Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


குணம் பார்த்து சகுனம் பார்த்து

Diya Ram

New member
Messages
1
Reaction score
1
Points
1
குணம் பார்த்து சகுனம் பார்த்து



''லட்சுமி.... தென்றல் இன்னும் கோவிலில் இருந்து வரவில்லையா.." கையில் இருந்த சில பொருட்களை கொடுத்தபடி நாராயணன் கேட்டதும்,

''வர நேரம் தான் நீங்க மத்த வேலையை பாருங்க...'' என்றவர் சமயலறைக்கு சென்று விட நாராயணன் வரவேற்பறையில் சில வேலைகளை செய்தபடி நிமிடத்திற்கு ஒருமுறை வாசலை பார்த்துக்கொண்டு இருந்தார்.


''லட்சுமி ராகுகாலம் முடிய போகுது இன்னும் தென்றலை காணோம், நான் வேணா கோவிலுக்கு போயி பார்த்துட்டு வரட்டுமா,'' அவர் பேசிக்கொண்டு இருக்கும் போதே கைபேசி ஒலியெழுப்ப, அதில் ஒளிர்ந்த எண்ணை கண்டவர்,

''லட்சுமி பெண் பார்க்க வரவங்க தான்...'' என்றவர் தொடர்பை ஏற்று பேச அவர்கள் இன்னும் ஒரு மணிநேரத்தில் வருவதாக தகவல் சொல்லிவிட்டு தொடர்பை துண்டிக்க,

''லட்சுமி அவங்க வர இன்னும் நேரம் இருக்கு, இருந்தாலும் நான் கோவிலுக்கு போய் தென்றலை கூட்டிகிட்டு வந்திடுறேன்,'' என்றவர் இருசக்கர வாகனத்தை உயிர்ப்பித்து கோவிலுக்கு சென்றவர், மனைவியின் ரத்த அழுத்தத்தை ஏகத்துக்கும் உயர்த்திவிட்டு கிட்ட தட்ட ஒருமணிநேரம் கடந்த பின்பே தென்றலோடு வீட்டிற்கு வந்தார்.


''ஏங்க...'' கோபமாக ஆரம்பித்தவர் மகள் காலை தாங்கி நடந்து வருவதை பார்த்து பதறியவர் மற்றது எல்லாம் மறந்துபோக ''தென்றல் என்னம்மா ஆச்சு...'' என்று கேட்டபடி மகளை தாங்கி வந்து நாற்காலியில் அமர்த்தியவர், தந்தை மகள் இருவருக்கும் அருந்த நீர் கொடுத்து,

சில நிமிடங்கள் கடந்து ''இப்போ சொல்லுங்க என்ன ஆச்சு , தென்றலுக்கு எப்படி அடி பட்டது...''

''சின்ன காயம் தான் அம்மா, நீங்க பதறாதீங்க....'' தென்றல் மழுப்பலாக பதிலளிக்க,

நாராயணன் முகத்தில் இருந்த வருத்தம் வேதனை எல்லாம் ஏதோ பெரிதாக நடந்து இருப்பதை லட்சுமிக்கு உணர்த்த, கண்டிக்கும் குரலில் ''தென்றல் கோவிலில் என்ன நடந்தது, எதையும் மறைக்காமல் எல்லா உண்மையையும் சொல்லு..'' அழுத்தமாக கேட்க, அதிலும் தந்தை சொல்லிவிடு எனும் விதமாக தலையசைக்க , தென்றல் நடந்தை சொல்ல ஆரம்பித்தாள்...


''அம்மா... நான் துர்கை அம்மனுக்கு விளக்கு போட்டு வரும் போது,


(கடந்த சில வாரங்களாகலாக வெள்ளிக்கிழமை தோறும் ராகுகால நேரத்தில் கச்சபேஸ்வரர் கோவிலில் இருக்கும் துர்கை அம்மனுக்கு விளக்கு போட்டு வருகிறாள் தென்றல்.)



