும் சுருக்கப்பட்டால் அது ஒரு நபரைக் கொல்லும் சுவாசம் மற்றும் இதய துடிப்பு நிறுத்தப்பட்டபோது அந்த நபர் இறந்து விடுவார்

எவரெஸ்ட் மலையில் 5 கேம்ப் தங்கும் இடங்கள் உள்ளன, முதல் கேம்ப் உயரம் 5,334 மீட்டர், 2வது கேம்ப் 6,400 மீட்டர், 3வது கேம்ப் 7,162 மீட்டர், 4வது கேம்ப் 8,000 மீட்டர், 5வது கேம்ப் 8,848 மீட்டர் உயரம், இது தான் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி.

இது வரை எவரெஸ்ட் சிகரத்தின் 4, 000 மேற் நபர்கள் ஏறி உள்ளனர், மேலும் அதில் 200 மேற்பட்ட நபர்கள் இறந்து உள்ளனர், கடும் பனி, போர்சைட் எனும் கை கால் விறைப்பு, பனி பறை சரிவு, ஆக்சிஜன் பற்றாகுறை போன்ற காரணங்களால் மரணம் நிகழலாம். பெரும் பலான மலை ஏறுபவர்கள் தங்களின் திருமணம் அல்லது வாழ்க்கையை முடித்த கொள்ள தான் மலை ஏற்றம் செய்வதாக ஓரு ஆய்வு சொல்கிறது.

இவ்வளவு கொடுமையான இடத்தை தான் வேந்தன் அபிக்கு மரணத்திற்கு தேர்வு செய்தான், மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பே அபிணவ் இருக்கும் இடத்தை அவனது செல் ட்ரக்கிங் மூலம் கண்டு புடித்து அவனை இன்று கடத்தி விட்டான்.

இரண்டு நாட்களும் முன்பே எவரெஸ்ட் சிகரத்திற்கு வந்து 3 கேம்ப் இருக்கும் இடத்தில் 10 ஆடி அகலமும் 10 ஆடி உயரமும் உள்ள ஒரு பள்ளத்தை உருவாகினான், அதில் ஒரு இரும்பு கம்பியை சொருகி அதில் ஒரு கேமரா வையும் பொறுத்தினான், என் என்றால் அபிணவ் உயிருக்கு போராடுவதை தனது கண்களை காண வும் அவனது தந்தைக்கு இதனை காட்ட தான் இந்த ஏற்பாடு. இரண்டு நாட்கள் வேந்தனின் 20, ஆட்கள் 60 ஆக்சிஜன் மாஸ்குடன் இதனை செய்து முடித்தார், வேந்தனுக்கு அதில் ஒருவனாக இருந்து இதனை செய்தான்.
இதோ வேந்தன் மற்றும் அவனின் ஆட்களை சுமந்து கொண்டு அந்த விமானம் தரை இறக்க பட்டது.

அதில் இருந்து ஆக்சிஜன் மாஸ்குடன் இறங்கிய வேந்தன் மற்றும் அவனது 30 ஆட்கள் அபியை அந்த பள்ளத்தில் தள்ளி அவனை பனி கொண்டு வேகமாக மூடி கொண்டு இருத்தனர்.

விமானத்தில் இருந்தது இறங்கிய உடனே அபியின் நுரையீரல்கள் காற்றுக்காக ஏங்கியது, அவனுக்கு ஆக்சிஜன் மாஸ்கு அளிக்க படவில்லை, 2 நிமிடத்தில் அனைத்தும் முடித்து அந்த விமானம் வேந்தன் மற்றும் அவனது ஆட்களிளுடன் அங்கு இருந்தது.

அபிணவ் உயிர்க்கு போராடுவதை வேந்தன் தன் விமானத்தில் இருத்து தனது லேப்டாப் மூலம் அங்கு பொறுத்த பட்டு இருக்கும் கேமராவின் மூலம் பார்த்து கொண்டு இருந்தான்.

அங்கு அபிணவ் ஆக்சிஜன் அளவு குறைந்து அவனின் ஒரு ஒரு செல்லும் காற்றுக்காக ஏங்கியது, பலவீனமாகி, தெளிவாக சிந்திக்கவும் முடிவுகளை எடுக்கவும் இயலாது, குறிப்பாக மன அழுத்தத்தில், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்ப்பட்டது, பின்பு தலைவலி , குமட்டல் , வாந்தி மற்றும் பிரமைகள் ஏற்பட்டது, பின்னர் பெருமூளை வீக்கம் நிகழ்ந்து மூளை செல்கள் வெடித்து உலகிலே மிகவும் கொடுமையான மாற்று கோரமான மரணமாக அபிணவ் மரணம் நிகழ்த்தது.

அவன் உடலை யாராலும் கண்டுபிடிக்க முடியாது, வானிலை, நிலப்பரப்பு மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஆகியவற்றால் அவன் உடலை தேடவும் முடியாது, அங்கு இருக்கும் மலை ஏற்ற வீரர்களின் உடல்களுக்கு துணையாக அவன் உடலும் இருக்கும், மேலும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் அவன் உடல் எந்த வித மாற்றமும் இன்றி அழுகாமல், சிதைந்து போகாமல் அப்படியே இருக்கும், பனி சரிவு ஏற்பட்டால் மட்டுமே அவன் உடல் வெளியில் தெரியும்.
இது அனைத்தையும் லேப்டாப் இல் பார்த்த வேந்தனின் மனம் நிம்மதி அடைத்தது, தினமும் ஓரு பெண்ணின் மானத்தை வேட்டை ஆடும் அபிக்கு இது தேவை தான் என நினைத்தான் வேந்தன், ஆம் அபிணவுக்கு குடித்து விட்டால் தினமும் பெண் அவனுக்கு ஒரு தேவை, இவனின் இந்த புத்தியால் எத்தனையோ பெண்கள் தங்களது மானம், மற்றும் உயிரை இழந்து உள்ளனர், இது வரை அவன் கெடுத்த பெண்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது, அவ்வாறு இறங்கும் பெண்களின் மரணத்தை வெளியில் வாராமல் பாண்டியன், அவரின் பதவி மற்றும் அதிகார பலத்தால் அடக்கினார். அவர்களின் பாவம் தீர்க்க தான் வேந்தன் அபிணவுக்கு இப்படிப்பட்ட கொடூரமான மரணத்தை பரிசாக அளித்தான்.

இன்று, அந்த பெண்களின் சார்பாக வேந்தன் அபிணவுக்கு மரணத்தை அளித்து நீதியை நிலை நாட்டி உள்ளான்.

வேல் விழியை கொலை செய்ய நினைத்ததற்கு, அவளை களவாடநினைதற்கும், இந்த நிலை அவனுக்கு தேவை தான் என்று வேந்தனின் மனம் தனக்கு தானே அவன் செய்த செயலுக்கு சமாதானம் செய்து கொண்டது.

அதற்கும் மேலே அபிணவ் எவ்வாறு இறந்தான் என்ற வீடியோ, பாண்டியனின் வீட்டில் வேலை செய்யும் அனைத்து நபரின் போனுக்கு அனுப்ப பட்டது, இதனை பார்த்த வேலை ஆள் அதனை பாண்டியனிடம் ஓடி வந்து காட்ட பாண்டியனின் உலகம் ஒரு நொடி நின்று சுழன்றது,

அவர் காலுக்கு கீழ் இருக்கும் பூமியும் நழுவி போனது போல தோன்றியது, அங்கே அதே இடத்தில் பாண்டியன் மாரடைப்பு வந்து மயங்கி விழுந்தார், அவரின் வேலை ஆட்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பாண்டியனின் நிலை என்ன....

வேந்தனால் பாண்டியனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா? மரணம் விளையுமா பதில் வரும் பதிவுகளில்......

விழிகள் பேசும்......


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 21

காலை வணக்கம்....

இன்றைய தலைப்பு செய்திகள்.....

மத்திய அணுத்துறை அமைச்சர், அவரது மூன்று மகன்கள் மற்றும் தொழில்அதிபர் முகில் வேந்தன் ஆகியோர் தலை மறைவு, அவர்களை கண்டால் சுட்டு புடிக்க போலிஸ்க்கு அரசு உத்தரவு இட்டுஉள்ளது

விரிவான செய்திகள்.....

