Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BL NOVEL ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள் - Tamil Novel

Status
Not open for further replies.

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு-10


நாட்கள் அதன்பாட்டில் நகரத் தொடங்கியது. ராஜேஸ்வரி ஒரு குத்தல் கதையுடன்தான் அன்றைய பொழுதையே ஆரம்பிப்பார். விக்‌ஷனா வந்தாலோ அவரின் நடத்தை மொத்தமாக மாறிவிடும் சும்மாவே ஆடுகிற பேய்க்கு வேப்பிலைக் கொத்தையும் கொடுத்தது போல் ஆடத் தொடங்கிவிடுவார். அவளின் தூண்டலில் காயத்ரியின் மனதை உடைக்கத் தொடங்கினார். திருமணமானது முதல் மாமியாரின் குணங்குறைகள் எதையும் இதுவரை கணவனிடமோ பிள்ளைகளிடமோ பகிராதவர் இப்போதைய பிரச்சனையையும் அவர்களுக்குத் தெரியாமலே மறைத்து வைத்து தனியே நின்று அவர்களுடன் போராடத் தொடங்கினார். தினமும் ஒரு சண்டையாக வீட்டில் புயலடிக்க ஆரம்பித்தது. மாமியாரின் கொடும் வார்த்தைகளை தாங்க முடியாமல் தனக்குள்ளே வைத்து மருகத் தொடங்கினார் காயத்ரி. ஒருநாள் பிரச்சனை எல்லை கடக்க தாங்க முடியாதவர் மாமியாருடன் சண்டையிட்டார் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்று எண்ணங் கொண்டவராய் தன் தாயிடம் பேசி இதற்கொரு தீர்வு காண முடிவெடுத்தார். தன் அறையுள் புகுந்து கதவைத் தாளிட்டவர் தன் தாய்க்கு அழைத்து நடந்த அனைத்தையும் கூற கோபத்தில் கத்த ஆரம்பித்தார் தனலட்சுமி.

"இங்கப்பாரு அந்தப் ஷனாப் பேய் என் பேரனுக்கு பொண்டாட்டியாக வர நான் விட மாட்டேன். நானே என் பேரனோட கல்யாணத்தைப்பற்றி கதைக்கனுமென்று இருந்தேன் அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்திருக்கேன். இப்போ அந்த பொண்ணப் பத்தி சொல்லுறேன். உனக்கு சம்மதமென்றால் உடனே பேசலாம்." தனலட்சுமி சொல்ல

"சொல்லுங்கம்மா யாரு?"

"நம்ம வீட்டுக்கு ரெண்டு தெருத் தள்ளி இருக்குற சரஸ்வதி மகனை உனக்கு தெரியுமில்லையா?."

"யாரு அம்மா? எனக்கு டக்கென்று ஞாபகம் வருதில்லை."

"ரஞ்சனியையாவது தெரியாதா?"

"ரஞ்சனியா.... எந்த ரஞ்சனி கமலாம்மாவோட மகள் ரஞ்சனியையா சொல்லுறீங்க? ஆ... அம்மா இப்போ ஞாபகம் வந்துடுச்சு. சரஸ்வதியம்மாவோட மகன் வாசுதேவன்தான் அவட வீட்டுக்காரவர் எனக்கு அவங்கள் எல்லோரையும் தெரியும்தான் ஆனால் இந்த நாளையில அவங்களைக் காணல்ல நான்?"

"ஓமோம். அவங்கதான் அவருக்கு நாலு பொண்ணுங்க. மூத்தவங்க அமுததாராவும் சித்ரதாராவும் கல்யாணம் கட்டிடுச்சுங்க. இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்குது. அதுல என் பேரனுக்கு நான் பார்த்த பொண்ணு நயனதாரா கடைசிப் பொண்ணு உதயதாரா அவ படிச்சிட்டிருக்கா. நயனா தேவத மாதிரி இருப்பா. நம்மளவு வசதியில்ல ஆனால் ஒரு காலத்துல வாழ்ந்து கெட்ட குடும்பம். வாசுவோட கூட பொறந்தவளே அவர ஏமாத்தி சொத்துக்கள அபகரிச்சுக்கிட்டா. வீடும் காணியும்தான் மிச்சம் இப்போதைக்கு அவ்வளவு வசதி இல்லை. ஆனால் நல்ல மனுஷனுங்க. பொண்ணுங்களையும் பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவங்களா ரொம்ப நல்லாவே வளர்த்திருக்காங்க நம்ம ஆதிக்கு அந்த பொண்ணு எல்லா வகையிலையும் பொருத்தமா இருப்பா நயனா நம்ம காவியா கூட படிச்சவதான். உனக்கு அவளைப் பார்க்கனுமென்றால் காவியாகிட்ட சொல்லி போட்டோ அனுப்ப சொல்லுறேன் பார்த்துட்டு சம்மதம் என்றால் பேசிடலாம். என்ன சொல்லுறாய்?"

"நீங்க அவங்களை பத்தி முழுசா விசாரிக்காம சொல்ல மாட்டீங்க. நீங்க சொன்னா அவங்க நல்ல குடும்பமாத் தான் இருப்பாங்க. எனக்கு இப்போவே அந்த பொண்ண பார்க்கனும் போல இருக்கு. காவியாகிட்ட சொல்லி சீக்கிரம் போட்டோவை அனுப்ப சொல்லுங்கம்மா. இப்போவே" என்றவர் அழைப்பைத் துண்டித்தார். காயத்ரியின் மொபைல் வாட்ஸ்ஆப் டோனை வெளியிட அவசரமாக அதனை திறந்து பார்த்தவர் இதழ்களில் மெல்லிய புன்னகை பரவியது. அந்த நயனதாராவின் தோற்றத்தை ஆராயத் தொடங்கினார். வெண்மை கலந்த ரோஜா வண்ணம், அழகிய பாதரச விழிகள், வில்லென வளைந்த இமைகள், பிறை நெற்றி, கொழு கொழு கன்னங்கள், சிவந்த அதரங்கள், கூந்தலை இன்றைய நாகரிகத்திற்கேற்ப அளவாக வெட்டியிருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை அவள் நிறத்தை இன்னும் தூக்கலாக காட்டியது. மொத்தத்தில் அழகுப் பெட்டகமாக இருந்தாள். தன் மனக் கண்ணில் மகனை கொண்டு வந்தவர் அவள் பக்கத்தில் நிறுத்திப் பார்க்க ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. உடனே தாயை அழைத்து தனக்கு இந்த சம்மந்தத்தில் முழு சம்மதம் என தன் விருப்பத்தைக் கூறியவர்

"ஆனால் அம்மா ஆதிக்கிட்டேயும் போட்டோவைக் காட்டுறேன். அவனும் பார்த்துட்டு சம்மதம் என்றால் அதன்பிறகு மற்ற ஏற்பாடுகளை கவனிக்கலாம்"

"சரியம்மா இன்றைக்கே ஆதிகிட்ட கதைச்சுடு நாளப் போக்காட்டாதே" தனலட்சுமி கூற

"சரி அம்மா இப்பவே கதைச்சுடுறேன் அவன் வீட்டுல தான் இருக்கிறான்" எனத் தாயிடம் கூறிய அடுத்த நொடி ஆதித்யா முன்னால் வந்து நின்றார்.

"ஆதி உன் வாட்ஸ்ஆப்புக்கு பொண்ணோட போட்டோ அனுப்பியிருக்கேன் பாருடா. உனக்கு ஓகே என்றால் மேற்கொண்டு கதைக்கலாம்" அவசரப்படுத்த கணனியில் பார்வைப் பதிந்திருந்தவன் அவரைப் பார்க்காமலே

"அதுக்குள்ளேவா? என்ன ஒரு வேகமம்மா அதுதான் எல்லா முடிவும் நீங்கதானே எடுக்கீங்க போட்டோ எதுக்காக? உங்களுக்கு சம்மதம் என்றால் என் சம்மதம் எதுக்காக அம்மா? நீங்களே பார்த்து முடிவெடுத்துக்கோங்க." விட்டேறியாக பதில் கூறியவனை மீண்டும் வற்புறுத்தினார் காயத்ரி.

"இப்போதே பார்த்து சம்மதம் சொல்லு" என்று கூற வேலையாக இருப்பதாகவும் பிறகு பார்ப்பதாகவும் சற்றுக் கோபங் கலந்த குரலில் கூற இதற்கு மேல் வற்புறுத்த முடியாது என எண்ணியவர் அறையை விட்டுச் சென்றார். தன் வேலைகளை முடித்துவிட்டு வந்தவனுக்கு தாய் சொன்ன போட்டோ விசயம் மனதில் பட்டது தன் வாட்ஸ்ஆப்பை திறந்து அதில் பார்வையை பதிக்க அழகாகச் சிரித்தாள் அந்த அழகு மங்கை. அந்த விழிகளும் அந்த கொழு கொழு கன்னங்களும் அவனிடம் ஏதோ கதை பேசின. அவனுள் ஒரு சிறு குரல் ஒலித்தோய்ந்தது.
'அங்கிள் நானொன்னும் பேபியில்ல. அயிம் நயன் என் பந்தைக் கொடுங்க. இது எங்க சைட்டு. இங்கெல்லாம் போயிஸ் வரக் கூடாது நீங்க முதல்ல உங்க சைட்டைப் பார்த்துப் போங்க அங்கிள்' அந்தக் குரலின் நினைவில் அவன் இதழ்கள் தானாக விரிய அந்தக் குரலுக்கு சொந்தமான அந்தக் குட்டி தேவதையின் நினைவில் மூழ்கினான். அவன் கண் முன் விரிந்தாள் அந்தப் பாப்பா, இப்போ பார்க்க எப்படி இருப்பாள் ஏன் எனக்கு இவளைப் பார்த்ததும் அந்த தேவதையோட ஞாபகம் வருது. இவள் கண்களும் கன்னமும் அந்தப் பாப்பாவோடது போலவே இருக்கே இப்போ அந்தப் பாப்பாவும் வளர்ந்திருக்குமில்லை. இவ்வாறே அந்தக் குட்டி தேவதையின் நினைவில் லயித்திருக்க அதனை தொடர்ந்து வந்த சில நினைவுகளில் ஆதித்யனின் முகம் கல்லாய் இறுகியது. வேண்டாத அந்த நினைவுகளுடன் போராடியவன் ஒருவாறு அதிலிருந்து மீண்டு நேரங்கடந்தே தூங்கச் சென்றான். ஆனாலும் வழமை போல் அதிகாலையிலே அவனுக்கு விழிப்புத் தட்டியது. காலையில் எழுந்ததும் வழமை போல் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவனிடம் வந்த காயத்ரியை கேள்வியாய் நோக்கினான் மைந்தன்.

"என்னப்பா போட்டோ பார்த்துட்டாயா, அந்தப் பொண்ணைப் பார்க்க தேவதை மாதிரி அவ்வளவு அழகா இருக்கா இல்லையாப்பா, உனக்கு புடிச்சிருக்கா ஓகே சொல்லட்டா?" கேள்விகளை அடுக்க

"கொஞ்சம் இருங்கம்மா. ஒவ்வொன்றாக கேட்கலாமே. ஏற்கனவே சொன்னது தான் உங்களுக்கு சம்மதம் என்றால் என்கிட்ட கேட்க வேண்டிய அவசியமே இல்லை. சரி உங்க திருப்திக்காக சொல்லுறேன் எனக்கு சம்மதம். இப்போ சொல்லுங்கோ அந்த பொண்ணோட டீடைல்ஸை பெயரென்ன? ஊரென்ன? சொல்லுங்கம்மா." தன்னால் நிறுத்த முடியாத திருமணத்தை பெண் வீட்டார் மூலம் தடுக்க நினைக்கும் அவன் உள் எண்ணத்தை மகனின் முகத்திலிருந்த ஏதோ ஒன்று அந்தத் தாய்க்கு உறுதிப்படுத்த அவனைக் கூர்ந்து பார்த்தவாறே

"எதுக்குப்பா கல்யாணத்தை நிறுத்தவா? சரி பொண்ணு பெயரை மட்டும் சொல்லிடுறேன் அவ பெயர் நயனதாரா மத்ததை பொண்ணு பார்க்கும் போது தெரிஞ்சுக்கோ சரியா?" என்ற காயத்ரியை 'புத்திசாலி' என்பது போல் மகன் பார்க்க 'நான் உனக்கு அம்மாடா' என்பதாய் தாய் பார்த்தார். ஆதித்யவர்த்தன் திருமணத்திற்கு சம்மதித்ததும் தன் தாய்க்கு அழைத்து உடனே ஏற்பாடுகளை கவனிக்கச் சொன்னார் காயத்ரி. எங்கே மகன் மனது மாறி விடுமோ என்ற பயத்தில் எல்லாம் ஜட் வேகம்தான். இதனை தன் பாட்டி மூலம் கேள்வியுற்ற விக்‌ஷனா கோபங் கொண்டு புயலென காயத்ரியின் வீட்டினுள் நுழைந்தாள்.

"என்ன அத்தை அவ்வளவு சொல்லியும் நீங்க என் அத்தானுக்கு வேற பொண்ணு பார்த்திருக்கீங்க. நீங்க நினைக்குறது நடக்காது நான் நினைக்குறதுதான் நடக்கும். எஸ் கல்யாணம் என்னோடதான் நடக்கும். பொண்ணு வீடு பற்றி ரகசியமாவா வச்சிருக்கீங்க? அதை எப்படி கண்டு பிடிக்கனும் இதை எப்படி தடுக்கனும் என்று எனக்குத் தெரியும். இனி நீங்க உங்க வேலையைப் பாருங்கோ நான் என் வேலையைப் பார்க்குறேன்."

"இங்கப்பாரு ஷனா, அது உன்னால முடியாது இப்பவும் சொல்லுறேன் கண்ட கனவைக் காணாம உன் வாழ்க்கை நல்லா அமையுறதுக்கு வழியைப் பாரு.

"அதைத்தானே அத்தை பார்த்துட்டிருக்கேன். என் வாழ்க்கையே என் அத்தான்தான் அவரை அடையுறதுக்காக என்ன வேணுமென்றாலும் செய்வேன். எந்த எல்லை வரையும் போவேன்."

"ச்சீ... நிறுத்து. இதை அத்தை உனக்கும் ஆதிக்கும் கல்யாணம் செய்ய விருப்பப் பட்ட அன்றைக்கே சொல்லிருக்கனும் அப்போ விட்டுட்டேன் பரவாயில்லை இப்போ சொல்லுறேன். உன் ஆசை ஆதியை கல்யாணம் பண்ணிக்கனும் என்று இல்லை. அவனோட சொத்துக்கெல்லாம் நீ உரிமைக்காரி ஆகனும் என்றுதான். என்ன அப்படிப் பார்க்குற இது எப்படிடா இவளுக்கு தெரிஞ்சதென்றா? என் மகள் அஸ்வினியோட கல்யாணதப்போ நீ உன் அம்மா, பாட்டிக் கூட கதைச்ச எல்லாத்தையும் நான் கேட்டேன். உங்க எல்லோரோட குறிக்கோளும் இந்தக் காசுதான் ஆதி இல்லை. எல்லாம் தெரிஞ்சும் எதுவும் சொல்லாமல் தான் இந்த கல்யாணத்தை தடுக்க நினைச்சேன். அத்தையோட மனசை நோகடிக்க வேண்டாம் என்று நினைச்சேன். ஆனால் என் வாயால சொல்ல வச்சுட்ட இப்போ சொல்லு காசுக்காக அவனை கட்டிக்க நினைக்குற உன்னை எப்படி என் மகனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?"

"ஓ அப்போ எல்லாம் தெரியுமா? ஓம் சொத்துக்காகத் தான் ஆதியைக் கட்டிக்க நினைச்சேன். ஆனால் காலம் போகப் போக அத்தானோட அழகும், ஸ்டைலும் அவர் எனக்கு மட்டும்தான் என்று எண்ண வச்சிடுச்சு. அவரை உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பிச்சிட்டேன். அவர்தான் எனக்கு எல்லாமே எப்படி அத்தை என் ஆதியை என் அத்தானை இன்னொருத்திக்கு விட்டுக் கொடுப்பேன். மாட்டேன் அத்தை மாட்டேன் என் ஆதி எனக்கு மட்டும்தான். எவ்வளவு கஷ்டப்படு ஒன்றை பிரிச்சா நீங்க என் அத்தானுக்கு இன்னொன்னை கொண்டு வந்து நிறித்துவீங்களா?" அகங்காரமாக பதில் சொன்னவள் கடைசி வரிகளை தனக்குள் முணுமுணுக்க

"என்ன வாய்க்குள்ளே முணங்குற?"

"நான் இந்தக் கல்யாணத்தை நிறுத்தியே தீருவேன்."

"உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ" காயத்ரி அலட்சியமாக கூற ஆவேசங் கொண்டு பொண்ணு வீடு பற்றித் தேடத் தொடங்கினாள் விக்‌ஷனா ஆனால் அவளால் அதைக் கண்டு பிடிக்கவே முடியவில்லை.

ஒரு பக்கம் விக்‌ஷனாவின் தொல்லை என்றால் மறு பக்கம் ஆதியின் எண்ணத்தையும் அறிந்தவர் எந்தத் தடையுமின்றி திருமணத்தை முடிக்க வழி தேடிக் கொண்டிருந்தார். அதற்கேற்றாற் போல் இரண்டு நாளில் தொழில் விடயமாய் அவசரமாக ஆதித்யா வெளிநாடு செல்ல வேண்டியிருந்தது இதுதான் சந்தரப்பம் என்றெண்ணியவர் அந்த நேரத்தை பயன்படுத்தி நயனியை பெண் பார்க்க அவர்கள் ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்தார் காயத்ரி. ஆதித்யா தவிர்த்து குடும்பத்திலுள்ள மற்றயவர்கள் அனைவரும் நம் நாயகியைக் காண படையெடுத்தனர். தன்னால் கண்டு பிடிக்க முடியாதென்பதை உணர்ந்த ஷனாவும் அவர்களுடன் பெண் பார்க்க பிடிவாதம் பிடித்துச் சென்றாள். அங்கேயே தன் வேலையை ஆரம்பிக்கவும் நினைத்தாள். ஊருக்குச் சென்றவுடனே தன் தாயிடம் விக்‌ஷனாவின் எண்ணம் பற்றிக் கூற இனி தான் பார்த்துக் கொள்வதாக கூறினார் தனலட்சுமி.

யனதாராவைப் பார்த்த அனைவருக்கும் அவளைப் பிடித்து விட தட்டு மாற்றி உறுதி செய்தனர். காயத்ரியோ மறுநாளே மணமகன் இல்லாது நிச்சயத்தை முடித்து உடனே திருமணத் தேதியையும் குறிக்கத் தொடங்கினார். எங்கே வேதளாம் முருங்கை மரம் ஏறிடுமோ என்ற பயத்துடன் இந்த விக்‌ஷனாவும் ஏதாவது செய்திடுவாளோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது. ஆனால் வாசுதேவன் குடும்பமோ உடன் திருமணத்தை நடத்தும் நிலையில் இல்லை. மணமகனில்லாது நிச்சயம் செய்வதிலும் அவர்களுக்கு உடன்பாடில்லை. அவர்கள் தடுமாற அவர்களுக்கு தெம்பூட்டி நிச்சயத்தை முடித்தவர்கள் இன்னும் இரு வாரத்தில் திருமணம் என தீர்மானித்தார்கள்.

ஊருக்கு வந்தது முதல் ராஜேஸ்வரியும் தன் அண்ணியின் பயத்தால் நேரடியாக ஷனாவுக்கு உதவாமல் இருந்தார். ஆனால் கல்யாணத்தை நிறுத்த குத்தல் பேச்சு, நக்கல் பேச்சு போன்றவ தன்னாலான சிறு சிறு உதவிகளை அவளுக்குச் செய்தார். ஷனாவும் எத்தனை வழிகளில் பெண்ணுடன் பேசி திருமணத்தை முறியடிக்க முயன்ற போதும் தனலட்சுமியும் காயத்ரியும் அதற்கான அத்தனை வழிகளையும் அடைத்துவிட்டனர் கடைசி வரை அவளால் நயனியை சந்திக்க முடியாமலே போய் விட்டது.

"என்ன அத்தை ஜெயிச்சிட்டோம் என்று நினைக்குறீங்களா? தாலி கட்டுற கடைசி நிமிஷம் வரை இருக்கு. இந்த கல்யாணம் நடக்க நான் விடமாட்டேன். இந்த ஊருல இருக்குறதுங்க எல்லாம் பட்டிக்காட்டு முட்டாளுங்க. எதைச் சொன்னா இதுங்களே இந்தக் கல்யாணத்தை நிறுத்துமென்று இந்த ஷனாக்கு நல்லாவே தெரியும். செஞ்சதை செய்யுறது ஒன்றும் பெரிசில்லை." அவளின் கடைசி வார்த்தை புரியாவிட்டாலும் அவளின் பேச்சில் கடுப்பான காயத்ரி

"இங்கப்பாரு நீ என்னமோ லண்டன்ல பொறந்து அமெரிக்காவில வளர்ந்த மாதிரி கதைச்சிட்டிருக்க. நீயும் இங்கதான் பொறந்த வளர்ந்த முதல்ல அதை ஞாபகம் வச்சுக்கோ. கொஞ்ச காலமாத்தானே நீங்களும் கொழும்பில இருக்கீங்க இங்கப்பாரு கொழும்பளவு இல்லை என்றாலும் ட்ரிங்கோவும் ஒரு நகரம்தான் இது ஒன்னும் பட்டிக்காடில்லை விளங்கிட்டா? அத்தோட இன்னொரு விஷயம் ஏற்கனவே உன்கிட்ட சொன்னதுதான் உன்னால முடிஞ்சதைப் பார்த்துக்கோ." காயத்ரியின் அலட்சியமான பேச்சு ஷனாவிற்கு எல்லையில்லா கோபத்தை உண்டாக்கியது. அந்த நேரத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாத தன்னிலையை எண்ணி கடுகடுத்தவளோ
'ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவு காத்திருந்த கொக்காய்' சரியான சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தாள்.

ஒருவாறு அத்தனை தடைகளையும் தாண்டி திருமணத்தை ஏற்பாடு செய்திருந்தார் காயத்ரி. ஆனால் இந்த நிமிடம் அவர் உள்ளம் உலைக் களமாய் கொதித்துக் கொண்டிருந்தது.

'இதோ நாளை திருமணம் ஆனால் இந்த பையன் இப்போது திருமணம் வேண்டாம் என்றால் என்ன செய்வது. கடவுளே என் ஆயுத்ததைப் பயன்படுத்தி சம்மதிக்க வச்சுட்டேன். ஆனால் தாலி கட்டும் வரை எனக்கு நிம்மதியே இருக்காதே.' கடவுளிடம் பல மனுக்களைப் போட்டபடியே நேரத்தை பார்த்தவர் திடுக்கிட்டார் 'ஐயோ மூனாயிடுச்சே இன்னும் கொஞ்ச நேரத்துல எழும்ப வேணுமே' எண்ணியவராய் கண்களை மூட அவரை மெல்ல உறக்கம் தழுவிக் கொண்டது.

வளரும்.....

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்

நிலவு - 11

மண்டபத்தில் திருமணம் என்பதால் இரு வீட்டு வாசலிலும் துணிப் பந்தலிட்டு வாழை, தென்னை மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு திருமண வீடு அமர்களமாயிருந்தது. இரு வீட்டுத் தாய்மார்களும் குத்து விளக்கேற்றி பூரண கும்பம் வைத்து கடவுளை வணங்கி அன்றைய நாளை இனிதே வரவேற்றனர்.

அதிகாலை மணி ஐந்து பரபரப்பாக சுழன்று கொண்டிருந்தார் ரஞ்சனி. அவரிடம் வந்த வாசுதேவன்

"ரஞ்சி, முறை செய்ய மாப்பிள்ளைத் தோழனா யாரை ஒழுங்கு செஞ்சிருக்க?"

"நம்ம நிரஞ்சனத்தான் அவன் தானே நயனிக்கு அண்ணன் முறை அதுமட்டுமில்லை அவனுக்குத்தானே இன்னும் கல்யாணமாகல்ல அதுக்காகத்தான் அவனை மாப்பிள்ளைத்தோழனா அனுப்பலாம் என்று முடிவு செஞ்சேன். ஆனால் பாருங்க முதல் ஆளா வர வேண்டியவன் இன்னும் வரல்லை"

"சித்தி நான் ரெடியாகி வந்துட்டேன்" நிரஞ்சன் வந்ததும்

"அமுதா, நீ ரெடியாம்மா எங்கே சித்ராவையும் மருமகனுங்களையும் இன்னும் காணல்ல நேரமாகுது கெதியா வெளிக்கிடுங்கோ அத்தோட ராகினி பெரியம்மாவையும் சோபா அத்தையையும் கூட கூட்டிட்டு போங்க" ரஞ்சனி கூற தலையை ஆட்டிய அமுதா மற்றையவர்களை அழைக்கப் போனாள். அதற்குள் கொண்டு போக வேண்டிய பொருட்களை பூஜையறையில் கடவுளுக்கு முன்பாக அடுக்கி வைத்தார் ரஞ்சனி. அனைவரும் வந்து சேர கடவுளை வணங்கியவர்கள் ஒரு தட்டில் வாழைப்பழம், ஒரு தட்டில் பலகாரம், இன்னொரு தட்டில் பூ எல்லாமாக மூன்று தட்டுகளைப் பெண்களும் மணமகனுக்கான பட்டாடை தலைப்பாகை மற்றும் மலர்மாலை அடங்கிய தட்டை நிரஞ்சனும் அத்தோடு மணமகன் நீராடும் முன் தலையில் வைக்க வேண்டிய அறுகும் காசும் பாலும் கலந்த பாத்திரத்தை அமுதாவின் கணவர் மாதவனும் எடுத்துக் கொண்டு மாப்பிள்ளை வீடு நோக்கிப் புறப்பட்டனர்.

"அட வாங்க வாங்க" என வாசலுக்கே வந்து திலகமிட்டு வரவேற்று உள் அழைத்த ராகவன் தம்பதியரிடம் கொண்டு வந்த பொருட்களை கொடுக்க அவற்றை பூஜையறையில் வைத்துவிட்டு மகனை அழைக்கச் சென்றார் காயத்ரி. அவன் அறையை நெருங்கியதும் கதவை தட்ட அது தானாகத் திறந்து கொண்டது.

"எழும்பிட்டாயாப்பா? பொண்ணு வீட்டுல இருந்து சீர் கொண்டு வந்திருக்காங்க. இனி குளிச்சு தயாராக வேண்டியது தான் வாப்பா கீழே போகலாம்" அவர் அழைக்க முகத்தை உம் என்று வைத்துக் கொண்டு வந்தவனைப் பார்த்ததும்

"ஆதி முகத்தைக் கொஞ்சம் சிரிச்சாப் போல வைப்பா. வந்திருக்குறது உன் மாமனார் வீட்டிலிருந்து இப்படி இருந்தால் அவங்க ஏதும் தப்பா எடுத்துக்குவாங்க" அவர் கெஞ்ச 'தலைக்கு மேல் வெள்ளம் போயாச்சு இதில் சாணென்ன முழமென்ன எல்லாம் அம்மாக்காகத் தானே அவங்களாவது சந்தோசமா இருக்கட்டும் நமக்கான சந்தர்ப்பம் கிடைக்காமலா போகும் அப்போ பார்த்துக்கலாம்' எண்ணியவன் தன் முக பாவத்தை மாற்றிக் கொண்டான் அதில் திருப்தியுற்றவராய் அவனை அழைத்துக் கொண்டு பூஜையறையில் நுழைய விளக்கேற்றினான் ஆதித்யன். பின்னர் நிரஞ்சன் வெற்றிலையைச் சுருட்டி அதற்குள் சில்லறைக் காசுகள் வைத்து ஆதித்யனின் கைகளில் கொடுத்து விட்டு அவன் தலையில் ஓர் வெள்ளைத் துண்டை விரித்து அவனை அழைத்துக் கொண்டு மனைக்கு வந்தவன் கிழக்குமுகமாக ஓர் பலகையில் இருத்தினான். வழக்கப்படி அவனுக்கு முன்னால் நிறைகுடம், குத்துவிளக்கு, தாம்பூலம் வைக்கப்பட்டிருந்தது.
மூன்று, ஐந்து என்ற எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் அறுகும் காசும் பாலும் கொண்ட கலவையை ஆதித்யனின் தலை மேல் மூன்று முறை வைத்தனர் பெண்வீட்டாரும் இதில் கலந்து கொண்டார்கள். முதல் பால் வைக்கும் போது வடக்கு முகமாயிருந்து தாய்மாமன் முறையில் ஒருவர் தேங்காய் உடைத்தார். பால் வைத்ததும் ஆதித்யனை குளிக்கச் அழைத்துச் சென்று முதல் நீரை அவனின் பெற்றோர் ஊற்றிய பின் நிரஞ்சனும் மற்றைய ஆண்களும் ஊற்றினர். குளித்து விட்டு முதலில் நிச்சயதார்த்தம் என்பதால் அதற்கான ஆடையை அணிந்தவன் சாமி அறையில் சாமி கும்பிட்டு கற்பூரம் காட்டி பெற்றோரை விழுந்து வணங்க அவனை ஆசிர்வதித்தவர்கள் அணைத்துக் கொண்டனர். பின்னர் தனலட்சுமி காலில் விழுந்து வணங்க அவரும் அவனை கண்ணீர் மல்க ஆரத் தழுவிக் கொண்டார். ராஜேஸ்வரியின் காலிலும் விழுந்து எழுந்தான் பேரன் அவரும் அவனை ஆசிர்வதித்தாலும்

"என் பேத்திக்கு மாப்பிள்ளை ஆகியிருந்தால் இன்னும் சந்தோசப் பட்டிருப்பேன் ம்.... என்ன செய்ய" என்று நொடித்துக் கொள்ள தனலட்சுமி அவரைக் கண்டித்தார். பெண் வீட்டிலிருந்து வந்தவர்கள் எல்லோருக்கும் விருந்தோம்பல் நடைபெற்றது.

"முதல்ல நிச்சயம் என்றதால கல்யாணத்துக்கான அனைத்து சடங்குகளையும் நாம மண்டபத்துலேயே செஞ்சுக்கலாம் அதுக்காக பொண்ணு வீட்டுக்காரங்களுக்கும் மாப்பிள்ளை வீட்டாருக்கும் தனித்தனி கோட்டேஜ் ஒதுக்கிருக்கு. அத்தோட ஏற்கனவே அம்மா சொன்ன மாதிரி முதல்ல கோயில்ல மணமக்கள் பேருல ஒரு சிறப்புப் பூஜையும் செய்யனும். அதனால இன்னும் கொஞ்ச நேரத்துல நாங்க நேரா கோயிலுக்குத்தான் போகப் போறோம் நீங்களும் நேரா அங்கேயே வந்துடுங்க" ராகவன் கூற சரி என்று பெண் வீட்டாரும் விடை பெற்றனர்.

