அத்தியாயம் -3
காற்றில் உன் வாசம்
நேரம் காலை 6.10 மக்களே
சாய்ப்ரியா கோவிலின் உள்ளே சென்று தான் கொண்டு வந்த பூக்கூடையை ஐயரிடம் கொடுத்துவிட்டு பஜனை நடக்கும் இடத்தில் சென்று அமர்ந்துக்கொண்டால்.
அப்போது சரியாக அனைவரும் ஆண்டாளின் திருப்பாவை முடித்து வாரணம் ஆயிரம் பாட ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு மாமி " ஏய் பொண்ணுகளா நன்னா பகவானை சேவிஜிண்டு பாடுங்கோ டி அப்போதா நல்ல மாப்ள கிடைப்பான் புரியறதா???.... அம்மாடி பிரியா நீந்தான் நன்னா படுவியே நீயே ஆரமிச்சி வைமா " என்று கூறிட அவரது வார்த்தையை தட்ட முடியாமல் தன் இனிய குரலில் பாட தொடங்கினாள்,
மாப்பிள்ளை அழைப்பு
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து,
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும்,
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
நிச்சயதார்தம்
நாளை வதுவை மணம் என்று நாளிட்டு,
பாளை கமுகு பரிசடைப் பந்தற் கீழ்,
கோளரி மாதவன் கோவிந்தன் என்பான், ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!
பெரியோர்களின் அனுமதி
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாமெல்லாம்,
வந்திருந்து என்னை மகட் பேசி மந்திரித்து,
மந்திரக் கோடியுடுத்தி மண மாலை,
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
காப்பு கட்டுதல்
நாற்றிசைத் தீர்த்தங் கொணர்ந்து நனி நல்கி,
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி,
பூப்புனை கண்ணிப் புனிதனோ டென்றன்னை,
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
பிடி சுற்றுதல்
கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி,
சதிரிள மங்கையர் தாம் வந்து எதிர்கொள்ள,
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு, எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழி நான்!
பாணி க்ரஹணம்
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத,
முத்துடைத் தாம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்,
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து, என்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்!
ஸப்தபதி
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்,
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து,
காய்சின மாகளி றன்னான் என் கைப்பற்றி,
தீவலம் செய்யக் கனாக் கண்டேன் தோழி நான்!
அம்மி மிதித்தல்
இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்,
நம்மை உடையவன் நாராயணன் நம்பி,
செம்மை யுடைய திருக்கையால் தாள் பற்றி,
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்!
பொறி இடுதல்
வரிசிலை வாள்முகத் தென்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைம்மேலென் கைவைத்து,பொரிமுகந் தட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
மஞ்சள் நீர் தெளித்தல்
குங்குமம் அப்பிக் குளிர்ச் சாந்தம் மட்டித்து,
மங்கல வீதி வலம் செய்து மணநீர்,
அங்கவ னோடு முடஞ்சென்றங்கானைமேல்,
மஞ்சன மாட்டக் கனாக் கண்டேன் தோழி நான்!
பாராயண பலன்
ஆயனுக் காகத்தான் கண்டகனாவினை,
வேயர் புகழ் வில்லி புத்தூர்க்கோன் கோதை சொல்,தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்,வாயு நன் மக்களைப் பெற்று மகிழ்வரே!!
என்று முடித்ததும் அனைவரும் அவளின் தேன் குரலில் இவ்வுலகை சற்று மறந்துதான் போயினர்.
கோவில் மணி ஓசையில் முதலில் சுயநினைவுக்கு வந்த மாமி " டி கொழந்த என்னமா பாடுற சாச்சாத் அந்த ஆண்டாளே நேருல வந்து பாடுனாப்ல இருந்தது நன்னா இருடி குழந்தை நன்னா இரு " என்று கூறி கண்கலங்கினார்.
பிரியா தன் மனதில் 'உங்க வாக்கு பழிக்கட்டும் மாமி'' நினைத்து கொண்டு வெளியில் "தேங்க்ஸ் மாமி " என்றாள்.
