Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒன்றரை நிமிடத்தில் ஐந்து கொலைகள்!

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
காஜலை பெட்டில் படுக்க வைத்து ப்ளவுஸின் முதல் கொக்கியை நீக்கிய அருண் “மெத்து மெத்துன்னு இருக்கே? “என்று ஆச்சரியப்பட்ட போது கொத்தாக உலுக்கி திருப்பப்பட்டான்.கனவா நனவா என்று புரியாமல் கண் விழித்தவன் பெட்டின் எதிரே கமிசனர் வெலிங்டன் தன் கிங்கர மீசையுடனும், பருத்த தொப்பையுடனும் யூனிபார்மில் நிற்பதை பார்த்தான்.”கமிசனர் கரடி கனவுல கூட யூனிபார்மோட வருதுப்பா! “என்றவன் மறுபடியும் குப்புற படுத்து விட்ட சில்க் மரத்தை தழுவ ஆரம்பித்தான்.



அடுத்த நிமிசத்தில் வெலிங்டனின் முரட்டு கரங்கள் அருணின் காலரை இறுக்கி பிடித்து உயர தூக்கின.சீலிங் பேனின் நுனி முடியில் உரசிய போதுதான் அருண் நடந்து கொண்டிருப்பது கனவல்ல நனவென்ற முடிவுக்கு வந்தான்.”சார்! இறக்கி விடுங்க சார்! “என்றான்.



“கரடின்னு என்னமோ சொன்னியே? “என்றார் வெலிங்டன்.



“எனக்கு தூக்கத்துல பேசற வியாதி சார்! அதுல எதாவது உளறியிருப்பேன்.!”



“அப்ப நீ என்ன கரடின்னு சொல்லலை? “



“சேச்சே! உங்கள அப்படி சொன்னா கரடிக்கு கோபம் வந்துராது! “என்றவன் பாத்ரூமை நோக்கி ஓடினான்.உள்ளேயிருந்து துண்டோடு வந்த விக்னேஷ் “சீக்கிரமா குளிச்சு ரெடியாகு! அர்ஜெண்டா ஒரு கேஸோட வந்துருக்காரு! “என்றான்.



“அர்த்த ராத்திரியில் குளிப்பதெல்லாம் கொடுமை! “என்ற அருண் கதவை தாழிட்டான்.



டீவியை போட்ட விக்னேஷ் “நம்ம கேஷ் நியூஸ்ல வருமா? “என்றான்.



“கொஞ்சம் லேட்டாகும்! நீ ரெடியாகு! “என்றார் வெலிங்டன்.விக்னேஷ் ரெடியாகி பாடி ஸ்பிரேயரை அடித்த போது வெளி வந்த அருண் “இது எதுக்கு? டிரஸ்ஸிக்கா? பாடிக்கா? “என்றான்.



“நாற்றத்திற்கு! “என்றார் வெலிங்டன்.



“ஒரு அரை மணி நேரம் லேட்டா எழுப்பியிருந்தா காஜல் அகர்வாலோட ஒரு மேட்டர் முடிச்சிருப்பேன்! வந்து கெடுத்துட்டிங்க! “என்றான் அருண்.



“இவனோட பெட்ஷுட்டையெல்லாம் டிரை கிளினிங்குக்கு போடுப்பா! அசிங்கம் புடிச்ச பையன்! “என்றார் வெலிங்டன்.



“கை ரேகை பாக்க முடியாத அளவுக்கு மோசமாயிட்டான்! “என்றான் விக்னேஷ்.



“சேலம் வைத்தியர் இருக்கிறவரை பிரச்சனையில்லை! எல்லா பிரச்சனையையும் சரி பண்ணிருவாரு! “



“நக்கலெல்லாம் இருக்கட்டும்! பூட்டுன வீட்டுக்குள்ள எப்படி வந்தீங்க? “என்றான் அருண்.



“ஒரு பூட்டுக்கு மூணு சாவிதானே தருவாங்க? இரண்டு உங்ககிட்ட இருந்தா அதுல மீதி ஒன்னு எங்கிட்டத்தான் இருக்கு! அதை வைச்சு உள்ளே வந்தேன்! “



அவர்கள் வீட்டை பூட்டிய போது சிவப்பு பந்தாய் சூரியன் கிழக்கில் எழுந்து கொண்டிருந்தான்.



“இதுதான் சூரியனா? இன்னைக்குத்தான் இதை பாக்குறேன்! “என்றான் அருண்.



“இப்ப எங்க போக போறோம்! யாரு செத்து போனா? நாங்க எதை கண்டு பிடிக்கனும்! “



“ஒரு மாஸ் மர்டரை கண்டு பிடிக்கனும்! அஞ்சு பேத்தை ஒரே இடத்துல. சுட்டு கொன்ருக்காங்க! ஒருத்தருக்கொருத்தர் சம்மந்தமில்லாத ஆளுக! கொன்னது ஒரே ஆள்! அவனை பிடிக்கனும்! “



“கொலைக்கு மோட்டிவ்? “என்றான் விக்னேஷ்.



“அதை நீதான் கண்டு பிடிக்கனும்! ஒன்றரை நிமிசத்துல ஐந்து கொலைகள்.சம்பவம் நடந்து ஒரு மணி நேரம்தான் ஆச்சு! “



“கொல்ல வேண்டிய ஆளோட சம்மந்தமில்லாத நாலு பேரை சேர்த்து கொன்னு குழப்ப நினைச்சிருப்பானோ கில்லர்? “



“மேபி அப்படியும் இருக்கலாம்! “



“அப்ப அஞ்சு பேத்துல கில்லரோட ஒரிஜினல் எய்ம் யாருன்னு எப்படி கண்டு பிடிப்பது? “



“கேள்வியா கேக்காதப்பா! நீதான் இந்த கேள்விக்கெல்லாம் பதிலை கண்டு பிடிக்கனும்! “என்றார் வெலிங்டன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 2



ஜீப்பில் இருவரும் ஏறிய பின் ஜீப்பை கிளப்பினார் வெலிங்டன்.

