Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கரையும் காதலன் - கதை

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 49

அறையின் கதவு முடியிருக்க, சன்னலின் வழியே சில்லென்று காற்று ஷிரவின் முகத்தை வருடுவது போல் இருந்தது தன்னவளின் குரலை தன்னக்குள் கேட்டபின்.

"ஷ்ரவன்!" என்று தேனாய் அவளின் குரல் இனிமையாய் மீண்டும் ஒலிக்க.

"மதிம்மா! எப்டி டா இருக்க? நீ எங்க இருக்க? ஏன் என்கிட்ட பேசலை? நீ நல்லா இருக்கல்ல? அவ உன்னை அடிச்சாளா?" என்று தொடர்ந்து பதட்டமாய் விழிகள் மூடி மனதினுல் கேள்விகளை அடுக்க.

"நில்லு! ஷிரவ்! நான் நல்லா இருக்கேன். இல்ல அவ என்னை எதுவும் செயலை. ஹூம் அவ இங்க இல்ல. என் கையை மட்டும் கட்டி வச்சுருக்காங்க. ரெண்டு தடி பசங்க இருக்கா மாதிரி தெரியுது." என்றாள் மதி மெதுவாய்.

"மதி உன்னை எங்க வச்சிருக்காங்க ஏதாவது சொல்லமுடியுமா?" என்றான் ஏதோ ஒரு நப்பாசையில்.

"இல்ல ஷிரவ் இந்த ரூம் ரொம்ப இருட்டா இருக்கு. முதல்ல நீ என்கிட்ட பேசும்போது அவ வந்திருந்தா. அதான் என்னால கான்சென்ட்ரேட் பண்ண முடியலை. " என்றாள் மதி.

"நீ ஏதாவது சாப்பிட்டியா? " என்றான் கவலையாய்.

"ஹேய் ஷ்ரவன். நான் இங்க என்ன பிக்னிக்கா வதுருக்கேன். என்னை கடத்திட்டு வந்துருக்காங்க. என்னால சாப்பிட முடியலை. இங்க இருந்து எப்போ வெளிய வருவோம். உன்னை பார்ப்போம்னு உயிரை கைல புடிச்சிட்டு வச்சிருக்கேன்." என்றாள் மதி.

அவளின் வார்த்தைகளில் உயிர் ஒரு நிமிடம் தெறித்து ஓட, தொண்டைக்குழியில் வார்த்தைகள் வர மறுக்க.

மெல்ல, "மதிம்மா! எனக்கு உன்னை பார்க்கணும். ரஞ்சனி உன்கிட்ட என்ன சொன்னா?" என்றான் வார்தைகளை மென்று விழுங்கி.

"அவ உன் புருஷன்கிட்ட ஒரு விசயம் கேட்ருக்கேன். அதை செய்த உடனே உன்னை விடுட்றேன். அதுவரிக்கும் தப்பிக்க எதுவும் பண்ணாதன்னு சொன்னா?" என்றாள் மதி.

"ஹூம் " என்றான் ஷ்ரவன்.

"அவ உன்கிட்ட என்ன கேட்டா?" என்றாள் மதி.

'என்னை தான் கேக்குறான்னு எப்படி சொல்றது?' என்று தெரியாமல் முழித்த ஷ்ரவன்.

"மதி. முதல்ல நான் சொல்றதை புரிஞ்சிக்கோ. என்னைக்கும் நீ மட்டும் தான் என் உயிர்." என்றான் மெல்ல.

"ஷ்ரவன் இதை நீ சொல்லனும்னு அவசியமில்லை." என்றாள் மதி.

"மதிம்மா. நான் இப்போ எப்பவுமே உனக்கு மட்டும் சொந்தம் அதை யாராலும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மாத்த முடியாது." என்றான் ஷ்ரவன்.

"அவ என்ன சொன்னா?" என்றாள் நேரடியாக.

"ஹூம் அவ உன்னை விடனும்னா... என்னை ... அவ கல்யாணம் பன்னிக்கணும்னு சொல்றா" என்றான் நிதானமாக ஷ்ரவன்.

"என்ன?" என்றாள் மதி அதிர்ச்சியாக.

"ஆமா" என்றான் மெதுவாக.

"இல்ல... அதுமாதிரி எதுவும் நடக்க கூடாது ஷ்ரவன். அப்புறம் நான் உயிரோட இருக்கிறது நடக்காது." என்றாள் ஷன்மதி திட்டவட்டமாக.

"இல்ல மதி நீ எனக்கு நல்லபடியா இருக்கணும் அதுக்கு நான் இதை செய்யனும்" என்றான் ஷ்ரவன் வேகமாக.

மதியின் குரல் கேட்காததால் கலவரம் அடைந்த ஷ்ரவன் "மதி... மதி... ஏன் பேசமாட்ற பிளீஸ் பேசுடா" என்றான் கலக்கமாய்.

அதன்பிறகு மதியின் குரல் கேட்கவில்லை.

என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்க, விழிகள் மூடி அவனின் உயிரை இரண்டு முறை காத்த ஆபத்பாந்தவனை அழைக்க தயாரானான்.

"கருவா... என் நண்பா... எனக்கு உன்னோட உதவி தேவை. எங்க இருந்தாலும் என்கூட பேசு " என்றான் ஆர்வமாய்.

மறுநொடியே அவனின் குரல் கேட்டது.

"நண்பா! எப்படி இருக்க?" கருவா.

இதழில் ஒரு குறுநகை ஓட, "கருவா! " என்றான் ஷ்ரவன்.

"நானே தான் என் நண்பனுக்கு உதவி செய்றது தான் என் பிறப்பின் நோக்கம் தெரியுமே? இப்போ சொல்லு என்ன உதவி இல்ல என்ன செய்யணும்னு உத்தரவு போடு" என்றான் கருவன்.

"அதுவந்து ... மதியை அந்த ரஞ்சனி கடத்திட்டா" என்றான் மெதுவாய்....

"என்ன சொல்ற நண்பா? இது எப்படி நடந்தது" என்றான் அதிர்ச்சியாய்.

நடந்த அனைத்தையும் கேட்ட கருவன்.

"நண்பா நான் தங்கச்சிகிட்ட பேசணும்." என்றான் கருவன்.

"கருவா! நான் அவ்கிட்ட முழுசா சொல்றதுக்குள்ள பேசாமறுத்துட்டா" என்றான் வேதனையாய்."

"சரி நண்பா. அவங்க இடத்துல இருந்தாலும் நான் இருந்தாலும் அப்படி தான் இருப்பேன். நான் முதல்ல பேசுறேன்." என்றான் கருவன்.

"சரிடா. பேசிட்டு. என்கிட்ட உடனே பேசு. உன்கிட்ட முக்கியமா நான் கொஞ்சம் பேசணும்" என்றான் ஷ்ரவன்.

"சரி நண்பா" என்றான் கருவன்.

