Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கருப்பொருள்

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
சந்திரனும் அழுதவாறே நந்தினியிடம்

'நீ கேட்டியே ஏதாவது அதிசயத்தை பண்ணி காட்டுங்க னு... பாரு ...' என்று தன்னை சுற்றியிருந்த மன நோயாளிகளை காண்பித்து

'இவங்க எல்லாம் தான் அதிசயம்... இப்போ உனக்கு புரிஞ்சிருக்கும்... நான் ஒண்ணும் இவங்கள பாத்துகல... இவங்க தான் என்னை பாத்துக்கறாங்க... நான் இறந்துட்ட பிறகு என் பொண்ணு எனக்காக சுவர்கத்துல கடவுள்னு ஒருத்தரோட காத்துகிட்டு இருப்பானு நான் நம்பற என்னோட அழாகான கனவு உலகத்தை மறுபடி கடவுள் மறுப்பு கொள்கைனால சிதைக்க சொல்றியா?... உன்னோட கனவு சிதைஞ்சு போறதுக்கு காரணமாவங்க கிட்ட உன் ஆவேசமான கேள்வியை கேளு... அதை விட்டுட்டு எங்களை மாதிரி அப்பாவி ஆளுங்க கிட்ட கேக்காத...' என்று சந்திரன் ஆவேசமாக கத்தி கொண்டிருக்கும் போது மன நோயாளி ஒருவர் சந்திரனின் முதுகை தடவி கொடுத்து அவரை ஆசுவாச படுத்திக்க கொண்டே இருந்தார்.

சில மணி துளிகளில் அமைதியான சந்திரன் பிறகு இயல்பு நிலையை அடைந்த சந்திரன்...

'என் பொண்ணு இறந்துட்ட பிறகு மறுபடி கால் போன போக்குல ஒரு பரதேசி மாதிரி ஊர் ஊரா காரணமே இல்லாம அலைஞ்சுக்கிட்டு இருக்கும் போது படுத்து தூங்கறதுக்கு இந்த சிதிலமடைஞ்ச கோயிலுக்குள்ளே போனேன்... ஒரு மன அமைதி கிடைச்சுது... அதுவரைக்கும் கடவுள் நம்பிக்கை இல்லாத எனக்குள்ள "சரி கடவுள் இருக்கார்னு ஒரு கற்பனை வாழ்க்கையை தான் வாழ்ந்து பாப்போமே "னு முடிவு பண்ணினேன்... அப்புறம் கேட்பாரற்ற இந்த கோயிலை சுத்தம் பண்ணி இங்கேயே தங்க ஆரம்பிச்சுட்டேன்... ஒரு தடவ இந்த கோயிலுக்கு மழைக்காக ஒரு குடும்பம் ஒதுங்குச்சு... அந்த குடும்பத்துல ஒரு மன நலம் குன்றிய ஒரு பையன் இருந்தான்... அவனோட அப்பா அம்மா இறந்துட்டதுனால அவனை மன நல காப்பகத்துல விட போறோம்னு சொன்னாங்க... எனக்கு அவனை பாக்கும் போது என் பொண்ணோட ஞாபகம் வந்துச்சு... நானே கூட வெச்சுக்கறேன்னு சொன்னேன்... இதே மாதிரி கேட்பாரற்று இருக்கற மன நலம் பாதிக்க பட்டவங்களை நானே பாத்துக்க ஆரம்பிச்சேன்... முன்னாடியெல்லாம் உணவுக்கு பிரச்சனையே இருந்ததில்லை... நான் போய் யார் வீட்லயாவது கேட்டா உடனே கொடுத்துடுவாங்க... ஒரு கம்பெனி இங்க வந்து கழிவுநீரை வெளியிடறதுனால மண் வளம் கெட்டு போய் விவசாயம் பாதிக்க பட்டிருச்சு... மக்களும் இலவசமா உணவை குடுக்க மறுத்துட்டாங்க... நாங்க நிறைய நேரம் பட்னியா இருக்க ஆரம்பிச்சோம்... அப்புறம் தான் கவர்மெண்ட் இந்த கோயிலை எடுத்துகிச்சு... இதை பராமரிகாரத்துக்கு ஒரு ஆபிஸை அமைச்சு கொடுத்துச்சு... இப்போ எங்களுக்கு சாப்பாடு பிரச்சனை இல்லை... நான் நிம்மதியா சந்தோஷமா இவங்களோட வாழ்ந்துகிட்டு இருக்கேன்...' என்றார்.

நந்தினி அவரிடம் மன்னிப்பு கேட்டாள்.

'பரவாயில்ல... நான் தப்பா எடுத்துக்கலை... உன் பிரச்சனைக்கான தீர்வு என்கிட்ட கிடையாது... அது உன்கிட்ட தான் இருக்கு... எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாம ரவிக்கு உன் மேலையும் உனக்கு ரவி மேலையும் காதல் உண்டாயிருந்ததுனா இது இந்த இயற்கையோட செயல்... ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களை இந்த இயற்கை இணைச்சிருக்கு... நீ அவரை பாக்கும் போது உனக்கு ஏற்படற கனவுகள் எல்லாமே உண்மை... அந்த கனவை நனவாகமா ஏதோ ஒன்னு தடுத்துகிட்டு இருக்கு... இது தான் உங்க வாழ்க்கைல பிரச்சனைகள் வர்றதுக்கு காரணமா இருக்கு... உன்னோட பிரச்சனைக்கான கருவை கண்டுபிடிச்சு அதை சரி செய்ய முயற்சி பண்ணு... இறைவன் இயற்கை மூலமா தான் நம்ம கிட்ட தொடர்பு வெச்சுப்பான்... அந்த இறைவனுக்கு உன்னோட கற்பனைக்கு தகுந்த மாதிரி உருவத்தையும் பெயரையும் குடுத்து அவனோட உரையாடவும் உறவாடவும் ஆரம்பி.. உனக்குள்ள இருக்கற கேள்விகளுக்கான விடை உனக்குள்ளேயே கிடைக்க ஆரம்பிக்கும்... உன் கனவும் நனவாகும்... உன் கனவு நனவாகிட்ட பிறகு உனக்கு இருக்கற பணத்தாசையும் பொருள்சார் ஆசையும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சு மத்த உயிரினங்களுக்கு சேவை பண்றது மட்டும் தான் உன்னதம்னு தெரிய வரும்... உன் பிரச்சனைக்கான காரணம் கொஞ்சம் கொஞ்சமா புரிய வரும்போது உனக்கு இறைவன் எனும் கலைஞன் எவ்வளவு அழகா இம்மி பிசகாம உனக்கான நிகழ்வுகளை வடிவமைச்சிருக்கான்னு புரியும்... அந்த தருணத்துல உன்னோட புரிதலுக்கு ஏத்த மாதிரி பல பிரபஞ்சங்களை இயக்கர அந்த கருப்பொருள் அதாவது அந்த இறைவனை நீ உணருவே... ' - சந்திரன்.

நந்தினியும் அவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

ரவியுடன் வாடகை வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது

"உன்னோட பிரச்சனைக்கான கருவை கண்டுபிடிச்சு அதை சரி செய்ய முயற்சி பண்ணு... " என்று சந்திரன் கூறியது நினைவிற்கு வந்தது. சில நொடிகள் கண்களை மூடி யோசித்தாள்.

"வீட்ல அம்மா அப்பா அப்புறம் கூட பொறந்ததுங்க இதுங்க யாரும் என்கிட்ட அன்பா பாசமா நடந்துக்கமாட்டாங்க... ஸ்கூல்ல என்னோட அறியாமையை பயன்படுத்தி தன்னோட தேவைக்கு என்னை தப்பா தூண்டி விட்டு நம்பிக்கை துரோகம் பண்ற ப்ரண்ட்ஸ் சர்கீல்... ஒழுங்கா படிக்க முயற்சிப்பண்ணும் போது ஊக்கம் குடுக்காம சும்மா குறை சொல்லி மட்டப்படுத்தற வாத்தியாருங்க... இந்த மாதிரி சூழல்ல ஒருத்தன் வாழ்ந்தான்னா அவன் அப்துல் கலாம் மாதிரியா இருப்பான்... பொருக்கியா தான் இருப்பான்..." என்று முன்பொருநாள் ரவி அவளிடம் கூறியதையும் "எனக்கும் சின்னவயசுலேருந்தே அது (பெரிய நிறுவனத்தோட நிர்வாக பொறுப்புல இருக்கணும்னு தான் ஆசை) தான் ஆசை... ஆனா அந்த ஆசையை அடைய நான் எவ்வளவோ முயற்சி பண்ணி தோத்து தான் போயிருக்கேன்... நான் வெறும் டிப்ளோமா தான்... கம்மியான சம்பளம் தான் இப்போ வாங்கறேன்... எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு... உங்களோட வரவு என் வாழ்க்கைல புது திருப்பங்களை குடுக்கும்னு என் மனசு சொல்லுது... உங்களுக்கும் என்னை பிடிச்சிருந்தா, என் மேல நம்பிக்கை இருந்தா நான் ரொம்ப சந்தோஷ படுவேன்" என்று ரவி அவளை பெண் பார்க்கும் போது கூறிய வார்த்தைகளையும் நினைவு கூர்ந்தாள்.

தனக்கு இருந்த அதே கனவு ரவியிடம் இருந்தது தான் நந்தினியிற்கு ரவியை திருமணம் செய்துகொள்வதற்கு நம்பிக்கை பிறக்க முக்கிய காரணம். ஒரு குழந்தை முன்னேறுவதும் முன்னேறாமல் இருப்பது அதன் தாய் தந்தையர் எப்படி அந்த குழந்தையை வளர்க்கிறார்கள் என்பதில் தான் என்று எண்ணினாள். ரவியுனுள் இருந்த கனவு நனவாகாமல் போனதுக்கு காரணம் ரவியின் தாய் தந்தையர் தான் என்று நம்ப தொடங்கினாள். வாடகை வாகனத்தை ரவியின் வீட்டை நோக்கி ஓட்டச் சொன்னாள்.

சில மணி நேரங்களில் வாகனம் ரவியின் வீட்டை அடைந்தது. அந்த வீட்டை பார்க்கும் போதே நந்தினியின் மனம் தன்னை அறியாமல் சினம் கொண்டது. ஓட்டுனரின் உதவியால் நந்தினி ரவியை அந்த வீட்டின் வளாகத்தினுள் அழைத்து சென்றாள். பிறகு ஓட்டுனரிடம் கட்டணத்தை செலுத்திவிட்டு அந்த வீட்டை நோக்கி ரவியை உந்தி உந்தி அவனோடு நடக்க தொடங்கினாள். வீட்டு வாசலில் அருண் சுமதி மற்றுமொரு பெண்ணும் சகஜமாக சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நெருங்கும் போது மூவரும் நந்தினியையும் ரவியையும் சில நொடிகள் பார்த்துவிட்டு அவர்களுக்குள் பேச தொடங்கினர்.

'யார் இவங்க?' என்று அந்த புதிய பெண் சுமதியிடம் கேட்க,

'அப்புறம் சொல்றேன் அண்ணி...' என்றாள் சுமதி. சுமதியின் பேச்சிலிருந்து அந்த புதிய பெண் அருணின் வருங்கால மனைவி என்று புரிந்தது. சுமதி தன்னை பெயரிட்டு மரியாதை இல்லாமல் கூப்பிடுவதும் தன்னைவிட சிறியவளாகிய அருணின் வருங்கால மனைவியை "அண்ணி" என்று மரியாதையுடன் கூப்பிடுவது அவளின் சினத்தை மேலும் அதிகரித்தது. வீட்டுனுள் புகுந்து வாசுகியிடம் சென்று

'ஏன் இப்படி பெத்த பிள்ளையை பாரபட்சமா நடத்தறீங்க?... எப்போ பாத்தாலும் அவரையே கண்ணா பின்னான்னு திட்டறீங்க... ஒரு அப்பா அம்மாவோட ஊக்கமும் ஆதரவும் இல்லைனா எப்படி அந்த பையனால சமுதாயத்துல நல்ல நிலைமையை அடைய முடியும்... ஏன் அவரோட தம்பிக்கும், தங்கச்சிக்கு மட்டும் முக்கியத்துவம் தரீங்க?... இவர் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்ணதுக்கு மூல காரணமே நீங்க தான்... பாருங்க… சமுதாயத்துல நல்ல நிலைமைக்கு வர வேண்டியவரை எப்படி பண்ணி வெச்சிருக்கீங்கனு பாருங்க...' என்றாள். நந்தினி கத்தும் சத்தத்தை கேட்டு தேசிகன், அருண், சுமதி மற்றும் அருணின் வருங்கால மனைவியும் வீட்டுனுள் பதட்டமாக ஓடிவந்தனர்.

உடனே வாசுகி நந்தினியிடம்

'எல்லாத்துக்கும் நீதான் கரணம்... உன்னை இவனுக்கு கல்யாணம் பண்ணி வெச்சேன் பாரு அது தான் தப்பு...' என்று அழுதவாறு கூறிவிட்டு ரவியிடம் பார்வையை திருப்பி விட்டு

'நீ நாசமா போயிடுவடா... நீ நல்லாவே இருக்க மாட்டே...' என்று சபித்தாள்.

வாசுகியின் பேச்சு நந்தினியின் மனநிலையை மேலும் பாதித்தது. தன் கட்டுப்பாட்டையும் மீறி

'நான் கர்பமா இருக்கேன்... இவ்வளவு பேசியும் எங்க நிலைமையை பார்த்து அனுதாபம் வரலைன்னா... எனக்கு புரியலை... என்னை கல்யாணம் பண்ணி வெச்சதுதான் நீங்க பண்ண தப்புனா நான் இப்போவே என்னை மாய்ச்சுக்கறேன்... உங்க பையனை கடைசி வரைக்கும் நீங்களே பாத்துக்கோங்க... ' என்று சமயலைக்குள் வேகமாக சென்று கத்தியை எடுத்து தன் வயிற்றில் குத்திக் கொள்ள முற்படும் போது ரவி அவள் கையை பிடிச்சு நிறுத்தினான்.

'ஏன் நந்தினி?... நீயும் போயிட்டேனா எனக்கு யார் இருக்கா?' என்று கத்திவிட்டு, தன் தாயை பார்த்து முறைத்தான்.

'என்ன முறைக்கற... உன் பொண்டாட்டிய கூட்டிகிட்டு வெளியே போ ?..' என்று கத்தினாள் வாசுகி.

தாயின் பேச்சை கேட்ட ரவி கடுங்கோபத்துடன்

'பெத்த அம்மாவா போயிட்டியேன்னு தான் சும்மா விடறேன்... நீ எனக்கு பண்ண துரோகத்துக்கு உன்னை வெட்டி கண்டந்துண்டமா போட்ருக்கணும்...' என்று சொன்ன மறு நொடியே அருண் யாரும் எதிர் பாராத நேரத்தில் ரவியை கன்னத்தில் அறைந்து எட்டி உதைத்தான்.

ரவி தட்டு தடுமாறி கீழே விழ, மேற்கொண்டு ரவியை அருண் தாக்காமல் இருக்க தேசிகன், சுமதி மற்றும் அவனின் வருங்கால மனைவியும் தடுத்தனர். கிழே விழுந்த ரவியை பார்த்து அருண்

'அம்மாவையே வெட்டிடுவியா...' என்று அதட்டிவிட்டு தன்னை தடுத்துக்கொண்டிருப்பவர்களிடம்

'என்ன விடுங்க... இந்த நாயை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போனாலும் பரவாயில்ல...' என்று திமிறி கொண்டிருந்தான்.

ரவியின் கோபம் உச்சத்தை அடைந்தது. அருணையே சில நொடிகள் முறைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான். ரவியின் கண்களில் கோபக் கனலின் வீரியம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இந்த சம்பவத்தை பார்த்த நந்தினி அருணை பார்த்து

'வயசுல உனக்கு மூத்தவர்... உடம்புக்கு முடியாதவர போய் அடிக்கறியே... நீ மனுஷன் தானா?' என்று கேட்டாள்.

உடனே அருண் நந்தினியை பார்த்து

'பெத்த அம்மாவையே வெட்டறேன்னு சொல்றானே... இவன் மனுஷனா?' என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது சட்டென்று எழுந்து அருணின் குரல்வளையை பிடித்தான் ரவி. அருணிற்கு தனது குரல்வளையை இரண்டு பக்கமும் இரும்பு கம்பிகள் நசுக்குவது போல இருந்தது. உடனே அனைவரும் ரவியை அருணிடமிருந்து விலக்க முயன்றனர். அருண் எவ்வளவோ முயற்சி செய்தும் அவனாலும் அந்த பிடியை விலக்க முடியவில்லை. கடைசியில் புலியிடம் சிக்கி தப்பிக்க முடியாமல் தன் போராட்டத்தை கைவிட்டு சரணடைந்த மான் போல தன்னை காத்துக் கொள்ளும் முயற்சியை கைவிட்டான். அருணின் வருங்கால மனைவி ரவியின் காலில் விழுந்து கெஞ்சினாள். நந்தினியும் ரவி

'வேணாம் ரவி... விட்டுடுங்க ...' என்று அவனை சாந்த படுத்த முயன்றாள்.

வாசுகி

'டேய் என் பிள்ளையை விடுறா?' என்று ரவியை அடித்துக் கொண்டிருந்தாள். நொடிகள் நகர நகர அருணின் கண்கள் சிவந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அருண் தன் சுயநினைவை இழந்து தன் மரணத்தை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். சுமதி உடனடியாக வெளியே சென்று ஒரு தடியை எடுத்து வந்து ரவியை தாக்கினாள். இது ரவியின் கோபத்தை சுமதியிடம் திருப்பியது. மறுகையால் சுமதியின் குரல் வளையை பிடித்து நசுக்கினான். தேசிகன் சுமதியையும் அருணையும் ரவியின் இரும்பு பிடியிலிருந்து விடுவிக்க முயற்சி செய்து தோற்றுப்போய் அவரும் ரவியின் காலை பிடித்து கெஞ்சத் தொடங்கினார். வாசுகி ரவியை அடித்து அவளால் முடிந்த அளவு அவர்களை காப்பாற்ற முயன்று தோற்றுப் போனாள். சுமதியும் அருணும் மரணத்தின் விளிம்பை நோக்கி நெருங்குவதை உணர்ந்த வாசுகி

'ஐயோ... ரவி உன் மேல பாசத்தை காட்டினா நீ செத்துடுவ... உன்னை வெறுத்து ஒதுக்குனா தான் நீ உயிரோட இருப்பேன்னு ஒரு சாமியார் சொன்னாருடா... அதான் இவ்வளவு வருஷமா நான் உன்னை வெறுக்கற மாதிரி நடிச்சேன்... இவங்க ரெண்டு பேரை விட உன் மேல தான் எனக்கு பாசம் அதிகம்... என்னை நம்பு டா...' என்று அழுதவாறு தன் தலையில் அடித்துக் கொண்டே அந்த அறையின் ஒரு மூலையில் அமர்ந்தாள். ரவியின் பிடி தளர்ந்தது. அருண் மயக்கமுற்றான். சுமதி தன் தொண்டையை பிடித்தவாறு இருமிக் கொண்டே வாசுகியின் அருகில் சென்று

'அம்மா..' என்று அவள் மடியில் சாய்ந்தாள். அருணுக்கு முதலுதவி கொடுத்தனர். சில மணி துளிகளில் அருண் இயல்பு நிலைக்கு திரும்பினான்.

