Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காவலும் காதலும்

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
பொழுது விடிந்தது ஆனால் ஆதிக்கு பாவம் இன்னும் விடியவில்லை போலும்நல்லா கவுந்து படுத்துகொண்டு இருந்தான். இவள் காலையில் எழுந்து என்ன பன்றது தெரியாமல் எல்லாம் நடந்து விட்டது என்று காட்டி கொள்ள தலையை களைத்து விட்டு பொட்டை லேசாக அழித்து... கையை சோம்பல் முறித்தப்படி வெளியே வந்தாள்
"என்ன அண்ணியாரே ஒரே டையர்டா"?என்று வித்யா நக்கல் அடிக்க..
"ம்ம்ம் ஆமா...பயங்கர டையர்டா இருக்கு போய் வெண்ணீர் வை.ஹலோ என்ன பாக்குற போமா போய் வெண்ணீர் வை"என்று அவளை செல்லமாக விரட்டி விட.
"நான் ஏன் அதெல்லாம் செய்யனும் பார்ரா....ம்ம்ம் எங்க வீட்டில் ஹீட்டர் இருக்குமா போ போ போய் குளி.."என்று கூற இதற்கிடையில் காமாட்சி குறுக்கிட
காமாட்சி - "அம்மாடி ஆனந்தி போய் குளிச்சிட்டு வா மா காபி தரேன் உனக்கும் ஆதிக்கும்."
"சரிங்க அத்தை...."
அவள் குளித்து விட்டு வெளியே வர அவனோ பல் துலக்கியபடி பாத்ரூம் வெளியே நின்றுக்கொண்டிருந்தான்.
குளித்துமுடித்து தலையில் டவள் கட்டியபடி அவனை பார்த்து புன்னகையித்து சென்றாள். நேற்று வரை மாமன் மகளான ஆனந்தி இன்று மனைவி என்ற ஸ்தானத்தில் இருப்பதை நினைத்து அவனுக்கே ஏதோ ஒரு வெக்கம். பல் துலக்கியபின்பு அவனும் குளித்து முடித்து வந்தான்.
சூடான காப்பி இரு கோப்பையில் காத்துக்கொண்டு இருந்தது..அதை ஏந்தியபடி அவனருகே வந்த ஆனந்தி ஒரு கோப்பையை அவனுக்கு அளிக்க அதை மெல்ல ரசித்து குடிக்க ரொம்ப நாள் கழித்து ஏதோ தனக்கென்று நேரம் ஒதுக்கியது போல் உணர்தான்.காலை பொழுது இனிதே விடிந்தது.

அன்று பூவரசன் அவளை பார்க்க வந்தான் அதாவது தன் காதலியான ரேணுகாவை.
"நீ இன்னும் பதில் சரியா சொல்லவேயில்லை?ஏன்".
"சொல்ல என்ன இருக்கு பூவரசன் எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. முக்கியமா என் தங்கச்சி தான் ஆர்வமா இருக்கா.அடுத்து கல்யாணம் தான் "என்றபடி புன்னகையித்தாள் அவன் தோளில் சாய்ந்தபடி.
"ஓ.....எப்படியோ நீ ஒத்துகிட்டல அது போதும்".
"ஆமா உங்க வீட்டில் என்னை ஏத்துபாங்க தானே "என்று சந்தேகத்துடன் கேட்க
"கண்டிப்பா....நான் ஆல்ட்ரடி உன்னை பத்தி சொல்லிருக்கேன்".
"அப்படியா...?"
"ம்ம்ம் "என்று தன் தோள்பட்டை யை உயர்த்தினான். சாய்ந்திருந்தவள் மெல்ல எழுந்தபடி
"இங்கே பாரு பூவரசா எனக்கு இந்த கல்யாணம் ல பெருசா எதுவும் உடன்பாடு இல்லை னாலும் என் தங்கச்சிக்காக ஒத்துகிட்டேன். என் தங்கச்சி க்கு ஒரு நல்ல வாழ்க்கை நம்ப இரண்டு பேரும் சேர்ந்து அமைத்து தரனும் ".கல்யாணம் முடிந்தவுடன் என் குடும்பம் உன் குடும்பம் னு பிரித்து பார்க்க கூடாது சரியா?"
"நீ சொல்லவே வேண்டாம் ரேணு எனக்கு எல்லாம் தெரியும். எல்லாம் சரியாக தான் நடக்கும்" என்று அவள் கண்களை பார்த்து பதிலளிக்க
"ம்ம்ம் அப்பனா எனக்கு டபுள் ஓகே".
"இப்படி ஒரு சிஸ்டர்ஸ் நான் பார்த்து இல்லை டி ரேணு .ஸோ குட்" என்று அவன் மெச்சிக்கொள்ள
"ரியலி? "என்றபடி கண்சிமிட்டினாள்
"யெஸ்"
இவர்களுடைய உரையாடலுக்கு பின் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி அணைக்க அவர்களது காதல் மேலும் வலுப்பெற்றது. இந்த காதல் கை கூடுமா ? பொறுத்திருந்து பார்ப்போமே.
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
கல்யாணம் முடிந்த கையோடு மறுநாளே ப்ரண்டுஸ்க்கு ட்ரீட் வைக்க பார்ட்டி ஹாலில் அரேஞ்மண்டு பன்னிருந்தான் நம்முடைய ஆதி..கூடியிருந்த நண்பர்கள் அனைவரும் அவனுக்கு வாழ்த்துக்கள் கூறி மகிழ அவனுடைய கல்லூரி தோழி ஒருவள் அவனை அணைத்து வாழ்த்துக்கள் கூற அவனோ "மீனு மா இப்ப எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு டிஸ்டண்ட் மெயின்டன் பன்னு என்று நக்கல் அடிக்க"