******************

மறுநாள் காலை ஷ்ரவன் ஏர்போர்டில் நின்றிருக்க, அவனை பார்த்து சிரித்தபடி வந்து கொண்டிருந்தாள் ரஞ்சனி.

முகத்தில் எந்த உணர்வும் காட்டாமல் அவளை பார்த்து கொண்டிருந்தான் ஷ்ரவன்.

"பரவால்லையே மாமா. வந்துட்டீங்க" என்றாள் ரஞ்சனி.

"என் உயிர் உங்கிட்டல்ல இருக்கு " என்றான் ஒற்றை வரியில்.

"சரி புரிஞ்சி வச்சிருக்கீங்க. போலாமா? பிளைட் அனனவ்ன்ஸ் பண்ணிட்டாங்க." என்றாள் ரஞ்சனி.

"ம்‌ம்" என்று அவள் பின்னே செல்ல மனமில்லாமல் சென்றான்.

விமானம் ஏறாமல் நிற்கும் ஷ்ரவனை கேள்வியாய் நோக்கினாள் ரஞ்சனி.

"என்ன?" என்றாள்.

"நான் இங்க இருந்து உன்கூட வரணும்னா என் மதியோட குரலை கேட்கணும்" என்றான் முடிவாய்.

எழும் சீற்றத்தை கட்டுபடுத்தி "இப்போ என்ன அவகிட்ட பேசணும் அவ்ளோ தான? சரி பேசு. ஆனா இதுதான் கடைசியா இருக்கணும்" என்றாள் முறைத்து.

"சரி" என்றான் ஷ்ரவன் மதியின் குரலை கேட்க ஏங்கியவனாய்.

"ஹெலோ! அவளை பேச வைங்க " என்றாள் ரஞ்சனி காட்டமாய்.

"இந்தா " என்று ஷ்ரவனிடம் போனை தர ஆவலாய் அவளின் குரல் தேடி மனம் ஓடியது.

"ஹலோ!" என்றான்.

"ஹலோ" அவளின் குரல் கீச்சு குரலாய்.

"ஹலோ மதிம்மா" என்றான் தன் பிறவியின் பயன் அடைந்ததாய். மகிழ்ச்சிக்கொண்டு.

"ஷ்ரவன்" அவளின் குரல் ஆனந்தத்தின் பெருக்கில் கண்ணீரோடு கேட்டது.

"மதிம்மா" என்றான் அவனின் விழிகளும் கண்ணீரை சுரக்க, அவனிடமிருந்து போனை வெடுக்கென்று பிடுங்கினாள் ரஞ்சனி.

"போதும். குரலை கேட்டாச்சு இல்ல. இப்போ போலாம். இல்ல அப்புறம் நடக்கிற எடுக்கும் நான் பொறுப்பில்ல" என்றாள்.

எதுவும் பேசாமல் அவளின் சென்றான் தன்னவளின் நெஞ்சினில் சுமந்தபடி.

'வரேன் வரேன்... மதிக்குட்டி. சீக்கிரமா உனக்காக' மனதினில் நினைத்தபடி.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 50

யாரென்று தெரியாத மக்கள் கூடியிருக்க மாப்பிள்ளையின் கோலம் கொண்டு கையில் மாலையோடு நின்றிருந்த ஷ்ரவனின் மனதில் நடுக்கம் குடிகொண்டிருந்தது.


"கருவா! உன்னை தான் மலை போல நம்பிட்டு இருக்கேன். என்னை இதுலர்ந்து காப்பாத்து" என்ற ஷிரவனின் குரலிற்க்கு பதிலாக, "எதுக்கு நண்பா டென்ஷன் ஆகுற? நான் இருக்கேன்ல நான் பார்த்துக்குறேன்" என்றான் கருவன்.


"உனக்கென்ன? நீ எங்க இருக்கன்னே தெரியலை என் மதி எங்க இருக்கான்னும் தெரியலை... நான் மட்டும் இங்க நெருப்பு மேல நிக்கற மாதிரி இருக்கேன். இதுல ஏதாவது சொதப்புச்சு அவ்ளோ தான் சொல்லிட்டேன்" என்றான் கடுமையாக எச்சரிக்கும் தொனியில்.


"ஹா ஹா நண்பா நான் இருக்கேன்ல நான் பார்த்துக்குறேன். நீ மட்டும் நான் சொன்ன மாதிரி செஞ்சிடு போதும்" என்றான் கருவன்.


"ஹிம் ஒரு விஷயம் சொல்லட்டா?" என்றான் கருவன்.


"என்ன சொல்?" என்றான் ஷ்ரவன்.


"அண்ணி இருக்க இடத்தை கண்டுபிடிச்சாச்சு. இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்களை மீட்டுடுவேன். அதனால நீ கவலை படாத" என்றான் கருவன்.


​

"என்ன டா முதல்ல தங்கச்சின்ன? இப்போ திடீர்னு அண்ணின்னு சொல்ற?"என்றான் ஷ்ரவன்.


"அதெல்லாம் அப்படி தான்." என்று கருவன்.


"டைம் ஆச்சு வா உள்ள போகலாம்" என்று ரஞ்சனி ஷ்ரவனின் கரம் பற்றி பதிவு திருமணம் செய்ய கூட்டி சென்றாள்.


அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து "மாலைய மாத்திகோங்க" என்றார் எதிரில் இருந்தவர்.


அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்தவன், 'யோவ்! ஏன் யா நீ வேற? இருக்கிற அவசரம் புரியாம?' என்று மனதினுள் அர்ச்சனை செய்தாலும்.


"இல்ல முதல்ல தாலி கட்டிட்டு தான் அப்புறம் மாலை மாத்துவேன்" என்றான் ஷ்ரவன் கருவனின் திட்டப்படி.


ரஞ்சனியின் முகம் அவனின் சொற்களில் பூவாய் மலர்ந்திட அருகில் வந்து நின்ற இன்னொரு உருவத்தை கவனிக்க தவறிவிட்டாள்.


"அப்போ சரி. தாலி கட்டுங்க" என்று கொடுத்தார்.


யாரும் எதிர்பார்க்கா வண்ணம்.ஷ்ரவன் கரத்தில் இருந்த தாலியை பிடுங்கி கண்ணிமைக்கும் நேரத்தில் அவளின் கழுத்தினில் கட்டினான் கருவன்.


என்ன நடந்தது என்று நினைக்கும் முன்னரே அவளின் கழுத்தில் தாலி ஏறியிருந்தது.


ஷ்ரவனின் கரங்களில் வாழ்க்கை மலர போகிறது என்று ஒரு நொடி மனதினில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க தலை குனிந்தவள் அருகில் மின்னலென வந்த உருவத்தின் அருகாமமையை உணர்ந்து நிமிர அங்கே நின்றிருந்தவனை கண்டு அதிர்ந்தாள்.


'க...வி..ன்" என்றாள் அதிர்ச்சியாக.