இயல்பு நிலைக்கு திரும்பிய அருண் தன் தாய் அழுது கொண்டிருப்பதை பார்த்து அவனும் 'அம்மா...' என்று அழுதவாறு வாசுகியை அரவணைத்தான். சுமதியும் அருணின் வருங்கால மனைவியும் வாசுகியை ஆசுவாச படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் வாசுகியால் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. நந்தினி ஒன்றும் புரியாமல் வாசுகியையே பார்த்துவிட்டு தனது பார்வையை தேசிகன் பக்கம் திருப்பினாள். அப்போது தேசிகன் நந்தினியிடம்

'ரவி மேல ஒன்னும் எங்களுக்கு பாசம் இல்லாம இல்ல... எங்களோட முதல் குழந்தைன்றதுனால அவனை ரொம்பவும் அன்பா பாசோத்தோட தான் வளத்தோம்... சின்ன வயசுல அவன் நோய் நொடி இல்லாம நல்லா ஆரோக்கியமா தான் இருந்தான்... ஆனா அவனுக்கு ஏதாவது பெரிய விபத்து நடந்துக்கிட்டே இருந்தது... அடிக்கடி நாங்க ஹாஸ்பிடலுக்கு அவனை கூட்டிகிட்டு போய்ட்டு இருப்போம்... நிறைய ஜோஸ்யக்காரங்ககிட்ட இவனோட ஜாதகத்தை காட்டினோம்... எல்லாரும் இவனுக்கு ஏதோ கண்டம் இருக்கு, பரிகாரமா இந்த பூஜையை பண்ணுங்க இந்த கோயிலுக்கு போங்கன்னு சொல்லுவாங்க... நாங்களும் அவங்க சொல்றபடி எல்லா பரிகாரமும் செஞ்சு பாத்தோம்... எந்த ப்ரயோஜனமும் இல்ல... ஒருவாட்டி அவன் ரோட்ல எங்க கூட நடந்து வரும்போது திடிர்னு ஒரு மரக்கிளை உடைஞ்சு அவன் மேல விழுந்திடுச்சு... அதுல ஒரு கூர்மையான மரக்கட்டை அவன் முதுகுல ஆழமா குத்தி கீழுச்சிடுச்சு... ஹாஸ்பிடல்ல அவன் பிழைக்கிறது ரொம்ப கஷ்டம்னு சொல்லிட்டாங்க... எங்க ரெண்டு பேருக்கும் என்ன பண்றதுனே தெரியல... எங்களுக்கு கடவுளை நம்பறதை தவிர வேற வழி தெரியலை... நாங்க ரெண்டு பேரும் ரவி உயிர் வாழ்ந்தா போதும்னு வேண்டிக்கிட்டு திருவண்ணாமலை கிரிவலத்துக்கு போனோம்... கிரிவலத்துல நடந்துகிட்டு இருக்கும் போது வாசுகிக்கு ரவியோட ஞாபகம் வந்து அழ ஆரம்பிச்சா... அவ அழறத பாத்து நானும் அழ ஆரம்பிச்சேன்... அப்போ ஒரு ஜடாமுடி சாமியார் வந்து எங்களை ஆசுவாச படுத்தினார்... அவர் கிட்ட எங்க பிரச்னையை சொன்னோம்... அஞ்சு நிமிஷம் கண்ணை மூடி உட்கார்ந்துட்டு அப்புறம் அவர் எங்களை பாத்து "சில சமயம் ஏன் இப்படி நடக்குதுன்னு யாருக்குமே புரியாது... அது இந்த விளையாட்டை நிகழ்த்தற ஈசனுக்கு மட்டும் தான் தெரியும்... உங்க பையன் உயிரோட இருக்கணும்னா அவன் மேல நீங்க வெறுப்பை காட்டணும்... அவன் மேல நீங்களோ இல்ல வேற யாரோ அன்பு காட்டினாங்கனா அவன் இறந்திடுவான்... இது தான் உங்க பையன் இந்த பிறவில சுமந்துக்கிட்டு இருக்கற கர்மா... எல்லாரும் இன்புற்றிருக்க தான் இந்த உலகம் படைக்க பட்டிருக்கு... உங்க பையனோட கர்ம வினைகள் போக ஏதாவது வழி பிறக்கும்..."னு சொல்லிட்டு எங்க கிட்ட பதிலுக்கு எதுவும் கேக்காம கிளம்பிட்டாரு... அவர் சொன்ன விஷயங்கள் உண்மைன்னு எனக்கு தோணுச்சு... நாங்களும் முடிஞ்ச அளவுக்கு அவனை வெறுக்க முயற்சி பண்ணோம்... எங்களால முடியல... இவன் நல்லா இருக்கணும்னா நாங்க எங்களோட பாசத்தை திசை திருப்பணும்... அருணையும் சுமதியையும் நாங்க பெத்துக்கிட்டதுக்கு முக்கிய காரணம் ரவி நல்லா இருக்கணும்ன்றதுக்காக தான்... ' என்று தேசிகன் கூறும் போது நந்தினியிற்கு

"உன்மேல உண்மையிலேயே அன்பும் பாசமும் இருக்கறவங்களால தான் உன்னை அந்த கருப்பொருள் கிட்ட கூட்டிகிட்டு போக முடியும்… ஆனா உன் மேல அக்கறை வெக்கிறவங்க சீக்கிரமா உன்னை வெறுத்து ஒதுக்குவாங்க... இல்ல அவங்க இறந்து போயிடுவாங்க... இல்லனா நீ இறந்து போயிடுவ... இது தான் உன்னோட இந்த பிறவிக்கான விதி...." என்று ரமேஷ் சொன்னதாக ரவி கூறியது நினைவிற்கு வந்தது.

தேசிகன் பேசுவதை தொடர்ந்தார்...

'நாங்க ரவி மேல வெறுப்பை காட்றதுனால அவன் மன நிலைமை ரொம்ப பாதிக்கப்பட்டு அவனுக்கு முன் கோபம் அதிகமா வர ஆரம்பிச்சுது... இந்த முன் கோபமே அவன் மேல மத்தவங்க காட்டற அன்பை தடுத்திடும்... சின்ன வயசுலேருந்து அவனை சுத்தி பிரச்சனைகள் இருந்துகிட்டு தான் இருக்கும்... அவனுக்கு நிலையான மன நிலைமை இல்லாததுனால அவனால சரியா படிக்க முடியலை... டிப்ளமா படிப்பை எப்படியோ படிச்சு முடிச்சு நிறைய கம்பெனிக்கு வேலைக்கு போயிட்டு சண்டை போட்டுட்டு வந்துடுவான்... அவனோட முன்கோப குணமும் வன்மமான நடத்தையும் அவனை இந்த உலகத்தில பிழைக்க தகுதி இல்லாத ஆளா மாத்திடுச்சு... இவனை இந்த நிலமைல என்னால பாக்க முடியலை அதனால தான் இவனை கண்காணாத இடத்துக்கு அனுப்பிடலாம்... கடைசி வரைக்கும் அவனை பாக்காம அவன் எங்கேயாவது சந்தோஷமா இருக்கான்ற நினைப்புல வாழ்ந்துடலாம்னு வாசுகி கிட்ட நான் சொன்னேன்... அதுக்கு அவ "வேணாம்... அவன் மேல பாசத்தை தான் காட்ட முடியலை குறைஞ்ச பட்சம் அவன் நம்ம கண்ணு முன்னாடியாவது இருக்கட்டுமே"னு அவ சொன்னா... ஒருநாள் வீட்ல பெரிய ரகளை அவன் சண்டை போட்டுக்கிட்டு வீட்டை விட்டு வெளியே போனான்... அன்னிக்கு நைட் திரும்பி வந்து தனக்கு ஒரு கம்பெனில வேல கிடைச்சிருக்குனு சொன்னான்... வழக்கம் போல இந்த கம்பனிலேயும் அவன் சண்டை போட்டுக்கிட்டு வந்துடுவான்னு எதிர் பாத்தோம்... ஆனா வரலை... இந்த பத்து வருஷமா அவனோட முன்கோபமும் வன்மமான நடத்தையும் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சிக்கிட்டு வர்றதை கவனிச்சோம்... கடைசி மூணு வருஷமா ரொம்ப சாந்தமா அமைதியா ஆயிட்டான்... ஒருவேளை அவனோட கர்ம வினை கழிஞ்சிடுச்சோன்னு நினைக்க ஆரம்பிச்சோம்... வாசுகி தான் ரவிக்கு கல்யாணம் பண்ணி வெக்கணும் ஆசைப்பட்டா... நான் எவ்வளவோ தடுத்தேன்... அவ கேக்கவே இல்ல...' என்று கூறிவிட்டு ஒரு நீண்ட உள் மூச்சை இழுத்துவிட்டு

'நாங்க ஏன் ரவியை அப்படி நடத்தறோம்னு உனக்கு இப்போ புரிஞ்சிருக்கும்...' என்று நந்தினியிடம் கூறினார். பக்கத்தில் நின்று தேசிகன் பேசியதை கேட்டுக் கொண்டிருந்த ரவி தன் தாயிடம் கண் கலங்கியவாறு நெருங்கினான். அவனை பார்த்த வாசுகி சட்டென்று தன் பார்வையை திருப்பி

'வெளிய போடா... என்கிட்ட வராத... தயவு செஞ்சு போயிடு... நீ நல்லா இரு... ' என்று சொல்லிவிட்டு, அருணிடம்

'டேய்... அவனை போக சொல்லுடா... அவன் மேல பாசத்தை காட்டினா அவன் செத்துடுவான்... போக சொல்லு...' என்று கூறிக் கொண்டே அருணின் தோளில் அழுதவாறு சாய்ந்தாள்.

ரவி வாசுகியிடம்

'அம்மா... நான் செத்தா கூட நிம்மதியா தான் சாவேன்... நான் இல்லனா என்ன?... நீயும் அப்பாவும் என் நந்தினியையும் பொறக்க போற என் குழந்தையையும் பாத்துக்க மாட்டிங்களா?' என்று கூறிவிட்டு, அவளை தன் பக்கம் இழுத்தான்.

அருணும்

'அம்மா... ஒன்னும் ஆகாதுமா...' என்று சில நொடிகள் மௌனம் காத்து ‘அண்ணன் கிட்ட போமா...' என்றான். சுமதிக்கு இவ்வளவு நாள் வெறுப்பை மட்டுமே காட்டிய தன் அண்ணன் ரவியிடம் எப்படி நடந்து கொள்வது என்று தெரியாமல் அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒன்றும் ஆகாது என்று உடனடியாக முளைத்த நம்பிக்கையில் ரவியை கட்டி தழுவினாள் வாசுகி. பதிலுக்கு ரவியும் தன்னை அரவணைப்பான் என்று எதிர் பார்த்த வாசுகியிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவன் மரக்கட்டையை போல நின்று கொண்டிருந்தான். வாசுகி தன்னுடைய பாசம் தான் ரவியை ஏதோ செய்து விட்டதோ என்று பயந்தவாறு நந்தினியை பார்த்தாள்.

'அவருக்கு இன்னும் முழுமையா குணம் ஆகலை... அவர் இன்னும் செமி கான்ஷியஸ் ஸ்டேட்ல தான் இருக்காரு... அவருக்கு அதிர்ச்சியோ இல்ல கோபம் தர கூடிய சம்பவங்களோ அவரை சுத்தி நடந்தா தான் அவரால செயல் பட முடியுது.... கவலை படாதீங்க மா... நீங்க சொல்ற அவரோட கர்ம வினை குறைஞ்சுகிட்டே வருது... அவர் சீக்கிரமா குணமாயிடுவாரு னு எனக்கு இப்போ நம்பிக்கை இருக்கு ... ' என்றாள்.

வாசுகி எந்த பதிலும் கூறாமல் அமைதியாகவே இருந்தாள்.

தேசிகன் நந்தினியிடம்

'நைட் ஆயிடுச்சு... இன்னிக்கு நைட் இங்கேயே சாப்டுட்டு தங்கிக்கோமா... நாளைக்கு போ.' என்றார்.

உடனே வாசுகி குறுக்கிட்டு

'இல்ல... அவன் முழுமையா குணமாயிட்ட பிறகு வரட்டும்... அதுவரைக்கும் அவன் இங்க வரவும் வேணாம்... நம்மளை பாக்கவும் வேணாம்.' என்று அழுத்தமாக கூற, அருண் குறுக்கிட்டு

'அம்மா... ஏன் மா இப்படி பேசற?... அதெல்லாம் ஒன்னும் ஆகாதுமா... ' என்றான்.

'அருண்... சீக்கிரமா அவங்களை ஆட்டோ ல ஏத்திவிட்டுட்டு வா...' என்று கூறிவிட்டு தன் அறைக்கு சென்று கதவை சாத்திக் கொண்டாள் வாசுகி.

உடனே அருண் நந்தினியிடம்

'நீங்க தப்பா எடுத்துக்காதீங்க அண்ணி... நான் அம்மாவை கன்வின்ஸ் பண்றேன்... நாம எல்லாரும் ஒன்னாவே இருப்போம்... அண்ணனோட ஹாஸ்பிடல் செலவுக்கு நான் ஹெல்ப் பண்றேன்...' என்று நந்தினியிற்கு ஆறுதல் கூறினான்.

'இல்ல... நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல... இப்போ தான் எனக்கு ஒரு நம்பிக்கை பொறந்திருக்கு... எல்லாமே சீக்கிரம் சரியாடும்... நாங்க கிளம்பறோம்.' - நந்தினி.

அருணும் புன்னகைத்தவாறு

'நைட் சாப்டுட்டு கிளம்புங்க...' என்றான்.

வாசுகியை தவிர இரவு உணவை அனைவரும் ஒன்றாக உண்டனர். அருண் தன் வருங்கால மனைவியை நந்தினியிற்கு அறிமுக படுத்தினான். சுமதியும் அண்ணியென்று நந்தினியுடன் சகஜமாக பேச தொடங்கினாள்.

நந்தினியின் தலையில் எப்படி அடிபட்டது என்று அனைவரும் விசாரித்தனர். நந்தினியும் நடந்ததை கூறி இந்த அடியினால் தனக்கு ஆபத்து ஒன்றும் இல்லை என்று கூறினாள். அனைவரும் சற்றுமுன்பு நடந்த களேபரத்தை மறந்து சந்தோஷமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த சந்தோஷ சூழலில் அவர்களுக்குள் அன்னியோன்யம் அதிகரித்தது.

இந்த நிகழ்வு நந்தினியிற்கு சந்தோஷத்தை கொடுத்தது. அனைத்தும் சரியாகி விடும் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.

அருண் நந்தினியையும் ரவியையும் வாடகை வாகனத்தில் ஏற்றிவிட வெளியே வந்தான்.

நந்தினியும் ரவியும் வாகனத்தில் ஏறியவுடன், நந்தினி அந்த வாகனத்தின் சாளரம் வழியாக அருணிடம்

'உன் பியான்சி வீட்டுக்கு போகலையா?' என்று கேட்டாள் நந்தினி.

'இல்ல... நைட் அவ நம்ம வீட்ல தான் தங்கறா அண்ணி.' - அருண்.

நந்தினி அருணையே பார்த்தவாறு சிறு புன்னகையை உதிர்த்தாள்.

உடனே அருண் லேசாக பதறியவாறு

'ஐயோ அண்ணி நீங்க நினைக்கற மாதிரியெல்லாம் ஒன்னும் கிடையாது... அவ இங்க ஹாஸ்டல்ல தான் ஸ்டெ பண்றா... வீக் எண்ட் மட்டும் இங்க வந்து ஸ்டெ பண்ணுவா... நைட்டு தூங்கும் போது சுமதியோட ரூம்ல தான் படுத்துப்பா... இது அவங்க அப்பா அம்மாவுக்கும் தெரியும்...' என்றான்.

உடனே நந்தினி நகைத்த வாறே

'ஒத்துக்கறேன் நீ நல்ல பையன் தான்னு ஒத்துக்கறேன்...' என்றாள்.

அருணும் வெட்கப்பட்டவாறே வாகன ஓட்டுனரிடம்

'ட்ரைவர் வண்டியை எடுங்க... ஏற்கனவே டைம் ஆயிடுச்சு...' என்று கூறிவிட்டு

'அண்ணி ரீச் ஆயிட்டு கால் பண்ணுங்க...' என்று வழியனுப்பி வைத்தான்.

இப்பொழுது நந்தினியை ஒரு வித சந்தோஷம் ஆட்கொண்டது. அனைத்தும் சரியாகிவிடும் என்ற நம்பிக்கையுடன் பயணித்தாள். வாடகை வாகனத்தில் பயணித்துக் கொண்டிருக்கும் போது

அவளுடைய அலைபேசி ஒலித்தது. மறுமுனையில்

'அக்கா நான் கண்ணம்மா பேசறேன்... யாரோ முன்பின் தெரியாத ஒருத்தன் நம்ம வீட்டுக்கு வந்து கதவை தட்டினான்... நான் வராண்டா கதவை திறக்காம "யாருனு?" கேட்டேன்... நீங்க தான் நந்தினியானு கேட்டான்... இல்லை அவங்க வெளியே போயிருக்காங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாங்க... நீங்க யாருனு மறுபடி கேட்டேன்... அவன் உடனே ஒன்னுமே சொல்லாம புதிரா சிரிச்சுகிட்டே போயிட்டான்... எனக்கு பயமா இருக்கு கா... நைட்டு வீட்டுக்கு வறீங்களா?... மணி நைட் பதினொன்னு ஆயிடுச்சே... அதுக்கு தான் கால் பண்ணினேன்...' என்று பக்கத்துக்கு வீட்டு பெண்ணின் குரல் கேட்டது.

'நீ துணைக்கு உன் அப்பாவை கூப்டுக்கோ... பக்கத்துல வந்துட்டேன்... இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடுவேன்...' - நந்தினி.

'சீக்கிரம் வாங்க கா.' - கண்ணம்மா.

'ம்ம்ம். சரிம்மா...' என்று அந்த தொடர்பை துண்டித்து விட்டு 'யார் தன்னை தேடி வந்திருப்பார்கள்?' என்று யோசித்தவாறே சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த இடமே ஆள் அருவமற்று அவளிற்கு பயத்தை உண்டாக்கியது.

