Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவை களவாடிய அனேகனே

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 11

மால்-ஐ விட்டு வெளியே வந்தவள் மீண்டும் அனேகனுக்கு அழைப்புக் கொடுத்தாள். இன்னும் அவளது எரிச்சல் குறைவதற்கான வழி அங்கு பிறக்கவில்லை.

“இதுக்கு மேல எனக்கு பொறுமை இல்ல… இதே இரிட்டேஷனோட அவன போய் பார்த்தா நானே அவன கடிச்சி முழுங்கிடுவேன்… பேசாம சி.சி.டி.வி. வேலைய ஆரம்பிப்போம்” என்று வாய்விட்டு கூறியவள் அங்கு வந்த ஷேர் ஆட்டோ ஒன்றை கை அசைத்து நிறுத்தினாள்.

ஏற்கனவே அதிக அளவு சனங்களை ஏற்றி வந்த அந்த ஷேர் ஆட்டோ தட்டுத்தடுமாறி நின்றதில் அதன் பலவீனத்தை உணர்ந்தவள் ஏறவா வேண்டாமா என விழித்துக்கொண்டிருந்தாள்.

“ஏறு மா!! எத்தினி நேரம் வெயிட் பண்ணுவாங்க உன்கு” என்று கனைக்கத் துவங்கினான் டிரைவர்.

“இல்ல ப்ரோ... இடம் இல்லை…” என்று இழுத்தவளின் மூளையில், இங்கு வரும்பொழுது நசுங்கிக்கொண்டும் திட்டுவாங்கிக்கொண்டும் வந்த ஷேர் ஆட்டோ பல்லை இளித்துக்கொண்டு நின்றது.

”இல்ல ப்ரோ… வேணாம்… நீங்க போங்க” என்று அங்கலாப்பாய் கூறினாள் ஆஷ்ரிதா.

“நமக்குனு வருது பாரு” என்று தலையில் அடித்துக்கொண்ட அந்த ஷேர் ஆட்டோ டிரைவர் வண்டியை கிளப்ப, தன்னை வேண்டாமென சொன்னவளின் முகத்தில் புகையை வாரி இறைத்தது அந்த ஆட்டோ. புகை நெடியால் இருமிக்கொண்டிருந்தவளை பின்னால் இருந்து ஒரு கை அழைக்க, திரும்பிப்பார்த்தாள் ஆஷ்ரிதா.

“வாங்க நான் கூட்டிட்டு போறேன்” என்றான் ஒரு பத்து வயது சிறுவன்.

“யாரு தம்பி நீ?” கேட்டாள் ஆஷ்ரிதா.

“நான் யாரா இருந்தா உங்களுக்கு என்ன? நீங்க போக வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போறதுதான் என் வேலை. வாங்க” என்றவன் அவளது கையை பிடித்து தனது சைக்கிள் ரிக்‌ஷாவுக்கு அழைத்துச் சென்றான்.

“ஏறு கா” என்றான் அச்சிறுவன்.

பார்க்க முகம் சுளிக்கும் விதமாய் இல்லாமல் ஓரளவு சுத்தபத்தமாய் இருந்ததோடு மட்டுமல்லாமல் மேற்கூரையுடன் கூடிய குஷன் சீட் போடப்பட்டு இருந்தது அந்த சைக்கிள் ரிக்‌ஷாவில்.

ஏறிக்கொள்ளலாம் என ஒரு மனம் கூறினாலும் இந்த சிறுவனா ஓட்டுனர் என அவள் இன்னொரு மனம் தடுமாறவே செய்தது.

“ஏறு கா… யோசிக்காத… வயித்து புலப்புக்கு ஏதாவது பண்ணிக் கொடு கா…” என்று அச்சிறுவன் கூறிட, அவனிடம் வேண்டாம் என்று சொல்ல மனமின்றி ஏறிக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“ஆஷ்ரிதா……” தூரத்தில் இருந்து குரலெழுப்பினான் திரவியம்.

“தம்பி… வேகமா வண்டிய எடு பா...” என்று ஆஷ்ரிதா கூற, படுச் சுட்டியாக மிதிவண்டியை அழுத்தத்தொடங்கினான் அச்சிறுவன்.

“சத்தம் போடாம பக்கத்துல போய்ருக்கனும்” என தன் தலையில் அடித்துக்கொண்ட திரவியம் “அண்ணே… உங்க ஃபோன் கொஞ்சம் கொடுங்களேன்” என அருகில் இருந்த அந்த மால் –ன் செக்யூரிட்டி ஒருவரிடன் தொலைபேசியை வாங்கியவன் ஆஷ்ரிதாவின் இலக்கங்களை தட்டி அழைப்பு கொடுத்தான்.

ஆஷ்ரிதா புதிய இலக்கங்களைக் கண்டதும் முந்தைய தினம் சி.சி.டி.வி. கேமராவின் பிரத்யேக கம்பெனி ஒன்றில் வேலை செய்யும் ஒருவரிடம் பேசியது நினைவுக்கு வர, ‘இது அவரு கொடுத்த நம்பர் போலவே இருக்குதே’ என்று யோசித்தவள், அவர்தான் அழைப்பு கொடுக்கிறார் என்று எண்ணி, “அண்ணே.. உங்கள பார்க்கதான் வர்றேன்… நான் தான் சிவா அண்ணா கிட்ட சி.சி.டி.வி. கேமரா பத்தி விசாரிச்சது” என்றாள்.

“நான் திரு பேசுறேன்” என்றது குரல்.

“என்ன வேற நம்பர் வருது?” ஆஷ்ரிதா கேட்க,

“மேடம் கோபத்துல இருந்தா என் நம்பர் அட்டண்ட் பண்ண மாட்டீங்களே!!” என்று துடிப்பான உச்சரிப்போடு கூறினான்.

“எனக்கு வேலை இருக்கு… நான் சொல்ல வேண்டியத சொல்லிட்டேன்… தொந்தரவு பண்ணாத” என்று சினந்து நின்றாள் ஆஷ்ரிதா.

“ஓகோ… மகாராணிக்கு வேலை இருக்கும்... நாங்க எல்லாம் வெட்டியா –ல இருக்கோம்…” கத்தியவனின் குரலை கேட்க விரும்பாதவள் சட்டென இணைப்பைத் துண்டித்துவிட்டாள்.

“கட் பண்ணிட்டா… இவள என்னனு சொல்லி திட்டுறது… ச்சே… எப்படி உண்மைய புரியவைக்கிறது?? ஃபோன்ல பேசுறத பாரு... 'அண்ணா… உங்கள பார்க்க தான் வர்றேன்னாம்…’ எவன் எவங்கிட்டயோ எல்லாம் நல்லா பேசுவா… நாம அவ நல்லதுக்கு சொன்னா ஏறாது காதுல...” புலம்பிக்கொண்டிருந்தவனின் பிடறியில் அப்பொழுதுதான் படார் என விழுந்தது சி.சி.டி.வி. கேமரா என்று ஆஷ்ரிதா சொன்ன வார்த்தை.

அடர் இருட்டில் கொளுத்தப்பட்ட சிறு தீக்குச்சியென, அவள் உதிர்த்த அந்த ஒற்றை வார்த்தை அவனுக்கு அத்தனை உதவிகரமாக அமைந்தது.

“யஸ்…” என உற்சாகத்தில் துள்ளிக் குதித்தவன் செக்யூரிட்டியிடம் அவரது தொலைபேசியை கொடுத்துவிட்டு “ரொம்ப தேங்க்ஸ் அண்ணே” என்றவாறு தனது பொக்கே ஷாப்பிற்கு சென்றான்.

“டேய் ஷ்யாம்… கொஞ்சம் பார்த்துக்கோ… நான் ஒரு டூ அவர்ஸ் –ல திரும்பி வந்திடுறேன்…” என சொல்லிவிட்டு தனது வருகை பதிவேட்டில் இரண்டு மணி நேரம் பெர்மிஷனுக்கான பதிவை பதிவு செய்துவிட்டு பார்க்கிங் –கை நோக்கி விரைந்தான்.

விரைந்தவன் ஓடிச்சென்று தன் ஸ்ப்லெண்டர் பைக்கில் இருபுறமும் கால் போட்டு லாவகமாக அமர்ந்த பின்னர் தனது ஐ.டி. கார்ட்டை கழற்றி, தான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் –ன் இட பக்க பாக்கெட்டினுள் நுழைத்தான்.

“திரவியம் தம்பி… இத்தனை வேகமா எங்க ஓடுறீங்க??” பார்க்கிங் ஏரியாவின் செக்யூரிட்டி கேட்க,

“ஒரு சின்ன வேலை அண்ணே… இப்ப வந்திடுவேன்” என அவருக்கு பதிலைக் கொடுத்துவிட்டு தன் ஸ்ப்லெண்டரில் அதிவேகமாக பறந்தான் திரவியம்.

ஆஷ்ரிதாவும் திரவியமும் தீர்க்கமாக அவனை நினைத்துக் கொண்டிருந்ததாலோ என்னவோ வீடே அதிர அங்கு தும்மிக்கொண்டிருந்தான் அனேகன். அந்த சமயம் சரியாக அம்ரிதா உள்ளே நுழைய, மனோஜ் அவளை நோக்கி நடந்து வந்தான்.

வாசல் படி ஏறும் பொழுதே அனேகன் தும்மிக்கொண்டிருப்பதை கண்ணிமைக்காது பார்த்துக்கொண்டே வந்த அம்ரிதா, தன்னை நோக்கி வரும் மனோஜையும் கவனிக்காது அனேகனை அடைந்தாள்.

தான் அமர்ந்திருந்த நாற்காலியே அதிரும் வண்ணம் அடங்காமல் தும்மிக்கொண்டிருந்தவனை பார்த்த அம்ரிதா, “என்ன இப்படி தும்மிட்டு இருக்கீங்க??” என்று கேட்கவும் அவளை நிமிர்ந்துப் பார்த்த அனேகன் ஏதோ சொல்ல வர, மிஞ்சியது தும்மல் மட்டுமே.

“அடடே… இருங்க… சுக்கு தண்ணி போட்டுக் கொண்டுவர்றேன்” என நகரச்சென்றவளின் கரத்தினை பிடித்து நிறுத்தினான் அனேகன். அவன் மேனியின் உஷ்ணம் அவளிடம் ஏதோ செய்தி உறைக்க, திரும்பி அவனுக்கு அருகிலேயே நின்றுக்கொண்டாள் அம்ரிதா.

இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனான மனோஜ் “பாஸ் –க்கு ஏற்கனவே மேடம் -அ தெரியும் போலயே… சரி அவரு சொல்லிப்பாரு” என்று மீண்டும் அவன் நின்றிருந்த இடத்திற்கே திரும்பினான்.

“சார்… ஹேவ் சம் வாட்டர்” என பக்கத்தில் நின்றிருந்தவன் தனது ஆறடி உடலை வளைத்து குனிந்து நின்றபடி கேட்க, அதை வாங்கி பருகிய அனேகன் “ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ஓவர் தானே?” என கேட்டான்.

“யஸ் சார்… வீ க்ளியர்டு எவ்ரிதிங்” என்றான் அவன்.

“ஓகே… தென் கோ அஹேட் வித் யுவர் வர்க்ஸ்… நெக்ஸ்ட் மண்டே ஆஃபிஸ் வில் பிகின் அஸ் யூஸ்வல்… அம்ரிதா… கம் வித் மீ…” என்றவன் நாற்காலியில் இருந்து எழுந்து ஒரு அறையை நோக்கி நடக்க, சாவி கொடுத்த பொம்மை போல அவன் பின்னாடியே சென்றாள் அம்ரிதா.

“டன் சார்…” என்ற அந்த ஆறடி மனிதனும் கிளம்பிவிட, அவன் வாசல் தாண்டும் முன்னர் இடை மறித்த மனேஜ், “அவ்வளவு தானா?” என கேட்டான்.

“யெஸ் ப்ரோ” என்றான் அவன்.

“என்ன ப்ரோ….” என்று குழப்பமாய் மனோஜ் கேட்க,

“இது பெரிய இடம் ப்ரோ… இங்க எல்லாம் அப்படிதான்… ஏன், எதுக்குனு எல்லாம் நாம கேட்க்க்கூடாது… சரினு சொல்லிட்டு நகர்ந்திடனும்… வேலைக்கு புதுசு தானே… போக போக பழகிடும்… வாங்க கிளம்பலாம்” என்றுவிட்டு சென்றான்.

“என்ன டா நடக்குது இங்க?” மனோஜ் திகைத்து நின்றுக்கொண்டிருந்தான்.

தீ விபத்து என்று சொல்லப்பட்ட கொலை சம்பவத்தால் மோகனின் உடல் விவரிக்க இயலாத அளவு சேதாரம் அடைந்திருக்க, சம்பவ இடத்தில் இருந்து மோகனது உடல் நேரடியாக தகனம் செய்யும் இடத்திற்கு எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்திருந்தது. ஆகையால் வீட்டிற்கு வந்தவர்கள் அனைவரும் அனேகனை பார்த்து துக்கம் விசாரித்துவிட்டு உடனடியாக கிளம்பிக் கொண்டிருந்தனர். அம்ரிதா வருவதாக கூறியதால் அவளுக்காகவே அங்கு காத்துக்கொண்டிருந்தான் மனோஜ்.

முந்தைய நாள் இரவில் இருந்தே அங்கு இருக்கும் மனேஜ் –க்கு நடப்பவை எல்லாம் வியப்பாகவே இருந்தது. பொதுவாக துக்க வீடுகளில் நடக்கும் சடங்குகள் எதுவும் அங்கு செய்யப்படவில்லை என்றாலும், சொந்தம் என சொல்லிக்கொண்டு வந்து, அனேகனுடன் அமர்ந்து, கண்ணீர் சிந்தி யாரையும் அப்பொழுதுவரை அவன் காணவில்லை. அன்று அவ்வீட்டை நிறைத்திருந்தது அவர்களது கம்பெனியின் எல்லா கிளையிலும் உள்ள ஊழியர்கள் மற்றும் சில பிஸ்னஸ் மேக்னட்கள் மட்டுமே.

அவர்களும் வந்தோமா, பார்த்தோமா, வேலை முடிந்ததென கிளம்பிவிட்டிருந்தனர். அம்ரிதாவும் அவனோடு உள்ளே சென்றாகிற்று. இனி இங்கு நமக்கென்ன வேலை என எண்ணிய மனேஜும் தன் வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

“கம் அம்ரிதா” என்று அவளை அனேகன் அழைத்து செல்ல, அந்த அறையில் அழுது வீங்கிய முகத்தோடு அமர்ந்திருந்தார் அனேகனின் அம்மா. அம்ரிதா உள்ளே வந்ததும் அவளைக் கண்டு கூப்பாடுப் போட்டு ஓடி வந்தவர், கை எடுத்து கும்பிட்டு, என்னை “மன்னிச்சிடு மா” என்று சொல்ல வந்து, அதை முடிக்காமலேயே மயங்கி விழுந்தார்.

“அய்யோ… ஆண்டி…” என அம்ரிதா அவரை தாங்கிப்பிடிக்க, அனேகனோ “மாம்…” என அவரை தூக்கிக்கொண்டு கட்டிலில் கிடத்தினான்.

'என்ன ஆச்சு' என்பது போல அனேகனை பார்த்துக்கொண்டிருந்தாள் அம்ரிதா. தன் தாயை கட்டிலில் கிடத்திவிட்டு திரும்பியவன், அம்ரிதாவின் விழிகளை ஒருமுறை உற்று நோக்கிவிட்டு, வீட்டின் வரவேற்பு அறைக்கு வந்து அமர்ந்தான்.

அனைவரும் கிளம்பலாம் என அவன் கூறியதும், அக்கணமே அனைவரும் அவ்வீட்டை விட்டு கிளம்பியிருந்ததால் வீடே மயான அமைதிக் கொண்டிருந்தது. உள்ளே அறைக்குள் நின்றுக்கொண்டிருந்த அம்ரிதாவுக்கு அப்பொழுதுதான் சுயநினைவு வர, தான் எங்கு நின்றுக் கொண்டிருக்கிறோம் என சுற்றும் முற்றும் பார்த்தவள், கட்டிலில் சோர்ந்துக்கிடந்த அனேகனின் தாயை கண்டதும் தான் மோகன் வீட்டிற்கு வந்திருக்கிறோம் என்பது நினைவிற்கு வந்தது.

வேகமாக அந்த அறையை விட்டு அவள் வெளியே வர, நடுக்கூடத்தில் அனேகன் மட்டுமே அமர்ந்திருந்தான். ஒரு நிமிடம் நடப்பவை என்ன என விளங்காது தவித்த அம்ரிதா, அனேகனை நோக்கி “நீங்க…..” என்று இழுத்தாள்.

அவள் அந்த வீட்டிற்குள் நுழையும் போதே அனேகனை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு வந்தது அவனுக்கு சாதகமாய் அமைந்திருக்க, அப்பொழுதே அவனது கண்களால் அவளுக்கு தங்கள் உறவின் அர்த்தத்தை கடத்தியிருந்தான் அனேகன். அதன் விளைவாய் வந்த அக்கறையில் சுக்கு காபி போடுகிறேன் என்று சொன்னவள் தற்பொழுது நினைவு திரும்பிய நிலையில் குழம்பிப்போய் அவன் முன்னே நின்றுக்கொண்டிருந்தாள்.

“நீங்க… உங்கள அன்னைக்கு ஆஃபீஸ் –ல…” என்று மீண்டும் இழுத்தாள் அம்ரிதா.

“ஆமா… நான் தான்” – அனேகன்.

“நீங்க எங்க இங்க?” – அம்ரிதா.

“என் வீட்டுல தானே நான் இருப்பேன்” – அனேகன்.

“வாட்…! உங்க வீடா??” – அதிர்ச்சித்தாள் அம்ரிதா.

“எஸ்” – அனேகன்.

“அப்டீன்னா… நீங்க… மோகன் சார்…” – கேள்விகள் தடுமாறின அம்ரிதாவிடத்தில்.

“ஹிஸ் சன்” – அனேகன்.

உச்சக்கட்ட அதிர்ச்சியில் உறைந்தே நின்றாள் அம்ரிதா. அவர்களது முதல் சந்திப்பன்று அனேகன் அவளை முத்தமிட்டது அவளுக்கு நினைவில் இல்லை என்றாலும் அவனது நறுமணத்தை முதன்முதலில் சுவாசித்த போதே, அவனது பின் பிம்பம் கண்டு ஏங்கிய போதே, தன்னை அறியாமல் அவனை முழுதாய் தன் உயிருடன் கரைத்துவிட்டிருந்தவளுக்கு அவளையும் மீறி தோன்றியதெல்லாம் ஒன்று தான்.

“தான் பலிவாங்கத் துடித்துக்கொண்டிருந்த ஒருவனது மகனையா மனதின் இத்தனை ஆழத்தில் விதைத்திருந்தோம்” என்பது மட்டுமே.

அந்த கனநேரத்தின் மன ஓட்டம் தான், தான் அவனை விரும்பியிருக்கிறோம் என்பதை முழுதாய் உணர்ந்துக்கொண்டாள் அம்ரிதா.

வாழ்க்கை எனும் நாடகம் தன்னிடம் இன்னும் எத்தனை வேடிக்கை காட்டப்போகிறது என்று கலங்கி நின்றுக்கொண்டிருந்தவளை பார்த்து “டோண்ட் கெட் மேட் அம்மு… ஐ திங்க் யு ஆர் நாட் வெல்… வீட்டுக்கு போங்க… நாளைக்கு மீட் பண்ணலாம்” என்றவன் மேஜையில் இருந்து தனது அலைபேசியை எடுத்தான்.

பலமுறை வந்து தவறியிருந்த ஆஷ்ரிதாவின் அழைப்புகள் இருந்தன. அதை பார்த்துவிட்டு அம்ரிதாவையும் நிமிர்ந்து பார்த்தவன் “தீ டைம் கம்ஸ்” என்று புன்னகைத்துவிட்டு அந்த தொடு திரையில் எதையோ தட்டிட, அவனது டிரைவர் உள்ளே ஓடி வந்து “சொல்லுங்க அய்யா” என்றார்.

“இவங்கள அவங்களோட வீட்டுல ட்ராப் பண்ணிடுங்க” என்றான்.

“சரிங்க அய்யா” என்று டிரைவர் கூற, அம்ரிதா வாசலை நோக்கி நடந்தாள்.

“சகி” என்று புன்னகை மாறாமல் அழைத்தான் அனேகன்.

திடுமென அவனை திரும்பிப்பார்த்தவள், கால் மேல் கால் போட்டுக்கொண்டு கம்பீரமாய் அமர்ந்திருந்த அவனது தோற்றத்தை தன் கண்களால் உள்வாங்கிட, அவனும் தன் விழியின் வழியே காதல் செய்தியை செம்மையாக அனுப்பிவிட்டு “பத்திரமா போய்ட்டு வா” என்றான்.

விதியின் விளையாட்டால் அம்ரிதா, ஆஷ்ரிதா இருவரும் பந்தையத்தில் விட்ட குதிரையை போல முன்னும் பின்னுமாய் ஓடிக்கொண்டிருக்க, அனைத்தும் அறிந்த ஆதியிவன் அனேகன் வாழ்க்கை நாடகத்தை ரசித்துக் கொண்டிருந்தான்.

நங்கைகளுக்கு நல்லது நடக்க விரும்பும் நவி நட்புக் கொண்ட திரவியம், தானே விரும்பி அப்பந்தையத்தில் இணைந்திட, மால் பார்க்கிங் -ல் புறப்பட்ட அவனது ஸ்ப்லெண்டர், அனேகனை அன்று சந்தித்த அப்பார்ட்மெண்ட் பார்க்கிங் -ல் தான் நின்றது. விபரீதம் நடந்த மறுநாள் என்பதால் அன்றும் அங்கு இரண்டு போலீஸ்கள் தங்கள் ஜீப்பில் அமர்ந்தவாறும், ஒருவர் ஒரு அடி தள்ளி நின்று வாக்கி டாக்கியில் எதையோ பேசியவாறும் நின்றுக் கொண்டிருந்தனர்.

“இங்க சி.சி.டி.வி. கேமரா இருக்கானு இவங்கள தாண்டிப் போய் எப்படி பார்த்து கன்பார்ம் பண்ணுறது?” யோசனையில் நின்றிருந்தவனுக்கு என்ன செய்வதென அப்பொழுது பிடிபடவில்லை. அச்சமயம் ஒரு பெரியவர் உள்ளே வர, அவர் இந்த அப்பார்ட்மெண்ட் –ல் வசிப்பவரா என ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள ஆர்வமாய் இருந்தான் திரவியம். அந்த பெரியவர் மெல்ல மெல்ல நடந்துவர, எப்படி அவரிடம் பேச்சுக்கொடுப்பது என யோசித்துக் கொண்டிருந்தான் திரவியம்.

பிரபஞ்சம் அந்நேரம் அவனுக்கு உதவ எண்ணியதோ என்னவோ அந்த பெரியவர் தாமாகவே திரவியத்திடம் பேசத் தொடங்கினார். “தம்பி… என் வீடு நாலாவது மாடியில இருக்கு… கொஞ்சம் தலை சுத்துற மாதிரி தெரியுது பா… என்னை லிஃப்ட் –ல கொஞ்சம் கைத்தாங்கலா கூட்டிக் கொண்டு போய் விடுறியா பா?” என கேட்டார்.

‘கிடைத்த வாய்ப்பை விடுவேனா?’ என எண்ணியவன் “வாங்க தாத்தா… நான் கூட்டிட்டு போறேன்…” என்று போலீஸ் –க்கு சந்தேகம் வராமல் அந்த பெரியவருடன் மின் தூக்கியை அடைந்தான்.

“ஏன் தாத்தா இந்த வயசான காலத்துல வெளியில தனியா போய்ட்டு வர்றீங்க?” என இரக்கம் நிறைந்த குரலோடு கேட்டான் திரவியம்.

“எவ்வளவு நேரம் தான் வீட்டுக்குள்ளையே இருக்க முடியும் தம்பி? பேர புள்ளைங்க ஸ்கூலுக்கு போய்டும், பையனும் மருமகளும் வேலைக்கு போய்டுவாங்க. ஒத்த கட்டையா வீட்டுக்குள்ள கிடக்க மாட்டாம அப்பப்ப காலார நடந்துட்டு வருவேன்” என்று அவர் கூறி முடிக்கவும் நான்காம் தளம் வந்துவிட மின் தூக்கியின் கதவுகள் திறக்கப்பட்டு இருவரும் வெளியேறினர்.

அந்த முதியவருடன் அவரது வீட்டு வாசல் வரை சென்றவன் “தாத்தா… சாவியை கொடுங்க… நான் டோர்-ஐ ஓபன் பண்ணுறேன்” என சாவியை வாங்கி கதவை திறந்துவிட்டான் திரவியம்.

“உள்ளே வாங்க தம்பி! கொஞ்சம் தண்ணியாவது குடிச்சிட்டு போகலாம்” என்றவரிடம் தனக்கு அவரிடம் வேலை ஆக வேண்டியது உள்ளது என்பதை மனதில் கொண்டவன் அவர் அழைப்புக்கு மறுப்பு தெரிவிக்காமல் உள்ளே சென்றான்.

“இங்கே உட்காருங்க தம்பி!” என்றவரிடம் “ஐய்யோ தாத்தா… நீங்க உட்காருங்க… தலை சுத்துதுனு சொன்னீங்க தானே” என கூறிவிட்டு அடுப்பங்கறை எங்கே என தேடினான் திரவியம்.

“சமையல் கட்டு அந்த பக்கம் தம்பி!” என்று அவர் கூறவும்,

“தேங்க்ஸ் தாத்தா!” என உள்ளே சென்றவன் அங்கிருந்த நீர் சுத்தீகரிப்பானில் இருந்து கோப்பைக்குள் சிறிது நீரை கடத்தியவன் தாத்தாவிடம் சென்று

“இந்தாங்க தாத்தா… தண்ணி குடிங்க” என்றான்.

தளர்ந்த கைகள் நடுங்கியபடி தண்ணீரை அவர் குடித்து முடித்ததும், மெல்லமாக தன் பேச்சைத் தொடங்கினான் திரவியம்.

(களவாடுவான்)


 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 12

“எத்தனை வருஷமா இங்க இருக்கீங்க தாத்தா?” – திரவியம்.

“அஞ்சு வருஷம் ஆகுது தம்பி இங்க வந்து… தம்பி என்ன உத்யோகம் பண்ணுறீங்க?” – பெரியவர்.

“நான் இங்கதான் ஒரு மால் –ல பொக்கே ஷாப் –ல இருக்கேன் தாத்தா” – என்றவன் சி.சி.டி.வி. விஷயத்திற்கு எப்படி வருவது என யோசித்தான்.

“கல்யாணம் எல்லாம் ஆகிருச்சா? எத்தன புள்ள குட்டிங்க?” – பெரியவர்.

“இன்னும் கல்யாணம் ஆகல தாத்தா” – திரவியம்.

“காலாகாலத்துல கல்யாணத்தை முடிச்சிருங்க தம்பி! வயசு போய்டுச்சின்னா பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டமாகிடும்” – பெரியவர்.

“பொண்ணு இருந்தா சொல்லுங்க தாத்தா… உடனே கல்யாணத்தை முடிச்சிட்டு உங்க ஃப்ளாட் பக்கத்துலையே ஒரு ஃப்ளாட் வாங்கிட்டு வந்துடுறேன்” என்று தூண்டிலைப் போட்டான் திரவியம்.

“ஹாஹா... வாங்க வாங்க… நல்லா பேசுறீங்க தம்பி! இந்த காலத்துல யாரு இப்படி பேசுறா? பக்கத்து வீட்டுல மனுஷன் இருக்கானா செத்தானானு கூட தெரியாம இருக்குறாங்க” – அலுத்துக்கொண்டார் பெரியவர்.

“நான் இங்கே வந்த பிறகு உங்களுக்கு பேச்சு துணைக்கு நான் இருப்பேனே.. அப்புறம் என்ன தாத்தா கவலை உங்களுக்கு?” – தன் திட்டத்தில் தீவிரமாய் ஈடுபட்ட திரவியம், அடுத்து தாத்தாவை பேச விட்டால் அவர் வேறு தலைப்புக்குள் புகுந்து விடுவார் என்று சுதாரித்தவன் நேராக விஷயத்துக்குள் புகுந்தாள்.

“இந்த அப்பார்ட்மெண்ட் எப்படி தாத்தா? எல்லா வசதியும் நல்லா இருக்குற மாதிரி தான் இருக்கு… சேஃப்டி எல்லாம் எப்படி?” என கேட்டான்.

“அது எல்லாம் ஒரு குறைச்சலும் இல்லை தம்பி! எப்பவும் செக்யூரிட்டி இருப்பாங்க… என்னவா இருந்தாலும் உடனே ஓடி வந்திடுவாங்க… நேத்து கூட கீழ ஒரு ஃப்ளட் –ல கேஸ் வெடிச்சிட்டு… செக்யூரிட்டி கோபால் தம்பி தான் ரொம்ப ஹெல்ப் பண்ணாப்ல” என்றார் தாத்தா.

“ஆமா தாத்தா… பார்த்தேன்” – திரவியம்.

“என்ன தம்பி??” – பெரியவர்.

“இல்ல தாத்தா… நியூஸ் பார்த்தேன் –னு சொன்னேன்” – திரவியம்.

“சரிங்க தம்பி” – பெரியவர்.

“திருட்டு பயம் எல்லாம் கிடையாதே?? எல்லா ப்ளோர் –லயும் சி.சி.டி.வி. கேமரா இருக்கும் தானே” – ஒரு வழியாக கேட்டுவிட்டான் திரவியம்.

“ஹாஹா… என்ன தம்பி… இங்க எல்லாம் திருடிட்டு தப்பிச்சிட முடியுமா? எல்லா இடமும் சி.சி.டி.வி. கேமரா இருக்கு” – பெரியவர்.

“அது இருந்து என்ன ப்ரயோஜனம் தாத்தா… நாம ஏதாவது எமர்ஜன்சினு சொல்லி கேட்டா ஈசி –யா ஃபூட்டேஜ் –ஐ காட்டிட மாட்டாங்களே… இந்த மாதிரி இடத்துல நமக்குனு கைக்குள்ள ஒரு ஆளு இருந்தா நல்லதுல?” – திரவியம்.

“அதெல்லாம் யாரும் செய்ய மாட்டாங்க தம்பி… அதுக்குள்ள வேற மாதிரி ஆளுங்க தான் இருப்பாங்க… அவங்க கிட்ட எல்லாம் பாசம் பேசாது… பணம் தான் பேசும்” – பெரியவர்.

“அதுவும் சரிதான்” என்று கூறிவிட்டு ‘எப்படியாவது சி.சி.டி.வி. காட்சிகளை பார்த்தாக வேண்டும். அதை ஆஷ்ரிதாவுக்கு காண்பித்தால் நிச்சயம் அவள் நம்புவாள். ஆனால் எப்படி ஃபூட்டேஜ் –ஐ வாங்குவது?’ என தன் மனதில் யோசித்துக் கொண்டிருந்த திரவியத்தை தடுத்தது பெரியவரின் குரல்.

“தம்பி இங்க யார பார்க்க வந்தீங்கனு சொல்லவே இல்லையே?!” எலி பொறியென கேள்வி கேட்டார் அந்த பெரியவர்.

“நான் இங்கே… நான்… யாரையும் பார்க்க வரல…” தடுமாறிக் கொண்டிருந்தான் திரவியம்.

“யாரையும் பார்க்க வரலையா? உங்க வேலைய கெடுத்துட்டேனா தம்பி?” – பெரியவர்.

“அய்யோ இல்லை தாத்தா!! என் ப்ரெண்டு ஒருத்தன் வர்றேன் –னு சொன்னான். அவனுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன். இந்த பக்கமா ஒரு நாய் குட்டி வந்துது. அத பார்த்துட்டே அப்படியே உள்ளே வந்துட்டேன்” என்று உப்பு சப்பில்லாத சாக்கினை திரவியம் கூற, ‘இதெல்லாம் நம்புற மாதிரியா டா இருக்குது?’ என அவனது மனசாட்சியே அவனை காரித் துப்பியது.