"என்ன ரஞ்சு எப்படி இருக்க?" என்றான் குரலில் நிதானம் காட்டி விழிகளில் கோபம் நிறுத்தி.


எதுவும் பேசாமல் அமைதியாய் நின்றவளின் வெகு அருகில் சென்றவன்.


"ஒரு வருஷத்துக்கு முன்னாடி நீ எனக்கு போட்ட நிச்சய மோதிரம். ஞாபகம் இருக்கா. நிச்சயம் முடிஞ்ச மறு நொடிலர்ந்து நீ ஏன் மனைவியாகிட்ட தெரியுமா? அதான் எனக்கு சேர வேண்டியதை எடுத்துக்க வந்தேன். " என்று மெல்ல சிரித்தான்.


†******
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 51

தனக்காக காத்திருக்கும் ஜீவனை எண்ணி உள்ளம் நெகிழ்ந்தாலும் அவளை காண ஆவல் கொண்டு தவித்திருந்தான் ஷ்ரவன்.

விமானத்திலிருந்து இறங்கியதும் விழிகள் மதியை தேட அவளை எங்கும் காணாது ஏமாற்றம் ததும்ப நிற்க ஷிரவனை நந்து ஆரத்தழுவி "எல்லாம் நல்லபடியா முடிஞ்சுத்துடா. நம்ம மதி நமக்கிட்டா எந்தவித இடையூறும் இல்லாம வந்துட்டா" என்று சிரித்தான்.

அவனை கண்டு சிரித்த ஷ்ரவன், "ஹும்ம்.. மதி வரலையாடா?" என்றான் ஏக்கமாய்.

அவனின் தவிப்பை உணர்ந்தவன்.

"இல்லடா. அவ ரொம்ப டையர்ட்டா இருக்குனு சொல்லி வீட்லையே இருக்கா" என்றான் நந்து.

மனம் சுருக்கென்று தைக்க, அவன் கூறுவது எதுவும் நம்பும்படியா இல்லை என்றாலும் எதுவும் கூறாமல் சென்றான் ஷ்ரவன்.

பயணம் நந்து வீட்டை அடையாமல் பாதை மாற "எங்கடா போறோம்?" என்றான் புருவம் சுருக்கி.

"அது ஷரவா! மதி வந்த உடனே நேரா வீட்டுக்கு போறேன்னு சொல்லி கிளம்பிட்டா.அங்க தான் போறோம்" என்றான் நந்து.

"எதுக்கு அங்க போனா?" என்றான் கோபம் உள்ளடக்கி.

"எனக்கு தெரியலை டா. நானும் சொன்னேன். நீ வந்தவுடனே போகலாம்னு அவ தான் நான் உடனே போகணும்னு போயிட்டா" என்றான் நந்து.

எதுவும் பேசாமல் விழிகள் மூடி அமைதியாக யோசிக்கலானான் ஷ்ரவன்.

'எதுக்காக என்னை கூட பார்க்க வராம போயிட்டா? நான் ரஞ்சனிய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதால என் மேல கோபமா இருப்பாளோ?' என்று கேள்வி கேட்டு பதில் கிடைக்காமல் மனம் உழன்றான்.

"ஒரு வேலை நாம ரஞ்சனிய கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதால கோபமா இருக்காளோ? இப்போ நான் என்ன பண்றது? என் மதிக்கு அவ்ளோ சீக்கிரம் கோபம் வராது. அந்த எமன்கிட்டையே போராடி என்னை மீட்டு வந்தவ, இன்னொருத்திக்கு என்னை பங்கிடனும்னா சும்மா இருப்பாளா? எரிமலையா வெடிக்க போராளோ? இல்லை என்னை விட்டு போய்ருவாளோ? இல்ல அது மாதிரி எதுவும் நடக்க கூடாதுஎன் மதி இல்லாம என்னால வாழ முடியாது.' என்று தன் நினைவுகளுக்குள் பேசி கொண்டிருந்தவனின் கவனத்தை கலைத்தது நந்துவின் குரல்.

"டேய் வீடு வந்துடுச்சுடா. இறங்கு " என்றான்.

"நீயும் வாடா." என்று நந்துவையும் அழைக்க.

"இல்லடா. நூயன் வீட்டுக்கு போகணும். வீட்ல அகல் மட்டும் தனியா இருக்கா. நாளைக்கு இங்கயே வந்துடலாம்னு எல்லாத்தையும் தனியா பேக் பண்ணிட்டு இருக்கா. நான் போனா கொஞ்சம் ஹெல்ப் பண்ணுவேன்." என்றான் நந்து.

"அப்படினா இருடா நாங்களும் வரோம். நீங்க மட்டும் எவ்ளோ தனியா செய்வீங்க." என்றான் ஷ்ரவன்.

வேகமாக இறங்கிய நந்து நண்பனின் கரங்களை தன் கரங்களுக்குள்கோர்த்து கொண்டு மெல்ல சிரித்தான்.

"ஷரவா. அங்க எல்லாத்தையும் நான் பார்த்துகுறேன். உங்களுக்குள்ள என்ன பிரச்சனை எனக்கு தெரியாது. ஆனா மதி ஏதோ டென்ஷன்ல இருக்கா அது மட்டும் தெரியும். எத்தனை ஜென்மம் எடுத்தா என்ன? கல்யாணம் ஆன நாள்லர்ந்து ஏகபட்ட பிரச்சனை ஒண்ணுமேல ஒண்ணு அடுக்கி கொண்டே போக ரொம்ப சிரமப்பட்டு இப்போ தான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கு. இன்னும் நீங்க ரெண்டு பேரும் வாழவே ஆரம்பிக்கவே இல்ல. முதல்ல மதிய போய் பாரு. பாவம்டா சின்ன பொண்ணு. என்ன பிரச்சனை இருந்தாலும் முதல்ல மனசு விட்டு பேசுங்க. எல்லாம் சரியாகும். சீக்கிரமா வாழ்க்கைய ஆரம்பிங்க." என்று ஷ்ரவனை அணைத்து கொண்டான்.

நண்பனின் சொற்களில் நெகிழ்ந்து போன ஷ்ரவன் "தாங்க்ஸ் டா" என்றான்.

"எனக்கெதுக்குடா தாங்க்ஸ்? உள்ள போ" எண்டு நந்துவும் கிளம்பினான்.

கற்பனையில் பல எண்ணங்கள் ஓட, எகிறும் நெஞ்சோடு வீட்டுக்குள் நுழைந்தவனின் விழிகள் மதியை தேடினாலும் இத்தனை போராட்டங்களுக்கு பிறகு தன் வீட்டிற்குள் மனிதனாய் நுழைந்துவுடன் நெஞ்சில் ஒரு நிம்மதி பரவியது.

"அப்பாடா எல்லாம் ஒரு வழியா முடிஞ்சி இந்த வீட்டுக்குள்ள முழுசா வருவேன்னு நினைக்கவே இல்ல. எல்லாமே கடவுளோட செயல் தான். என் மதியோட இந்த வீட்ல சந்தோஷமா வாழணும்ன்ற என் கனவு ஏக்கம் எல்லாம் தீர போகுது." என்று உள்ளுக்குள் பூரித்தான்.