அந்த பயம் நந்தினியிற்கு "நீ அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களோட கால அளவும் குறைஞ்சிருக்கு... ஆனா கஷ்டங்கள் குறையலை... இனிமேல் நீ சந்திக்க போற கஷ்டங்களோட கணம் ரொம்ப அதிகமா இருக்கும்... இதோட சேர்த்து நிறைய ஆபத்துகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்...." என்று ரமேஷ் சொன்னதாக ரவி கூறியது நினைவிற்கு வந்தது. வாடகை வாகனம் அந்த ஆள் அருவமற்ற வழியில் பயணித்து கொண்டிருக்கும் போது மூன்று இரு சக்கர வாகனங்கள் அந்த வாடகை வாகனத்தை வழி மறைத்தது. வாடகை வாகனம் நின்றது. அதில் ஒருவன் அந்த ஓட்டுனரின் சாளர கதவை தட்டினான். அவரும் அந்த ஒளிபுகும் கதவை இறக்கினார். அவனும் அந்த வாகனத்தினுள் பின்னே அமர்ந்திருக்கும் நந்தினியை பார்த்து

'நீங்க தான் நந்தினியா?' என்று கேட்டான். அவன் பேசும் போது சாராய வாடை அடித்தது.

நந்தினியும் பதட்டமாக

'ஆமாம்... நீங்க யாரு?' என்று கேட்டாள். அவளின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவன் தன்னுடன் வந்த ஆட்களிடம் பார்வையை திருப்பி

'சூரி... பார்ட்டி உள்ள தான் இருக்கு...' என்றான். அவனின் பேச்சு நந்தினியிற்கு மேலும் பயத்தை உண்டாக்கியது. அப்போது சூரி என்பவன் தான் அமர்ந்திருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த ஓட்டுனரிடம் வந்தான். அவனும் போதையில் இருப்பது அவனுடைய செய்கையிலிருந்தே தெரிந்தது. அவன் முகத்திலும் தலையிலும் சில வெள்ளை ரோமங்கள் எட்டிப் பார்த்தன. அவன் கண்களில் ஒரு கொடிய மிருகத்தின் வேட்கை தெரிந்தது. மெதுவாக நந்தினியின் மனதை பயமும் பதட்டமும் ஆக்கிரமிக்க தொடங்கியது.
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
'சூரி... பார்ட்டி உள்ள தான் இருக்கு...' என்றான். அவனின் பேச்சு நந்தினியிற்கு மேலும் பயத்தை உண்டாக்கியது. அப்போது சூரி என்பவன் தான் அமர்ந்திருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்த ஓட்டுனரிடம் வந்தான். அவனும் போதையில் இருப்பது அவனுடைய செய்கையிலிருந்தே தெரிந்தது. அவன் முகத்திலும் தலையிலும் சில வெள்ளை ரோமங்கள் எட்டிப் பார்த்தன. அவன் கண்களில் ஒரு கொடிய மிருகத்தின் வேட்கை தெரிந்தது. மெதுவாக நந்தினியின் மனதை பயமும் பதட்டமும் ஆக்கிரமிக்க தொடங்கியது.

'உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா?' என்று ஓட்டுனரை கேட்டான். அவன் குரலில் ஒரு மிரட்டல் தொனி வெளிப்பட்டது.

'ஆயிடுச்சு...'என்று பயந்தவாறு தலையசைத்தார் ஓட்டுநர்.

'உனக்கு எவ்வளவு குழந்தைங்க?' என்று மறுபடி கேட்டான் சூரி.

'ரெண்டு பொம்பள பசங்க?' - ஓட்டுநர்.

'ம்ஹூம்... ரெண்டு பொம்பள பசங்க' என்று தனக்கு தானே சொல்லி மெலிதாக சிரித்த அவன்

'மூணு பேரும் வண்டிய விட்டு கீழ இறங்குங்க...' என்றான்.

நந்தினி ரவியுடன் அந்த வாகனத்தை விட்டு இறங்கினாள். அந்த ஓட்டுனரும் இறங்கினார்.

அந்த ஓட்டுனரிடம் இருந்த தங்க சங்கிலியை பறித்துக் கொண்ட சூரி

அந்த ஓட்டுனரிடம்

'வண்டியை எடுத்துக்கிட்டு கிளம்பு...' என்றான்.

அந்த ஓட்டுநர் மெதுவாக நந்தினியை பார்த்தார்.

பளார் என்று அந்த ஓட்டுனரை அறைந்த அவன்

'அங்க என்ன பார்வை?... கிளம்பு... இங்க நடந்ததை போலீஸ் கிட்ட சொல்லணும்னு உனக்கு தோணும் போது உன்னோட ரெண்டு பொம்பள பசங்களை நினைச்சுக்கோ... புரியுதா... மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தா ஏதாவது கோயிலுக்கு போய் மனச தேத்திக்கோ... உன்னால எனக்கு எந்த பிரச்னையும் வர கூடாது... போ' என்றான்.

அந்த ஓட்டுனரும் அமைதியாய் வண்டியை கிளப்பினார்.

நந்தினி பயத்துடன் நடந்தவைகளை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது அவனின் பார்வை நந்தினியின் மீது விழுந்தது. அவளருகில் சென்றான். நந்தினி மெதுவாக தனது கழுத்தில் இருக்கும் தங்க தாலியை கழட்டி அவனிடம் குடுத்தாள்.

அவன் சிரித்தவாறு அவளிடம் அந்த நகையை வாங்கிக் கொண்டான். அப்போது அவனின் கைபேசி ஒலித்தது. அந்த தொடர்பை ஏற்றுக் கொண்டு பேச தொடங்கிய அவன்

'மச்சி... நீ சொன்ன வண்டி நம்பரை மடக்கி ஆளை பிடிச்சிட்டோம்...'

'....'

இப்பொழுது அவன் நந்தினியை சில நொடிகள் பார்த்துவிட்டு பிறகு ரவியிடம் பார்வையை திருப்பினான்.

'ஆமாம்... பொண்ணு பேரு நந்தினி... அந்த ஆளும் பக்கத்துல தான் நிக்கறான்...'

'....'

'நீ சொன்ன அடையாளம் கரெக்ட்டா இருக்கு... சரி... முடிச்சிட்டு மறுபடி கால் பண்றேன்...' என்று கைபேசியை அமர்த்தினான்.

உடனே சூரி அவன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஆளிடம்

'மச்சி இந்த பொண்ணு தான்....' என்றான்.

இவ்வளவு நேரம் நடந்தவைகளை பார்த்த நந்தினியிற்கு ஒன்றும் புரியாமல் பதட்டத்துடன்

'நீங்கெல்லாம் யாரு?... உங்களுக்கு என்ன வேணும்?' என்று கேட்டாள்.

பார்வையை தன்னுடன் வந்த ஆட்களிடமிருந்து நந்தினியின் பக்கம் திரும்பிய சூரி

'சொல்றேன்... ... நாங்கெல்லாம் எம தர்மராஜாவோட அஸிஸ்டண்ட்ஸ்...' என்று கேலியாக கூறிவிட்டு ரவியை சில நொடிகள் பார்த்துவிட்டு பிறகு நந்தினியை பார்த்து

'நீ இவனை கல்யாணம் பண்ணிருக்கக் கூடாது... அப்படியே பண்ணிருந்தாலும் இவன் கை கால் விளங்காம போயிட்ட பிறகு நீ வேற கல்யாணம் பண்ணிருக்கணும்... அப்போ உன் விதி மாறியிருக்கும்... இப்போ பாரு அனாவசியமா உன்னோட சேத்து உன் வயத்துல இருக்கற குழந்தையும் சாக போகுது... ' என்றான்.

அவன் பேசியதை கேட்டு அதிர்ச்சியில் நந்தினி உறைந்து போனாள். சட்டென்று அவளின் வயிற்றில் குழந்தை அசைந்தது. அதை உணர்ந்த அவள் தன் வயிற்றின் மீது கையை வைத்து அதனை பார்த்தாள். அப்போது அந்த கும்பலில் ஒருவனிடம் பஞ்சடைத்த வெள்ளை துணியால் சுற்றப் பட்டிருந்த உருட்டு கட்டையை வாங்கிய சூரி

'ரெண்டு பேர் போய் அந்த பொண்ண டைட்டா பிடிங்க... ரெண்டே அடில அந்த பொண்ணு செத்துரும்...' என்று கட்டளை இட்டுவிட்டு, நந்தினியை பார்த்தான். இனிமேல் தப்பிக்க வாய்ப்பேயில்லை என்பது நந்தினியிற்கு புரிந்தது. இன்னும் சில நிமிடங்களில் உயிரிழக்க போகிறோம் தன்னுடன் சேர்ந்து தன் வயிற்றில் இருக்கும் கருவும் இறக்க போகிறது என்ற மரண பயம் அவளை முழுமையாக ஆக்கிரமித்தது.

நந்தினி அழுதவாறு சூரியிடம் மண்டியிட்டு

'நீ யாரு?... ஏன் என்னை கொல்லணும்?... ப்ளீஸ் உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்... என்ன விட்டுடு…' என்று கெஞ்சினாள். அவளை பிடிக்க சென்ற இருவரும் சூரியை தயக்கமாக பார்த்தனர்.

'டேய் என்னடா பாக்கறீங்க... அவளை இறுக்கமா பிடிங்கடா?' என்று அதட்டினான்.

ஒருவன் மண்டியிட்டுக் கொண்டிருந்த நந்தினியை எழுப்பி அவளின் வலது கையை இறுக்கமாக பிடித்தான். இன்னொருவன் அவளது இடது கையை பிடித்தான்.

நந்தினி அழுதவாறு

'யாராவது காப்பாத்துங்க...' என்று கத்தினாள். சூரி நந்தினியின் தாடையை இறுக்கமாக பிடித்து அவளின் தலையில் ஏற்கனவே அடிப்பட்டிருப்பதை பார்த்தான்.

'ஏன் என்னை கொல்லணும்... நான் கர்ப்பமா இருக்கறத பாத்து கூட உங்களுக்கு பாவமா தோணலியா?... ப்ளீஸ் ப்ளீஸ்...' என்று அழுதவாறு கெஞ்சி கொண்டிருந்தாள்.

உடனே பக்கத்தில் நின்று கொண்டிருந்த மூவரில் ஒருவனை பார்த்து

'பாலு... இந்த பொண்ணு பின்னாடி போய் அவ தலை வலது பக்கம் சாஞ்ச மாதிரி இறுக்கமா பிடி... அப்போ தான் என்னால அடி பட்ட ஸ்பாட்ல கரெக்ட்டா அடிக்க முடியும்... உயிரும் சீக்கிரமா போகும்.' என்றான் சூரி. பாலு என்பவனும்

சூரி கூறியது போல நந்தினியின் தலையை சாய்த்து பிடித்தான். நந்தினி கெஞ்சி பார்த்து பிரயோஜனம் இல்லாததினால் வேறு வழியின்றி அழுதவாறே கண்களை மூடினாள்.

சூரி கையில் இருந்த கட்டையை மேல் நோக்கி தூக்கி அவள் தலையை தாக்க முற்படும் முன்னரே அவனின் நெஞ்சில் இடி போல வேகமாக ஒரு கால் எட்டி உதைத்தது. அது ரவியின் கால். அடிவாங்கிய வேகத்தில் தன் கையில் இருந்த கட்டையை கீழே தவற விட்டு தட்டு தடுமாறி கீழே விழுந்தான் சூரி. உடன் நின்று கொண்டிருந்தவர்களும் நந்தினியை பிடித்து கொண்டிருப்பவர்களும் அவர்கள் பிடியை தளர்த்தி ரவியை தாக்க முற்படும் போது ரவி கீழே விழுந்த கட்டையை எடுத்து அவர்களை தாக்கினான்.

ரவியின் மூர்க்க தனமான தாக்குதலை அவர்களால் தாக்கு பிடிக்கமுடியவில்லை. இரண்டு பேர் அந்த இடத்தை விட்டு ஓடினர். மற்ற நால்வரும் ரவியிடம் அடிவாங்கி கீழே சரிந்தனர். ரவி சூரி என்பவனை அந்த கட்டையால் மூர்க்கத்தனமாக அடித்துக் கொண்டிருந்தான். எங்கே மேற்கொண்டு ரவியை அடிக்க விட்டால் சூரியை கொலை செய்துவிடுவானோ என்ற பயத்தில் நந்தினி ரவியை தடுத்தாள். ரவி அவனை அடிப்பதை நிறுத்தினான். அப்போது ஒரு வாகனம் வேகமாக அவர்கள் முன் வந்து நின்றது. ரவியும் நந்தினியும் ஏற்கனவே பயணித்து வந்த வாடகை வாகனம் தான் அது. அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர் அந்த வாகனத்தின் பின் கதவை திறந்து நந்தினியையும் ரவியையும்

'சீக்கிரம் ரெண்டு பேரும் வண்டில ஏறுங்க... ' என்று சொல்லிவிட்டு அவரும் ஓட்டுநர் இருக்கையில் வேகமாக உட்கார்ந்து வண்டியை ஓட்ட ஆயத்தமானார். ரவியும் நந்தினியும் வண்டியுனுள் ஏறியவுடன் அந்த வாகனம் வேகமாக அந்த இடத்தைவிட்டு பறந்தது.

வாகனத்தினுள் அந்த ஓட்டுநர் வண்டியை ஒட்டிக் கொண்டே நந்தினியுடன் பேச தொடங்கினார்.

'உங்கள அந்த நிலைமைல தனியா விட்டுட்டு போறதுக்கு மனசு வரலை... அதான் கொஞ்ச தூரம் வண்டியை ஒட்டிக்கிட்டு போய் ஒரு ஓரமா நிறுத்திட்டு அங்க நடக்கறதை செல் போஃன்ல வீடியோ ரெகார்ட் பண்ணி போலீஸ் கிட்ட கொடுக்கலாம்னு மறைஞ்சு நின்னு பாத்துகிட்டு இருந்தேன்... எதிர் பாக்கவே இல்ல.... நல்ல வேளை தெய்வாதீனமா உங்க புருஷனுக்கு கை காலெல்லாம் செயல் பட ஆரம்பிச்சு திரும்பி அவங்களை அடிச்சிட்டாரு... யாரு அவங்க ஏன் உங்களை கொல்ல வந்தாங்க?' என்று கேட்டார்.

நந்தினியும் தழுதழுத்த குரலில்

'தெரியலைங்க .... நல்லவேளை நீங்க வந்தீங்க... இல்லனா அவங்களை இவர் அடிச்சு கொன்னிருப்பாரு...' என்றாள்.

'அந்த மாதிரி காட்டுமிராண்டிகளை உயிரோடவே விட கூடாதும்மா... கர்பமா இருக்கற பொண்ண பார்த்தா எவ்வளவு பெரிய கொடூரனா இருந்தாலும் மனசு இலகுவான்... ஆனா இவனுங்கெல்லாம் மனுஷ இனத்திலேயே சேர்த்தி கிடையாதும்மா... இவனுங்கள கொன்னா ஜெயில்ல போட மாட்டாங்க ... அவார்ட் தான் தருவாங்க...' என்று அந்த ஓட்டுநர் நந்தினியிடம் சொல்லிவிட்டு, ரவியிடம் 'சார்... உங்கள பக்கத்துல இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டு நான் கிளம்பறேன்... மன்னிச்சுருங்க என்னால உங்களோட போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வர முடியாது... வீட்ல மனைவியும் குழந்தைகளும் தனியா இருப்பாங்க... நான் சீக்கிரம் போகணும்... பக்கத்துல ஏதாவது போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல இறக்கி விட்டா மத்ததெல்லாம் நீங்களே பாத்துப்பீங்கள்ல?... ' என்று கேட்டார்.

ரவியிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

அவரும்

'சார்... சார்...' என்று மறுபடி அழைத்தார். உடனே நந்தினி

'அவருக்கு சுத்தி பதட்டமான சூழ்நிலை இருந்தா தான் செயல் படவோ பேசவோ முடியும்... நான் அவரோட வீட்டுக்கு கால் பண்ணி யாரையாவது வர சொல்றேன்...' என்று கூறிவிட்டு ரவியின் வீட்டிற்கு தன் கைபேசி மூலமாக தொடர்பலைகளை விடுத்தாள்.

மறு முனையில் தொடர்பை ஏற்றுக் கொண்ட தேசிகனிடம் நடந்ததை கூறினாள்.

'அப்பா... அவர் என்னை போலீஸ் ஸ்டேஷன்ல இறக்கி விட்ட உடனேயே அது எந்த போலீஸ் ஸ்டேஷன்னு உங்களுக்கு கால் பண்ணி சொல்றேன்...' என்றாள் நந்தினி.

நந்தினி கூறிய விஷயங்களை கேட்டு அதிர்ச்சியுற்ற தேசிகன் குடும்பத்தாரிடம் நடந்தவைகளை கூறினார். அப்போது அருண்

'அப்பா நீங்க வீட்ல இருங்க... அவங்க கால் பண்ணி சொன்ன பிறகு நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் என்ன நடந்ததுன்னு விசாரிச்சு அண்ணனையும் அண்ணியையும் கூட்டிகிட்டு வரேன்...' என்றான். அதே நேரத்தில் நந்தினியும் ரவியும் காவல் நிலையம் ஒன்றில் அடைக்கலம் புகுந்தனர்.

உள்ளே காவல் அதிகாரியிடம் புகார் கொடுத்துவிட்டு அருணின் கைபேசியை தொடர்பு கொண்டாள்.

காவல் நிலையத்தினுள் தொடர்பலைகள் சரியாக கிடைக்காததால் நந்தினியால் அருண் பேசுவதையும், அருணால் நந்தினி பேசுவதையும் கேட்க முடியவில்லை.

'ஹலோ... ஹலோ...' என்று கைபேசியில் கத்திக் கொண்டிருந்த நந்தினியிடம் அங்கிருந்த காவல் துறை அலுவலர் ஒருவர்

'உள்ள சிக்னல் கிடைக்காது... வெளியே போய் பேசுங்க...' என்றார்.

நந்தினியும் காவல் நிலையத்தில் வெளியே உள்ள மதில் சுவர் அருகே செல்லும் பொழுது அந்த காவல்நிலையத்தில் ஆய்வாளர் யாருடனோ அவருடைய கை பேசியில் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

'அவங்கள யார் கூட்டிகிட்டு வந்தாங்கன்னு தெரியலை... ஆனா அந்த கர்பமா இருக்கற பொண்ணும் அந்த ஆளும் என் ஸ்டேஷன்ல தான் இருக்காங்க...' - ஆய்வாளர்.

'....'

'கவலை படாதே... என் ஸ்டேஷன்ல சி.சி. டிவி ரிப்பேரா இருக்கு...' - ஆய்வாளர்.

'....'

'அந்த பொண்ணு வீட்டுக்கு கால் பண்ணி யாரையோ வர சொல்றேன் னு சொன்னா... அவங்க வர்றதுக்குள்ள அவளை கொன்னுடு...' - ஆய்வாளர்.

இதை கேட்டவுடன் நந்தினி அதிர்ச்சியுற்றாள். மேற் கொண்டு அந்த ஆய்வாளர் பேசுவதை கேட்டாள்.

'நைட் ஷிப்ட் ன்றதுனால ஆளுங்க கம்மியா தான் இருக்காங்க... அவனுங்களையும் வெளிய அனுப்பிடறேன்... ' - ஆய்வாளர்.