‘சரி… நம்புறதும் நம்பாததும் அவர் இஷ்டம்… நம்ம வேலை முடிஞ்சிது’ என்று நினைத்தவன், “சரி தாத்தா… நான் கிளம்புறேன்… நேரமாகிடுச்சு” என்று அவரிடம் இருந்து விடைப்பெற வேகமாக எழுந்தவன் சைக்கிள் ரிக்‌ஷாவில் ஏறிச் சென்ற ஆஷ்ரிதாவை தன் மனதில் நிறுத்தி “சீக்கிரம் உனக்கு புரிய வைக்கிறேன் அச்சு” என்று கூறிக்கொண்டு அங்கிருந்து வெளியேறினான்.

இதே நேரம் கண்களை மூடி அயர்ந்தாவாறு பயணப்பட்டுக் கொண்டிருந்த ஆஷ்ரிதாவை சுமந்துச் சென்றுக்கொண்டிருந்த சைக்கிள் ரிக்‌ஷா ஓரிடத்தில் நின்றிட, தலையை வெளியே நீட்டிப் பார்த்தாள் ஆஷ்ரிதா. “என்ன தம்பி இங்க நிறுத்தியிருக்க? எதுவும் வேலை இருக்கா உனக்கு?” என கேட்டாள்.

“எனக்கு வேலை இல்லை கா… உனக்கு தான் இங்க வேலை இருக்கு… இறங்கி வா…” என்றான் அச்சிறுவன்.

புருவத்தை சுருக்கியபடி ரிக்‌ஷாவில் இருந்து கீழே இறங்கிய ஆஷ்ரிதாவுக்கு அந்த சூழல் மிகவும் விசித்திரமாக இருந்தது. அரண்மனையை ஒத்த மாபெரும் கலைநய கட்டிடம் ஒன்று அவள் முன் பிரம்மாண்டமாய் எழுந்து நிற்க, அதன் விசாலமான தோற்றத்திற்கு திருஷ்டி கழிப்பதுபோல அத்தனை அழுக்காய் காணப்பட்டது அதன் மதில் சுவர்.

பல நாள் காற்றோடு உறவாடி துரு ஏறிய அந்த பெரிய இரும்பு கதவை அசாதாரணமாக திறந்துவிட்டான் அச்சிறுவன். ‘இந்த பிஞ்சு கைகளா பஞ்சை நகர்த்துவது போல இக்கதவை அசைத்தது?’ என்கிற ஆச்சரியம் ஆஷ்ரிதாவுக்கு வந்ததில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் அந்த கதவின் எடையோ பல டன்கள் இருக்கும் என அதன் பிரம்மாண்டமே கூறியது.

“உள்ள வா கா” என்றவன் முன்னே நடக்க, அவனை பின்தொடர்ந்தாள் ஆஷ்ரிதா.

வழியெங்கும் பாசிபிடித்தாற் போல மழுங்கிய பச்சை நிறம் காணப்பட்டாலும், எந்த ஒரு இடத்திலும் அவள் காலை அது வழுக்கி விடவில்லை. மாறாக பஞ்சு மெத்தையில் நடப்பது போல கால்களில் சுகம் கண்டு அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

குறுக்கும் நெடுக்கும் பாய்ந்திருக்கும் மரத்தின் வேர்கள், ஆங்காங்கே தென்படும் எட்டு கால் பூச்சியின் வலைகள், சுற்றத்திற்கு முற்றிலும் முரண்பட்டிருக்கும் மலர்களின் நறுமணம் என அனைத்தும் மிகவும் வித்தியாசமாகவே இருந்தது அவ்விடத்தில்.

“தம்பி… இது என்ன இடம்? ரொம்ப வித்தியாசமா இருக்கு? இங்க எதுக்கு என்ன கூட்டிட்டு வர்ற?” – ஆஷ்ரிதா.

“எல்லாம் நீ வர வேண்டிய இடம் தான் கா… வா…” என்றவன் முன்னேறி நடந்துக்கொண்டே இருந்தான்.

‘பார்க்க வித்தியாசமா இருக்கேனு ஒரு ஆர்வத்துல இந்த பையன் கூப்பிட்டதும் உள்ள வந்துட்டேன்… ஆனால் உள்ள போக போக பயமா இருக்கே… இந்த குட்டி வேற ஏன்னவோ போல பேசுறான்… நல்லா மாட்டிகிட்ட டி அச்சு” என்று பீதியுடனே தன் நடையின் வேகத்தை குறைத்தாள் ஆஷ்ரிதா.

ஆஷ்ரிதாவின் காலடிகளின் சத்தம் மாற்றத்தை காண்பிக்க, அவள் புறம் திரும்பியவன், “என்ன கா… பயப்படாம வா...” என்றவன் தற்பொழுது அவள் கரத்தை பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

‘அய்யோ… தப்பிச்சு ஓட கூட விட மாட்டான் போலயே’ என தன் மனதினுள் நினைத்தவள் “உனக்கு பயமா இல்லையா பா?? பலமுறை இங்க வந்திருக்க போல? அவ்வளவு பெரிய கதவையே அசால்ட்டா திறந்துட்டியே??” அடங்கமறுத்து தன் கேள்வியை கேட்டாள் ஆஷ்ரிதா.

“பல தடவ வருவேனா -வா?? இதுதான் நம்ம இடம் கா… ஹாஹா” – புன்னகைத்தான் அச்சிறுவன்.

“நம்மனு என்னையும் ஏன் குட்டி கூட்டு சேர்க்கற??” – திக்கியபடியே வார்த்தை வந்தது ஆஷ்ரிதாவுக்கு.

“அட… நான் தான் இருக்கேன் –ல… பயப்படாம வா கா…” – சிறுவன்.

“இன்னும் எவ்வளவு தூரம் தான் உள்ள போகனும்?? அனுமன் வால் மாதிரி போய்கிட்டே இருக்கே… தம்பி ஏதாவது பேச்சு கொடுத்துட்டே வாயேன்… அக்காவுக்கு பயமா இருக்குல…” – பாவமாய் கெஞ்சினாள் ஆஷ்ரிதா.

“தம்பி இருக்குறப்ப நீ ஏன் பயப்படுற??” – தன் நடையை நிறுத்திவிட்டு அவளை நோக்கி கேட்டு நின்றான் அச்சிறுவன்.

“இல்ல பா… இந்த இடமே ரொம்ப வித்தியாசமா இருக்கு!! இங்க ஒரு மரம் கூட இல்லை… ஆனா தரையில நிறைய இடத்துல வேர்கள் படர்ந்திருக்கு… வழியெல்லாம் பாசி பிடிச்சு இருக்கு… ஆனா எங்கையுமே சறுக்கல… சிலந்தி வலை இருக்கு… அதுல சிலந்தி இல்ல… இது எல்லாத்தையும் கூட விட்டுடலாம்… இங்க எங்கயுமே பூக்கள் இல்லை.. எங்க இருந்து இப்படி ஒரு வாசனை?? இடம் முழுக்க இவ்வளவு பளுதாகி கிடக்குறப்ப இங்க புழுங்குற நாற்றம் வராம இப்படி மணம் வீசுதுனா இது சாதாரணமான இடமா இருக்கும்னு எனக்கு தோணல..” என்றாள் ஆஷ்ரிதா.

“இது சாதாரண இடம் –னு நானும் சொல்லவே இல்லையே… உனக்கு தேவையானது இங்க தான் இருக்குது… நம்பிக்கையோட வா” என்றவன் மீண்டும் நடக்கலானான்.

“என்ன? எனக்கு தேவையானது இங்க இருக்கா? சி.சி.டி.வி. கேமரா இங்க எல்லாம் கிடைக்குமா?” என்று ஆஷ்ரிதா கேட்க அவளை திரும்பிப்பார்த்த அச்சிறுவன் தன் தலையில் அடித்துக் கொண்டு “மிஷின் –அ நம்புற உலகம் மனுஷன நம்புறதில்ல…” என்றான்.

‘என்ன இவன்? ஏழு அங்குலம் இருந்துகிட்டு ஏழாம் அறிவு இருக்குற மாதிரியே பேசிட்டு இருக்குறான்?!’ என யோசித்தவளை ஏற இறங்க பார்த்துவிட்டு “அக்கா… உனக்கு இப்ப தேவை படுறது சி.சி.டி.வி.-ஆ இல்ல உன் தங்கச்சியோட நிம்மதியா?” என்றான் பொட்டில் அடித்தாற் போல.

“என்… என் தங்கச்சி பத்தி உனக்கு எப்படி தெரியும்?? நீ யாரு?” -கேட்டாள் ஆஷ்ரிதா.

“உன்னோட எல்லா கேள்விகளுக்கும் இங்க பதில் இருக்கு… நீ வா” என்று அவன் கூறிய பின் இருவரும் சில அடிகள் எடுத்து வைக்க, அங்கே ஒரு நீள கதிர்வீச்சு மேலிருந்து கீழாக நிலைக்குத்தி நின்றிருந்தது. தங்க துகள்களாய் மின்னிக்கொண்டிருக்க, கண்கள் கூசும் அளவிலான பிரகாசத்தை உடைய அக்கதிர்வீச்சை கண்டு ஆஷ்ரிதாவால் பிரம்மிக்காமல் இருக்க முடியவில்லை.

“என்ன டா குட்டி இது? சோலார் ரேஸ் போல இருக்குது? அதுவும் இவ்வளவு ப்ரைட்டா??” – வியப்போடு கேட்டாள் ஆஷ்ரிதா.

அவளது கேள்விக்கு சிறு புன்னகையை மட்டுமே விடையாகக் கொடுத்த அச்சிறுவன் தனது கரம் நீட்டி அந்த கதிர்வீச்சை கலைத்தான். காற்றில் மறையும் நீராவியாய் அந்த தேஜஸ் மறைந்திட, அவ்விடத்தில் தற்பொழுது ஒரு ஏடு மிதந்துக்கொண்டிருப்பது தென்பட்டது.

நடப்பவை அனைத்தும் கனவா நிஜமா என பிரித்து ஆராயும் முயற்சியில் ஆஷ்ரிதா ஈடுபட்டுக் கொண்டிருக்க, அதற்கு சிறிதும் கால அவகாச கொடுக்காமல் அடுத்தடுத்த மாயாஜாலங்களை நிகழ்த்திக் கொண்டே இருந்தான் அச்சிறுவன்.

“இது என்ன –னு தெரியுமா கா உனக்கு?” என்று அவன் கேட்க, திக்பிரம்மை தெளிந்தவளாய் திடுக்கிட்டவள் “இல்லை” என மறுப்பாக தலையாட்டினாள் ஆஷ்ரிதா.

“உன் தங்கச்சி பத்தி எனக்கு எப்படி தெரியும்-னு கேட்டியே… இதுதான் எனக்கு சொல்லுச்சு!” – சிறுவன்.

“என்ன இது சொல்லுச்சா?” – ஒன்றும் புரியாதவளாய் ஆஷ்ரிதா.

“ஆமா… இது நம்மளோட ஜென்ம சாசனம்” – சிறுவன்.

“நம்மளோட ஜென்ம சாசனமா?? என்ன பேசுற நீ? நீ யாரு முதல? இது என்ன இடம்? இவ்வளவு பெரிய சிட்டிக்கு உள்ள யாருக்கும் தெரியாம இப்படி ஒரு இடமா? ஏதோ சரி இல்லை… ஒழுங்கா உண்மைய சொல்லு யாரு நீ?” – ஆஷ்ரிதா.

“உனக்கு உண்மை தெரியவேண்டிய காலம் கை கூடி வந்தாச்சு” – சிறுவன்.

“என்ன உண்மை?” – ஆஷ்ரிதா.

“ஒத்துமையா இருந்த உயிர் ஒத்தையில் விட்டுப்போட்டு ஓரமா போயிடுச்சு…
ஒத்தையா நின்ன உயிர் ஒத்துமையா இருக்கையில ஒன்னுமில்லாம ஆகிருச்சு…
ஒன்னுக்கொன்னா சுத்துறது ஒன்னுமேல நாலு கண்ணா ஒட்டிக்கிட்டு ஆடிருச்சு…
ஓயாம ஓடுறது ஒசத்தியா நினைக்கும் ஒன்னு ஒசந்த இடம் சேர்ந்துருச்சு…”

என்று தன் கண்களில் தீர்க்கத்தை நிறைத்து, பேச்சில் ஈட்டியை குழைத்து பாறை போல நின்று கூறினான் அச்சிறுவன். இதுவரை அவன் அன்பாய் அக்கா என்று பேசிய தொனிக்கும், தற்பொழுது விறைப்பாய் நின்று வசனம் பேசும் தொனிக்கும் இமாலய வித்தியாசத்தை உணர்ந்த ஆஷ்ரிதாவுக்கு கை கால்கள் நடுங்கத் தொடங்கின.

“தம்பி! உன் வயசுக்கும் நீ பேசுறதுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்ல… நீ சொல்லுறது எதுவும் எனக்கு புரியல… தயவு செய்து சொல்லு… நீ யாரு?”

ஆகாசம் கிழிய “அர்ஜுன்” என்றான்.
அந்த சத்தத்தில் அவள் அலறிக்கொண்டு விழித்திட, சைக்கிள் ரிக்‌ஷா ஒரு வாரியாகக் குலுங்கி நின்றது.

“அக்கா… என்ன ஆச்சு??” – ரிக்‌ஷாவை ஓட்டிக்கொண்டு வந்த சிறுவன் கீழே இறங்கி வந்து பதட்டத்துடன் ஆஷ்ரிதாவிடம் கேட்டான்.

வாயை திறந்த வண்ணம் மூச்சு மேலும் கீழும் இழுத்து வாங்கியபடி, கண்களை அங்கும் இங்கும் உருட்டிக்கொண்டு இருந்தவளுக்கு தான் கனவு கண்டிருக்கிறோம் என்பது பிடிபட சில நிமிடங்கள் பிடித்தது.

தன் முகத்தில் பூத்திருக்கும் வியர்வை துளிகளைத் துடைத்துக்கொண்டவள், கைப்பையில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து தன் வாயில் சரித்துக்கொண்டாள். பின் ரிக்‌ஷாவை விட்டு கீழே இறங்கிவள் அந்த குடுவையில் மீதம் இருந்த தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவி, நிதானமடைந்து, ரிக்‌ஷா ஓட்டிவந்த சிறுவனை உற்று நோக்கினாள்.

“நீ சொன்ன வீடு வந்துருச்சு கா… பத்திரமா உள்ள போய்டுவியா? இல்ல சத்தம் கொடுத்து வீட்டுல இருந்து யாரையாவது உன்ன அழைச்சுட்டு போக சொல்லி கூப்பிடட்டுமா?” – பாந்தமாக கேட்டான் சிறுவன்.

ஆஷ்ரிதாவோ முற்றிலும் தெளிவடைந்த பாடில்லை. தான் கண்டது கனவா? என்ன கனவு இது? என்ற கேள்வி அவள் மூளையை மொய்த்துக் கொண்டிருந்தது. கனவில் கண்ட சிறுவனின் முகமும் தன் முன்னே நிற்கும் சிறுவனின் முகமும் வேறு வேறாக உள்ளதே? என்று குழம்பித் தவித்துக்கொண்டிருந்தவள் அந்த கனவினை மீண்டும் தன்னுள் அசைப்போடத் தொடங்கினாள். இந்த ரிக்‌ஷா பயணத்தை மையமாக கொண்டு வந்ததுதான் இந்த கனவு. அப்படி இருக்கையில் இந்த சிறுவன் முகம் எப்படி வேறு ஒரு முகமாக காட்சியளிக்கும் என்ற ஐயப்பாடு அவளுக்கு எழுந்த போதிலும், சில சமயங்களில் நடப்பவை தான் இவை என தன்னை தானே சமாதானம் செய்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

இருந்தும், அவளை விடாமல் வெருட்டி ஓட்டிக்கொண்டிருந்தது அவளுக்குள் எதிரொலித்த “அர்ஜுன்” எனும் பெயர்.

“இது அம்மு தூக்கத்துல சொன்ன பெயர் தானே!!” அதீத யோசனையில் நின்றிருந்தாள் அவள்.

“அக்கா… என்ன ஆச்சு? பேயறஞ்சா மாதிரி நிக்குற?” – சிறுவன்.

“ஒன்னுமில்லை… ஆமா நான் உன்ன வீட்டுக்கு கூட்டிட்டு போகவா சொன்னேன்?” – சி.சி.டி.வி. வாங்க ஆயத்தமான விஷயம் நியாபகத்தில் வந்தவளாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“முதல்ல எங்கயோ கடைக்கு போகனும்னு வழி சொன்ன… அப்புறமா வேண்டாம் வீட்டுக்கு வண்டிய விடுனு சொல்லி அட்ரஸ் சொன்ன… நான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்… என்ன கா ஆச்சு?” – சிறுவன்.

“ஒன்னும் இல்ல குட்டி… தேங்க்ஸ்… இந்தா வச்சுக்க…” என ரிக்ஷாவுக்கான பணத்தை அவள் கையில் கொடுத்த ஆஷ்ரிதா வீட்டை நோக்கி நடந்தாள்.

உள்ளே நுழைந்ததும் ஒரு கணம் தயங்கி நின்றவள் தன் முகத்தின் பாவணையை நிதானமாக்க மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டாள். காரணம், அங்கு அவளுக்கு முன்பாகவே வந்து அமர்ந்திருந்தாள் அம்ரிதா.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு - 13

‘என்ன இவ அதுக்குள்ள வந்துட்டா?’ என எண்ணியவள் எந்த அடாவடியையும் காண்பிக்காமல் வீட்டிற்கு உள்ளே முன்னேறி நடந்தாள். ஆனால் அவளது கை தன்னிச்சையாக அலைபேசியை எடுத்து அனேகனுக்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிக்கொண்டு இருந்தது.

“ஐயம் ட்ரையின் டு ரீச் யூ ஃபார் அ லாங் டைம்... யூ டிட்டிண்ட் ரெஸ்பாண்ட்... ஐ வான்ட் டு மீட் யூ நவ்... ப்ளீஸ்…” என டைப் செய்து அனேகனுக்கு அனுப்பியவள் அம்ரிதாவிடம்,

“என்ன டி… இவ்வளவு சீக்கிரம் வந்துட்ட?” என கேட்டாள்.

“அச்சு… நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்…” – அம்ரிதா.

“என்ன டி…? சொல்லு…” – தன் கைப்பையை கழற்றி சோபாவின் ஓரமாய் வைத்தவள் அம்ரிதாவின் அருகே அமர்ந்தாள்.

“நீ ஃப்ரெஷ் ஆகிட்டு வா… வந்து காஃபி குடி… அப்பறம் பொறுமையா பேசலாம்” – அம்ரிதா.

“என்ன டி? எதுவும் பிரச்சனையா? முகமே டல்லா இருக்கு?” – ஆஷ்ரிதா.

“இல்ல டி… நீ கூட தான் பார்க்க ரொம்ப டயர்ட்டா தெரியுற… நீ ஃப்ரெஷ் ஆகி வா முதல… நான் அப்பறம் சொல்லுறேன்…” – அம்ரிதா.

“சரி வர்றேன் இரு” – சொல்லிவிட்டு குளிக்கச்சென்றாள் ஆஷ்ரிதா.

ஆஷ்ரிதா குளித்துவிட்டு வெளியே வரவும் பொன்னம்மா மூவருக்கும் தேனீர் தயாரித்து எடுத்து வரவும் நேரம் சரியாக இருந்தது. ஆஷ்ரிதா, அம்ரிதா இருவருக்குமான தேனீரை கோப்பையில் ஊற்றி உணவு மேஜையில் வைத்த பொன்னம்மா, தனக்கான தேனீர் கோப்பையுடன் அடுப்பங்கறைக்கு அருகில் இருக்கும் தன் அறைக்குள் புகுந்துக்கொண்டார்.

“என்ன பொன்னம்மா… இன்னைக்கு சைலண்ட் மோட் –ல யே இருக்கீங்க?” கேட்டுக்கொண்டே இரு தேனீர் கோப்பைகளையும் எடுத்து வந்து ஒன்றை அம்ரிதாவிடம் நீட்டினாள் ஆஷ்ரிதா.

பொன்னம்மா பதில் எதுவும் தெரிவித்ததாய் தெரியவில்லை. அம்ரிதாவும் ஆஷ்ரிதாவும் ஒன்றும் விளங்காமல் ஒருவரை ஒருவர் பார்த்திருக்க, பொன்னம்மா தன்னிடம் மனமுடைந்து பேசிய வார்த்தைகள் ஆஷ்ரிதாவுக்கு நினைவு வந்தது. பாறையென கனமாய் இருந்த தன் மனதை அடக்கிக்கொண்டு எழுந்த ஆஷ்ரிதா பொன்னம்மாவின் அறைக்கு சென்றாள்.

“என்ன பொன்னம்மா தனியா வந்து உக்காந்துருக்கீங்க? வாங்க… வந்து எங்களோட இருங்க!!” – ஆஷ்ரிதா.

“இருக்கட்டும் பாப்பா… வேலை எல்லாம் முடிஞ்சிது… பசிக்கும்போது சொல்லுங்க, சாப்பாடு எடுத்து வைக்குறேன்” – அதிநிதானமாக பேசினார் பொன்னம்மா.

வலியின் வீரியம் கடுமையான வார்த்தைகளில் வெளிப்படுவது ஒரு விதம் என்றால், பூ இதழை விட மென்மையாய் வெளிப்படுவது மற்றொரு விதம். கூர்மையான கத்தியாய் கொந்தளித்து மனவலியை வெளிப்படுத்தும் திடம் இழந்து நிற்கும் பல நேரங்களில் கையாளப்படுவதுதான் இத்தகைய மென்கோடாரிகள்.

எந்நேரமும் கீச் கீச் எனும் தொண்டையை கொண்டு பொன்னம்மா ஏதேனும் பேசிக்கொண்டே இருப்பதுதான் அவர்களது வீட்டின் முழுநேர சுப்ரபாதமாய் இருக்கும். தற்பொழுது எந்த அறிவிப்புமின்றி அது தடைப்பட்டிருக்க, அவ்வீட்டின் கற்சுவருக்கு கூட அந்த அமைதி வருத்தத்தையே தந்தது.

தானும் மிகுந்த மன அழுத்தத்திலும், குழப்பத்திலும் இருந்ததாலோ என்னவோ தற்பொழுது அவரை அதிகம் தொந்தரவு செய்யவேண்டாம் என எண்ணியவள் வார்த்தையை உதிர்க்க மறந்து அங்கிருந்து நகர்ந்துவிட்டாள் ஆஷ்ரிதா.

தன் பதிலுக்கு எந்த ஒரு எதிர் பதிலும் தராமல் செல்லும் ஆஷ்ரிதாவை ஏறெடுத்து பார்த்த பொன்னம்மாவுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தாலும் தன் கைகளால் வாய் பொத்தி அதனை அடக்கிக்கொண்டார். அவ்வீட்டில் ஒருவருக்கொருவர் எதையும் பகிர்ந்துக்கொள்ளாமல் மெளனத்தின் வழியே நடத்திக்கொண்டிருக்கும் இத்தனை வகையான மனப்போராட்டங்களை வரைஉருவாய் இருந்து பார்த்துக் கொண்டிருந்தார் தாய் யசோதா.

பொன்னம்மாவிடம் விடைப்பெற்ற ஆஷ்ரிதா அம்ரிதாவிடம் வந்து அமர்ந்து “என்ன அம்மு?? இப்ப சொல்லு…” என்று வாஞ்சையாக பார்த்தபடி கேட்டாள்.

அப்பொழுது ஆஷ்ரிதாவின் அலைபேசி அவளுக்கு குறுஞ்செய்தி வந்திருப்பதாய் ஒலியெழுப்ப, அதை எடுத்துப் பார்த்தாள் ஆஷ்ரிதா. அனேகனிடம் இருந்து பதில் வந்திருந்தது. “மீட் மீ அட்” என தாங்கள் சந்திக்க ஒரு இடத்தையும், சந்திக்க வேண்டிய நேரத்தையும் குறிப்பிட்டிருந்தான் அனேகன். நிம்மதி பெருமூச்சுடன் அந்த குறுஞ்செய்தியை படித்தவள் கடிகாரத்தை நிமிர்ந்து பார்க்க, அவள் மனதோ தங்கள் சந்திப்பிற்கு இன்னும் ஒன்றரை மணி நேரம் இருப்பதாக கூறியது.

“அம்மு… அடுத்து நீ எங்கயும் போகலல..? எனக்கு ஸ்கூட்டி வேணும்… மார்னிங் மெக்கானிக் கிட்ட பேசினேன், கார் நாளைக்கு வீட்டுக்கு வந்திடும்” என்றாள் ஆஷ்ரிதா.

“நான் எங்கயும் போகல டி” – அம்ரிதா.

“சரி என்ன பேசணும்னு சொன்ன?? சொல்லு…” – ஆஷ்ரிதா.

“அச்சு… இன்னைக்கு மோகன் வீட்டுல அவரோட பையனை பார்த்தேன்” – நேரடியாக விஷயத்திற்கே வந்தாள் அம்ரிதா.

“அப்படியா??” – அனேகன் தான் மோகனின் மகன் என்று அறியாத ஆஷ்ரிதா கேட்டுக்கொண்டிருந்தாள்.

“ஆமா... அவங்க வீட்டுக்கு மோகனோட உடலை எடுத்துட்டு வரல அச்சு…” – அனேகன் விஷயத்தை எவ்வாறு சொல்வதென தெரியாமல் தற்பொழுது பேச்சு தடம் புறண்டது அம்ரிதாவிடம்.

“எடுத்துட்டு வரலையா?? அப்ப ஹாஸ்பிட்டல் –லயே எல்லா ஃபார்மாலிட்டீஸும் முடிச்சிட்டாங்களா?” – ஆஷ்ரிதா.

“ஆமா டி… ஆனா அவங்க வீட்டுல சொந்தகாரன்னு சொல்லி யாருமே வரல டி!!” – அம்ரிதா.

“அதுக்கு நீ ஏன் டி இவ்வளவு ஃபீல் பண்ணுற?? போகும்போது நீதான சொன்ன, இவ்வளவு பாவம் பண்ணவன வழி அனுப்ப எல்லாரும் வரனுமானு? அவனோட ஃபேமிலில உள்ளவங்களுக்கு அவன பத்தி தெரிஞ்சிருக்கலாம்…” - ஆஷ்ரிதா.

சில வினாடி அமைதி காத்த அம்ரிதா மீண்டும் தொடர்ந்தாள் “அவரோட வைஃப் என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு அப்படியே மயங்கி விழுந்துட்டாங்க டி… எனக்கு ரொம்ப கஷ்டமா போய்டுச்சு…”

“சரி விடு டி… எதுக்கு அதையே போட்டு யோசிச்சிட்டு இருக்குற… நான் சொல்லுறத கேளு… இனி நீ ஆஃபீஸ் –க்கு எல்லாம் போகவேணாம்… என் கூட ஸ்கூலுக்கு வா… இல்லைனா நம்ம எஸ்டேட் பார்த்துக்கோ… அதுவும் வேணாம்னா எதாவது பிஸ்னஸ் ஸ்டார்ட் செய்யணும்னு நினைச்சா பண்ணு… உன்ன ஆக்டிவ் –ஆ வச்சிக்கோ…” – ஆஷ்ரிதா.

“இல்ல… என்னால ஆஃபீஸ் போகாம இருக்க முடியாது…” – வேகமாய் சொல்லி முடித்தாள் அம்ரிதா.

அவள் பதில் வந்து விழுந்த வேகத்தை கண்டு திகைத்துப்போன ஆஷ்ரிதா “என்ன டி? அவன் தான் செத்துட்டானே… அப்பறமும் நீ ஏன் அங்க போகனும்?” என கேட்டாள்.

மோகன் உடலும் உயிருமாய் அங்கிருந்து நீங்கிவிட்டாலும், தன் உயிருக்கு உயிரானவன் உடலோடு உருவமாய் அங்கு தானே வலம்வந்துக் கொண்டிருக்கிறான். அதனை எவ்வாறு சொல்வது என்றல்லவா கன்னி அவள் திணறிக்கொண்டிருக்கிறாள்.

“இப்ப நீ எதையும் முடிவு பண்ண வேணாம்… கொஞ்சம் நாள் போகட்டும் பார்த்துக்கலாம்… ஆஃபீஸ் உடனே திறக்கப்போறது இல்ல தானே” – ஆஷ்ரிதா.

“நெக்ஸ்ட் மண்டே” – அம்ரிதா.

“வன் வீக் இருக்கு… பார்த்துக்கலாம்… இப்ப வா சாப்பிடலாம்… சாப்ட்டு நீ தூங்கு… எனக்கு ஸ்கூல் விஷயமா வெளியில ஒரு வேலை இருக்கு… போய் முடிச்சிட்டு வந்திடுவேன்” – ஆஷ்ரிதா.

“நானும் வர்றேன்” – அம்ரிதா.

“நீ தூங்கி ரெஸ்ட் எடு… நான் போய்ட்டு வர்றேன்” – ஆஷ்ரிதா.

“எப்பவும் நான் தூங்கிட்டே தான இருக்கேன்…” – பாவமாய் கூறினாள் அம்ரிதா.

அவள் வார்த்தையில் நிறைந்திருந்த வலியையும் இயலாமையையும் புரிந்துக்கொண்ட ஆஷ்ரிதாவுக்கு அவளை எப்படி தடுப்பது என்பது தெரியவில்லை. அனேகனை காணச் செல்லும் பொழுது இவளை கூட்டிச்செல்ல இயலாது என எவ்வாறு அவளிடம் சொல்ல முடியும். ‘கஷ்டப்பட்டு எட்டிப்பிடிக்கும் ஒவ்வொறு கயிற்றிலும் இத்தனை முட்களை ஏன் வைக்கிறாய் இறைவா’ என தன்னுள் நொந்துக்கொண்டிருந்த ஆஷ்ரிதா, அம்ரிதாவை வீட்டில் விட்டுச் செல்ல என்ன செய்யலாம் என்ற யோசனையோடு மதிய உணவு உண்ண அவளை அழைத்து வந்து மேசையில் அமர்த்தினாள்.

இவர்கள் பேசிக்கொண்டிருப்பது பொன்னம்மாவுக்கும் கேட்டுக்கொண்டிருக்க, தனக்கு அழைப்பு கொடுக்கும் வேலையை ஆஷ்ரிதாவுக்கு வைக்காமல் தானே எழுந்து உணவு பாத்திரங்களை எடுத்து வைக்கலானார் அவர்.

மூவரின் மனதிலும் ஒவ்வொறு சிக்கல் நிறைந்து, அவர்களை சின்னாபின்னமாக மாற்றியிருக்க, அந்த உணவு பொழுது அன்று மிகுந்த அமைதியாகவே கழிந்தது. அனேகன் கூறிய நேரமும் நெருங்கியது.

ஆஷ்ரிதா வேகமாய் கிளம்பிக்கொண்டிருக்க, தானும் உடன் வருவதாய் அடம் பிடித்த அம்ரிதா அவளுக்கு முன்பாக தயாராகி அமர்ந்திருந்தாள்.

“சொன்னத கேட்கவே மாட்டியா அம்மு… இப்பதான் மோகன் வீட்டுக்கு போய்ட்டு வந்திருக்க… ரெஸ்ட் எடுக்க வேண்டியதுதானே… முகத்தை பாரு எப்படி இருக்கு?” – தன் கூந்தலைப் பிண்ணிக்கொண்டே கேட்டாள் ஆஷ்ரிதா.

“எப்பவும் ஆக்டிவ் –ஆ இருக்க சொல்லுற… சரி உன்னோட சேர்ந்து வேலைய பாக்குறேன்னு சொன்னா தூங்க சொல்லுற… நான் என்ன அச்சு பண்ணட்டும்??” – சிணுங்கினாள் அம்ரிதா.

இதற்கு என்ன பதில் கொடுப்பது என ஆஷ்ரிதாவுக்கு தெரியவில்லை. என்ன பதில் கொடுத்தாலும் அம்ரிதா கேட்கப்போவது இல்லை என்பது மட்டும் தெளிவாய் தெரிந்தது அவளுக்கு. கிளம்பிக்கொண்டே அம்ரிதாவுக்கு சந்தேகம் வாராத வண்ணம் தன் அலைபேசியை எடுத்த ஆஷ்ரிதா, அனேகனுக்கு அடுத்த குறுஞ்செய்தியை தட்டினாள்.