மத்திய அணுத்துறை திரு. செந்தூர பாண்டியன், அவரது மகன்களான அபிணவ், அரணவ் மற்றும் அஸ்வின் மற்றும் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் திரு. முகில் வேந்தன் ஆகியோர் இந்தியாவின் பிரபல ஆராய்ச்சி குறிப்பான செயற்கை சூரியன் உற்பத்தி செய்யும் செயல் முறை குறிப்பிகளுடனும், இந்திய அரசு அணுத்துறை வளர்ச்சிக்காக ஒதுக்கிய 10000 கோடி பணத்துடன் தலை மறைவு.

மேலும் அவர்கள் வெளி நாடு தப்பி இருக்கலாம் என இந்திய உளவு துறை கூறுகிறது, அமைச்சர் செந்திர பாண்டியன் வீட்டை
சோதனைக்கு உட்படுத்தும் பொழுது, அவர்களின் அறையில் இது வரை பாண்டியன் அரசியலில் கொள்ளை அடித்து பணமும், சொத்து பாத்திரமும் கை பற்றபட்டது. மேலும் அவரது மகன் அரணவ் மற்றும் அஸ்வின் கம்பெனி யை சோதனை செய்யும்பொழுது அவர்கள் தரம் இல்லாத சீமெண்ட் மற்றும் மணலை பயன்படுத்தி கட்டிடம் கட்டி உள்ளதும் அவ்வாறு அவர்கள் கட்டிய கட்டிடம் இடிந்து விழுந்து இது வரை 80 க்கு மேற்பட்ட ஒன்றும் அறிய ஏழை மக்களின் உயிர் பலியாகி உள்ளது, அது மட்டும் இல்லாமல் இந்த மரணத்தை எல்லாம் அவர் தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி மறைத்து உள்ளதும் தெரிய வந்துவுள்ளது, மேலும் இவர்கள் கான்ஸ்டருக்ஷன் கம்பெனி என்ற போர்வையில் அரசு மேம்பலாங்கள், அரசு கட்டிடங்கள் கட்ட டெண்டர் எடுத்து, தரமில்லாத பொருட்கள் கொண்டு அதனை கட்டி இருப்பது தெரியவந்துள்ளது,

இவர்களின் வீட்டை சோதனை செய்யும் பொழுது இரசிய நிலவரை ஒன்றும் கண்டுபிடிக்க பட்டுள்ளது, அது மட்டும் அன்றி, அவர்களின் மகன் அபிணவ் இருந்த அமெரிக்க வீட்டையும் தோட்டத்தையும் தோண்ட தோண்ட 100 மேற்பட்ட பெண்களின் பிணம் கண்டு எடுக்கபட்டுஉள்ளது, இவர்கள் அனைவரும் அபிணவால் கற்பழிக்க பட்டு கொலை செய்ய பட்டு இருக்கபடலாம் என கருத படுகிறது. மத்திய அமைர்ச்சர் செந்தூர பாண்டியன் மற்றும் அவரது மகன்கள், முகில் வேந்தன் தங்களது தனி விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி இருக்கலாம் என இந்திய உளவு துறை கருதுகிறது, மேலும் இந்திய நாட்டுக்கு சொந்தமான செயற்கை சூரியன் செயல் முறையை அந்நிய நாட்டிற்கு விற்க ஏற்பாடு செய்யபட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது, இவர்கள் அனைவரும் இந்திய தேசத்திற்கு எதிராக தேச துரோக செயல்களில் ஈடுபட்டுள்ளதால் அவர்களை கண்டதும் சுட்டி பிடிக்க அரசு ஆணை இட்டுள்ளது என்று ஒரு பெண் அழகான தமிழில் செய்தி வசித்து கொண்டு இருந்தாள்.

இது அனைத்தையும் வேந்தன் மற்றும் CBI
இயக்குனர் குமார் ஆகியோர் தனது மீட்டிங் அறையில் சிரிப்புடன் பார்த்து கொண்டு இருத்தனர்.

" ஹ்ம்ம் வெல் டான் மை பாய், அவங்களை நீயே கொன்னுட்டு எப்படி இப்படி எல்லாம் பிளான் பண்றியோ, நாட் பேட், இது எல்லாம் சரி அமைச்சர் பாண்டியன், அண்ட் முகில் வேந்தனை என்ன பண்ணனு சொல்வே இல்லை, மத்தவகளை பொறுத்த வரைக்கும் அவங்க தலைமறைவு ஆகிட்டங்க, ஆன எனக்கு உன்ன பத்தி நல்லாஹ் தெரியும், சோ டெல் மீ தி ட்ருத் மை பாய், வாட் ஹப்பேன் டு போத் ஹப் தெம், என்று கேட்டார் இயக்குனர் குமார்.

வேந்தன் வழக்கம் போல அவனது அசட்டு புன்னகையை சிந்தினான், அவன் அவ்வாறு புன்னகை புரிவதை பார்த்த குமாரும் அவனுடன் சேர்த்து சிரித்தார்.

"சோ, அவங்களை என்னமோ பணிட்ட, என்கிட்ட சொல்ல மாட்ட என்றார்.

அதற்கு வேந்தன், "எனக்கு என்ன தெரியும் சார், ஓடி போன அவங்களை தான் நீங்க கேக்கணும், என்று தெளிவாக அவரை குழப்பி விட்டான் வேந்தன்.

" ஒகே, எப்படி இருந்தாலும் நீ சொல்ல போறது இல்லை, ஏற்கன்வே பாண்டியன் பையனுங்க மூணு பேரையும் நீ கொன்னுடனு எனக்கு தெரியும், அது உனக்கும் நல்லாஹ் தெரியும், அவங்க இரண்டு பேரை மட்டும் நீ உயிரோட வா விட்டு வச்சி இருக்க போற, என்னமோ பணிட்ட அவங்களை ஆன என்கிட்ட சொல்ல தான் செய்யலை, நோ பிராம்ப்ளேம், சீக்கிரமா போ உன்னோட வைப், உன்ன மூணு நாளாக பார்க்காம, பட்டாசு மாதிரி வெடிச்சிட்டு இருக்காங்க, என்றார்.

அவர் சொன்ன செய்தி கேட்ட வேந்தன், அவருக்கு சிரிப்பை உதிர்த்து விட்டு, அறையில் இருந்து வெளியில் சென்றான் இல்லை இல்லை, வேல்விழியை தேடி ஓடினான்.



இதனை கண்ட குமார் சிரித்து கொண்டார், ஊருக்கே ராஜானாலும், வீட்டை பொறுத்த வரை வேலைகாரன் என்ற பழமொழியை நினைத்து சிரித்தார். அதே நேரத்தில், அவர் மனைவியிடம் இருந்து போன் வர அலறி அடித்து கொண்டு எடுத்து எதிரில் இருந்த நபர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்குள் வேர்த்து தான் போனார் குமார்.

வேந்தன் வேள்விழியையும் தேடி செல்வதற்கு முன்பு அவர்கள் இருவருக்கும் என்ன நடந்தது என்று பார்த்து விடலாம்.....
அபிணவ், இறந்த செய்தி கேட்ட பாண்டியன், அங்கே ஹார்ட் அட்டாக் வந்து மயங்கி சரிந்தார், அங்கு வேலை செய்யும் வேலை ஆட்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர், அவருக்கு மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டு காப்பற்றபட்டார், முதல் அட்டாக் என்பதால் பத்திரமாக இருக்கும் படி கேட்டுக்கொள்ள பட்டர்.

மருத்துவமனையில் இருத்து வீட்டிக்கு வந்த பண்டியனுக்கோ அதிர்ச்சி காத்துகொண்டு இருந்தது. ஆம் பாண்டியனை கைது செய்ய தனது படையுடன், கைது வர்ரேன்ட்(warrant) உடன் காத்து கொண்டு இருந்தான் வேந்தன்.

அவரை கைவிலங்கு இட்டு கைது செய்தவன், "என்ன, Mr. பாண்டியன், ஊரை. அடிச்சி உங்க வீட்டு உலைல போட்டிங்க, இப்போ உங்களுக்கு கொல்லி போட யாரும் இல்லாம போய்டுச்சே, சோ சாட், பாண்டியன், என்ன அப்படி பார்கிறீங்க, என்னடா இவன் நம்மள கொல்லமா அரேஸ்ட் பண்ண வந்து இருக்கானு யோசிறீங்களா, ஒன்னும் இல்லை உங்களை மனிச்சி விட்டுடலாம்னு இருக்கேன், அவ்வளவு தான், நீங்க பனத்துக்கு எல்லாம் உங்க மீதி இருக்குற காலத்தை சிறையில் தான் களிக்கணும், என்றான்.