'......'

'கூட இருக்கற அந்த ஆளும் மர கட்டை மாதிரி எந்த அசைவும் இல்லாம தான் இருக்கான்... வரும் போது கூட பசங்கள கூட்டிகிட்டு வராத... தனியா வா... அந்த பொண்ணு வீட்லேருந்து யாரவது வர்றதுக்குள்ள சீக்கிரம் அந்த பொண்ணை கொன்னுட்டு போயிடு... யாரும் ஒன்னும் பண்ணல அந்த பொண்ணே திடிர்னு மயக்கம் போட்டு விழுந்து இறந்திடுச்சுனு நான் சாட்சி சொல்றேன்...' - ஆய்வாளர்.

'....'

'அது வழி பறி கொள்ளை... அந்த சம்பவத்துக்கும் இந்த பொண்ணு இறந்ததுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை னு நான் சொல்றேன்...' - ஆய்வாளர்.

'....'

'ம்ம்ம்... சீக்கிரம் வா...' என்று பேசிவிட்டு ஆய்வாளர் காவல் நிலையத்தினுள் நுழைந்தார். நந்தினி அவர் கண்ணில் படாமல் ஒளிந்து கொண்டாள்.

காவல் துறை ஆய்வாளர் காவல் நிலையத்தினுள் சென்றவுடன் நந்தினி அருணின் அலைபேசியை தொடர்பு கொண்டு நடந்தவைகளை கூறினாள். மறுமுனையில் அருண்

'அண்ணி... நைசா அந்த போலீஸ் ஸ்டேஷனை விட்டு வெளிய நடந்து மெயின் ரோட்டுக்கு வந்துடுங்க... நான் ஒரு பைவ் மினிட்ஸ்ல வந்துடறேன்...' என்றான்.

'ரவி உள்ள தனியா இருக்காரு அருண்...' - நந்தினி.

'அண்ணி அவங்களோட டார்கெட் நீங்க தான்... அண்ணனை பத்தி கவலை படாதீங்க... நீங்க சீக்கிரமா வெளியே வாங்க...' - அருண்.

சில நொடிகள் யோசனையில் மூழ்கினாள் நந்தினி.

ரவியை தனியே விட்டு செல்வது சரியென்று அவளுக்கு தோன்றவில்லை. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதன் படி நடந்தால் எந்த துன்பமும் நேராது என்று நம்பினாள்.

மறுமுனையில் அருண்

'ஹலோ... ஹலோ அண்ணி... என்ன ஆச்சு?' என்று கத்திக் கொண்டிருந்தான்.

'எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல நான் ரவியை விட்டு போறதா இல்ல....' என்று தொடர்பை துண்டித்துவிட்டு மறுபடி அந்த காவல் நிலையத்தினுள் நுழைந்தாள்.

உள்ளெ நுழையும் பொழுது காவல் துறை ஆய்வாளர் ஒரு காவல் அலுவலரிடம் கடுமையாக பேசிக் கொண்டிருந்தார்.

'யோவ்... ஏன் யா இப்படி அறிவில்லாம நடந்துக்கறீங்க?' என்று காவல் துறை ஆய்வாளர் கத்தும் போது, திட்டு வாங்கும் அந்த காவல் துறை அலுவலர் சட்டென்று உள்ளே நுழைந்த நந்தினியை பார்த்துவிட்டு

'சார்... அவங்க வந்துட்டாங்க...' என்றார். உடனே நந்தினியை திரும்பி பார்த்த ஆய்வாளர்

'எங்கம்மா போயிருந்த?' என்று கேட்டார்.

ஆய்வாளரை பார்த்தவுடன் நந்தினியின் மனதை பயம் ஆக்கிரமித்தது. அப்பொழுது சூரி தன்னை கொல்ல வரும்போது ரவியிற்கு சுயநினைவு திரும்பி அவனை தாக்கியதை நினைவு படுத்தி தன்னை தைரிய படுத்திக் கொண்டாள்.

'என்ன நடந்தாலும் பரவாயில்ல' என்று தனுக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

'இங்க சிக்னல் கிடைக்கலன்னு வெளியே போய் வீட்டுக்கு கால் பண்ணி பேசுனேன்...' என்றாள் நந்தினி.

'வெளிய வந்தியா?... நானும் வெளிய தான் இருந்தேன்... உன்னை பாக்கவே இல்லியேமா...' என்று சந்தேகமாக கேட்டார்.

நந்தினி தைரியமாக அந்த ஆய்வாளரை முறைத்தவாறே

'நான் உங்கள பாத்தேன்... நீங்க வெளிய யார் கூடவோ போஃன்ல பேசிகிட்டு இருந்தீங்க...' என்றாள்.

அவள் பேசியதை கேட்டவுடன் அந்த ஆய்வாளர் அவளை முறைப்பாக பார்த்தார்.

'வீட்ல இருக்கிறவங்களுக்கு இந்த இடத்தை சொல்லிட்டேன்... இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க...' என்று அந்த ஆய்வாளரை பதிலுக்கு முறைத்தவாறு கூறினாள் நந்தினி.

அவளையே சில நொடிகள் முறைத்தவாறு பார்த்த ஆய்வாளர் சட்டென்று திரும்பி அந்த காவல் நிலையத்தில் இருந்த இரு காவல்துறை அலுவரிடம்

'ரெண்டு பேரும் போய் இவங்க ரெண்டு பேருக்கு சாப்பிடறதுக்கு வாங்கிட்டு வாங்க...' என்று கூறிவிட்டு, மற்ற அனைவரிடமும் நீங்க எல்லாரும் பக்கத்துக்கு தெருவுக்கு ஒரு ரவுண்ட்ஸ் போயிட்டு வாங்க...' என்று கூறினார்.

அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டே அந்த காவல் நிலையத்தை விட்டு வெளியேறினர். இதையெல்லாம் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தாள் நந்தினி. சில நிமிடங்கள் கழித்து வெளியே இருசக்கர வாகனத்தின் சத்தம் கேட்டது. வெளியே பார்த்த அந்த ஆய்வாளர்

'சீக்கிரம் வா...' என்றார்.

காவல் நிலையத்தினுள் அமர்ந்திருந்த நந்தினி சூரியின் வருகையை எதிர் பார்த்து கொண்டிருந்தாள். காலை நொண்டியவாறு உள்ளே நுழைந்த சூரி நந்தினியை பார்த்தான். நந்தினியும் அவனை பார்த்தாள்.

சூரி அவளிடமிருந்து பார்வையை திருப்பி ரவியை பார்த்தான். ரவியின் பார்வை மெதுவாக நந்தினியிடமிருந்து திரும்பி சூரியை பார்த்தது.

நந்தினி சூரியை பார்த்த பிறகும் தைரியமாக அமர்ந்து கொண்டிருப்பது இருவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

உடனே சூரி அந்த காவல் ஆய்வாளரை பார்த்து

'அவன் எந்த அசைவும் இல்லாம தானே இருக்கான்?' என்று கேட்டான்.

'ஆமாம்... சீக்கிரம் முடிச்சிட்டு போ...' என்றவுடன் சூரி அவளை நெருங்கினான்.

'உனக்கு என்ன பாத்தா பயமே இல்லையா?' என்று கேட்டான்.

ரவி தன்னை காப்பாத்துவான் என்ற நம்பிக்கையில் இல்லை என்று தலை அசைத்தாள்.

சூரி காவல் ஆய்வாளரை

'சார்... அந்த பொண்ணு தலையை பிடிங்க...' என்றான். அந்த ஆய்வாளரும் நந்தினியின் தலையை பிடித்தார்.

அப்போது தான் நந்தினியிற்கு

"எப்போவெல்லாம் சுத்தி நடக்கற விஷயங்கள் உனக்கு பதட்டத்தையோ கோவத்தையோ குடுக்குதோ அப்போ தான் உன்னால செயல் பட முடியும்... அதுவும் வெறும் ஆறு தடவை தான்..." என்று ரமேஷ் கூறியதாக ரவி கூறியதும் "எல்லாருடைய மூளையும் அவங்களோட வாழ்க்கையின் புரிதலுக்கும் அவங்க பின் பற்றுற சித்தாந்தத்துக்கும் ஏத்த மாதிரி ஒரு குறிப்பிட்ட செயல்முறை வடிவத்தை பின்பற்றும்... ஒரு வேளை ரமேஷுன்றவர் சொன்ன கதை இவர் மைண்ட்ல ஆழமா பதிஞ்சிருக்கலாம்... அதன் படி ரவி ஆறு தடவ மட்டும் பதட்டமான சூழ்நிலையை சந்திக்கும் போது செயல் படலாம்... " என்று மருத்துவர் தேவி கூறியதும் நினைவிற்கு வந்தது.

'ஒன்று - முதலில் கன ரக வாகனம் நந்தினியை இடிக்க வரும்போது தன்னை காப்பாற்றியது.

இரண்டு - மன நல மருத்துவர் அட்ரிலின் மருந்தை ஊசி மூலம் உள்ளே செலுத்திய போது செயல் பட்டது ...

மூன்று - ரவி பணிபுரிந்து கொண்டிருந்த இயந்திரத்தை ஒரு பெரிய வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்த பாரந்தூக்கி வாகன ஓட்டுனரிடம் பேசியது...

நான்கு - தன் தலையில் கல்லடி பட்டபொழுது மறுபடியும் தன்னை காப்பாற்றியது.

ஐந்து - ரவியின் வீட்டில் நந்தினி தற்கொலை செய்ய முயற்சி செய்யும் போது நடந்த நிகழ்வில் செயல் பட்டது...

ஆறு - சூரி தன்னை கொல்ல வரும்போது அவனோடும் அவன் கூட்டாளிகளோடும் சண்டையிட்டது.

ஆகிய நிகழ்வுகளை அவளின் மனது நினைவூட்டியது. ரவியால் செயல் படவே முடியாது என்பதை புரிந்து கொண்ட நந்தினியை பயம் ஆக்கிரமித்தது. இப்போது சூரியை பார்த்தாள். சூரி கையிலிருந்த துணியால் சுற்றப் பட்டிருந்த கட்டையை மேல தூக்கி அவள் தலையை தாக்க முற்படும் போது நந்தினி கலங்கியவாறு

'என் வயத்துல இருக்கற குழந்தையை நினைச்சு பாரு... நீ ரெண்டு உயிரை கொல்லப்போற...' என்றாள்.

சூரி அவளை நகைத்தவாறு பார்த்து

'எனக்கு இந்த செண்டிமெண்டெல்லாம் உரைக்காது... இவ்வளவு நேரம் நீ தைரியமா இருக்கறத பாத்து எனக்கே பயமா தான் இருந்துச்சு... இப்போ உன் கண்ல பயத்தை பாத்துட்டேன்...' என்று கட்டையை நந்தினியின் தலையை நோக்கி ஓங்கினான்.

தீடீரென்று உள்ளெ நுழைந்த அருண், சூரி நந்தினியை தாக்குவதற்கு முன் அவன் மீது பாய்ந்தான். இருவரும் தரையில் உருண்டனர். சூரியின் கையில் இருந்த கட்டை அருணின் கையில் சிக்கியது. ஆய்வாளர் நந்தினியின் தலையிலிருந்து பிடியை தளர்த்திவிட்டு அருணை தாக்க ஓடினார். அருண் தன்னை நோக்கி ஓடிவரும் ஆய்வாளரை சரமாரியாக கட்டையால் அடித்தான். ஏற்கனவே அடிபட்ட காரணத்தினால் சூரியால் சட்டென்று சுதாரித்துக் கொண்டு எழ முடியவில்லை. அவன் எழுவதற்குள் அருண் அந்த ஆய்வாளரை அடித்து கீழே தள்ளினான். மெதுவாக எழுந்த சூரியையும் அடித்து கீழே தள்ளிவிட்டு ரவியை தான் தோளில் தூக்கிக் கொண்டு நந்தினியையும் கூட்டிக் கொண்டு தன் வாகனத்தை நோக்கி ஓடினான். ரவியை முதலில் உள்ளே தள்ளிவிட்டு நந்தினியை ஏற்ற முற்படும் நந்தினி தன் வயிற்றை பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

'என்னாச்சு அண்ணி?' - அருண்.

'அருண் எனக்கு முதுகும் வயிறும் வலிக்குது... கால் வேற பிடிச்சிக்கிச்சு... என்னால நடக்க முடியாது... ' என்று மூச்சுவாங்கியவாறு கூறிவிட்டு

'பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடல் இருந்தா கூட்டிகிட்டு போ... எனக்கு பிரசவ வலி ஆரம்பிச்சுருச்சு...' என்றாள் நந்தினி.

அருண் காவல் நிலையத்தினுள் பார்த்தான். அந்த ஆய்வாளரும் சூரியும் தங்களை சுதாரித்துக் கொண்டு எழுந்து அந்த அறையில் இருந்த இரும்பு லத்தியை கையில் எடுத்து வேகமாக அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்கள். அருண் நந்தினியை உடனே தன் கைகளால் தூக்கி வாகனத்தின் பின் இருக்கையில் ரவியின் மடியில் அவளின் தலையை சாய்த்து, அவளை சுற்றி இருக்கையின் பாதுகாப்பு பட்டையை கட்டினான். சூரியும் ஆய்வாளரும் பக்கத்தில் நெருங்கும் பொழுது அருண் வாகனத்தை வேகமாக ஒட்டி அந்த வளாகத்தை கடந்தான். வளாகத்தை கடந்து அருண் வண்டியை ஒட்டிக் கொண்டிருக்கும் போது சுற்றும் முற்றும் பார்த்தான். அது வணிக சாலை சுற்றும் முற்றும் கடைகள் தான் இருந்தது. நள்ளிரவு என்பதால் அருகில் இருந்த கடைகள் அனைத்தும் மூடியிருந்தது. சாலை இடது பக்கம் திரும்பியது. நேரே செல்ல வழி இல்லாததால் அருண் வண்டியை இடது பக்கம் திருப்பினான். அங்கு சில நபர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தால் அந்த சாலையை வழிமறித்திருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் அருணை அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. சட்டென்று வண்டியை பின்னே செலுத்தினான். வண்டி பின்னே செல்வதை பார்த்த அந்த நபர்கள் அருணின் வாகனத்தை வேகமாக பின் தொடர்ந்தனர். அருணால் மறுபடி அந்த காவல் நிலையம் வழியாக தான் அவன் வண்டியை செலுத்த முடியும் அதை தவிர வேறு வழியில்லை. வேகமாக காவல் நிலையத்தை நோக்கி ஓட்டினான். அங்கே சூரியும் அந்த ஆய்வாளரும் கையில் இரும்பு லத்தியுடன் காத்துக் கொண்டிருந்தார்கள். வண்டியை நிறுத்தி பின்னே பார்த்தான். அந்த நபர்கள் இரு சக்கர வாகனத்தில் அருணின் வண்டியை நோக்கி விரைவாக வந்து கொண்டிருந்தனர். நந்தினியை பார்த்தான். அவள் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தாள். ரவியை பார்த்தான். ரவியின் கண்கள் பதட்டமாக நந்தினியையே பார்த்துக் கொண்டிருந்தது. இப்பொழுது அருண் நேரே பார்க்கும் பொழுது அந்த ஆய்வாளரும் சூரியும் அருணை நோக்கி ஓடி வந்தனர். இந்த சூழ்நிலையில் அருணால் நிதானமாக யோசிக்க முடியவில்லை. சுற்றும் முற்றும் வேகமாக பார்த்தான். அவன் இடது பக்கத்தில் ஒரு சிறிய சந்து இருந்தது. அதனுள் வண்டியை திருப்பினான். வேகமாக சிறு தொலைவு ஒட்டிய பிறகு தான் அருணிற்கு புரிந்தது அது முட்டு சந்து என்று. அருணால் என்ன செய்வது என்று தெரியவில்லை. வாகனத்தின் உள்ளே இருந்த நந்தினி வலியை பொறுத்துக் கொண்டு மெதுவாக எட்டி பார்த்தாள். அது ஒரு முட்டு சந்து இனிமேல் வண்டி நகராது என்பதை புரிந்து கொண்ட நந்தினி அந்த வண்டி பயணித்த வழியை திரும்பி பார்த்தாள். தொலை தூரத்தில் இவர்களை அந்த வன்மமான கூட்டம் இரு சக்கர வாகனங்களில் துரத்திக் கொண்டு வருவது தெரிந்தது. அவளின் பயம் அதிகரித்தது. அப்போது

'எல்லாமே சயின்ஸ் தான்... ஒத்துக்கறேன்... பகுத்தறிவும் தேவை தான்... அதோட உங்க மனசுக்கு தோதா ஒரு கடவுள் நம்பிக்கையை கலக்கறது நல்லது... வெறும் பகுத்தறிவும் சயின்ஸும் கொடுக்கற நம்பிக்கை கொண்டு போய் முட்டு சந்துல தான் நிறுத்தும்... ஆனா கடவுள் நம்பிக்கை தான் அந்த முட்டு சந்துல சின்ன வழியை காட்டும்... அந்த வழி தான் உங்க பிரச்னையை தீர்க்கறதுக்கான வழியா இருக்கும்..." என்று சந்திரன் கூறியது நினைவிற்கு வந்தது. நந்தினி அழுதவாறே

'நீ இருக்கியா இல்லையானு தெரியாது... அப்படி நீ இருந்தா தயவு செஞ்சு எங்களை காப்பாத்து... நான் உன்னை பரிபூரணமா நம்பறேன்...' என்று கதறினாள்.

அப்போது அருண் வாகனத்தின் பின் கதவை திறக்கும் சத்தம் கேட்டது. முதலில் ரவியை இறக்கிய அருண் பிறகு நந்தினியை தன் கைகளில் ஏந்தி ரவியை மெதுவாக முட்டி முட்டி ஒரு ஆள் மட்டும் நடக்கும் அளவு இருந்த ஒரு சிறு வழியில் பயணித்தான்.

இதை பார்த்த நந்தினியிற்கு "கடவுள் நம்பிக்கை தான் அந்த முட்டு சந்துல சின்ன வழியை காட்டும்... அந்த வழி தான் உங்க பிரச்னையை தீர்க்கறதுக்கான வழியா இருக்கும்..." என்று சந்திரன் கூறியது மறுமுறை நினைவிற்கு வந்தது. இப்பொழுது நந்தினியிற்கு பயம் கலைந்து நம்பிக்கை பிறந்தது. அந்த சிறு வழி பாதை ஒரு பெரிய பிரதான சாலையை இணைத்தது. இது வரை இருள் சூழ்ந்திருந்த அவளுடைய பயணத்தில் அந்த பிரதான சாலையில் உள்ள செம்மஞ்சள் நிற விளக்குகள் ஒளியூட்டின. இருள் விலகி அவள் மீது ஒளி பட்டவுடன் “இனிமேல் நீ சந்திக்க போற கஷ்டங்களோட கணம் ரொம்ப அதிகமா இருக்கும்..." என்று ரமேஷ் கூறியதும் "ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும்... உனக்கு புரியும் படியா சொல்லனும்னா பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கற இடத்துல தான் நெகட்டிவ் வைப்ரேஷன் னும் இருக்கும்... அதே மாதிரி எங்கெல்லாம் நெகட்டிவ் வைப்ரேஷன் இருக்கோ அங்கெல்லாம் பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்..." என்று சந்திரன் கூறியதும் அவள் சிந்தையில் தோன்றியது.