“அம்ரிதா என் கூட வரனும்னு அடம் பிடிக்கிற… வாட் ட்டு டூ??” என தன் கைபேசியின் திரையில் விரிந்திருந்த செய்தியை பார்த்துக்கொண்டிருந்த அனேகன் புன்னகைத்தவாறு “இட்ஸ் கெட்டிங் மோர் இண்ட்ரஸ்டிங்” என பதிலளித்தான் ஆஷ்ரிதாவுக்கு.

அவனது பதிலை கண்டு காட்டமான ஆஷ்ரிதா, தன் பற்களை கடித்தவாறு சிகப்பு நிற முகம் கொண்ட பொம்மைகளை அளவின்றி தட்டி அவனுக்கு அனுப்பினாள்.

அவளிடம் இருந்து வந்த இக்குறுஞ்செய்தியை கண்டு வாய்விட்டு சிரித்த அனேகன் “கெட் ஹெர் வித் யூ… இட்ஸ் டைம் டு க்னோ ஆல் தி ட்ரூத்” என்று தட்டச்சிட்டு அனுப்பினான்.

அதை கண்டவள், “ஏற்கனவே நான் குழம்பிப்போய் இருக்கேன்… இதுல இவன் படுத்துற பாடு… நல்லா இருக்கறவங்கல லூசு ஆக்குற டாக்டர் தான் இவன்… ச்சை…” என்று தன் வாய்க்குள் முனகிக்கொண்டவள் அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு தயாராகி முடித்தாள்.

“எங்கே போகனும்னு சொல்லு… நான் வண்டி ஓட்டுற…” – சாவியை ஆணியில் இருந்து எடுத்தவாறு கூறினாள் அம்ரிதா.

“நானே ஓட்டுறேன் நீ வா…” என அவளது கையில் இருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு நடந்தாள் ஆஷ்ரிதா.

“ஸ்… குரங்கு… எப்படு பிடுங்குத் பாரு!!” என்ற அம்ரிதா அவள் பின்னே செல்ல இருவரும் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்தனர்.

“பொன்னம்மா… நாங்க போய்ட்டு வர்றோம்…” – வாசலில் நிற்கும் வண்டியில் அமர்ந்திருந்தவாறு கத்தினாள் அம்ரிதா.

“பாத்து போய்டு வாங்க பாப்பா” – பொன்னம்மாவின் குரல் மட்டுமே வெளியே வந்தது. பொன்னம்மா வரவில்லை.

அவரை வெளியே எதிர்பார்த்திருந்த ஆஷ்ரிதாவுக்கு குரலை மட்டும் கேட்டதில் மனம் உருக்குழைந்து போனது.

“ஏன் டி பொன்னம்மா வெளியில வரல… எப்பவும் நம்மள வாசல்ல வந்து கைக்காட்டி, இந்த ரோடு முக்கு திரும்புற வர நம்மள பார்த்துட்டு இருப்பாங்க தானே?” – அம்ரிதா.

“என் மேல தான டி வருத்தம்… உன்ன வந்து பார்க்கலாம்ல?” – ஆஷ்ரிதா.

“உன் மேல என்ன டி வருத்தம்?” – அம்ரிதா.

“என்ன சொல்ல நான்… விடு… கிளம்பலாமா?” – ஆஷ்ரிதா.

“ம்ம்ம்ம்…” – அம்ரிதா.

வீட்டில் இருந்து கிளப்பிய வண்டி அனேகன் சொன்ன இடத்தை நோக்கி பயணமாகிக் கொண்டிருக்க, ஆஷ்ரிதாவின் முகத்திலோ குழப்ப ரேகைகள் ஓடிக்கொண்டிருந்தன.

“இவகிட்ட ஸ்கூல் விஷயம்னு சொல்லியிருக்கேனே… அவன என்னனு சொல்லி இவகிட்ட இண்ட்ரோ செய்யுறது? நான் முக்கியமான விஷயம் பேசனும்னு சொன்னேன்… அது என்னனு கூட யோசிக்கல… அம்மு வர்றேன்னு சொன்னா கூட்டிட்டு வரணுமாம்.. இவள வச்சிட்டு விஷயத்த எப்படி பேசுறது… இவன் தெரிஞ்சி பண்ணுறானா தெரியாம பண்ணுறானா ஒன்னும் புரியல…” என்று மனதிற்குள் புலம்பியவாறு இருந்த ஆஷ்ரிதாவை கலைத்தது அம்ரிதாவின் குரல்.

“அச்சு… வரும்போது மால்- க்கு போய் திரு –வ பார்த்துட்டு வருவோமா?? அவன பார்த்து ரொம்ப நாள் ஆகுது…” – அம்ரிதா.

‘இருக்குறது பத்தாதுனு இதுவேறயா?’ என எண்ணிய ஆஷ்ரிதா “இன்னைக்கு வேணாம்… இன்னொரு நாள் பார்த்துக்கலாம்…” என்றாள்.

“ஏன் டி… அப்படியே கொஞ்சம் ஷாப்பிங்கும் செய்யலாம்னு பார்த்தேன்” – அம்ரிதா.

“அதான் இன்னொரு நாள் பார்க்கலாம்னு சொல்றனே” – ஆஷ்ரிதா.

“ஹுக்கும்… அந்த எருமைக்காவது பார்க்கனும்னு தோணுச்சா பாரு… ஒரு கால் இல்லை… ஒரு மெசேஜ் இல்லை…” – அம்ரிதா.

“யாரு அவன் தானே!! ஆமா… ஆமா…” – ஆஷ்ரிதா.

“என்ன டி…உன் டோன் சரியே இல்லையே?” – அம்ரிதா.

“எல்லாம் சரியாதான் இருக்கு” – ஆஷ்ரிதா.

“சரி விடு… இப்ப என்ன வேலையா போறோம்?” – அம்ரிதா.

‘நம்ம வாய பிடுங்காம விட மாட்டா போலயே…’ என்று எண்ணிய ஆஷ்ரிதா, “உன் வாய் கொஞ்சம் நேரம் அமைதியா இருக்காதா டி? உன்ன ஆக்டிவ் –ஆ இருக்க சொன்னது நான்தான்… அதுக்கு இப்படியா ப்ரேக் விடாம பேசுவ??” என கேட்டாள்.

“சரி… நான் வாய மூடிக்கறேன்… நீ ரோட்ட பார்த்து வண்டிய ஓட்டு” – அம்ரிதா.

சில நிமிடங்களில் அவர்களது சந்திப்பிற்கான இடம் வந்துவிட, ஆஷ்ரிதாவின் இதயம் படுவேகமாக துடிக்கத்தொடங்கியது. ‘இவன் எங்க நிக்குறான்னு தெரியலையே! இன்னைக்கு அவன்கிட்ட எல்லாத்தையும் சொல்லிடா ஒரு க்ளரிட்டி கிடைக்கும்னு நினைச்சேன்… அம்மு –வ கூட வச்சிட்டு எப்படி சொல்லுறது?’ என்று எண்ணியபடியே அந்த பூங்காவின் வெளியே வண்டியை நிறுத்தினாள் ஆஷ்ரிதா.
“ஹேய் அச்சு… செம்ம டி… பார்க் –க்கு கூட்டிடு வந்திருக்க…” – சிறு பிள்ளை போல துள்ளிக் குதித்தாள் அம்ரிதா.

“அதுக்கு ஏன் டி இப்படி குதிக்கற??” என்று கூறியவாறு ஸ்கூட்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியவள் தன் அலைபேசியை எடுத்து “வேர் ஆர் யூ?” என அனேகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

“இன்சைட் தி பார்க்… ரைட் சைட் ஃபோர்த் பென்ச்” என்று அவன் பதில் அனுப்பினான்.

“கம்மிங்” என்று இவள் பதிலை அனுப்பிவிட்டு “வா அம்மு” என நிமிர்ந்துப் பார்த்தால் அங்கு அம்ரிதா இல்லை.

“எங்கே போனா இவ?” என்று அங்கும் இங்கும் பார்வையை வீசியவள் அம்ரிதாவின் அலைபேசிக்கு அழைப்புக் கொடுத்தாள். அந்த அழைப்பு மணி தனது ஸ்கூட்டியில் வைத்திருந்த கைப்பையில் இருந்து ஒலித்ததைக் கண்டு ‘இங்கதான் வச்சிட்டு போய்ருக்காளா?’ என்று எண்ணியவள் பூங்காவின் உள்ளே தேடத் தொடங்கினாள்.

அம்ரிதாவை தேடியவளுக்கு கண்ணில் பட்டதென்னவோ அனேகன் தான். இவளது விழிகள் வழியை விளாவிக்கொண்டிருக்க, தன் கையை அசைத்து அழைத்தான் அனேகன். அவனது அழைப்பை பார்த்து அவனருகே ஆஷ்ரிதா சென்றிட “கரெக்ட் –ஆ ப்லேஸ் சொன்னேன் தானே… அப்பறம் என்ன தேடிட்டு இருக்கற?” என கேட்டான் அனேகன்.

“உங்க தேடல… அம்மு என்னோட தான் வந்தா… உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு திரும்புறதுக்குள்ள ஆள காணோம்… அதான் தேடிட்டு இருக்குறேன்…” – ஆஷ்ரிதா.

“சரி அவ வர்றதுக்குள்ள நீ சொல்ல வந்தத சொல்லு” – அனேகன்.

“என்ன?? நான் அவள காணோம்னு சொல்லிட்டு இருக்கேன்… நீங்க சொல்ல வந்தத சொல்லுனு சொல்லுறீங்க??” – ஆஷ்ரிதா.

“நீதான ஏதோ அவசரமா பேசனும், அதுவும் உடனே பேசனும்னு சொன்ன??” – அனேகன்.

“ஓ… அது இப்ப தான் தெரியுதா உங்களுக்கு? அம்முவயும் என்னோட கூட்டிட்டு வர சொன்னீங்களே அப்ப தெரியலையா??” – ஆஷ்ரிதா.

“என்னோட சண்ட போடதான் எப்பவும் வருவியா?” – அனேகன்.

“உங்க கூட சண்ட போட எனக்கு ஒன்னும் ஆசை இல்லை… நீங்க தான் என் பிளெட் பிரஷரை ஏத்துறீங்க… டாக்டர் -னா பேஷண்ட் –ஐ காப்பாத்துவாங்கனு பாத்துருக்கேன்… ஆனா என்ன நீங்க தான் பேஷண்ட் ஆக்கிடுவீங்க போல…” – ஆஷ்ரிதா.

“சுப்” – என்று அதிர்வாய் கூறினான் அனேகன்.

அவனிடம் இருந்து எழுந்த திடீர் ஒலிப்பெருத்தில் திடுக்கிட்டு உறைந்தாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 14

அவனது அதட்டலில் ஒரு வினாடி உறைந்தவள் தனக்குள் எரிமலையாய் கொதித்துக் கொண்டிருந்தாள்.

“சும்மா நீங்க வச்ச ஆளு மாதிரி எப்பவும் என்கிட்ட கத்தாதீங்க… ஏன் தங்கச்சிய காணோம்னு சொல்லிட்டு இருக்குறேன்…” – கொலை வெறியுடன் ஆஷ்ரிதா பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அருகாமையில் அம்ரிதாவின் குரல் கேட்டது.

குரல் வந்த திசை நோக்கி ஆஷ்ரிதாவும் அனேகனும் திரும்பிப்பார்க்க, அம்ரிதாவோ அங்கு ஒரு பென்ச் –ல் அமர்ந்து காலை ஆட்டிக்கொண்டே குச்சி ஐஸ் –ஐ ருசித்துக்கொண்டும் ஏதோ முனகிக்கொண்டும் இருந்தாள்.

“அம்மு அங்க இருக்கா…” – சூட்டிப்பான குரலோடு கூறிய ஆஷ்ரிதா எழுந்துக் கொள்ள, அவளை பிடித்து இழுத்து தன் அருகிலேயே அமர்த்தினான் அனேகன்.

“வாட் ஆர் யூ டூயிங் மேன்?” – எரிச்சலோடு கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஜஸ்ட் சிட் ஹியர்” – அழுத்தமாக கூறிய அனேகனது பார்வை அம்ரிதாவை தீர்க்கமாக ஊடுருவிக்கொண்டிருந்தது.

“ப்சே..” என்று அவனிடம் இருந்து சிறிது தள்ளி அமர்ந்த ஆஷ்ரிதாவின் கண்கள் அனேகனது பார்வை செல்லும் வழியில் பயணிக்கத் தொடங்கியது. அதன் இலக்கு அம்ரிதாவாக இருப்பதை அறிந்தவள்,

‘எதுக்கு இவன் இவ்வளவு தீவிரமா பார்க்குறான்?’ என்ற யோசனையில் ஆஷ்ரிதாவும் சில நொடிகள் அம்ரிதாவை உற்று கவனிக்கலானாள். அம்ரிதாவின் நடவடிக்கைகள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை போல இருப்பதை அப்பொழுதுதான் ஆஷ்ரிதாவால் இனம் கண்டு கொள்ள முடிந்தது.

“என்ன அவ? இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்குறா? எல்லாரும் பார்க்குறாங்க… நான் போய் அவள கூட்டிட்டு வரட்டுமா?” – தயக்கத்துடன் அனேகனிடம் கேட்டாள் ஆஷ்ரிதா.

“நோ” – மீண்டும் தீர்க்கமான பதில் அனேகனிடத்தில்.

“பட் வய்? எல்லாரும் அவள எப்படி பார்த்துட்டு போறாங்க பாருங்க… அசிங்கமா இருக்கு…” – ஆஷ்ரிதா.

“அவள பொறுத்தவர இப்ப அந்த ஐஸ் தான் உலகம்… மத்தவங்க என்ன நினைப்பாங்கனு யோசிக்க மாட்டா…” – அனேகன்.

“ஏன்??” – ஆஷ்ரிதா.

“அவளுக்கு இப்ப அஞ்சு வயசு” – அனேகன்.

“என்ன அஞ்சு வயசா?” – புதிர்கள் சூழ்ந்த பிணியுடன் கேட்டாள் ஆஷ்ரிதா.

“யஸ்… உன்கிட்ட சொல்லியிருந்தேன் –ல, அவளுக்கு முன்ஜென்ம நியாபகமும், அடுத்த ஜென்ம நியாபமும் மாறி மாறி வருதுனு…” என்று அனேகன் கேட்க, கலங்கிய கண்களோடு பாவமாய் தலையை மட்டும் ”ஆம்” என அசைத்து வைத்தாள் ஆஷ்ரிதா.

“இது அவளோட நெக்ஸ்ட் இன்கார்னேஷன் –கான இண்டிமேஷன்” – அனேகன்.

“எனக்கு தலையே வெடிச்சிரும் போல இருக்கு? முன்ஜென்மம் பத்தி சொன்னீங்க… அதுல ஒரு லாஜிக் இருக்கு… இது என்ன அடுத்த ஜென்மம்? இனிமே வரப்போறத எப்படி இப்பவே கனிக்க முடியும்?” – ஆஷ்ரிதா.

“என் கூட வா…” – எழுந்து நடந்தான் அனேகன்.

ஆஷ்ரிதா அவள் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

“கம் ஆன்… டைம் இல்ல…” – கடுகடுத்தான் அனேகன்.

“வந்து தொலையுறேன்” என்று கத்தியவள் ‘எப்ப பாரு கால் –ல சுடு தண்ணி ஊத்திட்டே அலைய வேண்டியது’ என தன் மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டே வேகமாய் அவன் பின்னே சென்றாள்.

அவனது ஆறடி உயரம் எடுத்து வைக்கும் வேகமான கால் அடிகளுக்கு ஆஷ்ரிதாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. அவன் எடுத்து வைக்கும் இரண்டு அடிகளை கடக்க நான்கு அடிகள் வைத்தும் போதவில்லை பெண்ணால்.

“கொஞ்சம் மெதுவா நடங்க… உங்க வேகத்துக்கு என்னால நடக்க முடியல” – ஆஷ்ரிதா.

அவள் கூறியதை கேட்டவன், தன் இட பக்க தோள்பட்டையை பின்புறமாய் திருப்பி, தன் ஒற்றை புருவத்தை தூக்கி அவளை உற்று நோக்கிவிட்டு, “சாரி” என்றுவிட்டு தன் வேகத்தை குறைத்து நடக்கலானான்.

ஒருவழியாக இருவரும் அந்த பூங்காவின் வாசலை ஒன்றாய் அடைந்திட, தனது சிகப்பு நிற சுசுகி பலேனோ காரை நோக்கி நடந்தான் அனேகன். காரில் இருந்து எதையோ எடுக்கப்போகிறான் போல என நினைத்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. அவனோ காரினுள் அமர்ந்து அதனை உயிர்ப்பித்து, செலுத்தியபடி ஆஷ்ரிதாவின் அருகில் கொண்டுவந்து நிறுத்தினான்.

“கெட் இன்” – அனேகன்.

வினாவாய் விழித்தாள் ஆஷ்ரிதா.

“ஏறு” – அதிர்ந்தான் அனேகன்.

தடார் படார் என உள்ளே ஏறி அமர்ந்தவள் “அங்க வச்சே பேச வேண்டியதுதானே? காருக்கு உள்ள உட்கார்ந்துதான் பேசனுமா?” - - பொரிந்தாள் ஆஷ்ரிதா.

அவளது ஆர்ப்பாட்டத்தை சிறிதும் சட்டை செய்யாதவன் படுவேகமாக தன் வண்டியை கிளப்பினான்.

“ஹேய்… எங்க போறீங்க?? அம்மு அங்க இருக்கா… அவள தனியா விட்டுட்டு எங்க போறீங்க… ஸ்டாப் தி கார்…” – கத்தினாள் ஆஷ்ரிதா.

“அவளுக்கு ஒன்னும் ஆகாது… நீ அமைதியா வா!!” – வண்டியை செலுத்தியபடியே கூறினான் அனேகன்.

“என்ன ஒன்னும் ஆகாது? உனக்கு அவ வன் ஓஃப் தி பேஷண்ட்… அவ்வளவு தானே… அதான் இவ்வளவு ஈசியா சொல்லுற… ஆனா எனக்கு அவ தங்கச்சி… என் கூட பொறந்த தங்கச்சி… கருவா உருவானதுல இருந்து இப்ப வர ஒன்னாவே இருக்கோம்… உனக்கு வேணும்னா அக்கறை இல்லாம இருக்கலாம்… ஆனால் எனக்கு அக்கறை இருக்கு… காரை நிறுத்து முதல…” – என்று அவள் சொல்லி முடித்த மாத்திரத்தில் ‘கீர்ர்ச்ச்ச்ச்ச்ச்ச்’ எனும் சத்தத்தோடு உலோகத்தின் உராய்வை உணர்த்தி நின்றது அந்த கார்.

பலம் பொருந்தி முறுக்கேறிய தன் இரு கைகளையும் கார் ஸ்டியரிங் –ல் வைத்தபடி தலையை குனிந்து இருந்த அனேகனது மூச்சின் வேகமும் வெப்பமும் வழக்கத்தை விட தாறுமாறாய் எகுறி இருந்தது. தரை நோக்கி தாழ்த்தியிருந்த அவன் சிரசிலிருந்து நீண்ட ஒற்றை கத்தை முடி ஆழம் விழுது போல தொங்கிக்கொண்டிருக்க, அதன் ஊடாய் காட்சியளித்த அவனது சிவந்த கண்கள் ஆஷ்ரிதாவின் மனதில் திகலை நிறைத்தது.

காரானது தார் ரோட்டை உராய்ந்து நின்ற தாக்கத்தில் இடியென முழங்கிக்கொண்டிருந்த பெண் அவளும் அமைதியாகிப் போயிருக்க, அனேகனது இந்த அகோர அவதாரம் அவள் உடலை நடங்க வைத்தது. யாருமற்ற அந்த வீதியில் பொங்கி பறக்கும் புழுதி மட்டும் அவர்கள் மேனியில் மோதி சத்தத்தை எழுப்பி காற்றோடு மறைந்துக் கொண்டிருந்தது.

நரம்புகள் புடைக்க, கண்கள் சிவக்க ஆஷ்ரிதாவை திரும்பிப் பார்த்த அனேகன் “அவ வளர்த்த நாய் நீயே இவ்வளவு துடிக்கும்போது, அவளோட உயிரா இருந்தவன் நான் துடிக்கமாட்டேனா?” என்றான்.

அவனது பார்வையும் பாசையும் ஆஷ்ரிதாவுக்கு கிலியை ஏற்படுத்தியது.

“நா… நான்… அவ வளர்த்த நாயா? என்ன பேசுறீங்க நீங்க?” – அம்ரிதா தான் உனக்கு சோறு போட்டு வளர்க்கிறாள் என்று நக்கலாய் அவன் கூறுவதாக தவறாய் புரிந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“என்ன வேணும்னாலும் பேசலாம் நான் கேட்டுட்டு இருப்பேன்னு நினைக்காதீங்க மிஸ்டர். அனேகன்…” – ஆஷ்ரிதா.

தன் பக்க கார் கதவை வேகமாக திறந்து வெளியேறிய அனேகன் காரின் முகப்பு வழியாக ஆஷ்ரிதா இருந்த பக்கத்திற்கு வந்து அந்த கதவையும் திறந்தான்.

“இறங்கு” – அனேகன்.

ஒரு நொடி தாமதமாக்கினாலும் இடியை போல இவன் கத்துவான் என்பதை அறிந்தவளாய் வேகமாக காரை விட்டு கீழே இறங்கினாள் ஆஷ்ரிதா.

இம்முறை அவள் இறங்கியதும் “வா” என்று கட்டளையாய் கூட கூறாமல் அந்த வீதியில் நடக்கத் துவங்கினான் அனேகன். அவனோடு பயணப்பட்டு பழகியவளுக்கு அவன் மூளையின் பாசைகள் புரிய தொடங்கிவிட்டது போலும் அவனை பிந்தொடர்ந்து தானும் நடக்கலானாள் ஆஷ்ரிதா.

பூங்காவில் வைத்து ஆஷ்ரிதா கூறியதை மனதில் வைத்திருந்தவன் அப்பொழுது தன் வழக்கமான வேகத்தை குறைத்தே நடந்துக்கொண்டிருந்தான். அதனால் ஆஷ்ரிதாவும் அதிகம் சிரமமின்றி அவனோட நடந்தாள்.

இவ்வாறு இருவரும் ஒருவருக்கு பின் ஒருவராக நடந்துக்கொண்டிருக்க, சில நிமிடங்களில் அங்கே ஒரு சிறிய கோவில் தென்பட்டது. அதன் வாசலுக்குச் சென்று தன் ப்ரெளன் நிற ஷு –வை கழற்றியவன் பின்னே வரும் ஆஷ்ரிதாவை திரும்பிப் பார்த்துவிட்டு உள்ளே சென்றான்.

அவனுக்கு ஒரு அடி தொலைவில் நின்றுக்கொண்டிருந்த ஆஷ்ரிதா “நானெல்லாம் என்னைக்கு கோவிலுக்கு வந்தேன்… என் அம்மா கூப்பிட்டே நான் போனது இல்ல…” என்று தனக்குள் கூறிக்கொண்டிருந்தவள் அனேகன் வெளியே வரும் வரை காத்திருக்கலாமென அங்கேயே நின்றுக்கொண்டிருந்தாள்.

அப்படியே பத்து நிமிடங்கள் கழிந்துவிட்டிருந்தது. அவனும் வெளீயே வந்த பாடில்லை, இவளும் உள்ளே சென்ற பாடில்லை.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிக்கறது…” என்று நொந்தவள் வேறு வழியின்றி கோவிலுக்குள் சென்றாள்.

உள்ளே நுழைந்ததுமே அங்கு அனைவருக்கும் முதலில் காட்சி தந்தது ஒரு பெரிய அரச மரம் தான். வாசலின் எதிர் திசையில் கோவிலின் எல்லை சுவரை ஒட்டியபடி அது நின்றுக்கொண்டிருந்தாலும் அந்த சிறிய கோவிலை நிறைத்திருப்பது என்னவோ அந்த ஒற்றை பெரிய மரமாகதான் இருந்தது.

பல மஞ்சள் கயிறுகளும், சதுரமாகவும் செவ்வகமாகவும் செய்யப்பட்ட சிறு சிறு தொட்டில்களும் அந்த மரத்தில் அதிகம் இருப்பதை தூரத்தில் இருந்தே கண்டுக்கொள்ள முடிந்தது. மெதுவாக முன்னேறி அதன் அருகில் சென்றவள் “இத போல சினிமா –ல எல்லாம் காட்டுவாங்க தானே?” என்று மனதில் எண்ணியவள் அதில் இடை இடையே காணப்படும் காகித மாலையை தொட்டுப்பார்த்தாள்.

அப்பொழுது தன் தொண்டையை செறுமிக்காட்டியபடி அங்கு வந்து நின்றான் அனேகன்.

“இது எல்லாம் ஒவ்வொரு வேண்டுதல்… குழந்தை இல்லாதவங்க தொட்டில் கட்டுவாங்க, கல்யாணம் ஆகாதவங்க மஞ்சள் கயிறு கட்டுவாங்க, வேற ஏதேனும் வேண்டுதல் இருந்தா இதோ இத போல பேப்பர் –ல எழுதி மாலையா போடுவாங்க…” என்று அவன் கூற,

“தெரியும்… நானும் தமிழ் சினிமா எல்லாம் பார்த்திருக்கேன்” என்றாள் ஆஷ்ரிதா.

“ஆனா நான் இத எல்லாம் தமிழ் சினிமா பார்த்து தெரிஞ்சிக்கல…” – அனேகன்.

அடுத்து அவன் என்ன சொல்லவருகிறான் என பார்த்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“கம் டு தி பாய்ட்… அதோ அங்க ஒரு பாட்டி உட்கார்ந்திருக்காங்க தெரியுதா?” – அனேகன்.

“அந்த காவி சேல கட்டினவங்களா?” – ஆஷ்ரிதா.

“ஆமா… அவங்க தான் இந்த கோவில் –ல ஸ்பெஷல்… அவங்க சொல்லுற வாக்கு தப்பவே தப்பாது” என்ற அனேகனை ஏற இறங்க பார்த்தவள்,

“நீங்க டாக்டர் தானே?” – என்று கடுப்பு நிறைந்த நல்லக்கலோடு கேட்டாள்.

“அப்படிதான் ஊரு –லா எல்லாரும் சொல்லுறாங்க” என்றான் அனேகன்.

“என்னது… ஊருல சொல்லுறாங்களா? அப்ப நீங்க உண்மையிலயே டாக்டர் இல்லை?” – படபடத்தாள் ஆஷ்ரிதா.

“அது இல்ல… இந்த பாட்டிய சொல்லுறேன்… அவங்க சொன்னா அப்படியே நடக்கும்னு ஊருல எல்லாரும் சொல்லுறாங்க…” – அனேகன்.

தன் தங்கையை பற்றி இவரிடம் கேட்கலாமா எனும் எண்ணம் ஆஷ்ரிதாவின் மனதில் தோன்றினாலும் “இப்ப இத தெரிஞ்சிகிட்டு நான் என்ன செய்ய போறேன்?” என்றாள் அனேகனிடத்தில்.

“நான் சொல்லுறத கவனமா கேளு… அம்ரிதாவோட மறுஜென்ம கனிப்புகள இந்த பாட்டியால தான் சரியா சொல்ல முடியும்… சொல்லப்போனா அந்த அத்தியாயம் தொடங்கப்போறதே இவங்க மூலமாதான்… நான் சேகரிச்ச டீட்டயில்ஸ் படி ஒவ்வொறு வெள்ளிக்கிழமையும் இவங்க அருள்வாக்கு சொல்லுறாங்க… மற்ற நாட்கள் அவங்க சாதாரணமா கூட யார்கிட்டயும் பேசமாட்டாங்க…” – அனேகன்.

“அப்படீன்னா அவங்க வெள்ளிக்கிழமை மட்டும் தான் வாயா திறப்பாங்க… அவங்க வாய திறக்குறது அருள்வாக்குக்காக மட்டும் தான் கரெக்ட் –ஆ?” –ஆஷ்ரிதா.

“யஸ்… விஷயத்தை தெரிஞ்சுக்கோ… இப்ப வரும்போது நீ என்கிட்ட கேட்ட எல்லா கேள்விகளுக்கு பதில் உன்ன தேடி தானா வரும்…” – அனேகன்.

“ம்ம்ம்… நீங்க சொல்ல வந்த விஷயம் முடிஞ்சிடுச்சுனா நான் சொல்ல வந்தத சொல்லலாமா?” – ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… சொல்லு” – அனேகன்.

“கார் –ல போய்ட்டே பேசலாமே… அம்மு தனியா இருப்பா…” – தயங்கியபடியே கூறினாள் ஆஷ்ரிதா.

தன் கண்களை மூடி அம்ரிதாவை மனதினுள் நிறைத்தவன், “ஷி இஸ் ஃபைன்… இங்கயே சொல்லு… அவகிட்ட போய்ட்டா நம்மாள பேசமுடியாது” – அனேகன்.

அவன் சொல்வதில் உள்ள உண்மை தன்மையை உணர்ந்துக்கொண்ட ஆஷ்ரிதா, அம்ரிதாவை எண்ணி துடிக்கும் மனதை மிகுந்த கடினப்பட்டு அடக்கினாள்.

“நேத்து அம்முவோட மேனேஜர் ஒரு ஃபயர் ஆக்சிடண்ட் –ல இறந்துட்டாரு… அவரோட இறுதி சடங்குக்காக காலையில அம்மு அங்க போனா.. அந்த டைம் நான் உங்கள மீட் பண்ணுறதுக்காக கால் பண்ணிட்டே இருந்தேன்… நீங்க எடுக்கல…” – ஆஷ்ரிதா.

“ஆமா… ஏன்னா நானும் அங்க தான் இருந்தேன்” – அனேகன்.

“வாட்?? நீங்க எதுக்கு அங்க??” – ஆஷ்ரிதா.

“பிகாஸ் ஹி இஸ் மை டேட்” – அனேகன்.

“என்ன?? நீங்க மோகனோட பையனா??” – அதிர்ச்சியடைந்த ஆஷ்ரிதா “அப்டீன்னா அம்முவுக்கு உங்கள தெரியுமா? இன்னைக்கு மோகனோட பையன மீட் பண்ணதா என்கிட்ட சொன்னாளே?” என கேட்டாள்.

“யஸ்… ஷி க்னோ மீ… ஆனால் மேனேஜர் பையனா மட்டும்தான் தெரியும்..” – அனேகன்.

“விச் மீன்ஸ்??” – ஆஷ்ரிதா அம்ரிதாவின் அலுவலகம் சென்றிருந்த பொழுது அனேகன் அவளை இறுக அனைத்து அவள் இதழை ருசித்தபடி நின்றிருந்த காட்சி நினைவுக்கு வந்தவளாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

அவள் மூளையில் விரிந்த அக்காட்சியை உணர்ந்த அனேகன், “அன்னைக்கு நான் அம்ரிதாவை கிஸ் பண்ணது வன் ஆஃப் தி ட்ரீட்மெண்ட்… அவளுக்கு அன்னைக்கு நடந்தது எதுவும் தெரியாது… இன்னைக்கு தான் அவ என்ன பார்த்து பேசினா… இதுவரை என் முகத்த கூட அவ பார்த்ததில்ல…” – அனேகன்.

‘நீ கிஸ் பண்ணது ட்ரீட்மெண்ட் –ஆ?’ என அவனை நாக்கை பிடுங்கிக்கொள்ளும் விதமாய் கேள்வி கேட்க துடித்தாள் ஆஷ்ரிதா. இருந்தும் ஏதோ ஒன்று அவளை தடுக்க, மனதின் வலியை பொறுத்து துடிக்கும் உதட்டினை அடக்கிக்கொண்டு தன்மையாய் கேட்டாள் “அதுல என்ன ட்ரீட்மெண்ட்?” என்று.

“அவளோட மனசுல இருக்குற முன்ஜென்ம ரேகைகளை நான் படிச்சிட்டு இருக்குறப்ப, அடுத்த ஜென்மத்தோட அழைப்பு அவ ஆத்மா –வ உலுக்கத் தொடங்குச்சு… அதுல இருந்து மீட்டெடுக்கதான் நான் அப்படி செஞ்சேன்…” – அனேகன்.