"போடா போலிஸ் காரா ரொம்ப சீன் போடாத.."என்று அவனது தோளை தட்ட

"சீன் இல்லை டி உண்மை தான் சொல்றேன் என் ஆனந்தி மட்டும் நீ கட்டிபிடிச்சது பார்த்திருந்தா அவ்வளவு தான் சாமி ஆடிருப்பா.."என்று சிரிக்க

"ஆடட்டும் ஆடட்டும்.. எனக்கு என்ன ஆட வராத"என்று தன் கண்களை நெளிய விட
😀


"சரி டி மீனு அதெல்லாம் இருக்கட்டும் இப்ப நீ என்ன பன்ற லைப் ல..?"என்று ஆர்வமாக அவன் தன் தோழியிடம் கேட்க.

"நான் இப்ப ஒரு பொன்னுக்கு கேர் டேகரா இருக்கேன்."என்று அவள் கூறிய பதிலில் ஆச்சரியம் கொண்டான்

"என்ன ?கேர் டேக்கரா யாருக்கு?" என்றான் புருவத்தை தூக்கியபடி

"அது வந்து அது ஒரு பெரிய கதை ,அவளுக்கு 17 வயசு இருக்கிறப்ப அவளை ஒருத்தன் காதலிச்சு வாழ்க்கை தரதா சொல்லி ஏமாற்றி அவளை கற்பழிச்சிட்டான்...அந்த அதிர்ச்சியில் அவளுடைய மனநிலை பாதிக்கப்பட்டுருக்கு ...இப்ப அவளுக்கு துணை அவளோட அண்ணன் மட்டும் தான் பாவம் .அதான் நான் அவளுக்கு கேர் டேகரா இருக்கேன் . அவளை குளிக்க வைக்கிறது துணி மாற்றிவிடுறது தலை சீவி விடுறது நேரத்துக்கு கரெக்டா சாப்பாடு ஊட்டுவது னு ஒரு குழந்தையை பாத்துக்குற மாதிரி பாத்துகிட்டு இருக்கேன். எனக்கு 5000 சம்பளம். ஆனால் இந்த வேலையில் எனக்கு ஏதோ ஒரு மனநிறைவு இருக்கு டா ஆதி" என்று கண்கலங்கியபடி கூற

"ரொம்ப பெரிய விஷயம் மீனு நீ அவங்களுக்கு செய்யுற இந்த உதவி ...சரி அவளை அப்படி ஆக்கியவன் யாருன்னு கண்டு பிடிச்சு கூண்டுல ஏத்தாம விடமாட்டேன் கண்டிப்பா..ஒரு போலிஸ்காரனா இருந்துட்டு இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா விட முடியாது மீனு.நீ அந்த பொண்ணு யாருன்னு எனக்கு காட்ட முடியுமா?"என்று அவளிடம் கேட்க