“நீங்க சொன்ன மாதிரி ஒரு கெட்டவனோட நாலு நல்லவனுகளையும் சேர்த்து சுட்டு கொன்றுந்தா கொலைகாரன் ஒரு சைக்கோவா இருக்கனும்.ஆனா அவனை ஈஸியா பிடிச்சிடலாம்.அந்த ஓரு கெட்டவனுக்கு எதிரி யாருன்னு கண்டு பிடிச்சா அது கண்டிப்பா அந்த சைக்கோவாத்தான் இருப்பான்.அதே சுட்டு கொல்லப்பட்ட எல்லோரும் அயோக்கியனுகளா இருந்தா கில்லர் படு பயங்கர புத்திசாலியா இருக்கனும்.செத்து போன அஞ்சு பேரோட எதிரிகளை எல்லாம் சல்லடை போட்டு சலித்து அந்த புத்திசாலியை கண்டு பிடிக்கனும்.இப்ப நாம தேடப் போறது சைக்கோவா? இல்லை புத்திசாலியான்னு தெரியலை! “என்றான் விக்னேஷ்.



“நீ சொல்ற லாஜிக் கரெக்டுதான்.அப்படியே இன்னொரு க்ளுவும் தர்றேன்.கில்லர் ஆர்மில வேலை செய்தவனா இருக்கனும்! அதனாலதான் நான் உங்களை தேடி வந்தேன்! “என்றார் சாலையில் கவனமாக இருந்த வெலிங்டன்.



“யாரு அந்த ஆண்டி இந்தியன்? “என்றான் அருண்.



“இங்க இருக்கிற ஒரே ஒரு “ஆண்டி “இந்தியன் நீதான்! “என்றார் வெலிங்டன் கிண்டலாக!



“கில்லர் ஆர்மிக்காரன்னு எப்படி சொல்றீங்க? “என்றான் விக்னேஷ்.



“அவன் சுட யூஸ் பண்ணியிருப்பது ஸ்னைப்பர்னு நினைக்கிறேன்! “



“கிழிஞ்சுது! ஒரு கிலோமீட்டருக்கு அந்தப்பக்கம் இருந்து கூட துல்லியமா சுடலாமே? எத்தனை மொட்டை மாடியை தேடறது? “என்றான் அருண்.



“ஸ்னைப்பரா இருக்க வாய்ப்பில்லை.ரிட்டயரான மிலிட்டரி மேனுக்கு அவனோட ஆயுதத்தை தர மாட்டாங்க.பறிமுதல் பண்ணிட்டுதான் அனுப்புவாங்க! ஸோ நீங்க சொன்ன மாதிரி நடக்கனும்னா அது அசௌம்பிள் செய்யப்பட்டதா இருக்கனும்! “என்றான் விக்னேஷ்.



“குண்டு வெடிக்கும் போது ஏற்படுற ஹீட்டுல இரும்பு விரிவடையுமே? தொடர்ந்து ஆறு குண்டு வெடிக்கும் போது வர்ர ஹீட்டுல பேரல் தணலாகி விடுமே? குறி வைப்பது சிரமம்! “என்றார் வெலிங்டன்.



“அதுக்கு வேற மெட்டீரியல் இருக்கு.எவ்வளவு ஹீட்டுலயும் விரிவடையாது.”



“என்ன மெட்டீரியல் அது? “



“கார் ஸ்டீயரிங் பைப்தான் அது! நாட்டு துப்பாக்கிகளும், கள்ள துப்பாக்கிகளும் அதில்தான் செய்யறாங்க! ஓரு அக்யுஸ்டு கிட்ட கிடைச்ச மேட்டர் இது! ஆமா! சம்பவம் எங்கே நடந்திருக்கு? “



“செண்ட்ரல் பார்க்! கிட்டத்தட்ட நெருங்கிட்டோம்.சிக்னலை தாண்டி ரைட் சைடு! “என்றார் வெலிங்டன்.



சிகப்பு சிக்னலுக்கு ஜீப் காத்திருந்த போது பச்சை விளக்கெரியும் பகுதியில் சாயம் போன செண்ட்ரல் பார்க் போர்டு தெரிந்தது.சிக்னலை பார்த்தபடி விக்னேஷ் யோசனையில் ஆழ்ந்தான்.பச்சை விளக்குக்கு பின்னால் பார்க்கினுள் நுழைந்தது ஜீப்.கும்பலாக நின்று கிசு கிசுத்து கொண்டிருந்த கூட்டம் ஜீப்பை பார்த்ததும் கலைய ஆரம்பித்தது.பாரன்சிக் ஆட்கள் தூக்கம் கலையாத முகத்தோடு பணியில் இருந்தனர்.பார்க்கின் முகப்பில் அரை வட்ட வடிவ லேன் வடிவமைப்பு மூன்றடி இடைவெளி தூண்களுடன் காணப்பட்டது.கிட்டத்தட்ட ஜாமெண்ட்ரி பாக்ஸின் கோண மாணியை அந்த அமைப்பு நினைவுபடுத்தியது.தூண்களின் மூன்றடி இடைவெளிகளில் புதர் செடிகள் நிறைந்திருந்ததால் ஒவ்வொரு தூணிலும் நிற்பவர்கள் இன்னொருவரை பார்க்க முடியாது.மொத்தமிருந்த ஆறு தூண்களில் ஐந்து தூண்களுக்கு கீழே ஐந்து டெட்பாடிகள் கிடத்தப்பட்டிருந்தன.சரியாக நெஞ்சில் தோட்டாக்கள் துளைக்கப்பட்ட அடையாளங்களுடன்.ஒவ்வொருவரின் கையிலும் ப்ரீப் கேஸோ, சூட்கேஸோ இருந்ததை விக்னேஷ் கவனித்தான்.இறந்தவர்களின் ஷூவுக்கு அடியிலிருந்த அந்த அடையாளத்தை பார்த்ததும் விக்னேஷின் உதடுகள் “பிர்லியண்ட்! “என்று முணுமுணுத்தன!
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 3



இறந்து கிடந்தவர்களின் காலடியில் இருந்த பெருக்கல் குறியை பார்த்த விக்னேஷின் அருகே வந்த அருண் “இதென்ன பாஸ் மார்க் பண்ணியிருக்கு! சினிமா ஷுட்டிங்லதானே இந்த மாதிரி மார்க் பண்ணி நிக்க வைப்பாங்க! கேமரா ஏங்கிள் மாறாதிருக்க! “என்றான்.