இப்படி கூறுபவனிடம் என்ன பதில் கூறுவது என்று வாயடைத்து நின்றவள் தனது கையாளாகத நிலையை எண்ணி தன்னுள் அழுதுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“மிஸ். ஆஷ்ரிதா… டோட் பீ சோ எமோஷ்னல்… நான் சொல்லுறது ஈசியா புரிஞ்சிக்கற விஷயம் இல்ல… ஈசியா ஏத்துக்கக்கூடிய விஷயமும் இல்ல… எனக்கு புரியுது… பட் நீ எனக்கு கோ ஆப்ரேட் பண்ணா சீக்கிரம் நல்லபடியா முடியும் எல்லாம்…” – அனேகன்.

“யா… ஐயம் ஓகே…” – தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டவள் தன் பேச்சை தொடர்ந்தாள்.

“நைட் அவ தூங்கும் போது அர்ஜுன் –னு ஒரு பேரு சொன்னா… யாரு அந்த அர்ஜுன் –னு தெரியல… எனக்கு தெரிஞ்சு எங்க குடும்பத்துல ஃபிரெண்ட்ஸ் –ல யாரும் அர்ஜுன் –ங்கற நேம் –ல இல்ல…” – ஆஷ்ரிதா.

அனேகன் இதற்கு ஏதோ பதில் கூற வரவும், தன் கையை நீட்டி அவனை தடுத்த ஆஷ்ரிதா “இந்த ஜென்மத்துல இருக்கனும்னு அவசியம் இல்ல… அதுதானே? நான் ஏத்துக்க ஆரம்பிச்சிட்டேன் அனேகன்… இது அவளோட முன்ஜென்ம சொந்தமா இருக்கலாம்… ஏற்கனவே ஒரு நாள் அவ தூக்கத்துல தன்னோட அம்மாகிட்ட காலேஜ் டேஸ் பத்தி சொல்லிட்டு இருந்தா… நான் சின்ன குழந்தையா இருக்கறப்பவே எங்க அம்மா யசோதா இறந்துட்டாங்க… அப்படின்னா நிச்சயமா நீங்க சொன்னது போல போன ஜென்மத்து அம்மாகிட்ட தான் அவ பேசியிருக்க… இது புரிஞ்சதாலதான் உடனே உங்கள பார்த்து விஷயத்த சொல்லனும்னு கிளம்பினேன்…” – ஆஷ்ரிதா.

“குட்…” – அனேகன்.

“உங்கள பார்க்க முடியல –னு நான் வேற விஷயமா ஒரு இடத்துக்கு போனேன்… வரும்போது ரிக்‌ஷா –ல தூங்கிட்டேன்… அப்ப எனக்கு ஒரு கனவு வந்தது. அதுல ஒரு பெரிய அரண்மணை… ரொம்ப பழசா இருந்துது… அதுக்கு பெரியா இரும்பு கதவு… அங்க இருந்த சூழல் எல்லாம் ஒன்னுக்கு ஒன்னு ரொம்ப முரணா இருந்தது… என்ன அங்க கூட்டிட்டு போனது ரொம்ப சின்ன பையன்… அவன் எந்த கஷ்டமும் இல்லாம அந்த பெரிய கதவ அவ்வளவு ஈசியா தொறந்துட்டான்… உள்ள நாங்க ரொம்ப தூரம் நடந்தோம்… அப்புறம் அங்க ஒரு இடத்துல ப்ரைட்டா கோல்டன் கலர்ல ஒரு பெரிய ரே மேல இருந்து கீழ விழுந்திருந்தது… அந்த பையன் கை வச்சதும் அந்த ரேஸ் மறஞ்சி அங்கு ஒரு நோட் புக் தெரிஞ்சது… அந்த பையன் அத என்கிட்ட காட்டி இது நம்மளோட ஜென்ம சாசனம் –னு சொன்னான்… கடைசியா அவன் பேரு அர்ஜுன் –னு சொன்னான்…” என்று கூறி எச்சில் விழுங்கினாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 15

ஆஷ்ரிதா கூறுவதை பொறுமையாக கேட்டுக்கொண்டிருந்த அனேகன் “அம்ரிதா கனவுல சொன்ன அர்ஜுன் யாரு யாரு –னு நீ யோசிச்சிட்டே இருந்ததால உன் கனவுலயும் அர்ஜுன் வந்துட்டான்… அப்படித்தான??” என கேட்டான். இது காரணம் இல்லை என்று அறிந்திருந்த போதிலும் ஆஷ்ரிதா அவள் மனதில் இதை பற்றி உண்மையாகவே என்ன நினைக்கிறாள் என்பதை அறிந்துக்கொள்ள அவ்வாறு கேட்டிருந்தான்.

கொஞ்சம் தயங்கியவள் “நோ… எனக்கு அப்படி தோணல… எனக்கு என்னவோ உணர்த்துறதுக்குதான் அந்த கனவு வந்திருக்குனு நான் நினைக்கிறேன்…” – ஆஷ்ரிதா.

“அத எப்படி இவ்வளவு க்ளியரா சொல்லுற??” – அனேகன்.

“அவன் ஏதோ என்கிட்ட சொன்னான்… ஸ்லோகன் மாதிரி…எனக்கு அது புரியல… ஆனா அதுல டீப்பா ஏதோ மீனிங் இருக்குனு மட்டும் எனக்கு புரியுது…” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… யூ ஆர் ரைட்… சரி சொல்லு… அவன் என்ன சொன்னான்??” – அனேகன்.

“அதுதான் நியாபகத்துல இல்லனு சொன்னனே!!” – ஆஷ்ரிதா.

“இருக்கும்… இந்த கனவ நீ இவ்வளவு தூரம் சரியா கிரகிச்சிருக்கேன்னா உன் ஆழ்மனசுல அது நிச்சயமா பதிஞ்சிருக்கும்… கொஞ்சம் ட்ரை பண்ணு…” – அனேகன்.

“அது… ஏதோ ஒத்தையில போனேன்… ஒத்துமையா இருந்தேன்… தெரியல… இதுக்கு மேல எதுவும் க்ளியரா நியாபம் வரல…” – ஆஷ்ரிதா.

“சரி… இன்னைக்கு ஒரு நாள் டைம் எடுத்துக்க… நல்லா யோசிச்சு பாரு… அப்படியும் உனக்கு நியாபகம் வரலனா, வி கேன் கோ வித் ஹிப்னாட்டிசம்… உனக்கு ஓகே தான??” – அனேகன்.

“ஹிப்னாட்டிசமா??” என்று முதலில் பயந்தவள் பிறகு தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

பின்னர், தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லிவிட்டோம் என்ற நிம்மதியில் ஆஷ்ரிதாவும், ஆஷ்ரிதா அனைத்தையும் புரிந்துக்கொண்டு தனக்கு ஒத்துழைப்பு தரத் தொடங்கிவிட்டாள் என்ற திருப்தியில் அனேகனும் அங்கிருந்து கிளம்பி மீண்டும் பூங்காவை அடைந்தனர்.

அனேகன் கூறியது போலவே அம்ரிதா அவள் இருந்த இடத்தை விட்டு நகறாமல், எந்த சங்கடங்களுக்கும் உள்ளாகாமல் அங்கேயே அமைதியாய் அமர்ந்திருந்தாள். அதை பார்த்த பின்பு பெருமூச்சு விட்ட ஆஷ்ரிதா, அனேகனை திரும்பிப் பார்த்து ஒரு புன்னகையை சிந்தியவாறு “தேங்க்ஸ்” என்றாள்.

“இட்ஸ் மை டியூட்டி… நீ அவள வீட்டுக்கு கூட்டிட்டு போ… நாம நாளைக்கு மீட் பண்ணலாம்…” என்று அங்கிருந்து விடைப்பெற்றான் அவன்.

அவன் செல்லும் வரை அவனையே வெறித்துக்கொண்டிருந்தவள் அம்ரிதாவை நெருங்கும் வேளையில் தான் யோசித்தாள் “அய்யோ… இப்ப அவளுக்கு அஞ்சு வயசு –னு சொன்னானே… நான் போய் என்ன சொல்லி கூப்பிடுறது? இவன் வேற ஒன்னும் சொல்லாமலே கிளம்பிட்டான்??” என்று யோசித்தவள் தன் மனதை திடப்படுத்திக் கொண்டு அம்ரிதாவின் அருகே சென்றாள்.

அதுவரை சிலையாய் ஏதோ யோசனையில் இருப்பது போல அமர்ந்திருந்த அம்ரிதா, ஆஷ்ரிதா அருகே வந்தவுடன் திடுக்கிட்டவள் “என்ன டி வேலை முடிஞ்சிதா?” என கேட்டாள்.

“ஹப்பா! என உள்ளுக்குள் குளிர்ந்துக்கொண்ட ஆஷ்ரிதா, “ஆமா டி… வா வீட்டுக்கு போகலாம்…” என்று அவளை அழைத்துக்கொண்டு வெளியே வந்தாள்.

இருவரும் ஸ்கூட்டியில் ஏறி அமர்ந்த பின்னர் “போகலாமா டி?” என ஆஷ்ரிதா கேட்க, “ம்ம்ம்” என்றாள் அம்ரிதா.

வீட்டிற்கு பயணமாகும் வேளையில் முதலில் அமைதியாய் வந்துக்கொண்டிருந்த அம்ரிதா திடீரென “ஏய் அச்சு… யார டி பார்த்துட்டு வந்த? எனக்கு வீட்டுல இருந்து ஸ்கூட்டில கிளம்பினதுதான் நியாபகத்துல இருக்கு… அடுத்து நீ கிளம்பலாம்னு கூப்பிட்டது நியாபகத்துல இருக்கு… இடையில் என்ன ஆச்சு? அங்கேயும் வந்து தூங்கிட்டேனா என்ன?” என்று கேட்டாள்.

என்ன சொல்லலாம் என யோசித்த ஆஷ்ரிதா “நீ தான டி டயர்டா இருக்கு, நான் போய் அங்கே உட்கார்ந்திருக்கேன், நீ வேலைய முடிச்சிட்டு வா –னு சொன்ன??” என்றாள்.

“அப்படியா?” – யோசித்தாள் அம்ரிதா.

“ஆமா டி… நான் கூட இதுக்குதானே வீட்டுலயே இருக்க சொன்னேன் –னு கேட்டு உன்ன திட்டுனனே…” – அம்ரிதாவை நம்பவைக்க மேலும் பொய்களை அடுக்கினாள் ஆஷ்ரிதா.

“தெரியல டி” – சோர்வான குரலோடு கூறினாள் அம்ரிதா.

“சரி பரவாயில்ல விடு…” – தேற்றலாய் பேசினாள் ஆஷ்ரிதா.

இவ்வாறே இருவரும் பயணப்பட்டுக் கொண்டிருக்க, அம்ரிதாவை சமாதானப்படுத்தும் பொருட்டு அவளுக்கு விருப்பமான சிக்கன் ஃப்ரைட் ரைஸ் –ஐ வாங்கி தர ஒரு ஹோட்டலுக்கு வண்டியை விட்டாள் ஆஷ்ரிதா.

“என்ன டி இங்க நிறுத்துற?” – அம்ரிதா.

“வா ஏதாவது சாப்டிட்டு போகலாம்” – ஆஷ்ரிதா.

“வேணாம் டி… வீட்டுக்கே போகலாம்…” – அம்ரிதாவின் ராகத்தில் உடற்சோர்வை விட மனச்சோர்வே அதிகம் தெரிந்தது.

“ஹேய் லூசு… என்ன ஆச்சு இப்ப?? அக்கா கூப்பிடுறேன்ல?? வா…” – அவள் கையை பிடித்து உள்ளே அழைத்துச் சென்றாள் ஆஷ்ரிதா.

பல வண்ண மின்விளக்குகள் சரமாய் தொங்கவிடப்பட்டிருந்த அந்த கண்ணாடி கதவை யூனிஃபார்ம் அணிந்திருந்த காவலாளி ஒருவர் திறந்துவிட, இருவரும் உள்ளே சென்றனர்.

அனைத்து இடங்களிலும் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தாற் போன்ற செயற்கை அலங்காரத்தை கொண்ட அந்த உணவு அறையின் ஒரு மேசையில் சகோதரிகள் எதிர் எதிராக அமர, அவர்கள் முன் மெனு கார்டும், பேப்பர் டிஷ்யூஸ் –ம் வைக்கப்பட்டது.

“மேம்… யுவர் ஆர்டர் ப்ளீஸ்…” கேட்டவனை நிமிர்ந்துப்பார்த்த அம்ரிதா,

“டேய்… திரு… தடி மாடே… இங்க என்ன டா பண்ணுற நீ?” – உற்சாக குரலில் கேட்டாள்.

“ம்ம்ம்… பொக்கே ஷாப் வேலைய விட்டுட்டு இங்க ஜாயிண்ட் பண்ணிட்டேன்…” – நக்கல் பாணியில் கூறினான் திரு.

“நல்ல வேளை சொன்ன… இல்லைனா நாங்க மால் –ல போய் உன்ன தேடிருப்போம்…” என கூறிவிட்டு கிளுக்கென சிரித்தாள் அம்ரிதா.

“வாய் –க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல… நம்ம பேச்ச அப்பறம் வச்சிக்கலாம்… பேரர் வெயிட் பண்ணுறாரு பாரு… ஆர்டர் கொடு…” என்றவாறு அம்ரிதாவின் அருகே அமர்ந்த திரவியம் ஆஷ்ரிதாவின் கடுமைக்காட்டும் முகத்தை கவனிக்க தவறவில்லை.

“எனக்கு சிக்கன் ஃப்ரைட் ரைஸ்” – அம்ரிதா.

“ஓகே மேம்” – பேரர்.

“மஷ்ரூம் புலவ் ஒன்னு” – திரவியம்.

“ஓகே சார்?? மேம் உங்களுக்கு??” – ஆஷ்ரிதாவிடம் கேட்டார் பேரர்.

அவ்வளவு நேரம் மெனு கார்ட் –ல் கண்களால் கோலம் போட்டுக்கொண்டிருந்தவள் “எனக்கு எதும் வேண்டும்” என்றாள்.

“ஹேய்… ஹோட்டல் –க்கு வந்துட்டு வேணாம் –னா என்ன அர்த்தம்? நீ தான கூட்டிட்டு வந்த?” – அம்ரிதா.

“உனக்காக தான் கூட்டிட்டு வந்தேன்… சாப்பிடு நீ… எனக்கு பசி இல்ல…” – ஆஷ்ரிதா.

“விளயாடுறியா அச்சு??” என்று ஆஷ்ரிதாவை மிரட்டிவிட்டு பேரரிடம் “அண்ணா… ஒரு எம்டி பிரியாணி வித் சிக்கன் பட்டர் மசாலா” என்றாள் அம்ரிதா.

“ஏன் உங்க அக்காவுக்கு எம்டி பிரியாணி ஆர்டர் செய்யுற அம்மு? இப்பதான் தெரியுது எதுக்கு அவ மண்டக்குள்ள மூளை இல்லாம எம்டியா இருக்குனு!” – திரவியம்.

“ஹலோ… என்ன நக்கலா? அவ ஃப்ளெஷ் அவ்வளவா எடுத்துக்க மாட்டா… பட்டர் மசாலாவோட க்ரேவி அவளுக்கு இஷ்டம்…” – காட்டமாய் சொன்னாள் அம்ரிதா.

“சரி… சரி… கூல்… அக்காவ சொன்னதும் கோபம் பயங்கறமா வருதே” – திரவியம்.

“இனி பேசி பாரு… நான் பேச மாட்டேன்… என் கை தான் பேசும்…” என்று நானும் ரவுடி தான் ரேஞ்சில் அம்ரிதா பேச, திரவியத்தின் மூக்கு உடைப்பட்டது எண்ணி தன்னை மறந்து சிரித்துவிட்டாள் ஆஷ்ரிதா.

அதை கவனித்த திரவியம் “ஆகா… அக்கா தங்கச்சிக்கு இடையில வீணா தலைய விட்டுட்டேனா?” என ஆஷ்ரிதாவை சமாதானப்படுத்தும் பொருட்டு வேண்டுமென்றே பம்பினான்.

“சரி இருங்க… நான் வாஷ் ரூம் போய்ட்டு வர்றேன்… ரெண்டும் ஆர்டர் வந்த உடனே சாப்பிட்டுறாதீங்க… எனக்கு வெயிட் பண்ணுங்க…” என்றவள் எழுந்து சென்றாள்.

கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திரவியம் “என்ன அச்சு… கோபம் கொஞ்சம் கூட குறையல போல?” என்றான்.

“நீ எதுக்கு இங்க வந்த? என்ன ஃபாலோ பண்ணுறியா?” – வெடுக்கென கேட்டாள் ஆஷ்ரிதா.

“இது என்ன டா கூத்தா இருக்கு? ஒரு மனுஷன் சாப்பிட ஹோட்டல் –க்கு வரக்கூடாதா? வந்த இடத்துல உங்கள பார்த்தேன்… அதான் ஜாயிண்ட் பண்ணேன்” – திரவியம்.

“யாரு காதுல பூ சுத்துற? உனக்கு இந்த நேரத்துல மால் –ல வேலை இல்லையா? சாப்பிடறதுக்காக இடையில் பெர்மிஷன் வாங்கி இந்த ஹோட்டல் வர வந்தியா?” – ஆஷ்ரிதா.

“இது பாய்ண்ட்… நான் பெர்மிஷன் போட்டுட்டு தான் வந்தேன்… ஆனா சாப்பிட இல்ல…” – நிறுத்தினான் திரவியம்.

“இரிட்டேட் பண்ணாம டேரக்ட் –ஆ பேசு… அம்மு மூட் அவுட் –ஆ இருந்தா… ஹோட்டல் –க்கு உள்ள வரமாட்டேன்னு சொன்னா… கம்பல் பண்ணி தான் கூட்டிட்டு வந்தேன்… பட் உன்ன பார்த்ததும் அவளாவே காம் ஆகிட்டா… அதான் நான் உன்கிட்ட அமைதியா பேசிட்டு இருக்கேன்...” – ஆஷ்ரிதா.

“எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? நான் உன் ப்ரெண்ட் அச்சு… மறந்துறாத… யாரோ விரோதிகிட்ட பேசுற மாதிரி பேசிட்டு இருக்க?” – திரவியம்.

“இப்ப உனக்கு என்ன வேணும்?” – எரிச்சலோடு கேட்டாள் ஆஷ்ரிதா.

“நத்திங் லீவ் இட்… நான் அனேகன் தான் அவனோட அப்பாவ கொலை செஞ்சானு சொன்னப்ப நீ நம்பல… பட் அதுக்கான ப்ரூஃவ் காட்டின நம்புவ தானே?” – திரவியம்.

“என்ன ப்ரூஃவ்?” – ஆஷ்ரிதா.

“சி.சி.டி.வி. கேமரா! அந்த அப்பார்ட்மெண்ட் –ல சி.சி.டி.வி. கேமரா இருக்கு… சரியான ஆள புடிச்சா அந்த ஃபுட்டேஜ் நாம வாங்கிடலாம்…” – திரவியம்.

“இங்க பாரு திரு… டோண்ட் க்ரியேட் அ சீன் ஹியர்… அனேகன் கொலை செஞ்சதாவே இருக்கட்டுமே… அவன பத்தி என்கிட்ட இப்படி தப்பான அபிப்ராயத்த ஏற்படுத்துறதால உனக்கு என்ன கிடைக்க போகுது?” – ஆஷ்ரிதா.

“வாட் ஆர் யூ ஸ்பீக்கின் அச்சு? நிஜமாவே உன் மண்டைக்குள்ள ஒன்னும் இல்லையா?” – திரவியம்.

“மைண்ட் யுவர் வேர்ட்ஸ் திரு” – ஆஷ்ரிதா.

“பின்ன என்ன அச்சு? தப்பானவன் கிட்ட நீ மாட்டிட கூடாதுனு தான் இவ்வளவு பேசுறேன் நான்… அது புரியுதா உனக்கு?” – திரவியம்.

“அவன் தப்பானவன் இல்லை… நான் கேரண்டி… போதுமா? இன்னும் என்ன தெரியனும் உனக்கு?” – ஆஷ்ரிதா.

“அச்சு… அவன் தப்பானவன் இல்ல –னு எத வச்சி சொல்லுற?” – திரவியம்.

“அத பத்தி உனக்கு என்ன மேன்? வய் ஆர் யூ இரிட்டேடிங் மீ லைக் திஸ்… கேள்வி மேல கேள்வி கேட்டு ஏன் என்ன டார்ச்சர் பண்ணுற?” – ஆஷ்ரிதா.

“ஓகே ஃபைன் அச்சு… நான் இனி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்… பை…” – விறுட்டென எழுந்தான் திரவியம்.

“எங்கே போற திரு… சாப்டு போ” – ஆஷ்ரிதா.

“பரவாயில்லை… அம்மு வந்து என்ன கேட்டா மட்டும் எதாவது சொல்லி சமாளிச்சிரு... நான் கிளப்புறேன்” என்றவன் ஆஷ்ரிதாவின் பதிலையும் எதிர்பார்க்காமல் வெளியேறினான்.

அவன் சென்ற அடுத்த கணம் அம்ரிதா அங்கு வந்துவிட, வாசலில் மறைந்த திரவியத்தின் முதுகை கண்ட அம்ரிதா “எங்கே போறான் அவன்?” என்று கேட்டபடி நாற்காலியில் அமர்ந்தாள்.

“சாப்பாடு வேணாமாம்… நீயே போய் கேளு” – ஆஷ்ரிதா.

“என்னது சாப்பாடு வேணாமா? உங்க ரெண்டு பேரையும் இனி ஹோட்டல் –ல சாப்பிடுறதுக்கு கூட்டிட்டு வரக்கூடாது… இனி நான் மட்டும் தனியா வந்துதான் சாப்பிட போறேன் பாருங்க” என்று கூறிவிட்டு வாசலுக்கு ஓடினாள் அம்ரிதா.

அங்கு தனது ஸ்ப்லெண்டர் பைக்கில் சாய்ந்து நின்றபடி சென்றுவரும் வாகனங்களை வெறித்துக்கொண்டிருந்தான் திரவியம்.

அவன் அருகே சென்ற அம்ரிதா “டேய் திரு… என்ன விளையாடுறீங்களா ரெண்டு பேரும்? ஒழுங்கா உள்ள வந்து சாப்பிடு வா” – அம்ரிதா.

“இல்ல நான் வரல அம்மு” – அம்ரிதா.

“கொஞ்சம் நேரம் உங்க ரெண்டு பேரையும் தனியா விட்டுட்டு போக முடியுதா டா? எப்ப பாரு டாம் அண்டு ஜெர்ரி மாதிரி பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க…” – அம்ரிதா.

“உன் அக்கா –வ கேளு…” சத்தமாக கூறியவன் ‘சொல்லு பேச்சை கேக்குறதே இல்ல’ வாய்க்குள் முணுமுணுத்தான்.

“அவதான் நீ சாப்பாடு வேணாம்னு சொல்லிட்டு போறனு சொல்லி என்ன கூட்டிட்டு வர சொன்னா” – அம்ரிதா.

“அட பாவி… பேசுறதெல்லாம் பேசிட்டு என்ன கோர்த்துவிட்டுட்டாளா?” என்று மனதில் எண்ணியவன் “இன்னொரு நாள் நாம சேர்ந்து சாப்பிடலாம் அம்மு” என்றான்.

அந்நேரம் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவுகள் மேசையை வந்தடைய, அமர்ந்த இடத்தில் இருந்து வாசல் நோக்கி எட்டிப்பார்த்தாள் ஆஷ்ரிதா.

திரவியத்தின் கையை பிடித்து வழுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டிருந்தாள் அம்ரிதா. அதனையும் அவன் ஆர்டர் செய்திருந்த மஷ்ரூம் புலாவையும் மாறி மாறி பார்த்தவள் “சாப்பிடுற நேரம் இப்படி பேசிட்டோமே” என தன்னை நொந்துக்கொண்டாள்.

பிறகு எழுந்து வாசலுக்கு சென்றவள் “திரு” என்று அழைக்க, அங்கு வா என்றும் வரமாட்டேன் என்றும் களேபரம் செய்துக்கொண்டிருந்த அம்ரிதாவும் திரவியமும் திரும்பிப்பார்த்தனர்.

“சாரி… வந்து சாப்பிடு” என்றாள் ஆஷ்ரிதா.

“அதான் சொல்லிட்டாள் –ல… வா திரு” என்று அம்ரிதா அழைக்க, சமாதானக் கொடி பறக்கவிடப்பட்ட படி உணவருந்தி முடித்தனர் மூவரும்.

“ஒகே திரு… பாக்கலாம்… உசுரோட தான் இருக்கியானு அப்பப்ப தெரியுறது இல்ல… கன்ஃபார்ம் பண்ண அடிக்கடிமெசேஜ் பண்ணு என்ன…” என்று வாரினாள் அம்ரிதா.

“கொஞ்சம் பிசி –யா இருந்தேன்… இனி ஃப்ரீ தான்… பேசலாம் அம்மு” என்று கூறியவாறு ஆஷ்ரிதாவையும் பார்த்தான் திரவியம்.

‘என்ன டா… இவ்வளவு நாள் அனேகன் பின்னவே ஓடிக்கிட்டு இருந்தேன், இனி ஓட மாட்டேன் –னு சிம்பாலிக்கா சொல்லுறியா? இரு இரு… உனக்கு இருக்கு’ என்று தன் கண்களால் அவனுக்கு பொய் மிரட்டல் கொடுத்தாள் ஆஷ்ரிதா.

பின், மூவரும் அவரவர் வீட்டை நோக்கி பயணிக்க, செல்லும் வழியில் பொன்னம்மாவுக்கு பிடித்த கடையில் அவருக்காக குழாய் புட்டு வாங்கி சென்றனர் இரட்டை சகோதரிகள்.

வீட்டை அடைந்ததும், “பொன்னம்மா… உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்…” என்றவாறு அம்மு உள்ளே ஓடிச் செல்ல, ஆஷ்ரிதா இரு சக்கர வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்திவிட்டு ஹெல்மட்டை கழற்றியபடி வீட்டிற்குள் நுழைந்தாள்.

குழாய் புட்டு பார்சலை உணவு மேஜையில் வைத்த அம்ரிதா “பொன்னம்மா… சீக்கிரம் வாங்க… டையனிங் டேபிள் –ல உங்களுக்கு ஒன்னு வச்சிருக்கேன் பாருங்க… நான் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திடுறேன்…” என கூறிவிட்டு தங்களது அறையினுள் சென்று கதவை மூடிக்கொண்டாள்.

“ஆஷ்ரிதாவுக்கு மனமும் உடலும் அதீத சோர்வை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆட, மெல்ல ஆடி அசைந்து நடந்து வந்து சோபாவில் பொத்தென்று அமர்ந்து கண்களை மூடியவள் அப்படியே பாதி தூக்கத்தில் மூழ்கியும் போனாள்.

அம்ரிதா உடை மாற்றிவிட்டு வெளியே வந்துவிட, அவளுக்கு வீடே நிசப்தமாய் காட்சியளித்தது. மேஜையில் வைக்கப்பட்டிருந்த பார்சல் அப்படியே இருந்தது. பொன்னம்மா வந்ததற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை. ஆஷ்ரிதாவும் உறங்கிப்போயிருந்தாள்.

“தூங்கிட்டாளா இவ?” என்று ஆஷ்ரிதாவின் அருகில் சென்ற அம்ரிதா அவளை தொட்டு உசுப்பினாள்.

“அச்சு… எழுந்து உள்ள போய் படு வா” என்றாள்.

அவள் உசுப்பியதில் எழுந்துக்கொண்ட ஆஷ்ரிதா, தன் உடலை நெளித்து சோம்பல் முறித்துக்கொண்டு, கண்களை கசக்கியபடி அவர்களது அறைக்கு செல்ல யத்தனித்தாள். அப்போது பொன்னம்மாவை அழைத்து வர அவரது அறைக்கு சென்றிருந்த அம்ரிதா, அங்கு ஏற்பட்ட ‘டமார்’ எனும் சத்தத்தில் “அச்சுசுசுசு…..” என்று அலறி கத்திட, தனது தூக்க கலக்கத்தை முழுதாய் துடைத்து எறிந்துவிட்டு அங்கு ஓடி சென்றாள் ஆஷ்ரிதா.

(களவாடுவான்)


 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 16

அம்ரிதாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிச் சென்ற ஆஷ்ரிதா அங்கு கண்ட காட்சியில் நிலைக் குழைந்துப்போனாள். மெல்ல மெல்ல அம்ரிதாவின் அருகே நடந்துச் சென்றவள்,

“அம்மு??” என கேள்வியாய் பார்த்தாள்.

“தெரியல அச்சு… லைட் ஆஃப் ஆகி இருந்தது… அத ஆன் பண்ணிட்டு வாங்க பொன்னம்மானு சொல்லி இந்த டேபிள தான் நகர்த்தினேன்… அப்படியே சேரோட சரிஞ்சி விழுந்துட்டாங்க… பேச்சு மூச்சே இல்ல…” – உதட்டை பிதுக்கிக்கொண்டு கூறினாள் அம்ரிதா.

அமைதியாய் பொன்னம்மாவின் அருகில் சென்ற ஆஷ்ரிதா தரையில் சரிந்து கிடந்த பொன்னம்மாவை நடுங்கும் கைகளுடன் தொட்டுப்பார்த்தாள். அவர் மேனி பனிக்கட்டியை போல சில்லென்று இருந்தது.

“பொன்னம்மா… எழுந்திருங்க… ப்ளீஸ் பொன்னம்மா… எழுந்திருங்க…” – கூப்பாடு போட்டாள் ஆஷ்ரிதா.

இதனை கண்ட அம்ரிதாவுக்கு கண்களில் கண்ணீர் அருவியென கொட்டியது. தன் கைகளால் வாயை அழுந்த பொத்திய வண்ணம் தேம்பிக்கொண்டிருந்தாள் அவள்.

“என்ன பாருங்க பொன்னம்மா… என் மேல கோபம் இருந்தா அடிங்க… திட்டுங்க… இப்படி ஒரு தண்டனை கொடுக்காதீங்க பொன்னம்மா… ப்ளீஸ் எழுந்திருங்க…” – ஒப்பாரி வைத்த ஆஷ்ரிதா, அம்ரிதாவிடம் திரும்பி,

“அம்மு… எழுந்திருக்க சொல்லு அம்மு… எழுந்து என்ன திட்ட சொல்லு அம்மு… அடிக்க சொல்லு அம்மு…” என்று கூறிவிட்டு பொன்னம்மாவின் கைகளை தன் கைகளால் பிடித்து தன்னை தானே அடிக்கத் தொடங்கினாள்.

“அடிங்க பொன்னம்மா… அடிங்க… முன்ன பின்ன யோசிக்காம கோபத்துல கத்துவியா-னு கேட்டு அடிங்க… நல்லா அடிங்க…” என வேகம் எடுத்து தன்னை அடித்துக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு…” என்று அவளிடம் ஓடிச் சென்ற அம்ரிதா, “ஸ்டாப் இட் அச்சு” என்று அழுதவாறே அவள் கையை பிடித்து நிறுத்தினாள்.

“நாம என்ன டி பாவம் பண்ணோம்… ஏன் இப்படி நிம்மதியே இல்லாம வாழ்ந்துட்டு இருக்கோம்? ஒரு வார்த்தை யாரையும் தப்பா பேசிருப்போமா அம்மு? ஏன்?? ஏன் இப்படியெல்லாம் நடக்குது?? என்னால தாங்க முடியல அம்மு...” – குலுங்கிக் குலுங்கி அழுத ஆஷ்ரிதாவை தன் மார்போடு அணைத்துக் கொண்டு தானும் அழுதாள் அம்ரிதா.

அந்நேரம் ஆஷ்ரிதாவின் தொலைபேசி அழைப்பு மணி அடிக்க, எழுந்துச் சென்ற அம்ரிதா அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ ஆஷ்ரிதா… அனேகன் ஸ்பீக்கிங்”

அனேகன் பெயரை கேட்டதும் அமைதியானாள் அம்ரிதா.