தென்றல் கோவிலில் இருந்து வீடு நோக்கி வந்து கொண்டுஇருக்கும் போது திருப்பத்தில் வந்த காரை பார்க்காமல் மற்றொரு கார் வேகமாக வந்து திரும்பவும் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் வண்டியை திருப்ப வேகத்தை ஓரளவுக்கு மேல் கட்டுப்படுத்த
முடியாமல் போனதால் லேசாக அவள் மீது மோதிவிட்டது.



விபத்தை பார்த்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் வர அங்கு கூட்டம் கூடிவிட்டது. மற்றொரு காரில் இருந்தவர்களும் உதவிக்காக வர,



இடித்த வாகனத்தில் இருந்து இறங்கிய ஒருவன் மன்னிப்பை வேண்ட, தென்றலும் சிலரின் உதவியோடு எழுந்து நின்று உடையில் இருந்த மண்ணை தட்டிவிட, தென்றலுக்கு கால் மிகவும் வலித்தது அதை அவள் வெளிப்படுத்தும் முன்பு,

கூட்டத்தில் இருந்த சிலர் ''திருப்பத்தில் இப்படி தான் வேகமா வருவதா..'' என்றும் ''காரில் வந்தாள் கண்ணும்மன்னு தெரியாதோ.'' என்று பலரும் கத்த .

இன்னொரு வாகனத்தில் இருந்த பெண்மணி தென்றலின் முகத்தில் வலியின் சாயலை பார்த்து அவளுக்கு அருகில் வரவும், ''பொண்ணு பார்க்க போகும் போதே இப்படி அபசகுனமா இருக்கே'' என்று ஒரு பெண்மணி புலம்புவது போல. வாகனம் செலுத்தும் போது அலைபேசியில் பேசியதால் சாலையில் கவனத்தை சரியாக பாதிக்காமல் அடுத்த வளைவில் திரும்ப வேண்டும் என்பதை மறந்து வேகத்தை குறைக்காமல் திருப்பிய தன் மகனின் தவறை யாரோ பெண் மீது பழியாய் சுமத்த,


இதை கேட்டதும் தென்றல் தன்னுடைய வலியை முகத்தில் காட்டாமல் தனக்கு ஒன்றும் இல்லை என்று சொல்ல, அங்கு இருந்த சிலருக்கு தென்றலை தெரியும் என்பதால் அவளின் நலனை பற்றி மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொண்டு, வாகனத்தை ஓட்டிவந்தவனை எச்சரித்து விட்டு கூட்டம் விலகி செல்லும் சமயம்,

அபசகுனம் என்று புலம்பிய பெண்மணி சாலையில் இருந்த சிறு பள்ளத்தில் கவனத்தை பதிக்காமல் நடக்க, கால் தடுமாறி கீழே விழுந்ததில் அவரின் கையில் சிராய்ப்பு ஏற்பட்டு துளி ரத்தம் கசியவும், மகன் மற்றும் தன் குடும்பத்தினரின் உதவியுடன் வலியோடு எழுந்து நின்றவர் , அப்போது கோவிலுக்கு வரும் வழியில் கூட்டமாக இருந்த இடத்தில் தென்றல் நிற்பதை பார்த்து அவள் அருகே தென்றலின் தந்தை வரவும்,

தென்றலின் '' அப்பா....'' என்ற அழைப்பு அந்த பெண்மையின் கவனத்தில் பட, அப்போது தான் அவருக்கும் தென்றல் தான் தாங்கள் பார்க்க போகும் பெண் என்பது புரிந்தது, தென்றலை சுற்றி ஒரு கூட்டமும் இவர்களை சுற்றி ஒரு கூட்டமும் இருந்ததால் இவர்கள் தென்றலை கவனித்து பார்க்கவில்லை , அதோடு அந்த அபசகுனம் என்ற வார்த்தை அவளை தலைநிமிரவிடாமல் செய்தது,