“அதையேதான் இங்கியும் பாலோ பண்ணியிருக்கான்.இந்து பெருக்கல் குறியில சரியா நிக்க வைச்சுட்டு அப்புறம் சுட்ருக்கான்.கேள்வி என்னன்னா ஐந்து பேரையும் எதை சொல்லி இங்க வரவைச்சு கொன்ருப்பான்கிறதுதான்! “



“அப்ப கில்லரை இவங்க அஞ்சு பேத்துக்கும் தெரியும்னு நினைக்கிறேன்.!”



“அஞ்சு பேர் இல்லை! ஆறு பேர்.!”



“என்ன பாஸ் சொல்றீங்க? இங்க ஐந்து பாடிதானே இருக்கு? “



“அது சரிடா! மொத்தம் ஆறு தூண் இருப்பதை கவனி.பெருக்கல் மார்க் ஆறு இருப்பதை பார்! “



“அப்ப அந்த ஆறாவது ஆள்? “



“இங்க வரம டிமிக்கி கொடுத்துருக்கனும்.இல்லைன்னா கில்லர் சுடுவது தெரிந்து கடைசி நேரத்துல தப்பிச்சி ஓடியிருக்கனும்! “



“அப்ப அவன் பயத்துல வெளிய வர மாட்டான்.!”



“தப்பு! பாதுகாப்புக்காக நம்மை தேடி வருவான்.எதுக்கும் பயப்படாத ரவுடியா இருந்தா கொலைகாரனை அவனும் தேட ஆரம்பிச்சிருப்பான்.அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் கொல்ல முயற்சி பண்ணலாம்! “



“அப்ப இன்னொரு கொலைக்கு வாய்ப்பிருக்கு! “



“ஒரு யூகமா சொல்றேன்.உண்மையாவே அப்படி நடக்கவும் வாய்ப்பிருக்கு! “



வெலிங்டன் கையில் ஐந்து மொபைல் போன்களுடன் அருகில் வந்தார்.

“இதெல்லாம் செத்து போனவங்களுடையது.எல்லா போன்லயும் கடைசியா ஒரே நெம்பர்தான் இருக்கு! “



“அது கில்லரோடதா இருக்கும்.அது மூலமா இண்ட்ரக்சன் கொடுத்து பெருக்கல் குறில நிக்க வைச்சிருக்கனும்.ஆனா எதுக்காக வந்திருப்பாங்க? எதை சொல்லி வர வைச்சிருப்பான்? “



“ஒரு யூகமா சொல்றேன்.நிறைய பணம் தருவதா சொல்லி வர வைச்சிருப்பான்னு நினைக்கிறேன்! “



“எப்படி சொல்ற? “



“செத்தவங்க கையில ப்ரீப்கேஷோ, சூட்கேஸோ இருக்கே? எல்லாமே காலியா இருக்கு! ஸோ எதையோ வாங்கிட்டு போக வந்திருக்கனும்.அதை தருவதாக சொல்லி இங்க வர வைச்சிருப்பான்! “



“ஒரு டவுட்டு! டிரையல் பாக்காமயா இத்தனை கொலையை டைரக்டா ஒருத்தன் செய்வான்? “



“நேத்தே பார்த்திருப்பான்.இங்க இருக்கிற குப்பை தொட்டியை தேடிப் பாருங்கள்! எதாவது வித்தியாசமா கிடைக்கும்! “



அருண் அருகேயிருந்த குப்பை தொட்டியை கவிழ்த்தான்.”இன்னைக்குத்தான் சரியான வேலையை செய்யறான்! “என்ற வெலிங்டனை முறைத்த அருண் “ஹலோ! ஜெண்டில் மேன் நீங்களும் தேடுறது? “என்றான்.இருவரும் தேடிய சற்று நேரத்திற்கு பின் அது கிடைத்தது.பெல்லட் எனப்படும் இரப்பர் தோட்டாக்கள்.



“நீ சொன்னது சரிதான்.இதுல ஆறு தோட்டா இருக்கு! அப்ப தப்பிச்ச இன்னொருத்தன்?”



“இன்னொரு கொலை பண்ணுவான்.இல்லைன்னா நம்மை தேடி வருவான்.”



“இதை எப்படி கண்டு பிடித்தாய்? “என்றார் வெலிங்டன்.



“இரப்பர் தோட்டா தூணில் மோதும் போது சுண்ணாம்பு சுவரில்ஏற்பட்ட கருப்பு அடையாளத்தை வைத்துதான்! “என்றான் விக்னேஷ்!



“இந்த கேஸ் தலைவலியா இருக்க போகுது! “என்றான் அருண்.



“உன்னை விடவா? “என்றார் வெலிங்டன்!



"அந்த கில்லரோட நம்பர்?"



"சுவிட்ச் ஆப்புன்னு வருது "என்றார் வெலிங்டன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 4



“அந்த நம்பர் இனி எப்போதும் வேலை செய்யாது! “என்றான் விக்னேஷ்.போலீஸ் என்று எழுதப்பட்டிருந்த தடுப்பு ரிப்பன்களை தாண்டி சில வாகனங்கள் வந்து நின்றன.