அந்த அமைதியை கணித்தவன், “அம்ரிதா?” என்றான்.

“யஸ்… நீங்க… எப்படி அக்கா மொபைல் –ல?” – இழுத்து பேசியவளிடம்,

“அத அப்பறமா சொல்லுறேன்… இஸ் தேர் எனி ப்ராப்ளம்?” என்றான்.

மீண்டும் எதிர் முனையில் மெளனம்.

“ஆர் யூ தேர் அம்ரிதா?” – அனேகன்.

“யா… யஸ்… ஐ அம்” – அம்ரிதா.

“எதுவும் பிரச்சனையா?” – மீண்டும் கேட்டான் அனேகன்.

“பொன்னம்மா…” – அடுத்த வார்த்தை வரவில்லை, அழுகை தான் வந்தது அம்ரிதாவுக்கு.

“பொன்னம்மா?” – கேட்டான் அனேகன்.

“கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா ப்ளீஸ்…” – அம்ரிதா.

“ஷ்யுர்… அட்ரஸ் டெக்ஸ்ட் பண்ணு… லொக்கேஷன் வாட்ஸ் ஆப் –ல ஷேர் பண்ணு” என கூறிவிட்டு, தான் அணிந்திருந்த கருப்பு நிற கையில்லா பனியனின் மேல் பர்பிள் நிற ஓவர் கோட்டை ஒன்றை அணிந்துக்கொண்டவன், தான் போட்டிருந்த அடர் சாம்பல் நிற ஜீன்ஸ் பேண்ட் -ஐ மாற்றாமல் தன் வீட்டில் இருந்து புறப்பட்டான் அனேகன்.

அனேகன் கேட்டபடி அனைத்தையும் வாட்ஸ் ஆப் –ல் அனுப்பி வைத்த அம்ரிதா அவன் நமக்கு துணை நிற்க வருகிறான் என்ற தெம்புடன் ஆஷ்ரிதாவிடம் சென்றாள்.

சரிந்துக்கிடந்த பொன்னம்மாவை நிமிர்த்து அமர்த்தி அவரது மடியில் தலை வைத்து படுத்தபடி அழுதுக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா. இதை கண்ட அம்ரிதாவுக்கு நெஞ்சில் இரத்தம் கொட்டியது. ஆஷ்ரிதாவையும் கடிகாரத்தையும் இமைக்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தவள் “சீக்கிரம் வாங்க அனேகன்… என்னால முடியல…” என்று தன் மனதிற்குள் வேண்டிக்கொண்டாள்.

“நான் வந்துட்டேன் சகி…” காரை ஓட்டியபடி மானசீகமாய் அனேகன் கூறிட ஒரு வித தெம்பு பிறந்தது அம்ரிதாவுக்கு. அவனுக்காய் காத்திருந்து, அழுது வடியும் கண்களோடு வாசலையே வெறித்த வண்ணம் அமர்ந்திருந்தவளுக்கு திடுமென நினைவுக்கு வந்தான் திரவியம்.

வேகமாய் தன் அலைபேசியை எடுத்தவள் திரவியத்தின் தொடர்பு எண்ணை எடுத்து அழைப்புக் கொடுத்தாள்.

“ஹலோ… அம்மு… என்ன இப்பதானே பார்த்துட்டு போனோம்… அதுக்குள்ள கால்?? உயிரோட இருக்கேனா –னு செக் பண்ணுறியா?” – விஷயம் அறியாமல் கேலியாய் கேட்டான் திரவியம்.

“திரு….” – அழு குரலில் இழுத்து நிறுத்தினாள் அம்ரிதா.

“ஹேய் என்ன ஆச்சு? ஏன் அழுதுட்டு இருக்குற??” – பதறிப்போனான் திரவியம்.

“எங்க வீட்டுல வேலை செய்யுற பொன்னம்மா பத்தி சொல்லியிருக்கேன் –ல??” – அம்ரிதா.

“ஆமா அம்மு… என்ன ஆச்சு அவங்களுக்கு?? உடம்பு எதுவும் முடியலயா??” – திரவியம்.

“இறந்துட்டாங்க டா” – கதறிக்கொண்டே கூறினாள் அம்ரிதா.

“ஓ சிட்… என்ன ஆச்சு… எப்படி??” – திரவியம்.

“தெரியல டா… பேச்சு மூச்சே இல்ல… உடம்பு ரொம்ப சில் –னு இருக்கு… இறந்து ரொம்ப நேரம் இருக்கும் போல… இன்னைக்கு பார்த்தா நாங்க இப்படி ஊர சுத்தீட்டு லேட்டா வீட்டுக்கு வருவோம்??” என்று கூறி ஓவென அழத் தொடங்கினாள் அம்ரிதா.

“நோ டா… அழாத… நான் வர்றேன் உடனே… ஆனா உங்க வீடு?? வீடு எனக்கு தெரியாதே?!” – திரவியம்.

“வெயிட்… என் ப்ரெண்ட் ஒருத்தர் வர்றாரு… நீ உன் வீட்டு பக்கத்துல இருக்கற சிக்னல் –ல நில்லு… அவர உன்ன பிக் அப் பண்ணிட்டு வர சொல்லுறேன்” – அம்ரிதா.

“ஓகே அம்மு… இதோ உடனே கிளம்புறேன்” – திரவியம்.

திரவியத்தின் அழைப்பை துண்டித்தவள் ஆஷ்ரிதாவின் அலைபேசியை எடுத்து அனேகனுக்கு அழைப்பு கொடுத்தாள். அழைப்பை ஏற்ற அனேகன்,

“ஆன் தி வே பேபி…” என்றான்.

“அனேகா… என் ப்ரெண்ட் ஒருத்தர பிக் அப் பண்ணிட்டு வர முடியுமா? நீங்க வர்ற வழி தான்… ப்ளீஸ்…” – அம்ரிதா.

“இதுக்கு எதுக்கு ப்ளீஸ் எல்லாம்… எங்க –னு இடம் சொல்லு” – அனேகன்.

திரவியம் நிற்கும் சிக்னலை அனேகனுக்கு சொல்லிவிட்டு திரவியத்தின் நம்பரையும் கொடுத்தாள் அம்ரிதா.

“ஓகே பேபி… நான் பார்த்துக்கறேன்… நீ பத்திரமா இரு” – அனேகன்.

“ம்ம்ம்… சரி” என அழைப்பை துண்டித்தவள் மீண்டும் திரவியத்திற்கு அழைப்பு கொடுத்தாள்.

“திரு… அவர்கிட்ட உன் நம்பர் கொடுத்திருக்கேன்… ஹி வில் கான்டேக்ட் யூ…” என்றாள்.

“டன் அம்மு… நான் சிக்னல் ரீச் ஆகிடுவேன் இப்ப” – திரவியம்.

“ஓகே டா” அழைப்பை நிறுத்தினாள் அம்ரிதா.

ஆஷ்ரிதா இன்னும் தன் புலம்பலை நிறுத்தியதாய் தெரியவில்லை. பொன்னம்மா… பொன்னம்மா… என்ற அவளது ராகம் அவ்வீட்டில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.

அந்த அறைக்கு செல்லும் தைரியம் இல்லாமல் ஹாலிலேயே நின்றுக்கொண்டிருந்த அம்ரிதா தன் தாய் யசோதாவின் உருவ படத்தை பார்த்து அழுதுக்கொண்டே “ஏன் மா? எங்களுக்கு துணையா பொன்னாம்மா இருக்காங்க –னு நினைச்சோம்… அவங்களையும் ஏன் மா உன்கூட கூப்பிட்டுக்கிட்ட? உன் பொண்ணுங்க மேல உனக்கு என்ன மா கோபம்?? இனி யாரு மா இருக்கா எங்களுக்கு??” என்று விசும்பிக் கொண்டிருந்தாள்.

அவளது தாய் எந்த பதிலும் தராமல் சிரித்த வண்ணம் அப்படியே படத்தில் இருக்க, நிற்க திராணியற்றுப் போனவள் சோபாவில் வந்து குத்துக்கால் வைத்து முட்டைக் கட்டிக்கொண்டு அம்ர்ந்தாள்.

அம்ரிதா சொன்ன சிக்னல் வந்ததும் தன் காரை ஓரமாய் நிறுத்திய அனேகன், அவள் கொடுத்த தொலைபேசி எண்ணிற்கு அழைப்பு கொடுத்தான்.

“ஹலோ” – திரவியம்.

“ஹாய்… நான் அம்ரிதா… ப்ச்… ஆஷ்ரிதாவோட ப்ரெண்ட்… உங்கள பிக் அப் பண்ண வந்திருக்கேன்” – அனேகன்.

“ஹா… யா ப்ரோ… நான் சிக்னல் –ல தான் நிக்கறேன்… என்ன வண்டி?” – திரவியம்.

“ரெட் கலர் பலேனோ… நீங்க என்ன ட்ரெஸ் போட்டிருக்கீங்க?” – அனேகன்.

“ப்ளூ கலர் செக்கட் ஷர்ட்” – திரவியம்.

“யா… நான் உங்கள பார்த்துட்டேன்… கம்மிங்…” என்ற அனேகன் தனது காரை இயக்கிக்கொண்டு திரவியத்தின் அருகில் நிறுத்தினான்.

காரின் பக்கவாட்டு கண்ணாடியை இறக்கிவிட்டு தலையை வெளியே நீட்டி “ஹாய்… மிஸ்டர்…??” என்று தன் புருவத்தில் கை வைத்து யோசித்தான் அனேகன்.

அனேகனை அங்கு சற்றும் எதிர்பாராதவனுக்கு அது பேரதிர்ச்சியாய் இருந்தது. என்னவென்றே சொல்லத்தெரியாத உணர்வு ஒன்று அவனை ஆட்கொள்ள ஸ்தம்பித்து நின்றுக்கொண்டிருந்தான் திரவியம்.

“எக்ஸ்க்யூஸ் மீ ஜென்டில் மேன்… திஸ் இஸ் அனேகன்… இப்ப கால் பண்ணனே…” என்றான் அனேகன்.

அதிர்ச்சியில் விழித்துக்கொண்டிருந்தவன் ஒன்றும் பேசாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு காரின் பின்புறமாய் சுற்றி வந்து முன்னால் ஏறி அமர்ந்துக்கொண்டான்.

‘வாட்ஸ் ஹப்பனிங்? நேம் கேட்டா ஒன்னும் சொல்லாம வந்து உட்கார்ந்துட்டான்’ என மனதில் நினைத்த அனேகன், தன் தோளை உலுக்கிக்கொண்டு அலைபேசி காட்டும் லோக்கேஷனை பார்த்துக்கொண்டே காரை மீண்டும் இயக்கத் தொடங்கினான்.

‘பெயர் கேட்டதற்கே பதில் சொல்லவில்லை இவனா பேசப்போகிறான்?’ என்று அனேகன் எண்ணினானோ என்னவோ அம்ரிதாவின் வீட்டை அடையும் வரை திரவியத்திடம் அவன் பேச்சு கொடுக்கவில்லை.

திரவியமோ மிகுந்த குழப்பத்தில் வாயடைத்து அமர்ந்திருந்தான். ‘அம்ரிதாவுக்கு இவனை எப்படி தெரியும்? அச்சு –கிட்ட அவ்வளவு பேசினேனே இவன பத்தி… அம்மு –க்கு தெரிஞ்சு நடக்கறதுக்கு வாய்பில்லையே?’ என தலையை சுற்றிக்கொண்டு வந்தது அவனுக்கு.

இருவரிடையே மெளனம் குடிக்கொண்ட வண்ணம் தொடர்ந்த அப்பயணத்தின் முடிவாய் அம்ரிதாவின் வீடு வந்தது. அனேகன் அவ்வீட்டின் போர்ட்டிகோவில் தன் காரை நிறுத்தியதும், ஆடவர் இருவரும் காரை விட்டு இறங்கி வீட்டிற்குள் நுழைந்தனர்.

ஹாலில் முட்டை கட்டியபடி அழுதுக்கொண்டிருந்த அம்ரிதாவின் அருகில் இரண்டே அடியில் சென்றிருந்தான் அனேகன்.

“அம்ரிதா” என்று அவள் தோளில் கைவைத்தான் அனேகன்.

“நிமிர்ந்து பார்த்தவள், அனேகா… பொன்னம்மா…” என அவர் அறையை கையால் சுட்டிக்காட்டிவிட்டு தன் வாயை பொத்திக்கொண்டு அழத் தொடங்கினாள்.

அம்ரிதா காட்டிய திசை நோக்கி விரைந்த திரவியம் அங்கு பொன்னம்மாவின் மடியில் படுத்து அழுது தேம்பிக்கொண்டிருக்கும் ஆஷ்ரிதாவை கண்டு பதறி ஓடினான்.

“அச்சு… நோ… ஒன்னுமில்ல… இட்ஸ் ஓகே… ரிலக்ஸ்…” என்று அவள் தோள்களை பிடித்து நிமிர்த்தி ஆறுதல் கூறினான்.

திரவியத்தை கண்டதும் ஆஷ்ரிதாவின் ஓலம் அதிகரிக்க அவளை தோளோடு அணைத்துக்கொண்டான் திரவியம்.

அக்காவின் அலறல் சத்தம் அம்ரிதாவையும் தாக்கிட, “பொன்னம்மா…” என கத்தியவாறு தானும் குலுங்கி அழத் தொடங்கினாள் அம்ரிதா. பொன்னம்மா இறந்துவிட்டார் என்பதை அனேகனால் அப்பொழுது புரிந்துக்கொள்ள முடிந்தது.

தன்னவள் தன் கண் எதிரே கதறி அழும் அவலத்தை காண இயலாத அனேகனுக்கு அவளை இறுக கட்டி அணைத்து ஆறுதல் சொல்லவேண்டுமென மனம் துடித்தது. ஆனால், தற்பொழுது அவள் முழுதாய் அம்ரிதாவாய் இருக்கிறாள். என்னதான் அவள் மனதில் அனேகன் மேல் நேசம் இருக்கிறதென்றாலும், அவளது மேனேஜரின் மகனாய் அவளுக்கு அறிமுகமான அனேகன், இதுவரை தன் விருப்பத்தை எந்த வகையிலும் அவளுக்கு தெரியப்படுத்தியது இல்லை. அந்த ஒற்றை காரணம் அப்பொழுது அவன் கைகளில் தளையிட்டிருந்தது.

“ஜஸ்ட் காம் அம்ரிதா… இட்ஸ் ஆல்ரைட்” என்று அவள் அருகில் அமர்ந்துக்கொண்டான் அனேகன்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கும் பொழுது, சகோதரிகள் இருவர் மட்டும் தனியாய் இருக்கும் வீட்டில், உடைந்து அழுதுக்கொண்டிருக்கும் தன் அக்கா ஆஷ்ரிதாவுக்கு துணையாய் தைரியமாய் இருக்க வேண்டுமென இத்தனை நேரமும் தன் அழுகையையும் உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்த அம்ரிதாவுக்கு தற்பொழுது அணையை உடைத்துக்கொண்டு வரும் வெள்ளம் போல அழுகை பெருக்கெடுத்து வந்தது.

“எனக்கு பொன்னம்மா வேணும் அனேகா… எனக்கு வேணும்…” என்று அவனது நெஞ்சில் குத்திக்கொண்டே தோளில் சரிந்தாள் அம்ரிதா.

ஸ்பரிசம் பட்டால் தன்னை தன்னுள் இழுத்துக்கொள்ளும் தொட்டாற்சிணுங்கியை போல, அவள் தீண்டியதுமே தன்னை மறந்து தன்னவளை தன்னோடு இழுத்து அணைத்துக்கொண்டான் அனேகன். அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த தன் உணர்வுகளை கைவிட்டவனாக, அம்ரிதாவை சிறு குழந்தையை ஏந்துவது போல தன் கரத்தின் வளைவில் சரித்து ஏந்தியவாறு அவளது முடியினை கோதிய படி,

“ஒன்னுமில்ல டா… கூல்… கூல்… நான் உன் கூட தான் இருக்கேன்… இட்ஸ் ஓகே…” என்று அவளை சமாதானப் படுத்திக்கொண்டிருந்தான் அனேகன்.

“மதியமே அவங்க சரியா பேசல தெரியுமா?? நானும் அச்சுவும் வெளியில கிளம்பும்போது வந்து டாடா காட்டவும் இல்ல… நாங்க வேற ரொம்ப லேட்டா இப்ப தான் வீட்டுக்கு வந்தோம்… எப்ப நடந்துதுனே தெரியல… உடம்பெல்லாம் சில்லுனு இருக்கு அனேகா… பாவம் பொன்னம்மா…” என கதறித் துடித்தாள் அம்ரிதா.

“நோ டா பேபி… நோ… அவங்க போக வேண்டிய நேரம் வந்தாச்சு… போய்ட்டாங்க… நாம ஏத்துக்கதான் வேணும்… அழாத… காம் டவுன் டா… காம் டவுன்…” என அவளை நிமிர்த்தி முதுகினை தடவிக்கொடுத்தான் அனேகன்.

எழுந்து ஏங்கி ஏங்கி அழுகையை முழுங்கியவள் “அச்சு… அச்சுகிட்ட போகனும்…” என்றாள்.

“வா” என அவள் கையை பிடித்து உள்ளே அழைத்து வந்தான் அனேகன். அங்கு ஆஷ்ரிதாவும் கதறி கலைத்துப்போய் சுவரில் சாய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவளது கரத்தை பற்றியபடி அருகில் அமர்ந்திருந்தான் திரவியம்.

அனேகனது அரவணைப்பில் மெதுவாய் நடந்துவந்து ஆஷ்ரிதாவின் அருகே அமர்ந்த அம்ரிதா “அக்கா” என ஆஷ்ரிதாவின் தோளில் கை வைக்க அவளை தன்னோடு சேர்த்தணைத்து மீண்டும் அழத்தொடங்கினாள் ஆஷ்ரிதா. சிறிது அழுது தீர்க்கட்டும் என அவர்களை தடுக்காமல் அப்படியே விட்டிருந்தனர் ஆடவர் இருவரும்.

“ஹலோ மிஸ்டர்… உங்க நேம் என்ன?” திரவியத்தை நோக்கி கேட்டான் அனேகன்.

பதிலாய் திரும்பிப்பார்த்து ஒரு முறைப்பை மட்டுமே வெளிப்படுத்தினான் திரவியம்.

“நாம தான் அடுத்த வேலைகள செய்யனும் பாஸ்… ஒவ்வொரு முறையும் மிஸ்டர் மிஸ்டர் –னு கூப்பிட வேணாமே –னு கேட்குறேன்...” என்றான் அனேகன்.

நிலவரத்தை கருத்தில் கொண்ட திரவியம் வாய் திறந்து “திரு” என்றான்.

“அப்ப மிஸ்டர் –னே கூப்பிடலாம்” என்ற கூறிய அனேகன் ‘பேர சொல்ல இவ்வளவு யோசனையா?’ என முனகிக்கொண்டே தன் அலைபேசியில் ஏதோ தட்டியவாறு அந்த அறையை விட்டு வெளியேறினான்.

ஹாலில் நின்றுக்கொண்டு “திரு” என அவன் அழைக்க, எழுந்து வந்தான் திரு.

“அவங்க ரிகேஷன் யாருக்கெல்லாம் சொல்லனுமோ சொல்லிடுறீங்களா?” – அனேகன்.

“இல்ல… சொல்லிக்கற மாதிரி யாரும் இல்ல… அவங்க ஹஸ்பண்ட் இறந்த அப்பறமா இங்கயே தான் இருக்கறதா அச்சு சொல்லிருக்கா…’ – திரவியம்.

“ஓ… ஃபைன்… அப்படீன்னா காலையில தகனம் செஞ்சிடலாமா?” என்று அனேகன் கேட்டு நிற்க

“அனேகன்” என்று அங்கு வந்தாள் ஆஷ்ரிதா.

“ம்ம்ம்… சொல்லு…” என்று அவள் புறம் திரும்பினான் அனேகன்.

“எங்களுக்குனு யாரும் இல்ல… காலையில சுப்பு மட்டும் வாசல் க்ளீன் பண்ண வருவா… அப்ப அவ ஒரு டைம் பொன்னம்மா –வ பார்த்துக்கட்டும்… தென் எல்லாத்தையும் முடிச்சிடலாம்…” என்றாள்.

அவள் கூறியபடியே காலையில் சுப்பு வீட்டார் வந்து பார்க்கும் வரை பொன்னம்மாவின் உடல் வைக்கப்பட்டிருந்து, சகல மரியாதையோடு இம்மண்ணுலகை விட்டு அவருக்கு விடைக் கொடுத்தனர்.

எல்லாம் முடிந்து வீடே மயான அமைதிக் கொண்டிருந்தது. ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் உணவு மேசையில் அருகருகே அமர்ந்திருக்க, அனேகனும், திரவியமும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.

முந்தைய தினம் பொன்னம்மாவுக்காக வாங்கி வந்த குழாய் புட்டு பார்சல் மேசையில் வைத்தபடி அப்படியே இருக்க, அதை பார்த்து“அவங்களுக்கு நாம சர்ப்ரைஸ் கொடுக்க இத வாங்கிட்டு வந்தோம்… கடைசியில அவங்க நமக்கு ஷாக் கொடுத்துட்டாங்க என்ன அம்மு?” என்றாள் ஆஷ்ரிதா.

கண்களில் கண்ணீர் கட்டி நிற்க, என்ன சொல்வதென்று தெரியாமல் அந்த பார்சலை எடுத்து அப்புறப்படுத்தினாள் அம்ரிதா.

“கடைசி நிமிஷத்துல என்கிட்ட பேசாம, மூஞ்ச தூக்கிவச்சிகிட்டே போய்ட்டாங்களே அம்மு? போற நேரத்துலயாவது என்கிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு போய்ருக்கலாம் –ல?? நேத்து இதே நேரம் தான் அவங்கள ஊட்டிவிட சொல்லி அடம்பிடிச்சி சாப்ட்டு போனேன்” என்று தன் முகத்தை மூடி அழுதாள் ஆஷ்ரிதா.

“இட்ஸ் ஓகே அச்சு… விடு… வி ஹவ் டு மூவ் ஆன்” என்று அவளை அணைத்துக்கொண்டாள் அம்ரிதா.

(களவாடுவான்)


 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 17

“அம்மு… நான் காலை சாப்பாட்டுக்கு ஏதாவது வாங்கிட்டு வர்றேன்...” என சோபாவில் இருந்து எழுந்தான் திரவியம்.

“வாங்க நான் கூட்டிட்டு போறேன்” அனேகனும் உடன் எழுந்தான்.

“இல்ல இருக்கட்டும்… நானே போய்டுவேன்… பக்கத்துல தான்…” என்று கூறிய திரவியம் அங்கு ஒரு வினாடி கூட நிற்கவில்லை.

திரவியம் சென்றதும் அனேகன் திரும்பி இரட்டை சகோதரிகளை காண, ஆஷ்ரிதா மட்டும் ‘சாரி’ என்பது போல கண்களால் கெஞ்சினாள். “நோ ப்ராப்ளம்” என்று புன்னகையுடன் கூறிவிட்டு மீண்டும் சோபாவில் அமர்ந்துக்கொண்டான் அனேகன்.

“அச்சு… நீ போய் முகத்த கழுவிட்டு வா…” என்று அம்ரிதா ஆஷ்ரிதாவை பணிக்க, அவளும் எழுந்து உள்ளே சென்றாள்.

தற்பொழுது ஹாலில் தனிமையில் விடப்பட்ட அனேகனுக்கும் அம்ரிதாவுக்கும் இடையில் சில மணித்துளிகள் அமைதியாய் விளையாடின. அனேகனது பார்வை, கலைந்த குழலோடு வாடிய மலரை போல அமர்ந்திருக்கும் அம்ரிதாவை தொட்டுத் தொட்டு மீண்டது.

‘இத்தனை அருகில் இருந்தும் என்னை யார் என உணராமல் சிவனே என அமர்ந்திருக்கிறாளே!’ என அவனது மனம் கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருந்தது. அதனை சிறிதும் தன் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் எந்த சலனமும் இல்லாதவன் போல அமைதியாய் அமர்ந்திருந்தான் அனேகன்.

“ரொம்ப தேக்ஸ் சார்…” மெளனத்தை உடைத்து தானே தொடங்கினாள் அம்ரிதா.

“எதுக்கு?” – அனேகன்.

“கூப்பிட்ட உடனே என்ன ஏதுனு கூட கேட்காம ஓடி வந்துட்டீங்க… டைம்லி ஹெல்ப்… நீங்க இல்லைனா நான் எப்படி சமாளிச்சிருப்பேன் –னு தெரியல…” சிறிதாய் புன்னகைத்தாள் அம்ரிதா.

“இதுல என்ன இருக்கு…” அனேகன் சொல்லும்போதே அங்கு வந்திருந்தாள் ஆஷ்ரிதா.

“இல்ல சார்… நேத்து தான் உங்க அப்பாவோட காரியம் எல்லாம் முடிஞ்சுது… அதுக்குள்ள நான்…” என்று இழுத்தவள் ஆஷ்ரிதாவை கண்டதும் “இது என் அக்கா ஆஷ்ரிதா… அச்சு… இதுதான் என் மேனேஜர் மோகனோட பையன்… அனேகன்…” என்றாள்.

ஆஷ்ரிதாவோ செய்வதறியாது திகிலுடன் விழித்துக்கொண்டிருந்தாள்.

“ஆமா… நீங்க அக்கா நம்பருக்கு தானே கால் பண்ணீங்க? அக்காவ ஏற்கனவே தெரியுமா உங்களுக்கு?” புதிரை நினைவுக்கூர்ந்து கேட்டாள் அம்ரிதா.

“ஆமா… எனக்கு தெரியும்…” – மிகவும் சாந்தமாகதான் கூறினான் அனேகன். ஆஷ்ரிதாவுக்கு தான் பீதியை கிளப்பியது.

“இஸ் இட்? அச்சு உனக்கு இவர தெரியுமா?” இப்பொழுது ஆஷ்ரிதாவிடம் கேட்டாள்.

அவன் தான் தெரியும் என கூறிவிட்டானே! பற்றாக்குறைக்கு அலைபேசியின் அழைப்பை வேறு அம்ரிதா பார்த்துவிட்டாள். இல்லை என்று சொல்லதான் முடியுமா? சொன்னாலும் அவள் தான் நம்புவாளா? அதனால் நடுக்கத்தோடு “ஆம்” என தலையை மட்டும் ஆட்டி வைத்தாள் ஆஷ்ரிதா.

“எப்படி தெரியும்?” அம்ரிதா அடுத்த கேள்வியை கேட்டவும் உள்ளே வந்திருந்தான் திரவியம்.

“இந்தா அம்மு… எல்லாருக்கும் இட்லி வாங்கிருக்கேன்” என நீட்டினான்.

“சரி வாங்க எல்லாரும் சாப்பிடலாம்” என்று எழுந்த அம்ரிதா, உணவை மேசையில் பரத்த ஆரம்பித்தாள்.

“எனக்கு சாப்பாடு வேணாம் அம்மு… தலை வலிக்குது… வாந்தி வரும்போல இருக்கு…” – ஆஷ்ரிதா.

“வயிறுல எதும் இல்லைனா புரட்ட தான் செய்யும்… நீ வா…” என அவளை இழுத்து அமர்த்திய அம்ரிதா அனேகன் மற்றும் திரவியத்தை பார்த்து “நீங்க ரெண்டு பேரும் கைய கழுவிட்டு வாங்க… சாப்பிடலாம்…” என்றாள்.

ஆஷ்ரிதாவுக்கு தன் கையாலேயே ஊட்டிவிட்ட அம்ரிதா, அனேகனுக்கும் திரவியத்திற்குமான பார்சலை அவர்கள் அருகே நகர்த்தினாள்.

திரவியம் தான் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து பார்சலை எடுக்க தத்தளித்துக்கொண்டு இருக்க, அவனருகே இருந்த அனேகன் சுலபமாய் இரண்டு பார்சலையும் எடுத்து ஒன்றை திரவியத்திடம் கொடுத்தான்.

“எவ்வளவு வளர்ந்திருக்கான் பாரு… வளர்ந்து கெட்டவன்… இவன் கையால வாங்கி சாப்பிடனும்னு தலையில இருக்கு” என்று தன் வாய்க்குள் அர்ச்சித்துக்கொண்டு அந்த பொட்டலத்தை வாங்கிக் கொண்டான்.

“மிஸ்டர்... நேத்துல இருந்து ஏதோ என்ன திட்டிட்டே இருக்கீங்க போல தெரியுதே?” திரவியத்தை நோக்கி கேட்டான் அனேகன்.

“அதான் பேரு கேட்டு தெரிஞ்சிகிட்டீங்கள்ள? அப்பறம் என்ன மிஸ்டர்? திரு –னு கூப்பிடுங்க?” கொதித்தபடி கூறினான் திரவியம்.

“ரெண்டும் ஒன்னுதான்… நீங்க தமிழ் –ல சொல்றீங்க… நான் இங்கிலீஷ் –ல சொல்லுறேன்… ஹேவ் ஃபன் ப்ரோ” – அனேகன்.

“சகிக்கல…” என்றான் திரவியம்.

அனேகன் எதையும் பெரிதாய் சட்டை செய்துக்கொள்ள மாட்டான் என்பதால் திரவியம் வெடித்து சிதறிய வண்ணம் பேசுவதை தன் மூளை வரை எடுத்துச் செல்லவில்லை அவன். ஆனால் அம்ரிதாவோ ஒன்றும் விளங்காமல் இவர்கள் இருவருக்கும் ஏன் முட்டிக்கொள்கிறது என்ற யோசனையில் பார்த்துக் கொண்டிருக்க, எல்லாம் அறிந்த ஆஷ்ரிதாவால் அமைதியாய் இருக்க முடியவில்லை. தேவையற்ற பிரச்சனை அங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் “திரு ஸ்டாப் இட்…” என்று முதலில் அவனை மிரட்டியவள் பிறகு பொதுவாக “சாப்பிடும் போது எதுக்கு இது எல்லாம்… அமைதியா சாப்பிடுங்க…” என்றாள்.

அவளை காரமாக ஒரு பார்வை பார்த்த திரவியம் நாற்காலியில் இருந்து எழுந்துக் கொள்ள முற்பட்டான். அவனது செயலை முன்னதாகவே யூகித்த அம்ரிதா விரைந்து அவன் அருகில் சென்று அவனை நாற்காலியோடு அழுத்திப் பிடித்தாள்.

“மவனே… எழுந்திருச்ச… செத்த… நீ இத தான் செய்யுவனு எனக்கு தெரியும்… ஒழுங்கா சாப்பிட்டு முடிச்சிட்டு எழுந்திரு… உங்க டாம் அண்ட் ஜெர்ரி விளையாட்ட அப்பறமா வச்சிக்கலாம்” என்று கூறியதோடு திரவியத்தின் தலையில் ஒரு கொட்டு வைத்துவிட்டு மீண்டும் ஆஷ்ரிதாவுக்கு உணவை ஊட்டிவிடத் தொடங்கினாள்.

அனேகனோ நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல, தான் உண்டு தன் உணவு உண்டு என சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“போதும் டி… நீ சாப்பிடு…” ஆஷ்ரிதா அம்ரிதாவிடம் கூற,

“இன்னும் மிச்சத்த சாப்பிடு… நான் வேற வச்சி சாப்பிடுறேன்…” என்று தட்டில் வைத்திருந்த மொத்தத்தையும் ஆஷ்ரிதாவின் வாய் –க்குள் நுழைத்த பின்பு தான் அவள் தன் வயிறுக்கு உணவெடுத்துக் கொண்டாள்.

அனைவரது வயிரும் சமாதானமானாலும் மனம் சமாதானமாகவில்லை. உணவு உண்டு வெகு நேரம் அனைவரும் அமைதியாய் இருப்பதை கண்டவுடன்,

“ஆளாளுக்கு மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருந்தா என்ன அர்த்தம்… அடுத்த வேலைய பாருங்க…” என்று அனேகன் கூற, அது எரியும் கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதாயிற்று.

“உங்கள மாதிரி கல்லு மனச எல்லாராலும் இருக்க முடியாது மிஸ்ட்ட். அனேகன்…” என்றான் திரவியம்.