தனக்கு வலிக்கவில்லை என்று சொன்னபோது கூட அவள் தலையை நிமிர்த்தவில்லை, இப்போது தென்றலின் தந்தையை பார்த்த அந்த பெண்மணி, செல்லும் பாதையில் கவனத்தை செலுத்தாத மகனின் தவறையும், பாதையில் இருந்த சிறுபள்ளத்தை கவனிக்காத தன்னுடைய கவனக்குறைவு இரண்டுக்கும் தென்றலின் மீது பழியை சுமத்தி,



தென்றல் அபசகுனம் பிடித்த பெண் என்று சாலை என்றும் பாராமல் தென்றலை பார்த்தும் அவளின் தந்தையையும் பார்த்து கண்டபடி பேச, சற்று முன்பு உதவிக்கு வந்த கூட்டம் வேடிக்கை பார்க்க, காலில் இருந்த வலி இப்போது மனது அனுபவிக்கும் வேதனைக்கு முன்பு ஒன்றும் இல்லாதது போல தோன்றியது...

பெண் பார்க்க செல்வதில் விருப்பம் இல்லாமல் இருந்தவர் இது தான் சந்தர்ப்பம் என்று தன்னுடைய மனதின் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள இன்னொரு பெண்ணின் மனதை வார்த்தைகளால் குத்திக் கிழிக்க,

மறுத்துப்பேசவும் மறுமொழி உரைக்கவும் முடியாமல் நாராயணன் ஸ்தம்பித்து நிற்க, தென்றல் காலையில் இருந்து சாப்பிடாமல் இருந்ததாலும் , வலியிலும் வேதனையிலும், காலில் உண்டான காயத்தினால் வெளியேறிய ரத்தத்தினால் மயங்கி விழவும், அருகில் இருந்து தென்றலை தாங்கிய அந்த பெண்மணி தன்னுடைய மகனின் உதவியோடு தென்றலை வாகனத்தில் ஏற்றியதோடு தென்றலின் தந்தையையும் அழைத்துக்கொண்டு அங்கு கத்தி கொண்டுஇருந்தவரை சட்டைசெய்யாமல் வாகனத்தை மருத்துவமனை நோக்கி செலுத்தினர்..


மருத்துவமனை சென்று தென்றலுக்கு காலில் இருந்த காயத்திற்கு தையல் போட்டு, கட்டுக்கட்டி, சில மருந்துகளை செலுத்தவும் அரைமணிநேரத்தில் மயக்கத்தில் இருந்து விழித்த தென்றலின் நலத்தை விசாரித்து விட்டு அவர்களிடம் மேலும் எதையும் கேட்டு சங்கடப்படுத்த விரும்பாமல் உதவியவர்கள் சென்றுவிட, தென்றலும் நாராயணனும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்...



தென்றலும் நாராயணனும் வரும் வரை பெண் பார்க்க வருபவர்கள் வருமுன் இவர்கள் வந்துவிட வேண்டும் என்ற பதட்டத்தோடு கூடிய மெல்லிய பயம் இருந்தது, அவர்கள் வந்ததும் ஆசுவாசமும் கோபமும் அடைந்தவர் பின்பு மகளுக்காக பதறியவர் இறுதியாக நடந்த அனைத்தையும் கேட்டதும் அவர் தனது புலம்பவளை தொடங்க மனம் வெறுத்து போனது தென்றலுக்கு...

தென்றலின் அம்மாவின் புலம்பல் நேற்று இன்று என்று இல்லாமல் கடந்த ஆறுவருடங்களாக தென்றலை ஒருவழியாக்கி கொண்டு இருக்கிறது...

தென்றல் இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே அவள் தந்தை அவளுக்கு வரன் பார்க்க தொடங்கினார், தூரத்து உறவில் நல்ல சம்மந்தம் அமைய உடனே திருமண பேச்சுவார்த்தை தொடங்கியது, இருவீட்டாரின் ஒப்புதலில் இப்போது நிச்சயம் அடுத்து மூன்று மாதத்தில் திருமணம் என்று முடிவாக..