"கண்டிப்பாக காட்டுறேன் வா...என்று ஆதியை அழைத்து கொண்டு உடனே அந்த வீட்டுக்கு செல்ல..... அங்கு சிறு பிள்ளை போல் தன் அண்ணனுடன் கொஞ்சி விளையாடும் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை பார்க்கிறப்ப கண்கள் கலங்கியது ஆதிக்கு"

"சார் ...இவரு ஆதி ..இன்ஸ்பெக்டரா இருக்காரு என்னோட பெஸ்ட் ப்ரண்டு ஸோ உங்க தங்கச்சி பற்றின எல்லா விஷயமும் சொல்லி கூட்டு வந்துருக்கேன்...அவன் யாரு என்ன னு கண்டு பிடிக்கிறதா வாக்கு கொடுத்துருக்காரு."என்று அவனை பற்றி ஒரு சிறிய அறிமுகம் கொடுத்தாள் மீனு.

ஹாஹா அதுக்கு அவசியமே இல்லை மீனு.என்று அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூற இடையில் ஆதி குறிக்கிட .."மிஸ்டர் அப்படினா அந்த ஆளு எங்க?"என்று ஆச்சரியத்துடன் கேட்க

"அவன் செத்துட்டான் சார்...நான் என் கையால் அந்த பாவியை கொல்ல நினைச்சன் ஆனால் அதுக்கு முன்னாடி அவனை வேற யாரோ கொன்னுட்டாங்க..எப்படியோ அந்த நாய் செத்துடுச்சு அது போதும் எனக்கு". என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினான் அவளுடைய அண்ணன்.

எதுவும் பேசமுடியாமல் திணரினான் ...இதற்கிடையில் அந்த மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணின் கையில் ஒருவனின் பெயர் பச்சை குத்தியிருப்பதை பார்த்து அதிர்ந்து போனான்..

"அ....அந்த பேரு?"...என்று அந்த மனநிலை பாதித்த பெண்ணின் கைகளை காட்டி கேட்க

"அதான் சார் என் தங்கச்சி வாழ்க்கை யை சீர் அழிச்ச பாவியின் பெயரு...பாவம் அவனை நம்பி காதலிச்சு என் தங்கை ஏமாந்துட்டா. அவனை அந்த அளவு நேசிச்சு அவனுடைய பெயரை கையில் பச்சை குத்தியிருந்தாள். இதையெல்லாம் பார்க்கிறப்ப தான் சார் எனக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கு".
ஆனால் உங்கள் ப்ரண்டு மீனுவை மறக்கவே மாட்டேன் சார். என் தங்கச்சியை அவ்வளவு நல்லா பாத்துகிறாங்க. வெறும் காசுக்காக இல்லாமல் ரொம்ப கனிவோடு வேலை செய்யுறாங்க. "

"விடுங்க அண்ணே உங்கள் தங்கச்சியை பார்த்துகிறதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை. " என்று மீனு ஆறுதல் கூற..
இதற்கிடையில் ஆதியின் எண்ண ஓட்டங்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

"ஓ.....அப்படினா !" என்று எதையோ மனதில் கணக்கு போட்டுக்கொண்டு இருந்தான் ஆதி."

அந்த பெயர் என்ன? ஏன் அந்த பெயர் பாராத்தவுடன் ஆதியிற்கு பல சிந்தனைகள் வந்தது?