“வந்துட்டானுக! கேப்டனோட குப்பை தொட்டிகள்! “என்றார் வெலிங்டன். மீடியாக்களின் மைக் வெலிங்டனை சூழ ஆரம்பித்தது.”இருப்பா! வர்ரேன்! “என்றவர் சற்று தொலைவாக கூட்டத்தை கூட்டி சென்றார்.



“சிட்டிக்கு நடுவுல ஐந்து பேரை சுட்டு கொன்ருக்காங்களே? இதை பத்தி என்ன சொல்றீங்க? “என்ற நிருபரிடம் “சட்டம் தன் கடமையை செய்யும்! “என்றார் வெலிங்டன்.



“இதுல வெளிநாட்டு சதி எதாவது இருக்குமா? “என்றார் இன்னொருவர்.



“அப்படி எதாவது இருந்தா சொல்லுங்க! நாங்களும் அந்த டைரக்சன்ல விசாரிக்கிறோம்! “



“இது ஜாக் ரீச்சர்னு ஒரு இங்கிலீஷ் படத்துல வர்ர மாதிரியே இருக்கே? “



“அப்ப கில்லரும் இங்கிலீஷ் படம் நிறைய பார்ப்பான் போலிருக்கு! “என்று வெலிங்டன் பேட்டியை தொடர்ந்து கொண்டிருக்க அருண் “கரடி என்னமா சமாளிக்குது பாரு! “என்றான்.



“அரசாங்க ஆளுகல்லாம் கொஞ்சம் கமல் மாதிரிதான் பேசி பழகனும்.இல்லைன்னா பலியாடா மாத்திருவாங்க! இப்ப ஒரு சிக்கல்ல மாட்டியிருக்கோம்! “



“என்ன பாஸ் அது? “



“தோட்டா வந்த திசை தெரியும்.அந்த திசையிலிருக்கும் எல்லா பில்டிங் மொட்டை மாடியையும் செக் பண்ணியாகனும்! பெரிய பிராசஸ் இது! “



“ஒரு வேளை சன்னல் வழியா சுட்ருப்பானோ? “



“வாய்ப்பில்லை! சன்னலோட அதிக பட்ச அளவே 4×4 சைஸ்லதான் இருக்கு.அது வழியா சுடறது கஷ்டம்.திறந்த வெளிதான் பெஸ்ட்.”



“லாஜிக்கா சரியாத்தான் இருக்கு! “என்றான் அருண்.



பேட்டியை முடித்து கொண்டு வந்த வெலிங்டன் மணியை பார்த்து விட்டு “அய்யய்யோ! மணி ஒன்பதாயிருச்சா? வாங்க! சாப்பிட்டுட்டு வந்துடலாம்! “என்றார்.



“உங்க வீட்டுக்கா? “என்றான் அருண்.



“சேச்சே! கடைக்குத்தான்.வாய்க்கு ருசியா தின்னு எத்தனை நாளாச்சு? “என்றார் வெலிங்டன்.



“இதையெல்லாம் வீடியோ எடுத்து வீட்டுல காட்டுறேன்! “என்றான் அருண்.



“பொழப்ப கெடுத்துறாதடா! “என்ற வெலிங்டனை தோளில் தட்டினான் விக்னேஷ்.



“அந்த சிக்னல் கேமராவை பாத்தீங்களா? “என்றான்.



“அதுக்கென்னப்பா? “என்றார் வெலிங்டன்.



“அந்த கேமராவோட போகஸ் இந்த தூண்வரை விழுகுது பாருங்க.அதோட இரண்டு நாள் பதிவெல்லாம் வேணும்! “



“ஏற்பாடு பண்ணித் தர்றேன்! “



“அப்படியே செத்தவங்க டீடெய்லு? “



“அது இனிமேதான் தெரியும்! “



“அதை வைச்சுத்தான் செத்ததுல யாரு நல்லவன், கெட்டவன்னு கண்டு பிடிக்கனும்! “



ஜீப்பில் மூவரும் ஏறியவுடன் வண்டியை கிளப்பினார் வெலிங்டன்.



“அந்த செல்போன் ஐந்தையும் கொடுங்க! “என்றான் அருண்.



“அது எதுக்கு? “என்றார் வெலிங்டன்.



“எதாவது டீடெய்ல் கிடைக்குதான்னு பார்ப்போம்! “



“உன்னை பாத்தா டீடெய்ல் கலெக்ட் பண்ண கேட்பது மாதிரி தெரியலை.பிட்டு படம் எதாவது இருக்கான்னு தேடறவன் மாதிரி இருக்கு! “என்றான் விக்னேஷ்.



“கலாய்க்காதீங்க பாஸ்! “என்றவனிடம் செல்போனை நீட்டிய வெலிங்டன் “நைட்டு ரொம்ப நேரம் ஜமாய்க்க எதாவது வழியிருக்காப்பா? “என்றார்.



“இருக்கே! தண்ணிய நல்லா கொதிக்க வைச்சு அதுல …”



“வேற எதையாவது விட சொல்லுவான் போல தெரியுதே? “என்றார் வெலிங்டன்.



“ச்சேச்சே! விரலை விட்டு பாருங்க.கரெக்டான சூடாயிருந்தா அதுலயே குளிச்சிட்டு அப்புறமா மேட்டருக்கு போங்க! ஜமாய்க்கலாம்! “



“சுடு தண்ணியில குளிச்சா டயர்டாகி தூங்கிருவேன்ப்பா! என்ன ஒரு மோசமான ஐடியா! “



“நல்லா தூங்கறதுக்குத்தானே ஐடியா கேட்டீங்க? “



“போயும் போயும் உங்கிட்ட கேட்டேனே? “



ஓட்டலில் வண்டியை நிறுத்தி விட்டு ஆர்டர் சொன்ன வெலிங்டனை பாத்து “பிரஸ் பண்ணுணிங்களா? “என்றான் அருண்.