மூன்றாம் ஆண்டு இறுதித்தேர்வுகள் திருமணம் முடித்த அடுத்த வாரத்தில் வருவதால் , திருமண தேதியை தேர்வு முடிந்த பின்பு வருமாறு தள்ளிவைக்க சொல்லி தென்றல் சொல்ல, லட்சுமி '' ஆரம்பிக்கும் போதே இப்படி அபசகுனமா பேசாதடி..'' என்று சிடுசிடுத்தவர்

''கல்யாணம் முடிவாயிடிச்சி இனி உன் சம்பந்த பட்ட முடிவு எல்லாமே சம்மந்தி வீட்டுக்காரங்க தான் எடுக்கணும்..'' என்கவும் அவரை இடைமறித்த தென்றல்,

''என் சம்பந்த பட்ட முடிவை நான் எடுக்கணும், அப்படி முடிவெடுக்க முடியாமல் நான் தடுமாறினாள் என்னோட அம்மா அப்பாவான நீங்க வழிகாட்டணும். '' அழுத்தமாக உரைக்க



''பொட்ட புள்ளைக்கு இவ்ளோ அழுத்தம் நல்லதில்லை.'' என்று எச்சரித்தவர் சிலபல வாக்குவாதங்களுக்கு பிறகு '' அவங்க சம்மதம் சொன்னா பரீட்சை எழுத போ இல்லாட்டி எழுத வேணாம், நீ படிச்சி வேலைக்கு போய் தான் அவங்க நிறையணும்னு நிர்பந்தம் இல்லை..'' என்று முடிவாக சொல்லி தென்றலின் தலையில் இடியை இறக்க.




தென்றல் ஆற்றாமையிலும் கோபத்திலும் '' பதினெட்டு வயது பூர்த்தியானதும் கொடுக்கும் ஓட்டுரிமையை பெண்களுக்கு மட்டும் கல்யாணத்துக்கு பிறகு கொடுக்க சொல்லுங்க, அப்போ தான் எங்களுக்காக முழுஉரிமையோட சுதந்திரமா எந்த கட்டுப்படும் முடிவெடுக்க ஒருத்தவங்க இருக்காங்க..'' சுதந்திரம் கட்டுப்பாடு என்பதை அழுத்தி சொல்லியவள், .



நாங்க சுயமா சிந்தித்து முடிவெடுக்க கூடாது நீங்களும் பெண்கள் எதிர்கால கல்யாணத்தை மனதில் வைத்து தான் முடிவெடுக்குறீங்க முக்கியமா எங்களோட பிடித்ததில் இருந்து படிப்பு வரை எல்லாமே எங்களோட கல்யாணத்தை காரணம் சொல்லி மறுக்குறீங்க, இல்லை பயமுறுத்துறீங்க...

கல்யாணத்துக்கு அப்புறம் எங்களோட பிடித்தம் எல்லாம் எங்கோ கண்காணாமல் தொலைந்து போகுது, இதில் ஒரு சிலர் விதிவிலக்காக சாதித்தாலும், அதில் எங்களோட உரிமை கூட அவங்க பெருந்தன்மையா தான் பாராட்டப்படுகிறது...'' கசந்த முறுவலோடு முடித்தவள் மேலும் விவாதத்தை தொடராமல் தனது அறைக்கு சென்று விட்டாள்...

அதன் பின்பு லட்சுமி கோபமாக கத்திவிட்டு செல்ல நாராயணன் எதுவும் சொல்ல முடியாமல் அமைதிகாக்க, அதன் பிறகு வந்த நாட்கள் யாவும் திருமண ஏற்பாடுகளின் பரபரப்போடு கடக்க திருமணத்திற்கு இரண்டு வாரம் முன்பு தென்றலுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை தான் விரும்பிய பெண்ணை பதிவு திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டுக்கு பறந்துவிட, அதோடு தென்றலின் நிம்மதியும் பறந்துவிட்டது...