தொடரும்
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
13

அந்த வீட்டை விட்டு நகர்ந்து ஆதியும் மீனுவும் நடந்து வந்துக்கொண்டிருக்க அவன் மனதில் இருந்த சந்தேகத்தை பற்றி அவளிடம் பேசத்துவங்கினான்.
"மீனு எனக்கு என்னமோ எல்லாத்துக்கும் காரணம் அந்த ராகவா தான் இருக்கும்னு தோனுது. அவன் பக்கா பொறுக்கி னு தெரியுது. இந்த பொண்ணை சீரழிச்சவனும் அவன் தான்... அதான் அவனுடைய பெயரை பச்சை குத்திருக்கு இந்த பொன்னு".
"டேய் ஆதி நீ சொல்ற அந்த ராகவா யாருன்னு எனக்கு தெரியவில்லை கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லு"
"சமீபத்தில் ராகவா மர்டர் கேஸ் என் பொறுப்புல நடந்திட்டு இருக்கு. நீ கூட இந்த கேஸ் பற்றி டிவி நியூஸில் பார்த்திருப்ப நினைக்கிறேன்.."என்று அவன் சொல்லி முடிக்க "ஆமாம். எங்கேயோ கேள்விபட்டேன். நான் எங்கே நியுஸ் பார்க்கிறேன் சொல்லு"
"எப்பபாரு பாட்டு நிகழ்ச்சியும் நடன நிகழ்ச்சி யும் பார்த்தா போதுமா மீனு இதையும் கொஞ்சம் பார்க்கனும்". என்று புன்னகையிக்க அவளோ முகத்தில் அசடு வழிய "சரி சரி விடு " இனி கண்டிப்பாக பார்க்கிறேன்.
ஆனால் இந்த பொன்னு பாவம் டா ,அவனால சீரழிந்து இப்படி நடைப்பிணமா...இருக்கா...பார்க்க வே கஷ்டமா இருக்கு. "என்று வருந்தினாள் மீனு. மாலை நேரம் ஆரம்பிக்க அவனோ அவள் பத்திரமாக வீட்டுக்கு போகவேண்டி..
"சரி மீனு நீ வீட்டுக்கு கிளம்பு நான் கமிஷனர் ஆபிஸ் க்கு போகனும் ...இதை பத்தி பேசிட்டு வரனும் . பை"என்று அனுப்பி வைக்க
"பை...ஆதி....அ....அப்புறம் உன்கிட்ட ஒன்னு சொல்லனும்?"என்று மீண்டும் பேச்சை துவங்கினாள்
"என்ன டி?" என்றான் சலிப்புடன்..
"அது வந்து ....காலேஜ் படிக்கிறப்பவே எனக்கு நீ என்றால் ரொம்ப இஷ்டம், நட்பு அப்படிங்கறது தாண்டி உன் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது ஆனால் என்னால உன்கிட்ட சொல்ல முடியல...கல்யாணம் எல்லாம் ஆயிட்டு இப்ப ஏன் சொல்றனு கேக்குறீயா??ஹாஹா இப்ப சொல்லலனா என்னால எப்பவுமே சொல்ல முடியாது னு தோனுது அதான் சொல்லிட்டேன். உன்னை மறுபடியும் சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் னு எனக்கு தோனல...ஸோ எனிவேஸ் பை டேக் கேர்." என்று வருத்தத்துடன் கூற
"ஓய் உனக்கு எப்ப கல்யாணம் ஆச்சு சொல்லவே இல்லை"..என்று அவளிடம் குறும்புத்தனம் செய்ய
"நீ தான் கேக்கவே இல்லையே" என்று அவள் முகத்தை சுளிக்க..
"சரி இப்ப கேக்குறன் சொல்லு. "
எனக்கு போன வருஷம் மே மாசம் எங்க உறவுக்கார பையனோட கல்யாணம் ஆச்சு ...இப்ப அவரு வேலை விஷயமா வெளியூர் போயிருக்காரு அதான் பார்டிக்கு கூட்டிட்டு வர முடியவில்லை"
"ம்ம்ம்.... சரி நீ பார்த்து போயிட்டுவாவேற எதாவது சொல்றதுக்கு இருக்கா மீனு." அவளை நோக்கி கைகுலுக்கி கேட்க..அவளோ கையை விலக்கி விட்டு
"என்ன சொல்றதுன்னு தெரியல...96 திரிஷா மாதிரி எல்லாம் டைலாக் பேசுவதற்கு எனக்கு தெரியாது என்று புன்னகையிக்க" கல்லூரி காலங்களில் பேசவே தெரியாத மீனு இப்ப இவ்வளவு அழகா பேசுறாளே என்று வியந்த அந்த நொடி..
"பை டா ஆதி" என்று கையசைக்க அவனோ ஆனந்தியிடம் வந்த அழைப்பேசி அழைப்பை பார்த்தவாறு
"ஹாஹா.... மீனு பை...ஆனந்தி வேற போன் பன்னிட்டா...நான் கிளம்புறன்" என்று விடைபெற்று. சென்றான்.