“திரு…” - அதட்டினாள் ஆஷ்ரிதா.

“என்ன அச்சு? இதுக்கு மேல என்னால் சும்மா இருக்க முடியாது… இன்னைக்கு ரெண்டுல ஒன்னு தெரிஞ்சே ஆகனும்…” – கொந்தளித்தான் திரவியம்.

“என்ன டா திரு? என்ன தெரியனும்?” ஒன்றும் புரியாதவளாய் கேட்டாள் அம்ரிதா.

“எல்லாம் உன் அக்காவுக்கு தெரியும்… அவகிட்டயே கேளு… இதோ நிக்குறானே அனேகன்… இவன் யாருனு கேளு… இவன் என்ன செஞ்சான் –னு கேளு” தீக்கனலின் பொறியாய் பறந்தது திரவியத்தின் கேள்விகள்.

ஆரம்பத்தில் திரவியத்தின் நடவடிக்கைகளை ஒன்றும் இல்லாததாகக் கருதிய அனேகனுக்கு தற்பொழுதும் அவ்வாறு நினைக்க முடியவில்லை. போருக்கு தயாராகும் வீரன் போல முகத்தை திடமாக வைத்துக் கொண்டு, புருவத்தை சுருக்கி, நெஞ்சை நிமிர்த்தி நின்று திரவியத்தை கூர்மையாகப் பார்த்தான் அனேகன்.

“திரு… ஸ்டாப் இட்… இத பேசுறதுக்கு இட்ஸ் நாட் தி ரைட் டைம்…” கத்தினாள் ஆஷ்ரிதா.

“ஏய்… நீ ஏன் டி இவ்வளவு டென்ஷன் ஆகுற? அமைதியா இரு!” – அம்ரிதா.

“இல்ல அம்மு… உனக்கு ஒன்னும் தெரியாது… நீ உள்ள போ… நான் பேசிக்கறேன்…” – படபடத்தாள் ஆஷ்ரிதா.

“எனக்கு தெரியாம அப்படி என்ன தான் டி நடக்குது உங்க மூனு பேருக்கும் இடையில?” – விளங்காமல் கேட்டாள் அம்ரிதா.

“அம்மு உன்ன உள்ள போக சொன்னேன்” மீண்டும் கனைத்தாள் ஆஷ்ரிதா.

“எதுக்கு அச்சு? நான் ஏன் உள்ள போகனும்? நீங்க இவ்வளவு டென்ஷன் ஆகுற அளவு என்ன நடந்தது? இந்த வீட்டுல என்ன நடக்குதுனு தெரிஞ்சிக்க எனக்கு உரிமை இல்லையா?” – அம்ரிதா.

“அய்யோ அம்மு… தயவு செஞ்சி நான் சொல்லுறத புரிஞ்சிக்கோ… நீ உள்ள போ… ஏற்கனவே டென்ஷன் ஆகி கத்தி பொன்னம்மாவ இழந்துட்டேன்… இனி இருக்கறது நீ மட்டும் தான்… உன்னையும் இழக்க நான் தயாரா இல்ல அம்மு… ப்ளீஸ்… கோ இன்சைட்…” – ஆஷ்ரிதா.

“ஹேய்… என்ன டி லூசு மாதிரி பேசுற?” – அம்ரிதா.

“ஆஷ்ரிதா… பொன்னம்மா உன்னால இறக்கல… இட்ஸ் அ சிவியர் அட்டாக்… பிரெஷர் வேற ரொம்ப அதிகமா இருந்துருக்கு… இது நடக்குறது தான்… டோண்ட் பீ கில்டி…” சாந்தப்படுத்தினான் அனேகன்.

“இல்ல… நான் தான்… நான் தான் பொன்னம்மாவ கவனிக்காமலே விட்டுட்டேன்…” என ஸ்ருதியெடுத்து அழத் தொடங்கினாள் ஆஷ்ரிதா.

“அச்சு அப்படி இல்ல டா” அவளது அருகே நெருங்கினான் திரவியம்.

“நீ அங்கேயே நில்லு… கிட்ட வராத… எல்லாம் உன்னால தான்… என்னைக்கு நீ இந்த விஷயத்துல உள்ள வந்தியோ அன்னைல இருந்து தான் ஏகப்பட்ட குழப்பம்…” – கண்கள் விரிய பல்லை கடித்துக்கொண்டு கூறினாள் ஆஷ்ரிதா.

இதுவரை இவர்களுக்கு இடையில் வரும் சண்டைகளை வெறும் விளையாட்டு என எண்ணிக்கொண்டிருந்த அம்ரிதாவின் நினைப்பு இன்று சுக்கு நூறாய் போனது. இருவருக்குள்ளும் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கிறது என தனக்குள் சொல்லிக் கொண்டவள் நிலமையை சரி செய்யும் பொருட்டு,

“அச்சு… ஷட் யுவர் மெளத்… உங்களுக்குள்ள என்ன ப்ராப்ளம் வேணும்னாலும் இருக்கட்டும்… ஆனா வீட்டுக்கு கூப்பிட்டு வச்சி இப்படியா பேசுறது? நைட் நான் கால் பண்ண உடனேயே ஓடி வந்தான் திரு… அவன்கிட்ட இப்படியா பிஹேவ் பண்ணுவ நீ?” – அம்ரிதா.

“அவன எதுக்கு நீ வர சொன்ன? நானா கூப்ட சொன்னேன்?” – ஆஷ்ரிதா.

“அச்சு… எவ்ரிதிங் ஹெஸ் அ லிமிட்… நேத்து நீ வெக்ஸ் ஆனத பார்த்து அவன் எவ்வளவு ஃபீல் பண்ணான் –னு தெரியுமா?” என்று அம்ரிதா பேசிக்கொண்டு இருக்கும் பொழுதே அங்கு வந்திருந்தார் திரவியத்தின் தாயார்.

பொன்னம்மாவின் விஷயம் கேள்விப்பட்டு திரவியம் முந்தைய தினம் இரவு கிளம்பும்போதே தானும் உடன் வருவதாய் கூறியிருந்தார் அவனின் தாயார். இரவு வெகு நேரம் ஆகிவிட்ட காரணத்தினால், தான் மட்டும் இப்போது செல்கிறேன் என்றும், வீட்டை கண்டுக் கொண்ட பின்னர் அவர்கள் வழக்கமாக சவாரி செய்யும் ஆட்டோ ட்ரைவரிடம் முகவரியை சொல்லி காலையில் தங்களை அழைத்துக் கொள்கிறேன் எனவும் கூறியிருந்தவன், உணவு வாங்க சென்றிருந்த நேரம் அந்த வேலையை செய்து முடித்திருந்தான்.

எதிர்பாராத சமயம் உள்ளே வந்த திரவியத்தின் தாயாரை கண்டு அனைவருமே தங்கள் வாக்குவாதத்தை நிறுத்தியிருந்த நேரம்,

“என்ன பசங்களா ஆச்சு? சத்தம் வெளியில வர கேட்குது?” என்றார் திரவியத்தின் தாய்.

“என் அம்மா” என்று அனைவரிடமும் கூறினான் திரவியம்.

“அம்மா… வாங்க மா… உட்காருங்க…” அம்ரிதா கூறிட, ஆஷ்ரிதா எழுந்து நின்றாள்.

“இதுல அச்சு யாரு, அம்மு யாரு??” தளர்ந்த குரலில் கேட்டார் அவர்.

“நான் தான் மா அம்மு… இவ அச்சு…” என்று தங்களை அம்ரிதா அறிமுகப்படுத்த, ஆஷ்ரிதா வணக்கம் மட்டும் வைத்துவிட்டு அமைதியாய் நின்றாள்.

“சரி… சரி… விஷயத்த சொன்னான் பையன்… கஷ்டமா போய்டுச்சு… நைட் கிளம்பி வரனும்னு தான் நினைப்பு… திரு தான் வேணாம்னு சொல்லிட்டான்” – திரவியத்தின் தாய்.

“பரவாயில்ல மா… திரு ரொம்பவே உதவி பண்ணாரு… இது என் மேனேஜரோட பையன்… பேரு அனேகன்…” – அம்ரிதா.

“வாங்க தம்பி” – திரவியத்தின் தாய்.

“வணக்கம் மா” என்ற அனேகன், அவரது பாதத்தை தொட்டு வணங்கினான்.

இதை கண்ட திரவியத்திற்கு ஆத்திரம் எல்லை மீறியது. “எங்க இருந்துதான் படிக்கிறானுங்களோ இப்படி ஏமாத்துறதுக்கு” என்று வாய்க்குள் கூறிக்கொண்டு தன் பற்களை நறுநறுத்தான்.

“நல்லா இருப்பா” என அவன் தலையை தொட்டு ஆசிர்வதித்தார் திரவியத்தின் தாயார்.

“அம்மா… சாப்பிடுங்க… வாங்க…” – அம்ரிதா.

“இல்ல தங்கம்… இருக்கட்டும்… நான் சாப்பிட்டு தான் வந்தேன்… வருத்தப்பட்டுக்காம இருங்க சரியா… படிச்ச புள்ளைங்க… வாழ்க்கைய புரிஞ்சு நடந்துக்கோங்க…” அக்கறையாய் கூறியவரிடம்

“சரிங்க மா” என்றனர் ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும்.

“சரி… இன்னொரு வேலை இருக்கு… நான் கிளம்புறேன்… திரு… புள்ளைங்களுக்கு என்ன தேவை -னு இருந்து கவனிச்சுட்டு வா பா” என சொல்லிவிட்டு நாகரிகமாய் அங்கிருந்து கிளம்பிவிட்டார் அவன் தாயார்.

தன் அம்மாவை வாசல் வரை சென்று வந்த ஆட்டோவிலேயே ஏற்றிவிட்டவன் “ஜாக்கிரதையா கூட்டிட்டு போங்க அண்ணே” என்று கூறிவிட்டு மீண்டும் அம்ரிதாவின் வீட்டிற்குள் வந்தான் திரவியம்.

“அச்சு… ஐ அம் சாரி… உன் வீட்டுல இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும் போது இத நான் பேசுறது சரியா தப்பானு எனக்கு தெரியல… ஆனா இப்பதான் இவன் கையும் களவுமா மாட்டியிருக்கான்… இந்த சந்தர்ப்பத்த விட்ட அடுத்து இவன பிடிக்க முடியாது” உறுதியாய் பேசினான் திரவியம்.

“என்ன கையும் களவுமா மாட்டியிருக்கானா?” இம்முறை சினந்துக்கொண்டது அம்ரிதா.

“ஆமா அம்மு… அவனோட அப்பா முந்தானேத்து தானே இறந்தாரு?” – திரவியம்.

“ஆமா… நியூஸ் –ல பார்த்தியா நீ?” – அம்ரிதா.

“இல்ல… நேர் –ல பார்த்தேன்…” – திரவியம்.

“என்ன நேர்ல பார்த்தியா??” – அதிர்ச்சியில் உறைந்தாள் அம்ரிதா.

“திரு…” - கத்தினாள் ஆஷ்ரிதா.

“சும்மா கத்தாத அச்சு… உன் முன்னாடி தானே நிக்கறான்… கேளு அவன்கிட்டயே… நான் உன்கிட்ட சொன்ன ஒவ்வொன்னும் உண்மை… அதனால தான் சம்பத்தப்பட்ட ஆள முன்னாடி வச்சிட்டே இவ்வளவு தைரியமா பேசுறேன்… இத விட பெரிய ஆதாரம் வேணுமா அச்சு உனக்கு?” – திரவியம்.

ஆஷ்ரிதாவுக்கு எல்லாம் தெரியும் என திரவியம் சொன்னதோடு இப்போது அவன் அவளிடும் பேசிக்கொண்டிருக்கும் விதத்தில் இருந்து ஆஷ்ரிதா தன்னிடம் பெரிதாய் ஏதையோ மறைத்திருக்கிறாள் என்று புரிந்து போனது அம்ரிதாவுக்கு. அதனால், வாயடைத்து வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தாள் சிறிது நேரம்.

“நீ சொல்றது உண்மையாவே இருந்துட்டு போகட்டும் திரு… அத பத்தி உனக்கு என்ன கவலை? அவர கேள்வி கேட்குற உரிமைய உனக்கு யாரு கொடுத்தா?” – கொந்தளித்தாள் ஆஷ்ரிதா.

“வாட்..? வாட் அச்சு? கம் அகெய்ன்!! இப்ப வரைக்கும் நான் ஏன் இப்படி காட்டுக் கூப்பாடு போடுறேன் –னு உனக்கு புரியலையா அச்சு??” – தன்னை எடுத்தெறிந்து பேசும் ஆஷ்ரிதாவிடம் வேதனையாய் கேட்டான் திரவியம்.

“திரு ப்ளீஸ்… எனஃப்… நான் படுற அவஸ்தை உனக்கு தெரியும்… தெரிஞ்சே இப்படி பண்ணாத… இதுக்கு மேல என்னால உன்கிட்ட கெஞ்ச முடியாது… உன் காலுல வேணும்னாலும் விழுறேன்… இதோட விடு” – கெஞ்சினாள் ஆஷ்ரிதா.

ஆஷ்ரிதாவின் இந்த வார்த்தைகள் திரவியத்தின் மனதை கீறாமலே இரத்தம் சொரியச்செய்தது. அதன் வேகத்தை எல்லாம் திரட்டி அனேகனை நெருங்கியவன், அவனது சட்டையை கழுத்துக்கு கீழ் கூட்டிப் பிடித்து இழுத்து “டேய்… சொல்லு டா… உண்மைய சொல்லு…” என்று உலுக்கினான்.

திடுமென அவன் அனேகனின் சட்டையை பிடித்ததில் அதிர்ந்துப்போன ஆஷ்ரிதா “திரு… வாட் நான் சென்ஸ் யூ ஆர் டூயிங்…” என கத்தினாள். அம்ரிதா ஒரு படி மேலே சென்று திரவியத்தை தள்ளியே விட்டிருந்தாள்.

“நீ தள்ளு அம்மு… இன்னைக்கு அவன…” என்று அம்ரிதாவை தாண்டி அனேகனை நெருங்க சென்ற திரவியத்தைப் பற்றி தன் பக்கம் இழுத்தாள் ஆஷ்ரிதா. அவள் இழுத்த இழுப்பில் கால் தடுக்கி ஆஷ்ரிதாவும் திரவியமும் ஒருவர் மேலே ஒருவர் விழ,

“அய்யோ அச்சு…” என ஓடிச் சென்று தூக்கினாள் அம்ரிதா. அனேகன் அமைதியாய் கசங்கிய தனது சட்டையை சரி செய்துக் கொண்டிருந்தான்.

“சாரி அச்சு… ஐ அம் சாரி… ஆர் யூ ஓகே” – திரவியம்.

பதில் ஏதும் சொல்லாமல் முறைத்தபடியே இருந்தாள் ஆஷ்ரிதா. பதறியபடி அவளது முதுகை தடவிக்கொடுத்த அம்ரிதா,

“திரு… ப்ளீஸ்… என்ன தான் நடக்குது இங்க?? யாராவது சொல்லுங்க… அனேகன்… நீங்களாவது சொல்லுகளேன்… இவன் உங்க பேர சொல்லி இவ்வளவு ஆர்பாட்டம் பண்ணுறான்… ஏன் சிலையாட்டம் நிக்குறீங்க??” அழுதுக்கொண்டே கேட்டாள்.

அனேகன் அசைந்தானில்லை. ஆகையால் மீண்டும் திரவியத்தை திரும்பிப் பார்த்தாள் அம்ரிதா.

“அம்மு… மோகனோட டெத் ஆக்‌ஷிடட் இல்ல… இட்ஸ் அ மர்டர்… அத செஞ்சது…” என ஒரு சின்ன இடைவெளி விட்ட திரவியம் “இதோ நிக்குறானே தி க்ரேட் அனேகன்… இவன் தான்…” என்றான்.

திரவியம் சொன்ன விஷயத்தை அம்ரிதா தன்னுள் கிரகித்துக் கொண்டு, தான் காதில் கேட்ட விஷயம் நிஜம்தான் இது பிரம்மை அல்ல என்று அவள் உணர்ந்து ஊர்ஜிதப்படுத்தும் முன்னர் அது நடந்திருந்தது.

ஆம்… அனேகனை ஓங்கி ஒரு கை பலமாக அறைந்திருந்தது.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 18

திரவியம் சொன்ன விஷயத்தை அம்ரிதா தன்னுள் கிரகித்துக் கொண்டு, தான் காதில் கேட்ட விஷயம் நிஜம்தான் இது பிரம்மை அல்ல என்று அவள் உணர்ந்து ஊர்ஜிதப்படுத்தும் முன்னர் அது நடந்திருந்தது.

ஆம்… அனேகனை ஓங்கி ஒரு கை பலமாக அறைந்திருந்தது.

எதிர்பாராமல் கன்னத்தில் விழுந்த அடியின் தாக்கத்தால் பக்கவாட்டில் சரிந்து நின்ற அனேகன், சுவற்றில் எறியப்பட்ட பந்தை போல அதீத வேகத்தில் மீண்டும் திரும்பி நிமிர்ந்து நின்றான்; கண்கள் சிவக்க முறைத்தான்.

தீடீரென நடந்த அந்த நிகழ்வின் அதிர்ச்சியில் அனைவரது மூளையும் ஒரு நிமிடம் இயங்க மறுத்து, மீண்டும் இயங்கத் தொடங்கிய தருணம், ‘நாம் நால்வர் தானே பேசிக்கொண்டிருந்தோம், யாரது புதிதாய் நம் வீட்டில்? என்ன நடந்தது தீடீரென?’ என்று யோசிக்க, அது சற்று பின்நோக்கிச் சென்று படம் காட்டியது.

“மோகனோட டெத் ஆக்சிடட் இல்ல… இட்ஸ் அ மர்டர்… அத செஞ்சது… அனேகன்…” என்று திரவியம் சொல்லி நிறுத்தியிருக்க, வேகமாக அந்த வீட்டிற்குள் நுழைந்த அந்த தடித்த உருவம் கொண்ட மனிதன், கண்ணிமைக்கும் நேரத்தில் அனேகனுக்கு முன்பாக நின்றிருந்த திரவியத்தை கீழே தள்ளிவிட்டு அனேகனை ஓங்கி அறைந்திருந்தான்.

அந்த மனிதன் வேறு யாரும் அல்லன். ஆஷ்ரிதா – அம்ரிதா இரட்டை சகோதரிகளின் தகப்பனும், இறந்த யசோதாவின் கணவனுமான விஸ்வநாதன் தான்.

என்னதான் அனேகனுடன் சண்டை இழுத்துக் கொண்டிருந்தாலும் திடீரென வீடு புகுந்து ஒருவன் அவனை அடிக்கிறான் என்றதும் திரவியத்துக்கு கோபம் தான் வந்தது. கீழே விழுந்த மாத்திரத்தில் எழுந்து நின்றவன்,

“ஹலோ… யாரு நீங்க? நீங்க பாட்டுக்கு வீட்டுக்குள்ள நுழைஞ்சி அடிதடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என கர்ஜித்தான்.

பெரும் சீற்றத்துடன் அவன் புறம் திரும்பிய விஸ்வநாதன் “யாரு டா நீ? பார்க்க பிளோ ஆவரேஜ் மாதிரி இருக்க… என்ன கேள்வி கேக்குறியா?” என்று கேட்க, தட தடவென சத்தம் கிளம்ப அங்கே வந்து நின்றனர் ஆறு ஜிம் பாடிகள்.

அவர்களது உடற்கட்டும், அவர்கள் அணிந்திருந்த கருப்பு சட்டையும், கையில் வைத்திருந்த ஜெர்மன் பிஅஸ்ஜி1 ஏ1 ஸ்னிப்பர் ரைபிள் –ம், அவர்களை ப்ளாக் கேட்ஸ் என்று எண்ண வைத்தது.

தான் கண்ட காட்சிகளால் பயத்தின் விளிம்பில் நின்ற ஆஷ்ரிதாவின் உடல் அவளையும் மீறி தன் நடுக்கத்தை அனைவருக்கும் காட்சிப்படுத்தியது. அந்த நடுக்கம் மாறாமல் “எல்லோரையும் வெளியில போக சொல்லு அம்மு” என்று உதட்டை பிதுக்கிக்கொண்டு அவள் கூற, “அப்பாவையா டா வெளியில போக சொல்லுற?” என அவளை நோக்கி அடியெடுத்து வைத்தான் விஸ்வநாதன்.

விஸ்வநாதன் ஆஷ்ரிதாவை எட்டும் முன்னர் விரைந்து சென்று தன் கரம் சூழ அவளை அணைத்துக் கொண்ட அம்ரிதா, விஸ்வநாதனைப் பார்த்து “தள்ளி போங்க” என்றாள் ராட்சஷ குரலில்.

தற்பொழுது அதிர்ச்சி திரவியத்திற்கு தான் வந்தது. ‘இவர் தான் யசோதாவின் கணவரா?’ என்ற மன ஓட்டம் கொண்டவனாய் அங்கு நடப்பவற்றை பார்த்துக்கொண்டிருந்த திரவியத்திற்குள் தலைத் தூக்கியது ஒரே ஒரு சந்தேகம். ‘இவர் ஏன் அனேகனை அடிக்க வேண்டும்? அனேகனை இவருக்கு தெரியுமா? அனேகனுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்?’ என்ற கேள்விகள் தான் அவனுள் அப்பொழுது பிரதிபலித்தது.

ஆனால் அனேகனை திரும்பிப்பார்த்தால், இறுகிய முகத்தோடு, உதட்டோரமாய் வடியும் இரத்தத்தையும் துடைக்காமல், ஆஜானுபாகுவாகவே நின்றுக்கொண்டிருந்தான். அவன் கண்களில் ஏதோ ஓர் ஓளி தெரிந்தது. அதன் காரணம் என்ன என்பது மட்டும் திரவியத்தால் உணர்ந்துக் கொள்ள முடியவில்லை.

மல்யுத்தத்திற்கு தயாரான காளைகளாய் திரவியமும் அனேகனும் சற்றுமுன் விடைத்திருந்த தருணம் மாறி தற்போதய முழக்கம் அம்ரிதாவுடையதாய் இருந்தது.

“யாருக்கு யார் அப்பா” சிங்கமென சீறிக்கொண்டிருந்தாள் அம்ரிதா.

“அ… ஆ…” என்று விஸ்வநாதன் திணறி நிற்க,

“ம்ம்ம்… சொல்லுங்க… யார் அம்ரிதா, யார் ஆஷ்ரிதா? சொல்லுங்க பார்ப்போம்” என்றாள் நமட்டு சிரிப்புடன்.

“அத எப்படி சொல்லுவாரு அம்ரிதா… உன்னோட ஏர்காடு எஸ்டேட் எவ்வளவு ப்ராஃபிட் –ல இருக்குனு கேளு… சரியா சொல்லுவாரு” அசுரனைக் கொல்லத் துடிக்கும் பார்வையோடு கூறினான் அனேகன்.

“டேய்…” என பல்லை கடித்துக்கொண்டே விஸ்வநாதன் அனேகனை கண்டு முறைக்க, அவனை சுடக்கிட்டு தன் திசைக்கு திருப்பினாள் அம்ரிதா.

“என்னை பார்த்து பேசுங்க விஸ்வநாதன்… எங்க ஷேர் ப்ராஃபிட் எல்லாத்தையும் அச்சுவோட ப்ரொஃபெஷ்னல் பி.ஏ. –ங்கற பேர் –ல இருக்குறானே உன் பினாமி… அவன் உன்கிட்ட ஒப்பிக்கற விஷயம் எங்களுக்கு தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா? இல்ல எஸ்டேட் –அ பிடுங்கதான் இப்ப வந்து ட்ராமா பண்ணுறீங்கனு எங்களுக்கு தெரியாதுனு நினைச்சிட்டு இருக்கீங்களா?” – அம்ரிதா.

“பினாமி இல்ல டா மா… யசோதா இல்லாம தனியா இருக்கற உங்கள கவனிச்சிக்கறதுக்கு தான் அப்பா…”
அதற்கு மேல் அவனை பேச விடவில்லை அம்ரிதா.

“என் அம்மா பேர சொல்லாதீங்க… அவங்கள நினைக்கற தகுதி கூட கிடையாது உங்களுக்கு… ரொம்ப அக்கறையோ? யாரு அம்மு யாரு அச்சு –னு கூட தெரியாத அளவு அக்கறை…” – அம்ரிதா.

“அப்பாவ மன்னிக்க மாட்டிங்களா மா?” – விஸ்வநாதன்.

“ஹாங்… அப்பாவா? அப்பா –னா யாரு தெரியுமா? இந்த நடிப்பெல்லாம் இங்க வேணாம்… மரியாதையா இடத்த காலி பண்ணுங்க… இல்ல அசிங்கமாகிடும்” – அம்ரிதா.

“சரி டா… நாம பேசிக்கலாம்… முதல இந்த நாய வெளிய அனுப்பு… அப்பறமா நாம பொறுமையா உட்கார்ந்து பேசி எல்லாத்தையும் சரி பண்ணிக்கலாம்…” என அனேகனை சுட்டிக்காட்டி கூறினான் விஸ்வநாதன்.

“யார பார்த்து நாயி –னு சொன்ன?? நீ போ முதல வெளியில… இனி ஒரு நிமிஷம் இங்க நின்ன நடக்கறதே வேற…” அவ்வளவு நேரம் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்த ஆஷ்ரிதா வெடிக்கும் எரிமலையானாள்.

அவளை பார்த்து சிநேகமாய் புன்னகைத்த அனேகன் விஸ்வநாதன் முன் வந்து நின்று “நீங்களா போறீங்களா இல்ல நாய அடிச்சி தொறத்தற மாதிரி… நோ நோ… நாய்க்கு நன்றி உண்டே…” என்று நாடியில் கைவைத்தவாறு யோசிக்க, பொங்கி எழுந்தனர் அந்த ஆறு ஜிம் பாடிகளும்.

அறுவரின் கையில் இருந்த துப்பாக்கியும் ஒருசேர அனேகனை குறிவைத்து நின்றது அக்கணம்.

“ஹாஹா… ஃபன்னி கெய்ஸ்…” சிரித்துக்கொண்டான் அனேகன்.

“என்ன டா உயிர் பயம் இல்லாத மாதிரி நடிக்கறயா?” – விஸ்வநாதன்.

“உங்கள மாதிரி எனக்கு நடிக்க தெரியாது ஜி…” நக்கலாகவே கூறினான் அனேகன்.

“யாருக்கு டா பயம்? உன்ன மாதிரி பிள்ளப்பூச்சிகளோட மிரட்டலுக்கு எல்லாம் பயப்படுறவன் இல்ல இந்த விச்சு… இல்லைனா நாடு விட்டு நாடு போய் நாலு கம்பெனி, பன்னிரெண்டு பிராஜெக்ட், முப்பது பிரான்ஜ், லட்சக்கணக்கான எப்லாயீஸ் –னு கைக்குள்ள வச்சி கம்பீரமா நிக்க முடியுமா?” – விஸ்வநாதன்.

“ரெண்டு குடும்பத்தை லிஸ்ட் –ல விட்டுட்டீங்களே…” – அனேகன்.

“என்ன டா? இத சொல்லி என்ன அடக்கிறலாம் –னு நினைக்குறயா? – விஸ்வநாதன்.

“இன்னும் எத்தனை இல்லீகல் ரிலேஷன்ஷிப் உனக்கு இருக்குனு நான் புட்டு புட்டு வச்சாலும் நீ அடங்கமாட்டனு எனக்கு தெரியும்… எல்லாம் தெரிஞ்சும் உன்ன இவ்வளவு ஆட விடுறேன் –னா கொஞ்சமாவது யோசிக்க மாட்டியா டா?” – அனேகன்.

அவன் பேசும் சூட்சும பாஷையின் அர்த்தம் புரியாமல் கேள்வியாய் நோக்கிக் கொண்டிருந்தான் விஸ்வநாதன்.

அப்போது தன் அலைபேசியை எடுத்து, சில இலக்கங்களை தட்டி, தன் காதில் வைத்த அனேகன், “யஸ் லேகா… கம் அண்ட் கேட்ச் தி மாஃபியா” என்று கூற, அவ்வீட்டு வாசலில் நின்றிருந்த நான்கு ஆண் காவல்துறை அதிகாரிகளும் இரண்டு பெண் அதிகாரிகளும் உள்ளே வந்தனர்.

ஆண் காவலாளிகள் நால்வரில் மூவர், திரவியம் அனேகனது அப்பார்மெண்ட் –ல் பார்த்தவர்களாய் இருந்தனர். அப்பொழுதுதான் திரவியத்திற்கு விஷயம் கொஞ்சம் பிடிபடத் தொடங்கியது. மோகன் கொலைக்கும், அம்ரிதா குடும்பத்தின் வாழ்க்கைக்கும் பின் பெரியதொரு முடிச்சு இருக்கிறது என தன்னுள் சொல்லிக்கொண்டான் திரவியம்.

உள்ளே வந்த காவல்துறையினர் ஒன்றாய் அனேகனுக்கு சல்யூட் அடிக்க, அனேகன் மட்டும் சிரித்தாவறு “ஆம்” என தலையாட்டினான். மற்ற அனைவரது முகத்திலும் புதிரே தெரிந்தது.

“ஹியர் இஸ் தி அக்யூஸ்ட் லேகா” என்று அனேகன் விஸ்வநாதனைக் காட்ட,

“யஸ் சர்” என்று கூறிய லேகா, மற்ற காவலாளிகளை பார்த்து “அரெஸ்ட் ஹிம்” என்றார்.

“வாட் தி ஹெல் இஸ் ஹேப்பனிங்? என்ன எதுக்கு அரெஸ்ட் பண்ணுறீங்க? நான் யாருனு தெரியுமா?” என்று திமிறிய விஸ்வநாதனின் கைகளில் விலங்குபோடப்பட்டது.

அதே சமயம் அந்த ஆறு ஜிம் பாடிகளில் மூவரை பிடித்துவிட, மீதி மூவரும் தப்பி ஓட முயன்றனர். கணப்பொழுதில் வாசலை தாண்டி ஓடியவர்கள் வீட்டின் கேட்டை அடையும் முன்னர் அவர்களை துறத்திச்சென்ற லேகா, மூவரின் கால்களை குறிவைத்து தன் துப்பாக்கியின் தோட்டாக்களை இறக்கியிருந்தாள்.

துளைக்கப்பட்ட கால்களில் இரத்தம் சொட்ட சொட்ட தரையில் வீழ்ந்துத் துடித்தனர் அந்த மூன்று கயவர்களும். கேட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த காவல் துறை வேன் –ல் இருந்து இறங்கி வந்த கான்ஸ்டபிள்கள் சிலர் “வீ ஷல் மேம்” என கூறிவிட்டு அந்த மூன்று பேரையும் தூக்கிச் செல்ல, மற்ற மூன்று ஜிம் பாடிகளோடு விஸ்வநாதனும் அந்த வேன் –ல் ஏற்றப்பட்டான்.

இவற்றை கடந்து லேகா மீண்டும் அவ்வீட்டிற்குள் நுழைய அவரோடு வந்திருந்த மற்றொரு பெண் அதிகாரியோடு கை குலுக்கிக் கொண்டிருந்தான் அனேகன்.

“தேங்க் யூ மிஸ்டர். அனேகன்” என்று அங்கு வந்து தானும் கை குலுக்கினாள் லேகா.

“நான் தான் தேங்க்ஸ் சொல்லனும் லேகா… உங்களால தான் எல்லாம்… தேங்க்ஸ் அ லாட்” என்ற அனேகனிடம் ஒரு புன்னகையை சிந்தியவள்,

“இந்த கன் எல்லாத்தையும் கலெக்ட் பண்ணிக்க சொல்லுங்க” என்று அந்த ஜிம் பாடிகள் விட்டுச்சென்ற துப்பாக்கிகளை சுட்டிக்காட்டி மற்றொரு பெண் அதிகாரியிடம் கூற, அவர் கூறியபடி அனைத்தும் கைப்பற்றப்பட்டது.

“ஓகே மிஸ்டர். அனேகன்… சீ யூ இன் தி கோர்ட்” என கூறிவிட்டு மீண்டும் ஒரு சல்யூட்டோடு விடைப்பெற்றார் லேகா.