மாப்பிள்ளை வீட்டுக்கு சென்றவர்களை அனுப்பி விட்டு அவசரமாக வந்து அறைக் கதவை சற்றுப் பலமாக தட்டினார் ரஞ்சனி. அதில் துயில் கலைந்த நயனாவும் உதயாவும் அறைக் கதவைத் திறக்க

"என்ன நயனி இம்பட்டு நேரம் தூங்கிட்டிருக்க. ஏய் உதய் நீயாவது எழுப்பி விடமாட்டாயா? சரி சரி சீக்கிரம் கிணத்தடிக்கு வாங்கோ. நயனி நைட்டியைக் கழற்றிட்டு அந்த சல்வாரைப் போட்கிட்டு வாம்மா." ரஞ்சனியுடன் உதயாவும் வெளியேற தாய் சொன்னது போல் சல்வாரை அணிந்து கொண்டு கிணற்றடிக்கு சென்றாள் நயனதாரா. அவளுக்கும் மணமகனுக்கு நடந்தது போல் அனைத்து சடங்குகளும் நடை பெற்றது. அதன்பின்னர் குளித்து விட்டு வந்தவள் நிச்சயத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட பட்டுப் புடவையை உடுத்தி அதற்கேற்ப அலங்காரங்களையும் செய்தவள் கடவுளுக்கு விளக்கேற்றி கற்பூரம் காட்டி பெற்றோரின் காலில் விழுந்து வணங்கினாள். அவளை இருவரும் ஆசிர்வதித்து நெற்றியில் திலகமிட்டனர். மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற மற்றையவர்களும் வந்து தயாராகினர் ரஞ்சனியிடம் வந்த அமுதா ராகவன் கூறியதைச் சொன்னாள். முகூர்தத்துக்கு முன்னர் உடுக்க வேண்டிய புடவையையும் அத்துடன் கோயில் அர்ச்சனைக்குத் தேவையான வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழங்கள், பூக்கள் போன்றவற்றை அடுக்கிய தட்டையும் அத்தோடு தேவையான மற்றைய பொருட்களையும் எடுத்துக் கொண்டு குடும்பத்தில் முக்கியமானவர்கள் மட்டும் கோயிலுக்கு சென்றனர். மற்றையவர்கள் மண்டபத்துக்குப் புறப்பட்டனர்.

ணமகன் வீட்டை விட்டுப் புறப்படும் போது இரு சுமங்கலிப் பெண்கள் ஆரத்தி எடுக்க வேண்டும் என்பதால் காயத்ரி தன் இளைய மகள்களான அனுபமாவையும் அஸ்வினியையும் அழைத்தவர் மகனுக்கு ஆரத்தி எடுக்க சொன்னார். பின்னர் மாப்பிள்ளைக்காக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சங்கர் வாகனத்தை ஓட்ட முன்னிருக்கையில் ராகவன் அமர்ந்தார். ஆதித்யன் மற்றும் காயத்ரியுடன் மணத்தோழியாக ஆதியின் மூத்த சகோதரியான அகிலாவும் பின்னிருக்கையில் அமர மற்றொரு வாகனத்தில் உறவில் முக்கியமானவர்கள் ஏற கோயிலை நோக்கிச் சென்றன அவ்விரு வண்டிகளும்.

மாப்பிள்ளை வீட்டார் கோயிலுள் நுழைய நயனதாராவின் விழிகளோ தன்னவனை தேடி அலைந்தன. கண்டு கொண்டதும் நாணம் தாங்காது தலை குனிந்தாள். ஆனாலும் அடிக்கொரு முறை யாரும் காணா வண்ணம் அவனை ஓரக் கண் கொண்டு பார்த்தாள். இதனைக் கண்டு கொண்ட உதயாவும் தாரணியும் அவளை கேலி செய்ய அதன் பிறகு அவள் தலை நிமிரவே இல்லை. கோயிலில் ஏற்பாடு செய்திருந்த பூஜை சிறப்பாக நடைபெற்றது. பிள்ளையாருக்கு தேங்காயை உடைத்து விட்டு ஒவ்வொரு சன்னிதியாக சுற்றி வந்தனர் கடைசியாக சிவன் பார்வதி சன்னிதியில் தனலட்சுமியின் புன்னியத்தில் தன்னவனுக்கு அருகில் நிற்கும் வாய்ப்புக் கிடைத்தது. முதன்முதலாக தன்னவனை பக்கத்தில் பார்த்தவள் கிறங்கித்தான் போனாள் ஆனால் அவனோ அவள் புறம் பார்வையை சிறிதும் திருப்பினான் இல்லை அது அவளுள் வருத்ததை உண்டாக்கியது. 'உனக்கு வெட்கமில்லாம பார்த்தா அவரும் அப்படி பார்க்கனுமா?எல்லோரும் இருக்கும் போது பார்க்க ஒருமாதிரித்தான் இருக்கும்.'என தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டாள்.

பூஜையை முடித்து விட்டு முதலில் பெண் வீட்டார்தான் மண்டபத்தை நோக்கிப் போயினர். இன்றைய நாகரிகத்திற்கேற்ப மண்டப வாசலில் அழகாக பந்தலிடப்பட்டு வாழை, கமுகு, தென்னை ஓலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
வாழைமரம் ஒரு முறைதான் குலைபோடும் அதுபோல் எமது வாழ்விலும் திருமணம் ஒரு முறைதான் என்பதை உணர்த்தவும் அத்தோடு வாழையடி வாழையாக வாழைமரம் தழைப்பது போல் தம்பதிகளின் சந்ததியும் பெருக வேண்டுமென வாழையையும், பாக்கு கொத்துக் கொத்தாக காய்ப்பது போல் தம்பதிகளும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று கமுகையும், நூற்றாண்டு வாழக்கூடியது என்பதால் தென்னையும் கொண்டே பந்தலை அலங்கரிப்பது வழக்கமாகும். அதுமட்டுமன்றி வாழையும் தென்னையும் கற்பகதரு இவை அழியாப்பயிர்களாகும். அத்தோடு இறைவழிபாட்டிலும் இவை முக்கியமானவை. தம்பதிகள் நிலைத்து நின்று அனைவருக்கும் பயன்படக்கூடியதாக வாழவேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதாலும் இவற்றைக் கொண்டே திருமண நாளின் போது மண்டபங்களும் வீடுகளும் அலங்கரிக்கப்படுகின்றன.

நிச்சயதார்த்தத்தை திருமணம் நடக்கும் மண்டபத்தை அடுத்திருந்த சிறிய மண்டபத்தில் தான் ஏற்பாடு செய்திருந்தனர். வீட்டிலிருந்து மண்டபத்திற்கு வருமுன்னர் செய்ய வேண்டிய திருமணச் சடங்குகள் இன்னும் மிச்சமிருப்பதால் மணமக்களுக்காக ஹோட்டலில் எதிரெதிர் திசையில் சிறிய கோட்டேஜ்கள் ஒதுக்கப்பட்டன. அதில் மணமகளுக்காக ஒதுக்கப்பட்ட அறைக்கு நயனியை அழைத்துக் கொண்டு தாரணியும் உதயாவும் அவளின் மற்றைய தோழிகளும் செல்ல மற்றையவர்கள் நிச்சய மண்டபத்தினுள் நுழைந்தனர்.

கோவிலிலிருந்து மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்திற்கு வந்தவுடன் மேளதாளங்கள் முழங்க அவர்களை பெண்வீட்டார் வரவேற்றனர். மாப்பிள்ளைக்கு சுமங்கலிகளான அமுதாவும் சித்ராவும் ஆரத்தி எடுக்க திலகமிட்டு மாலை அணிவித்தார் வாசுதேவன்.

நிச்சய மேடை மணமக்களின் உடைக்கேற்ப மலர்கள் கொண்டு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மணமகன் மேடைக்கு வந்ததும் ஐயர் பெண்ணை அழைத்தார். தோழிகள் அவளை மேடைக்கு அழைத்து வந்ததும் நிச்சய ஓலை படிக்கப்பட மாப்பிள்ளையும் பெண்ணும் ஒருவருக்கொருவர் மாலை மாற்றியதோடு மோதிரத்தையும் மாற்றிக் கொண்டனர். மாலை மாற்றும் போது இருவர் விழிகளும் ஒரு கணம் கலக்க அவளுள் நாணம் எழுந்தது ஆனால் அவனோ தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான். மோதிரம் மாற்றும் போதும் அப்படியே. தப்பித்தவறியும் அவன் பார்வை பெண்ணவள் மேல் விழவே இல்லை. அவன் முகம் சாதாரணமாக இருப்பது போல் இருந்தாலும் பக்கத்திலிருந்து பார்த்தவளுக்கு இறுகிய கற்சிலை போல்தான் தோன்றியது. அவன் செயல் அவளுள் சிறு வலியைக் கொடுத்தது ஆனாலும் என்ன காரணம் என்று புரியாது தவித்தாள் பெண். நிச்சயதார்த்தம் முடிந்ததும் மண்டபம் ஆட்டம்பாட்டமாக களை கட்டியது. அடுத்து திருமண முகூர்த்தம் என்பதால் மணமக்களை சிறிது ஓய்வெடுத்த பின் தயாராகக் கூறி அவரவர் அறைக்கு அனுப்பி வைத்தனர். தன் அறைக்கு சென்ற ஆதித்யன் சங்கரிடம்

"டேய், மச்சான் நான் அந்த பொண்ணுகிட்ட கொஞ்சம் கதைக்கனும்டா அதுவும் இப்போவே" என்றவனிடம்

"மச்சான் தாலி கட்டுற வரை பொண்ணுகிட்ட கதைக்கக் கூடாதாம்டா. நம்ம தனம் பாட்டி தான் சொல்லிட்டிருந்தாங்க. தப்பித்தவறி நீ போய் அந்தப் பொண்ணுக்கிட்ட கதைக்க, கூட நான் வேற இருக்க அதை பாட்டி பார்த்தாங்க உன்னை ஒன்னும் பண்ணமாட்டாங்கடா நான் செத்தேன். ஒன்னும் பண்ணாமலே என்னை ஓட ஓட விரட்டுவாங்க. இப்போ காரணம் கிடைச்சா விடுவாங்களா ? என்னை உண்டில்லை என்று ஆக்கிட மாட்டாங்க. இங்கப்பாருடா மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் ஆரம்பிச்சிடும் மாங்கல்யதாரணத்துக்கு முன்ன செய்ய வேண்டிய ஆயிரம் சடங்குகள் இருக்கு. பொண்ணு வீட்டுல இருந்து இன்னும் கொஞ்ச நேரத்துல கூட்டிட்டுப் போக வந்திடுவாங்க. முதல்ல கொஞ்சம் ஓய்வெடு நம்ம சீக்கிரமா வேற ரெடியாகனும் இன்னும் கொஞ்ச நேரத்துல அந்தப் பொண்ணு அவதான் நயனதாரா உனக்கு சொந்தமாகிடுவாங்க வாழ்நாள் முழுக்க இனி அவங்க உன்கூடத்தானே இருக்கப் போறாங்க அப்போ கதைச்சுக்கோ யாரு உன்னை தடுக்கப் போறா?" ஏற்கனவே நடந்தது அனைத்தும் ஆதி மூலம் தெரிந்த போதிலும் காயத்ரியும் அவனிடம் நடந்ததைக் கூறி இருவரும் சந்திக்காதவாறு பார்த்துக் கொள்ளும்படி கூறியிருந்தார். அதனால்தான் அவன் செல்வதைத் தடுத்தான். ஆனால் அவனை மீறி ஆதித்யன் நயனியைப் பார்க்கச் செல்ல சங்கரோ உடனே காயத்ரிக்கு அழைத்து விடயத்தை கூற அடுத்த நொடி ஆதியின் எதிரில் நின்றார் காயத்ரி. இது சங்கரின் வேலை என்பதை உணர்ந்தவன் அவனை முறைக்க

"ஏன் அவனை முறைக்குற. இங்கப்பாரு நீயில்லை நயனி கல்யாணத்தை நிறுத்தினாலும் ஏன் வேற யாராலேயும் கல்யாணம் நின்டுச்சு என்றாலும் உங்க அம்மாவை நீ உயிரோட பார்க்க முடியாது என்ன விளங்கிட்டா? நான் சும்மா வாய் வார்த்தைக்கு சொல்லல்லை. உனக்கு என்னைப் பற்றி நல்லாவே தெரியும் இல்லையாப்பா? இனியும் நயனியை பார்க்கனுமாப்பா? என்ன யோசிக்குற சரிப்பா நான் சொல்லுறதை சொல்லிட்டேன் அதுக்குப் பிறகு உன்னொட விருப்பம். அம்மாவா? இல்லை உன் பிடிவாதமா? நீயே முடிவு பண்ணிக்கோ." அவர் போட்ட போடில் நயனியுடன் ஒரு ஒப்பந்தத்தை போட நினைத்தவனின் எண்ணம் நிறைவேறாமல், வந்த கோபத்தை அடக்கிக் கொண்டு அமைதியாக தனதறையை நோக்கிப் போக அப்போதுதான் சென்ற மூச்சு திரும்பி வந்தது காயத்ரிக்கு. இது அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ராகவன் நேராக காயத்ரியிடம் வந்தார் கணவனைக் கண்டதும் ஒரு கணம் தடுமாற அதனை குறித்துக் கொண்டே

"ஏன் காயு என்ன நம்ம புள்ளைகிட்டேயே இப்படி மிரட்டி கதைக்குற ஆதி முகத்துல சந்தோஷமே இல்லையே என்னாச்சு, அவனுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்லையா? நான் எல்லாத்தையும் கேட்டுட்டேன் என்கிட்ட மறைக்காம என்ன என்று சொல்லும்மா." எனக் கேட்க இதற்கு மேல் மறைக்க முடியாது என்று எண்ணியவர் கணவனை அழைத்துக் கொண்டு தனியாகச் சென்று அன்று அவருக்கும் ஆதிக்குமிடையில் நடந்த நிகழ்வை சுருக்கமாகக் கூறினார்.

"இப்போ சொல்லுங்கோ நான் ஏதாவது தப்பா செஞ்சுட்டேனா? இவன் என்னை விளங்காம பிடிவாதம் பிடிக்கிறான் இந்த கல்யாணம் முடியும் வரை எனக்கு நிம்மதியே இல்லைங்க. ஏங்க எல்லாம் நல்லபடியா முடியும் தானே. எனக்கு பயமா இருக்குங்க. நான் இவனுக்கு தப்பா எதுவும் பண்ணல்லையேங்க இவன் ஏன் புரிஞ்சுக்க மாட்டேன் என்கிறான்." கவலையோடு கூறிய காயத்ரி தவறியும் விக்‌ஷனாவின் தப்பான எண்ணத்தை கூறிடவில்லை. ராகவனுக்கும் ஆதித்யன் எதையோ தவறாக புரிந்து கொண்டு சிறுபிள்ளைத் தனமாக நடப்பதாகவே தோன்றியது

"நீ செய்தது தான் சரி அவனுக்கெல்லாம் இப்படி அதிரடியாச் சொன்னால்தான் விளங்கும். நயனி ரொம்ப நல்ல பொண்ணு போகப் போக விளங்கிடுவான் அம்மா நமக்கு தப்பானதை தரல்ல என்றதையும் புரிஞ்சுக்குவான். அதுக்கு கொஞ்ச காலம் எடுக்கும். சரிம்மா நீ எதையும் யோசிச்சு கவலைப்படாதே. எல்லாம் நல்லதாகவே முடியும் இப்போ தலைக்கு மேல ஆயிரம் வேலை கிடக்கு. இப்போ வாம்மா போகலாம்." என்று மனைவியை சமாதானப்படுத்தியவர் அவரையும் அழைத்துக் கொண்டு மற்றைய வேலைகளை கவனிக்கச் சென்றார்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇👇

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு -12


தாரணியும் உதயாவும் நயனதாராவை அழைத்துக் கொண்டு மணப்பெண் அறைக்குச் சென்றவர்கள் நிச்சய அலங்காரங்களைக் கலைத்து விட்டு அவளை சிறிது நேரம் ஓய்வெடுக்கச் சொன்னார்கள். அப்பொழுது அறையினுள் நுழைந்த விக்‌ஷனா தன்னை யார் என அறிமுகப்படுத்திக் கொண்டு நயனியுடன் சற்றுத் தனியாகப் பேச வேண்டும் எனவும் மற்றையவர்களை சிறிது நேரம் வெளியே இருக்குமாறும் கூற நயனியின் கண்ணசைவில் மற்றையவர்கள் வெளியேறினர். அவர்கள் வெளியேறியதும் கதவை தாழிட்ட ஷனா சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விசயத்திற்கு வந்தாள்.

"நயனதாரா தயவு செஞ்சு இந்தக் கல்யாணத்தை உடனே நிறுத்திடுங்க. நானும் அத்தானும் ஒருவரை ஒருவர் உயிருக்குயிரா விரும்புறோம். இதெல்லாம் காயத்ரி அத்தைக்குத் தெரியும் அவங்களுக்கு இந்தக் காதலெல்லாம் பிடிக்காது அதனாலதான் இப்படி எங்களைப் பிரிச்சுட்டாங்க. சரி உங்களுக்கு என்னை நம்புறது கஷ்டமா இருக்கும் என்னை நம்ப வேண்டாம் ஆனால் என் அத்தான் முகத்தை பார்த்திருப்பீங்களே அதுல துளியாலும் சந்தோசமிருக்கா அவரால என்னை மறக்கவும் முடியாம அம்மாவோட வாக்கை காப்பாத்தனும் என்பதுக்காக உங்களை ஏத்துக்கவும் முடியாம தவிக்குறார். அவரால நிச்சயமா கல்யாணத்தை நிறுத்த முடியாது நீ மட்டும் இந்தக் கல்யாணத்தை நிறுத்திட்டா காலத்துக்கும் உன்னை நாங்க இரண்டு பேரும் மறக்க மாட்டோம் ப்ளீஸ் உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன்." அவளின் பேச்சில் அதிர்ச்சியின் உச்சத்திலிருந்தாள் நயனி. விக்‌ஷனா அவளை பல முறை அழைத்தும் பதிலில்லாமல் போக அவளை உலுக்க சுய நினைவுக்கு வந்தவள்

"காதலிக்குறீங்களா? ஐயோ என்னால இதை நம்பவே முடியல்லையே என்னங்க இப்படித் தலையில இடியப் போடுறீங்க ஆனாலும்... அவர் முகத்துல சிரிப்போ சந்தோசமோ இல்லை. அது காலையில இருந்து மனசுல தச்சுகிட்டுத்தான் இருக்கு. அப்போவிருந்தே யோசிச்சிடடுத்தான் இருக்கேன் அப்படியென்றால் நீங்க சொல்லுறது உண்மைதானா? இப்போதானே விளங்குது காரணம் என்ன என்று, அத்தைக்கு எல்லாம் தெரிஞ்சும் மிரட்டி ஒத்துக்க வச்சிருக்காங்களா? கடவுளே என் மனசு இதுக்குத்தானா அவ்வளவு துடிச்சிச்சு. ஏங்க முன்னமே என்கிட்ட இதை சொல்லியிருக்கலாமே இப்படிக் கடைசி நேரத்துல வந்து சொல்லுறீங்க. ஐயோ இப்போ நான் என்ன செய்வேன்? கடவுளே" அவள் செய்வதறியாது தவிப்பதை ஒரு கள்ளச்சிரிப்புடன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தாள் ஷனா என்னும் சதிகாரி.

"நயனி இந்த கல்யாணப் பேச்சு வந்த போதும் சரி பொண்ணு பார்க்க வந்தபோதும் சரி நான் உன்கிட்ட கதைக்க நினைச்சேன் ஆனால் அத்தைதான் சாமர்த்தியமா கதைக்காம பார்த்துகிட்டாங்க. அதனாலதான் இப்படி கடைசி நேரத்துல கதைக்க வேண்டியதாப் போச்சு. இப்ப கூட அத்தான் உன்கிட்ட கதைக்க வந்தார் ஆனால் இப்பவும் அத்தை அதை தடுத்துட்டாங்க. உன்னை கெஞ்சிக் கேட்டுக்கிறேன் தயவு செஞ்சு இந்தக் கல்யாணத்தை நிறுத்தி எங்களோட உண்மை காதலை வாழ விடு. மனசாலையும் உடலாலேயும் என் அத்தான் எனக்கு மட்டும்தான் சொந்தம். அதேமாதிரி நான் என் அத்தானுக்கு மட்டும்தான் சொந்தம். என்ன நயனி எதுவும் விளங்கல்லையா சின்னப்புள்ளை மாதிரி முழிக்குற சரி உனக்கு விளங்குற மாதிரியே சொல்லிடுறேன் நிச்சயமா என் அத்தான் உன்னை மனசார ஏத்துகிட்டு உன்னோட குடும்பம் நடத்த மாட்டாரு. ஏன் தெரியுமா கற்பனையில நாங்க ஒரு வாழ்க்கை வாழ்ந்துட்டிருக்கோம் அதைவிட இதைச் சொல்ல எனக்கு ஒருமாதிரி தான் இருக்கு ஆனாலும் சொல்லித்தான் ஆக வேண்டிய சூழல் நாங்க ரெண்டு பேரும் உடலளவுல சில தடவைகள் இணைஞ்சுமிருக்கோம். என்னால எப்படி என் அத்தானை மறக்க முடியும் இல்லை இன்னொருத்தன் கூட வாழத்தான் முடியும். இப்போ விளங்கியிருக்குமே ப்ளீஸ் நயனி கல்யாணத்தை நிறுத்தி என் அத்தானை என் வாழ்க்கையை எனக்கு திருப்பிக் கொடு உன்னோட கல்யாணம் நிக்குதென்று கவலைப்படாதே இந்தக் கல்யாணம் நடந்து காலம் முழுக்க என் அத்தான் என் நினைப்போட உன்கூட வாழ முடியாம தவிச்சா உன் வாழ்க்கையும் மொத்தமா பாழாகிடும் அதை விட இப்போ கல்யாணத்தை நிப்பாட்டினால் உனக்கான ராஜகுமாரன் வருவானில்லை. ஏன் இன்றைக்கே இந்த மண்டபத்துல கூட கிடைக்கலாம். ப்ளீஸ் நயனி"அவள் கண்ணீருடன் கெஞ்ச நயனியோ தரையில் அப்படியே மடங்கி அமர்ந்தவள் கதறித் தீர்க்க அவள் துடிப்பதையே ஒரு குரூரத் திருப்தியுடன் பார்த்திருந்த ஷனாவின் மனதோ கெக்கலி கொட்டிச் சிரித்தது.
'ஏய் காயத்ரி நான் சாதிச்சுட்டேன் நீ பார்த்த உன் மருமகளே இப்போ வந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்துவா அதுமட்டுமில்லை எனக்கும் உன் மகனுக்கும் இதே மண்டபத்துல இதே முகூர்த்தத்துல உன் தலைமையிலே கல்யாணம் நடக்கும் உன்னால எதுவும் செய்ய முடியாம தவிப்ப. கல்யாணம் மட்டும் முடியட்டும் நீ் கதைச்ச கதைக்கெல்லாம் உன்னை வச்சு ஆட்டுறேன் பாரு இருக்குடி உனக்கு. நான் ஜெயிச்சுட்டேன் காயத்ரி நான் ஜெயிச்சுட்டேன்.' தனக்குள்ளே கொக்கரித்துக் கொண்டாள் அந்த சதிகாரி அப்போது அறைக் கதவு தட்டப்பட்டது.

"நயனி் இதுக்கு மேல நான் இங்கே இருக்க முடியாது. நான் போறேன் சீக்கிரம் யோசிச்சு எங்க வாழ்க்கையோட உங்க வாழ்க்கையையும் காப்பாத்திக்க ஒரு முடிவெடுங்க ப்ளீஸ் அது நம்ம ரெண்டு பேருக்கும் இல்லை என் ஆதியோட சேர்த்து மூனு பேருக்கும் நலவா அமையட்டும் " கூறியவள் அழுது கொண்டிருந்த நயனியின் சரி என்ற சம்மதத்தை பெற்ற பின்னே திருப்தியுற்றவளாய் மடமடவென்று கதவை திறந்து கொண்டு வெளியேற, செல்பவளைப் பார்த்தபடியே உள் நுழைந்தாள் தாரணி.

"என்னவாம் அவளுக்கு?" என்று கேட்டுக் கொண்டு வந்தவள் தோழியின் நிலையையும் அவளின் அழுது கரைந்த முகத்தைக் கண்டதும் மற்றது மறந்து அவளிடம் விரைந்தாள்.

"என்னடி ஆச்சு ஏன் இப்படி இருக்க?" என்று கேட்டதுதான் தாமதம் அவளைக் கட்டிக் கொண்டு அழுது தீர்த்தாள் நயனி. அவள் அழுது முடியும் வரை பார்த்திருந்தவள் அவளிடம் தண்ணீர் கொடுத்து குடிக்க வைத்து நடந்த விபரத்தைக் கேட்க நடந்ததைக் கூறி மீண்டும் கண்ணைக் கசக்கினாள் பாவை. அழுது கொண்டிருந்தவள் கன்னத்தில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு எழுந்தமர்ந்தவளை கேள்வியாய் நோக்கிய தாரணியிடம்

"அத்தை என்னை ஏமாத்திட்டாங்க டி தாரு. என்னை மட்டுமில்லை பாவம் டி அந்த ஷனா அவரும் தான் அம்மாவோட வார்த்தையை மீற முடியாம வலுக்கட்டாயமா என்னை கட்டிக்கப் போறாரு. இது நடக்கக் கூடாது அவர் மனசொடஞ்சு போகக்கூடாது. என் காதல் சேராட்டியும் அவரோட காதலாவது நிலைக்கட்டும் எப்படியும் நான் இடையில வந்தவதானே. அதோட அந்த ஷனாதானே அவர் மனசுல இருக்கா." உயிர்த் தோழியிடமே மறைத்து வைத்த தன் காதலை, என்ன பேசுகிறோம் எனத் தெரியாமல் கொட்டிவிட அவளின் நிலையை உணர்ந்த தாரணியின் கண்களும் கலங்க தோழியை சமாதானப்படுத்தினாள். ஆனால் நயனியால் சிறிதும் சமாதானமாக முடியவில்லை.

"நான்தான் ஏதாவது பண்ணனும் உடனே இந்த கல்யாணத்தை நிறுத்த வேண்டும். வா தாரணி இப்போவே வெளிய போய் எல்லோர்ட்டையும் உண்மையை சொல்லி கல்யாணத்தை நிறுத்திடலாம்." பரபரத்தவள் கதவை நோக்கிப் போக அவளை தடுத்த தாரணி

"நயனி ஷனாவைப் பார்த்தா எனக்கு அவ்வளவு நல்லவளா தோணல்லை. முதல்ல காயத்ரி ஆன்ட்டியைக் கூப்பிட்டு கதைக்கலாம் அவங்களுக்கிட்டேயும் என்ன நடந்தது என்று ஒரு வார்த்தை கேட்டிடலாமே. அதுக்கு பிறகு மற்றதை யோசிக்கலாம் எடுத்தோம் கவுத்தோம் என்று அவசரமா எதையும் செய்யாதே எனகென்னமோ தப்பாபடுதுடி நல்லா யோசிச்சுப் பாரு காயத்ரி ஆன்ட்டிக்கு ஆதி சேர் ஒரே மகன் அவர் ஆசைப்பட்டது அவங்க மதினியோட மகளைத்தான் அப்படி இருக்கும் போது அவங்க ஏன் தடுக்கனும் அவங்களே முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நடத்துறதோட மகனோட ஆசையையும் நிறைவேத்திருப்பாங்க எனக்கென்னமோ ஷனாதான் ஏதோ ப்ளே பண்ணுறாளோ என்று தோணுதுடி இதை இப்பவே கிளியர் பண்ணிடலாம் கொஞ்சம் பொறு." அவளை சமாதானப்படுத்தியவள் உதயாவுக்கு அழைத்து ரஞ்சனியையும் காயத்ரியையும் அழைத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் உடனே நயனியின் அறைக்கு வரச் சொன்னாள் அவர்கள் வந்ததும் தாரணி நடந்ததைக் கூற காயத்ரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

"அவளோட வேலையைக் காட்டிட்டா போல நேரடியா என்கிட்ட மோத முடியாததால உன்னை சீண்டிருக்காம்மா. அவ சொன்னதுல ஒரு துளி கூட உண்மையில்லை. எல்லாமே அப்பட்டமான பொய் நயனிம்மா அவளை நம்பாதடா"

"சரி அத்தை, அவளை நம்பல்லை ஷனா சொன்னது இருக்கட்டும் நான் கேட்குறதுக்கு முதல்ல நீங்க உண்மையான பதிலை மட்டும் சொல்லுங்கோ உங்க மகனுக்கு உண்மையிலே இந்தக் கல்யாணத்துல சம்மதந்தானா? நானும் பார்த்துட்டிருக்கேன் அவர் முக்கத்துல துளியும் சந்தோசத்தைக் காணல்லை. கட்டாயக் கல்யாணமா அத்தை. உண்மையை மட்டும் சொல்லுங்கோ இது என்னோட வாழ்க்கை ப்ளீஸ் அத்தை" நயனி காயத்ரியை நேராகப் பார்த்துக் கேட்க முதலில் அமைதி காத்த காயத்ரி ஒரு முடிவெடுத்தவராய் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டவர் பின்னர் ஆதித்யன் திருமணத்துக்கு சம்மதித்தது முதல் விக்‌ஷனாவின் சபதம் வரை அனைத்து விடயங்களையும் கூறியவர் தவறியும் முதல்நாள் இரவு மகனுக்கும் அவருக்குமிடையில் நடந்த வாக்கு வாதத்தை கூறவில்லை. பின் நயனியை பல வழிகளில் சமாதானம் செய்து திருமணத்திற்கு தயாராக கூற உடன் ரஞ்சனியும் சேர்ந்து கொண்டார்.

"சம்மந்தி நீங்க போய் மற்ற வேலைகளைப் பாருங்க. அவளுக்கு நான் புரிய வச்சுக்கிறேன்." என்று காயத்ரியை அனுப்பியவர் நயனியின் புறம் திரும்பி

"அம்மாடி சம்மந்தியம்மா இவ்வளவு சொல்லுறாங்க என்றால் அதில் பொய் இருக்காதும்மா. அந்தப் பொண்ணோட கதையை நம்பி உன் வாழ்க்கையை கெடுத்துக்காதேம்மா இந்த கல்யாணம் நின்னுடுச்சு என்றால் அப்பாவுக்கு எவ்வளவு தலையிறக்கமாயிடும் அதுமட்டுமா தங்கம் கல்யாணத்துல எவ்வளவு செலவு வேற யோசிச்சு பாரும்மா இதை எல்லாம் நம்மால சரிகட்ட முடியுமா? அதைவிடு அது எங்க பிரச்சனை இது எல்லாத்தையும் விட உன் வாழ்க்கை முக்கியமில்லையா? கல்யாண மேடை வர வந்த உன் கல்யாணம் நின்னா உன்மேலே தப்பே இல்லாட்டியும் அது உன் வாழ்க்கையைத் தான் கண்ணம்மா பாதிக்கும் விளங்கிக்கோம்மா அத்தோட இன்னொரு விசயம் உன் அத்தையும் அந்த அரை லூசு நிதுர்ஷனும் எப்படா கல்யாணம் நிக்கும் இவங்க எப்போ நம்ம கால்ல விழுவாங்க என்று காத்துகிட்டு இருக்காங்க. அதுமட்டுமில்ல கல்யாணத்தை நிறுத்துறதுக்கான வழியையும் தேடிகிட்டு இருக்காங்க அதை நீயே அமைச்சுக் கொடுத்திடாதேம்மா. இங்கப்பாரு இதை நீ நிறுத்தினால் உன் வாழ்க்கைக்காக உங்கப்பா அந்த யமுனா, நிதுர்ஷன் கால்ல விழவும் தயங்க மாட்டார். அவனோட உன்னால வாழ முடியுமா இல்லல்ல. நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கும் முதல்ல ப்ரெஸாகிட்டு வாம்மா குழறிக் குழறி முகம் வேற வீங்கிடுச்சு பார்க்கவே சகிக்கல்லை. முகூர்த்தத்துக்கு முதல் எவ்வளவு சடங்கு, சம்பிரதாயங்கள் இருக்கு. சீக்கிரம் நயனி நேரம் வேற ஆகிட்டிருக்கு. இதுல இப்போ உடுக்க வேண்டிய புடவை இருக்கு. உதயா, தாரணி ரெண்டு பேரும் அவளுக்கு கூடவே இருங்கோ. அந்த மேக்கப் பொண்ணு வெளிய நிக்குறா போல நான் போய் அனுப்பி வைக்குறேன். அவளைப் பார்த்துக்கோங்க" வெளியேறியவர் சொன்னது போல் பியூட்டிஸியனை அனுப்பினார்.