''கல்யாணத்துக்கு தேதி வைக்கும் போதே அபசகுனமா பேசி சண்டை போட்டா இப்போ கல்யாணமே நின்னு போச்சு..'' என்று அந்த துன்பத்திலும் லட்சுமி தென்றலை திட்ட, பெரிதாக வருங்கால கணவனை எண்ணி வண்ண கனவுகளில் மிதக்கவில்லை என்றாலும், அவனோடு பெரிதாக பேசி பழகவில்லை என்றாலும் முக்கியமாக இந்த திருமணத்தில் அத்தனை விருப்பம் இல்லை என்றாலும் நிராகரிப்பின் வலி அவளுக்கு இருக்க தானே செய்யும்...



அந்த வலியோடு நிச்சயிக்கபட்ட தேதியில் கண்டிப்பாக திருமணம் நடந்தே ஆகவேண்டும் இல்லை என்றால் வருங்காலத்தில் எல்லாமே தட்டிப்போகும் என்று பயமுறுத்த, அதிரடியாக மாப்பிள்ளை தேடும் படலம் துவங்கி மீண்டும் மாப்பிள்ளை முடிவாக திருமணத்திற்கு ஒருநாள் முன்பு அதிக அலைச்சல் உடல் மற்றும் மனசோர்வு எல்லாம் சேர்ந்து நாராயணன் உடல் நலத்தை பாதிக்க நெஞ்சுவலி வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட லட்சங்கள் பல செலவு செய்து அவர் உயிரை காப்பாற்றிவிட்டனர் ஆனால் பெருமளவு வரதட்ஷனை பேசி நிச்சயிக்க பட்ட திருமணம் நின்றுவிட்டது....

நாராயணன் உடல் நிலை தேறி வீட்டுக்கு வந்ததும் அடுத்த சில மாதங்களில் மீண்டும் மாப்பிள்ளை தேடுதல் படலம் துவங்க, ஏதேதோ காரணங்களால் தேடல் பலம் திருமணத்தில்
முடியாமல் மீண்டும் ஒரு தேடலுக்கு ஆரம்பமாக, மொத்தத்தில் மாப்பிள்ளை தேடலில் அந்த குடும்பத்தின் நிம்மதியும் சந்தோசமும் தொலைந்துபோனது தான் மிச்சம்.



லட்சுமி அவ்வப்போது ஆற்றாமையிலும் கோபத்திலும் புலம்புவதும் அது இறுதியில் தென்றல் முதல் முதலில் அபசகுனமாக எதிர்த்துப்பேசியதே எல்லாத்துக்கும் காரணம் என்பது போல முடிவதும் வாடிக்கையாகி முதலில் அதை கேட்டு வருந்திய தென்றல் வருடங்களின் தென்றல் அந்த வருத்தத்தை வெளியில் காட்டாமல் இருக்க பழகிக்கொண்டால்..

இரண்டுமுறை தென்றலின் திருமணம் நின்றதுக்கு ஒருவன் வேறொரு பெண் கொண்ட விருப்பும், இன்னொருவன் பொன் பொருள்மேல் கொண்ட விருப்பமும் அதாவது அவர்களின் குணம் காரணமாக இதில் தென்றலின் அபசகுனமாக பேச்சால் அல்லது அவளது ராசியில் தான் திருமணம் நின்றுவிட்டது என்று சொல்லுவது எந்த விதத்தில் நியாயம்.???(இதுவே உலகநியாயம்)



தென்றலின் அம்மாவை பொறுத்தவரையில் திருமணமும் பிள்ளைபெறுதலும் தான் பெண்ணுக்கான சாதனை அதுவே அவர்களின் கடமை அதாவது காலாகாலத்தில் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்து நேரத்தில் பேரப்பசங்களை கொஞ்ச வேண்டும் அவ்வுளவே, மற்றபடி பெண்ணின் கனவு, லட்சியம், சுயவிருப்பு, வெறுப்பு இப்படி எதற்கும் அவர் மதிப்பதில்லை அதை புரிந்துகொள்ளவும் அவர் இதுவரை முயன்றதில்லை,