ஆனால், அவன் கூறியதில் இருந்த உள்குத்தை, பாண்டியன் கவனிக்க வில்லை, மேலும் அவரை கைது செய்யும் பொழுது அவன் முகம் கல் என இறுகி இருத்தது, அவரின் உடல் நிலை கருதி அவரை அவரின் விமானம் மூலம், CBI ஹெட் குவர்ட்ஸ்க்கு கொண்டு சென்றான், அவரை பொறுத்த வரை.

பாண்டியனின் விசாரித்து முகில் வேந்தன் இருத்த இடத்தையும் அவரிடம் கேட்டு அறிந்து தனது கீழ் உள்ள காவலர்களை கொண்டு கைது செய்ய ஏற்பாடு செய்தான்.

விமானத்தில் செல்லும் பொழுது அவருக்கும் நெஞ்சு வலி ஏற்பட விமானத்தில் இருந்த மருத்துவர் அவருக்கு முதல் உதவி செய்து, ஊசி போட்டார், கொஞ்ச நேரத்தில் பாண்டியன் மயக்கம் உற்றார். அவர் மயக்கம் உற்றதும் அவர் செல்லும் விமானம் வேறு திசையை நோக்கி பயணிக்க துவங்கியது.......



என்வைட்டினெட் தீவு

துர்கானா ஏரி இதற்கு முன்பு ருடால்ப் ஏரி என்று அழைக்கப்பட்டது, கென்ய பிளவு பள்ளத்தாக்கில் , வடக்கு கென்யாவில் உள்ள ஒரு ஏரியாகும், அதன் வடக்கு முனை எத்தியோப்பியாவுக்குள் செல்கிறது. இது உலகின் மிகப்பெரிய நிரந்தர பாலைவன ஏரி மற்றும் உலகின் மிகப்பெரிய கார ஏரி ஆகும் . காஸ்பியன் கடல் , இசிக்-குல் மற்றும் வான் ஏரி (சுருங்கி வரும் தெற்கு ஆரல் கடலைக் கடந்து ) ஆகியவற்றிற்குப் பிறகு இது உலகின் நான்காவது பெரிய உப்பு ஏரியாகும் மற்றும் அனைத்து ஏரிகளிலும் இது 24 வது இடத்தில் உள்ளது.



பார்ப்பதற்கு மிகவும் அழகாக கண்களைக் கவரும் வண்ணம் இருக்கும் ஓர் அற்புதமான ஏரி ருடால்ப் ஏரி. இந்த ஏரியைச் சுற்றி சிறு சிறு தீவுகள் மற்றும் பழமை மாறாத பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த தீவுகளில் ஒன்று தான் என்வைட்டினெட் தீவு. இதன் உண்மையான அர்த்தம் 'திரும்ப வராது' என்பதாகும். இந்த தீவு மிகவும் மர்மம் நிறைந்த ஒன்று. அது என்னவெனில், இந்த தீவுக்கு சென்ற யாரும் திரும்பி வந்ததில்லை என்பது தான்.



இங்குள்ள குட்டி தீவுகளில் ஒன்றுதான் என்வைட்டினெட் தீவு. இங்கு வாழும் மக்கள் பேசும் மொழி சொல். இதன் அர்த்தம் திரும்ப வராது என்பதாகும்



என்வைட்டினெட் தீவுக்குள் செல்பவர்கள் யாரும் திரும்பி வருவது இல்லையாம், அறிவியல் ஆராய்ச்சிகளுக்கே சவால் விடும் வகையில் இந்த தீவு உள்ளது.

முன்பொரு காலத்தில் இங்கு மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்தனர் என்றும் மீன் பிடிப்பது, வேட்டையாடுவது அவர்களின் தொழிலாக இருந்தது என்றும் பக்கத்து தீவுகளை சேர்ந்தவர்கள் சொல்கிறார்களாம்.

மேலும், அவர்கள் வியாபாரத்திற்காக பக்கத்து தீவுகளுக்கும் வருவார்களாம். ஆனால், ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு இத்தீவில் இருந்து வெளியே வரும் மக்களின் எண்ணிக்கை கொஞ்சமாக கொஞ்சமாக குறைய தொடங்கியுள்ளது.

ஏன் வரவில்லை?

ஒரு கட்டத்தில் அங்கு சென்றவர்கள் யாரும் வராமல் போனதால் பக்கத்து தீவுகளில் இருந்தவர்கள் சந்தேகமடைந்து அந்த தீவுக்கு சென்றுள்ளனர். ஆனால், அப்படி சென்றவர்களும் திரும்பாமல் போகவே இது மர்ம தீவாக மாறியது.

ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் :

ஆங்கிலேய விஞ்ஞானி விவியன் என்பவர் 1935ஆம் ஆண்டு தன் குழுவினரோடு இந்த தீவு பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். என்வைட்டினெட் குட்டித் தீவுக்கு இளம் விஞ்ஞானிகள் சிலரை அனுப்பி வைத்தார் விவியன். பல நாட்கள் போனதே தவிர, சென்ற விஞ்ஞானிகள் யாரும் திரும்பி வரவில்லை.

விவியன் என்வைட்டினெட் தீவை ஹெலிகாப்டரில் ஏறி சுற்றிப் பார்த்தார். அப்போது அத்தீவில் ஆள் நடமாட்டமே இல்லை. எரிந்து போன குடிசைகளும், அழுகிய மீன்களும் தான் சிதறிக் கிடந்தன.

அருகில் உள்ள தீவில் என்வைட்டினெட் தீவைப் பற்றி கேட்கும் போது, அந்த தீவில் பிரமாண்ட ஒளி ஒன்று வரும் என்றும், அந்த ஒளி யார் மீது பட்டாலும், அவர்கள் மாயமாகிவிடுவதாக கூறினர். இந்த ஒளி எப்படி வருகிறது? அப்படி வந்தால் அது மனிதர்களை எரித்துவிடுகிறதா?அப்படி எரித்தாலும் எலும்புகள் மிஞ்சியிருக்க வேண்டுமே என்று தன் கேள்விக்கு விடை தெரியாமல் உள்ளார் விவியன்.

இதனால் அதிர்ச்சியுற்ற ஆராய்ச்சியாளர்கள் தூரத்தில் இருந்துக்கொண்டே ஆய்வுகளை செய்தனர். ஹெலிகாப்டரில் பறந்தபடியே ஆராய்ச்சி செய்தனர். எந்த தடயமும் கிடைக்கவில்லை.

பழங்குடியினர் குடிசைகள் அப்படியே இருந்தன. அழுகிய மீன்கள் சிதறிக் கிடந்தன. மனித நடமாட்டம் மட்டும் இல்லவே இல்லை. இதையடுத்து பக்கத்து தீவுகளில் வசித்து வந்தவர்களிடம் தகவல்களை சேகரித்தனர்.

பிரம்மாண்ட ஒளி :

அந்த தீவில் பிரம்மாண்ட ஒளி ஒன்று வரும் என்றும் அப்போது இடத்தில் யார் இருந்தாலும் காணாமல் போய் விடுவார்கள் என்றும் அப்படித்தான் அங்கு போனவர்கள் காணாமல் போயிருப்பார்கள் என்றும் பக்கத்து தீவுவாசிகள் கூறியுள்ளனர்.

பிரம்மாண்ட ஒளி எப்படி வருகிறது? அது மனிதர்களை எரித்து விடுகிறதா? அப்படி என்றால் எலும்புகளாவது மிஞ்சி இருக்க வேண்டுமே? என்ற கேள்விகளுக்கு விஞ்ஞானிகளுக்கு விடை கிடைக்கவில்லை.

இந்த தீவுக்கும், வேற்றுக் கிரகவாசிகளுக்கும் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் ஆராய்ச்சிகள் செய்து கொண்டு வருகின்றனர்.