'பிரச்சனை அதிகமாயிருக்குனா அதுக்கான தீர்வும் பக்கத்துல தான் இருக்கணும்... ' என்று நம்பினாள் நந்தினி.

அந்த பிரதான சாலையின் ஓரத்தில் கந்தல் துணிகளால் சிறு குடில் கட்டி சாலையோரம் சில வறுமை கூட்டங்கள் தங்கியிருந்தன. ஒரு குடிலில் மட்டும் ஒரு மூதாட்டி முனகி கொண்டிருக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த மூதாட்டியை சுற்றி இரு ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தனர். அவர்களை பார்த்த அருண் நந்தினியை சுமந்தவாறு ரவியை தன் தோளில் முட்டி முட்டி அவர்கள் அருகில் அழைத்து சென்றான்.

அந்த மூதாட்டி 'விவேக்... விவேக்... அம்மா சாகரத்துக்குள்ள சீக்கிரம் ஒரு வாட்டி வந்து பாருடா...' என்று முனகிக் கொண்டிருந்தாள். அவளை சுற்றியிருந்த மூவரும் அழுது கொண்டிருந்தனர். அருண் அவர்களிடம்

'எங்களை கொல்ல ஒரு கும்பல் வருது... எங்களை காப்பாத்துங்க...' என்றான்.

அந்த ஆண்களில் ஒருவன் அழுதவாறு குடிலில் இருந்து வெளியே வந்து நந்தினியை பார்த்துவிட்டு பிறகு அருணிடம் பார்வையை திருப்பி

'எங்களுக்கே பாதுகாப்பு வேணும்... நாங்களே தினம் தினம் செத்துக்கிட்டு இருக்கோம்... அந்த கும்பல் கிட்டேருந்து உங்கள காப்பாத்தறதுக்கு மனசு இருந்தாலும்... எங்களுக்கு உடம்புல சக்தி கிடையாதுப்பா... எங்க கூட்டத்துலியே பொழப்புக்கு தப்பு பண்றவங்க நிறைய பேர் இருக்காங்க தம்பி... அவங்க வரதுக்குள்ள கர்பமா இருக்கற பொண்ண பக்கத்துல இருக்கற காலி டெண்ட்க்குள்ள மறச்சு வெச்சிட்டு நீங்க ரெண்டு பேரும் ஓடிடுங்க... இந்த கர்ப்பமா இருக்கற பொண்ண எங்க பொண்ணுங்களை வெச்சு பிரசவம் பாத்துக்கறோம்....' என்றவுடன் அருண்

நந்தினியை அவர் சொன்ன குடிலுக்குள் வைத்து விட்டு தான் வந்த வழியை திரும்பி பார்த்தான். அந்த வன்ம கும்பல் அந்த சிறு வழியை கடந்து அவர்களை நோக்கி ஓடிவருவது தெரிந்தது.

'இவங்க கிட்ட விட்டுட்டு போனா அண்ணிக்கு ஒழுங்கா பிரசவம் பாப்பாங்களா?... ஹாஸ்பிடல் மாதிரி ஹைஜீனிக்கா இருக்குமா... இந்த நிலைமைல நான் மட்டும் இவங்கள விட்டுட்டு போனா சரியா இருக்குமா?' என்று அந்த பதட்ட சூழ்நிலையில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்கும் போது எதிர் பாராத நேரத்தில் அருணின் வயிற்றில் ஒரு இரும்பு தடி வேகமாக தாக்கியது. வயிற்றில் அடி வாங்கியவுடன் அருண் அலறியவாறு வயிற்றை பிடித்துக் கொண்டு தள்ளாடி கொண்டே நடு ரோட்டில் சரிந்தான். சில நொடிகள் கழித்து பயங்கரமாக இரும்பினான் அருண். அவன் வாயிலிருந்து ரத்தமும் உடம்பிலிருந்த தெம்பும் மெதுவாக வடிந்தது. கண்களை சொக்கியவாறு கண்களை நிமிர்த்தி பார்த்தான். அங்கு சூரி மட்டும் கையில் இரும்பு லத்தியோடு நின்று கொண்டிருந்தான். சூரி அந்த குடிலில் இருப்பவர்களிடம்

'உங்கள அடிச்சு போட்டா கேக்குறதுக்கு நாதியில்லன்னு உங்க எல்லாருக்குமே தெரியும்… அதனால மரியாதையா எல்லாரும் உள்ள போய் கமுக்கமா படுத்துகுங்கடா... மீறி இவங்களுக்கு உதவி செய்யறேன் கியேறேன்னு வந்தீங்க அவ்வளோதான்... ' என்று மிரட்டலாக கூறினான்.

அவர்களும் பயந்தவாறு குடிலுனுள் சென்றனர். அருணை பின் தொடர்ந்த நபர்கள் சூரியிடம் வந்தனர்.

அந்த நபர்களில் ஒருவன்

'என்ன சூரி?... நீ எப்படி இந்த பக்கம் வந்த?... அந்த போலீஸ்காரன் வரலையா?' என்று கேட்டான்.

சூரி அருணை காண்பித்து

'இவன் அந்த சந்துக்குள்ள வண்டிய உடும் போதே தெரிஞ்சுடுச்சு இவன் இந்த ரோட்டுக்கு தான் வருவானுட்டு... அதான் வேற பக்கமா இந்த ரோட்டுக்கு முன்னாடி வந்தேன்... போலீஸ்காரன் ஸ்டேஷன்ல கான்ஸ்டபிள்ஸ் எல்லாரும் வந்துருவானுங்கனு என்ன மட்டும் அனுப்பிட்டு அவன் ஸ்டேஷன்ல இருக்கான் ...' என்றான்.

'சரி இப்போ என்ன பண்ண போற?' என்று அந்த நபர்களில் ஒருவன் கேட்டான்.

'தெரில நான் போஃன் பண்ணி கேக்கணும்...' என்று சொல்லிவிட்டு தன் அலைபேசியில் யாருடனோ சில நிமிடங்கள் உரையாடினான். பிறகு அந்த நபர்களிடம்

'மூணு பேரையும் போட்டு தள்ள சொல்றான்... சரி போய்ட்டு அந்த பொண்ணை தூக்கிட்டு வாங்க... மொதல்ல அந்த பொண்ணை முடிச்சிட்டு... அடுத்து கீழ வயித்துல அடிபட்டு கிடக்கறானே இவன்... அப்புறம் கடைசியா நம்மள பொளந்து கட்னானே ...' என்று சொல்லிவிட்டு அருகில் அவர்களையே பார்த்து கொண்டிருக்கும் ரவியை எட்டி உதைத்து

'இவன்' என்றான். சூரி எட்டி உதைத்தவுடன் ரவி தட்டு தடுமாறி அந்த மூதாட்டியின் குடிலினுள் விழுந்தான்.

தன் பக்கத்தில் விழுந்த ரவியை மூதாட்டி கட்டி அரவணைத்துக் கொண்டு

'விவேக்... விவேக்... என் பையன் வந்துட்டான்...' என்று பக்கத்தில் அமர்ந்திருப்பவர்களிடம் சொன்னாள். இப்பொழுது ரவியின் பார்வை அந்த மூதாட்டியையே பார்த்துக் கொண்டிருந்தது. ரவியிடம் பார்வையை திருப்பிய அந்த மூதாட்டி

'அம்மா சாகறதுக்கு முன்னாடி அம்மாவை பாக்கறதுக்கு வந்தியாட செல்லம்... எல்லாரும் நீ உன் ஆபிஸ் மாடிலேருந்து தற்கொலை பண்ணிகிட்டேனு சொன்னாங்க... நான் நம்பவே இல்ல... நீ என்னை மறுபடி பாக்க கண்டிப்பா வருவேன்னு இவளோ நாள் நம்பிகிட்டே இருந்தேன்...' என்று ரவியின் நெற்றிப்பொட்டில் முத்தமிட்டாள்.

பல வருடங்களாக தாயின் பாசமின்றி வஞ்சகம் துரோகம் ஏமாற்றத்தால் வெறுத்து போயிருந்த ரவியின் மனதிற்கு சுட்டெரிக்கும் பாலைவனத்தில் தாகத்தினால் தவித்துக் கொண்டிருந்தவனுக்கு திடீரென்று அந்த இடம் சோலைவனமாக மாறி சுவையான சுத்தமான நீரருவியில் நனைவது போல இருந்தது அந்த மூதாட்டியின் முத்தம். அருகில் நடக்கும் விஷயங்களை கிரகிக்க முடிந்தாலும் அவனை செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் விதியின் சங்கிலியை உடைத்தெறியும் பலத்தை ரவியின் ஆழ்மனதில் கொடுத்தது அந்த மூதாட்டியின் முத்தம். முதலில் ரவியின் கண்களில் நீர் வடிந்தது. இந்த மூதாட்டி யார் என்று ரவியிற்கு பிடிபடவில்லை என்றாலும் அவளின் பாசத்தினால் கட்டுண்ட அவன் அந்த மூதாட்டியை அம்மா என்று அழைக்க முயற்சி செய்தான். குழந்தை பிறந்து சில நாட்கள் கழித்து அம்மா என்று அழைக்க முயற்சி செய்வது போல ரவி வாயை மெதுவாக அசைத்து அம்மா என்று கூற முயற்சித்தான். சில நொடிகள் முயற்சிக்கு பிறகு 'அம்மா...' என்று அந்த மூதாட்டியை கட்டியணைத்து கதறி அழுதான்.

'நீ யாருனு எனக்கு தெரியல... ஆனா நான் எங்கேயும் உன்ன விட்டு போகமாட்டேன் மா... இனிமே நீ என் கூடவே இரும்மா... நான் உன்ன பாத்துக்கறேன்... ' என்று கூறிவிட்டு மூதாட்டியை பார்த்தான். அவள் கண்கள் மூடியிருந்தது. ரவியிற்கு ஒன்றும் புரியாமல்

'அம்மா அம்மா...' என்று உலுக்கினான். அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவள் இறந்து விட்டாள் என்பது அப்போது தான் ரவியிற்கு புரிந்தது.

"உன் மேல அக்கறை வெக்கிறவங்க சீக்கிரமா உன்னை வெறுத்து ஒதுக்குவாங்க... இல்ல அவங்க இறந்து போயிடுவாங்க... இல்லனா நீ இறந்து போயிடுவ... இது தான் உன்னோட இந்த பிறவிக்கான விதி... இங்க எல்லாமே விதி படி தான் நடக்கும்..." என்று ரமேஷ் சொன்னது ரவியின் நினைவிற்கு வந்தது. அவளை கட்டியணைத்து கதறி அழுதான். அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு பெண்

'அண்ணா அந்த கர்ப்பமான பொண்ணை கொல்ல போறாங்கணா... போய் காப்பாத்துங்கண்ணா...' என்று அவள் கூறியவுடன் ரவி அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இருவரும் தனக்காக கூட வந்து போராடுவார்கள் என்று நம்பி அந்த இரு ஆண்களையும் பார்த்தான். தங்களுடைய வறுமையான சூழ்நிலையும் அவர்களை நம்பி இருக்கும் குடும்பமும் அவர்களின் தைரியத்தை வளரவிடாமல் தடுத்து உயிர் பயத்தை அவர்கள் முகத்தில் காட்டியது. மேற்கொண்டு ரவியை பார்க்க முடியாமல் அந்த இரு ஆண்களும் தலை குனிந்தார்கள். அவர்களின் செய்கையை பார்த்தவுடன் ரவியின் மனதை கடுங்கோபம் ஆக்கிரமித்தது. பிறகு அவர்களின் நிலையை உணர்ந்த ரவியிற்கு அவர்கள் மீது அனுதாபம் பிறந்தது. அமைதியாக சாலையின் பக்கம் பார்வையை திருப்பினான். அங்கே நந்தினியின் தலையை இறுக்கமாக சிலர் பிடித்துக் கொண்டிருந்தனர். சூரி அவள் தலையை தாக்க ஒரு மரக்கட்டையை மேலே ஓங்கினான். சட்டென்று ரவி தன் அருகில் இருந்த கருங்கல்லை சூரியின் மீது வீசினான். சூரி நந்தினியை தாக்குவதற்குள் அந்த கல் சூரியின் தலையை தாக்கியது. சூரி அப்படியே கீழே சரிந்தான்.

கீழே விழுந்த சூரியை அந்த கும்பலில் இருவர் போய் தூக்க மற்ற அனைவரும் நந்தினியை அப்படியே சாலையில் படுக்க வைத்து ரவியின் பக்கம் திரும்பினர். மொத்தம் பதினைந்து பேர் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் ஒரே நோக்கம் ரவியை கொல்ல வேண்டும் என்பது தான். ரவியினுள் உள்ள கோபம் அதிகரித்து அதன் உச்சத்தை அடைந்தது. உயிர் பயம் சுத்தமாக வற்றிப் போய் போர்க்களத்தில் இருக்கும் வீரனின் மனநிலையை அடைந்திருந்தான் ரவி. அவர்களை அதே சீற்றத்துடன் பார்த்தவாறே தனது சட்டையை கழற்றினான். அதனுள் அங்கே பக்கத்தில் இருக்கும் கருங்கற்களை போட்டு மொத்தமாக மூட்டை கட்டி அதை தன்னுடைய ஆயுதமாக்கிக் கொண்டு அவர்களை பார்த்தான். அவர்களில் ஒருவனை தவிர மற்ற அனைவரும் தங்களது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு ரவியை உக்கிரமாக முறைத்தனர். ஒருவன் மட்டும் பதட்டமாக தனது ஆயுதத்தை தேடினான். அவனிடம் ஆயுதம் இல்லை என்றவுடன் பதட்டம் அடைந்தான். அவன் முகத்தில் இருந்து அவன் பதட்டம் அடைவதை உணர்ந்த ரவி அவனை நோக்கி தனது தாக்குதலை நடத்த தொடங்கினான். அந்த சூழல் அவனிற்கு கூர்மையான விழிப்புனைவையும் வேகத்தையும் குடுத்தது. தன்னை நோக்கி ஆயுதத்துடன் வரும் அடியாட்களை லாவகமாகா தடுத்து அவர்களை தாக்கினான். அந்த சூழல் சூரியிற்கும் ஒரு தெம்பை கொடுத்தது. அவனும் எழுந்து ரவியை தாக்க முற்பட்டான். ஒருவன் தன்னிடமிருந்த கத்தியால் ரவியை குத்த முயலும் போது ரவி தன்னிடமிருந்த கல் மூட்டையினால் தடுத்தான். அந்த துணி கிழிந்து அந்த கற்கள் அனைத்தும் கீழே சரிந்தன. ரவி நிராயுதபாணியானான். இருந்தாலும் விடாமல் போர் களத்தில் இருக்கும் வீரனை போல் உயிர் பயமின்றி போராடினான்.

கடைசியில் அனைவரும் சேர்ந்து ரவியை தரையில் அழுத்தி பிடித்தனர். ரவியிற்கு இன்னும் அதே போர் வீரனின் மன நிலையே இருந்ததால் இன்னும் திமிரிக் கொண்டே இருந்தான். அவனை இறுக்கமாக பிடித்துக் கொண்டே ரவியை சூரியின் முன் நிற்க வைத்தனர். அவர்கள் பிடியிலிருத்து தப்பித்து சூரியை கொல்ல ரவி திமிரிக் கொண்டே இருந்தான். சூரியுடன் இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவன் சூரியிடம் கத்தியை குடுத்து

'சூரி... ரொம்ப பண்றான்... மொதல்ல இவனை முடி.' என்றான்.

இதையெல்லாம் சாலையின் தரையில் இருக்கும் நந்தினி பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் பிரசவ வலியும் சுற்றியிருக்கும் வன்மமான சூழலும் இப்போது அவளின் நம்பிக்கையையும் உடம்பிலிருக்கும் தெம்பையும் குறைத்துக் கொண்டிருந்தது. ரவியை தன் முன்னே கொல்ல போகிறார்கள் என்று உணர்ந்த நந்தினி தன்னால் முடிந்த அளவு முழு தெம்பையும் திரட்டி

'வேணாம்... அவரை கொல்லாதீங்க...' என்று கத்தினாள். அவளின் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த சூரி அவளின் கத்தலை பொருட்படுத்தாமல் ரவியை கொல்வதிலேயே முனைப்பாக இருந்தான். நந்தினியின் தெம்பு மொத்தமாக வடிந்தது. சுயநினைவை இழக்கும் விளிம்பில் இருந்தாள்.
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
'வேணாம்... அவரை கொல்லாதீங்க...' என்று கத்தினாள். அவளின் சத்தத்தை கேட்டு திரும்பி பார்த்த சூரி அவளின் கத்தலை பொருட்படுத்தாமல் ரவியை கொல்வதிலேயே முனைப்பாக இருந்தான். நந்தினியின் தெம்பு மொத்தமாக வடிந்தது. சுயநினைவை இழக்கும் விளிம்பில் இருந்தாள். சூரி திரும்புவதற்குள் அந்தக்கும்பலின் பிடியில் திமிரிக் கொண்டிருந்த ரவியின் வலது கை வியர்வையின் உதவியால் நழுவியது. சூரி திரும்பியவுடன் அந்த கை சூரியின் குரல் வளையை பிடித்தது. பிடித்த சில நொடிகளிலேயே சூரியால் தன் கையில் இருக்கும் கத்தியை பிடித்திருக்க முடியவில்லை. அவன் அந்தப்பிடியிலிருந்து தன்னை விடுவிக்க முயற்சி செய்தும் முடியவில்லை, உடும்பு பிடியை போல இருந்தது ரவி அவனின் குரல்வளையை பிடித்தது. அவனருகில் இருந்தவர்கள் அந்த பிடியை விலக்க முயன்று தோற்றனர். அதில் ஒருவன் ரவியின் கையை கடித்தான், ஒருவன் கட்டையால் அடித்தான். அப்பொழுது ரவியின் பிடி தளரவில்லை. இப்படியே சில நொடிகள் தொடர்ந்தால் சூரி இறந்துவிடுவான் என்று கீழே இருக்கும் கத்தியால் ஒருவன் ரவியின் கையை குத்தினான். இப்பொழுது லேசாக பிடி தளர்ந்தது. அப்போது ஒருவன் சூரியை பின்னே இழுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். தளர்த்திய தன் பிடியை மறுபடி இறுக்க முயன்ற ரவியிற்கு சூரியின் மேலாடை மாட்டியது. அவன் சூரியை பின்னே வேகமாக இழுத்ததால் மேலாடை கிழிந்து சூரியும் அவனை இழுத்தவனும் தட்டு தடுமாறி கீழே விழுந்தனர். சூரி நந்தினியின் பக்கத்தில் விழுந்தான். சுயநினைவை இழக்கும் விளிம்பில் இருந்த நந்தினி தன் பக்கத்தில் விழுந்த சூரியை பார்த்தாள். மேலாடை இல்லாததால் நந்தினியின் கண்களுக்கு "கிருஷ்ணம்மா" என்ற பெயர் சூரியின் மார்பில் பச்சை குத்தியிருப்பது தெரிந்தது.