இப்படியே ஆறுஆண்டுகள் கடந்துவிட்டது இதில் லட்சுமி நாராயணன் மனது கஷ்டப்பட்டாலும் அதனினும் அதிகம் பாதிக்கப்பட்டது தென்றல் மட்டுமே, இப்போது கூட திருமணதடை விலக வெள்ளிக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு விளக்கு போடவேண்டும் என்று தென்றலின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர் சொல்ல அந்த வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு வரும் போது மீண்டும் ஒரு நிராகரிப்பு தென்றலுக்கு அபசகுனம் என்ற பெயரில்...



தென்றலின் மனதின் காயம் நாளுக்கு நாள் மேலும் ரணமானாலும் காலில் உண்டான காண முற்றிலும் குணமடைந்து விட்டது...



நாராயணனின் நண்பர் ஒருவர் மூலம் ஒரு வரன் அமைய, மீண்டும் ஒரு பெண் பார்க்கும் நிகழ்வு, எதுவானாலும் ஏற்க பழகிக்கொள் மனமே எதையும் எதிர்பார்த்து விடாதே என்று தனக்குள்ளாகவே உருப்போட்டுக்கொண்டு முடுக்கிவிட்ட பொம்மை போல காஃபி எடுத்துசென்றவள் அதை அனைவருக்கும் கொடுத்துவிட்டு வந்தாள் தென்றல்.



''தென்றல் தான் எங்க வீட்டு மருமகன்னு எப்போவே முடிவுபண்ணிட்டோம், சம்பிரதாயத்துக்கு தான் நாங்க பெண் பார்க்க வந்தது, உங்களுக்கு சம்மதம் என்றால் இன்னைக்கே கூட ஒப்புதம்புலாம் மாத்திக்கலாம், இன்னொரு முக்கியமான விஷயம் எங்களோட குடும்பத்துல எல்லோரோட கல்யாணானமும் எங்க குலதெய்வ கோவிலில் தான் நடத்துவோம்...'' என்று மேல்பூச்சு எதுவும் இல்லாமல் பட்டென்று அவர்கள் விருப்பத்தை சொல்ல,

நாராயணன் லட்சுமி இருவருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி அதோடு தென்றலின் சம்மத்தை கேட்ட போது மறுவார்த்தை பேசாமல் உங்கள் விருப்பம் என்று முடித்துவிட அன்றே ஒப்புதாம்பூலம் மாற்றி திருமணத்தை இன்னும் ஒரு மாதத்தில் வைப்பது என்று அதன் பிறகு ஒரு வாரம் கழித்து வரவேற்பு என்றும் முடிவுசெய்யப்பட்டது...

இதில் தென்றல் அறியாத பல விஷயங்கள் உண்டு என்றாலும் ஏற்கனவே நாராயணன் மாப்பிள்ளை குடும்பத்தை பற்றி நன்கு விசாரித்து அவருக்கு முழு திருப்தி ஏற்பட்ட பிறகு தான் அவர்களை பெண் பார்க்க வர சொன்னது, அதுவும் அன்று தென்றலுக்கு விபத்து நடந்த போது அவளுக்கு உதவியவர்கள் தான் இவர்கள் என்பதை முதலில் அறிந்த போது நாராயணன் சற்று சங்கடப்பட்டாலும் பின்பு அவர்களின் அன்பான குணத்தால் அதை ஒதுக்கி தென்றலுக்கு நடந்தை எல்லாம் சொல்லிய பிறகு தான் அவருக்கு முழு நிம்மதி கிடைத்தது...