இங்குள்ள மக்களை வேற்று கிரகவாசிகள் கடத்தி செல்கின்றனர் என்றும், கண்ணுக்குத் தெரியாத சக்கரம் ஒன்று சுழல்கிறது என்றும், மக்கள் காற்றில் கரைகின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான மர்ம முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

இந்த தீவிற்கு வேற்று கிரக வாசிகளுடன் தொடர்ப்பிருக்குமோ என்ற கோணத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இன்னும் இந்த தீவு மர்ம முடிச்சுக்கள் நிறைந்த தீவாகவே உள்ளது.

வேந்தன் மற்றும் பாண்டியனை சுமந்து வந்து விமானம் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு என்வைட்டினெட் தீவு வில் தரை இறங்கியது, விமானம் தரை இறங்கும் சத்தம் கேட்டு கண் விழித்த பாண்டியன் தான் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்க அவரின் கண்களுக்கும் வேந்தன் அவரின் உயிரை பறிக்கும் எமன் போன்று காட்சி அளித்தான்.

உண்மையில் இந்த தீவு, இந்திய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் புரிப்பவரை நாடு கடத்த பயன்படுத்த தீவு ஆகும், இங்கு வெளி நபர்கள் அனுமதிக்க படுவது இல்லை, இங்கு இருந்த மக்களை அரசாங்கம் மேற்குரிய காரணத்திற்காக வெளியேற்றியது. வெளி ஆட்கள் இந்த தீவுக்கு வரக்கூடாது என்பதற்காக

வேற்றுக்கிரக வாசிகள் இருப்பதாக நம்ப வைத்தது.



விமானத்தில் இருத்து கீழே இறங்கிய வேந்தன்
அவரை விமானத்தில்இருந்து இழுத்து வெளியில் தள்ளி அவரை பார்த்து" உன்னை உன்னோட அப்பனும் சரியா வளர்களை, நீ உன்னோட பசங்ககளை ஒழுங்கா வளர்களை, உன்னால தான் உன்னோட பசங்க இப்படி வளர்ந்து இருக்ககனுங்க, நீ சரியாக வளர்த்து இருந்த அவனுங்க என இப்படி இருக்கணுக, இதனால் தான் உனக்கு இந்த நிலைமை, ஒருத்தன் பொண்ணோட மானதோட விளையடுறான், மத்த இரண்டு பேரும் உன் கூட சேர்ந்து மக்களோட உயிரோட விளையடுறங்க, இப்போ எல்லாரும் சேர்ந்து தண்டயை அனுபவிங்க, என்று கூறி பாண்டியனை அங்கே தள்ளி விட்டு அவன் வந்த விமானத்தின் மூலம் இந்தியாவிற்கு வந்து அடைந்தான்.

ஒரு காலத்தில் ஊரையே எயித்தவர், இன்று தான் ஊர் மறந்து, அடையாளம் விடுத்து, நாட்டை துறந்து, பசி மற்றும் உறக்கம், களைப்பு, தன்னை வேட்டையாட வரும் வன விளங்குகளிடம் இருந்து தனது உயிரை பாதுகாக்க ஓடி கொண்டு இருக்கிறார். எவ்வளவு நேரம் ஒடுவர், தனது கண்முன்பு அரக்கன் போன்று நிற்கும் காட்டின் ராஜா சிங்கத்தின் முன்பு அவரின் ஓட்டம் எல்லாம் பலிக்க வில்லை, ஒரே அடியில் சிங்கம் அவரை வீழ்த்தி அவர் உயிருடன் இருக்கும் போதே அவரின் மாமிசத்தை புசித்து கொண்டு இருந்தது, அன்று ஏழை மக்களின் இரத்தத்தை ஊழல் மூலம் உறிஞ்சியவர் இன்று தனது இரத்தம் வெளிப்பட்டு ஒரு ஒரு நொடியும் மரண வேதனையை அனுபவித்து இறந்து கொண்டு இருக்கிறார், அந்த தீவில் நடப்பது அனைத்தையும் வேந்தன் அங்கு பொருத்தப்பட்டு உள்ள கேமரா மூலம் பார்த்து கொண்டு இருந்தான்.....

பாண்டியன் இது வரை செய்த பாவத்திற்கு இந்த மரணம் தேவை தான் நினைத்தவன், பாவத்தின் சம்பளம் மரணம் என்பதை தனது செயல்கள் மூலம் உலகிற்கும், தவறு செய்பவர்களுக்கும் உணர்த்தினான்.

பாண்டியனின் மரணம் கொடூரமான இருக்க வேந்தனின் ஆட்கள் மூலம் கைது செய்த முகில் வேந்தன் நிலை என்ன?

அவர் உயிரோடு இருக்கிறாரா.... இல்லையா....

வேந்தன் அவரை என்ன செய்தான், அவனின் இரத்தம் என்பதற்காக அவரை உயிருடன் விடுவானா...

பதில் வரும் பதிவில்......

(கெனியவில் என்வைட்டினெட் தீவு இருப்பது உண்மை தான், மேற்குரிய அனைத்தும் அங்கு நடப்பதாக குறி இருப்பதும் google நான் கண்டு அறிந்தது....)
விழிகள் பேசும்......

எனது எழுத்தின் முதல் பயணம் இது தான்.....


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 22

பாண்டியனை வதம் செய்த வேந்தன், அடுத்தாக தனது தாய், தந்தையின் மரணத்திற்கும், தான் அநாதை யாக காரணமாக இருந்த முகில் வேந்தனை உயிருடன் கொல்லாமல் கொல்லும் வழியினை தேர்வு செய்தான்.(உயிரோட இருக்கணும் ஆன ஒரு ஓரு நிமிடமும் உயிர் பிரிய வேண்டும்). அவனுக்கு தண்டனை அளிக்க வேந்தன் தேர்வு செய்த முறை
யாது என்றால் எந்த மக்களின் உயிரை போக்கி தனது உடலினை முகில் வேந்தன் வளர்த்தனோ அதே மருந்துகள் மூலமும் அவன் மரணம் நிகழ வேண்டும் என்றும், அதுவும் அவன் உயிராக நினைக்கும் அவன் மருத்துவமனையில் நிகழ வேண்டும் என நினைத்தான்.

தனது தாய், தந்தையை சொத்துக்காகவும், பணத்திற்கவும், கொலை செய்ததை கூட மன்னித்து விடுவான், ஆனால் இலவச மருத்துவம் என்ற பெயரில் ஒன்று அறியாத மக்களின் உறுப்புககளை வெளிநாட்டில் இருந்து வரும் பெரும் பணக்கார முதலைகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதை பார்த்தவனின் உள்ளம் உலை கலம் போல கொதித்து கொண்டு தான் இருந்தது.

அவன் முகிலை நேரில் பார்த்த நொடியே அவனை கொல்லும் வெறியுடன் ஒரு ஒரு இடமாக வேட்டையாடும் சிறுத்தையின் வேகத்துடன் தேடி கொண்டு இருந்தான்.

முகில் வேந்தன் அவன் கையில் சிக்கினால் தானே......

வேந்தன் அவன் தாய் தந்தையின் மரணம் விபத்து இல்லை, முன்பே திட்டம்( pre planned murder) இட்டு செய்யப்பட்ட கொலை என்றும் அதற்கு காரணம் யார் என்று அறிய முற்படும் பொழுது கொலை செய்தவன் தனது தந்தையின் உடன் பிறந்தவன் என்று அறிந்த வினாடியே முகில் வேந்தனின் பின்புலத்தை அறியும் படி தனது நம்பிக்கையான நபர்களிடம் கூறிவிட்டான்.

விசாரித்ததின் முடிவில் தனது மருத்துவமனை மூலம் முகில் வேந்தன், இலவச மருத்துவம் என்ற போர்வையில்அவன் செய்யும் அனைத்து குற்ற செயல்களும் தெரிய வந்தது.

தனது மருத்துவமனைக்கு வரும் ஏழை மக்களுக்கு மருத்துவம் என்ற பெயரில் தடைசெய்யப்பட்ட மருந்துகளை எழுதி தருவது, மருத்துவ ஆராய்ச்சிக்கு பொது மக்களை விநியோகம் செய்வது, அறுவை சிகிச்சை என்ற பெயரில் மக்களின் உடல் உறுப்புகளை திருடி பெரும் பணக்கார முதலைகளுக்கு தாரை வார்த்து கொடுப்பது, அக்சிடெண்ட் ஆகி வரும் நோயாளிகளுக்கு கார்பன் மோ ஆசிக்சைடு(carbon monoxide) அதிக அளவில் அளித்து அவர்கள் முளை சாவு அடைந்து விட்டதாக கூறி அவர்களின் உடல் உறுப்புகளை திருடுவது என அவன் செய்யும் குற்ற செயல்களுக்கும் அளவேயில்லை.