“சிங்கம், புலியெல்லாம் விளக்குதா என்ன? “



“இதுல கரடிய கவனமா விட்டுட்டிங்க! “என்றான் அருண்.



“தூக்கத்திலிருந்து எழுப்பினதால பில்லு நீங்கதான் தரனும்! “என்றான் விக்னேஷ்.



“அழுது தொலையறேன்! “என்றவரின் போன் அடித்தது.எடுத்தவரின் முகம் இருட்டுக்கு போனது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 5



“என்னாச்சு சார்? “என்றான் விக்னேஷ் வெலிங்டனின் முக மாற்றத்தை பார்த்து.



“ஞானம் பார்மாசூட்டிகல்ஸ் குடோன்ல ஏதோ பிரச்சனையாம்.லோக்கல் இன்ஸ்பெக்டர் போன் பண்றார்.”



“என்னவாம்? “



“குடோன்ல கொலை எதாவது நடந்திருக்குமோன்னு சந்தேகப்படறாங்க!”



“அது ரொம்ப பெரிய குரூப்பாச்சே? சொந்தமா லேப், ஹாஸ்பிடல் எல்லாம் நடத்துராங்க! “என்றான் விக்னேஷ்.



“புதுசு புதுசா மெடிசன் வேற கண்டு பிடிக்கிறாங்க! சில பல புகார்களும் அவங்க மேல் உண்டு! “என்றார் வெலிங்டன்.



“பணம் அதிகமா இருக்குமிடத்தில் குற்றமும் இருக்கும்! “என்றான்.



“சொல்லிட்டாரு தத்துவஞானி! கிளம்பலாம்! “என்றார் வெலிங்டன்.



கல்லாவிலிருந்தவன் யூனிபார்மை பார்த்ததும் “பரவாயில்லை சார்! “என்றான்.



பர்ஸை எடுக்க கையை விட்ட வெலிங்டன் தலையசைத்து விட்டு கிளம்பினார்.



“பொறந்தா போலீசா பொறக்கனும்! காக்கிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு! “என்றான் அருண்.



“இதெல்லாம் சொசைட்டி தரும் காம்ப்ளிமெண்ட்! “என்றார்வெலிங்டன்.



போனில் வழியை விசாரித்து விட்டு திரும்பியவரை “செண்ட்ரல் பார்க் ஆப்போசிட்லதானே ஞானம் பார்மாசூட்டிகல்ஸ்? “என்றான் விக்னேஷ்.



“ஆமாப்பா! உனக்கெப்படி தெரியும்! “



“ஒரு கெஸ்தான்! “என்ற விக்னேஷ் ஜீப்பில் ஏறி கொண்டான்.மூவரையும் சுமந்து கொண்டு ஜீப் விரைந்தது.



அவர்கள் ஞானம் பார்மாசூட்டிகல்ஸ் என்ற மூன்று மாடி குடோனை அடைந்த போது பதட்டத்துடன் காத்திருந்த வாட்ச்மேன் விரைப்பான சல்யூட்டை வழங்கினான்.அது வினோதமாக இருந்தது.



“நான் ரெண்டு நாளா லீவுங்க! காலையில வேலைக்கு வந்ததும் இதை பார்த்தேன்.பயமா இருந்துச்சு.அதான் போலீசுக்கு போன் பண்ணினேன்! “என்றவன் அதை காட்டினான்.



இரத்த தாரை ஓன்று கீழிருந்து மூன்றாம் மாடியை நோக்கி பயணமாகியிருந்தது.



“தப்பிச்சு போன ஆறாவது ஆளா இருக்குமோ? “என்றான் அருண்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம்6



“என்னன்னு பாத்துருவோம்! கூட வாப்பா! “என்றார் வெலிங்டன் வாட்ச்மேனை பார்த்து.



“எனக்கு ரத்தத்தை பாத்தா கிறுகிறுன்னு வந்துரும்ங்க.இந்தாங்க மொட்டை மாடி சாவி.நீங்களே பாத்து சொல்லுங்க! “என்றான் வாட்ச்மேன் சாவியை நீட்டி.



“ஒரு சாவிதானா? “என்றான் விக்னேஷ்.



“தெரியலீங்க! வேலைக்கு சேர்ந்தப்போ இந்த ஒரு சாவிதான் கொடுத்தாங்க! கம்பெனிலதான் கேட்கனும்! “என்றான் வாட்ச்மேன்.



“ரத்த பொறியல் சாப்பிடுவீங்களா? “என்றான் அருண்.



“குடலோட சாப்பிட்டா டேஸ்டே தனிங்க! “



“அதை சாப்பிடுங்க! “என்ற அருண் படியில் ஏற ஆரம்பித்தான்.மொட்டை மாடி கதவை அணுகிய வெலிங்டன் பூட்டை திறக்க தடுமாறினார்.



“என்னாச்சுங்க? “



“பூட்டை திருப்பி பூட்டியிருக்கானுகப்பா! சாவி ஓட்டை அடியில இருக்கு! “



சிறிது சிரமத்திற்கு பின் கதவை திறந்த போது காற்று முகத்தில் அறைந்தது.நாற்பது சதுரத்திற்கு விரிந்து கிடந்த மொட்டை மாடியில் அந்த ரத்த சிதறல் தனித்து தெரிந்தது.அங்கிருந்து பார்த்த போது பார்க்கின் தூண்கள் தெளிவாக தெரிந்தன.