வீட்டுக்கு அசதியில் வந்தவனை தண்ணீர் கொடுத்து வரவேற்றாள் ஆனந்தி ....
தண்ணீர் கொடுத்தவளை அருகில் அழைத்து உக்கார வைத்தான் . என்ன சொல்வது என்று தெரியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
"என்னடி அப்படி பார்க்கிற"?
"ஒன்னுல ....போயிட்டு வந்த விஷயம் நீங்க தானே சொல்லனும்."
"ஆமா கரெக்ட் நான் தான் சொல்லனும். ம்ம்ம்... பார்ட்டி செம்ம யா இருந்தது நீ இல்லாத குறை தான்."
"சும்மா நடிக்காதிங்க...வேணும்டே விட்டு போயிட்டு"என்று செல்லமாக கோபித்துக்கொள்ள
"ஹாஹா ... காதலில் நடிப்பு கூட ஒரு சுகம் தானே..."
.........
தொடரும்.
 

Bhagya Lakshmi

Member
Vannangal Writer
Team
Messages
44
Reaction score
18
Points
8
14

ஆனந்தியும் ஆதியும் ஒருவருக்கொருவர் புரிந்து இருந்தாலும் இன்னும் கணவன் மனைவியாய் தாம்பத்ய உறவில் ஒன்று சேரவில்லை .முதலிரவன்று அவளுக்கு அந்த நாட்கள் ஏற்பட்டதால் எதுவும் நடக்கவில்லை என்றாலும் அதற்கு பின்பு ட்யூட்டியில் சேர்ந்து வழக்கம் போல் பணிபுரியும் பிஸியில் இதை பற்றி சிந்திக்கவில்லை.
இப்பவரைக்கும் எதுவும் நடக்கவில்லை என்று குடும்பத்தில் எவருக்கும் தெரியாது...அட இதெல்லாம் வெளியே சொல்ற விஷயமாம் என்று யாரிடமும் சொல்லாது இருவரும் மூடிமறைக்க...இன்னியோட கல்யாணம் ஆகி ஒரு மாசம் ஆனது எனவே மாமியார் காமாட்சி இவர்கள் ஒன்று சேர்ந்த நாள் சரி தானே அப்படி என்றால் ஒரு மாதம் கடந்த நிலையில் நல்ல செய்தி இருக்கக்கூடும் என்று எதிர்பார்த்து அதை நாசுக்காக மருமகளிடம்" ம்ம்ம் ஆனந்தி உன் கிட்ட ஒன்னு கேக்கனும்" ..என்று தயங்கியபடி ஆரம்பிக்க
சொல்லுங்க அத்தை (ஆ..ஆ கிழவி இதை தான் கேக்க போகுது னு அவளுக்கு நன்றாக புரிந்து விட்டது)
"அம்மாடி இப்ப உனக்கு தலை கில எதாவது சுத்துற மாதிரி இருக்கா"?"அட போங்க அத்தை எனக்கு என்ன லோ பி.பி இருக்கு?"என்று வேணும்என்றே அவள் நக்கல் அடிக்க..
"சரி அது போகட்டும் வாந்தி கீந்தி வருதா?"என்று மீண்டும் அதையே சுட்டி கேக்க...வெடுக்கென்று அவள் "அத்தை நான் என்ன நோயாளி யா என்ன?என்று சிரிப்பை அடக்க முடியாது ஆனந்தி இதை சொல்லிவிட்டு சிரிக்க.
"அட கழுத...இவ நம்ப சொல்றது புரிஞ்சிக்க மாட்டேங்குறாளே?"என்று சுண்டக்காய் மூஞ்சியை வச்சிக்க... அத்தையின் முகம் வாட்டம் புரிந்தாலும் வேறு...வழியில்லை இந்த சங்கடமான சூழ்நிலை யிலிருந்து தப்பிக்க.
இதை கதவுக்கு பக்கத்தில் நின்று ஒட்டுகேட்ட ஆதி...."ச்ச இன்னைக்கு எப்படியாச்சும் இதை நடத்திரனும் இல்லாவிட்டால் ஒவ்வொரு மாதமும் தாயின் குடைச்சல் ஆனந்தியால் தாங்க இயலாது என்று எண்ணி முதலிரவிற்கு தேவையான மல்லிகை பூவும் ,வாசனை திரவமும் வாங்கி வர கடைக்குச் சென்றான்.