மருத்துவக் குற்றம் என்பது ஒரு வகை தொழில்சார் குற்றமாகும், இதில் மருத்துவத் தொழிலுக்குள் செய்யப்படும் பரந்த அளவிலான சட்டவிரோத செயல்கள் அடங்கும். இவற்றில் சில கட்டணம் பிரித்தல், கிக்பேக்குகளை எடுத்துக்கொள்வது அல்லது வழங்குதல், விலை நிர்ணயம், மோசடி பில்லிங் மற்றும் கடுமையான தீங்கு விளைவிக்கும் தேவையற்ற ஆபரேஷன்களைச் செய்தல் ஆகியவை அடங்கும். குறைந்தபட்ச மேற்பார்வை மற்றும் பொருத்தமற்ற தண்டனை ஆகியவை மருத்துவ வல்லுநர்கள் தங்கள் பதவிகளைப் பயன்படுத்திக்கொள்ள உதவுகின்றன. இதன் விளைவாக, மருத்துவக் குற்றங்கள் நிலைத்திருக்கின்றன. இந்த குற்றங்களால் ஏற்படும் தீங்கின் தீவிரத்தன்மை மற்றும் மருத்துவத் தொழிலில் மேற்பார்வை இல்லாததால், மருத்துவக் குற்றம் என்பது மிகவும் தீங்கு விளைவிக்கும் தொழில் (professional crime)குற்றமாகும்.

அகில் ஒருபுறம் அவனை தேடி அலைந்து கொண்டு இருக்க, முகில் தனக்கு சொந்தமான சொகுசு பேருந்தின் மூலம் ஒளிந்து, தரை மார்க்கமாக விசாகபட்டினம் துறை முகத்தினை அடைந்து, பின்பு அங்கு இருந்து கடல் மார்க்கமாக இலங்கை அடைய தீட்டம் திட்டினான், சென்னை மூலமாக சென்றால் தான் வேந்தனிடம் மாட்ட அதிக வாய்ப்பு இருப்பதால் இந்த வழியினை தேர்வு செய்தான்.

ஆனால் அதற்கு முன்பே வேந்தன் அவனுக்கு பரிசாக அளித்த கைகடிகரத்தின் மூலம் மாட்டி கொண்டான்.

வேந்தன் வேலைக்கு சேர்ந்து ட்ரைனிங் பீரியட்டில் இருந்த பொழுது, அவன் சித்தப்பாவிற்கு பிறந்த நாள் வர, வேந்தன் முகிலுக்கு கை கடிகாரம் ஒன்றை பரிசாக அனுப்பி வைத்தான். அன்று கைகடிகரத்தில் விளையாட்டாக சிப் ஒன்றை பொறுத்த அது இன்று அவனுக்கு உதவியது.

வேந்தன் தனது கார் மூலம் கை கடிகாரத்தில் உள்ள சிப் மூலம் அவனின் பாதையை அறிந்து கஜுவாக்க என்ற விசாகபட்டினம் அருகில் உள்ள இடத்தில் முகிலை கைது செய்தான்.



அவனை கைது செய்த வேந்தன் அவனை அழைத்து கொண்டு முகிலுக்கு சொந்தமான மருத்துவமனைக்கு வந்தான்,அங்கு மருத்துவர்கள் வேந்தன் ஏற்பாடு செய்த தண்டனையை நிறைவேற்ற தயாராக இருந்தனர்.

குளுரோ போர்ம் அளித்து முகிலின் உடலை அறுவை சிகிச்சைக்கு தயார் படுத்தினர், பின்பு சோடியம் தியோபென்ட ஊசியினை அவன் நரம்பில் செலுத்தினர், இந்த ஊசியினை அளவிற்கு அதிகமாக பயன் படுத்தும் பொழுது மஸ்குலர் டிஸ்ட்ரபி என்ற நோய் ஏற்படும்,


மஸ்குலர் டிஸ்ட்ரபி லட்சத்தில் ஒருவருக்கு வரும், முதல் இந்த ஊசி செலுத்தப்பட்டவுடன் நன்கு தூக்கம் வரும், அந்த தூக்கம் எதுவரை நீளும் என்றால் 24 மணி நேரம் வரை, மேலும் மஸ்குலர் டிஸ்ட்ரபி வந்தால் உடம்பில் இருக்கும் ஒரு ஒரு உறுப்பும் செயல் அற்று போகும், முதலில் இந்த நோய் இதயத்தை தங்கினால் மரணம் அடுத்த ஒரே வாரத்தில் நிகழும், அது உடம்பில் உள்ள வேறு உறுப்புகளை தங்கினால் ஒரு மாதத்தில் மரணம், இனி முகில் வேந்தனின் உடல் உறுப்புகள் அவனுக்கே பயன்படாது.

ஒரு மனித உடல் உள்ள கோடி கணக்கான செல்கள் ஒன்றோடுஒன்று ஒட்டி கொண்டு இருப்பதால் தான் அவன் முழு உருவமாக உள்ளான்.

அடுத்தாக அவன் மூளை பகுதியின் நியூரான் செல்களில் உள்ள CAM (cellular adhesion material) எனப்படும் செல்லுலர் அட்ஹெசன் மெட்ரியலை அதாவது ஓட்டு செல்லை அகற்ற ஏற்பாடு செய்தான். அவ்வாறு செய்யும் பொழுது மூளை யில் தேவை இல்லாத எண்ணங்களை தோன்ற வைக்க முடியும், அதாவது தற்கொலை எண்ணம் போன்று, மேலும் இவ்வாறு ஒட்டு செல்லை அகற்றும் பொழுது நல்லது மற்றும் கேட்டது எது என்று பகுத்து அறியும் திறனை மூளை இழக்கிறது, இதனால் ஒட்டு செல் நிக்கியவரின் இயல்பு வாழ்க்கை பாதிக்க படுகிறது.

ஓரு மனிதனின் உடல் நலம் என்ற விஷயம் அவன் தாயின் கருவறையில் இருக்கும் பொழுதே தொடங்குகிறது, கருவில் இருக்கும் குழந்தை வளர வளர தாயின் இதய துடிப்பு, உரையாடல், என அனைத்தும் கேட்க்கிறது. மேலும் ஒரு தாய் கோபப்பட்டு பொழுது அழும் பொழுதோ அந்த உணர்வு குழந்தையின் மூளையை தாக்கி மூளை பகுதியை பாதிக்கிறது, அவ்வாறு குழந்தையின் மூளையை பாதிக்காமல் இருக்க கடவுள் மனிதனுக்கு அளித்த வரம் தான் இந்த CAM செல்கள், இது மூலையில் மட்டும் இல்லாமல் உடலின் அனைத்து இடத்திலும் இருக்கும், இந்த செல்கள் நமது உடலில் இயற்கையாக தோன்றும் ஒரு அதிசயம், இதன் மூலம் உடலில் தோன்றும் அனைத்து நோய்களுக்கும் எதிராக செயல்பட்டு நமது உடலை நோயில் இருந்து பாத்து காக்கிறது.
ஒரு உதாரணமாக மனிதனின் உடலில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழியும் பொழுது வலியினை உணர்ந்த மூளை இரத்தத்தை நிறுத்த சொல்லி காயப்பட்ட இடத்திற்கு கெமிக்கல் சிக்னல் அனுப்பிகிறது, இவ்வாறு அனுப்ப இந்த ஒட்டு உறுப்பு செல்கள் தான் துணை புரிகின்றது. அதே போல் இந்த செல்லில் ஆபத்தும் உண்டு மேற்குரிய செல்கள் மனித உடலில் அதிகமாக இருக்கும் பொழுது உயிரை கொல்லும் கேன்சர் நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.

மனித உடலில் உள்ள CAM செல்லை நீக்கி விட்டால் அந்த மனிதன் நிலை என்ன என்பதை தங்களில் யோசனைக்கு விட்டுவிடுகிறேன்.