உடனே "எனக்கு வேற ஒருத்தரோட கல்யாணம் ஆயிடுச்சின்னவொடனே அவன் அந்த ஊரை விட்டே போயிட்டான்... எங்க இருக்கானே தெரில... என் அப்பா அம்மாவும் இறந்துட்டாங்க... அவனை என்னிக்காவது ஒரு நாள் பாப்பேன்னு தான் இந்த உசுர கைல புடிச்சிகினு இருக்கேன்... இல்லனா நான் எப்பவோ செத்திருப்பேன்." என்று தான் கருக்கலைப்பு செய்ய சென்ற இடத்தில் கண்ணீர் மல்க தன் கதையை கூறிய கிருஷ்ணம்மாவின் நினைவு வந்தது.

'எனக்கு கிருஷ்ணம்மாவை தெரியும்...' என்று சொல்ல முனைந்த நந்தினி தன் சுயநினைவை இழந்தாள்.

சில மணி நேரம் கழித்து நந்தினியின் தலையில் வலி அதிகமாகியது. தன் கை கால்கள் இறுகி முதுகு தண்டிலும் வயிற்றிலும் அழுத்தமான வலியை உணர்ந்தாள். அலறியவாறு கண்களை திறந்தாள் நந்தினி. தன்னை சுற்றி சில செவிலியர்களும் ஒரு பெண் மருத்துவரும் பதட்டமாக சக்கர படுக்கையில் தள்ளி சென்று கொண்டிருப்பதை பார்த்தாள்.

'டாக்டர் பேஷண்டுக்கு கான்ஷியஸ் வந்திடுச்சு...'

'ஓகே... அப்போ நார்மல் டெலிவிரிக்கே ட்ரை பண்ணுவோம்...' என்று தன்னை சுற்றி சிலர் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது.

'ரவிக்கு என்னவாயிற்று?' என்று கேட்க முனைத்தவளை பிரசவ வலி முந்தி கொண்டது. அவளை சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றனர். ரவிக்கு என்ன நடந்திருக்கும் என்ற சிந்தையை மறக்கடித்தது அந்த வலி. ஒரு கட்டத்தில் வலி உச்சத்தை அடைந்து அப்படியே குறைந்தது. சுற்றும் முற்றும் பார்த்தாள். வயிற்றில் தொப்புள் கொடி அறுந்த ரத்தத்துடன் நீல நிறத்தில் ஒரு குழந்தை அழுது கொண்டிருந்தது. அப்படியே மெதுவாக மயக்க நிலை அவளை ஆக்கிரமித்தது. கண்களை மூடினாள். வெறும் இருளை மட்டும் உணர்ந்து கொண்டிருந்த நந்தினியிற்கு சூரி ரவியை கத்தியால் குத்துவது போல ஒரு சிந்தனை தோன்றி மறைந்தது. பதட்டத்துடன் சட்டென்று கண்களை திறந்தாள். சூரியும் அந்த வன்மமான கும்பலும் தன்னை சுற்றி நின்று கொண்டிருப்பது அவளின் கண்களுக்கு தெரிந்தது.

அவர்களை பார்த்தவுடன் பயத்தில் 'ரவி... ரவி எங்கே? ... நான் எப்படி இங்க வந்தேன் ' என்று ஒன்றும் புரியாமல் பதட்டமாக கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு செவிலியர் ‘ஏன் பதட்டப்படறீங்க?... ரிலாக்ஸ்?' என்றாள்.

'என் புருஷனை இவங்க கொன்னுட்டாங்க?' என்று பதட்டமாக நந்தினி அந்த செவிலியரிடம் கூறும் போது

'நந்தினி...' என்று ரவியின் குரல் கேட்டது. குரல் வந்த திசையில் பார்த்தாள். அங்கே ரவி கையில் கட்டுடன் கதவின் அருகில் நின்று கொண்டிருந்தான். அவன் அருகில் ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தாள். அவளை சில நொடிகள் உற்றுப் பார்த்தவுடன் அவள் கிருஷ்ணம்மா என்று தெரிந்தது. ரவி நந்தினியின் அருகில் வந்து

'இங்க யாருக்கும் ஒன்னும் ஆகலை… இந்த ஹாஸ்பிடல்ல தான் தம்பி அருணும் அட்மிட் ஆயிருக்கான்... இப்போ தான் அப்பாவும் அம்மாவும் வந்து உன்னையும் குழந்தையையும் பார்த்துட்டு தம்பிய பாக்க போயிருக்காங்க... நமக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருக்கு...' என்றான். இப்பொழுது பயம் கலைந்து சந்தேகமாய் சூரியை பார்த்தாள் நந்தினி.

'உங்கள கொல்ல சொல்லி அந்த வோல்கா கம்பெனிக்காரன் எனக்கு பணம் குடுத்தான்... அவன் பாக்டரிலேருந்து வர கழிவு பொருளை ஒழுங்கா அப்புற படுத்தாம பக்கத்துல இருக்கற ஏரில கலக்கறான்... அதனால நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அந்த ஊர் காரவங்க அந்த கம்பெனி மேல கேஸ் போட்டாங்க... ஆனா கேஸ் எங்கேயும் நிக்கல... எல்லாரையும் காசு குடுத்து சரி பண்ணிட்டாங்க... முகேஷுனு ஒருத்தர் அந்த கம்பெனில வேலை பாத்தவர்தான்… அந்த வேலையை விட்டு வெளியே வந்து அந்த ஊர் மக்களுக்கு ஆதரவா நிறைய ஆதாரங்களை திரட்ட ஆரம்பிச்சாரு... பக்கத்துல எலெக்ஷன் வர்றதுனால ரூலிங் பார்ட்டிய எதிர்க்கற ஒரு சின்ன கட்சி முகேஷுக்கு சப்போர்ட் பண்ணாங்க... அந்த கட்சிக்கு கம்பெனிக்காரன் காசு குடுத்து சரி பண்ணிட்டான்... இப்போ அதை தெரிஞ்சுக்கிட்ட சின்ன சின்ன லெட்டர் பேட் கட்சிங்க எல்லாம் காசுக்காக முகேஷுக்கு சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க... இவங்க எல்லாருக்கும் காசு கொடுத்தா கட்டுப்படி ஆகாதுன்னு யோசிச்ச கம்பெனிக்காரன் முதல்ல முகேஷை போட்டு தள்ள ப்லான் பண்ணினான்… அவன் இறந்து போனா அதுக்கு கம்பெனி மேல தான் பழி விழும் அப்புறம் இது பிரஸ் மீடியானு பெரிய அளவுக்கு போறதுக்கான வாய்ப்பு இருக்குன்றத்துக்காக முகேஷை கொல்ற திட்டத்தை கை விட்டுட்டாங்க... கம்பெனிக்கு எதிரான ஆதாரம் வலுவாகிகிட்டே இருக்கறதுனாலவும், இது பிரஸ் மீடியா னு பெரிய அளவுல போறதுக்கான வாய்ப்பு இருக்கறதுனாலையும் இதை முளையிலேயே கிள்ளி எரியறதுக்கு முகேஷை எப்படியாவது உள்ள தள்ளணும்னு காத்துகிட்டு இருந்தாங்க... போராட்டத்துல கம்பெனிக்காரன் காசு குடுத்து செட்டப் பண்ணி அத கலவரமா மாத்த முயற்சி பண்ணினான்... அப்போ அவனுக்கு சாதகமா உங்க தலைல கல்லடி பட்டிருச்சு... இந்த சம்பவம் அங்க இருக்கற சி சி டிவி கேமராவுல பதிவாகி இருக்கு... அந்த கல்லடி பட்டதுனால ஒரு கர்பிணி பெண் இறந்துட்டாங்க இதுக்கு காரணம் முகேஷுனு சொல்லி அவரை கொலை கேஸ்ல உள்ள தள்றதுக்கு தான் உங்களை தலையில ரத்தம் வராம அடிபட்ட இடத்துல அடிச்சு கொல்ல சொன்னாங்க... இப்படி ஆதார பூர்வமா முகேஷை உள்ள தள்ளினாங்கன்னா அவருக்கு சப்போர்ட் பண்ற அமைப்பும் எதிர் கட்சிகளும் வேற ஏதாவது தங்களுக்கு ஆதாயம் கிடைக்கற போராட்டங்கள் பக்கம் திசை திரும்பிடுவாங்க... இனிமேல் எந்த பிரச்னையும் வராது ன்றது தான் வோல்கா கம்பெனிக்காரனோட கணிப்பு... நல்ல வேளை நீங்க "கிருஷ்ணம்மாவை எனக்கு தெரியும்... அவங்க உங்களுக்காக காத்துகிட்டு இருக்காங்க..."னு சொன்னவுடனே எனக்குள்ள கிருஷ்ணம்மாவை பாக்கணும்ன்ற ஆர்வம் அவ மேல இருந்த காதல், என்னோட கொலை உணர்ச்சியை குறைச்சிடுச்சு… ‘

என்று சூரி கூறும் போது நந்தினி குறுக்கிட்டு

'நான் உங்ககிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எனக்கு சுய நினைவு போயிடுச்சு... நான் உங்க கிட்ட கிருஷ்ணம்மாவை பத்தி சொன்னேனா?' என்று ஆச்சரியத்தை வெளி படுத்தியவாறு கேட்டாள். சூரியும்

'ஆமாம்... அதை சொல்லிட்டு அப்புறம் நீங்க மயங்கிடீங்க... உங்கள நான் உலுக்கி எங்க இருக்காங்கனு கேட்டேன்... அவ வேலை செய்யற ஹாஸ்பிடலோட பெயரை முனகுனீங்க... அப்புறம் நான் உங்க புருஷன்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு உங்களையும் உங்க புருஷனோட தம்பியையும் ஹாஸ்பிடல்ல சேத்துட்டேன்... அதுக்கப்புறம் நீங்க சொன்ன அந்த ஹாஸ்பிடலுக்கு போய் கிருஷ்ணம்மா வரவரைக்கும் வெய்ட் பண்ணி பாத்தேன்... ' என்று கூறிவிட்டு மேற்கொண்டு பேச முனைந்த சூரியை ஒரு வித துக்கம் ஆட்கொண்டது. கண்களை கசக்கியவாறு குழந்தையை போல அழ தொடங்கினான். கிருஷ்ணம்மா அவனருகில் சென்று ஆசுவாச படுத்தினாள். சில நொடிகள் அழுகைக்குப் பின் கண்களை துடைத்துக் கொண்டு நந்தினியை பார்த்து

'அது... நான் சின்ன வயசுல...' என்று பேசிவிட்டு சில நொடிகள் கண்கலங்கியவாறு யோசித்துவிட்டு

'என் அப்பன் குடிகாரன்... என்னையும் அம்மாவையும் போட்டு அடிப்பான்... ஒரு நாள் என் அம்மா வீட்டைவிட்டு ஓடி போய் வேற ஒருத்தனோட வாழ ஆரம்பிச்சுட்டா... என் அப்பனும் கடலுக்கு மீன் பிடிக்க போகும் போது செத்துட்டான்... என் அம்மாகிட்ட போனா அவளோட புது புருஷன் என்னை வீட்ல அனுமதிக்கவே இல்ல... ஒரே விரக்தியா தான் இருக்கும்... அந்த தனிமையும் விரக்தியும் தான் என்னை தப்பான வழில போக வெச்சுது... நடுவுல எப்படியோ கிருஷ்ணம்மாவோட பழக்கம் ஏற்பட்டுச்சு... நானும் அவளுக்காக எல்லா கெட்ட பழக்கத்தையும் விட்டேன்... என் அம்மா கிட்ட கிடைக்காத அன்பையும் பாசத்தையும் கிருஷ்ணம்மா கிட்ட உணர்ந்தேன்... அவ எப்பவும் சிரிச்சுகிட்டே சந்தோஷமா இருக்கணும்னு தான் நான் நினைப்பேன்... அவளும் என்னை தனியா விட்டுட்டு வேற ஒருத்தனை கல்யாணம் பண்ணிகிட்டான்னு தெரிஞ்ச உடனே எனக்கு அவ்வளவு கோவம் வந்துச்சு... சே இந்த உலகத்துல அன்பு பாசம்னு ஒன்னு கிடையவே கிடையாது எல்லாமே பொய்னு முடிவு பண்ணினேன்... அப்போ தான் இந்த பசங்களை எல்லாம் பாத்தேன்... இவனுங்களுக்கு அப்போ ரொம்ப சின்ன வயசு… ரோட்ல குப்பை பொறுக்கிக்கிட்டு பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தானுங்க... இதே வயசு பசங்க காரு பங்களானு அனுபவிக்கறத பாத்தேன்... ஏன் இந்த மாதிரி ஒரு ஏற்ற தாழ்வு உருவாச்சு?... இது உருவாகறதுக்கு மனுஷன் தான் காரணம்னா அப்புறம் ஏன் அந்த எண்ணத்தை மனுஷனுக்கு கடவுள் கொடுக்கணும்?... இந்த விடையில்லா கேள்வி என்னோட கடவுள் நம்பிக்கையை சுத்தமா போக்கிடுச்சு... இந்த உலகத்துல உயர்ந்தவன் தாழ்ந்தவன்ற பாகுபாடு இருந்துகிட்டே தான் இருக்கும்… இனிமே நியாயம் தர்மம் னு பாத்தா வாழ முடியாதுனு சுத்தமா மனுஷ தன்மையை குழி தோண்டி பொதைச்சிட்டு இந்த தப்பான வழில நாங்க எல்லாரும் போக ஆரம்பிச்சுட்டோம்... இந்த கம்பெனிக்காரனுங்க எங்களைவிடவும் மோசமானவங்க மா... நாங்களாவது உண்மையான அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்படுவோம்... ஆனா இவனுங்களுக்கெல்லாம் அதிகாரமும் பணமும் தான்மா முக்கியம்... அத தக்க வெச்சிக்கறதுக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவானுங்க... உங்கள கொல்ல முயற்சி செஞ்சத நினைச்சு பாக்கும் இப்போ எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு... எனக்கு என் கிருஷ்ணம்மா திரும்ப வந்துட்டா... எனக்கு அது போதும்... அதான் எல்லா தப்பையும் ஏத்துக்கிட்டு சரண்டர் ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...' என்று நந்தினியிடம் கூறிவிட்டு கிருஷ்ணம்மாவை பார்த்து

'என்ன?... நான் ஜெயிலிருந்து வருவேனா இல்லையானு தெரியாது... ஆனா நான் சாகற வரைக்கும் நீ என்னை வந்து ஜெயில்ல பாத்துகிட்டு இருப்பே... அது போதும்......' என்றான்.

பிறகு பக்கத்தில் இருக்கும் தன் ஆட்களிடம் ‘வாங்க போகலாம்.' என்று அவர்களை கூட்டிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். கிருஷ்ணம்மாவும் நந்தினியிடம் நன்றியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

தான் கிருஷ்ணம்மாவை பற்றி பேசுவதற்கு முன்னாலேயே மயக்கமுற்றது போல இருந்தாலும் அதற்கு முரணாக சூரி கிருஷ்ணம்மாவை பற்றி தான் கூறியதாக சொன்னதை யோசித்துப் பார்த்தாள்.

"சில சமயம் உங்களோட சுய நினைவை நீங்க இழந்துட்டாலும் உங்களோட சப் கான்ஷியஸ் உங்களை இயக்க முயற்சி செய்யும்... தூக்கத்துல பேசுறது அப்புறம் மயக்கநிலைல பேசுறது எல்லாமே சப் கான்ஷியஸ்னால தான்..." என்று மன நல மருத்துவர் தேவி கூறியது நினைவிற்கு வந்து அவளுக்கு ஒரு புரிதலை கொடுத்தது.

நந்தினியிற்கு மிக பெரிய ஆபத்திலிருந்து தப்பித்தது போல மன உணர்வு இருந்தது. ரவி அவளருகில் சென்று

'உன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் மெசேஜ் அனுப்பியாச்சு... அநேகமா இன்னும் மூணு நாள்ல வந்துருவாங்க... என் பேன்ட் பாக்கெட்ல இருந்த கார்ட் ல சுயம்புலிங்கேஸ்வரர் கோயில் ஆபிஸோட போஃன் நம்பர் இருந்துச்சு... இப்போ தான் அந்த நம்பருக்கு கால் பண்ணி சந்திரன் சாமி கூட பேசுனேன்... அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம குழந்தையை பாக்க வரேன்னு சொன்னாரு... ரமேஷ் இறந்தப்போ அவர் தான் எனக்கு ஆறுதல் சொன்னாரு... ஆமாம் என்னை தனியா கோயில்ல உக்கார வெச்சிட்டு நீ மட்டும் அவரை போய் பாத்து பேசுனியே அப்படி அவர் கிட்ட என்ன பேசுன?... அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு?' கேட்டான். அப்படி அவன் கேட்கும் போது நந்தினியிற்கு

"உன் பிரச்சனைக்கான தீர்வு என்கிட்ட கிடையாது... அது உங்கிட்ட தான் இருக்கு... உன்னோட பிரச்சனைக்கான கருவை கண்டுபிடிச்சு அதை சரி செய்ய முயற்சி பண்ணு... அப்படி பண்ணும் போது தான் உன் பிரச்சனைக்கான காரணம் கொஞ்சம் கொஞ்சமா புரிய வரும்... உனக்குள்ள இருக்கற கேள்விகளுக்கான விடை உனக்குள்ளேயே கிடைக்க ஆரம்பிக்கும்... போக போக இறைவன் எனும் கலைஞன் எவ்வளவு அழகா இம்மி பிசகாம உனக்கான நிகழுவுகளை வடிவமைச்சிருக்கானு புரியும்... அந்த தருணத்துல உன்னோட புரிதலுக்கு ஏத்த மாதிரி பல பிரபஞ்சங்களை இயக்கர அந்த கருப்பொருளை உணருவாய்..." என்று சந்திரன் கூறியது நினைவிற்கு வந்தது. ரவியின் கேள்விக்கு பதில் வராததால் மறுபடி அவன் நந்தினியிடம்

'என்ன யோசிக்கற?' என்று கேட்டான்.

'இல்ல... அவர் நம்மளோட பிரச்சனை எல்லாத்துக்கும் ஏதாவது காரணம் இருக்குனு சொன்னாரு... அந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் போது அதுக்கான காரணம் எனக்கு தெரிய வரும்ன்ற மாதிரி சொன்னாரு... அதான் நமக்கு நடந்த நிகழ்வுகளை சம்மந்த படுத்தி பாக்கறேன்... எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது...' என்று நந்தினி கூறும் போது குழந்தை அழுதது. அப்போது நந்தினி ரவியிடம்

'குழந்தையை கொஞ்சம் தூக்கிட்டு வாங்க...' என்றாள்.