கடைக்கு போனால் அங்க அவன் ஸ்டேஷனில் பணிபுரியும் ஏட்டு எதிர்பாராத விதமாக வந்தான் "சார் ??என்ன லெமன் ப்ளேவர் ரூம் ஸ்ப்ரேவா ?கும்முனு இருக்குமே வாசனை ,என்ன சார் வீட்டில் எதாவது விசேஷம் நடக்குதா ?என்று கேட்டுவிட
"ம்ம்ம் ஆமான் டா யப்பா விசேஷம் தான்.."என்று நொந்து கொள்ள
"சார் சொல்லியிருந்தா வந்து ஹெல்ப் பன்னியிருப்பனே ?"எதாவது ஹெல்ப் வேணுமா?என்று கேட்டான்அப்பாவியாக கேட்க..
"யோவ் ஏட்டு இது ஹெல்ப் பன்ற விசேஷம் இல்லை டா...கம்முனு போய் உன் வேலையை பாரு "
"ம்ம்ம் அப்படி என்ன விசேஷம் சார் வீட்டில் சொல்லவே மாட்டேங்குறிங்க"என்று மறுபடியும் துருவி துருவி ஆதியிடம் கேள்வி கேட்டுக்கொண்டிருக்க
"ஏண்டா சத்தியமா நீ இரண்டு புள்ள பெத்தவன் தானா?இவ்ளோ வெகுளியா இருக்க?" நான் வாங்குற பொருள்களை பார்த்தும் கூடவா எதுக்கு வாங்குறேனு புரியல?என்று ஏட்டிடம் சொல்லி புரியவைக்க
"ஓ....ஓ....புரிஞ்சிருச்சு...ரைட்டு . சார் அப்படினா லெமன் ஃப்ளேவர் வேண்டாம். ம்ம் இதோ இந்த ஸ்ட்ராபரி வாசனை வருமே அந்த வாசனை திரவம் வாங்கிக்கோங்க...
"அது சரி ...னுபவம் பேசுது". என்று இந்த முறை ஆதி அவனை கிண்டல் செய்ய
"அட போங்க சார் எனக்கு வெக்க வெக்கமா வருது"என்று முகத்தை திருப்பிக்கொள்ள
"ப்பா வெக்க படுறத என்னால பார்க்க முடியல தயவு செய்து கிளம்பிடு ".என்று அவனை விரட்டிவிட
"ம்ம்ம்.... கிளம்புறன் சார் அதுக்கு முன்னாடி உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் அந்த ராகவா கேஸ் ல அவனை கொன்னது யாருன்னா ஒரு பொன்னு சார் க்ளூ கிடைச்சிருக்கு .ஆனால் அந்த பொன்னு யாருன்னு சத்தியமா யூகிக்க முடியல...ஆனால் அது அதே தாமரை அப்பார்ட்மண்டுன்னு சொல்றாங்க..."என்று க்ளூ கிடைத்த விஷயத்தை இவன் காதில் போட்டுவைக்க
"யோவ் அந்த ஆளை யார் கொன்னாங்க னு யோசிக்கிற மூடு ல நான் இல்லை... அந்த பொறுக்கி செத்தது நல்லதே....சாவட்டும் . நான் கிளம்புறன்."என்று பைக்கை கிளப்பி கூலிங் க்ளாஸ் அணிந்து விரைந்தான்.

வீட்டில் விஷயம் தெரிந்து ஆனந்தியும் தயாராகிக்கொண்டு இருந்தாள்.இதற்கிடையில் அவளுடைய நாத்தனார் அவளிடம்
"அண்ணி....என்ன ?இன்னைக்கு புடவை ல கட்டி அழகா இருக்கீங்க நீங்களும் அண்ணனும் எங்க கிளம்ப போறிங்க"
"ஏதோ ரிஸார்ட் கூட்டிட்டு போறதா சொன்னார். இன்னைக்கு நைட் அங்க தான் தங்க போறோம்".
"ஓ....நடத்துங்க நடத்துங்க...குட்டி ஹனிமூன் கரெக்டா?"
"இருக்கலாம்"
"இதோ அண்ணன் வந்துருச்சு..இன்னா டா அண்ணா என்னைக்கும் இல்லாம மூஞ்சி இன்னைக்கு ப்ரைட்டா இருக்கு"
"அதுவா எல்லாம் ஒரு காரணமா தான். சரி சரி நானும் ஆனந்தியும் கிளம்புறோம் அம்மா வை கூப்பிடு சொல்லிட்டு கிளம்புறன்."
....தொடரும்
 
Top Bottom