“இங்கிருந்துதான் சுட்ருப்பான் போல தெரியுது! “என்றார் வெலிங்டன்



“நம்மை ஏமாத்த செய்த செட்டப்பா இது ஏன் இருக்க கூடாது.?சுட்டவனை தேடுவோம்னு தெரியும்.இடத்தை குழப்ப வேணும்னே இந்த பில்டிங்கில் ரத்தத்தையோ, சிகப்பு பெயிண்டையோ தெளிச்சிருக்கலாமில்லையா? நாம மேற் கொண்டு எந்த பில்டிங்கையும் தேட மாட்டோம்னு அவன் நினைச்சிருக்கலாம் இல்லையா? “



அருணின் இந்த கேள்வியில் திகைத்தார் வெலிங்டன். “இதென்னய்யா புதுசா குழப்புறான்? “என்றான்.



“குற்றவாளிகளை சாதாரணமா நினைக்காதீங்க! அவன் சொல்றதுலயும் பாயிண்ட் இருக்கு.அவன் சொன்ன மாதிரி நடந்திருந்தா நாம அவனோட வலையில விழுந்துட்டோம்னு அர்த்தம்! “



“அப்ப எல்லா பில்டிங்கையும் தேடனுமா? “



“தேவையில்லை! அவன் இங்கிருந்துதான் சுட்ருக்கான்! “



“எப்படி சொல்கிறாய்? “



“இந்த இரப்பர் துணுக்கை வைச்சுத்தான்! “என்ற விக்னேஷ் கீழே கிடந்த இரப்பர் துண்டை எடுத்தான்.பாக்கெட்டிலிருந்து எடுத்த இரப்பர் தோட்டாக்களில் ஒன்றில் அந்த துண்டு சரியாக பொருந்தியது.



“நீ சொல்றது புரியலைப்பா! “



“குடோன் வாட்ச்மேன் ரெண்டு நாள் லீவுன்னு தெரிஞ்ச கில்லர் டூப்ளிகேட் சாவி மூலமா உள்ளே வந்து ரப்பர் தோட்டாவுல ரிகர்சல் பாத்துருக்கான்.அடுத்த நாள் ஒரிஜினல் தோட்டாவுல ஷூட் பண்ணிட்டான்! ஸ்னைப்பர் நகர்ந்த அடையாளம் கைப்பிடி சுவர்ல தெரியுது பாருங்க! “



“இந்த ரப்பர் துண்டு? “



“ரிகர்சலப்ப தெரிச்சு விழுந்ததா இருக்கலாம்! “



“அப்ப ரத்த தாரை எப்படி வந்தது? “



“யோசிக்கனும்! அருண்! மேலே இருக்கிற தண்ணி டாங்கை ஒப்பன் பண்ணி பாரு! பாடி எதாவது இருக்கான்னு பார்ப்போம்! “



இரும்பு ஏணியில் அருண் ஏறுவதை உதறும் இதயத்துடன் பார்த்து கொண்டிருந்தார் வெலிங்டன்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 7



டாங்க் மூடியை தூக்கி பார்த்து விட்டு உதட்டை பிதுக்கிய அருணைப் பார்த்து விக்னேஷ் “வெப்பன் எதாவது தண்ணிக்குள்ள கிடக்குதான்னு பாரு! “என்றான்.



“நீ சொல்றது ஸ்னைப்பரையா? “என்றார் வெலிங்டன்.



“ஆமா! சிந்தியிருக்கிற ரத்தம் கில்லருடையதா இருந்தா அவனுக்கு மோசமா அடிபட்டிருக்கனும்.அதனால ஆயுதத்தை யார் கண்ணுக்கும் படாத இடத்துல விட்டுட்டு போயிருக்கனும்.அதான் தேடி பார்க்க சொன்னேன்.!”என்றான் விக்னேஷ்.



“நாம சந்தேகப்படுவது போல் எதையும் காணோம் பாஸ்.டாங்க் மேல ப்ளட் தாரை எதையும் காணோம்! பாரன் சிக் ஆளுகளை வர சொல்லுங்க! “என்றான் அருண்.



போனை கையில் எடுத்த வெலிங்டன் பாரன்சிக் ஆட்களை வர சொல்லிவிட்டு “அடுத்தது என்னப்பா? “என்றார்.



“எங்களை ஆபிஸ்ல விட்டுட்டு கிளம்புங்க! “என்றான் விக்னேஷ்.



“சரி வாங்கப்பா போலாம்! “என்ற வெலிங்டன் ஜாக்கிரதையாக படி வழியே கீழே இறங்கி வந்தார்.

“ஏம்ப்பா? உனக்கு என்னென்ன டீடெய்ல் வேணும்னு கரெக்டா சொல்லு! எல்லாத்தையும் காலையில எடுத்துட்டு வந்துடறேன்! “என்றார் வெலிங்டன்.



“செத்து போன ஐந்து பேரோட டீடெய்ல் வேணும்.அவங்களோட போன் இன்கமிங், அவுட் கமிங் வேணும்.அந்த கில்லரோட நெம்பரோட டீடெய்ல் வேணும்.சிக்னல் வீடீயோ புட்டேஜ் வேணும்.இங்கிருக்கிற ரத்த தாரை என்ன குரூப்புன்னு தெரியனும்! “



“ரைட்டுப்பா! எல்லாமே காலையில ஆபிஸ் தேடி வரும்.!”என்றபடி ஜீப்பில் ஏறினார் வெலிங்டன். ஜீப்பின் பின் சீட்டில் ஏறிய அருண் “உங்கப்பா உங்களுக்கு ஏன் வெலிங்டன்னு பேர் வைச்சாரு? “என்றான்.



“நெப்போலியனை வாட்டர்லூ போருல தோற்கடித்த இங்கிலாந்து கடற்படை தளபதியோட பேருப்பா இது! முட்டிவரை போடுற ஷு வை அவருதான் கண்டுபிடிச்சு யூஸ் பண்ணினாரு.அதனால வெலிங்டன் பூட்ஸ்னு அதுக்கு பேர்கூட உண்டு.!”