ப்ரெஸ்ஸாகி வந்தவளிடம் தாரணியும் உதயாவும் தங்கள் பங்குக்கு அவளை மேலும் சமாதானப்படுத்த அதில் சிறிது சிறிதாக தெளிந்தவள் மனதை ஒரு நிலைப்படுத்த சிறிது நேரம் எதுவும் செய்யாது அமர்ந்திருந்தாள். பின் புடவையை உடுப்பதற்காக மற்றையவர்களை வெளியே அனுப்பியவள் கதவை தாழிட்டு விட்டு வர அந்த அறையின் வெளிப்புறம் இருந்த ஜன்னலருகே பேச்சுக் குரல் கேட்டது. பேசியவர்களின் பேச்சில் தன் பெயர் அடிபட ஜன்னல் அருகே சென்று மெல்லத் திறக்க அந்த நூலிடை வெளியில் அவளது யமுனா அத்தையும் அவர் மகன் நிதுர்ஷனும் கண்ணில் பட்டனர். 'இவர்களா என்னைப் பற்றி என்ன கதைக்கிறார்கள்?' எண்ணியவளாய் அவர்கள் பேச்சுக்கு காது கொடுக்க

"அம்மா நீங்க சொல்லுறது உண்மையா?"

"ஓம்அடா இந்தக் கல்யாணம் நிக்கப் போகுது. உன் மாமா இப்போ என் கால்ல தான் விழுவாறு விழட்டும் அதுக்காகத் தானே இத்தனை நாளா காத்திருந்தேன்."

"அதெப்படிம்மா மாமா வந்து உன்கிட்ட தான் கேட்பாரு என்று அவ்வளவு உறுதியா சொல்லுற"

"இப்போ இவ்வளவு ஏற்பாடும் பண்ணி கல்யாணம் நின்றா யாருடா வருவா அவளை கட்டிக்க. என் கால்லதானே விழனும் உன் சோபா பெரியம்மாவோட இரண்டு மகனுங்களும் கல்யாணம் பண்ணிக்கிட்டானுங்க. ரேகா சித்திக்கு மூனும் பொம்பளப் புள்ளை, அப்போ மிச்சமிருக்குறது நீதானே அதுவும் நாம ஏற்கனவே நயனியை பொண்ணு கேட்டிருக்கோம். இப்படி திடீரென்று கல்யாணம் நின்றா சொந்தத்துல இருக்குறவங்களைத் தான் கேட்பாங்க அதனாலதான் அவ்வளவு உறுதியா சொல்லுறேன்."

"அப்படியாம்மா அப்போ எனக்கு என்னோட நயனி கிடைப்பாளாம்மா. அது மட்டும் நடந்துட்டா எனக்குப் போதும்மா."

"எனக்குப் போதாதடா நான் போய் பொண்ணு கேட்டப்போ எல்லோரும் சேர்ந்து என்ன கதை கதைச்சாங்க. என் அண்ணிக்காரி உங்களை நம்பி மகளை கொடுக்குறதை விட கல்யாணம் பண்ணாமலே வச்சுக்குவேன் என்று சொன்னா. கால்ல வந்து விழட்டும் அந்த வீடு வளவு காணியோட உதயாக்கு வைச்ச வளவையும் சேர்த்து வாங்கிடலாம். கல்யாணம் மட்டும் நடக்கட்டும் என் அண்ணிக்காரிய கண்ணுல விரலை விட்டு ஆட்டுறனா இல்லையா என்று பாரு"

"நீங்க யாரை என்ன வேணுமென்றாலும் செய்ங்கோ ஆனால் என் நயனியை மட்டும் எதுவும் செய்யக் கூடாது. அப்படி நீங்க அவளை கஷ்டப்படுத்தினால் நான் உங்களை அடிச்சிடுவேன்"

"அடப்பாவி என்னையே அடிப்பாயா? என் கோபமெல்லாம் என் அண்ணன் அண்ணி மேலதான். நயனி நல்ல பொண்ணுடா அவளை ஒன்றும் செய்ய மாட்டேன்."

"குட் அம்மா, அதுசரி எப்படி இந்தக் கல்யாணம் நிக்கும் முதல்ல அதைச் சொல்லு?"

"அதுவாடா உன்னை மாதிரி மாப்பிள்ளையோட அத்தை மகளும் மாப்பிள்ளையை விரும்பியிருக்குப் போல அதுவும் அவளோட பாட்டியும் தான் ஏதோ திட்டம் போட்டுட்டு இருந்தாங்க. அதை நான் கேட்டுட்டேன் முதல்ல பயந்தாங்க நானும் கல்யாணத்தை நிறுத்தத்தான் பாடுபடுறேன் என்றதும் என்னோட கூட்டு சேர்ந்துகிட்டாங்க. அதுமட்டுமில்லைடா அந்தப் பொண்ணு இப்போ நம்ம நயனிகிட்ட போய் கதைச்சிருக்கும். பாரு இப்போ நயனியே வெளியே வந்து இந்தக் கல்யாணத்தை நிறுத்துவா. பிறகு நீதான் மாப்பிள்ளை. சந்தோசமாடா? அம்மா எப்படியாவது உன் நயனியை உனக்கு கட்டி வைக்குறேன் என்று சொன்னேனில்லை. பாரு வழியைக் கண்டு பிடிச்சு செஞ்சுட்டேன். டேய் புத்தி கெட்டவனே இங்கப்பாரு இது கடும் ரகசியம் லூசுத் தனமா யாருகிட்டேயும் சொல்லிடாதே என்ன விளங்கிட்டா?"

அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அப்போது தான் எல்லாம் இவர்கள் சதி என்பது புரிபட்டது. அப்போதுதான் ஷனா கூறிய 'இன்றைக்கே இந்த மண்டபத்துல கூட கிடைக்கலாம்' என்றதன் முழு அர்த்தம் அவளுக்கு விளங்கியது. தன் மாமியார் கூறியது அனைத்தும் உண்மை என்றும் விளங்கியது. அந்த நிதுர்ஷனை நினைத்த மாத்திரத்தில் குமட்டிக்கொண்டு வந்தது.
'ஐயோ இதுகளோட திட்டமென்று தெரியாம நாம வேற கல்யாணத்தை நிறுத்த பார்த்துட்டோம். நல்ல வேளை கடவுள் அவங்க வாயாலே உண்மையை சொல்ல வச்சு நம்மள இந்த லூசுப்பயலை கட்ட வைக்காம காப்பாத்திட்டார். அவனும் அவன் மூஞ்சும் அவனோட அந்த கேவலமான பார்வையும் காலம் முழுக்க சகிக்க வேண்டியிருந்திருக்குமே ச்சே. கடவுளே உங்களுக்கு மிக்கநன்றி இந்த மாதிரி ஒரு நிலை உருவாகாம என்னைக் காப்பாத்தியதுக்கு. அப்பாடா இப்போதான் எனக்கு நிம்மதியா இருக்கு' மனம் நிறைந்த நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் அழகுற புடவையை உடுத்தியவள் கதவைத் திறக்க அவளின் முகத்தைப் பார்த்த தாரணியும் உதயாவும் நிம்மதிப் பெருமூச்சிட்டனர்.


வளரும்.....
 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 13


மணமகள் வீட்டிலிருந்து வந்த
முகூர்த்தத்துக்கான பட்டு வேஷ்டி சட்டையை அணிந்து மாப்பிள்ளையாக தயாராகி வந்த ஆதித்தயவர்த்தனை பார்த்த சங்கர்

"வாவ் மச்சான் சும்மா செம்மையா இருக்கடா உனக்கு இந்த கெட்டப் சூப்பரா இருக்கு. ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் என்னது.....?"

"என்னடா என்ன மிஸ்ஸிங்?"

"அதைத்தான் மச்சான் தேடிட்டிருக்கேன் ஆ.... கண்டு பிடிச்சிட்டேன். உன்னோட ஃபேஸ்ல எப்பவும் இருக்குற அந்த ஸ்மைல்தான் மிஸ்ஸிங். கொஞ்சம் சிரிடா"

"இந்த கல்யாணமே ஒரு கேடு இதுல சிரிப்பொன்று தான் குறைச்சல்"

"டேய் இப்படி இருந்தா பார்க்க நல்லாவே இல்லைடா. அதோட இன்னும் கொஞ்ச நேரத்துல உன் மாமனார் வீட்டுல இருந்து உன்னை மண்டபத்துக்கு கூட்டிட்டு போக வந்தடுவாங்க. இப்படி உர்ரென்றிருந்தா மாப்பிள்ளைக்கு கல்யாணத்துல விருப்பமில்லையாக்கும் என்று நினைச்சிக்குவாங்க."

"நினைக்கட்டுமே எனக்கென்ன? அப்படியாவது இந்தக் கல்யாணம் நிக்காதா என்றிருக்குடா"

"டேய் சும்மா லூஸ் கதை கதைக்காதே, அம்மா சொன்னதெல்லாம் உனக்கு மறந்திடுச்சோ?"

"அம்மா அம்மா அம்மா எல்லாத்துக்கும் அவங்கதான் காரணம் அவங்க என்னை விளங்கவேயில்லைடா. அந்த பொண்ணைப்பத்தி அவ்வளவு சொன்னாலும் அவங்கதான் சரி என்று நிக்குறாங்க. என்னடா நீயும் இப்போ அவங்க கூட்டா? அவங்களை மாதிரியே கதைச்சிட்டிருக்க இல்லையில்ல மிரட்டிட்டிருக்க"

"சும்மா சின்னப் புள்ளை மாதிரி பிடிவாதம் பிடிச்சா எங்களை என்ன செய்யச் சொல்லுற? நல்லதைச் சொன்னால் உனக்கு மிரட்டலா இருக்கு போல என்ன செய்யுற அந்த பொண்ணு உண்மையா நல்லவள்டா நான் ஒன்றுக்கு நூறு தடவை விசாரிச்சிட்டேன் என்னுல உனக்கு நம்பிக்கையில்லையா மச்சான்?"

"ஐயோ என்னால முடியல்லை இப்போ உன்ட பிரச்சனைதான் என்ன?"

"ஒன்னுமில்லைடா மச்சான் உன்னோட அழகு மூஞ்சிய உர்ரென்று வச்சிருக்காம கொஞ்சம் சிரிடா"

" கட்டாயம் சிரிக்கத்தான் வேணுமாடா?"

"அதில உனக்கு என்னப்பா பிரச்சனை?" தீடீரென்று கேட்ட ராகவனின் குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க இவர்கள் பேசிய அனைத்தையும் கேட்டுக் கொண்டே உள் நுழைந்த ராகவனும் காயத்ரியும் கதவை தாழிட்டனர்.

"ஆதி நீ சின்னப் பிள்ளையில்லை. இன்றைக்கு உன்னோட கல்யாணம். நீயே இப்படி சந்தோசமில்லாமல் இருந்தா எங்களால எப்படிடா நிம்மதியா இருக்க முடியும். நீ எதையோ தப்பா விளங்கிட்டிருக்க நயனதாரா ரொம்ப நல்ல பொண்ணுப்பா அதுமட்டுமில்லை அவங்க குடும்பமும் நல்லமாதிரி"

"அப்பா ப்ளீஸ், இந்த அம்மா அவங்க கதைச்சதெல்லாம் போதாதென்று இப்போ உங்களையும் பஞ்சாயத்துக்கு கூட்டிட்டு வந்துட்டாங்களா?" அவன் கடுகடுக்க காயத்ரி சத்தமின்றி கண்ணீர் வடித்தார். மனைவியை ஆறுதல் படுத்திய ராகவன் ஆதியிடம் திரும்பி

"உங்கம்மா உனக்கு தப்பானதை கொடுப்பாளாப்பா இவ்வளவுதானா நீ அவளை அவளோட பாசத்தை விளங்கியிருக்கிற. உனக்கு ஒன்று என்றால் முதல்ல துடிக்கப் போறது அவதான். உன்னோட கல்யாணம் எங்க எல்லோரோட எத்தனை நாள் கனவு என்று உனக்கு தெரியுமா? அது பலிக்கப் போற நேரத்துல கலச்சிடுவாயோ என்று பயமாயிருக்குப்பா. அதனாலதான் அம்மா கொஞ்சம் ஸ்ட்டிரிக்கா நடந்துக்கிட்டா. இன்னும் கொஞ்ச நேரத்துல பொண்ணு வீட்டுலயிருந்து வந்துடுவாங்க. தேவையில்லாம மனசைப் போட்டு குழப்பிக்காம சந்தோசமா ரெடியாகி மணவறைக்கு போப்பா" ராகவன் அவனுக்கு பலவாறாக எடுத்துக் கூறியபோதும் அவன் முகத்தில் எதுவித மகிழ்ச்சியுமின்றி கல்லாய் நின்றிருந்தான்

"மருந்து கசக்கும் வேணாம் என்று சொல்லுற குழந்தைக்கு கொஞ்சம் கண்டிச்சு மருந்து கொடுக்குறதில்லையா அது போலதான் இப்போ நயனியோட குணம் தெரியாம வேண்டாம் என்று சொல்லுற உனக்கு இப்படி அதட்டி மிரட்டி சொன்னாலாவது விளங்க மாட்டாயா என்றிருக்கு. எங்க உன்னோட வரட்டு பிடிவாதத்தால அந்த நல்ல பொண்ணை மிஸ் பண்ணிடுவாயோ என்ற பயத்துலதான் உன்னை இப்படியெல்லாம் மிரட்ட வேண்டியதாப் போச்சு. ஆதி இந்த அம்மாவை நீ புரிஞ்சக்கவே இல்லை. சரி பரவாயில்லை நீ இன்றைக்கு என்னை தப்பா விளங்கினாலும் ஒருநாள் நயனாவைப் பற்றி் நீ் முழுசா புரிஞ்சுக்கும் போது உங்கம்மாவையும் சேர்த்து புரிஞ்சுக்குவ அது போதும்ப்பா எனக்கு." உணர்ச்சி பொங்க கூறிய காயத்ரி சட்டென்று முகத்தை கடினமாக மாற்றியவர்

"ஆனால் இப்போ எல்லாமே நான் திட்டமிட்ட படிதான் நடக்கனும் முதல்ல இந்த முகத்தை கொஞ்சம் சிரிச்சாப் போல வை. அந்த சிரிப்பு உன் முகத்துல இருந்து மாறவே கூடாது அம்மா சொன்ன....தெல்லாம் ஞாபகமிருக்கில்லையா?" சொன்னதெல்லாம் என்பதில் சற்று அழுத்தம் கொடுத்தவர் தொடர்ந்து

"இங்கப்பாருப்பா யாரும் நம்மளைப் பார்த்து ஒரு தப்பான வார்த்தையும் கேட்டுடக் கூடாது அதுக்கேற்றாப் போல நடந்தங்கோ என்ன விளங்கிட்டா? சிரி அம்மா சொல்லுறேனில்லை சிரி" கட்டளையாக முடித்தவர் கடைசியில் ஆதியின் முகத்தில் வலுக்கட்டாயமாக சிரிப்பை வரவழைத்திருந்தார்.

"நைஸ் போய், இந்தக் கல்யாணம் முடியிரவரை சிரிச்ச முகமா இப்படியே இரு விளங்கிட்டாப்பா? சங்கர், ஆதி கூடவே இருப்பா அதுசரி் கேட்கனும் என்று நினைச்சேன் தினகரை இன்னும் காணல்ல என்னடா வராமாட்டானா?" ஆதியிடம் தொடங்கி சங்கரிடம் கேள்வியை தொடுக்க

"இல்லைம்மா வெளிகிட்டான் முகூர்த்தத்துக்குள்ள வந்துடுவான்" -சங்கர்

"அப்படியாப்பா சரி வரல்லை என்றால்தான் இருக்கு அவனுக்கு" பேசிக் கொண்டிருக்கும் போதே மாப்பிள்ளையை அழைத்துச் செல்ல பெண் வீட்டிலிருந்து வர அவர்களை உள் அழைத்தார் ராகவன். நிரஞ்சனும் மணமகனைப் போல உடை அணிந்து வந்தவன் ஆதித்யனை கிழக்கு நோக்கி நிற்க வைத்து அவனுக்கு தலைபாகையையும் பூமாலையையும் அணிவிக்க தன் பெற்றோரின் கால்களில் விழுந்து வணங்கிய ஆதித்யனை ஆசிர்வதித்து திலகமிட்டனர் ராகவன் தம்பதியர். பின் மகனை அணைத்துக் கொண்ட ராகவன்

"என்றைக்குமே நீ சந்தோசமா இருக்கனும் அது மட்டும் எங்களுக்குப் போதும்ப்பா. எதைப் பற்றியும் யோசிச்சு மனதை குழப்பிக்காதே எல்லாம் நல்லதாகவே முடியும்" அவர் கூறியதும் காயத்ரியும் கண்கலங்க தன் மகனை மறுபக்கம் அணைத்துக் கொண்டார். நிரஞ்சன் ஆதித்யனின் இடப்பக்கமாக நின்றவன் அவன் கரங்களை பற்றி மண்டபத்தை நோக்கிப் போனான்.

"ஏய் ஷனா அம்பட்டு சந்தோசமா வந்து சொன்னே அந்த நயனிப் பொண்ணு கல்யாணத்தை நிறுத்திடுவா என்று ஆனால் அங்கே உன் அத்தான் மண்டபத்துக்கு போக வெளிகிட்டான் நீ இங்க நின்று என்ன பண்ணிட்டிருக்க. என்னடி நடக்குது எனக்கு படபடக்குதுடி இந்த கல்யாணத்தை அவ நிறுத்துவாளா? நாம நினைச்ச மாதிரி உன் கழுத்துல ஆதிப் பய தாலி கட்டுவானா கடவுளே நான் இம்பட்டுக் கேக்குறேன் நீ கல்லு மாதிரி நிக்குற. ஏய் ஏதாவது சொல்லேன்டி பிசாசே"

"யாரைப் பார்த்து பிசாசு என்றாய் கொன்னுடுவேன். நானே அந்த நயனி இன்னும் கல்யாணத்தை நிறுத்தாம இருக்காளே என்று டென்ஸனா இருக்கேன் இதுல நீ வேற நொய்யி நொய்யின்று ஒரு பொண்ணு சொல்லக்கூடாத விசயத்தை சொல்லிட்டு வந்திருக்கேன் அப்படி பார்த்தா இந்நேரத்துக்கு அவ கல்யாணத்தை நிறுத்தியிருக்கனும் ஆனால் இப்பவரை அவ அப்படி எதுவும் செய்யல்ல என்னாச்சு என்று தெரியல்லையே. ஒரே டென்ஸனா இருக்கு திரும்ப அவட ரூமுக்கு போகலாம் என்று பார்த்தா அவ ப்ரண்டு இருக்காளே அந்த தாரணி உள்ளே விடமாட்டேங்குறா. அதையும் தாண்டி நான் நயனிய பார்க்கனும் என்று சொன்னதுக்கு அவளைப் பார்க்க முடியாது அப்படி என்ன விஷயம் எனகிட்ட சொல்லுங்கோ நான் சொல்லிக்கிறேன் என்கிறாள் அப்படியே கழுத்தை நசுக்கிடலாம் போல இருந்துச்சு அடக்கிக்கிட்டேன் அதுக்குள்ள அந்த தனம் கிழவி அங்க வந்துடுச்சு அது வேற நீ இங்க என்ன பண்ணுற உனக்கு பொண்ணு ரூமுகிட்ட என்ன வேலை அதுஇதென்று ஆயிரம் கேள்வி கேட்டு துளைச்சி எடுத்துடுச்சு எப்படியோ சமாளிச்சு தப்பிச்சோம் புழைச்சோம் என்று ஓடி வந்துட்டேன். அந்த நயனியை இன்னொரு வாட்டி சந்திக்க சந்தர்ப்பத்தை பார்த்துட்டு தான் இந்தப் பக்கமா நிக்குறேன். அங்கப்பாரு அந்தக் கிழவி கூட இன்னும் அங்கதான் சுத்திட்டிருக்கு. எனக்கென்னமோ நான் நயனியைப் பார்க்காம இருக்கத்தான் அந்த தனம் கிழவி அங்க சுத்திட்டிருக்காளோ என்றிருக்கு. அந்த காயத்ரி இருக்காளே இதெல்லாமே அவளோட வேலைதான் நிச்சயமா அவ அம்மாகாரிகிட்ட எல்லாத்தையும் சொல்லிருப்பா அதான் அந்தக் கிழவி அங்கேயே காவல் இருக்கா. இது எல்லாத்தையும் தாண்டி அந்த நயனியை எப்படி பார்க்குறது என்று தலையை உடைச்சிட்டிருக்கேன் இதுல
நீ வேற அத்தான் மண்டபத்துக்கு போகப் போறாங்க என்று சொல்லுற இதுக்கு மேல சுணங்க ஏலாது கெதியா ஏதாவது செய்யனுமே என்ன பண்ணுறது." அவள் சிந்தித்துக் கொண்டிருக்கும் போதே நிதுர்ஷனுடன் அவ்விடம் வந்த யமுனா ஷனாவுடன் பேச வாய் திறந்தவர் ராஜேஸ்வரியை பார்த்ததும்

"அட பெரியம்மா உங்களுக்கும் இதே கலர் தானா. பாருங்க என்னோடதும் அதே கலர்தான். அட ஷனாவும் அதே கலர் ஆ... அப்போ எல்லோருக்கும் ஒரே கலர் தானா?"

"ஓம் யமுனா இது தனமண்ணியோட ஐடியா இரண்டு பக்க முக்கிய உறவுக்காரங்களும் ஒரே மாதிரி உடுத்துக்கனும் என்று. அதனால காயத்ரி கிட்ட சொல்லி ஆம்பளைங்களுக்கு ஒரு கலர்லேயும் பொம்பளைக்களுக்கு ஒரு கலர்லேயும் கொழும்பிலேயே எடுக்க சொல்லிப் போட்டா என் மருமகளும் நல்லாத்தான் பார்த்து எடுத்திருக்கா இல்லையா?

"அப்படியா? ஓம் ஓம் உங்க மருமக செலக்ஸன் சூப்பரா இருக்கு எங்கிட்ட வேற இந்த கலருல புடவையே இல்லை நல்லவேளை இல்லாத கலரா எடுத்திருக்கா"

"இப்போ இது ரொம்ப முக்கியம்" டென்ஸனாக இருந்த ஷனா கடுகடுக்க அப்போதுதான் தான் வந்த விசயம் ஞாபகம் வந்தவராய்

"அட ஷனா, நான் உன்னை எங்கெல்லாம் தேடிட்டு இருக்கேன் தெரியுமா? அங்கே எல்லோரும் மண்டபத்துக்கு போறதுக்கு தயாராகிட்டாங்க. நயனியும் தயாராகிட்டா தனலட்சுமி அம்மா தலைமையில போட்டோ சூட் போயிக்கிட்டிருக்கு எல்லோரும் கடும் சந்தோசமா இருக்காங்க எனக்கு பார்க்க பார்க்க வயிறெரியுது. அதுமட்டுமில்லை மாப்பிள்ளை வேற மண்டபத்துக்கு வாரதுக்கு ரெடியாகிட்டாங்களாம் அதைச் சொல்லத்தான் ரொம்ப நேரமா உன்னைத் தேடிக்கிட்டிருக்கேன். நயனிம்மாவே வந்து கல்யாணத்தை நிறுத்துவா என்று இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்ன துள்ளி குதிச்ச எங்கம்மா என் மருமகள் சந்தோசமா போட்டோ எடுத்துட்டிருக்கா. இப்போ என்ன பண்ணுறது?" பதட்டமாக கேட்க

"என்ன ஆன்ட்டி சொல்லுறீங்க போட்டோ எடுக்கிறாளா? நான் போட்ட போடுல இந்நேரம் அவ அலறியடிச்சுக்கு வந்து கல்யாணத்தை நிறுத்தி இருக்கோனும். ஆனால் எதுவும் செய்யாம ஏன் இருக்கா என்று தெரியல்லையே. அவ ஏன் இப்படி செய்யுறா என்ன என்று எனக்கும் விளங்கல்லை ஆன்ட்டி" ஷனா மேலும் குழம்ப

"நீங்க என்ன சொல்லுறீங்க அப்போ என் நயனி எனக்கு கிடைக்க மாட்டாளா? ஐயோ அம்மா எனக்கு என் ஸ்வீட் டார்லிங் வேணும்மா என் நயனியை ஆதித்யன் கட்டிக்க கூடாது." நிதுர்ஷன் டென்ஸனாக

"ஐயோ நிதுர்ஷன் நிச்சயமா என் அத்தான் உங்க நயனியை கட்டிக்க மாட்டான் நான்தான் அவன் பொண்டாட்டி நானே என் அத்தானை கட்டிக்குறேன் நீங்க சந்தோசமா உங்க நயனியை கட்டிக்கோங்க. அதுக்காக தானே இந்த கல்யாணத்தை நிறுத்த இவ்வளவு பாடுபடுகிறேன். ப்ளீஸ் விளங்குங்கோ." சிறுது நேரம் யாருடனும் பேசாமல் குட்டி போட்ட பூனை போல அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருந்தாள் அவள் முகம் முழுக்க சிந்தனையும் குழப்பமும் அப்பிக் கிடந்தது. நடந்து கொண்டிருந்தவள் சட்டென்று நடப்பதை நிறுத்தி விட்டு மற்றையவர்கள் புறம் திரும்பியவள்

"எனக்கென்னமோ நயனி இப்போ அமைதியா இருந்துட்டு மணமேடைக்கு வந்து எல்லோர் முன்னாடியும் நிறுத்தினால் யாராலும் எதுவும் பண்ண முடியாதென்று நினைக்குறா போல. அப்படித்தான் இருக்கும் ஏன்னா நான் கதைச்சது அந்த மாதிரி. நான் சொன்ன விசயத்தைக் கேட்ட பிறகும் ஆதியைக் கட்டிக்க அவளுக்கென்ன பைத்தியமா? ஸோ கட்டாயமா கல்யாணத்தை நிறுத்துவா." கூறியவள் மற்றவர்களுடன் சேர்த்து தன்னையும் சமாதானப்படுத்திக் கொண்டாள்.

"ஷனாக் கண்ணு அங்கப்பாரு ஆதி மண்டபத்துக்கு வந்துட்டான் நமக்கு நேரமில்லை அடுத்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம் இப்போ வாங்க அங்க போகலாம்" ஒருவாறு அனைவரும் அவ்விடத்திலிருந்து நகர்ந்தனர்.

ண்டபத்தில் கூடாரம் போல் பூக்களால் அழகான பந்தலமைத்து அலங்கரிக்கப்பட்ட மணவறை
கிழக்கு நோக்கி இருக்க குருக்கள் தன் முன்பாக புண்ணியதானத்திற்கு உரியவற்றை வைத்து அதன் பக்கத்தில் மஞ்சள் பிள்ளையாரும், ஒரு கிண்ணத்தில் பஞ்சகவ்வியமும் வைத்திருந்தார். சுற்றி நான்கு விளக்குகள் நான்கு நிறைகுடங்கள் வைத்து அரசாணி மரமும் அலங்கரிக்கப்பட்டிருக்க சந்திர கும்பத்திற்கு முன்பாக முளைப்பாலிகைச் சட்டிகளும், நடுவில் அம்மியும், அதன் பின் சிவன், பார்வதி கும்பங்களும் மறுபக்கம் நவக்கிரக கும்பங்களும் முன்பாக அரசாணிப்பானையுமாக நான்கு கும்பங்களும், மஞ்சள் நீர் பாத்திரமும் அக்கினி கிரிகைக்குரிய பாத்திரமுமாக மணமேடை அலங்கரிக்கப்பட்டிருந்தது.

உற்றார் உறவினர் புடை சூழ மாப்பிள்ளையோடு ஒரு பெரிய தட்டில் பச்சையரிசி பரப்பி அதன் மேல் கூறைச்சேலை, சட்டை, வெற்றிலை, முழுப்பாக்கு, கஸ்தூரி மஞ்சள், குங்குமம், தேசிக்காய், வாழைப்பழம், மாலை, அவற்றுடன் சீப்பு, கண்ணாடி, ப்வுடர், வாசனைத்திரவியம், சோப் போன்ற அலங்கார சாதனங்களையும் இவற்றுடன் தாலிக்கொடியோடு மெட்டி ஒரு சோடி ஆகியன வைத்த கூறைத்தட்டை மணப்பெண் தோழியான அகிலாவும் சீவி மஞ்சள் பூசிய முக்கண்ணுள்ள மூன்று தேங்காய்கள் வைத்த தட்டத்தை அனுபமாவும் அரியதரம், அச்சுப்பலகாரம், பயற்ற உருண்டை, வெள்ரொட்டி போன்ற பலகாரங்கள் கொண்ட தட்டங்களை அஸ்வினி, காவியா, சஞ்சனா போன்றோரும் எல்லாமாக ஐந்து தட்டங்களை ஏந்திய வண்ணம் மண்டபத்துக்கு வர மீண்டும் மேளதாளங்கள் முழங்க வந்தவர்களை பெண்வீட்டார் வரவேற்றனர். மணத்தோழனான நிரஞ்சன் மாப்பிள்ளையின் காலைக் கழுவிவிட, அதற்கு உபகாரமாக ஆதித்யன் அவனுக்கு மோதிரம் ஒன்றை அணிவித்தான். வாசுதேவன் ஆதித்யனுக்கு மாலை சூடி வரவேற்க ரஞ்சனி பன்னீர் தெளித்து தங்க மாலை ஒன்றை அவன் கழுத்தில் அணிவித்தார் அமுதாவும் சித்ராவும் ஆரத்தி எடுத்தனர். பின் நிரஞ்சன் ஆதியை மணவறைக்கு அழைத்துச் சென்றதும் சபையோருக்கு இருவரும் வணக்கம் கூற பெண்களும் தாங்கள் கொண்டு வந்த பொருட்களை மேடையில் பரப்பி வைத்தனர். மணவறையில் நெல் பரவி அதன் மேல் கம்பளம் விரித்து மணமகனை இருத்துவதுதான் மரபு. அதன்படியே மணவறையில் ஆதித்யனை அமரவைத்து அவனுக்கு இடப்பக்கத்தில் நிரஞ்சன் அமர கிரியை செய்யும் குருக்கள் வலது பக்கத்தில் வடக்கு நோக்கியிருந்து மாப்பிள்ளை வந்தவுடன் தொடங்கும் திருமணச் சடங்குகளை ஆரம்பித்தார்.
இந்தச் சடங்கு முடியும் வரை ஒரு குற்றமும் வராமலிருக்கவும் மனம், வாக்கு, காயங்களினால் வரத்தக்க பாவங்களினின்று காக்கவும் திருநீறு
கொடுத்து விநாயகர் பூஜை, பஞ்சகௌவிய பூஜை ஆகியவற்றை மந்திர உச்சாடனத்துடன் செய்து பவித்திரத்தை ஆதித்யனின் வலதுகை மோதிர விரலில் அணிவித்தவர் பஞ்சகௌவியத்தை அவ்விடத்தில் சுற்றித் தெளித்து அதனைப் பருகச் சொல்லி ஆதித்யனிடம் கொடுத்தார். அதேபோல் நிரஞ்சனுக்கும் செய்வித்தார்.
அத்துடன் தொடங்கிய கருமம் நிறைவுபெறும் வரை எந்தவித தீட்டுக்களோ இடையூறுகளோ துக்கங்களோ மணமக்களைச் சாராதிருக்க வேண்டிய பாதுகாப்புக்கும் விவாகச் சடங்குகள் இனிதே நடைபெறவும் ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் காப்பு நூல் முதலியவற்றை வைத்து பூசித்ததும் அத்தாம்பாளத் தட்டை ஆதித்யனின் கைகளில் கொடுத்தவர் தேங்காய் மீது அவனுடைய வலது கையை வைக்கச் சொல்லி வலது மணிக்கட்டில் காப்புக் கட்டிவிட மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைத்தார். ஆதித்யனும் முகத்தில் போலிச் சிரிப்புடன் ஓர் இயந்திரத் தன்மையுடனேஅனைத்து சடங்குகளையும் செய்து முடித்தான்.