இந்த நிலையில் தான் வேந்தன் முகில் மூளையில் உள்ள CAM செல்லை நிக்கினான், இனி முகில் வேந்தன் உயிர் இருந்தும் நடை பிணம், தான் எதுவரை என்றால், அவன் உடல் மஸ்குலர் டிஸ்ட்ரபி நோய் தாக்கும் வரை......

ஒன்று அறிய பொது மக்களின் உடல் உறுப்புகளை திருடி உயிர் வளர்ந்தவன், இன்று அவன் உறுப்புகளே அவனுக்கு பயன் அற்று போயின......

வேந்தன் முகில் மரணம் அடையும் வரை, தனது தாய் தந்தையின் மரணத்திற்கு காரணமான அவனின் உடல் ஒரு ஒரு நிமிடமும் துடிப்பதை பார்க்க அவா கொண்டான், தனது அன்னை தந்தை மரணத்திற்கு முன்பு ஒரு ஒரு நொடியும் துடித்ததை போன்று, முகில் வேந்தனையும் துடிக்க வைக்க எண்ணம் கொண்டான், அவன் அவ்வாறு எண்ணம் கொண்டத்தில் அவன் தவறு எதுவும் இல்லை,

இது அனைத்தையும் செய்து முடித்தவன் முகிலை ஒரு ஆம்புலன்ஸ் உதவியுடன், தனது வீட்டின் கீழே அவனுக்காக தான் 5 வருடமாக பார்த்து பார்த்த கட்டிய இரசிய அறைக்கு கொண்டு வந்து யாருக்கும் தெரியாமல் அடைத்து வைத்தான், மேலும் அவனுக்கு உணவு தினமும் வர ஏற்பாடு செய்தான், அவன் பசியால் இறந்து விட கூடாது என இந்த ஏற்பாடு, அந்த அறையை தான் வந்து தினமும் பார்த்து சென்றான்.



இந்த நிலை எதுவரை என்றால் முகில் வேந்தன் மரணம் அடையும் வரை, அப்படி மரணம் அடைந்தாலும் அவன் உடல் வெளியில் வராது, அங்கேயே அந்த அறையுடன், அவன் இறந்த உடன் அவனுக்கு சமாதி கட்ட ஏற்பட்டு செய்து விட்டான் அகில் வேந்தன்.....

ஊரையும் உலகத்தையும் பொறுத்த வரை பாண்டியன் மற்றும் முகில் வேந்தன் தலைமறைவு ஆனவர்கள், ஆனால் அகில் வேந்தனை பொருத்த வரை கொல்ல பட வேண்டியவர்கள் அவ்வளவுதான்.

இது வரை இந்த ஐந்து நபர்கள் செய்த செயல்களுக்கு உடத்தையாக இருந்த அனைவரையும் கைது செய்து சிறையில் அடைத்து தண்டனையும் பெற்று தந்தான வேந்தன்....

தனது தாய் தந்தையின் இறப்பின் போது ஏற்பட்ட இறுக்கம் வேந்தனுக்கு இன்று தான் தளர்ந்தது போன்று இருந்தது, அவன் மீண்டும் இந்த உலகில் பிறந்தது போன்று உணர்ந்தான்.

தனது பழிவாங்கும் படலத்தை முடித்த நமது வெற்றி நாயகன் அவனின் மனம் கவர்ந்த நங்கையை தேடி CBI ஆபீஸ் சென்றான்....

வேல்விழி இவன் மீது இருக்கும் கோபத்தால் அவன் வீட்டிக்கு வேந்தனிடம் சொல்லாமல் சென்று விட்டதாக செய்தி கிடைக்கிறது......

அகில் வேந்தன் காரில் இருந்து இறங்கி வீட்டில் கால் வைத்த நொடி எங்கோ இருந்து வேகமாக வந்த பூ ஜாடி வேந்தனின் நெற்றியினை பதம் பார்க்கிறது.....

விழிகள் பேசும்.....

எப்படியோ கதையை வெற்றிகரமாக முடித்து விட்டேன், இவனுகளை முடிக்கறகுள்ள எனக்கு நாக்கு தள்ளிடுச்சி......

பாராட்டுகளும், திட்டுகளும் வரவேற்க படுகின்றன......
*(CAM செல்கள் பற்றி நான் சொல்லி இருப்பது அனைத்தும் உண்மை)
நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 
Messages
93
Reaction score
14
Points
8
விழியின் மொழி 23

Epilogue


CBI மைய அலுவலகம்(head quarters)......

மயக்கம் தெளிந்து எழுந்து அமர்ந்த வேள்விழிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்பதை அறிய அவகாசம் தேவை பட்டது....

மயக்கத்தில் இருந்து சுய உணர்வு பெற்றவள், அகில் வேந்தனை கொல்லும் வெறியில் இருந்தாள், (பின்ன மயக்க மருந்து குடுத்து இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டு எதுவுமே சொல்லாம அவன் காணாம போய்ட்டா கோவ படமா அவனை மடியில உக்கார வச்சி கொஞ்சிவங்களா) , தான் எவ்வாறு இங்கு வந்து சேர்த்தோம் என புரியாமல் விழித்தவள் எதிரில் இருந்த பெண்ணிடன் அது குறித்து விளக்கம் கேட்டாள்.


அந்த பெண் வேல்விழி மயக்கம் உற்றத்தில் இருந்து இது வரை வேந்தன் அவளை காக்க செய்த அனைத்தையும் எடுத்து கூறினாள், வேந்தன் தனக்கு முக மாற்று அறுவை சிகிச்சை செய்தது, பாண்டியன் மற்றும் அவனது மகன்களை கொன்றது என அனைத்தையும் எதிரில் இருந்த பெண்ணின் மூலம் தெரிந்து கொண்டாள் வேல்விழி.

அவன் தன்னை காக்க இது வரை செய்த செயல்களை தெரிந்து கொண்டவள், மனதில் அவன் மீது, காதல், கடல் அலையை போல, நீ ஊற்றைப் போல பெருக்கு எடுத்தது, அவனுக்கு அங்கு கிடைக்கும் மரியாதை பார்த்தவள், அவன் தன்னவன் என்ற கர்வம் மனதில் பிறந்தது, அது அவள் மனதில் மகிழ்ச்சியாக பிறந்து, முகத்தில் எதிர் ஒளித்து புன்னைகையாக விரிந்தது...

நொடி பொழுதில் எதிரில் இருக்கும் பெண் காணும் முன்பு அதனை மறைத்தவள், முகத்தில் கோபம் என்ற சாயம் பூசி கொண்டு எதிரில் இருந்த அந்த பெண்ணிடம்...

"எல்லாம் சரி, இப்போ எங்க போய் இருக்காரு உங்க மோர், இல்லை இல்லை உங்க சார் என்று கேட்டாள். எதிரில் இருத்த பெண், பாண்டியன் மற்றும் முகில் வேந்தனை கைது செய்த வேந்தன் அவர்களுக்கு தண்டனையை பெற்று தர மற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வெளியில் சென்று இருப்பதாகவும் அவன் திரும்பி வர இரண்டு நாள் ஆகும் என கூறிவிட்டு அவன் மீது எரிகின்ற கோபம் என்னும் நெருப்பில் நெய் ஊற்றி விட்டு அங்கு இருந்து சென்றாள்.

இரண்டு நாட்கள் நெரிஞ்சி முள் மேல் நிற்பதை போன்று தவித்தாள், வேல்விழி அவனது எதிரிகள் அவனை ஒன்று செய்து கூடாது என்ற பயம் ஒருபுறம், அவனை காண துடித்த கண்கள் அவன் தொடுகை உணர துடித்த மெய், அவனை தன்னுள் ஒளித்தி வைத்து இருக்கும் இதயம், அவன் கை கோர்க்க நினைத்த கைகள் என தனது புலன்களை அடக்க பெரும்பாடுபட்டாள் பெண்ணவள்....

இரண்டு இரவு, இரண்டு பகல், அவளின் காதல் கணவனின் வருகைக்காக பொறுத்து பார்த்தவள், அவன் வராமல் போகவே, அவன் மீது கோபம் கொண்டு அங்கு தான் பாதுகாப்புக்கு இருந்த காவலர்களிடம் அவன் வந்து தன்னை பற்றி கேட்டால் தன் வீட்டுக்கு சென்று விட்டதாக கூற சொல்லி விட்டு அங்கு இருந்து வேந்தன் வீட்டுக்கு சென்றாள்.