அதற்கு அந்த மாமி சிரித்துவிட்டு " சரி டி பொண்ணுங்கள வந்து மஞ்சள் குங்குமம் எடுத்துகோங்கோ என்றார்.
எல்லாரும் எடுத்து சென்ற பின் ப்ரியாவும் எடுத்துக்கொண்டு தனது பூக்கூடையை வாங்கிவிட்டு அந்த பெருமாளை நோக்கி கைக்கூப்பி "பெருமாளே எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து நிற்கும் தைரியத்தை கொடுப்பா " என்று மனம் உருக வேண்டி நின்றாள்.
கோவிலில் இருந்து வீடு வந்ததும் பிரசாத கூடையை பூஜை அறையில் வைத்து விட்டு அங்கு இருந்த சிவன் விக்ரகத்தை பார்த்தபடி உறைந்து நின்றாள். எத்தனை முறை அந்த விக்ரகத்தை பார்த்த போதும் கைக்கூப்பி நிற்பாலே தவிர எதையும் வேண்டிக்கொண்டதே இல்லை. அதற்கான காரணம் அந்த சிவனின் முகத்தை பார்த்தாலே மனதில் நிம்மதி மட்டுமே இருப்பதாய் தோன்றும் பிறகு என்ன வேண்டி கொள்வது. இப்போதும் அப்படியே தோன்றிட ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு வெளியேறினால்.
அங்கு ஹாலில், டீபாய்மீது இருந்த நோட்புக்கை எடுத்து பார்த்தால் அதில் இன்றைக்கான உணவு பட்டியல் இருந்தது.
ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு சமையலறைக்குள் சென்றால்.அங்கு கோவிலுக்கு செல்லும் முன் வைத்துவிட்டு சென்ற ட்ரேயும் கப்புகளும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. இதுவே ஒரு மாதத்திற்கு முன்னர் ஒவ்வொரு அறையாக சென்று கதவைதட்டி அவர்களுக்கு விருப்பமான பானத்தை தரவேண்டும் அதுவும் 8 மணிக்கு முன்னர் செல்லக்கூடாது.அதையும் மீறி 8 மணிக்கு ஒரு வினாடி குறைவாக சென்று நின்றாள் கூட அந்த நாள் ஏன் தன் வாழ்வில் வந்தது என தோன்றும் அளவுக்கு நிகழ்வுகள் நடைதெறியிருக்கும். ஆனால் இன்று!!!!
'எல்லாம் அவள் செயல்' என்று நினைத்து கொண்டு காலை சமையலை தொடர்ந்தால் பிரியா. கை பாட்டுக்கு அதன் வேலையை செய்ய மனம் தன் ஓரகத்தியின் நினைவில் லயித்தது. சின்ன பட்டாம்பூச்சி போல் அங்கும் இங்கும் ஓடி ஓடி வேலையை செய்து கொண்டிருப்பாள் அவளின் ஒவ்வொரு செயலிலும் ஒரு நேர்த்தி இருக்கும் ,ஆனால் பயந்த சுபாவம் கொண்டவள் அதனாலே இந்த வீட்டில் சிலர் அவளை மதிக்கமாட்டார்கள்.
தனக்கு ஓரகத்தி என்றாலும் ஒரு குட்டி தங்கை போல் எப்போவும் தன்னை அக்கா அக்கா என்று சுற்றி கொண்டே இருப்பாள்.அவள் தான் இந்த 8 மணி செய்தியை கூறியவள்.இன்று அவளாலே எல்லாம் மாறியிருக்கிறது.
ஆனால் மாறி என்ன புண்ணியம் இந்த மாற்றத்துக்கு காரணமானவள் 'ஐயோ அதை நினைத்தாலே மனம் பதைக்கிறதே.. கடவுளே ஏன் அந்த குழந்தைக்கு இவ்ளோ கஷ்டத்தை கொடுக்கிறாய்' என்று அவள் நினைக்கவும் ரெண்டு சொட்டு கண்ணீர்
அவள் கலந்து வைத்த காபியில் விழவும் அரவிந்த் கிட்சேனுக்குள் நுழையவும் சரியாக இருந்தது.