தற்பொழுது அடமழை பெய்து ஓய்ந்தது போல அமைதி பரவியிருந்தது அவ்வீட்டில். நடப்பவை என்னவென்று அறியாமல் சிலையாயிருந்த அம்ரிதா, ஆஷ்ரிதா மற்றும் திரவியம் ஆகியோர் தன்னை பார்க்கும் பார்வையின் அர்த்தம் புரிந்தவனாய் “வெயிட் சொல்லுறேன்” என்ற அனேகன் திரவியத்தை பார்த்து,

“திரு… கொஞ்சம் உள்ள போய் தண்ணி எடுத்துட்டு வர முடியுமா?” என்றான்.

“ம்ம்ம்… வர்றேன்” என உள்ள செல்லத் துணிந்தவன் சற்று நிதானித்து அனேகனை நோக்கி ஒரு சந்தேக பார்வையை வீசினான்.

“உங்கள விட்டுட்டு ரகசியம் பேச மாட்டேன் திரு… சீக்கிரம் எடுத்துட்டு வாங்க” – நகைப்போடு கூறினான் அனேகன்.

ஆர்வத்தை அடக்கும் பொறுமையற்ற திரவியம் விரைந்தோடி தண்ணீர் எடுத்து வந்து அனேகனிடம் கொடுக்க, அதை வாங்கிப் பருகிய அனேகன் பேசத் தொடங்கினான்.

“ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் திரு இஸ் ரைட்… என் அப்பா –க்கு நடந்தது ஆக்சிடண்ட் இல்ல… இட்ஸ் அ ப்ரீ ப்ளண்டு மர்டர்… எந்த ஆதாரமும் இல்லாம நான் தான் அவர கொன்னேன்… யாரும் கண்டுபிடிக்க முடியாதுனு நினைச்சேன்… ம்ம்ம்… ஐ அப்ரிஷியேட் யூ திரு… செகண்ட் வன், விஸ்வநாதனோட அரெஸ்ட்... இந்த விச்சு வேற யாரும் இல்ல… என் டேடியோட பிசினஸ் பார்ட்னர். நான் சொல்லுறது லீகல் பிஸ்னஸ் இல்ல, இல்லீகல் பிசினஸ்… இதுவரை எத்தனை பொண்ணுகள இவங்க ரெண்டு பேரும் நாசம் பண்ணியிருக்காங்கனு எனக்கு தெரியும்… எல்லாத்துக்கும் விட்னஸ் கலெக்ட் பண்ண இவ்வளவு டிலே ஆகிடுச்சு… கமிஷ்னர் லேகா -வ என்னோட ஒரு இன்ரட்வ்யூ –ல மீட் பண்ணேன். அவங்களோட நேர்மை இந்த டிப்பார்ட்மெண்ட் –ல வேற யாருக்கும் கிடையாது… இந்த விஷயத்துக்கு அவங்கதான் கரெக்ட் –னு பட்டுச்சு… சோ அவங்கள காண்டாக்ட் பண்ணி அவங்க க்ரூ வச்சி வன் இயர் -ஆ போட்ட ஸ்கெட்ச் தான் எல்லாம்…” – அனேகன்.

“வன் இயர் –ஆ வா?” – ஆஷ்ரிதா.

“யஸ்… நீங்க நினைக்கற மாதிரி உங்க அப்பா சாதாரண க்ரிமினல் இல்ல” – அனேகன்.

“அவர் ஒன்னும் எங்க அப்பா இல்ல” – அம்ரிதா.

“ஹாஹா... இட்ஸ் ஓகே… அந்த விச்சு சாதாரண க்ரிமினல் இல்ல… அத அவன் கூட வந்திருந்த தடியனுங்க கையில் வச்சிருந்த ரைபிள் –லே உங்களுக்கு சொல்லியிருக்கும்… அவன அவ்வளவு ஈசியா அரெஸ்ட் பண்ணவும் முடியாது… அதுலயும் அவன் லண்டன் –ல செட்டில் ஆகிட்டா இங்க அரெஸ்ட் பண்ணி வைக்கிறது இட்ஸ் ரியலி நாட் பாசிபிள்… அதனால அவனோட ஒவ்வொரு பிஸ்னஸ் மூவ் –வும் நோட் பண்ண தனி டீம் ரெடி பண்ணோம்… அவனோட ஒவ்வொரு ப்ராஜெக்ட் –லயும் எங்க ஆளு ஒருத்தன் இருப்பான்… அவனோட எல்லா பிசினஸ் டீலிங்க்ஸ் –ம் ட்ரேஸ் பண்ணி, அவனோட கம்பெனி ப்ரொசீஜர் –ல மிஸ்மேட்ச் ஆன டாக்யுமெண்ட்ஸ் செட் பண்ணி, எந்த ஒரு டேரக்ட் டீலிங்க் –ம் அவன பண்ண விடாம தடுத்தோம்… அதனால அவனோட எல்லா பாண்டும் லண்டன் சிட்டிசன் ஜேம்ஸ் அப்படீங்கறவரோட ஹெட் –ல தான் இருக்கும். பட் மாஸ்டர் கீ இந்த விச்சு தான்” – அனேகன்.

“அப்படீன்னா ஜேம்ஸ் உடல் மாதிரி, விஸ்வநாதன் உயிர் மாதிரி… கரெக்ட் –ஆ?” – திரவியம்.

“யஸ் ப்ரைனி... அதனால சட்டபடி அவன இங்க அரெஸ்ட் பண்ணுறத எந்த கொம்பனாலயும் தடுக்க முடியாது” – அனேகன்.

தற்பொழுது அனேகன் மேல் பெரிய மரியாதையே வந்தது திரவியத்திற்கு. “என்ன மன்னிச்சிருங்க சார்” என்றான் குற்ற உணர்ச்சியோடு.

“ஹே… கூல்… நோ ப்ராப்ளம்” – அனேகன்.

“ஆனா...” தயங்கினான் திரவியம்.

“என் அப்பாவ எதுக்கு கொலை செஞ்சேன்… அதான உங்க சந்தேகம்?” – அனேகன்.

“எல்லாம் என்னோட சகி –காக… ஐ மீன் அம்ரிதாக்காக” அனேகன் காதல்காரனாய் மாறினான் இப்போது.

இதை கேட்ட ஆஷ்ரிதாவும் அம்ரிதாவும் ஒரே நேரத்தில் அதிர்ச்சியாய் அனேகனை ஏறிட்டு பார்க்க, அனேகனோ

“நீ ஏன் அம்ரிதா எங்க ஆஃபீஸ் –ல வேலைக்கு சேர்ந்த?” – அனேகன்.

இதுவரை நடந்த விஷயங்களில் இருந்து, தங்கள் வாழ்வில் நடந்த அத்தனை விஷயங்களும் அனேகனுக்கு தெரிந்திருக்கிறது என்பது அம்ரிதாவுக்கு தெளிவாய் புரிந்தது. தான் மோகனின் கம்பெனியில் வேலை செய்வதின் முக்கியமான காரணம் என்ன என்பதையும் அவன் அறிந்திருக்கிறான் என்பதை உணர்ந்த அம்ரிதா, கண்களில் நீர் சொறிய மறுப்பாக தலையாட்டினாள்.

“சொல்லு அம்ரிதா… இன்னும் எத்தனை நாளைக்கு உண்மைய மறைக்கப்போற?” – அனேகன்.

அனேகன் அம்ரிதாவிடம் கேட்ட கேள்விகள் ஆஷ்ரிதாவை யோசனையில் ஆழ்த்தியது. ‘அம்ரிதா நம்மிடம் மறைக்க என்ன விஷ்யம் இருக்கிறது?’ என்று சிந்தித்துக் கொண்டிருந்தவளின் அருகில் சென்ற அனேகன்,

“நீ சொல்லு ஆஷ்ரிதா… உங்களுக்கு இவ்வளவு சொத்து இருந்தும் அம்ரிதா ஏன் மோகன் கிட்ட அத்தனை ஏச்சும் பேச்சும் வாங்கி அங்க வேலை பார்த்தா?” - அனேகன்.

“அது… அது… விஸ்வநாதனுக்கு குடிக்க கத்துக்கொடுத்து, பணம் மேல ஆசை காட்டி, என் அம்மாவுக்கு துரோகம் செய்யவச்சது மோகன் தான்… என் அம்மா எஸ்டேட் வாங்கின விஷயத்துல அம்மாவுக்கு எதிரா பொய் கேஸ் போட்டு அம்மாவையும் எங்களையும் நடு ரோட்டுல நிறுத்த நினைச்சாங்க மோகனும் விஸ்வநாதனும்… அத முறியடிச்சு என் அம்மா ஜெயிச்சிட்டாங்க… அந்த கோபத்துல எங்க எல்லாரையும் கொலை செய்யுறதுக்காக எங்க கார் –ல மெக்கானிக் வச்சி ஏதோ மக்கர் பண்ணிட்டாங்க… அதனால நடந்ததுதான் அந்த ஆக்சிடெண்ட்… அன்னைக்கு நானும் அம்முவும் கார் –ல இல்லாததால தப்பிச்சிட்டோம்… அதுக்கப்பறம் பொன்னம்மா தான் எங்கள பார்த்துகிட்டாங்க… அம்மாவோட கேஸ் –அ க்ளோஸ் பண்ணது எங்க காலேஜ் –ல படிச்ச ஒரு பயனோட அப்பா… எல்லாம் மோகனும் விஸ்வநாதனும் போட்ட ப்ளான் –னு அவன் மூலமா தான் எங்களுக்கு தெரிஞ்சது… அவங்க ப்ரெஷராலதான் அந்த கேஸ் –அ க்ளோஸ் பண்ணிட்டாங்க… சட்டத்தின் வழியா எதுவும் செய்ய முடியாம போனதால அவன பழி வாங்க அம்மு அங்க ஜாயிண்ட் பண்ணா” – ஆஷ்ரிதா.

“கரெக்ட் ஆஷ்ரிதா… நீ சொன்ன எல்லாமே கரெக்ட்… ஆனா நீயும் யசோதாவோட பொண்ணு தான். உனக்கும் இந்த விஷயத்துல கோபம் இருக்கும் தான். ஆனால் உன்னவிட அதிகமா அம்ரிதா இவ்வளவு ஆவேசப்படுறான்னா அதுக்கு வேற காரணமும் இருக்கும்னு நீ யோசிக்கலையா?” என்று அனேகன் கேட்கவும்,

“அனேகன் நோ… வேணாம்” துடித்து கதறினாள் அம்ரிதா.

(களவாடுவான்)


 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 19

அம்ரிதாவையும் அனேகனையும் மாறி மாறி கேள்வியாகப் பார்த்தாள் ஆஷ்ரிதா.

“ஷீ ஹேவ் டு நோ இட் அம்ரிதா… எத்தனை நாளைக்கு உன்னால இத மறைக்க முடியும்?” – அனேகன்.

பதில் எதுவும் சொல்லாமல் அப்படியே தரையில் அமர்ந்து கதறி அழுதுக்கொண்டிருந்தாள் அம்ரிதா. அவள் அருகே சென்ற ஆஷ்ரிதா அவளது தோள்களில் கைவைத்து “அம்மு… என்ன டா?” என்று அமர்ந்த அடுத்த கணம் அவளை கட்டி அணைத்து ஓவென கதறத் தொடங்கினாள் அம்ரிதா.

ஆஷ்ரிதாவுக்கு மட்டுமல்ல, திரவியத்திற்குமே எதுவும் விளங்கவில்லை.

“அனேகன் என்ன ஆச்சு?” என்றான் திரவியம்.

“அத அம்ரிதாவே சொல்லுவா திரு” – அனேகன்.

“நோ அனேகன்… நோ… ஐ காண்ட்” – கண்ணீரில் தத்தளித்தாள் அம்ரிதா.

“பரவாயில்ல அம்மு சொல்லு… என்ன ஆச்சு?” அம்ரிதாவின் கன்னத்தை பற்றியபடி கேட்டாள் ஆஷ்ரிதா.

“இல்ல… முடியாது… என்னால சொல்ல முடியாது… நான் எப்படி டி சொல்லுவேன் உன்கிட்ட” என்று தேம்பித் தேம்பி அழுதாள் அம்ரிதா.

“நீங்களே சொல்லுங்க அனேகன்” பஞ்சால் செய்த வார்த்தைக் கொண்டு கேட்டாள் ஆஷ்ரிதா.

அமைதி காத்து அம்ரிதாவை பார்த்தான் அவன். அவளோ கண்ணீர் கடலில் தான் மிதந்துக்கொண்டிருந்தாள். திரவியத்திற்கு பொறுமை காக்க முடியவில்லை.

“அம்மு அழுது இதுவரை நான் பார்த்ததில்ல அனேகன்… இன்னைக்கு அவ இவ்வளவு கதறுறானா… நீங்களே சொல்லிடுங்களேன்” என கேட்டான் திரவியம்.

“சரி… நானே சொல்லுறேன்… மோகன் எத்தனையோ இல்லீகல் பிஸ்னஸ் பண்ணுறான்… அதுல ஒன்னு பொண்ணுங்க… பொண்ணுங்கள கட்த்தி விக்கிறது அவனுக்கு கடையில கத்தரிக்காய் விக்கற மாதிரி… இத்தனை வருஷம் போலீஸ் கண்ணுல மண்ண தூவியும், மாட்டிக்கற சின்ன சின்ன கேஸ்லயும் தனக்கு பதிலா வேற ஆள ஜெயிலுக்கு அனுப்பியும் தப்பிச்சிட்டு இருந்தான். விஸ்வநாதன் பணத்துக்கு ஆசை பட்டு மோகனோட கூட்டு சேர்ந்த ஆரம்ப காலத்துலயே மோகன் தப்பான தொழில் செய்யுறது யசோதா அம்மாவுக்கு தெரிஞ்சிருக்கு. அவங்க கெஞ்சியும் பார்த்திருக்காங்க, கண்டிச்சும் பார்த்திருக்காங்க. விஸ்வநாதன் கேட்கல. ஒரு அக்ரிமெண்ட் –காக யசோதாவையே மோகன் கிட்ட பணயமா வைச்சான் விஸ்வநாதன். அதுக்கு அப்புறமா லண்டன் –ல ஒரு பொண்ண செட் பண்ணிட்டு அங்க ஓடிட்டான். விஸ்வநாதன், யசோதா அம்மாவ வச்சி பெட் கட்டி அதுல தோத்துப்போய், தப்பிக்கிறதுக்காக வெளிநாட்டுக்கு ஓடிட்டதா பொய் சொல்லி மோகன் யசோதா அம்மாவுக்கு எல்லா விதத்துலயும் டார்ச்சர் கொடுத்திருக்கான். அந்த வயசுல அனுபவிக்க கூடாத வேதனை எல்லாம் யசோதா அம்மா அனுபவிச்சாங்க. இருந்தும் தன் பொண்ணுங்க முன்ன எதையும் காட்டிக்காம சிரிச்சிட்டு வாழ்ந்தாங்க. ஆனா இந்த மோகன் யசோதா அம்மாவோட நிறுத்தல” என கூறி சற்று தயங்கினான் அனேகன்.

யசோதா அனுபவித்த கொடுமைகளை கேட்டதில் திரவியத்திற்கே கண்கள் கலங்கிவிட்டது. ஆஷ்ரிதாவை கேட்கவா வேண்டும்? தன் நெஞ்சில் கை வைத்தபடி உடைந்து போய் அமர்ந்திருந்தவள்

“சொல்லுங்க… என்ன நடந்தது?” என்று கேட்டாள்.

“நான் கேட்குறேன் –னு தப்பா எடுத்துக்காத ஆஷ்ரிதா… ஒரு டாக்டரா உன்கிட்ட கேட்குறேன்… உன்னோட ப்யூபர்டிக்கு அப்பறம் உனக்கு மென்சுரேஷன் சைக்கிள் கம்ப்ளீட் –ஆ இல்ல… சரிதானே?” – அனேகன்.

“ஆ… ஆமா” – கலங்கியபடி கூறினாள் ஆஷ்ரிதா.

“அதுக்கு காரணம் உன்னோட ஹெல்த் இஸ்யூஸ் இல்ல... மோகன்… மோகன் தான் காரணம்... உனக்கு ட்ரக்ஸ் கொடுக்கப்பட்டு உனக்கே தெரியாம தான் அது நடந்தது… அன்னைக்கு யசோதா அம்மா அம்ரிதாவுக்கு உடம்பு முடியலை –னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய்ருக்காங்க. பொன்னம்மா நேரத்தோட வேலைய முடிச்சிட்டு தன்னோட வீட்டுக்கு போய்ட்டாங்க. நீ நல்லா தூங்கிட்டு இருந்த. உன்ன வீட்டுக்குள்ள வச்சி பூட்டிட்டு அம்ரிதாவ தூக்கிட்டு ஹாஸ்பிடல் போனதுதான் யசோதா அம்மா பண்ண பெரிய தப்பு. வழக்கம் போல யசோதாவ டார்ச்சர் பண்ண மோகன் உங்க வீட்டுக்கு வந்தப்ப கதவு பூட்டியிருந்தத பார்த்து கோபமாகி ஜன்னல் கதவை குத்தி உடச்சிட்டு கிளம்பப்போன நேரம் உடஞ்ச ஜன்னல் கதவு வழியா நீ தெரிஞ்சிருக்க” என்று அனேகன் கூறவும் தன் கையை காட்டி அவன் பேச்சை நிறுத்திவிட்டாள் ஆஷ்ரிதா.

அவள் கண்கள் தீயென சிவந்திருந்தது. உள்ளம் கனலில் விழுந்த புழுவென துடித்துக்கொண்டிருந்தது.

“மோகனோட உண்மையான முகம் நான் சொல்லிதான் என் அம்மாவுக்கு தெரியும். அதனாலதான் அம்ரிதா எங்க வீட்டுக்கு வந்தப்ப நீ –னு நினைச்சு என் அம்மா அவகிட்ட மன்னிப்பு கேட்டாங்க... ஐ அம் சாரி ஆஷ்ரிதா” – அனேகன்.

“….” மெளனாமாய் இருந்தாள் ஆஷ்ரிதா.

“உனக்கு உண்மை தெரியனும் ஆஷ்ரிதா… உனக்கு நடந்தது நியாயம் இல்ல தான்… ஆனால் இதுதான் நிதர்சனம்… இத ஏத்துக்குட்டு நீ தையரியமா இந்த உலகத்த ஃபேஸ் பண்ணனும்” – அனேகன்.

“எத ஏத்துக்கனும் அனேகன்?” தீர்க்கமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஆஷ்ரிதா… ப்ளீஸ்” – அனேகன்.

“இட்ஸ் ஓகே அனேகன்… சொல்லுங்க… காதால கேட்டாதான் அத தாங்குற சக்தி இந்த இதயத்துக்கு வரும்” – ஆஷ்ரிதா.

“நோ ஆஷ்ரிதா… இட்ஸ் நாட் ஃபேர்” – அனேகன்.

“அனேகன் ப்ளீஸ்… சொல்லுங்க” – ஆஷ்ரிதா.

சிறிது நேரம் மறுத்துப் பார்த்தவன் அவளது அடத்தை தாக்குப்பிடிக்க முடியாதவனாய் கூறினான் “உன்னால கொழந்த பெத்துக்க முடியாது ஆஷ்ரிதா” என்று.

அவள் முகத்தில் இறுக்கம். கண்ணகளில் கண்ணீர். உதட்டில் சிரிப்பு.

“ஐ அம் சாரி ஆஷ்ரிதா” – அனேகன்.

“நீங்க எதுக்காக சாரி சொல்லனும்? என் தலை எழுத்து அப்படி இருந்தது உங்க தப்பு இல்லையே?” - வேதனை நிரம்பிய குரலில் சிரிப்பை அப்பிய உதட்டோடு கூறினாள் ஆஷ்ரிதா.

“உன்ன இந்த நிலைமைக்கு கொண்டுவந்த அந்த மோகன காலி பண்ண உன் தங்கச்சி போராடிட்டு இருந்தா ஆஷ்ரிதா... கம்பெனிக்கே ஓனர் –ஆ இருக்குறவன் மேனேஜர் போஸ்ட் –ல மட்டும் யாரையும் அப்பாய்ன்ட் பண்ணாம, அந்த இடத்துல அவனே இருந்தது வேலைய பார்த்ததுக்கு முக்கிய காரணம் பொண்ணுங்க டீலிங்க் தான்… ஆனா வெளியில பெரிய மனுஷன், தன்னலம் இல்லாதவன்னு பேரு… அவன் கூடவே இருக்கறஅம்ரிதா யசோதாவோட பொண்ணு-னு அந்த மோகனுக்கு தெரியல… ஏன்னா யசோதா இறந்ததுமே மோகனுக்கு ட்ரக் ட்ரேஸ்ன்ஸ்போர்ட் –ல பெரிய ப்ரெஷர். அதுல கான்சென்ரேட் பண்ண ஆரம்பிச்சவன் அடுத்து உங்க சாப்டர் –அ எடுக்கல… சின்ன வயசுல குடி போதையோட பார்த்த முகம் அவனுக்கு நியாபகமும் இல்ல… இதுதான் நமக்கு ப்ளஸ் –ஆ அமைந்த விஷயம். மோகன அன்னைக்கு நான் கொல்லலைனா அடுத்த நாள் அம்ரிதா கொலை பண்ணியிருப்பா… அம் ஐ ரைட் அம்ரிதா?” என அம்ரிதாவை பார்த்தான் அனேகன்.

இது கூடுதல் அதிர்ச்சி ஆஷ்ரிதாவுக்கு. மோகன் இறந்த செய்தியை சகோதரிகள் இருவரும் அலைபேசியில் பார்த்த அன்று அம்ரிதா அவளிடம், தான் ஒரு கோல்மால் செய்திருப்பதாகவும் அதனால் தன் மொபைல் –ஐ சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருப்பதாகவும் கூறியது நினைவுக்கு வந்தது. அதன்மூலம் மோகனை தீர்த்துக்கட்ட தான் ஏதோ செய்திருக்கிறாள் என புரிந்தது அவளுக்கு.

திரவியத்தின் மனமோ அனேகனுக்கு தானும் ஒரு சல்யூட் அடிக்க வேண்டுமென துடித்தது.

அம்ரிதாவின் நிலையோ படுமோசமாய் போனது.

“அச்சு…” என அவளை கட்டிக் கொண்டு அழுது தவித்துக் கொண்டிருந்தாள்.

அவள் சிரசை இதமாய் தடவிக்கொடுத்த ஆஷ்ரிதா “எனக்காக எதுக்கு டி இவ்வளவு ரிஸ்க் எடுத்த?” என்றாள்.

அம்ரிதாவுக்கு எவ்வளவு அழுதும் தீரவில்லை. தன் கடைசி கண்ணிர் வடிந்து தீரும் வரை அழ வேண்டும் என எண்ணினாள் போலும். அவளின் அழுகை சத்தம் மட்டும் தான் வீட்டை நிறைத்திருந்தது.

“அம்மு… நீதான சொல்லியிருக்க வாழ்க்கையில் எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், அடுத்த நிமிஷம் மூச்சு நிக்கப்போகுதுனு தெரிஞ்சாலும் தைரியமா இருக்கனும்னு… எனக்கு சொல்லிக்கொடுத்துட்டு நீயே இப்படி ஏங்கி ஏங்கி அழலாமா? என் தைரியமே நீ தான் அம்மு… நீ அழுத நான் உடஞ்சிருவேன் டி… ப்ளீஸ் அழாத” – ஆஷ்ரிதா.

அவள் பேசியதை கேட்டு தன்னை சாந்தப்படுத்திக்கொண்ட அம்ரிதா தன் கண்களைத் துடைத்து அமைதியானாள். சிறிது நேரம் அவளை சமாதானப்படுத்திய ஆஷ்ரிதா, எழுந்துக் கொண்டு “சரி நான் சமைக்கிறேன்… இருந்து சாப்பிட்டு போங்க ரெண்டு பேரும்” என திரவியத்தையும் அனேகனையும் பார்த்து கூறினாள்.

அதை கேட்ட திரவியத்தின் மனம் வெதும்பிப்போனது.

“என்ன அச்சு? விளையாடுறியா?” – திரவியம்.

“ஏன் பா? நான் சமைக்கிறேன் –னு சொன்னது விளையாட்டா தெரியுதா? நல்லாதான் சமைப்பேன். பயப்படாம சாப்பிடலாம்” என மென்னகை புரிந்தாள்.

“அச்சு… சிரிச்சனு வை அறஞ்சிருவேன்” – திரவியம்.

“நான் சிரிக்கறது அந்த கடவுளுக்கு தான் பிடிக்காதுனு நினைச்சென்… உனக்குமா திரு?” – ஆஷ்ரிதா.

“அச்சு…” வாயடைத்து நின்றான் திரவியம்.

அவன் தோளில் கை வைத்து அழுத்திய அனேகன் ஆஷ்ரிதாவை செல்லுமாறு கண் அசைத்துவிட்டு “கன்ட்ரோல் யுவர் செல்ஃப் திரு” என்றான்.

“பாருங்க அனேகன் எப்படி பேசுறா –னு… பெரிய இவ –னு நினைப்பா அவ மனசுல? இன்னொரு தடவ அவ இப்படி பேசினா நானே அவள கொன்னுருவேன்… அவகிட்ட சொல்லி வைங்க” என சொல்லிவிட்டு தன் முகத்தை மூடி அழுதான் திரவியம்.

“என்ன திரு இது… சின்ன பையன் போல அழுதுகிட்டு?” – அனேகன்.

“முடியல அனேகன்… அவ கூட எப்பவும் சண்டை தான் போட்டுருக்கேன்… கோவத்துல அவள என்னவெல்லாமோ பேசியிருக்கேன்… இப்ப அத எல்லாம் நினைச்சா என் மனசாட்சி என்ன கொல்லுது… என்னால தாங்க முடியல” மேலும் மேலும் அழுதான் திரவியம்.

“நீங்க வேணும்னே எதுவும் செய்யல திரு… வருத்தப்படாதீங்க… ரிலக்ஸ்…” – அனேகன்.

அப்போது அங்கே முதலுதவி பெட்டியை எடுத்து வந்த அம்ரிதா திரவியத்திடம் “திரு… உண்மைகள ஏத்துக்க பழகிக்கனும்… உன்ன கன்ட்ரோல் பண்ணிக்க… நீயே பார்த்தேல? நேத்து இருந்த பொன்னம்மா இன்னைக்கு இல்ல, நீ எதிரி போல பார்த்துட்டு இருந்த அனேகன் இன்னைக்கு உன் நண்பன், எது அச்சுக்கு தெரியவே கூடாதுனு நான் நினைச்சனோ அது அவளுக்கு தெரிஞ்சு, அத அவ தைரியமா ஏத்துக்கவும் செஞ்சிருக்கா… அஃப் கோர்ஸ் வலிக்கும் தான்… ஆனா நாம ஏத்துக்க தான் வேணும்… ஏன்னா இவ்வளவு தான் வாழ்க்கை” என்றாள்.

“கேட்குற எனக்கே இவ்வளவு வலிக்குது… ரெண்டு பொண்ணுங்களா தனியா இருந்து இத்தனை பிரச்சனைகள தனியா எப்படி ஃபேஸ் பண்ணீங்க அம்மு?” – திரவியம்.

“பொண்ணா இருந்தா என்ன திரு? பெண் தான் இந்த உலகத்தோட மிகப்பெரிய சக்தி. அவ நினைச்சா ஒரு உயிர உருவாக்கவும் முடியும் ஊரையே அழிக்கவும் முடியும். என்ன மாதிரி அச்சு மாதிரி பொண்ணுங்களுக்கு எல்லாம் ஈசனும் நாங்க தான், சக்தியும் நாங்க தான். எல்லா பொண்ணுங்களுக்கு உள்ளேயும் இந்த சக்தி இருக்கு. அவங்க அவங்களுக்கான காலம் வரும்போது அவங்க அத உணருவாங்க… பொண்ணுங்க தானே… புழுவ போல நசுக்கி தூக்கி எறிஞ்சா ஒரு மூலையில அப்படியே முடங்கிக்கிடப்பா –னு நினைக்குறானுங்க சில மனுச மிருகங்க… ஆனா புழுவுக்கு அப்பறம் தான் திரு பட்டாம்பூச்சி. எங்களுக்கு எப்பேற்பட்ட பிரச்சனை வந்தாலும் எதிர்த்து துணிச்சலா போராடி வெற்றியையும் பார்த்து வண்ணத்து பூச்சியா நிச்சயமா பறப்போம். துர்கையா, காளியா, பரா சக்தியா துஷ்டன அளிப்போம். ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு பிரச்சனையில பாதிக்கப்படும் போது நினைக்குறது எல்லாம் என்ன தெரியுமா? இனி தன்ன போல ஒரு பெண் இந்த கஷ்டத்துல சிக்க கூடாது. அப்படீன்றது மட்டும் தான் அவளோட எண்ணமா இருக்கும். அதுக்காக எந்த அவதாரம் எடுக்கவும் நாங்க தயங்க மாட்டோம். அந்த சக்தி எல்லாம் ஒன்னு கூடுற நாள் சீக்கிரம் வரும். அன்னைக்கு ஒரு பொண்ண இல்ல… ஒரு பொண்ணோட நிழல தொடுறதுக்கு கூட ஒவ்வொருத்தனும் யோசிப்பான்” என்று கூறிய அம்ரிதாவை கை கூப்பி வணங்கவே தோன்றியது திரவியத்துக்கு.

“போய் முகத்த கழுவிட்டு வா திரு” – அம்ரிதா.

திரவியம் எழுந்து சென்றதும் தன் கையில் இருந்த முதலுதவி பெட்டியில் இருந்து பஞ்சை எடுத்து அனேகனது வாயோரமாய் இருந்த இரத்தை துடைத்து சுத்தம் செய்த அம்ரிதா அவனுக்கு மருந்தும் போட்டுவிட்டாள்.

“டாக்டர் –கே ட்ரீட்மெண்ட் –ஆ ?” என்று கேட்ட அனேகனின் பார்வையில் ஈர்க்கப்பட்டவள் “இந்த டாக்டர் –க்கு நான் போடாம யாரு போடுவாங்க?” என்றாள்.

“இன்னைக்கு நீ போட்டுவிட்ட… இனி தினம் தினம் நான் தான பேபி போட்டுக்கனும்?” – அனேகன்.

சிரிதாக மலர்ந்தவள் “விஸ்வநாதனுக்கு உங்கள எப்படி தெரியும்?” என கேட்டாள்.

“மோகனும் விஸ்வநாதனும் பண்ண எல்லா இல்லீகல் விஷயத்துக்கான ஆதரத்தோட காஃபி –அ விஸ்வநாதனுக்கு மெயில் அனுப்பி அவன நடுங்க விட்டேன். அப்ப நான் தான் மோகனோட பையன் –னு சொல்லியும் இருந்தேன். அவன் மெயில் பார்த்த்தும் நேரா மோகனுக்கு கால் பண்ணான். அந்த கால் வரும்போது மோகன் என் முன்னாடி தான் இருந்தான், அன்னைக்கு தான் மோகன நான் கொன்னேன். நான் தான் கொலை பண்ணியிருப்பேன் –னு விச்சு –வுக்கு தெரியாம இருக்குமா என்ன?” – கண்ணடித்தான் அனேகன்.

“சரி, இந்த கேஸ் –அ டீல் பண்ண லேகா மூலமா எங்க குடும்பத்த பத்தின எல்லா விஷயத்தையும் நீங்க தெரிஞ்சிகிட்டது ஓகே… ஆனால் நான் மோகனுக்கு போட்ட ப்ளான் –அ எப்படி?” என தயங்கிக்கொண்டே கேட்டாள் அம்ரிதா.

அதற்கு,

“உன் உள்ளத்தை நான் அறிவேன் சகி” என்ற அவனது குரல் அம்ரிதாவை ஏதோ செய்தது.

“டயலாக் எல்லாம் நல்லா பேசுறீங்க” என்று ஓரக்கண்ணால் பார்த்தபடி அவனிடம் கூறிவிட்டு ஆஷ்ரிதாவுக்கு சமையல் வேலையில் உதவி செய்ய சமையலறைக்குள் சென்றுவிட்டாள் அம்ரிதா.