"மதி." என்றான் மெதுவாய் முன்னறையில் இருந்தபடி.

பூஜையறையில் இருந்து கையில் ஆரத்தியுடன் வெளிவந்தவள் ஷ்ரவனை கண்டதும் விழிகளில் ஒளி பரவ மறுநொடி எந்த சலனமும் காட்டாமல், " வாங்க" என்று உள்ளே சென்றுவிட்டாள்.

'என்ன இவ? பார்த்துட்டு வெறும் வங்கன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டா' என்று தனக்குள்ளே யோசித்தவன் மாடியேற.

"ஒரு நிமிஷம்" என்று மதியின் குரல் கேட்க திரும்பினான்.

"ஹ்ம்ம் சொல்லு மதி" என்று கீழே இறங்கினான். 'ஹப்பா பேசிட்டா' என்று உள்ளுக்குள் குதித்துக்கொண்டு.

"எனக்கு நேரமாகுது. நான் கிளம்பனும் இதுல சைன் பண்ணுங்க" என்று ஒரு கவரை அவன் முன் வைத்துவிட்டு அருகே இருந்த அறைக்குள் சென்றாள்.

'எதுக்கு நேரமாகுது? எங்க போகணும்? என்ன சைன் பண்ணனும்? ஒன்னும் புரியலையே' என்று பிரித்து பார்த்தவனுக்கு இருண்டு கொண்டு வந்தது.

'என்னது விவாகரத்தா? எதுக்கு இந்த முடிவு?' என்று திணற, "மதி" என்று கோபமாய் கர்ஜித்தான்.

ஒன்றுமே நடக்காதது போல பெட்டியுடன் வெளியே வந்தாள் மதி.

"சைன் பண்ணிட்டீங்களா? நான் கிளம்பனும். ஜெய் வந்துருவார்" என்றாள் அவசரமாய்.

"எதுக்கு இப்போ என்னை விவாகரத்து பண்ணனும்ன்ற முடிவுக்கு வந்துருக்க? யாரு ஜெய்?" என்றான் விழிகள் சிவக்க கோபத்தை அடக்கி கொண்டு.

"உங்களை காதலிச்சு கல்யாணம் பண்ண நாள்லர்ந்து நான் படாத கஷ்டம் இல்ல. எல்லாம் உன்கூட சேர்ந்து வாழனுமன்ற ஆசைல தான். ஆனா எவளோ ஒருத்தி என்னை கொன்னுடுவேன்னு மிரட்டின உடனே அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டே. நீ அவளை கல்யாணம் பண்ணிகிட்டப்புறம் நான் வெளிய வந்து என்ன பிரயோஜனம். அதான் மறுபடியும் வேற யாராவது திரும்பி என்னை கடத்திவச்சு கல்யாணம் பண்ண சொன்னா சரின்னு போகுமாட்டேன்னு என்ன நிச்சயம்? அதனால ஒரு முடிவுக்கு வந்துட்டேன். எனக்கு விவாகரத்து வேணும். நான் நிம்மதியா எந்த பிரச்சனையும் இல்லாம என்னை உயிருக்குயிரா விரும்பின எங்க அத்தை பையன கல்யாணம் பண்ணப்போறேன். இப்போ அவர் வந்துடுவார். இன்னைக்கு அவருக்கும் எனக்கும் நிச்சயம். இதோட இங்க வரமாட்டேன்." என்றாள் மதி படு காஷ்வலாய்.

மதி பேசி முடிக்கவும் வெளியில் கார் ஹாரன் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.

†*****
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 52

"அவர் வந்துட்டார். நான் கிளம்பனும். எனக்கு நேரமாகுது." என்றவள் மொபைல் அடிக்க.

"ஹலோ!" என்றாள் ஷ்ரவனை பார்த்தபடி.

"ஒரு டூ மினிட்ஸ் ஜெய் இதோ வந்துடறேன். என்ன வரிங்களா? ஒஹ் ஷுயூர் வாங்க" என்று போனை வைத்தவள்.

"ஜெய் உங்களை மீட் பண்ணனுமாம். வரார்" என்றாள் முகத்தில் பூரிப்புடன்.

இடிமேல் இடியாய் விழ ஒன்றுமே புரியாமல் சிலையாய் நின்றிருந்தான் ஷ்ரவன்.

"ஹாய் மதி!" என்று வாசலில் ஐந்தடி உயரம் உள்ள அழகான இளைஞன் நிற்க, மதி சிரித்தபடி "வாங்க ஜெய்" என்று அவனிடம் செல்ல "ஹ்ம்ம்" சிரித்து மதியின் தோளில் கரம் போட்டு தன்னோடு அணைத்தபடி ஷ்ரவனிடம் நடந்தான்.

"ஹாய் மிஸ்டர்.ஷ்ரவன். ஐ ஆம் ஜெய். மதியோட அத்தை பையன். சிங்கப்பூர்ல பிஸ்னெஸ் பண்றேன். எப்போ எனக்கு ஓகே சொல்லுவன்னு எத்தனையோ வருஷமா கேட்டு காத்துட்டு இருந்தேன். மதி உங்களை மேரரேஜ் பண்ணப்புறம் அப்படியே விட்டுட்டேன். பட் மதி இப்போ எனக்கு ஓகே சொல்லிட்டா. எனக்கு ரொம்ப சந்தோஷம்." என்றான்.

ஷ்ரவனுக்கு தன் இதயத்தை யாரோ தனியாக பிடிங்கி எடுப்பது போல் இருந்தது.

"மதி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான் தவிப்பாய் உள்ளே சென்ற குரலில்.

"உங்களுக்கும் எனக்கும் எதுவும் இல்லை பேசறதுக்கு. ஹ்ம்ம் வேணா இதை சைன் பண்ணி யார்கிட்டையாவது கொடுத்து விடுங்க. எங்களுக்கு டைம் ஆகுது. நாங்க கிளம்பனும்" என்று ஜெய்யிடம் திரும்பி "நாம் கிளம்பலாம்" என்றாள் மதி.

"மதி பிலீஸ்" என்றான் ஷ்ரவன் கெஞ்சலாய்.

மதி இல்லாமல் தன்னால் உயிர் வாழமுடியுமா என்பதைவிட மூச்சுவிடமுடியுமா என்பதே சந்தேகமாக இருந்தது ஷ்ரவனுக்கு.

"ஓகே மதி. எனக்கு இங்க பக்கத்துல ஒரு சின்ன வேலை இருக்கு முடிச்சிட்டு வந்துடறேன். அவர் ரொம்ப கெஞ்சுறார். பேசிடு நான் வந்துடறேன்" என்று கிளம்பினான் ஜெய்.

அவன் செல்வதைதே மதி பார்க்க, மதியையே ஷ்ரவன் பார்த்து கொண்டிருந்தான்.