“இப்பத்தான் இதை கேள்விப்படறேன்.நீங்க தமிழன்தானே? “



“அதிலென்ன டவுட்டு? “



“அப்புறம் ஏன் வெள்ளியங்கிரின்னு சுத்தமான தமிழ் பெயரை வைக்காமல் வெலிங்டன்னு வெள்ளைக்காரன் பேரை வைச்சிருக்கீங்க? “



“அது எங்கப்பா வைச்சதுய்யா! “



“உங்க பையனுக்காவது தமிழ்ல நல்ல பேரா வைங்க! “



“இவன் என்னய்யா குழப்புறான்.நாம் தமிழர் கட்சில சேர்ந்துட்டானோ? “என்றபடி வெலிங்டன் விக்னேஸை பார்த்தார்.



“வராம போன அந்த ஆறாவது ஆள் இப்ப எங்கே? அவன் ஏன் வரலை? “என்றான் விக்னேஷ்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 8



“நடந்த சம்பவம் முழுசா தெரிந்த ஆளுக ரெண்டு பேர்.ஒருத்தன் கில்லர்.இன்னொருத்தன் அந்த ஆறாவது ஆள்.கில்லரை பற்றி ஒன்னுமே தெரியாது.அந்த ஆறாவது ஆள் யாருன்னும் தெரியாது.எப்படி கண்டு பிடிப்பது? “என்றார் வெலிங்டன்.



“பாருங்க! அஞ்சு பேரை ஒன்றரை நிமிசத்துல சுட்ருக்கான்னா அவன் கண்டிப்பா ஆர்மி மாதிரியான ஒரு இடத்துல பயிற்சி பெற்றவனா இருக்கனும்.குடோன்ல கிடைச்ச ப்ளட் என்ன குரூப்புன்னு பாருங்க.அந்த ப்ளட் குரூப்புல மிலிட்டரில ஸ்னைப்பர் ஸ்பெசலிஸ்டு எத்தனை பேர் இருக்காங்கன்னு லிஸ்ட் எடுங்க.முக்கியமா ரிட்டயரானவங்க.லீவுல ஊருக்கு போனவங்க லிஸ்ட் வேணும்! “



“அது ரொம்ப கஷ்டம்.ராணுவ ரகசியம்னு தர மாட்டானுகளே? “



“முயற்சி பண்ணுங்க! உங்களால் முடியும்! “



“அத்தனை பேருல கில்லரை எப்படி கண்டு பிடிப்பாய்? “



“அதை அப்புறம் சொல்லுறேன்.!”



“ஐந்து பேரை ஒருத்தன் சுட்டு கொல்கிற அளவுக்கு அப்படி என்ன விரோதம் இருக்க முடியும்? “என்றார் வெலிங்டன்.



“ஐந்து பேரும் சேர்ந்து கில்லரை அவனோட குடும்பத்தை எதாவது பண்ணியிருப்பானுகளா? “என்றான் அருண்.



“தெலுங்கு படத்து ப்ளாஷ்பேக் மாதிரி இருக்கு! “என்றார் வெலிங்டன்.



“அதுல ஒரு பாயிண்டை நோட் பண்ணுங்க.!செத்தவங்களுக்குள்ள ஏற்கனவே அறிமுகம் எதாவது இருக்கான்னு பாருங்க! “என்றான் விக்னேஷ்.



“ஒருத்தன் வரலைன்னு தெரிஞ்சும் பிளானை நிறுத்தாம எக்ஸ்கியூட் பண்ணியிருக்கான்.அப்ப ஆப்செண்டான ஒருத்தன் அவ்வளவு முக்கியமான ஆள் இல்லை போலிருக்கே? “என்றான் அருண்.



“அப்ப ஐந்து பேர்ல கில்லருக்கு முக்கியமா தேவைப்படுகிற ஆள் யாரு? “என்றான் விக்னேஷ்.



“தெரியலையே? “என்றார் வெலிங்டன்.



“அவன் முதல்ல யாரை சுட்டானோ அவன்தான் கில்லரோட மெயின் டார்கெட்.அதை மறைக்கத்தான் மத்தவங்களை கொன்னு கவனத்தை திசை திருப்பியிருக்கிறான்.!”என்றான் விக்னேஷ்.



“அந்த முதல் ஆளை எப்படி கண்டு பிடிப்பது? “என்றான் அருண்.



விடை தெரியா கேள்வி ஒன்று மூவரின் முன்னால் ஊஞ்சலாட ஆரம்பித்தது.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 9



“முதல்ல யாரைச்சுட்டான்னு எப்படி கண்டு பிடிப்பது? “என்றான் அருண்.



“எப்படி இருந்தாலும் அரை வட்ட வடிவத்துல நிக்கிறவங்களை வரிசையாத்தானே சுட முடியும்? நடுவுலருந்து சுட முடியாதே? “என்றார் வெலிங்டன்.



“வரிசையா சுட முடியும்கிறது உண்மைதான்.அந்த வரிசைங்கிறது வலமிருந்து இடமாகவா? இல்லை இடமிருந்து வலமாகவா? “என்ற விக்னேஷின் கேள்விக்கு இருவரும் விழிக்க ஆரம்பித்தனர்.



“இந்த கேள்வி கொஞ்சம் புரியலை! “என்றார் வெலிங்டன்.