இப்போது ஒப்புதம்புலாம் மாற்றி திருமணம் நிச்சயமானதும் நிம்மதி சந்தோசமாக மாறினாலும் மனதின் ஓரத்தில் ஒருவித பயம் இருந்தது என்னவோ உண்மை...

பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் நல்ல முறையில் திருமணம் நடந்து, ஒருவாரம் கடந்து இதோ கோலாகலமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது, லட்சுமி நாராயணன் இருவரும் மனதில் இருந்த பயம் நீங்கி இன்று மகளின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சி இன்று போல் என்றும் இருக்க இறைவனை வேண்டிக்கொண்டனர்...

திருமணம் நடந்து ஓராண்டுக்கும் மேலாக கடந்த நிலையில் இப்போது நிறைமாத கர்ப்பிணியாக வளைப்பூட்டல் விழாவில் தென்றல், சகுனம் என்று யாரையும் ஒதுக்கி காயப்படுத்தாமல் அவர்களின் உறவுகளில் திருமணம் முடிந்து பல ஆண்டுகளாகியும் குழந்தைப்பேறு கிடைக்க தாமதமான தம்பதிகளோடு, தாய் தந்தை உறவு என்று எல்லாம் இருந்தாலும் அவர்களின் புறக்கணிப்பில் அனாதை என்று நம்மால் அழைக்கப்படுபவர்களும் (நாம் தானே சமூகம் ) தென்றலுக்கு வளையல் பூட்ட மிகுந்த சந்தோசத்தோடு விழா நடைபெற்றது...



விழா நிறைவுற்றதும் தென்றல் தன்னுடைய பிறந்த வீட்டிற்க்கு வந்துவிட, அன்று இரவு
கணவன் மனைவி இருவரும் வேறுவேறு இடத்தில் இருந்தாலும் சிந்தனையில் ஒன்றாக இருந்தனர்...

தென்றலை முதல் முதலில் அவள் கணவன் குணசீலன் பார்த்து அந்த விபத்து நாளில் தான், அவனை அவளை நோக்கி நகர்த்தியது அவள் குணம் தான் ஆம், அன்று அவள் காயத்தின் வலியை மறைத்த போது குணசீலன் அன்னை அவள் காலில் ரத்தம் வருவதை உணர்ந்து பதறிய போது , '' அம்மா எனக்கு அடிபட்டு ரத்தம் வருவதை நீங்க இப்போ சொன்னா , இன்னொரு பெண் மனது கஷ்டப்பட்டு கண்ணீர் விடும்படி ஆகிடும்..'' என்றவள் வலியை பொறுத்துக்கொண்டு தனக்கு ஒன்றுமில்லை என்று சொன்னதை கேட்டு அந்த கணம் அவன் மனம் உணர்ந்த ஒன்றை வார்தைகளால் விவரிக்க முடியாது...

அன்பின்பு நடந்தவை கோபத்தை உண்டாக்கினாலும், இருக்கும் சூழலில் அவன் ஒருவார்த்தை பேசினாலும் அது பெரும் பிரச்சனையை உண்டாக்கும் என்பதை உணர்ந்தவன் கடினப்பட்டு அமைதி காத்தவன் அதோடு அவர்களுக்கு உதவியதோடு மட்டுமில்லாமல் அவள் நலனை உறுதிசெய்துகொண்டு அங்கிருந்து சென்றவன்..



அடுத்த சில நாட்களில் தனது தந்தையிடம் தனது விருப்பத்தை சொல்ல, அவர்களுக்கும் பெண்ணை பிடித்துவிட்டது, யாரோ செய்த தவறுக்கு எல்லாம் தென்றல் மீது பழி சுமத்தி சகுனம் ராசி என்று எல்லாம் சொல்லி அவளை ஒதுக்க நினைக்காமல் , அவள் குணத்தை பார்த்து அவள் தான் தங்கள் வீட்டின் மருமகள் என்று முடிவுஎடுத்ததோடு மட்டும் அல்லாமல், தென்றலின் வீட்டினரை முறையாக அணுகியதோடு அவர்களுக்கும் நம்பிக்கை அளித்தனர்...