ஷ்ரவனிடம் திரும்பியவள். கைகளை கட்டிக்கொண்டு "சொல்லுங்க என்ன பேசணும்?" என்றாள் அவன் விழிகளை பார்த்தபடி.

"மதி என்ன இதெல்லாம்? உன்னால நான் இல்லாம இருக்க முடியுமா? திடீர்னு எப்படி வேற கல்யாணம் பண்ண போற? அப்போ நான்? என்னை பத்தி யோசிக்கலையா? நீ இல்லாம நான் என்ன பண்ணுவேன்?" என்றான் ஏக்கம் வலிகள் நிறைந்த குரலில்.

"உங்களால நான் இல்லாம இருக்க முடியும்போது. திடீர்னு வேற கல்யாணம் பண்ணமுடியும்னு போது, என்னை பத்தி நீங்க யோசிக்கலையே? ரிஜிஸ்டர் ஆஃபீஸ் போய்ட்டு கல்யாணம் பண்ணிருந்திங்கன்னா என்ன பண்ணிருப்பிங்களோ அதையே பண்ணுங்க" என்று அருகே இருந்த அறைக்குள் செல்ல அவளை பின் தொடர்ந்து வேகமாக சென்ற ஷ்ரவன் அறையை தாழிட்டான்.

வேகமாக திரும்பிய மதி, "இப்போ எதுக்கு கதவை மூடினீங்க? கதவை திறங்க நான் வெளிய போகணும். ஜெய் வெய்ட் பண்ணுவார்." என்று கதவை நோக்கி நகர.

"சாரி மதி. என்னால நீ இல்லாம இருக்க முடியாது. ஆமா ஒத்துக்குறேன். உன்னை காப்பாத்த அவளை கல்யாணம் பண்ணிக்க சரி சொன்னேன். ஆனா அது எல்லாமே டிராமா தான். அதுக்குள்ள கருவன் உன்னை தேடி கண்டுபிடிக்கனும் அது தான் எங்க திட்டம். ரஞ்சனிய திசை திருப்ப தான் அந்த மாதிரி நடிச்சோம். ஆனா அதுக்குள்ள நீ இங்க என்ன செஞ்சுருக்க? அவ்ளோ ஈஸியா நீ என்னை விட்டு போக முடியாது. அதுக்காக அந்த ஜெய்யை கொலை பண்ணக்கூட தயங்க மாட்டேன்." என்று மதியை நெருங்க.

"இப்போ எதுக்கு கிட்ட வரிங்க?" என்று பின்னால் நகர்ந்தாள்.

"என்னை மறந்துட்டு உன்னால அவன்கூட வாழமுடியுமா?" என்று முன்னேற.

"முடியும் முடியாது உங்களுக்கு தேவையில்லை. முதல்ல தள்ளுங்க" என்றாள் மதி.

"நான் உன்மேல உயிரையே வச்சிருக்கேன். " என்று மதியை அணைத்துக்கொள்ள திமிறினாள் மதி.

"விடுங்க" என்று ஷ்ரவனை தள்ளிவிட.

"இப்படி தள்ளிவிட தான் ஆத்மாவா இருந்த என்னை உன் உயிரை பணயம் வச்சு உயிரோட கொண்டு வந்தியா?" என்று விழிகள் கலங்கினான் ஷ்ரவன்.

"ஹ்ம்ம்" என்று எதுவும் சொல்லாமல் மதி எங்கோ பார்க்க, மீண்டும் மதியை அணைத்து கொண்டான்.

வேகமாக ஷ்ரவனை தள்ளிவிட்டவள் அவன் எதிர்பார்க்கும் முன் கதவை திறந்து வெளியே சென்றாள். சுதாரித்து அவளுக்கு முன் வாசல் கதவை பூட்டினான் ஷ்ரவன்.

"என்னால நீ இல்லாம இருக்க முடியாதுடி" என்று கூறவும் எதுவும் பேசாமல் மதி வேகமாக மாடியேறினாள் தங்கள் அறைநோக்கி.

அவளை பின்தொடர்ந்து வேகமாக ஓடிய ஷ்ரவன் தங்கள் அறைக்குள் நுழைய பார்க்க.

"போய்டுங்க ஷ்ரவன்." என்று கத்தினாள் மதி.

"முடியாது" என்று கதவை மூடவிடாமல் தடுத்தான்.

"அப்புறம் என்னை உயிரோட பார்க்க முடியாது"என்று மதி கூற.

"பரவால்ல செத்தாலும் ரெண்டு பேரும் ஒண்ணா சாகல்லாம் " என்று பலமாக தள்ளி கதவை திறக்க அதிர்ந்து போனான்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 53

கதவை வேகமாக தள்ளி கொண்டு உள்ளே வந்த ஷ்ரவன் சுற்றி முற்றி பார்த்தான். அந்த அறை ஒருவரும் இல்லாமல் காலியாக இருந்தது.

'உள்ள தான வந்தா அதுக்குள்ள எங்க போனா?' என்று மீண்டும் ஒரு முறை அவசரமாய் தேட கடைசியாய் அவன் பார்வை நின்ற இடம் படுக்கையறையின் பால்கனி.

அங்கும் சென்று பார்க்க, திறந்திருந்த மாடி கதவை கண்டவன்.

'மேல போய்ட்டாளோ?' என்று யோசிக்க.

' எல்லார் வீட்லயும் ஒரே வழி தான் இருக்கும் மாடிக்கு, ஆனால் நீ தான் இங்கே இருந்தும் ஒரு வழி வேணும்னு சொன்ன இப்போ மதி இந்த வழியா மேல போய் மறுபடியும் வீட்டுக்குள்ள போய் வெளில போய்டுவாளோ?' என்று மனம் அஞ்ச.

'அதெப்படி போக முடியும் நான் பூட்டிட்டேனே? சாவி என்கிட்ட தான இருக்கு' என்று அறிவு குத்துகளிக்க.

'போதும் நிப்பாட்டு. ஆனாலும் உனக்கு அறிவு கம்மி தான். உங்கிட்ட மட்டுமா சாவி இருக்கு? அவகிட்ட கூட தான் இன்னொன்னு இருக்கு' என்றது மனம்.

'ஆமால்ல... அய்யய்யோ என்னை இப்படி வடிவேல் மாதிரி பேசவச்சிட்டாளே? மதி நீ மட்டும் என்கிட்ட மாட்டின அவ்ளோ தான்' என்று ஷ்ரவன் புலம்ப.

'இப்படியே பேசிட்டு இருந்தா மதிக்கு அந்த ஜெய் பயகூட நிச்சயம் முடிஞ்சிரும். அப்புறம் நீ எங்கிருந்தாலும் வாழ்கன்னு பாட்டு பாட வேண்டியது தான். சீக்கிரம் போ' என்று மனம் விரட்ட.