தனது பழிவாங்கும் படலத்தை முடித்த நமது வெற்றி நாயகன், CBI இயக்குனரிடம் சிறிது நேரம் பேசி விட்டு, அவன் மனம் கவர்ந்த நங்கையை தேடி சென்றான்....

வேல்விழி இவன் மீது இருக்கும் கோபத்தால் அவன் வீட்டிக்கு வேந்தனிடம் சொல்லாமல் சென்று விட்டதாக செய்தி அவன் கீழ் வேலை செய்யும் காவலர்களின் மூலம் அவனுக்கு கிடைக்கிறது.....

அகில் வேந்தன் தனது காரில் கிளம்பி அவன் காதல் மனைவியை காண, இளையராஜா பாடல்களை கேட்டு கொண்டே மகிழ்ச்சியாக வீட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தான்.

இதற்கு இடையில் குழலிக்கு போன் செய்து வீட்டில் வேலை செய்பவர்கள் குழலியையும் சேர்த்து விடுப்பு எடுத்து வெளியேற்றிடும் படி சொன்னான்,( ஊரே பயப்படுற CBI ஆபீஸ்ர் பொண்டாட்டி கிட்ட அடி வாங்குறதா வீட்டுல வேலை செய்யுறவங்க பார்த்த அவனுக்கு தானே அசிங்கம் அதன் சார் வீட்டை விட்டு வெளியே போக சொல்றான், இது பெரிய ரகசியம் யாரும் சொல்லிடாதீங்க, அப்றம் நம்மஹீரோ வெளில தலை காட்ட முடியாது).

வீட்டில் இருக்கும் அனைத்து வேலை ஆட்களும் வெளியில் செல்ல, குழலிடம் இது குறித்து விசாரித்தால் வேல்விழி, தனது கணவன் தான் இது அனைத்துக்கும் காரணம் என்று அறிந்து கொண்டவள் அவன் வருகைக்காக கையில் பிளாஸ்டிக் பூ ஜாடி மற்றும் பூரி கட்டையுடன் அவன் வெளுத்து எடுக்க காத்து இருந்தாள், இதற்கு இடையில் வீட்டில் உள்ள வேலை செய்யும் அனைவரும் வெளியேறினர்.

வேந்தனின் கார் வீட்டின் வாசலில் நுழைந்தது, அவன் எப்பொழுது வீட்டின் வாசற்படியில் கால் வைப்பான், என கையில் இருக்கும் பூ ஜாடியை அவன் தலைக்கு கூறி வைத்து காத்து இருந்தாள் வேல்விழி.....

வேந்தன் காரில் இருந்து இறங்கி வீட்டில் கால் வைத்த நொடி, வேல்விழி அவன் தலையை குறி பார்த்து வேகமாக எறிந்தாள், வேல்விழி எறிந்த பூ ஜாடி சரியாக குறி தவறாமல் வேந்தனின் நெற்றியினை பதம் பார்க்கிறது....

"ஸ் ஸ் அம்மா, என்ற சத்தத்துடன் உள்ளே நுழைத்தான், வீட்டின் ஹால் யாரும் இல்லாமல் வெறிச்சோடி இருந்தது,

" சரியான கோபத்துல இருப்ப போல டேய், அகில் இப்படியே உசுர கைல புடிச்சிட்டு சேவுறு ஏறி குதிச்சு ஓடி போய்டு, உசுரவது உனக்கு மிஞ்சும் என மனதில் திட படுத்தி கொண்டு உள்ளே சென்றான்.

நெற்றியை தேய்த்து கொண்டே உள்ளே வந்தவன், வேள்விழி இருந்த நிலையினை கண்டு பயந்தான்.

வேல்விழி பூரி கட்டையை கையில் வைத்து கொண்டு போருக்கு செல்லும் காளி போல அவனை வெளுத்து வாங்க தயாராக நின்று இருந்தாள்.

" வா டா, குரங்கு, எருமமாடு, பொறுக்கி, என அவனை வார்த்தைகளால் அர்ச்சித்து கொண்டே அவன் அருகில் சென்றாள்..

அவள் அருகில் வருவதை கண்ட வேந்தன் இரண்டி பின்னால் நகர்த்த படி அவளிடம் சமாதான பேச்சு வார்த்தையில் இறங்கினான்.

"விழிமா, என்று அவன் அழைக்க,

" என்னடா, என்னை அப்படி கூப்பிடாத, என்று அவள் கூற

"கட்டின புருசனை இப்படி மரியாதை இல்லாம கூப்பிட கூடாது கண்ணம்மா, என்றான் வேந்தன்,

"நீ பண்ண வேலைக்கு நான் உன்னை இன்னும் உயிரோட விட்டு வச்சி இருக்கறதே தப்பு, நீ கட்டின, என்னோட தாலி, என் கழுத்துல இருக்கணும் தான் உன்னை உயிரோட விட்டு வச்சி இருக்கேன் என்றாள் அவள்,

" சரி,இப்போ உன்னோட கோவம் போக மாமா என்ன பண்ணனும் சொல்லு டா பன்றேன்"

" சரி நான் சொல்றது எல்லாத்தையும் பண்ணுவியா" என்றாள் அவள்.

"ஹ்ம்ம், மாமா நீ சொன்ன செய்யாம இருப்பேனா, சொல்லுடி தங்கம் பன்றேன் என்றான் வேந்தன்.

" அப்போ ஒழுங்கா நீயே வந்து அடி வாங்குற, எங்கையும் ஓட கூடாது, அடி வங்கினத்துக்கு அப்றம் 1000 தோப்புக்கரணம் போடுற புரியுதா, என்றாள் வேல்விழி,.

" இது எல்லாம் ரொம்ப ஓவர் டி, நான் ஒரு CBI ஆபீஸ், இது எல்லாம் வெளில தெரிஞ்சா மாமா க்கு ரொம்ப அசிங்கம் செல்லம், வேற எதுனா தண்டனை கூட குடுமா நான் வாங்கிக்கிறேன், பூரி கட்டைல அடிக்கிறது எல்லாம் ரொம்ப ஓவர் டி", என்றான் அவன்.

" ஹ்ம்ம், நான் கூட மொதல்ல மத்து கட்டை தான் எடுத்தேன் ஆன, அதுல அடிச்சசா கொஞ்சமா தான் வலிக்கும் னு பூரி கட்டையை கொண்டு வந்துட்டேன், போதுமா...

" ஒழுங்கா கிட்ட வந்து அடி வாங்கிக்கோ, வா ராசா , வா , கிட்ட வா கன்னு, என்று செல்லம் கொஞ்சி கொண்டே அவன் அருகில் வந்தவள்,பூரி கட்டை கொண்டு அவனை அடிக்க ஆரம்பித்தாள்,

அவன், ஓட இவள் துறத்த, அவள் அடித்த அடிகள் அனைத்தையும் வலித்தாலும் இன்பமாக தங்கினான் வேந்தன்.

அவளுக்கு முன்பு ஓடியவன் அவர்களின் அறையில், கதவின் பின்பு ஒளிந்து கொண்டான்,
அவனை காணாமல் தேடி கொண்டு இருந்தவள் அந்த அறையினுள் நுழைய, அவன் கதவை முடி, கதவின் மேல் கை வைத்து நின்றான்...
அவன் அப்படி செய்ததும் வேல்விழி, பயத்துடன் இரு அடி பின்னால் வைத்தாள்.

"என்னடி, எண்ணையில் போட்ட கடுகு மாதிரி இவ்வளவு நேரம் பொறிச்ச, இப்போ சத்ததையே காணும், என்று அவள் அருகில் வந்தவன், அவள் திமிற திமிற அவளை தனது அணைப்பில் அடக்கினான், அவளும் அவனுக்கு தோதாக அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.



அவள் முகத்தை நிமிர்த்தி அவள் கண்களில் தன் மீது அளவு இல்ல காதலை கண்டவன், அவள் இதழ் மேல் தன் இதழ் சேர்த்தான், கூடு சேர்த்த பறவை தனது இணையை சேர்த்தது போல இருவரும் நெஞ்சிலும் ஒரு அமைதி உணர்வு கூடி கொண்டது.