உடனே ரவி அந்த குழந்தையை பக்குவமாக தூக்கினான். பிறகு அவன் நெற்றியை அந்த குழந்தையின் உதட்டின் மீது சில நொடிகள் வைத்தான். இதை பார்த்த நந்தினி

'ஹே... என்ன பண்ற?' என்று வினவினாள்.

உடனே ரவி அந்த குழந்தையின் உதடுகளில் இருந்து தன் நெற்றியை எடுத்து நந்தினியை பார்த்து

'இல்ல... நேத்து நைட் நம்மள சூரி கொல்ல முயற்சி செய்யும் போது என்னை எட்டி உதைச்சான்... நான் தற்செயலா ஒரு உயிருக்கு போராடிகிட்டு இருக்கற என்பது வயசு பாட்டி பக்கத்துல விழுந்தேன்... அவங்க திடிர்னு எழுந்து "என் பையன் விவேக் வந்துட்டான்"னு சொல்லி என் நெத்தி பொட்டுல முத்தம் கொடுத்தாங்க... எனக்கு இருக்கற ஊனத்தை அந்த முத்தம் போக்கிடுச்சு... அந்த முத்தம் எனக்கு மனோபலத்தையும் பக்குவமான மன நிலையையும் கொடுத்த மாதிரி உணர்ந்தேன்... அந்த முத்தம் எனக்குள்ள ஒரு வித அதிர்வை கொடுத்துச்சு... அதே அதிர்வை இப்போ நான் நம்ம குழந்தைகிட்ட உணர்றேன்... எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாவும் பக்குவதோடையும் எதிர் கொள்வேன்ற ஆற்றல் எனக்குள்ள இருக்கறது இப்போ தான் எனக்கு தெரியுது... ' என்று கூறும் போது ரவியின் அலைபேசியில் உள்ள புலனத்தில் (WHATSAPP ) காணொளி இணைப்பு வந்ததிற்கான சமிக்ஞை வந்தது. குழந்தையை நந்தினியிடம் கொடுத்துவிட்டு காணொளி இணைப்பின் அந்த தலைப்பை எதேர்ச்சியாக பார்த்த ரவி தன் முகத்தில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினான்.

'என்னாச்சு?' என்று கேட்டாள்.

'காலைல நான் அந்த பாட்டியோட இறுதி சடங்குக்கு போயிருந்தேன்... அங்க இந்தாளை பாத்தேன்... இவன் ஏற்கனவே என் கம்பெனில வேலை பாத்த ஆள் தான்... இவன்தான் சூரி சொன்ன முகேஷ்... இவனோட யு ட்யூப் வீடியோ ஒன்னு வந்திருக்கு...' என்று ரவி கூறிய பிறகு அந்த காணொளியை இயக்கி இருவரும் பார்த்தனர்

'வணக்கம்... என் பேரு முகேஷ்... நான் இந்த வோல்கா கம்பெனிக்காரன் அட்ராசிடியை பத்தி பேச போறேன்... இந்த கம்பெனியோட கிளைகள் நிறைய நாடுகள்ல இருக்கு... இதோட ஹெட் ஆபிஸ் யு.எஸ்.ஏ ல இருக்கு.. ஒரு டம்மியான ரீசைக்ளிங் பிளாண்ட்டை வெச்சிட்டு இதுக்கு ஹெட் ஆபிஸ் ஒதுக்கற மொத்த பணத்தையும் இந்த கம்பெனியோட இந்தியன் பிரான்ச் எம்.டியும் அப்புறம் மத்த அதிகாரிகளும் திருடறாங்க... உண்மையான ரீசைக்ளிங் பிளான்ட் போடறதுக்கு கோடிக்கணக்குல செலவாகும்னுட்டு அதை இந்த ஊரு ஏரில பாய்ச்சு விடறாங்க... இது கிட்ட தட்ட முப்பது வருஷமா நடந்துகிட்டு இருக்கு... இந்த கழிவுகள் கொஞ்சம் கொஞ்சமா மண்ணுக்குள்ளே கலந்து மண்வளம் கெட்டுப்போறது பத்து வருஷத்துக்கு முன்னாடி தான் தெரியவந்திருக்கு... இதை எதிர்த்து எவ்வளோவோ கேஸ் இந்த கம்பெனி மேல சமூக அக்கறை கொண்டவர்கள் நிறைய பேர் போட்டிருக்காங்க... ஆனா எதுவும் நிக்கல... எல்லாருக்கும் காசு கொடுத்து சரி செஞ்சுடறாங்க... இத கேள்வி கேட்ட என்னை பாலிடிக்ஸ் பண்ணி ரிசைன் பண்ண வெச்சிட்டாங்க... இந்த கம்பெனியோட இந்தியன் பிரான்ச் எம்.டி க்கும் மத்த உயர் அதிகாரிகளுக்கும் மனுஷங்களை பத்தி கவலை கிடையாது... அவங்க கைல அதிகாரமும் பணமும் இருந்துகிட்டே இருக்கணும் அவ்வளவு தான்... இவங்களை எதிர்த்து கேஸ் போட்டாலும் இல்ல மீடியா கிட்ட போனாலும் பணம் குடுத்து சரி பண்ணிடறாங்க... இவங்களுக்கு எதிரான ஆதாரங்கள் எங்க கிட்ட இருந்தும் எங்களால ஒன்னும் பண்ண முடியலை... ஆனா இந்த ஊர் மக்கள் அதை புரிஞ்சுகிட்டு அவங்களும் என்னோட களத்துல இறங்கிட்டாங்க... லஞ்சமும் நயவஞ்சகமும் ஜெயிக்கிற இந்தகாலத்துல உண்மையை வெளிப்படுத்தற ஒரே வழி சமூக வலைத்தளம் தான்...' என்று கூறிவிட்டு தன்னிடம் இருந்த ஆதாரங்களை காண்பிக்க தொடங்கினார்.

'இவங்க ரசாயன கழிவு நீரை ஏரில கலக்கறாங்கன்றதை தவிர்த்து இப்போ ஒரு புது விஷயம் மாட்டிருக்கு... இந்த கம்பெனி இருக்கற நிலத்தை இவங்க முப்பத்தி அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஜெயங்கொண்டார்னு ஒருத்தர்கிட்ட வாங்குன மாதிரி டாகுமெண்ட்ஸ் இருக்கு... மொதல்ல அந்த ஜெயங்கொண்டார் பத்தி சொல்றேன் ... ஜெயங்கொண்டாரோட ஒரே பையன் விவேக் தற்கொலை பண்ணி இறந்துட்டதுனால அவரோட மனைவிக்கு மன நலம் பாதிக்க பட்டிடுச்சு... அவருக்கு சொந்த பந்தங்கள் மேல நம்பிக்கை கிடையாது... வாழ்க்கையே வெறுத்து போனவரு இந்த நிலத்தை ஏழை விவசாயிகளுக்கு கம்மியான விலைல வித்துட்டு வேற எங்கேயாவது கண்காணாத ஊருக்கு போய் மனைவியோட செட்டில் ஆகலாம்னு முடிவெடுத்திருந்தார்... இத தெரிஞ்சுக்கிட்ட அந்த ஊரு எம்.எல்.ஏ அவன் கமிஷன் அடிக்கறதுக்கு ஜெயங்கொண்டார் கிட்ட போய் அந்த கம்பெனிக்காரன் கிட்ட நிறைய பணத்துக்கு விக்க சொல்லி எவ்வளவோ கேட்டுப்பாத்திருக்கான்... அவர் அந்த எம்.எல்.ஏ பேச்சுக்கு ஒத்துவரவேயில்ல... அதனால அவரை லாரி ஏத்திக் கொன்னுட்டு ஜெயங்கொண்டார்னு கையெழுத்து போட்டு இந்த கம்பெனிக்காரன் கிட்ட வித்த மாதிரி போலி டாகுமெண்ட்ஸ் ரெடி பண்ணி மொத்த பணத்தையும் அவனே அடிச்சிட்டான்... மன நலம் பாதிக்கப்பட்ட அவங்க மனைவியையும் நடுத்தெருவுல அனாதையா அலைய விட்டுட்டான்... பல வருஷமா ரோட்டோரமா பிச்சை எடுத்து கிட்டிருந்த அந்த அம்மாவுக்கு ரோட்டோரம் வாழற ஆளுங்க அடைக்கலம் குடுத்தாங்க... இன்னிக்கு அவங்க இறந்துட்டாங்க... அவங்களோட இறுதி சடங்கை இன்னைக்கு காலைல அட்டென்ட் பண்ணிட்டு வரேன்... இப்போ அந்த அரசியல்வாதிக்கு எழுபத்தி அஞ்சு வயசு... ரொம்ப நாளா குழந்தை பாக்கியம் இல்லாத அவருக்கு அவரோட நாற்பத்தி அஞ்சாவது வயசுல ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு... அந்த பொண்ணு தன்னோட இருபது வயசுல ஒரு சாலை விபத்துல இறந்துட்டா... அன்பையும் பாசத்தையும் கொட்டி வளத்த பொண்ணு இறந்ததுக்கு காரணம் அவர் செஞ்ச பாவங்கள் தான்னு நம்பினாரு... அரசியல் வாழ்க்கையை விட்டுட்டு அவர் சொந்த ஊருக்கு போயிட்டாரு... அவரை எங்க டீம் கண்டு பிடிச்சு அவர்கிட்ட இந்த கம்பெனிகாரன் கழிவு நீரை கலக்கறத பத்தி விசாரிச்சோம்... அவரும் இப்பொ ஒப்புதல் வாக்குமூலம் குடுக்க ஒத்துக்கிட்டாரு... ' என்று கூறியவுடன் அந்த காணொளியில் அந்த அரசியல்வாதியின் முகம் காண்பிக்க பட்டது. அதை பார்த்த ரவி அதிர்ந்து போய் நந்தினியிடம்

'இந்த ஆளை எனக்கு தெரியும்... நான் சின்ன வயசுல ஒரு அரசியல் வாதியோட பொண்ணை லவ் பண்ணி பிரச்சனை ஆச்சுன்னு சொன்னேனே... அந்த பொண்ணோட அப்பா இவர் தான்...' என்றான்.

'இப்போ ஜெயங்கொண்டாரை லாரி ஏத்தி கொன்ன ஆளையும் கண்டு பிடிச்சிட்டோம்...' என்று அவனினுடைய முகமும் காட்டப்பட்டது.

அது ரமேஷின் தந்தை. மீண்டும்

'இது ரமேஷோட அப்பா...' என்று ரவி அதிர்ச்சிக்கு உள்ளானான். 'ரமேஷ் இறந்தப்போ அவனோட அப்பா "ஐயோ நான் செஞ்ச பாவத்துக்கு என் புள்ளையை காவு வாங்கிடுச்சே "னு கதறுனது என் கண்லியே இருக்கு...' என்று மேற்கொண்டு கூறினான் ரவி.

இப்பொழுது நந்தினியிற்கு தன்னை சுற்றியும் ரவியை சுற்றியும் நடந்த நிகழ்வுகளுக்கான சம்மந்தம் கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது.

'இப்போ தான் எனக்கு கொஞ்சம் கொஞ்சமா புரிய வருது... ஆனா நான் எந்த விதத்துல லிங்க் ஆகறேன்னு தெரியலை' - நந்தினி.

'என்ன புரிய வருது உனக்கு?' - ரவி.

'போன ஜென்மத்துல நீ தான் விவேக்... கொஞ்சம் கூட தன்னோட அப்பா அம்மாவை பத்தி கவலை படாம அவசரப்பட்டு நீ தற்கொலை பண்ணிக்கிட்டதுனால தான் இந்த ஜென்மத்துல இவ்வளவு கஷ்ட பட்டுருக்கே...' - நந்தினி.

'உண்மையாவா சொல்ற...' என்று சொல்லிவிட்டு ஒரு அழுக்கான ஜோல்னா பையை எடுத்து எதையோ தேடினான். அவன் செய்கையை பார்த்த நந்தினி

'யாரோட பை அது?... என்ன தேடற?' என்று கேட்டாள்.

'இது அந்த பாட்டியோட பை...' என்று சொல்லி விட்டு அந்த பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பார்த்தான். பார்த்தவுடன் அதிர்ச்சியான முக பாவத்தை வெளியிட்டான் ரவி.

அவனின் முகபாவத்தை பார்த்த நந்தினி ஆர்வத்தோடு அந்த புகை படத்தை வெடுக்கென்று ரவியிடம் பிடுங்கி பார்த்தாள்.

அது அந்த மூதாட்டியின் பழைய கருப்பு வெள்ளை குடும்ப புகைப்படம். ஜெயங்கொண்டாருக்கும் அந்த மூதாட்டியிற்கும் நடுவே விவேக் இருப்பது போல புகைப்படம் அது. அதில் இருக்கும் விவேக்கிற்கும் ரவியிற்கும் சுத்தமாக முக ஒற்றுமை இல்லை. உடனே நந்தினி ரவியிடம்

'ரவி... இந்த பையன் தான் உங்கள மாதிரி இல்லையே அப்புறம் எதுக்கு அப்படி ஒரு பேஃஸ் ரியாக்ஷன் குடுத்தீங்க...' என்று கேட்டாள்.

'சும்மா விளையாடினேன்... இது மாதிரி இன்னும் நிறைய பழைய போஃட்டோஸ் இந்த பைல இருக்கு....' என்று சிரித்தவாறே கூறிவிட்டு பேசுவதை தொடர்ந்தான்.

'சரி நான் தான் விவேக்குனே வெச்சுக்குவோம்... அவன் தற்கொலை பண்ணிக்கறதுக்கான காரணம் என்ன?' என்று கேட்டான்.

'இன்னொரு ஆச்சரியமான விஷயம் என்னனா சந்திரன் சாமியும் விவேக்கும் ஒரே ஆபிஸ்ல வேலை பாத்திருக்காங்க... விவேக் தற்கொலை பண்ணிக்கறதுக்கு முன்னாடி இவர் கிட்ட பேசிருக்கான்... அவனை கல்யாணம் பண்ண பொண்ணு மூணாவது நாளே அவனை விட்டுட்டு போயிட்டா... அதான் அவன் தற்கொலை பண்ணிகிட்டத்துக்கு காரணம்னு சந்திரன் சாமி சொன்னாரு...' - நந்தினி.

'அவனை பிடிக்கலைன்னா பொண்ணு பாத்தப்போவே வேணாம்னு சொல்லிருக்கணும்... கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் ஓடிப்போனது எந்த விதத்துல நியாயம்... அப்போ விவேக் மேல மட்டும் தப்பு கிடையாது... தப்பு அந்த பொண்ணு மேலேயும் தான்...' என்று ரவி கூறியவுடன் சட்டென்று நந்தினி தன் பக்கம் இருந்த அந்த மூதாட்டியின் பையை எடுத்து அதனுள் தேட தொடங்கினாள். அவளின் செய்கையை சந்தேகமாய் பார்த்தான் ரவி. நந்தினி அந்த பையிலிருந்து ஒரு புகைப்படத்தை எடுத்து பார்த்து அதிச்சியான முகபாவத்தை வெளியிட்டாள். அவளின் முகபாவனையை பார்த்த ரவி சிரித்தவாறே

'என்ன நந்தினி?... நான் காட்ன படத்தையே எனக்கு திருப்பி காட்டறியா?' என்று அவளிடமிருந்து புகை படத்தை வாங்கி பார்த்தான். சில நொடிகள் உற்றுப் பார்த்த ரவியும் அதிர்ச்சியுற்றான். அப்போது கைபேசி ஒலித்தது. அது கைபேசியின் புலனத்தின் (WHATSAPP) காணொளி அழைப்பு. அழைப்பு நந்தினியின் தந்தை எண்ணிலிருந்து வந்திருந்தது. அப்போது ரவி நந்தினியிடம்

'சரி... குழந்தைக்கு மெடிசின்ஸ் வாங்க வேண்டியது இருக்கு... நீ பேசிகிட்டு இரு... நான் போய்ட்டு ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் கழிச்சு வரேன்...' என்று அங்கிருந்து கிளம்பினான்.

அவன் போன பிறகு புலனத்தின் காணொளி அழைப்பை ஏற்றுக் கொண்டாள் நந்தினி. மறுமுனையில் நந்தினியின் தாயார் பத்மாவதியின் முகம் தெரிந்தது.

'நந்தினி எப்படி இருக்க?... அப்புறம் ஒரு முக்கியமான விஷயம்… யாழினியோட மாமியார் உன் புருஷன் வேலை செஞ்ச கம்பெனிக்கு பார்ட்னராம்... இப்போ எதோ பிரச்சனை போலிருக்கு... அவங்க இந்தியாவுல தான் இருக்காங்க... உனக்கு குழந்தை பிறந்ததை அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டோம்... நேர்ல வர முடியலைனாலும் உன்கூட போஃன் பண்ணி பேசறேன்னு சொன்னாங்க...' - பத்மாவதி.
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
'அப்பா எங்கே?' - நந்தினி.

'அப்பா வெளிய போயிருக்காரு... இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவாரு ... சரி என் பேத்தியை காட்டு...' - பத்மாவதி.

'அதுக்கு முன்னாடி உன்னை ஒன்னு கேக்கணும்...' என்று தன்னிடமிருந்த புகை படத்தை காட்டினாள் நந்தினி.

அதை பார்த்த பத்மாவதி அதிர்ச்சியுற்றாள். விவேக்கும் இளமையான பத்மாவதியும் தம்பதியர்களாக நின்று கொண்டிருக்கும் புகைப்படம் அது.

'இந்த போஃட்டோ ல இருக்கறது நீதானே?... இது எப்போ நடந்தது?' என்று பத்மாவதியை வினவினாள் நந்தினி.

திகைத்துப்போன பத்மாவதி

'இது...இது... எப்படி உன் கைல... பக்கத்துல யாரு இருக்கா?' என்று நந்தினியின் கேள்விக்கு பதிலளிக்க தயங்கினாள்.

'கவலை படாதே... இங்க நான் மட்டும் தான் இருக்கேன்... சொல்லு?' - நந்தினி.