'இவன்வேற எப்படி புதுசா வந்தான். என் மதிய கல்யாணம் பண்ணிப்பானாம். எவ்ளோ திமிரு இருக்கும்? இன்னொரு தடவை அவனை பார்த்தேன். முகரைய முதுகு பக்கம் திருப்பிடறேன்.' என்று வேகமாக மாடியேறினான்.

மாடி கதவும் மூடியிருக்க, எரிச்சலாக சாவியை போட்டு கதவை திறந்தவுடன் ஷ்ரவன் மீது பூமழை பொழிந்தது.

ஒருநிமிடம் என்ன நடந்தது என்று புரியாமல் முழித்துக்கொண்டு அறையை நோட்டம்விட்டான்.

அங்கே ஷ்ரவனின் குடும்பத்தினர் அனைவரும் நின்றிருந்தனர்.

ஷ்ரவனின் அம்மா (சித்தி), அப்பா (சித்தப்பா), மதியின் பெற்றோர், கருவன், ரஞ்சனி, அகல்யா, நந்து அனைவரையும் பார்த்தவன்.

அங்கே "welcome home shravan" என்று வாசகம் இருந்தது.

மனதுக்கு இன்ப அதிர்ச்சியாக இருத்தது.

"டேய் இப்போ தான் நீ போன அதுக்குள்ள எப்படி வந்த?" என்று நந்துவை நேராக முறைத்தான்.

"ஹீ..ஹீ.. தங்கச்சி உன்னை ரூமுக்குள்ள கூப்பிட்டு போனது நான் உள்ள போறதுக்கு தாண்டா. பாவம் சின்ன புள்ள ஆசை பட்டுச்சு. அதான்" என்றான் நந்து.

கருவனிடம் திரும்பியவன் "டேய் நீ என்கூட வரவே இல்லையே? அப்புறம் எப்படி நீ இங்க? அதுவும் அவளோட?" என்று முகத்தை அஷ்டகோனலாக மாற்றினான் ஷ்ரவன்.

"ப்ரதர்! என்னப்பா திடீர்னு இப்படி கேக்குற? முதல் முதலா கல்யாணம் ஆகி இப்போ தான் வந்துருக்கேன். வாடான்னு கூப்பிடாம ஏன்டா வந்தன்னு கேக்குறியே இது நியாயமா?" என்றான் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு.

எதுவும் பேசாமல் இறுகிய முகத்துடன் ஷ்ரவன் அமைதியாய் நிற்க, அவனை பார்க்காமல்

"மாமா என்னை மன்னிச்சிடுங்க. நான் இங்கே நடந்த பிரச்சனைக்கு காரணம். இனி எப்பவும் அதுபோல் நடக்காது. " என்றாள் ரஞ்சனி.

"ரஞ்சனி பரவால்ல விடு. இதெல்லாம் நடக்கனுமன்னு இருக்கு. நடந்துடுச்சு. காயம் பெருசுதான் ஆற நாள் ஆகும். நீ வெய்ட் பண்ணதான் வேணும்." என்றாள் மதி அவளை நோக்கி நகர்ந்தபடி.

ஷ்ரவன் வெடுக்கென்று திரும்பி மதியை முறைக்க அவன் பார்வையின் ரௌத்திரம் அவளை நகராமல் நிறுத்தியது.

"அவ உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க நினைச்சா அதுமட்டுமா உன் உயிரோட விளையாட என்னென்ன சொன்னான்னு எனக்கு தான் தெரியும். எதுவும் தெரியாம அவளை மன்னிக்கிறேன்னு சொல்ற? உன்னை மாதிரியே எதிர்ல இருக்கவங்களும் நல்லவங்கன்னு நினைக்காத. இவ்ளோ பிரச்சனைக்கும் இவளும் ஒரு காரணம் என்னைக்கும் மன்னிக்க முடியுமான்னு தெரியாது. காலம் தான் பதில் சொல்லணும். ஆனா கருவனோட மனைவியா அவங்களுக்கு இந்த வீட்ல இடம் உண்டு." என்று கருவனை பார்த்து சிரித்தான் ஷ்ரவன்.

கருவன் நன்றியோடு ஷ்ரவனை அனைத்து கொள்ள, "எப்பவுமே எனக்காக நிறைய செஞ்சுருக்க. உனக்காக என்னால முடிஞ்சது" என்றான் ஷ்ரவன்.

"மாமா நல்லா இருக்கீங்களா? " என்று மெதுவாய் சிரித்து கேட்க, கண்ணீரோடு ஷ்ரவனின் கரங்களை பற்றிக்கொண்டு " என் பொண்ணுக்கு நீங்க தான் உயிருன்னு புரிஜிக்கிட்டு தான் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன். ஆனா நீங்க இல்லாம என் பொண்ணு பட்ட அவஸ்தைங்க நரகவேதனை. என் பொண்ணோட வாழ்க்கை இப்படியே போய்டுமோ தீர்வு இல்லையான்னு நான் கடவுள்கிட்ட அழாத நாளே இல்ல. கதவில் என் வேண்டுதலை நிறைவேத்திட்டார். ரொம்ப சந்தோஷம் நீங்க ரெண்டு பேரும் எப்போவும் சந்தோஷமா இருங்க" என்று கண்கலங்கினார்.

"உங்க பொண்ணு நல்லா பார்த்துப்பேன்" என்று சிரித்தான் ஷ்ரவன். பின் தன் பெற்றோரை பார்க்க, "அம்மா" என்று அன்னையை அணைத்து கொண்டு சில நிமிடங்கள் மௌனமாய் கழிந்தது.

"அப்பா" என்றான் மெதுவாய் தயங்கி. அவனின் குறளுக்காக காத்திருந்தவர் வேகமாய் அணைத்துக்கொண்டு கண் கலங்கினார்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 54

"அப்பா" என்றான் ஷ்ரவன் தயக்கமாய்.

தேக்கி வைத்திருந்த வெள்ளம் மடைதிறந்து கொட்டியது போல் அருவியாய் ஊற்றியது கண்ணீர்.

"ஷிரவா... உன்னை முழுசா இழந்துட்டேன்னு நினைச்சிட்டேன்ப்பா. ஒரு நாளும் உன்கிட்ட பாசமா பேசினத்து இல்ல. அப்பான்னு நான் எதுவும் செய்யலை அதுவே என்னை கொன்னுக்கிட்டு இருந்தது பா" என்றான் நெகிழ்ச்சியாய்.

"அப்படி எல்லா சொல்லாதீங்கப்பா. எனக்கான உங்க பாசத்தை எல்லாம் உள்ளுக்குள்ளையே வாசு பூட்டிக்கிட்டீங்க. உங்களுக்கு பயன் எங்க நான் பெருசா வளர்ந்து உண்மை தெரிஞ்சு உங்களை விட்டு போய்டுவேனோன்னு. சரியா பா... நீங்க ரொம்ப நல்லவர்பா. யாருக்கும் உங்களால கெடுதல் நினைக்க முடியாது. என்மேல அதிகமா பாசம் வச்சிருக்கீங்க" என்று கட்டி தழுவினான் ஷ்ரவன்.