“ஒரு கரும்பை வலது கை பழக்கமுள்ளவன் வெட்டுவதற்கும், இடது கை பழக்கமுள்ளவன் வெட்டுவதற்கும் வித்தியாசம் இருக்கும்தானே? “



“ஆமா! வெட்டு விழுந்த பொசிசனை வைச்சு கண்டு பிடிச்சிடலாம்! “



“அதேதான் இதுக்கும்! சுட்டவன் வலதுகை பழக்கமுள்ளவனாயிருந்தா வலதிலிருந்து இடதாக வரிசையா சுட்டிருப்பான்.இடது கை பழக்கமுள்ளவனா இருந்தா இடது பக்கத்திலிருந்து வலது பக்கமா வரிசையா சுட்டிருப்பான்! “



“கரெக்ட்! இந்த டவுட் எப்படி வந்துச்சு? “



“சித்திர எழுத்து முறையை இடதிலிருந்து வலதாகத்தான் எழுதுவாங்கன்னு படிச்சிருக்கேன்.மேலும் கில்லர் பூட்டை தலைகீழா வேற பூட்டியிருந்தான்.அதான் டவுட் வந்துருச்சு! “



“சித்திர எழுத்து முறைன்னா? “



“சைனீஸ், ஜப்பானீஸ் மொழின்னு வைச்சுக்கலாம்! “



“எப்படி பாஸ் எல்லாத்தையும் ஒன்னோடு ஒன்னா கனெக்ட் பண்ணி யோசிக்கிறீங்க?”என்றான் அருண்.



“ஒரு முட்டாளை கூடவே வைச்சிருக்கேன்.அதனால அவனுக்கும் சேர்த்து நான் யோசிக்கிறேன்.!”



“நான் முட்டாளா? எதாவது கேள்வி கேளுங்க! கரெக்டா பதில் சொல்லுறேன்! “என்றான் அருண் கோபமாக.



“செக்ஸை பத்தி எது வேணா கேளு! பய பிச்சு உதறுவான்.”என்றார் வெலிங்டன்.



“யாரை முதல்ல சுட்ருப்பான்னு எப்படி கண்டு பிடிப்பாய்? “



“இந்த கடைசியில் இருப்பவனை! இல்லைன்னா அந்த கடைசியில் இருப்பவனை! “



“அடேய்! ஸ்டார்டிங் பாயிண்ட் எந்த முனைன்னு கேட்கிறேன்.வரிசையா சுட்டதை எப்படி லைன் பண்ணுவேன்னு கேட்கிறேன்! “



அருண் ஐந்து விரல்களை விரித்து கொண்டு சிந்தனையில் ஆழ்ந்தான்.
 

Erode Karthik

Active member
Messages
315
Reaction score
71
Points
28
அத்தியாயம் 10



“சுடும் போது வெளியே வந்த ரத்தத்தை வைச்சு டைமை கண்டு பிடிச்சுடலாம் பாஸ்! “



“அதெப்படிடா? “என்றான் விக்னேஷ்.



“ரத்தம் உறைய ஒரே டைம்தானே ஆகும்.அதை வைச்சு கண்டு பிடிச்சுர முடியாது? “



“செத்தவங்களில் யாருக்காவது சுகர் இருந்தா ரத்தம் உறைய டைமாகுமே? “



“ஆமாம்! அப்ப எப்படி கண்டு பிடிப்பது? “



“ஒரு கேள்வி கேட்டதும் குழம்பிட்டான்.வீடீயோ புட்டேஜ் வரட்டும்.அதுல கிளியராகி விடும்.அதுக்குள்ள மூளைய சிதற விடுகிறான்.சரி! அந்த செல்போனில் எதாவது கிடைச்சுதா? “



“இரண்டு போன் ஓப்பனா இருக்கு.மூணு போன் பேட்டர்ன் லாக் போட்ருக்கு! “



“அப்ப அதுலதான் எதாவது மேட்டர் இருக்கனும்.பேட்டர்ன் லாக் போடுறது டேஞ்சர்.எதாவது விபத்தாயிட்டா வீட்டுக்கு எப்படி தகவல் சொல்ல முடியும்? “



“இவனுக பேட்டர்ன் லாக் பிட்டு படத்துக்காக போடுறானுகப்பா! “என்றார் வெலிங்டன்.



“அப்ப பேட்டர்ன் லாக் போடுறவனெல்லாம் அயோக்கியனுகன்னு சொல்றீங்களா? “என்றான் அருண்.



“அடேயப்பா! நல்லவனுக்கு கோபம் வருதுப்பா! உன் போனில் பேடர்ன் லாக் போடலை நீ? “



“போட்ருக்கேன்! எங்கிட்ட பிட்டு இருப்பது என்னமோ உண்மைதான்.இந்த நீக்ரோ பசங்க எப்படிங்க அவ்வளவு நீளமா? கல்லு கட்டி தொங்க விடுவானுகளோ? “



“பார்ரா? இவனுக்கே டவுட்டா? “



“ஆரம்பிச்சிட்டிங்களா? திருந்தவே மாட்டிங்களா? “என்றான் விக்னேஷ்.



“பேச்சு மட்டும்தான்!டென்சன் ஆகாதப்பா! “என்ற வெலிங்டனின் போன் அடித்தது.எடுத்து பேசியவர் போனை அணைத்து விட்டு “செத்து போனவங்களில் ஒருத்தனை அடையாளம் தெரிஞ்சிருச்சு! “என்றார்.



“யாரு அது? “என்றான் அருண்.



“ஞானம் பார்மாசூட்டிக்கல்ஸ் ஓனர் கணேஷ்ராஜ்! “



“இப்பத்தானே அவங்க குடோன்லருந்து வர்ரோம்? “என்றான் விக்னேஷ்.



“அவங்க குடோனை யூஸ் பண்ணி அவங்க ஓனரையே காலி பண்ணியிருக்கானுக! “என்றான் அருண்.



“பார்ட்னர் ஷீப் பிரச்சனையில் இந்த கொலை நடந்திருக்குமோ? “என்றான் விக்னேஷ்.



“செத்தவன் மேலயும் சில கேஸ்கள் இருப்பதாக ஞாபகம்! “



“அப்ப செத்தவன் நல்லவன் இல்லை! இவங்கிட்டருந்துதான் விசாரணையை ஆரம்பிக்கனும்! “



இருவரையும் ஆபிஸில் விட்டு விட்டு வெலிங்டன் கிளம்பினார்.மறுநாள் விபரீதம் காத்திருந்தது.
 

New Threads

Top Bottom