'எனக்கு அப்போ பதினெட்டு வயசு... எனக்கு மேற்கொண்டு படிக்கணும்னு தான் இஷ்டம்... என்னோட வாழ்க்கையை நான் தேர்ந்தெடுக்கணும்னு ஆசை... அப்போ என்னோட தாத்தா உடம்பு முடியாம இருந்தாரு... அவரு சாகறதுக்குள்ள என்னோட கல்யாணத்தை பாக்கணும்னு ஆசை பட்டதால எனக்கு அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்ணினாங்க.... எனக்கு கல்யாணம் வேணாம்னு அடம்பிடிச்சாலும் எல்லாரும் என் மனசை மாத்த முயற்சி பண்ணினாங்க... அப்போ எனக்கு எது சரி எது தப்புனு ஆராய்ச்சி பண்ண தெரியாத பக்குவம் இல்லாத ஒரு மனநிலை... சில சமயம் கல்யாணம் பண்ணிக்கலாம்னு தோணும்... சில சமயம் கல்யாணம் பண்ணிக்காம படிப்புல கவனம் செலுத்தணும்னு தோணும்... இந்த குழப்பத்துல தான் எனக்கு அந்த கல்யாணம் நடந்துச்சு... இத்தனைக்கும் நான் கல்யாணம் பண்ண இடம் ரொம்ப நல்ல இடம்... என்னோட படிச்ச பொண்ணுங்க எல்லாரும் காலேஜ் போறத பாத்தேன்... நான் பிடிவாதமா இருந்திருக்கணுமோ... அவசரபட்டு கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டேனோன்னு தோணுச்சு... அந்த கல்யாணத்துக்கு அப்புறம் என்னை ஜெயில்ல போட்ட மாதிரி இருந்துச்சு... கல்யாணம் ஆன மூணாவது நாளே நான் அந்த வீட்டை விட்டு வந்துட்டேன்... என்னை மறுபடி சமாதான படுத்த முயற்சி பண்ணினாங்க... இந்தவாட்டி நான் பிடிவாதமா முடியாதுனு சொல்லிட்டேன்... இல்லனா தற்கொலை பண்ணிப்பேன்னு மிரட்டினேன்... என் வீட்ல இருக்கறவங்களும் என்னை கட்டாய படுத்தறதை நிறுத்திட்டாங்க... அந்த பையோனோட அப்பா அம்மா வும் எவ்வளோவோ எங்க வீட்ல பேசி பாத்தாங்க... நான் விடாப்பிடியா முடியாதுனு சொல்லிட்டேன்... அப்புறம் அந்த பையோனோட அப்பா அம்மாவும் வர்றதை நிறுத்திட்டாங்க... கொஞ்ச நாள் கழிச்சு அந்த பையன் ஒரு விபத்துல இறந்துட்டான்னு எங்க வீட்ல சொன்னாங்க... காலம் போக போக எனக்கு நடந்த அந்த கல்யாண நிகழ்வை பத்தி சுத்தமா மறந்துட்டேன்... இந்த விஷயம் உன் அப்பாவுக்கு கூட தெரியாது... உனக்கு எப்படி தெரியும்?... ' - பத்மாவதி.

நந்தினியும் நடந்ததை அவளிடம் விவரித்தாள். விவேக் விபத்தில் இறக்கவில்லை அவன் தன்னால் தான் தற்கொலை செய்து கொண்டான் என்பது பத்மாவதிக்கு புரிந்தது. முப்பத்திஐந்து வருடங்களுக்கு முன் தான் செய்த தவறு பாத்திமாவதியை இன்று கலங்க செய்தது.

'இப்படியெல்லாம் நடக்குமா?... சத்தியமா நான் மனசறிஞ்சு இந்த தப்பை பண்ணலை... என்னோட அந்த முடிவுனால இப்படி ஒரு குடும்பமே அழிஞ்சு போகும்னு நான் எதிர் பாக்கலை... நான் பண்ண தப்புக்கு என்னை தானே இந்த விதி தண்டிக்கணும் ஏன் உன்னை?' என்று கேட்டாள் பத்மாவதி.

"ரொம்ப நாளா குழந்தை பாக்கியம் இல்லாத அவருக்கு அவரோட நாற்பத்தி அஞ்சாவது வயசுல ஒரு பெண் குழந்தை பிறந்துச்சு... அந்த பொண்ணு தன்னோட இருபது வயசுல ஒரு சாலை விபத்துல இறந்துட்டா... அன்பையும் பாசத்தையும் கொட்டி வளத்த பொண்ணு இறந்ததுக்கு காரணம் அவர் செஞ்ச பாவங்கள் தான்னு நம்பினாரு..." என்று அந்த காணொளியில் முகேஷ் கூறிய வார்த்தைகளும்

"ரமேஷ் இறந்தப்போ அவனோட அப்பா ஐயோ நான் செஞ்ச பாவத்துக்கு என் புள்ளையை காவு வாங்கிடுச்சேனு கதறுனது என் கண்லியே இருக்கு..." என்று ரவி கூறியதும்

"இவனுங்களுக்கு அப்போ ரொம்ப சின்ன வயசு... ரோட்ல குப்பை பொறுக்கிக்கிட்டு பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தானுங்க... இதே வயசு பசங்க காரு பங்களானு அனுபவிக்கறத பாத்தேன்... ஏன் இந்த மாதிரி ஒரு ஏற்ற தாழ்வு உருவாச்சு?... இது உருவாகறதுக்கு மனுஷன் தான் காரணம்னா அப்புறம் ஏன் அந்த எண்ணத்தை மனுஷனுக்கு கடவுள் கொடுக்கணும்?... " என்று சூரி பேசிய வார்த்தைகளும் நந்தினியின் நினைவிற்கு வந்து அவளிற்கு ஒரு புரிதலை கொடுத்தது.

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு நந்தினி பத்மாவதியிடம் பேச தொடங்கினாள்.

'நாம படர கஷ்டத்தை விட நாம அன்பும் பாசமும் வெச்சிருக்கிற ஒருத்தர் கஷ்டப்படறதை பாக்கிறது தான் இருக்கறதுலியே பெரிய தண்டனை... நீ செஞ்ச பாவத்தை உணரணும்ன்றதுக்காக உன்னால கஷ்டப்படுற உன்னோட அன்பான ஆள் அடுத்த ஜென்மத்துல நல்ல நிலைமைல பொறப்பார்... இப்படி திங்க் பண்ணினா தான் எனக்கு இந்த ஈக்வஷன் பாலன்ஸாகுது... நீ உருவாக்குன கர்ம வினை முடிஞ்சு போச்சு... இனிமேல் நீ கவலை பட வேணாம்...' என்று நந்தினி சொல்லி கொண்டிருக்கும் போது அவளின் அலைபேசியிற்கு மற்றொரு புலன அழைப்பு வந்ததிற்கான சமிக்ஞை கேட்டது. உடனே நந்தினி தன் தாயிடம் அதை கூறிவிட்டு மற்றொரு அழைப்பின் தொடர்பை ஏற்றுக் கொண்டாள்.

'ஹலோ நந்தினி ஹியர்...' - நந்தினி.

'நந்தினி நான் உன் தங்கை யாழினியோட மாமியார் அவந்திகா பேசறேன்...' என்று குரல் கேட்டது.

'நல்லா இருக்கீங்களா?... சொல்லுங்கம்மா...' - நந்தினி.

'உனக்கு ஒரு குட் நியூஸ்...' - பிரகாஷின் தாயார்.

நந்தினி ஆச்சர்யமாக

'என்ன குட் நியூஸ் மா?' என்று கேட்டாள் நந்தினி.

'இனிமேல் உன் புருஷன் ரவி தான் வோல்கா கம்பெனியோட இந்தியன் பிரான்ச் எம். டி...' - அவந்திகா (பிரகாஷின் தாயார்).

'அம்மா நீங்க ஜோக் பண்றீங்களா?' - நந்தினி.

'இல்ல... நான் உண்மையா தான் சொல்றேன்...' - அவந்திகா.

'எப்படி?... அவருக்கு ப்ராப்பர் கம்யூனிகேஷன் ஸ்கில் கிடையாது... அதுவுமில்லாம அவர் வெறும் டிப்ளோமா தான்...' என்று நந்தினி கூறிக் கொண்டிருக்கும் போது இணையாக

"அந்த முத்தம் எனக்கு மனோபலத்தையும் பக்குவமான மன நிலையையும் கொடுத்த மாதிரி உணர்ந்தேன்... எவ்வளவு பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாவும் பக்குவதோடையும் எதிர் கொள்வேன்ற ஆற்றல் எனக்குள்ள இருக்கறது இப்போ எனக்கு தெரியுது......" என்று ரவி கூறியது நினைவிற்கு வந்தது. அவந்திகா நந்தினியிற்கு பதில் அளிக்க தொடங்கினார்.

'நான் மேஜர் ஷேர் ஹோல்டரா இருக்கற கம்பெனிகள்ல இந்த வோல்கா கம்பனியும் ஒன்னு... இந்த வோல்கா கம்பெனில வர வேஸ்ட்டை ரீசைக்கிள் பண்ற மாதிரி ஒரு டம்மி ப்லாண்ட்டை வெச்சிட்டு மொத்த வேஸ்ட்டையும் பக்கத்துல இருக்கற ஏரில கலக்கிறது எங்களுக்கு தெரிய வந்திடுச்சு... இந்த கம்பனிலேருந்து தயாராகுற ஒவ்வொரு ப்ராடக்ட் காஸ்ட்லயும் இந்த ரிசைக்கிள் பண்ற ப்ராசெஸ் காஸ்ட்டையும் சேத்து தான் விக்கறாங்க... வர லாபத்துல இந்த வேஸ்ட்டை ரிசைக்கிள் பண்றதுக்கு ஒதுக்கற மொத்த பணத்தையும் இந்த கம்பெனியோட எம்.டி யும் சேத்து நிறைய உயர் அதிகாரிகள் எடுத்துக்கறாங்க... எல்லாரையும் இந்த கம்பெனியை விட்டு நீக்கிட்டோம்... இப்போ இந்த கம்பனிய இழுத்து மூடற நிலைமை... இந்த கம்பெனில வேலை செய்யற ஊழியர்களுக்காக யாரவது இந்த கம்பெனியை வாங்கிக்க முடியுமான்னு மீட்டிங்க்ல கேட்டாங்க... நானும் ஒரு ஜப்பான் காரரும் அந்த கம்பெனியை பார்ட்னெர்ஷிப் பேசிஸ்ல வாங்கறதுக்கு முன் வந்தோம்... அப்போ புதுசா எம்.டி யையும் அப்புறம் மத்த உயர் அதிகாரிகளையும் ரெக்ரூட் பண்றதுக்கு டிஸ்கஸ் பண்ணும் போது எனக்கு உன் ஞாபகம் வந்துச்சு... அதான் நான் உன் புருஷனை எம்.டி யா செலெக்ட் பண்ணிருக்கேன்... நான் எடுத்த இந்த முடிவை இந்த கம்பெனியோட மத்த அதிகாரிங்க ஏத்துக்கவே இல்ல... உன் புருஷன் ஒழுங்கா படிக்கலை... அவர் வெறும் மெஷின் ஆப்ரேட்டரா தான் வேலை செஞ்சிருக்கார்னு சொன்னாங்க... அதுக்கு என்னோட இந்த கம்பெனியை சேத்து வாங்கின ஜப்பான் காரர் "நானும் தான் படிக்கலை... எனக்கும் தான் இங்கிலீஷ் தெரியாது... பெரிய பெரிய யுனிவெர்சிட்டில படிச்ச எம்.டியும் மத்த உயர் அதிகாரிகளும் தான் இப்போ தப்பு பண்ணி இந்த கம்பெனியோட நிலைமையை ரொம்ப மோசமாக்கிருக்காங்க... உலகத்திலேயே பெருமைவாய்ந்த நல்ல நிர்வாகத்திறமை இருக்கற மன்னர்கள்ல ஒருத்தர் தான் உங்க நாட்டோட மன்னர் அக்பர்... ஆனா அவருக்கு எழுத படிக்க தெரியாது... படிப்புக்கும் நிர்வாக திறமைக்கும் சம்மந்தம் கிடையாது... இவங்க சொல்ற ஆளுக்கு வாய்ப்பு கொடுப்போம்... இம்ப்ரூவ்மென்ட் இல்லைனா வேற ஆளை மாத்திடுவோம்"னு சொன்னாரு... அப்படி அவரு சொன்னதுக்கு அப்புறம் எல்லாரும் சம்மதிச்சிட்டாங்க... இது குட் நியூஸா இருந்தாலும் உன் புருஷன் கவனமா இருக்கணும்... அவன்மேல பொறாமை படற அதிகாரிங்களை பாத்து ஹாண்டில் பண்ணி இம்ப்ரூவ்மென்ட் காட்டிகிட்டே இருக்கணும்... இது சாதாரண காரியம் இல்லை... இது ரவிக்கு நான் குடுக்கற வாய்ப்பு கிடையாது... இது நான் உனக்கு குடுக்கற வாய்ப்பு... ஏன்னா எனக்கு உன்னோட விடாப்பிடியான ஆட்டிட்யூட் ரொம்ப பிடிக்கும்... ரவியை நீ பின்னாடி இருந்து ஒழுங்கா இயக்குவேன்னு நம்பறேன்... நான் இன்னிக்கு ஈவ்னிங் வந்து உன்னை நேர்ல பாக்கறேன்...' என்று தொடர்பை துண்டித்தார்.

"எனக்கும் பெரிய நிறுவனத்தோட நிர்வாக பொறுப்புல இருக்கணும்னு தான் ஆசை... எதனால என் ஆசை நிறைவேற மாட்டேங்குதுனு தெரியலை... ஒரு வேளை உங்களோட வரவு அந்த ஆசையை நிறைவேத்தும்னு நம்பறேன்" என்று ரவி அவளை பெண் பார்க்கும் போது கூறிய வார்த்தைகள் அவள் நினைவிற்கு வந்தது.

அப்போது கதவு திறக்க படும் ஓசை கேட்டு நந்தினி தன் பார்வையை அந்த திசையில் திருப்பினாள். கதவு திறந்தவுடன் ரவியுடன் சந்திரனும் உள்ளே வந்து கொண்டிருந்தார். அவளருகில் இருவரும் நின்றனர். சந்திரன் அந்த குழந்தையை நந்தினியிடம் பெற்றுக் கொண்டு அதன் முகத்தை பார்த்தார். அது அவரையே பார்த்துக் கொண்டிருந்தது. அவர் தன் புருவங்களை இரு முறை மேலே அசைத்து லேசாக புன்னகைத்தார். பதிலுக்கு அந்த குழந்தையும் சிரித்து தன் மழலை குரலை வெளிப் படுத்தியது.

உடனே அவர் நந்தினியை பார்த்து

'என் பொண்ணை நான் கொஞ்சும் போது எனக்குள்ள ஒரு இனம் புரியா உணர்வு பிறக்கும்... அந்த இனம் புரியா அதே உணர்வை இந்த பெண் குழந்தை கிட்ட உணர்றேன்... இது என் பொண்ணு தான்... திரும்பி பிறவி எடுத்திருக்கா... நீ ஏன் என்னை தேடி வந்தேன்றதுக்கான காரணம் எனக்கு இப்போ தான் புரியுது...' என்றார்.

"அந்த முத்தம் எனக்குள்ள ஒரு வித அதிர்வை கொடுத்துச்சு... அதே அதிர்வை இப்போ நான் நம்ம குழந்தைகிட்ட உணர்றேன்..." என்று ரவி கூறியதும்

"எல்லாரும் தனி தன்மை வாய்ந்தவர்கள்... ஒவ்வொருத்தரோட பாதையும் தேடலும் வேற வேற... ஒரே விஷயம் ஒவ்வொருத்தருக்கும் அவங்களோட தன்மையை பொறுத்து வேற வேற உணர்வை கொடுக்கும்..." என்று சந்திரன் கூறியதும் நினைவிற்கு வந்தது.

இந்த நிகழ்வை பார்த்த நந்தினியினுள் ஒரு இனம் புரியாத அதிர்வு ஏற்பட்டு அவளின் மெய் சிலிர்த்தது.

கண்களை மூடினாள். "உனக்குள்ள இருக்கற கேள்விகளுக்கான விடை உனக்குள்ளேயே கிடைக்க ஆரம்பிக்கும்... உன் கனவும் நனவாகும்.............. அப்போ உனக்கு இறைவன் எனும் கலைஞன் எவ்வளவு அழகா இம்மி பிசகாம உனக்கான நிகழுவுகளை வடிவமைச்சிருக்கானு புரியும்... அந்த தருணத்துல உன்னோட புரிதலுக்கு ஏத்த மாதிரி பல பிரபஞ்சங்களை இயக்கற அந்த கருப்பொருள் அதாவது அந்த இறைவனை நீ உணருவே..." என்று சந்திரன் கூறியதும் "நியாயமா நேர்மையா மத்தவனுக்கு துரோகம் செய்யாம இருந்தாலே போதும் கடவுள் நமக்கு நல்லது தான் செய்வார்... யார் உதவியையும் எதிர் பாத்து வாழ வேண்டாம் " என்று சிறு வயதில் தன்னுடைய தந்தை கூறியதும் நந்தினியின் நினைவிற்கு வந்தது. கண்களை திறந்தாள். அவளை அறியாமல் அவள் கண்களில் இருந்து நீர் கசிந்தது. சட்டென்று நந்தினியை திரும்பி பார்த்த சந்திரன் ஒன்றும் பேசாமல் கேள்வியாய் தன் தலையை மேலும் கீழும் அசைத்தார். அந்த அசைவின் கேள்வி ‘நீ அந்த கருப்பொருளை உணர்ந்தாயா?' என்பது தான். பதிலுக்கு நந்தினியும் ‘ஆமாம்' என்பதை தன் தலையை மேலும் கீழுமாய் அசைத்து தெரிவித்தாள். இவர்களுடைய செய்கையை பார்த்து ஒன்றும் புரியாமல் ரவி

'ரெண்டு பெரும் செய்கையிலேயே என்ன பேசிக்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?' என்று நகைத்தவாறே கேட்டான். உடனே சந்திரன் ரவியிடம் பார்வையை திருப்பி

‘ஒன்னுமில்ல... இந்த பெண் குழந்தை உன்னோட கெட்டதை எல்லாத்தையும் போக்கிடுச்சு... இனிமேல் உனக்கு நல்ல காலம் தான்னு சொன்னேன்...' என்று கூறினார்.

முடிந்தது
 

Ramcharan sundar

Saha Writer
Team
Messages
31
Reaction score
0
Points
6
முடிவுரை

இந்த நாவலை நான் தமிழில் எழுதி முடித்த பிறகு, எனது தாயார் இந்த நாவலை படிக்க வேண்டும் என ஆர்வமாக கேட்டார். நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த பிறகு தான் தங்களிடம் தருவேன் என்று பிடிவாதமாக கூறிவிட்டேன். ஆனால் நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்பதற்குள் அவர் இயற்கை எய்துவார் என்று எதிர் பார்க்கவில்லை. நீங்கள் இந்த கதையை படித்த பிறகு உங்கள் மெய்சிலிர்த்தால், என் தாயாரின் ஆன்மாவும் தங்களோடு சேர்ந்து படித்திருக்கிறது என்பது என்னுடைய நம்பிக்கை. மறக்காமல் இந்த நாவலை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள். என்னுடைய மின்னஞ்சல் முகவரி "ramcharansnovel@gmail.com" மற்றும் என்னுடைய அலைபேசியின் எண் “+919972090607”. என்னோடு பேச ஞாயிற்று கிழமைகளில் தொடர்பு கொள்ளுங்கள்.
 
Top Bottom