பின்னர் குருக்கள் சிவன், பார்வதி பூசை செய்த பின்னர் அக்கினி மூட்டப்பட்டு அதற்குரிய பூசை வழிபாடுகள் நடைபெற தோஷங்கள் நீக்கும் பொருட்டும் இத் திருமணத்தின் போது நல்லருள் புரியவேண்டுமென நவக்கிரக தேவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்யத் தொடங்கினார். அதன்பின் அரசாணி மரத்திற்கும் அதன் நாலு பக்கங்களிலும் உள்ள கும்பங்களிற்கும் பூஜை செய்தனர். பூஜை முடிந்ததும் புரோகிதர் பெண்ணை அழைக்க அகிலாவுடன் அனுபமா மற்றும் அஸ்வினியும் மணப்பெண்ணின் அறையை நோக்கிச் சென்றனர்.

"ஐயோ பொண்ணைக் கூப்பிடுறாங்களே இப்போ என்ன செய்யுறது ஷனா" ராஜேஸ்வரியும் யமுனாவும் பதட்டப்பட

"நான்தான் சொன்னேனில்லை நயனி மேடைக்கு வந்ததும் கல்யாணத்தை நிறுத்துவா என்று. ஸோ டோன்ட் வொரி முதல்ல பொண்ணு மேடைக்கு வரட்டும் என்ன நடக்குதுன்னு பார்த்துக்கலாம்." அவர்களை சமாதானப்படுத்தியவள் நயனியின் வருகைக்காகவும் அவளின் வார்த்தைக்காகவும் காத்திருந்தாள்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇👇

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 14


அழகாக பட்டுடுத்தி தேவதை போல் இருந்த நயனதாராவின் வதனத்தினை மறைக்க மெல்லிய திரையினை அகிலா அவளுக்கு அணிவித்தாள். சின்னச் செண்டுகள் கைகளில் மலர்க் கும்பம் ஏந்தி முன் செல்ல அனுபமா காமாட்சி விளக்கை தாங்கிவர அகிலாவும் அஸ்வினியும் மணப்பெண்ணின் இருபுறமும் அவள் தோள் தொட்டு வர தோழிகளும் அவளின் பெற்றோரும் சகோதரிகளும் மற்றும் உறவினரும் புடைசூழ மணமேடைக்கு மெல்ல நடந்து வந்தாள் பொற்பாவை. சபையோருக்கு இருகரம் கூப்பி வணக்கம் கூறியவள் தன் மணவாளனின் வலப்பக்கத்தில் அமர மாப்பிள்ளைக்கு செய்யப்பட்ட அத்தனை பூஜைகளும் சடங்கு சம்பிரதாயங்களும் அவளுக்கும் செய்யப்பட்டது. குருக்கள் பவித்திரத்தை அவள் இடது கைமோதிர விரலில் அணிவித்து ரட்சாபந்தனத்தினை (காப்புக்கயிறு) இடக்கை மணிக்கட்டில் கட்டிவிட பெண் வீட்டார் ஒருவர் தேங்காய் உடைத்தார். பின்னர் மணமக்கள் இருவரின் பெற்றோர்களையும் அழைத்த குருக்கள் அவரவர் பெற்றோரை அவர்களுக்கு பக்கத்தில் கிழக்கு நோக்கி அமர சொல்லி அவர்களுக்கும் பவித்திரம், விபூதி கொடுத்து சங்கல்பம் செய்வித்து இரு வழியிலும் பிதுர்தோஷம் நீங்க இரண்டு நாந்தி தானம் கொடுத்து பிதிரரின் ஆசியைப் பெறச்செய்வித்தவர் சபையோரை நோக்கி திருமணத்தைப் பற்றி சில விசயங்களை பேச ஆரம்பித்தார்.

"இங்கே வீட்டிருக்கும் சபையோர் அனைவருக்கும் வணக்கம்
திருநிறைச் செல்வன் ஆதித்தயவர்த்தன் திருநிறைச் செல்வி நயனதாரா இவர்களுடைய கல்யாணத் திருவிழா உங்கள் எல்லோருடைய அன்போடும் ஆசிர்வாதத்தோடும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் தெய்வீக விசயமான நிறைய ஆச்சாரியப் பெருமக்களெல்லாம் இருந்து இந்த கல்யாணத்தை நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் இந்த கல்யாணத்துல இருக்கிற நிறைய சடங்குகளை உறவினர்கள் வந்து அவங்கவங்க பங்கினை பாலிகை போடுறதுல இருந்து தேங்காயுடைக்குறதுல இருந்து போட்டோ எடுக்குறது எல்லாமே இணைந்து நடத்துறாங் அதுமட்டும் போதாதா? இந்த ஊருக்கே பத்திரிகை வச்சு எல்லோரையும் கூப்பிடனுமா என்றால் கட்டாயம் கூப்பிடனும் அதுதான் முக்கியம்.
ஊர் கூடி செய்யுறது முக்கியமா இரண்டு விசயத்துக்குதான் ஒன்னு ஊர் கூடி தேரழுக்கிறது மற்றையது ஊர்கூடி கல்யாணம் பண்ணுறது. தேரிழுக்குறதுக்கு ஆட்களோட மனோபலம் வேணும், ஒரு கல்யாணத்துக்கு எல்லோருடைய மனப்பூர்வமான ஆசிகள் வேணும். அதுக்காகத்தான் எவ்வளவு செல்வ நிலையானாலும் சாதாரண நிலையானாலும் கூட ஒரு கல்யாணமென்று வந்தால் எல்லோரையும் அழைத்து பங்கு பெறச் செய்து ஆசிகளையும் பெறச் செய்வதுதான் ஒரு முக்கியமான காரியம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையில உயர்ந்த நிலை கிடைப்பது இந்த கல்யாணத்துலதான். ஐயர் கீழே இருக்க தம்பதிகள் மேலே உட்கார்ந்திருப்பாங்க ஏனென்றால் அந்த தம்பதிகளை சிவன் பார்வதியாக, லட்சுமி நாராயணனாக, வாணி கிரெண்டிரப்பராக எண்ணித்தான் இந்த கல்யாணத்தை நடத்துறோம். ஏன்னா அந்த நிலையில இருக்கும் போதுதான் நாம் செய்த இந்த பூஜைகளெல்லாம் அவர்களை போய்ச் சேரும் அப்படிபட்ட நிலையில் தெய்வங்களா இவர்கள் மட்டும் போதுமா அந்த தெய்வங்களை வாழ்த்த தேவர்களும் வரணுமில்லையா அதுக்காகத்தான் உங்க எல்லோரையும் கூப்பிட்டிருக்காங்க. இங்கே இருக்கிற எல்லோரும் இந்திரன், வருணன், நிறைய குபேரன்கள் இருக்கீங்க. எல்லோரும் இந்த மணமக்களை மனசார ஆசீர்வதிக்க வந்திருக்கீங்க. புது வாழ்வை தொடங்குற இந்த அருமையான தம்பதிகளுக்கு உங்க ஆசிகள்தான் முக்கியம். இந்தக் கல்யாணத்துல நிறைய சடங்குகள் விநாயகர் பூஜையில் ஆரம்பித்து நிறைவா ஆரத்தி எடுக்குற வரைக்கும் ஒன்றன் பின் ஒன்றாக நடக்குது இப்போ அடுத்த முக்கியமான ஒரு சடங்குதான் கன்னிகாதானம் இப்போ அது நடைபெறப் போற முக்கியமான தருணம். மணமகளை அவளின் பெற்றோர் மணமகனிடம் தாரைவார்த்துக் கொடுப்பதுதான் கன்னிகாதானம். எந்த ஒரு தகப்பனுக்கும் எதை தானம் பண்ணும் போதும் அவனோட மனசு கலங்காது காசு, நகை நட்டு, துணி இது போல எத்தனையோ எந்த தானம் கொடுக்கும் போதும் முழுச் சந்தோசத்தோட கொடுப்பான். ஆனால் தான் பெற்று பாசத்தோடு வளர்த்த பெண்மகளை கன்னிகாதானம் கொடுக்கும் போது மட்டும்தான் நிறைய சந்தோசத்தோடும் கொஞ்சம் கவலையாகவும் கொடுப்பான். ஒரு அருமையான மருமகன் நம்ம தனசேகர் ஐயா தனலட்சுமி அம்மா அவங்களோட ஒரே பேரனும் ராகவன் காயத்ரி தம்பதியரோட ஒரே புத்திரருமான ஆதித்யவர்த்தன், வாசுதேவன் தம்பதியரின் அன்புமகளான நயனதாரா எனும் கன்னிகையை கன்னிகாதானம் பெற இருக்கிறார்." என்று கூறிய குருக்கள் கன்னிகாதானக் கிரிகைகளை ஆரம்பித்தார்.

"என்னடி இவ கல்யாணத்தை நிறுத்துவா என்று பார்த்தால் சடங்கு சம்பிராதாயங்களைச் செஞ்சிட்டிருக்கா?"

"அதானே என்ன ஷனா எனக்கென்னமோ பயமாயிருக்கு இந்த கல்யாணம் நடக்கும் போல இருக்கே"

"கொஞ்சம் வெயிட் பண்ணலாம் ஆன்ட்டி. தாலி கட்ட இன்னும் நேரமிருக்கில்ல கட்டாயம் நயனி இந்தக் கல்யாணத்தை நிறுத்துவா எனக்கு நம்பிக்கையிருக்கு."

"இங்கப்பாரு இப்படியே நம்பிகிட்டிரு கடைசியில உன்ட நிலமை இலவு காத்த கிளி போல ஆகப் போகுது. பாவம் உன்ட கதையை நம்பிக்கிட்டிருக்குற இந்த தம்பிட நிலமையும் அதுதான்"

"ஏய் பாட்டி இப்படி லூசுத் தனமா கதைக்குறதை முதல்ல நிப்பாட்டு. என்ன நடக்குதென்று தான் பார்ப்போமே"

"உன்னை நம்பலாமா? இல்லை உன்ட பாட்டி சொல்லுற மாதிரி நம்பி ஏமாறப் போறோமா"

"அப்படி மட்டும் நடந்தால் உங்க நயனி இந்த ஷனாவை வேற மாதிரி பார்ப்பா. அவளை நிம்மதியா வாழ விட்டிருவேனா?"

"ஷனா உங்களைத் தான் மல போல நம்பிட்டிருக்கேன் ஏமாத்திடாதீங்க" நிதுர்ஷனும் தன் பங்குக்கு கூற

"சரி சரி இப்போ அங்க நடக்குறதை கவனிங்க எல்லோரும் நம்மளத்தான் பார்க்குறாங்க" அப்போதைக்கு அனைவரையும் அமைதியாக்கினார் ராஜேஸ்வரி.

வாசுதேவனும் ராகவனும் ஒருவருக்கொருவர் திலகமிட்டு பன்னீர் தெளித்து மரியாதை செய்தனர் அதேபோல் அவர்களின் பத்தினிகளும் விபூதி,குங்குமமிட்டு பூ வைத்து பன்னீர் தெளித்து ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டனர். பின் நயனியின் வலக்கரத்தில் வெற்றிலை,
பாக்கு, பழம், எலுமிச்சம்பழம், தங்கக்காசு ஒன்றை வைத்து கையில் கொடுத்து வாசுதேவன் தன் இடது கை கீழாகவும் வலது கை மேலாகவும் வருமாறு சேர்த்துப் பிடித்துக் கொண்டதும் குருக்கள் கன்னிகாதானத்துக்குரிய வாசகங்களை ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க வாசுதேவனும் அவ்வாறே கூறத் தொடங்கினார்.

"பார்வதி பரமேஸ்வர் சாட்சியாகவும் சூரிய சந்திரர் சாட்சியாகவும் முப்பத்திமுக்கோடி தேவர்கள் சாட்சியாகவும் அக்னி சாட்சியாகவும் பெரியோர்கள் சாட்சியாகவும் சபையோர்கள் சாட்சியாகவும் நல்லா வாழ்வதற்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பயன்களையும் பெற வேண்டி மணவறையிலே வீற்றிருக்கின்ற அழகோடும் அன்போடும் கூடிய எனது மகள் நயனதாரா என்கிற கன்னிகையை...." குருக்கள் கூறியபடி சொல்லிக் கொண்டே வந்த வாசுதேவன் தன் மகளின் பெயரை உச்சரித்த நிமிடம் அவர் கண்கள் கலங்க குரல் கம்ம மேலே எதுவும் கூற முடியாமல் சில கணங்கள் தடுமாற ரஞ்சனி தன் கணவனின் தோள்களில் கை வைத்ததும் தான் தாமதம் வாசுதேவன் அழ அவரைப் பார்த்து குடும்பத்தில் உள்ளவர்களின் கண்களும் கலங்க நயனியும் அழுதவாறே தன் தந்தையின் கண்களைத் துடைத்து விட்டாள். பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனோ
'பா என்ன ஒரு ஸீன் தாங்க முடியல்லை' என்று பற்களை கடிக்க அவனை கண்களால் அடக்கினார் காயத்ரி. மீண்டும் குருக்கள் ஆரம்பிக்க தன்னை சுதாகரித்துக் கொண்டு மேலே கூறத் தொடங்கினார் வாசுதேவன்.

"ஆதித்யவர்த்தன் என்கின்ற வரனுக்கு கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம் செய்து கொடுக்க சம்மதிக்கிறேன். அத்தோடு எல்லாவித செல்வமும் பெற்று எனது மகளைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்."
வாசுதேவன் கூறி முடித்ததும் 'எல்லாச் செல்வத்துக்காகத்தானே இந்தக் கல்யாணத்தையே பண்ணிக்கிறா உங்க அருமை மக.'ஆதி தனக்குள் கடுகடுக்க ஆதியின் புறம் திரும்பிய குருக்கள்

"நான் சொல்லுறதை அப்படியே என்கூட சேர்ந்து சொல்லுங்கோ"

"பார்வதி பரமேஸ்வர் சாட்சியாகவும் சூரிய சந்திரர் சாட்சியாகவும் முப்பத்திமுக்கோடி தேவர்கள் சாட்சியாகவும் அக்னி சாட்சியாகவும் பெரியோர்கள் சாட்சியாகவும் சபையோர்கள் சாட்சியாகவும் நயனதாரா என்கின்ற கன்னிகையை...." கூறிக் கொண்டிருந்தவன் 'எனது மனைவியாக' என்ற அடுத்த வார்த்தையில் கூறுவதை நிறுத்த

"மேலே சொல்லுங்கோ மாப்பிள்ளை." குருக்கள் ஆதியிடம் கூற அப்போதும் கல்லாய் அமர்ந்திருந்தான் ஆதித்யன். அனைவரும் அவனை பதட்டமாக பார்க்க ஷனாவோ வெற்றிக் களிப்போடு தன் பாட்டியை நோக்க நயனதாராவோ சந்தேகக் கண் கொண்டு தன் மாமியாரை நோக்கினாள். அவள் பார்வையின் கேள்வியை புரிந்த காயத்ரியோ அவன் தோளில் ஒரு தட்டு தட்ட சட்டென்று திரும்பி அவரைப் பார்த்தான் மைந்தன். அவரோ கண்களால் மேலே சொல்லு என ஜாடை காட்ட தன்னை சுதாகரித்துக் கொண்டவன் மனமே இல்லாமல் தன் தாய்க்காக தன் மனதறிந்தே பொய்யாக குருக்களின் வார்த்தைகளைத் தொடர்ந்தான்.

"....எனது துணைவியாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறேன்."

"சம்மதம்தானே" குருக்கள் கேட்க காயத்ரியின் கை அழுத்தத்தில் சபையோரிக்கு கேட்குமளவு சத்தமாக சம்மதம் என்று மூன்று முறை கூறினான். அவன் சம்மதம் கிடைத்ததும் ரஞ்சனி நீர் விட்டு தாரை வார்க்க வாசுதேவனும் சேர்ந்து ஆதித்யவர்த்தனின் கரங்களில் பெண்ணவளை ஒப்படைத்தனர். அப்போது மங்கள வாத்தியம் முழங்க, பெண்வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, ஆதித்யன் பெண்ணை தானம் எடுத்தான். பின் மணமக்கள் இருவரும் சேர்ந்து வெற்றிலையை ராகவன் தம்பதியரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து மணமகன் கொண்டுவந்த மஞ்சள் குங்குமம் தடவிய தாலியோடு கூடிய கூறைத்தட்டத்தை விதிப்படி பூசித்து, ஆசீர்வதித்து அக்கினியாற் சுத்தி செய்தபின் அச்சபையிலுள்ள பெரியோர்களிடம் காட்டி நல்லாசி பெறப்பட்டது. பின் ஆதித்யன் நயனியிடம் கூறையைக் கொடுக்க அவளும் அகிலாவுடன் கூறை உடுத்தி வர அறையை நோக்கிச் சென்றனர்.

அவர்கள் அறையில் நுழைந்தது தான் தாமதம் கூடவே விக்‌ஷனாவும் உள் நுழைந்தாள். கேள்வியாய் நோக்கிய அகிலாவிடம்

"இல்லை மதனி, நயனிகிட்ட இதுவரை நான் கதைக்கவே இல்லை. விஸ் கூட பண்ணல்லை அதான் அவகூட கொஞ்சம் கதைக்கலாம் என்று வந்தன். நான் இருக்குறதுல ஏதாவது தப்பா மதனி"

"அச்சச்சோ அப்படியெல்லாம் ஒன்னுமில்லை ஷனா நீ தாராளமா கதைக்கலாம் வா வா நாமளே நயனியை ரெடி பண்ணுவோம்." உற்சாகமாய் அழைக்க அதுதான் சந்தர்ப்பமென உள் நுழைந்தது அந்த நச்சுப்பாம்பு அவள் தன்னிடம்தான் பேச வந்திருக்கிறாள் என்பதை அறிந்த போதும் எதுவும் பேசாது நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தாள் நயனி. ஒருவாறாக அலங்காரங்களனைத்தும் முடிந்ததும் திரையிட வந்த அகிலாவிற்கு கணவனிடமிருந்து அழைப்பு வர அவர்களிடம் சொல்லிக் கொண்டு சற்றுத் தள்ளிச் சென்று பேசத் தொடங்கினார். இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் அமையாது என்றுணர்ந்த ஷனா சட்டென்று நயனியின் கைகளைப் பற்றியவள்

"என்ன நயனி மேடைக்கு வந்ததும் கல்யாணத்தை நிறுத்துவ என்று நினைச்சேன் நீ என்னடா என்றால் எல்லா சடங்கையும் பேர்ஃபெக்ட்டா பண்ணிட்டிருக்க நான் அவ்வளவு சொல்லியும் கல்யாணத்தை நிறுத்தாம என் அத்தானை கட்டிக்க போறியா?" அவள் கைகளை விலக்கிவிட்டவள் மார்புக்கு குறுக்காக இரு கைகளையும் கட்டிக் கொண்டு் தன் உயரத்திற்கு நிமிர்ந்தவள்

"ஏன் நிறுத்தனும். கல்யாணம் கட்டிக்கிட்டா என்ன தப்பும்மா?"

"என்ன தப்பா நாங்க ரெண்டு பேரும் உயிருக்குயிரா காதலிக்கிறோம். எங்க காதல் உங்க கண்ணுக்கு விளங்கல்லையா?"

"அப்படி என்றால் உங்க அத்தானே இதை நிறுத்தி இருக்கலாமே எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்ததுதானே. என்னால எங்கப்பம்மாவை கஷ்டப்படுத்த முடியாது அதனால இந்தக் கல்யாணம் நடந்தே தீரும்."

"அதான் எங்க அத்தை அவரை மிரட்டி கல்யாணம் பண்ணிக்க வக்கிறாங்களே. இங்கப்பாரு நயனி நீ என்ன விட வயசுல சின்னவ அழகா வேற இருக்க உனக்கு இது இல்லாட்டியும் இன்னொரு நல்ல வரன் கிடைக்கும். ப்ளீஸ் என் நிலமையை விளங்கிக்கோ. ஏன்னா கல்யாணந்தான் ஆகல்லையே தவிர நாங்க கணவன் மனைவியா வாழ்ந்திருக்கோம். இதைவிட எனக்கு சொல்லத் தெரியல்லை." அவள் கூறியதில் ஒரு கணம் நயனியின் முகம் இருள 'இதுங்களுக்கு இப்படி பச்சையா சொன்னாத்தான் விளங்கும் இப்பப் பாரு என் வழிக்கு எப்படி வாரா என்று' ஷனா தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவள் தடுமாறியது சில கணங்கள்தான் தன்னை மீட்டெடுத்தவள் ஷனாவை நேராக நோக்கி

"இல்லை நீங்க என்ன சொன்னாலும் பரவாயில்லை இந்த கல்யாணம் நடந்தே தீரும் அதை யாராலும் தடுக்க முடியாது. இது உறுதி."

"ஏய் நான் கிளிப் புள்ளைக்கு சொல்லுற மாதிரி அவ்வளவு சொப்ட்டா சொல்லிட்டிருக்கேன் நீ என்னடா என்றால் திரும்பவும் அதே சொல்லுற இங்கப்பார் என் அத்தான் எனக்கு மட்டும்தான் அவரை யாருக்கும் விட்டுத்தர நான் தயாரில்லை. புருஷன் பொண்டாட்டியா வாழ்ந்திருக்கோம் என்கிறேன் அப்பவும் கல்யாணத்தை நிறுத்தாம நடத்த நினைக்குற. இந்த நிமிசமே போய் எல்லார்ட்டையும் இந்த கல்யாணத்துல விருப்பமில்லை என்று சொல்லி இப்பவே எல்லாத்தையும் நிறுத்து." அவள் விசத்தைக் கக்க மெலிதாக சிரித்தவள் அவளை நேர்பார்வை பார்த்தாள்.

"நீங்க கதைச்சதுலேயே உங்க சுயரூபம் விளங்கிட்டும்மா. இதுல எல்லாமே உன்னோட சதி என்றும் எனக்கு நல்லாவே தெரியும் இந்த கல்யாணம் எல்லோரோட ஆசியிலையும் நல்லாவே நடக்கும். உன்னால முடிஞ்சதை செய்." காயத்ரியின் அதே வார்த்தைகள் அவர் பார்த்த மருமகளிடமிருந்தும் வர வெறி கொண்ட வேங்கை ஆனாள்.

"என்ன என் அத்தானோட சாம்ராஜ்யத்தைப் பார்த்து மதி மயங்கிட்டாயா? காசுக்குத்தானே கல்யாணம் கட்டிக்கப் போற நீ, போ போய் கல்யாணம் பண்ணிக்கோ ஆனால் எப்படி நீ சந்தோசமா வாழுற என்று நானும் பார்க்குறேன். விடமாட்டேன்டி உன் நிம்மதி இனி என் கையில. பிறகு இன்னொரு விசயம் உன்னோட என் ஆதி ஒரு கணமும் வாழ மாட்டார் இது உறுதி. நடக்குதா இல்லையா என்று மட்டும் பாரு" சூளுரைத்தவள் அவ்விடத்தை விட்டு வேகமாய் நடந்தாள்.

வளரும்.....

கருத்துத்திரி👇👇👇

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 15

முகூர்த்தப் பட்டினை அழகுற உடுத்தி மெல்லிய திரை கொண்டு முகம்தனை மறைத்து வளையல் கரங்கள் இரண்டும் மலர்மாலையை ஏந்திய வண்ணம் மெல்ல அடிகளை எடுத்து வைத்து வந்த அந்த ஏந்திழையாளை தோழிகள் மலர் தூவி வரவேற்றனர். மண்டபம் முழுதும் அவள் மேலே கண்ணாயிருக்க மேடையேறி வந்த பாவையவளோ தன் மணாளனுக்கு மலர்மாலையை சூட்டியவள் அவன் கால்களில் விழுந்து எழுந்து அவனருகே அமர்ந்து கொண்டாள்.

குறித்த சுபமுகூர்த்தத்தில் ஆதித்யன் எழுந்து நயனியின் வலப்புறம் சென்று வடக்கு நோக்கி நின்று இறைவனைத் தியானித்து சுத்தி செய்த மாங்கல்யத்தில் மந்திரம் சொல்லி சந்தனம் குங்குமம் வைத்து தீபம் காட்டி சம்பாதஹோம் எனும் தாலியில் நெய்விட்டு பூசை செய்து குருக்கள் ஆசிர்வதித்துக் கொடுத்த பதினொரு பவுன் கொண்ட கொடியும், லக்‌ஷ்மியின் திருவுருவம் கொண்ட தாலியும் அதனருகில் இரு தங்க நாணயங்களை சேர்த்துக்கட்டிய மாங்கல்யத்தை முதலில் சபையோருக்குக் காட்டியவன் தன் இரு கரங்களால் பற்றி கெட்டிமேளம் முழங்க, வேதியர் வேதம் ஓத, மாப்பிள்ளை வீட்டார் ஒருவர் தேங்காய் உடைக்க, பெரியோர் அட்சதை மலர்கள் தூவ, அனுபமா பின்னால் தீபம் பிடிக்க அகிலாவும் அமுதாவும் நயனியின் முகத்திரையை விலக்க நயனி தாமரை மொட்டுப் போல் இருகரங்களை குவித்திருக்க பெண்ணவளின் குடும்பத்தார் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க ஆதித்யன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணவளின் சங்குக் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான். அப்போது சொல்லப்படும் மந்திரமான

"மாங்கல்யம் தந்துநாநேநா மம ஜீவனஹேதுநா கண்டே பத்தாமி ஸூபகே ஸஞ்ஜிவசரதசதம்"

'ஓம்! பாக்கியவதியேயான் சீரஞ்சீவியாக இருப்பதற்கு காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு 'ருக்கள் கூறும் மந்திரத்தை மனதில் கொண்டு தாலி முடிச்சில் திருநீறு இட வேண்டும் என்பதுதான் விதி ஆனால் அவனோ அந்த புனித வார்த்தையின் அர்த்தத்தை கூட உணராது சாவி கொடுத்த பொம்மை போல அனைத்தையும் நிறைவேற்றியவன் தன் இடத்தில் வந்து அமர்ந்து கொண்டான். தாலிக் கொடியிலும் நயனியின் உச்சிவகிட்டிலும் குங்குமத்தை திலகமிடும் போதும் அதே இயந்திரத் தன்மைதான். ஆனால் முகத்திலுள்ள புன்னகை மட்டும் மாறவே இல்லை. தாலி கட்டியதும் அதன்பிறகுதான் அவ்வளவு நேரமும் பதறிக்கொண்டிருந்த காயத்ரி அப்பாடா என்று பெருமூச்செறிந்தார் அவர் கண்கள் தானாக கண்ணீரை சொரிந்தது. ராகவனும் தன் மனைவியை தோளோடணைத்து ஆறுதல் படுத்த சங்கரோ எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். அனைவர் முகங்களிலும் சந்தோசம் மட்டும் நிரம்பி இருக்க அதனை பார்த்த யமுனாவின் உள்ளம் தீயிலிட்ட புழுவாய் துடித்தது. அவர் விழிகளோ விக்‌ஷனாவை தேட கடைசியில் மண்டபத்தின் மறுமுனையில் கைகளை பிசைந்து கொண்டிருந்தவளை கண்டு கொண்டது. வேகமாக அவளிடம் சென்று அவளை ஏற இறங்கப் பார்த்தவர்

"என்னம்மா பெரிசா ஏதோ கிழிக்கப் போறேன் என்று சொன்ன இப்போ என்னத்தை கிழிச்ச எல்லாம் முடிஞ்சு போச்சே பாரு என் மகனைப் பாரு அவனுக்கு என்ன பதில் சொல்லுவேன் என்ன சும்மா வாயில வடை சுடுற கேஷா நீ? நானா எதுவாலும் செஞ்சு இந்தக் கல்யாணத்தை நிறுத்தாம சே உன்னைப் போய் நம்பினேன் பாரு." சரமாரியாக விக்‌ஷனாவை திட்ட

"செஞ்சிருக்கலாமே உங்களை யாரு என்னை நம்ப சொன்ன. எதுவும் செய்ய வக்கில்லாமல் தானே எனக்கு பின்னால வால் புடிச்சிட்டு தொங்கினீங்க" ஷனாவும் எகிற

"ஐயோ அம்மா இனி என் நயனி எனக்கு இல்லையே. ஏய் பொண்ணே எனக்கு என் நயனியைக் கட்டி வைக்குறேன் என்று பொய் சொன்னாயா? லூசு" நிதுர்ஷன் தன் பங்குக்கு அவளை மேலும் கடுப்பேற்ற

"யாருடா லூசு நானா? நீயா? நீதான்டா முழு லூசு உனக்கு கல்யாணம் தான் ஒரு கேடு. பைத்தியத்துக்கு கல்யாணம் கட்டி வைக்க வந்துட்டா. இங்கப்பாரு உனக்கு எவளும் பொண்ணு கொடுக்க மாட்டா. உன்னைப் போல இருக்குற ஒரு லூசைத்தான் நீ கட்டிக்க வேணும். போடா இங்க இருந்து" ஷனா தன்னை மறந்து கத்த அவளை அடக்கும் வழி அறியாது திகைத்த ராஜேஸ்வரி அவள் கைகளை பிடித்து தரதரவென இழுத்து கொண்டு அவ்விடம் விட்டு சென்றவர் அவளுக்கு சில விசயங்களைக் கூறி அமைதிப்படுத்தி மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு மணவறைக்கு வந்தார். வந்தவளை வெற்றிப் புன்னகையுடன் எதிர் கொண்டார் காயத்ரி அதனைப் பார்த்து அவள் மேலும் கோபப்பட 'பிறகு பார்த்துக் கொள்ளலாம் இப்போது அமைதியா இரு' என்று அவளை ராஜேஸ்வரி சமாதானப்படுத்தினார்.

இருமனம் கலந்து ஒரு மனமாக இல்வாழ்க்கை ஆரம்பிக்கும் முகமாக
நயனதாரா எழுந்து வடக்கு நோக்கி இறைவனை தியானித்தவள் ஆதித்யனின் கழுத்தில் மாலையை சூட்டினாள் அதேபோல் ஆதியும் அவளை தன் இடப்பக்கத்தில் அமரச் செய்து மாலை சூட்டினான் தொடர்ந்து கொண்டு வந்த மங்கலப் பொருட்களாகிய மஞ்சள்,
குங்குமம், வாசனைப் பொருட்களை நயனியின் கைகளில் கொடுத்தவன் பூவை அவள் தலையில் சூடினான் கணவன் மனைவியாக ஆனபின் தம் மங்கலக் கோலத்தை இருவரும் கண்ணாடியில் பார்க்க அதில் தெரிந்த அவன் முகத்தைப் பார்த்து பெண்ணவள் முகம் நாணத்தில் சிவந்தது

வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்பதால் முதன் முதலில் இனிப்புவகையே மணமக்களுக்கு உண்ண கொடுப்பர் நாயகன் நாயகி உணவு கொள்ளல் மறைவில் செய்யவேண்டும் என்பதால் திரை ஒன்றை அகிலாவும் நிரஞ்சனும் முன்னால் பிடிக்க பால், வாழைப்பழம் கலந்து நயனி முதலில் ஆதித்யனுக்கு மூன்று முறை கொடுத்த பின் அவனும் அவளுக்கு மூன்று முறை கொடுத்தான்.