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாளில் இருந்து ஒருவாரம் கடந்து தென்றலை அவள் குடும்பத்தினரின் சம்மதத்தோடு வெளியில் அழைத்து சென்ற குணசீலம் தனது மனதின் விருப்பத்தை சொல்லி, தென்றல் அதை ஏற்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை,

அமைதியாக குணசீலன் சொன்னதை கேட்க, அவளின் மனநிலை உணர்ந்து நடந்துகொண்ட குணசீலன் அன்று மட்டும் இல்லை அடுத்த வந்த நாட்களில் அதை கடைபிடிக்க, திருமணம் நடந்த நாளில் இருந்து சொல்லால் அன்றி செயலால் தனது அன்பை உணர்த்தி எப்போதும் உனக்கு நான் இருப்பேன் என்ற நம்பிக்கையை அளிக்க,

தென்றலும் தனது கூட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து தன்னுடைய இயல்போடு தனக்கு விருப்பமானதை எல்லாம் சொல்லவும் செய்யவும் ஆரம்பித்தாள், குணசீலன் அவளுக்கு உறுதுணையாக இருக்க அவளுக்கு விருப்பமான மரம் நடுதல் பணியை ஆரம்பித்தாள்...

தென்றல் மரம் நடுவதில் அவளுக்கு என்று ஒரு வழிமுறையை வகுத்து கடைபிடித்தால் அது என்னவென்றால் ஒரு குறிப்பிட்ட பகுதியை தேர்ந்தெடுத்து அங்கு இருக்கும் இடங்களுக்கு ஏற்ப மரங்களை நட்டால் எடுத்துக்காட்டாக கோவிலில் வன்னி, வில்வம், வேம்பு போன்ற மரங்கள், பொதுஇடங்களில் அந்த இடத்திற்கு தகுந்தார் போல வேம்பு, ஆலமரம், தென்னை, மா போன்ற மரகன்றுகளையும் , அதோடும் பூக்கும் செடிகளையும் நட்டு அதை அடுத்த ஒருவருடத்திற்கு முறையாக பராமரித்த பின்பே அடுத்த பகுதியை தேர்ந்துஎடுக்கிறாள்...

இப்போது அவளுக்கு ஒரு சிலர் துணையாக இருக்க, இந்த ஓராண்டு திட்டத்தில் 50 மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வளர்த்துஉள்ளனர், இப்போது இரண்டாவதாக இன்னொரு பகுதியை தேர்ந்தெடுத்து அந்த பகுதியில் கன்றுகள் நடக்கும் பனி தொடங்கி விட்டது...

தென்றலிடன் இது சமூகசேவையா என்று கேட்டாள் அவள் சொல்லும் பதில் ''என்னை
அரவணைக்கும் இயற்க்கை அன்னைக்கு நான் ஆற்றும் கடமை..'' என்பது தான்

தனது நினைவுகளில் இருந்து மீண்ட தென்றல் கணவனுக்கு அழைத்து நாளை காலை குணசீலன் இங்கு இருக்க வேண்டும் என்று அன்புக்கட்டளையிட, பெண்ணவள் குணத்தால் ஈர்க்கப்பட்டு எல்லையில்லா அன்பை பெண்ணவள் மீது கொண்டவன், கொண்டவள் வார்த்தையை சிரமேற்கொண்டு நிறைவேற்ற தென்றலின் உள்ளத்திலும் இல்லத்திலும் மகிழ்ச்சி சாரல்...

அபசகுனம் பார்த்து பிறரின் மனதை வருந்துவதை விடுத்து மனிதனின் குணம் பார்த்து வார்த்தைகளை சொல்லுவோம் பலரின் மனங்களை வெல்லுவோம்..

.............நன்றி ..................
 

New Threads

Top Bottom