"இந்தாப்பா. " என்று கையில் இருந்த காகிதங்களை நீட்ட, வாங்காமலே என்னவென்று புரிந்தவன் "என்னப்பா இது?" என்றான் மென்மையாய்.

"இது உனக்கு சேர வேண்டிய சொத்துக்கள் பா" என்றார் தெளிவாய்.

"இப்போ இதுக்கு என்னப்பா அவசரம்? இத்தனை வருஷமா நீங்க இந்த சொத்தை காப்பாத்த எவ்ளோ கஷ்டப்பட்டு உழைசிங்காண்ணு எனக்கு தெரியும்பா அதுவும் இல்லாம எனக்கு என்னோட பிஸ்னெஸ் இருக்கு. நீங்க தான் இதை பார்த்துகனும். உங்களுக்கு ஹெல்ப் வேணும்னா நான் பன்றேன் இல்லன்னா நம்ம வீட்டு மாப்ள நந்து இருக்கார்." என்றான் ஷ்ரவன் சிரித்துக்கொண்டு.

என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் அமைதியாய் இருந்தவர் "சரிப்பா" என்று சிரித்தார்.

"சரி உங்க எல்லாரோட பாசமலர் பேச்சு முடிஞ்சதுன்னா சாப்பிடபோலாமா? எனக்கு வேற ரொம்ப பசிக்குது. ரொம்ப நேரம சமைச்சி வச்சா எல்லாமே சீக்கிரம் என்னை சாபிடுங்கன்னு கூப்பிடுது." என்றாள் பாவமாய் வயிற்றை பிடித்துக்கொண்டு.

எல்லோரும் அமைதியாய் ஒரு நிமிடம் மதியை பார்த்து பின் அனைவரும் ஒன்று சேர சிரித்தனர்.

உணவை முடித்து மனம்விட்டு அனைவரும் பேசி மகிழ்ந்து இறுதியில் பெரியவர்கள் விடைபெற்றனர்.

கருவனும் "சரி நாங்க கிளம்பறோம்" என்றான் ஷிரவனிடம்.

"ஏண்டா இரு." என்றான் ஷ்ரவன்.

"இல்ல எனக்கு வேலை இருக்கு" என்று அவர்களும் கிளம்பிவிட,

"சரிடா நாங்களும் கிளம்பறோம்" என்று வந்து நின்றான் நந்து.

"டேய் அம்மா, அப்பா, மாமா, அத்தைக்கிட்டா எல்லாம் யாருடா பேசினா? எப்படி புரியவச்சிங்க?" என்றான் விழிகள் விரித்து ஆச்சர்யமாய் ஷ்ரவன்.

"நாங்க யாரும் போகலடா. மதி அதுக்குதான் முதல்லயே இங்க வந்து அவங்களை நேர்ல வரசொல்லி எல்லார்க்கிட்டயும் பேசினா." என்றான் நந்து விஷமமாய் சிரித்து.

"டேய் நான் ஏற்கனவே சொன்னது தான். அவ உன்மேல உயிரையே வச்சிருக்கா. உனக்காக எந்த லிமிட்டுக்கு வேணா போவா. அவளை பத்திரமா பார்த்துகோ. நாங்க கிளம்புறோம்" என்று அவர்களும் கிளம்ப, வீடு வெறுமையானது.

ஷ்ரவனின் மதியை தேடி சென்றான்.

அவனின் எண்ணங்களோ 'இதெல்லாம் ஓகே தான். ஆனா நான் வந்தவுடனே ஒரு கருங்குரங்கு வந்துதே அது யாரு? எவ்ளோ தைரியம் இருந்தா என் முன்னாடி மதி தோள்மேல கை போடுவான். அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்வான். அவன்மட்டும் என்கிட்ட மாட்டினான் அவ்ளோ தான். அவன் அத்தை பையானா இருந்தா என்ன சொத்தை பையனா இருந்தா என்ன? கொம்பா முளைச்சிருக்கு? என் பொண்டாட்டி ஓகே சொல்வன்னு கேட்டேன்னு என்கிட்டயே சொல்றான். தொலைஞ்சான். என் வாழ்க்கைல அவனை இனி பார்க்கவே கூடாது.' என்று புலம்பிக்கொண்டே மாடி ஏறினான்.

மதியின் குரல் அவனை தூர நிறுத்தியது.

"நீ வேற ஜெய். நான் எவ்ளோ பயந்துன்னு உனக்கு தெரியுமா?" என்று சிரித்தாள் மதி.

"யாரு நீ பயந்த? அக்டை நான் நம்பனும். ஏதோ ரொம்ப வருஷமாச்சேன்னு வெளிநாட்டிலர்ந்து வரோமே, அப்படியே நம்ம மதியை ஒரு தடவை பார்துடு போயிடலாம். திரும்ப வர எதனை வருஷம் ஆகுமோன்னு உனக்கு போன பண்ணா, நீ என்ன பண்ண?" என்றான் ஜெய்.

"நான் என்ன பண்ணேன் ஜெய்?" என்று சிரித்தாள் மதி.

"ஆமா நீ ஒண்ணும் பண்ணலையே. அடியே எனக்கு கல்யாணம் ஆகிடுச்சுடி. என் பொண்டாட்டியை ரொம்ப லவ் பண்றேன். எங்க மேர்ரெஜே லவ் மேர்ரெஜ் தான். உன்னை சும்மா பார்க்க வந்த குற்றத்துக்கு என்னை பலியாடா ஆகிட்டியே. கொஞ்சம் விட்டா உன் புருஷன் என்னை கொலை பண்ணிருப்பார். உனக்கென்ன தெரியும் உன் தோள் மேல கை போட்டதுக்கு அவர் பார்த்த பார்வை இருக்கே, இப்போ நினைச்சா கூட எனக்கு உடம்பெல்லாம் நடுங்குது. பாவம் நான் அப்பாவி. அது தெரியாம என்னை வில்லைனா நினைக்கிறார்." என்றான் ஜெய்.
 

dharshini chimba

Saha Writer
Team
Messages
271
Reaction score
167
Points
43
கரையும் காதலன் 55

"டேய் போதும் நிறுத்துடா. ரொம்ப தான் பண்ணிக்கிற. நீ மட்டும் தான் உன் பொண்டாட்டியை லவ் பண்றியா? என் புருஷனை இந்த உலகத்துல எந்த பொண்ணுமே அவங்க புருஷனை விரும்பாத அளவுக்கு நான் விரும்புறேன். அவர் செஞ்ச ஒரு விஷயம் என்னை உயிரோட புதைக்கிற மாதிரி இருந்தது. அவரை என்னால விட்டு பிரியமுடியாது. அதே நான் அனுபவிச்ச வலின்னா என்னன்னு அவருக்கு தெரியனும்ல அதான். ஆனா நான் பிளான் பண்ணதே வேற. பட் நீ தானா வந்து மாட்டிக்கிட்ட ஆடு. சரி வீடு ஒரு ஃப்ரெண்ட்காக இதை கூட செய்ய மாட்டியா? எனிவே ரொம்ப தாங்க்ஸ்." என்றாள் மதி.