பாணிக் கிரகணத்திற்காக ஆதித்யன் நயனியின் கைகளை தன் கரங்கொண்டு பற்ற முதன்முதலில் ஒரு பெண்ணின் ஸ்பரிசம் அவனுள் ஏதோ மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. பெண்ணவளுக்கும் அதே நிலைதான். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள கண்களும் காந்தம் போல் இழுத்துக் கொண்டது. அந்த பார்வை வீச்சை தாங்க முடியாது பாவை தலை கவிழ காளையவனோ முன் திரும்பிக் கொண்டான். ஆனாலும் அவள் பார்வையில் ஒரு காந்தம் இருப்பதையும் உணர்ந்து கொண்டான். மணத் தோழர்களும் மணமக்களின் கைகளை இருபக்கமும் பற்றிக் கொள்ள நால்வருமாக அக்கினியை வலம் வரத் தொடங்கினர் முதலில் ஏழடி எடுத்து வைக்க ஒவ்வோரடிக்கும் ஒவ்வொரு மந்திரம் உச்சரிக்கப்பட எட்டாவது அடியாக ஆதித்யன் நயனியின் வலது காலை தன் கைகளால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டியை அணிவித்தான். தொடர்ந்து அக்கினியை வலம் வந்து நிரஞ்சன் நெற்பொரியை குருக்களிடம் இருந்து பெற்று ஆதித்யனின் கைகளில் கொடுக்க அவன் நயனியின் கைகளில் கொடுத்து அவள் கைகளை தன் கைகளால் தாங்கி “அக்கினி பகவானே சகல செல்வங்களையும் எமக்குத் தந்தருள வேண்டும்.” என வேண்டிக் கொண்டு ஓம குண்டத்தில் நெற்பொரியையும் ஓமப்பொருட்களையும் இட்டனர். திரும்பவும் இரண்டாம் முறை அக்கினியை வலம் வரும்போது இடக்காலை அம்மியில் வைத்து மெட்டி அணிவித்தான் மூன்றாம் முறை அக்கினியை வலம் வரும்போது கிழக்குப் பக்கத்தில் வைத்திருந்த மஞ்சள் நீர் நிறைந்த பாத்திரத்தில் இருக்கும் கணையாழியை தேடி எடுக்க இருவரும் சேர்ந்து கைகளை உள் விட இருவர் கைகளும் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ள அவனுள் மீண்டும் மின்சாரம் பாய்ந்தது.

"ஆதி நீதான் எடுக்கனும் இல்லை காலம் முழுக்க உன் வீட்டுக்காரியோட ஆட்சிதான் விட்டுடாதே" என்று ராஜேஸ்வரி குரல் கொடுக்க

"ராஜி இந்த சடங்கே புருஷன் பொண்டாட்டி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்றதுக்குத்தான் இப்போவே விட்டுக் கொடுக்காத என்று சொல்லுற" தனலட்சுமி ராஜேஸ்வரியின் மூக்கை உடைக்க பாத்திரத்திலிருந்து கணையாழியை முதலில் நயனிதான் எடுத்தாள் எல்லோரும் ஓவென கைதட்டினர் மீண்டும் காயத்ரி கணையாழியை பாத்திரத்தில் இட இரண்டாம் முறையும் நயனியின் கைகளிலே சிக்கியது அந்த கணையாழி. மூன்றாம் முறையும் நயனியே வென்றாள்.

"ஆதிக் கண்ணா இப்பவே பொண்டாட்டிக்கு விட்டுக் கொடுக்குற இல்லையாடா ம்..... உங்க ரெண்டு பேரோட வாழ்க்கையும் அமோகமா இருக்கும்" அவர் வாழ்த்தில் அனைவரும் மகிழ்ச்சியடைய அபசுரமாய் ஒலித்தது ராஜேஸ்வரியின் குரல்

"ஐயோ கோட்ட விட்டுட்டாயே டா இனி காலம் முழுக்க நயனிக்கு அடிமைதான். உன் வீட்டுல பொண்டாட்டியோட ஆட்சி தான் நடக்கும் போ" அந்த வார்த்தையில் காயத்ரி கடுப்பாக

"ஏய் ராஜி உனக்கு அறிவே இல்லையா? கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு அந்தப் பக்கம் போ. எந்த இடத்துல என்ன கதைக்குறதென்று தெரியாம கதைச்சுகிட்டு சசி உங்கம்மாவை இங்கயிருந்து கூட்டிட்டுப் போமா " தனலட்சுமி ஆணையிட

"இதெல்லாம் உனக்கு தேவையா பாட்டி வாயை மூடிட்டிருக்காம முதல்ல நீ வா நாம போகலாம்" அங்கு வந்த ஷனா பாட்டியின் கைகளைப் பிடித்து மேடையை விட்டு இறங்கினாள்.

மீண்டும் அக்கினியை வலம் வந்தவர்கள் மண்டபத்தின் வடக்கு வாசலுக்கு வந்து வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களுக்குப் பூஜை செய்து அருந்ததி நட்சத்திரத்தை குருக்கள் சொன்னது போல் நயனியை தன் தோளோடு அணைத்து அவளுக்கு காண்பித்தான் ஆதித்யவர்த்தன்.
அத்தோடு கோமாதாவை கிழக்கு முகமாக
நிறுத்திச் சந்தனம், குங்குமம், புஷ்பம் சாத்தித் தீபாராதனை செய்து வாழ்விற்கு வேண்டிய அட்ட ஐஸ்வரியங்களையும் கிடைக்க வேண்டி வணங்கி அரிசி, காய்கறி, தட்சிணை வைத்துத் தானமும் வழங்கினர்.

குருக்கள் மணமக்களுக்கு ரட்சயை திலகமிட்டு விபூதி சந்தனம் கொடுத்து அட்சதையிட்டு ஆசி வழங்க இருவரின் பெற்றோர்களும் இரண்டு கைகளாலும் அறுகரிசி எடுத்து
“ஆல் போல் தழைத்து அறுகுபோல் வேரூன்றி மூங்கில் போல் சுற்றம் முழுமையாய்ச் சூழப் பதினாறு பேறு பெற்றுப் பெருவாழ்வு வாழ்க” என வாழ்த்தி உச்சியில் மூன்று முறை இட்டு சபையில் ஆசிர்வதித்தனர்.

பின்னர் மணமக்களின் கைகளில் கட்டப்பட்ட காப்புக்களை அவிழ்த்து பவித்திரங்களை கழற்றி அவற்றுடன் பெற்றோரின் பவித்திரங்களையும் வெற்றிலையில் வைத்து குருக்களின் தட்சணையும் சேர்த்து தனலட்சுமி குருக்களிடம் கொடுத்தார்.
அஸ்வினியும் சித்ராவும் ஆரத்தி எடுக்க இனிதே நிறைவேறியது திருமண சடங்குகள். அத்தோடு திருமணமும் சபையோர் முன்னிலையில் பதிவும் செய்யப்பட்டது. பின்னர் குடும்பமாகவும் மணமக்கள் தனியாகவும் போட்டோ எடுத்துக் கொண்டனர். தனியாக போட்டோ எடுக்க முதலில் மறுத்த ஆதித்யனிடம் வந்த காயத்ரி

"உனக்கு இதுல இப்போதைக்கு விருப்பமில்லாம இருக்கலாம் ஆனால் உன்னோட கல்யாணத்துல என்னன்ன நடக்கனும் என்று உனக்கு கனவிருக்குமோ அதெல்லாமே நடக்கனும். நீ எல்லாத்தையும் புரிஞ்சுக்குறப்போ ஐயோ இதை செய்யாம விட்டுட்டோமே என்று வருந்தக் கூடாது. இல்லாட்டி அதுக்காக திரும்ப கல்யாணத்தை நடத்த முடியுமா என்ன? சரி போட்டோகாரவர் சொல்லுறாப் போல செய்ப்பா" என்றவர் கெமராமேனிடம் திரும்பி

"தம்பி அவனுக்கு கோபம் வார அளவுக்கு போஸ் கொடுக்க சொல்லாம நோர்மலாவே எடுப்பா" என்று அவருக்கு மட்டும் கேட்குமளவுக்கு கூறியவர் சங்கரை அவ்விடம் விட்டு தன் வேலையைப் பார்க்கச் சென்றார்.

ஒரு தடங்கலுமில்லாமலும் எந்தவொரு சடங்குகளும் விடுபடாமலும் செய்த திருப்தியில் தனலட்சுமி உட்பட அனைவரும் பூரண திருப்தியடைந்தனர்.

மதிய விருந்துபசாரமும் தடபுடலாக நடைபெற்றது. மணமக்களை அமர்த்தி அவர்களை சுற்றி் இளவட்டங்கள் அமர்ந்தனர். பெரியவர்களும் அங்கேயே நின்று கொண்டனர். மணமக்களுக்கு ஒரே இலையை வைக்க ஆதி கேள்வியாய் தாயை நோக்க

"மச்சான் இன்றைக்கு ரெண்டு பேருக்கும் ஒரே இலைதான். அஜெஸ்ட் பண்ணிக்கோங்க" என உதயா கூற

"ஓம் அண்ணா, ஏய் நயனி சாப்பாட்டை வச்சு அண்ணனுக்கு ஊட்டிவிடுப்பா" என்று காவியாவும் கூற இவர்களுடன் மற்றையவர்களும் சேர்ந்து கொண்டு ஊட்டி விடச் சொல்ல உணவை பரிமாறிய நயனதாரா வெட்கப்பட்டுக் கொண்டே அவனுக்கு ஊட்டிவிட்டாள். பின் சங்கர் ஆதித்யனை நயனிக்கு ஊட்டி விட சொல்ல அவனை ஆதி முறைக்க காயத்ரியோ 'ஆதி' என்றழைத்ததும் அவரைப் பார்த்தவன் தன்னை சரி செய்து கொண்டு நயனதாராவிற்கு உணவூட்டி விட்டான்.

விருந்து முடிந்ததும் மணமக்கள் இருவரும் அர்ச்சனைத் தட்டோடு கோயிலுக்குச் செல்ல தயாராக தாரணியும் சங்கரும் உடன் சென்றனர். கோயிலுக்குச் சென்று வணங்கி அர்ச்சனை செய்த பின் ஆதி நயனி மற்றைய சந்நிதிகளை சுற்றச் செல்ல தாரணியும் சங்கரும் கோயில் மண்டபத்தில் அவர்களுக்காக காத்திருந்தனர்.

"ஹாய் ஐம் சங்கர்"

"ஹாய்"

"என்னங்க உங்க பெயர் சொல்ல மாட்டீங்களா?"

"எதுக்கு சொல்லனும் முன்னபின்ன தெரியாதவங்களுகிட்ட என்னத்துக்காக பெயரைச் சொல்லனும்"

"முன்னபின்ன தெரியாதா காலையில இருந்து என்னை பார்த்துட்டுதானே இருக்கீங்க அதுவும் நான் ஆதியோட கிளோஸ் ப்ரண்ட் மட்டுமில்ல ப்ரதர் என்றும் உங்களுக்குத் தெரியும் நீங்களும் நயனியோட ப்ரண்ட் அதுவும் ரொம்ப கிளோஸ் வேற"

"ஸோ வாட்?"

"என்னங்க இப்படி டக்கென்று கேட்டுட்டீங்க"

"இப்ப உங்க பிரச்சனைதான் என்னங்க?"

"ஒன்னுமில்லங்க உங்களைப் பத்தி கொஞ்சம் தெரிஞ்சுக்கனும் மத்தவங்களுகிட்ட கேட்குறதை விட நேரடியா உங்களுகிட்ட கேட்டுக்கிறது பெட்டர் என்று நினைக்குறேன் தப்பா?"

"நீங்க எதுக்கு என்னைப் பத்தி தெரிஞ்சுக்கனும்"

"எதுக்கு என்று தெரிஞ்சா சொல்லுவீங்களா?"

"முதல்ல நீங்க எதுக்கு என்று சொல்லுங்க பிறகு சொல்லுறா இல்லையா என்று பார்க்கலாம்"

"வீட்டுல கல்யாணம் பண்ணிக்க சொல்லி கடுமையா கரச்சப்படுத்துறாங்க. அதுக்குத்தான்"

"உங்க கல்யாணத்துக்கும் என்னைப்பத்தி தெரிஞ்சுக்குறதுக்கும் என்ன சம்பந்தம்"

"அப்போதானே பொண்ணப் பத்தி கேட்டா சொல்ல முடியும்" சங்கரின் வார்த்தையில் அவனை கூர்மையாக நோக்கினாள் தாரணி

"இங்கப்பாருங்க காலையில உங்களைப் பார்த்ததுல இருந்து எனக்கு பிக்ஸ் ஆகிட்டுங்க நீங்கதான் என் லைஃப் பாட்டனர் என்று. கோயில்ல வச்சே சொல்லுறேங்க. நான் உங்களை காதலிக்க ஆசைப்படல்ல கல்யாணம் கட்டி உங்க கூட வாழனுமென்று ஆசைப்படுறேன் என்னை ஏத்துக்குவீங்களா? ப்ளீஸ் நல்லா யோசிச்சு சொல்லுங்கோ ஆனால் மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதீங்க" அவன் தன் காதலை சொன்ன விதம் பெண்ணவளை கவர்ந்தது ஆனாலும் அதனை வெளிக்காட்டாது தன் கெத்தை தொடர்ந்தாள்.

"அது எப்படி பார்த்த நிமிசத்துல இவங்க தான் நம்ம லைஃப் பாட்னர் என்று தோன்றிடுமா? ஆனால் அப்படி எனக்கெதுவும் தோனல்லையேங்க."

"நீங்க காதலிச்சுத்தான் கல்யாணம கட்டிக்கனும் என்று நினைக்குறீங்களா? அரென்ஜ் மேரஜ்ல உங்களுக்கு விருப்பமில்லையா?"

"ஏன் இப்படி கேக்குறீங்க?"

"இல்லை உங்களுக்கு எதுவும் தோணல்ல என்று சொல்லுறீங்க. நான் உங்களை காதலிக்க கேட்கல்ல கட்டிக்கத்தான் கேட்டுக்கிறேன் வீட்டுல பார்த்தா இப்படி சொல்லுவீங்களா சரி கல்யாணத்துக்குப் பிறகு காதலிச்சிக்கலாம். ப்ளீஸ்ங்க மாட்டேன் என்று மட்டும் சொல்லிடாதீங்க"
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஆதித்யனும் நயனியும் வர பேச்சை நிறுத்தினர். இவர்களை பார்த்தவாறே வந்த இருவரும் தம் நண்பர்களை நோக்கி

"என்ன கடும் டிஸ்கெஸன் போல இருக்கு என்னடா மச்சான்?" ஆதித்யன் கேட்க

"என்ன மேட்டர்டி அவங்க கதைக்குறதை அவ்வளவு சீரியஸா கேட்டுட்டு இருக்க?" என நயனியும் கேட்க பதிலுக்கு அவர்களும்

"நத்திங்ப்பா சும்மாதான் கதைச்சிட்டிருந்தோம்" இருவரும் ஒருசேர பதிலளிக்க

"இது சரியில்லையே......" ஆதி சிந்திக்க நயனியும் அவர்களை சந்தேகமாகப் பார்க்க

"சரி போகலாமா?" என்ற சங்கர் அவசரமாக காரை நோக்கிச் சென்றவன் அதனை இயக்க மற்றையவர்கள் ஏறியதும் கார் மீண்டும் மண்டபத்தை நோக்கிச் சென்றது.

மண்டபத்துள் நுழைந்தவர்களிடம் வந்த தனலட்சுமி அவர்களை உச்சி முகர்ந்தவர்,

"கண்ணுங்களா வந்துட்டீங்களா? காலையில இருந்து ஆயிரம் சடங்கு சம்பிரதாயங்கள் ரெண்டு பேரும் களைச்சுப் போயிருப்பீங்க. முதல்ல நல்லா தூங்கி ரெஸ்ட்டு எடுங்க. இப்போ மணி ஒன்று இரவு ஏழு மணிக்கு வரவேற்பு" தனலட்சுமி கூறிக் கொண்டிருக்கும் போதே இடையிட்ட தாரணி

"ஏன் பாட்டி இன்றைய நாள் முழுக்க இங்கதானா?" கேட்க

"ஓம் தங்கம் இது நம்ம இடந்தானே, காலையில நிச்சயத்துல இருந்து அதுக்குப் பிறகு நடந்த கல்யாணமாகட்டும் இப்போ நடக்கப் போற வரவேற்பு மட்டுமில்லை இவங்களோட முதலிரவு கூட இங்கதான் நடக்கப் போகுது. இன்றைய முழு நாளைக்கும் நானே நம்ம ஹோட்டலை முழுக்க புக் பண்ணிட்டேன். இது என் பேரனோட கல்யாணம் இந்த தனலட்சுமி வீட்டுக் கல்யாணம் இந்த ஊரே அசந்து போறளவு நடக்க வேணாமா அதுமட்டுமில்லை யாருமே பண்ணாதளவு இந்த கல்யாணத்தை வித்தியாசமா பண்ண ஆசைப்படுறேன்."

"வாவ் பாட்டி சூப்பர் இதுக்கு பிறகும் இப்படி ஒன்று நடக்குமா என்றால் சந்தேகந்தான். என் நயனி கொடுத்து வச்சவ. என் நயனியோட கல்யாணம் கடும் கிரேண்டா இவ்வளவு ஸ்பெஷலா வித்தியாசமா நடக்குது. உண்மையிலே நீ லக்கிதான்டி" என்று கூறிய தாரணி தன் தோழியை அணைத்துக் கொள்ள அவள் கூறிய வார்த்தையில் திருமணத்துக்கு முதல் நாள் நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நினைவு வர அவ்வளவு நேரமும் இருந்த இலகு தன்மை மறைந்து ஒரு கடினம் ஆதித்யனின் முகத்தில் குடி கொண்டது. அதனை தவறாக ஊகித்த தனலட்சுமி

"ஆதி நீ கடுமையா களைச்சிருக்கிறாய் போல ரூமுக்கு போப்பா, நயனிம்மா நீயும் தான் இரண்டு பேரும் போய் தூங்கி ரெஸ்ட்டு எடுங்க. ஆனால் ஒரே ரூம்ல இல்லை. அவரவர் ரூமுக்கு போங்க அதுக்கு நேரமிருக்கு இப்போ இல்லை சாந்தி முகூர்த்தத்துக்குத்தான் அதுவும் பதினொரு மணிக்கு மேலதான் அதுவரை அவரவர் அறையிலதான் என்ன விளங்கிட்டா?"

"பாட்டி என்ன கதை கதைக்குறீங்க. ஏன் பாட்டி இப்படி கல்யாணம் முடிஞ்ச உடனே பிரிச்சு வக்குறீங்களே நியாயமா உங்க வயசுக்கு இதைப் பண்ணலாமா?" என்று தனலட்சுமியை கிண்டல் செய்தான் சங்கர்

"டேய் சங்கர் அப்படி எனக்கென்ன வயசாயிடுச்சிடா? இது ஒரு சம்பிரதாயம் சாந்தி முகூர்த்தத்துக்கு முன்ன பொண்ணும் மாப்பிள்ளையும் தனியா சந்திச்சுக்க கூடாதுடா. இங்கப்பாரு நம்ம கல்யாணத்துல நடக்குற ஒவ்வொரு சடங்குகளுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்குப்பா. இதை உன் கல்யாணத்துல நீயும் விளங்கிக்குவ" சங்கரின் கிண்டலை விளங்காது அதற்கான விளக்கத்தை தனலட்சுமி கூறி முடிக்க

"அப்படியா பாட்டி? எல்லா சடங்கும் ஓகேதான் ஆனால் இந்த கடைசிதான் கொஞ்சம் இடிக்குது. அதனால நான் ஒரு ஐடியா பண்ணிருக்கேன் என்னோட கல்யாணத்தை இரவுல வச்சுக்கப் போறேன். அப்போ பிரிஞ்சிரிக்க வேண்டிய அவசியமில்லை இல்லையா? என்ன பாட்டி என் ஐடியா ஓகேதானே?" என பாட்டியிடம் கேட்டவனின் பார்வை முழுக்க தாரணியின் மேல் இருக்க அவன் விழிகளோ 'ஓகேயா' என்று அவளை பார்த்துக் கேட்க அவள் முகம் செக்கச் சிவந்தது. அதனை மறைக்க மறுபுறம் முகத்தை திருப்பிக் கொண்டாள். அதனை கண்டவன் மனது இறக்கை இல்லாமல் வானில் சிறகடிக்கத் தொடங்கியது.

"டேய் சங்கர் என்ன சொன்ன படவா" அவனை அடிக்க தனலட்சுமி கை ஓங்க சங்கரோ கைகளை தூக்கி சரண்டராக அதில் மற்றையவர்கள் சிரித்தனர்.

"சரிடா ஆதியை அவனோட ரூமுக்கு கூட்டிட்டு போ. வளவளக்காம அவனை கொஞ்ச நேரமாவது தூங்க விடு அப்படியே நீயும் கொஞ்சம் ரெஸ்ட் எடுப்பா காலையில இருந்து உனக்கும் ஒரே ஓட்டம் ." என்று சங்கரிடம் கட்டளையாய் ஆரம்பித்து அக்கறையாய் முடித்தவர் தாரணியின் புறம் திரும்பி

"அம்மாடி நயனிம்மாவை அவளோட ரூமுக்கு கூட்டிட்டு போம்மா. ஆதி, நயனி ரெண்டு பேரும் தூங்கி எழும்புங்க அப்போதான் இரவு வரவேற்பில முகம் பார்க்க நல்லா இருக்கும் சரியா?" என்றவரிடம் விடைபெற்று தங்கள் நட்புகளுடன் தங்களுக்கான அறைகளை நோக்கி சென்றனர் அந்தப் புது மணத் தம்பதியர்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇👇

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்

நிலவு - 16


பலவகை வண்ண மின்குமிழ்கள் நட்சத்திரங்களாய் மின்ன அந்த வானத்து நிலவைக் கொண்டு வந்து கீழே வைத்தது போல் வரவேற்பு மேடை முழுக்க ஒளி வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. அழகிய வெண்ணிறத் துணி போர்த்தப்பட்ட மேசையைச் சுற்றி வெண்ணிற நாற்காலிகள் போடப்பட்டிருக்க சிமினி கொண்டு மூடிய மெழுகுவர்த்திகள் அந்த மேசை முழுக்க மெல்லிய ஒளியை பரப்பிக் கொண்டிருந்தன ஒருபுறம் இசைக் கச்சேரியும் பிரிதொரு புறம் நடன நிகழ்ச்சியும் அரங்கேறியது. மொத்தத்தில் தேவலோகமாக மின்னிக் கொண்டிருந்தது நித்திலம் ஹோட்டல் வளாகம். வரவேற்பிற்கு வந்தவர்களை ஹோட்டலின் வாயிற்புறமிருந்தே இனிப்புக் கொடுத்து வரவேற்றனர் இருவீட்டினரும்.

விழா ஆரம்பமாக சங்கரும் தாரணியும் தங்கள் நட்புகளை மேடைக்கு அழைத்து வந்ததும் தம்பதிகள் இருகரம் கூப்பி வந்தவர்களை வரவேற்றனர். விண்ணிலிருந்து இறங்கி வந்த அப்சரஸ் போல் நயனதாரா மின்ன அந்த அழகு தேவதைக்கு சற்றும் குறையாத ஆண்மையோடு மிளிர்ந்தான் விழாவின் நாயகன் ஆதித்யவர்த்தன். அனைவரும் அந்த அழகான ஜோடியிலிருந்து பார்வையை விலக்க முடியாமல் மதிமயங்கி இருந்தனர். புது மண ஜோடிகள் முதலில் மாலையை மாற்றிக் கொண்டவர்கள் இருவரும் சேர்ந்து மூன்று அடுக்கிலிருந்த அந்த வெண்பஞ்சு கேக்கை வெட்டினர். காயத்ரியின் ஒற்றைச் சொல்லில் ஆதித்யன் தன் மனைவிக்கு ஊட்ட அவளும் அவனுக்கு ஊட்டி விட்டாள். ஒவ்வொருவராக மேடைக்கு வந்து தங்களின் திருமணப் பரிசுகளை கொடுக்க பெண் வீட்டுசார்பாக ராகினி அவர்களின் சொந்தங்களை ஆதித்யனுக்கு அறிமுகப்படுத்த மாப்பிள்ளை வீட்டு சார்பாக தனலட்சுமி ஒவ்வொருவராக நயனிக்கு அறிமுகப்படுத்தினார்.

"நயனா இது ராஜசேகரன் என்னோட மச்சினர் அவர் வீட்டுக்காரம்மா, இது புவனா என்னோட மதனி இது அவ வீட்டுக்காரர் மாதவன். இவரும் நம்ம சொந்தம்தான் என் மாமனாரோட தங்கச்சி மகன். இது இவரோட தம்பி முருகன் அவர் வீட்டம்மா இது அவங்க மக கீர்த்தனா." அவளுக்கு அவர் கூறிய உறவு முறை விளங்காவிட்டாலும் கரங்கூப்பி வணக்கம் சொன்னாள். மேலும் உறவினர்கள் நண்பர்கள் என அறிமுகப்படுத்தக் கொண்டே போனவர் நயனதாராவின் குழம்பிய முகத்தைப் பார்த்ததும் சட்டென்று சிரித்தவர்

"நயனா, நம்ம உறவுக்காரங்க ரொம்ப அதிகம்மா எல்லோரையும் இன்றைக்கே ஞாபகம் வச்சுக்க முடியாதம்மா நம்ம வீட்டுக்கு வந்ததும் ஒவ்வொருத்தரா தெரிஞ்சுக்குவ அதனால இன்றைக்கு சும்மா வணக்கம் மட்டும் வச்சிடு" எனவும் சரி என தலையை ஆட்டினாள். அறிமுகப்படலம் முடிந்ததும் சற்று ஓய்வெடுப்பதாக தனலட்சுமி கீழிறங்க நயனியிடம் வந்த தாரணி அவளின் நெற்றியில் அரும்பியிருந்த வியர்வையை ஒற்றி எடுத்தவள்

"நயனி கொஞ்ச நேரம் உட்காரு டி ரொம்ப டையர்டா இருக்குற மாதிரி இருக்க. ஆதி சேர் நீங்களும் உட்காருங்க கெஸ்ட் வரப்போ மட்டும் எழும்பி நின்னால் போதும்" என்றவள் சிறிது நேரம் நயனியிடம் பேசிக் கொண்டிருந்தாள் அப்போது மேடையேறி வந்த சங்கர் ஆதித்யனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் ஆனால் அவன் பார்வை முழுக்க தாரணி மேல்தான் இருந்தது. அதனை மற்றையவர்கள் கவனிக்காவிட்டாலும் உரியவள் கண்களுக்கு அது தப்பவில்லை. அவள் உடல் முழுக்க குறுகுறுக்க அதற்கு மேல் அங்கு நிற்க முடியாதவள்

"ஏதாவது வேணுமென்றால் கீழதான் நிக்குறேன் கூப்பிடு சரியா?" என்றவள் மேடையை விட்டு இறங்கினாள் அவள் செல்வதைக் கண்ட சங்கரும் அவளை பின் தொடர்ந்தவன் அவள் பக்கத்தில் வந்து

"என்னங்க ஒரு நிமிசம். கொஞ்சம் கதைக்கனும் ஏங்க நில்லுங்க கூப்பிட கூப்பிட போயிட்டிருக்கீங்க. ஏங்க சொல்லிட்டே இருக்கேன் நில்லுங்க ப்ளீஸ்" அவளின் அருகே நெருங்க அவன் புறம் திரும்பியவள்

"ஏங்க எதுக்காக எனக்கு பின்னால வாறீங்க. பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க உங்களுக்கு என்னதான் வேணும்"

"நான் மத்தியானம் உங்ககிட்ட கதைச்சதுக்கு பதில் கேக்கத்தான் வந்தேன் என்ன முடிவெடுத்திருக்கீங்க?"

"இங்கப்பாருங்க இந்த மாதிரி கேட்டுட்டிருக்காதீங்க இன்றைக்கு உங்க ப்ரண்டோட கல்யாணம் அதை மட்டும் என்ஜோய் பண்ணுங்க என்னை ஆளவிடுங்க." அவன் கேள்விக்கு ஆம், இல்லை என்று எந்த பதிலையும் அளிக்காதவள் அழகான புன்னகையை சிந்த அதில் அவன் குழம்பி நின்றதும் அங்கிருந்து நழுவி உதயாவின் அருகே போய் நின்று கொண்டாள்.

'நான் என்ன கேட்குறேன் இவ என்ன பதில் சொல்லிட்டு போறா? அஎதுவும் ஆளை மயக்குற மாதிரி வேற சிரிச்சுட்டுப் போறா அட இவ என் கேள்விக்கு பதில் சொல்லல்ல. அப்போ இவ சொன்னதுக்கு என்ன அர்த்தம் மேடத்துக்கும் நம்ம மேல எதுவும் ஐடியா இருக்கா. இல்லாட்டியும் நீங்க எனக்குத்தான் மேடம். எனக்கிட்ட இருந்து தப்பிச்சா போறீங்க போகம்மா போங்க. நான் பிக்ஸ் பண்ணிட்டேன் என்னோட வைஃப் நீங்கதான் என்று என்னை விட்டா ஓடுறீங்க நீங்க எங்க போனாலும் விடமாட்டேன். உங்களைத் தேடி வருவேன் ஃபெஸ்ட்டு அவ பேரைத் தெரிஞ்சுக்கனும் அதுக்கு பிறகு வீட்டுல சொல்லிக்கனும் அப்புறம் மை ஸ்வீட்டி நமக்கு டும் டும்தான் ஓகே பேபி" தனக்குள் பேசியவன் அவள் பெயரை தெரிந்து கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டான். ஆனால் அவனால் அவள் பெயரை கண்டு பிடிக்க முடியவில்லை.

அமர்க்களமாய் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட சொந்தங்களும் நட்புகளும் மெல்ல மெல்ல விடை பெற இருதரப்பு நெருங்கிய உறவுகள் மட்டுமே எஞ்சியிருந்தனர். இறுதியாக மணமக்களுடன் அவர்கள் குடும்பத்தினரும் சாப்பிட்டுவிட்டு சொந்தங்கள் எல்லாம் ஒன்று கூடி அமர்ந்து கதை பேசத் தொடங்கினர். தனலட்சுமிதான் ஆரம்பித்தார்.

"பதினொரு மணிக்கு மேலதான் குருக்கள் குறிச்சுக் கொடுத்த நல்ல நேரம் ஆரம்பிக்குது. இப்போ மணி ஒன்பது தான் ஆகுது. நல்ல நேரத்துக்கு இன்னும் ரெண்டு மணித்தியாலத்துக்கு மேலயே இருக்கு அதுவரை என்ன செய்யலாம்" தனலட்சுமி கேட்டதும் ஆளுக்கொரு ஐடியா சொல்ல இறுதியாக பாட்டுப் போட்டி வைப்பதென ஒரு மனதாய் முடிவெடுத்தனர். அதற்காக மாப்பிள்ளை வீட்டார் ஒரு பகுதியாவும் பெண் வீட்டார் ஒரு பகுதியாகவும் பிரிந்தமர நடுவராக ராகவனும் வாசுதேவன் அமர்ந்தனர். போட்டி ஆரம்பமானது. பெண் வீட்டு சார்பாக உதயா முதலில் ஆரம்பித்தாள்

"இதுதானா இதுதானா எதிர்பார்த்த அந்நாளும் இதுதானா......... நான் உனதானேன்" என்று நிறுத்த மாப்பிள்ளை பக்கமிருந்து காவியா ஆரம்பித்தாள்

"உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு ......." இவ்வாறாக மாறி மாறி இருதரப்பிற்குமிடையில் போட்டி தீவிரமாக போய்க்கொண்டிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேலே முடியாமல் அனைவரும் சலிப்படைய அடுத்து வேறு விளையாட ஆரம்பித்தனர். அதுவும் சலித்துவிட மீண்டும் பாட்டுப் போட்டியையே தொடர எண்ணினர்.