அவனிடம் இருந்து விலகியவள் அவன் அளித்த முதல் முத்தத்தால் அவன் முகம் காண முடியாமல் தனது தலை குனிந்து தனது வெக்கத்தையும், முக சிகப்பையும் மறைத்து கொண்டு,

"நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும், என்றாள்.

அவள் அருகில் வந்தவன், அவளை தனது கை வளைவில் நிறுத்தி கொண்டு "ஹ்ம், கேளுமா என்றான்.

" எனக்கு ஒரே டௌப்ட், நீங்க என்ன உருகி உருகி லவ் பண்ணி இருக்கீங்க, அதையும் நான் உங்க டைரி யா படிச்சி தான் தெரிந்து கொண்டேன், நானும் உங்களை பார்க்காம லவ் பண்ணேன், ஆன, நான் அவ்வளவு கஷ்டப்பட்டு அப்ப கூட நீங்க ஏன், என்னோட கண்ணு முன்னாடி வரலை, என்று கேட்டாள் வேல்விழி.

வேந்தன் அதற்கான காரணத்தை கூற ஆரம்பித்தான், " உன்ன பார்க்கும் பொழுது எல்லாம் உன்ன அணைச்சிகனும் மனசு சொல்லும், ஆன உனக்கு பின்னாடி இருந்த ஆபத்து ல இருத்து உன்னை காக்க தான் நான் விலகி இருந்தேன், நான் உன் கிட்ட நெருங்கின நம்ம எதிரிகள் முழிச்சிக்குவாங்க தான் உனக்கு அவ்வளவு கஷ்டம் வந்த அப்போ கூட நான் உன்னை விட்டு விலகி இருந்தேன், நீ கேட்கலாம் அப்போ எதுக்காக என்னை, இவ்வளவு சீக்கிரமா மிரட்டி கல்யாணம் பண்ணனு, அப்போ உன்னை வச்சி நம்ம எதிர்கள் அந்த மெஷின் ஒர்க் பண்ண வைக்க பார்த்தாங்க, அதனால் தான் உன்னை சீக்கிரமா கல்யாணம் பனேன், அப்போ கூட உனக்கு என்னை அடையாளம் தெரியா கூடாதுனு உன்னை கடத்தி கல்யாணம் பண்ண மாதிரி நடிச்சேன், என்று அவன் செய்த செயலுக்கு விளக்கம் அளித்தான் வேந்தன்.

அவன் தனக்காக தான் அனைத்து செயல்களையும் மறைமுகமாக தனக்கு தெரியாமல், தன்னை காக்க செய்து உள்ளான் என்பதை அறிந்த அவளின் காதல் கொண்ட மனது அவன்பால் தடம் புரள, அவன் உயரத்திற்கு எம்பி அவனுக்கு அதற்கான பரிசை அவன் கன்னத்தில் அளித்தாள் வேல்விழி, அங்கே அழகே உருவான தாம்பத்தியம் நிகழ்த்து.....



வேள்விழியும் வேந்தனுக்கு திகட்ட திகட்ட தங்களது 5 வருடம் அனுபவிக்காத காதலை தேன் நிலவில் அனுபவித்து ஒரு மாதத்திற்கு பிறகு இந்தியா வந்து சேர்ந்தனர்.....



வேந்தன் வேலை தொடர்பாக டெல்லி சென்று இருக்க, இரண்டு வாரத்திற்கு பிறகு வேல்விழி சமையல் அறையில் மயக்கம் உற்றாள், அவளை கண்ட குழலி மருத்துவருக்கு தெரிவிக்க, விரைந்து வந்த மருத்துவர் அவளை பரிசோதித்து இனிப்பான செய்தியை கூறி சென்றார்.




இந்த இன்ப செய்தி வேந்தனுக்கு தெரிவிக்க பட அவன் இறகு இல்லாமல் வானில் பறந்தான், வந்த வேலையை பாதியில் நிறுத்தி விட்டு தனது உயிரை சுமக்கும் தனது உயிரின் பாதியான தன்னவளை பார்க்க ஓடி வந்துவிட்டான்.

வேந்தன் வேள்விழியை அவன் கண்ணின் இமை போன்று காத்தான், இரண்டு மாதத்திற்கு பிறகு இருவரும் ஸ்கேன் எடுக்க மருத்துவமனை செல்ல, ஸ்கேன் ரிப்போர்டை பரிசோதித்த மருத்துவர் சொன்ன செய்தி கேட்டு இருவருக்கு இன்பம் இரு மடங்கு கூடி போனது, ....

7 மாதங்கள் அவளை மலர் போன்று தங்கினான் வேந்தன், அவளை ஒரு வேலையும் செய்ய விடாமல், தனது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு அவளின் பாதம் கீழே இறங்காமல் அவளுக்கு சேவை செய்தான். குழலி அவனுக்கு உதவி செய்தார்.

பிரசவ நேரம் நெருங்க நெருங்க வேல்விழி மிகவும் பயந்து தான் போனாள், இந்த காலத்தில் ஒரு குழந்தை பெற்று எடுப்பதே சவாலான விஷயம், இதில் இரு குழந்தைகளை பெற்று எடுபது என்றால் அவள் பயம் நியாயம் தானே.

ஒருநாள் மாலை பொழுதில் வேள்விழிக்கு வலி எடுக்க அவளை அள்ளிக் கொண்டு மருத்துவமனை நோக்கி விரைந்தான், வேந்தன், பிரசவ அறையில் கூட அவளை விட்டு அவன் ஒரு நொடி கூட விலக வில்லை, அவளின் கைகளை பிடித்து கொண்டு அவளிடம் இருந்தது விலகாமல் அவளுக்கு ஆறுதல் சொல்லி கொண்டு இருந்தான், வேள்விழிக்கு அதிகம் சிரமம் அளிக்காமல் இந்த பூமியில் அவதரித்தனர் வேல்விழி மற்றும் அகில் வேந்தனின் புதல்வன் மற்றும் புதல்வி.



வேந்தனின் மகனும் மகளும் அவனின் தாய் மற்றும் தந்தையின் உருவத்தையும், குணத்தையும் பெற்று இருந்தனர்
தங்களின் மகன் மற்றும், மகளுக்கு யாழ் வேந்தன் மற்றும் சக்திவிழி என்று பெயர் சூட்டினர் வேந்தன் மற்றும் வேல்விழி. தன்னை விட்டு பிரிந்து சென்ற தனது அன்னையும் தந்தையும் மகன், மற்றும் மகள் வடிவில் தன்னிடம் மீண்டும் வந்து விட்டதாக பூரிப்பு அடைந்தான் வேந்தன்.

இரு வருடங்களும் பிறகு...

யாழ் மற்றும் சக்தி என்னும் இரண்டு வாண்டுகளை சமாளிப்பது வேல்விழி பெரிய சவாலாக இருத்தது, இதில் வேந்தனுக்கு இவர்களுடன் கூடி விட்டால் வீடு இரண்டு பட்டுவிடும், அதன் பிறகு வேந்தனுக்கு இந்த வளராத குழந்தைகளை விட வளர்த்த அவனின் பெரிய குழந்தையை சமாளிப்பது பெரும் பாடு ஆகி விடும், முதல் கெஞ்சி பிறகு கொஞ்சி சமாளிப்பான், அதற்கும் சமாதானம் ஆகவில்லை என்றால் அவனின் தனி வழியில் அவளை சமாளித்து தனது வழிக்கு கொண்டு வருவான்.

இதற்கு இடையில் இந்த மூன்று வருடத்தில் வேல்விழி வேந்தனின் விழியின் மொழிகளை படிக்க பழகி கொண்டாள், மனதின் மொழியையும் சேர்த்து தான், அவன் தனது கண்களில் நினைப்பதை, அவள் தனது மனம் கொண்டு முடித்திடுவாள், மொத்தத்தில் எரிமலையின் சீற்றமாக இருந்தவனின் வாழ்வில் குளிரும் நிலவாக தோன்றி அவனை வென்று, இறுதியில் அவனின் விழியின் மொழி ஆகி போனாள் வேல்விழி



......முற்றும்.........

வாய்ப்பு கிடைத்தால் மற்றொரு கதையில் சந்திக்கலாம்


நன்றி நட்புகளே
சரண்யா வெங்கட்
 

New Threads

Top Bottom