அரவிந்த் , அண்ணி
பிரியா , ம்ம்
அரவிந்த் ,ஆபீஸ் சீக்கிரம் போகணும் அண்ணி சோ சாப்பாடு வேண்டாம். வெளியில சாப்பிட்டு கொள்கிறேன் என்றான் தயங்கி தயங்கி.
பிரியா எதுவும் பேசவில்லை அவள் கண்கள் மட்டும் இன்று வெள்ளிக்கிழமை என்ற செய்தியை தொக்கி நின்றது.(சமயலறையில காலெண்டர் இருந்ததுப்பா ஹி ஹி ஹி😜😜😝😝)....
அரவிந்த் , சரி அண்ணி நான் வீட்டுலையே சாப்பிட்டுட்டு கிளம்புறேன் என்று கூறி வெளியேறினான்.
பின்னர் அந்த வீட்டின் வேலையாட்கள் வரவே மீதி வேலைகளை அவர்களிடம் கொடுத்து விட்டு தன் மகளுக்கு சத்துமாவு கஞ்சி எடுத்து கொண்டு அவளின் அறைக்கு சென்றாள்.
அங்கு அயர்ந்து தூங்கும் குழந்தையை பார்த்து ' நீ மட்டும் தான் செல்லம் இந்த வீட்டுல அதிர்ஷ்டக்காரி ' எந்த சலனமும் இல்லாமல் தூங்கும் தன் மகளை திஷ்டி கழித்தால் பிரியா.பின் அவளை எழுப்பி முகம் கழுவி பல் துலக்கி விட்டு கஞ்சியை குடிக்கசெய்தால்
பின் குழந்தையுடன் சேர்ந்து கிளாஸ் time table படி புக்ஸ் எல்லாம் எடுத்து வைத்து ஹோம்ஒர்க் சரி பார்த்து diary யில் கையெழுத்திட்டு நிமிரும் போது மணி 7.30 ஆகியிரசென்றாள்.
இங்கு இவர்கள் இவ்வளவும் செய்திருக்க அதே அறையில் இவர்களை ஏக்கத்துடன் பார்த்திருந்தான் மித்ரேந்திரன். அவனது பார்வையை உணர்ந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் தன் மகளை குளிக்க அழைத்து சென்றால் பிரியா.
மித்ரேந்திரனோ ' எவ்ளோ இனிமையாக சென்றது எங்கள் வாழ்க்கை அந்த ஒரு நாள் எங்கள் வாழ்வில் வராமலே இருந்திருக்கலாம் ' என்று நினைத்துக்கொண்டு 'எல்லாம் விதி' என்று மனத்தை தேற்றி கொண்டு கிளம்பி பூஜை அறைக்கு சென்றான்.
அங்கு அவனுக்கு முன்பாக வீட்டில் உள்ள அனைவரும் இருந்தனர். ப்ரியாவும் குழந்தையும் மட்டுமே இல்லை.அதை கவனித்த சகுந்தலா தேவி மித்ரனிடம்( இனி மித்ரன் கூப்பிடலாம்ப்ப்பா மித்ரேந்திரன் ரொம்ப length ஆஹ் இருக்கு ஹி ஹி ஹி 😜😜😜 .....சரி வாங்க ரெண்டுபேரும் என்ன பேசுறாங்கனு கேப்போம் )..
சகுந்தலா , மித்ரா
மித்ரன் , சொல்லுங்க
சகுந்தலா , இன்றைக்கு என்ன கிழமைனு நியாபகம் இருக்கா ??
மித்ரன் , இருக்கு என்றான் ஒருவித வெறுப்புடன்.
சகுந்தலா , ம்ம் அப்போ உன் மனைவி எங்க??என்றாள் உள்ளடக்கிய கோபத்துடன்.
மித்ரன் , பாப்பாவை ரெடி பண்ணிட்டு இருக்கா வந்திருவாங்க என்றான் அவருக்கும் சற்று சளைக்காத கோபத்துடன்.