"எல்லோரும் கொஞ்சம் நிறுத்துங்கோ. இந்த பாட்டுபோட்டி எல்லாம் வேணாம் நான் இப்போ ஒரு புதுவித போட்டி நடத்தப் போறேன்" அவர்களை தடுத்து தனலட்சுமி கூறியதும் ஆவலாக

"என்ன போட்டி பாட்டிம்மா" கோரசாக அங்கிருந்த இளசுகள் கேட்க

"சொல்லுறேன் சொல்லுறேன். இந்த போட்டி மாப்பிள்ளை வீட்டுக்கும் பொண்ணு வீட்டுக்கும் இல்லை"

"அப்போ யாருக்கு?" கேள்வி பல பக்கமிருந்து வர

"நம்ம பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்தான்"

"ஆஹா சூப்பர் பாட்டி." இளசுகளின் கரகோஷம் வானைப் பிளக்க

"அம்மாடி நயனி நீ நல்லாப் பாடுவ இல்லையா அது எனக்கு தெரியும் உன் வீட்டுக்காரனும் உன் மாமியாரும் கேட்கணுமில்லை"

"என்ன அம்மா சொல்லுறீங்க நயனி பாடுவாளா உண்மையாவா? நயனிம்மா உனக்கொரு விசயம் தெரியுமா என் மகன் அதான் உன் வீட்டுக்காரனும் சூப்பரா பாடுவான் தெரியுமா?" காயத்ரி கூற

"அப்படியா அத்தை" சந்தோசமாக
தன் கணவனை நிமிர்ந்து பார்க்க அவனோ இந்த அம்மா எதுக்கு நம்மளை கோர்த்து விடுது என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருந்தவனைப் பார்த்தும் தன்னையறியாமல் பக்கென்று சிரித்து விட்டாள்.

"ஓம் காயு பார்த்தாயா என் பேரப் புள்ளைங்களுக்குள்ள இருக்குற ஒத்துமையை. அதுமட்டுமில்லை பொறுப்பான ரொம்ப அன்பான பொண்ணு வேற அதனாலதான் சொன்னேன் எல்லா வகையிலேயும் நயனா நம்ம ஆதிக்கு பொருத்தமா இருப்பா என்று" தனலட்சுமி கூற பெண் வெட்கத்தில் சிவக்க ஷனா கோபத்தால் சிவந்தாள்.

"ஐயோ பாட்டி அக்காவை புகழ்ந்தது போதும் அங்கப்பாருங்க அவ முகத்தை பாருங்க வெட்கத்துல அப்படியே ரெட் கலராயிடுச்சு இதுக்கு மேல கதைச்சா அவ தாங்கமாட்டா ஸோ போட்டிய ஸ்டார்ட் பண்ணலாம் போட்டியோட ரூல்ஸ் சொல்லுங்கோ" உதயா அவசரப்படுத்த மற்றையவர்களும் அதையே மொழிய

"நயனா நீ என் பேரனை எப்படி பார்த்துக்குவ என்று பாட்டா பாடி காட்டனும் என்ன? இதுல நீ ஜெயிச்சுட்டா உங்க சைட் என்ன பாட சொல்லுறாங்களோ அதை எங்க மாப்பிள்ளை பாடுவான் இதுதான் போட்டி ஓகேயா?"

"ஓகே" சபையிலிருந்த அனைவரும் சந்தோசமாய் கத்த

"ஐயோ பாட்டி இது என்ன புதுக் கதை என்னை ஏன் இதுல கோர்த்துவிடுறீங்க என்னால பாடெல்லாம் முடியாது" ஆதித்யன் மறுக்க

"அதெல்லாம் முடியும் நயனாம்மா நீ முதல்ல பாடு" தனலட்சுமி கூற சிறிது தயங்கியவள் மற்றையவர்கள் அவளை உற்சாகப்படுத்த தன் தேன் குரலால் பாடத் தொடங்கினாள்.

"காதல் கணவா உந்தன்
கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே....

தாய் வழி வந்த
எங்கள் தர்மத்தின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே....


ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போல
தூய்மையான
என் சத்தியம் புனிதமானது.

வாழை மரம் போல என்னை
வாரி
வழங்குவேன்
.
ஏழை கண்ட புதையல் போல
ரகசியம் காப்பேன்
.

கணவன் என்ற சொல்லின் அர்த்தம்
கண் அவன் என்பேன்.
உனது உலகை எனது கண்ணில்
பார்த்திடச் செய்வேன்
.

மழைநாளில் உன் மார்பில்
கம்பளி ஆவேன்.
மலை காற்றாய் தலைகோதி
நித்திரை தருவேன்......"

தன் மணவாளனை மனதில் நினைத்து விழிகளை மூடி தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த நயனதாராவை இடை நிறுத்தினாள் உதயா.

"ஸ்டொப் ஸ்டொப் அக்கா. பாட்டி, எங்க அக்கா உங்க பேரனை எப்படி பார்த்துக்குவாங்க என்று அழகாகவே பாடி காட்டிட்டாங்க இப்போ மச்சானோட டேன் எங்க அக்காவை நீங்க எப்படிப் பார்த்துக்குவீங்க என்று இப்போ நீங்க பாடுங்கோ நாங்களும் கேட்டு சந்தோசப்பட்டுக்குவோம் இல்லையா. என்ன மச்சான் பாடுறதுக்கு ரெடியா?"

"என்ன நான் பாடனுமா நோ என்னால முடியாது."

"என்ன பாட்டி உங்க பேரன் முடியாதுங்குறாரு அப்போ நீங்க போட்டியில தோத்துட்டீங்க."

"யாரு சொன்னா தோத்துட்டோம் என்று இப்ப பாடுவான் பாருங்க டேய் ஆதி பாடுடா நம்ம மானத்தைக் காப்பாத்துடா மச்சான்" சங்கர் அவனிடம் கேட்க ஆதி அப்போதும் மறுத்தான்

"பாடுங்க ஆதிண்ணா இல்லையென்றால் நாம தோத்துட்டோம் என்று இவங்க எல்லோரும் முடிவு பண்ணிடுவாங்க" தினகரன் கூற

"ஓம் அண்ணா பொண்ணு வீட்டுக்காரங்களுக்கிட்ட மாப்பிள்ளை வீட்டுக்காரங்க தோக்கக் கூடாது." சஞ்சனாவுடன் சேர்ந்து காவியாவும் கெஞ்ச

"பாடுங்க நம்ம மானத்தை காப்பாத்துங்க" மற்றையவர்களும் சேர்ந்து கொள்ள

"என்ன அத்தை ஆதி மச்சான் சூப்பரா பாடுவாறு என்று சொன்னீங்க இப்போ என்னடா என்றால் பாடமாட்டேன் என்கிறாரு. நீங்களாவது சொல்லுங்கோ ஆன்ட்டி" உதயா காயத்ரியிடம் கேட்க தாரணியும் சேர்ந்து கொள்ள தன் மைந்தனிடம் பாடச் சொல்லி கண்களால் கேட்க அவனும் தன் காந்தக் குரலால் பாட ஆரம்பிக்க நயனியின் விழிகள் அவனை நோக்கியிருக்க அவள் பார்வையை சந்தித்தவன் தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான்.

"கண்ணே கனியே உன்னை
கை விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்

இது சத்தியமே.....

மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே.....

ஒரு குழந்தை போலே
ஒரு வைரம் போல

தூய்மையான
என் சத்தியம் புனிதமானது

இப்பிறவியில் இன்னொரு
பெண்ணை சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயா
பிரியம் காப்பேன்
.

செல்ல கொலுசின் சிணுங்கல்தோர்ப்பேன்வை செய்வேன்
நெற்றி பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன்
கைபொருள் யாவும் கரைந்தாலும்
கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோர்ப்பேன்."

அவன் தன்னையும் அறியாது ஒரு மனைவிக்கு கணவன் கொடுக்க கூடிய சத்தியங்களை பாடலாய் பாடிக் கொண்டிருக்கும் போது தன்னை அறியாமலே அடுத்த வரிகளை நயனி பாடத் தொடங்கினாள்

"உனது உயிரை எனது வயிற்றில்
ஊற்றிக் கொள்வேன்
.
உனது வீரம் எனது சாரம்
பிள்ளைக்குத் தருவேன்
.

கால மாற்றம் நேரும் போது
கவனம் கொள்வேன்
.
கட்டில் அறையில் சமையல் அறையில் புதுமை செய்வேன்."

"அர்த்த ஜாம திருடன் போல
அதிர்ந்து பேசேன்
காமம் தீரும் பொழுதிலும்
எந்தன் காதல் தீரேன்
.

மாத மலர்ச்சி மறையும் வயதில்
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்."

பாட முடியாது என்று கூறிய ஆதித்யன் ஏதோ மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல் அவளைத் தொடர்ந்து அவனும் பாடினான்.

"அழகு பெண்கள் பழகினாலும்
ஐயம் கொள்ளேன்
.
உன் ஆண்மை நிறையும் போது
உந்தன் தாய் போல் இருப்பேன்."


"சுவாசம் போல அருகில் இருந்து
சுகப்பட வைப்பேன்
உந்தன் உறவை எந்தன் உறவாய்
நெஞ்சில் சுமப்பேன்."
தங்கள் துணைகளுக்குக் கொடுக்கக் கூடிய உறுதி மொழிகளை பாடலாய் ஒருவர் மாற்றி ஒருவர் பாடியவர்கள் ஒரு கட்டத்தில் சேர்ந்து பாடத் தொடங்கினர்

"உன் கனவுகள் நிஜமாக
எனையே தருவேன்.
உன் வாழ்வு மண்ணில் நீள
என்னுயிர் தருவேன்."


"காதல் கணவா உந்தன்
கரம் விடமாட்டேன்
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே...."

நயனதாரா அவன் கண்களைப் பார்த்தவாறே பாடிக் கொண்டிருக்க அந்தக் காந்தப் பார்வையிலிருந்து தன் பார்வையை விலக்க முடியாதவன் அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டவாறே அவனும் பாடலை தொடர்ந்து பாடிக் கொண்டிருந்தான்

"மாலை சூடிய
காலை கதிரின் மேலே
சத்தியம் சத்தியம்
இது சத்தியமே....."


"ஒரு குழந்தை போலே

ஒரு வைரம் போல

தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது.

தூய்மையான

என் சத்தியம்
புனிதமானது.

தூய்மையான
என் சத்தியம்
புனிதமானது......."

இருவரும் ஒன்றாகப் பாடி முடிக்க கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தங்களை மறந்து அந்த இளங்குயில்களின் இனிமையான குரல்களில் தங்களை தொலைத்தனர்.
பாடி முடித்த இருவரும் தங்களை மறந்து ஒருவரை ஒருவர் நோக்கிய வண்ணம் வேறுலகில் இருக்க இவர்கள் பாட்டை ரசித்த மற்றயவர்களின் கரகோஷத்தில்தான் இவ்வுலகம் வந்தவர்கள் சுற்றுச் சூழலை உணர்ந்து தங்களை சரிப்படுத்திக் கொண்டனர். பெண்ணவள் தன் செயலை எண்ணி நாணம் கொள்ள ஆதித்யவர்த்தனோ தன் மேலே கோபம் கொண்டவனாய் அவசரமாக அந்த இடத்தை விட்டுச் சென்றான். நயனியும் மற்றையவர்களும் அவன் வெட்கம் கொண்டுதான் அவ்விடம் விட்டுச் செல்கிறான் என எண்ண, உண்மை அறிந்த ராகவன் தம்பதியரும் சங்கரும் அவன் கோபத்தில் செல்கிறான் என்பதை புரிந்து கொண்டனர். சங்கர் காயத்ரியை நோக்க அவரின் கண்ணசைவில் அவனை பின் தொடர்ந்தான். இந்த ஊமை நாடகத்தைப் பார்த்திருந்த கழுகுக் கண்களுக்கு மீண்டும் தனக்கொரு வாய்ப்புண்டு என்ற நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது.
ஆதித்யனை தொடர்ந்து வந்த சங்கர்

"டேய் மச்சி என்னாச்சுடா எதுக்கு இடையில எழும்பி வந்துட்ட"

"நான் எப்படிடா அவளோட சேர்ந்து பாடலாம். அதுவும் ஒரு பொண்டாட்டிக்கு கொடுக்க வேண்டிய அத்தனை உறுதி மொழிகளையும் கொடுத்து. சே என்மேலதான்டா எனக்கு கோபம் அதான் எழும்பி வந்துட்டேன்."

"மச்சான் நீ வேற யாருக்கும் அந்த நம்பிக்கையை கொடுக்கல்லையே உன்னோட வைஃப்க்குத்தானே கொடுத்த வாழ்நாளுக்கும் உன்கூட வாழப் போறவங்களுக்குத்தானே கொடுத்த இதுல கோபப்பட என்ன இருக்குடா"

"சே போயும் போயும் அந்த காசுப்பைத்தியம் என்னோட வைஃப் என்று சொல்லவே வெட்கமா இருக்கு. எல்லாம் என் நேரம்"

"என்னடா நீ இப்படிக் கதைச்சிட்டு இருக்கிறாய். நயனா நல்ல பொண்ணுடா நிச்சயமா ஒருநாள் அதை விளங்கிக்குவ. சரி சரி நீ டென்ஸனாகாத எல்லாம் நல்லதாவே நடக்கும்." ஆதித்யனின் கோபத்தில் சிவந்த முகத்தைப் பார்த்த சங்கர் அவனை அமைதிப்படுத்தியவன் இன்றில்லாட்டியும் ஒருநாள் தன் நண்பன் நயனதாராவை புரிநதஉ கொள்வான் நயனாவின் அன்பும் பாசமும் நல்ல குணமும் தன் நண்பனை மாற்றும் அவன் வாழ்வும் நிச்சயமாக நல்லவிதமாக மலரும் என்று அந்த ஆருயிர் தோழன் ஆணித்தரமாக நம்பிக்கை கொண்டான்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇👇

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு
- 17

ஹோட்டலின் இரண்டாவது தளத்தில் விஐபிகளுக்கான பகுதியில்தான் முதலிரவுக்கான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறைக்குள் நுழைந்ததும் கதவை தாழிட்டுத் திரும்பிய நயனதாராவை முதலில் மயக்கியது அந்த ஆடம்பர அறையே. சுவர் முழுக்க பால் வெண்மையாயிருக்க அதற்கேற்ப திரைச்சீலைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அடர்நீல சோபாக்களும் சிறிய கண்ணாடி மேசையும் அதன் மேல் பழங்களும் இனிப்புக்களுமாய் ஒருபுறமிருக்க பூனை முடி போல் காலுக்கிதமான கார்பட்டும் அங்கங்கே அழகுக்காக வைக்கப்பட்ட இன்டோர் பிளான்டுகளும் மெல்லிய நெட் தொங்க விடப்பட்டு முதலிரவுக்காய் அலங்கரிக்கப்பட்ட பெரிய கட்டிலும் கட்டிலுக்கு எதிர்புறம் ஸ்டான்ட்டுடன் கூடிய பெரிய சைஸ் டிவியும் கட்டிலின் பின் பக்கச் சுவர் முழுக்க போலிஸ் செய்யப்பட்டட மரபலகை பதித்திருக்க ஒரு பக்கச்சுவரில் நிலைக்கண்ணாடியும் அதனுடன் இணைந்த அலுமாரியுமாய் அழகான பெரிய படுக்கையறையையும் ஒரு புறம் குளியலறையும் கொண்டிருந்தது அந்த விஐபிகளுக்கான பகுதி. நயனதாரா ஹோட்டலில் தங்குவது இதுதான் முதன்முறை அதனால் அவள் அந்த அறையின் அழகை தன்னை மறந்து ரசித்துக் கொண்டிருந்தாள். மஞ்சள் நிற வெளிச்சம் அந்த இடத்தை நிறைத்திருக்க அறை முழுக்க ஏசியின் குளிர் பரவியிருந்தது அதை அனுபவித்தவாறே சிறு பிள்ளை போல சுற்றிச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தவளை இரு கண்கள் வெறித்துக் கொண்டிருந்தது.
'இவள் என்ன பெண் முதலிரவுக்கு வந்தவள் முதல்ல மாப்பிள்ளையை தேடாம அறையை சுத்திப்பாத்துட்டிருக்கா அதுசரி அவள் காசுக்கும் இந்த சொகுசு வாழ்க்கைக்கும் தானே ஆசைப்பட்டாள் முதல்ல அவளுக்கு எது முக்கியமோ அதைத்தானே பார்ப்பாள்.'

ஒருவாறாய் அறையை சுற்றிப் பார்த்தவள் அப்போது தான் ஞாபகம் வந்தவளாய் அவனைத் தேட அறையில் அவனை காணவில்லை அதனால் பெல்கனிக்கு வந்தவள் கண்டது இரு கைகளையும் மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு தூரத்து கடலை வெறித்திருந்தவனைத் தான். கற்சிலை போல் நின்ற அவன் தோரணையைப் பார்த்தவளுக்கு முதன்முதலாக உள்ளே ஒரு பயம் எழுந்தது. அவனை எப்படி அழைப்பது என்று தெரியாமல் அவள் தடுமாற அவள் புறமாகத் திரும்பினான் அவன்.

"என்ன கடுமையா யோசிச்சிட்டிருக்க?"

"அது... வந்து... உங்களை எப்படி கூப்பிடுறதென்று தெரியல்லை அதான்..." தயங்கித் தயங்கிக் கூற

"ஓ... சரி சரி உள்ள வா உன்கூட கொஞ்சம் கதைக்கனும்" கூறியவன் முன் நடக்க அவனைத் தொடர்ந்தாள் பெண். சென்றவன் சட்டென்று நிற்க அவனைப் பின் தொடர்ந்து வந்தவள் அவன் நிற்பான் என எதிர்பார்க்காததால் அவன் முதுகில் மோதி நின்றாள். அவனுள் மின்சாரம் பாய்ந்தது போலிருக்க சில கணங்கள் அதை அனுபவித்தவாறு அப்படியே நின்றான் பெண்மையும் அவனில் மயங்கி நின்றது அடுத்த கணம் நெருப்புச்சுட்டவன் போல் அவளை விட்டு விலக அவனை கேள்வியாய் நோக்கியவளை கட்டிலில் ஒரு புறம் அமரச் சொல்ல பதுமை போல் அவள் அமர கட்டிலின் மறுமுனையில் அவன் அமர்ந்து கொண்டான். அவளிடம் தான் பேச நினைப்பதை எப்படி ஆரம்பிப்பது என தெரியாமல் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் எப்படியும் பேசித்தான் ஆக வேண்டுமென ஒரு முடிவெடுத்தவனாய் நேராக அவளை நோக்கினான்

"நயனதாரா. அதானே உன் பேரு" அவள் ஆம் என தலையாட்ட

"இங்கப்பாரு உனக்கும் எனக்குமிடையில ஒரு கான்ரெக்ட் போடனும் அதுக்கு நீ ஒத்துக்கிட்டு சைன் பண்ணனும்."

"கான்ட்ரெக்ட்டா.... என்ன சொல்லுறீங்க?" பயந்தவாறே கேட்க

"இங்கப்பார் ஓவரா நடிக்காத சின்னப் புள்ள மாதிரி முகத்தை வச்சுகிட்டா நீ நல்லவளாகிடுவாயா? உன்னைப்பத்தி எனக்கு நூறு வீதம் தெரியும் அதனால ஓவரா நடிக்காதே நான் ஏமாற மாட்டேன்"

"என்ன நான் நடிக்கிறேனா? எதுக்கு நடிக்கனும்?" புரியாமல் கேட்க

"ஆ.. நீ நல்லவள் என்றதை நான் நம்பி உன்னோட வலையில விழுந்து காதலிச்சாத்தான் உன் பிளான் எல்லாம் சக்ஸஸாகும். அதுக்குத்தான்" அவ்வளவு நேரமும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவள் அவனை நேராக நோக்கி

"இங்கப்பாருங்க நீங்க எதையோ சொல்ல நினைக்குறீங்க அதுக்காக சுத்தி வளச்சு மூக்கைத் தொடாம நேரடியா விசயத்தை சொன்னா நல்லாயிருக்கும்." அவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவள் சட்டென்று புயல் போல் மாற அவளை அதிசயமாய் பார்த்தவன்

"சரி நான் நேராவே விசயத்துக்கு வாரேன் எனக்கு இந்தக் கல்யாணத்துல துளியும் விருப்பமில்லை எங்கம்மாவோட பிடிவாதத்தால தான் உன்னை மாதிரி ஒருத்தியை கட்டிக்க வேண்டியதா போச்சு"
அவன் கூற அதிர்ந்தாள் பெண்
'அப்போ ஷனா சொன்னது உண்மைதானா? இவரும் அவளை காதலிச்சிருக்காரா? அப்போ அத்தைக்கு இந்த விசயம் தெரியாது போல இல்லை தெரிஞ்சும் பொய் சொல்லிருக்காங்களா? ஒருவேளை ஷனாவை புடிக்காம எதிர்த்தாங்களா? ஐயோ இதுல யார் சொன்னது உண்மை?" அதிர்ந்து நின்றவளின் முன் அவன் சொடக்குப் போட தன்னை சுதாகரித்தவள்
அவனது உதாசீனத்தில் ஆத்திரம் எழுந்தாலும் தன்னை அடக்கிக் கொண்டு அமைதியாகவே

"என்னை மாதிரி ஒருத்தியா? உங்களுக்கு என்னை அந்த அளவுக்குத் தெரியுமா?" கேட்க

"இங்கப்பார் எனக்கு உன்னையும் தெரியும் உன்னோட எல்லாத் திட்டமும் தெரியும். என்ன எதுவும் தெரியாத அப்பாவி போல முழிக்குற, என்ன நடிப்புடா சாமி நீ காசுக்காகவும் என் சொத்துக்காகவும் இந்த ஆடம்பர வாழ்க்கைகாகவும் தான் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட இல்லையா? எங்கம்மாவும் உன்னோட குணம் தெரியாம ஒத்தக் கால்ல நின்று உன்னை எனக்கு கட்டி வச்சுட்டா அம்மாக்காகத்தான் இந்த கருமத்தை செய்ய ஒத்துகிட்டேன் இன்றைக்கு இல்லாட்டியும் என்றைக்காவது ஒரு நாள் உன்னோட குணம் தெரிஞ்சு அவங்களே உன்னை இந்த வீட்டை விட்டு போகச் சொல்லுவாங்க சொல்லாட்டியும் ஆறு மாசமோ இல்லை ஒரு வருஷமோ அதுக்குள்ள உன்னோட முகத்திரையை கிழிச்சு உன்னோட சுயரூபத்தைக் காட்டி அவங்க வாயாலேயே உன்னை வீட்டை விட்டு போக வைப்பேன். அன்றைக்கு நீ எதிர்த்து ஒரு கேள்வி கேட்கக் கூடாது. போக முடியாது என்று முரண்டு பிடிக்கவும் கூடாது. அதுக்காகத்தான் இந்த கான்ட்ரெக்ட். ஏன்னா என் வாழ்க்கையை எனக்குப் பிடிச்ச மாதிரி நான் வாழும் போது உன்ன மாதிரி ஒருத்தி என் வாழ்க்கையில இருந்த சுவடுமிருக்கக் கூடாது. இதுக்கு நீ ஒத்துக்கத்தான் வேணும். கொஞ்சம் டைம் எடுத்து யோசி ஓகே என்றால் இந்த பேப்பர்ஸ்ல சைன் பண்ணு அப்படியில்லை உன்னால சைன் பண்ண முடியாதென்றால் இந்த நிமிசமே இந்த ரூமை விட்டும் என் வாழ்வை விட்டும் ஒரேயடியா போயிடு" அவள் தலையில் அவன் தணலைக் கொட்ட செய்வதறியாது அப்படியே திகைத்து நின்றாள்.

'தாலி கழுத்தில் ஏறி ஒருநாள் கூட ஆகல்ல அதுக்குள்ள அவர் வாழ்க்கையை விட்டு போகச் சொல்லுறார். அப்படி என்றால் ஷனா சொன்னது நூறு வீதம் உண்மை. அவங்க காதலை நான் அழிச்சுட்டதா நினைக்குறார் போல அத ஒத்துக்காம என் மேல ஏதேதோ பலி போடுறார் இவர் ஒன்றும் சின்ன புள்ளை இல்லையே அந்த ஷனாவைத்தான் புடிச்சிருக்கு என்றால் அதுக்காக போராடி அவளையே கட்டியிருக்கலாமே எதுக்காக என் வாழ்க்கையை அழிக்கனும். அதான் இப்போ கல்யாணமே ஆயிடுச்சே இவர் அந்த ஷனாவை மறந்து தான் ஆகனும்.
எப்படி இந்த கல்யாண வாழ்க்கையை முறிக்க முடியும் இவருக்கு வேணுமென்றால் கல்யாணம் சாதாரணமா இருக்கலாம் ஆனால் எனக்கு அப்படியில்லையே ஐயோ அப்பா அம்மா இதைத்தாங்குவாங்காளா? ஒருவேளை ஷனாவைப் புடிக்காமத்தான் அத்தை என்னை இவருக்கு கட்டிவச்சிருந்தா அத்தையோட எண்ணமும் தோக்கக் கூடாது. இல்லை இது நடக்க விடக் கூடாது' ஒரு முடிவெடுத்தவளாய் பேப்பர்ஸூக்காக அவனை நோக்கி கைகளை நீட்ட பேப்பர்ஸூடன் பேனாவையும் அவள் கைகளில் வைத்தான். அதில் என்ன எழுதிருக்கிறது என்பதைக் கூட வாசிக்காது அதில் கையெழுத்திட்டு அவனிடம் கொடுத்தாள். அதை வாங்கிப் பார்த்தவன் அதில் திருப்தியுற்றவனாய்

"வெரி குட் டிசிசன் உன் விருப்பப்படி நீ என் வீட்டுல வாழலாம் எல்லாம் செய்யலாம். அத்தோட நம்ம ரூம் கதவுக்கு அந்தப் பக்கம் நம்ம நல்ல ஒற்றுமையான புருஷன் பொண்டாட்டி ஆனால் கதவுக்கு இந்தப் பக்கம் நீ யாரோ நான் யாரோ என்ன விளங்கிட்டா?"

"சில சந்தேகங்கள் இருக்கு ஒன்னுமில்ல உங்கம்மாவ வச்சுத்தானே என்னை வீட்ட விட்டு அனுப்பப் போறீங்க அப்போ எதுக்காக அவங்க முன்னாடி நடிக்கனும்."

"எங்கம்மா பெரிய புத்திசாலி நம்ம அப்படி நடந்துக்கல்ல என்றால் இதெல்லாம் என்னோட திட்டம் நான்தான் உன்னைக் கட்டாயப்படுத்தி இதைச் செய்ய வச்சிருக்கிறேன் என்று கடும் ஈசியா கண்டு பிடிச்சிடுவாங்க. அவங்களா உன்னை உன்னோட குணத்தை விளங்கி உன் கழுத்தைப் புடிச்சு வெளிய போகவப்பாங்க அப்படியில்லாட்டியும் அவங்களுக்கு நான் புரியவப்பேன். அதுவரை இந்த நாடகம் அரங்கேறும் அத்தோட நீ என்கிட்ட வைஃப் என்கிற எந்த உரிமையையும் எடுத்துக்க கூடாது. நம்ம உறவு ரயில் சிநேகம் மாதிரி கூட கிடையாது என்றைக்குமே சேர முடியாத தண்டவாளம் போலத்தான் ஓகே இப்போ எல்லாம் கிளியராயிருக்குமே."
'நீ என்ன லூசா' என்பது போல் அவள் பார்க்க அத்துடன் கதை முடிந்தது என அவன் கட்டிலை விட்டு எழ

"ஒரு நிமிஷம்" என அவனை தடுத்தவளை 'என்ன' என்பது போல் பார்க்க கட்டிலை விட்டு எழுந்து மார்புக்குக் குறுக்காக தன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு நிமிர்ந்தவள்

"உங்க விஷயங்களை சொல்லிட்டு எல்லாம் முடிஞ்சிடுச்சு என்று நீங்க பாட்டுக்கு போனா சரியா? ம்..."

"வேறென்ன?"

"இன்றைக்குத்தான் நமக்கு கல்யாணமாயிருக்கு குருக்கள் சொன்னாங்க இல்ல ஒரு மனிசனோட வாழ்க்கை கல்யாணத்துலதான் பூரணமாகுதென்று நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய முதல் முக்கியமான நாள் அந்த வகையில ஒரு நல்ல மனைவியா மருமகளா வாழ்க்கையின் அடுத்த கட்டத்த ஆரம்பிக்க எண்ணற்ற கனவுகளோட வந்தேன் ஆனால் நீங்க..."

"ஓம் இன்றைக்குத்தான் கல்யாணமாச்சு, அதுக்காக உன் அழகுல மயங்கி உன்னோட கட்டிலுக்கு வரனுமோ" அவனின் நேரடி பேச்சில் முகத்தை சுழித்தவள்

"சீச்சீ என்னைக் கட்டிலுக்கு அலையுறவ என்று நினச்சீங்களா? நான் என்ன கதைக்கவறேன் என்று விளங்காம என்ன வார்த்தை கதைக்குறீங்க வாழ்க்கையைத் தொடங்க வேண்டிய முதல் நாளே பிரியுறதுக்காக நமக்குள்ள கான்ரெக்ட் போடுறீங்க. நல்லாயிருக்கா? சரி என் வாழ்க்கையை அழகாக தொடங்கனும் என்று வந்த எனக்கிட்ட கான்ரெக்ட் அது இதென்று சைன் வேற வாங்கிட்டீங்க அதனால உங்க கூட அதுவரை வாழ்றதுக்கு சோரி சோரி நடிக்குறதுக்கு எனக்கும் சில கன்டிசன்ஸ் இருக்கு." அவன் கேள்வியாய் நோக்க

"நம்பர் வன் என்னால நடிக்க முடியாது. ஏன்னா இரண்டு மாதிரி பொய்யா நடிக்க என்னோட அப்பாம்மா வளக்கல்லல. நீங்க சொன்னதையே நான் இரண்டு ஒப்ஸனா உங்களுக்குத் தாரேன் ஒன்னு கதவுக்கு இந்தப்பக்கம் எப்படியோ அந்தப்பக்கமும் அப்படியே இல்லை கதவுக்கு அந்தப் பக்கம் எப்படியோ இந்தப்பக்கமும் அப்படியே. எது வசதி நீங்களே முடிவு பண்ணிக்கோங்க."

"ஏய் உன்கூட ரூமுக்குள்ள ஒட்டி உறவாடிக்கிட்டு இருக்க சொல்லுறாயா? அப்படி இருக்க முடியாது. ஆனால் எங்கம்மாவுக்கு மட்டும் ஏதும் சந்தேகம் வந்துச்சு உன்னை தொலச்சிடுவேன்."

"ஸோ நீங்க ஃபெர்ஸ்ட் ஒப்ஸனை சூஸ் பண்ணிருக்கீங்க குட். நல்லா யோசிச்சுத்தானே முடிவு பண்ணிருக்கீங்க இல்லை ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கா?"