“இது டயலாக் இல்ல சகி… நீ சீக்கிரமே புரிஞ்சிப்ப” என்று அவளை வெறித்தபடியே கூறினான் அனேகன்.

சில மாதங்களுக்கு பிறகு…

“அய்யோ அக்கா… நான் முக்கியமான மீட்டிங் –ல இருக்கேன்… வீட்டுக்கு வரும் போது கண்டிப்பா கிருஷ்ணா சார் –அ பார்த்து பெயிண்டிங் –அ வாங்கிட்டு வந்திடுவேன்… ப்ளீஸ் புரிஞ்சிக்கோ” என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள் அம்ரிதா.

அமைதியை உடைத்து மீண்டும் அலறியது அம்ரிதாவின் அலைபேசி.

“அடடடடா… முடியல… இந்தா அனேகா… நீயே சொல்லு அச்சுகிட்ட” என தன் அலைபேசியை எடுத்து எதிரில் அமர்ந்திருந்த அனேகனிடம் நீட்டினாள் அம்ரிதா.

அதை வாங்கியவன் “ஹலோ அச்சு… சொல்லுங்க” என்றான்.

“என்ன ஃபோன் –அ உங்ககிட்ட கொடுத்துட்டாளா? அப்படி என்ன முக்கியமான மீட்டிங்?” – ஆஷ்ரிதா.

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல… நாங்க நாளைக்கு டிஸ்கஸ் பண்ணிக்கறோம்… அம்மு –வ இப்ப அனுப்பி வைக்கறேன் அச்சு… டோன்ட் வொரி” என்று அனேகன் கூற அவனிடம் இருந்து வெடுக்கென அலைபேசியை பிடுங்கினாள் அம்ரிதா.

“நான் என்ன சொல்ல சொன்னேன்? நீ என்ன சொல்லிட்டு இருக்க?” சினந்துக்கொண்டாள் அம்ரிதா.

“ஏதாவது எமெர்ஜென்சியா இருக்க போகுது பேபி… போய்ட்டு வந்திடேன்… நாம இந்த ப்ராஜெக்ட் பத்தி நாளைக்கு பேசலாம்” – அனேகன்.

அவனை முறைத்துவிட்டு அலைபேசியை தன் காதில் வைத்த அம்ரிதா “இன்னும் ஹாஃப் அன் அவர் –ல கிருஷ்ணா சார் முன்னாடி இருப்பேன் டி… போதுமா?” – என்றாள்.

“ஹப்பா… டபுள் ஓகே டி… அவரு இன்னைக்கு ஈவினிங் ட்ரெயின் –ல மதுரைக்கு ரிடன் ஆகுறாராம்… அதான் இவ்வளவு அவசரப்படுத்தறேன்… கோச்சிக்காத டி” கொஞ்சினாள் ஆஷ்ரிதா.

“சரி சரி… சீக்கிரம் போறேன்” என்ற அம்ரிதா அனேகனிடம் விடைப்பெற்று ஆர்டிஸ்ட் கிருஷ்ணாவை காண அவன் தங்கியிருக்கும் ஹோட்டலுக்கு கிளம்பினாள்.

அம்ரிதா அங்கிருந்து கிளம்பியதும் ஆஷ்ரிதாவுக்கு அழைப்பு கொடுத்த அனேகன், “ஹலோ அச்சு… அம்மு கிளம்பிட்டா” என்றான்.

“அவள உங்க கிட்ட இருந்து நகர்த்துறதுக்கு நான் என்ன பாடுபட வேண்டியது இருக்கு” – ஆஷ்ரிதா.

“இப்பதான் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமா சகியோட செயல்பாடுகள் வருது அச்சு… அதோட வெளிப்பாடுதான் எல்லாம்” – அனேகன்.

“கொஞ்சமா இருக்கறதே இப்படியா? இன்னும் உங்களோட பூர்வ ஜென்ம பந்தத்த எல்லாம் உணர்ந்து நீங்க தான் அவளோட சரி பாதினு தெரிஞ்சா எங்கள எல்லாம் கண்ணே தெரியாது போலயே?” – ஆஷ்ரிதா.

“அது நடக்கற மாதிரி எனக்கு தோணல” – அனேகன்.

“ஏன் நடக்காது??” – ஆஷ்ரிதா.

“நாம எதுக்காக அம்முவ இப்ப அவசரமா இங்க இருந்து அனுப்பி வச்சோம்?” – அனேகன்.

“எனக்கு ஹிப்நாடிசம் பண்ணி என் கனவு –ல வந்த அர்ஜுன் என்ன சொன்னான்னு தெரிஞ்சிக்கனும்… அதுக்கு நான் அங்க வரனும்… நான் அங்க வரும்போது அம்மு அங்க இருக்க கூடாது… அதனால” – ஆஷ்ரிதா.

“இன்னும் ஒன்னு… அம்மு உங்க வீட்டுக்கு வர்றதுக்குள்ள நீங்க திரும்பி வீட்டுக்கு போகனும். இப்படி எங்கிட்ட ஃபோன் –ல பேசிகிட்டே இருந்தா எப்பாதான் இங்க வருவீங்க? நீங்க எப்ப இங்க வந்து, நான் எல்லாத்தையும் கண்டுபிடிச்சு, என் சகி கூட டூயட் ஆடுறது” – அனேகன்.

“அவளோட அக்கா என்கிட்டயே எவ்வளவு தைரியாமா இத கேட்குறீங்க?” என சிரித்துக்கொண்டவள் “இதோ கிளம்பிட்டேன் அனேகன்” என்று அழைப்பை துண்டித்தாள்.

(களவாடுவான்)
 

Anantha Lakshmi

Saha Writer
Team
Messages
33
Reaction score
2
Points
6
கனவு – 20

ஆஷ்ரிதா மற்றும் அனேகன் திட்டத்தின் படி அம்ரிதாவை அனுப்பி வைத்துவிட்டு இருவரும் சந்தித்தனர்.

“ரொம்ப நாளைக்கு அப்பறமா அம்மு விஷயத்த மறுபடியும் கையில எடுத்துருக்கோம். இவ்வளவு டிலே ஆனது என்னால தான… சாரி அனேகன்” – ஆஷ்ரிதா.

“நோ அச்சு… உன்னோட மென்டல் ஹெல்த் –ம் எங்களுக்கு முக்கியம். நீ எதும் நினைச்சிக்காத” – அனேகன்.

“பொன்னம்மா இறந்ததுக்கு அப்பறம் வாழ்க்கையில எவ்வளவு சேஞ்சஸ் இல்ல அனேகன்?” – ஆஷ்ரிதா.

“ஆமா… அதுக்கு முன்னால என்ன மரியாதையா சார், டாக்டர் –னு கூப்பிடுவ. இப்ப எல்லாம் பேர சொல்லி கூப்பிடுற… ஹாஹா” சரியான நேரம் பார்த்து பலி தீர்த்துக்கொண்டான் அனேகன்.

“நீங்க அப்போ எல்லாம் முறைச்சிட்டே திரியிவீங்களே! உங்கள பார்த்தாலே பயமா இருக்கும். இப்ப தான் ஃப்ரெண்ட்லியா இருக்கீங்க” – ஆஷ்ரிதா.

“ஓ… அப்ப மரியாதை வேணும்னா முறைச்சிட்டே இருக்கனுமா?” – மீசையை முருக்கினான் அனேகன்.

“இனி நீங்க முறைச்சாலும் மரியாதை எல்லாம் வராது… சிரிப்பு வேணும்னா வரும்” புன்னகை முகமாய் கூறினாள் ஆஷ்ரிதா.

“ஹாஹா… ஜஸ்ட் ஃபார் ஃபன் அச்சு… நாம ஸ்டார்ட் பண்ணலாமா?” – அனேகன்.

“ஓ எஸ்” என கையில் வைத்திருந்த தன் கைப்பையை அங்கிருந்த மேசையின் மீது வைத்துவிட்டு இரண்டு மெழுகுவர்த்தியின் வெளிச்சமே இருக்கக்கூடிய அந்த அறைக்குள் அனேகனுடன் சென்ற ஆஷ்ரிதா அங்கு இருந்த சாய்வான நாற்காலியில் அமர்ந்துக்கொண்டாள்.

“நல்லா சாஞ்சி உட்கார்ந்துக்கோ அச்சு” என்று அனேகன் கூற தன் உடலின் பாரம் மொத்தத்தையும் அந்த நாற்காலியிடம் ஒப்படைத்து சவுகரியமாக அமர்ந்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“ஜஸ்ட் க்ளோஸ் யுவர் ஐஸ்” – அனேகன்.

“கேமராவ ஆன் பண்ணுங்க அனேகன். பின்ன நான் என்ன பேசினேன்னு எப்படி தெரிஞ்சிக்கறது?” – ஆஷ்ரிதா.

“எல்லாம் ஆன் பண்ணியாச்சு அச்சு. நான் சொன்ன வாக்கு தவறமாட்டேன்” – அனேகன்.

“ஓகே ஓகே… ஸ்டார்ட் பண்ணலாம்” என்றவள் கண்களை மூடிக்கொண்டாள்.

“யா… ரிலக்ஸ்… கண்கள மூடி உன் மனச ரொம்ப அமைதியா வை… இப்ப நான் ரெகுலர் இண்டர்வல் –ல வன் –ல இருந்து ட்வெண்டி வரை எண்ணுவேன். என்னோட ஒவ்வொரு கவுண்ட் –க்கும் உன்னோட மனம் ஆழ்கடல போல டீப் –ஆன அமைதிக்கு போகப்போகுது” என்று ஏகாந்த குரலில் அனேகன் பேசத் தொடங்க, ஆஷ்ரிதாவின் மனமோ நீண்ட அமைதியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.

“வன், …, டூ, …, த்ரீ…, - இடைவெளி விட்டு அனேகன் எண்ணத் தொடங்கினான்.

“அமைதியா இருக்கு… உன் மனம் இப்ப ரொம்ப அமைதியா இருக்கு… அத ஃபீல் பண்ணுறியா ஆஷ்ரிதா” – அனேகன்.

“ம்ம்ம்… ஆமா… அமைதியா இருக்கு” – கண்களை மூடியவாறு அமைதியாய் சொல்லிக்கொண்டிருந்தாள் ஆஷ்ரிதா.

“குட்… கொஞ்சம் கொஞ்சமா… கொஞ்சம் கொஞ்சமா உன்னோட லைஃப் –ல பின் நோக்கி பயணம் பண்ணுறோம் நாம இப்ப… சொல்லு, என்ன பார்க்குற இப்ப?” – அனேகன்.

“அம்மு” – ஆஷ்ரிதா.

“குட்… சொல்லு” – அனேகன்.

“அம்மு… அம்மு இருக்க என் கூட” – ஆஷ்ரிதா.

“யா… குட்… எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்?” – அனேகன்.

“கார் –ல… அம்மு என்ன கார் –ல கூட்டிட்டு போறா” – ஆஷ்ரிதா.

“கார் –ல போறீங்களா? வெரி குட்… எங்க போறீங்க?” – அனேகன்.

“ஹோட்டல் போறோம்” – அனேகன்.

“வெரி குட்… அம்மு ஏதோ சொல்லுறாளே உன்கிட்ட… என்ன சொல்லுறா?” – அனேகன்.

“பொன்னம்மா –வ பத்தி யோசிக்காம ஜாலியா இருக்க சொல்லுறா” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… இப்ப இன்னும் கொஞ்சம் நாளுக்கு முன்னாடி போறோம். என்ன பார்க்குற நீ… சரியா சொல்லு பார்க்கலாம்” என்று அனேகன் கேட்க கேட்க சிறு சிறு படிகளாய் அவள் கடந்து வந்த நாளை அலசிய அனேகன் அவளது ரிக்‌ஷா பயணத்திற்கு அழைத்து வந்தான்.

“ஒரு ரிக்‌ஷா –ல ஏறுறேன்” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… ரிக்‌ஷாவ யாரு ஒட்டுறா?” - அனேகன்.

“ஒரு பையன்” – ஆஷ்ரிதா.

“அந்த பையன் என்ன சொல்லுறான் உன்கிட்ட?” – அனேகன்.

“அந்த பையன் சொல்லல” – ஆஷ்ரிதா.

“அப்படியா? அப்ப யாரு சொல்லுறாங்க?” – அனேகன்.

“யாரோ… யாரோ எங்கயோ கூட்டிட்டு போறாங்க” – ஆஷ்ரிதா.

“ரிக்‌ஷா உள்ள தானே இருக்குற. வேற யாரு வந்து கூட்டிட்டு போறாங்க உன்ன? கனவு காணுறியா?” – அனேகன்.

“ம்ம்ம்… ஆமா… கனவு –ல யாரோ கூட்டிட்டு போறாங்க” – ஆஷ்ரிதா.

“ஓ… சரி சரி… அங்க என்ன பார்க்குற ஆஷ்ரிதா?” – அனேகன்.

“அழுக்கான அரண்மணை, பெரிய கதவு, வெளிச்சமா ஒளி பரவியிருக்கு ஒரு இடத்துல” – ஆஷ்ரிதா.

“என்ன ஒளி அது?” – அனேகன்.

“தெரியல… அந்த பையன் தொடறான். அது மறைஞ்சி அங்க ஒரு புக் இருக்கு” – ஆஷ்ரிதா.

“என்ன புக் மா?” – அனேகன்.

“அது நம்ம ஜென்ம சாசனமாம்” – ஆஷ்ரிதா.

“அப்படியா? யாரு சொன்னா அப்படி?” – அனேகன்.

“அர்ஜுன்” – ஆஷ்ரிதா.

“அர்ஜுன் –ஆ” – அனேகன்.

“ஆமா. அர்ஜுன் தான் சொன்னான்” – ஆஷ்ரிதா.

“அப்படியா சரி. வேற என்ன சொல்லுறான்” – அனேகன்.

“ஒத்துமையா இருந்த உயிர் ஒத்தையில் விட்டுப்போட்டு ஓரமா போயிடுச்சு…
ஒத்தையா நின்ன உயிர் ஒத்துமையா இருக்கையில ஒன்னுமில்லாம ஆகிருச்சு…
ஒன்னுக்கொன்னா சுத்துறது ஒன்னுமேல நாலு கண்ணா ஒட்டிக்கிட்டு ஆடிருச்சு…
ஓயாம ஓடுறது ஒசத்தியா நினைக்கும் ஒன்னு ஒசந்த இடம் சேர்ந்துருச்சு…” – ஆஷ்ரிதா.

“என்ன மா இது?” – அனேகன்.

“அர்ஜுன் சொன்னது” – ஆஷ்ரிதா.

“வெரி குட்… வேற என்ன சொன்னான்?” - அனேகன்.

“வேற சொல்லல… முழிச்சிட்டேன். கனவு போய்டுச்சு” – ஆஷ்ரிதா.

“ஓகே மா. வெரி குட். இப்ப ஒரு பத்து வயசுக்கு முன்னாடி போறோம். இப்ப என்ன பண்ணுறீங்க?” என்று சில வருடம் வருடமாக குறைத்து அவள் கருவாய் இருந்த நாட்களுக்கே அழைத்து செல்கிறான் அனேகன்.

“இப்ப என்ன பார்க்குறீங்க ஆஷ்ரிதா?” – அனேகன்.

“ஒன்னும் பாக்கல” – ஆஷ்ரிதா.

“ஏன் மா ஒன்னும் பார்க்கல?” – அனேகன்.

“இருட்டா இருக்கு” – ஆஷ்ரிதா.

“இருட்டா இருக்கா? ஏன் இருட்டா இருக்கு? எங்க இருக்கீங்க?” – அனேகன்.

“அம்மா வயித்துக்குள்ள” – ஆஷ்ரிதா.

“ஓ கருவறையில இருக்கீங்களா? வெரி குட். பயமா இருக்கா ஆஷ்ரிதா?” – அனேகன்.

“இல்ல… அம்மு இருக்கா” – அனேகன்.

“வெரி குட்… இப்ப அப்படியே இன்னும் முன்னாடி போறோம். உங்களோட முந்தைய பிறப்புக்கு போறோம். எல்லாம் நியாபகம் வருது பாரு… வருது பாரு… அப்படியே சொல்லிட்டு வாங்க, என்ன பார்க்குறீங்க? அப்படியே சொல்லிட்டே வாங்க பார்ப்போம்” – அனேகன்.

“இரத்தம்” – கண்களில் கண்ணீர் வடிந்தது ஆஷ்ரிதாவுக்கு.

“இரத்தமா? எங்க வருது இரத்தம்?” – அனேகன்.

“கழுத்துல வருது… வலிக்குது” – துடித்துக்கொண்டே கூறினாள் ஆஷ்ரிதா.

“ஒன்னுமில்ல… இட்ஸ் ஓகே இட்ஸ் ஓகே… சரியாகிடும்… ரிலக்ஸ்… ரிலக்ஸ்” – அனேகன்.

“செத்துப்போய்ட்டேன்” – ஆஷ்ரிதா.

“எப்படி மா? என்ன ஆச்சு?” – அனேகன்.

“கார் –க்கு அடியில படுத்திருந்தேன். டயர் கழுத்துல ஏறிடுச்சு” – அழுதுக்கொண்டே கூறினாள் ஆஷ்ரிதா.

“இட்ஸ் ஓகே மா. ஒன்னும் இல்ல… ரிலகஸ்… அடுத்து யாராவது பார்த்தாங்களா உன்ன?” – அனேகன்.

“ம்ம்ம்… அழுறா” – ஆஷ்ரிதா.

“யாரு மா அழுறா?” – அனேகன்.

“சகி” – ஆஷ்ரிதா.

“அப்படியா? சகிக்கு உன்ன ரொம்ப பிடிக்குமா?” – அனேகன்.

“ம்ம்ம்... எனக்கும் அவள ரொம்ப பிடிக்கும்” – ஆஷ்ரிதா.

“வெரி குட். இப்ப இன்னும் ஒரு வருஷம் முன்னாடி போறோம். இப்ப என்ன மா பண்ணுற நீ?” – அனேகன்.

“பிஸ்கட்… பிஸ்கட் சாப்பிடுறேன்” – ஆஷ்ரிதா.

“ஓ பிஸ்கட் –னா பிடிக்குமா உங்களுக்கு?” – அனேகன்.

“ம்ம்ம்” – ஆஷ்ரிதா.

“ஓகே. குட். இப்ப உங்க பேரு என்ன? எப்படி கூப்பிடுறாங்க உங்கள?” – அனேகன்.

“ஜூலி” – ஆஷ்ரிதா.

“ஓ குட்… ஜூலி –னு கூப்பிடுறாங்களா உங்கள? நீங்க என்னவா இருக்கீங்க? சொல்லுங்க பார்ப்போம்” – அனேகன்.

“நாய்” – ஆஷ்ரிதா.

“ஓ நாய் –ஆ இருக்கீங்களா?? எந்த ஊருல இருக்கீங்க” – அனேகன்.

“தெரில… வயல் இருக்கு. சகி வந்து என்ன தூக்கிட்டு போறா” – ஆஷ்ரிதா.

“சகி தான் தூக்கிட்டு போறாலா? நீங்க பயப்படலையா?” – அனேகன்.

“இல்ல. நான் குட்டி நாய். அவ என்ன கொஞ்சிட்டே தூக்கிட்டு போனா. ஜூலி –னு பேரு வச்சா” – ஆஷ்ரிதா.

“வெரி குட். ஜூலிக்கு யாரெல்லாம் பிடிக்கும்” – அனேகன்.

“சகி” – ஆஷ்ரிதா.

“சகி –அ மட்டும் தான் பிடிக்குமா?” – அனேகன்.

“ம்ம்ம” – ஆஷ்ரிதா.

“சரி. சகி கூட யாருக்கு இருக்காங்க இப்ப?” – அனேகன்.

“அர்ஜுன் விளையாடிட்டு இருக்கான்” – ஆஷ்ரிதா.

“அர்ஜுன் யாரு மா?” – அனேகன்.

“தம்பி” – ஆஷ்ரிதா.

“சகி –யோட தம்பியா?” – அனேகன்.

“ம்ம்ம்” – ஆஷ்ரிதா.

“அவன பிடிக்குமா உனக்கு?” – அனேகன்.

“பிடிக்காது” – ஆஷ்ரிதா.

“ஏன் பிடிக்காது?” – அனேகன்.

“சகி –ய என் கூட இருக்க விட மாட்டான். கூட்டிட்டு போய்டுவான்” – ஆஷ்ரிதா.

“ஓ… அதனால பிடிக்காதா? ஓகே. ரிலக்ஸ்… ரிலக்ஸ்… சகி –க்கு உன்ன பிடிக்குமா அர்ஜுன் –ன பிடிக்குமா?” – அனேகன்.

“ஷ்யாம்” – ஆஷ்ரிதா.

“யாரு அது?” – அனேகன்.

“சகி கல்யாணம் பண்ணிக்கப்போறா” - ஆஷ்ரிதா.

“அப்படியா? உனக்கு புடிச்சிருந்துதா அவர?” – அனேகன்.

“நான் குலைக்கிறேன்” – ஆஷ்ரிதா.

“யார பார்த்து குலைக்கிறீங்க?” – அனேகன்.

“ஷ்யாம் –அ பார்த்து” – ஆஷ்ரிதா.

“ஷ்யாம் –அ பார்த்து ஏன் குலைக்குறீங்க? அவர பிடிக்கலையா உங்களுக்கு?” – அனேகன்.

“புதுசா இருக்காரு” – ஆஷ்ரிதா.

“புதுசா இருக்குறதால குலைச்சீங்களா? ஓகே மா. ரிலக்ஸ்… ரிலக்ஸ்… இப்ப மறுபடியும் இந்த ஜென்மத்துக்கே திரும்பி வர்றோம். ஆஷ்ரிதாவா வர்றோம். ரிலக்ஸ்… மனசு ரொம்ப அமைதியா இருக்கு. ரிலக்ஸ். ரிலக்ஸ்.” – என்று வெற்றிகரமாக தன் இலக்கை அடைந்து திரும்பினான் அனேகன்.

ஆஷ்ரிதாவை மீண்டும் தன்னிலைக்கு திருப்பி சிறிது ஓய்வுக் கொடுத்து, பின் ஹிப்னாட்டிஷம் செய்யும் பொழுது பதிவு செய்யப்பட்ட காட்சிகளை போட்டு காண்பித்தான் அனேகன்.

“ஓ மை காட்… இட்ஸ் ஷாக்கிங் அனேகன். நான் நாயா பொறந்தேனா? அதுக்கு தான் அன்னைக்கு என்ன அவ வளர்த்த நாய் –னு சொன்னீங்களா? நான் கூட என்ன திட்டுறீங்களோனு நினைச்சி கோவப்பட்டுட்டேன். சாரி…” என்றாள் ஆஷ்ரிதா.

“தெரியாம தானே கோவப்பட்ட. நானும் கோவத்துல தான் அன்னைக்கு அத சொன்னேன்” – அனேகன்.

சிரித்துக்கொண்டாள் ஆஷ்ரிதா.

“நீ எதுக்கு எப்ப பார்த்தாலும் என்கிட்ட எரிஞ்சி எரிஞ்சி விழுந்தனு இப்ப தெரியுதா உனக்கு?” என கேட்டுக் கொண்டே காஃபி கலக்கி எடுத்து வந்தான் அனேகன்.

“எதுக்கு??” – ஆஷ்ரிதா.

“போன ஜென்மத்துலயும் என்ன பார்த்தாலே குலைச்சிட்டு தான் இருந்துருக்க” என்றபடி அவளிடம் காஃபி கப்பை அனேகன் நீட்ட, அதை வாங்காமலே

“இப்பவும் குலைக்குறேன் –னு சொல்லுறீங்களா?” - சிரித்துக்கொண்டே முறைத்தும் வைத்தாள் ஆஷ்ரிதா.

“நான் சொல்லலப்பா!” – அனேகன்.

“அதான் சொல்லிட்டீங்களே!” – ஆஷ்ரிதா.

“காஃபியை வாங்கலாமே… கை வலிக்குது” – அனேகன்.

“ஹாஹா…” சிரித்தபடி காஃபி கப்பை வாங்கியவள்,

“சரி, அப்ப அர்ஜுன் அம்ரிதாவோட போன ஜென்மத்து தம்பியா?” என கேட்டாள்.

“யஸ்… உங்களுக்கு புரிய வைக்க தான் என் மச்சான் உன்ன நினைவுகள் வழியா கடத்திட்டு போய்ருக்கான். உன்னால புரிஞ்சிக்க முடியல” – அனேகன்.

“மிஸ்டர். ஷ்யாம். இப்ப கூட அவன் சொன்ன விஷயங்கள என்னால புரிஞ்சிக்க முடியல. உங்க மச்சான் என்ன சொன்னாருனு நீங்களே சொல்லுறீங்களா எனக்கு?” – ஆஷ்ரிதா.

“ஹாஹா… ஷ்யூர்… நல்லா கவனி. முதல்ல அர்ஜுன் சொன்னது, *ஒத்துமையா இருந்த உயிர் ஒத்தையில் விட்டுப்போட்டு ஓரமா போயிடுச்சு* அதாவது, ஒற்றுமையா யசோதா அம்மாவோட அன்பா இருந்த உன் அப்பா, உன் அம்மாவ தனியா விட்டு ஓரமா போய்ட்டாரு. அதாவது உங்கள விட்டு ஒதுங்கி போய்ட்டாரு. இரண்டாவது, * ஒத்தையா நின்ன உயிர் ஒத்துமையா இருக்கையில ஒன்னுமில்லாம ஆகிருச்சு* அப்படீன்னா, உன் அம்மா தனி ஆளா நின்னு உன்னையும் அம்முவையும் வளர்த்து நீங்க மூனு பேரும் ஒன்னா இருந்த சமயம் உங்க அம்மா இறந்துட்டாங்க. புரியுதா?” என அனேகன் கேட்க, கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஆஷ்ரிதா “ம்ம்.. புரியுது” என்கவும் தொடர்ந்தான் அனேகன்.

“தென் *ஒன்னுக்கொன்னா சுத்துறது ஒன்னுமேல நாலு கண்ணா ஒட்டிக்கிட்டு ஆடிருச்சு* இது என்னை மென்ஷன் பண்ணுது” என்றான்.

“உங்களயா? எப்படி?” – ஆஷ்ரிதா.

“ஒன்னுக்கொன்னா சுத்துறது மீன்ஸ் நீயும் அம்முவும். ஒன்னுமேல நாலு கண்ணு அப்படீங்கறதுல ‘ஒன்னு’ –னு சொல்லுறது என்னை தான். என் மேல உன் கண்ணும் அம்முவோட கண்ணும் ஒட்டிகிச்சு –னு சொல்லுறான்” – அனேகன்.

“வாட்??” வேகமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“ஹே… நீ நினைக்கற மாதிரி இல்ல… உனக்கும் அம்முவுக்கும் நான் இன்ட்ரோ ஆகிட்டேன் –னு அர்த்தம்” – அனேகன்.

“அப்படி தெளிவா சொல்லனும். ம்ம்ம்… அடுத்தது என்ன?” – ஆசுவாசமாய் கேட்டாள் ஆஷ்ரிதா.

“அடுத்தது, * ஓயாம ஓடுறது ஒசத்தியா நினைக்கும் ஒன்னு ஒசந்த இடம் சேர்ந்துருச்சு* இது நீயும் திரவியமும்” – அனேகன்.

“நானும் திருவுமா? புரியல அனேகன்” – ஆஷ்ரிதா.

“அம்மு விஷயத்துல யாரு உனக்காக அடிக்கடி அலைஞ்சா?” – அனேகன்.

“திரு தான். ஆனா அவன் எனக்கு ஹெல்ப் பண்ண அலையல. உங்கள தப்பானவர் –னு எனக்கு ப்ரூஃப் பண்ணுறேன் –னு சொல்லி உங்க பின்னால தான் அலைஞ்சான். உங்களுக்கே தெரியுமே” – ஆஷ்ரிதா.

“யாரு பின்னால அலைஞ்சானோ, அம்மு விஷயத்துக்கு தானே அலைஞ்சான்?” – அனேகன்.

“ஆ… ஆமா” – ஆஷ்ரிதா.

“அவன் உசத்தியா நினைக்குறது யாரு….?” என இழுத்தான் அனேகன்.

“யாரு??” பட்டென கேட்டாள் ஆஷ்ரிதா.

“தெரியாத மாதிரி நடிக்காத அச்சு” – அனேகன்.

“நீங்க வேற… சும்மா இருங்க அனேகன். அவன் நினைக்கறதெல்லாம் நடக்கற காரியமா?” – ஆஷ்ரிதா.

“ஏன் அச்சு? அவன் உன்ன கல்யாணம் செஞ்சிக்க ஆசைப்படுறதுல தப்பு என்ன இருக்கு?” – அனேகன்.

“புரிஞ்சு தான் பேசுறீங்களா அனேகன் நீங்க? என்ன கல்யாணம் பண்ணா என்ன யூஸ் அவனுக்கு? அவனோட லைஃப் –அ நான் கெடுக்க விரும்பல” தடாலடியாய் கூறினாள் ஆஷ்ரிதா.

“அவன் தன்னோட பெனிஃபிட் பார்க்கிறவனா இருந்தா எல்லா உண்மையும் தெரிஞ்ச அப்பறம் உனக்கு ப்ரப்போஸ் பண்ணியிருக்க மாட்டான் அச்சு” – அனேகன்.

“யஸ்… அவன் பெனிஃபிட் பார்க்கல. என் மேல உள்ள சிம்பதியில தான் கல்யாணம் பண்ணிக்கறேன் –னு சொல்லுறான்” – ஆஷ்ரிதா.

“அப்படி இல்ல அச்சு. அவன் உன்னோட ஃப்ரெண்டு தானே. அவன பத்தி நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?” – அனேகன்.

“அவன் என் ஃப்ரெண்டு தான் அனேகன். ஃப்ரெண்டா மட்டும் இருந்தா நல்லது… எல்லாருக்கும்… நான் கிளம்புறேன். அம்மு வந்திடுவா” என வேகமாக தன் கைப்பையை எடுத்துக்கொண்டு வாசலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் ஆஷ்ரிதா.

“அச்சு வெயிட்” என வேகமாய் எழுந்தான் அனேகன்.

தன் நடையை நிறுத்திவிட்டு பின்னே திரும்பிப்பார்த்த ஆஷ்ரிதா “தேக்ஸ் ஃபார் தி காஃபி” என்றுவிட்டு வாசலை கடந்துவிட்டாள்.

பின் வீட்டிற்கு உள்ளே மறைந்திருந்த திரவியம் வெளியே வர, அவனை பார்த்து தன் தோள்களை குலுக்கினான் அனேகன்.

“சரி விடுங்க ப்ரோ. எனக்கு தெரியும் என் பேர எடுத்தாலே ஓடிடுவா –னு” என்றவாறு வந்து அமர்ந்தான்.

அவனருகில் சென்றமர்ந்த அனேகன் “ஆனா அவளுக்கு உங்க மேல ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கு திரு” என்றான்.

“காமெடி பண்ணாதீங்க ப்ரோ. நான் என்னைக்கு கல்யாணம் பண்ணிகறேன் –னு சொன்னேனோ அன்னையில இருந்து என்ன பார்க்குறதே இல்ல. நான் இருக்குற இடத்துக்கு வர்றதும் இல்ல. அதனால தான இன்னைக்கு மறைஞ்சிருந்தாவது அவள பார்த்துக்கறேன் –னு உங்ககிட்ட ஹெல்ப் கேட்டு வந்தேன்” சிரித்துக்கொண்டான் திரவியம்.

“அட… சொன்னா நம்புங்க திரு. அவ உங்கள பிடிக்கல –னு சொல்லல. உங்க லைஃப் –அ கெடுக்க விரும்பல, உங்களோட நல்லது, இப்படி தான் பேசுறா” – அனேகன்.

“எப்படி யோசிக்கிறாளோ அது தெரியல. ஆனா என்ன கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க மாட்டேங்கறாளே ப்ரோ” சுணங்கினான் திரவியம்.

“கவலபடாதீங்க ப்ரோ. நானும் அம்முவும் உங்க பக்கம் தான். சீக்கிரமே நல்லது நடக்கும்” என்று திரவியத்தை தேற்றினான் அனேகன்.

(களவாடுவான்)
 
Top Bottom