சகுந்தலா , ஓஹோ என்றாள் அவன் கோவத்தை உணர்ந்து.
அப்போது ப்ரியாவும் குழந்தையும் பூஜை அறைக்குள் நுழைந்தனர்.எல்லாரையும் ஒரு பார்வை பார்த்து விட்டு குழந்தையை மித்ரனிடம் நிற்க வைத்து விட்டு அங்கு சிவன் விக்ரகம் முன் இருந்த விளக்கை ஏற்றினாள் பின் கற்பூர ஆரத்தி எடுத்தபின் எல்லாரிடமும் நீட்டினாள்.அனைவரும் கும்பிட்டதும் கற்பூர தட்டை கீழே வைத்துவிட்டு இரு கை கூப்பி கண்மூடி நின்றாள்.
ஒவ்வொருவரும் ஒரு வேண்டுதலை முன்னிறுத்தி வேண்டி கொண்டிருந்தனர்.
சகுந்தலா , கடவுளே நான் செய்யவேண்டிய பூஜையை, நான் ஆழ வேண்டிய சொத்தை இன்னொருத்தி கைல கொடுக்குற மாதிரி ஆகிடுச்சே ஆனால் நான் சும்மா இருக்கமாட்ட எப்படியாவது திரும்ப எல்லாத்தையும் அவகிட்ட இருந்து பறிப்ப அதுக்கு நீ தான் துணையா இருக்கனும்...
வேதநாயகம் , ஐயா எம்பெருமானே இப்போது தான் வீடு வீடா இருக்கு இதே நிலை தொடர நீதாய்யா துணையா இருக்கனும்....
மித்ரன் , ஈஸ்வரா எனக்கு உன்ன பாத்திடே இருக்கணும்னு மட்டும் தான் தோணுது அதுலையே என் மனசு நிம்மதி ஆகிடுது ......( இத எங்கையோ கேட்ட மாதிரி இருக்கே....🤔🤔🤔🤔🤔🤔).
அரவிந்த் , பரமேஸ்வரா என் மனைவியை நல்ல படிய என்கிட்ட சேர்த்திருப்பா......
மித்ரா தேவி , யாரு எப்டியோ போகட்டும் எனக்கு என்னோட விதுன் வேணும் அதுக்கு நீ தான் ஹெல்ப் பண்ணனும்.
குழந்தை , எனக்கு சாக்லேட் வேணும் மம்மி கிட்ட சொல்லுங்க சிவா god (so ஸ்வீட்.....🌹🌹🌹💗💗..... குழந்தை குழந்தைதான் எந்த கள்ளம் கபடமும் இல்லாத தூய உள்ளம் அவங்களுக்கு தான் இருக்கு....இவங்கள பார்க்கும் போது தான் நாமளும் குழந்தையாவே இருந்திருக்கலாம்னு தோணுது...).
பிரகாஷ் , எனக்கு உன் மேல நம்பிக்கை கிடையாது சோ டாட்டா என்று அவன் நினைத்து முடிக்கவில்லை பிரியா தன் உடம்பை முறுக்கி கொண்டு 'ஹேய்' என்று சத்தமிட்டாள்.
அனைவரும் அவளை நிமிர்ந்து பார்த்தனர். ப்ரியாவின் கண்கள் சிவந்து கைகளை முறுக்கி குலவை விட்டுக்கொண்டிருந்தால். அவளுக்கு அருள் வந்திருப்பது புரிந்தது.
பிரியா , ஹேய் வேதநாயகம் இங்க வா
வேதநாயகம் , அம்மா தாயே என்று பணிந்துநின்றார்.
பிரியா , வேதநாயகம் நான் யாருனு தெரியுதா?? என்றாள் ஆவேசத்துடன்.
வேதநாயகம் , தெரியுது தாயி என் குலதெய்வம் 'பெரியாச்சி அம்மன்' என்றான்..
'பெரியாச்சியா' என்று சற்று நடுக்கத்துடன் ப்ரியாவை பார்த்தால் சகுந்தலா தேவி.
தொடரும்......