"இங்கப்பாரு நீ இந்த வீட்டை விட்டு போற வரை எங்கம்மாவுக்கு இந்த கான்ட்ரெக்ட் விசயம் தெரியக் கூடாது. என்னால உன் கன்டிசனை ஏத்துக்கவும் முடியாது உன் கன்டிசனை நீதான் மாத்திக்கனும்." அவன் கூற 'இந்த விசயம் அத்தைக்கு மட்டுமில்ல இப்போதைக்கு எங்கப்பா அம்மாவுக்குத் தெரியுறதும் நல்லதில்லை.....' சிறிது யோசித்தவள்

"ஓகே நீங்க சொன்ன மாதிரியே வச்சுக்கலாம். ஆனால் வெளியிலேயும் நம்ம உறவு தாமரை இலை தண்ணீர் போல ஒட்டி ஒட்டாமலிருக்கனும். மத்தவங்களுக்காக நடிக்கிறேன் என்று தொட்டுப் பழகுற வேலையெல்லாம் வச்சுக்க கூடாது. நம்பர் ட்டூ என்னால ஒரே ரூம்ல இருந்துக்கிட்டு கதைக்காம எல்லாம் இருக்க முடியாது அதனால இருக்குறவரை என்னோட நல்லபடியா கதைக்கனும் அடுத்தது நான் உங்ககிட்ட மனைவி என்ற எந்த உரிமையும் எடுத்துக்க மாட்டேன் அதே மாதிரி நீங்களும் எந்த உரிமையும் எடுத்துக்க கூடாது. ஆனால் உங்கம்மாக்கு முன்னாடி நடிக்கனுமென்றால் ஒரு மனைவிக்கான கடமைகளை நான் செய்வேன் நீங்க தடுக்கவும் கூடாது."

"என்ன நீ என்னோட மொத்தக் கன்டிசனையும் உன்னோட இஷ்டத்துக்கு மாத்திட்டிருக்க. அதெல்லாம் முடியாது"

"அப்படியா அப்போ இப்பவே போய் அத்தைகிட்ட எல்லாத்தையும் சொல்லி எனக்கான நியாயத்தைக் கேட்குறேன்." என எழுந்தவளை தடுத்து நிறுத்தியவன்

"இவ்வளவு தானா இல்ல இன்னும் வச்சிருக்காயா?" அவன் கேள்வியில் புன்னகைத்தவள்

"என்ன சொன்னீங்க தண்டவாளம் போல கடைசி வரை சேரமாட்டோமா? அந்தக் கதையெல்லாம் என்கிட்ட வேண்டாம் என்னப் பொறுத்தவரை என் லைஃப்ல ஒருத்தருக்குத்தான் வைஃபா இருக்கனும் அவரோடேயே என் கடைசி மூச்சு நிக்கனும் இதுதான் என் லாஸ்ட் கன்டிசன் ஓகே"

" ஏய் என்ன நீ வாய்க்கும் மூளைக்கும் சம்பந்தமில்லாம கதைக்குறாய். அப்போ எதுக்கு இந்த பேர்ப்பஸ்ல சைன் போட்ட. இப்பதானே என் கன்டிசனுக்கு ஓகே சொன்ன அதுக்குள்ள பிளேட்ட அப்படியே திருப்பிப் போடுற" அவன் எகிற

"கூல் பேபி கூல், நான் சொன்னதுல என்ன தப்பிருக்கு இல்ல நான் தெரியாமத்தான் கேட்கிறேன் கஷ்டப்பட்டு பெத்து வளத்து உங்களுக்கு கல்யாணம் பண்ணித்தந்தா நீங்க எக்ரிமென்ட் போட்டு எங்க லைஃப ஸ்பொயில் பண்ணுவீங்களா ஹா... ஓகே இவ்வளவு கதைக்குற நான் ஏன் சைன் பண்ணினேன் என்று யோசிக்குறீங்களா? சொல்லுறேன் இப்போ நான் சைன் பண்ணல்ல என்றால் இந்த நிமிஷமே ரூம விட்டும் உங்க லைஃப விட்டும் போகச் சொன்னீங்க. அதுக்கு நான் ரெடி இல்ல. நான் போனா எங்கம்மா அப்பா காலத்துக்கும் என்னை பார்த்து கவலைப்படுவாங்க அந்த காயத்தை அவங்களுக்கு கொடுக்க நான் விரும்பல்ல அதனால நான் உங்க கூடதான் இருக்கனும் இதுதான் நான் சைன் பண்ணிணதுக்கான முதல் காரணம்." இடையில் அவன் குறுக்கிட கை உயர்த்தித் தடுத்தவள்

"நான் இன்னும் கதைச்சு முடிக்கல்ல. நீங்க என்னப்பத்தி ஏதோ தப்பா விளங்கியிருக்கீங்க அதுமட்டும் நல்லா புரியுது. அதுக்கான எந்த விளக்கம் கொடுக்கவும் நான் தயாரில்லை ஏன்னா உண்மையிலே உங்களுக்கு என்னை யாருன்னு தெரியாது நான் என்ன விளக்கம் கொடுத்தாலும் இப்போதைக்கு நிச்சயமா நீங்க நம்ப மாட்டீங்க அதனால உங்க கூட வாழ்ந்து என்னை நான் ப்ரூஃப் பண்ணிக்க விரும்புறேன் இதுதான் சைன் பண்ணதுக்கான இரண்டாவது காரணம். எனக்கொரு தங்கச்சி இருக்கா அவளுக்கும் கல்யாணமாகனும் முதல்ராத்திரியே கடைசிராத்திரியாகி வாழாவெட்டியா போய் நிக்க என்னால முடியாது. இதுதான் என்னோட மூனாவது காரணம். அத்தோட நீங்க எனக்கு ஆறு மாசம் டைம் கொடுத்திருக்கீங்க ஆனால் என்னை நிரூபிக்க எனக்கு மூனு மாசம் போதும் இது என்னோட நாலாவது காரணம். இதுக்கெல்லாம் முதல் முக்கியமான ஒரு காரணமிருக்கு." அவன் கேள்வியாய் நோக்க

"காதல் உங்க மேல நான் வச்ச காதல்"

"காதலா இது என்ன நாடகம். நீ இன்றைக்குத்தான் முதன்முதலாக என்னைப் பார்த்த அதுக்குள்ள காதலா நம்புற மாதிரியா இருக்கு?" அவன் நம்பாத பார்வை பார்க்க

"உங்கள நான் நம்ப சொல்லல்லையே. நீங்கதான் மாப்பிள்ளை என்று வீட்டுல காட்டின போட்டோவைப் பார்த்ததுல இருந்து எனக்கானவர் நீங்கதான் என்று என் உள் மனசு சொல்லுச்சு. அந்த நிமிஷமே நான் உங்கள காதலிக்க ஆரம்பிச்சுட்டேன் என்னோட முதல் காதலும் நீங்கதான் என்னோட கடைசிக் காதலும் நீங்கதான். அதனால அதை யாருக்காகவும் எதுக்காகவும் எந்த சந்தர்ப்பத்துலையும் இழக்க நான் ரெடியே இல்லை. அதுதான் நான் சைன் பண்ணினதுக்கான முழுக் காரணம். என்ன சொன்னீங்க உங்கள என் வலையில விழ வச்சு காதலிக்க வச்சு என்னோட திட்டத்தை நிறைவேத்திக்க போறேனா? இப்போ சொல்லுறேன் எந்த காதல் என்மேல வராது என்று சொன்னீங்களோ அந்தக் காதல் என் மேல உங்களுக்கு வரும் காதலுக்காகவே நீங்க என்னை காதலிப்பீங்க. என்றைக்குமே சேரமுடியாத தண்டவாளம் தான் நம்ம வாழ்க்கை என்று சொன்னீங்களோ நீங்க இல்லாம நான் இல்லை என்றளவுக்கு ஈருடல் ஓருயிரா நாம வாழுவோம் அதோட மனைவி என்ற எந்த உரிமையும் எடுத்துக்க கூடாது என்றும் சொன்னீங்க அந்த உரிமைய நீங்களே எனக்கு தருவீங்க உங்க மனைவி என்ற முழு உரிமையோட உங்க கூட நான் காலத்துக்கும் வாழுவேன் இது என் மேலயோ இல்ல உங்க மேலயோ இருக்குற நம்பிக்கையில சொல்லல்ல என் காதல் மேல இருக்குற நம்பிக்கையில சொல்லுறேன் சவாலாவே சொல்லுறேன்" அவளின் உறுதியான வார்த்தைகளில் அவளை திகைப்புடன் பார்த்திருக்க

"என்ன அப்படியே திகச்சு நிக்கீங்க அமைதியான பொண்ணு நாம என்ன சொன்னாலும் ஆமாஞ்சாமி போடுவா என்று நினச்சீங்களா? அதுக்கு நீங்க வேறாள பார்க்கனும் இந்த நயனி அன்புக்கு நூறு வீதம் கட்டுப்படுவா அதிகாரத்துக்கோ ஆணவத்துக்கோ என்றைக்கும் கட்டுப்பட மாட்டா இப்போ உங்களுக்கு கிளியரா இருக்குமே"

"திமிரா?"

"இல்லை இது செல்ஃப் ரெஸ்பக்ட்" கூறிவிட்டு கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியிட்டவள்

"எனக்கு கடும் டயர்டா இருக்கு ஸோ நான் தூங்கப் போறேன். கட்டில்ல தூங்கினதும் இந்த உருள்ர பெறல்ர வேலையெல்லாம் எனகிட்ட கிடையாது அத்தோட என் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு உங்க மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா நான் கட்டில்ல இந்த பக்கம் படுத்துக்கிறேன் நீங்க அந்தப் பக்கம் படுத்துக்கோங்க." கூறியவள் அவன் பதிலை எதிர் பாராது மின்விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கை போட்டுக் கொண்டு தூங்கினாள். அவள் போட்ட போடில் சில கணங்கள் அப்படியே அசைவற்று நின்றவன் ஒருவாறு தன்னிலையடைந்து சில கணங்கள் அவளை முறைத்துக் கொண்டு நின்றான்.

''திமிரு புடிச்சவ'' சத்தமாக கூறியவன் மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான். அவனிடமிருந்து சீரான மூச்சு சத்தம் கேட்க மெல்ல அவன் புறம் திரும்பியவள் வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்திருந்தவளுக்கு அவன் பேசிய அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நினைவு வர தன்னை அறியாமல் கண்கள் நனையத் தொடங்கின. கேவலாக ஆரம்பித்தவளுக்கு கத்தி அழ வேண்டும் போல் எண்ணம் தோன்ற எங்கே தான் அழும் சத்தம் கேட்டால் எழுந்து விடுவானோ என்ற பயத்தில் அவசரமாக குளியலறையில் நுழைந்தவள் டெப்பை திருப்பிவிட்டு கதறித் தீர்த்துவிட்டாள். அவள் கண்ணீர் வற்றும் வரை குளியலறையை விட்டு வெளியே வரவில்லை. ஒருவாறாய் மனது சமாதானப்பட வெளி வந்து தன் பக்கத்துக்கு சென்று படுத்தவள் சிந்திக்கத் தொடங்கினாள்.
'என்னால இவரை விட்டு நிச்சயமா பிரிஞ்சிருக்க முடியாது நான் விட்ட சவால்ல கட்டாயம் ஜெயிச்சுக் காட்டனும் அதுக்காக கொஞ்ச நாள் எல்லோர் முன்னாடியும் அவர் சொன்ன மாதிரி ரொம்ப சந்தோசமா இருக்குற மாதிரி நடிக்கத்தான் வேணும். ஆனால் நிச்சயமா அந்த நடிப்பை நான் உண்மையாக்குவேன் வர்தன் என் காதலை உங்களுக்கு நிச்சயமா புரிய வைப்பேன் அதேமாதிரி உங்க முழுக் காதலையும் நான் அனுபவிப்பேன். கடவுள் போட்ட இந்த பந்தத்தை நான் ஒரு போதும் உடைய விடமாட்டேன். இது உறுதி' என்று தனக்குத்தானே சபதம் எடுத்தவள் அதன் பிறகே நிம்மதியாக துயில் கொள்ளத் தொடங்கினாள்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇👇👇

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 18


காலையில் துயில் கலைந்தவள் முதலில் எங்கிருக்கிறோம் என புரியாமல் தடுமாறினாள் பின் ஞாபகம் வந்தவளாய் தன் மன்னவனைத் தேட அவன் பெல்கனியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தான். தனக்கு மட்டுமே சொந்தமான அவன் கட்டுமஸ்தான உடலை ரசித்தவாறே குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். உடற்பயிற்சியை முடித்த ஆதித்யன் குளிக்க வர தலைக்குத்துண்டை கட்டிக் கொண்டு குளியலறையிலிருந்து வெளிவந்தவள் அவனைக் கண்டதும்

"ஹாய் மைடியர் குட் மோர்னிங்" தன் வெளிர்பற்கள் மின்ன சிரித்தவளை ஏறெடுத்தும் பார்க்காமல் முசடுபோல் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான். வேறொருவரெனில் நிச்சயமாக காலைப் பனிக்குளித்த ரோஜா போல் இருந்தவளை ஒருகணமேனும் ரசித்திருப்பார்கள் ஆனால் அவன் ஆதித்யவர்த்தனல்லவா அதனால்தான் பெண்ணவள் பக்கம் கண்ணைக் கூட அசைக்கவில்லை. சாத்திய கதவை சில கணங்கள் முறைத்திருந்தவள் 'எவ்வளவு நாளைக்கு இப்படி இருக்கப் போறீங்க என்று பார்க்கலாம்' தனக்குள் பேசிக் கொண்டே அவன் வருவதற்குள் புடவையை உடுத்தியவள் ஈரக்கூந்தலை உலர்த்த தலைமுடியை விரித்து இடையிடையே கைகளால் கோதிவிட்டவாறே நடக்கத் தொடங்கினாள். குளித்த பின்னும் தேநீர் அருந்தாதது பசியுணர்வைத் தூண்ட பெண்ணவளும் அடுத்து என்ன செய்வது என அறியாது பெல்கனிக்குச் சென்றவளுக்கு கடலினுள் இருந்து பெரிய வண்டிச் சக்கரம் போல் சூரியன் தன் பொற்கதிர்களை விரித்து எழுந்திருக்க அதனை வரவேற்க பறவைகள் இனிமையாக இசையெழுப்ப தென்றல் இதமாக தீண்டிச் செல்ல கடற்கரையின் காலைப் பொழுது அவள் கண்களுக்கு விருந்து படைக்க தன் வயிற்றுப்பசியைக் கூட மறந்து அப்படியே அந்தக் காட்சியில் லயித்திருந்தாள். குளியலறையிலிருந்து வந்தவன் அவளை அங்கு காணாமல் பெல்கனியை பார்க்க ஈரக்கூந்தலை விரித்து விட்டு பொற்சிலை போல் நின்றிருந்தாள் பெண் அவளை சிறிதும் கணெக்கெடுக்காமல தேநீருக்கும் காலை உணவுக்கும் சேர்த்து ஓடர் கொடுத்தவன் அவை வந்ததும் அவளை அழைத்தான்.

"டீ வந்துடுச்சு அத்தோட சான்ட்விச்சும் இருக்கு எடுத்துக்கலாம்" என்றவன் அதன் பிறகு அவளுக்கும் தனக்கும் எதுவித சம்பந்தமுமில்லை என்பது போல் தனக்கானதை எடுத்துக் கொண்டு ஒரு இருக்கையில் அமர்ந்தவன் எதுவும் பேசாது தன் வேலையில் ஈடுபட்டான். அவளும் தனக்கானதை எடுத்துக் கொண்டு மீண்டும் பெல்கனிக்குச் செல்ல

"எங்க போற இங்க இருந்து குடிக்க வேண்டியதுதானே" அவனையுமறியாமல் வந்து விழுந்தன வார்த்தைகள். அவனை திரும்பிப் பார்த்தவள்

"அங்க எவ்வளவு அழகாக இருக்கு தெரியுமா?இதுதான் நான் இந்த டைம்ல பீச்ல இருக்குறது முதல்தரம் இந்தக் காட்சி இனியொரு தரம் பார்க்க கொடுத்து வச்சிருக்குமோ என்னவோ அதனால இன்றைக்கே அனுபவிச்சுக்க நினைக்குறேன் நீங்களும் அங்க வந்து டீ குடிங்களேன் சூப்பரா இருக்கும்." என்றவளை முறைத்துப் பார்த்தான் அவன். அதற்குப் பிறகு அவள் அந்த இடத்தில் நிற்பாளா என்ன? சில மணி் நேரங்கள் கடந்த பின் கதவு தட்டப்படும் ஓசை கேட்க நயனதாரா தான் சென்று கதவைத் திறந்தாள் எதிரே காயத்ரியும் ரஞ்சனியும் நின்றனர்.

"அட வாங்க அத்தை வாங்கம்மா" உள் அழைத்துச் செல்ல அவர்களோ அவளின் ஈரக் கூந்தலைப் பார்த்து திருப்தியுற்றவர்களாக உட் சென்றனர்.

"ஆதி, நயனா நல்ல நேரத்துக்குள்ள வீட்டுக்குப் போகனும் போகலாமா நீங்க தயாரா?" என காயத்ரி கேட்க நயனதாரா தலையாட்ட

"ஓம் அம்மா ரெடிதான் இதுக்கு மேல இங்க என்ன பண்ண வாங்க சீக்கிரம் வீட்டுக்குப் போவோம்" என்ற ஆதியைப் பார்த்து

"ஆதி நம்ம வீட்டுக்கில்லப்பா முதல்ல நீங்க நயனி வீட்டுக்குத்தான் போகனும் அங்க சில சடங்கு சம்பிரதாயங்கள் இருக்கு அத்தோட லன்ஞ்சும் அங்கதான் ஈவினிங்தான் நம்ம வீட்டுக்கு வரோனும் அதனால இப்போ நயனி வீட்டுக்குத்தான் போகனும்" என காயத்ரி விளக்க தாயை ஒரு பார்வை பார்த்தவன் எதுவும் கூறாது போக தயாரானான்.

***************************************

மணமக்கள் வந்ததும் ஆரத்தி எடுக்க இருவரும் வலது காலை வைத்து வீட்டுக்குள் சென்றவர்கள் முதலில் பூஜை அறைக்குள் சென்று வணங்கிய பின் பால் பழம் கொடுத்து இருவரையும் பாதிபாதியாக உண்ண வைத்தனர். ஆதித்யன், நயனியிடம் வந்த வாசுதேவன்

"நயனிம்மா மருமகனை உங்க ரூமுக்கு கூட்டிட்டுப் போம்மா அவர் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கட்டும்"

"இல்லை அங்கிள் இருக்கட்டும் முதல்ல நீங்க இப்படி உட்காருங்கோ உங்க கூட கதைக்க இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கல்ல இப்போ நாம கொஞ்சம் கதைச்சுட்டிருக்கலாமே" என்று நயனியுடன் தனித்திருக்கும் சந்தர்ப்பத்தை தவிர்க்க வாசுதேவனை அமரச் சொன்னவன் தானும் அமர்ந்து கொண்டான். குடும்பத்திலுள்ள மற்றையவர்களும் வந்துசேர மகிழ்ச்சியுடன் கதைபேசிக் கொண்டிருந்தனர். தன் வீட்டு மருமகனுக்கு முதன்முதலாக கொடுக்கும் விருந்து என்பதால் எதிலும் குறைவைக்காது மிகச் சிறப்பாக மதிய உணவை தயாரித்திருந்தார் ரஞ்சனி சுவை மிகுந்த உணவை உண்டு விட்டு வந்தவனை ஓய்வெடுக்கச் சொல்ல இனி தவிர்க்க முடியாது என்று எண்ணியவனாய் நயனியின் அறையில் சிறிது ஓய்வெடுத்தான்.

மாலை மங்கி வர தன் புகுந்தவீட்டுக்கு செல்லத் தயாரானாள் நயனதாரா. மாமியார் அனுப்பிய அந்த அழகான இளஞ்சிவப்புப் பட்டுப் புடவையை நேர்த்தியாக உடுத்தி வந்தவளை அமர வைத்த தாரணி தலையை பின்னளிட்டு மல்லிகைப்பூக்களை அடர்த்தியாக வைத்தவள் பெரிய பதக்கம் வைத்த நீண்ட ஆரத்தை கழுத்தில் அணிந்து விட்டாள் கைகளில் வளையல்களை அடுக்கியவள் ஒட்டியாணத்தை அணிந்து விட அவளின் வளைந்த இடைக்கு அது இன்னும் எடுப்பாக இருந்தது. நயனதாரா தன் உச்சிவகிட்டில் திலகத்தையிட்டதும் அவளுக்கு நெற்றிச் சுட்டியை சூடிவிட்ட தாரணி காதுகளுக்கு குடை சிமிக்கிகளையும் போட்டுவிட்டாள். தோழியின் அழகில் திருப்தியுற்றவள் அவளையும் அழைத்துக் கொண்டு வெளியேற எத்தனிக்கையில் ஆதித்யன் அறையில் நுழைய தாரணியை அனுப்பிவிட்டு கதவை தாழிட்ட நயனியை கேள்வியாய் நோக்கினான் அவளவன். அவன் முன்னால் வந்தவள் முன்னும் பின்னுமாக திருப்பிக் காட்டியவள்

"மைடியர் புருஷன் உங்க பொண்டாட்டி எப்படி இருக்கேன் கொஞ்சம் நல்லா பார்த்து சொல்லுறீங்களா?" எனக்கேட்க அவளை முறைத்தவன்

"நான் ட்ரெஸ் சேன்ச் பண்ணனும். வளவளக்காம வெளிய போறியா?"

"நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்கோ இப்பவே போறேன். என்ன எதைக் கேட்டாலும் இப்படி மொறச்சு பார்த்துட்டே இருக்கீங்க. ஏங்க நான் பார்க்க அவ்வளவு அழகா இருக்கேனா?" அவன் மீண்டும் முறைக்க

"அதுக்கு மொறைக்கனும் என்று அவசியமில்லையே அழகா கூல்லா என்னை நீங்க சைட் அடிக்கலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன். என்ன இப்போ சொல்லுங்கோ உங்க லவ்லி வைஃப் ப்யூட்டிபுல்லா இருக்கேனா? ஐயோ நல்லா பார்த்து சொல்லுங்கோ மாமா" அவளின் 'மாமா' என்ற வார்த்தையில் ஒரு சின்னச் சிட்டின் ஞாபகம் அவனுள் எழ கடுப்பானவன்

"ஏய் நீ என்ன என்னைய மாமா என்று கூப்பிடுற ஏன் அப்படி கூப்பிடுற. எதுக்காக?" அவன் படபடக்க

"என்னன்னு தெரியல்ல சட்டென்னா உங்களை அப்படிக் கூப்பிடனும் போல இருந்துச்சு. சரி அதைவிடுங்க என் கேள்விக்கு பதிலில்லாம நான் இங்கிருந்து போக மாட்டேன். பிறகு எனக்கு முன்னுக்குத்தான் ட்ரெஸ் மாத்தனும் எப்படி வசதி"

"என்ன உன்னோட வீடுன்னு மிரட்டுறாயா? இப்போ என்ன நீ எப்படி இருக்கன்னு சொல்லனும் அவ்வளவுதானே." ஒருமுறை மேலிருந்து கீழாக பார்த்தவன்

"ம்... நீ பார்க்க எப்படியிருக்க தெரியுமா?" அவளின் ஆவல் கலந்த முகத்தைப் பார்த்ததும்

"ரொம்ப அசிங்கமா இருக்க. போதுமா உன்னோட கேள்விக்கு பதில் கெடச்சிடுச்சா இப்போவாவது வெளிய போறாயா?" அவனின் பதிலில் மனம் லேசாக வலித்தாலும் முகத்தில் சிரிப்பு மாறாது

"தாயிங்ஸ், அதைச் சொல்லுறதுக்காவது என்னை முழுசாப் பார்த்தீங்களே. ஆனால் ஒருநாள் நான் கேட்காமலே இதே கண்கள் என்னை ஆசையோட பார்த்து ரசிக்கும் அந்த நம்பிக்கை எனக்கிருக்கு. அதுவரை நான் காத்திருப்பேன்."

"கடும் நம்பிக்கை. காத்திருந்து கிழவிதான் ஆகப் போற. ஆனால் பாவம் நீ நினைக்குறது ஒருநாளும் நடக்காது. என்னை என்ன சாதாரண ஆம்பிளை என்று நினச்சுட்டாயா உன் அழகைப் பார்த்து மயங்கி உன் வலையில விழ நான் ஆதித்யவர்த்தன் உன்னோட மாயாஜாலத்துக்கெல்லாம் மயங்கமாட்டேன்." அவனின் சுடு சொற்கள் பெண்ணவளை பதம் பார்த்தது ஆனாலும் வருத்தத்தைக் காட்டாது உள்ளே மறைத்தவள் போலியாக சிரிக்க

"பரவாயில்ல வலிக்கக் குட்டு வாங்கினாலும் நல்லாவே நடிக்குற ம்.... வருங்காலத்துல நமக்கு இது நல்லாவே தேவைப்படும்" என்று மீண்டும் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

நல்ல நேரம் பார்த்து ஆதித்யனின் சகோதரிகள் மணமக்களை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். அவர்களுடன் மணமக்கள் மட்டுமன்றி பெண்வீட்டாரும் உடன் சென்றனர். வந்தவர்களுக்கு காயத்ரி ஆரத்தி எடுக்க இருவருமாய் வலது காலை வைத்து உட்சென்றவர்களை தனலட்சுமி பூஜையறைக்கு அழைத்துச் சென்றார் நயனதாரா தன் மாமியார் வீட்டில் விளக்கேற்றி கடவுளை வணங்கியவள் ஆதித்யனின் கால்களில் விழுந்து வணங்க அதை எதிர்பாராதவன் தடுமாற அவனிடம் வந்த காயத்ரி

"ஆதி மருமகளை உன் கையால எழுப்பி இந்த குங்குமத்தை அவ நெற்றியில வச்சுவிடு"

"அதான் ஏற்கனவே வச்சாச்சேம்மா இப்போ திரும்பவும் எதுக்கு"

"இங்கப்பாருப்பா ஒரு கணவன் தன்கையாலேயே தன்ட மனைவிக்கு குங்குமத்தை திலகமிட்டா அதைவிட சந்தோசம் அந்த பெண்ணுக்கு எதுவுமில்லப்பா அதுமட்டுமில்லப்பா உச்சிவகிட்டில மகாலட்சுமி குடியிருக்கா என்று சொல்லுவாங்க எல்லா ஐஸ்வர்யங்களும் உங்களுக்கு கிடைக்கனும் என்றும் உன்னோட ஆயுள் பலன் கூடனுமென்றும் நல்லா வேண்டிக்கிட்டு வைச்சுவிடுப்பா" தாயின் உத்தரவிற்கேற்ப இயந்திரம் போல் அவளைத் தொட்டு தூக்கி நிறுத்தியவன் அவள் நெற்றியிலும் உச்சிவகிட்டிலும் குங்குமத்தை வைக்க
'நீங்க என்னதான் என்னை மனைவியா ஏத்துக்கல்ல என்றாலும் நான் உங்களுக்கே உரியவள் என்ற அடையாளத்துக்கான என் உச்சிவகிட்டிலே உங்க கையால திலகமிட்டுட்டீங்க இது போதுங்க உங்கம்மாக்காகத்தான் இப்போ இதை நீங்க செஞ்சாலும் ஒருநாள் நிச்சயமா உங்க விருப்பத்தோடவே எனக்கு குங்குமம் வச்சுவிடுவீங்க. அந்த நம்பிக்கை எனக்கு நூறு வீதமிருக்கு' எண்ணமிட்டவள் இமைகளை மூட விழியோரம் நீர் கசிந்தது அதை யாருமறியா வண்ணம் துடைத்தவள் தன்னை சரி செய்து கொள்ள அது அவன் கண்களுக்குப்பட்டது.
'என்ன இவ ஒரு குங்குமம் வச்சதுக்கு கண்ணுகலங்குறா ஒருவேளை அம்மா சொன்ன மாதிரி இவ நல்லவதானோ நாமதான் தப்பா விளங்கிட்டோமோ....' அவன் மனது சரியாக சிந்திக்க

'சேச்சே இருக்காது இதுவும் இவ நடிப்பாத்தான் இருக்கும் அவ எனகிட்ட சவால் விட்டிருக்காயில்ல அதுக்குத்தான் இந்த டிராமாவ ஆரம்பிச்சிருக்கா இவளாவது நல்லவளாவதாவது' ஆனால் அவனது வியாபார மூளையோ தவறாக முடிவெடுத்தது.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇

 

Aara dilfar

Member
Vannangal Writer
Messages
46
Reaction score
85
Points
18
ஒற்றை நிலவின் மேல் இரண்டு மேகங்கள்.

நிலவு - 19


தனலட்சுமியின் மொத்தக் குடும்பமும் அவரைச்சுற்றி அமர்ந்திருக்க அவரின் உள்ளம் சந்தோசத்தில் பூரித்திருந்தது.

"ம்... ஒரு வழியா என் பேரனோட கல்யாணம் முடிஞ்சிடுச்சு. என் பேத்தியும் வீட்டுக்கு வந்துட்டா இப்ப என்னைவிட சந்தோசம் இந்த உலகத்துல யாருக்குமில்லை" என ஆனந்த கண்ணீர் விட

"என்ன அம்மா இது சின்னப்புள்ளை மாதிரி" சாவித்ரி தன் தாயிடம் கேட்க

"அதானேக்கா என்ன இது? சின்னப்புள்ளையே தான்" தங்கலட்சுமியின் கேலியில் அவர் புறம் திரும்பியவர்

"இது சந்தோசத்துல வார ஆனந்தக் கண்ணீர். இதுல ஏது சின்னவங்க பெரியவங்க. சரி அதைவிடு என்ன என் அருமை தங்கச்சியாரே எப்போ உங்க வீட்டு காளைங்களுக்கு மூக்கணாங்கயிறு போடப் போறீங்க. நீங்க எப்போ ஆனந்தக் கண்ணீர் விடப்போறீங்க." தனலட்சுமி தன் தங்கை தங்கலட்சுமியை பார்த்துக் கேட்க தங்கள் தலைதான் இன்று உருளப் போகுதா? இந்தக் கூட்டத்துக்கு நாமதான் அவலா? என சங்கரும் தினகரும் பார்க்க அவர்களை முறைத்தவாறே

"எங்க அக்கா இவனுங்க பிடி கொடுக்காம நழுவிக்கிட்டே இருக்கானுங்களே. இப்போதைக்கு தினகரை யோசிக்கத் தேவையில்லை இந்த சங்கர் பயல்தான் தப்பிச்சிட்டிருக்கான். அவனுக்கு நடந்தால்தானே இளையவனை யோசிக்கனும். என்ன செய்ய எப்படியோ ஆதி கல்யாணம் கட்டிக்க ஒத்துகிடிச்சு. அவன்கூட தானே இவனும் இருக்கான் இனியாவது ஒத்துகுவானாக்கும். இதுக்கு மேல தள்ளிப் போடவும் முடியாது. இனி இவன்கிட்ட எதுவும் கேக்குறதாயில்லை. இங்கப்பாருப்பா நாங்களே பொண்ணு பார்க்கப் போறோம் கட்டுடா தாலியை என்றால் மறுகதை கதைக்காம நீ கட்டிட வேண்டியதுதான் இவனுங்களுக்கு அதிரடிதான் சரி" தங்கம் ஒரு போடுபோட

"ஐயோ என்ன பாட்டி இப்படி சொல்லிட்டீங்க. கல்யாணம்தானே கட்டிக்கலாம். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நானே வந்து சொல்லுறேன் அப்போ பொண்ணு கேட்டுப் போங்கோ" சங்கரின் பதிலில்

"என்ன கேட்டுப் போகயா? அப்போ பொண்ணு நீ பார்த்துட்டாயா?" தங்கலட்சுமி பேரனிடம் நேராகவே கேட்க

"ஐயோ இல்லை பாட்டி பார்க்கப்போங்கோ என்று சொல்லுறதுக்குப் பதிலா கேட்டுப் போங்கோ என்று வந்திடுச்சு. தங்கு ஸிலிப் மை தங்கமே" என்று அவர் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள அவரும் அவனுக்கு செல்லமாய் ஒரு அடிவைத்தார். தாயின் புறம் திரும்பியவன்

"மை டியர் மம்மி நீங்க உங்க மருமகளுக்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்குறீங்க. ஐ மீன் சீதனம்" சங்கரின் பார்வை தாரணியிடம் இருக்க தன் தாயிடம் கேள்வியைத் தொடுத்தான்.