"ஓகே ஓகே. உன் புருஷங்கிட்ட என்னை பத்தி சொல்லி வை. அடுத்த தடவை வரும்போது திவியை கூட்டிட்டு வரேன். அவளுக்கு இங்க ஃப்ரெண்ட் யாருமே இல்லன்னு ஒரே ஃபீலிங்க். ஆமா உன் புருஷன் என்ன தான் பண்ணார். இந்த பாடு படுத்துற அவரை பாவம்டி மன்னிச்சு விட்டுடுடி." என்றான் ஜெய்.

"கண்டிப்பா டா. நீ அங்க போனப்புறம் எனக்கு ஃபோன் பண்ணு நான் திவிகிட்ட பேசுறேன். என் புருஷனுக்கும் எனக்கும் ஆயிரம் இருக்கும் அதையெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது. போடா" என்றாள் மதி.

"அதுசரி அடுத்த தடவை உதவி வேணும்னு வா. காதை பிடிச்சி திருக்குறேன்." என்று சீதா ஜெய்.

"ஹ்ம். சரிமா. மே பி அடுத்த தடவை வரும்போது நாங்க மூணு பேரா தான் வருவோம்." என்று சிரித்தான்.

"அடப்பாவி. சொல்லவே இல்லை. எத்தனை மாசம்? எப்போ டேட் கொடுத்திருக்காங்க? எனக்கு ரொம்ப சந்தோஷம்டா" என்றாள் மதி விழிகள் விரிய.

கதவு மெலிதாய் திறந்திருக்க மதியின் பேச்சில் அவளின் அழகு மேலும் கூடியது. அதனை ரசித்தபடி உரையாடலை கேட்டு கொண்டிருந்தான் ஷ்ரவன்.

'கேடி என்ன வேலை பார்த்துருக்கா பாரு.' என்று சிரித்தபடி முன்னேற,

"ஆறுமாசம் ஆகுது. எங்களை விசாரிக்கிறது இருக்கட்டும். எங்கண்ணன் கூட சண்டை போட்றதை விட்டுட்டு ஒழுங்கா குடும்பம் நடத்திற வழியை பாரு." என்றான் ஜெய்.

"பாருடா. எப்போ அவர் உங்கண்ணன் ஆனார்? சொல்லவே இல்ல." என்று கேட்டாள் மதி.

"உனக்கு புருஷன்னா எனக்கு அண்ணன் தானா? ஓகே எனக்கு டைம் ஆகுது. பை." என்று போனை தூண்டித்தான் ஜெய்.

வேண்டுமென்றே மெல்லிய சத்தத்தை எழுப்பிக்கொண்டு வந்தான் ஷ்ரவன்.

அவன் வருவதை கேட்டவுடன் வேகமாக சென்று மெத்தையில் படுத்து விழிமூடி கொண்டாள்.

'இந்த பூனையும் இவ்ளோ திருட்டு வேலை பண்ணுமான்னு யோசிக்கிற அளவுக்கு எவ்ளோ வேலை செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி தூங்கிற ஆக்டிங் கொடுக்கிறதை பாரு.' என்று முணுமுணுத்து கொண்டே அவளருகில் சென்று அமர்ந்தான்.

"மதி நான் பண்ணது ரொம்ப பெரிய தப்பு தான். நான் மட்டும் வேணும்னா ஆசையோட அவளை கல்யாணம் பண்ணிக்க போனேன். அவ ஒரு நீயுராலஜிஸ்ட் எந்த நரம்பை எங்க கட் பண்ணா என்ன நடக்கும்னு எனக்கு தெரியும். நீ சரின்னு சொல்லலைன்னா உன் மதி உயிரோட இருப்பா ஆனா உயிர் மட்டும் தான் இருக்கும் உடம்புல அசைவு நினைவுன்னு எதுவும் இருக்காதுன்னு சொன்னா. அதை கேட்கும் போதே எனக்கு எப்படி இருந்ததுன்னு உனக்கு சொன்னா புரியாது மதிம்மா. அந்த வலியோட தான் அவளை கல்யாணம் பண்ண போனேன். ஆனா கருவனும் நானும் ஏற்கனவே பிளான் போட்ருந்ததால எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. என்னைக்குமே நான் உன் ஷ்ரவன் மட்டும் தான். உன் கோபம் எப்போ போகுமோ அதுவரைக்கும் நான் காத்திருப்பேன் மதி. நான் பேசுறது எல்லாமே உனக்கு கேட்கும். நீ இன்னும் தூங்கலைன்னு எனக்கு தெரியும். ஐ லவ் யு மதிம்மா." அவளின் தலையை வருடிவிட்டு நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டவன்.

"நான் ஆத்மாவா இருக்கும்போது இப்படி உன்னை பக்கத்துல இருந்து என் கையால உன் தலையை வருடமுடியாதா? நிறைவா முத்தமிட முடியாதான்னு எவ்ளோ ஏங்கியிருக்கேன் தெரியுமா? இப்போ இந்த நிமிஷம் உன்னால தான் உன் பக்கத்துல நான் இப்படி உயிரோட இருக்கேன். என்னைக்கும் இதை நான் மறக்க மாட்டேன். எனக்கு மறுபடியும் உயிர்க்கொடுத்ததால நீயும் எனக்கு அம்மா தான்." என்று அவளின் தலையை தன் நெஞ்சினில் சாய்த்துகொண்டான்.

அவனின் பேச்சை கேட்ட மதியின் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோட, "சாரி ஷ்ரவன். நான் ஏதோ ஏதோ பண்ணிட்டேன்." என்று ஷரவனை இறுக்கமாக அணைத்துகொண்டு தேம்ப ஆரம்பித்தாள்.

ஆதரவாய் தட்டி கொடுத்தவன். "இல்ல மதி நீ எதுவும் தவறு செய்யலை. நீ சும்மா சொன்னதுக்கே என்னால தாங்க முடியலை அதே வலி தானா உனக்குமிருக்கும். ஐ ஆம் ஸாரிடா. இதோட இந்த பேச்சை விட்றலாம். இனி புது வாழ்க்கையை வாழலாம்..புரியுதா?" என்று சிரித்தான்.

"ஹ்ம்" என்று மதி சிரித்து கொண்டே தலையாட்ட அவர்களின் வாழக்கையும் எந்த தடங்கலும் இல்லாமல் இனிமையாய் நகர, மதியின் அன்பிற்காக ஏழேழு பிறவியிலும் கரையும் காதலனாய் கரைந்து கொண்டிருந்தான் நம் ஷ்ரவன்.

முற்றும்

.
 
Top Bottom