"ரொம்ப அதிகமான சீதனம்தான் நான் என் மருமகளுகிட்ட இருந்து எதிர்பார்க்குறேன்." அவனின் தாய் வாசுகி கூற தாரணி அவரையே பார்த்திருந்தாள்.

"என்ன மாம் இப்படி குண்டத் தூக்கி போட்டுட்டீங்க?"

"அட சும்மா இருடா என் மருமகளுகிட்ட வீடு வளவு நகை நட்டு இதெல்லாம் எதிர்பார்க்கல்லடா உன்னையும் நம்ம குடும்பத்தையும் நல்லா பார்த்துக்கிறவளா அன்பும் பண்பும் நிறஞ்சவளா இருக்கனும் நான் அவகிட்ட இருந்து எதிர்பார்க்குறது இந்த சீதனத்தைத் தான். இது ரொம்ப விலை உயர்ந்தது தானேடா. உதாரணத்துக்கு நம்ம நயனா மாதிரி" இதைக் கேட்ட ஆதித்யன் 'ஐயோ சித்தி இவ குணம் தெரியாம இப்படி எதிர்பார்க்குறீங்களே இவளைப் போல ஒருத்தியா? நாடும் தாங்காது வீடும் தாங்காது சித்தி அப்படியென்றால் உங்களுக்கும் ஒரு காசுப் பைத்தியம் தான் வந்து சேரும் இது தெரியாம இவளைப் போய் நல்லவளா நினைக்குறீங்க.' தன் மனையாளைப் பற்றி இப்படி எண்ணமிட்டவன் சங்கர் ஏதோ பேச அவன்புறம் திரும்பினான்.

"ஐயோ அவங்க நோ வேகன்ஸி. ஸோ வேற எக்ஸாம்பிள் சொன்னா பெட்டரா இருக்கும். இங்க வேற எத்தனையோ பேர் இருக்காங்க இல்லை" பார்வை தாரணியிலே இருக்க அவன் வாய் தான் மற்றையவர்களிடம் பேசிக் கொண்டிருந்தது.

"டேய் சங்கர் நீ யாரையோ மனசுல வச்சுகிட்டுத்தான் கதைச்சிட்டு இருக்க யாருன்னு சொல்லு உடனே கல்யாணத்தை பேசி முடிச்சிடலாம்." தனலட்சுமி சரியான பொயின்டை பிடிக்க தாரணியின் உள்ளம் தடதடக்க தலை குனிந்தாள். அதனை கண்ட சங்கர் வாய்விட்டு சிரித்தவன் 'இதுக்கு மேல மறைக்க வேணாம் நம்ம மேட்டரை சொல்லுறதுக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்' என நினைத்தவன்

"வாவ் ஓல்வேயிஸ் யூ ஆர் கிளவர் பாட்டி ம்...... எஸ் யூ ஆர் கரெக்ட் பாட்டி ஆனால் இன்னும் அங்க இருந்து கிரீன் சிக்னல் கிடைக்கல்லையே முதல்ல அது கிடைக்கட்டும் பிறகு யாருன்னு நான் சொல்லுறேன்."

"டேய் மச்சி சொல்லவே இல்லை கூடவே இருக்கேன் என்கிட்டயே மறச்சுட்ட இல்லை."

"டேய் மச்சி அப்படி இல்லடா உன்னோட கல்யாணம் நடக்குதில்ல அதுதானே இப்போ ஸ்பெசல். அதனாலதான் மச்சான் சொல்லல்ல இந்த ஃபங்ஷன் எல்லாம் முடிஞ்சதும் உன்கிட்ட சொல்லனும் என்று நினைச்சேன் இப்படி சொல்லுறாயே நியாயமா? அத்தோட எனக்கே உன்னோட கல்யாணத்தப்போதானே தெரியும்" அந்த வார்த்தையில் நயனதாராவிற்கு ஏதோ பொறி தட்டியது சட்டென்று சங்கரை நோக்க அவன் பார்வை தாரணியை தொட்டு மீள தன் அருகிருந்தவளின் புறம் திரும்ப அவளோ நாணச் சிவப்பு முகம் முழுக்க அப்பிக் கிடக்க தலை குனிந்து தரை நோக்கியிருந்தாள்.

'அடிப்பாவி கதை அப்படிப் போகுதா. இப்போதானே விளங்குது கோயில்ல வச்சு இதுக்குத்தானா இரண்டு பேரும் திரு திரு என்று முழிச்சீங்க. ஏய் தாரு என்கிட்டயே மறச்சுட்ட இல்லை ஆனால் நான் கண்டுபிடிச்சிட்டேன். நீயா சொல்லுற வரை உனக்கிட்ட கேக்க எதுவுமில்லை. ஆனால் இது மட்டும் நடந்தால் இந்த உலகத்துலயே முதல்ல சந்தோசப்படப் போறது நான்தான்' எண்ணியவள் மீண்டும் பேச்சு சத்தங்கள் தொடர அதில் கவனத்தை செலுத்தினாள்.

"டேய் படவா யாருடா அந்தப் பொண்ணு இப்பவே சொல்லு கல்யாணத்துல தான் பொண்ணைப் பார்த்திருக்கனும் யாருடா அது நம்ம சொந்தமா?" தங்கலட்சுமி துருவ வாசுகியும் அந்தப் பெண்ணைப்பற்றி அறியும் ஆவலில் அவனிடம் பல வகையில் கிண்ட இவர்களுடன் தனலட்சுமி காயத்ரியும் மற்றையவர்களும் சேர்ந்து கொள்ள அவர்களை அடக்கியவன்

"இப்பதானே ஆதி கல்யாணம் முடிஞ்சிருக்கு கொஞ்ச நாள் போகட்டும் அவ யாரு ஊரென்ன பேரன்ன எல்லாம் தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லுறேன். இப்ப சொன்ன மாதிரி எல்லோரும் முன்ன நின்னு இந்தக் கல்யாணத்தை முடிச்சு தந்திடுங்கோ"

"முடிச்சிடலாம் ஆனால் பொண்ணுதான் எப்படி பார்த்திருக்க என்று தெரியல்லையே சரி நயனாவை உதாரணம் சொல்லக் கூடாதென்று சொன்ன அப்படியில்லாட்டி இந்த தாரணி பொண்ணு மாதிரி இருந்தாலும் எனக்கு ஓகே டா. நீ பார்த்தவ அப்படி இருப்பாளாடா?" தன் தாய் வழியாகவே தன்னவளின் பெயரை முதன்முதலில் தெரிந்து கொள்ள எல்லையில்லா மகிழ்ச்சியுடன் வாசுகியை அணைத்தவன் விழிகளோ வாசுகியின் வாய் தன் பெயரை உச்சரித்த அதிர்ச்சியில் உறைந்திருந்த தாரணியை நோக்கியிருந்தது

"அவளை உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும்மா. அவ நீங்க சொன்ன மாதிரி ரொம்ப நல்ல பண்புள்ள அழகான பொண்ணு தானம்மா" என்றான்.

"அப்பாடா ஒரு வழியா கல்யாணத்துக்கு ஓகே சொல்லி் பொண்ணையும் அவனே பார்த்துகிட்டான். டேய் தினகர் இப்போ உன்னோட ரூட் கிளியராயிடுச்சு. உன் மனசுலையும் யாராவது....." காயத்ரி இழுக்க

"ஐயோ பெரியம்மா என் கல்யாணத்துக்கு என்ன அவசரம் இன்னும் இரண்டு மூனு வருஷம் போகட்டும் முதல்ல அண்ணன் கட்டிக்கிடட்டும் எங்க அண்ணி யாருன்னு அதைக் கிளியர் பண்ணுற வழியைப் பாருங்க" தினகர் அக்கூட்டத்திடமிருந்து தன் தலையை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் சங்கரை கிண்டலடிக்கத் தொடங்கினர்.

"சரி சரி கிண்டலடிச்சதெல்லாம் போதும் இப்போ பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஒரு டாஸ்க் வைக்கப் போறேன்" என்று சங்கர் கூற
'மறுபடியுமா' என தம்பதியர் அவனை முறைக்க

"என்ன ரெண்டுபேரும் முறைக்குறீங்க. சரி சரி முறைக்காதீங்க என்ன டாஸ்கென்று சொல்லுறேன் அதுக்குப் பிறகு முறைக்க மாட்டீங்க"

"டேய் அண்ணா ரொம்ப கதைக்காம விசயத்துக்கு வா" என்று தினகர் கேட்க

"ஓகே நம்ம பொண்ணும் மாப்பிள்ளையும் பாடுறதுல ஒருத்தருக்கு ஒருத்தர் சளச்சவங்க இல்லை என்று ப்ரூப் பண்ணிட்டாங்க. அதேமாதிரி அவங்க கெமிஸ்ட்ரி எப்படியிருக்கென்று பார்த்திடலாமா?"

"ஓகே பார்த்திடலாமே ஆனால் எப்படி?" கோராசாக ஒலிக்க

"அதுக்குத்தான் இருக்கவே இருக்கு டான்ஸ் ஜோடி டான்ஸ். போட்டியை ஆரம்பிக்கலாமா?"

"டேய் உனக்கென்ன லூசா போடா உன் வேலையைப் பாரு என்னால முடியாது" ஆதி மறுக்க அவனுடன் சேர்ந்து நயனதாராவும் மறுத்தாள்.

"இப்படித்தான் இரண்டு பேரும் பாட்டு படிக்க முடியாதுன்னீங்க பிறகு தனித்தனியா இருந்த ஸோங்க இரண்டு பேரும் டூயட்டாவே பாடிட்டீங்க. அதனால இந்த கதையெல்லாம் கதைக்காம எழும்பி வாங்க ரெண்டுபேரும்" என்று கூறியவன் ஆதித்யனின் கைகளைப் பிடித்து இழுக்க காவியா நயனியை எழுப்பி விட்டாள். அப்போதும் தயங்கி நிற்க அவர்களுடன் இன்னும் சில இளஞ்சோடிகளும் சேர்ந்து கொண்டது பாடல் ஒலிக்க ஆட்டமும் ஆரம்பமானது. முதலில் அவளுடன் ஆடத் தயங்கியவன் போகப் போக அவளுக்கு ஈடு கொடுத்து ஆடத் துவங்கினான். அவளும் பாடல் வரிக்கேற்ப அவன் கையோடு கை கோர்த்தவள் சில நேரங்களில் அவனோடு ஒட்டி ஆடலானாள். இருவரும் சேர்ந்து ஆட பார்ப்பதற்கு அவர்கள் ஜோடிப் பொருத்தம் பிரமாதமாக இருந்தது. இறுதிவரை ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுக்காது சளைக்காமல் ஆடியவர்கள் பாடல் முடிய தன்னவன் நெஞ்சு மேல் நயனி சாய்ந்திருக்க அவளை கைகொண்டு அணைத்திருந்தான் ஆதித்யன் பாடல் முடிந்தும் அந்நிலையிலிருந்து விலகாதவர்களின் இருவிழிகளும் ஒன்றோடொன்று கலக்க மெய்மறந்து நின்றனர். அவர்களிடம் வந்த சங்கரோ

"நான் தான் அப்பவே சொன்னேனே இவங்க இரண்டுபேரும் முடியாதென்று தான் முதல்ல சொல்லுவாங்க பிறகு ஸ்டார் பண்ணிட்டாங்க என்றால் எங்க இருக்கோம் நம்மள சுத்தி ஆட்கள் இருக்காங்க என்று எல்லாத்தையும் மறந்திடுவாங்க போல. ம்.... நான் இம்பட்டுக் கதைக்குறேன் அவங்கள்ல ஏதாவது வித்தியாசம் தெரியுதா டேய் மச்சி பாட்டு முடிஞ்சு ரொம்ப நேரமாயிடுச்சுடா இன்னும் அதுல இருந்து வெளிய வராம இருக்கீங்க. முதல்ல முடியாது என்று சொல்லுவீங்க பிறகு வந்தா பாட்டு முடிஞ்சது கூட தெரியாம இருக்கீங்க. ஐயோ என்ன சொல்றது" கிண்டலடிக்க அப்போதுதான் சுற்றுப்புறம் புரிந்தவர்களாய் ஒருவரை விட்டு ஒருவர் விலகினர் காயத்ரியோ தன் மகனின் செயலைக் கண்டு கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார். நிச்சயமாக மகன் மனம் மாறி தன் மருமகளுடன் நல்லதொரு வாழ்வை ஆரம்பிப்பான் என்று மனதார நம்பினார்.

இவ்வாறே அரட்டையும் கூத்துமாக சந்தோசமாக இருந்தவர்களைப் பார்த்து ஷனாவும் ராஜேஸ்வரியும் வயிறெரிய அவர்கள் முகங்களைப் பார்த்து காயத்ரியும் தனலட்சுமியும் தமக்குள் சிரித்துக் கொண்டனர். பின்னர் நயனதாராவையும் ஆதித்யவர்த்தனையும் தன் பக்கத்தில் அமர்த்திய தனலட்சுமி

"அம்மாடி நயனா வரவேற்புல வச்சு எல்லாரையும் ஞாபகம் வச்சுக்க ரொம்ப கஷ்டப்பட்ட இப்போ என்னோட உறவுகள் எல்லோரும் இங்கதான் இருக்காங்க உனக்கு ஒவ்வொருத்தரா அறிமுகப் படுத்துறேன். அதுக்கு முன்ன எங்க பரம்பரைய பத்தி சொல்லுறேன் இதை நீ கட்டாயம் தெரிஞ்சுக்கிடனும்"

"நம்ம பரம்பரையப் பத்தியா சொல்லப் போறீங்க நயனிக்கு முன்ன எங்க யாருக்குமே அது தெரியாதே" இளவட்டங்கள் கத்த

"இரு இரு நான் இப்போ சொல்லுறேன் நீங்களும் தெரிஞ்சுக்கங்க. அம்மாடி நயனா இந்த பரம்பரையோட முதல் தலைமுறை ஆதித்யவர்த்தன் என் மாமனாரோட அப்பா அவரோட பேர்தான் உன் வீட்டுக்காரனுக்கும். அம்மா புவனேஸ்வரி ஆதித்யவர்த்தன் ஐயா இந்த ஊருக்கு தலைவரா இருந்தவரு இந்த ஊரில் பாதிக்கு மேல அவருக்கு சொந்தமானது. யாரு எது கேட்டு வந்தாலும் இல்லை என்றாமல் கொடுப்பாங்க புவனேஸ்வரியம்மாவும் அப்படித்தான் அதனாலதான் இன்னைக்கு வர நம்ம குடும்பத்துக்கு இந்த ஊரில் இவ்வளவு மதிப்பு மரியாதை. இவங்களுக்கு மூனு புள்ளைங்க மூத்தவரு ஆதித்யதேவன் அதுதான் என் மாமனார். என் மாமியார் லட்சுமி இரண்டாவது ராஜேஸ்வரியோட அப்பா ஆதித்யகேசவன் அம்மா சசிரேகா மூனாவது ஒரே ஒரு மகள் அம்பிகாதேவி அவர் வீட்டுக்காரவர் கதிரேசன். இது எங்க பரம்பரையோட ரெண்டாவது தலமுறை என் மாமனாருக்கும் மூனு புள்ளைங்க மூத்தவரு என் வீட்டுக்காரர் தனசேகர் இரண்டாவது இதோ இருக்குறாரே இவர்தான் ராஜசேகர் அவரோட வீட்டம்மா பார்வதி மூனாவது புவனேஸ்வரி அவ வீட்டுக்காரவர் மாதவன் அது இவங்கதான். அடுத்ததா என் சின்ன மாமனார் அதான் ராஜியோட அப்பா அவருக்கு இரண்டு மகளுங்கதான் ஒன்னு பத்மாவதி அவ புருஷன் கதிரவன் அவங்க இப்போ உயிரோடயில்ல அடுத்தது நம்ம ராஜேஸ்வரி அவ வீட்டுக்காரர் பேரு குமரேசன். அம்பிகா சித்திக்கு இரண்டு மகனும் ஒரு மகளும் மூத்தது புவனி வீட்டுக்காரர் மாதவன் இரண்டாவது மகேஸ்வரி மூனாவது முருகன் இது எங்க மூனாவது தலைமுறை. இப்போ உனக்கு இந்தப் பரம்பரையோட நாலாவது தலைமுறையப் பத்தி சொல்லப் போறேன் எங்களுக்கு இரண்டு மகளுங்கதான் மூத்தவதான் உன் மாமியாரு காயத்ரி இரண்டாவது சாவித்ரி. ராஜசேகருக்கும் இரண்டு மகளுங்கதான் லட்சுமி, லாவண்யா. புவனிக்கும் மாதவனுக்கும் தீபன், ரமேஷ் என்று இரண்டு பேரிருக்கானுங்க. பத்மாவதிக்கு மூனு மகளுங்க லீலாவதி, லதா, லலிதா இதுல லீலாவும் லதாவும் வெளிநாட்டுல இருக்காங்க லலிதா இங்கதான் இருக்கா அவளுக்கு கொஞ்சம் சுகமில்ல அதனால அவளால இங்க வரமுடியல்ல. அடுத்தது ராஜிக்கு சசிகலாவும் உன் மாமனார் ராகவனும்தான் புள்ளைங்க. மகேஸ்வரிக்கு ராதா, ராஜா, ராதிகா என்று மூனு பேரிருக்காங்க கடைசி முருகனுக்கு சாதனா கீர்த்தனா என்று இரண்டே மகளுங்கதான். நாலாவது தலைமுறை விளங்கிடுச்சா இப்போ இந்தா இருக்குற இளசுகள்தான் எங்க பரம்பரையோட ஐஞ்சாவது பரம்பரை இந்தப் பரம்பரையிலதான் உனக்கு ஒரு முக்கியமான விசயம் சொல்லப் போறேன் அது உனக்கானதும் கூட. சரி இந்த ஐஞ்சாவது தலைமுறையில ராகவனுக்கும் காயத்ரிக்கும் அகிலா, அனுபமா, அஸ்வினி, ஆதித்யவர்த்தன் என்று நாலு பேரு இவங்க எல்லாரையும் உனக்குத் தெரியும் அடுத்து சாவித்ரிக்கு சஞ்சறாவும் உன் கூட்டாளி காவியாவுமென்று இரண்டு மகளுங்க அடுத்து லட்சுமிக்கும் இரண்டு மகளுங்கதான் ரேஷ்மா, வர்ஷா. லாவண்யா புவனியோட மகன் தீபனைத்தான் கட்டிருக்கா அவங்களுக்கு லேகா, மதுமிதா, நேத்ரா என்றும் மூனும் பொம்பள புள்ளைதான் ரமேஷூக்கும் ராதாக்கும் மித்ரா, நந்தினி என்று ரெண்டு பேரிருக்காங்க புவனியோட ரெண்டு புள்ளைங்கள்ல ஒருத்தன் மாமன் வீட்டுலயும் மத்தவன் அத்தை வீட்டுலயும் கட்டிருக்கானுங்க. ராதிகாக்கு ஒரே மக அஞ்சலி. ராஜா கட்டிருக்குறது அவன் மாமன் முருகனோட மக சாதனாவ ஆனா அவங்களுக்கு புள்ளைங்களே இல்ல கீர்த்தனாக்கு நிவேதா மட்டுந்தான். இந்தப்பக்கம் லீலாவுக்கு ஜானகி, ஜானவி ரெண்டு பேரிருக்காங்க. சுமித்ரா, சைந்தவி ரெண்டு பேரும் லதாவோட மகளுங்க. அதோட சசிகலாவுக்கு வந்தனா, விக்‌ஷனா அவங்கள உனக்கு நல்லாவே தெரியும். இதுதான் எங்க ஐஞ்சாந்தலமுற இதுல ஒரு விசயமிருக்கு கவனிச்சயா?" தனலட்சுமியின் கேள்வியில் அவள் புரியாமல் விழிக்க

"நல்லா யோசிச்சுப்பாரு நீங்க யாரும் சொல்லக் கூடாது" அவரின் வார்த்தையில் சிந்தித்தவள் அவர் கூறியதை தனக்குள் மீட்டிப் பார்க்க குழப்பந்தான் மிஞ்சியது. அவள் தெரியாது என்று பதிலளக்க

"இந்த ஐஞ்சாவது தலைமுறையில இருக்குற ஒரே ஆண்வாரிசு உன் புருஷன் ஆதித்யவர்த்தன்தான்" அவர் கூறியதும்தான் அவளும் அதைக் கண்டு கொண்டாள்.

"இதை முடிச்சிட்டு கடைசியா இங்க எல்லோரும் இருக்கும் போது அவங்க முன்னாடி ஒரு விசயம் சொல்லனும். இப்போ இருக்குற எங்க பரம்பரையோட கடைசித் தலமுறைதான் இந்தா ஓடித்திரியுற வாண்டுகள் அகிலாக்கு இரண்டு அனுவுக்கு இரண்டு அஸ்விக்கு ஒன்னு என்று அங்கேயே ஐஞ்சு பேரிருக்காங்க சஞ்சுக்கும் ஒரு மகனும் மகளும் இருக்காங்க. அதேமாதிரி ரேஷ்மாக்கு மூனு லேகாக்கு இரண்டு மதுவுக்கு ஒன்னு மித்துக்கும் ஒன்னு வந்தனாக்கு மூனு ஜானகி ஜானவி சுமிகெல்லாம் மூனு பேரிருக்காங்க. இந்த நண்டுக்கெழ தான் கடைசித் தலமுறை இதுதான் ஆதித்யவர்த்தன் புவனேஸ்வரியோட மொத்தப் பரம்பரையும் பாதியாவது விளங்கிச்சா" என்று கேட்க அவள் பெருமளவு விளங்கிவிட்டது என்று கூறியவள்

"அப்போ பாட்டிம்மா, சங்கர் அண்ணா உங்களுக்கு யாரு இதுல அவரோட பெயரே வரல்லையே அவர் உங்களுக்கு சொந்தமென்று சொன்னீங்களே"

"அம்மாடி இப்போ நான் சொன்னது என் வீட்டுக்காரரோட குடும்பத்தப்பத்தி சங்கர் என் தங்கச்சியோட பேரன். அதையும் நியாயமா உனக்கு சொல்லிருக்கனும் சரி எங்கப்பா பேரு சுப்ரமணியம் அம்மா விசாலாட்சி அவங்களுக்கு இரண்டு மகளுங்கதான் ஒன்னு நான் மத்தது என் தங்கச்சி தங்கலட்சுமி இதோ இவதான் அவ. அவளுக்கு வாசுகி, வானதி இரண்டு மகளும் வாகீசன்னு ஒரு மகனுமிருக்காங்க. வாசுகியோட புள்ளைங்கதான் சங்கரனும் தினகரனும் தர்ஷினியும் வானதிக்கும் அரவிந்த் அபிநயா என்று ரெண்டு புள்ளைங்க இருக்காங்க அவ வெளிநாட்டுல இருக்கா வாகீசனும் வெளிநாட்டுலதான் அவனுக்கு மதுமிதா தருண் வருண் என்று மூனு பேரிருக்காங்க. வாசுகி மட்டும் ஊருல இருக்குறதால அவளோட நல்ல ஒட்டுதலிருக்கு. அத்தோட சங்கரும் ஆதியும் ஒரு வயசுக் காரனுங்க வேற"

"அப்படியா பாட்டிம்மா ஆனால் உங்க பரம்பரை ரொம்ப பெரிசுதான் ஓரளவுக்கு இப்போ எனக்கு ஞாபகமிருக்கு"

"விஷேசங்கள்ல கலந்துக்கும் போது அது இன்னும் கூடுதலா ஞாபகமிருக்கும் இப்போ எல்லோர் முன்னாடியும் ஒரு விசயம் சொல்லப் போறேன். ஆதித்யவர்த்தன் ஐயாவோட பரம்பரையில் மூத்த வம்சாவழிதான் என்னோட பரம்பரை அந்த வகையில் ஆதித்யவர்த்தன் ஐயாவோட இந்த வீடு என் வம்சாவழி வந்த என் பேரன் ஆதிக்கும் அவன் பொண்டாட்டி நயனாக்கும்தான் சொந்தம் இதை உங்க எல்லோர் முன்னாடியும் சொல்லனும் என்று ஆசைப்பட்டேன்" என்றவர் அதற்கான உறுதிகளை எடுத்து வந்து நயனியின் கைகளில் ஒப்படைக்க ஆதித்யனுக்கு அவள் ஆசை நிறைவேறுவதை பார்த்து எதுவும் செய்ய இயலாத தன்னிலையை எண்ணி உள்ளூர கோபம் கொப்பளித்தது. ஆனால் மற்றையவர்கள் எல்லோரும் உண்மையாக மகிழ நயனதாராவோ அதனை மறுத்துக் கொண்டிருந்தாள். காயத்ரியின் வற்புறுத்தலில் தயக்கத்துடன் வாங்கியவள் அதனை ஆதியிடமே ஒப்படைத்தாள். 'என்னா நடிம்புடா சாமி' என்று நினைத்தவன் மறுக்காமல் வாங்கிக் கொண்டான். இதனைப் பார்த்து ஷனாவும் ராஜேஸ்வரியும் மேலும் கடுப்பாகினர்

ஒருவாறு நயனதாராவின் குடும்பம் விடை பெற தன் பெற்றோரையும் சகோதரிகளையும் கூடவே தன் உயிர்த்தோழி தாரணியையும் கட்டிக் கொண்டு அழுதவளை சமாதானப்படுத்தி ஆறுதல் கூறியவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டனர். மனது மிகவும் கணக்க அமைதியாக அமர்ந்திருந்தவளிடம் வந்த காயத்ரி

"நயனி, என்னம்மா யோசிச்சிட்டிருக்க அம்மாப்பா போறதை நெனச்சு வருத்தப்படுறியா. உனக்கு என்ன ஆறுதல் சொல்லுறதுன்னு தெரிய்யல்லம்மா"

"ஓம் அத்தை நான் இந்த ஊருல இருப்பேன் என்றாலும் கொஞ்சம் பரவாயில்ல ஆனால் அவங்களைவிட்டு ரொம்ப தூரம் போகப் போறேன் இதுவரை அப்படி இருந்ததே இல்லையா அதான் கொஞ்சம் வருத்தமாயிருக்கு." அவளை ஆறுதல் படுத்தி அவளின் மனநிலையை மாற்ற சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர் அவளை அறைக்கு அனுப்பினார். அறையினுள் நுழைந்தவள் பட்டுப்புடவையை கழட்டி உடம்பு கழுவி இரவுடைக்கு வந்தவள் கட்டிலில் வந்து அமர்ந்து தன்னவனுக்காக காத்திருக்கத் தொடங்கினாள். புயல் போல் உள் நுழைந்தவன் நேராக அவள் முன் வந்தான்

"ஏய் உன் மனசுல என்ன நெனச்சுட்டிருக்க?" எந்தவித முகாந்திரமுமில்லாமல் அவள் தோளைப்பற்றி நிறுத்தியவன் சத்தமிட

"ஏன் என்னாச்சு" அமைதியாக கேட்டாள் பெண்.

"என்னாச்சா? நீ எனகிட்ட என்ன சொன்ன நடிக்குறேன் என்ற சாட்டுல தொர்ர வேலை வச்சுக்க கூடாதுன்னு சொன்ன. நீ சொன்னாலும் உன்னைத் தொட நான் ரெடியில்லை. ஆனால் அந்த ரூல்ஸ்
உனக்கில்லையா? டான்ஸ் பண்ணுறேன் என்ற பேருல கட்டியெல்லாம் புடிக்குற நான் உன்னை தொடாமத்தான் ஆடினேன் ஆனால் நீ..." அவளுடன் இணைந்து ஆடியதால் தன் மேலே கோபத்திலிருந்தவன் அதற்கு அவள்தான் காரணம் என்பது போல் அவளைத் திட்ட

"அது ஆரம்பத்துலதான் என்னைத் தொடக்கூடதென்று உங்க மனசுல இருந்துச்சு சேர் ஆனால் போகப் போக என்னோட சேர்ந்து ஒன்றா ஆடும் போது நமக்குள்ள இருந்த கெமஸ்ரியப் பார்த்ததும் ரூல்ஸ் மறந்து போச்சு உங்களுக்கு"

"இல்லை ரூல்ஸ் மறக்கல்ல உன்னைத் தொடாமத்தான் நான் ஆடினேன். ஆனால் நீதான் தொட்டுத் தொட்டு ஆடினாய் அதனாலதான் நானும்...... நடிப்புத்தானே உண்மையில்லையே"

"நிறைய சந்தேகங்கள் இருக்குப்போல ஒவ்வொன்னா கிளியர் பண்ணட்டா என்ன கேட்டீங்க ரூல்ஸ் எனக்கில்லையா என்றா? இல்லை எனக்கு ரூல்ஸ் இல்லை. ஏன்னா கான்ரெக்ட் போட்டது நீங்க சைன் வாங்கினது நீங்க. நடிக்கச் சொன்னதும் நீங்க அப்போ ரூல்ஸ் உங்களுக்கு மட்டும்தான் எனக்கில்லை. ஏன்னா நான் உங்களை காதலிக்கிறேன் உங்க கூட வாழ ஆசைப்படுறேன் அப்போ எனக்கெதுக்கு ரூல்ஸ் ஒரு விசயம் தெரியுமா நீங்க சொன்னமாதிரி நான் நடிக்குறேன் என்று நினைக்குறீங்களா? இல்லையே நடிக்கவே இல்லை நான் நானா தான் இருக்கேன் அப்போ எனக்கு எதுக்கு ரூல்ஸ்"

"இந்த ரூல்ஸப் போட்டது நீதானே?"

"ஓம் நான்தான் போட்டேன். ஆனால் ரூல்ஸ் உங்களுக்கு மட்டும்தான் எனக்கில்லை ஏன்னா கான்ரெக்ட் போட்டது நீங்கதானே"

"சரி கான்ரெக்ட் போட்டது நான்தான் ஆனால் இது என்ன லோஜிக் எனக்குப் புரியல்ல?"

"இதுல என்ன லோஜிக் பார்த்துட்டிருக்கீங்க காதல் என்றால் எல்லாமே மேஜிக்தான்" அபிநயத்துடன் சொன்னவளைப் பார்த்து தலையில் அடித்துக் கொண்டவன் குளியலறைக்குள் புகுந்து கொண்டான் செல்பவனைப் பார்த்து 'வரு உங்களுக்கு என்னை புடிச்சிருக்கு ஆனால் ஏதோ ஒன்று உங்களை என் பக்கம் வர விடாம தடுக்குது அத முதல்ல கிளியர் பண்ணுறேன். பிறகு உங்களுக்கு என் மேல இருக்குற காதலை வெளிய கொண்டுவாரேன்' சபதமெடுத்தவள் கண்களை மூடி துயில் கொள்ளத் தொடங்கினாள்.

வளரும்.....

கருத்துக்களுக்கு👇

 
Last edited:
Status
Not open for further replies.
Top Bottom